Quiz.no.83 Answer: மின்னலுடன் இடியும் வந்தது!
புதிர் எண் 83ற்கான விடை
9.5.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், ஒரு ஜாதகத்தைக் கொடுத்து மூன்று கேள்விகள் கேட்டிருந்தேன். கேட்கப் பெற்றிருந்த கேள்விகள்:
1. ஜாதகரின் திருமண வாழ்க்கை
2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை
3. ஜாதகரின் குழந்தை பாக்கியம்
ஜாதகத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்றிருந்தேன்.
சரியான பதில்:
அது ஒரு அம்மணியின் ஜாதகம். திருமணமான 3 மாத காலங்களிலேயே விதவையானவர். ஒரு கடும் விபத்தில் கணவர் இறந்துவிட்டார். அத்துடன் ஜாதகியின் மண வாழ்க்கை முடிந்து விட்டது. அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை.
ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!
1. கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி 7ல் ஆனாலும் ராகுவின் பிடியில்.
2. கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் 8ல். அத்துடன்
எட்டாம் அதிபதி சனீஷ்வரனின் பார்வையில். சனீஷ்வரனின்
பார்வையால் யோககாரகன் செல்லாக் காசாகிவிட்டார். அத்துடன்
தனக்கே உரிய மாங்கல்ய தோஷத்தையும் உண்டாக்கினார்.
3. களத்திரகாரகன் சுக்கிரன் 6ம் இடத்தில் போய் உட்கார்ந்ததோடு,
பாபகர்த்தாரி யோகத்திலும் சிக்கிக் கொண்டு உள்ளார். ஒரு பக்கம்
சூரியன் மறுபக்கம் ராகு. அவரும் செல்லாக் காசாகிவிட்டார்.
4. செவ்வாய், சனீ ஆகியவர்களின் சேர்க்கை அல்லது பரஸ்பர பார்வை கடுமையானது. அதுவும் திருமண வாழ்க்கைக்கு சம்பந்தப்படும்போது சோகத்தை உண்டாக்கக் கூடியது.
22 வயதில் திருமணமான ஜாதகி அடுத்து வந்த 3 மாத காலத்திற்
குள்ளாகவே கணவனைப் பறிகொடுத்துவிட்டு, தனிமைப் பட்டுப்
போனார். மறுமணம் செய்து கொள்ளாததால் குடும்ப வாழ்க்கையும்
இல்லை. குழந்தைகளும் இல்லை
இந்த அலங்கோலங்கள் எல்லாம் 7ல் அமர்ந்த ராகு திசை முடியும்போது நடந்தது.
அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 12 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் 5 பேர்கள் மட்டும் விடையை ஒட்டிய பதிலைக் கொடுத்துள்ளார்கள்
பலனை ஒட்டி எழுதியவர்களைக் கீழே சேர்த்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்
போட்டியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதே! போட்டியை நிறுத்திவிடலாமா? உங்கள் கருத்தை எழுதுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------
1
/////Blogger kmr.krishnan said...
24 நவம்பர் 1971 இரவு 10மணி 54 நிமிடம் 30 நொடிக்குப் பிறந்தவர்.ஜாதகர் என்று கொடுக்கப்பட்டுள்ளதே தவிர ஆணா பெண்ணா என்று சொல்லவில்லை.
1. திருமணம் நடந்ததா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லாமல் குடும்பம், குழந்தை பாக்கியம் பற்றிக் கேட்டுள்ளதால் திருமணம் குருதசா குருபுக்தியில் நடந்தது என்று எடுத்துக் கொள்கிறேன். ஏழாம் அதிபனனான சனைச்சரனுக்கு கடகத்தின் யோககாரகனான செவ்வேளின் பார்வை அதைப்போலவே சனைச்சரனின் பார்வை செவ்வாய்க்கு.செவ்வாய் சனைச்சரன் ஜன்ம பகைவர்கள். மேலும் சனைச்ச்ரன் வக்கிரமாகியுள்ளார். ஏழாம் இடம் ராகுவாலும் செவ்வாயாலும் சூழப்பட்டுள்ளது.எனவே திருமண வாழ்க்கை முழுமை அடையவில்லை.
