மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.11.10

இணையத் திருடர்களை என்ன செய்யலாம்?

---------------------------------------------------------------------
 இணையத் திருடர்களை என்ன செய்யலாம்?

அடியவன் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதிவில் எழுதத் துவங்கிய காலத்தில், என் எழுத்தாள நண்பர் ஒருவர் என்னை இப்படி எச்சரித்தார்.

“நீங்கள் பத்திரிக்கையில் செட்டிநாட்டு மண் வாசனைக்கதைகள் எழுதுவதைப்போல, ஜோதிடத்தையும் தனியாக  எழுதி, 'Copy Right’
உரிமைக்குப் பதிவு செய்து புத்தகமாக வெளியிடுங்கள். அதுதான்
நல்லது. இணையத்தில் எழுதினால் அதைத் திருடிக் கொண்டு
போவதற்கு இணையத்தில் நிறையத் திருடர்கள் இருக்கிறார்கள்.
உங்கள் பதிவுகள் திருட்டுப்போகும் அபாயம் உண்டு”

அதற்கு நான் சொன்னேன்:  “என் எண்ணங்களை, என் சிந்தனைகளை, என்னுடைய அறிவை, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில்தான் எழுதுகிறேன். எழுதிய பிறகு அதை ஆவணப் படுத்தும் முகமாக புத்தகங்களாக வெளியிடலாம் என்றுள்ளேன். என் எழுத்துக்கள் தனிதன்மை வாய்ந்தவை. நான்  என் ஸ்டைலில் எழுத உள்ளேன். அதைத் திருடுபவர்கள் மாட்டிக்கொண்டு விடுவார்கள்.”

ஒருபக்கம், இரு பக்கம் திருட்டுப்போனால் பரவாயில்லை. ஒட்டு மொத்தமாக வகுப்பறையில் எழுதப்பெற்ற  பாடங்கள் அனைத்தையும் ஒருவர் திருடி, தான் எழுதியதைப்போல பதிவிட்டுள்ளார். தொடர்ந்து செய்தும்  வருகிறார். அவர் பல ஜோதிட மென்பொருள்களை தான் தயார் செய்து விற்பதாகவும் தன் விலை விபரங்களையும்  எழுதியுள்ளார். அவைகளை அவர் தயார் செய்தாரா அல்லது அவைகளும் இதுபோலத் திருடப்பெற்ற  மென்பொருட்களா? கடவுளுக்கே வெளிச்சம். அவைகள் கிடக்கட்டும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

நம் வகுப்பறையில்  ‘பின் தொடர்பவர்கள்’ இன்றையத் தேதியில்
1,937 பேர்கள் இருக்கிறார்கள். அதுதவிர கூகுள்  ரீடர் வழியாகப்
படிப்பவர்கள் எண்ணிக்கை தெரியாது. மாதம் சராசரியாக ஒரு லட்சம்
ஹிட்ஸ் விழுகிறது. எவர் திருடி பதிவிட்டாலும், அவர்கள் 
கண்ணிலிருந்து எவரும் தப்ப முடியாது.

என் பதிவுகள் திருடப்பெற்றுப் பதிவிடுவதை, நம் வகுப்பு மாணவக் கண்மணி ஒருவர் மின்னஞ்சல் மூலம் எனக்குத் தெரியப்படுத்தியிருந்தார். அதைக் கீழே கொடுத்துள்ளேன். அவருக்கு என் நன்றி

------------------------------------------------------------------------------------
from    DHANA SEKARAN
to    classroom2007@gmail.com
date    9 November 2010 17:37
subject    வகுப்பறை மாணவன்
mailed-by    gmail.com
Signed by    gmail.com

ஐயா!
    வணக்கம் தாங்கள் வகுப்பறையில் நடத்தும் பாடங்கள்  இந்த தளத்தில் உள்ளது. .

(psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=6237) நீங்கள் கவனித்து நடவடிக்கை
எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி!
------------------------------------------------------------------------------------
நானும் சென்று பார்த்தேன். அதற்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்களும் சென்று பாருங்கள்


சுட்டி இங்கே!


