மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 91 - 100. Show all posts
Showing posts with label Lessons 91 - 100. Show all posts

24.7.08

ஜோதிடப் பாடத்தின் 100வது பதிவு!: யார் செல்வந்தன்?

என்னுடைய நண்பர் ஒருவர் கேட்டார்,"யார் செல்வந்தன்?"

நான் சொன்னேன் "செல்வம் இருப்பவன் எல்லாம் செல்வந்தன் இல்லை!"

அவர் விடவில்லை,"அது தெரியும் ; அதனால்தான் கேட்கிறேன்!"

"யாருக்குக் கடனும், நோயும் இல்லையோ அவன்தான் செல்வந்தன்!"
என்று நான் சொன்னேன்

"அதுதான் உண்மை! Health is welath!" என்று சொன்ன அவர், அதற்குப்
பிறகு ஒரு மணி நேரம் அது பற்றிப் பேசிவிட்டுத்தான் என்னை விட்டார்.

இன்று கோவையிலும், திருப்பூரிலும் பெரிய அளவில் தொழில் செய்பவர்
களுக்கு, சொத்துக்களைப் போலவே கோடிக்கணக்கில் வங்கிக் கடன்கள்
உள்ளன. 24 மணி நேரமும் பணத்தை ஈட்டும் சிந்தனையிலேயே இருப்பதால்
சரியான நேரத்தில் உணவு உண்ணும் பழக்கமோ அல்லது தேவையான
அளவு தூக்கமோ இல்லாமல் தவிப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்
பலருக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய்கள் உண்டு!

பணத்தைத் துரத்தும்போது, நோய்களையும் சேர்த்துதான் துரத்துகிறோம்
என்பதைப் பலர் உணர்வதில்லை!
--------------------------------------------------------------
இப்போது பாடம்!

தலைப்பு: ஆறாம் வீடு (The sixth house in a birth chart)

ஆறாம் வீடு என்பது லக்கினத்திலிருந்து, லக்கினத்தை முதலாகக் கொண்டு
எண்ணப்படும்போது ஆறாவதாக வருவது.

ஆறாம் வீடு என்பது ஒரு ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய நோய், கடன், எதிரி
மற்றும் துரதிர்ஷ்டங்களைப் (Diseases, Debts, Enemies and Misfortunes)
பற்றிச் சொல்லும் வீடு.

நோய்கள் இரண்டு வகைப்படும். தீர்க்கக்கூடிய நோய். தீர்க்க முடியாத நோய்!
தீராத நோய்களைப் பிணி என்பார்கள். உதாரணம்; ஆஸ்த்மா!

ஆனால் கடன் ஒரு வகைக்குள் அடங்கிவிடும். கடன் தீர்க்கக்கூடியதுதான்.
ஆசைகளையும், தேவைகளையும் அடக்கிக் கொண்டால், கடனே ஏற்படாமல்
பார்த்துக்கொள்ளலாம். அல்லது ஏற்பட்ட கடனைத் தீர்த்துவிடலாம்.
கடன் இல்லாமல் இருப்பது சிரமம். ஆனால் கடன் இல்லாமல் இருந்து
விட்டால் அது சுகம்!

அதுபோல எதிரிகளும் அப்படித்தான். நாம் நட்பு பாராட்டும் தன்மையை
ஏற்படுத்திக் கொண்டால் எதிரிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

சரி, இந்த மூன்றுமே - அதாவது நோய், கடன், எதிரி ஆகிய மூன்றுமே
உங்களைக் கேட்டுத்தான் ஏற்படுமா? இல்லை! ஜாதகத்தில் கோளாறு
என்றால், எந்தக் கொம்பனாலும் அவற்றைத் தவிர்க்க முடியாது.
கதவைத் தட்டிக் கொண்டு அல்ல, கதவை உடைத்துக் கொண்டு
அவைகள் உள்ளே நுழைந்து விடும். என் அனுபவத்தில் பலரை நான்
பார்த்திருக்கிறேன்.

வந்துவிட்டுப் போகட்டும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கோ அல்லது
அவற்றைத் தாங்கிக்கொள்வதற்கோ வழி இருக்கிறதா?

ஏன் இல்லை? இருக்கிறது! அதுதான் இறைவழிபாடு.
இறைவன் கருணை மிக்கவன். உங்கள் கர்ம வினைகளால் ஏற்படும்
இவற்றை எல்லாம் கடக்க அவன் உதவுவான்.

அதனால்தான் நான் அடிக்கடி சொல்லுவேன். ஜோதிடமும், இறை வழிபாடும்
ஒன்றிற்கொன்று பின்னிப் பிணைந்தது.

வள்ளுவப் பெருந்தகை அசத்தலாக இப்படிச் சொன்னார்:

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்!"

அவர் மொத்தமாக மனிதப் பிறப்பையே பிணி என்று சொல்லிவிட்டார்
-------------------------------------------------------------------------------------
ஒருவருக்கு நோய்கள் இருக்கும் ; ஆனால் கடன் இருக்காது. கையில்
நிறையப் பணம் வைத்திருப்பார். இன்னொருவர் மிகுந்த உடல் நலத்துடன்
இருப்பார். ஆனால் கடன் தொல்லைகள் அவருக்கு இருக்கும்.

அவதிப்படுவதில் கணக்கிட்டால் இருவர் நிலையும் ஒன்றுதான். வில்லன்கள்
வேறுபடலாம். ஆனால் கதாநாயகி அல்லது நாயகனின் துயரம் ஒன்றுதான்

அதுபோல ஒருவர் நல்லவராக, திறமைசாலியாக இருக்கலாம். அவர்மேல்
பொறாமையும், எரிச்சலும் கொண்ட எதிரிகள் அவருக்குத் தெரியாமலேயே
இருக்கலாம்.

இந்த நிலைகளை உள்ளடக்கியதுதான் ஆறாம் வீடு. அதனால்தான் ஆறாம்
வீட்டை வைத்துப் பலன் சொல்வது மிகவும் சிரமமான காரியம். பலத்த
ஆராய்ச்சி செய்துதான் பலன் சொல்ல வேண்டும். மேலோட்டமாகச் சொன்னால்
ஜோதிடர் பொய்யாகிப் போய்விடுவார்.(ஜோதிடம் பொய்யில்லை)

ஆறாம் வீட்டை வைத்து ஏற்படும் துன்பங்கள், துயரங்கள், வலிகள்(pains)
ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.

உதாரணத்திற்கு ஆறாம் வீட்டு அதிபன் இரண்டாம் வீட்டில் அமர்ந்துவிட்டான்
என்று வைத்துக் கொள்வோம். அதனால் மட்டுமே அவ்வாறு அமைப்புள்ள
அனைவருக்குமே ஒரே மாதிரித் துன்பம் வரும் என்று நினைக்க வேண்டாம்.

அந்தக் கிரகம், அமர்வினால் பெறும் உச்ச நீசம், நட்பு, பகை, அதோடு
மற்ற கிரகங்களின் சேர்க்கை, பார்வை என்று ஏற்படும் வெவ்வேறு நிலைகளால்
பலன்களும் மாறுபடும்.

அவதிப்படுவது என்றாகிவிட்ட பிறகு எப்படி அவதிப்பட்டாலும் அது ஒன்றுதான்
அவதி அவதிதான். ஒருவர் நோயால் அவதிப்படலாம், ஒருவர் கடன்களால்
அவதிப்படலாம், ஒருவர் எதிரிகளால் அவதிப்படலாம். ஒருவர் துரதிர்ஷ்டங்
களினால் அவதிப்படலாம். ஆனால் அவதி அவதிதான்.

இங்கே துரதிர்ஷ்டம் என்பது சூழ்நிலைகளால் (unfortunate situations) ஏற்படுவதைக்
குறிக்கும்.

வங்கி வேலைதான் என்றாலும், ஒரு கிராம வங்கி அல்லது ஒரு கூட்டுறவு வங்கி
அல்லது ஒரு தனியார் வங்கி அல்லது ஒரு தேசிய வங்கி அல்லது ஒரு பன்னாட்டு
வங்கி என்று வங்கிகளில் வேலை பார்க்கும் சூழ்நிலைகளிலும், வருமானத்திலும்
(சம்பளத்திலும்) எத்தனை வேறுபாடுகள் உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே!

You can call it as circumstance, or chance or unluck, but it is unfortunate!

பாடத்தைப் படித்துத் தேறுவதால் மட்டுமே ஒருவர் சரியான பலனைச் சொல்லிவிட
முடியாது. இதிலேயே ஊறி அனுபவம் பெற்றவரால்தான் நெத்தியடியாகப் பதிலைச்
சொல்ல முடியும்.

பாடம் 50% + அனுபவம் 50%

அனுபவம் என்பது பல ஜாதகங்களைப் பார்ப்பதாலும், அதுபற்றி ஜாதகர்களுடன்
பேசித் தெளிவதாலும், ஜோதிட அறிவுடையவர்களுடன் உரையாடுவதாலும்
மட்டுமே கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------------------------
ஆறாம் வீட்டைப்பற்றித் தெரிந்து கொள்ள, ஆறாம் வீட்டில் உள்ள பரல்கள்,
ஆறாம்வீட்டின் அதிபதி (owner), அவர் சென்று அமர்ந்த இடம் (placement),
அவரோடு கூட்டுச் சேர்ந்தவர்கள் (associates), ஆறாம் வீட்டில் வந்து அமர்ந்தவர்கள்,
ஆறாம் வீடு பெறும் பார்வைகள் (aspects) போன்றவற்றை அலச வேண்டும்!

மெலும் ஜாதகத்தில் உள்ள அவயோகங்களையும் பார்க்க வேண்டும்.

யோகத்தில் அவயோகம்கூட உண்டா என்று கேட்காதீர்கள்!

அவயோகமும் உண்டு! அவற்றைப் பற்றி யோகங்கள் என்னும் தலைப்பில் பாடம்
நடத்தும்போது விரிவாகச் சொல்கிறேன்.

இன்று ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன்.

ஜாதகத்தில் சந்திரன் தனித்து நின்றால் அது அவயோகம்!

அதாவது சந்திரன் இருக்கும் கட்டத்தின் இருபக்கக் கட்டங்களிலும் கிரகம்
எதுவும் இல்லாமல் இருந்து, சந்திரனும் தன்னுடைய கட்டத்தில் தனியாக இருந்தால்
அது அவயோகம். அதற்குப் பெயர் தரித்திர யோகம்.

வயதான காலத்தில் ஜாதகனை அது தனிமைப் படுத்திவிடும்! ஆதரவு அற்ற
நிலையில் நிறுத்திவிடும்!

உடனே உங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்த்து சந்திரன் அப்படி இருந்தால்
பயந்து விடாதீர்கள்.

அதற்கு விதிவிலக்கு உண்டு! சந்திரன் குருவின் பார்வை பெற்றிருந்தாலோ
அல்லது சந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேல் பரல்கள்
பெற்றிருந்தாலோ அந்த நிலைமை ஜாதகனுக்கு ஏற்படாது அல்லது வராது!
-------------------------------------------------------------------------------------------------------
ஆறாம் வீட்டு அதிபதி வெவ்வேறு வீடுகளில் அமர்ந்திருப்பதால் ஏற்படும்
பொதுப் பலன்கள் (The results of Sixth Lord occupying different houses)

1.
முதல் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying lagna in a horoscope)

நல்ல கிரகத்தின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால் நாட்டின் பாதுகாப்புத்
துறையில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைக்கும். சாதாரண ராணுவ வீரராகவோ
அல்லது காமாண்டராகவோ பணிபுரிவார். அல்லது காவல் துறையிலோ அல்லது
சிறைத்துறையிலோ பணிபுரிவார். ஜாதகத்தின் மேன்மை அளவை வைத்து
அதில் பெரிய பதவி வரைக்கும் சென்று அமரக்கூடியவராகவும் இருப்பார்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் திருட்டுத்தொழிலோ அல்லது ஒரு பெரிய மோசடிக் கூட்டத்திலோ
பணியாற்ற நேரிடும்!
----------------------------------------------------------------------------------------------------
2
இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying second house in a horoscope)

இது நல்ல அமைப்பு அல்ல! இது குடும்ப வாழ்க்கைக்கும், நிதிநிலைக்கும்,
கண் பார்வைக்கும், பேச்சுத்திறமைக்கும் உரிய வீடாகும். இந்த வீட்டில்
ஆறாம் அதிபதி வந்து அமர்ந்தால், ஜாதகனுக்குப் பார்வைக்கோளாறுகள்,
பற்சிதைவுகள் ஏற்படும். திக்குகின்ற பேச்சு நிலை ஏற்படும். குடும்ப வாழ்க்கை
தொல்லைகளும் அல்லது துக்கங்களும் நிறைந்ததாக இருக்கும். எதிரிகளால்
பண இழப்புக்கள் ஏற்படும்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் மனைவியைப் பறிகொடுக்க நேரிடும். அது அந்த தீய கிரகத்தின்
தசா புத்தியில் ஏற்படும். அதே அமைப்போடு சுக்கிரனும் நீசமாகியிருந்தால்
ஜாதகன் வறுமையில் உழல்வான். பசிக்கு உணவின்றி பட்டினி கிடக்க
நேரிடும்.
-----------------------------------------------------------------------------------------------------
3
மூன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying third house in a horoscope)
சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் பகை ஏற்படும். அல்லது உடன்
பிறப்புக்களுக்கு அடிக்கடி நோய் நொடிகளை ஏற்படுத்தும். அதன் பொருட்டு
ஜாதகனுக்கு பண இழப்புக்கள் ஏற்படும்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
அல்லது இங்கே வந்து அமரும் ஆறாம் அதிபதி நீசமாகியிருந்தால் ஜாதகன்
வீட்டின் கடைசி ஆண் குழந்தையாக இருப்பான். ஜாதகியாக இருந்தால்
அவளுக்கு அடுத்து அவள் பெற்றோர்களுக்கு ஆண் குழந்தைகள் இருக்காது.
--------------------------------------------------------------------------------------------------
4
நான்காம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying fourth house in a horoscope)
ஜாதகன் ஒரு மோசமான வீட்டில் குடியிருப்பான் அல்லது மோசமான சூழலில்
அவன் வீடு இருக்கும். கல்வி தடைப்பட்டுவிடும். ஜாதகன் தன் அன்னையைக்
கைவிட்டுவிடுவான். தாய் மாமாக்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருப்பார்கள்