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையவில்லை.ஏழாம் இடத்திற்கு 17 பரல் மட்டுமே.
2.குடும்ப வாழ்க்கை திருமண வாழ்க்கையுடன் ஒட்டியதால் அதுவும் அமையவில்லை. லக்கினாதிபதி சந்திரன் ராகுவுடன் சம்பந்தப்பட்டதால் எப்போதும் ஏதாவது மனக்கவலையில் இருப்பார்.நான்காம் அதிபன் ஆறில் மறைந்ததால் சிறிய வயதிலேயே தாயைப்பிரிந்து குடும்பம் இல்லாமல் சிரமம்.
திருமணத்திகுப்பின்னரும் கணவரைப் பிரிந்து சுவையில்லாத குடும்ப வாழ்க்கை.
3,ஐந்தாம் அதிபதி எட்டில், ஐந்தாம் இடத்தில் சூரியன், குரு,. காரகன் பாவத்தில். ஐந்தாம் இடத்திற்கு சனிபார்வை.எனவே குழந்தை பாக்கியம் இல்லை.
லக்கினத்தில் கேது இருந்தாலும் பாக்கிய ஸ்தானதிபதி குருவின் பார்வை லக்கினத்திற்கு, யோககாரகன் செவ்வாய் பார்வை இரண்டாம் இடத்திற்கு ஆகியவை குறைந்த பலனுடனாவது திருமண,குடும்ப வாழ்க்கையைக் கொடுத்தது.
ஆனால் குழந்தை இல்லை.
Friday, May 08, 2015 2:05:00 PM ////
---------------------------------------
2
/////Blogger venkatesh r said...
கடக லக்கினம், மகர ராசி ஜாதகர். லக்னாதிபதி சந்திரன் 7ல் ராகுவுடன் கை கோர்த்து பாபகர்த்தாரியில் வலுவிழந்துள்ளார்.
ஜாதகரின் திருமண வாழ்க்கை : களத்திராதிபதி சனி 11ல் வக்கிரகதியில் உள்ளார். அவரின் மேல் குரு மற்றும் சூரியனின் பார்வை உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரன் 6ல் மறைவு. கடக ராசிக்கு யோகாதிபதி செவ்வாயும் 8ல் மறைந்து, 8ம் அதிபதி சனியின் பார்வையில் வலுவிழந்து விட்டார். 7ல் ராகு மற்றும் கேதுவின் ஆதிக்கம்.மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு தாமதமாக குரு தசையில் சுக்கிர புத்தி (அ) சூரிய புத்தியில் 32 வயதிற்கு மேல் திருமணம் நடந்தது.
ஜாதகரின் குடும்ப வாழ்க்கை : ராகு சந்திரனின் கூட்டணியால் தன்முனைப்பு (EGO) உள்ள ஜாதகர். 2ம் அதிபதி சூரியன் குருவுடன் சேர்ந்து 5ல் உள்ளதால் நல்ல குடும்பத்தில் பிறந்த துணைவர் (அ) துணைவி கிடைத்திருப்பார். 12ம் அதிபதி புதன் சுகாதிபதி சுக்கிரனுடன் கூட்டு சேர்ந்து 6ல் மறைவு. 12ம் பாவம் பாபகர்த்தாரியில் மாட்டிக் கொண்டு விட்டது. அதனால்
இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லை. பிரிந்து வாழும் சூழ்நிலை.
ஜாதகரின் புத்திர பாக்கியம் : புத்திரகாரகன் குரு 5ம் பாவத்திலேயே அமர்ந்து "பாவ நாசம்" செய்துவிட்டார். அவருடன் கூட்டாக உள்ள சூரியனும், 7லுள்ள வக்கிர சனியின் பார்வையும் அதற்கு பக்க வாத்தியமாக மாறி புத்திர பாவம் வலு இழந்து இருக்கிறது. 5ம் அதிபதி செவ்வாயும் லக்கினத்திற்கு 8ல் மறைந்து வலுவற்ற நிலையில் உள்ளதால்,
ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விட்டது.
