கிழியும் ஆனால் கிழியாது - பகுதி 2
இதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள், படித்து
விட்டு வாருங்கள் அப்போதுதான் இந்தப் பதிவில்
சில வரிகள் புரியும்!
-------------------------------------------
"அய்யா வகுப்பில் ஜோதிடப்பாடத்தை ஏன் தொடர்ந்து
எழுத வில்லை? அடுத்த பாடம் எப்போது? " என்று
பலபேர்கள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்கள்
"நன்றாக வந்து கொண்டிருக்கிறது - பாடம் நடத்தும் முறை
அருமையாக இருக்கிறது" என்று வகுப்பிற்கு வந்து போய்க்
கொண்டிருந்த பலரும் சொல்ல, சதாப்தி விரைவு வண்டியைப்
போல சென்று கொண்டிருந்த அந்தத் தொடரை முக்கியமான
பிரச்சினை ஒன்றின் காரணமாக நிறுத்திவைக்கும்படி
ஆகிவிட்டது.
என்ன பிரச்சினை? சொல்கிறேன்.
நமக்குத் தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிக்கொடுப்போம்
என்ற சிந்தனையில்தான் படிப்பதற்கு மட்டுமல்ல சொல்லிக்
கொடுப்பதற்கும் சற்றுச் சிரமமான ஜோதிடப் பாடத்தைக்
கையில் எடுத்தேன்.
ஜோதிடம் ஒரு கடல். எததனை வருடங்கள் வேண்டு
மென்றாலும் அதைப் பற்றிச் சுவாரசியமாகத் தொடர்ந்து
எழுதலாம்
நூற்றுக் கணக்கான celebrities எனப்படும் பிரபலங்களின்
ஜாதகங்களை உதாரணமாகக் கொண்டு கற்றுணரலாம்.
உதாரணங்களைச் சான்றுடன் படிக்கும்போது மனம்
நெகிழப் படித்துத் தேறலாம்.
நான் ஜோதிடப் பதிவைத் துவங்கும் போது பலமான
யோசனைகளுக்குப் பிறகுதான் துவங்கினேன்.
ஆரம்பத்தில் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்
களிடமிருந்து எதிர்ப்பு வந்தது அவர்களைக் கண்டு
கொள்ளாமல், என் பணியைத் தொடர்ந்து செய்தேன்.
முப்பத்தியிரண்டு அத்தியாயங்கள்வரை எழுதினேன்.
இன்னும் பதினெட்டு பகுதிகள் வரை எழுதினால்
அடிப்படைப் பாடங்கள் முடிந்து விடும். அடிப்படைப்
பாடங்கள்வரை நடத்தலாம் என்றிருந்தேன்
அதற்குப் பிறகு advanced study எனப்படும் மேல்
நிலைப் பாடங்களுக்கு - உரிய புத்தகங்களின் பெயர்களைக்
கொடுத்து விருப்பப்படுபவர்களைப் படித்துக் கொள்ளச்
சொல்லலாம் என்றிருந்தேன்.
'ஆசான் இல்லாத வித்தைபாழ்' என்னும் மொழிப்படி
எங்களால் படித்துப் புரிந்து கொள்ளமுடியாது - அதையும்
எழுதுங்கள் என்ற வேண்டுகோள் வந்தால், அதை
அந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும்
எண்ணியிருந்தேன்
Advance study யின் முக்கியமான பாடங்களை
ஐந்து பகுதிகளாகப் பிரித்து எழுதலாம்.
100 முதல் 150 அத்தியாயங்கள் வரை வரும்
Each chapter 4 pages - A4 size paper அளவு எழுத
வேண்டியது வரும். அதுவும் ஒரு உத்தேசமான
அளவுதான். அந்த அளவிற்கு எழுதி, தட்டச்சு செய்து
பதிவிடச் சாத்தியமாகுமா என்றால் கொஞ்சம்
சிரமம்தான். படிப்பவர்கள் கொடுக்கும் உற்சாகத்தைப்
பொறுத்து அதுவும் சாத்தியமே!
சாத்தியம் இல்லாதது என்று எதுவுமே இல்லை!