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
பெற்ற தாயுடனான உறவு தர்க்கங்களால், சண்டைகளால் சீர்கெட்டு இருக்கும்.
முன்னோர் சொத்துக்கள் கடனில் மூழ்கியிருக்கும். துக்கமான வாழ்க்கை நடத்திக்
கொண்டிருப்பான். குடும்ப வாழ்க்கையில் சுகம் இருக்காது.
-----------------------------------------------------------------------------------------------------
5
ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying fifth house in a horoscope)

நோயுற்ற சேய்களை உடையவனாக இருப்பான். தாயார் மூலம் மாமா வழிச்
சொத்துக்கள் கிடைக்கும்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
மனப் போராட்டம் உடையவனாக இருப்பான்.
-----------------------------------------------------------------------------------------------------
6
ஆறாம் வீட்டிலேயே அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying his own house in a horoscope)
தாய் வழியில் அல்லது தாய் உறவில் அதிகமான சகோதர பந்தங்களை
உடையவனாக இருப்பான். தாய் மாமா புகழ் பெற்றவராக இருப்பார்.

இந்த வீட்டில் ஆறாம் அதிபதியுடன் லக்கின நாதனும் வந்து அமர்ந்திருந்தால்
ஜாதகன் தீராத நோயொன்று ஏற்பட்டு அவதிப்பட நேரிடும். நெருங்கிய
உறவுகளுடன் பகை ஏற்படும்.
-----------------------------------------------------------------------------------------------------
7
ஏழாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying seventh house in a horoscope)
இந்த அமைப்புள்ள ஜாதகன் தாய்வழி மாமா மகளையோ அல்லது தந்தை
வழி அத்தை மகளையோ திருமணம் செய்துகொள்வான்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் விவாகரத்துப் பெற்றவனாக இருப்பான்.அல்லது மனைவி இளம்
வயதிலேயே இறந்து போயிருப்பாள். பெண்ணாக இருந்தாலும் இதே பலன்தான்

நவாம்சமும் கெட்டிருந்தால் (ஏழாம் வீடு)ஜாதகனின் மனைவி நோயுற்றவளாக
அழகிழந்தவளாக இருப்பாள். இதே வீட்டில் ஆறாம் அதிபதியுடன் லக்கின
அதிபதியும் கூட்டணி சேர்ந்தால், ஜாதகன் ஆண்மைக் குறைபாடுகள்
உடையவனாக இருப்பான். தீயபெண்களின் சகவாசத்தால் அடிக்கடி
தொல்லைகளுக்கு ஆளாகுபவனாக இருப்பான்.
-------------------------------------------------------------------------------------------------------------
8
எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying eigth house in a horoscope)

ஜாதகன் மத்திம ஆயுள் உடையவனாக இருப்பான்.
(He will die in the middle age). இது பொது விதி!
ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் இதற்கு விதிவிலக்கும் உண்டு!

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
அளவற்ற கடன்களால் அல்லது தீராத மர்ம நோய்களால் அவதிப் படுபவனாக
இருப்பான். பெண் வேட்டையில் ஈடுபடுபவனாக இருப்பான். மற்றவர்களை
இம்சைப் படுத்தி மகிழ்பவனாக இருப்பான்.
------------------------------------------------------------------------------------------------------------------
9
ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying ninth house in a horoscope)

நல்ல கிரகத்தின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால், ஜாதகனின் தந்தை நீதித்துறை
யில் பணியாற்றுபவராக இருப்பார். தாய் வழி உறவுகள் நல்ல நிலைமையில்
இருப்பார்கள்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
தந்தையுடன் சச்சரவுகள் ஏற்பட்டு சுமூகமான உறவு இருக்காது.
வாழ்க்கை வறுமை மற்றும் பாவச் செயல்கள் நிறைந்ததாக இருக்கும்.
உறவினர்களால் தீமைகள் ஏற்படும். நன்றி கெட்ட செயல்களைச் செய்ய
நேரிடும். அறவழிகளுக்கு எதிரான செயல்களைச் செய்ய நேரிடும்
--------------------------------------------------------------------------------------------------
10
பத்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying tenth house in a horoscope)

பாவச் செயல்கள், தீய செயல்களைச் செய்ய நேரிடும் அல்லது தொழிலாகக்
கொள்ள நேரிடும். இறையுணர்வாளர்கள் போல இருப்பார்கள். ஆனால்
கேவலமான வேலைகளில் மறைமுகமாக ஈடுபடுவார்கள். சிலர் போலிச்
சாமியார்களாக இருப்பார்கள்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
மற்றவர்களைப் பயப்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்வார்கள். தானும்
பயப்படக்கூடிய விரோதிகளைப் பெற்றிருப்பார்கள்.கீழ்த்தரமான வேலைகளைச்
செய்வார்கள். கீழான வாழ்க்கை வாழ நேரிடும்.
---------------------------------------------------------------------------------------------------
11
பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying eleventh house in a horoscope)

மூத்த சகோதரன் நீதித்துறையில் பணிபுரிவார். அல்லது அதற்கு ஈடான
புகழுடன் வாழ்வார். அவரால் ஜாதகன் பல ஆதாயங்களைப் பெறுவார்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஏழ்மை தாண்டவம் ஆடும். மோசமான சூழலில் வாழ நேரிடும். அடிக்கடி
சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தண்டனை பெறவும் நேரிடும்
------------------------------------------------------------------------------------------------------
12
பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying twelth house in a horoscope)

வாழ்க்கை தொல்லைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருக்கும். ஜாதகனால்
மற்றவர்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படும்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
வாழ்க்கை அவலமாகவும், கடினமாகவும் இருக்கும்
---------------------------------------------------------------------------------------------------------
இவை அனைத்துமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகத்திற்கு ஜாதகத்தின்
மற்ற அமைப்புக்களை வைத்து இவை கூடலாம், குறையலாம் அல்லது
இல்லாமல் போகலாம்.
----------------------------------------------------------------------------------------------------------
பதிவின் நீளம், உங்களுடைய பொறுமை எனது தட்டச்சும் நேரம் ஆகியவை
கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

இந்தப் பாடத்தின் அடுத்த பகுதி அடுத்த பதிவில். அதுவரை பொறுமை காக்கவும்

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

(தொடரும்)

BSNL அகண்ட வரிசை இணைய இணைப்பு இரண்டு நாட்களாக கோவைப் பகுதியில்
வேலை செய்யவில்லை. அதனால் அதிகமாகத் தவிப்புற்றது அடியேனாகத்தான்
இருக்கும். இன்று காலை முதல் வேலை செய்கின்றது. உடனே இடுகையை
வலையேற்றியுள்ளேன்!

வாழ்க வளமுடன்!

18.7.08

பார்த்தீங்களா? பார்த்தீங்களா?

முதலில் கமர்ஷியல் ப்ரேக்! இரண்டு விளம்பரங்கள்! அதை சகித்துக் கொண்டு
மேலே சென்றீர்கள் என்றால் உபயோகமான செய்தி உள்ளது.

1
சம அறிவுத் திட்டம்!

அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக வாத்தியார் எழுதிய சிறுகதையைப்
படித்தீர்களா? படிக்காதவர்கள் படிக்கலாம்! சுட்டி கதைத் தலைப்பிலேயே உள்ளது!

2.
13.7.2008 ஞாயிறன்று கோவையில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பின்
முழு விவரங்களை நிறையப் புகைப்படங்களுடன் நண்பர் சஞ்சை காந்தி அவர்கள்
பதிவிட்டுள்ளார். சென்று படிக்கக் கோருகிறேன்.சுட்டி இங்கே!

என்னுடைய முதல் பதிவில் (25.12.2005) முதல் பின்னூட்டம் இட்ட அன்பரும் சக பதிவருமான திரு ஞானவெட்டியான் அவர்களுடன் (13.7.2008 அன்று நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில்) அடியவன் எடுத்துக்கொண்ட புகைப்படம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உபயோகமான அட்டவணை!

வாத்தியார் ஜோதிடப்பாடம் படிக்கத்துவங்கிய காலத்தில் முதன் முதலில்
மனனம் செய்த அட்டவணை! அதில் அடிப்படை விவரங்கள் எல்லாம் இருக்கும்.
மனப்பாடம் செய்தால் ஜோதிடப் பெண் உங்களை வந்து கட்டி அணைத்துக்
கொண்டு விடுவாள்! மனப்பாடம் செய்யாதவரை அவள் உங்கள் அருகிலேயே
வர மாட்டாள்.அதை நினைவில் கொள்க!


---------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

17.7.08

கெட்டவன் கெட்டுப்போனால் என்ன ஆகும்?

கெட்டவன் கெட்டுப்போனால் என்ன ஆகும்? காவல்துறை ஒரு தீயவனைப் பிடித்து
உள்ளே போட்டால் என்ன ஆகுமோ அல்லது என்கவுன்டரில் போட்டுத் தள்ளினால்
என்ன ஆகுமோ அது ஆகும்!

நல்லவன் மேன்மை பெற்றால் என்ன ஆகும்? மேலும் பல நன்மைகளைச் செய்வான்!

அது இரண்டையும் பற்றியதுதான் இன்றைய பாடம்!
---------------------------------------------------------------------------
ஒவ்வொரு லக்கினத்திற்கும் அதிமுக்கியமான கிரகம் எது?

லக்கினத்திற்கு யோகங்களைக் கொடுக்கக்கூடியவர் எவரோ, அவரே அதி முக்கியமான கிரகம்!

அவர் என்ன செய்வார்?

1. அவர்தான் உங்களுடைய God Father.
2. உங்களுக்கு யோகத்தைத்தருவதில் முதல் இடத்தில் இருப்பவர்.
3. ராஜயோகங்களைத்தருபவர் அவர்தான்.
4. அவருடைய திசைகளிலும் அல்லது புத்திகளிலும் உங்களுக்கு அவற்றை
(நன்மைகளை) நிறைவேற்றி வைப்பார்.
5. அவர் இருக்கும் இடமும் நன்றாக இருக்கும்,
6. அவருடைய பார்வை பெறும் அவருடைய நட்புக் கிரகங்கள் மேலும் வலுப்பெறும்
7. அவருடைய பார்வையைப் பெறும் தீயகிரகங்கள் வலிமை இழக்கும்
8. மொத்தத்தில் - in short - அவரைக் key planet to your lagna என்று சொல்லலாம்

இந்த கீ பிளானெட்டைக் கவனிக்காமல், மற்றபடி வீட்டு அதிபதி, அவர் இருக்கும்
இடம், அந்த வீட்டிலிருக்கும் பரல்கள் இவற்றை மட்டும் வைத்துப் பலன்
சொல்லும்போது, அது தவறாகிப் போய்விடும். ஆகவே ஒரு ஜாதகத்திற்கான
நல்லது கெட்டதுகளை நிர்ணயம் செய்யும் போது முதலில் கணக்கில் எடுத்துக்
கொள்ளப்பட வேண்டியவர் இவரே!

சரி, அவர் முழு யோகங்களையும் தருவாரா?

அவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்களில் அல்லது திரிகோண ஸ்தானங்களில்
அமர்ந்திருந்தால் தருவார். உச்சம், நட்பு நிலைகளில் இருந்தால் தருவார்.
பாதக ஸ்தானங்களான 6ஆம் வீடு, 8ஆம் வீடு, 12ஆம் வீடு ஆகிய இடங்களில்
அவர் இருந்தால் தரமாட்டார். கைக்கு எட்டியது. வாய்க்கு எட்டவில்லை என்ற
கதையாகிவிடும்.

இப்போது எந்தெந்த லக்கினத்திற்கு யார் யார் யோககாரகன் என்று பார்ப்போம்!

Key planets for each lagna is appended!

விளக்கம் போதுமா?
-------------------------------------------------------------------------------------------------
1. மேஷம் = குரு, சூரியன்
2. ரிஷபம் = சனி
3. மிதுனம் = சுக்கிரன்
4. கடகம் = குரு, செவ்வாய்
5. சிம்மம் = செவ்வாய்
6. கன்னி = சுக்கிரன்
7. துலாம் = சனி
8. விருச்சிகம் = குரு
9. தனுசு = செவ்வாய், சூரியன், குரு
10. மகரம் = சுக்கிரன்
11. கும்பம் = சுக்கிரன்
12. மீனம் = செவ்வாய், சந்திரன், குரு

என்ன சார் என் லக்கினத்திற்கு ஒரு கிரகம் மட்டுமே உள்ளது
இன்னொன்றிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட கிரகம் உள்ளதே என்று
கேட்காதீர்கள். யோசித்துப் பாருங்கள் காரணம் புரியும்!

