+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதல் வணக்கம் யாருக்கு?
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே
புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்
பூச் சொரிந்தே மனம் பாடி வரும்
(முதல்)
சிம்மாசனம் போன்ற மயிலாசனம்
செங்கோலும் அவன் கையில் சிரிக்கின்ற வேல்
அடியார் தம் இதயங்கள் குடி மக்களே
அருளாட்சி எல்லாம் அவன் ஆட்சியே
(முதல்)
முதல் சங்கம் உருவாக மொழியானவன்
இடைச் சங்கம் கவிபாட புகழானவன்
கடைச் சங்க வாழ்வுக்கும் வழியானவன்
கடல் கொண்டும் அழியாத தமிழானவன்
(முதல்)
பாடி அசத்தியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
4.3.11
முதல் வணக்கம் யாருக்கு?
2.3.11
கலக்கலாக ஒரு பதிவு!
கலக்கலாக ஒரு பதிவு!
இளைஞர்கள் மட்டும்தான் கலக்கலாகப் பதிவு எழுத வேண்டுமா? வாத்தியாரும் எழுதுவார்! உங்களுக்காக இன்றையப் பதிவு கலக்கல் பதிவு. படித்துப் பாருங்கள் தெரியும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
--------------------------------------------------------------------------------
அரங்கத்தில் அசத்தலாக நடந்தது
ஒரு பட்டிமன்ற மேடை. நாற்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு அணியின் தலைவர். எதிர் அணியில் அவருடைய சீடர் மக்கள் கவிஞர் அரு.நாகப்பன் அவர்கள். அவர் கவியரசரை விட வயதில் இளையவர்.
பட்டிமன்றத்தலைவர். திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள். தலைப்பு: குடும்பக்கட்டுப்பாடு (தலைப்பை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)
முதலில் பேசிய திரு.அரு.நாகப்பன் சபைத் தலைவருக்குக் கலக்கலாக இப்படி ஒரு வேண்டுகோளை வைத்தார்:
“கவியரசர் கண்ணதாசன் இந்த மேடைக்குச் சம்பந்தமில்லாதவர்.
அவருக்குப் பதினான்கு குழந்தைகள். ஆகவே குடும்பக் கட்டுப்
பாட்டைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதியில்லை. முதலில்
மேடையை விட்டு அவரைக் கீழே இறக்குங்கள்!”
சபை சிரிப்பொலியால் அதிர்ந்தது.
தன்முறை வந்தவுடன் பேச வந்த கவியரசர், “எனக்குப் பதினான்கு
குழந்தைகள் என்பது உண்மை. குடும்பக்கட்டுப்பாட்டின் அருமை
எனக்குத்தான் நன்றாகத் தெரியும். நாகப்பனுக்கு இரண்டே இரண்டு குழந்தைகள்.அவனுக்கு என்ன தெரியும்? ஆகவே அவனுக்குத்தான் தகுதியில்லை. அவனை முதலில் கீழே இறக்குங்கள்” என்று ஒரு
போடு போட்டாரே பார்க்க வேண்டும்.
சபையில் ஆரவாரம் அடங்க ஐந்து நிமிடங்கள் ஆயிற்று!
கவியரசரின் சமயோசித புத்திக்கு இது ஒரு உதாரணம்!
================================================================
கல்லூரி இட்லி!யும், கவியரசர் கண்ணதாசனும்!
கவியரசர் கண்ணதாசன் ஒருமுறை லயோலா கல்லூரியின் தமிழ் மன்றத்தில் உரையாற்றச் சென்றிருந்தார். விழா துவங்குமுன்பாக, மாணவர்கள், கவியரசருக்கு தங்கள் கல்லூரி உணவு விடுதியில் சிறுண்டி வழங்கினார்கள்.
சூடாக இருந்த இட்லியைக் கவியரசர் விரும்பிச் சுவைத்தார்.
மாணவர்களில் ஒருவர்,”ஐயா நீங்கள் எதைப் பற்றியும் கவிதை எழுதுவீர்கள் இல்லையா?” என்று கேட்கவும், கவியரசர், “ஆமாம்’” என்று பதில் சொன்னார்.
உட்னே, அந்த மாணவர், ”எங்கள் விடுதி இட்லியைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்லுங்கள் ஐயா!” என்றார்.