நமது வகுப்பறையில் இருந்து கிட்டத்தட்ட அத்தனை பக்கங்களும் திருடப்பெற்று, அந்தத் தளத்தில் பதிவிடப்பெற்றுள்ளது. 1370 பிரிவுகளாகப் பதிவிடப்பெற்றுள்ளது. அத்தனையும் 16.8.2010 அன்று  வலையேற்றப் பெற்றுள்ளது. அத்தனை பக்கங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக வலையேற்றாமல், ஒட்டு மொத்தமாக பதிவில் ஏற்றப்பெற்றிருக்கிறது. அத்தனையும் copy & paste முறையில் பதிவிடப்பெற்றுள்ளது. சுமார் 2,000
பக்கங்கள் இருக்கலாம்.

நோகாமல் நொங்கு தின்பது இதுதான்!

இதைத் திருட்டு என்பதைவிடக் ‘கொள்ளை’ என்று சொல்லலாம்.

எனது எழுத்துக்கள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக சில பகுதிகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சிவப்பு நிறத்தில்  கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

நீங்களும் சென்று பாருங்கள்.

கேள்வி 1: ‘திருடப்பெற்ற பகுதிகள் அனைத்தும் அந்தத் தளத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதற்கு என்ன  செய்யலாம்?

கேள்வி 2: இனி எழுத உள்ள பாடங்கள் அனைத்தும் மேல் நிலைப் பாடங்கள். precise lessons அவைகள்  இதுபோல  திருடப்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

உங்கள் மேலான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன!’

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படங்களின் மீது கர்சரைவைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும் 


1

2

3


4

5

6


7

8
--------------------------------------------------------------------------------------
அததனை பதிவுகளும் 16.08.2010ல் பதிவிடப்பெற்றுள்ளதைக் கவனியுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

-----------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------
என் பெயர் கோவிந்தன் நேரம் கிடைக்கும்போது, இந்த முகவரிப் பக்கம் பூர்த்தியாகும் என்று குறிபிட்டுள்ளார். சுமார் 2,000 பக்கங்களைக் காப்பியடித்துப் பதிவு செய்தவர், இததனை மென்பொருட்களை விற்பவர், தன் முகவரியை மட்டும் ஏன் கொடுக்கவில்லை? பெயரும் உண்மைதானா? இல்லை அதுவும் பொய்யா என்பது தெரியவில்லை.

அலைபேசி எண் கொடுக்கப்பெற்றுள்ளது. 88709 - 74887 (ஏர்டெல் நம்பர்). மூன்று முறை முயன்றேன் ஸ்விட்சிடு ஆஃப் என்று வருகிறது. அந்த எண்ணைவைத்து அவரைப்பிடிப்பது ஒன்றும் சிரமம் இல்லை. அதற்கு வழி இருக்கிறது. அதை இப்போது சொல்ல விரும்பவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

11.11.10

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எட்டு விதிமுறைகள்!



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மகிழ்ச்சிக்கான எட்டு விதிமுறைகள்.
பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான திருவாளர்
குஷ்வந்த் சிங் அவர்கள் மகிழ்சிக்கான எட்டு விதிமுறைகளைச் சொல்லியிருக்கிறார். உங்கள் பார்வைக்காக அதைப் பதிவில்
ஏற்றியுள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள்.

மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. தனித்தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும்! இது இறக்கு மதிச் சரக்கு.
மின்னஞ்சலில் வந்தது!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
One on the most convincing pieces on happiness

Khushwant Singh at his best. The rationale applied to each preference is
absolutely top class.

EIGHT CLUES TO HAPPINESS
By- KHUSHWANT SINGH

Having lived a reasonably contented life, I was musing over what a person should
strive for to achieve happiness. I drew up a list of a few essentials which I
put forward for the readers' appraisal.

1. First and foremost is GOOD HEALTH. If you do not enjoy good health you can
never be happy. Any ailment, however trivial, will deduct from your happiness.

