++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடம் பெரிய கடல். அதை முழுமையாக அறிந்தவர்கள் யாருமில்லை. சரவளி, காலப்பிரகாசிகா, பலதீபிகா, கேரள மணி கண்ட ஜோதிடம், குமாரசுவாமீயம், புலிப்பாணி ஜோதிடம் என்று எண்ணற்ற ஜோதிட நூல்கள் உள்ளன.
அத்தனை நூல்களையும் தேடிப்பிடித்துப் படித்துத் தெளிவது அல்லது தேறுவது என்பது சிரமமான செயல். அப்படியே தேடிப்பிடித்துப் படித்தாலும், படித்த அனைத்துமே மனதில் முழுமையாகத் தங்குமா என்பது கேள்விக்குரிய விஷயம்.
திரும்பத் திரும்ப படித்து முடித்து மனதில் வைப்பதற்குள் காலம் முடிந்துவிடும். சனீஷ்வரன் கால் நோட்டிஸ் அனுப்பிவிடுவான். அவனிடம் வாய்தா வாங்க முடியாது. லஞ்சம் கொடுத்து அவனைச் சரிகட்டவும் முடியாது!
மருத்துவர்களில், பல் மருத்துவர், கண் மருத்துவர், நரம்பியல் மருத்துவர், இதயநோய் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், புற்று நோய் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தைகளுக்கான மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர் என்று பல துறைகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
சளி, காய்ச்சல், வயிற்றுவலி, மூட்டு வலி போன்ற சில்லரை உபாதைகளுக்கென்று பொது மருத்துவர்களும் உள்ளார்கள்.(General Physician)
அதுபோல ஜோதிடத்தில், படித்ததுடன், தங்கள் அனுபவத்தால், சில பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஜோதிடர்கள் பலர் உள்ளார்கள்.
தனிமனிதக் கஷ்டங்களை ஆராய்ந்து, என்ன காரணம்? எப்போது அது நிவர்த்தியாகும் என்பதைச் சொல்வதற்குத் தனித் திறமை வேண்டும். திருமணம், குழந்தைப்பேறு, நோய்களுக்கான தீர்வுகள் என்பது போன்ற விஷயங்களில் தனித் திறமை காட்டுபவர்கள் இருக்கிறார்கள். ஆயுளைக் கணித்து, இந்தத் தேதிவரைதான் ஜாதகன் உயிருடன் இருப்பான் என்பதைச் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.
மனநோய்கள், மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளின் ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்வதற்கு அசாத்தியத் திறமை வேண்டும்.
முற்காலத்தில் அத்தனை சிகிச்சைகளையும் மேற்கொண்ட ஒரு அதிசய மருத்துவர் இருந்தார். அவர் ஒருவரே அனைத்துவிதமான சிகிச்சைகளிலும் கரைகண்டவர். மாமேதை. தன்னுடைய 52 வயதில் அவர் இறந்துவிட்டார்
அவர் இறந்தது அன்றைய மருத்து உலகிற்கு பேரிடியாக இருந்தது அவருடைய காலம் 1882 முதல் 1934 வரை தஞ்சையில் பிறந்தவர். லண்டனில் மருத்துவம் கற்றவர். இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர். மருத்துவமனையின் நுழைவாயிலில், அவருடைய சிலை உள்ளது. அடுத்தமுறை சென்னை சென்றால் சிலையைப் பார்த்துவிட்டு வாருங்கள். அவர் ஒரு அபூர்வப் பிறவி. அவரைப் பற்றி நெஞ்சை நெகிழவைக்கும் உண்மைக் கதை ஒன்று உள்ளது. அதைப் பின்னால் எழுதுகிறேன்
அவருடைய பெயர் டாக்டர் எஸ்.ரங்காச்சாரி!
அவரைப்பற்றிய மேலதிகத்தகவல்களுக்கு இங்கே சென்று பாருங்கள். அதற்கான இணையதள முகவரி இது!
http://www.indianetzone.com/24/dr_s_rangachari_physician_madras_presidency.htm
அவரைப்போல ஜோதிட மேதைகளிலும் சில அபூர்வப் பிறவிகள் இருந்தார்கள். அவர்களைப் பற்றியும் பின்னால் எழுதுகிறேன்.
இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். நீங்கள் ஜோதிடரிடம் சென்றால் உங்கள் பிர்ச்சினைகளைச் சொல்லி அதற்குத் தீர்வு கேட்க வேண்டுமே தவிர, எனக்கு என்ன பிரச்சினை? சொல்லுங்கள் பார்க்கலாம் என்றோ - அல்லது என்னுடைய கடந்த காலத்தைக் கூற முடியுமா? எதிர் காலத்தைக் கூற முடியுமா? என்றோ கேட்காதீர்கள். அது முட்டாள்தனமானது. ஏனென்றால் இன்றுள்ள ஜோதிடர்களில் பலர் General Physician மட்டுமே! உங்கள் பிரச்சினைகளைச் சொன்னால், அதை ஆராய்ந்து சொல்லும் வல்லமை இருந்தால் சொல்லுவார். இல்லையென்றால் உங்களை அனுப்பிவிடுவார். அதை மனதில் கொள்ளூங்கள்
ஜோதிடத்தின் முதல் விதி என்ன தெரியுமா? என்ன நடக்கலாம் என்பதைச் ஜோதிடர் சுட்டிக் காட்டலாம். அறுதியிட்டு அதாவது அடித்துச் சொல்லக்கூடாது. அதைச் சொல்வதற்கு அல்லது நடத்திக் காட்டுவதற்கு ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் இறைவன்!
