மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.9.25

Astrology: ஆதி யோகம்! Adhi Yoga

Astrology: ஆதி யோகம்! Adhi Yoga 

புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து இருந்தாலோ, அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்!

பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான். ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான். நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை அனுகாது!

Adhi Yoga : This is caused if the benefic planets - Mercury, Jupiter and Venus - are situated in the 6th, 7th and 8th houses from the Moon. These planets should be present in any one, two or in all the above-mentioned houses. A native with this Yoga will be very influential, healthy and wealthy. He will possess no fear, disease or enemy.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
”சார், அவற்றில் எனக்கு இரண்டு இருக்கிறது. பாதி யோகம் கிடக்குமா?” என்று யாரும் கேட்க வேண்டாம்! கிடைக்காது.

யானை என்று எழுதுவதற்குப் பதிலாகப் பூனை என்று எழுதிவிட்டேன். இரண்டிலுமே ”னை” என்று இருப்பதால் பாதி மார்க் போடுங்கள் என்று சொல்வதைப் போன்றது அது!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.9.25

Astrology: அமலா யோகம்! Amala Yoga


Astrology: அமலா யோகம்! Amala Yoga

கோவையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கோவையிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்திலும், பிறகு சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிவரை ஒரு பேருந்திலும், பிறகு கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம்வரை ஒரு பேருந்திலும், பிறகு விழுப்புரத்திலிருந்து செங்கல்பட்டுவரை ஒரு பேருந்திலும், அதற்குப்பிறகு அங்கேயிருந்து சென்னைவரை வேறு ஒரு பேருந்திலும் பயணித்தால் பயணம் எப்படியிருக்கும்? அலுத்துவிடாதா?

முறையான பயணம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு நவீன குளிரூட்டப்பெற்ற வோல்வோ பேருந்தில், இரவு ஒன்பது மணிக்குக் கோவையில் ஏறி, காலை 6 மணிக்குச் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்று இறங்கினால் பயணம் சுகமாக இருக்கும்.

அதைப்போல ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் உள்ள யோகங்களைவிட, சுருக்கமாக ஒரு வரியில் உள்ள யோகங்கள், ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இன்று, உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காக ஒரு வரி விளக்கத்துடன் உள்ள யோகம் ஒன்றைக் கொடுத்துள்ளேன்.

அந்த யோகம் இருப்பவர்களுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்
---------------------------------------------------------------------
யோகத்தின் பெயர்: அமலா யோகம். அமலா எனும் வடமொழிச்சொல்லிற்கு சுத்தமானது (pure) என்று பொருள்.

யோகத்தின் அமைப்பு: லக்கினத்திலிருந்து பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்க வேண்டும். சந்திரராசிக்குப் பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகம் உண்டு

பலன்: ஜாதகனின் வாழ்க்கை வளமாக இருக்கும். ஜாதகன் பெயர், புகழுடன் இருப்பான். நிறைய பொருள் ஈட்டுவான். நல்ல ஆண் வாரிசுகளை உடையவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
==========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.9.25

Astrology: அமரக் யோகம்! Amarak Yoga


Astrology: அமரக் யோகம்! Amarak Yoga 
 
அமரக் என்றால் பானி பூரி, பேல் பூரி போல ஏதோ தின்பொருள் - சாட் அயிட்டம் என்று நினைக்கவேண்டாம். அமரக் என்னும் வடமொழிச்சொல் ஒரு வித அணிகலனைக் குறிக்கும். மயில்பதக்கம் போன்ற தோற்றமுடைய அணிகலனாம்.

பதிவை முழுதாகப் படித்தால், அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும். மாறி அமர்ந்ததோடு அல்லாமல் வலுவாக வேறு இருக்க வேண்டுமாம். அதாவது ஆட்சி, அல்லது உச்சம் அல்லது அஷடகவர்க் கத்தில் 5ம் அல்லது மேற்பட்ட பரல்களையும் பெற்றிருக்க வேண்டும்

பலன்: ஏழாம் வீட்டோடும் பாக்கிய ஸ்தானத்தோடும் சம்பந்தப்பட்ட யோகம் இது. இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, டக்கராக மனைவி கிடைப்பாள். சினிமாவை வைத்து உதாரணம் சொல்ல விருப்பமில்லை. இதற்கு உதாரணம் சொன்னால், ராமனுக்கு ஒரு சீதை கிடைத்ததைப்போல அல்லது லெட்சுமணனுக்கு ஒரு ஊர்மிளா கிடைத்ததைப் போல அற்புதமான மனைவி கிடைப்பாள்.

அவளைப் பார்த்துப் பார்த்து ஜாதகன் மகிழலாம். வயதானா பிறகும் அருகில் வைத்துக் கொஞ்சலாம். ’உனக்காக நான், எனக்காக நீ’ என்று வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Made for each other என்று போடுகிறார்களே அப்படியொரு அம்சம் வாழ்க்கையில் இருக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சார், எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது. ஆனால் ஒரு கிரகம் ஊற்றிக்கொண்டு விட்டது அதாவது, நீசமாகிவிட்டது - வக்கிரமாகிவிட்டது - அஸ்தனமாகிவிட்டது - கிரகயுத்ததில் உள்ளது - ஆகவே இதில் பாதி அம்சத்தோடாவது ஒரு மனையாள் கிடைப்பாளா? என்று யாரும் கேட்க வேண்டாம். ஜோதிட விதிகளை நமக்காக நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை மனதில் வையுங்கள். இருந்தாலும் சந்தோஷம். இல்லையென்றாலும் சந்தோஷம். நம் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து மனதைத் தேர்த்திக்கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன்
வாத்தியார்
=======================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!