மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.07

எம்.ஜி.ஆரின் ஜாதகம்!

=================================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21
தசா புக்திகள்

(இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு
முன் பதிவையும் படிக்க வேண்டும்!)

தசாபுத்தி என்றால் என்ன?

ஒவ்வொரு கிரகத்திற்கும் தசாபுக்திகள் (Own Periods)
உண்டு. ஒவ்வொரு கிரகமும் அதனுடைய தசாபுக்தி
நடக்கும்போதுதான் பலனைக் கொடுக்கும்.
(Awarding the benefits to the native of the horoscope)
என்று முன் பதிவில் எழுதியிருந்தேன்.

தசா புக்திகளைபபற்றி ம்ட்டும் இப்போது
பார்ப்போம். ஒவ்வொரு த்சாவிற்கும் (Major Periods)
புக்திக்கும் (Sub-periods) உள்ள பலன்களை அடுத்த
பதிவில் பார்ப்போம்.

எல்லோரும் 27 நட்சத்திரங்களுக்குள் ஒன்றில்தான்
பிறந்திருப்போம்.

ஒவ்வொருவருக்கும் தான் பிறந்த நட்சத்திரம் எது?
அதன் அதிபதி(Owner) யார்? என்பது தெரிந்திருக்க
வேண்டும். .

(கற்றுக் கொள்வதற்கும், நினைவில் வைத்துக்
கொள்வதற்கும் ஒரு குறுக்கு வழி இருக்கிறது
அதைத்தான் இப்போது சொல்லித்தரப் போகிறேன்)
27 நட்சத்திரங்களில் முதலில் உள்ள ஒன்பது
நட்சத்திரங்களை மட்டும் வரிசையாக எழுதுங்கள்.
எழுதிய பிறகு அடுத்துள்ள 18ல் 9 நட்சத்திரத்தில்
முதலில் எழுதிய ஒன்பது நட்சத்திரங்களுக்கு
பக்கத்திலேயே எழுதிக் கொண்டு வந்து அதற்கு
அடுதத ஒன்பதையும் அதே வரிசையில் தொடர்ந்து
கீழ்க் கணட மாதிரி எழுதிக் கொள்ளூங்கள்.
என்ன எழுதிக் கொண்டீர்களா?
எழுதியது இப்படித்தான் இருக்கும்

அதோடு முதல் வரிசையில் உள்ள நட்சத்திரங்களுக்கு
அதிபதி கேது என்று துவங்கி, ஒவ்வொரு வரிசையிலும்
உள்ள நட்சத்திரங்களுக்கும் அதிபதி யார் யாரென்று
அதே அட்டவணையில் குறிப்பிட்டுள்ளேன்.
=============================================
Table showing the 27 Stars and their owners
=======================================================
Tables showing the Major Periods (தசா) and Sub-Periods (புக்தி)






===================================================
இது மிக மிக முக்கியமான பாடம். ஆக்வே சோமபலை
விடுத்து இதை மனனம் செய்து மனதில் ஏற்றிவைப்பது
அவசியம்! (உங்களுக்கு சோம்பல் இருக்காது

என்று தெரியும். இருந்தாலும் அந்த டில்லிவாலாவிற்காக
இதை எழுதுகிறேன்:-))
இந்த அட்டவனையின் உபயோகம் என்னவென்றால்
ஒருவர் தன்னுடைய பிறந்த நட்சத்திரத்தைச் சொல்லி
யவுடன், அவருடைய நட்சத்திரத்திற்கு அதிபதி யாரோ
அந்த அதிபதியின் தசாதான் அந்த ஜாதகரின் துவக்கதசா.
அதைத் தொடர்ந்து இந்த அட்டவணையில்
குறிப்பிட்டுள்ள படியே அடுத்தடுத்த தசாக்களும்
அவருக்கு வரும்.

அனைவருக்கும் இது அறுதியானது. நிச்சய்மானது!
இதில் மாற்றம் ஏதும் 100% இருக்காது. இதன்படியேதான்
தசாக்கள் வரும். அந்தந்த தசாக்களின் படியேதான் பலன்களும்
(நல்லதோ அல்லது தீயதோ) கிடைக்கும் அல்லது நடக்கும்!
---------------------------------------------------------------------------------
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு துவக்க தசா
சந்திரனுடைய தசாதான். அதுபோல மகம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்குக் கேது தசாதான் துவக்க தசா!
----------------------------------------------------------------------------------------
த்சா சரி, புக்தி என்றால் என்ன?

ஒரு கிரகத்தின் தசாவின் உட்பிரிவுதான் புக்தி!

உதாரணத்திற்கு ராகு தசாவின் காலம் 18 வருடங்கள்
அந்த 18 வருடங்களுமே ராகுவின் முழுக்கட்டுப்பாட்டில்
இருந்தால் என்னா ஆகும்? மனிதனை வாட்டிப் பிழிந்து
விடாதா?

அத்னால் அந்த ராகுவின் தசாவே 9 பிரிவுகளாகப் பிரிக்கப்
பெற்று ஒரு ஒழுங்கு முறையில் மற்ற கிரகங்களூக்கும்
உட்பிரிவாக வழங்கப் பெற்றிருக்கிறது

உட்பிரிவையும் அதற்குரிய மாதங்கள், நாட்களையும்
அட்டவனையில் கொடுத்துள்ளேன்.பார்க்க வேண்டுகிறேன்

சனி தசா 19 வருடம், ராகு தசா 18 வருடம், கேது த்சா
7 வருடம் மனிதனகப் பிறந்தவன் இந்த் தீய கிரகங்களின்
தசைகளில் ஒன்றிலாவது நுழைந்து, அடிபட்டு வெளியே
வந்துதான் ஆகவேண்டும்.

