மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.6.09

கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்?


கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்?

தலைப்பு - விடுபட்டவை
கோள்சாரத்தைப் (Transit of planets) பற்றிய புலிப்பாணி முனிவரின் பாடல்:

"கேளப்பா குருமூன்றில் கலை தானெட்டு
.......கேடு செய்யும் சனி ஜென்மம் புந்தி நாலில்
சீளப்பா சேயேழு செங்கதிரோன் ஐந்தும்
......சீறிவரும் பாம்பு நிதியில் தோன்ற
ஆரப்பா அசுரகுரு ஆறிலேற
......அப்பனே திசையுயினுடைய வலுவைப்பாரு
மாளப்பா குற்றம்வரும் கோச்சாரத்தாலே
......குழவிக்கு நிரியாணங் கூர்ந்து சொல்லே!"
-------------------------------------
குரு = 3ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
கலை = சந்திரன் = 8ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சனி = ஜென்மம் = 1ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
புந்தி = புதன் = 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சேய் = செவ்வாய் = 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
செங்கதிரோன் = சூரியன் = 5ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சீறிவரும் பாம்பு = ராகு & கேது = 2ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
அசுரகுரு = சுக்கிரன் = 6ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்

ஜாதகனுக்குத் துன்பம் மிகுந்திருக்கும். அல்லது காரிய சித்தி,
காரிய ஜெயம் இருக்காது.அந்தக் காலகட்டத்தில் நல்ல திசை
அல்லது நல்ல திசையின் புத்தி (Sub period of a benefic planet)
நடந்து கொண்டிருந்தால் இந்தக் கோச்சாரப்பலன் செல்லுபடியாகாமல்
போய்விடும். இல்லையென்றால் படுத்தி எடுக்கும்.

கோச்சாரத்தைவிட தசா புத்திதான் முக்கியமானது!
தசாபுத்தியும் சரியில்லை என்றால் அதுவும் சேர்ந்து கொண்டு சாத்தும்
சாத்தும் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

சரி, இந்தப் பாடலின் முக்கியத்துவம் என்ன?
ஒவ்வொரு கிரகத்திற்கும் கோச்சாரத்தில் 12 ராசிகளிலும் வலம் வரும்
அமைப்பு இருந்தாலும், இந்தக் குறிப்பிட்டுள்ள இடங்கள் மட்டுமே
ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிகக் கேடானது. கிரகத்திற்கல்ல -
அதை அமைப்பாகக் கொண்டுள்ள ஜாதகனுக்குக் கேடானது என்று
வைத்துக் கொள்ளுங்கள். அதைச் சொல்லவே இந்தப் பாடல்

அர்த்தம் ஆகியதா கண்மணிகளா?

வாழ்க வளமுடன்!

30 comments:

  1. Dear Sir,

    This lesson will make us to prepare for the bad times, as per the Kocharam. Pulipani poet and its explanation is very much attractive, in future also, if you continue like this it will make us to listen to your lesson more interesting.

    Note : installing the E-kalapai is leading to crash of my system. so excuse me for writing in Tamglish here.

    ReplyDelete
  2. பாடம் புரிந்தது. இன்னொன்று குறிப்பிட்ட கிரகம் நமது ஜாதகத்தில் கொண்டிருக்கும் யோக அவயோக நிலைகள்.

    ReplyDelete
  3. How to count places for Kocharam. Whether from Janma rasi or from Lagnam. Regards, Sekhar

    ReplyDelete
  4. //
    அர்த்தம் ஆகியதா கண்மணிகளா?//

    ஆகிவிட்டது ஐயா!

    ReplyDelete
  5. /////Blogger Ram said...
    Dear Sir,
    This lesson will make us to prepare for the bad times, as per the Kocharam. Pulipani poet and its explanation is very much attractive, in future also, if you continue like this it will make us to listen to your lesson more interesting.
    Note : installing the E-kalapai is leading to crash of my system. so excuse me for writing in Tamglish here./////

    மோர் இன்ட்டரெஸ்டிங் - அவ்வளவு தானே, அடிக்கடி செய்து விடுகிறேன்.
    உங்கள் விருப்பப்படி பாடம் நடத்துவதுதானே என் வேலை!

    ReplyDelete
  6. ////Blogger ananth said...
    பாடம் புரிந்தது. இன்னொன்று குறிப்பிட்ட கிரகம் நமது ஜாதகத்தில் கொண்டிருக்கும் யோக அவயோக நிலைகள்.//////

    கோச்சாரத்தால் ஏற்படும் நிலைகள் தற்காலிகமானதுதான்!
    சனி என்றால் அதிகபட்சம் இரண்டரை ஆண்டுகள். குரு என்றால் ஓராண்டு!

