மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
My email ID
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்

தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
27.2.23
Astrology பொன்மகள் எப்போது வருவாள்?
22.2.23
Astrology யாரைப் பார்த்து என்ன சொல்ல வேண்டும்?
17.2.23
Astrology எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!
11.2.23
Astrology வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!
7.2.23
Astrology யார் யார் எங்கே இருக்கக்கூடாது?
யார் யார் எங்கே இருக்கக்கூடாது?
நமக்கு வேண்டியவர்கள் வேண்டாத இடத்தில் இருக்கக்கூடாது. வேண்டாதவர்கள், நமக்கு வேண்டிய இடத்தில் இருக்கக்கூடாது.
ஜோதிடத்தில் சுபக்கிரகங்கள் மூவர். சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியோர் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். அவற்றுள் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் மிகவும் நல்லது. அத்துடன் தனித்திருக்கும் அதாவது தீய கூட்டணி இல்லாத புதனும் நமக்கு வேண்டியவர்தான். அவர்கள் நல்ல இடங்களில் இருக்க வேண்டும். அதாவது கேந்திரம் அல்லது திரிகோண வீடுகளில் இருக்க வேண்டும். அதோடு ஒருவருக்கொருவர் எழில் இருந்தாலும் நல்லதுதான்.
அத்துடன் அவர்கள் காரகர்களை விட்டு விலகியும் இருக்ககூடாது.
குரு தனகாரகன். சந்திரன் மனகாரகன். இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால் பணம் இருந்தாலும் அல்லது பணவரவு இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது.
அதேபோல சூரியன் உடல்காரகன். அவருக்கு எட்டில் குரு சென்று அமரக்கூடாது. உடல் நலத்திற்கு அவருடைய ஆசீர்வாதம் வேண்டுமல்லவா?
சனியும், சுக்கிரனும் நண்பர்கள். சனி கர்மகாரகன். சுக்கிரன் சுகபோகங்களுக்கு அதிபதி. இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால், ந்ல்ல வேலை அல்லது தொழில் அமைந்தாலும், அது நாம் சுகப்படும்படி இருக்காது.
அத்துடன் அரசகிரகமான சூரியனுக்குக் கேந்திர வீடுகளில் அதாவது 4, 7 மற்றும் பத்தில் ராகு இருக்கக்கூடாது. நமக்கு சூரியனால் கிடைக்ககூடிய அரச செல்வாக்குள், பெயர், புகழ் ஆகியவற்றை ராகு கிடைக்காமல் செய்து விடுவான்
இதை எல்லாம் யார் சொன்னது?
வேறு யார் சொல்வார்கள்? நம் முனிசாமி (அதாங்க நம் முனிவர்களில் ஒருவர்) சொல்லியிருக்கிறார். அவர்களுக்குத்தான் எதையும் உரையாகச் சொல்லும் பழக்கம் இல்லாததால், பாடலாகச் சொல்லியிருக்கிறார். பாடல் கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்
குடியவனாட்சியாகக் குருவுதையத்தினிற்க
அடியவனுக்குச் சமமாகியவர்க் கேழில்ப்
பிறையுதிக்க
வெடியவன்காரி சேய்க்கு
விண்ணரவியவரைப்பாரார்
கொடியிடைனிற்பனூறாய்க் குறியிதுப்பாமாதே!
குருவுக்கு எட்டாமிடத்தில் சந்திரனும்
இருக்கலாகாது
சூரியனுக்கு எட்டில் குருவும்
இருக்கலாகாது
சனிக்கு எட்டில்
சுக்கிரனுமிருக்கலாகாது
சூரியனுக்கு ஏழாம் இடத்திலும்
நான்காமிடத்திலும் ராகுவும் இருக்கலாகாது
----------------------------------------------
அடுத்த பாப்கார்ன் பொட்டலம் நாளைக்கு! அதுவரை பொறுத்திருங்கள்
அன்புடன்
வாத்தியார்