ராகு தசை உள்ளவனுக்கு கேது தசை வாரது. ஆனால்
அவனுடைய ஒவ்வொரு தசையிலுமே கேது புக்தி
நிச்சயம் வரும்

அதுபோல சூரிய தசையில் பிறந்தவனுக்கு சுக்கிர தசை
வராது. ஆனால் அவனுடைய ஒவ்வொரு தசையிலும்
சுக்கிர புக்தி கண்டிப்பாக வரும்.

எல்லாருக்குமே நன்மைகளும் தீமைகளும், தசைகளும்
புக்திகளும் பாகுபாடின்றி சம்மாகவே வழ்ங்கப்பட்டுள்ளன
என்பதற்கு இந்த தசா பலன்களே ஒரு ந்ல்ல உதாரணம்

ஒரேயடியாக அடிபடாமல், நடுவில் அடிபட்ட இடங்களுக்கு
ஒத்தடம் கொடுத்துக் கொள்ளவும், உடம்பைத்தேற்றிக் கொண்டு
மீண்டும் அடிவாங்கவும் வசதியாக வருபவைதான் மற்ற
புக்திகள். ராகு தசை கேது புக்தியில் அடிவாங்கியவன்
ராகுதசை சுக்கிரபுக்தியில் உடம்பைத் தேற்றிக் கொள்வான்
அதற்கடுத்துவரும் ராகு தசை சூரிய புக்தி மறுபடியும்
சுழற்றி அடிக்க ஆரம்பித்துவிடும். ராகுவுடன் சூரியனும்
சேர்ந்து கொண்டு சாத்தும்! :-))).

பிறகு அடுத்து வரும் ராகு சந்திர தசையில் அப்பாடா என்று
மூச்சு விடுவான். நிம்மதியாக் இரண்டு வேளை உணவாவது
வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவான். மறுபடியும் ராகு தசை
செவ்வாய் புக்தி அவனை ஓட் ஓட் விரட்டும்

அவனுடைய துன்பங்களுக்கு ஒரு முடிவு ஏற்பட்டு ,அதற்கு
அடுத்த தசையான் குரு த்சையில் அவன் காலெடி எடுத்து
வைப்பான் . அன்றிலிருந்து விடிவுகாலம் ஆரம்பிக்கும்


இதுபோல நல்ல தசையிலும் நல்லது இரண்டு மடங்காக
நடக்கும். குரு தசையில் புதன் புக்தி, குரு தசையில் சுக்கிர
புக்தி, குரு தசையில் சந்திர புக்தியெல்லாம் நன்மைகளை
வாரி வழ்ங்கிவிட்டுப் போய்விடும்

ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிளில் போய்க்
கொண்டிருந்த்வன் ஹோண்டா சிட்டி ஏ.ஸி காரில்
போக ஆரம்பித்து விடுவான். கும்பகோணத்தில்

ஓட்டு வீட்டில் குடியிருந்தவன், மும்பை நாரிமன்
பாயிண்ட் பகுதியில் சொந்த பிளாட்டிற்கு குடி
போய்விடுவான்.
காயல் பட்டிணத்தில் பட்கோட்டிக் கொண்டிருந்தவன்
கோயம்புத்தூரில் ஐம்பது லாரிகளுக்குச் சொந்தக்
காரனாகிவிடுவான்.

இது போன்று பள்ளத்தில் விழுந்து கிடப்பதும்

அல்லது மேட்டில் (ஊட்டியில்) தோட்டம் துறவுகள்
வாங்குவது போன்ற மாற்றங்களேல்லாம் தசா
புக்திகளின் மாற்றங்களால்தான்
சனியை விட ராகு கடுமையான் கிரகம்
(Merciless Planet) என்பார்கள். ஆனாலும் ஜாதகத்தில்
ராகு உச்சமாகவோ அல்லது லக்கின அதிபதியுடன்
அதுவும் அது அதனுடைய நட்புக்கிரகமாக இருந்து
நல்ல நிலையில் இருந்தாலோ எதிர்மாறாக
மிகவும் அற்புதமான நல்ல பலன்களைக் கொடுக்கும்.
இது போன்ற விதிவிலக்குகளும் உண்டு

சிவாஜி கணேசன் அவர்களுக்கு அந்த மாதியான்
அற்புதமான பலனை ராகுதான் தந்தது.

அவருடைய முதல் படமான பராசக்தியில் துவங்கி

தொடர்ந்து வீயட்நாம் வீடு என்னும் படம் வரை
சுமார் 18 ஆண்டுகள் அவர் நடித்த படங்கள்
அனைத்தும் சிறப்பாக அமைந்து சக்கைபோடு
போட்டு அவருக்கு அழியாப் புகழ் சேரக் காரணமாக

இருந்தது அவருடைய ஜாதகப்ப்டி இந்த ராகுதான்.
அதனுடைய தசை நடந்த காலகட்டத்தில் அவ்வாறு
நடந்தது.

