மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.8.13

கவிதைச்சோலை: Balance Sheet: ஐந்தொகை

 

கவிதைச்சோலை: Balance Sheet: ஐந்தொகை

கவிநயம்

வியாபாரத்திற்கு மட்டும் ஐந்தொகை என்பது கிடையாது. வருமான வரி செலுத்துவதற்கு மட்டும் ஐந்தொகை என்பது கிடையாது.வாழ்க்கைக்கு,
அதாவது வாழ்ந்த வாழ்க்கைக்கும் ஐந்தொகை உண்டு.

ஒருவர் தான் பிறந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று 30 ஆண்டுகள் பாடுபட்டு உழைத்துப் பணத்தைச் சேர்த்தார். தன்னுடைய 65ஆவது
வயதில் கணக்கைக் கூட்டிக் கழித்துப் பார்த்தார். என்ன மிஞ்சியது? அதாவது ஐந்தொகை என்ன?

அமெரிக்காவில் ஒரு பெரிய வீடு மிஞ்சியது. அதாவது தனது மனைவி மக்களுக்கு நன்றாகச் செலவழித்து, அவர்கள் விரும்பியபடி செலவழித்தது
போக மிஞ்சியது ஒரு வீடு மட்டும்தான். இந்திய மண்ணில் சேமிப்பாக போட்டு வைத்த பணத்தில் அடையாறில் 4 வீட்டு மனையில் வாங்கிய வீடு
ஒன்றும் மிஞ்சியது. மொத்தம் இரண்டு வீடுகள் மட்டுமே!

ஆனால் அதற்காக இந்திய மண்ணை விட்டுச் சென்றதால் இழந்த சின்னச் சின்ன சந்தோஷங்கள், உறவுகள் என்று பல விஷயங்களை அவர்
இழந்துள்ளார். அந்த இழப்புக்களுக்கு மிஞ்சிய இரண்டு வீடுகளும் ஈடாகாது. அதுதான் அவருடைய அவலமான ஐந்தொகை.

இப்படி ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு கால கட்டத்தில் ஐந்தொகை ஒன்றைப் போட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான்
தான் கற்றதும், பெற்றதும், அடைந்ததும், இழந்ததும் தெரியவரும்.

கவியரசர் கண்ணதாசன் இந்த ஐந்தொகையைப் பற்றித் தன்னுடைய கவிதை ஒன்றில் அழுத்தமாகச் சொல்லியுள்ளார். அதைக் கீழே கொடுத்துள்ளேன்

வாசித்துப் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------------
கவிதைச் சோலை: காலவிளையாட்டில் களித்தவர் கொடுக்கும் கணக்கு!
ஐந்தொகை

நீலமணி விழியிலே நீந்தினேன் அப்போதென்
    நிழலையான் காண வில்லை;
    நிகரில்லாச் செல்வத்தில் ஆடினேன் அப்போதென்
    நெஞ்சைநான் காண வில்லை;
காலவிளை யாட்டிலே களித்தநான் முடிவினைக்
    கருத்திலே கண்ட தில்லை;
    கைகால் விழுந்துபோய்க் கண்பஞ் சடைந்ததும்
    கணக்கினைப் புரட்டு கின்றேன்;
சால்வோர் சக்திஇச் சகத்திலே உண்டென்று
    சத்தியம் செய்கின் றேனே;
    தமிழிலொரு கவிமகனைச் சிறுகூடற் பட்டியில்
    தந்தமலை யரசி தாயே!

         -கவியரர் கண்ணதாசன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++

7.8.13

Astrology: Second short cut - இரண்டாவது குறுக்கு வழி

 
Astrology: Second short cut - இரண்டாவது குறுக்கு வழி

குறுக்கு வழி என்றால் நமக்கு எப்பவும் (எப்பொழுதும்) பிடிக்கும்.

ஒன்பது கிரகங்கள், பன்னிரெண்டு ராசிகள், ராசிச் சக்கரம், நவாம்சச் சக்கரம், தசா புத்திகள், கோள்சாரம் என்று பல மேட்டர்களை வைத்து ஒரு ஜாதகத்தை அலசுவதைவிட, அஷ்டக வர்க்கத்தை வைத்து ஒரு ஜாதகத்தை சுலபமாக அலசிவிடலாம். அஷ்டகவர்க்கமே ஒரு குறுக்கு வழிதான்.

அஷ்டகவர்க்கத்திலும் ஒரு குறுக்கு வழி இருக்கிறது!

என்ன அஷ்டகவர்க்கமே குறுக்கு வழி அதில் ஜாதகத்தை அலச ஒரு குறுக்கு வழி உள்ளதா என்று யாரும் ஆச்சரியப்பட வேண்டாம்.

