மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.8.09

Opportunity முக்கியமா? முக்கியமில்லையா?

Opportunity முக்கியமா? முக்கியமில்லையா?

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை!"
------- -கவியரசர் கண்ணதாசன்

வாய்ப்பு எனும் சொல் ஒன்றைப் பெறுவதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு
உரிய அனுகூல நிலையைக் குறிக்கும். Opportunity என்பது அதற்குச்
சரியான ஆங்கிலச் சொல்!

எந்த நிலையிலும் அந்த ”அனுகூல’ நிலை என்பது மிகவும் முக்கியம்.

அந்த நிலை சிலருக்குத் தேடிவரும். சிலருக்குக் கண்ணாம்பூச்சி காட்டும்.

வாய்ப்பு என்று ஒன்று இருக்கிறது. அது இல்லாமல் ஒருவன் தன் வாழ்க்கையில்
முன்னுக்கு வரமுடியாது.

இளையராஜாவுக்கு வாய்ப்பு, கவிஞர் பஞ்சு அருணாசலம் மூலமாகக் கிடைத்தது.
பெரிய இசையமைப்பாளராக, நாடறிந்தவராக அவர் ஆனார். அவர் நுழைந்த நேரம், அன்னக்கிளி’ படம், ”மச்சானைப் பார்த்தீங்களா? மலைவாழைத் தோப்புக்குள்ளே” பாடல், அதைப் பாடிய ஜானகி அம்மாவின் குரல் என்று ஏகத்துக்கும் எல்லாம் மிகச் சிறப்பாக அமைந்தது.

அப்படி எல்லாமும் சிறப்பாக அமைந்ததும் ஒரு வாய்ப்புதான். அதை இறைச்செயல் எனலாம். அல்லது ராஜாவின் ஜாதகப் பலன் எனலாம்.
அல்லது அவர் வாங்கிவந்த வரம் எனலாம்.

எல்லோருக்கும் அப்படிக்கிடைக்கிறதா?. எத்தனை பேர் ஆர்மீனியப்
பெட்டியோடு சென்னையில் இன்றைக்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்?
வெறும் முயற்சி மட்டும் போதும் என்றால் அவர்கள் அத்தனை பேர்களுக்கும்
இசையமைப்பாளர்களாக ஏன் ஆகவில்லை?

"சார், இளையாராஜாவுக்கு ஒன்னும் எக்மோர் ஸ்டேசன்ல போய் இறங்கினவுடன
வாய்ப்புக் கிடைக்கல. லட்சியத்தை மனசுல வச்சிகிட்டு மனுசன் பத்து வருசம்
பாடுபட்டிருக்காரு. அதோட அந்த பத்துவருட காலத்தில் தன்னுடைய முயற்சியாலும், பயிற்சியாலும் இசையில ஏகப்பட்ட விஷயங்கள்ள கற்றுத் தேறியிருக்கார். அதுதான் முக்கியம். கிடைச்ச வாய்ப்பை வச்சுத்தான் அவர் முன்னுக்கு வந்தார்னு சொல்றது தப்பு. விடாமுயற்சியாலதான் அவர் வெற்றி பெற்றார். இல்லையின்னா இரண்டு படத்தோட அவர் ஊருக்குத் திரும்பியிருப்பார்!"

"தம்பி, இங்கே வாய்ப்புன்னு நான் சொல்றது அதிர்ஷ்டத்தை, தெய்வ அருளைச்
சொல்றேன். அது இல்லாமல் எப்படி ஒருவன் சாதிக்க முடியும்? ஒருத்தனுக்கு
முயற்சி செய்து வங்கியிலேயே வேலை கிடைக்குதுன்னு வச்சுக்குவோம்.
எல்லா வங்கியிலயும் ஒரே மாதிரியாகவா சம்பளம் இருக்கு? கிராம வங்கி,
தனியார் வங்கி, அரசு வங்கி, பன்னாட்டு வங்கின்னு எத்தனை விதமான
வங்கியிருக்கு? கிராம வங்கியில சேர்ந்து கீழப்பூங்குடியிக் கிளையில் வேலை
செய்கின்ற ஒருத்தன், சிட்டி பாங்க்கோட சிங்கப்பூர் கிளையில் வேலை
கிடைகின்றவனோட வளர்ச்சியை எப்படிப் பெறமுடியும்? எல்லாத்துக்கும்
ஒரு அம்சம் வேண்டாமா?."