பராசக்தி - 1952ம் வருடம்
வீயட்நாம் வீடு - 1970ம் வருடம்

இந்த இடைப்பட்ட 18 வருட காலத்தில் வெளிவந்த
அவருடைய படங்கள் அனனத்துமே அவருக்குப்
பெரும் புகழையும், செல்வத்தையும் வாரிக் கொடுத்தன!ஒரு தசா நாதன் ஜாதகத்தில் வலுவாக இருக்கும்போது
அவனுடைய தசையில் எல்லாமே வெற்றியாக இருக்கும்
புத்தி நாதர்களின் குறுக்கீட்டையும் முறியடுத்து அந்த
வெற்றியை அவன் கொடுப்பான். அதற்கு திரு.சிவாஜி
அவர்களின் ஜாதக்மே உதாரணம். ஆனால் அதற்குப் பிற்கு
வந்த த்சைகளில் அவர் பெரும் வெற்றி எதையும்
பெற்வில்லை. அரசியலில் நுழைந்தும் அவரால் சோபிக்க
முடியவில்லை

அதேபோல் ஒரு தீய கிரகத்தின் தசை நடக்கும்போது
ஜாதகனுடைய ஜாதகத்தில் புக்தி நாதருடைய கிரகங்கள்
வலுவாக இல்லாவிட்டால், அந்த தசை மொத்தமும்
ஜாதகனை அடித்துத் துவைத்துப் பிழிந்து காயப்போட்டு
விட்டுப் போய்விடும்.

ஒரு பெரிய மல்ட்டி மில்லியனர், ஒரு தசையில்
அவருடைய செல்வம் பத்து மடங்காகப் பெருகியது.
ஆனால் அடுத்த தசையின் துவக்கத்திலேயே அந்த
தசைக்குரிய கிரகம் அவருக்கு வாத நோயை
உண்டாக்கி படுத்த படுக்கையாக வீட்டில் உட்கார
வைத்துவிட்டது! (யாரென்று சொல்லவில்லை.
முடிந்த்வர்கள் ஊகம் செய்து கொள்ளுங்கள்)

எந்த தசையாக அல்லது புத்தியாக இருந்தாலும் சரி
நல்லது கெட்டது மாறி மாறி வரும் அமைப்புத்தான்
நல்லது. அதுதான் நம்க்கு வேண்டும்!

கர்ப்பச்செல் இருப்பு என்றால் என்ன?

ஒரு குழந்தை திருவோண நட்சத்திரம் நான்காம்
பாதத்தில் பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம்

முதல் மூன்று பாதம் அந்தக் குழந்தைக்கு, அதன் தாயின்
கர்ப்பப்பையிலே கழித்துவிட்டபடியால் அந்தக் கழிவிற்குரிய
தசாபலன் கணக்கில் வராது. பிறந்தவுடன் மீதமுள்ள
நட்சத்திர தசா பலன்களதான் அந்தக் குழந்தையின்
பிறப்புக் கணக்கில் வரும்

திருவோண நட்சத்திரத்தின் அதிபதியான் சந்திரனுக்குரிய
பத்து வருட சந்திரதசைதான் அந்தக் குழந்தையின் துவக்க
தசை.

அதில் கர்ப்பதில் இருந்த பகுதிக்கான் பகுதியைக் கழித்து
விட்டால் ( 10 வருடம் கழித்தல் 4ல் 3 பங்கு = 10.00 - 7.5 = 2.5 வருடம்)
அதாவது 2 வருடம் 6 மாதம் தான் அந்த்க் குழந்தையின் இருப்பு
தசை . அதுதான் கர்ப்பச்செல் இருப்பு எனப்படும்

இது போன்று ஒவ்வொரு பிறப்பிற்கும் கணக்கிடப் ப்ட்டு
ஜாதகத்தில் குறிக்கப்பட்டிருக்கும்
-------------------------------------------------------------------------------------

சரி, பிறப்பிலிருந்து நம்து நடப்பு திசையை எப்படிக் கணக்கிடுவது?

சுலபமான வழி கண்ணியில் கணித்து விடலாம்

சூப்பராக இருக்கும்!

அதற்கான் விவரங்களை என் முன் பதிவில் கொடுத்துள்ளேன்

இருந்தாலும் இன்னுமொருமுறை தருகிறேன்

அந்த இணையதள முகவரி இதுதான்
அதில் உங்களூடைய Birth Details ஐக் கொடுத்து விட்டால் போதும்
உங்களூடைய ஜாதகம், கெர்ப்பச்செல் இருப்பு, Major Period & Sub - Periods
எல்லாம் ஒரே வினாடியில் கிடைத்துவிடும். பிரிண்ட் எடுத்து
சட்டைப் பையில் வைத்துக் கொள்ளுங்கள். இனி அடிக்கடி
அது உங்களுக்குத் தேவைப்படும்
------------------------------------------------------------------------------
கணினியை விட்டுத் தள்ளுங்கள். நமக்கு அது
தெரிந்திருக்க வேண்டாமா?

உதாரணத்தைற்க்காக ஒன்றை எழுதிக் காட்டியுள்ளேன்

ஒருவர் 10.02.1975 அன்று மாலை 4 மணிக்குப் பிறந்திருக்கிறார்
அவருடைய நட்சத்திரம் திருவோணம். கர்ப்பசசெல் இருப்பு
3 வருடம் 8 மாத்ங்கள் 2 நாட்கள்

அவருடைய நடப்பு தசைக் கணக்கு

1975 - 02 - 10 பிறந்ததேதி
0003- 08 - 02 கெர்ப்பச்செல் இருப்பு
-------------------
1978- 10. 12 சந்திர தசை முடிந்த நாள்
000 7 - 00 - 00 செவ்வாய் தசை
------------------------
1985 -10. 12 செவ்வாய் தசை முடிந்த நாள்
0018 - 00- 00 ராகு தசை
--------------------
2003 - 10 -12 ராகு தசை முடிந்த நாள்
0002- 01 -18 நாட்கள் குரு தசை குரு புக்தியில்
------------------------
2005 -12 - 00 குரு தசை குரு புக்தி முடிந்த நாள்
0002- 06 -12 நாட்கள் கு தசையில் சனி புக்தி
-------------------------------
2008 - 06 -12 குரு தசையில் சனி புக்தி முடியும் நாள்
0002 - 03- 06 குரு தசை புதன் புக்தி காலம்

