==============================================================
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?
இளைஞர் மலர்
மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிமுறையை அன்பர் ஒருவர் அழகாகச் சொல்லியிருக்கிறார். அப்படியே உறிக்காமல் கொடுத்திருக்கிறேன். சொந்த சரக்கல்ல; இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது. மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. தனித்தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும். அனைவரும் படித்துப் பயன் பெறுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------
*Everybody Knows:
You can't be all things to all people.
You can't do all things at once.
You can't do all things equally well.
You can't do all things better than everyone else.
Your humanity is showing just like everyone else's. *
*So:
You have to find out who you are, and be that.
You have to decide what comes first, and do that.
You have to discover your strengths, and use them.
You have to learn not to compete with others,
Because no one else is in the contest of *being you*. *
*Then:
You will have learned to accept your own uniqueness.
You will have learned to set priorities and make decisions.
You will have learned to live with your limitations.
You will have learned to give yourself the respect that is due.
And you'll be a most vital mortal. *
*Dare To Believe:
That you are a wonderful, unique person.
That you are a once-in-all- history event.
That it's more than a right, it's your duty, to be who you are.
That life is not a problem to solve, but a gift to cherish.
And we'll be able to stay one upon what used to get us.
May God Bless you and keep you safe, *+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
7.5.11
6.5.11
உயிர்தப்பி ஓடிவந்த சாமியாரின் கதை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உயிர்தப்பி ஓடிவந்த சாமியாரின் கதை!
வெள்ளி மலர்
ஆன்மீகம் என்றாலே மிகவும் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்; வேடிக்கை வினோதங்களுக்கு வேலை இல்லை என்று எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.
நீண்ட முகம், தொங்கிய முகம், கவனமின்மை, எதிலும் ஆர்வம் அற்ற ஒரு விரக்தியான மனோநிலை, 'என்னாத்த வந்து என்னாத்த போயி'என்று 'என்னாத்த கன்னையா'வைப் போல ஒரு சலிப்புத்தன்மை, இதெல்லாம் அவியலாகக் கலந்தது போன்ற ஒரு பேச்சும், தோற்றமும் கொண்டிருந்தால் அது ஆன்மீகம் என்று ஒரு போலி எண்ணம் பரவலாக உள்ளது.
ஆன்மீகம் என்பது நம் மரபில் அழுகை அல்ல. சில குழுக்களில் அழுவதற்கென்றே அழுகை வீடு என்று அறிவுப்புப் பலகையே போட்டு வைத்து இருப்பார்கள் கொஞ்சம் துக்கமான சமயத்தில் மனம் விட்டு அழுதுவிட்டால் துக்கம் மட்டுப்படும் என்பது மனோ தத்துவம்.ஆனால் ஆன்மீக வாதி எப்போதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்பது சரியான சந்தேகமே.
நமது மரபில் அழ வேண்டிய தருணத்தில் கூட அழுகையை ஊக்குவிக்க கூலிக்கு ஆள் அமர்த்துவது உண்டு.ஒப்பாரி, பிலாக்கணம் பாடும் மூதாட்டிகளுக்கு கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு உண்டு.இந்த மரபைப் பற்றிப் பலரும் ஆய்வு செய்துள்ளனர்.
நமது மரபில் ஆன்மீகம் என்பது ஆனந்த அனுபவம்.பரமானந்தம் என்றும், பிரம்மானந்தம் என்றும், நித்யானந்தமென்றும் பல வகையில் 'ஆனந்தம் ஆனந்தம்' என்றே கொண்டாடுகின்றோம்.
இங்கேதான் ஆன்மீகத்தோடு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்,இசை, கலை, எல்லாம் உண்டு.
கண்ணன் என்னும் கருந்தெய்வம் என்று கண்ணனை ஒரு விளையாட்டுப் பிள்ளையாகவும், காதலனாகவும், குறும்புக்காரனாகவும் பாவிக்கும் மனோநிலை நம்முடைய மரபு.
எனவே 'சீரியஸ்னெஸ்'தான் ஆன்மீகம் என்பது நமது மனோபாவம் அன்று. இதை மனதில் பதித்துக் கொண்டு மேற்கொண்டு படியுங்கள்.
அந்த ஆசிரமத்தில் இளைஞர்களாகத் துறவிகள் கூடித் தவம் இயற்றி வந்தார்கள்.அவர்கள் ஓய்வு நேரத்தில் மகிழ்ச்சியுடன் பேசிச் சிரிப்பார்கள்.ஒருவரை ஒருவர் காலை வாரும் படி பேசி மகிழ்வார்கள்.வாலிபால் விளையாடுவார்கள்.மல்யுத்தம் பழகுவார்கள்.