    ReplyDelete
  7. /////Blogger sekhar said...
    How to count places for Kocharam. Whether from Janma rasi or from Lagnam. Regards, Sekhar//////

    கோச்சாரத்திற்கு ராசியில் இருந்து எண்ண வேண்டும். அதாவது நீங்கள் அஸ்விணி நட்சத்திரம் என்றால் மேஷம்தான் உங்களுடைய ராசி.அதுதான் முதல் இடம்.

    ReplyDelete
  8. /////////Blogger நாமக்கல் சிபி said...
    //
    அர்த்தம் ஆகியதா கண்மணிகளா?//
    ஆகிவிட்டது ஐயா!///////

    அடடே, வாங்க சிபி! உங்களை வகுப்பறையில் பார்த்து எவ்வளவு நாளாகிவிட்டது?
    இப்போதாவது வந்தீர்களே! அதற்குத் தனியாக ஒரு நன்றி!

    ReplyDelete
  9. வாத்தியார் அவர்களுக்கு,

    என்னுடைய ஜாதகத்தில், சந்திரனிலிருந்து(2 ஆம் வீடு) குரு கேந்திரத்தில் ( 6 ஆம் வீட்டில்) இருக்கின்றது. இந்த அமைப்பு க்ஹஜகேசரி யோகத்தை குறிக்கின்றது. ஆனால் குரு ஆறாம் வீட்டில் இருப்பதால், இந்த யோகத்தால் ஏதேனும் பலன் உண்டா?

    ReplyDelete
  10. I am waiting for your lessons about yogas, sir.

    ReplyDelete
  11. புரிந்தது போலவும் இருக்கிறது..

    புரியாதது போலவும் இருக்கிறது..

    ஆனால் நடைமுறையை வைத்துப் பார்த்தால் கனகச்சிதம்..!

    முருகனே துணை..!

    ReplyDelete
  12. /////Blogger saravanan said...
    வாத்தியார் அவர்களுக்கு,
    என்னுடைய ஜாதகத்தில், சந்திரனிலிருந்து(2 ஆம் வீடு) குரு கேந்திரத்தில் ( 6 ஆம் வீட்டில்) இருக்கின்றது. இந்த அமைப்பு கஜகேசரி யோகத்தை குறிக்கின்றது. ஆனால் குரு ஆறாம் வீட்டில் இருப்பதால், இந்த யோகத்தால் ஏதேனும் பலன் உண்டா?////

    உண்டு. ஆறாம் வீடு என்பதால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்!

    ReplyDelete
  13. /////Blogger chaks said...
    I am waiting for your lessons about yogas, sir./////

    வீடுகள் வரிசையில் இன்னும் ஐந்து அல்லது ஆறு பாடங்கள் உள்ளன. அவைகளை எழுதிப் பதிவிட்ட பிறகு, அடுத்து வரவிருப்பது யோகங்களைப் பற்றிய தொடர் பாடம். பொறுத்து இருங்கள்

    ReplyDelete
  14. //////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    புரிந்தது போலவும் இருக்கிறது..
    புரியாதது போலவும் இருக்கிறது..
    ஆனால் நடைமுறையை வைத்துப் பார்த்தால் கனகச்சிதம்..!
    முருகனே துணை..!//////

    மறுபடியும் ஒருமுறை படியுங்கள் தமிழரே! நிச்சயம் புரியும்.

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா,கோச்சாரத்திற்கான கிரக வரிசைப்படம் பொருத்தம்.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  16. ஐயா எனக்கு மேஷ லக்னம் , 2 - சுக்கிரன் , 3 - புதன் , சூரியன், ராகு, 6- சனி, செவ்வாய் ,
    7- குரு , 9- கேது , 11- சந்திரன் , நடப்பு திசை - புதன் திசை புதன் புத்தி , ஆறாம் இடத்தவரின் திசை புத்தி நடை பெறுகிறது . முன்பு ஒருவரிடம் இதில் மோசமான சம்பவங்கள் நடக்கும் என்று சொல்லி இருந்தீர்கள் . எனக்கும் வாய்பு இருகிறதா, அதேபோல் புதன் திசை சனி புத்தி மிகவும் அபயகறமானதா? குறிப்பாக மேஷ லக்னத்திற்கு , என்னுடைய ஆயுள் பலமாக உள்ளதா? எனக்கு மிகவும் ஜோதிடத்தில் ஆர்வம் வந்து விட்டது உங்களால், மிகவும் நன்றி.