ஜோதிட வகுப்புக்கு வந்தவர்களீல் Blogger account
வைத்திருந்து உள்ளே வந்தவர்களைவிடப் புதுமுக
வாசகர்கள்தான் ஏராளம். அவர்கள் எல்லாம் தமிழ்
மணத்தின் உள்ளே வந்து செல்கின்றவர்கள். அதோடு
ஒருவருக்கு ஒருவர் சொல்லி அவர்கள்
வருகையும் அதிகமாகிக் கொண்டே போனது.
(Hit counter மூலம் நான் அறியவந்தேன்)
நிறையப் பெண் வாசகர்களும் வந்து
படித்துக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு வந்த மின்னஞ்சல்களில் பாதிக்கும் மேல்
ஆங்கிலத்தில்தான் வந்தன. காரணம் தமிழில் தட்டச்ச
வசதி இல்லை அல்லது தெரியாது அய்யா என்று
அவர்களே சொல்லியிருந்தார்கள்
தினமும் சந்தேகம் கேட்டுப் பல மின்னஞ்சல் வரும்
எழுதிய பாடங்களிலும் கேள்விகள் கேட்டார்கள்.
அதோடு எழுதப்பட்ட பாடத்திற்குச் சம்பந்தமில்லாமலும்
கேள்விகள் கேட்டார்கள்
சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலை மின்னஞ்சலில்
சொல்லும்படி ஆயிற்று. பொறுமையோடு செய்தேன்
அடுத்து இரண்டொருவர் தங்கள் ஜாதகக் குறிப்புகளை
அனுப்பி பலன் கேட்டார்கள். சொன்னேன்.
ஆனால் அது வளர்ந்து கடைசியில் ஜாதகக் குறிப்புகளை
அனுப்பிப் பலன் எழுதுங்கள் என்ற வேண்டுகோளுடன்
வரும் கடிதங்கள் அதிகமாகிவிட்டன.
சரி பதில் எழுதாமல் இருப்பது மனிதநேயம் அல்ல,
நேரம் கிடைக்கும்போது எழுதுவோம் என்றால் சம்பந்தப்
பட்டவர்களிடமிருந்து reminders வந்து குவிய
ஆரம்பித்துவிட்டன
கடைசியில் என்னுடைய மற்ற வேலைகளைப் பாதிக்கும்
நிலைமை ஏற்பட்டு விட்டது.
அதோடு சிலர் தங்கள் குழந்தைகளின் பிறப்பு விவரங்களைக்
கொடுத்துப் பலன் எழுதும்படி வேண்டினார்கள்.
குழந்தைகளுக்குப் பன்னிரெண்டு வயது வரை தனிப்பலன்
எதுவும் கிடையாது. அவர்களூடைய பெற்றோர்களின் ஜாதகப்
பலன்தான் அவர்களுக்கும்!
இதை எழுதினால் உடனே தங்களுடைய ஜாதகத்தை அனுப்பி
குழந்தைக்குரிய பிற்காலப் பலனோடு தங்களுடைய ஜாதக
பலன்களையும் எழுத வேண்டினார்கள்.
நேரமின்மையால் தர்ம சங்கடமாகிவிட்டது
அதைவிட வேறு ஒரு பிரச்சினையும் வந்தது.
தங்கள் காதல் நிறைவேறுமா? என்று கேள்வி கேட்டுப்
பெண்கள் உட்பட பலர் எழுத ஆரம்பித்தனர்
நான் அவர்களுக்குப் பதில் சொல்வதா? அல்லது
அவர்களைப் பெற்று வளர்த்து ஆளாகிய தெய்வங்களை
நினைத்துப் பதில் சொல்லாமல் விடுவதா?
எதைச் செய்வது தர்மம்? - சொல்லுங்கள்!
காதல் விவகாரம் - அதன் outcome எனப்படும் கடைசி
முடிவு எல்லாம் ஜாதகத்தைப் பார்த்தால் தெரியவரும்.
கோடிட்டுக் காட்டலாம்.
சாதாரண ஜோதிடனாக இருந்தால் ஜாதகத்தைப்
பார்த்துவிட்டு எழிற்குரியவன் அந்த வீட்டிற்குப்
பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கிறான்
ஆகவே உனக்கு காதல் திருமணம்தான்.
