மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.9.22

Star Lessons Lesson எண் 38 திசைகள் மற்றும் புத்திகளைப் பற்றி இன்று பார்ப்போம்


✴️✴️✴️✴️✴️
Star Lessons 
Lesson number 38
Date 24-8-2022
New Lessons
பாடம் எண் 38

திசைகள் மற்றும் புத்திகளைப் பற்றி இன்று  பார்ப்போம்

மகா திசைகள் விபரம்
1. சூரிய மகா திசை - 6 ஆண்டுகள் 
2. சந்திர மகா திசை -10 ஆண்டுகள்
3. செவ்வாய். மகா திசை - 7 ஆண்டுகள்
4. ராகு மகா திசை - 18 ஆண்டுகள்
5. குரு மகா திசை - 16 ஆண்டுகள் 
6. சனி மகா திசை - 19 ஆண்டுகள்
7. புதன் மகா திசை - 17 ஆண்டுகள்
8. கேது மகா திசை - 7 ஆண்டுகள்
9. சுக்கிர மகா திசை - 20 ஆண்டுகள்

ஆக மொத்தம் 120 ஆண்டுகள்

ஒவ்வொரு மகா திசையிலும் மற்ற கிரகங்களுக்கும் இடம் உண்டு
அவற்றை புத்தி என்போம்
We used to call it as Sub petiod

ஒரு மகா திசையில் இன்னொரு மகா திசையின் புத்திக்கு உரிய காலம் தெரிய வேண்டும் என்றால் இரண்டின் ஆண்டுகளின் எண்ணிக்கையை பெருக்க வேண்டும்

உதாரணத்திற்கு ராகு திசையில் குரு புத்தி எவ்வளவு நாள்?
18 x  16 = 288  
இது போன்று வரும் மூன்று டிஜிட்  எண்ணில் முதல் 2 எண்கள் மாதங்களைக் குறிக்கும் கடைசி எண்ணை 3 ஆல் பெருக்க வரும் எண். நாட்களைக் குறிக்கும்
அதாவது 2 ஆண்டுகள் 4 மாதங்கள் 24 நாட்கள் எனபது விடை

அவற்றை - அதாவது புத்திகளின் காலத்தை தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம் உண்டு (Formula)

அதை இப்போது உங்களுக்கு சொல்லித் தருகிறேன்

One more example
சனி மகா திசையில் புதன் புத்தி எத்தனை காலம்? 
சனிக்கு எண்  19
புதனுக்கு 17
19X 17= 323

ஜாதகத்தின் பலன்களை திசாபுத்திகள்தான் நமக்குக் கொடுக்கும். அதை மனதில் வையுங்கள்
323 =
32  மாதங்கள் ,மற்றும 3X3= 9 நாட்கள்
அதாவது 2வ - 8 மா-  9 நாட்கள்

நீங்கள் பஞ.சாங்கத்தை வைத்து இவற்றை பரிசோதித்துக் கொள்ளலாம்
.பஞ்சாங்கம. இல்லாமல் திசா புத்திகளைக கணக்கிடும் முறையைத்தான் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளேன்

இந்த பாடத்தின் மற்ற பகுதிகள் நாளை வெளி வரும் பொறுத்திருந்து படிக்க வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.9.22

Star Lessons Lesson number 37 ---12ம் வீட்டைப் பற்றிய பாடம்

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 37
New Lessons
பாடம் எண் 37

இன்று 12ம் வீட்டைப் பற்றிய பாடம்

12ம. வீட்டிற்கு விரைய வீடு என்ற பெயர் (House of Loss)

 வாழ்க்கையில் ஜாதகன் சந்திக்கப் போகும் இழப்புக்களைப் பற்றிய வீடு

இந்த வீட்டில் எந்த கிரகம் வந்து அமர்ந்தாலும் வந்த அந்த கிரகத்தின் வீட்டின் காரகத்துவம் (Work)  அடிபட்டுப் போகும்

உதாரணத்திற்கு 2,ம் வீட்டு அதிபதி இங்கே வந்து அமர்ந்தால், ஜாதகனுக்கு எப்போதும் பணத் தட்டுப்பாடாக இருக்கும் கையில் காசே தங்காது

 லக்கினாதிபதி இங்கே வந்து அமர்ந்தால் ஜாதகன் வாழ்க்கை விரையமாகி விடும்  ஜாதகனுக்கு பயன் படாமல் போய்விடும்

இங்கே மாந்தி வந்து அமர்ந்தால் Sudden Loss ஏற்படும்
12ம்  வீட்டுக்காரன் 3,6,8 ஆகிய வீடுகள் ஒன்றில் அமர்ந்தால் அந்த வீடுகளின் பலன்கள்  மோசமாகி விடும்
கள் குடித்த குரங்கின் கையில் கத்தி கிடைத்ததைப் போல் ஆகிவிடும்
அதை மனதில் வையுங்கள்

பன்னிரெண்டாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

12th House and placement benefit of its lord

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றைப் பார்ப்போம்!

