மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 531 - 540. Show all posts
Showing posts with label Lessons 531 - 540. Show all posts

26.6.12

Astrology - Popcorn Posts கையில் காசு தங்குமா? தங்காதா?


Astrology - Popcorn Posts கையில் காசு தங்குமா? தங்காதா?
பாப்கார்ன் பதிவுகள் - பகுதி 6

”வாத்தியார், இரண்டில் சனி இருந்தால் அந்த ஜாதகனுடைய கை ஓட்டைக் கை - கையில் காசு தங்காது” என்று சொல்கிறர்களே - அது உண்மையா?”

”அது உண்மையல்ல. வேறு அமைப்புக்களும் உள்ளன. அது தெரியாமல் ஓட்டைக் கை என்று சொல்வது தவறு”

“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்!”
-------------------------------------------------
இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் குடியிருந்தால் அதாவது சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற கிரகங்கள் அமர்ந்திருந்தால் அந்த வீடு பாதிப்பிற்கு உள்ளாகும்.

இரண்டாம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள்.

பணத்திற்கான இடம் அது (House of finance)
குடும்ப வாழ்க்கைக்கான இடமும் அது (House of Family)
அத்துடன் வாக்கு ஸ்தானத்திற்கான இடமும் அதுதான் (House of speech)

அதில் ஒரு இலாக்கா பாதிக்கப்படும்

ஏன் அப்படி? சனி போன்ற தீய கிரகங்கள் இருந்தால் அந்த மூன்று இலாக்காக்களுமே பாதிப்பிற்கு உள்ளாகாதா?

ஆகாது. அந்த வீட்டுக்காரன் முக்கியம். அவன் நன்றாக, வலிமையாக இருந்தால் சனியின் பாதிப்பை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு நன்மைகளைச்  செய்வான். அத்துடன் காரகனும் (authority) முக்கியம்

பணத்திற்குக் காரகன் குரு
மனையாளுடன் கூடி வாழும் குடும்ப வாழ்க்கைக்குக் காரகன் சுக்கிரன்
அகட விகட சாமர்த்தியமான பேச்சிற்குக் காரகன் புதன்

இந்த மூவரில் யார் கெட்டிருந்தாலும் அந்த இலாக்கா சரிவர வேலை செய்யாது!

ஆகவே இவை அனைத்தையும் பரிசீலிக்க வேண்டும்!
-------------------------------------------------------
ஒரு உதாரண ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்


இரண்டாம் வீட்டில் சனியும், கேதுவும் டென்ட் அடித்து உட்கார்ந்திருக் கிறார்கள். காசு தங்காது என்று சொல்லிவிடலாமா? முடியாது. ஜாதகத்திற்கு உரியவர் பெரிய செல்வந்தர்.

நிலைமை மாறியதற்கு என்ன காரணம்?

அம்சம் முக்கியமில்லையா? அதையும் பாருங்கள். இரண்டாம் வீட்டதிபதி புதன் உச்சம் பெற்று அங்கே கொடியுடன் உட்கார்ந்திருக்கிறார்.அத்துடன் அதே புதன், ராசியில் திரிகோண வீட்டில் சுக்கிரனைக் கட்டிகொண்டு உட்கார்ந்திருக்கிறார். சுக்கிரன் ஜாதகருடைய 10ம் வீட்டதிபதி! தொழில் செய்து சுயசம்பாத்தியத்தில் செல்வம் சேர்ந்தது! தனகாரகன் குருவும் கேந்திரத்தில் அமர்ந்து லக்கினத்தைப் பார்க்கின்றார்!

ஜாதகர் யார் தெரிகிறதா?
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்களுடைய ஜாதகம் இது!
--------------------------------------------------------------
வாத்தி(யார்),  ஷாருக்கை எதற்காக முகப்பு படத்தில் போட்டீர்கள்?

ச்ச்சும்மா ஒரு விளையாட்டுக்குத்தான்! வாத்தியார் என்பதால் விளையாடக்கூடாதா?
--------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

25.6.12

Astrology: காஞ்சிப் பெரியவரின் ஜாதகம்!

Astrology: காஞ்சிப் பெரியவரின் ஜாதகம்!

ஜாதக அலசல் பாடம்!

பெரியவர் என்றால் அவர் ஒருவர்தான் பெரியவர். அந்தச் சொல்லிற்குத் தகுதியானவர் அவர் ஒருவர்தான்!

சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளைத்தான் சொல்கிறேன்

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஜகத்குருவாக இருந்து சிறப்பாக இறைத் தொண்டாற்றியவர் அவர். நூறு ஆண்டுகாலம் வாழ்ந்து சிறந்தவர்.

வாழ்வது என்பது ஆண்டு எண்ணிக்கையில் அல்ல! சேவையை வைத்துக்கணக்கிட வேண்டும்.

1894ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி பிறந்த அவர், 1994ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதிவரை வாழ்ந்து, தன் நற்செயல்களாலும், இறைப்பணிகளாலும் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர்.

பிப்ரவரி 1907ம் ஆண்டில் அவருக்கு மடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அதற்கு முற்பட்ட 13 ஆண்டுகளை அவர் சிறுவனாக இருந்த கணக்கில் கழித்து விட்டால் சுமார் 87 ஆண்டுகள் இறைப்பணி செதிருக்கிறார். மக்களை நெறிப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.

87ஆண்டுகள் உழைப்பது, பணி செய்வது என்பது சாதாரணமான விஷயம் அல்ல! ஆர அமர உட்கார்ந்து யோசித்துப்பாருங்கள். இதுவரை வாழ்ந்த வாழ்வில், நீங்கள் எத்தனை ஆண்டுகள் சேவை செய்திருப்பீர்கள்? ஆண்டுகளில் வேண்டாம். மாதங்களிலாவது சொல்லுங்கள்!
அல்லது நாட்களிலாவது சொல்லுங்கள்.

அவருடைய ஜாதகத்தை அலசுவதை ஒரு பாக்கியமாகக் கருதி,  இன்று அதைச் செய்திருக்கிறேன்.

கருத்து வேறுபாடு உடையவர்கள் பதிவை விட்டு விலகவும்.

கருத்து வேறுபாடு உடைய பின்னூட்டங்களுக்கும் அனுமதியில்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெரியவரைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட சுட்டியைப் பயன் படுத்துங்கள். தேமொழியின் அக்கா விக்கி காமாட்சி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://en.wikipedia.org/wiki/Chandrashekarendra_Saraswati

இந்தப் பதிவை நான் எழுதுவதற்குக் காரணமாக இருந்த நமது வகுப்பறை மாணவரும், அணுசக்தி விஞ்ஞானியுமான அன்பர் புவனேஷ்வர் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிறப்பு விவரம்
பிறந்த தேதி: 20.5.1894
பிறந்த நேரம்: மதியம் 1.22 மணி
பிறந்த ஊர்: விழுப்புரம்
நட்சத்திரம்: அனுஷம்
லக்கினம்: சிம்ம லக்கினம்
ராசி: விருச்சிக ராசி

இயற்பெயர்: சாமிநாதன்
கல்வித்தகுதி: திண்டிவனத்தில் அப்போது இருந்த அமெரிக்கன் மிஸன் உயர் நிலைப் பள்ளியில் படித்தவர்
வேதபாடங்களைத் தனியாக ஒரு ஆசிரியர் மூலம் கற்றுத் தேர்ந்தவர்
படிக்கின்ற காலத்தில் இவருடைய ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர் இப்படிச் சொன்னாராம்:
One day the whole world will fall at his feet!
----------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------

337 வகுத்தல் 12 = 28 இது சராசரி பரல் கணக்கு
சுவாமிகளின் ஜாதகத்தில்
2ல் 30 பரல்கள் (வாக்கு ஸ்தானம்)
4ல் 28 பரல்கள்
5ல் 30 பரல்கள்
6ல் 33 பரல்கள்
8ல் 35 பரல்கள்
10ல் 28 பரல்கள்
---------------------------------------------------
சுயவர்க்கப் பரல்கள்:

சூரியன் 4 பரல்கள்
சந்திரன் 7 பரல்கள்
செவ்வாய் 4 பரல்கள்
புதன் 5 பரல்கள்
குரு 6 பரல்கள்
சுக்கிரன் 6 பரல்கள்
சனி 2 பரல்கள்

ஒரு கிரகத்திற்கு சுயவர்க்கத்தில் 8 பரல்கள். 4 பரல்களுக்கு மேல் இருக்க வேண்டும்.சுவாமிகளுக்கு 4 கிரகங்கள் அதிக பரல்களுடன் வலிமையோடு உள்ளன.
-----------------------------------------------------------
திரிகோண வீடுகள், கேந்திர வீடுகள், மறைவிடங்களுக்கான் பரல்கள்



திரிகோண்ங்கள் (1,5,9) = 79 பரல்கள்
கேந்திரங்கள் (4,7,10) =  83 பரல்கள்
இந்த 6 வீடுகளுக்கும் சராசரி 27 பரல்கள்

மறைவிடங்கள் (Inimical Houses)
3,6,8, 12 =  121 = சராசரி 30 பரல்கள்
லெள்கீக வாழ்க்கைக்கான அமைப்பில்லாமல் ஞான வாழ்க்கைக்கான அமைப்புத்தான் ஜாதகத்தில் உள்ளது
--------------------------------------------------------
 1. அரச கிரகங்களான சூரியனும், சந்திரனும் கேந்திர ஆதிபத்யம் பெற்று ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில் உள்ளனர்.

2. சுக்கிரன் உச்சம். அத்துடன் குரு பகவானுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்.

3. அஷ்டகவர்க்கத்தில் சுபக் கிரகங்களான குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியவர்கள் தங்களுடைய சுயவர்க்கத்தில் அதிக பரல்கள் பெற்று வலுவாக உள்ளார்கள். குருவிற்கு 6 பரல்கள், சந்திரனுக்கு 7 பரல்கள், சுக்கிரனுக்கு
6 பரல்கள்.

4. வெற்றிகளுக்கு உரிய 3ம் இடத்து அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுத்துள்ளார். சுவாமிகள் மடத்தின் குருவாக பல ஆண்டுகள் திறம்படப் பணி செய்துள்ளார். செய்யும் வேலையில் சிரத்தையைக் கொடுத்ததோடு, பெரும்புகழையும் சுக்கிரன் கொடுத்தார்.

5. சுக்கிரன் இந்த ஜாதகத்திற்கு 10ம் இடத்து அதிபதியும் ஆவார். அவர் உச்சம் பெற்றதுடன், தன் வீட்டிற்கு 11ம் இடத்தில் அமர்ந்துள்ளார்.

6. சிம்ம லக்கின ஜாதகம். வனங்களில் சிங்கத்திற்கு என்ன சிறப்போ, அதே சிறப்பு 12 லக்கினங்களிலும் சிம்ம லக்கினத்திற்கு ஒரு தனிச்  சிறப்பு உண்டு. நாயகர்களின் லக்கினம்.

7. லக்கினாதிபதி சூரியன் கேந்திரங்களில் முக்கியமான பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ளார். இது ஒரு சிறப்பு

8. லக்கினாதிபதி சூரியனுடன் லாபாதிபதி புதனும், பூர்வபுண்ணியாதிபதி குருவும் கூட்டாக உள்ளார்கள்.இதுவும் ஒரு சிறப்பு

9. கஜகேசரி யோகம் உள்ள ஜாதகம். குருவும் சந்திரனும் கேந்திர வீடுகளில் எதிரெதிரே பலத்துடன் அமர்ந்துள்ளார்கள். ஜாதகரை  அறவழியில் கொண்டு சென்றதுடன், பெரும் புகழையும் கொடுத்தார்கள்.

10. புத ஆதித்த யோகம்: புதனும் சூரியனும் கூட்டாக இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.  புத்திசாலித்தனம், நிபுனத்துவம்,சாமர்த்தியம், பிரபலம், மரியாதைக் குரியவாரக இருத்தல் ஆகிய பலன்கள் உண்டாகும். சுவாமிகளின் ஜாதகத்தில் சூரியனும்,  புதனும் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள். அதுவும் முக்கியமான கேந்திரத்தில் இருப்பதையும் பாருங்கள்

11. ஆதியோகம்: சந்திரனுக்கு 6 அல்லது 7 அல்லது 8ல் நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இங்கே  சந்திரனுக்கு 7ல் குருவும், புதனும் ஒன்றாக இருக்கிறார்கள். ஒரு அமைப்பிற்கு தலைமை தாங்கி நடத்தக்கூடிய பொறுப்பு தேடி வரும் சுவாமிகளுக்கு ஆன்மீக குருவாக பக்தர்களை வழிநடத்திச் செல்லும் பதவி கிடைத்தது.

12. சாமரயோகம்: 7 அல்லது 8 அல்லது 10ம் வீடுகளில் இரண்டு நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள்,
மேதைத் தனம், பல கலைகளில் தேர்ச்சி ஆகியவை இருக்கும். சுவாமிகளின் ஜாதகத்தில் குருவும், புதனும் 10ல் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள்

13. தபஸ்வி யோகம், துறவி யோகம் (சுயநலமில்லாத,
தியாக மனப்பான்மையுள்ள பொதுவாழ்க்கை - அதுவும் ஆன்மிகம்
இறைப்பணி நிறைந்த பொது வாழ்க்கை) சுக்கிரன், சனி, கேது
ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒருவருக்
கொருவரான பார்வை இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
சுவாமிகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது.

14. ராஜயோகம்: (equal to a king) 5ம் அதிபதி லக்கினகாரகனோடோ அல்லது 9ம் அதிபதியோடோ சேரும்போது இந்த யோகம் உண்டாகும். சுவாமிகளின் ஜாதகத்தில் 5ம் அதிபதி குரு லக்கினாதிபதி சூரியனுடன் சேர்ந்துள்ளார்.

15. விபரீத ராஜயோகம்: எட்டாம் அதிபதி குருவும் 12ம் அதிபதி சந்திரனும் சமசப்தகமாக உள்ளார்கள்

16. ராஜ சம்பந்த யோகம் அமத்யகாரகன் (இந்த ஜாதகத்திற்கு சுக்கிரன்) உச்சம் பெற்றுள்ளதால் கிடைத்தது. அதீத புத்திசாலித்தனம்

17. ஆட்சியாளர்களுடனா தொடர்பு: லக்கினாதிபதி கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் கிடைக்கும். சுவாமிகளின் ஜாதகத்தில்
லக்கினாதிபதி 10ல்

சுவாமிகள் லெளகீக வாழ்க்கை (அதாவது பொருள் சார்ந்த உலகியல் வாழ்க்கை) வாழாமல் துறவியாக ஆனதற்குக் காரணம்.
1
முதலில் பூர்வ புண்ணியம். பூர்வ புண்ணியாதிபதி குருவும், லக்கினாதிபதி சூரியனும் சேர்ந்து 10ம் வீட்டில் அமர்ந்து ஒரு மடாதிபதியாக ஆக்கினார்கள்.  இறைவனுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யப் பணித்தார்கள்.
2.
லக்கினாதிபதியும், விரையாதிபதியும் ஒன்றாக இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் நேர் பார்வையில் இருந்தாலும், ஜாதகரின்
வாழ்க்கை ஜாதகருக்குப் பயன்படாது - மற்றவர்களுக்குதான் பயன்படும். பயன்பட்டது.
3.
லக்கினத்தில் குறைவான பரல்கள் (24 பரல்கள் மட்டுமே உள்ளன). இரண்டாம் வீட்டில் குடும்பஸ்தானத்தில் சனி, கேது ஆகிய தீய  கிரகங்கள். லக்கினத் திற்கு ஏழாம் அதிபதி சனி, அந்த வீட்டிற்கு எட்டில். இக்காரணங்களால் அவதிகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை  இல்லாமல் போய்விட்டது. ஜாதக மேன்மையினால், அவற்றைக் கொடுக்காமல் சின்ன வயதிலேயே காலதேவன் அவரைத்  துறவியாக்கிவிட்டான்