அவர்களில் ஒருவர் அதிகமாகப் பயணம் மேற்கொள்வார். பல ஊர்களுக்கும் போய்விட்டு வந்து தன் தோழர்களுக்குத் தன் பயண அநுபவத்தை விலாவாரியாகச் சொல்லுவார்.அவர் பேசுவது ஒரு குழந்தை பேசுவது போல இருக்கும். கண்கள் விரிய ,இழுத்து இழுத்து அவர் பேசுவதை அனைவரும் வாய் பிளந்து கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.
ஒருசமயம் அவர் திபெத்துக்குச் சென்று திரும்பினார். சரியாகச்சொல்லுவதாக இருந்தால் உயிர் தப்பி ஓடி வந்தார்.
திபெத்தில் இருந்த பல புத்தர் ஆலயங்களுக்குச்சென்றுள்ளர். மடாலயங்களைப் பார்த்துள்ளார்.
அந்த பெளத்த ஆலயங்களின் செல்வச் செழிப்பையும்,வெளியில் மக்களின் வறுமையையும் ஒப்பு நோக்கியுள்ளார்.அவர் மனதில் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று தோன்றிவிட்டது.
பார்ப்பவர்களிடம் எல்லாம் இந்த முரண்பாட்டைப் பற்றிப் வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். செய்தி பெளத்த குருமார்களுக்கு எட்டியுள்ளது. யாரோ ஒரு புரட்சிக்காரன் கடைவீதியில் மக்களைக் கூட்டித் தங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறான் என்று அவர்களுக்குத் தோன்றிவிட்டது.
நமது சாதுவை அவர்கள் மெதுவாக மடாலயத்திற்கு அழைத்துச்சென்றார்கள். ஓர் அறையில் உட்கார வைத்து விட்டு, உள்ளே சென்று ஒரு கிண்ணத்தில் தேன் எடுத்து வந்தார்கள்.கூடவே ஒரு கத்தியும்! இரண்டையும் நம் சாது முன்னால் வைத்துவிட்டு," நாங்கள் ஒரு மந்திரம் சொல்லுவோம். அதைச் சொல்லி முடித்தவுடன் நீங்கள் தேனை கத்தியால் தொட்டுத் தொட்டு நாக்கில் தடவி சாப்பிட வேண்டும்.தேன் சாப்பிட்டு முடிக்கும் வரை நாக்கில் ரத்தம் வராமலிருந்தால் உம்மை உண்மையான துறவி என்று ஒப்புக் கொள்ளுவோம்.இல்லாவிட்டால் நீர் போலிச் சன்னியாசி என்று கூறி விடுவோம்.அதுவும் அல்லாமல் அந்தக் கத்தியாலேயே உமது நாக்கை அறுத்து விடுவோம்.என்ன சவாலுக்குத் தயாரா?" என்றனர்.
முதலில் நமது சாதுவுக்குத் தேனை சாப்பிட ஆவல் எழுந்ததாம். அப்புறம்தான் அவருக்குப் புரிந்ததாம், தன் நாக்கை வெட்டிவிட போட்ட சதி என்பது.
உடனே சுதாரித்துக் கொண்டு,"ஹீ..ஹீஈ.நான் ச்சும்மா.. சன்னியாசி யெல்லாம் இல்லை...தேனும் வேண்டாம் கத்தியும் வேண்டாம்" என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தாராம். அங்கே பிடித்த வேகம் மறுபடியும் கொல்கத்தாவில் தன் சகாக்கள் தங்கியுள்ள மடத்திற்கு வந்து சேரும் வரை குறையவில்லையாம்.
"என்ன சுவாமி!ஏன் இப்படி அரக்கப் பரக்க ஓடிவருகிறீர்?"என்று சகாக்கள் கேட்டார்கள்.
தன் வழக்கமான பாணியில்,இழுத்து இழுத்து நடந்ததையெல்லாம் சொன்னார் நமது சாது. "நாக்கு அறுபட்டு இருந்தால் உங்களோடு எல்லாம் நான் எப்படி பேசமுடியும்?"
"உண்மையாகவே உமது நாக்கு வெட்டப் பட்டது என்று நினைத்துக் கொண்டு பேசும் பார்ப்போம்" என்று ஒரு துறவிச் சகோதரர் கேட்டார்.