சட்டென்று அடுத்த நொடியே கவியரசர் இப்படிச் சொன்னார்:
“இட்டிலியே ஏன் இளைத்துவிட்டாய்? - எவனை
இங்கே நீ காதலித்தாய்?”
அதுதான் கவியரசர்!
==========================================================
பெரிய திரைச் செய்தி (Cinema News)
சூப்பர் ஸ்டாரின் படங்கள்தான் அதிகப் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படுகின்றன. அதிக அளவில் விளம்பரப்படுத்தப் படுகின்றன.
இந்த வேலையை அந்தக் காலத்தில் The Great திரு.S.S. வாசன் அவர்கள் தான் தயாரித்த படங்களுக்குச் செய்தார். 'சந்திரலேகாவை’யும் 'ஒளவையாரை'யும் மறக்க முடியுமா? அவருக்குச் சொந்தமாக ஜெமினி ஸ்டுடியோவும் ‘ஆனந்த விகடன்’ வார இதழும் இருந்ததால் அவரால் நினைத்ததைச் சாதிக்க முடிந்தது.
ஒளவையார் படத்திற்கு, திருமதி.கே.பி.சுந்தராம்பாள் அவர்களை,
யாரும் நினைத்துப் பார்க்காத தொகையைக் கொடுத்து, சம்மதிக்க
வைத்துப் படத்தில் நடிக்க வைத்ததோடு, புதுமையான முறையில் விளம்பரங்களைச் செய்து, அந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றிப்
படமாக ஆக்கிய பெருமை அவரையே சேரும்!.
இப்போது தொழில் நுட்பம் தெருவிற்கு வந்து விட்டது. அது இல்லாத காலத்திலேயே அவர் ’Multicolor’ நோட்டீஸ் அடித்து வீடு
வீடாகக் கொடுத்து, அத்தனை மக்களையும் பார்க்க வைத்தார்
என்றால் அது இமாலய சாதனை அல்லவா?
திருநெல்வேலி பேலஸ்-டி-வேல்ஸ் திரையரங்கில் அந்தப் படம் வெளிவந்து ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் அவர் வினியோகித்த நோட்டீஸ் ஒன்றை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த நோட்டீஸ் சாமிகளா! அதை மனதில் வையுங்கள்.
அப்போது என் தந்தையார் திருநெல்வேலியில் இருந்தார். அவருடைய பொக்கிஷங்களை குடைந்தபோது, சுவாரசியமாக இருந்தவற்றை
யெல்லாம் எடுத்து வைத்துள்ளேன். அதிலிருந்துதான் இதை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கிப் பாருஙக்ள். படம் பெரிதாகத் தெரியும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கலக்கல் படம் ஒன்று, அடிக்குறிப்புடன்!
வேறு ஒன்றுமில்லை, அண்ணாச்சி உடற்பயிற்சி செய்கிறார்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++வாழ்க வளமுடன்!
1.3.11
Short Story - சிறுகதை: உப்பும் சர்க்கரையும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிறுகதை:
ஒரு மாத இதழுக்காக அடியவன் எழுதிய சிறுகதை இது. இந்த மாதம், அந்த இதழில் இது வெளிவந்துள்ளது. உங்களுக்காக அந்தச் சிறுகதையை இன்று வலையேற்றி யுள்ளேன். படித்து மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------
தலைப்பு: உப்பும் சர்க்கரையும்!
தேனப்ப அண்ணன் நொருங்கிப் போய் உட்கார்ந்திருந்தார். மருத்துவர் விவரிக்க விவரிக்க அவர் மனதிலுள்ள பசுமையான கிளைகள் எல்லாம் ஒவ்வொன்றாக ஒடிந்து விழுந்துகொண்டே இருந்தன. இப்படி
ஒவ்வொருகிளையாக ஒடித்து மொத்த மரத்தையும் மொட்டையாக்கு
வதற்குப் பதிலாக ஒரே போடாகப் போட்டு மரத்தை ஒரேயடியாக
வெட்டிச் சாய்த்திருக்கலாம்.
விதி அப்படிச் செய்யாதே! அதுதானே கஷ்டம்!
மருத்துவர் மெல்லிய குரலில் சொன்னார்:
“நான் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்டுக்கொள்ள வேண்டும்”
“சரி..!”
“அப்பளம், ஊறுகாய் போன்றவற்றை எல்லாம் இனி நீங்கள் தொடவே கூடாது”
“சரி.....!”
“சமையலில் பாதி அளவு உப்பு மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும். இனிப்பு அறவே கூடாது. காப்பி, டீ கூடாது!”
