++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பீதியைக் கிளப்பும் உண்மைக் கதை!
.......................................................................................
06.11.2010 சனிக்கிழமை
இன்றைய இளைஞர் மலரை நமது வகுப்பறை மாணவி ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள். அவரின் பெயர் பதிவின் இறுதி வரியில் உள்ளது!
------------------------------------------------------------------------
Over to her posting!
___________________________________________
அத்வானக்காட்டில் சிகப்பு ரோஜாவும், மல்லிகையின் வாசமும்!
டிஸ்கி 1: இது ஒரு சம்பவத்தைப் பற்றியது. இதுல முழுக்க முழுக்க என் சித்தி சொன்னதை எந்த மிகைப்படுத்தலும் இல்லாம சொல்லிருக்கேன்.
டிஸ்கி 2: இதப் படிச்சுட்டு இதெல்லாம் சுத்த ஹம்பக், நாங்க நம்ப மாட்டோம்னு யாரும் சொல்ல வேண்டாம். உங்களுக்கு வேணும்னா அந்த இடத்தோட விலாசம் தரேன். கொஞ்சம் செலவு பண்ணி ஒரு தடவை போய்ப் பார்த்துட்டு, எது பேசறதா இருந்தாலும் அதுக்கப்புறமா பேசுங்க.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனிமே என் சித்தி எழுதறாங்க, சரியா?
சென்னைலேர்ந்து பெங்களூர் போற பேருந்துல நான், என் தங்கை, அவங்க பையன், பெண், என் தம்பி எல்லோரும் போய்க்கிட்டிருந்தோம். இருட்டத்தொடங்கிவிட்டது. பார்க்கற எல்லாமே கொஞ்சம் மங்கலாத்தெரியுது. வழில ஒரு இடத்துல பேருந்தைக் கொஞ்ச நேரம் நிறுத்தினாங்க. நாங்க எல்லோரும் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு உட்கார்ந்திருந்தோம்.
அப்ப என் தங்கை எனக்கு ஒரே கசகசன்னு இருக்கு, இங்க எங்கியாவது தண்ணீர் கிடைச்சா முகத்தை அலம்பிக்கலாம்னு சொல்லவும் எங்களுக்கும் கொஞ்சம் காத்தாட நடந்துட்டு வரலாம்னு தோணிச்சு. சரின்னு என் தம்பியைத் தவிர மீதி பேர் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். அந்த இடம் ஏதோ ஒரு அத்வானக்காடு மாதிரி இருந்தது. கொஞ்ச தூரம் போனதுக்கப்புறம் ஒரு பெரிய வீடு தெரிந்தது. வழில எங்கயும் தண்ணீர் கிடைக்கல. தங்கை உடனே அந்த வீட்டுல போய்க்கேப்போம்னு சொல்லவும் நாங்களும் கூட போனோம். வெளில யாரும் காவலுக்கு இருக்கற மாதிரி தெரியல. சரி உள்ளே போய்ப் பார்ப்போம்னு போனா 'சந்திரமுகி'ல வர பேய் வீடு மாதிரி இருந்தது. வெளித்தோட்டத்துல யாராவது இருப்பாங்கன்னு நினைச்சுட்டு கொஞ்ச தூரம் உள்ளே போனோம்.
நாங்க 3 பேரும் திரும்பிப் போய்டலாம்னு சொன்னதை அவ காதுல வாங்கினாத்தானே? ஏதோ ஒரு எழுத்தாளர் கதைல 'அமானுஷ்யமான அமைதி'ன்னு குறிப்பிட்டிருப்பாரு, அது இந்த இடத்துக்குப் பொருத்தமா இருந்தது.
சரி திரும்பிடலாம்னு முடிவு பண்ணித் திரும்பி நடக்க ஆரம்பிச்சோம்.
