மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.11.12

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க!




நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க!

கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால்கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது. கப்பலுக்குள் அந்த நீர் புகுந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.  “அதுபோல  வாழ்வின் எந்தப் பிரச்சினையும் உங்களைப் பாதிக்கவே முடியாது. நீங்கள் அனுமதித்தால் தவிர!”

முகநூல் நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் வரிகள் இவைகள். உண்மைதான். மனதிற்கு ஆறுதல் அளிக்கும் வரிகள் அவைகள்.

ஆனால் கடன், நோய் போன்ற உபாதைகள் எல்லாம் உங்கள் அனுமதியின்றே, உங்கள் வாழ்க்கைக்குள் நுழையும் வலிமை உடையவை, அதை மனதில் வையுங்கள்.

நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஒருவனுக்கு, அவன் செல்லும் வாகனம் எத்தனை புதிதாக இருந்தாலும், அவன் எத்தனை திறமையான ஓட்டுனராக இருந்தாலும், விபத்து  நேரிடுவது அவன் கையிலா இருக்கிறது? எதிரில் வரும் ஒரு வாகன ஓட்டியின் சிறு தவறுகூட, அவனை சாய்த்து விட்டுப் போய்விடும. சமயத்தில் வ்ண்டியுடன், அவனை  மேலே அனுப்பி வைத்துவிட்டுப் போய்விடும்!

இறையுணர்வும், தெளிந்த பக்தியும், நல்ல நேரமும் மட்டுமே ஒருவனை எந்த நேரத்திலும் காப்பாற்றும்.

விதியின் விளையாட்டில், கடும் புயலையும், காற்றழுத்ததையும் தாக்குப் பிடித்து நிற்பது என்பது, எந்தக் கப்பலுக்கும் சாத்தியமில்லாததாகும். மனிதன் மட்டும் அதற்கு  விதிவிலக்கா என்ன?

   “நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
         நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க!”

என்று நம்பிக்கை தரும் வரிகளைக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிவைத்துவிட்டுப்போனார்

அந்த நம்பிக்கையில்தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

பத்து நாட்களாக வாத்தியாரை முடக்கிப் போட்டிருந்த காய்ச்சல் 90% குணமாகிவிட்டது.

பின்னூட்டங்கள் மூலமாகவும், தனி மின்னஞ்சல்கள் மூலமாகவும், வாத்தியாரின் மேல தங்களுடைய மேலான அன்பையும், பரிவையும் காட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களின் பொறுமைக்கும், புரிந்துணர்விற்கும் விசேடமாக மீண்டும் ஒரு நன்றி!

பாடங்கள் மீண்டும் 19.11.2012 திங்கட்கிழமை முதல் துவங்கும். வழக்கம்போல வாத்தியாரின் உத்வேகத்துடன் அவை இருக்கும்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

11.11.12

காய்ச்சலுடன் ஒரு கைகுலுக்கல்!


 காய்ச்சலுடன் ஒரு கைகுலுக்கல்!

அன்பர்களே, அன்பு உள்ளங்களே,

கடந்த ஒரு வார காலமாக வாத்தியாருக்குக் கடும காய்ச்சல். virus fever. Blood test முதல் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து, மருத்துவர்களின் ஆலோசனைப் படி மருந்துகளை உட்கொண்டு வருகிறேன். காய்ச்சல் தணிந்துள்ளது. ஆனாலும் முற்றிலுமாகக் குணமாக வில்லை. முற்றிலுமாகத் தேறி, பழைய நிலைக்கு வருவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகலாம். அனைவரும் பொறுத்துக்கொள்ளூங்கள்.

அடுத்த வாரம் முதல் பழைய உத்வேகத்துடன் பாடங்களை எழுத உள்ளேன். இழந்த நேரங்கள் சரி செய்யப்படும். கோவையில் தற்சமயம் நிலவும் 12 மணி நேர மின்வெட்டு, எவரையும் உற்சாகப் படுத்துவதாக இல்லை. அதையும் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. யு.பி.எஸ் உள்ளது. இருந்தும் பயன் இல்லை.  யு.பி.எஸ் சார்ஜ் ஆவதற்கும் மின்சாரம் வேண்டுமல்லவா? அதுவும் ஒரு பெரிய குறைதான்.

வருவதை எதிர்கொள்வோம். அனைவரையும் பொறுமையாக இருக்கும்படியும். வாத்தியாருக்கு, உங்களுடைய ஒத்துழைப்பை நல்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++==

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6.11.12

Astrology - Popcorn Post - வெள்ளைக்காரன் என்னடா சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனான்?

Astrology - Popcorn Post - வெள்ளைக்காரன் என்னடா சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனான்?

Popcorn Post No.30
பாப்கார்ன் பதிவுகள் - எண்.30


தேதி 6.11.2012 செவ்வாய்க் கிழமை
-----------------------------------------------
எனக்கு வரும் மின்ஞசல்களில் சில இப்ப்டியிருக்கும்:

“சார், என் தாயார் சென்ற வருடம் 30.11.2011 அன்று காலமானார்கள். அவர்களுக்குத் தலைத் திதியைக் (ஆண்டுத் திதியைக்)
கொடுக்க விருபுகிறேன். இந்த ஆண்டு எந்தத் தேதியில் அதைச் செய்ய வேண்டும்?”