“...............”
“பூமிக்குக் கீழே விளையும் கிழங்கு வகைகள் எதையுமே உண்ணக்கூடாது”
இதை அவர் சொல்லும்போது, உருளைக்கிழங்கு காரக்கறி, உருளைக்
கிழங்கு பொடிமாஸ், உருளைக் கிழங்கு போண்டா, கருணைக்கிழங்கு
கெட்டிக் குழம்பு, கருணைக்கிழங்கு மசியல், சேனைக்கிழங்கு பெரட்டல்
என்று அத்தனையும் மின்னலாக தேனப்பண்ணனின் மனக் கண்ணில்
தோன்றி மறைந்தன.
மருத்துவர் தொடர்ந்து சொன்னார்.
“தெரிந்தோ தெரியாமலோ லிக்கர், சிகரெட், பான்பராக் போன்ற
பழக்கங்கள் இருந்தால், அவற்றை விட்டுவிட வேண்டும். அரிசி
உணவுகளை ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடலாம்.
மற்ற நேரங்களில், கோதுமை,ராகி போன்ற தானியங்களால் செய்த உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். பழங்களில் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் கண்டிப்பாகக்கூடாது. ஆரஞ்சு, சாத்துக்குடி,
தர்ப்பூசணி, பப்பாளி போன்ற பழங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம்...... தேன்குழல், முறுக்கு, அதிரசம், மாவுருண்டை போன்ற பதார்த்தங்கள் கூடாது...குறிப்பாக ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸ் போன்றவைகள் கூடவே கூடாது!”
இவ்வாறாக மருத்துவர் சொல்லிக்கொண்டே போக, தேனப்ப அண்ணனின் மனம் வேடனின் அம்பில் அடிபட்டுக் கீழே விழுந்த புறாவைப் போல துடிக்க ஆரம்பித்தது.
ஆறுமாதங்களுக்கு முன்பு, வங்கிக் குமாஸ்தா வேலையில் இருந்து
ஓய்வு பெற்று, தரை தட்டிய கப்பலாகச் செட்டிநாட்டிலுள்ள தன்
சொந்த வீட்டில் கரை ஒதுங்கியவருக்கு, இதையெல்லாம் கேட்கக்
கேட்க மலைப்பாக இருந்தது.
“பனை ஏறி விழுந்தவனை, கடா ஏறி மிதித்ததுபோல” என்று
கிராமங்களில் சொல்வதைப் போல ஒரே நேரத்தில் இரண்டு அடி விழுந்துள்ளது. அவருக்கு ரத்தக்கொதிப்பு நோயும் வந்துள்ளது.
சர்க்கரை நோயும் உடன் இணைப்பாக வந்துள்ளது.
இறுதியாக மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டுக்களை வாங்கிக்கொண்டு, வடக்குச் சித்திரை வீதியில் உள்ள நகர விடுதிக்குத் திரும்பியவர், ஒரு குவளை தண்ணீரை அருந்திவிட்டு, உள் அரங்கில், தட்டிகளுக்குப் பின்பக்கம் பாயை விரித்து, நீட்டிப் படுத்துவிட்டார்.
+++++++++++++++++++++++++++++++++++++
என்ன வாழ்க்கை இது? உண்ண முடிந்த காலத்தில், தாராளமான பணப்
புழக்கம் இருப்பதில்லை. பணப் புழக்கம் இருக்கும் காலத்தில்
விரும்பியதை உண்ண முடியாமல் பலவிதத் தடைகள்.
இதைத்தான் கவியரசர் கண்ணதாசன் “பாலிருக்கும், பழமிருக்கும், பசியிருக்காது; பஞ்சணையில் காற்றுவரும் தூக்கம் வராது” என்று
கோடிட்டுக் காட்டினாரா?
தேனப்ப அண்ணன் அன்பு, பாசம் மிக்கவர். உறவுகளைப் போற்றுபவர்.
பிறந்தது மட்டும்தான் திருப்பத்தூர் மருத்துவமனையில். மற்றபடி,
வளர்ந்தது, படித்தது, வங்கியில் சேர்ந்தது, தொடர்ந்து வங்கியில்
வேலை பார்த்தது, குப்பை கொட்டியது எல்லாம் மதுரையில்தான்.