ஆயுள்
1
ஆயுள் காரகன் சனியின் நேரடிப் பார்வையில் எட்டாம் வீடு. எட்டாம் வீட்டுக்காரன் குரு கேந்திரத்தில். எட்டாம் வீட்டிற்கு  அஷ்டகவர்க்கத்தில் 35 பரல்கள். ஆகவே நீண்ட ஆயுள். பரிபூரண ஆயுள் சுமார் நூறு ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளார்.
2
மூன்றாம் வீடு வாழ்வதற்கு உள்ள சக்திகளைக் காட்டும். எட்டாம் வீடு ஆயுளைக் காட்டும். அந்த இரண்டு வீடுகளுக்கும் 12ம் வீடு  அவற்றிலிருந்து 12ம் வீடு - அதாவது 3ற்கு 12ம் வீடு 2. எட்டிற்கு 12ம் வீடு 7. ஆக 2ம் வீடும்,
7ஆம் வீடும்தான் மாரக ஸ்தானங்கள். அதன்  அதிபதிகள் தான்
மரணத்தைக் கொடுப்பார்கள். அவர்கள் தாமதிக்கும் போது
(அதாவது அவர்களுக்கு உரிய தசாபுத்திகள் வராதபோது) 3ம் அதிபதி
அல்லது 8ம் அதிபதி அந்தவேலையைச் செய்துவிடுவார்கள்.
3
சுவாமிகளுக்கு குரு திசை சூரிய புத்தியில் மாரகம் ஏற்பட்டது. குரு எட்டாம் இடத்ததிபதி. அவரோடு சூரியனும் கூட்டாக இருப்பதைக்  கவனியுங்கள். குரு மகாதிசை சூரிய புத்தியில் அது நடந்தது. சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்கள்.

------------------------------------------------------------------
விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

21.6.12

Astrology Popcorn Posts முற்பிறவி, கர்மவினை என்றெல்லாம் சொல்லி ஏன்(டா) பயமுறுத்துகிறீர்கள்?


Astrology  Popcorn Posts முற்பிறவி, கர்மவினை என்றெல்லாம் சொல்லி  ஏன்(டா) பயமுறுத்துகிறீர்கள்?


பாப்கார்ன் பதிவுகள் - பகுதி 5

”இன்றைய வாழ்க்கையில் ஏன் இத்தனை துயரங்கள், துன்பங்கள், தொல்லைகள் என்றால், ஜாதகப்படி முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே (உரியதாகவே) அடுத்த பிறவி அமையும். ஆகவே முற்பிறவியின் கூட்டுப் பலன் தான் இப்பிறவி என்று சொல்கிறார்கள். ஒரே வார்த்தையில் கர்மவினை என்கிறார்கள். வாத்தியார் என்னடாவென்றால் வாங்கி வந்த வரம் என்கிறார். அப்படி முற்பிறவியில் என்னதான் செய்தேன்? அதைத் தெரிந்து கொள்ள வழி இருக்கிறதா?”

”இருக்கிறது. ஒருவரின் ஜாதகம் அவர் முற்பிறவியில் செய்த நன்மை, தீமைகளைக் கோடிட்டுக் காட்டும்.”

”எப்படி?”

”கிரகங்கள் எல்லாம் வலுவிழந்து இருந்தாலும் அல்லது 3, 6, 8, 12 என்று தீய வீடுகளில் போய் படுத்திருந்தாலும்,  ஜாதகன் முற்பிறவியில் புண்ணியத்தைவிட பாபங்களையே (பாவங்களையே) அதிகமாகச் செய்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம். சில கிரகங்கள், குறிப்பாக சுபக் கிரகங்களான, குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியவை ஜாதகத்தில் வலுவாக இருந்தால் ஜாதகன் முற்பிறவியில் புண்ணியங்களை, தர்மங்களை அதிகமாகச் செய்திருக்கிறான் என்றும் தெரிந்து கொள்ளலாம்.”

”கோடிட்டுக் காட்டாமல், விளக்கமாகச் சொல்ல வழி இல்லையா?”

”இருக்கிறது. அதற்கு பிரசன்ன ஜோதிடம் உங்களுக்கு உதவும்.”

”பிரசன்ன ஜோதிடமா? அது என்ன புதுக் கரடி?

”நடைமுறை ஜோதிடத்தைப்போல, அதுவும் ஜோதிடத்தின் வேறு ஒரு பகுதி. நடைமுறை ஜோதிடத்தில் இருந்து அது முற்றிலும் மாறு பட்டது. பிரசன்ன ஜோதிடம் மிகவும் விரிவானது. பிறகு ஒரு சமயம், நேரம் கிடைக்கும்போது, அதை விரிவாக - தொடராக எழுதலாம் என்றுள்ளேன். என்னிடம் பழைய நூல் ஒன்று உள்ளது. அதைப் படித்தால் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும். ஏராளமான  வடமொழிச் சொற்கள்.முதலில் நான் ஒரு வடமொழி தெரிந்த வாத்தியாரை வைத்து அந்தச் சொற்களுக்கெல்லாம் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகுதான் விரிவு படுத்தி எழுத முடியும். என் நடையில் அனைவருக்கும் புரியும்படி எழுத முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்சமயம் நேரமில்லை. ஒரு ஆண்டு பொறுத்துக்கொள்ளுங்கள்.
----------------------------------------------------------------------
Prasanna or Horary Astrology

The Prasanna branch is another unique division of Vedic Astrology. When a person asks a question to an astrologer, based on the time at which the question is asked, a horoscope is made for that time and date. With the help of this chart the astrologer predicts about the events that are going to take place. There are several types of Prasanna systems and it is almost a separate science by itself. Normally the Prasanna chart is studied along with the birth chart to give an additional dimension to predict the results correctly.

Horary Astrology is based on Hora or Hour.  Its principles are  similar to the principles of Natal Astrology.  Some factors which are unknown to Natal Astrology is known to Horary. For instance, a person may not have his time of birth. So he asks the Astrologer  questions and these questions are answered by Horary.

Karma =  The consequences of our past actions in this and previous lifetimes.
-------------------------------------------------------------------
முற்பிறவி

பிரசன்ன ஜோதிடத்தின் இன்னொரு பிரிவில், முற்பிறவியைக் குறித்து தெரிந்து கொள்ளும் வழி உள்ளது.

பிரசன்ன ஜோதிடத்தில், முற்பிறவியைக் குறித்து கேள்வி கேட்கப்படும் நேரத்தை வைத்து அந்த நிமிடத்திற்கான ஜாதகத்தைக் கணிப்பார்கள்.  கணிக்கப்பெற்ற ஜாதகத்தில், கீழ்க்கண்டவாறு வீடுகளை எடுத்துக் கொண்டு, ஜாதகனின் முற்பிறவியைச் சொல்வார்கள். முற்பிறவியில் அவன் செய்த சேட்டைகளூம், தேட்டைகளும், போட்ட ஆட்டங்களும், போட்ட ஆட்டைகளும் தெரியவரும்.

புண்ணிய ஆத்மாக்களின் ஜாதகத்தில் செய்த புண்ணியங்களும் தெரியவரும்!