2. Second, A HEALTHY BANK BALANCE. It need not run into crores but should be
enough to provide for creature comforts and something to spare for recreation,
like eating out, going to the pictures, travelling or going on holidays on the
hills or by the sea. Shortage of money can be only demoralizing. Living on
credit or borrowing is demeaning and lowers one in one's own eyes.

3. Third, A HOME OF YOUR OWN. Rented premises can never give you the snug
feeling of a nest which is yours for keeps that a home provides: if it has a
garden space, all the better. Plant your own trees and flowers, see them grow
and blossom, cultivate a sense of kinship with them.

4. Fourth, AN UNDERSTANDING COMPANION, be it your spouse or a friend. If there
are too many misunderstandings, they will rob you of your peace of mind. It is
better to be divorced than to bicker all the time.

5. Fifth, ENVY towards those who have done better than you in life; risen
higher, made more money, or earned more fame. Envy can be very corroding;
avoid comparing yourself with others.

6. Sixth, DO NOT ALLOW OTHER PEOPLE to descend on you for gup-shup.
By the time you get rid of them, you will feel exhausted and poisoned
by their gossip-mongering.

7. Seventh, CULTIVATE SOME HOBBIES which can bring you a sense of
fulfillment, such as gardening, reading, writing, painting, playing or listening
to music. Going to clubs or parties to get free drinks or to meet
celebrities is criminal waste of time.

8. Eighth, every morning and evening, devote 15 minutes to
INTROSPECTION. In the morning, 10 minutes should be spent on stilling
the mind and then five in listing things you have to do that day. In the
evening, five minutes to still the mind again, and ten to go over what
you had undertaken to do.

RICHNESS is not Earning More, Spending More Or Saving More, but ...
"RICHNESS IS WHEN YOU NEED NO MORE"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செட்டிநாட்டில் நிறையத் திருமணங்கள். வாத்தியார், 
காரைக்குடிக்குப் பயணம். 3 நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை. 
அடுத்த பாடம் திங்கட்கிழமையன்று  வெளிவரும். 
அதுவரை பழைய பாடங்களைப் (மொத்தம் 400க்கும் மேல் 
உள்ளது) புரட்டிப் படிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

7.11.10

என்னைக்கோ ஒருநாள் எனும்போது, அது தப்பில்லை!

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 என்னைக்கோ ஒருநாள் எனும்போது, அது தப்பில்லை!

    என்னென்னவோ நினைத்த வண்ணம் அந்த ஜப்பானியப் பாட்டு கேட்க, கேட்க ஒரு வித்தியாசமான உணர்வை எழுப்பியது..flute சவுண்ட் ரொம்பவே சலனத்தை உண்டுபண்ணியது..

    என்னதான் வேற்றுமொழிப் பாடல்கள் மனத்தைக் கவர்ந்தாலும் பொருள் புரியாமல் என்னதான் சொல்கிறார்கள் என்று சுத்தமாகப் புரியாமல் பெரும் அவஸ்தைதான்..இருந்த போதிலும் எனக்கு ரங்கீலாவில் 'ஹாய் ராம்' பாடல் இதயத்தைக் கசக்கிப் பிழியும் அளவுக்கு உணர்ச்சி வேகத்தை ஊட்டும்..

    எதை அர்த்தமாக உள்ளடக்கியது என்பது படத்தில் பார்க்கும் போது உடலையே முறுக்கித் துவட்டி அடிக்கும் விதமான ஜாக்கி ஷெராப் ஊர்மிளா நடன மூவ்மென்ட்டுகள்  என்று படமாகப் பார்த்தாலுமே மொழி புரியாமல் என்ன சொல்லப் படுகிறது என்பது புரியாமல் கண்ணைத் திறந்து காட்டில் விட்டாலுமே காம்பஸ் இல்லாமல் வடக்கு தெற்கு தெரியாத கதைதான்..

    அதனால்  பாடல்கள்..என்றாலே தமிழ்ப் பாடல்கள்தான் என்றாகிப் போனது..