நமது சாதுவும் வெள்ளந்தியாக நாக்கை உள் நோக்கி மடித்துக்கொண்டு
"அழ்,ழா ழ ழ ழழ்ழ்ழ் க்க்க்க்க்ப்ப்ப்ப்ப்ப்ழ்ழ்ழ்ழ்" என்று உளறிக் கொட்டினாராம்.
கேட்டு மகிழ்ந்த சகோதரத் துறவிகள் வாய்விட்டுச் சிரித்தார்களாம்.
அது முதல் நமது சாது எதிரில் வந்தால் "அழ்,ழா ழ ழ ழழ்ழ்ழ் க்க்க்க்க்ப்ப்ப்ப்ப்ப்ழ்ழ்ழ்ழ்" என்று ஒலி எழுப்புவார்களாம். நமது சாதுவும் அவர்களோடு சேர்ந்து வயிறு குலுஙக சிரிப்பாராம்.
இதில் நமது சாது என்பவர் ஸ்ரீமத் சுவாமி அகண்டானந்தர். ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடித் துறவிச் சீடர்.மற்றவர்கள் அவருடைய 15 சக சன்னியாசிகள்.
ஆக்கம்
கே.முத்துராம கிருஷ்ணன்
லால்குடி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
புகழ் பெற்ற பாடல்கள்
புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன?
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள்தான்!
"கண்கள் இரண்டு இருந்தபோதும் காட்சி ஒன்றுதான்
வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்றுதான்"
என்றார் கவியரசர் கண்ணதாசன்.
இறைவன் ஒருவன்தான்: நாம் அவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம்.
உணவு ஒன்றுதான் - நாம் பலவிதங்களில் பல சுவைகளில் சமைத்து உண்கிறோமே அதைப்போல!
சில பாடல்கள், பாடலின் கருத்து - அமைப்பு, பாடுபவர்,பாவம், உடன் சேர்ந்து ஒலிக்கும் இசைக்கருவிகள், என்று எல்லாம் சேர்ந்து சிறப்பாக அமைந்தால்தான் நம் மனதை ஈர்க்கும். ஆனால் பக்திப்பாடல்களுக்கு அந்த வரைமுறை கிடையாது!
பக்தி ஒன்றுதான் அதற்கு அளவுகோல்!படிக்கும்போதே அது நம் மனதிற்குள் வந்து அமர்ந்துவிடும்!
இப்போது பாடலைப் பாருங்கள்:
காலைத் தொழுதாலும் கந்தாஉன் கையிலிருக்கும்
வேலைத் தொழுதாலும் வேல்கழுவிக் - கால்வழியும்
பாலைத் தொழுதாலும் பாய்ந்துவரும் உன்மயிலின்
வாலைத் தொழுதாலும் வாழ்வு!
- பேராசிரியர், முனைவர் திரு.அர.சிங்காரவடிவேலன் அவர்கள் எழுதி 1973ம் ஆண்டு வெளியிடப்பெற்ற 'செந்தூர் முருகன் அந்தாதி' என்ற 101 வெண்பாக்களைக் கொண்ட நுலில் உள்ள மிகவும் சிறப்பான பாடல்களில் ஒரு பாடல்
அந்த அந்தாதி நூலின் துவக்கப் பாடல்
நாளும் ஒருவெண்பா நான்பாடச் செந்தூரில்
வாழும் முருகா வரமருள்வாய் - சூழும்
திருச்சீர் அலைபோலச் சிந்துதமிழ்ப் பூவால்
அருச்சனைகள் செய்திடவே ஆர்த்து.
சீர், சந்தம், எதுகை மோனை, கருத்து என்று எல்லாமே எவ்வளவு அசத்தலாக இருக்கிறது பார்த்தீர்களா?

லேபிள்கள்:
classroom,
பக்தி மலர்
இருப்பிடம்:
Coimbatore, Tamil Nadu, India
5.5.11
உள்ளாடைத் திருடர்கள்
-----------------------------------------------------------------
உள்ளாடைத் திருடர்கள்
திருடர்களில் பலவகையினர் உள்ளனர், ஜன்னல் கம்பியை வளைத்து
வீடு புகுந்து திருடும் திருடர்களில் இருந்து, வீட்டு மொட்டை மாடியில்
காயப் போட்டிருக்கும் துணிகளைத் திருடிக்கொண்டு போகும்
ஆசாமிகள் வரை பல ரகத்தினர் உள்ளனர்.. அவர்களைப் பற்றிய
செய்தி கீழே உள்ளது
---------------------------------------------------------------------------------------------------------
இப்போது பாடத்தைப் பார்ப்போம்:
ஜோதிடப் பாடங்களைப் படிப்பவர்களில் 4 வகையானவர்கள் இருக்கிறார்கள்.
