மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.6.19

எவரையும் விடமாட்டார் சனீஷ்வரன்!!!!!


எவரையும் விடமாட்டார் சனீஷ்வரன்!!!!!

நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி பகவான் என்று சொல்வார்கள். அதனால் அவரை 'சனீஸ்வரன்' என்று போற்றுவர்.

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், அவரவர் ராசிக்கேற்ப ஏழரை ஆண்டுகள் சனியின் பிடிக்குள் அடங்கி, உயர்வு- தாழ்வுகளைச் சந்தித்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதைத்தான் 'ஏழரைச்சனி' என்கிறார்கள்.

 'கொடுப்பதும் சனி; கெடுப்பதும் சனி', 'யாரை விட்டது சனி' என்றெல்லாம் பழமொழிகள் பல உண்டு.

ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது தேவேந்திரன் சனீஸ்வரனைப் பார்த்து,''உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?'' என்று கேட்டான்.

அதற்கு சனீஸ்வரன்,

'இதுவரை இல்லை.

ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை. ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!' என்று கூறி, அவசரமாகப் புறப்பட்டார்.

'எங்கே செல்கிறீர்கள்?'' என்று இந்திரன் கேட்க,

'சிவனைத் தரிசிக்க!'' என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன்.

நேராக கயிலாயம் சென்றவர், சிவன்- பார்வதிதேவியை வணங்கி நின்றார்.

''சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?'' என்று கேட்டார்.சிவபெருமான்.

''பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பிடிக்கவே வந்தேன்'' என்றார் சனீஸ்வரன்.

''எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா... விளையாடுகிறாயா? கிரகங்களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே பீடிக்கப் போகிறாயா?' என்று கேட்டார்.

''ஆம் ஸ்வாமி!

நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன்.

ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பிடித்து என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார் சனீஸ்வரன்.

''ஏழரை நாட்கள் என்ன,ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பிடிக்க முடியாது' என்று கூறிய சிவபெருமான்,

பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்த ருத்ராக்ஷத்தில் மறைந்துகொண்டார்.

ருத்ராக்ஷத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது.

அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?

ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் சனீஸ்வரன்.

ஏழரை நாழிகை கடந்தது.

சிவபெருமான் ருத்ராக்ஷத்திலிருந்து வெளியே வந்தார்.

சனீஸ்வரனை நோக்கி, ''பார்த்தாயா சனீஸ்வரா... உன்னால் என்னை ஏழரை நாழிகைகூட நெருங்க முடியவில்லையே?'' என்றார்.

''இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பிடித்திருந்தேன். அதனால்தான் உலக ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராக்ஷத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக்கொண்டு, அதை அனுபவித்தீர்கள்'' என்றார்.

'சனீஸ்வரனின் விதி'யை நிர்ணயித்தவரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை எடுத்துக்காட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான்.

ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தில் தங்கி, தனக்கும் ருத்ராக்ஷத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வரனை அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.

சிவனைப் பீடித்த சனி அதோடு விட்டு விடவில்லை.

திரேதா யுகத்தில்,

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த சிவபெருமானை மீண்டும் ஒருமுறை பிடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.

ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன்.

இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன.

 வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன.

ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.

அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.

அப்போது,

அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ''பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள்.என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று வேண்டினார்.

'எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பிடித்துப் பாருங்கள்' என்றார் ஸ்ரீராமன்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி,  ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. உன்னைப் பிடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு'' என்றார்.

''சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம்'' என்றான் அனுமன்.

''ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பிடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பிடிக்கலாம்?''என்று கேட்டார் சனீஸ்வரன்.

''என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும். 'எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்!  எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்'' என்று கூறினார் அனுமன்.

அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.

அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று.

அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது.'தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?' என்றுகூடச் சிந்தித்தார்.

அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.

''சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?'' என்று கேட்டார் அனுமன்.

அதற்கு சனீஸ்வரன்,''ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பிடித்ததால்,  நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன். சாக்ஷத் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள்.  முந்தைய யுகத்தில்
தங்களை நான் பிடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்' என்றார் சனீஸ்வரன்.

''இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பிடித்துவிட்டீர்கள் அல்லவா?' என்றார் அனுமான்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன்,

''அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றார்.

''ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்' என வரம் கேட்டார் அனுமன்.

சனியும் வரம் தந்து அருளினார்.

பொதுவாக ஒருவரை ஏழரைச் சனி பிடிக்கும் காலத்தை மூன்று கூறாகப் பிரித்து  🌿 மங்குசனி,  🌹தங்குசனி,  🌿பொங்குசனி, என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அனுமன் பெற்ற வரத்தால் ஏழரைச் சனியின் மங்குசனி, தங்குசனி காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கி பிரச்னைகளைச் சமாளித்து, முடிவில் வெற்றியும் செல்வமும், சௌபாக்கியமும் பெற, ''ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம'' என்ற தாரக மந்திரத்தை சிரத்தா பக்தியுடன் ஜெபிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்கள்
நமக்கு வழிகாட்டியுள்ளனர்.
----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.6.19

Astrology: ஜோதிடம்: இயற்கைக்கு மாறாக கிடைக்கும் யோகம்!


Astrology: ஜோதிடம்: இயற்கைக்கு மாறாக கிடைக்கும் யோகம்!

Vipareetha Raja Yoga

விபரீத ராஜயோகம்

(Reversal of Fortune)

அதென்ன ஸ்வாமி விபரீதம்?

விபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்

நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால் அதை விபரீதம் என்போம்.

அதைப்போல கிடைக்கூடாத ராஜயோகம் விபரீதமாகக் கிடைத்து விட்டால் அது விபரீத ராஜயோகம்!

அது ஜாதகத்தில் எப்படி ஏற்படும்? அதன் பலன் என்ன?

இன்று அதை விவரித்து எழுதியுள்ளேன். படித்துப் பயனடைய வேண்டுகிறேன்.
--------------------------------------------------------------------
ராஜயோகம் என்பது அதிகாரம் மற்றும் உயர்வான நிலைக்கு ஜாதகனை உயர்த்தும் யோகம் ஆகும். கேந்திர மற்றும் திரிகோண அதிபதிகள் தங்களின் சேர்க்கையால் (கூட்டால்) அல்லது பார்வையால் உருவாக்கிக் கொடுப்பது ராஜயோகம்  ஆகும். அதற்குச் சிறந்த உதாரணம் ”தர்மகர்மாதிபதி யோகம்” 9ஆம், 10ஆம் அதிபதிகளின் சேர்க்கையால் அந்த யோகம் ஏற்படும். அவர்களின் பரிவர்த்தனையாலும் அது ஏற்படும். அதனால் ஜாதகனுக்கு அதீத செல்வமும், செல்வாக்கும், பதவியும் அதிகாரமும் கிடைக்கும்.

The tenth house in the horoscope stands for what we do in life, and the ninth house shows what we should do in life. When the lords of these two houses meet by conjunction, mutual reception (parivartan), or mutual aspect, the planetary combination as Dharma Karma Adhipati Yoga. As soon as a Raja yoga of this prominence shows up in a chart, it is natural  to anticipate obtaining lots of wealth and power.

மேலே குறிப்பிட்டுள்ளது வழக்கமான ராஜ யோகத்திற்கு உதாரணம்!ஆனால் விபரீத ராஜயோகம் என்பது வழக்கமான ராஜயோகங்களில் இருந்து மாறுபட்டது.

எப்படி மாறுபட்டது?

அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்ணை நீங்கள் தேர்வு செய்து, கெஞ்சிக்கூத்தாடி, சம்மதிக்க வைத்து, நீங்கள் திருமணம் செய்து கொண்டால், அது வழக்கமான ராஜ யோகம்

ஆனால், அதே அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்கள், அவர்களாகவே முன்வந்து, உங்களிடம் கெஞ்சிக்கூத்தாடி,
மன்றாடி, உங்களைத் திருமணம் செய்து கொண்டால் அது விபரீத ராஜயோகம்

இன்னும் விளக்கமாகச் சொன்னால், பிரிட்டீஷ்  அரச குடும்பத்தினரே முன் வந்து அவர்கள் வீட்டுப் பெண்ணை,உங்களுக்குத் தாரை வார்த்துக்  கொடுப்பதாகச் சொன்னால், அது விபரீத ராஜ யோகம்.

