மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label ஜோதிடப் பாடல்கள். Show all posts
Showing posts with label ஜோதிடப் பாடல்கள். Show all posts

29.6.20

Astrology: சார்வரி ஆண்டிற்கான. பலனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்கள்



சார்வரி ஆண்டிற்கான. பலனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்கள்

சாருவரி யாண்டதனிற் சாதிபதி நெட்டுமே
தீர்மறு நோயாற் றிரிவார்கள் - மாரியில்லை
பூமிவிளை வில்லாமற் புத்திரரு மற்றவரும்
ஏமமின்றிச் சாவா ரியம்பு

பாடலின் பொருள்
சார்வரி ஆண்டில் பதினெட்டு வகைச் சாதி மக்களும் வீரமிழந்து செயல் அற்றுப்போய் நோயால் வெதும்பித் திரிவார்கள் மழை இருக்காது பயிர்கள் விளைச்சல் இருக்காது மக்களுக்கு பாதுகாப்பு  இருக்காது மக்கள் மடிவார்கள் அனேகம் பேர்கள் இறந்து போவார்கள்
  ----  இது சித்தர்கள் எழுதி வைத.துள்ள பாடல்

இதன்படிதான் நடந்துகொண்டிருக்கிறது!!!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

======================================================================

5.5.17

புத ஆதித்ய யோகம்

புத ஆதித்ய யோகம்

யோகங்களைப் பற்றிய பாடங்கள்!!!!

புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும். இந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!
-------------------------------
பலன்:
ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.
சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும்.
This yoga will give lots of talent, success, honour and fame in society.
-------------------------------
எல்லோருக்கும் கொடுக்குமா?

கொடுக்காது.

ஏன் கொடுக்காது?

சூரிய வட்டத்தில், சூரியனுக்கு மிக அருகில், தொடர்ந்து சூரியனைக் கும்மியடிக்கும் கிரகம் புதன். ஆகவே பலருடைய ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கும்.

Mercury is the first planet in the Solar System and is very close to the Sun. It cannot be more than one sign away from the Sun in the rasi chart. This yoga, therefore, appears in a lot of charts, but not all the charts can have the benefits of this yoga.

யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும்.

ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது. அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது. அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர் கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது.

The Sun and Mercury should be placed well in a chart and also should not themselves be badhakas for the chart
---------------------------------------------------------------------
சிம்மம் (சூரியனின் ஆட்சி வீடு)
மேஷம் (சூரியனின் உச்ச வீடு)
மிதுனம் (புதனின் ஆட்சி வீடு)
கன்னி (புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடு)
ஆகிய 4 வீடுகளில் இந்த யோகம் அமைந்திருந்தால் அது பலனளிக்கும்!
மற்ற வீடுகளில்/ராசிகளில் இந்த யோகம் கலவையான (mixed result) பலனைக் கொடுக்கும். அதாவது தண்ணீர் ஊற்றிய பால்
------------------------------------------------------------------------
மேஷ லக்கினக்காரர்களுக்குப் புதன் 3 மற்றும் 6ஆம் வீட்டிற்கு அதிபதி. அந்த லக்கினக்காரர்களுக்கு இந்த யோகம் சொல்லும்படியாகப் பலனளிக்காது

ரிஷப, சிம்ம, துலா மற்றும் மகர லக்கினக்காரர்களுக்கு, இந்த யோகம் இருந்தால் பலன் கிடைக்கும். தனுசு லக்கினக்காரர்களுக்கும் பலன் கிடைக்கும்
------------------------------------------------------------------------
புதன் சூரியனுடன் 6 பாகைக்குள் சேர்ந்திருந்தால் அஸ்தமனமாகிவிடும். அப்போது இந்த யோகம் கிடைக்காது. அதுபோல புதன் வக்கிரகதியில் இருந்தாலும் இந்த யோகம் இல்லை!

சிலர் புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்பார்கள். அவர்களுக்கு இந்த யோகம் கிடைக்கப் பிரார்த்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.10.14

Astrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்?


Astrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்?

நாள் என்பது நட்சத்திரங்களையும் கோள் என்பது நவக்கிரகங்களையும் குறிப்பதாகும். இறைபக்தி மிகுந்தவர்களுக்கு அவைகளால் எந்தத்
துன்பமும் ஏற்படாது என்பது செய்தி. அதை வலியுறுத்திச் சொல்லும் விதமாகக் கந்தரலங்காரத்தில் ஒரு பாடல் உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

நாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”
- அருணகிரியார் அருளிய கந்தர் அலங்காரப் பாடல்களில் ஒரு
முக்கியமான பாடல் இது!

நல்லவனுக்கு நாளும் கோளும் எவ்வித தீங்கும் செய்யாது
என்பதையே அவர் அப்படி குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர்,
நாளென்செயும் வினைதான் என்செயும் எனை நாடி வந்த கோள்
என் செய்யும் என்று அடித்துச் சொல்கிறார். முருகன் அருள் முன்,
கிரகங்கள் வலிமை இழந்து போகும் என்பதே அதன் பொருள்.

சரி, நாளையும் கோளையும் நாம் பார்க்க வேண்டாமா?

பார்க்க வேண்டும்.

நாமென்ன அருணகிரியார் போல, அல்லது குமரகுருபரர் போல
முழுமையாக முருகனருள் பெற்றவர்களா? முருகனை நேரில் சந்தித்தவர்களா? இல்லையே! நாம் முருக பக்தர்கள் என்பது
மட்டுமே உண்மை. மற்றபடி நாம் சாதாரண மனிதர்கள்தான்.

நம் ஜாதகப்படிதான் நம் வாழ்க்கை!
Lord Muruga will give us withstanding power. 
தாக்குப்பிடிக்கும் சக்தியைக் கொடுப்பார்!

எல்லோருக்குமே இறையருள் கிடைத்துள்ளதா? இறையருள்
கிடைத்தவர்கள் கோடியில் ஒருவரே! அவர்களை நாம் மகான்கள்
என்கிறோம்.

திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
அவைகள் சுப நாட்கள் என்பதால் அவற்றைத் தேர்வு செய்து
அதில் செய்கிறார்கள். ஒரு ஆண்டில் 55 முதல் 60 நாட்கள் வரைதான்
முகூர்த்த நாட்கள் இருக்கும். மற்ற நாட்கள் எல்லாம் சுப நாட்கள் இல்லை.

எந்த முகூர்த்த நாளாவது செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை
யில் வருகிறதா, பாருங்கள்? வராது. அதாவது எந்தத் திருமணமாவது செவ்வாய்க் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் செய்கிறார்களா
என்று பாருங்கள். செய்ய மாட்டார்கள். அவைகள், அதாவது அந்த
இரண்டு கிரகங்களுக்கு உரிய நாட்களும் திருமணங்களுக்கு ஆகாத நாட்களாகும்.

ராகுகாலங்களில், கேது காலங்களில் (எமகண்டங்களில்)
சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். முகூர்த்த நாட்களில்கூட
அந்த நேரத்தைத் தவிர்த்து விடுவார்கள்.

ஏன்? அந்த நேரத்தில் செய்தால், செய்யும் காரியம் முழுமை பெறாது.
உங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக் கொண்டுவிடும். அதே போல அஷ்டமியன்று (எட்டாவது திதியன்று) எந்த சுபகாரியங்களையும்
செய்ய மாட்டார்கள்.

திருமணம் மட்டும்தான் சுபகாரியமா? வீடு வாங்குதல், பிறந்த
குழந்தையை அதன் பாட்டி வீட்டில் இருந்து (அதாவது அது பிறந்த
வீட்டில் இருந்து) நம் வீட்டிற்கு முதன் முதலில் அழைத்து வருதல்
போன்று பலவிதமான சுபகாரியங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன.

அனுபவப் பட்டவர்களுக்கு அதெல்லாம் தெரியும்.