Special Tips:
1.For Mithuna lagna natives, if Venus joins with Saturn will give
career of much fame!
2. For Cancer lagna natives, if Jupiter joins with mars, will confer
name & fame!
3. For Virgo lagna natives, if Mercury associated with Venus will
give good yogas
4. For Virucchika Lagna natives, Sun & Moon association will
give good yogas
5. For Thanusu lagna natives, the association of Sun & Mars
will give good yogas
6. For Makara lagna natives, the association of Venus & Mercury
will give good yogas
7. For Kumba lagna natives, the association of Venus & Mars
will give good yogas
8. For Meena lagna natives, the association of Moon, Mars, jupiter
will give good yogas
---------------------------------------------------------------------------------
Evil planets for each lagna is appaended!

கட்டுரையின் முதல் பகுதியில் கூறியுள்ள அனைத்திற்கும்
நேர் எதிரரன பலன்களை இவைகள் செய்யும்.
ஆனால் பாதக ஸ்தானங்களான 6ஆம் வீடு, 8ஆம் வீடு, 12ஆம் வீடு
ஆகிய இடங்களில் இவர்கள் இருந்தால் தீமை செய்ய முடியாது.
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் மேன்மை என்றாகிவிடும்.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று மகிழ்ச்சி
அடையலாம்!

1. மேஷம் = சனி, புதன், சுக்கிரன்
2. ரிஷபம் = குரு, சந்திரன்,
3. மிதுனம் = செவ்வாய், குரு, சூரியன்
4. கடகம் = சுக்கிரன், புதன்
5. சிம்மம் = சனி, சுக்கிரன், புதன்
6. கன்னி = செவ்வாய், சந்திரன்
7. துலாம் = குரு, சூரியன், செவ்வாய்
8. விருச்சிகம் = புதன், சுக்கிரன்
9. தனுசு = சுக்கிரன்
10. மகரம் = செவ்வாய், சந்திரன், குரு
11. கும்பம் = சந்திரன், குரு
12. மீனம் = சூரியன், சனி, சுக்கிரன், புதன்

--------------------------------------------------------------------
என்ன, இன்றைய பாடம் நன்றாக இருந்ததா?
பயனுள்ளதாக இருந்ததா?
அதைவிட முக்கியமாக புரியும்படி இருந்ததா?
பின்னூட்டத்தில் ஒருவரி சொல்லுங்கள்!

மேலே உள்ள படத்தில் சனீஸ்வரனும், சூரியபகவானும் சேர்ந்து
இறைவனுக்குக் காலை வணக்கம் செய்கிறார்களே - பார்த்தீர்களா?

அன்புடன்,
வாத்தியார்!

வாழ்க வளமுடன்!

15.7.08

ஜோ + இடம்: என்னதான் இதயத்திலே - பகுதி இரண்டு!


முதல் பகுதியைப் படித்திராதவர்கள், படித்துவிட்டு வாருங்கள்!
சுட்டி ஸைடுபாரில்!

1.மேஷம், சிம்மம், தனுசு! (அதிபதிகள் முறையே: செவ்வாய், சூரியன், குரு)
2.ரிஷபம், கன்னி, மகரம்! (அதிபதிகள் முறையே: சுக்கிரன், புதன், சனி)
3.மிதுனம், துலாம், கும்பம்! (அதிபதிகள் முறையே: புதன், சுக்கிரன், சனி)
4.கடகம், விருச்சிகம், மீனம்!(அதிபதிகள் முறையே: சந்திரன், செவ்வாய், குரு)

இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதைச் சற்று அலசிப் பார்த்தீர்கள் என்றால் அசத்தலாக ஒரு விபரம் தெரிய வரும்!

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு இந்நான்கும் ஒரு கட்சி / கூட்டணி!

புதன், சுக்கிரன், சனி இம்மூன்றும் ஒரு கட்சி / கூட்டணி!
(நகைச்சுவைக்காக எதிர்க் கட்சி என்று வைத்துக்கொள்வோம்)

கூட்டணிகள் ஒன்றாக இருந்தாலும், அந்தக் கூட்டணிக்குள் உள்ள ராசி ஒன்றை
ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின் குணங்கள் (Characters) ஒரே மாதிரி இருக்காது
1, 2, 3 & 4 என்ற அணிகளுக்கிடையே உள்ள ராசி அதிபதிகளையும் பாருங்கள்

உதாரணத்திற்கு முதல் எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள் 1.மேஷம், சிம்மம், தனுசு!
(அதிபதிகள் முறையே: செவ்வாய், சூரியன், குரு)
மேஷத்தை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின் குணம் செவ்வாயை வைத்துப் பிரதான
மாகவும், சிம்மத்தை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின் குணம் சூரியனை வைத்துப்
பிரதானமாகவும், தனுசுவை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின் குணம் குருவைவைத்துப்
பிரதானமாகவும் இருக்கும். இப்படி 12 ராசிகளை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின்
அறிவு, குணம் எல்லாம் முற்றிலும் வேறுபடும்

ஒரே வீட்டில் பிறந்த அண்ணன் தம்பிகள் மூவர் என்றாலும் மூவரும் ஒரே போலவா
இருக்கிறார்கள்?

இத்துடன், ஐந்தாம் அதிபதி சென்று அமரும் இடம், ஐந்தாம் இடத்தில் வந்து அமரும்
கிரகத்தின் தன்மை, ஒன்றிற்கு மேற்பட்ட கிரகம் அமர்ந்தால் அவர்களின் சேர்க்கை,
அதோடு அந்த ஐந்தாம் இடம் பார்வை பெறும் கிரகங்களின் தன்மை என்று
கணக்கிட்டுக் கொண்டே போனால் எங்கேயோ போய் நிற்கும். தலை சுற்றும்!

ஆகவே பொறுமையாக சொல்வதை உள்வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு அலசி
ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.

இப்போது முதல் மேடைக்குப் போவோம்:

ஐந்தாம் இடத்தின் அதிபதி சென்று அமரும் இடத்தின் பலன்:

அதாவது உங்களுக்கு சிம்ம லக்கினம் என்று வைத்துக் கொண்டால் - தனுசு
உங்களுடைய ஐந்தாம் வீடு - அதற்கு அதிபதி குரு எங்கே இருக்கிறார்
என்று பார்த்தால் அவர் லக்கினத்தில் இருந்து உள்ள 12 கட்டங்களில் எங்கே
வேண்டுமென்றாலும் ஜாதகத்தில் இருக்கலாம். அப்படி அவர் (That is 5th lord)
இருக்கும் இடம், அதன் பலன் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்!

ஐந்தாம் இடத்தின் அதிபதி சென்று அமரும் இடத்தின் பலன்:

5th lord 1ல் இருந்தால்:

மிகவும் நல்லது. அதோடு நல்ல சேர்க்கையும், பார்வையும் பெற்றிருந்தால்
தலைமைப் பதவி தேடிவரும். நிறைய வேலை ஆட்கள் இருப்பார்கள். அமைச்சராகக்
கூட ஆகலாம், நீதிபதியாகவும் ஆகலாம். (அது பத்தாம் இடத்துடனும் சம்பந்தப்பட்ட
தாகையால், நான் ஆணிபிடுங்கும் கம்பெனியில் டீம் லீடராக இருக்கிறேன். எனக்கு
எப்படி நீதிபதி பதவி தேடி வரும் என்று யாரும் பின்னூட்டத்தில் கேட்க வேண்டாம்.
அந்த டீம் லீடர் பதவி கூட தலைமைப் பதவிதானே!)

அதே நேரத்தில் 5th lord ஒன்றில் அமர்ந்தும், தீய கிரகங்களின் பார்வை, அல்லது
சேர்க்கை பெற்றிருந்தால் மேலே கூறியவற்றிற்கு எதிரான பலன்களே நடைபெறும்

சராசரி சேர்க்கை என்றால் மிக்சட் ரிசல்ட்!
-------------------------------------------------------------------------------

5th lord 2ல் இருந்தால்:

If favourably disposed as said in the earlier paragraph:
அழகான மனனவியும், அன்பான குழந்தைகளும் கிடைப்பார்கள்.படித்தவராக
இருப்பார். அரச மரியாதை கிடைக்கும்.

If not favourably disposed:
தரித்திரம் தாண்டவமாடும், தன் குடும்பத்தை வழி நடத்தவே சிரமப் படுவார்.
மற்றவர்களின் எரிச்சலுக்கும், அவமரியாதைகளுக்கும் ஆளாக நேரிடும்.
-------------------------------------------------------------------------------
5th lord 3ல் இருந்தால்:

If favourably disposed: நல்ல குழந்தைகளும், நல்ல சகோதரன்,நல்ல சகோதரிகள்
கிடைப்பார்கள். இங்கே நல்ல என்ற வார்த்தையில் எல்லாம் அடக்கம்!

If not favourably disposed: Loss of chidren, misunderstanding with brothers and
sisters, troubles in work or in business.

-------------------------------------------------------------------------------------------------
5th lord 4ல் இருந்தால்:

If favourably disposed: நல்ல, நீண்ட நாட்கள் உயிர் வாழும் தாய் கிடைப்பார்.
அரசுக்கு (வருமானவரி) ஆலோசகராக இருப்பவர். அல்லது அது சம்பந்தப்பட்ட
தொழில் செய்பவர்.

If not favourably disposed: பெண் குழந்தைகள் மட்டும் உடையவராக இருப்பார்.
---------------------------------------------------------------------------------------------------
5th lord 5ல் இருந்தால்:

If favourably disposed: அதிகமாக ஆண் குழந்தைகளை உடையவர். அவருடைய
செயல்களில் தொழிலில் மேன்மை அடைபவராக இருப்பார்.பல சாஸ்திரங்களில்
ஈடுபாடு உடையவர்.எல்லோரிடமும் நட்பாக இருப்பவர். கணக்கில் கெட்டிக்காரர்.

If not favourably disposed: எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் அவதியுறுவார்.
குழந்தைகள் இறக்கும் அபாயம் உண்டு. வார்த்தைகள் தவறுபவர். சலன மனம்
உடையவர்.
----------------------------------------------------------------------------------------------------
5th lord 6ல் இருந்தால்:

பெற்ற பிள்ளைகளுடனேயே விரோதம் உண்டாகும். குழந்தை பாக்கியம் குறைவு.
தத்துப் பிள்ளை எடுத்து வளர்க்க வேண்டியவர்.
------------------------------------------------------------------------------------------------------
5th lord 7ல் இருந்தால்:

If favourably disposed: நல்ல குழந்தைகளை உடையவர்.அதிகமான குழந்தைகளை
உடையவர். அவர்களால் பொன்னும், பொருளும் , செல்வமும் பெறக்கூடியவர்.
செழிப்பான வாழ்க்கை அமையும். குருபக்தி மிக்கவர்.வசீகரத்தோற்றமுடையவர்.

If not favourably disposed: குழந்தைகளைப் பறிகொடுக்க நேரிடும். பெயரும், புகழும்
பெற்ருத்திகழும் குழந்தைகளைக்கூட பறி கொடுக்க நேரிடும்

-------------------------------------------------------------------------
5th lord 8ல் இருந்தால்:

மூதாதையர் சொத்துக்கள் கிடைக்காது.அப்படியே கிடைத்தாலும் அவற்ரைக்
கடனுக்காக இழக்க நேரிடும். Lungs Problem உண்டாகும். மகிழ்ச்சி இல்லாதவர்
Unhappy man but not poor!
------------------------------------------------------------------------------------------------------
5th lord 9ல் இருந்தால்:

If favourably disposed: கோவில், குளம் என்று திருப்பணிகள் செயக்கூடியவர்.
சொற்பொழிவாளர், பெரிய கவிஞர் அல்லது எழுத்தாளர், பேராசான்.

If not favourably disposed: அதிர்ஷ்டமில்லாதவர். முயற்சிகள் எல்லாம்
தட்டிக்கொண்டு போய்விடும். நடக்காது போய்விடும்
---------------------------------------------------------------------------------------
5th lord 10ல் இருந்தால்:

If favourably disposed: ராஜயோகம்.ஏராளமான சொத்துக்கள் (Landed properties)
சேரும். அரச மரியாதை கிடைக்கும். அவருடைய குடும்ப உறவுகளில் அவருக்குத்தான்
முதல் மரியாதை கிடைக்கும்.

If not favourably disposed: மேலே கூறியவற்றிற்கு எதிர்மறையான பலன்கள்.
--------------------------------------------------------------------------------------
5th lord 11ல் இருந்தால்:

எடுக்கும் காரியம் எல்லாவற்றிலும் வெற்றியும், நன்மையும் கிடைக்கும். செல்வந்தராகி
விடுவார். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார். அதிகமான குழந்தைகள் இருக்கும்!
-------------------------------------------------------------------------------------
5th lord 12ல் இருந்தால்:
எதிலும் பற்றின்மை உண்டாகும், வேதாந்தியாகிவிடுவார். பல இடங்களிலும்
அலைந்து திரிபவர். பிடிப்பு இல்லாதவர்

------------------------------------------------------------------------------------
இப்போது ஐந்தாம் இடத்தில் வந்து அமரும் கிரகங்களுக்கான பலன்கள்.
Planets in the 5th house!

