Astrology: வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள்.
Portfolio of 12 houses
புதிதாக வந்த மாணவக் கண்மணி ஒருவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார். 12 வீடுகளுக்கான வேலைகளை எழுதுங்கள் என்கிறார்.
அவருக்காக அதை இன்று கொடுத்துள்ளேன். அனைவருக்கும் பயன் படட்டும் என்று பதிவில் ஏற்றியுள்ளேன்.
Astrological Charts - The portfolio of 12 houses:
லக்கினம்தான் முதல் வீடு. மற்றவீடுகள் அதில் இருந்து எண்ணப்பட வேண்டும். கணக்கிடப் பட வேண்டும்.
Lagna is the first house and other houses are to be counted only from lagna.
-------------------------------------------------------
1. முதல் வீடு (லக்கினம்)
அ) தோற்றம். உடல் வாகு, நிறம், உயரம், தோற்றத்தால் உண்டாகும் வசீகரம் போன்றவை.
ஆ) குணம். குண நலன்கள். மற்றவர்களை அனுசரித்துப்போகும் குணம். வக்கிர குணம். நல்லவற்றையே செய்யும் குணம். எதிலும் ஆதாயத்தை
எதிர்பார்க்கும் குணம், பொறுமை, சகிப்புத்தன்மை, கோபம், இரக்கம், தாபம், காமம், சுயநலம், கஞ்சத்தனம் போன்ற அத்தனை குணங்களும் இதில்
அடங்கும்.
இ) சந்திக்க இருக்கும் வெற்றிகள், புகழ், பெருமை, சிறுமை போன்றவை
1.Complexion & Physical appearance
2.Mental Characteristics
3.Success,fame & defame
--------------------------------------------------------------
2. இரண்டாம் வீடு
அ) குடும்ப நிலைமை, குடும்ப வாழ்க்கை.
ஆ) நிதி நிலமை. பணம். வரவு. செலவு போன்ற பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
இ) வாக்கு. பேச்சு, வாக்கைக் காப்பாற்றும் தன்மை. பேச்சுத் திறமை போன்றவை
1.Family Life
2.Financial Prosperity
3.Speech
--------------------------------------------------------------
3. மூன்றாம் வீடு
அ) உடன் பிறப்புக்கள். சகோதரன் சகோதரிகள். அவர்களூடன் ஆன உறவுகள். அவர்களுடன் கூடிய மேன்மையான உறவு. அல்லது சண்டை,
சச்சரவுகள் நிறைந்த தன்மை. விசுவாசமில்லாத உறவுகள் போன்றவை.
ஆ) உறவினர்கள். பங்காளிகள். போன்றவை
இ) தைரியம். துணிச்சல்.நல்லது. கெட்டது என்று எதையும் எதிர்கொள்ளும் தன்மைகள் போன்றவை
1.Brothers & Sisters
2.Relatives
3.Governance over courage
-------------------------------------------------------------
4. நான்காம் வீடு.
அ) தாய்.
ஆ) கல்வி.
இ) சொத்து. சுகங்கள், நிலபுலன்கள். வீடு. வாகனங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான எல்லோரும் ஆசைப்படும் மேட்டர்கள்.
1.Mother
2.Education
3.Immmovable property & vehicle
-------------------------------------------------------------
5. ஐந்தாம் வீடு.
அ) இறைநம்பிக்கை, இறையுணர்வு, பூர்வ புண்ணியம், வாங்கி வந்த வரம் முதலியவை.
ஆ) அறிவு, புத்திசாலித்தனம், புத்திக்கூர்மை, உணர்வுகள், உணர்ச்சிகள், உயர்நிலைக் கல்வி போன்றவை.
இ) குழந்தை. குழந்தை பாக்கியம், குழந்தையால் ஏற்படவுள்ள மேன்மைகள்.
1.Faith in God & Poorva Punya
2.Keen Intelligence, emotions & feelings
3.Children
------------------------------------------------------------
6. ஆறாம் வீடு
அ) நோய்கள், பிணிகள், தீராத வியாதிகள் முதலியன.
ஆ) எதிரிகள்.
இ) கடன்கள். துரதிர்ஷ்டங்கள்.
1.Diseases
2.Enimies
3.Debts & misfortunes
----------------------------------------------------------------
7. ஏழாம் வீடு
அ) திருமணம்
ஆ) மனைவி அல்லது கணவன்
இ) திருமணத்தால் ஏற்படும் சந்தோஷங்கள் அல்லது துக்கங்கள்
1.Marriage
2.Spouse
3.Marital happiness
-----------------------------------------------------------------
8. எட்டாம் வீடு.
அ) ஆயுள்.
ஆ) மரணம். மரணம் ஏற்படும் காலம், ஏற்படும் விதம் முதலியன.
இ) கஷ்டங்கள். சிக்கல்கள். ஏற்றத்தாழ்வுகள். மதிப்பின்மை, அதாவது மதிப்பு, மரியாதை இல்லாத நிலமைகள் போன்றவை
1.Longevity
2.Nature of death
3.Difficulties, disgrace & degradation
----------------------------------------------------------------
9. ஒன்பதாம் வீடு
அ) தந்தை. பூர்வீகச் சொத்துக்கள்
ஆ) அறம், கொடை, தர்மச் செயல்கள் போன்ற நிகழ்வுகள். அவற்றைச் செய்யும் பாக்கியங்கள்.
இ) தலைமை. தலைமை ஏற்கும் வாய்ப்பு, புகழ், சமூக அந்தஸ்து போன்றவை.
1.Father & ancestral properties
2.Righteousness & charity
3.Leadership & fame
-------------------------------------------------------------------
10. பத்தாம் வீடு.
அ) தொழில், வேலை, வணிகம் போன்ற செய் தொழில்கள்.
ஆ) வாழ்க்கை, அதில் வாழ்கின்ற விதம் முதலியன.
இ) அடைய இருக்கும் பெருமைகள். விருதுகள் முதலியன.
1.Occupation or profession
2.Means of livelihood
3.Temporal Honours
-------------------------------------------------------------------
11) பதினொன்றாம் வீடு.
அ) லாபங்கள்.
ஆ) தேடிப் பிடிக்கும், தேடிக் கைவசமாக்கும் செல்வங்கள். பாக்கியங்கள் (Something acquired or gained)
இ) துன்பங்கள், துயரங்கள் இல்லாத நிலைமை. சுதந்திரமான வாழ்க்கை.
1.Gains
2.Acquisitions
3.Freedom from misery
------------------------------------------------------------------
12) பன்னிரெண்டாம் வீடு.
அ) இழப்புக்கள். விரையங்கள்
ஆ) செலவுகள். முக்கியமாக பணத்தை வைத்து ஏற்படும் செலவுகள். நேரத்தை வீணாக்கிச் செலவழிப்பதும் செலவுதான்.
இ) உணவு, உடை, உறக்கம் போன்றவை. அத்துடன் பெண் சுகம்.பெண்ணிற்கு ஆணின் பரிசம். உடல் உறவுகள் போன்றவை.
1.Losses
2.Expenditures
3.Ayana,Sayana,Boga Bagyankal (conjugal pleasures)
----------------------------------------------------------------------
இது முக்கியமான பாடம். இதை நன்றாக மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்,
வாத்தியார்
========================================================