சரி, எததெற்கு நாளையும் நேரத்தையும் பார்க்க வேண்டாம்?

சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் தினசரி வேலைக்குச் செல்வதற்கு
அதை எல்லாம் பார்க்க வேண்டாம். பசிக்கும்போது சாப்பிட
வேண்டியதுதான். கண் அயர்ச்சி கொள்ளும்போது தூங்க
வேண்டியதுதான். குறிப்பிட்ட நேரத்தில் தினமும் பணிக்குச்
செல்ல வேண்டியதுதான்.

அதுபோல தண்ணியடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், டாஸ்மாக்
கடைக்குப் போவதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்க வேண்டாம்.
செட் சேர்ந்தால், அதாவது தோழமைகள் அழைத்தால் போக
வேண்டியதுதான்!

தந்தை இறந்துவிட்டால்,ஒரு ஆண்டிற்கும், தாய் இறந்துவிட்டால்,
ஆறு மாதங்களுக்கும், மனைவி இறந்துவிட்டால்,மூன்று
மாதங்களுக்கும்  சுபகாரியங்களைச் செய்யக்கூடாது!

அதுபோல ஜென்ம நட்சத்திரத்தில் (அதாவது ஒருவருடைய
பிறந்த நட்சத்திரத்தன்று) அவருக்கு திருமணத்தை செய்யக்கூடாது.
இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். அது சுபநாளாக
இருந்தாலும், அந்த நாளின் நட்சத்திரத்தையும் பார்க்க வேண்டும்.

கூடாத நாட்களையும், ஆகாத நட்சத்திரங்களையும் பட்டியலிட்ட பாடல் ஒன்று உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

ஆதிரை பரணி கார்த்திகை
   ஆயில்யம் முப்பூரங் கேட்டை
தீதிரு விசாகஞ் சோதி
   சித்திரை மகமீ ராறும்
மாதங் கொண்டார் தாரார்
   வழிநடைப் பட்டார் மீளார்
பாய்தனிற் படுத்தார் தேறார்
   பாம்பின் வாய்த் தேரைதானே!

பாடலுக்கான விளக்கம்:

1. பரணி
2. கார்த்திகை
3. திருவாதிரை
4. ஆயில்யம்
5. மகம்
6. பூரம்
7. சித்திரை
8. சுவாதி
9. விசாகம்
10. கேட்டை
11. பூராடம்
12. பூரட்டாதி

ஆகிய 12 நட்சத்திர நாட்களிலும் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர்கள் திருப்பித் தரமாட்டார்களாம். நெடுந்தூரப் பயணம் சென்றவர்கள் (உரிய நேரத்தில்) திரும்ப மாட்டார்களாம்.நோயில் படுத்தவர்கள் குணமாகித் திரும்புவதும் தமதமாகுமாம்

”என்னிடம் பணம் வாங்கிச் சென்ற கடன்காரன் எப்படித் திருப்பித்
தரமாட்டான்? சட்டையைப் பிடித்து அல்லது கழுத்தில் துண்டைப்
போட்டுப் பிடித்து திருப்பி வாங்கிவட மாட்டேனா?” என்று
தெனாவட்டாக யாரும் கேட்காதீர்கள். உங்களிடம் கடன் வாங்கிச்
சென்றவன் நன்றாக இருந்தால் தானே சுவாமி உங்களுக்குத் திரும்பத் தருவான். அதே நட்சத்திர நீயூட்டன் விதி அவனுக்கும் உண்டல்லவா?
கெட்ட நாளில் வாங்கிய அவன் கெட்டுப் போய் இருந்தால் என்ன
செய்வீர்கள்? . செலவு கணக்கில் எழுத வேண்டியதுதான்.
அதை நினைவில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5.9.13

Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் - பகுதி 2

 

Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் - பகுதி 2

தொடர் - பகுதி 2

ஜோதிடத்தைக் கணித்த அல்லது வகுத்த முனிவர்கள் தாங்கள் எழுதியதை எல்லாம் பாடலாக அல்லது வடமொழியில் இரண்டு வரி  ஸ்லோகங்களாக எழுதிவைத்துள்ளார்கள். காகிதம், பேனா போன்ற எழுது சாதனங்கள் இல்லாத காலம். பனை ஓலைகளில், எழுத்தாணிகளைக் கொண்டு எழுதிவைத் துள்ளார்கள். சிறிய பனை ஓலைகளில் எழுதியதால் உரை நடையில் எழுதாமல் பாட்டாகவே எழுதிவைத்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் வாழ்ந்த காலத்துத் தமிழ். அல்லது அவர்களுடைய வடமொழி

அவற்றில் நிறைய ஜோதிட விதிகள் மற்றும் ஜோதிடச் செய்திகள் நறுக்குத் தெரித்தாற்போல உள்ளன.

அவற்றை சம்பந்தப் பட்ட பாடல், அதற்கான விளக்கம் ஆகியவற்றுடன் தருவதுதான் இத்தொடரின் நோக்கம். உங்கள் ஜோதிட அறிவு மேம்பட இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள்.
----------------------------------------------------------------------------------------------------
அரச குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளை Born with Silver Spoon என்று சொல்வார்கள் ( Meaning: Born into a wealthy family)  பிறப்பே அதிர்ஷ்ட கரமானதாக அமைந்துவிடும்! பாலூட்டுவதற்கும் சீராட்டுவதற்கும் வீட்டில் நிறைய  வேலைக்காரர்கள்/காரிகள் இருப்பார்கள். பொடி நடையாக நடந்து செல்லாமல் எங்கு சென்றாலும் வாகனங்களில் செல்லலாம். கோட்டா பிரச்சினையின்றி எந்தப் பல்கலைக் கழகத்தில் வேண்டுமென்றாலும் சேர்ந்து படிக்கலாம். திருமண வயதில் போட்டி போட்டுக்கொண்டு பெண் கொடுக்கப் பலர் முன் வருவார்கள். மொத்தத்தில் வாழ்க்கை அம்சமாக இருக்கும்.

கஷ்டமே இருக்காதா? அதெப்படி இல்லாமல் இருக்கும்? அப்படிப் பட்ட பிறவிக்கும் பரல்கள் 337 தானே?

”பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது” 
என்று கவியரசர் பாடி வைத்ததுபோல வேறு சிரமங்களும் இருக்கும்.

அதுபோல அதற்கு எதிரான முறையில் சிலருடைய பிறப்பு அமைந்துவிடுவதும் உண்டு.

ஜாதகப்படி லக்கினத்தில் சனி இருக்கும் நிலைமையில் வாழ்க்கை போராட்டம் மிகுந்ததாக அமைந்து விடும். லக்கினத்தை எந்த சுபக்கிரகமும் பார்க்காமல் இருந்தாலோ அல்லது லக்கினத்தில் இருக்கும் சனியுடன் எந்த சுபக் கிரகமும் சேர்ந்திருக்காமல் இருந்தாலோ அந்த நிலைமை நிச்சயமாக அமைந்து விடும்.

அது சம்பந்தமாக இன்று ஒரு பாடலைப் பார்ப்போம்:

“பாரப்பா இன்னுமொரு புதுமைகேளு
பலமுள்ள கதிர்மைந்தன் பதியில் நிற்கில்
சீரப்பா இளமையில் மனோவியாதி
செழுமையுள்ள பருவத்தில் செல்வமுண்டு
வீரப்ப வேந்தனுடைய பொருளுஞ் சேரும்
விளங்குகின்ற கொடியோர்கள் சேரலாகா
கூறப்பா போகருடகடா ஷத்தாலே
கொற்றவனே பதியறிந்து பலனைக்கூறே!   

.....................புலிப்பாணி முனிவர்

ஆமாம். லக்கினத்தில் சனி இருந்தாலும் பரவாயில்லை. சனியுடன், ராகு அல்லது கேது அல்லது சூரியன் அல்லது செவ்வாய் போன்ற தீய கிரகங்கள் சேரக்கூடாதாம்.

