மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.11.12

Astrology - Popcorn Post - சனி எப்படிக் கொடுப்பான்?


Astrology - Popcorn Post - சனி எப்படிக் கொடுப்பான்?

Popcorn Post No.29
பாப்கார்ன் பதிவுகள் - எண்.29


தேதி 5.11.2012 திங்கட்கிழமை
---------------------------------
சனியைப்போல் கொடுப்பாருமில்லை. கெடுப்பாருமில்லை. சனி முதல் நிலை தீய கிரகம். இயற்கையிலேயே தீய கிரகம்

அப்புறம் எப்படிக் கொடுப்பான்?

அவன்தான் ஆயுள்காரகன். அவன்தான் கர்மகாரகன் (authority for work/profession) அதை மறந்துவிடாதீர்கள்.

அந்த இரண்டு செயல்களைத் தவிர மற்ற இடங்களில், சனியின் நிலைமை என்ன?

உதாரணத்திற்கு சனி நான்காம் வீட்டில் இருந்தால், ஜாதகனுக்கு தன் தாயோடு நல்ல உற்வு இருக்காது. அல்லது அவனுடைய தாயால் அவனுக்கு எந்தவிதப் பயனும் இருக்காது. நான்காம் இடம் கல்விக்கான இடமும் கூட். அங்கே வந்து அமரும் சனி, ஜாகனின் கல்வியில் கையை வைத்துவிடுவான். ஜாதகனுக்குக் கல்வியில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். ஒரு பட்டப் படிப்பை முடிப்பத்ற்குள் தாவு தீர்ந்துவிடும். அத்துடன் அது சுகத்திற்கான இடமும் ஆகும். ஜாதகனுக்கு சுகக்கேடு. கையில் காசு இருந்தாலும், சொத்து இருந்தாலும், அவனால அவற்றை அனுபவித்து சுகமாக இருக்க முடியாது.

எல்லோருக்கும் அப்படியா?

இல்லை!

சனி ஜாதகத்தில் உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது சொந்த வீட்டில், ஆட்சி வீட்டில் இருந்தாலோ, நன்மைகளைச் செய்வான். மேற்சொன்ன கஷ்டங்கள் எல்லாம் இருக்காது. ஆனால் சனி, தான் உச்சம் பெற்றதற்கான முழுப்பலனையும் தருவதற்கு அல்லது ஆட்சி பலம் பெற்றதற்கான முழுப்பலனையும் தருவதற்கு, அவர் சுபக்கிரகங்களான சுக்கிரன் அல்லது குருவின் சேர்க்கையையோ அல்லது பார்வையையோ பெற்றிருக்க வேண்டும்.

4ஆம் வீடு மட்டுமல்ல, மற்ற எல்லா வீடுகளுக்கும் அதுதான் பலன்.

ஆகவே உங்கள் ஜாதகத்தைப் பார்க்கும்போது அதைப் பாருங்கள்.

இது பாப்கார்ன் பதிவு. இதில் என்ன அளவு தர முடியுமோ, அதைத் தந்துள்ளேன். சனியைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் பழைய பாடங்களில் நிறைய உள்ளன. அவற்றைப் படியுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.11.12

Devotional சபரிமலையானுக்கு ஒரு தாலாட்டு!






Devotional சபரிமலையானுக்கு ஒரு தாலாட்டு!
பக்தி மலர்

இசைப்பவர்: தேனினும் இனிய குரலால் பாடும் வல்லமை பெற்றவர். ஆமாம். திரு. கே.ஜே. ஜேசுதாஸ்தான் அவர். இன்றைய பக்தி மலரை அவர் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. இசைக்கு ஏது மொழி? அதுவும் தெய்வீகப் பாடலுக்கு ஏது மொழி? தமிழில் இல்லையே என்ற குறையில்லாமல் கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------------------
ஸ்ரீஹரிஹராமஜ் அஷ்டகம  என்பது மிகவௌம் பிரபலமான ஹரிஹராசனம் என்னும் தாலாட்டுப் பாடல் ஆகும் (Sri Hariharatmaj ashtakam is popularly known as "Harivarasanam" is the lullaby for Lord Ayyappa. "Mantra" comprising eight stanzas.The Indian spiritual arena for it s pride has many Ashtakams. Examples are Lingashtakam (praising Lord Shiva and Mahalakshmi ashtakam (praising Mahalakshmi)

ஹரிவராசனம் வரிகளை நேரமின்மை காரணமாக ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தேன். அதைத் தமிழ் எழுத்துக்களில், நமது நண்பர் தஞ்சாவூர்ப் பெரியவர் திரு கோபாலன் அவர்கள்  கொடுத்திருக்கிறார்கள். அதை அப்படியே கொடுத்துள்ளேன். அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!.

ஹரிவராசனம் விஸ்வமோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அருவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

சரணகீர்த்தனம் சக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தநாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

துரகவாஹனம் சுந்தரானனம்
வரகதாயுதம் வேதவர்னிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

த்ரிபுவனர்ச்சிதம் தேவதாத்மகம்
த்ரிநயனம் ப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிடஷபூஜிதம் சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

பவபயப்பஹம் பாவுகாவஹம்
புவனமோஹனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

கலம்ருதஸ்மிதம் சுந்தரானனம்
கலபகோமளம் கத்ரமோஹனம்
கலபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

ஸ்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஸ்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்
ஸ்ருதிமனோஹரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!!


-----------------------------------------
பாடலின் கானொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded the song in the net






வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1.11.12

Astrology ஜோதிடரின் காட்டில் எப்போது மழை?

 Astrology ஜோதிடரின் காட்டில் எப்போது மழை?

