மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.6.13

Astrology: கைக்கு எட்டியது ஏன் வாய்க்கு எட்டவில்லை?

 

Astrology: கைக்கு எட்டியது ஏன் வாய்க்கு எட்டவில்லை?

பயிற்சிப்பாடம்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றால் வருத்தம் அதிகமாகும். இரண்டு மடங்காகும். கைக்கு எட்டவில்லை என்றால் சும்மா இருப்போம். கைக்கு எட்டிவிட்டு, கையில் கிடைத்துவிட்டு, அது வாய்க்குள் சேரவில்லை என்றால் வருத்தம் அதிகமாகுமா இல்லையா?

சிலருக்கு ஜாதகப்படி அப்படியாகிவிடும்.

பதினொன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் கிரகத்தின் மகாதிசை மிகவும் நன்மையானதாக இருக்கும் என்பது முக்கியவிதி. ஆனால் ஒரு ஜாதகனுக்கு, பதினொன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் கிர்கத்தின் மகாதிசை நடந்தும் அது பயனளிக்கவில்லை.

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.




1. சிம்ம லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சூரியன் 4ல். கேந்திரத்தில். நல்லபடியாக உள்ளார்
2. சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாய் திரிகோணத்தில் (9ல்) ஆட்சி பலத்துடன் உள்ளார்.
3. அத்துடன் அவருடைய பார்வை கல்விகாரகன் புதனின் மேல் விழுகிறது.

ஜாதகன் பூரட்டாதி நட்சத்திரக்காரர். ஆரம்பதிசையான குரு திசையில் இருப்பு 9 ஆண்டுகள். அதற்குப் பிறகு 19ஆண்டுகாலம் சனி மகாதிசை. அது 28 வயதுவரை நீடித்தது. சனி திசை ஜாதகனுக்குச் சரியான பலனைக் கொடுக்கவில்லை. இளம் வயதில் தொடங்கிய சனி திசை ஜாதகனை அலைக்கழித்து, ஜாதகனின் படிப்பைக் கெடுத்துவிட்டது.

காரணம் என்ன?

1. சனி கேதுவின் கூட்டணியால் கெட்டிருக்கிறது.
2. அத்துடன் சனியின் மேல் எந்த சுபக்கிரகத்தின் பார்வையும் விழவில்லை.
3. தசாநாதனாகிய சனி 4ஆம் வீட்டையோ அல்லது அதன் அதிபதியையோ பார்க்காமல் விலகி/ஒதுங்கி இருக்கிறது.
4. கல்வி ஸ்தானமாகிய 4ஆம் வீட்டின் அதிபதி செவ்வாய், அந்த வீட்டிற்கு ஆறில் அமர்ந்துள்ளார்

இந்த 4 காரணங்களால் ஜாதகனால் படிக்க முடியாமல் போய்விட்டது.

ஆகவே நல்ல தசாபுத்தி நடந்து பயன் இல்லை. பயன் அளிக்கும்  வகையில் தசாநாதன் இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++

4.6.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 31

 
Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 31

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 31

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே
பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது
பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
அவிட்ட நட்சத்திரம் 3 & 4ஆம் பாதங்கள் (மட்டும்) கும்ப ராசி.
இந்த நட்சத்திரம் செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. மகம்
2. விசாகம்
3. மூலம்
4. திருவோணம்

ஆகிய 4 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) பொருந்துபவற்றில்  எதுவும் இல்லை. கும்ப ராசிக்கு  மகரம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே மகர  ராசிக்கு திருவோண நட்சத்திரத்தை விலக்கிவிடுவது நல்லது.

கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 3 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

மிருகசீர்ஷம், சித்திரை ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் அவிட்டம் ஒரே நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!

அஸ்விணி, பரணி, சித்திரை,உத்திரம், உத்திராடம்,  பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தாது.

கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், பூரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம் கேட்டை, பூராடம், சதயம் ஆகிய 12 நட்சத்திரங்களும்
மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று
வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.6.13

முருகனுக்கு ஒரு விழா! முத்தான திருவிழா!


முருகனுக்கு ஒரு விழா! முத்தான திருவிழா!

எங்கள் ஊரில் உள்ள, எங்கள் (பங்காளிகளுக்குச் சொந்தமான) முருகன் கோவிலில் 3 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது. 3.6.2013
திங்கட் கிழமை முதல் 5.6.2013 புதன்கிழமைவரை அத்திருவிழா நடைபெறும். முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் அர்ச்சனைகள் என்று மூன்று நாட்களும் அமர்க்களமாக இருக்கும்.

முதல் நாளன்று சுமார் 3,000 பேர்கள் கலந்து கொள்வார்கள்

மூன்று நாட்களுக்கும் அன்னதானம் (3.6.2013), நகரவிருந்து (4.6.2013, பங்காளிகளுக்கு விருந்து (5.6.2013) என்று சுவையான உணவும் உண்டு.

விழாவிற்கு எங்கள் தந்தைவழி உறவினர்கள் (மொத்தம் 413 பேர்கள்) பெரும்பாலவனர்கள் வந்து ஒன்று சேர்ந்து கலந்து கொள்வார்கள்.

அத்துடன் நகர மக்களும் நகரத்தார், நாட்டார் என்ற இனபேதமின்றிக் கலந்து கொண்டு முருகனைத் தரிசித்து மகிழ்வார்கள். முருகப் பெருமானும் விதம் விதமான அலங்காரத்தில் அருள் பாலிப்பார்

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இவ்விழா நடைபெறுகிறது

அந்த விழாவில் 3 புத்தகங்கள் வெளியிடப்பெற்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. அதில் வாத்தியார் தொகுப்பாளராக
இருந்து பணியாற்றிவரும் முகவரிப்புத்தகம் ஒன்றும், வாத்தியார் எழுதிப் பதிப்பித்த ‘சனீஷ்வரன் படித்த பள்ளிக்கூடம்’ என்ற புத்தகமும்
(சனீஷ்வரனைப் பற்றிய இரண்டு கதைகள் அடங்கிய புத்தகம் - பக்கங்கள் 48) வாத்தியாரின் நண்பரும் பங்காளியுமான திரு.இராம.கிருஷ்ணன அவர்கள் எழுதிய ‘ஆன்மீகத் திரட்டு என்ற புத்தகமும் வெளியிடப்பெற்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
------------------------------------------------
சரி, சொல்லவந்த செய்திக்கு வருகிறேன்

அந்த மூன்று தினங்களிலும் நடைபெறும் நிகழ்வுகளுக்கு வாத்தியார் தனது சொந்த ஊருக்குச் செல்ல இருப்பதால், வகுப்பறைக்கு மூன்று நாட்கள் விடுமுறை.

அடுத்த வகுப்பு 6.6.2013 வியாழனன்று நடைபெறும்
அனைவரும் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார்கள்

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!