அப்பதான் தங்கை 'எனக்கு இந்த இடத்தைப் பார்த்தா சிகப்பு ரோஜாக்கள் படம் ஞாபகம் வருதுன்னு' சொல்லவும், வந்த எரிச்சலுக்கு நாங்க 3 பேரும் 'கொஞ்ச நேரம் வாயை மூடிண்டு வர மாட்டியா'ன்னு கத்தினோம். பின்ன, ஞாபகம் வந்தா பேசாம வர வேண்டியதுதானே? அதச் சொல்லி பீதியை எதுக்குக் கிளப்பணும்?
உள்ளேர்ந்து என்னன்னே புரியாம ஏதேதோ சத்தம் கேட்க ஆரம்பிச்சது. திடீர்னு மல்லிகைப்பூ வாசனை வேற வர ஆரம்பிச்சது.
இதுல எனக்கு ஆஸ்துமா பிரச்சனை வேற. மூச்சிரைக்கிற மாதிரி இருந்தது. திடீர்னு ஜாஸ்தியாயிடுத்துன்னா என்ன பண்றதுன்னு பதட்டம் வேற.
திடீர்னு ஒரு பெண் 'ஹா ஹா'ன்னு சிரிக்கிற சத்தம். எங்களுக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்னுபோன மாதிரி இருந்தது.
அப்ப திடீர்னு ஒரு புதருக்கு நடுவில ஏதோ அசைஞ்சா மாதிரித் தெரிஞ்சது. நானும் கூர்ந்து பார்த்தால் ஆ!!! அந்தப் படத்துலயும் இதே மாதிரி ஒரு பூனைதானே வரும். ஸ்ரீதேவி தோட்டத்தைப் பார்த்திட்டிருக்கும்போது ஒரு 'கை' திடீர்னு வர்றதும் நினைவுக்கு வந்து தொலைத்தது.
ஓட்டமும் நடையுமா வெளில வந்ததும்தான் கொஞ்சம் மூச்சு வந்தது.
விடுவிடுன்னு பேருந்தை நோக்கிப் போனோம். போற வழில என் தங்கை, தன் பெண், பையனிடம் அங்க போய் யாருகிட்டயும் இதப் பத்தி சொல்ல வேண்டாம், எல்லாரும் நம்மளை ஓட்டுவாங்கன்னு சொல்லவும், அவள் பெண், முதல்ல உங்க அக்காகிட்ட சொல்லு, அங்க வந்து எதுவும் உளராதேன்னு அப்படின்னா.
கொஞ்ச தூரம் போகவும், எதிரில் என் தம்பி எங்களைத் தேடிக்கொண்டு வரவும் சரியாக இருந்தது. எல்லோரும் எங்க போய்த்தொலைஞ்சீங்கன்னு அவன் சத்தம் போடவும், காதுலயே வாங்காத மாதிரி நாங்க போய் பேருந்தில் ஏறினோம்.
எனக்கு வேர்த்துக் கொட்டியிருந்தது. உடலெல்லாம் தொப்பலா நனைஞ்சிருந்தது. எழுந்து திரும்பிப் பார்த்தா என் கணவர் நல்லா சுகமாத் தூங்கிட்டிருந்தார். அடச்சே! எனக்கு வந்த கோபம், இதுவரை பட்ட அவஸ்தை எல்லாத்தையும் சேர்த்து அவரை 2 தட்டு தட்டி எழுப்பினேன். 'இந்தப் பசங்களோட தினம் இதே ரோதனை. கொஞ்சம் EB office-க்கு போன் பண்ணி கேளுங்கோன்னா, எப்ப கரண்ட் வரும்னு. ச்சே, தூக்கமே போச்சு'.