அவ்வாறு கணிக்கப்பெற்ற முற்பிறவிக்கான பிரசன்ன ஜாதகத்தில் உள்ள 9ஆம் வீடுதான் லக்கினம்: அதை வைத்து கர்மாவின் சுயரூபத்தைச் சொல்வார்கள் (Karma Swarupa)

10ம் வீடு கர்ம தானம் (karma Dhana)
11ம் வீடு கர்ம சகாயம் (karma Sahaya)
12ம் வீடு கர்ம அதிகரணா (Karma Adhikarana)
1ம் வீடு கர்ம பூதவஸ்து (Karma Bhutha Vasthu)
2ம் வீடு கர்ம நாசகர்னா (Karma Nasa karana)
3ம் வீடு கர்ம சஹசார்யம் (Karma sahachari)
4ம் வீடு கர்மயூஸ் (Karmayus)
5ம் வீடு கர்ம பாக்கியம் (Karma Bhagya)
6ம் வீடு கர்மவியாபாரம் (Karma Vyapara)
7ம் வீடு கர்ம லாபம் (Karma Labha)
8ம் வீடு கர்மவியாயா (Karma Vyaya)

இதற்கெல்லாம் அர்த்தத்தை (பொருளை) நம் பெங்களூரு அம்மையார்தான் சொல்ல வேண்டும்! பின்னூட்டத்தில் சொல்வார்கள். பொறுத்திருங்கள்!
---------------------------------------------------
இடைச் சேர்க்கை:

வடமொழிச் சொற்களுக்கான பொருள் விளக்கத்தை நமது வகுப்பறை மாணவர் திரு.ஸ்ரீகணேஷ் அவர்கள் தன்னுடைய பின்னூட்டத்தில் தெரியப்படுத்தியிருந்தார். பதிவைப் படிப்பவர்களுக்கு அவைகள் உடனடியாகப் பயன் படட்டும் என்று பதிவில் உள்ளிட்டிருக்கிறேன். அன்பருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!

10ம் வீடு கர்ம தனம் (karma Dhana)
11ம் வீடு கர்ம சகாயம் (karma Sahaya)
सहाय ‍இதற்கு பின்பற்றுவோர், கம்பானியன், உதவி செய்பவர், வேலைக்காரர்கள் என்று லிஸ்ட் போடலாம்.
12ம் வீடு கர்ம அதிகரணா (Karma Adhikarana)
இதில் அதிகாரணா வில் வரும் "த" என்ற எழுத்துக்கு ஏற்ப அர்த்தம் கொள்ளலாம். முதன்மையான காரணம், (அ) மேற்பார்வையிடுதல் அதாவது சூப்பர்வைசிங்
1ம் வீடு கர்ம பூதவஸ்து (Karma Bhutha Vasthu)
பூத என்ற பூதம் என்ற பொருளில் கெட்ட என்றும் கொள்ளலாம், வஸ்து என்றால் பொருட்கள், பஞ்சபூதம் என்ற சொல்லில் வரும் அந்த அர்த்தமும் வரலாம். தேவ நாகரி எழுத்துக்களுக்கு ஏற்ப பொருள் கொள்ளலாம்.
2ம் வீடு கர்ம நாசகர்னா (Karma Nasa karana)
இதில் நாசகர்ணா (அ) காரண வா என்று தெரியவில்லை. காரண என்பது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது...அப்படி என்றால் நாசத்திற்கு காரணமான என்று எடுக்கலாம்...
3ம் வீடு கர்ம சஹசார்யம் (Karma sahachari)
சஹசார்யம் என்றால் தர்மபத்தினி அல்லது சகவாச தோழி என்றும் கொள்ளலாம்.
4ம் வீடு கர்ம ஆயூஸ் (Karmayus)
இது ஆயுள்
5ம் வீடு கர்ம பாக்கியம் (Karma Bhagya)
6ம் வீடு கர்மவியாபாரம் (Karma Vyapara)
7ம் வீடு கர்ம லாபம் (Karma Labha)
மேல் சொன்ன மூன்றும் நார்மல் அர்த்தம் தான். பாக்கியம், வியாபாரம், லாபம்
8ம் வீடு கர்மவியாயா (Karma Vyaya)
வ்யாயா என்பது செலவு, விரையமாகுதல்,என்று வெவ்வேறு பொருள் வரலாம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++====
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

20.6.12

Astrology - Popcorn Posts அறுவை சிகிச்சை யாருக்கு, எப்போது ஏற்படும்?


Astrology - Popcorn Posts அறுவை சிகிச்சை யாருக்கு, எப்போது ஏற்படும்?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி நான்கு!

அறுவை சிகிச்சை (Surgery) என்றால் யாருக்குத்தான் பயம் இல்லை?

Surgery is an act of performing surgery may be called a surgical procedure, operation, or simply surgery. In this context, the verb operate means to perform surgery.

எத்தனை மன திடம் இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் நிலவும் அசாத்திய மருத்துவமனைக் கட்டணங்களுக்கு எங்கே போவது? பணம் இருப்பவனை விட்டுத்தள்ளுங்கள். போதிய பணம் இல்லாதவன் என்ன செய்வான்? யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் அல்லது உறவினர்கள் / நண்பர்களிடம் கையேந்த வேண்டு்ம். அந்த நிலைமை பொருள் இல்லாதவனுக்கு
வரக்கூடாது. ஏன் ஒருவருக்கும் வரக்கூடாது. இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டு மேலே படியுங்கள்.

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி?

அதை இன்று பார்ப்போம்!

எட்டாம் வீட்டில் தேமே என்று தனித்திருக்கும் தீய கிரகங்களால், அந்தத் தீமை உண்டாகாது.

சனி லக்கினாதிபதியாகவும், எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கவும், அத்துடன் ஆறாம் அதிபதியைப் பார்த்துத் தொலைக்கவும்  செய்யும் நிலையில், அப்படி அமர்ந்திருக்கும் சனியைச் செவ்வாய் தன் பார்வையில் வைத்திருந்தால், ஜாதகனுக்கு ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.

ஒரு தீய கிரகம் இன்னொரு தீய கிரகத்தினால் பாதிக்கப்பெற்ற நிலையில் - அதாவது சேர்க்கை அல்லது பார்வையால் -  பாதிக்கப்பெற்ற நிலையில், ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட  நேரிடும். உதாரணம் ராகு, செவ்வாயின்
பார்வையைப் பெற்று இருக்கும் நிலையில், ஜாதகனுக்கு
சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ ஒரு முறை அறுவை
சிகிச்சை நடக்கும். அது அவைகள் இருக்கும் இடத்தை வைத்து,
அறுவை சிகிச்சைக்கு  உட்பட இருக்கும் உடலின் அவயங்கள் மாறுபடும்
++++++++++++++++++++++++++++++++
“வாத்தி (யார்) அதென்ன புதிதாக பாப்கார்ன் பதிவுகள் என்ற பெயர்”

“ராசா, கொறிக்கும்படியாக ஒரே ஒரு மேட்டரை (செய்தியை அல்லது விதியை -astrological rule)  வைத்து, மனதில் பதியும் படியாக எழுதப்பெறும் பதிவுகளுக்கு இனி அந்தப் பெயர்தான்!”

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

19.6.12

Astrology - Popcorn Posts பஞ்சாங்கக் குறிப்புக்களால் என்ன(டா) பயன்?

Astrology - Popcorn Posts பஞ்சாங்கக் குறிப்புக்களால் என்ன(டா) பயன்?
பாப்கார்ன் பதிவுகள் - பகுதி மூன்று!

பஞ்சாங்கத்தில், நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்று ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிடப்பெற்றிருக்கும். அவற்றிற்கு உரிய பொருள் என்ன என்பதைப் பற்றி முன்பே பதிவுகளில் எழுதியுள்ளேன்.

நாளை வைத்துத்தான் என்ன கிழமையில் நீங்கள் பிறந்தீர்கள் என்று தெரியும். நட்சத்திரத்தை வைத்துத்தான் நீங்கள் பிறந்த ராசி தெரியும். திதியை வைத்துத்தான் உங்கள் வீட்டில் உள்ள முன்னோர்கள் இறந்த நாள் தெரியவரும். அமாவாசை, பெளர்ணமி எல்லாம் தெரியவரும்.

அதுபோல யோகமும் முக்கியம். நீங்கள் அன்று செய்யும் செயல்கள் முடியுமா அல்லது ஊற்றிக்கொள்ளுமா? என்று தெரியவரும்.