    ReplyDelete
  17. //வீடுகள் வரிசையில் இன்னும் ஐந்து அல்லது ஆறு பாடங்கள் உள்ளன. அவைகளை எழுதிப் பதிவிட்ட பிறகு, அடுத்து வரவிருப்பது யோகங்களைப் பற்றிய தொடர் பாடம். பொறுத்து இருங்கள்//

    Thank you sir

    ReplyDelete
  18. Dear sir,

    Your blog is so much informative.

    Whether Trikonam and kandram house number is to be counted from lagnam or chandarn rasi?

    ReplyDelete
  19. Dear Sir,

    Thanks for the posting.

    One question not related to this topic...If venus and moon in 7th house and if saturn aspect that from 5th house....what it implies to spouse or marital life?

    -Shankar

    ReplyDelete
  20. ////Blogger dhanan said...
    வணக்கம் ஐயா,கோச்சாரத்திற்கான கிரக வரிசைப்படம் பொருத்தம்.
    அன்புடன்,
    மதுரை தனா.////

    நன்றி தனா!

    ReplyDelete
  21. ////Blogger பிரகாஷ் துரைசாமி said...
    ஐயா எனக்கு மேஷ லக்னம் , 2 - சுக்கிரன் , 3 - புதன் , சூரியன், ராகு, 6- சனி, செவ்வாய் ,
    7- குரு , 9- கேது , 11- சந்திரன் , நடப்பு திசை - புதன் திசை புதன் புத்தி , ஆறாம் இடத்தவரின் திசை புத்தி நடை பெறுகிறது . முன்பு ஒருவரிடம் இதில் மோசமான சம்பவங்கள் நடக்கும் என்று சொல்லி இருந்தீர்கள் . எனக்கும் வாய்பு இருகிறதா, அதேபோல் புதன் திசை சனி புத்தி மிகவும் அபயகரமானதா? குறிப்பாக மேஷ லக்னத்திற்கு , என்னுடைய ஆயுள் பலமாக உள்ளதா? எனக்கு மிகவும் ஜோதிடத்தில் ஆர்வம் வந்து விட்டது உங்களால், மிகவும் நன்றி.////

    ஆயுள் பாவத்திற்கும் ஆறாம் இடத்தின் தசா புத்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதற்காக குழப்பிக்கொள்கிறீர்கள்? எல்லாவற்றையும் ஆண்டவனிடம் விட்டுவிட்டு நிம்மதியாக இருங்கள்

    ReplyDelete
  22. Blogger NSK said...
    Dear sir,
    Your blog is so much informative.
    Whether Trikonam and kandram house number is to be counted from lagnam or chandarn rasi?

    அவைகளை லக்கினத்தில் இருந்து எண்ண வேண்டும்!

    ReplyDelete
  23. Blogger hotcat said...
    Dear Sir,
    Thanks for the posting.
    One question not related to this topic...If venus and moon in 7th house and if saturn aspect that from 5th house....what it implies to spouse or marital life?
    -Shankar//////

    இந்தப் பாடம் கோச்சாரத்தைப் பற்றியது. நீங்கள் கேட்பது ஏழாம் பாவத்தைப் பற்றியது.
    அதற்கு இன்னும் பல விஷயங்களை வைத்து முடிவிற்கு வரவேண்டும்.உதாரணம் லக்கினாதிபதி ஏழாம் அதிபதி, சுயவர்க்கப்பரல்கள். அஸ்தமனம் என்று பல விஷயங்கள் உள்ளன!

    ReplyDelete
  24. வாத்தியார் அவர்களுக்கு,

    எனக்கு விருச்சிக லக்னம்,
    என்னுடைய 3 ஆம் வீடு (sani)அதிபதியும், 9 ஆம் வீட்டு (சந்திரன்)அதிபதியும் பரிவர்த்தனை சைதுள்ளன.
    இதனால் என் திருமணம் லேட் ஆகுமா?
    இதற்க்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா?

    ReplyDelete
  25. Dear sir,

    Am mailing for u for the past one month.....u said ill reply in 1 week.but i didnt receive any mail from u sir.........

    so please reply soon im waitin.....


    I ASKED ONE QUESTION onli sir....

    ReplyDelete
  26. dear sir for a person who was born in 1954,coming shani peyarchi will be what suttru [2nd or 3rd]'he has tulam rasi magara lagna shani and chandiran in10th place How will be the forecoming shani peyarchi.please reply me sir

    ReplyDelete
  27. Dear Sir

    Kochara padam arumai...niraya kochara palan patri therindhu kolla Aarvam sir....

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com