டிஸ்கி 3: ஹி ஹி, அது என்னன்னா என் சித்தி ஒரு தடவை அவங்க கண்ட கனவைப் பத்திச் சொல்லிட்டிருந்தாங்களா? நேத்து ராத்திரி 1 மணி இருக்கும், விழிப்புக் கொடுத்தது. அப்புறம் ஒரு 1-1/2 மணி நேரமா நான் தூங்க முயற்சி பண்ணியும் தூக்கம் வரலை. அடச்சே தூக்கம் போயிடுச்சேன்னு ரொம்ப ஃபீலிங் ஆயி ஏதேதோ யோசிச்சிட்டிருந்தேனா, இது ஞாபகம் வந்தது. சரின்னு மூளைக்கு கொஞ்சம் வேலை குடுத்து (என் மூளை நான் தூங்கிட்டிருக்கும்போதே பயங்கரமா வேலை பண்ணும், இதுல முழிச்சிட்டிருந்தா கேக்கணுமா) அப்படியே டெவலப் பண்ணி ஒரு கதையாக்கிட்டேன். சரி டிஸ்கி 1 & 2 ல இவ்ளோ பில்ட் அப் எதுக்குக் குடுத்தேன்னு கேக்கறீங்களா? அப்பதானே கடைசி வரி வரைக்கும் படிப்பீங்க?
டிஸ்கி 4: முதல்ல இதெல்லாம் ஒரு கதைன்னு எழுதறோமேன்னு எனக்கே தோணிச்சுதான். சரி எல்லாரையும் வெறுப்பேத்தலாம்னு ஒரு உயர்ந்த எண்ணத்துல துணிஞ்சு இத எழுதி அனுப்பிட்டேன். பார்க்கப் போனா வேற ஒரு டாபிக்தான் எழுதிட்டிருந்தேன், ஆனா இது முதல்ல முடிந்துவிட்டது. இதுவரை பொறுமையாப் படிச்ச எல்லோருக்கும் நன்றி. நீங்கள்லாம் ரொம்ப நல்லவங்க, யாரும் ஆட்டோ அனுப்ப மாட்டீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
ஆக்கம்: திருமதி உமா, தில்லி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
6.11.10
5.11.10
எதற்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்; வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++வாழ்க வளமுடன்; வளர்க நலமுடன்!
எதற்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது?
தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள். பெரும்பாலோர், நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு ஒரு கொண்டாட்டம் நிகழ்வது யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை.
அப்படியிருக்குமாயின், இரணியைனக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பன் பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்தகாசுரன் சரந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகி விடும்.
ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் = விளக்கு, ஆவளி -= வரிசை, தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள். தீபாவளி என உணர்க.
தீபங்களில் ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?
“விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்" என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.
சிவ விரதம் எட்டு எனக் கந்தபுராணத்தின் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் புகல்கிறது.
அவையாவன:
1. சோமவார விரதம்
2. உமாமகேச்சுர விரதம்(கார்த்திகை மாதம் பெளர்ணமி)
3. திருவாதிரை விரதம் (மார்கழியில்)
4. சிவராத்திரி விரதம் (மாசியில்)
5. கல்யாண விரதம் (பங்குனி உத்திரம்)
6. பாசுபத விரதம் (தைப்பூசம்)
7. அஷ்டமி விரதம் (வைகாசி பூர்வபட்ச அஷ்டமியில்)
8. கேதார மாவிரதம்(இதுதான் தீபாவளி)
தொல்லைவல் வினைகழித்துத் தருஞ்சோமவாரமா திரை நோன்பன்றிப்
புல்லியவு மாமகேச் சுரஞ்சிவராத் திரிமுறையில் பொருத்த நோற்கப்
பல்வினையுந் தொலைந்திடுகே தாரமணவிரதமிவை பரமநோன்பு
கொள்ளூறு சூற் படைவிரத மெனுமெட்டுஞ் சிவ விரதங் குணிக்குங்காலே!
இந்த விரதம் நோற்கும் முறை:
புரட்டாசி மாதம் பூர்வ பட்சம் அஷ்டமியில் தொடங்குதல் வேண்டும். நிறைகுடம் வைத்து, அதில் சிவபெருமானை ஆவாகனஞ்செய்து, இருபத்தொரு இழையுடைய நூலைக் கையில் புனைந்து, அருச்சனை செய்து, தூப தீப நிவேதனம் புரிந்து வழிபட வேண்டும்.