யோகங்கள், அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்று மூன்று வகைப்படும். மரணயோகத்தன்று செய்யும் செயல்கள் திருப்தியாக முடியாது. சில செயல்கள் ஊற்றிக்கொள்வதோடு உங்களை அழைக்கழித்துவிடும்.

எனக்கு தெரிந்த உறவினர் ஒருவருக்கு, மரண யோகத்தன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அன்பர் வீடு திரும்பவில்லை. அவுட். மரண மடைந்துவிட்டார். மேலே சென்று விட்டார்.

மரண யோகத்தன்று யாருக்காவது கடன் கொடுத்தீர்கள் என்றால் பணம் திரும்ப வராது. காந்தி கணக்கில் எழுதிக் கதையை முடிக்க வேண்டியதாக இருக்கும்.

திருமண முகூர்த்த நாட்கள் எல்லாம் மரணயோக தினத்தன்று இருக்காது. வேண்டுமென்றால் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Routine work எனப்படும் அன்றாட வேலைகளைச் செய்வதற்கெல்லாம் யோகத்தைப் பார்க்க வேண்டியதில்லை.

ஆனால் சுபகாரியங்களைச் செய்வதற்கும், சொத்துக்களை வாங்குவதற்கும், பணத்தை முதலீடு செய்வது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதற்கும் யோகத்தைப் பார்க்க வேண்டும்.

எங்கே பார்க்க முடியும்?

பஞ்சாங்களில் குறிப்பிட்டு இருப்பார்கள். நாட்காட்டிகளில் (Daily Sheet Calenders) குறிப்பிட்டு இருப்பார்கள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++

18.6.12

Astrology - Popcorn Posts வாத்தியாராவது எப்படி?


Astrology - Popcorn Posts வாத்தியாராவது எப்படி?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி இரண்டு!

வாத்தியார் என்றால் ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா’ என்று திரைப்படங்களில் மக்கள் பாட்டுப்பாடி, பிரபலப் படுத்தும் வாத்தியார் அல்ல! பள்ளிகளில், கல்லூரிகளில், கலாசாலையில் பாடம் சொல்லிகொடுக்கும், மற்றவர்களுக்குக் கற்பிக்கும் வாத்தியார். அதாவது class teacher!

அதற்கு ஜாதகப்படி என்ன கிரக அமைப்பு வேண்டும்?

பத்தாம் வீட்டில் (House of profession) புதன் அமர்ந்திருக்க வேண்டும். அல்லது 10ம் வீட்டைப் புதன் தன் பார்வையில் வைத்திருக்க வேண்டும். (That is mercury aspecting the 10th house)

இல்லையென்றால் பத்தாம் வீட்டு அதிபதியுடன் புதன் கூட்டணி (association) போட்டிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வீட்டுக்காரனும்  புதனும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் That is aspecting each other

இந்த அமைப்புக்களில் ஏதாவது ஒன்று உள்ளவர்கள்தான் வாத்தியாராக முடியும்!
--------------------------------------
எனக்கு இந்த அமைப்பு இல்லை. அதனால் நான் வாத்தியார் வேலைக்குப் போகவில்லை.

ஆனாலும் புதன் லக்கினத்தைற்கு 7ல் வலுவாக அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருப்பதால் பயிற்றுவிற்கும் திறமையைக் (Teaching ability) கொடுத்தான். அதனால்தான் பதிவுகளில் எழுதி நான் வாத்தியாராக ஆனேன். அதுவும் கர்மகாரகன் சனி தனது கடைசி தசா புத்தியில் கொடி பிடித்துத் துவங்கி வைக்க, புதன் திசையில், பதிவில் வாத்தியாராக முழு அங்கீகாரம் கிடைத்தது!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

15.6.12

Astrology - Popcorn Posts மயக்கும் உலகத்தில் கிடைக்கும் வாய்ப்புக்கள்!

Astrology - Popcorn Posts மயக்கும் உலகத்தில் கிடைக்கும் வாய்ப்புக்கள்!

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி ஒன்று!

யாருக்குத்தான் ஆசை இல்லை? பெரும்பாலான மக்களுக்குத் திரைப்படங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. சிலர் வெளியே சொல்லுவார்கள். சிலர் சொல்ல மாட்டார்கள். சிலர் கடும் முயற்சி செய்து அதில் ஒரு இடத்தைப் பிடிப்பார்கள். சிலர் அதுவாகத் தேடி வரட்டும் என்று காத்திருப்பார்கள்.

பணம், பெயர், புகழ் என்று ஒரு சேர எல்லாம் கிடைக்கும் துறை ஒன்று உண்டென்றால், அது சந்தேகத்திற்கு இடமின்றி திரைப்படத்துறைதான்.

அதிலும் நடிகர் அல்லது பாடகர் என்றால் அதி விரைவில், புகழின் உச்சிக்குப் போய்விடலாம். எண்ணற்ற ரசிகர்கள் வேறு கிடைப்பார்கள்.

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி?

அதை இன்று பார்ப்போம்!

சுக்கிரன் ஜாதகத்தில் வலுவாக (Strong) இருந்தால் எல்லாக் கலைகளும் எளிதில் கைவரும்!

நடிப்பும், பாடும் திறமையும் கலையோடு சம்பந்தப்பட்டது. அதை மனதில் கொள்க!

சரி, அதையே தொழிலாகக் கொள்வதற்கு என்ன அமைப்பு வேண்டும்?

தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுடன் சுக்கிரனுக்கு நல்ல சம்பந்தம் அல்லது நல்ல தொடர்பு இருக்க வேண்டும். நேரடியாகவும் இருக்கலாம் அல்லது மறைமுகமாகவும் இருக்கலாம். இருக்க வேண்டும்.

4ஆம் வீட்டில் அல்லது 10ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலை. அல்லது 10ஆம் வீட்டின் மீது சுக்கிரனின் பார்வை அல்லது 10ஆம் வீட்டுக்காரனுடன் சுக்கிரன் கூட்டாக (ஒன்றாக) இருக்கும் நிலைமை ஆகியவை அந்த வாய்ப்பை நல்கும்!
------------------------------------------------------------------------------
உதாரணம்

நடிகர் திரு ரஜினிகாந்த்தின் ஜாதகம்.

சிம்ம லக்கின ஜாதகர். சிம்ம லக்கினம் நாயகர்களுக்கு (Heroes) உரிய லக்கினம்
பத்தாம் வீட்டின் (ரிஷப வீட்டின்) அதிபதியே சுக்கிரன். அதுவும் அவர் அம்சத்தில் ஆட்சி பலத்துடன் உள்ளார். லக்கினாதிபதி சூரியன் கேந்திரத்தில் அமர்ந்து பத்தாம் வீட்டைத் தன் பார்வையில் வத்திருப்பது ஒரு சிறப்பாகும்!
இந்த அமைப்புக்கள்தான் அவரை நடிகராக்கின!
++++++++++++++++++++++++++++++++
“வாத்தி (யார்) அதென்ன புதிதாக பாப்கார்ன் பதிவுகள் என்ற பெயர்”

“கண்ணா, கொறிக்கும்படியாக ஒரே ஒரு மேட்டரை (செய்தியை அல்லது விதியை -astrological rule)  வைத்து, மனதில் பதியும் படியாக எழுதப்பெறும் பதிவுகளுக்கு இனி அந்தப் பெயர்தான்!”

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

22.5.12

Astrology மெய்ஞானமும் புண்ணாக்கும்!

Astrology மெய்ஞானமும் புண்ணாக்கும்!

மெய்ஞானமும் பிண்ணாக்கும்!

புண்ணாக்கு என்றால் நம் அனைவருக்கும் தெரியும். 

“அவன் கெடக்கான் புண்ணாக்கு!” என்று சிலர் சிலரைத் திட்டுவதையும் பார்த்திருக்கிறோம். சக்கையானவன், மட்டையானவன் என்று சமூகத்தில் இருக்கும் பலரை புண்ணாக்கு என்று சொல்வதையும் பார்த்திருக்கிறோம்.

