மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.10.08

குட்டிக்கதை: படைப்பின் ரகசியம்


நச்' சென்று சொன்ன கதைகள்

ஆசிரமம் ஒன்று இருந்தது. ஆசிரமத்தில் குருவும், நான்கு சீடர்களும்
வசித்து வந்தார்கள்.

பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களை நல்வழிப்
படுத்தும் வேலையை அந்த குரு செய்து கொண்டிருந்தார்.

அவருடைய வழிகாட்டலால் அந்தக் கிராமத்து மக்கள் எந்தப் பிரச்சினையும்
இன்றி அமைதியாக வாழ்ந்தனர்.

ஆசிரமத்திற்கு வேண்டிய பொருட்களை அவர்கள் மனம் மகிழ்ந்து,
போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வந்தனர்.

குரு தேவைக்கு மட்டுமே எடுத்துக்கொள்வார். அதனால் ஆசிரமமும்
எந்தவித இன்னலும் இன்றி அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது.

குரு சீடர்களுக்கு வேத பாடங்கள், நல்வழிக் கதைகள், இறைவனைப்
பற்றிய கதைகள் என்று தினமும் ஒரு மணி நேரம் பாடம் நடத்துவார்.

"படைப்பின் ரகசியம் என்ன?" என்று சீடர்களில் ஒருவன் கேட்டபோது,
"அதை நீயே ஒருநாள் உணர்வாய்" என்றார் குரு.

கேட்ட அந்த சீடன் ஒரு நாள், ஆசிரமத்தின் ஜன்னல் வழியே, வெளியே
இருக்கும் ஆள் அரவமற்ற பாதையையும், அதற்கு அருகில் உள்ள
பெரிய ஆலமரத்தையும், அதன் அருகில் இருந்த கொன்றை மரத்தையும்
அவற்றில் குடியிருக்கும் பறவைகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அந்த இரண்டு மரங்களுக்கும் இடையில் இருந்த பெரிய
கரையான் புற்றில், மிகவும் நீளமான நாகப்பாம்பு ஒன்று விறு விறுவென
ஏறி, புற்றுக்குள் நுழைந்தது.

நுழைந்து மறைந்தும் விட்டது.

அடுத்த நிமிடம், அந்தப் புற்றுக்குள் இருந்து ஆயிரக்கணக்கான கரையான்கள்
வெளியேறி வந்து, வேறு திசையில் செல்ல ஆரம்பித்தன. எல்லாம் ஒரு
அவசரகதியில் புற்றைக் காலி செய்து கொண்டிருந்தன.

அதைக் கண்ட சீடன் பதறிவிட்டான். என்ன கொடுமை? இந்த சிற்றினங்கள்
கட்டி வசித்து வந்த இடத்தை ஒரு பாம்பு ஒரு நொடியில் கை பற்றிக் கொண்டு
விட்டதே!

இது அக்கிரமம் இல்லையா? கேட்க ஆள் இல்லையா?

அப்போது தற்செயலாக குரு அங்கே வர, சீடன் நடந்ததைப் பதற்றத்துடன்
சொன்னான்.

"குரு சீடனை சாந்தப் படுத்தியதோடு, "பொறுத்திருந்து பார்' என்று சொல்லி
விட்டுப் போய் விட்டார்.
+++++++++++++++++++++++++++++
அன்று மதியம் கனத்த மழை பெய்தது. அப்படியொரு அசுர மழை!

அந்த மழையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சாலையின் எதிர்ப்புறம் இருந்த
பள்ளமான பகுதிகள் தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்தன.

புற்றிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்து புற்றும் நிரம்பி வழிய ஆரம்பித்தது.

அப்போதுதான் அது நடந்தது.

புற்றைவிட்டுத் தப்பி வெளியே வந்த நாகப் பாம்பு, நீரைக் கடந்து சாலைக்கு
வேகமாக நெளிந்து நெளிந்து வந்து சேர்ந்தது. ஈரமாக இருந்த சாலையைக்
கடந்து எதிர்ப்புறம் உள்ள பகுதிக்குத் தப்பிவிட அது முனைந்தது.