1. மேலோட்டமாகப் படிப்பவர்கள். நுனிப்புல் மேய்பவர்கள். எழுதும் ஆக்கங்களில் தங்களுக்கான செய்தி ஏதாவது இருக்கிறதா என்று பார்ப்பவர்கள். கொடுக்கப்பட்டுள்ள விதிகளில் (Rules), தங்களின்
ஜாதகத்திற்கு ஏதாவது உள்ளதா என்று பார்ப்பவர்கள். அதாவது லக்கினங்களைப் பற்றிய முழுக் கட்டுரையை மாங்கு மாங்கு
என்று எழுதி 10 பக்க கட்டுரையாகப் பதிவிட்டால், தங்கள் லக்கினம் சம்பந்தப்பட்ட பகுதியை மட்டும் படித்து விட்டு, மற்ற பகுதிகளை விட்டுவிடுவார்கள். வகுப்பறைக்கு வருபவர்களில் 90 சதவிகிதம்
பேர்கள் இப்படிப் பட்டவர்களே!
2. உண்மையிலேயே ஜோதிடத்தின் மீது மதிப்பும், ஆர்வமும்
உள்ளவர்கள். முனைப்புடன் எப்படியாவது ஜோதிடத்தைக்
கற்றுக்கொள்ள வேண்டும் என்று படிப்பவர்கள். ஏறாத விஷயங்களை மீண்டும் மீண்டும் படித்து மனதில் ஏற்றிக் கொள்பவர்கள். இவர்கள்
10 சதவிகிதம் பேர்கள். இவர்களுக்காகத்தான் நான் ஊற்சாகம்
குறையாமல் எழுதுகிறேன்.
3. ஜோதிடம் நன்கு தெரிந்தவர்கள். மேலும் தெளிவு பெற அல்லது
புதிய செய்தி வருகிறதா என்று பார்ப்பதற்காகப் படிப்பவர்கள்.
4. திருடுவதற்கு என்றே வரும் சிலர். இவர்கள் இங்கே எழுதப்படும் ஜோதிடக்கட்டுரைகளை லபக்கிக் கொண்டுபோய் விடுவார்கள்.
ஜேப்படித் திருடன், பர்ஸை அடித்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கியவுடன், பர்ஸில் உள்ள பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை எல்லாம் தெருவோரத்தில் வீசிவிட்டுப் போவதைப்
போல, இவர்கள் கட்டுரையில் உள்ள சுவையான விளக்கங்களை
நீக்கிவிட்டு, அதாவது கை, கால்களை வெட்டிவிட்டு வெறும்
முண்டத்தை மட்டும் கொண்டுபோய் தங்கள் பதிவுகளில் ஒட்டிக்
கொண்டு, தாங்கள் எழுதியதைப் போல பீற்றிக் கொள்வார்கள்.
இவர்கள் மன நோயாளிகள். இவர்களுக்காக நான் எழுதுவதை
நிறுத்தப் போவதில்லை.
துவைத்துக் காயப்போடுவதில் எச்சரிக்கையாக இருக்கலாம்.
திருட்டு போகும் என்று தெரிந்த பின் விலை உயர்ந்த ஆடைகளை
வெட்ட வெளியில் காயப்போடுவதைத் தவிர்க்கலாம். பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே காயப்போட்டுக் கொள்ளலாம். உள்ளாடைகளை
மட்டும் வெளியே காயப் போடலாம்.
அதுபோல நானும் எழுதுவதில் முக்கியமான ஆக்கங்களை எனது
சொந்தத் தளத்தில் (Own web site) எழுதிக்கொண்டு வருகிறேன்.
4 மாதங்களாக அப்படிச் செய்து வருகிறேன். உள்ளாடைகள்
லெவலில் உள்ள கட்டுரைகளை மட்டுமே இங்கே காயப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
இதுவரை 4 ஆண்டுகளில் 420 பாடங்களை இங்கே நடத்தியுள்ளேன். அடிப்படை ஜோதிடத்திற்கு. அது போதும். அதாவது நுனிப்புல்
மேய்வதற்கு அது போதும். உண்மையிலேயே ஜோதிடத்தில்
ஆர்வம் உள்ளவர் களுக்குத்தான் மேல் நிலைப் பாடங்கள் தேவை.