அந்த அம்சம் என்பதுதான் ஜாதகம்.

ஒருவருக்குப் படிக்கும்போதே, இறுதியாண்டில் வேலைக்கான நியமன
உத்தரவு கிடைக்கிறது. ஒருவருக்கு, படித்து முடித்து மூன்று நான்கு
ஆண்டுகளானாலும் வேலை கிடைப்பதில்லை. ஒருவருக்கு விரும்புகின்ற
வேலை, விரும்புகின்ற ஊரில் கிடைத்து விடுகிறது. வேறு ஒருவருக்கு
விருப்பமில்லாத துறையில் வேலை, வசதியில்லாத ஊரில் கிடைக்கிறது!
ஒருவருக்குக் கை நிறையச் சம்பளம். ஒருவருக்குக் கைக்கும் வாய்க்குமான
வருமானம்.

ஒருவர் திரை உலகில் நுழைந்த அன்றே இயக்குனர் (மணி ரத்தினம்)
பலர் திரை உலகில் அடியெடுத்து வைத்துப் பல ஆண்டுகளாகியும்
இன்னும் உதவி வசனகர்த்தா அல்லது உதவி இயக்குனர்.

ஏன் அப்படி? யோசித்துப் பாருங்கள்

அதேபோல் unorganized sector எனும் ஒழுங்கின்றி இருக்கும் பல துறைகளில்
வாடிக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை லட்சம் பேர்கள்.

பேருந்து, லாரி, ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள்.
ஜவுளி, மளிகைக் கடைகளில் வேலை பார்ப்பவர்கள்.
தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்.
கட்டுமானத்துறையில் கொத்தனார் மற்றும் சித்தாள் பணிகளைச்
செய்பவர்கள்.
பாரம் தூக்கும் தொழிலாளர்கள்.
நூற்பாலைகள், விசைத்தறிகளில் வேலைபார்க்கும்
(வாரக் கூலித்) தொழிலாளர்கள்
வயல்களில் தினக்கூலி அடிப்படையில் உழவு வேலையில்
ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்.....இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.

அவர்கள் எல்லாம் முழு விருப்பத்துடனும், முழு ஊதியத்துடனுமா அங்கே
பணி செய்கிறார்கள்?

பட்டுக்கோட்டையார் உழவுத்தொழிலாளர்களைப் பற்றி அசத்தலாக இரண்டே
வரிகளில் இப்படிச் சொன்னார்:

“ஆடிப்பாடிக் கதிரறுப்போம் ஆனந்தத்தோடு - ஆனா
அறுத்த கதிரு போற இடம் வேறொருவீடு!”

பட்டுக்கோட்டையார் இன்னொன்றையும் சொன்னார்:

“வசதி படைத்தவன் தரமாட்டான்
வயிறு பசித்தவன் விடமாட்டான்”

அது அவர் வாழ்ந்த காலத்துச் சிந்தனை!

இன்று வசதி படைத்தவனுக்கு எல்லாம் நடக்கிறது.
சட்டம் உட்பட சர்வமும் வளைந்து கொடுக்கிறது!
==============================================
நமது பிறப்பிலேயே ஒரு Opportunity அமைந்திருக்கும்.

பணக்காரர் வீட்டில் மூத்த பிள்ளையாகப் பிறக்க வேண்டும்
ஏழை வீட்டில் கடைசிப் பிள்ளையாக பிறக்க வேண்டும்
என்பார்கள்

பணக்காரர் வீட்டில் மூத்தவன் தட்டி அனுபவித்தது போக மீதி
உள்ளதுதான் இளவல்களுக்குக் கிடைக்கும்.
அதுபோல ஏழைவீட்டில் மூத்த பிள்ளையின் மேல் எல்லாபாரமும்
ஏறிக்கொண்டுவிடும். அந்த வீட்டு இளவல் தப்பித்து விடுவான்

இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் பிறந்திருந்தால் நீங்கள்
எதற்காக வேலை தேட வேண்டும்?