அப்போது அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்த கிராமத்து இளைஞன் ஒருவன்,
பாம்பைக் கண்டு பதறாமல், தன் கையில் இருந்த கடப்பாரையால் பாம்பின்
மீது இரண்டு போடு போட பாம்பு இறந்து மூன்று துண்டுகளாகியது.
நீண்ட அந்தத் துண்டுகளைத் தன் கடப்பாரையின் உதவியால் தள்ளிக்கொண்டு
சென்று எதிர்ப் புறம் இருந்த பகுதியில் தள்ளி விட்டு, சாலை சுத்தமாகிவிட்டதா
என்று ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் அவன் செல்ல ஆரம்பித்துவிட்டான்.

இவற்றை எல்லாம் ஜன்னல் வழியாக நின்று பார்த்துக்கொண்டிருந்த சீடனுக்கு
ஒரு மன நிம்மதி ஏற்பட உள்ளே ஓடிச் சென்று, குருவை அழைத்து வந்து
இறந்து தூண்டுகளாகிக் கிடந்த பாம்பைக் காட்டிவிட்டு நடந்ததைச் சொன்னான்

குரு ஒன்றும் சொல்லாமல், ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு உள்ளே
சென்றுவிட்டார்.

"அக்கிரமங்களையும், அக்கிரமக்காரர்களையும், இறைவன் பார்த்துக் கொள்வார்".
என்று குரு அடிக்கடி சொல்லும் வாக்கியத்தின் பொருள் சீடனுக்கு இப்போதுதான்
புரிந்தது.

வாழ்க வளமுடன்!

1.10.08

என்ன சொன்னார் ஞானி?

குமுதத்தில் எழுதுகிறாரே அந்த ஞாநி சொன்னதல்ல இது. இது வேறொரு
ஞானி சொன்னது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

படித்துப் பாருங்கள்!

ஜோதிடத்தில் அடிப்படை விஷயங்கள் சில உள்ளன. அவற்றையெல்லாம்
முன் பாடங்களில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.

புதிதாக வருபவர்கள் அதை முதலில் படித்தால்தான் இப்போது நடத்தும்
பாடங்கள் பிடிபடும். இல்லையென்றால் குழப்பம்தான்

மிஞ்சும்.

1. 12 ராசிகளின் பெயர்கள் என்ன?
2. ராசி அதிபதியின் பெயர்கள் என்ன?
3. 12 வீடுகளுக்கும் தனித்தனியாக உள்ள வேலைகள் (Portfolios) என்ன?
4. லக்கினம் என்பது என்ன?
5. லக்கினத்தை வைத்து ஒவ்வொருவீட்டையும் எண்ணிப்பார்க்கும் முறை என்ன?
6. சந்திர ராசி என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டது?
7. லக்கினம் எதற்குப் பயன்படும்? சந்திர ராசி எதற்குப் பயன்படும்?
8. கோச்சாரம் (கோள் சாரம் - Transit of planets) என்பது என்ன?
9. தசா / புத்தி என்பது என்ன? அதன் பயன் என்ன?
10. தசா புத்திகள் எதை வைத்து ஆரம்பிக்கின்றன?
11. தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன?
12. கோள்களின் பெயர் என்ன? அவைகளின் சொந்த வீடு எது?
13. அவைகள் உச்சம் அல்லது நீசம் ஆவது என்றால் என்ன?எங்கே ஆகும்?
14. அவைகளின் நட்பு வீடு, பகை வீடுகள் எவை?
15. அஸ்தமனம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?
16. அஷ்டகவர்கம் என்றால் என்ன?
17. நவாம்சம் என்றால் என்ன? அது எதற்குப் பயன்படும்?
18. காரகன் என்பவன் யார்? எது எதற்கு யார் யார் காரகன்?

என்ற அடிப்படை விஷயங்கள் தெரியாமல், அதை மனதில் அல்லது நினைவில்
கொள்ளாமல் மேலும் மேலும் ஜோதிடத்தை நீங்கள் படிப்பது வீண் செயலாகும்.
எத்தனை பேர்கள் அப்படி வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

மேலே உள்ள கேள்விகளுக்கு தயக்கம் இன்றி பதில் சொல்பவர்கள்தான்
அடிப்படை ஜோதிடம் தெரிந்தவர்கள். தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும்
பதில் சொல்ல வேண்டும்.