இந்தக் கால் கட்டத்தில் வேலையில் மாற்றம்
ஏற்படும், முன்னேறறம் ஏற்படும்
குருவும், புதனும் சேரும்போது உயர்வான
மாற்றங்களை ஏற்படுத்துவார்கள்

12.10.2003 ல் இருந்தே அதாவது ராகு தசை முடிந்த
நாளில் இருந்தே அவருக்கு நல்ல காலம் என்றாலும்
உயர்வான காலம் என்பது 12.06.2008ல் இருந்துதான்
இதைக் கண்டு பிடிப்பதற்குத்தான் இத்தனை பாடு
அதற்கு உதவுவதுதான் புக்திகள் (Sub Periods)

என்ன புரியும்படியாக உங்களுக்கு விளக்கிச்
சொல்லியிருக்கிறேனா?

பின்னூட்டத்தில் ஒருவரி எழுதுங்கள்!----------------------------------------------------------------------------

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் முடித்துக் கொள்கிறேன்
இந்தப்பாடத்தின் தொடர்ச்சி அடுத்த பதிவிலும் உண்டு!
=================================================
Practical Test
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஜாதகத்தைக்
கீழே கொடுத்துள்ளேன்

பிறந்த நாள்: 28 .01.1917
காலை மணி 6.30
இடம் கண்டி
இருப்பு : புதன் தசையில் 12 வருடம் 2 மாதம் 7 நாட்கள்

30.06.1977 ல் அவர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆனார்!
-----------------------------------------------------------------------
கேள்வி: எந்த தசை/புக்தியில் அவர் முதல் அமைச்சர் ஆனார்?



=========================================================
(தொடரும்)

30.3.07

நேரம் நல்ல நேரம்


===========================================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 20
முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு ஞாயிற்றுக்
கிழமை காலைப் பொழுது.

நண்பர் ஒருவர் துணைக்குக் கூப்பிட்டார் என்பதற்காக
அவருடன் கோவை இடையர் வீதியிலிருந்த ஜோதிடர்
வீட்டிற்கு, அவருடன் நானும் சென்றிருந்தேன்.

ஜோதிடரின் பெயர் பரமேஷ்வர பணிக்கர். அந்தக்
காலத்தில் மிகவும் பிரபலமான ஜோதிடர்.கூட்டம்
அலைமோதும் காத்திருந்துதான் அவரைப் பார்க்க
முடியும். வயதானவர். அனுபவம் மிக்கவர்

என் நண்பனின் சகோதரி மகளுக்கு எப்போது திருமணம்
நடக்கும் என்று கேட்டு வருவதற்காகப் போயிருந்தோம

ஜோதிடரின் வீடு கீழ்த்தளத்தில். முதல் மாடியில்தான்
அவரது அலுவலகம்.

11' x 15' அளவில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான்
உட்காருவதற்குப் பாய் போட்டு வைத்திருப்பார்கள்
ஏற்கனவே பத்துப் பேர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
நாங்களும் போய் உட்கார்ந்து கொண்டோம்.

நான் இதுபோன்ற இடங்களுக்கெல்லாம் போகும்போது
என்ன நடக்கிறது என்று முழுக்கவனத்துடன் பார்ப்பது
வழக்கம்.

எங்களுக்கு முன்னால் ஒரு வயதான தம்பதியர்
தங்கள் மகனுடைய ஜாதகத்தை அவரிடம் கொடுத்துப்
பார்க்கச் சொல்லிவிட்டு அவர் எதிரில் அமர்ந்திருந்தார்கள்

ஜோதிடர் நடப்பு தசாபுத்தியை ஒரு காகிதத்தில் அசுர
வேகத்தில் கணக்கெடுத்துக் குறித்துக் கொண்டவர்,
ஜாதகத்தையும் ஒரு கண்ணோட்டம் பார்த்தவாறு கேட்டார்

"உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்?"

அந்தப் பெரியவர் சொன்னார்." சாமி, பையனுக்கு
22 வயசாச்சுங்க! வியாபாரம் எதாவது வச்சுக் கொடுக்கலாமா? அல்லது திருமணத்த நடத்திப் போடலாமா? கொஞ்சம் விவரனையா பாத்துச் சொல்லுங்க! வியாபாரம் வச்சுக் கொடுத்தா அஞ்சு வருசம் கழிச்சுத் தான் திருமணம் பண்ணோனும். இல்ல திருமணம் செஞ்சுவச்சோமின்னா வியாபாரம் பின்னாடித்தான் வைக்கோணும். சாதகப்படி எது நல்லதுன்னு சொல்லுங்க"

உடனே சட்டென்று ஜோதிடர் அவரைப் பார்த்துக் கேட்டார்.

"பையன் வீட்டிற்கு அடங்க மாட்டானே?"

"ஆமாம் சாமி!"

"ஒழுங்கா படிச்சு பட்டம் வாங்கியிருக்க மாட்டானே?"

"ஆமாம் சாமி!"

