மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.9.13

மறுபடியும் திங்கட்கிழமையா?

 
மகிழ்ச்சியான அறிவிப்பு

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே இன்று (9.9.2013 திங்கட்கிழமை) வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு நாளை முதல் தொடர்ந்து நடைபெறும்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
--------------------------------------------------------------------------------------

6.9.13

New Devotional: மோகன்லாலின் ஆட்டத்துடன் ஒரு முருகன் பாட்டு




Devotional: மோகன்லாலின் ஆட்டத்துடன் ஒரு முருகன் பாட்டு

பக்தி மலர்

முருகனை வணங்குதற்கு மொழி ஒரு தடையில்லை. நடிகர் மோகன்லாலின் ஆட்டம் பாட்டத்துடனும் பக்திப் பரவசத்துடனும் கூடிய மலையாளப் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்


பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/XUXCOZwkoT8
Our sincere thanks to the person who uploaded this song in the net!



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

5.9.13

Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் - பகுதி 2

 

Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் - பகுதி 2

தொடர் - பகுதி 2

ஜோதிடத்தைக் கணித்த அல்லது வகுத்த முனிவர்கள் தாங்கள் எழுதியதை எல்லாம் பாடலாக அல்லது வடமொழியில் இரண்டு வரி  ஸ்லோகங்களாக எழுதிவைத்துள்ளார்கள். காகிதம், பேனா போன்ற எழுது சாதனங்கள் இல்லாத காலம். பனை ஓலைகளில், எழுத்தாணிகளைக் கொண்டு எழுதிவைத் துள்ளார்கள். சிறிய பனை ஓலைகளில் எழுதியதால் உரை நடையில் எழுதாமல் பாட்டாகவே எழுதிவைத்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் வாழ்ந்த காலத்துத் தமிழ். அல்லது அவர்களுடைய வடமொழி

அவற்றில் நிறைய ஜோதிட விதிகள் மற்றும் ஜோதிடச் செய்திகள் நறுக்குத் தெரித்தாற்போல உள்ளன.

அவற்றை சம்பந்தப் பட்ட பாடல், அதற்கான விளக்கம் ஆகியவற்றுடன் தருவதுதான் இத்தொடரின் நோக்கம். உங்கள் ஜோதிட அறிவு மேம்பட இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள்.
----------------------------------------------------------------------------------------------------
அரச குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளை Born with Silver Spoon என்று சொல்வார்கள் ( Meaning: Born into a wealthy family)  பிறப்பே அதிர்ஷ்ட கரமானதாக அமைந்துவிடும்! பாலூட்டுவதற்கும் சீராட்டுவதற்கும் வீட்டில் நிறைய  வேலைக்காரர்கள்/காரிகள் இருப்பார்கள். பொடி நடையாக நடந்து செல்லாமல் எங்கு சென்றாலும் வாகனங்களில் செல்லலாம். கோட்டா பிரச்சினையின்றி எந்தப் பல்கலைக் கழகத்தில் வேண்டுமென்றாலும் சேர்ந்து படிக்கலாம். திருமண வயதில் போட்டி போட்டுக்கொண்டு பெண் கொடுக்கப் பலர் முன் வருவார்கள். மொத்தத்தில் வாழ்க்கை அம்சமாக இருக்கும்.

கஷ்டமே இருக்காதா? அதெப்படி இல்லாமல் இருக்கும்? அப்படிப் பட்ட பிறவிக்கும் பரல்கள் 337 தானே?

”பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது” 
என்று கவியரசர் பாடி வைத்ததுபோல வேறு சிரமங்களும் இருக்கும்.

அதுபோல அதற்கு எதிரான முறையில் சிலருடைய பிறப்பு அமைந்துவிடுவதும் உண்டு.

ஜாதகப்படி லக்கினத்தில் சனி இருக்கும் நிலைமையில் வாழ்க்கை போராட்டம் மிகுந்ததாக அமைந்து விடும். லக்கினத்தை எந்த சுபக்கிரகமும் பார்க்காமல் இருந்தாலோ அல்லது லக்கினத்தில் இருக்கும் சனியுடன் எந்த சுபக் கிரகமும் சேர்ந்திருக்காமல் இருந்தாலோ அந்த நிலைமை நிச்சயமாக அமைந்து விடும்.

அது சம்பந்தமாக இன்று ஒரு பாடலைப் பார்ப்போம்:

“பாரப்பா இன்னுமொரு புதுமைகேளு
பலமுள்ள கதிர்மைந்தன் பதியில் நிற்கில்
சீரப்பா இளமையில் மனோவியாதி
செழுமையுள்ள பருவத்தில் செல்வமுண்டு
வீரப்ப வேந்தனுடைய பொருளுஞ் சேரும்
விளங்குகின்ற கொடியோர்கள் சேரலாகா
கூறப்பா போகருடகடா ஷத்தாலே
கொற்றவனே பதியறிந்து பலனைக்கூறே!   

.....................புலிப்பாணி முனிவர்

ஆமாம். லக்கினத்தில் சனி இருந்தாலும் பரவாயில்லை. சனியுடன், ராகு அல்லது கேது அல்லது சூரியன் அல்லது செவ்வாய் போன்ற தீய கிரகங்கள் சேரக்கூடாதாம்.

சேர்ந்திருந்தால் என்ன செய்வது? வேறு ஏதாவது நஷ்ட ஈடு வழங்கப் பெற்றிருக்கும், அதைப் பார்த்து மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++