    எனக்குப் பிடித்த குரல் என்றால் அது ஜானகிதான்..

    ரொம்பப் பிடித்தது என்றால் அது ஜென்சி தான்!

    இவளது குரலோ சைலஜாவை ஒத்திருந்தது..இனிமைதான் என்றாலும் சின்னதாக கீச்சுக் குரலாகிப் போனது கொஞ்சம் மெருகூட்டத்தவறியது..  இந்த அழகுக்கு குரல் சரியாகப் பொருந்தி இருக்கவில்லையோ என்றே நினைக்கத் தோன்றியது..இந்த உலகத்தில் நாம் நினைத்தது போலவே எல்லாம் படைக்கப்பட்டிருக்கிறதா என்ன? எங்கே சுற்றினாலும் அவரின் நினைவுகளே மையம் கொண்டு அதைச் சுற்றியே நினைப்பு போவதுதான் ஆச்சரியம்..

    கன்னங்களில்  விழுந்து புரளும் செங்குழல் கற்றைகளை அலட்சியமாக தலையைக் குலுக்கி சரிசெய்து கொள்ளும் அவளின் மேனரிசம் மனதில் வந்து வந்து போனது..அவளின் இந்தக் குலுக்கலுக்கு ட்யூன் போடுவது போல அசைந்தாடிய காதில் மாட்டிய பெரிய சைஸ் வளையங்கள்   அவளது தலைக் குலுக்கலுக்குப்  பின்னும் சில நொடிகளைக் கொன்ற பின்பே ஓய்வுக்குத் திரும்பின...பிரவுன் நிற கண்கள் உயிர்த்துடிப்புடன்  ஏதேதோ தகவல்களை எனக்குப் பகிர்வதாகவே பட்டது அவளுடன் இருந்த கணங்களில்..

    முதல்தடவை சந்தித்துப் பேசும்போது அவளின் கண்களை அல்லது புருவமத்தியை மட்டுமே பார்த்துப் பேசுவதுதான் பண்பு என்று எவ்வளவுதான் நான் எச்சரிக்கையாக இருந்தபோதிலுமே என்னையும் அறியாமல்  அவள் அவ்வபோது தன் செவ்விதழ்களை நாவினால் ஈரப்படுத்தியதைக் கவனிக்கத் தவறவில்லை..அவளும் கவனித்திருப்பாளோ? இவன் ஒரு ஜொள்ளு பார்ட்டி என்று ஏதும் நம்மைப் பற்றி நினைத்திருப்பாளோ? கழுத்துக்குக் கீழே பார்க்காமல் பண்புடன்தானே நடந்துகொண்டோம்..

    பெண் நாகத்துக்கென்று மாதவி போன்ற சிலமுகவெட்டுக்களைத்தேர்ந்தேடுத்து தமிழ் சினிமா ஏற்படுத்தியிருந்த தாக்கத்தில் அப்படியொரு முகவெட்டை இவளிடம் கண்டு அதில் நாகத்தின் வேகம் சீறலாய் அவள் முகத்திலும் கண்களிலும் பொதிந்து கிடந்ததாய் உணர்ந்தேன்..செதுக்கிய கன்னக் கதுப்புகளில் மெலிதாக இழைந்திருந்த சிவப்பு ஷேட் அவளது நிறத்துக்கு மேலும் ஒரு கலர் ஷேட் தேவைதானா என்றே அங்கலாய்க்க வைத்தது..அதிலும்  ரெஸ்டாரெண்டின் சற்றே மஞ்சள் கலந்த மங்கிய வெளிச்சத்தில்  இந்த கலர்ஷேட் கொஞ்சம் பிரமிப்பையே கொடுத்தது என்றால் அது மிகையாகாது!