ஷாரூக்கான் வீட்டில் பிறந்திருந்தால், நீங்கள் எதற்காகச்
சம்பாதிக்க வேண்டும்?

அமிதாப் பச்சன் வீட்டில் பிறந்திருந்தால், நீங்கள் எதற்காக வரன் தேட
வேண்டும்? வந்து க்யூவில் நிற்கமாட்டார்களா?

ஆகவே வாய்ப்பு முக்கியம். மற்றதெல்லாம் அடுத்தபடிதான்!
-----------------------------------------------------------------------
பத்தாம் வீடு, அதன்காரகன் சனீஷ்வரன் ஆகியவை பற்றி நிறைய
எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் அவைகள் உள்ளன.

புதிதாக வந்துள்ள மாணவர்களை, அவற்றைப் படிக்க வேண்டுகிறேன்.
------------------------------------------------------------------------
சரி, இன்றைய பாடத்திற்கு வருகிறேன்.

வேலைக்கு உரிய இடம் 10ஆம் வீடு.
அதைப் பலவிதமாக அலசினால், மேற்கூறிய விவரங்கள் எல்லாம் தெரியும்.

அதைப் பிறகு ஒரு நாள் அலசுவோம்.

இப்போது வேலையின்றி இருப்பவர்களுக்கும், அல்லது நல்ல வேலை
எப்போது கிடைக்கும் என்று ஏக்கத்துடன், ஆதங்கத்துடன் இருப்பவர்களுக்கும்
ஒரு நல்ல தீர்வைச் சொல்லும் முகமாக இந்தப் பதிவை எழுதத் துவங்கினேன்.

வேலை கிடைக்குமா?
நாம் விரும்பும் வேலை கிடைக்குமா?
எப்போது கிடைக்கும்?
எதனால் தாமதம்?
என்பது போன்ற விஷயங்களை அலசவுள்ளேன். அந்த அலசலை முன் மாதிரியாக வைத்து ஒவ்வொருவரும் அவர்களுடைய ஜாதகத்தை ஈஸியாக அலசிப் பார்க்கலாம்.

அதென்ன சார், ஈஸியாக?

ஆமாம், ஒரு குறுக்குவழி உள்ளது. அதைச் சொல்லித் தருகிறேன்.
ஆனால் இங்கே அல்ல! மின்னஞ்சல் பாடமாக மட்டுமே!

பொறுத்திருங்கள். இன்னும் 24 மணி நேரத்திற்குள் பாடம் உங்கள் மின்னஞ்சல்
பெட்டியில் வந்து இறங்கும்!

இங்கே ஏன் ஏழுதக் கூடாது?

தேவையில்லாத கேள்விக் கணைகளைத் தவிர்ப்பதற்காகத்தான்!
அதோடு அது மேல் நிலைப் பாடம். புதிய வரவுகளுக்கு அது பிடிபடாது!

வகுப்பறையில் இது என்னுடைய 350வது பதிவு!
உங்களைப் போன்ற ஆத்மார்த்தமான வாசகர்கள் எனக்குக் கிடைத்ததும்
Opportunity தான். அதனால்தான் 30 மாதங்களில் என்னால்
350 இடுகைகளை வலையேற்ற முடிந்தது.

அன்புடன்,
வாத்தியார்
--------------------

வாழ்க வளமுடன்!

10.8.09

சிங்காரப் புன்னகையும், சங்கீத வீணையும்!

சிங்காரப் புன்னகையும், சங்கீத வீணையும்!