ஒரு ஞானி சொன்னார்:

"சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
நடையும் நடைப்பழக்கம்
கொடை, தயை, ஈகை
மூன்றும் குடிப்பழக்கம்"

பயிற்சியின் (That is by practice) மூலம் வருவது எதெது - பயிற்சியால்
வராதது எதெது என்று அந்த ஞானி பகுத்துச் சொன்னார்.

ஆகவே பாடங்களை (atleast the basic lessons) மனதில் ஏற்றுங்கள்
-----------------------------------------------------------------------------
எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.

"சார், என்னுடைய பத்தாம் வீட்டில் யாருமே இல்லை? காலியாக
இருக்கிறது? அதற்கு என்ன செய்வது?"

"காலியாக இருப்பதால் ஏதாவது கிரகத்தைப் பிடித்துக் கொண்டு
வந்து குடிவைக்க முடியுமா என்ன?"

ஒன்பது கிரகங்கள், ஒரு லக்கினம் ஆக மொத்தம் 10 - ஆனால்
இருக்கும் வீடுகள் பன்னிரெண்டு. நிச்சயம் 2 வீடுகள் காலியாகத்தான்
இருக்கும். கால சர்ப்ப தோஷக்காரர்களுக்கு 5 கட்டங்கள் காலியாக
இருக்கும். சிலருக்கு பிரம்மச்சாரிகள் குடியிருக்கும் வீடுகளைப் போல
3 வீடுகளில் எல்லாக் கிரகங்களும் அடைபட்டு 9 வீடுகள் காலியாக
இருக்கும். அதற்கெல்லாம் கவலைப்பட முடியுமா?

ஒரு வீட்டிற்கு ஒருகிரகம் என வரிசையாக அத்தனை கிரகங்களும்
ஒருவருடைய ஜாதகத்தில் அடுத்தடுத்த வீடுகளில் அமர்ந்திருந்தால்
பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதற்கு மாலையோகம் என்று பெயர்.
அதாவது பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை போல கிரகங்களால்
தொடுக்கப் பட்ட மாலை என்று பெயர். (That yoga is called as Graha
Maalika Yogam) அந்த ஜாதகக்காரர் பல யோகங்களை உடையவராக
இருப்பார். ஆனால் அது அபூர்வமான யோகம். லட்சத்தில் ஒருவருக்கு
இருக்கலாம்.

ஆகவே வீடுகள் காலியாக இருந்தால் கவலைப் படாதீர்கள். காலியாக
இருக்கும் வீட்டின் அதிபர் வேறு எங்கே இருக்கிறார்?
அவர் இருக்கும் இடம் அவருக்கு சொந்த வீடா அல்லது உச்ச வீடா
என்று எல்லாம் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்

பத்தாம் வீட்டின் அடுத்த பகுதி சற்றுப் பெரியது. எழுதித் தட்டச்சிக்
கொண்டிருக்கிறேன். அது வெள்ளியன்று மாலை வரும்!

மேலே உள்ள பதினெட்டுக் கேள்விகளில் ஆறு கேள்விகளுக்கு
(அது உங்கள் சாய்ஸ்) பதில் எழுதி என்னுடைய மின்னஞ்சல்
முகவரிக்கு அனுப்புங்கள் (mail ID; classroom2007@gmail.com)

எத்தனை பேர் எழுதுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில்
உள்ளேன்.

இதை வீட்டுப்பாடம் (Home Work') என்று எடுத்துக்கொள்ளுங்கள்!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

29.9.08

ஜோதிடமும் உருளைக்கிழங்கும்!

ஊட்டியில் விளையும் உருளைக்கிழங்கை சென்னையில் பயிராக்கிப் பயன்பெற
முடியாது. காஷ்மீரில் விளையும் ஆப்பிள் சேலத்தில் விளையாது. அதற்கு
அடிப்படையான காரணம் அதனதன் மண் வளமும், சீதோஷண நிலையும்

அதுபோல ஒரு ஜாதகம் சிறப்பாக இருந்து ஜாதகருக்கு நல்ல பலன்களைத்
தர, முக்கியமான மூன்று அடிப்படை விஷயங்கள் உள்ளன.