சூரியன்:
குழந்தைப் பேறைக்குறைக்கும். மகிழ்ச்சியைக் குறைக்கும். இதய நோய்களை
உண்டாக்கும். குழந்தைகள் பிறந்தாலும் அவர்களிடமிருந்து பிரிவை உண்டாக்கும்
காடுகளிலும், மலைகளிலும் சுற்றித்திரிய வைக்கும். மொத்தத்தில் பார்வை, ஐந்தாம்
வீட்டு அதிபதி சென்று அமர்ந்த இடம் போன்ற வேறு நல்ல அமைப்புக்கள்
இந்த வீட்டிற்கு இல்லாதபோது, சூரியனின் அமர்வு நல்லதல்ல!

சந்திரன்:
தெளிவான மனதை உடையவர். அறிவு ஜீவி,(highly intelligent) குழந்தைகளால்
இன்பம், இடம் சொத்துக்களின் சேர்க்கை, படித்தவர், உண்மையானவர் என்ற
நிலைப்பாட்டை உண்டாக்கும். மிகுந்த இறை நம்பிக்கை உள்ளவர். இவருடைய
குழந்தைகளின் ஒன்று மிகவும் புகழ் பெற்று, வயதானகாலத்தில் இவருக்கு
மகிழ்ச்சியை உண்டாக்கும்

செவ்வாய்:
மனைவிக்கு துயரங்கள் ஏற்படும். மனைவிக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும்
அது ஏற்படும்.தொல்லை தரும் சிந்தனைகளை உடையவர், மகிழ்ச்சி இல்லாதவர்,
அதிரடியானவர், பலகீனமான மனதுடையவர். தன்னுடைய குழந்தைகளால்
துரதிர்ஷ்டங்களைச் சந்திக்க உள்ளவர். 'அந்த' விஷயத்தில் மிகவும் ஆர்வமுடையவர்
'அந்த' விஷயத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இது பெண்ணின் ஜாதகம் என்றால்
குழந்தை பிறப்பில் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

புதன்:
மிகவும் படித்தவர், கல்வியாளர், மகிழ்ச்சி நிரம்பியவர். அதிகக் குழந்தை
களை உடையவர். அரசு ஆலோசகராக அல்லது நிறுவனங்களில் ஆலோசகராக
இருக்கக் கூடியவர். அதீத புத்திசாலியாகவும், சாஸ்திரங்களில் ஈடுபாடு
கொண்டவராகவும் இருப்பார். 'அந்த' விஷயங்களில் ஆதீத ஆர்வம் உடையவராக
இருப்பவர். அதே நேரத்தில் அதற்குத் தேவையான் சக்தி (vitality) குறைபாடு
களும் உடையவர்.

குரு.
படித்தவர், சட்டத்துறையில் வேலை என்றால் (it is concerned with 10th house)
அதில் சிகரம் வரைக்கும் சென்றுவிட்டு வரக்கூடியவர். அதீத புத்திசாலி.
விவாதத்தில் இவருடன் ஜெயிப்ப்பது சிரமம். சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களில்
ஈடுபாடு கொண்டவர். அரசு ஆலோசகர் அல்லது நிறுவன ஆலோசகராக வரக்
கூடியவர் (advisor). அதிகமான நண்பர்கள், குழந்தைகளை உடையவர். உடையவர்
என்பதுமட்டுமல்ல, அவர்களோடு நன்கு வாழவும் தெரிந்தவர்.

சுக்கிரன்;
கவிஞர். உள்ளத்தில், சிலர் எழுத்தில். செல்வம் சேரக்கூடியவர். அழகான
குழந்தைகளை உடையவர். எப்போதும் மகிழ்ச்சியை உடையவர். அரசமரியாதை
கிடைக்கக்கூடியவர் அதிகமாகப் பெண் குழந்தைகளை உடையவர். பங்குவணிகம்,
ஊகவணிகங்களில் வெற்றி பெறக்கூடியவர்.

சனி:
குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்கக்கூடியவர். அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும்
மாறி மாறி ஏற்படும். நண்பர்களிடமும், உறவினர்களிடமும் வாதிட்டு சண்டையிடக்
கூடியவர் குடும்ப வாழக்கையில் துயரங்கள் நிறைந்தவர். பாவ சிந்தனைகள் உடையவர்.
மூடர், வறியவர், மற்றவர்களால் வெறுக்கப்படக்கூடியவர் (Evil minded and Stupid.
sickly and week, poor and hated by others) இந்த குணங்களில் எல்லாக் குணமும்
இருக்கலாம். அல்லது ஜாதகத்தின் வேறு அமைப்பை வைத்து சிலது மட்டும்
இருக்கலாம்.

ராகு:
கல்மனது உடையவர். நட்பிற்கு லாயக்கில்லாதவர். மற்றவர்களால் எப்பொதுமே
தவறாகக் காட்சியளிப்பவர். சமூக நடப்பிற்கு ஒத்துவராதவர். இதயநோய்
உண்டாகலாம் குழந்தைகளைப் பறிகொடுத்துத் துயரங்களை அனுபவிக்கவும்
நேரலாம். மொத்ததில் வேறு நல்ல அமைப்பு ஜாதகத்தில் இல்லை என்றால்
இந்த ராகுவின் அமர்வு ஆளைப் படுத்தி எடுத்துவிடும்!

கேது:
குழந்தைகள் இழப்பு.(வயதில் எந்த வயதில் வேண்டுமென்றாலும்) வயிற்று உபாதைகள்
உடையவர். வித்தியாசமான உணர்வு (உணர்ச்சி) அனுபவங்கள் ஏற்படக்கூடியவர்.
வயதான காலத்தில் ஆன்மீகம், வேதங்களில் ஈடுபாடு உண்டாகும். வயதான காலத்தில்
துறவுச் சிந்தனை மேலோங்கி வரும். சிலர் ஆசிரமங்களில் போய்ச் சேர்ந்துவிடுவார்கள்

சொன்னவை அத்தனையுமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள கிரக
அமைப்புக்களை வைத்து இந்தப் பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம்

In short, the above results will change or gets modified by association or aspects
of other lords!

இதெல்லாம் பொது விதிகள் மட்டுமே! கிரக சேர்க்கைகள், மற்றும் கிரக
பார்வைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும். அதை மனதில் கொள்க!

இந்த ஐந்தாம் பாவத்தைப் பொறுத்தவரை தேவையான அளவு பாடத்தை
நடத்திவிட்டேன். மற்றபடி உங்கள் அனுபவம் மூலம் மேலும் சிலவற்றை
நீங்கள் கற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்!

அனுபவம் (by speaking or by seeing or by assessing different horoscopes)
உங்களுக்கு வித்தியாசமான அறிவையும், ஆற்றலையும் தரும்.

தட்டச்ச மிகவும் சிரமப்பட்டேன். ஈகலப்பை படுத்தி எடுக்கிறது. இருந்தும்
இரண்டு நாள் பாடங்களை ஒரே பகுதியாகக் கொடுத்துள்ளேன். இதை
ஆழ்ந்து படியுங்கள். உங்களுக்கு உள்ள பகுதியை மட்டும் படித்துவிட்டு
சார், அடுத்த பாடம் எப்போது என்று கேட்காதீர்கள்:-)))

இங்கே படிப்பவர்களில் இரண்டு வகை இருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தைக்
கற்றுத் தெளிய ஆர்வமுள்ளவர்கள் முதல்வகை!. இரண்டாவது பிரிவினர்
ஜாதக நோட்ஸ்களுடன் அவர்கள் ஜாதகத்தை மட்டும் ஒத்துப்பார்த்துவிட்டு
மற்றதைக் கடாசி விடுபவர்கள். அப்படிச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால்
சத்தியமாக ஜோதிடம் உங்களைத் திரும்பிப் பார்க்காது! அதாவது உங்களுக்கு
வசப்படாது!!!!!!

Without dedication, you can't learn anything!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

14.7.08

நமீதாவின் பிரம்மாண்டமும் ஜோதிடத்தின் பிரம்மாண்டமும்!

நமிதாவின் புதுப்படத்தைப் போட்டுக்காட்டியபோது, என் இனிய தமிழ் மக்களே
என்று படத்திற்குப் படம் அன்பொழுக அழைக்கும் இயக்குனர் சொன்னாராம்:

"படத்தில் நமீதா மட்டுமே பிரம்மாண்டமாக இருக்கிறார்"

அப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்று பிரம்மாண்டமாகத்
தோன்றும்.

ஆனால் இறைவனின் படைப்பில் பிரபஞ்சம் மட்டுமே என்றைக்கும் பிரமாண்டமானது

அதன் ஒவ்வொரு பகுதியும் பிரம்மாண்டமானது!

இங்கே கோவையிலிருந்து யானைக்கட்டி செல்லும் சாலையில் 18 கிலோமீட்டர் தூரம்
சென்று, தடாகம் முருகன் கோவிலுக்கு அந்த சாலை பிரியும் இடத்தில் நின்று
கொண்டு சுற்றிலும் உள்ள மலைகளையும், அதற்குப் பின்புறம் சில்லவுட்டில் தெரியும்
மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் பார்த்தால்தான், இறைவனின் படைப்பு எவ்வளவு
பிரம்மாண்டம் என்று தெரியும்.

அதுபோல ஜோதிடத்தின் அடிப்படை விதிகளைப் படித்துவிட்டு, அதன் அடுத்த
பகுதிக்குச் செல்பவனுக்கு அதன் பிரம்மாண்டம் தெரியும்.

கட்டுரையின் நீளம் கருதி, சுருக்கமாக ஜோதிடத்தின் இரண்டு நிலைகளை இன்று
உங்களுக்குச் சொல்கிறேன். அப்போதாவது உணருங்கள் அது எத்தனை பிரம்மாண்ட
மானது என்று!

முடியாதவர்களும், விரும்பாதவர்களும் நமீதாவின் படத்தோடு கழன்று கொள்வது
நல்லது!:-)))
----------------------------------------------------------------------------------------------
ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள். உங்கள் ஜாதகம் போலவே இன்னொருவருக்கு
அமைய வேண்டும் என்றால் எத்தனை நாட்களாகும்?

ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொல்வார்கள்.

என் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது சொன்னார்:"அறுபது வருடங்களில் அதே
போன்ற ஜாதகம் கிடைக்கும். அதனால் அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடு
கிறோம்!

எவ்வளவு அறியாமை ?

அப்போ அறுபது வயதில் அவரைப்போலவே இன்னொருவர் பிறப்பாரா?
அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு இந்திரா காந்தி பிறப்பரா?
அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கலைஞர் மு.க. பிறப்பரா?

இல்லை! அது அறிவின்மை!
----------------------------------------------------------------------------------------
இப்பொது சொல்லுங்கள் உங்கள்:

ஜாதகம் போலவே 100% ஜாதகம் அமைந்த இன்னொருவர் பிறக்க எத்தனை
ஆண்டுகள் ஆகும்?

யோசித்து விட்டு ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V

குரு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள்
சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 30 ஆண்டுகள்
ராகு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 18 ஆண்டுகள்

இந்த மூன்று கிரகங்களும் நீங்கள் பிறந்த தினத்தில் வானத்தில் இருந்த
இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர ஆகும்
ஆண்டுகள் = 12 x 30 x 18 = 6,480 ஆண்டுகள் ஆகும்.

அதோடு, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் சுழற்சியையும்
அவைகளும் அதே நிலைக்குத் துல்லியமாக வந்து சேர அவற்றையும்
பெருக்கி அத்துடன் கூட்டிக் கொண்டு பாருங்கள் தலை சுற்றும்

இது நீங்கள் பிறந்த நாள் கணக்கு மட்டும்தான். இன்னும் லக்கினமும்
வேண்டுமென்றால், மறுபடியும் to be multiplied by 12

விடை ஒரு யுகம் ஆகும். ஒரு யுகத்திற்கு ஒரு உங்களுடையதைப் போன்ற
ஜாதகம் ஒரு ஜாதகம்தான்.

நமக்கு யுவனைத் தெரியும் (இளையராஜாவின் மகன்) யுகத்தைத் தெரியாது!

தெரியாதவர்கள் சொல்லுங்கள் அறியத் தருகிறேன்!
------------------------------------------------------

12 ராசிக் கட்டங்களை வைத்து ஜாதகங்களை எழுதுகிறோம், அதில் லக்கினமும்
ஒன்பது கோள்களும் இருக்கும் இடங்கள் (டிகிரியுடன்) குறிப்பிடப்பட்டிருக்கும்

அதை மாதிரியாக வைத்துக் கொண்டு விதம் விதமான ஜாதகங்களை உருவாக்கிக்
கொடுங்கள் என்று உங்களிடம் சொன்னால், உங்களால் எத்தனை ஜாதகங்களை
உருவாக்கிக் கொடுக்க முடியும்?

சட்டென்று உங்களால் விடை சொல்ல முடியாது!

இப்போது சொல்லித் தருகிறென். நினைவில் வைத்துக் கொண்டு யாரும் கேட்டால்
பொட்டென்று அடியுங்கள் (வாயால்)

ஒரு லக்கினம் + ஒன்பது கோள்கள் = 10 X 12 ராசிகள் = Ten to the power
of Twelve = One followed by Twelve zeros = 100,000,00,00,000

permutation combination

பாதிப்பேர்கள் பொறியாளர்கள்தானே? கணக்கிட்டுப் பாருங்கள்

ஒரு லட்சம் கோடி ஜாதகங்களை எழுதலாம்!
இன்றைய உலக ஜனத்தொகை வெறும் 700 கோடிகள்தான்!-)))

எல்லாம் கணக்கு அய்யா, கணக்கு!