"சிங்கார புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் எதுக்கம்மா?
மங்காத விழிகளில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் எதுக்கமா?"
----கவியரசர் கண்ணதாசன்
-----------------------------------------------
"தென்னையைப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனசே பித்தம்மா
பிள்ளை மனசே கல்லம்மா!"
-----இதுவும் கவியரசர் கண்ணதாசன்

ஆனால் வெவ்வேறு சூழ்நிலைகளுக்காக அவர் எழுதிய வரிகள்
பதிவிற்கு இந்த வரிகள் முக்கியம். அவற்றை மனதில் வைத்துக்
கொண்டு மேலே தொடர்ந்து படியுங்கள்!
=================================================================
தமிழில் ’அவஸ்தை’ என்று ஒரு சொல் இருக்கிறது. அருமையான சொல்.
அதற்கு இப்படிப் பொருள் கொள்வார்கள்: அவதி, துன்பம் distress,
suffering, vexation. அதாவது இருக்கவும் முடியாமல் அல்லது போகவும்
முடியாமல் இருக்கும் சூழ்நிலை. சொல்லவும் முடியாமல் அல்லது சொல்லாமல்
இருக்கவும் முடியாமல் ஏற்படுகின்ற சூழ்நிலை!

திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் இந்த அவஸ்தையை அதிகம்
அனுபவித்திருப்பார்கள். அதுவும் தம்பதிகள் இருவரில், மனைவிதான்
அதிகமாக அனுபவித்திருப்பாள்.

அவள் சும்மா இருந்தாலும், சந்திக்கும் உறவினர்களும், தோழிகளும் சும்மா
இருக்க மாட்டார்கள். நோண்டுவார்கள்.தோண்டுவார்கள். அவளுடைய
மனநிலையைக் (Mood) கெடுத்து விடுவார்கள்.

“ஏன்டி... ஏதாவது விஷேசம் உண்டா?”

அட, கிறுக்கே! இருந்தால் அவள் சொல்லித் தொலைக்க மாட்டாளா?

கேட்டதற்காக, மன வருத்தம் shoot up ஆகி அவள் பதில் சொல்வாள்.

“இனிமேல்தான்....!”

“என்னடி கல்யாணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. பிறகு பெற்றுக்
கொள்ளலாம் என்று ஒத்தி வைத்திருக்கிறீர்களா? அப்படியெல்லாம்
ஒத்திவைக்கக்கூடாது. காலாகாலத்தில் அததைச் செய்துவிட வேண்டும்!”

அவளால் என்ன சொல்ல முடியும்?

மேட்னி ஷோ, நைட் ஷோ என்று தம்பதியர் பல ஷோக்களைப் பார்த்து
விட்டார்கள். ஆனாலும் குழந்தை பிறக்கவில்லை. அதற்கு அவர்கள்
என்ன செய்வார்கள்?

சிலருக்குத் திருமணமாகி ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடத்திலேயே
குழந்தை பிறந்து விடும். சிலருக்குத் தாமதமாக ஆறு அல்லது எட்டு
வருடங்கள் கழித்துக் கூடப் பிறக்கலாம்.

எனக்குத் தெரிந்த செட்டிநாட்டுப் பெண்மணி ஒருவருக்கு, ’ரயில்வண்டி ஆச்சி’
என்ற அடையாளப்பெயர் இருந்தது. அந்த ஆச்சிக்குத் திருமணமாகி
20 ஆண்டுகளில் 18 குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகள் இறந்தது
போக மிச்சம் 16 குழந்தைகள் உயிரோடு இருந்தன. அத்தனை குழந்தைகளையும்
வளர்த்து ஆளாக்கி நல்ல இடங்களில் திருமணம் செய்து கொடுத்தார்.
அந்தப் பதினாறில் பதினொன்று பெண் குழந்தைகள் என்பது உபரித் தகவல்.
அதெல்லாம் நடந்தது 1940 - 1960 ஆண்டு காலகட்டமாகும்.

அப்போது ஏது குடும்பக்கட்டுப்பாடு? ஒரு ரூபாய்க்கு 3 கிலோ அரிசி விற்ற
காலம். குரங்கு மார்க் மண்ணெண்ணெய், 15 லிட்டர் டின்னின் விலை வெறும்
பத்து ரூபாய்க்கு விற்ற காலம். அந்த அம்மையாரின் பேரன் என்னுடைய
பள்ளித் தோழன்.