பன்னிரெண்டாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1
பன்னிரெண்டாம் அதிபதி இலக்கினத்தில் இருந்தால், வேளா வேளைக்கு தவறாத போஜனம், நித்திரை, சுகம் உடையவனாக ஜாதகன் இருப்பான். செலவு செய்து வசதிகளைப் பெறுவான்.
2
பன்னிரெண்டிற்குரியவர் இரண்டில் இருந்தால், தன விரையம் உண்டாகும். வாய் சாமர்த்தியம், வீண் பேச்சு, மதிப்பில்லாத வாக்கு, ஊக்க மின்மை, ஊர் சுற்றும் சுபாவம் உள்ளவனாக ஜாதகன் இருப்பான்.
3
பன்னிரெண்டிற்குரியவர் மூன்றில் இருந்தால், இளைய சகோதரகளால் பண விரையம், உண்டாகும். பிதுr சொத்துக்கள் நாசமாகும். வீரிய நாசமுடையவனாக இருப்பான்.
4
பன்னிரெண்டாம் வீட்டுக்குரியவன் நான்கில் இருந்தால், ஜாதகன், அயன, சயன, சுக நாசமுடையவன். வீடு, மனை, வாகன விரையம் உண்டாகும். அதிகமான குடும்பச் செலவு, விருந்தினர்களால், நண்பர்களால், உறவினர்களால் அதிக செலவு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
5
பன்னிரெண்டாம் வீட்டுக்குரியவன் ஐந்தில் இருந்தால், புண்ணிய யாத்திரை, திருப்பணி சம்பந்தமான செலவுகள், பெரிய மனிதர்களின் தயவு வேண்டி செலவுகள் ஆகியவைகள் உண்டாகும். மூத்த சகோதரர்களால் விரையம் உண்டகும்.
6
பன்னிரெண்டிற்கு உரியவன் ஆறில் இருந்தல், தகாத வழியில் ஈடுபடுதல், கண் நோய், குறியில் நோய், வியாதிகள், பொருள் நஷ்டம், ஆகியவை ஏற்படும். ஜாதகன் அயன, சயன, சுகங்கள் நாசமடையும்.
7
பன்னிரெண்டிற்கு உரியவன் ஏழில் இருந்தால், அயன, சயன, சுக வழிகளில் மற்றும் பெண்கள் வழியில் அதிக செலவுகள் உண்டாகும். காமத்திற்காக செலவுகள், அதை வைத்து அலைச்சல் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
8
பன்னிரெண்டிற்கு உரியவன் எட்டில் இருந்தால், கெட்ட காரியங்களில் செலவு, வழக்குகள் உடையவனாக இருப்பான். உடல் நலம் நாசமடையும். சாப்பாடு, படுக்கை சுகங்கள் கேடாக இருக்கும். அதாவது அவை கிடைப்பதில் சிரமங்கள் இருக்கும்.
9
பன்னிரெண்டிற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால், படுக்கை, சாப்பாடு, சுகம், பிதுர் சொத்துக்கள் ஆகியவைகள் விரையம் ஆகும். சகோதரர்களால் கடன் தொல்லை, கஷ்டங்கள் ஏற்படும்.
10
பன்னிரெண்டிற்கு உரியவன், பத்தில் இருந்தால், செய்தொழில் முடக்கம், வருமானம் இல்லாத நிலை ஏற்படும். தொழிலை விட்டு விலகுதல், சுற்றித்திரிய நேர்தல், பொருள் நஷ்டங்கள் ஆகியவைகள் ஏற்படும். அயன, சயன சுகம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
11
பன்னிரெண்டிற்கு உரியவன், பதினொன்றில் இருந்தால், ஓரளவு வரவு இருப்பினும், மிஞ்சிய செலவு உண்டாகும். தான தருமம், தரிசன வழிபாடுகள் உடையவனாக இருப்பான். மூத்த சகோதரர்களால் நஷ்டம்,  பிள்ளைகளால் செலவு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
12
பன்னிரெண்டிற்கு உரியவன் பன்னிரெண்டில் ஆட்சி பலத்துடன் இருந்தால்,சாப்பாடு சுகம், படுக்கை சுகம் நித்திரை சுகம் உடையவனாக ஜாதகன் இருப்பான். உடல் நலக்குறைவு ஏற்படும். விரையங்கள் அதிகமாக இருக்கும்.