அவருடன் பிறந்த மூன்று சகோதரிகள் மதுரையில் இருந்ததாலும்,
மதுரை பிடித்த ஊர் என்பதாலும் மதுரையிலேயே காலத்தைக் கழித்து
விட்டார். ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவர் வேலை பார்த்த
அரசுடமை வங்கியில், கட்டாய ஓய்வு என்ற பெயரில், தோளில்
துண்டைப் போட்டு வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.
ஊருக்கு ஊர் பெட்டி தூக்காமல், மதுரையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக, தேடிவந்த பதவி உயர்வுகளை, வேண்டாமென்று தட்டிக் கழித்ததோடு, ஒரு கிளையில் பத்து வருடங்களுக்குமேல் இருக்கக்
கூடாது என்ற விதிமுறை தலைகாட்டியபோது, மதுரையில் இருந்த
தங்கள் வங்கியின் மற்ற கிளைக்குத் தாவி, மதுரை வாழ்க்கையைத்
தக்க வைத்துக் கொண்டார்.
இரண்டு பெண் குழந்தைகள். அவர்களை, வளர்த்து, படிக்க வைத்து,
திருமணம் செய்துவைத்து ஆளாக்கியதில் சேமித்துவைத்த பணம்,
நகைகள் எல்லாம் கரைந்து போயிற்று. இரண்டாவது பெண்ணின் திருமணத்திற்காக,குடியிருந்த அரசரடி வீட்டையும் விற்கும்படியாகி
விட்டது.
விதி எல்லாவற்றையும் கூட்டித் துடைத்து, மெழுகி சுத்தமாக்கி வைத்துவிட்டது.
“இன்றைய சூழ்நிலையில் இரண்டு குழந்தைகளும் ஆண் குழந்தைகள்
என்றால், வயதான காலத்தில் வரும்படி இருக்கும். இரண்டுமே பெண் குழந்தைகள் என்றால், வயதான காலத்தைக் கடன் இன்றி ஓட்டுவதே
அசுர சாதனையாக இருக்கும்” என்று அவர் அடிக்கடி அங்கலாய்ப்புடன் சொல்வதைப் போலவே எல்லாம் நடந்து கொண்டிருந்தன.
ஆறுதலாக மாதாமாதம் பன்னிரெண்டாயிரம் ரூபாய் ஓய்வூதியத்தொகை (பென்சன்) வருகிறது. அதை வைத்து மிச்சக் காலத்தைக் கழித்துவிடலாம். வீட்டு வாடகை கொடுத்து மதுரையில் எதற்காக இருக்க வேண்டும் என்று
செட்டிநாட்டிலுள்ள தனது வளவு வீட்டிற்குக் குடி பெயர்ந்து விட்டார்.
அவருடைய ஜாதகத்தில் நான்காம் வீட்டில் இருந்து சுகக் கேட்டைக் கொடுத்துக்கொண்டிருந்த ராகு சும்மா விடுமா? அதுவும் கூடவே சென்றது.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஆச்சியின், அதாவது அவரது அன்பு மனைவியின் கர்ப்பப் பையில் பிரச்சினை என்று வந்தபோது, சிகிச்சைக்காக அலைய நேர்ந்தது. செலவை விட்டுத் தள்ளுங்கள். பட்ட மன வேதனையை எங்கே போய்ச் சொல்வது?
இப்போது அவருக்கே சுகக் கேடாகிவிட்டது. தொடர் சளியால், நெஞ்சடைப்பு என்று வைத்தியம் பார்க்க மதுரைக்கு வந்தவருக்கு, காலன் வேறுவிதமாக இரண்டு எச்சரிக்கைச் சீட்டுக்களைக் கொடுத்துவிட்டான்.
எதை வேண்டுமென்றாலும் பொறுத்துக்கொள்ளலாம். சாப்பாட்டில் கையை வைத்த காலனை என்ன செய்தால் தகும்?
உப்பும் கூடாதாம், இனிப்பும் கூடாதாம். அவை இரண்டும் இல்லாமல்
ஏதாவது ருசிப்படுமா? ராகமும் கூடாது, தாளமும் கூடாது என்றால்
எப்படிப் பாடுவது? கோபத்தில் சங்கும், சேகண்டியும்தான் நினைவிற்கு
வந்தன!
ருசியான சாப்பாட்டைக் கைவிடவேண்டிய நிலைமையைத்தான்
அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
நகர விடுதிப் பாயில் புரண்டு புரண்டு படுத்தவருக்கு, தூக்கம் வரவில்லை.