அவர்கள் இறந்தபோது, அன்றையத் திதியக் குறித்து வைத்துக்கொளாததினால் ஏற்படும் கோளாறு இது

அன்றையத் தேதியில் வளர்பிறை சஷடி திதி

இந்த ஆண்டு அதே ஐப்பசி வளர்பிறை சஷ்டித் திதி 19.11.2012 அன்று வரும். அன்றையத் தேதியில் செய்ய வேண்டும்

பிறந்த நாளில் கேக் வெட்டிக் கொண்டாட வேண்டுமென்றால், வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்துவிட்டுப்போனபடி நீங்கள் பிறந்த ஆங்கிலத் தேதியில் கொண்டாடலாம். ஆனால் கோவிலுக்குச் சென்று ஈசனுக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றால், தமிழ் நாட்காட்டியின்படி நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் நீங்கள் பீறந்த நட்சத்திரம் எந்தத் தேதியில் வருகிற்தோ, அந்தத் தேதியில் தான் செய்ய வேண்டும்!

உதாரணத்திற்கு, நீங்கள் கார்த்திகை மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில், பிறந்தவர் என்றால், அந்தத் தேதியில்தான் ஒவ்வொரு வருடமும் அதைச் செய்ய வேண்டும்.

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------
திதியைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தைக் குறிப்பது.

மாதம் 30 திதிகள்.

ஒவ்வொரு மாதமும் - அதாவது 30 தினங்களுக்கு ஒருமுறை சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும். 0 பாகையில் இரண்டும் இருக்கும். அன்று அமாவாசை. அமாவாசையில் இருந்து பதினைந்தாம் நாள் அவ்விரண்டு கிரகங்களும் எதிர் எதிராக இருக்கும். 180 பாகை வித்தியாசத்தில் இருக்கும். (ஒரு சுற்று வட்டத்திற்கு 360 பாகைகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!)

அமாவாசையில் இருந்து பெளர்ணமி வரை 15 திதிகள் (அவற்றை வளர்பிறைத் திதிகள் என்பார்கள். சிலர் வளர் பிறைத் தேதிகளில் வரும் முகூர்த்த நாட்களில் மட்டுமே சுபகாரியங்களைச் செய்வார்கள். சுபகாரியம் என்றால் திருமணம். புதுமனை புகுவிழா, புதுத் தொழில் துவங்கும் நன்னாள் போன்றவை)

பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரை 15 திதிகள்(அவைகள் தேய்பிறைத் திதிகள் எனப்படும்)

1. பிரதமை, 2. துவிதியை, 3. திரிதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13, திரயோதசி, 14. சதுர்த்தசி

அமாவாசை + வளர்பிறைத் திதிகள் 14 + பெளர்ணமி + தேய்பிறைத் திதிகள் 14 = ஆக மொத்தம் 30 திதிகள். கணக்கு சரியாகிவிட்டதா?

ஒவ்வொரு திதிக்கும் ஒரு சிறப்பு உண்டு.

அது என்ன?

அமாவாசை அன்று நம் முன்னோர்களை வழிபட வேண்டும். தந்தையார் அல்லது தாயார் மேல் உலகம் சென்றிருந்தால், அவர்களுக்காக ஒரு சிறப்பு வழிபாடு செய்தல் வேண்டும். திதி கொடுக்க வேண்டும்.

சதுர்த்தி, விநாயகப் பெருமானை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
பஞ்சமி, உலக நாயகி அன்னை பராசக்தியை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
சஷ்டி, சேவற்கொடியோனை, (அதாங்க நம்ம வேலுச்சாமி), முருகப் பெருமானை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் அஷ்டமி, கோகுலக் கிருஷ்ணனை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் நவமி, ராம அவதாரத்தை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் ஏகாதசி, துவாதசி, ஆகிய இரண்டு திதிகளும் செல்வத்தை அள்ளித்தரும் பள்ளிகொண்ட பெருமாளை வணங்குதற்கு ஏற்ற திதிகளாகும். திரயோதசி, எம்பெருமான் ஈசனை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் சதுர்த்தசி, சிவனையும், கணபதியையும் ஒரு சேர வணங்குதற்கு ஏற்ற திதியாகும் விநாயகரில் துவங்கி, விநாயகரிலேயே முடிவதைக் கவனியுங்கள் பெளர்ணமி, அண்ணாமலையில் குடிகொண்டிருக்கும் அருணாச்சலரை வணங்குதற்கு ஏற்ற திதியாகும். அத்துடன் எல்லா தெய்வங்களையும் வணங்கி மகிழ ஏற்ற திதியாகும்.

திதிகளின் பயன் அவ்வளவுதானா?

இல்லை! அதி முக்கியமான பயன் ஒன்று இருக்கிறது. ஒருவரின் தந்தை அல்லது தாயார் இறந்துவிட்டால் அவர்களுடைய இறந்த நாளைத் திதியை வைத்துத்தான் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆண்டுதோறும் அந்த நாளில் ஆண்டுத்திதி (வருஷாப்தி) கொடுக்க வேண்டும். மேலும் இரண்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். அல்லது தட்டில் பத்துப் பத்து டாலராக இரண்டு பேருக்குக் கொடுக்கலாம் (இது தூர தேசங்களில் இருப்பவர்களுக்கு)

எந்தத் தமிழ் மாதம், வளர்பிறை அல்லது தேய்பிறையில் இன்ன திதி என்பதைக் குறித்து வைத்துக்கொள்வது நல்லது.


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!