பின் ஒரு நாளில் ஏதேட்சையாக அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது,
அவன் இப்படிச் சொன்னான்:

“கல்யாணமான பிறகு, எங்கள் அப்பத்தா, தூரமாகி (வீட்டிற்கு விலக்காகி)
உட்கார்ந்ததே இல்லை”

அதாவது 3 நாள் பீரியடில் விலக்கானதே இல்லை என்று விளையாட்டாகச்
சொல்வான்.
----------------------------------------------------------------------------
இதே போல பல சுவாரசியமான விஷயங்கள் உண்டு.

இரண்டு பெரிசுகள் வாக்கிங் போகும் இடத்தில் நட்பாகிப் பேசிக் கொள்கின்றன:

“Sir,I am blessed with 3 children. They are now in states.
They are pouring money in dollars. Investing them in good
stock is my present task!"

பீற்றிக் கொண்டதோடு நிறுத்தியிருக்கலாம் இல்லையா?தொடர்ந்து கேட்பார்:

”உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?”

உடனே நம்ம ஆள் பதில் சொல்வார்.

"I am cursed with two children!" (எனக்கு சாபமாகக் கிடைத்தது இரண்டு)

"அடடா? என்ன ஆயிற்று?”

அடுத்தவனுடைய கதையைக் கேட்பதில்தான் நமக்கு எத்தனை ஆர்வம்!

“என்னுடைய வருமானத்திற்குள் அவர்களைப் படிக்க வைக்க முடியா
தென்று, இருந்த வீட்டை விற்று அவர்களைப் படிக்க வைத்தேன்.
இருவருமே ’இஞ்சி’ னியர்கள். ஒருவன் புனேயில் இருக்கிறான்.
இன்னொருவன் ஷாம்ஷெட்பூரில் இருக்கிறான். கை நிறையச் சம்பாதிக்
கிறார்கள்.ஆனால் எனக்குக் காலணா பிரயோசனமில்லை. என்னுடைய
பென்சன் பணத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

”ohh... my god, thankless people! ஏன் அப்படி?”

"படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தது. வேலை கிடைத்தவுடன்,
அவர்களுக்குப் பிடித்த மாதிரிப் பெண்ணைப் பார்த்து உடனே திருமணத்
தையும் செய்து வைத்தேன். அதுதான் நான் செய்த தவறு. செலவழித்த
பணத்தை எல்லாம் கறந்து கொண்டு, அவர்களுக்குக் கல்யாணத்தைப்
பண்ணியிருக்க வேண்டும். அப்படிச் செய்ய மனம் வரவில்லை.
பெற்றவர்களைக் கவனிக்காவிட்டால் போகட்டும். நல்லாயிருந்தால் சரி!”

“நீங்கள் விடக்கூடாது சார், நீங்கள் உங்கள் கடமையைச் செய்ததுபோல,
அவர்கள் தங்களுடைய கடமையைச் செய்ய வேண்டாமா?”

“அவர்கள் இருவரும் பெண்டாட்டிதாசர்கள். சுயமாக சிந்திக்கும் திறன்
அவர்களுக்கு இல்லை! எனக்கும் சுயமரியாதை இருக்கிறது. என்
சுயமரியாதையை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா?”

ஆமாம், அவர் சொன்னது நிதர்சனமான உண்மை! அரை வயிறு கஞ்சி
குடித்தாலும் பரவாயில்லை. தன்மானமும், சுதந்திர உணர்வும் முக்கியம்
இல்லையா?
-----------------------------------------------------------------------------
இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். ஜஸ்ட் உதாரணத்திற்காக
இரண்டு வித நிலைப்பாட்டைச் சுற்றிக் காட்டியிருக்கிறேன்.

குழந்தை என்பது வரமாகவும் இருக்கலாம், சாபமாகவும் இருக்கலாம்.

குழந்தைகள் முக்கியமில்லை. அவர்கள் நல்ல குழந்தைகளா என்பதுதான் முக்கியம்.

இப்போதெல்லாம், ”உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? என்று கேட்கக்கூடாது!
எத்தனை தொல்லைகள்? என்றுதான் கேட்க வேண்டும். குழந்தைகளை
வளர்த்து ஆளாக்குவதில் அத்தனை தொல்லைகள். L.K.G யிலிருந்து Plus2
படிக்க வைப்பதற்குள் ஆண்டு ஒன்றிற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும்.
தொழில் கல்வி, மேல் நிலைக் கல்வி படிக்க வைப்பதென்றால் லட்சக்
கணக்கில் செல்வாகும்.