சேர்ந்திருந்தால் என்ன செய்வது? வேறு ஏதாவது நஷ்ட ஈடு வழங்கப் பெற்றிருக்கும், அதைப் பார்த்து மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

20.8.13

Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!

 
--------------------------------------------------------------------------------------------
Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!

புதிய தொடர் - பகுதி 1

ஜோதிடத்தைக் கணித்த அல்லது வகுத்த முனிவர்கள் தாங்கள் எழுதியதை எல்லாம் பாடலாக அல்லது வடமொழியில் இரண்டு வரி  ஸ்லோகங்களாக எழுதிவைத்துள்ளார்கள். காகிதம், பேனா போன்ற எழுது சாதனங்கள் இல்லாத காலம். பனை ஓலைகளில், எழுத்தாணிகளைக் கொண்டு எழுதிவைத்துள் ளார்கள். சிறிய பனை ஓலைகளில் எழுதியதால் உரை நடையில் எழுதாமல் பாட்டாகவே எழுதிவைத்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் வாழ்ந்த காலத்துத் தமிழ். அல்லது அவர்களுடைய வடமொழி

அவற்றில் நிறைய ஜோதிட விதிகள் மற்றும் ஜோதிடச் செய்திகள் நறுக்குத் தெரித்தாற்போல உள்ளன.

அவற்றை சம்பந்தப் பட்ட பாடல், அதற்கான விளக்கம் ஆகியவற்றுடன் தருவதுதான் இத்தொடரின் நோக்கம். உங்கள் ஜோதிட அறிவு மேம்பட இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள். வாரம் ஒருமுறை பதிவாகும்
----------------------------------------------------------------------------------------------------
கிராமத்தில் ஒரு நல்லவன் கெட்டவனுடன் சேர்ந்து சுற்றினால் இப்படிச் சொல்வார்கள். “பன்றியோடு பசுவும் சேர்ந்து சுத்துதுடா. எல்லாம் கேடுதான்”

அதனால் நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை என்றாலும், நல்ல விஷயங்கள் எப்போதும் கெட்டவற்றுடன் கலக்கக்கூடாது.

ஐந்தாம் அதிபதி திரிகோண வீட்டிற்குச் சொந்தக்காரன். பூர்வ புண்ணியாதிபதி, குழந்தை பாக்கியத்திற்குச் சொந்தக்காரன். அவன் வில்லனான ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்தால் என்ன ஆகும்?

பாடலைப் பாருங்கள்

“ஆரப்பா அயன்விதியை அறையக் கேளு
      அப்பனே ஐந்துள்ளோன் ஆறோன் கூடில்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோஷம்
      சிவாசிவ்வா யிது மூன்றில் சேர்ந்து நிற்க
கூறப்பா கொடியோர்கள் கண்ணுற்றாலும்
      கொற்றவனே கொள்ளிக்குப் பிள்ளையில்லை
பாரப்பா பரமகுரு கண்ணுற்றாலும்
      பலனுண்டு பல தீர்த்தமாடச் சொல்லே!

.....................புலிப்பாணி முனிவர்

ஆமாம். அவர்கள் இருவரின் சேர்க்கையால் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குக் குழந்தை பிறப்பது தள்ளிக்கொண்டு போகும். அதாவது தாமதமாகும். அத்துடன் அவர்கள் ஒரு தீய கிரகத்தின் பார்வையைப் பெற்று மூன்றாம் வீட்டில் குடியிருந்தால், குழந்தை இல்லாமல் போகும் அபாயம் உண்டு.

தோஷத்தைப் போக்க என்ன வழி?

புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தீர்த்தமாடி, அங்கே உறையும் இறைவனை வணங்கிவிட்டு வருவதுதான் பரிகாரமாகும்!

இராமேஸ்வரம்தான் சிறந்த பரிகார ஸ்தலம்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!