எழிற்குரியவன் சுக்கிரனோடு சேர்ந்திருக்கிறான்
ஆகவே உனக்கு உன் எண்ணப்படிதான் திருமணம்
என்று சொல்லி விட்டுப்போய் விடுவான்.
காதலர் இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்து,
அந்தக் காதல் நிறைவேறுமா? நிறைவேறினாலும்
இருவரும் சேர்ந்து வாழ்வார்களா? இல்லை உரசலில்
முடிந்து விடுமா? என்று எல்லாம் அறிந்து சொல்ல
மாட்டான்.
டவுசர் - கிழியும் ஆனால் கிழியாது என்ற நிலைமை
காதலுக்கும் உண்டு. காதல் மகிழ்ச்சியில் முடியும்
ஆனால் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக
இருக்காது என்ற நிலைமை 25% காதல்களில் உண்டு.
திருமணத்திற்குப் பிறகு ஒருவரையொருவர் முழுதாக
அறியும் போது, பலவீனங்கள் தெரியும் போது
மனவாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டுவிடும். அது
சமயங்களில் முறிவுவரை கொண்டுபோய் விட்டுவிடும்.
ஜாதகத்தைப் பார்ப்பவன் இதையும் பார்த்துச் சொல்ல
வேண்டுமா இல்லையா?
Arranged Marriage களிலும் இது உண்டு என்றாலும்,
திருமணங்கள் தோற்கும்போது உதவிக்குப் பெற்றோர்
உற்றார் என்று அனைவரும் வருவார்கள். காதல்
திருமணங்கள் தோற்கும்போது தனிமைதான் துணைக்கு
வரும்!
பெற்ற கடனுக்காக சிலரைப் பெற்றோர்கள்
மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம்
அதனால்தான் கவியரசர் தன்னுடைய பாடல் வரிகளில்
இப்படிச் சொன்னார்
"காதலை இலக்கியத்திற்கு விட்டு விடுங்கள்
கல்யாணத்தைப் பெற்றோரிடம் விட்டு விடுங்கள்!"
இதையெல்லாம் அவர்களிடம் சொல்வது முறையற்ற
வேலையாகிவிடாதா?
----------------------------------------
வலையில் எழுதுவது எனக்குப் பொழுது போக்கு!
ஒரு ஆர்வத்தில் ஆதங்கத்தில் எழுதுகிறேன்
நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல!
எனக்கு வேறு தொழில் உள்ளது.
அதை நான் கவனிக்க வேண்டாமா?
நாள் ஒன்றிற்கு 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே
பதிவுகளுக்காக நேரம் ஒதுக்க முடியும்.
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் மட்டுமே
வகுப்பறையில் எழுத முடியும்.
பாடங்களைப் பதிதல், பின்னுட்டங்களுக்குப் பதில்
சொல்லுதல். மின்னஞ்சலில் வரும் சந்தேகங்களுக்குப்
பதில் சொல்லுதல். அதற்கும் மேலாக, பிறந்த
விவரங்களை அனுப்புபவர்களூக்கு softwareல் ஜாதகம்
கணித்து, ஆராய்ந்து பார்த்துப் பதில் எழுதுதல்
என்று பளு ஏறிக்கொண்டே போனால் நான் என்ன
செய்ய முடியும்?
ஜோதிடப் பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில்
தினமும், சந்தேகங்கள் மற்றும் ஜாதகப் பலன்களைக்
கேட்டு என்று சராசரியாகப் பத்திற்கும் மேற்பட்ட
கடிதங்கள் - மின்னஞ்சலில் வந்தன.
அப்படி வந்ததில் பதில் அனுப்பியதுபோக அனுப்ப
வேண்டியவை என்னுடைய மின்னஞ்சல் பெட்டியில்
(Mail Box) இன்றும் நிறைய உள்ளன!
அவ்வளவு பேர்களுக்கும் எப்படி பதில் எழுதுவது?
நேரததிற்கு எங்கே போவது?