An astrologer only can indicate what is going to take place and he can not certainly say what is going to happen இந்த வசனத்திற்கு அர்த்தம் புரிகிறதா கண்மணிகளே?
_____________________________________________________________________
”வாத்தி (யார்) எதற்காக இது?”
“நம் வகுப்பறைக் கண்மணிகளில் ஒருவர், வழக்கமாக மற்றவர்கள் கேட்பதைப் போல கேட்காமல், புது டெக்னிக்கில் கேள்வியைக் கேட்டிருந்தார். அதற்காகக்தான் இந்தப் பதிவு!"
"என்ன கேட்டிருந்தார் என்று சொல்லுங்கள்!”
“எனக்கு எப்போது திருமணம் ஆகும்? நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். எங்கள் காதல் நிறைவேறுமா? என் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது, எப்போது எனக்குத் திருமணமாகும்? என்றுதான் எல்லோரும் கேட்பார்கள். அவர் ஒரு பிறப்பு விவரத்தைக் கொடுத்து (That is birth details), “இந்த ஜாதகருக்கு எப்போது திருமணமாகும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று புது டெக்னிக்கில் கேட்டிருந்தார். அதாவது அதைச் சாலஞ்சாக எடுத்துக்கொண்டு, அடித்துப் பிடித்து நான் பதில் சொல்வேன் என்று நினைத்தார் போலும். சவால்களை எல்லாம் எதிர்கொள்ள எனக்கு நேரம் இல்லை. எதிர்கொண்டு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை. அவற்றை எல்லாம் என் நண்பன் பழநிஅப்பனிடம் விட்டுவிடுவேன். அவன் பார்த்துக் கொள்வான்”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்!
இது ஒரு பெண்ணின் ஜாதகம்!

கேள்வி இதுதான்:
1. இந்தப் பெண்ணிற்குக் காதல் திருமணமா? அல்லது பெற்றோர் நிச்சயித்தபடி திருமணமா?
2. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்குமா?
400 பாடங்களை நடத்தியுள்ளேன். அனைத்தையும் படித்துள்ளவர்கள், யோசித்துப் பார்த்துப் பதிலை ஊகித்துக் கொண்டு, தங்கள் ஊகம் சரிதானா? என்பதை ஸ்க்ரோல் டவுன் செய்து பார்க்கலாம்.
பதில் கீழே உள்ளது!
காதல் திருமணம். பிறகு அது பிணக்கத்தில் முடிந்து இறுதியில் விவாகம் ரத்தாகிவிட்டது. (Love marriage which ended in separation and then in divorce)
1. ஏழாம் அதிபதி குரு நீசம். அத்துடன் எட்டாம் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டார்.
2. ஆறாம் அதிபதி (number one villain in a horoscope) ஏழில் உட்கார்ந்திருக்கிறார். உடன் ராகுவின் கூட்டணி வேறு!
3. அயன, சயன, போகபாக்கியஸ்தானத்தில் சனி. அத்துடன் அவர் எட்டாம் அதிபதி. சயனம் என்றால் நித்திரை. போக பாக்கியம் என்றால் படுக்கை சுகம். பெண் ஆணுக்குப் படுக்கையில் தரும் சுகம். ஆணால் பெண்ணிற்குப் படுக்கையில் கிடைக்கும் சுகம்
4. திருமணம் ஆறாம் அதிபதியின் திசையில் நடந்தது. திருமணம் ஊற்றிக்கொண்டதுடன், விவாகம் ரத்தானது வரை அனைத்தும் அதே செவ்வாய் திசையில்தான்.
அம்ம்ணி பரணி நட்சத்திரம். பரணி தரணி ஆளும் என்பார்கள். தரணி
ஆண்டார். ஆனால் திருமண் வாழ்க்கை அவுட்டாகுவிட்டது. இரண்டாம் அதிபதி அதாவது குடும்ப வாழ்க்கை அதிபதி அந்த வீட்டிற்குப் பத்தில் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது. ஜாதக விநோதங்களில் இதுவும் ஒன்று!
ஒரு கிரகம் நீசமானால் பிரச்சினைதான். அதுபோல ஆறாம் வீட்டுக்காரன் எங்கே வந்து உட்கார்ந்தாலும், அந்த வீட்டில் (House) பிரச்சினைதான்.
காதல் திருமணம் என்பதால் அந்தப் பெண் பொருத்தம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பார்த்திருந்தாலும் ஜோதிடர், திருமணம் நடக்கும் காலத்தைத்தான் சொல்லியிருப்பார். பிரச்சினை என்று சொன்ன பிறகுதான் மற்றவற்றை அலசி, அது நீடிக்கும் வாய்ப்பில்லை, ஊற்றிக் கொண்டுவிடும் என்று சொல்லியிருப்பார். இரண்டையும் முதலியே சொல்லியிருந்தால், அந்தப் பெண் அவனை மணந்து கொண்டு அவதிப்பட்டிருக்க மாட்டாள் இல்லையா?
அவதிப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கும்போது யாரைப்போய் சாலஞ்ச் செய்ய முடியும்? விதியையா? விதியைச் சாலஞ் செய்ய எந்தக் கொம்பனாலும் முடியாது. விதி அடித்துப் படுக்க வைத்துவிடும். எழுந்திருக்கவே முடியாது
“ஊழிற் பெருவலி யாவுள” என்று அய்யன் வள்ளுவர் சொன்னதையும், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் சொன்ன, Nothing is stronger than Destiny என்பதையும், மறக்காமல் எப்போதும் நினைவில் வையுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
கேட்பதில் உங்களுக்குத் தெரிந்த டெக்னிக் எனக்குத் தெரியாதா?

V