அதுபோல மெய்ஞானம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இருக்கிறார்கள். தெரிந்து அதை ஒப்புக்கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்.

முதலில் மெய்ஞானம் என்றால் என்னவென்று பார்த்துவிட்டு, பிறகு அவர்களைப் பார்ப்போம்.

புண்ணாக்கு என்பது பேச்சுத்தமிழ். இலக்கணத் தமிழில் அதன் பெயர் பிண்ணாக்கு. பிண்ணாக்கு என்பது, நிலக்கடலை, எள் முதலிய வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்தபிறகு மிஞ்சும் சக்கை

மெய்’ என்றால் உண்மை, truth, fact, என்று பொருள்படும். மெய்ஞானம் என்பது உண்மையான அறிவைக் குறிக்கும் - true knowledge. ஞானம் என்பது அனைத்தும் அறிந்த நிலை. முழுமையான அறிவு. wisdom, full knowledge

விஞ்ஞானம் என்பது அறிவியல் science. தர்க்க முறையால் சோதித்து (reasoning) அறிவது விஞ்ஞானம்.

எல்லாம் இங்கே இருக்கிறது. இருப்பதைக் கண்டுபிடித்து, முறைப்படுத்திச் சொல்வதுதான் விஞ்ஞானம்.

புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்து, சர் ஐசக் நியூட்டன் அதை முறைப்படுத்திச் சொன்னார். அதற்கு Newton's law of universal gravitation என்று பெயர். அதுபோல அவருடைய Three Laws of Motion என்னும் கண்டு பிடிப்பும் மிகவும் பிரபலம். மிதத்தல் விதிக்கு விளக்கம் சொன்னவர் ஆர்க்கிமிடீஸ் law of Archimedes - (hydrostatics) the apparent loss in weight of a body immersed in a fluid is equal to the weight of the displaced fluid என்று  அதற்குப் பெயர். இதுபோல ஐன்ஸ்டீனின் Einstein's Theory of Relativity யும் பிரபலமானது.  இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.   

ஒன்றைக் கவனிக்க வேண்டும்  நீங்கள். இவர்கள் அனைவரும் இருப்பதைத்தான் கண்டு பிடித்துச் சொன்னார்கள். புதிதாக எதையும் உருவாக்கவில்லை.

ஏற்கனவே இருப்பதுதான். மிதத்தல்விதி முன்பே இருப்பதுதான்.

யாரும் எதையும் உருவாக்க முடியாது. ஒன்றில் இருந்துதான் மற்றொன்று.

இறைவனும், அவன் படைத்தவைகளும் ஒன்றுதான். ஒன்றை ஒன்றிலிருந்து வேறு படுத்திக்காட்ட முடியாது.  The creator and his creations are one and the same. அதைத்தான் நாம் எல்லாம் ஈசன் செயல் என்கிறோம். இறைவன் தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான் என்கிறோம்.

நீங்கள் பிறந்தபோதே உங்களுக்கு வேண்டியது எல்லாம் இங்கே படைக்கப்பட்டுள்ளது. உங்களுக்குக் கொடுக்கப் பெற்றுள்ளது.

நீங்கள் சுவாசிப்பதற்குக் காற்று, நீர், உணவுப்பொருட்கள், தானியங்கள், காய்கறிகள், கனிகள், என்று எல்லாமே உள்ளன. நீங்கள் புதிதாக எதையும் உருவாக்க வேண்டாம். every thing is given!

"பறவையைக்கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான்"

என்று கவியரசர் அற்புதமாகப் பாட்டில் சொன்னார்.

பறவைகள் பறக்கின்றன. பெட்ரோல் செலவு இல்லாமல் பறக்கின்றன. எந்தவிதப் பராமரிப்புச் செலவும் அவைகளுக்கு இல்லை. சைபீரியாவில் இருந்து வேடந்தங்கலுக்கு வந்துவிட்டுப்போகின்றன. ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கே வந்துவிட்டுப்போகின்றன. ராடார், மற்றும் வழிகாட்டும் கருவிகள் அவைகளுக்கு இல்லை. இறைவன் படைப்பின் அதிசயங்கள் அவை.

எந்தப் பறவையும் வேலைக்குச் செல்வதில்லை. மாதச் சம்பளத்தையோ, அல்லது தன் தந்தை சேர்த்து வைத்துவிட்டு போனதையோ எதிர்பார்த்து அவைகள் இல்லை. மனிதனின் அவலங்கள் அவைகளுக்கு இல்லை.

எதிரொலியைக் கேட்ட மனிதனின் சிந்தனையில் உருவானதுதான் வானொலி. வானொலியின் அடுத்த பரிணாம வளர்ச்சிதான் தொலை பேசி, அடுத்தடுத்து வந்து இன்று அலைபேசியில் நிற்கிறான்.

மனிதனின் குரல் வளம்தான் முதற்கருவி. அது கடவுள் கொடுத்தது. அந்தக் குரல் எழுப்பும் ஓசைகளை, பேச்சுக்களைக் கடத்துவதற்கு காற்று இருக்கிறது. வெற்றிடமாக இல்லாமல் இருக்கிறது.

தான் படைத்த ஜீவராசிகளுக்கெல்லாம் வேண்டிய உணவை இறைவன் படைத்திருக்கிறான். எந்தப்பறவையாவது பசியில் விழுந்து செத்துப் போனதாக சரித்திரம் இருக்கிறதா? இல்லை. கல்லிற்குள் இருக்கும் தேரையையும் அவன் உயிர்வாழ வைத்திருக்கிறான். வைத்துக் கொண்டிருக்கிறான்.

எந்தப் பறவையும் தான் சாப்பிட்ட பழத்தின் மீதியைக் கொண்டுபோய் தன் கூட்டில் வைப்பதில்லை. கிடைக்கும் தானியங்களை அள்ளிக்கொண்டுபோய் கூண்டிற்குள் மூட்டைகட்டி வைப்பதில்லை. கிடைப்பதை, கிடைத்த இடத்திலேயே உண்ணுகின்றன.

மனிதனைப்போல எதையும் சேமித்துவைப்பதில்லை. வற்றலாக்கி வைப்பதில்லை.

அதைக் கண்ட கவியரசர் இப்படிப்பாடினார்.

“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்”

மனிதருக்கு என்னவொரு சிந்தனை இருந்திருக்கிறது பாருங்கள்.

பறவைகளைப்போல கவலைப் படாமல் இரு என்று சொன்னார்.

உலகின் சீதோஷ்ண நிலைமை இடத்திற்கு இடம் மாறுவதைப் பார்த்திருப்பீர்கள். சென்னையில் 36 டிகிரி வெய்யில் என்றால், அதே நேரத்தில் கோவையில் 32 டிகிரி ஊட்டியில் 22 டிகிரி. அட்ச ரேகை தீர்க்க ரேகைகளை வைத்தும், மலைப்பிரதேசங்கள் போன்ற உயரங்களை வைத்தும், காற்றின் அழுத்ததைவைத்தும் சீதோஷ்ணம் மாறுபடுகிறது.

அதே நிலைப்பாட்டில், காற்றில் உள்ள ஆக்சிஸனின் அளவும் மாறுபட வேண்டுமல்லவா? கடற்கரைப் பிரதேங்களில், அடர்ந்த வனப் பகுதிகளில், மலைப் பிரதேசங்களில், பாலவனங்களில் என்று இடத்திற்கு இடம் காற்றில் உள்ள ஆக்சிஸனின் அளவு மாறுபடவேண்டுமல்லவா? மாறுபடாது.

இறைவன் கருணை மிக்கவர். தான் படைத்த ஜீவராசிகள் சுவாசிப்பதற்காக காற்றில் உள்ள ஆக்சிஸனின் அளவு 21% என்பதை அத்தனை இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கும்படியாகப் பார்த்துக்கொண்டுள்ளார். உயர்ந்த பனிப்பிரதேசங்களில் காற்றின் அளவு குறையுமே தவிர, காற்றில் உள்ள ஆக்சிஸனின் அளவு மாறாது.