    என்னவென்று ஊகிக்க முடியாத ஒரு brand perfume சுகந்தமணம் நாசியை வருடியவண்ணம் கிறங்கடித்திருக்க, பேக்ரௌண்டில் லைட் மியூசிக் வேறு..மொத்தத்தில் வேறு ஏதோ உலகத்தில் இருப்பதைப் போன்றதொரு ரம்மியமான சூழலைத் தோற்றுவித்திருந்தது.பேச்சும் வேறு சுவாரஷ்யத்தினைக் கூட்டியிருக்க தன்னை மறந்து லயித்து இப்படி நேரம் போனதே தெரியாமல் கட்டுண்டு கிடப்பதைத்தான் எனக்கே தெரியாமல் என்னுள் புகுந்து வசியம் செய்வது என்று சொல்கிறார்களோ?  

    இந்த கணங்களுக்காக கொஞ்சம் பணம், நேரம் தொலைந்தால்தான் என்ன? வாழ்க்கை  ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது விஷயங்களாலேயே பொலிவு பெறுகிறது..அந்த வகையில் இன்று இவளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுக்கு ஒரு சின்னதா சந்தோஷப்படுறதை வுட்டுட்டு ஏன் ரூமுக்குத் திரும்பிப் போக முடியலையேன்னு நினைச்சு வருத்தப் படணும்?

    ஒகே..லீவ் இட்.. நேரமாயிடுச்சு..என்ன பண்ணலாம்?..மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்க..இரவு நேரத்து காற்று சில்லிப்பைக் கூட்டியிருந்தது..இவ்வளோ நேரம் மக்டொனல்ட்ஸ்லே கதையடிச்சுக்கிட்டு இருந்ததாலே ஏர் கண்டிசன் செட்டப்பிலே குளிர் தெரியலே..சீக்கிரமே வீட்டுத் திரும்பிடுவோமின்னு நினைச்சு ஓவர்கோட் வேற இல்லாமே வந்தாச்சு..

    சரிதான்..என்னிக்கோ ஒரு நாள்..இப்பிடி..வித்தியாசமான அனுபவ லிஸ்டில் இதையும் சேர்த்துட வேண்டியதுதான்..

    யோசித்தவாறே நடந்து கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தபோது ஸ்டேஷனிலிருந்து  கொஞ்சம் தூரமாகவே வந்து விட்டிருந்தேன் என்று புரிந்தது..

    சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் சற்று தூரத்தில் ஏதோ ஆட்டோமாடிக் வெண்டிங் மெஷின் கண்ணில் பட்டது..  குளிருக்கு இதமா ஏதும் ட்ரிங்க்ஸ் இருக்கான்னு பாக்கலாம்..கிட்டே நெருங்கிப் பார்த்தால் சிகரட் வெண்டிங் மெஷின் ..ஆகா... ரொம்ப நாளாச்சு.. நிப்பாட்டி..  இருந்தாலும் இப்போ மூடுக்கு அடிக்கணும்போல தோணுது..என்ன யோசனை..எப்போவோ ஒரு நாள் அடிக்குறதுலே அப்பிடி என்னதான் ஆகிடப் போகுது ...ம்ம்ம் ..சரிதான்..