கிளியைவைத்து அறுபது அட்டைகள் என்ற கணக்கில்லை

முழுவதும் தெரிந்தால் உங்களைப் பிரம்மிக்க வைக்கும் கணக்கு!

(தொடரும்)



வாழ்க வளமுடன்!

11.7.08

நேரம் நல்ல நேரம்; தேர்வு எழுதும் நேரம்!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்வு இன்று நடைபெறுகிறது. விடைகளை
இப்போதே எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை! வீட்டிற்குக்கொண்டு போய்
சாவகாசமாக யோசித்து எழுதலாம்.

இல்லை பழைய பாடங்களைப் புரட்டிப் பார்த்து நிதானமாகப் பதில் எழுதலாம்.

அல்லது கல்கிதாசன், அறிவன், தமாம்பாலா போன்ற மூத்த மாணவர்களைக்
கேட்டு எழுதலாம். நான் கண்டு கொள்ள மாட்டேன்.

ஆனால் காப்பி மட்டும் அடிக்க முடியாது! ஏனென்றால் பின்னூட்டப் பெட்டியைப்
பூட்டிவிட்டேன். திறந்து வைத்தால் ஒருவர் எழுதியுள்ள பதிலைப் பார்த்து அடுத்தவர்
எழுதி விடும் அபாயம் உள்ளது!

உங்களுக்கு எழுதக் கொடுத்துள்ள அவகாசம் 60 மணி நேரம். உலகத்தில் எந்த
வகுப்பறையிலும் இந்த வசதி உங்களுக்குக் கிடைக்காது!

Deadline for submitting your answer is on or before10.00 AM on 14.07.2008
அதுவரை பின்னூட்டப் பெட்டி திறக்கப்படமாட்டாது!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
நம் தேசத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரின் பிறப்பைக் குறித்த விவரங்களைக்
கீழே கொடுத்துள்ளேன். நீங்கள் அந்தக் குறிப்பைவைத்து அவருடைய ஜாதகத்தைக்
கணித்துக் கொள்ளுங்கள்.
(சைடு பாரில் உள்ள மென்பொருள் அதற்கு உதவும் என்பது நீங்கள் அறிந்ததே!)

கேட்கப்பட்டுள்ள கேள்விகள் பத்தும் அந்த ஜாதகம் சம்பந்தப்பட்டதுதான். தெரிந்த
வரை, முடிந்தவரை பதில் எழுதுங்கள். தேர்வு என்று எடுத்துக் கொள்ளாமல் பயிற்சி
என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு சரியான பதிலுக்கும் பத்து மதிப்பெண்கள்.

பெயர்: தேதியைப் பார்த்தாலே தெரியும்!
தேதி: அக்டோபர் 2 வருடம் 1869
நேரம்: காலை 7.20
ஊர்: போர்பந்தர் (Porbander)
அட்சரேகை Longitude 69.49.E
தீர்க்கரேகை (Longitude) 21.37 N
Time Zone: 4.39.16 East of GMT
நட்சத்திரம்: அனுஷம்
லக்கினம்: துலாம்

க்ளூ வேண்டுமா? அவருடைய படம் கீழே உள்ளது:-))))))


++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்விகள்:

1. பதினைந்து வயதிலேயே தன் தந்தையைப் பறி கொடுத்தவர் அவர். அதற்கு
ஜாதகப்படியான காரணம் என்ன?

2. அவர் பார்-அட்-லா என்னும் உயரிய பட்டப் படிப்பை லண்டனுக்குச் சென்று
படித்தவர் அதற்கு ஜாதகப்படியான காரணம் என்ன?

3. படித்த படிப்பிற்கான வேலையைப் பாதி வயதிலே விட்டு விட்டவர்.அதற்கு
ஜாதகப்படியான காரணம் என்ன?

4. பிறகு தான் பிறந்த தேசத்திற்காக முழுக் கவனத்தையும், உழைப்பையும்
ஈந்தார் அல்லது கொடுத்தார்.அதற்கு ஜாதகப்படியான காரணம் என்ன?

5. அப்படிக் கொடுத்தாலும், தேசம் சுதந்திரம் அடைந்தபிறகு ஒருநாள் கூட
அவர் அரியனையில் அமரவில்லை! பதவியில் உட்காரவில்லை! அதற்கு
ஜாதகப்படியான காரணம் என்ன?

6. ஒரு வல்லரசையே எதிர்த்துப் போராடினார். அதற்கு ஜாதகப்படியான
காரணம் என்ன?

7. வாழ்க்கையில் அவர் அனுபவித்தது கஷ்டங்களை மட்டுமே! சுகமான,
ஆடம்பரமான வாழ்வு வாழ்வில்லை! அதற்கு ஜாதகப்படியான காரணம் என்ன?

8. மனப்போராட்டம் இல்லாத நாளே இல்லை என்னும்படியான வாழ்க்கை
அவருடைய வாழ்க்கை அந்த நிலை ஏற்பட்டதற்கு ஜாதகப்படியான
காரணம் என்ன?

9. உலகப் புகழ் பெற்றார். அதில் மாற்றுக்கருத்து இல்லை! அதற்கு
ஜாதகப்படியான காரணம் என்ன?

10. இறுதியில் அகால மரணம் அடைந்தார்!அதற்கு ஜாதகப்படியான
காரணம் என்ன?

--------------------------------
எங்கே முடிந்தவரை பதில் எழுதுங்கள்.

40 மார்க்குகள் வாங்கினால் பாஸ்!
20 மார்க்குகள் வாங்கியவர்கள் அரைக்கிணறு தாண்டியவர்கள்:-))))
10ற்குக் கீழே வாங்குபவர்கள் மீண்டும் இதுவரை நடத்தப்பட்டுள்ள
அனைத்துப் பாடங்களையும் பெஞ்ச் மேல் நின்று மறுபடியும் ஒருமுறை
படிக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை!;-)))))

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!
--------------------------------

10.7.08

ஜோதிடமும் மருத்துவர்களும்!

Astrology and Doctors interested in Astrology!

நம்மைச் சுற்றி எத்தனையோ ஒளி, ஒலிக் கதிர்கள் இங்கும் அங்கும் வட்டமடித்துக்
கொண்டிருக்கின்றன.வானொலி, பண்பலை, அலைபேசி அலைகள், காவல் துறையின்
வாக்கி டாக்கி அலைகள், தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் அலைகள் என்று
எண்ணிக்கையற்ற ஒலி மற்றும் ஒளிக் கற்றைகள் சூழ்ந்திருக்கின்றன.

அவற்றை நம்மால் அறிய முடியாது. அததற்குத் தகுந்த கருவிகள் இருக்கும் போது
அவைகள் நமக்கு வசப்படும்.

நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதனாலேயே அவற்றை இல்லை என்று
சொல்லி விட முடியாது.

அதேபோல வானில் உள்ள கோள்களில் இருந்தும் கதிர் அலைகள் வந்து கொண்டி
ருக்கின்றன. அவைகள் நம்மை எப்படிக் கட்டுப் படுத்துகின்றன என்பதை மட்டும்
இதுவரை யாரும் அறிய முடியவில்லை!ஆனால் கட்டுப்படுத்துகின்றன!

விஞ்ஞானிகள் அதை அறிய முயற்சி செய்யவும் இல்லை! அதுதான் சோகமானது!

ஆனால் மருத்துவர்கள் பலர் அதைப் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.

நம் சகபதிவர் டாக்டர் ப்ரூனோ அவர்களைப் போல ஜோதிடத்தில் ஆர்வமுள்ள
பல மருத்துவர்கள் தங்கள் தொழிலுக்கிடையேயும் அதற்கு நேரம் ஒதுக்கி
ஆராய்ந்து வருகிறார்கள்.

பெளர்ணமியன்று கடலிலும், ஆறுகளிலும், ஏன் எல்லா நீர் நிலைகளிலுமே நீரின்
ஓட்டம் ஆதிகமாக இருக்கும். அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது
சந்திரன் அந்த நாட்களில் சூரியனுக்கு நேர் கோட்டில் எதிரில் இருப்பதால்
அன்று மட்டும் சந்திரனில் இருந்து வரும் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும் என்று
கண்டுபிடித்தார்கள்.

The magnetic rays from moon is more on that day and it affects all the watery bodies
என்று கண்டு பிடித்தார்கள். அதே காரணம்தான் மன நோயாளிகளுக்கு அன்றைய
தினம் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் என்றும் கண்டு பிடித்தார்கள்.

அதனால் அறுவை சிகிச்சையை அன்று செய்யாதே, நோயாளிக்கு ரத்தப் பெருக்கு
அதிகமாக இருக்கும் என்றும் சொல்லிவைத்தார்கள். இந்த உண்மையை இன்று
எத்தனை மருத்துவர்கள் அறிவார்களோ தெரியவில்லை!

உங்களுக்காவது தெரியட்டும் என்று அவற்றைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.
பொறுமையாகப் படித்து அவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்!

என்னிடம் நான் முப்பது ஆண்டுகளாகச் சேகரித்த புத்தகங்கள், கட்டுரைகள்,
பேப்பர் க்ளிப்பிங்ஸ் என்று ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தொடர்ந்து
இன்னும் பத்து வருடங்களுக்குப் பதிவுகள் எழுதலாம். அப்படியெல்லாம்
எழுதி உங்கள் பொறுமையைச் சோதிக்கப்போவதில்லை. எனக்கும்
அதற்கெல்லாம் நேரமும் இல்லை! அடிப்படைப் பாடங்களை நடத்திவிட்டு
விட்டு விடலாம் என்று உள்ளேன்

அந்த மாதிரிக்கட்டுரைகளை எழுதிவர்கள் பலத்த ஆராய்ச்சிகளுக்கிடையே
பல மாதிரி ஜாதகங்களுடன் விரிவாகவும், சுவாரசியமாகவும் எழுதியுள்ளார்கள்
அவற்றை எல்லாம் எடுத்து எழுதினால் A4 Sizeல் பத்தாயிரம் பக்கங்கள்
எழுதலாம். அவற்றையெல்லாம் மொழிபெயர்த்து எப்படி வலையில் ஏற்றுவது?

அத்துடன் காப்பி ரைட் பிரச்சினைகள் வந்து சேரும்.

கேன்சர் என்றால் கேன்சர் பேஷண்ட்டுகளாக நூறுபேரின் ஜாதகங்களை வாங்கி
அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார்கள். அதே போல இஞ்சினியர்கள், ஆடிட்டர்கள்
வங்கியாளர்கள் என்று ஒரு துறையைக் கூட விட்டுவைக்கவில்லை. காலசர்ப்ப
தோஷம், விதவை தோஷம், தரித்திர யோகம் என்று ஒன்றையும் விட்டு வைக்க
வில்லை!

ஒரு வரியில் சொன்னால் சூப்பராக இருக்கும்!

முடிந்தால் சிறு குறிப்புக்களை மட்டும் பின்னால் அதனதன் தலைப்பில் தருகிறேன்
------------------------------------------------------------------------------------------
இதய அறுவை சிகிச்சை நிபுனர் டாக்டர் மந்த்கே பெளர்ணமியன்று அறுவை
சிகிச்சை செய்தால் ரத்தப் பெருக்கு அதிகரிக்கும் என்று சொல்லியுள்ளதைக்
கீழே கொடுத்துள்ளேன்.

படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால படங்கள் பெரிதாகத் தெரியும்!

-------------------------------------------------------------
கீழே உள்ள படம் ரஷ்ய டாக்டரின் படம். அவர் அறுவை சிகிச்சை நிபுணர்.
அதோடு ஜோதிடத்தையும் முறையாகக் கல்லூரியில் கற்றவர். அறுவை
சிகிச்சையையும் ஜோதிடத்தின் தொடர்பையும் பற்றி சொல்லியிருக்கிறார்.
முழுதாகப் படித்துப் பாருங்கள்

ரஷ்ய டாக்டருக்கு, பகுத்தறிவைச் சொல்லிக் கொடுக்க ஆள் இல்லாமல்
போய்விட்டது போலிருக்கிறது. அதனால்தான் அந்த மனிதர் ஜோதிடத்தைப்
படித்ததோடு இல்லாமல் ஆராய்ச்சிகள் வேறு செய்திருக்கிறார். ரஷ்யாவில்
உள்ள கம்யூனிஷ்ட்டுக்கள் ஜோதிடத்தை எப்படி விட்டு வைத்தார்கள் என்பது
தெரியவில்லை!








--------------------------------------------------------------------------------------------
The Article written by Dr.R Chandrasekaran in The Hindu in the year 1991


--------------------------------------------------------------------------------
டாக்டர் எஸ்.என் ராவ் என்பவர் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார் மாதிரிக்கு ஒன்று

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டாக்டர் ராஜேஷ் கோயல்M.B.BS. M.D (கவனிக்கவும் அறுவை சிகிச்சை நிபுணர்) அவர்கள்
எழுதியுள்ள பல கட்டுரைகளில் மாதிரிக்கு ஒன்று!