எழுந்து உட்கார்ந்தவர், உள்ளூரிலேயே உள்ள தன்னுடைய மூத்த சகோதரி முத்தாள் ஆச்சியைப் போய்ப் பார்த்துவிட்டு வர முடிவு செய்தார். ஆறுதலாக இருக்கும்.
குளியலறைக்குச் சென்று கை, கால் முகங்களைக் கழுவியவர்,
பெயருக்காகத் தலையை வாரிக்கொண்டு, நெற்றி நிறைய திருநீறையும் பூசிக்கொண்டு, அதைச் செயல் படுத்தவும் துவங்கினார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முத்தாள் ஆச்சிக்குக் கோச்சடை அசோக் நகரில் வீடு. தனியார் பள்ளி
ஒன்றில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவர். தேனப்பண்ணனைவிட பத்து வயது மூத்தவர். செட்டியார் இல்லை. சிவலோகம் சென்றுவிட்டார். ஒரே மகன். மனைவி மக்களுடன் அவன் சிங்கப்பூரில் இருக்கிறான். வருடம் ஒருமுறை வந்துபோவான். ஆச்சி
மட்டும் இங்கே தனியாகத்தான் இருக்கிறார்கள். உதவி மற்றும் பாதுகாப்பிற்கென ஊரில் இருந்து ஒரு பணிப்பெண்னைக் கூட்டிக்
கொண்டு வந்து உடன் வைத்திருக்கிறார்கள்.
தம்பியைப் பார்த்தவுடன் ஆச்சிக்கு மகிழ்ச்சி கொள்ளவில்லை. உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே சென்றவர்கள், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாவை எடுத்துக்கொண்டிபோய், சுடச்சுட நான்கு பணியாரங்களை ஊற்றி
எடுத்துகொண்டுவந்தார்கள்.
கூடவே நடிகை தமன்னா கலரில் வரமிளகாய்ச் சட்னி.
எதிரில் வந்து அமர்ந்த தன் சகோதரியையும், பணியாரத் தட்டையும் மாறி மாறிப் பார்த்த தேனப்பண்ணன் குழுங்கிக் குலுங்கி அழுக ஆரம்பித்து
விட்டார்.
ஆச்சிக்கு ஒன்றும் பிடிபடவில்லை. தன் தம்பியின் கையைப் பிடித்து சமாதானம் சொன்னவர், மெல்லக் கேட்டார்
“என்ன ஆச்சு அப்பச்சி?”
தன் மனக் கலக்கத்தைச் சற்றுத் தள்ளி வைத்துவிட்டு, மருத்துவரிடம்
சென்று வந்ததைத் தன் தம்பி விரிவாகச் சொல்லி முடித்தவுடன், ஆச்சி கேட்டார்கள்.
“கால வினை! இதற்குப் போய் யாராவது அழுவார்களா? அதுவும் பேரன்
பேத்தி எடுத்த நீ அழுகலாமா? யாருக்குத்தான் நோய் நொடிகள் இல்லை.
புள்ளி விவரம் எடுத்தா மதுரையில பாதிப்பேருக்கு உப்பு அல்லது
சர்க்கரை இருக்கும். தெருவுக்குத் தெரு எத்தனை ஆஸ்பத்திரி இருக்கு - பார்த்தா தெரியலையா?”
“நான் நோய்க்காக அழுகவில்லை. நீயும் நானும் சின்ன வயதில் போட்டி போட்டுக் கொண்டு எப்படி சாப்பிடுவோம். பணியாரம் இல்லாமல் ஒரு சாயங்காலப் பொழுதாவது கழிந்திருக்கிறதா? அதை நினைத்தால்தான்
வருத்தமாக இருக்கிறது. இப்ப அந்த சாப்பாட்டுக்கே கேடு வந்துவிட்டதே. அதை நினைத்தால்தான் துக்கமாக இருக்கிறது.”
“வயதானால் தலைமுடி தன் கருமையை இழக்கும். கண் தனது கூர்மையை இழக்கும். அதுபோல நாக்கிற்கும் நாம் கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும். இல்லையென்றால் மொத்த உடம்பையும் நாம் இழக்க நேரிடும். எனக்கும்
கடந்த பத்து ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருக்கிறது. மாத்திரைகளால் அதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறேன். யாருக்கும் தெரியாது. ஏன் உனக்கே கூடத் தெரியாது. வாரம் முழுக்க பத்தியச் சாப்பாடுதான்.
