மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.9.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 14-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  14-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!



க்ளூ வேண்டுமா? 5ல் கேது இருந்தால் ஒன்று அரசன் அல்லது சந்நியாசி. இவர் அரசனைப் போல வாழ்ந்த சந்நியாசி, இந்தியர். ஆனால் அகில உலகப் பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.9.18

மனிதக்குரங்கிடம் நடத்தப்பெற்ற விசாரணை!


மனிதக்குரங்கிடம் நடத்தப்பெற்ற விசாரணை!

வனப்பகுதியொன்றில் வாழ்ந்த மனிதக்குரங்கு ஒன்றை மற்றொரு வனப்பகுதிக்கு மாற்ற பத்துபேர்கொண்ட மனிதக்குழு
ஒரு பேருந்தில் அந்த மனிதக்குரங்கையும் அழைத்துக்கொண்டு செல்லும்போது எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்துக்குள்ளாகி
மனித குரங்கைத் தவிர ஓட்டுநர் உட்பட அனைவரும் மரணமடைந்தனர்

விபத்துபற்றி காவல்துறை அதிகாரிகள் மனிதக்குரங்கிடம் விசாரணை நடத்தினர்

அப்போது முதல் கேள்வியாக..?

எத்தனை மணிக்கு விபத்து நடந்ததெனக் கேட்க..!

மேலே தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தில் கைவைத்து ஏழரை மணிக்கு என்றது அந்த மனிதக்குரங்கு

இரண்டாவது கேள்வியாக..?

உன்னோடு பயணித்த மனிதர்களெல்லாம் அப்போது என்ன செய்தனர் என்ற கேள்விக்கு ..?

அனைவரும் உறங்கினர் என குறட்டையும் விட்டு சைகை மூலம் செய்துகாட்டியது

மூன்றாவது கேள்வியாக.?

பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் அப்போது என்ன செய்துகொண்டிருந்தாரென்ற கேள்விக்கு..?

அவரும் உறங்கிவிட்டாரெனச் சொன்னது அந்த மனிதக்குரங்கு

கடுப்பாகிப்போன காவல்துறை அதிகாரிகள், அதெல்லாம் சரி, அவையெல்லாம் நடக்கும்போது, நீ என்ன செய்துகொண்டிருந்தாய் எனக் கேட்டனர்

அதற்கு மனிதக்குரங்கு என்ன சொன்னது ..?

நான்தான் அந்தப் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தேன் எனச் சொன்னதும் அதிகாரிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்

இப்படித்தான் உறவுகளே ..?

பெரும்பாலான மக்கள் வாழ்க்கையென்னும் அழகிய பயணத்தில், பேருந்துபோன்ற மனதை, குரங்குகளிடம் ஒப்படைத்துவிட்டு
குறட்டைவிட்டு உறங்குகின்றனர். குரங்குகளிடம் சிக்கிக்கொண்ட பேருந்து போன்ற மனம், தட்டுத்தடுமாறி, இறுதியாக
எங்காவது மோதி விபத்துக்குள்ளாகி அனைவருக்கும் மரணத்தை ஏற்படுத்துகிறது

ஆக தவறு எங்கிருக்கிறது என்பதை மட்டும் சரியாக உணர்ந்தோமேயானால், வாழ்க்கைப் பயணம் அழகியலே!
நானும் என் மனதினை இதுபோலவே குரங்குகளிடம் ஒப்படைத்துவிட்டு, பலமுறை தடுமாறி வீழ்ந்ததுண்டு என்பதையும்
இங்கே குறிப்பிட ஆசைப்படுகிறேன்

எனவே அலைபாயும் மனதினை இறைவன்டத்தில் ஒப்படைத்து நாம்  செயல்பட்டால் நம் வாழ்வில் எந்த வித விபத்து இன்றி,அவன் அருளால்,அவன் வழிகாட்டுதலால் அவனை அடையலாம் என்பதே உண்மை!!!!!