    மூணு நூறு yen சில்லறை காய்ன் எடுத்து காய்ன்  ஸ்லாட்டில் போட்டு பட்டனை அழுத்த ஒரு parliyament சிகரட் பாக்கெட் வந்து விழுந்தது..எப்போவுமே லைட்டர் பர்ஸ்லேயே வெச்சுருக்குறதாலே வசதியாப் போச்சு..எடுத்து ஒரு சிகரெட்டை வாயில் வெச்சு பத்தவெச்சேன்..லேசா ஒரு இழுப்பு இழுத்து கொஞ்ச நேரம் உள்ளடக்கி குளிருக்கு இதமா உணர்ந்தபோது லேசா தலைக்கு கொஞ்சம் தூக்கலாத் தெரிய ரொம்ப நாளா அடிக்காம இருந்துட்டு அடிக்கும்போது இப்படித்தான் இருக்கும்னு உணர்ந்தேன்..நிதானமா அடுத்த ' பஃப் ' இழுத்து விட்டபடியே அங்குமிங்கும் நோட்டமிட்டேன்..ரோட்டோரம் ஒரு பாறை கண்ணில் பட அதில் சென்று சாய்ந்தவாறு உட்கார்ந்தேன்..இந்தப் பக்கம் அவ்வளவாக ஆட்கள் நடமாட்டமில்லை..பத்து மணிக்கெல்லாம் மக்கள் புழக்கம் குறைந்து விட்டது..சனிக் கிழமை என்றால் நைட் அக்டிவிடீஸ் அதிகமா இருக்கும்..இன்னிக்கு வெள்ளிக் கிழமைங்குறதாலே ஒருவேளை ஊரடங்கிப் போச்சோ? வலது பக்கம் பிரிந்தசந்தில் இருந்து ஏதோ சத்தமாகப் பேசிச் சிரித்தபடியே நாலு பேர் கடந்து போனார்கள்..அவர்களில் ஒரு சின்ன வயசுப்பெண்வேறு  ..குடித்திருப் பார்கள் போல..நடை காட்டிக் கொடுத்தது..சந்தை எட்டிப் பார்த்தேன்..நைட்க்ளப் போல..பூசணிக்காய் சைசில் சிவப்பு  லைட் தொங்க விட்டிருந்தார்கள்...

    மேலே ஆகாயம்.. நிச்சலனமாக அதிக வெளிச்சமுமில்லாமல் அதேநேரம்.. கும்மிருட்டுமில்லை .நிலா ..எங்கே..என்று தேடித் பார்த்தேன்..எனக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தது ..கழுத்தைத் திருப்பிப் பார்க்க சிரமாயிருந்ததால் பாறையில் கொஞ்சம் மேலேறி அண்ணாந்து வானத்தைப் பார்த்தவண்ணம் படுத்தேன்..பாறையின் மேடு பள்ளங்கள் முதுகில் அழுத்த கொஞ்சம் அப்படி இப்படி புரண்டு ஓரளவுக்கு வசதியாக படுத்த வண்ணம் அடுத்த ' பஃப் ' இழுத்து விட்டேன்..நிம்மதின்னா..இதுதான்..

    iPod தேடி எடுத்து பிளேலிஸ்டில் தேடி 70 எவர்கிரீன் ஹிட்சில் துழாவி..' வெள்ளி நிலாவினிலே..தமிழ் வீணை வந்தது..அது பாடும் ராகம்.. நீ ராஜா..' என்ற 'சொன்னது நீதானா' படத்து ஜெயச்சந்திரன்  பாட்டை செலக்ட் செய்து  ஹெட் செட்டைக்  செருகி மெல்லிய சத்தத்தில் இன்பத்தேனை புகவிட்டபடி இன்னும் சற்று ரிலாக்ஸ்ஸாக  அசைந்து படுத்தேன்..ஆங்காங்கே விண்மீன்களை அள்ளித் தெளித்து..கருநீலவானம்..  தேங்காய்க் கீற்று  போலே..சின்னதாய்..வெள்ளி நிலா...இன்னும் தூரத்தில் ஒரு புள்ளி 'ப்ளின்க்' ஆகிக் கொண்டிருப்பது தெரிந்தது..கூர்ந்து கவனித்த போது  இன்னும் சரியான உயரத்தில் ஏதோ மெதுவாக ஊர்ந்து செல்லும் சிறு புள்ளியான வெளிச்சம் தெரிந்தது..இது ஏதும் ஸ்பேஸ்க்ரேப்ட் ஆக இருக்குமோ? இவ்வளவு உயரத்துக்கு பிளைட் போகாதோ?என்று சந்தேகம் தோன்றியது..இது சின்ன வயசுலேருந்தே தோணுகிற சந்தேகம்தான்..இன்னிக்கும் தோணியது.. பெரிசும் சிறுசுமாக எண்ணிக்கையிலடங்காத விண்மீன்கள் கூட்டம்.. என்ன ஒரு அருமையான சூழல்..வெட்டவெளி..இப்படி..இயற்கையை அனுபவிப்பதற்கு மேலே ஆகாயத்தில் வேறு சொர்க்கம் இருக்கிறதா என்ன? உளறுகிறார்கள் மடையர்கள் என்று தோன்றியது..