இடையில் ஒரு நாள் மட்டும் ஆசைப் பட்டதைப் பண்ணிச் சாப்பிட்டு
விடுவேன். கூடவே ஒன்றுக்கு இரண்டாக மாத்திரைகளையும் போட்டுக்கொண்டு விடுவேன். ஆண்டவன் கூப்பிடும்வரை காலத்தைத் தள்ளுவோம் என்று தள்ளிக்கொண்டிருக்கிறேன். கவலைப்பட்டு என்ன
ஆகப் போகிறது?”
ஆச்சி சொன்னதை வியப்புடன் கேட்ட தம்பி, மெல்லச் சொன்னார். “ஆச்சி உனக்கு இனிப்பிற்கு மட்டும்தானே கட்டுப்பாடு. உப்பிற்கு இல்லையே?
எனக்கு இரண்டையும் அல்லவா நீக்கச் சொல்கிறார்கள்?”
“நீக்கம் என்று வந்துவிட்ட பிறகு ஒன்றை நீக்கினால் என்ன? இரண்டை நீக்கினால் என்ன? எல்லாம் ஒன்றுதான். உனக்குப் புரியும்படியாகச் சொல்லட்டுமா? வயதான காலத்தில் ஒருவர் செய்யும் சேவைதான்
அவருக்கு உப்பு. செய்யும் தர்மம்தான் அவருக்கு சர்க்கரை!”
பொட்டில் அடித்த மாதிரி இருந்தது தேனப்ப அண்ணனுக்கு!
ஆச்சி தொடர்ந்து சொன்னார்கள்.
"தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
என்று பாரதியார் பாடினார். முப்பது வயதிலேயே அவருக்கு அந்த
ஞானம் வந்தது. அனைவருக்கும் அந்த ஞானம் வரவேண்டும். சின்ன
வயதில் வராவிட்டாலும் அறுபது வயதிலாவது வரவேண்டும். வரா
விட்டால் என்னஆகும்? இப்படித்தான் பல சோதனைகளைக் கொடுத்து ஆண்டவன் நம்மைப் பதப்படுத்துவான். நாம் பதப்படவேண்டும்.”
“.........................”
“நான் தினமும் நூறு ரூபாய்க்குப் பூக்கள் வாங்கிகொண்டு வந்து
மாலைகள் கட்டி பக்கத்தில் உள்ள கோவில்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் திருப்பரங்
குன்றம் முருகன் கோவில் வாசலில் இருக்கும் ஏழை ஜனங்களுக்கு - குறைந்தது இருபத்தைந்து பேர்களுக்காவது அன்னதானம் செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு
இலவசமாக காலையிலும் மாலையிலும் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இது போன்று என்னால் முடிந்த சேவைகளையும், சிறு சிறு தர்ம காரியங்களையும் செய்து கொண்டி ருக்கிறேன். அவைதான் இன்றையத் தேதிக்கு எனக்கு உப்பும் சர்க்கரை
யுமாக இருக்கிறது. வாழ்க்கையும் சுவை குறையாமல் இருக்கிறது.
நீயும் உன்னால் முடிந்ததை அப்படிச்செய். நிஜ உப்பு, சர்க்கரையின்
நினைவே வராது!”
உண்மைதான். ஆச்சி அவர்களின் அனுபவப் பேச்சு, தேனப்ப அண்ணனுக்கு ஆறுதலைக் கொடுத்தது மட்டுமல்ல, அவரது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தையும் துவங்கி வைத்தது.
அடுத்த நாள் தெம்புடன் ஊருக்குத் திரும்பிய தேனப்ப அண்ணன், நகரத்தார் இலவச திருமண சேவை, ஒரு ஓதுவார் உதவியுடன், நகரச் சிவன் கோவிலில் சிறுவர்களுக்கு தேவாரப்பாடல் வகுப்பு, என்று ஒவ்வொன்றாகத்
துவங்கியவர், பிறகு பலவிதமான சேவைகளிலும், உடம்பால் பாடுபடும் பல தர்ம காரியங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
உப்பும் சர்க்கரையும் மொத்தமாக அவரைவிட்டு விடைபெற்றுக்கொண்டு போய்விட்டன. அந்த இடத்தில் சேவையும், தர்மமும் வந்து அமர்ந்து கொண்டுவிட்டன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

Subscribe to:
Posts (Atom)