1.11.2012 வியாழன்

பொதுவாக எல்லோருக்கும் முதல் ஆசை நீண்ட ஆயுளடன் இருக்க வேண்டும் என்பது. அதில் தவறில்லை. ஜோதிடரைப் பார்க்கும்போது அதைத்தான்
கேட்பார்கள்.

ஜோதிடரும் ஜாதகனின் ஆயுள் பாவத்தைப் பார்த்துவிட்டுத்தான் பலன் சொல்ல வேண்டும். பல ஜோதிடர்களுக்கு அதற்கு நேரமில்லை. கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி வந்தவனை அனுப்பி விட்டு அடுத்தவனைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

திருமணப் பொருத்தம் பார்க்க வருகிறவர்களால்தான் அவர்களுக்கு வருமானம். வரும்போது ஐந்து அல்லது ஆறு ஜாதகங்களைக் கொண்டு வருவான். சிலர் பத்து  அல்லது பன்னிரெண்டைக்கூட கொண்டு வருவார்கள். கொண்டு வந்ததில் தங்கள் மகனுக்கு எது பொருத்தமாக உள்ளது என்று கேட்பார்கள். ஜோதிடர் நன்றாக  அலசி அவற்றில் ஒன்று அல்லது இரண்டைத் தெரிவு செய்து கொடுப்பார். அத்துடன் வந்தவன் ஜோதிடர் கேட்கும் தொகையை (ரூ.300 ல் இருந்து ஆயிரம் வரை) கொடுத்துவிட்டுப் போவான். அத்துடன் அவர் தெரிவு செய்து கொடுத்த வரன் படியாவிட்டால் மீண்டும் வருவான். சிலர் மீண்டும், மீண்டும் வருவார்கள்.

காரணம் ஜாதகம் பொருந்தினாலும் பையனுக்குப் பெண்ணைப் பிடிக்க வேண்டுமே? அல்லது பெண்ணிற்குப் பையனைப் பிடிக்க வேண்டுமே? இப்போது சம்மதம்

சொல்வதில் இருபாலருக்குமே சம உரிமை மற்றும் சம வாய்ப்பு நிலவுகிறது. ஏனென்றால் பல பெண்களும் படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள்.

திருமண பந்தத்தில் பெற்றவர்கள் ஜாதகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பிள்ளைகள் தோற்றத்திற்கு (appearance)  முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

பையன், பெண் நயன்தாரா அல்லது திரிஷா அல்லது அனுஷ்கா சர்மா மாதிரி இருக்க வேண்டும் என்பான். ஆனால் அவன் சூர்யா அல்லது ஆர்யா அல்லது
கார்த்திக் மாதிரியான தோற்றத்தில் இருக்க மாட்டான். சண்டைக் காட்சிகளில் வரும் அடியாட்கள் போல இருப்பான். அதுதான் கஷ்டம்!

ஒன்று முதல் மூன்று வருடங்கள் வரை நூறில் இருந்து முந்நூறு ஜாதகங்கள் வரை பொருத்தம் பார்த்து நொந்துபோன பெற்றோர்களை எல்லாம் நான்
அறிவேன்.

அந்த மாதிரிப் பெற்றேர்களால்தான் ஜோதிடரின் காட்டில் மழை பெய்யும்!

ஒரு நூறு ரூபாய் அல்லது ஐநூறு ரூபாயைக் கட்டணமாகக் கொடுத்து விட்டுத் தன் ஜாதகத்தை வைத்து விதம் விதமான கேள்விகளைக் கேட்பதோடு
(எழுதிக் கொண்டு வந்திருப்பான்) அவருடைய ஒரு நாள் பொழுதில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரப் பொழுதை வீணாக்குபவனை எல்லாம் ஜோதிடர்கள் விரும்புவதில்லை.

அப்படி எழுதிக் கொண்டு வந்தவனும் திருப்தியாகப் போக மாட்டான். அதுதான் கஷ்டம்.
-----------------------------------------------------------------------
சரி, சொல்ல வந்த விஷ்யத்திற்கு வருகிறேன்.

ஆயுள் பாவத்தைப் பற்றி (எட்டாம் வீட்டைப் பற்றி) எட்டு அத்தியாயங்களைப் பாடமாக எழுதியுள்ளேன். அவைகள் எல்லாம் பதிவில், பழைய பாடங்களில்
உள்ளன

இப்போது சுருக்கமாகச் சொல்ல விழைவது. நீண்ட ஆயுளைப் பற்றி!

ஒருவருக்கு நீண்ட ஆயுள் இருந்தால் மட்டும் போதாது. கடைசி மூச்சு வரை நல்ல ஆரோக்கியமும் இருக்க வேண்டும். அத்துடன் கையில் இருப்பும் இருக்க  வேண்டும். அவை இரண்டும் இல்லாம்ல நீண்ட ஆயுளுடன் இருப்பது. கதை இல்லாத படத்தில் கதாநாயகனாக நடிப்பதைப் போன்றதாகும் அதையும் மனதில்  வையுங்கள்!

1. ஆயுள் காரகன் சனியின் வலுவான பார்வை ஆயுள் ஸ்தானத்தின் மேல் விழ வேண்டும்.
2. லக்கினாதிபதி பதினொன்றில் வலுவாக இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டு
3. சனி எட்டாம் வீட்டில் இருக்க வேண்டும். அத்துடன் சுப்க்கிரங்கள் ஒன்றுடன் சேர்ந்தும் இருக்க வேண்டும்.

இப்படி நீண்ட ஆயுளுக்கு மேலும் சில விதிகள் உள்ளன. முக்கியமான மூன்றை மட்டும் இங்கே கொடுத்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++