-----------------------------------------------------------------------
டாக்டர் எஸ்.என் ராவ் என்பவர் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார் மாதிரிக்கு மேலும் ஒன்று

_____________________________________________________
தேவைப்பாட்டால் சொல்லுங்கள் மருத்துவர்களை வைத்தே மேலும் பல ஆதாரங்களைத் தருகிறேன்!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

4.7.08

ஜோதிடம்: என்னதான் ரகசியமோ இதயத்திலே!


இன்று பாடம் மட்டுமே! அரட்டைக் கச்சேரி, கதை எதுவும் இல்லை!

தேனில்லாத மருந்து;. எப்படியிருக்கிறது என்று பாருங்கள்!

முன் பதிவில் ஒரு அன்பர் பின்னூட்டமிட்டிருந்தார். கதை அதிகமாகி
விட்டதகவும், பாடம் குறைந்துவிட்டதாகவும். அவருக்கு இந்தப் பதிவு
சமர்ப்பணம்!
----------------------------------------------------------------
1. ஐந்தாம் வீடு மூன்று பலன்களைத் தருவது. அவை முறையே பூரவ
புண்ணியம், குழந்தைபாக்கியம், நுண்ணறிவு!

2. பூர்வபுண்ணியம் என்பது முன் பிறவியில் நாம் செய்த நன்மைதீமை
களின்படி நமக்குக் காலன் கொடுக்கும் சான்றிதழ். அந்த சான்றிதழை
வைத்துத்தான் இந்தப் பிறவியில் பல செயல்கள் நமக்கு நன்மை
உள்ளதாக அமையும்!

3. நிறைய ஜோதிடர்கள் இங்கேதான் சறுக்கிவிடுவார்கள். பூர்வ ஜென்
மத்தை முழுமையாக அறிந்து சொல்ல எந்தக் கொம்பனாலும் முடியாது.
ஓரளவிற்குச் சொல்லலாம்!

4 இந்த 5ஆம் வீட்டிற்குக் காரகன் (authority) குரு. அவர் அந்த 5ஆம்
வீட்டிற்கு ஐந்தில் அதாவது லக்கினத்தில் இருந்து 9ல் இருந்தால் ஜாதகன்
மிகவும் அதிஷ்டசாலி! புண்ணிய ஆத்மா! பெயரையும், புகழையும் அவர்
(காரகன் குரு) பெற்றுத்தருவார்.

5. 1ஆம் வீடு லக்கினம், 5 ஆம் வீடு அவனுடைய குழந்தை. 9ஆம்
வீடு அவனுடைய (ஜாதகனுடைய) தந்தை. அந்த 9ஆம் வீட்டிலிருந்து
5ஆம் வீடு மீண்டும் ஜாதகனின் வீடாகவே இருக்கும். அதாவது
9ஆம் வீட்டுக் காரரின் மகன். ஒரு சுழற்சி!! என்ன அற்புதம் பாருங்கள்!

6. ஐந்தாம் வீடு எண்ணங்களையும், உணர்வுகளையும் குறிப்பதாகவும்
இருக்கும். ஐந்தாம் வீடு நல்ல அமைப்புக்களைப் பெற வில்லை என்றால்
ஜாதகன் வில்லங்கப் பார்ட்டி அல்லது டென்சன் பார்ட்டி!

7. ஐந்தாம் வீட்டைப் பற்றி அறிந்து கொள்ள முதலில் பார்க்க வேண்டிய மூன்று.
ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி மற்றும் காரகன் குரு.
அவைகள் நன்றாக இருந்தால் நல்லது. காரகனும், அதிபதியும் கேந்திர,
கோணங்களிலோ அல்லது சுயவர்க்கத்தில் நல்ல பரல்களுடனோ இருத்தல் நலம்.

8. அடுத்து உபரியாகப் பார்க்க வேண்டியது. 5 ஆம் வீட்டில் வந்து இடம் பிடித்து
அமர்ந்திருக்கும் கிரகம், ஐந்தாம் வீட்டு அதிபதியோடு சேர்ந்
திருக்கும் கிரகம், அல்லது காரகனோடு சேர்ந்திருக்கும் கிரகம். அவை
களும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையே!

9. மேஷம், சிம்மம், தனுசு ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக
அமையப் பெற்றால் அவர் இயற்கையாகவே நேர்மையான வராக இருப்
பார். அவரை யாரும் சுலபமாக விலைக்கு வாங்க முடியாது
ஜாதகத்தில் லக்கினதிபதி போன்றவர்கள் கெட்டிருந்தால் மட்டுமே அவர்
நேர்மை தவற நேரிடும். இல்லையென்றால் இல்லை!

10. அவர்களுடைய இந்த நேர்மை, சிலரை எரிச்சல் படுத்தவும் செய்யும்.
ஆனால் அவர்கள் அதைப்பற்றி சிறிதும் சட்டை செய்யாத அளவிற்கு மன
உறுதியுடன் இருப்பார்கள்..

ஐந்தாம் வீடு மனதிற்கும் உரிய வீடுதான் மனம், நெஞ்சம், இதயம் என்று
எப்படி வேண்டுமென்றாலும் பொருள் கொள்ளுங்கள்! (அப்பா, தலைப்பைப்
பிடித்து விட்டேன்!:_)))))

11. ஐந்தில் ராகு அல்லது கேது அல்லது சனி ஆகிய கிரகங்களில் ஒன்றி
ருந்தாலும் ஜாதகன் எப்போதுமே எதற்காவது கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்.

12. ரிஷபம், கன்னி, மகரம். ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக
அமையப் பெற்றால் அவர் கற்பனைத் திறன் (imagination), ஆழ்ந்த
உணர்வுகள் (deep feelings) அதீத நினைவாற்றல் (memory) உள்ளவராக
இருப்பார். இது பொது விதி. ஜாதகத்தின் வேறு கிரக சேட்டைகளை
வைத்து இது மாறுபடும் (இது பின்னூட்டத்தில் வருபவர்களுக்காக
முன்பே சொல்லி வைக்கிறேன்)

13. ரிஷப ராசி ஐந்தாம் வீடாக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கையை
சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள். (The person will be highly
optimistic and he takes life easy) காரணம் ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்.
அதனால் எப்போதுமே ஜாலி.... நோ கதை வேண்டாம்

14. மகர ராசியை ஐந்தாம் வீடாகப் பெற்றவர்கள் பொதுவாக டென்சனா
கும் ஆசாமிகள் Highly pessimistic and takes life seriously கரணம்
அதிபதி சனி!

15. கன்னி ராசியை ஐந்தாம் வீட்டாகப் பெற்றவர்களுக்கு ரிஷபம் மற்றும்
மகர ராசிகளின் பலன்கள் கலவையாக இருக்கும். காரணம் அதிபதி புதன்
அவர்கள் எப்போது ஜாலியாக இருப்பார்கள், எப்போது சீரியசாகி விடு
வார்கள் என்பது அவர்களுக்கு அன்றாடம் அமையும் சூழ்நிலை களைப்
பொறுத்து மாறுபடும்!

16. மிதுனம், துலாம், கும்ப ராசிகளை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்கள்
அடுத்த பிரிவினர். They will have different emotional set up. They are concerned
with conduct rather than motive. They are concerned with action rather than
thought or feeling. செயல் வீரர்கள். உணர்வுகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்காமல் காரியங்களைச் செய்பவர்கள்.

17. துலா ராசியை ஐந்தாம் வீடாகக் கொண்டவர்கள் யாதார்த்தமானவர்
கள். More practical people!

18. கும்பராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள். உண்மையான
மனதுடையவர்கள். நம்பகத்தன்மை மிக்கவர்கள் (அவர்களை முழுதாக நம்பலாம்.

19. மிதுன ராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள் தங்கமானவர்கள்
அந்த ராசிக்காரக்களின் நட்பு கிடைத்தால் பெட்டியில் வைத்துப் பூட்டி
விடுங்கள்! இன்னும் சொல்ல துறு துறுக்கிறது. பதிவைச் சமர்ப்பணமாகப்
பெற்றுக் கொண்டவர் சண்டைக்கு வந்தால் என்ன செய்வது?.
ஆகவே விளக்கம்/ கதை இல்லை!

20. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்
கொண்டவர்கள், அதிகமான தொல்லைகளுக்கு ஆளாவர்கள். ஆனால்
அவற்றைப் பொறுமையுடனும், மன் உறுதியுடனும் தீர்க்க
கூடிய வல்லமை பெற்றிருப்பார்கள்.

21. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்
கொண்டவர்கள் தத்துவஞானிகளாக இருப்பார்கள். உலகின் மிகப் பரபல
மான Philosopherகள் எல்லாம் இந்த அமைப்பை உடையவர்களாகவே
இருப்பார்கள். இயற்கையாகவே இந்த அமைப்பைக் கொண்டவர்கள்
தர்ம, நியாயங்கள் தெரிந்தவர்களாக இருப்பார்கள். யாரும் அவர்களுக்கு
எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!

22. கடகம், விருச்சிகம்,மீனம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்
கொண்டவர்களைப் பற்றி இப்போது பார்ப்போம். இவர்கள் வித்தியசமான
பார்வை கொண்டவர்கள். மற்றவர்களை விட இவர்கள் ஒன்றைப் பார்த்து
எடுக்கும் முடிவு. அற்புதமாக இருக்கும். அதுதான் சிறந்ததாகவும்
இருக்கும்

23. இந்த அமைப்பினர் தலைமை ஏற்கத்தகுதியுடையவர்கள். அந்த
மூன்றில் (கடகம், விருச்சிகம்,மீனம்) கடகம் மிகவும் சிறப்பானது.
காரணம் அதிபதி சந்திரன்.

24. மீனத்தை ஐந்தாம் வீடாகக் கொண்டவர்கள், ஆக்கபூர்வமான சிந்தனை
மற்றும் செயலை உடையவர்கள். அவர்களுடைய மன ஒட்டத்தை யாராலும்
ஊகிக்க முடியாது.

25. ஜாதகத்தில் லக்கினம், ஒன்பதாம் வீடு ஆகியவ்ற்றிற்கு நிகராக 5ஆம்
வீடும் அதி முக்கியமானது. அத்னால அவை மூன்றிற்கும் திரிகோணம்
எனப்படும் முதல் நிலை அந்தஸ்து (status) கொடுக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் வீட்டைவைத்து இங்கே குறிப்பிட்டுள்ள யாவுமே பொது விதிகள்
ஆகும். மற்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

அவற்றை அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

(தொடரும்)
வாழ்க வளமுடன்!

2.7.08

அடுத்த பிறவியில் என்னவாகப் பிறந்தான்?

ஆரம்ப காலங்களில் மிகவும் ஆர்வமாக எல்லோருடனும் ஜோதிடத்தை சிலாகித்துப்
பேசிக் கொண்டிருப்பேன். ஒரு பத்தாண்டுகளுக்குப் பிறகு அதைக் குறைத்துக் கொண்டு
விட்டேன். அதாவது அத்தியாவசியத் தேவையின்றி வாயைத்திறக்காமல் இருப்பேன்.

வருகிறவர்களின் உபத்திரவம்தான் காரணம். என்னுடைய நேரத்தை உறிஞ்சிக் குடித்து
விட்டுப்போய் விடுவார்கள்.அதிலும் காசு பணம் இல்லாமல் இலவசமாகப் பார்த்துச்
சொன்னதால். வருகிறவர்கள் என்னை இந்திரன், சந்திரன் என்று புகழ்வார்கள். ஒரு தர்ம
காரியத்தை செய்து கொண்டிருப்பதாகவும், நான் மேலே போகும் போது ஐந்தாறு லாரிலோடு
புண்ணியம் கூடவே வரும் என்று சொல்லிவிட்டுப் போவார்கள்.

சொல்லிவிட்டுப் போன கையோடு, அவர்களுக்குத் தெரிந்த இரண்டு பேரை அனுப்பி
வைப்பார்கள். அந்த ஆசாமிகளும் பவ்வியமாகப் போனில் பேசுவார்கள்

”சார், உங்களைப் பற்றி உங்கள் நண்பர் வைத்தியநாதன் பிரமாதமாகச் சொன்னார்.
உங்களைப் பார்க்க வேண்டும் எப்போது ஃப்ரீயாக இருப்பீர்கள்?”

“என்ன விஷயம்?”

“ச்சும்மா கர்ட்டஸி கால். பத்து நிமிடமித்திற்கு மேல் ஆகாது!”

வேறு என்ன செய்வது?

நண்பருக்காக அந்த ஆசாமியை வர அனுமதிப்பேன்.

வந்த பிறகுதான் வம்பு ஆரம்பமாகும். வந்த ஆசாமி கழுத்துமேல் ஏறி உட்கார்ந்து
கொண்டு விடுவார். ஏறி உட்கார்ந்தது மட்டுமல்ல இறங்கச் சொன்னால், ஆயிரம் ப்ளீஸ்
போட்டு, சீரியலில் வரும் நடிகைகள் போலக் கண் கலங்கி வந்த காரியத்தைச்
சாதிக்காமல் போகமாட்டார்.

பரிதாபப்பட்டு அவருடைய ஜாதகத்தை வாங்கிப் பார்த்தால், கூட்டெழுத்தில் ஒரு
பழைய பஞ்சாங்க ஜோதிடர் அந்தக் காலத்தில் எழுதிக் கொடுத்த ஜாதகமாக இருக்கும்.
எழுத்துக்கள் ஒன்றும் புரியாது எல்லாப் பக்கங்களிலும் மஞ்சள் மட்டும் அம்சமாகத் தடவப்பட்டிருக்கும்.பரல்கள்.மாந்தியின் நிலைமை போன்ற முக்கியக் குறிப்புக்கள்
இருக்காது!