1
முதலில் ஜாதகரின் லக்கினாதிபதி நன்றாக இருக்க வேண்டு. அவர் தனது
சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால்
மட்டுமே நன்றாக இருக்கிறார் என்று பொருள். That position will give the
native a good standing power in any situation.

2.
பெர்சனலிட்டி எனப்படும் ஜாதகரின் தோற்றம் மற்றும் உடல் வலிமை,
அத்துடன் மனவலிமை ஆகியவைகள் முக்கியமாகும். அவற்றைத்தருபவை
முறையே சூரியனும், சந்திரனும் ஆகும். அவைகளும் ஜாதகத்தில் வலுவாக
இருக்க வேண்டும். அதாவது சூரியனும், சந்திரனும் ஜாதகத்தில் தங்களது
சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால்
மட்டுமே நன்றாக இருக்கிறார்கள் என்று பொருள்

இம்மூன்றும் இல்லாவிட்டால், பத்தாம் வீடும், பத்தாம் வீட்டின் அதிபதியும்
எவ்வளவு வலிமையாக இருந்தாலும் ஜாதகர் அதன் பலனை முழுமையாகப்
பெற முடியாது. அதை அனைவரும் மனதில் கொள்ளவும். அதை வலியுறுத்திக்
கூறத்தான் மேலே உருளைக்கிழங்கை உதாரணப் படுத்திக் கூறியுள்ளேன்

ஒருவர் தான் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் சிறக்க அம்மூன்றும்
தான் அடிப்படை அம்சங்கள்.

புரிகின்றதா கண்மணிகளே?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Careers by sign
ராசிகளை வைத்து அமையும் வேலைகள் (பொதுப் பலன்)
அதாவது கீழ்க்கண்ட ராசிகள் உங்கள் பத்தாம் இடமாக இருக்குமென்றால்
அதற்குரிய பொதுப்பலன்கள்

1. மேஷம் (Aries)
ராணுவம், காவல்துறை, அறுவை சிகிச்சை நிபுனர், மெக்கானிக்,
உருக்கு மற்றும் இரும்புத் தொழில், தீயணைக்கும்படை அல்லது
தீயனைப்புக் கருவிகள் சம்பந்தமான தொழில், தொழிற்சாலை
அதிபர்கள், விளைளயாட்டுத்துறை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.ரிஷபம்:
ஏர்கண்டிஷனர் போன்ற சொகுசு சாதனங்கள் (luxury goods)
நகைகள், சோப்பு, முகப்பவுடர், சென்ட் போன்ற 'காஸ்மெடிக்'
பொருட்கள். நடிப்பு, இசை, தையற்கலைஞர்கள். ஆயத்த ஆடைகள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.மிதுனம்:
ஊடகங்கள் (செய்தி நிறுவனங்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி,
வானொலி) நிறுவனப் பிரதிநிதிகள். எழுத்தாளர்கள். கணக்கர்கள்,
மொழிபெயர்ப்பாளர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.கடகம்:
கடல் வணிகம். மீன் வியாபாரம், செவிலியர்கள், உணவு. உள் அலங்கார
வேலைகள். பெட்ரோலியம் சார்ந்த துறைகள். சரித்திர ஆய்வாளர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.சிம்மம்:
அரசுப் பணிகள். அரசியல், மத அமைப்புக்கள். தூதரங்கள்,
முதலீட்டு வேலைகள் (investing)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.கன்னி:
மருத்துவர்கள், கணக்காளர்கள், கணக்கு ஆய்வாளர்கள்,
ஜோதிடம், கணினி சம்பந்தப்பட்ட துறைகள், ஊடகங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.துலாம்:
நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், கலைஞர்கள்,விளம்பரத்துறை,
அலங்காரப்பொருட்கள்,ஆடை, அணிகலன்கள், வரவேற்பாளர்கள்
உள் அலங்கார வேலைகள் (interior decorators)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
8.விருச்சிகம்:
இரசாயனப் பொருட்கள், மருந்துகள், திரவப் பொருட்கள்,
காப்பீட்டுத் தொழில் (insurance) மருத்துவர்கள், செவிலியர்கள்
காவலர்கள்,
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
9.தனுசு:
சட்டம், நீதி, மதங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய தொழில்கள்
துணிமணிகள், காலணிகள், விளையாட்டுத்துறை, விளையாட்டு வீரர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
10.மகரம்:
சுரங்கம், கனிமங்கள் உற்பத்தி, பதனிடுதல் போன்றவைகள்
மூலப் பொருட்கள் உற்பத்தி, மூலப் பொருட்கள் விற்பனை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
11.கும்பம்:
தத்துவஞானிகள், ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள், ஜோதிடர்கள்,
பொறியாளர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
12.மீனம்
மருத்துவர்கள், கடல் சார்ந்த தொழில்கள் அல்லது வேலைகள்,
இரசாயனங்கள், எண்ணெய், ஓவியர்கள், மருத்துவமனைகள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வீடுகளை வைத்து வேலைகள்:
Careers by house (if the 10th lord is placed in the following houses)
1
First:
self-employment, politics or the public at large, work concered with the body (example. health club)