    ஷூவில் ஏதோ தட்டுப்பட கொஞ்சம் சுதாரித்து எழுந்தவாறு பார்த்தால் யாரோ ஒரு ஆளின் தலை கண்ணில் பட்டது..யாரிவன்? எதற்கு நம்மை எழுப்புகிறான்? என்று குழப்பத்துடன் சற்று மிரட்சியுடனும் பாறையி லேருந்து இறங்கினாலும் அவன் ஏதோ சொல்கிறான் எனக்குத்தான் கேட்கவில்லை..என்று புரிந்து ஹெட்செட்டைக் கழட்டி என்ன? என்றொரு பார்வை பார்த்தேன்..'பாபுஜி' என்று வணக்கம் சொல்லும் தோரணையில் தலையை குனியும் இவன் முகத்தின் அந்தப் பக்கத்துக்கு கொஞ்சம் வெளிச்சம் பட்டுக்கொண்டிருந்ததால் அந்தப் பக்கமாய் நகர்ந்து  பார்த்தபோதுதான் நீக்ரோ என்பது புரிந்தது..சுருள் முடியுடன் முரட்டு ஆளாய்த் தெரிந்தான்..காந்தியின் நேட்டால் சேவை..இங்கும் இந்தியனைக் கண்டால் 'பாபுஜி' என்றே கூப்பிடுகிறார்கள் இவர்கள்..

    'என்ன வேண்டும்' என்றேன்..

    'ரெகுலர் சிஸ்டம் 2 ஹவர்ஸ்..7000 yen தான்..இன்னிக்கு அதிகம் கூட்டமில்லை..அதுனாலே 5000 yen தான் .நைட்டு முழுசுமே தங்கிக்குங்க..ட்ரிங்க்ஸ் எவ்வளோ வேணும்னாலும் குடிச்சுக்கலாம்..20 வயசுப் பொண்ணுங் கதான் சப்ளையர்ஸ்...பட் ஒன் கண்டிஷன்..தொடக் கூடாது..பேசிட்டே இருக்கலாம்..நீங்களே யார் வேணுமின்னு  செலக்ட் பண்ணிக்கலாம்..பொண்ணுங்களுக்கு ட்ரிங்க்ஸ் ஆர்டர் பண்ணுணீங்கன்னா அதுக்குத்  தனி  பில்.'னு

    மெனு கார்டு அயிட்டமா லிஸ்டை நீட்டி வாசித்தான்..பக்கத்து சந்து க்ளப்பைக் கையை காட்டி.ஆள் பிடிக்கும் வேலை பார்ப்பான் போலே..

    'உன்னை யாரு இதெல்லாம் இப்போ கேட்டா? நான் அதுக்காக வரலை..நீ வேற ஆளைப் பாரு..எனக்கு இதெல்லாம் பழக்கமில்லே..' என்று சொன்னாலும் அவன் விடுவதாக இல்லை..

    'பாபுஜி..பாபுஜி..இன்னிக்கு ஒரே தரம்..ஜஸ்ட் வந்து ஒரு ட்ரையல் பாருங்க..உங்களுக்குப் புடிச்சிருந்தா continue பண்ணலாம்..இல்லேன்னா வேணாம்..உங்க விருப்பம்தான்..'

    கொஞ்சம் சபலப்பட்டால் அவ்வளோதான் 'யப்பா..நீ..ஆளை விடு.. எனக்கு வேற வேலை இருக்கு'ன்னு உர்ருன்னு மூஞ்சியைக்காமித்தபடியே விருட்டென்று நடையைக் கட்டினேன்..

    மனுஷன் கொஞ்ச நேரம் நிம்மதியாய்ப் படுக்க முடியலியே..இவனுங்க தொல்லை பெரும் தொல்லை யாயில்லே இருக்கு..ஏரியாவையே குத்தகைக்கு எடுத்துருப்பானுங்க போலருக்கே?