நான் சொல்லும் கதைகள் 1990 - 1995 கால கட்டங்களில் நடந்தவைகளாகும்.
அப்போது கணினியில் ஜாதகம் கணிக்கும் வசதி எல்லாம் கிடையாது.

நான் உடனே என்னிடம் உள்ள பஞ்சாங்கத்தொகுப்பு நூலை எடுத்து, அந்த ஜாதகத்
தைப் பரிசீலனை செய்வேன். 1921 முதல் 1991 உள்ள 70 ஆண்டுகளுக்கான பஞ்சாங்கத்
தொகுப்பு நூல் அது. காலசந்திப்புப் பிறப்பா, நட்சத்திரம் சரியாகக் குறிக்கப்பாட்டு
ள்ளதா, மற்ற கிரகங்களும் ஒழுங்காகக் குறிப்பிடப் பட்டுள்ளதா என்று பார்ப்பேன்.
பிறகு அந்த ஜாதகத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தசா இருப்பில் இருந்து அடுத்தடுத்துக்
கடந்துபோன தசா புத்திகளைக் கணக்கிட்டு அன்றைய தேதிவரை வந்து நடப்பு
தசா புத்திவரை குறிப்பெடுத்துக் கொள்வேன்.

பிறகுதான் ஆட்டம் ஆரம்பம் ஆகும். வந்தவர் பெளன்சராகப் போடுவார்.

உதாரணத்திற்கு ஒரு நிகழ்வைச் சொல்கிறேன் பாருங்கள்:

“உங்கள் பிரச்சினை என்ன வென்று சொல்லுங்கள்”

“நீங்கள் இதுவரை குறித்ததை வைத்து பிரச்சினை என்னவென்று சொல்ல முடியாதா?”

“முடியாது. மருத்துவரிடம் போய் சட்டையைக்கூடக் கழற்றாமல், என் உடம்பில் என்ன
பிரச்சினை இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம் என்றால் எப்படிச் சொல்வார்?
Scribbling Pad or Letter Headல் Full Body Scan, Blood & Urine Test, EGC Test என்று
எழுதிக்கொடுத்து உங்களுக்கு ஒரு ஆறாயிரம் ரூபாய்க்கு செலவு வைத்துத் திருப்பி
அனுப்பி விடுவார். உடலில் பிரச்சினை என்றால் தலைவலி, வயிற்று வலியில் இருந்து
கான்சர் வரை நூறு பிரச்சினைகளையாவது பட்டியல் இடலாம். அது போலத்தான்
இதுவும். பிரச்சினையைச் சொன்னால்தான் இதில் அது சம்பந்தமான Planetary
Combinationsகளை வைத்துப் பார்க்கமுடியும்.”

“சாரி சார், ஒரு ஆர்வத்தில் தெரியாமல் கேட்டுவிட்டேன். நான் வேலை பார்க்கும்
அலுவலகத்தில் ஒரு தவறான despatchஆல் கம்பெனிக்கு சில லட்சங்கள் நஷ்டம்
ஏற்பட்டு விட்டது. அதற்கு நான் காரணமல்ல.எனக்குக் கீழே இருக்கும் உதவியாளர்
களால் ஏற்பட்டுவிட்டது. இப்பொது எனக்கும் சேர்த்து சார்ஜ்சீட் கொடுத்துவிட்டார்கள்.
விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முடிவு எப்படி வேண்டுமென்றாலும் ஆகலாம்.
அதிக பட்சம் அவர்கள் வேலையைவிட்டு என்னை அனுப்பி விடலாம். அல்லது ஒரு
வார்னிங் மட்டும் கொடுத்து வேலையிலே இருக்கச் சொல்லலாம். அல்லது பதவி
இறக்கம் செய்து விடலாம். என்ன நடக்குமோ என்று கவலையாக இருக்கிறது.
நீங்கள் பார்த்து ைதரியமாக ஒரு வார்த்தை சொன்னால் போதும்!”

பதிவின் நீளம் கருதி இங்கே கட் சொல்லி விட்டு அடுத்த ஸீனுக்குப் போகிறேன்
--------------------------------------------------------------------------------------------------------
ஒருவருக்கு அவர் பார்க்கும் வேலையில் பிரச்சினை என்றால் முதல் காரணம்
பாதக ஸ்தான அதிபதிகளின் தசாபுக்தி காரணமாக இருக்கும். அதோடு கர்மகாரகனின்
கோச்சாரம் (Transit Saturn) காரணமாக இருக்கும். பெரும்பாலும் இவைகள்தான்
காரணமாக இருக்கும். சில வேறு அமைப்புக்களும் உண்டு. காரணங்களும் உண்டு.
அவைகள் சில்லரை/உபரிக் கணக்கில் வரும் அதை விட்டு விடுவோம்

பாதக ஸ்தானம் = Inimical house, Hidden places, மறைவிடங்கள்! 6ஆம் இடம், 8ஆம்
இடம் & 12ஆம் இடம்

இங்கே Majorஐ மட்டும் பார்ப்போம் Ancillaryஐ விட்டு விடுவோம்.

எந்த ஒரு கேள்விக்குமே அது சம்பந்தப்பட்ட வீட்டை அதற்குரிய லக்கினமாக
எண்ணிக் கொண்டுதான் பரிசீலனை செய்ய வேண்டும்.

பணப்பிரச்சினை என்றால் 2ஆம் வீடு
படிப்பில் பிரச்சினை என்றால் 4ஆம் வீடு.
கடன் அல்லது நோயால் தொல்லை என்றால் 6ஆம் வீடு
வேலை அல்லது தொழிலில் பிரச்சினை என்றால் 10ஆம் வீடு
திருமணத்தில் பிரச்சினை என்றால் 7ஆம் வீடு.
இப்படியாக அதற்குறிய கட்டத்தை ஜாதகத்தின் ஒரிஜினல் லக்கினத்தில் இருந்து
எண்ணிக் குறித்துக் கொண்டு ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்

(இந்த ஆட்டம், பாட்டம் என்ற சொற்கள் எல்லாம் ஒரு சுவைக்காகத்தான்)

வந்த ஜாதகர் சிம்ம லக்கினக்காரர். அவருடைய பத்தாம் வீடு ரிஷபம்.கேள்வி வேலை
சம்பந்தப்பட்டது என்பதால் தற்காலிகமாக ரிஷபத்தை லக்கினமாக எடுத்துக் கொண்டு
பரிசீலிக்க வேண்டும். வந்தவருக்கு ரிஷபத்தில் 30 பரல்கள்.பத்தாம் இடத்து அதிபதி
சுக்கிரன் தன் சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருக்கின்றார். இந்தக் காம்பினேஷனால்
அவருக்கு நல்ல வேலை கிடைத்திருக்கிறது. கோச்சாரத்தில் எட்டாம் இடத்தில்
தனுசு இராசியில் சனி. 10ஆம் வீட்டிற்கு, அதன் எட்டாம் இடத்தில் சனி சஞ்சாரம்
செய்யும் போது பல இடையூறுகளை ஏற்படுத்துவார். இடையூறுகளைப் பட்டியல்
இட்டால் மாளாது. ஒரே வார்த்தையில் இடையூறுகள்.அவ்வளவுதான்.

அந்த இரண்டரை ஆண்டு (Transit Saturn - அந்த எட்டில் இருக்கும் காலம்) நடக்கும்
தாசபுத்தி நன்றாக இருந்தால், இடையூறுகளைத் தட்டி விடலாம் - அதாவது சமாளித்து
விடலாம். இல்லை என்றால் அது நம்மைத் தட்டி விடும்.

அவருடைய தசா புத்தி அந்த நேரத்தில் குரு திசையில் சனி புக்தி. அது முடிய 20 நாட்கள்
பாக்கி இருந்தது. அதற்குப் பிறகு, குரு திசையில் புதன் புத்தி. அது நல்லதாக இருக்கும்.

“பொறுமையாக இருங்கள்.இன்னும் ஒரு மாதத்தில் நிலமை சரியாகி விடும். உங்களுக்குப்
பெரிய பாதிப்பு ஒன்றும் வராது” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.

அதுபோல்தான் நடந்தது!

வெறும் எச்சரிக்கைக் கடிதத்தோடு அவருடைய வேலை தப்பிப் பிழைத்தது!

இது போன்று பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.
--------------------------------------------------------------------------
அடுத்த பிறவியில் என்னவாகப் பிறந்தான்?

உனக்காக நான், எனக்காக நீ என்று பிறவி எடுத்ததுபோன்ற தம்பதியர்
இருந்தார்கள். காதல் திருமணம். முதலில் இருவீட்டாரின் எதிர்ப்பு இருந்தா
லும், திருமணமான ஆறுமாதங்களுக்குள் ஒன்றிப்போய்விட்டார்கள்.

அதற்குப் பிறகுதான் மாப்பிள்ளையின் பெருமை பெண்வீட்டார்களுக்குத்
தெரிந்தது. மருமகளின் பெருமை பையன் வீட்டார்களுக்குத் தெரிந்தது

இருவருக்கும் ஒரு அசத்தலான பெயர் பொருத்தம் இருந்தது. அவன் பெயர்
சோமசுந்தரம். அவள் பெயர் மீனாட்சி!.

அதுவா முக்கியம்?

அதைவிட முக்கியமாக தம்பதியர் இருவரும் அன்பாக அன்னியோன்யமாகக்
குடும்பம் நடத்தினார்கள். ஒருவருக்காக ஒருவர் உருகினார்கள்.ஒரு பெண்
குழந்தையும் பிறந்தது

எல்லாமே சரியாக இருந்துவிட்டால் கதையை எப்படி நகர்த்துவது?

ஒரே ஒரு குறை இருந்தது.

சோமு என்ற சோமசுந்தரம் 'அந்த' சமாச்சரத்தில் அதீத இச்சை உடையவன்
அதிகாலை, மதியம். முன்னிரவு என்ற காலக்கணக்கில்லாமல் தன்னை
சந்தோஷப் படுத்தச் சொல்வான். அவளும் மனம் கோணாமல் எப்போது
அவன் படுக்கைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பாள்.

யாருடைய கொள்ளிக்கண் பட்டதோ தெரியவில்லை. சோமு ஒரு நாள்
அவன் பொறியாளராக வேலை பார்த்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில்
இறந்து விட்டான். அவன் இறந்தபோது அவனுக்கு வயது முப்பதுதான்.
மீனாட்சி அவ¨னிவிட இரண்டு வயது இளையவள்

எப்படி இருக்கும் மீனாட்சிக்கு? நொருங்கிப்போய்விட்டாள்

யாராலும் அவளுக்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை!

ஆனாலும் காலதேவன் ஒரு மருந்து வைத்திருக்கிறான். அதுதான் மறதி.
மெல்ல மெல்ல அவளுடைய துக்கம் ஆறிவிட ஒருவருடத்திற்குள் அவள்
பழைய இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டாள்.

அவளுடைய குழந்தை அவளுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் ஒரு
சேரக் கொடுத்துக் கொண்டிருந்தது!

அப்படியே ஒரு இருபது வருடங்கள் ஓடிப்போனது தெரியவில்லை!

ஒரு சமயம் திருவண்ணாமலையில் அவள் ஒரு சித்தரைச் சந்தித்து
வணங்கி, தன் கதையைச் சொல்லி அழுதாள்.

அவர் அவளுக்குப் பிறப்புக்களைச் சொல்லி சமாதானம் செய்தார்.

அவளுக்கு ஓரளவு இறப்பு, மறு பிறவிகள் மேல் நம்பிக்கை ஏற்பட்டது!

இறந்துபோன தன்னுடைய கணவன் இப்போது மறுபிறவி எடுத்து
எங்கே இருப்பான் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவளுக்கு ஏற்பட்டது.

அதை அவள் அவரிடம் சொன்னாள்.

உடனே அவர் புன்னகையுடன் இரண்டு வெள்ளிக் கிண்ணங்களை, தன்
ஆசிரம அலமாரியில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.

கொடுத்ததோடு சொன்னார். "இதை நீ உன் காதுகளில் வைத்துக் கொண்டு,
மனம் உருகி இறைவனைப் பிரார்த்தனை செய்தால், உன் கணவனுடைய
ஆத்மாவுடன் தொடர்பு கிடைக்கும். நீ மனதில் என்ன கேட்க நினைக்
கிறாயோ அதை மனதிலேயே நினைத்துக் கொண்டால், அவன் உன்னுடன்
பேசுவான், அது உன் மனதிற்கு மட்டும் கேட்கும்.போய் பேசிவிட்ட வா"
என்றார்

அவள் உற்சாகமாக எழுந்து சென்று கொஞசம் தள்ளி இருந்த அரச மரத்து
நிழலில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"என்னங்க நான்தான் உங்களுடைய மீனாட்சி பேசுகிறேன். என்னோடு
பேசுங்களேன்...." மனம் உருகிச் சொன்னாள்.

என்ன ஒரு ஆச்சர்யம், காதில் அவளுடைய கணவனின் குரல் தேனாக
ஒலித்தது.

"என்னடி செல்லம் நல்லாயிருக்கியா?"