2.
Second:
banking, investments, accountants, restaurants, teaching, consultants, psychologists,

3
Third:
communication, arts, sales, advertising, computing, writing, publishing

4.
Fourth:
agriculture, building trades, real estate, vehicles, water, geology and mining

5.
Fifth:
politics, stockbrokers, religious rituals, entertainment, authorship

6
Sixth:
lawyers, military, police, labour, health related professions, food, waiters.

7.
Seventh:
business, trade, merchant, foreign business.

8.
Eighth:
insurance, research, death-related, metaphysics (e.g. astrology), sex industry.

9.
Ninth:
law, university teaching, travel, religious professions, work in foreign countries.

10
Tenth:
government jobs, dealing with public and the masses, managers, politics.

11
Eleventh:
trade and business, accountants, financial institutions, group work. sports

12
Twelfth:
foreign, jobs requiring secrecy, travels, hospitals, prisons, charities, advocacy.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Careers by planet (10th Lord)
1. Sun:
authority, politicians, scientists, leaders, directors, government employees, doctors, jewelers

2. Moon
nursing, the public, traveling, marine, cooks, restaurants, import/export.

3. Mars
fire, energy, metals, initiative, weapons, construction, soldiers, police, surgeons, engineers.

4. Mercury
intellect, writing, teaching, merchandise, clerks, accountants, editors, transport, astrologers.

5. Jupiter
finance, law, treasury, scholars, priests, politicians, advertising, psychologist, humanitarian.

6. Venus
pleasures, luxuries, beauty, art, music, entertainment industry, sex industry, hotels.

7. Saturn t
real estate, labour, agriculture, building trades, mining, monk.

8. Rahu
researchers, engineers, physicians, medicine/drugs, speculators, aviation, electricity, waste.

9. Ketu
idealism, enlightenment, religion, secret affairs, poisons, metaphysics.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லாம் பொதுப்பலன்கள். அவரவர்கள் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைமைகளை
வைத்துப் பலன்கள் மாறுபடும்.

இப்போது, பொரியல் கூட்டு, அவியல், வறுவல் ஆகியவற்றைப் பறிமாறியுள்ளேன்.
இனிமேல் சாம்பார், வற்றக்குழம்பு, மோர்க்குழம்பு, தயிர், பாயாசம் எல்லாம் வர
உள்ளது, அவைகள் அடுத்தடுத்து வரும். வந்த பிறகு, நன்றாகச் சாப்பிட்டுவிட்டு
ஒரு முடிவிற்கு வாருங்கள்.

அதாவது பத்தாம் வீட்டைப் பற்றி இன்னும் சில பாடங்கள் (பகுதிகள்) உள்ளன.
அவைகள் தொடர்ந்து வரும்! பொறுமை காத்துப் படித்து இன்புற வேண்டுகிறேன்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்!

வாழ்க வளமுடன்!