12ம் வீட்டைப்   பற்றிய பாடம் முற்றும்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.9.22

Star Lessons Lesson number 36 11ம் வீட்டைப் பற்றிய பாடம்


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 36
New Lesson
பாடம் எண் 36

இன்று 11ம் வீட்டைப் பற்றிய பாடம்

இந்த வீட்டிற்கு லாப ஸ்தானம் என்று பெயர்
(House of Profit)
நீங்கள் செய்யும் தொழில் அல்லது வேலையில் கிடைக்கும் ஆதாயம், வெகுமதி, நன்மைகள் ஆகியவற்றைக் கொடுப்பது இந்த வீடுதான்

இந்த வீடும் அதன் அதிபதியும் வலிமையாக இருந்தால் எல்லா லாபங்களும் தேடி வரும்

இந்த வீட்டு அதிபதி 6,8,12ல் மறையக்கூடாது்  நீசமாக்க்கூடாது.
அத்துடன் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெறக்கூடாது

தவறி பெற்றால  லாபத்திற்குப் பதில் ஏமாற்றமே அதிகமாக இருக்கும்
தொட்டது துலங்காது

பதினொன்றாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

11th House and placement benefit of its lord

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றைப் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1
பதினொன்றாம் வீட்டுக்கு உரியவன் இலக்கினத்தில் இருந்தால், ஜாதகன் அதிகம் படித்தவன். வாக்கு வன்மை, சாதுர்யமாகப் பேசும் தன்மை உடையவன். நல்ல லாபம் பெறக்கூடியவன். அயன, சயன, சுக பாக்கியங்களை உடையவன். மூத்த சகோதரருடன் நட்பாக உள்ளவன்
2
பதினொன்றுக்கு உரியவன் இரண்டில் இருந்தால், வழக்கறிஞர்களைப் போல பேசக்கூடியவன். நல்ல உடலமைப்பு, வருமனம், கெளரவம் மிக்கவனாக இருப்பான். அதிகாரம் உடையவனாக இருப்பான்.
3
பதினொன்றிற்கு உரியவன் மூன்றில் இருந்தால், மூத்த சகோதரர்களுக்கு ஜாதகனால் நன்மை உண்டாகும். அவர்களின் மேலான ஆதரவு இவனுக்கு இருக்கும்.
4
பதினொன்றிற்கு உடையவன் நான்கில் இருந்தால்,  நல்ல குடும்பம், வீடு, மனை, வாகன வசதிகள் உடையவனாக ஜாதகன் இருப்பான். செல்வாக்கு, தெய்வ வழிபாடு, தாய்வழி ஆதரவு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
5
பதினொன்றிற்கு உரியவன் ஐந்தில் இருந்தால்,புத்திரர்களால் முன்னேற்றம், தந்தையின் தொழிலை பிள்ளைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை நடக்கும். அந்தஸ்து, அரசு அனுகூலம், பெரிய மனிதர்களின்நட்பு ஆகியவை உடையவனாக ஜாதகன் இருப்பான்.
6
பதினொன்றிகு உரியவன் ஆறில் இருந்தால்,குறையாத கடன் சுமை, செய்தொழிலில் வஞ்சகர்கள்,போட்டியாளர்கள் இருப்பார்கள்.காது, கண் நோய், குரல் நோய், அயன, சயன, சுக நாசம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
7.
பதினொன்றிற்கு உரியவன் ஏழில் இருந்தால், மனைவியினால் அதிர்ஷ்டம், புத்திரர்களால் சுகம், முன்னேற்றம் உடையவனாக இருப்பான். தெய்வ வழிபாடு பொதுப்பணி உடையவனாக இருப்பான். தனச் செலவுகள் அதிகம் இருக்கும்.
8
பதினொன்றிற்கு உரியவன் எட்டில் இருந்தால்,  தீய காரியங்களால் பணச் செலவுகள் உண்டாகும். படுக்கை, சாப்பாடு, சுகம் நாசமாகும். பலவித தொழில் செய்யும் விருப்பமும் முயற்சியும் இருக்கும். ஆனால் எதிலும் போதிய லாபம் இல்லாமல் இருக்கும்!
9.
பதினொன்றிற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால்,தந்தை செய்து வந்த தொழிலை எடுத்துச் செய்து விரிவடையச் செய்வான். சொத்து, வாகனம், உயர் பதவி, அதிகாரம் உடையவனாக ஜாதகன் இருப்பான். படுக்கை, சாப்பாடு சுகம் மிக்கவனாக ஜாதகன் இருப்பான்.
10
பதினொன்றிற்கு உரியவன் பத்தில் இருந்தால், கெளரவமன தொழில் அல்லது உத்தியோகம், அடக்கமான, அமைதியான  குடும்பம் இருக்கும். செளகர்யங்கள், தெய்வீக வழிபாடு, நல்ல வருமானம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
11.
பதினொன்றுக்கு உரியவன் பதினொன்றில் ஆட்சி பலத்துடன் இருந்தால், சாதாரண லாபம். சமபலன்கள் உண்டாகும். தெய்வீக வழிபாடு, கெளரவமான குடும்பம் உடையவனாக ஜாதகன் இருப்பான். பிற்கலத்தில் செல்வத்துடன் இருப்பான். மூத்த சகோதரர்கள் நலமாக இருப்பதுடன், ஜாதகனுடன் நல்ல உறவோடு இருப்பார்கள்.
12
பதினொன்றிற்கு உரியவன் பன்னிரெண்டில் இருந்தால், பொருள் விரையம், கடன் தொல்லைகள், வியாதிகள், அமைதிக்குறைவு உடையவனாக ஜாதகன் இருப்பான். அயன, சயன சுகங்கள் உடையவனாக இருப்பான்.

11ம் வீட்டைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!