ஒரு குறுக்கு வழி உள்ளது அதை இன்று பார்ப்போம்!
------------------------------------------------------------
ஒரு ஜாதகத்தில், ஜாதகனுக்கும், அவனுடைய நெருங்கிய உறவுகளுக்கும் உள்ள நெருக்கத்தை அல்லது விரிசல்களை சுலபமாகவும், விரைவாகவும், கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.

ஜாதகத்தில் உள்ள 12 ராசிகளில், மிக அதிகமான பரல் உள்ள ராசியையும், மிகக்குறைவான பரல் உள்ள ராசியையும் குறித்துக்கொள்ளுங்கள். பிறகு கீழே குறிப்பிட்டுள்ள காரகர்களில் யார், யார் அந்த வீடுகளில் உள்ளார்கள் என்று பாருங்கள். மிக அதிகமான பரல் உள்ள வீட்டில் இருப்பவர்களால் உங்களுக்கு நன்மைதான். அவர்கள் உங்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு உதவியாக இருக்குமே தவிர உபத்திரவம் இருக்காது. அவர்கள் உங்களின் மேல் அன்பாகவும், பாசமாகவும் பிரியமாகவும் இருப்பார்கள்.

மிக அதிகமான பரல்கள் உள்ள வீட்டில் உங்கள் லக்கினம் அமைந்தால், அனைத்தும் உங்களுக்கு தன்னிச்சையாகவே அமையும்.

1. ஜாதகனின் மேன்மையைப் பார்ப்பதற்கு உரிய இடம் (காரகத்துவம்) லக்கினம்
2. ஜாதகனின் தந்தையின் மேன்மையைப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சூரியன்
3. ஜாதகனின் தாயைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சந்திரன்
4. ஜாதகனின் சகோதரர்களைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) செவ்வாய்
5. ஜாதகனின் மனைவியைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சுக்கிரன்

மாறாக மிகவும் குறைந்த பரல்கள் உள்ள வீட்டில், உங்கள் லக்கினம் அமைந்திருந்தால், ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. உறவுகளிடமும் அவனுக்கு ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடும்.

அதுபோல மிகவும் குறைந்த பரல்கள் உள்ள வீட்டில், மேற்கூறிய காரகர்கள் அமர்ந்திருந்தால, சம்பந்தப்பட்ட கிரகத்திற்கு உரிய உறவு, உங்களுடன் ஒட்டுதல் இல்லாமல் இருக்கும். அவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படாது.

ஒரு ஜாதகத்தில் மிக அதிகமான பரல் உள்ள வீட்டிற்கும், மிகக் குறைவான பரல்கள் உள்ள வீட்டிற்கும் கிடைத்துள்ள பரல்களின் வித்தியாசம் குறைவான அளவிலேயே இருந்தால், அதாவது எல்லா வீடுகளிலும் பரல்களின் அளவு 26 முதல் 30ற்குள் இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை சீரான ஓட்டத்துடன் இருக்கும். பெரிய, திடீரென்ற உயர்வையோ அல்லது தாழ்வையோ ஜாதகன் சந்திக்க மாட்டான். His life will be with no great upheavals or downfalls!

இது அஷ்டகவர்க்கப் புத்தகத்தில் வரவுள்ள பாடம். அத்துடன் மேல்நிலைப் பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6.8.13

Astrology: Short Cuts - குறுக்கு வழிகள்

 
Astrology: Short Cuts - குறுக்கு வழிகள்

short cut என்றால் a route that is shorter than the usual one மற்றும் a means of saving time or effort என்று பொருள்படும்

மனிதர்களுக்குப் பொதுவாக, பொதுவாக என்ன 90/100 பேர்களுக்கு குறுக்கு வழி என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கு நானும் விதிவிலக்கல்ல!

ஜோதிடம் கற்றுக்கொள்ளும் போது ஏராளமான விதிமுறைகள், பாடல்கள் என்று அனைத்தையும் கற்றுக்கொள்ளும்போது, உள்ள முக்கியமான சிரமம் என்னவென்றால் அனைத்தையும் மண்டையில் ஏற்றி நினைவில் வைத்துக் கொள்வது ஆகும். பலருக்கும் அது சாத்தியப் படுவதில்லை. பத்துப் பாடங்களை மனதில் ஏற்றி வைத்துக்கொண்டு விட்டு, அடுத்து உள்ள பத்துப் பாடங்களைப் படித்து முடிக்கும்போது, முதலில் ஏற்றிய பத்துப் பாடங்களில் பாதி மறந்து போயிருக்கும். நினைவில் தங்காது. நினைவில் தங்குவது என்பது நமது முளையில் உள்ள Hard Disc Capacityயைப் பொறுத்ததாகும். ஒரு Terra Bite அளவுள்ள மூளை என்றால் பல விஷயங்கள் நினைவில் நிற்கும். ஆனால் 1995ஆம் ஆண்டில் இருந்தது போல, 486Dx கணினிகளில் இருந்ததுபோல 1 GB க்கும் குறைவான அளவுள்ள மூளை என்னும் போது என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது.