அப்படியே படிக்க வைத்து ஆளாக்கினாலும், எத்தனை குழந்தைகள்
பெற்றோர்கள் மீது விசுவாசமாக இருக்கின்றன சொல்லுங்கள்?

இருக்கின்றன என்று 10 குழந்தைகளை நீங்கள் அடையாளம் காட்டினால்,
இல்லை என்று என்னால் 100 குழந்தைகளை அடையாளம் காட்ட முடியும்!

ஆகவே நல்ல குழந்தைகளைப் பெற்றோம் எனும் திருப்திதான் முக்கியமானது.
------------------------------------------------------------------------------
சரி, பாடத்திற்கு வருகிறேன்.

குழந்தை பாக்கியத்திற்கு முக்கியமான இடம் 5ஆம் வீடு.
அதைப் பலவிதமாக அலசினால், மேற்கூறிய விவரங்கள் எல்லாம் தெரியும்.

அதைப் பிறகு ஒரு நாள் அலசுவோம்.

கல்யாணமாகி, எப்போது நமக்குக் குழந்தை பிறக்கும் என்று ஆதங்கத்தோடு,
ஏக்கத்தோடு இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு நல்ல தீர்வைச் சொல்வதற்காகத்தான்
இந்தப் பதிவை எழுதத் துவங்கினேன்.

எப்போது பிறக்கும்?
எதனால் தாமதம்?
பணம் செலவாகாத பரிகாரம் உண்டா?’ என்பது போன்ற விஷயங்களை
அலசவுள்ளேன். அந்த அலசலை முன் மாதிரியாக வைத்து ஒவ்வொருவரும்
அவர்களுடைய ஜாதகத்தை ஈஸியாக அலசிப் பார்க்கலாம்.

அதென்ன சார், ஈஸியாக?

ஆமாம், ஒரு குறுக்குவழி உள்ளது. அதைச் சொல்லித் தருகிறேன்.
ஆனால் இங்கே அல்ல! மின்னஞ்சல் பாடமாக மட்டுமே!

பொறுத்திருங்கள். இரண்டு நாட்களில் பாடம் உங்கள் மின்னஞ்சல்
பெட்டியில் வந்து இறங்கும்!

இங்கே ஏன் ஏழுதக் கூடாது?

தேவையில்லாத கேள்விக்கணைகளைத் தவிர்ப்பதற்காகத்தான்!
அதோடு அது மேல் நிலைப் பாடம். புதிய வரவுகளுக்கு அது பிடிபடாது!
முன் பாடங்களைப் படித்திராதவர்கள், இந்தத் தலைப்பில் ஆர்வமாகி
தங்கள் ஜாதகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு என்னைப் பிறாண்டிக்
கொண்டிருப்பார்கள்.

புதிய வரவுகளுக்கு ஒன்று சொல்ல் விரும்புகிறேன். நீங்கள் பழைய
பாடங்களைப் படிக்காமல் இப்போது நடத்துவது எதுவுமே புரியாது.
ஆகவே அவற்றைப் படியுங்கள்.

Okayயா

அன்புடன்,
வாத்தியார்

--------------------
வாழ்க வளமுடன்!

9.8.09

தேவை உங்கள் உதவி!

தேவை உங்கள் உதவி!

பதிவில் Power Point Slides களை உள்ளிடுவது எப்படி?
செயல்முறை என்ன?

How to upload PP slides in the blog? What is the procedure?
(That is in the posting and not in the side bar)

Gif image படங்களை அதன் சுவாரசியம் கெடாமல் பதிவில் உள்ளிடுவது எப்படி?
இப்போது உள்ள optionல் jpeg படங்களைப் போன்றுதான் அது் பதிவாகிறது!

விவரம் தெரிந்த மாணவக் கண்மணிகளே - சொல்லித் தாருங்கள் எனக்கு!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!