அதனால்தான் ஜோதிடப் பாடத்தை நிறுத்தி வைத்திருக்கிறேன்
இப்போது, சார் என்ன ஆயிற்று?
மீண்டும் ஜோதிடப் பாடம் எப்போது?
என்று கேட்டு நிறைய மின்னஞ்சல்கள் வந்து
கொண்டிருக்கின்றன!
அவர்களுக்கெல்லாம் இதுதான் பதில்
பாடம் - முடிந்து விட்டது ஆனால் முடியவில்லை!
(அப்பாடா - தலைப்பை நியாயப்படுத்தும் வரியை
எழுதிவிட்டேன்)
-----------------------------------------
என் நிலைமையைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்
என்று நினைக்கிறேன். என்ன செய்யலாம் - உங்கள்
மேலான யோசனைகளைச் சொல்லுங்கள்!
பின்னூட்டமாகவோ அல்லது மின்னஞ்சலிலோ
உங்கள் பதிலை அனுப்பலாம்.
கால அவகாசம் பதினைந்து நாட்கள்.
எதற்கு பதினைந்து நாட்களா?
இன்று இந்தப் பதிவைப் படிக்காதவர்
அடுத்த வாரம் படிக்க நேரிடலாமில்லையா?
அதனால் பதினைந்து நாட்களுகுள் உங்கள்
பதிலை எழுதுங்கள்
நட்புடன்
வகுப்பறை வாத்தியார்
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்

தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
25.9.07
கிழியும் ஆனால் கிழியாது - பகுதி 2
Subscribe to:
Post Comments (Atom)
நிஜமாகவே, உங்களால் சிரிக்க வைக்கவும் முடியும் என்கிற மாதிரி இருக்கிறது இந்த பதிவு.
ReplyDelete"காதல் கூடுமா?"- செம ஜோக்.
உங்கள் நிலைமையை அறிந்துகொண்டேன்.
உங்கள் ஜாதக பதிவுகளை என்னால் கொஞ்சம் தான் follow up செய்ய முடிந்தது.இப்படிப்பட்ட சந்தர்பத்தில் ஒரு நாள் "தமிழோவிய" த்தில் பார்த்துக்கொண்டிருக்கும் போது அங்கும் ஜாதகம் பற்றி சொல்லியிருந்தது.எனக்கும் மிகவும் எளிதாக தெரிந்தது.அதில் சொல்லியவற்றை எனக்கு புரிகிற மாதிரி ஆட்டோகேட் மூலம் படம் எல்லாம் போட்டு வைத்து தொடரலாம் என்று பார்க்கும் போது அதில் 2000 வருட பஞ்சாங்கம் மூலம் விளக்கம் சொல்லியிருந்தது.அந்த வருட பஞ்சாங்கத்துக்கு எங்கு போவது?
ஆர்வத்தை கொஞ்ச நாள் தள்ளிப்போட்டுவிட்டேன்.
உங்க நிலமை நல்லாவே புரிகிறது....எதை தின்றால் பித்தம் தீரும் என்ற நிலையில் உள்ள மக்கள் உங்களுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteஇது போன்று ஒரு பதிவில் மின்னஞ்சல் அனுப்பிய எல்லோருக்கும் ஒரு "மன்னிக்கவும்" சொல்லி நிராகரித்துவிட்டு, பதிவினை உங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயத்தில் தொடருங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
வாத்தியாரைய்யா,
ReplyDeleteஎன்னங்க நீங்க, ஏற்கனவே முடிவான பாடதிட்டப்படி பாடம் எடுப்பீங்களா இல்லை நடுவுல நெறைய பேரு தனி டியூசன் எடுக்க சொல்றாங்க அப்படீன்னு பள்ளிக்கூடத்துல பாடம் எடுக்கறதை நிறுத்திடுவீங்களா?
இப்ப என்கிட்ட கூடத்தான் தங்களுக்கு தேவையான மென்பொருள் நிரல் எழுதித் தரச் சொல்லி தினம் பல மடல் வருது...