" அதுக்கெல்லாம் காரணம் பையன் மூல நட்சத்திரம்.
சின்ன வயசிலேயே சுக்கிர தசை வந்திருச்சு. சின்ன
வயசில சுக்கிர தசை வரக்கூடாது. குட்டிச் சுக்கிரன்
கூடிக் கெடுக்கும்.
அதோட பையனை சுகவாசியா
வச்சு - அவனைக் கெடுத்துவிட்டுப்போய் விடும்!
அவன் பிறந்ததிலிருந்து உங்களுக்குப் பணம் நிறைய
வந்திருக்கும். அதனால அவனைச் செல்லம் கொடுத்தும்
வளர்த்திருப்பீங்க! ஜாதகப்படி கர்ப்பச்செல் இருப்பு
கேதுல 3 வருஷம், சுக்கிரன் ஒரு 20 வருஷம், அதுக்க
ப்புறம் வரப்போகிற சூரிய தசை ஒரு ஆறு வருஷம்
ஆக மொத்தம் 29 வருஷம். பையனுக்கு 30 வயசுக்கு
மேலதான் நல்ல காலம். அதுக்கப்புறம் வியாபாரம்
வச்சுக்கொடுங்க. இப்ப கல்யாணத்தைப் பண்ணுங்க!
முடியப் போற சுக்கிரதசையும் கல்யாணத்தை
நடித்தி வச்சுட்டுத்தான் போகும். அதோட அவனுக்கு
வியாழ நோக்கமும் இருக்கு! ஜாதகப்படி இன்னும்
தொண்ணூறு நாள்ல கல்யாணம் ஜாம் ஜாம்னு
நடந்திரும்!"

என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டார்

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை

அவர் சொன்ன அந்த வாக்கியம் நெடு நாட்கள்
என் காதிலும் மனதிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

"குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்."
"குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்."



அது உண்மை என்பதைப் பின்னால் தெரிந்து
கொண்டேன்


அதாவது எனக்குக் கிடைதத என் உறவினர்கள்
மற்றும் என் நண்பர்களின் ஜாதகங்களை (சுமார் 200)
வைத்து நான் ஆராய்ச்சி செய்தபோது அது
உண்மைதான் என்று தெரிந்து கொண்டேன்


-----------------------------------------------------------------------
அதுபோல பத்து வருடங்களுக்கு முன்பு, வேறு
ஒரு நண்பர் கூப்பிட்டார் என்பதற்காக அவருடன்
வேறு ஒரு பிரபல ஜோதிடரைப் பார்க்கப் போயி
ருந்தேன்.

அந்தக் கால கட்டத்தில் நான் ஜோதிட நூல்களை
யெல்லாம் ஓரளவிற்குக் கற்றுத் தெளிந்திருந்தேன்
ஆனாலும் இதுபோன்ற இடங்களுக்குப் போகும்
போது என்னுடைய திருவாயை மூடிக் கொண்டு
என்ன நடக்கிறது என்று கவனிப்பேனேயன்றி
ஒன்றும் பேச மாட்டேன். என் மேதாவித்தனத்தை
எல்லாம் ஸ்லைடு போட்டுக் காட்டமாட்டேன்

என் நண்பர் கொடுத்த அவருடைய ஜாதகத்தை
வாங்கி ஒரு காகிதத்தில் தேவையான விவரங்களைக்
குறிபெடுத்த ஜோதிடர் என் நண்பர் ஒன்றும் சொல்
லாமலேயே கேட்டார்.

"உங்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக மிகுந்த
பணக்கஷ்டம். சரியா?"

என் நண்பர் சற்றுத் திகைத்துப்போய், அரைப்
புன்னகையுடன் பதில் சொன்னார்

"ஆமாம்!"

" வியாபாரத்தில் சரக்குக் கொடுத்த இடத்திலெல்லாம்
சிக்கல். நம்பியவர்கள் எல்லாம ஏமாற்றுவார்கள்.
உங்கள் பாக்கியெல்லாம் ஒன்றும் வசூலாகாது. ஆனால்
உங்களுக்குப் பணம் கொடுத்தவன் நெருக்கடி கொடுப்பான்
இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதா?"

" ஆமாம்!"

"அதற்குக் காரணம் உங்களுக்கு 2ம் வீட்டில் மாந்தி
மாந்தி அமர்ந்த வீட்டிற்குரியவனான புதனுடைய
புக்தி உங்களுக்கு இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.
மாந்தி அமர்ந்தவனுடைய புக்தி வாட்டி எடுத்துவிடும்.
மேலும் உங்களுக்கு சனிமகாதிசையில் புதன் புக்தி
சனியும் புதனும் வேறு அஷ்டம சஷ்டமத்தில்
(6th and 8th position to each other) இருக்கிறார்கள். அதுவும்
அனுகூலமாக இல்லை. இந்த தசாபுக்திக் காலம்
மொத்தம் 32 மாதத்தில் 24 மாதங்கள் கழிந்துவிட்டன
இன்னும் 8 மாத காலம் பாக்கி இருக்கிறது. அதற்குப்
பிறகு எல்லாம் சரியாகிவிடும். கவலையை விடுங்கள்
உங்கள் அடிப்படை ஜாதகம் நன்றாக இருக்கிறது
பழைய நிலைமை திரும்பி விடும்" என்று சொல்லி
அனுப்பி வைததார்.

அதன்படியே நடந்தது!

சரி, இதையெல்லாம் எப்படி சொல்கிறார்கள்?

தசாபுக்திகளை வைத்துத்தான் சொல்வார்கள்!

தசாபுத்தி என்றால் என்ன?

ஒவ்வொரு கிரகத்திற்கும் தசாபுக்திகள் (Own Periods)
உண்டு. ஒவ்வொரு கிரகமும் அதனுடைய தசாபுக்தி
நடக்கும்போதுதான் பலனைக் கொடுக்கும்.
(Awarding the benefits to the native of the horoscope)

அதுதான் அடுத்த பாடம்!