ஐப்பசிமாத அமாவாசைக்கு முந்தினநாள் சதுர்த்தசியினுன்று, அதிகாலையிலெழுந்து நீராடி, தூய ஆடையுடுத்து, நெல்லின்மீது நிறைகுடம் வைத்து, அதில் சிவமூர்த்தியை நிறுவி, சிவமாகவே பாவனை புரிந்து, பக்தி பரவசமாக அருச்சித்துப் பாராயணம் புரிந்து, தூப தீப நிவேதனங்கள் செய்து வழிபட வேண்டும்.
மறுநாள் அமாவாசையன்று காப்பை யவிழ்த்து விட்டு உணவருந்த வேண்டும். இந்த விரதம் கேதார விரதம் எனப்படும்.
பிருங்கி முனிவர் சக்தியை விலக்கிச் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்ட காரணத்தினால், உமாதேவியார் வெகுண்டு, இடப்பாகம் பெறும் பொருட்டு, திருக்கயிலாய மலையினின்றும் நீங்கி, கெளதம முனிவருடைய வனத்தையடைந்தனர். அவ்வனம் அம்பிகையின் வரவினால் மிகவுஞ் செழிப்புற்றது. பாம்பும், தவளையும், அரவும் கீரியும், உரகமுங் கருடனும் உறவாடின.
கெளதமர் கெளரியைத்தொழுது துதித்தனர். இந்த விரதத்தைக் கெளதமர் கூற, விதிப்படி உமையம்மையார் நோற்று, இறைவருடைய இடப் பாகத்தைப் பெற்று மகிழ்ந்தனர்.
கெளரி நோற்ற காரணத்தால், கேதாரிகெளரி விரதம் எனவும் இது பேர் பெற்றது.
இருபத்தொருநாள் அனுட்டிக்க முடியாதவர்கள், ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியன்று மட்டும் மேற்கூறிய முறைப்படி அனுட்டிக்க வேண்டும்.
இவ்விரதத்தை எல்லோரும் மேற்கொண்டு, அன்று சிவமூர்த்தியை வழிபட்டு, நலம் பெறுதல் வேண்டும். தீபங்களை வரிசையாக ஏற்றி, அன்புடன் வழிபட வேண்டும்.
தீபாவளியன்று மது மாமிசங்களையுண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவார். இனியேனும் அந்தத் தீயநெறியைக் கைவிட்டுத் தூயநெறி நின்று நலம் பெறுவார்களாக.
- திருமுருக கிருபானந்த வாரியார்.
=======================================
வாரியார் சுவாமிகளின் கட்டுரையைத் தேடிப்பிடித்து, இன்னன்னாளில் பதிவில் ஏற்ற நமக்கு உதவியவர் நமது வகுப்பறை மாணவர் முரளி தங்கவேல்! அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!
அன்புடன்,
வாத்தியார்
=======================================
வாரியார் சுவாமிகளின் படம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++வாழ்க வளமுடன்!
4.11.10
நகைச்சுவை: இலவசமாக நானோ கார்!
நகைச்சுவை: இலவசமாக நானோ கார்!
ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக
ஒரு நானோ கார் கிடைக்கவுள்ளது!
எங்கே? எங்கே?
அறிவிப்பு கீழே உள்ளது. சென்று பாருங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++எங்கே? எங்கே?
அறிவிப்பு கீழே உள்ளது. சென்று பாருங்கள்!
1
2
3
1
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
கார்ட்டூன்களுக்கு நன்றி: டெக்கான் க்ரோனிக்கள் நாளிதழ்!
இந்தப் பதினைந்தில் எது நன்றாக உள்ளது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
Subscribe to:
Posts (Atom)




