The actual percentage of oxygen doesn't change, but there is just less air at higher altitudes. Our climate varies regionally, and the temperature and precipitation tend to be influenced by local geographical characters such as latitude, altitude, distance from the coast, nearby ocean currents, prevailing winds, mountain ranges and vegetation. Different local and regional climate characteristics were classified.

ஆயிரக்கணக்கான மலர்கள் அனுதினமும் பூக்கின்றன. அந்த மலர்களுக்கு விதம் விதமான நிறங்களும், வாசனையும் எங்கிருந்து கிடைக்கின்றன. என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? பலவிதமான கனிகளும், காய்கறிகளும் கிடைக்கின்றன. அவற்றில் உள்ள விதம் விதமான சுவைகள் எப்படி உண்டாகின்றன?

அதே மண்தான். அதே நீர்தான். ஒரே இடத்தில் விளையும், மிளகாயும், பாகற்காயும் வெவ்வேறு சுவையுடன் இருக்கின்றன. மிளகாய்க்கு காரம் எங்கிருந்து கிடைக்கிறது? பாகற்காய்க்குக் கசப்பு எங்கிருந்து கிடைக்கிறது?
என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?

இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் இறைவன் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்பட வேண்டும்.

உடனே ஒருவர் கேட்டார்: “இறைவனையும், சூரியனையும் வணங்கிவிட்டு வீட்டில் இருந்தால் நெல் எப்படி விளையும்?”

“ஏரால் உழுது அல்லது இன்றையத் தேதியில் உள்ள வசதிகளை வைத்து டிராக்டரால் உழுது, விதைகளைத்தூவி, உரமிட்டுவளர்த்தாலும், பயிர் வளர்வதற்கு நீரும், சூரிய வெப்பமும் அல்லவா முக்கியம். அவை இரண்டையும் தருவது சூரியன் அல்லவா? வளர்ந்த பயிர்களை (வாழை, தென்னை போன்றவை) புயல் சூராவளி வந்து சாய்க்கலாம் அல்லவா? கடும் மழையால் பயிர்கள் அழியலாம் இல்லையா? ஆகவே இறைவனும் சூரியனும் இல்லாமல் எதுவும் இல்லை. அதை உணரவேண்டும்”

இதைத்தான் பகவான் கண்ணபரமாத்மா இப்படி சொன்னார்: “செயல்கள் உன் கையில் இருக்கின்றன். விளைவுகள் உன் கையில் இல்லை”

Actions are in your hand; Not the results

பிண்ணாக்கைத் தெரிந்து வைத்திருக்கும் மனிதன், இறைவனின் சக்தியை முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை. பிண்ணாக்கு, மாடுகளுக்குப் பயன்படும். கோழிகளுக்குப் பயன்படும். அதைவைத்துக் காசு பண்ணலாம்.

காசுபண்ணக்கூடிய அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கும் மனிதன் காசைத்தான் கடவுள் என்பான்.

“காசேதான் கடவுளடா - அந்த
கடவுளுக்கும் இது தெரியுமடா”
என்பான். 

கடவுள் அவனை மன்னிப்பாராக!

ஆகவே நம்பிக்கையோடு இருங்கள். சுயவர்கத்தில் பரல்கள் குறைந்தாலும், மொத்த அஷ்டகவக்கத்தின் கூட்டல் அனைவருக்கும் 337 தான். ஒருவருக்குக்கூட வந்துள்ளது. ஒருவருக்குக் குறைவாக வந்துள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை. இறைவனின் படைப்பில் அனைவரும் சமம்தான்.

நமது மெய்ஞானம் அதைத்தான் சொல்கிறது.

விஞ்ஞானம் உட்பட அத்தனை ஞானமும் மெய்ஞானத்திற்குள் அடக்கம். அதை மனதில் வையுங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அஷ்டகவர்க்கப் பலாபலன்கள்:

சூரியன்தான் பிரதான கிரகம். சூரியன் பிரதான கிரகமாக இருந்தாலும், முதல் நிலை சுபக்கிரகம் என்று போற்றப் படும் குரு பகவான்தான் ஜாதகத்தில் முக்கிய பங்காற்றுவார்.

ஜாதகத்தில் குரு வலுவாக இருந்தால் போதும். குரு பகவான், உச்சம் பெற்றோ அல்லது திரிகோண இடங்கள் அல்லது கேந்திர இடங்களில் இருப்பது நல்லது. சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருப்பது நல்லது.

குருபகவான் எப்போது நன்மைகளைச் செய்வார். தனது தசா புத்திகளில் செய்வார். அத்துடன் கோள்சாரத்தில் உரிய இடங்களில் பயணிக்கும்போது அதாவது சுற்றிவரும்போது செய்வார்.

அவருக்கு உரிய இடங்கள் எது?

(தொடரும்.)

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------------------------
வாத்தியார், வெளியூர்ப் பயணம். நாளை ஒரு நாள் வகுப்பறைக்கு விடுமுறை!
-----------------------------------------------------------------------------
இன்றைய நன்மொழி

Your Death !!!!

When a bird is alive, It eats Ants,
When the bird is dead, Ants eat the bird!
Time & Circumstances can change at any time 
Don’t devalue or hurt anyone in life.
You may be powerful today
But Remember, Time is more powerful than You!!!
One tree makes a million match stick
But when the time comes, Only one match stick is needed to burn million trees

Moral: One day you will die and will be eaten by ants. The only thing you take is your Deeds, So be good and do good, Thank Almighty for everything and don’t disrespect others. You are lucked that you have been blessed
 
வாழ்க வளமுடன்!

21.5.12

Astrology தெரிந்த பிரம்மாண்டமும் தெரியாத பிரம்மாண்டமும்!


Astrology தெரிந்த பிரம்மாண்டமும் தெரியாத பிரம்மாண்டமும்!

ஒரு பிரபல் நடிகையின் உடல் வனப்பைப் பார்த்துவிட்டு,ஒரு பிரபல இயக்குனர் சொன்னார்: "நான் பார்த்ததிலேயே  இதுதான் பிரம்மாண்டம்"
நாம்  பார்த்திருந்தாலும் அப்படித்தான் சொல்லுவோம். ஆனால் வெட்கப்பட்டு அல்லது இமேஜ் கெட்டுவிடுமே என்று பயந்து அல்லது மனைவியிடம் பூரிக்
கட்டையால் அடிவாங்க வேண்டுமே என்று பயந்து வெளியே சொல்லா விட்டாலும் மனதிற்குள்ளாவது நினைத்துக்கொள்வோம்.

அவை எல்லாம் அழியக்கூடிய பிரம்மாண்டங்கள். ஒரு நாள் சுடுகாட்டிற்கோ அல்லது இடுகாட்டிற்கோ  போகக்கூடிய பிரம்மாண்டங்கள்.

இறைவன் படைப்பில் ஏராளமான பிரம்மாண்டங்கள் உள்ளன.

கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் இடத்திற்குப் படகில் சென்று ஆற்றின் நடுவில் இருந்து பாருங்கள். நீரின் அளவும்,ஆழமும், வேகமும்  நம்மைத் திகைக்க வைக்கும்.

பழநியில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரம் சென்று கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இருந்து, கண்களை உயர்த்தி, மலையின் தொடர்ச்சியைப்
பாருங்கள். உங்களைத் திகைக்க வைக்கும்.

கன்னியாகுமரியில் இருந்து கொட்டாரம் வரை..ஏன் நாகர் கோவில் வரை, மழை பெய்து ஓய்ந்த ஒரு மாலை நேரத்தில் காரிலோ அல்லது  பேருந்திலோ பயணித்துப் பாருங்கள், இரு புறமும் பச்சைப் பசேல் என்ற ரம்மியமான காட்சி உங்கள் மனதை அள்ளிக்கொண்டு போய்விடும்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!

வானமும், வானத்தில் உள்ள கோள்களின் துல்லியமான சுழற்சியும் பிரம்மாண்டம்தான்.