"இருக்கிறேன். நன்றாக இல்லை. நடைப்பிணமாக இருக்கிறேன்"

"கவலைப் படாதே.கடவுளை வேண்டிக்கொள். மீன்டும் ஒரு பிறவியில்
நாம் மறுபடியும் இணவோம்!"

"அதற்கு எவ்வளவு நாளாகும்?"

"யாருக்குத் தெரியும்? எவ்வளவு நாளாலென்ன? உன்னைப்போல ஒரு
உத்தம மனைவி கிடைக்க நான் எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும்
காத்திருப்பேன்"

அவள் குளிர்ந்துபோய் விட்டாள். மனது காற்றில் பறக்க ஆரம்பித்தது.

உடனே பழைய சம்பவங்கள் மனதில் மின்னலாய்த் தோன்ற அவள்,
ஒரு குறுகுறுப்புடன் கேட்டாள்:

"அந்த' சமாச்சாரம் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டீர்களே?
இப்போது அது தடையின்றிக் கிடைக்கிறதா?"

"ஆகா, ஒரு நாளைக்குப் பத்து முறை!"

நாளொன்றுக்குப் பத்து முறைகளா? எப்படி சாத்தியம்?

வியப்போடு கேட்டாள்:" பத்து முறை எப்படி சாத்தியம்? பொய் சொல்லி
விளையாடுகிறீர்களா?"

"இல்லடி செல்லம் உண்மையைத்தான் சொல்கிறேன். இப்போது நான்
முயலாகப் பிறந்துள்ளேன்
--------------------------------------------------------------------------------------
உடனே லாஜிக், சான்று என்று கேட்டு, வேட்டு வைக்க முயலாதீர்கள்.

ஒருவனுடைய பிறவி அபிலாஷைகள் தீராமல், அறைகுறை வயதில்
இறந்தால், அந்த வினைப் பயன் தீரும் வரை, அவன் அதற்குத்
தகுந்தபடி பல பிறவிகளை எடுத்துக் கொண்டே இருப்பான் என்பது
தான் பழைய கூற்று. அதானால்தான் பெரியவர்கள் சொல்வார்கள்
தர்மத்தின் மேல், இறைவன் மேல் அதிக ஆசை வை. சிற்றின்பங்களின்
மேல் அதிக ஆசை வைக்காதேயென்று!

அதை யாரும் கேட்டால்தானே?

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

26.6.08

எக்ஸ்க்யூஸ் மி ப்ளீஸ் - அடுத்த பகுதி!

நாட்டு வைத்தியர் ஒருவர் இருந்தார். நாட்டு வைத்தியம் என்றால் மூலிகைகளைக்
கொண்டு வைத்தியம் செய்பவர். அவர் இருந்த இடம் ஒரு கிராமம்.

கிராமத்துக் கதை என்பதையும், வருடத்தையும் வைத்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்
இது என் சொந்த சரக்கல்ல - என் தந்தையார் சொல்லிய கதைகளில் ஒன்று என்று!

கதை நடந்த காலம் ‘சபாபதி' திரைப்படம் வந்து சக்கை போட்டுக்கொண்டிருந்த காலம்.
அதாவது 1941ஆம் வருடம்.

அந்தப் படத்தில் பள்ளிக்கூட வாத்தியார் பாத்திரத்தில் வரும் திருவாளர் கே.சாரங்கபாணி
போலவே நமது வைத்தியரும் அச்சு அசலாக அப்படியே இருப்பார். வயது 50

அக்கம் பக்கத்துக் கிராமத்துக்காரர்கள் எல்லாம் தேடி வருவார்கள். அந்தக் காலத்தில்
மாதம் முப்பது ரூபாய் கிடைத்தாலே பெரிய வருமானம். அப்போது விலைவாசியும்
நாம் நம்ப முடியாத அளவிற்குக் குறைவாகவே இருந்தது.

ஒரு அணாவிற்கு (இன்றைய மதிப்பு ஆறு நயா பைசா) நாஷ்டாவை முடித்து விடலாம்
நாஷ்டா என்றால் காலைப் பலகாரம்.மற்றதை நீங்கள் கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள்

வைத்தியர் நாளொன்றுக்கு பத்து ரூபாய் பார்த்துவிடுவார். பத்து ரூபாய் என்பது 160 அணா.
தலைக்கு இரண்டணா நாலணா என்று வருகிறவர்கள் கொடுப்பார்கள்

அதோடு சிலர், அரிசி, பருப்பு, புளி, காய்கறி என்று தங்கள் தோட்டத்தில் விளயும்
பொருட்களையும் கொண்டு வந்து கொட்டிவிடுவார்கள்.

அதனால் வைத்தியர் மதிப்பு, மரியாதை, செல்வாக்கோடு வாழ்ந்து கொண்டிருந்தார்

வீட்டின் முன் பகுதியில் கிளினிக். தன்னுடைய ஒரே மகனையும் தயார் செய்து
வைத்திருந்தார். தந்தையோடு சேர்ந்து அவனும் வைத்தியம் பார்ப்பான்

வைத்தியர் ஒரு சீட்டாட்டப் பைத்தியம். மூலிகைகளைத்தவிர அவர் மண்டையில்
எப்போதும் கிங், க்யூன், ஜாக்கிதான் ஓடிக்கொண்டிருக்கும்.

அலாரம் வைக்காமலேயே காலை ஐந்து மணிக்கெல்லாம் டானென்று எழுந்து விடுவார்.
காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, உள்ளூர் மாரியம்மன் கோவிலைக் கடனே
என்று (மனைவிக்காக) சுற்றி வந்துவிட்டு, காலைப் பலகாரம், காப்பித் தண்ணி
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, சரியாக ஏழு மணிக்கெல்லாம் தன் தொழிலைத்
துவங்கி விடுவார்.

பத்து மணிவரைதான் வைத்தியம் பார்ப்பார்.அதற்குப் பிறகு சீட்டாடக் கிளம்பி விடுவார்.
அதற்குப் பிறகு கூட்டம் வராது. அப்படியே தப்பித்தவறி வருகிறவர்களுக்கு அவருடைய
புத்திரன் தனக்குத் தெரிந்த மருந்தைக் கொடுத்து அனுப்பி விடுவான். நாட்டு மருந்து
என்பதால் பக்க விளைவுகள் (Side effects) வராது. பயமில்லை!

அவர் வீட்டு மாடியில்தான் சீட்டாட்டம் நடக்கும். ஜமக்காளம் விரித்து அமர்க்களமாக
நடக்கும். ஊரில் உள்ள மிட்டா, மிராசுகள் எல்லாம் கூடி விடுவார்கள். அந்தக்
கால கட்டத்தில் வேலை வெட்டியில்லாத பணக்காரர்கள் (நிலச்சுவான்தாரர்கள்)
நிறைய இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் பகலில் இதுதான் வேலை!

மாலை ஆறு மணிவரை ஆட்டம் தொடரும். விளக்கு வைத்த பிறகு ஆடினால் ஆகாது
என்று வைத்தியர் மனைவி சொல்லியிருப்பதால் எல்லோரும் எழுந்து போய் விடுவார்கள்

வைத்தியருக்கு லாப ஸ்தானத்தில் 40 பரல்கள்.அதோடு லாபாதிபதியும், லக்கினாதிபதியும்
கூட்டணி போட்டு லக்கினத்திற்கு ஏழாம் வீட்டிலிருந்து லக்கினத்தை நிரந்தரமாகப்
பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால் வைத்தியருக்கு சீட்டாட்டத்தில் பணம் கொட்டும்

வருகின்ற பணத்தை அப்படியே அன்று இரவு வீட்டு அம்மணியிடம் கொடுத்துவிடுவார்
அதனால் அந்த அம்மணியும் அவருடைய ஆட்டங்களுக்கு ஒன்றும் சொல்வதில்லை!

அடிப்படைத் தகவலையெல்லாம் கொடுத்துவிட்டேன். இனி வருவதுதான் மெயின்
ஸ்டோரி.
-------------------------------------------------------------------------------------
நம்ம வைத்தியர் மருந்து அரைப்பதற்கு இளைஞன் ஒருவனை வேலைக்கு அமர்த்தியிருந்தார்.

காலை 9 மணிக்கு முதல் மாலை ஐந்து மணி வரை மாங்கு மாங்கென்று மருந்தரைப்பது
தான் அவன் வேலை. விதம் விதமான மருந்துகள்.ஆசாமி சின்சியாரானவன். அது மாதிரி
ஆளெல்லாம் எத்தனை கோடி கொடுத்தாலும் இப்போது கிடைக்காது.

அரைப்பது அவன் வேலை. கலக்கி ஜாடிகளில் வைப்பது தர்மபத்தினியின் வேலை.

அரைத்த மருந்தில் ஒரு கரண்டி அளவிற்குத் தட்டில் எடுத்துக் கொண்டு வந்து
அரைத்தது போதுமா என்று கேட்பான்.

வைத்தியர் திரும்பிப் பார்க்காமலேயே, ஒரு விரலால் தொட்டுப் பார்த்து,“பத்தாது இன்னும்
கொஞ்சம் அரை!” என்பார். அரை மணி நேரம் கழித்து மீண்டும் வந்து அவன் காட்டும்போது
அதே போலத் திரும்பிப் பார்க்காமலேயே, ஒரு விரலால் தொட்டுப் பார்த்து விட்டு,
“வெண்ணை போல அரைடா விளக்கெண்ணெய்!” என்பார்.

இரண்டு மணி நேரத்தில் முதல் மருந்து முடிந்து அடுத்த மருந்தை அவன் அரைக்கும்போதும்
இதே லோலாயி. எல்லாம் சீட்டாட்டம் படுத்தும் பாடு. அதோடு ஒரு நாளைக்கு அவனுக்கு
நான்கு மணி நேரம்தான் வேலை இருக்கும் என்றாலும், அவனுக்கு மாலை ஐந்து மணி
வரை வேலை சொல்ல வேண்டுமே என்ற கட்டாயத்தில் இந்த வெண்ணைப் புராணம்.

ஒரு ஆண்டாக வேலை பார்த்தவனுக்கு, ஒரு நாள் கடுப்பாகி விட்டது.

இன்றைக்கு இந்த வெண்ணெய்ப் புராணத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டுமென்று எண்ணியவன்
ஒரு தட்டில் கால் கிலோ அளவிற்கு சுத்தமான வெண்ணெயையே வைத்துக் கொண்டு
போய்த்தட்டை நீட்டினான்.

நம்ம வைத்தியரும் வழக்கப்படி திரும்பிப் பார்க்காமலேயே, ஒரு விரலால் தொட்டுப் பார்த்து,
“வெண்ணை போல அரைடா விளக்கெண்ணெய்!” என்றார்

கோபம் கொண்ட அவன், தட்டைச் சீட்டாடிக் கொண்டிந்த அத்தனை பேர்களுக்கும்
நடுவில் வைத்து விட்டுக் கனத்த குரலில் சொன்னான்:

“வெண்ணெயை எப்படி அய்யா வெண்ணை மாதிரி அரைக்க முடியும்? கடவுளே வந்து
அரைத்தாலும் அரைக்க முடியுமா? இப்போது சொல்லுங்கள் நான் விளக்கெண்ணையா?
இல்லை நீங்கள் விளக்கெண்ணையா?”

வைத்தியர் திகைத்துப் போய் விட்டார். அவன் அப்படிச் செய்வான் என்று அவர் எதிர்
பார்க்கவில்லை. அதோடு அங்கேயிருந்தவர்களெல்லாம் சிரிக்க, அவருக்கு வெட்கமாகி
விட்டது.

அவன் தொடர்ந்து சொன்னான்., “அய்யா,வைத்தியம் பார்ப்பது தெய்வத் தொழில்.கடவுள்
கொடுத்த வரம். அதை ஒழுங்காகப் பார்க்காமல் இப்படி அநியாயமாகச் சீட்டாடிக்
கொண்டிருக்கிறீர்களே! கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார். என்னை போன்ற ஏழை
எளியவர்களை வதைக்காதீர்கள், போன ஜென்மத்தில் நான் என்ன பாவம் செய்தேனோ,
படிப்பில்லாமல் உடல் உழைப்பால் வயிற்றைக் கழுவ வேண்டியதிருக்கிறது. அடுத்த
பிறவியில் நீங்கள் செக்கு மாடாகப் பிறந்து அவஸ்தைப் படப் போகிறீர்கள்! இந்த
வேலை பார்பதற்குப்பதில் தெருவில் குப்பை கூட்டிப் பிழைக்கலாம். ஊருக்கு உதவி
செய்த புண்ணியமாவது கிடைக்கும். வருகிறேன்.”

அடுத்த நொடியில் அவன் வெளியேறிவிட்டான்.

அங்கிருந்த அனைவரின் மண்டையிலும் சம்மட்டியால் அடித்தது போலிருந்தது!

யார் முகத்திலும் ஈயாடவில்லை!

(தொடரும்)

பதிவின் நீளம், மற்றும் என்னுடைய தட்டச்சும் நேரம், உங்களுடைய பொறுமை
அனைத்தையும் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்றவை
அடுத்த பதிவில்!

தலைப்பிற்கான செய்தி எங்கே?
அது சுவையானது, முக்கியமானதும் கூட, இன்னும் இரண்டு பதிவுகள் இத்தலைப்பில்
உள்ளன. நிறைவுப் பதிவில் அது வரும்!

வாழ்க வளமுடன்!