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.9.18

ஓஷோவும் ஸ்ரீ கோரக்கநாதரும்!!!!!


ஓஷோவும் ஸ்ரீ கோரக்கநாதரும்!!!!!


Die O Yogi Die என்ற தனது புத்தகத்தில் ஓஷோ விவரித்து எழுதியது!!!!!

ஸ்ரீ கோரக்கநாதர் என்றும் கோரக்க சித்தர் என்றும் அழைக்கப்படும் அந்த மாபெரும் ஞானியின் நூல் ஒன்றினைப் பற்றிப் பேச வரும் ஓஷோ எவ்வளவு விறுவிறுப்பாகத் தனது உரையைத் தொடங்கி இருக்கிறார் பாருங்கள்

'வானத்தைப் போல விரிந்து கிடக்கும் இந்து மதத்தின் பரப்பில், அதிக பட்சம் ஒளி வீசும் நட்சத்திரங்களில் பன்னிரண்டு பேரைக் குறிப்பிடச் சொன்னால் நீங்கள் யார் யாரைக் குறிப்பிடுவீர்கள்..???' என்று சுமித்ரனந்தன் பண்ட என்ற இந்திக் கவிஞர் ஓஷோவைக் கேட்கிறார்.

'இந்து மத வானம் ஏகப்பட்ட நட்சத்திரங்களால் ஜொலிப்பது இதில் யாரை விடுவது, யாரைச் சேர்ப்பது..??? இந்தப் பட்டியலைக் கொடுப்பது மிகவும் சிரமமான வேலை ' என்று கூறி விட்டு நீண்ட நேரம் சிந்தித்த பின்னர் ஓஷோ இவர்களைச் சொன்னாராம்

'கிருஷ்ணா, பதஞ்சலி, புத்தர், மகாவீரர், நாகர்ஜுனர், ஆதிசங்கரர்,  கோரக்கநாதர், கபீர், குருநானக், மீரா, ராமகிருஷ்ணர், ஜே .கிருஷ்ணமூர்த்தி.'

சுமித்ரனந்தன் பண்ட விடவில்லை

'ஏன் ஸ்ரீ ராமரை விட்டு விட்டீரகள்...???' என்று கேட்கிறார்.

'பன்னிரண்டு பேரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் நான் நிறையப் பேரை விட வேண்டியதாக இருந்தது அதனால் அசலான, சுயமான பங்களிப்புச் செய்தவர்களையே பட்டியலிட்டேன் ஸ்ரீராமர், கிருஷ்ணரைக் காட்டிலும் சுயமான பங்களிப்பு இந்து மதத்திற்குச் செய்யவில்லை அதனாலேயே இந்துக்கள் கிருஷ்ணரையே பூரண அவதாரம் என்று கருதுகிறார்கள், ராமரை அல்ல' என்கிறார் ஓஷோ
.
'சரி ஏழே பேரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் இதில் யார் யாரைச் சொல்வீர்கள்..???'என்று கேட்கிறார் அந்த இந்திக் கவிஞர்

ஓஷோ இந்த இரண்டாவது பட்டியலைக் கொடுக்கிறார்

'கிருஷ்ணா, பதஞ்சலி, புத்தர், மகாவீரர், சங்கரர், கோரக்கநாதர், கபீர்'

கவிஞர் இதற்குச் சும்மா தலையாட்டி விடவில்லை 'பன்னிரண்டு பேரில் ஐந்து பேரை விட்டிருக்கிறீர்களே அதற்கு ஏன் என்று காரணங்கள் சொல்ல முடியுமா...???'