உதாரணங்கள் போதுமா?
------------------------------------------------------------------
The vipareeta rajayogas are somewhat different from the normal  rajayogas as mentioned above. These rajayogas are formed due to downfall of someone, based on which the native's fortune is reversed. The downfall can be of an enemy or a someone near to the native,
however the combinations are somewhat different for both circumstances.

இந்த விபரீதம் என்னும் சொல், மாறுபட்டு வருவதைக் குறிக்கும். The term vipareeta imply reversal of something

ஒன்றின் வீழ்ச்சி, அல்லது ஒருவரின் வீழ்ச்சி, உங்களுக்கு சகாயமாகிக் கிடைப்பதுதான் விபரீத ராஜயோகம்.

”அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்பக் காலியாகும்?” என்று கிராமங்களில் கூறுவார்களே, அதை நீங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

மிதுன லக்கின ஜாதகத்தின் 12ஆம் வீட்டில் சுக்கிரனும், சனியும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்து, உரிய நேரத்தில் திருமணமாவதும் தடைபட்டு, விரும்பும்
அளவிற்கு ஒரு மங்கை நல்லாளும் ஜாதகனுக்குக் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளூங்கள். அப்படிப்பட்ட நேரத்தில், ஜாதகனின் எட்டாம் வீட்டு அதிபதி சனி 12ல் இருப்பதால் (ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி இன்னொரு துஷ்ட ஸ்தானத்தில் அமர்வது) அவர் சுக்கிரனின் பென்டை நிமிர்த்தி, ஜாதகனின் திருமணத்தை உரிய நேரத்தில் நடத்தி வைப்பதுடன், மயக்கும் அழகுள்ள மங்கையையும் அவனுக்குப் பிடித்துக் கொடுத்து விடுவார்.அதுதான் விபரீத ராஜயோகம்

பெண்ணை உதாரணமாகச் சொன்னால்தான் சிலருக்கு மண்டையில் சுறுசுறுப்பாக ஏறும் என்பதற்காக இதைச் சொன்னேன்.

பணம், வேலை, பதவி, செல்வாக்கு என்று எதற்கு வேண்டுமென்றாலும் இந்த யோகம் ஒத்துவரும். அது அங்கே போய் அமரும் துஷ்டனையும், அவன் அடித்து வீழ்த்தும் சம்பந்தப்பட்ட அதிபதி அல்லது காரகனையும் பொறுத்து உண்டாகும்.
---------------------------------------------------------------------------------
துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

உதாரணத்திற்கு, சிம்ம லக்கினத்திற்கு, சனி 6ஆம் இட அதிபதி. அவர் ஜாதகனின் 12ஆம் வீட்டில் (கடகராசியில்) சந்திரனுடன் இருந்தால், அது வி.ரா.யோகம் ஆகும்!

சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள் ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும். கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.
---------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.6.19

மீண்டும் வாத்தியார்!


மீண்டும் வாத்தியார்!

பனை ஏறி விழுந்தவனை கடா ஏறி மிதித்தது போல் என்று கிராமங்களில் சொல்வார்கள். அதாவது ஒருவன் பனை மர உச்சியில் இருந்து பிடி தவறி தடால் என்று கீழே விழுந்து அடிபட்டு எழ முடியாத நிலையில் இருக்கும் போது, அந்தப் பக்கமாக தெறி கெட்டு ஓடி வந்த கடா மாடு ஒன்று அவன் மேல் ஏறி அவனை மிதித்து விட்டுச் சென்றதாம்.

அதைப்போல் என் உடல் நிலையில் எனக்கு அடுத்தடுத்து இரண்டு பிரச்சினைகள். முதலில் எனது இரத்தத்தில் அமிலம் அதிகமாக உள்ளது என்று கோவை KMCH மருத்துவ மனையில் சிகள்கிச்சை அளித்தார்கள். அது முடிந்து வெளி வந்த மறு வாரமே இரண்டு சக்கர வாகன விபத்தில் காலில் அடிபட்டு விட்டது.

இரண்டுமாக தொடர்ந்து என்னை 45 நாட்கள் படுத்தி எடுத்து விட்டன.

இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. பூரண நலம்.

நாளை முதல் பதிவுகள் தொடரும்.

கால தாமதத்திற்கு அனைவரும் மன்னிக்க வேண்டுகிறேன்.

உங்கள் அன்பிற்கு என்றும் நான் கட்டுப்பட்டவன்!!!!!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
=========================================================