அதற்குக் கை கொடுப்பதுதான் அஷ்டகவர்க்கம். அது தெரிந்திருந்தால் போதும். அதை வைத்து உங்கள் ஜாதகத்தையும், மற்றவர்களுடைய ஜாதகத்தையும் நீங்கள் அலசலாம். அஷ்டவர்கத்தை வைத்து தனி வகுப்பாக சுமார் 50 பாடங்களை நடத்தினேன். அந்தப் பாடங்கள் எல்லாம் புத்தகமாகத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்தப் புத்தகம் சுமார் ஆறு மாதங்கள் கழித்து வெளிவரும். அதற்கு முன் தயாராகிக்கொண்டிருக்கும் அடிப்படைப் பாடங்களைப் பற்றிய இரண்டு புத்தகங்கள் வெளியான பிறகுதான் அது வெளிவரும். ஆகவே பொறுத்திருங்கள்.

அதுபோல யோகங்களும் முக்கியமானதாகும். ஒரு 100 யோகங்களையாவது, ஜாதகத்திற்கான யோக அமைப்புக்களையாவது நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். அது சாத்தியமானதே.

வாரம் 2/3 யோகங்கள் வீதம், முக்கியமான 150 யோகங்களை எழுதலாம் என்று உள்ளேன். இங்கே அல்ல! இங்கே எழுதினால் எழுதியவைகள் களவுபோகும் அபாயம் உண்டு. இது திறந்த வெளி வகுப்பு. இங்கே எழுதுவது என்பது திறந்த வெளியில் ஒரு பெண் குளிப்பதற்குச் சமமானது. ஆகவே classroom337 என்ற என்னுடைய தளம் (வகுப்பு) காலியாகத்தான் உள்ளது. அங்கே எழுதலாம் என்றுள்ளேன். அதில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி அளிக்க வுள்ளேன். ஆகவே அதில் சேர்ந்து படிக்க விருப்பம் உள்ளவர்கள் அதன் விதிமுறைகளைத் தெரிந்துகொள்ள மெயில் அனுப்புங்கள். மறக்காமல் சப்ஜெக்ட் பாக்ஸில் யோகா கிளாஸ் (That is please mention as Yoga Class in the Subject Box) என்று குறிப்பிடுங்கள்.

யோகா பாடங்கள் பிறகு புத்தகமாக வரும். அப்போது அனைவரும் படிக்கலாம்

உதாரணத்திற்கு ஒரு யோகத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
-------------------------------------------------------
வேட்டு வைக்கும் யோகங்கள்!

மனிதன் சக மனிதனுக்கு வேட்டுவைப்பதை அறிவோம். சில அவயோகங்களும் வேட்டு வைக்கும் தன்மைகளை உடையவை. இன்று, வேட்டு வைக்கும் அவயோகங்களில் இரண்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.

”சார், எனக்கு இந்த யோகம் இல்லையே!” என்று யாரும் கவலைப் பட வேண்டாம்.

1. பந்துபிஸ்த்தயக்த யோகா: (உறவைக் கெடுக்கும் அவயோகம்)

4ஆம் வீட்டு அதிபதி தீய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அல்லது 6, 8, 12ஆம் இடங்களில் சென்று அமர்ந்தாலும், அல்லது பகை வீடுகளில் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசம் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனுக்கு தனது நெருங்கிய சொந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது. உறவுகளுடன் பிரச்சினைகள் இருக்கும்.அது தவறான புரிதல்கள் அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம்.

எப்படியிருந்தாலும் அல்லது என்ன காரணமாக இருந்தாலும் ஜாதகன் தனிப்பட்டுப் போவான்.
++++++++++
2
மாத்ருநாச யோகா: (தாய்ப் பாசத்திற்கு வேட்டு வைக்கும் யோகம்)

சந்திரன் இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் (Moon is hemmed between malefic) மாட்டிக்கொண்டு விட்டாலும் அல்லது தீய கிரகத்துடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனின் தாய், ஜாதகன் சிறுவனாக அல்லது இளைஞனாக இருக்கும்போதே இறந்து போய்விடுவார். தவறி நல்ல ஆயுள் பாவத்தோடு, அவர் உயிர் வாழ்ந்தாலும், ஜாதகனுடன் சுமூகமான உறவு இருக்காது.
+++++++++++
இன்று ஆடி அமாவாசை. உகந்த நாள். ஆகவே இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். அத்துடன் அந்த வகுப்பை இன்று துவங்குகிறேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!