பதிவின் நீளம், மற்றும் உங்களுடைய பொறுமை
கருதி இன்று இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

நாளை சந்திப்போம்!

(தொடரும்)
-----------------------------------------------------------------

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 19

===========================================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 19
கிரகங்களின் சேர்க்கை (Association of Planets)

ஜாதகத்தில் கிரகங்கள் வீடுகளில் தனித்திருந்தால்
நல்லது. அல்லது ஒரு வீட்டில் (30 பாகைக்குள்)
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள்
சேர்ந்திருக்கும்போது அவை நன்மை செய்யக்கூடிய
கிரகங்களாகவோ அல்லது ஒன்றிற்கு ஒன்று நட்புடைய
கிரகங்களாகவோ இருந்தால் நல்லது.

இல்லையென்றால் தீயது!

அந்தத் தீமையும் வேறு ஒரு பிரதான நன்மை
பயக்கும் கிரகத்தின் பார்வை அந்த
வீட்டிற்குக் கிடைக்குமென்றால் தீமையின் அளவு
பெரும் அளவு குறைக்கப்பட்டுவிடும்
-----------------------------------------------------------------------
ஒரு அறையில் ஒருவர் மட்டும் அமர்ந்து வேலை
பார்க்கும் போது அவரது வேலை முழுக்கவனத்துடனும்
தனித்த்தன்மையுடனும் சிறப்பாக இருக்கும்.

அதே அறையில் இருவரை அமர்த்தி வேலை செய்யச்
சொல்லும்போது, ஒருவரால் மற்றவருடைய வேலை
அதிக சிறப்படையவும் வாய்ப்பு இருக்கிறது. அதே
நேரத்தில் கெட்டுச் சிதறிக் குறையவும் வாய்ப்பு
இருக்கிறது.

அது, அந்த இருவருடைய திறமை, குணம், ஒத்துப்
போகும் தன்மை இவற்றைப் பொருத்தது

அதே நேரத்தில் ஒரு புத்திசாலியையும், ஒரு மடைய
னையும், அல்லது ஒரு சோம்பேறியையும் அல்லது
ஒரு குஜால் பேர்வழியையும் அல்லது ஒரு கிரிமினலையும்
ஜோடி சேர்த்து அமரவைத்து வேலை செய்யச்
சொன்னால் வேலை எப்படி நடக்கும் ?
அல்லது எப்படி இருக்கும் ? என்று நீங்களே யோசித்துப்
பாருங்கள்!

அதானால்தான் பல நிறுவனங்களில் Cabin அமைத்து
அல்லது Partition பலகைகள் அமைத்துத் தங்கள்
ஊழியர்களை (staff) அமர்த்தி வேலை வாங்குவார்கள்
---------------------------------------------------------------
இரண்டு கிரகங்களின் சேர்க்கைக்கே இப்படியென்றால்
மூன்று அல்லது நான்கு கிரகங்கள் சேர்ந்து ஒரே
வீட்டில் இருந்தால் என்ன ஆகும்?

அதற்குப் பெயர் கிரக யுத்தம் (Planetary War)
அதைப் பற்றி விரிவாகப் பின் வரும் பகுதியில்
பார்ப்போம். இப்போது கிரக சேர்க்கையை
மட்டும் தெரிந்து கொள்வோம்.

(பாடம் திசை மாறக் கூடாது என்பதில் நான்
கவனமாக இருக்கிறேன், அதே போல ஒரே
அத்தியாயத்தில் ஓவர் டோஸாக எதையும்
கொடுக்க விரும்பவில்லை. 250mg Capsule மருந்து
என்றால் அதை மருத்துவர் சொல்லியதுபோல
ஒரு வேளைக்கு ஒன்று என்று சாப்பிடுவோம்
இல்லையா அதுபோல!)

இரண்டு கிரகங்கள் அப்படியே ஒரே வீட்டில்
இருந்தாலும் அவை ஒன்றை விட்டு ஒன்று தள்ளி
(at least 5 degree) இருக்கவேண்டும். அப்படி இல்லாமல்
5 பாகைக்குள் இரண்டும் இருந்தால் அது நல்லதல்ல!

அதைக் கிரக அஸ்தமணம் (Combust) என்பார்கள்

அப்படி அஸ்தமணமானால் முதலில் நிற்கும்
கிரகம்தான் வலிமையுடம் இருக்கும். அதற்கு
5 பாகைக்குள் பின்னால் வந்து நிற்கும் கிரகம்
வலிமை இழந்து விடும்

இதுவே சூரியனுக்கும் மட்டும் 10 பாகைகள் என்று
கணக்கு. ஜாதகத்தில் சூரியனுக்குப் பக்கத்தில் அமரும்
எந்தக் கிரகமும் 10 டிகிரி தள்ளியே இருந்தால்
நல்லது. இல்லையென்றால் வலிமை இழந்து விடும்

வலிமை இழந்தால் என்ன ஆகும்?

ஜாதகனுக்கு நன்மையைச் செய்யும் சக்தியை அது
இழந்து விடும்.

உதாரணத்திற்கு களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவன்
ஜாதகத்தில் வேறு ஒரு கிரகத்துடன் சேர்ந்து
அஸ்தமண்ம் ஆகியிருந்தால் ஜாதகனுக்கு உரிய
பருவத்தில் திருமணம் ஆகாது! 21 முதல் 25 வயதிகுள்
ஆகவேண்டிய திருமணம் 35 முதல் 40 வயதில் நடக்கும்

மேலும் ஒரு உதாரணம்: ஏழில்(ஏழாம் வீட்டில்) இரண்டு
தீய கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஜாதகனுக்கு அலலது
பெண்ணாக இருந்தால் ஜாதகிக்குத் தீமை.