அதற்கு ஓஷோ சொன்ன பதிலில்தான்

ஓஷோவின் ஆழமான சிந்தனையின் அற்புதங்கள் நமக்குப் புரிகிறது

'நாகார்ஜுனர் புத்தருக்குள் அடங்கி விடுகிறார். புத்தர் விதை என்றால் நாகார்ஜுனர் அது முளைத்து வந்த மரம் புத்தர் கங்கை நதியின் மூலம் என்றால் நாகர்ஜுனர் அதனுடைய பல புண்ணிய படித்துறைகளில் ஒன்றே எதனை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கும் நிலையில் மரத்தை விட விதையை வைத்துக் கொள்வதே சிறப்பு விதையிலிருந்து இன்னுமே பல மரங்கள் முளைத்துத் தழைத்து வளரும். கிருஷ்ணமூர்த்தியும் புத்தருக்குள் அடக்கம். கிருஷ்ணமூர்த்தி புத்தரின் இன்றைய பதிப்பு. 'உனக்கு நீயே ஒளியாக இரு ' என்ற புத்தரின் பழைய சூத்திரத்திற்கு இன்றைய மொழியில் இருக்கும் விரிவுரை. ராமகிருஷ்ணரை எளிதாக கிருஷ்ணரில் அடக்கி விடலாம். மீராவையும், குருநானக்கையும் கபீரில் கரைத்து விடலாம். அவர்கள் இருவரும் கபீரின் இரண்டு கிளைகளே ஆவர். கபீரின் ஆண் அம்சம் குருநானக்கின் வெளிப்பட்டத்தைப் போல அவரது பெண் அம்சம் மீராவாய் ஆனது
இப்படித்தான் நான் ஏழு பேர்ப் பட்டியலைச் சொன்னேன்' என்கிறார் ஓஷோ
.
'சரி, இந்த ஏழு பேரை ஐந்து பேராகச் சுருக்குங்கள்!' என்கிறார் பண்ட

ஓஷோ அதற்கும் விடை அளிக்கிறார்

'கோரக்கநாதர் மூலவேர் அதனால் கபீரை அவருள் அடக்கலாம். அதே போல் சங்கரரைக் கண்ணனுக்குள் கண்டு விடலாம் .'

'இன்னும் நான்கு பேராக ஆக்கினால்...???'

'மகாவீரரையும் புத்தருக்குள் தரிசித்து விடலாம். எனவே இறுதியாக எஞ்சியது நான்கு பேர்' என்கிறார் ஓஷோ
.
'சரி மூன்று பேராக.....'

'அது இனி நடக்கவே நடக்காது கவிஞரே !' என்கிறார் ஓஷோ. 'இவர்கள் நான்கு பேரும் நான்கு திசைகளைப் போல கால, வெளியின் நான்கு பரிமாணங்களைப் போல தெய்வம் ஒன்றாக இருந்தாலும் அதற்குக் கரங்கள் நான்கு இந்த நான்கு பேரில் யாரை விட்டு விட்டாலும் அது தெய்வத்தின் நான்கு கரங்களில் ஒன்றை வெட்டுவதாகும். அதனை நான் செய்யத் தயாராக இல்லை.
இதுவரை உடைகளைக் களையச் சொன்னீர்கள். செய்ய முடிந்தது. இப்போது அங்கங்களையே வெட்டச் சொல்கிறீர்கள்.
அந்த வன்முறைக்கு நான் ஒப்ப மாட்டேன் !' என்று கூறி விடுகிறார் ஓஷோ

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, புத்த பகவான், பதஞ்சலி முனிவர், கோரக்கநாதர் என்று, எல்லையற்ற இந்திய ஞானிகளின் சாராம்சத்தை எல்லாம் இந்த நான்கு மகா ஞானிகளிடம் தரிசிக்க முடியும் என்று கூறும் ஓஷோ

கோரக்க சித்தரைப் பற்றித் தனது கடைசி நாட்களில் உரை நிகழ்த்தியதின் வடிவமே இந்தப் புத்தகம். முடிந்தால் தேடிப் பிடித்துப் படியுங்கள்!!!!

படித்ததில் வியந்தது.
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!