நான் அவங்க எல்லாருக்கும் சொல்ற பதில் இது தான் "நிரல் எழுதித் தரேன் ஆனா நிரல் எழுதித் தரமாட்டேன்" (அதாவது எப்பவாவது கண்டிப்பா செய்வேன். ஆனா அவங்க கேக்கற அவசரத்துக்கு முடியாது) மற்றபடி எனது நேரம் மற்றும் விருப்பப்படிதான் எனது நிரல் திட்டங்களை செயல்படுத்துவேன்.
அது போல இந்த வகுப்பறையை ஆரம்பிக்கும் போது உங்கள் பாட திட்டம் என்னவோ அதன்படி நீங்கள் செயல்பட வேண்டும். மற்ற எதையும் காதில் (மின்னஞ்சல் பெட்டியில்) போட்டுக் கொள்ள வேண்டாம்.
பாடத்தை தொடர்ந்து நடத்துங்கள். சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் கொடுங்கள். மற்றவர்களுக்கு ஜாதகம் பார்ப்பதால்தான் நேரம் எடுக்கிறது போலும். அவர்களை பொருமையாக தங்களது ஜாதகத்தை படித்துக் கொள்ள சொல்லுங்களேன்.
ReplyDelete///Vaduvur Kumar said: நிஜமாகவே, உங்களால் சிரிக்க வைக்கவும் முடியும் என்கிற மாதிரி இருக்கிறது இந்த பதிவு.///
ReplyDeleteஎன்ன சார், இப்படிச் சொல்லிவிட்டீர்கள்
அடிப்படையில் நான் ஒரு நகைச்சுவையாளன்
என் பழைய பதிவுகளைப் பாருங்கள் நிறைய நகைச்சுவைக் கதைகளை எழுதியுள்ளேன்
காளி என் ரத்தினம் என்.எஸ்.கே துவங்கி
இன்றைய ஸ்டார்களான, விவேக் வடிவேலு கருணாஸ் வரை
அத்தனை காமெடி நடிகர்களும் என் உள்ளத்தில்
குடி கொண்டு - அனுதினமும் - லூட்டி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அது எங்கே உங்களுக்குத் தெரியப் போகிறது!
1. திருவாளர் மதுரையம்பதி
ReplyDelete2. திருவாளர் கோபி
உங்கள் பின்னூட்டத்திற்கும் மேலான யோசனைகளுக்கும் நன்றி!
மிஸ்டர் விக்னேஸ்வரன் உங்களுடைய யோசனைககு் நன்றி!
ReplyDeleteஐயா, தவறாமல் படித்து வருகிறேன். முதலில் எனக்கு ஓர் ஐயம் இருந்தது, எப்படி நம்ம மக்கள் "என் ஜாதகத்தைப் பார்க்கவும்" என்று பின்னூட்டம் போட்டு தள்ளாமல் இருக்கிறார்கள் என்று... இப்பொழுது புரிகிறது.
ReplyDeleteஇந்த உரலில் ஜாதகம் கணித்தல், தசாபுக்தியுடன் இலவசம்.
ஆனால், உங்களால் முடியாது என்றால் முடியாது எனச் சொல்லுவதே உசிதம் என்று தோன்றுகிறது. சமையல் குறிப்பு சொல்லுபவர் எல்லாருக்கும் சமைத்துக் கொடுக்க முடியாது, அவர் வீட்டில் யார் பொங்கிப் போடுவார்கள் (இந்த உதாரணம் தான் தோன்றியது;))
தயவு செய்து உங்கள் பதிவுகளைத் தொடருங்கள். என்னைப் போன்ற மாணாக்கர்கள் இதனால் ("எழுத்தறிவித்தல் போன்ற") பயன் பெறுவோம்.
நன்றி
ஐய்யா,
ReplyDeleteநீங்கல் உங்கள் நிலைமையை சொல்லிவிட்டீர்கள். கஷ்டம்தான். முதல்ல இந்த வகுப்பு அறைக்கு வாருங்கள், பின்பு நேரம் கிடைக்கும் போது உங்கள் விருப்பப் படி நிதானமா பதில் போடலாமே.. நானும் கொஞ்ச நாளா காத்துகிட்டு இர்க்கேன் இத படிச்சாவது ஒருசில விஷயங்களை தெரிஞ்சுக்கலாமேனு.