அது களத்திர ஸ்தானம். திருமண வாழ்க்கைக்கான
இடம் அங்கே பெண் ஜாதகத்தில் இரண்டு தீய
கிரகங்கள் இருந்தால் அவளுடைய மண வாழ்க்கை
போராட்டம் மிகுந்ததாக இருக்கும். நிம்மதியில்லாத
மண வாழ்க்கை அமைந்து விடும.

அந்த இடம் குருவின் பார்வை பெற்றிருந்தால் அந்தத்
தீமை குறைந்து விடும் அல்லது முற்றிலும் விலகி
விடும். குரு பார்ககக் கோடி தோஷம் நீங்கும் என்
கிறார்களே அதுதான் இது!

ஆண் ஜாதகமாக இருந்தால் இதே அமைப்பிற்கு
அவனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு
ஏற்பட்டு விடும் ( தொடர்பு ஏற்பட்டால் சந்தோஷமா?
அல்ல!) ஆரம்பத்தில் அவனுக்கு அது சந்தோஷமாகத்தான்
இருக்கும். பின்னால் அவஸ்தையாக மாறிவிடும்

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்ற மூன்று
ஆசைகளில் மனிதன் அதிகமாக சிக்கித் தவிப்பது
இந்தப் பெண்ணாசையில்தான். அவர்களுடைய
ஜாதகங்களில் இந்த ஏழாம் வீடு கெட்டுப் போயிருக்கும்
அல்லது 7ம் வீட்டிற்குரியவன் கெட்டுப்போயிருப்பான்

ஏழாம் வீட்டிற்குரியவன் என்பது - உதாரணத்திற்கு
சிம்ம லக்கினம் என்றால் 7ம் வீடு கும்பம். அதன் அதிபதி
(Owner) சனி. அவர் லக்கினத்திற்கு 5, 9லோ அல்லது உச்சம்பெற்று
துலாம் வீட்டில் இருந்தாலோ நல்ல மனைவி அமைவாள்

அதில்லாமல் அந்த் வீட்டிற்குரிய சனி லக்கினத்திற்கு 8
அல்லது 12ம் வீட்டிலோ அமர்ந்தால் திருமண வாழ்க்கை
சந்தோஷம் தருவதாக இருக்காது!

அதே ஜாதகனுக்கு, கிரக சேர்க்கையில் அந்த ஏழாம்
வீட்டிற்குரிய சனி சந்திரனுடன் (He is the 12 th lord for that
horoscope) சேர்ந்து எங்கே இருந்தாலும் மண வாழ்க்கை
நிம்மதியில்லாமல் இருக்கும்

இந்த 7ம் வீட்டைப் ப்ற்றிப் பின் வரும் அத்தியாயங்
களில் விரிவாகப் பார்ப்போம். இப்போது சேர்க்கையைப்
பற்றி சொல்கிறேன்
-----------------------------------------------------------------------
1. சூரியனுக்கு: சந்திரன், செவ்வாய், குரு இம்
மூன்றும் நட்புக் கிரகங்கள்.
சுக்கிரன், சனி, ராகு, கேது இந்த நான்கும்
பகைக் கிரகங்கள்
புதன் மட்டும் சமக் கிரகம் (Neutral Planet)

2.சந்திரனுக்கு: சூரியனும் புதனும் நட்புக்
கிரகங்கள்
ராகுவும், கேதுவும் பகைக் கிரகங்கள்
செவ்வாய், குரு, சுக்கிரன், சனி இந்நான்கும் சமக்
கிரகங்கள்

3. செவ்வாய்க்கு: சூரியன், சந்திரன், குரு இம்
மூன்றும் நட்புக் கிரகங்கள்.
புதன், ராகு, கேது இம்மூன்றும் பகைக்
கிரகங்கள்
சுக்கிரனும், சனியும் சம்க் கிரகங்கள்

4. புதனுக்கு: சூரியனும் சுக்கிரனும் நட்புக்
கிரகங்கள்
சந்திரன் மட்டுமே பகைக் கிரகம்
செவ்வாய், குரு, சனி, ராகு, கேது இவ்வைந்தும்
சமக் கிரகங்கள்

5. குருவுக்கு: சூரியன், சந்திரன், செவ்வாய் இம்
மூன்றும் நட்புக் கிரகங்கள்.
புதனும், சுக்கிரனும் பகைக் கிரகங்கள்
சனி, ராகு, கேது இம்மூன்றும் சமக் கிரகங்கள்

6. சுக்கிரனுக்கு: புதன், சனி, ராகு, கேது இந்
நான்கும் நட்புக் கிரகங்கள்
சூரியனும், சந்திரனும் பகைக்கிரகங்கள்
செவ்வாயும், குருவும் சமக் கிரகங்கள்

7. சனிக்கு: புதன், சுக்கிரன், ராகு, கேது
இந்நான்கும் நட்புக் கிரகங்கள்
சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும்
பகைக் கிரகங்கள்
குரு மட்டும் சமக் கிரகம்

8. இராகுவுக்கும், கேதுவுக்கும்:
சுக்கிரனும், சனியும் நட்புக் கிரகங்கள்
சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும்
பகைக் கிரகங்கள்
புதனும், குருவும் சமக் கிரகங்கள்

கிரகங்கள் சேர்க்கையில் ஒரு கிரகம்
தன்னுடைய நட்பு அல்லது சமக்
கிரகத்துடன் சேர்வது நன்மை பயக்கும்

அதுவே பகைக் கிரகத்துடன் சேரும்
பொழுது நன்மை பயக்காது

பெரிய அதிகாரத்தில் இருப்பவருடன்
சேரும் பொழுது கிடைக்கும் நன்மை
ஒரு பேட்டை தாதாவுடன் சேரும்போது
கிடைக்குமா?