மொத்தத்தில் ஜாதகரின் இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கைதான்.
வழக்கம் போல் வாத்தியாரின் மேலான அலசலில் விடையை தெரிந்து கொள்ள ஆசை. Over to Vaathiyaar!
Friday, May 08, 2015 2:17:00 PM //////
---------------------------------------------
3
/////Blogger Ravichandran said...
Ayya,
DOB: 24-Nov-1971, 22:00:00
1. He would have got married, but marriage life is not good. Wither would have got divorced or separated or other person died. Reason is Shani and Chevvai is looking each other by their look. Shani is looking is Chevvai by 10th look. Chevvai is looking Shani by 4th look.
2. Family life is good. He would have born in good family. Because Sun(second house owner) sitting in 5th house with Guru. Second house owner sitting in Poorva Puniaya house.
3. Kids would be difficuly, because 5th house aspected by Shani.
Your Student,
Trichy Ravi
Friday, May 08, 2015 3:14:00 PM//////
------------------------------------------------
4
//////Blogger slmsanuma said...
Quiz No. 83 dated.8.5.2015
Date of Birth 24.11.1971
Place of Birth : Chennai (Assumed) 80.15 E 13.4 N
Time of birth 10.54.30 PM
1. ஜாதகரின் திருமண வாழ்க்கை
Kadaka Laknam, Magara Rasi.
Though Karagan Sukkiarn has 4 Bindus but associated with Budhan and also in Bapakarthari yogam.
Bhavaga athipathi Saneeswaran has Suriyan, Sevvai and Guru Parvai. Retrogated. But at 11th place to lakna with 4 Bindus.
Bhavagam has 17 Bindus and the Laknathipati Chandran is with Raghu in this 7th place with the Kethu Parvai.
Laknathipati Chandran is with Raghu having 2 Bindhus. Kethu in Laknam, Laknam with 24 Bindus which are not likeable.
Kargan Sukkiran is at 12th place to the Bhavagam and Bhavaga athipathi Saneeswaran is at 5th place to the Bhavagam at Trikonam but retrograte.
Sevvai thosam is in this Horoscope.
Due to the above conditions this native did not get married.
Your words
பள்ளிக்குப் போவதுதான் முதல் பாக்கியம். படித்துப் பட்டம் வாங்குவது இரண்டாவது விஷயம். பள்ளிக்கே போகவில்லை எனும்போது பட்டம் பெறாததைக் குறை சொல்வதில் பயனில்லை. திருமணம் இல்லை. குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் பற்றி சொல்வதில் பயனில்லை.
However let us analyse the other two items also.
2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை
Kargan Guru has 5 Bindhus but with retrogrative Saneeswaran Parvai.
Bhavaga athipathi Suriyan has 6 bindus and associated with Guru but has retrogrative Saneeswaran Parvai.
2nd Bavagam has 31 Bindus but has the Sevvai parvai.
Karagan is at 4 (kendram) to the Bavagam and Bhavaga athipathi Suriyan is at 4 (kendram) to the Bavagam.
Laknathipati Chandran is with Raghu having 2 Bindhus. Kethu in Laknam, Laknam with 24 Bindus which are not likeable.
Due to the above the native’s family life is not happy.
3. ஜாதகரின் குழந்தை பாக்கியம்
Kargan Guru has 5 Bindhus but with retrogrative Saneeswaran Parvai.
Bhavaga athipathi Suriyan has 6 bindus and associated with Guru but has retrogrative Saneeswaran Parvai.
5nd Bavagam has 29 Bindus but has the retrogrative Saneeswaran Parvai and Suriyan Guru association is in this 5th house.
Laknathipati Chandran is with Raghu having 2 Bindhus. Kethu in Laknam, Laknam with 24 Bindus which are not likeable.