ஆகவே மேல் நிலைப் பாடங்களில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும்
மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் எழுதுங்கள். முழு விவரம் இல்லாமல் வரும்
கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. அத்துடன் அது கட்டண
வகுப்பு. கட்டணம் இல்லா வித்தை பாழ் என்பதற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப் பெற்றுள்ளது. கட்டணம் கட்டிப் படிப்பவர்களுக்கு சில சலுகைகளும் உள்ளது. ஒன்றும் இல்லாமல் கதவைத் திறந்து வைத்தால், அங்கேயும் ஜேப்படித் திருடர்கள் நுழைந்து விடுவார்கள். ஆகவே எச்சரிக்கையாய் இருக்க வேண்டியாதாக உள்ளது சாமிகளா!
அடிப்படை ஜோதிடம் சம்பந்தமாக நிறையப் பாடங்கள் உள்ளன.
அவற்றைத் தொடர்ந்து எழுத உள்ளேன். அவற்றை எல்லாம்
வழக்கம்போல நீங்கள் இங்கேயே படிக்கலாம்.
ஜோதிடம் அனைவருக்கும் பொதுவானதுதான். யாரும் பிறக்கும்
போதே ஜோதிட அறிவுடன் பிறப்பதில்லை. ஜோதிடத்தை வகுத்த
வராஹி மிகிரரும், பராசுரரும், ஜெய்மானி முனிவரும், ஆர்யபட்டரும் பிறக்கும்போதேஜோதிட அறிவுடன் பிறக்கவில்லை. கற்றுத்
தேர்ந்தார்கள். அதுபோல யார் வேண்டுமென்றாலும் கற்றுத்தேரலாம். அதற்குத் தடை இல்லை.
ஒருவன் தான் கற்றுத் தேர்ந்தவற்றை தன் நடையில் தன் மொழியில் எழுதலாம்.. அதைவிடுத்து அடுத்தவன் எழுதியவற்றை, cut & paste முறையில் திருடிக்கொண்டுபோய் உபயோகப் படுத்துவது எந்த வழியில் நியாயம்?
அவர்கள் எல்லாம் துணிகரத் திருடர்கள் அல்ல! கேவலமான துணித் திருடர்கள். காயப் போட்டிருக்கும் துணிகளைத் திருடிக்கொண்டுபோய் பிழைப்பு நடத்துபவர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுக்கிரமகாதிசை
21.4.2011 அன்று சுக்கிரதிசையில் சூரியனின் புத்தியைப் பார்த்தோம். அதேபோல சூரியதிசையில் சுக்கிரனின் புத்தி எப்படி இருக்கும் என்றும் பார்த்தோம். அதற்குப் பிறகு ஜோதிடப் பாடங்களை இங்கே Blogல் எழுதி 15
தினங்களாகி விட்டது.
இன்று சுக்கிர திசையில் சந்திர புத்தி எப்படி இருக்கும் என்று பார்ப்போம்!
நன்மை உடையதாக இல்லை
ஆவானே சுக்கிரதிசை சந்திரபுத்தி
அருளில்லாத மாதமது நாலைந்தாகும்
போவானே அதன்பலனைப் புகழக் கேளு
பொன்பெறுவாள் அன்னையுமே மரணமாவாள்
சாவானே சம்பத்தும் குறைந்து போகும்
சதிரான மனையை விட்டு ஓடிப்போவான்
நோவானே வியாதியது தொடர்ந்து கொல்லும்
நுணுக்கமுள்ள வினைசமயம் நுகருந்தானே
சந்திரதிசையில் சுக்கிர புத்தி
நன்மைகள் உடையதாக இருக்கிறது
கேளப்பா சந்திரதிசை சுக்கிரபுத்தி
கெணிதமுள்ள நாளதுவும் மாதம் நாலைந்து
ஆளப்பா அதன் பலனை சொல்லக்கேளு
அன்பான லட்சுமியுமனுதினமும் நிற்பாள்
வாளப்பா வாகனமும் பொன் முத்து சேரும்
வகையான பூஷணமும் மிகுதியுண்டாம்
கேளப்பா கலியாணங் கெணிதமுடன் நடக்குங்
கெந்தமுடன் சுகந்தங்கள் அணிவான் பாரே!
பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கங்களை எழுதவில்லை
(தொடரும்)

Subscribe to:
Posts (Atom)