ஒரு மிகப் பெரிய போலீஸ் அதிகாரியின்
நட்பில் கிடைக்கும் சந்தோஷம், ஒரு
கிரிமினல் ஆசாமியுடன் சேரும்போது
கிடைக்குமா?

சேர்க்கையின் பலனும் அப்படித்தான்
-----------------------------------------------------------
இயற்கையாகவே நன்மை பயக்கக்கூடிய
சில கிரக சேர்க்கைகள்:

பல கிரக சேர்க்கைகள் உள்ளன. நான்
மாதிரிக்கு ஐந்தை மட்டும் கொடுத்துள்ளேன்

1. குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால்
அதைக் குருச்சந்திர யோகம் என்பார்கள்

2. சந்திரனும், செவ்வாயும் சேர்ந்திருந்தால்
சசிமங்கள யோகம் என்பார்கள்

3. புதனும், சூரியனும் சேர்ந்திருந்தால்
புத-ஆதித்ய யோகம் என்பார்கள்

4. புதனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால்
நிபுனத்துவ யோகம் என்பார்கள்

5. ஒரு நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு
உச்சம் பெற்ற கிரகம் சேர்ந்திருந்தால்
அது நீசபங்க ராஜயோகம் எனப்படும்

நீசபங்க ராஜயோகம் - அமைப்பு:

மேஷத்தில் சனியும், சூரியனும்
சேர்ந்திருப்பது

ரிஷபத்தில் ராகுவும், சந்திரனும்
சேர்ந்திருப்பது

கடகத்தில் செவ்வாயும், குருவும்
சேர்ந்திருப்பது

கன்னியில் சுக்கிரனும், புதனும்
சேர்ந்திருப்பது

துலாத்தில் சூரியனும், சனியும்
சேர்ந்திருப்பது

மகரத்தில் குருவும், செவ்வாயும்
சேர்ந்திருப்பது

மீனத்தில் புதனும், சுக்கிரனும்
சேர்ந்திருப்பது

நீசபங்க ராஜயோக கிரகங்கள் - தாங்கள்
சம்பந்தப் பட்ட வீடுகளை வைத்து
மிகப் பெரிய - அளவிடமுடியாத
நன்மைகளைச் செய்துவிடும்

அது ஒவ்வொரு லக்கினத்துக்காரர்களுக்கும்
தனித்தனியாக மாறுபடும்.
அவரவர் லக்கினத்தை வைத்து - அந்த
நீசபங்க ராஜயோக கிரகங்கள் சம்பந்தப்
பட்டுள்ள இடத்தை வைத்து அதற்குண்டான
பலன்களை அள்ளித்தந்துவிடும்!

ஒரு சிம்ம லக்கின ஜாதகம். அந்த ஜாகத்தின்
பத்தாம் வீட்டிற்குரிய சுக்கிரன் நீசனாகி கன்னி
ராசியில் அம்ர்ந்துவிடும் போது அங்கே புதன்
இருந்தால் - அது புதனுக்கு சொந்த வீடும்
உச்ச வீடும் ஆனதால் புதனுடன் சுக்கிரன்
சேர்ந்து நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அந்த
ஜாதகன் பெரிய தொழில் அதிபர் ஆகிவிடுவான்

10க்குரிய சுக்கிரன் நீசமானதால் வேலையின்றி
ரோட்டில் திரிய வேண்டிய ஆசாமி, உச்ச புதன்
உடன் சேர்ந்ததால் பெரிய Business Magnet ஆகி
பணத்தில் புரளுவான். இதுதான் நீசபங்க ராஜ
யோகத்தின் பலன்

இதுவே 10ம் வீடாக இல்லாமல் 4ம் வீடான கல்வி
ஸ்தானமாக இருந்தால் ஜாதகன் பெரிய Scholar
ஆகி விடுவான். சாதாரண விரிவுரையாளராக
இருந்த அவனை இந்த ராஜயோகம் பல்கலைக்கழக
துணை வேந்தர் பதவிவரை கொண்டுபோய்ச்
சேர்த்துவிடும்!

இதுபோன்று வாழ்க்கையின் பலதுறைகளிலும்
பல நிலைப்பாடுகளிலும் இந்த நீசபங்க கிரக
சேர்க்கையின் தன்மை, அது அமையப்பெற்ற
ஜாதகனுக்கு அற்புதமான நன்மையைச் செய்யும்

அந்த நன்மை எது சம்பந்தப்பட்டதாய் வேண்டு
மானலும் இருக்கலாம். அது அந்த ஜாதகனின்
ஜாதகம் சம்பந்தப் பட்டதாகவும், அந்தக் கிரகங்களின்
தசா புக்திக் காலங்களிலும் நிச்சயாமாக நிறைவேறும்!

இந்த யோகங்களுக்குரிய பலன்களை
பின் வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்
100ற்கும் மேற்ப்ட்ட முக்கியமான யோகங்கள்
உள்ளன!

பதிவின் நீளம் கருதி - இன்று இத்துடன்
நிறைவு செய்கிறேன். மற்றவை நாளை!

(தொடரும்)
-------------------------------------------------

Article about combust

Article about conjunction