Karagan is at the 5th Bavagam itself and Bhavaga athipathi Sevvai is at 4 (kendram) to the Bavagam.
As per the above conditions, the native has not children bakkiyam.
Saturday, May 09, 2015 12:57:00 AM /////
----------------------------------------
5
//////Blogger Siva Radjane said...
1.ஜாததகரின் திருமண வாழ்க்கை?
ஜாதகி ஒரு பெண்.ஜாதகி திருமணம் ஆனவர்.ஜாதகியின் 27 ம் வயதில் குரு’திசை சனி’புத்தியில் திருமணம் நடந்திருக்கும்.
7 ம் அதிபன் சனிக்கு குரு’வின் பார்வை.2 ம் அதிபன் சூரியன் குரு’வுடன் சேர்க்கை.2 ம் அதிபனும் 7 ம் அதிபனும் சமசப்தம பார்வை.மேலும் சந்திரனுக்கு 7 ம் இடத்திலும் ,2 ம் அதிபன் சனி’க்கும் குரு’வின் பார்வை உள்ளதால் ஜாதகி நிச்சயம் திருமணம் ஆனவர்.
2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை?
ஜாதகியின் குடும்ப வாழ்க்கை மகிழ்சியற்றதாய் இருந்திருக்கும். ஜாதகி
கணவரை பிரிந்து விவாகரத்தானவரானவர் (அ) விதவையாகி மறுமணம் புரிந்தவராய் இருப்பார்.
7 ம் அதிபன் சனி’ வக்கிரம். அதற்கு செவ்வாய் சூரியன் பார்வை.7 ல் ராகு. 2 ல் செவ்வாயின் பார்வை. 2ம் அதிபன் சூரியனுக்கு 8 ம் அதிபன் சனியின் பார்வை.மாங்கல்ய ஸ்தானமான 8 ல் செவ்வாய்,அதற்கு சனியின் பார்வை.
சந்திரனுக்கு 2ல் செவ்வாய் அதற்கு சனியின் பார்வை,7ல் சனியின் பார்வை.சந்திரனுக்கு 8 ம் அதிபன் சூரியனுக்கு ச்னி’யின் நேர் பார்வை.
களஸ்திரகாரகன் சுக்கிரன் லக்கினத்திற்கு 6 ல்,சந்திரனுக்கு 12 ல் மறைவு. ஆகவே ஜாதகி கணவனை இழந்தவர். 7 ம் அதிபன் சனி’ 11 ல் இருந்து குரு’ பார்வை இருப்பதால் ஜாதகி மறுமணம் ஆனவராய் இருப்பார்.
3. ஜாதகரின் குழந்தை பாக்கியம்?
ஜாதகிக்கு குழந்தை பாக்கியன் குறைவே.ஜாதகிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கும். ஆனால் அக் குழந்தைக்கு ஆயுள் குறைவே.
5 ம் அதிபன் ‘செவ்வாய்’ 8 ல் மறைவு.அதற்கு 8 ம் அதிபன் சனி’யின் வக்கிர பார்வை.5 ல் சூரியன்,அதற்கு சனி’யின் பார்வை. 5 ல் உள்ள புத்திரகாரகன் குரு அம்சத்தில் நீசம்.
சந்திரனுக்கு 5 ல் சனி.அதற்கு செவ்வாயின் பார்வை.8 ம் அதிபன் சூரியன் பார்வை.சந்திரனுக்கு 5ம் அதிபன் சுக்கிரன் சந்திரனுக்கு 12ல் மறைவு.5 ல் விரையாதிபதி குருவின் பார்வை. ஆகவே இந்த ஜாதகிக்கு புத்திரதோஷம்.
குழந்தை பிறந்திருந்தாலும் அது நீண்ட நாள் வாழும் பாக்கியனம் இல்லை.
G.Sivarajan
Pondicherry.
Saturday, May 09, 2015 3:58:00 AM ///////
-----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!