    மொத்தமா சுருட்டிட்டுதான் விடுவானுங்க போலருக்கே..இது ஒரு பொழப்புன்னு கிளம்பிடுறானுங்க திட்டியபடியே..இன்னொரு சிகரெட் எடுத்துப் பத்தவெச்சேன்..காரணமேயில்லாமல் டென்சன் ஏறி கொஞ்சம் படபடப்பாக இருந்தது..சிகரெட் இழுத்தால் வேறு ஏதோ கருகின பொசுங்கின வாடை புகையாக வாய்க்குள் புகுந்தது

    என்ன என்று பார்த்தால் பில்ட்டர் சைடை பத்த வெச்சு விட்டேன்..ச்சே..டென்சனில் என்னதான் பண்றோமுன்னு நிலை தடுமாறிப் போகுது..தூக்கிப் போட்டுவிட்டு வேறு ஒண்ணை எடுத்து கவனமாப் பத்தவெச்சேன்.. நாம கேக்காமே இவனா வந்து ஏன் இதெல்லாம் நம்மகிட்டே சொல்றான்..என்னதான் பதில் சொன்னாலும் லேசுல வுடமாட்டேங்குறானே? நாமில்ல ஏதோ தப்புப் பண்ணிட்டப்போலே அந்த இடத்தைக் காலி பண்ணி நகர்ந்தாப் போதும்னு ஓடியார்ர மாதிரி ஆகிடுச்சு..வெக்கங்கெட்டவன் ..கொஞ்சம் அசந்து அவன்கூடவே போயிப் பார்த்திருந்தால் என்னா ஆயிருந்திருக்கும்?

    நமக்குத்தான் இது புதுசு..ஸீன் போடுறோம்..அவனவன் போயிட்டு வந்துட்டுத்தானே இருக்கான்..?இந்த நாட்டுலே இதெல்லாம் சர்வ சாதாரணம்..நல்ல வேளை.. இத்தோட போச்சு..வேறு மாதிரி இடமா இருந்தால் வேற என்னத்துக்கெல்லாம் கூப்டுவானுங்களோ? இப்பிடியே பலதுமாய் எண்ணவோட்டத்தின் அலைவேகம் எகிறி டர்புலேன்ட் ஆகிப் போனது. சற்று முன் படுத்து ஆகாயத்தப் பார்த்து 'இதைவிட சொர்க்கம் வேறு உண்டா?' ன்னு கேட்டதுக்குத்தான் பதில் சொல்லும் விதமாய் இவன் வந்து 'இன்னிக்கு நைட் கிளப்புக்கு வந்து பாரு'ன்னு  வந்துருப்பானோ? வேகவேகமாக டென்சனில் இழுத்த இழுப்பில் சிகரெட் காலியாகிப்கியிருந்தது..இன்னொண்ணு பத்தவெச்சே ஆகணுமுன்னு ஏதோ ஒரு வேகம்..அடுத்ததைப் பத்த வெச்சேன்..தண்ணீர் தாகம் எடுத்து தொண்டை வறட்சியாய் அங்குமிங்கும் ஆட்டோமாடிக் வெண்டிங் மெஷின் இருக்கான்னு  பார்த்தபடியே வேகம் வேகமாய் நடையைக் கட்டினேன்..

    பாட்டு கேட்டால் கொஞ்சம் படபடப்பு அடங்கும்..iPod  எடுத்து randomமாய் பாட்டைப் போட்டால்...

    'கண் போன போக்கிலே கால் போகலாமா?
    கால் போன போக்கிலே மனம் போகலாமா?
    மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?'
பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.
  
    ஆக்கம்: நெப்போலியன் ஞானப்பிரகாசம், டோக்கியோ, ஜப்பான்.

 மைனரின் எழில் மிகு தோற்றம். 
மைனர் புதிதாக ஒரு படத்தை அனுப்பி வைக்கும்வரை 
இந்தப்படம்தான் பதிவில் வரும். பொறுத்துக்கொள்க!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===


வாழ்க வளமுடன்!''''