ஆர்யபட்டர், வராஹிமிஹிரர், பராசுரர், ஜெய்மானி போன்ற முனிவர்கள் அவற்றையெல்லாம் கணித்து வைத்துவிட்டுப் போனார்களே அவைகளும்
பிரம்மாண்டம்தான். தொழில் நுட்ப வசத்திகள் எதுவும் இல்லாத காலத்தில், அவர்கள் செய்த பணிகளும் பிரம்மாண்டம்தான்

ஜோதிடமும் பிரம்மாண்டமானதுதான். பெருங்கடலைப் போன்று பிரம்மாண்டமானதுதான். அதைப் பற்றி முன்பே எழுதியுள்ளேன்.

ஜோதிடத்தின் உட்பிரிவான அஷ்டகவர்க்கமும் பிரம்மாண்டமானதுதான்

அதைப் பற்றி இன்று பார்ப்போம்
----------------------------
அஷ்டகவர்க்கம் என்றால் என்ன?

அஷ்ட என்றால் எட்டு. வர்க்கம் என்றால் அட்டவணை!

எட்டு அட்டவணைகள் அடங்கியது அஷ்டகவர்க்கம்.

அஷ்டகவர்க்கம் என்றாகத் தெரிந்தால் (தெரிந்துகொள்வது சுலபம்) உங்கள் ஜாதகத்தையும், உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஜாதகத்தையும்,
நீங்க்ளே அலசிப் பிழிந்து விடலாம்!

அதாவது அந்த 337 டானிக்கைப் பற்றிய முழு விவரங்கள்!

அஷ்டக வர்க்கம் எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதை முன்பே சொல்லிக் கொடுத்துள்ளேன். அல்லது கணினி ஜாதகத்தில் அது விரிவாகக்
கொடுக்கப்பட்டிருக்கும். கணக்கிடும் வேலை உங்களுக்கு இல்லை!

ஆனால் அதை மேல்நிலைப் பாடத்தில் மீண்டும் ஒருமுறை விரிவாகக் கொடுத்துள்ளேன். இங்கே எழுதினால் திருட்டுப் போய்விடும் சாமிகளா!

ஏழு கிரகங்களின் சுயவர்க்கங்களைக் கூட்டினால் சர்வாஷ்டகவர்க்கம் (ராசி வாரியாக மொத்த அஷ்டகவர்க்கம்) கிடைக்கும்.

சுயவர்க்கத்தில் சில கிரகங்களுக்கு மற்ற கிரகங்களால் 3 இடங்கள் முதல் 9 இடங்கள்வரை உகந்ததாகி மதிப்பெண்கள் கிடைக்கின்றன.

சுயவர்க்கத்தில் அந்த கிரகம் நிற்கும் இடத்தின் மதிப்பெண்தான் அதன் சுயவர்க்கம். அதை மனதில் கொள்க! 0 வும் கிடைக்கலாம் அல்லது 8
மதிப்பெண்களும் கிடைக்கலாம்.

சரி எத்தனை வ்கையான அல்லது விதமான கட்டங்களை உருவாக்கலாம்?

7 கிரகங்கள் + ஒரு லக்கினம் x 12 ராசிகள் = 8 to the power of 12 (Rasi) =  68 719 476 736

ராகு & கேதுவிற்கு அஷ்டகவர்க்க ஆட்டத்தில் இடமில்லை. என்ன காரணம்? அவர்கள் இருவருக்கும் சொந்த வீடு இல்லாததால் ஆட்டத்தில் இடமில்லை. ராகு & கேதுவின் ரசிகர்கள் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டுக்கொள்ளலாம்!

8 to the power of 12 (Rasi) =  68 719 476 736



68 71 94 76 736

68.7 பில்லியன் சுயவர்க்கக் கட்டங்கள் ஒரு கிரகத்திற்கு மட்டும் உருவாக்கலாம்.(ஒரு பில்லியன் என்பது நூறு கோடி.அதை மனதில் வையுங்கள்) ஏழு கிரகத்திற்கும் சேர்த்து 481 பில்லியன் சுயவர்க்க வித்தியாசங்கள் வரும். அதுதான் அஷ்டகவர்க்க ஜோதிடத்தின் பிரம்மாண்டம்!

ஒருவரின் சுயவர்க்கம்போல வேறு ஒருவருக்கு இருக்க வாய்ப்பில்லை. வலது கை கட்டை விரல் ரேகை எப்படித் தலைக்குத் தலை மாறுபடுகிறதோ
அப்படி அஷ்டகவர்க்கமும் ஜாதகத்திற்கு ஜாதகமும் மாறுபடும். ஆனால் மொத்த பரல்கள் 337 மட்டுமே

உலகத்தில் எத்தனையோ குட்டைகள். குளங்கள், ஊருணிகள், ஆறுகள், ஓடைகள், நதிகள், கடல்கள் உள்ளன.ஆனால் எல்லாவற்றிலும் இருக்கும்
தண்ணீருக்குப் பெயர் தண்ணீர்தான்!

அங்கேதான் இறைவன் நிற்கிறான்! இருக்கிறான்!
அவன் அனைவரையும் சமமாகத்தான் படைத்திருக்கிறான்.
ஆரம்பம் முதல் அதைத்தான் நான் வலியுறுத்திச் சொல்லி வருகிறேன்!

அய்யன் வள்ளுவரும் இறைவனை அப்படித்தான் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல!”

(விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடியை இடைவிடாது வணங்குபவர்களுக்கு என்றும், எக்காலத்திலும், எவ்விடத்திலும் துன்பம்
இல்லை!)

விருப்பு வெறுப்பு (Likes & dislikes) இல்லாதவன் இறைவன். இவன் வேண்டியவன், அவன் வேண்டியவன் என்ற பாகுபாடு இல்லாதவன்
இறைவன். அவன் படைப்பில் அனைவரும் சமம்!

இறைவன் கருணை வடிவானவர். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் - மனிதன் உட்பட - அனைத்துமே அவருக்குச் சமமானவைதான்.

அவருக்கு வேண்டியது - வேண்டாதவை என்று எதுவும் கிடையாது.

தன்னை நம்புகிறவனும் அல்லது நம்பாதவனும், மேலும் தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும் அவருக்கு ஒன்றுதான்.

தன்னை மறுத்துப் பேசுகிறவனையும் அவர் முகம் மலர்ந்து ஏற்றுக் கொள்கிறார். அவனுக்கும் கருணை காட்டுகிறார். அவனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறார்.
.
இல்லையென்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்?

நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் பாதிப்பு ஒன்றும் அவருக்கில்லை.

சரி, அப்படியென்றால் இருவருக்கும் (நம்புகிறவன் - நம்பாதவன்) என்ன வித்தியாசம்?

நம்புகிறவன், ஒரு பிரச்சினை வரும்போது - அதை இறைவன் பார்த்துக் கொள்வார் என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு நிம்மதியாக இருப்பான். நம்பாதவன் பிரச்சினையோடு, கவலையையும் கை பிடித்துக்கொண்டு அல்லல் படுவான்


அதனால்தான் இறைவனை Almighty என்கிறோம். இல்லயென்றால் அவன் வெறும் mighty ஆகிப் போய்விடுவான்!

நமக்குத் தெரிந்த பிரம்மாண்டங்கள் எல்லாம், அழியக் கூடியவை. இறைவன் படைப்பின் பிரம்மாண்டங்கள் எல்லாம் நிரந்தரமானவை!

அதை மனதில் கொள்க!

(தொடரும்)

ஒரு மாறுதலுக்காகப் பாடத்தை மாற்றி எழுதியுள்ளேன். உங்கள் கேள்விகளும், பதில்களும் பகுதி இரண்டு நாட்கள் கழித்து வரும் பொறுத்திருங்கள்


அன்புடன்
வாத்தியார்
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய பொன்மொழி

அன்பைப் பகிர்ந்து கொள்வது வாழ்க்கையில் மிகப் பெரிய சந்தோசம்.- ---ஸ்டேபிள்.

வாழ்க வளமுடன்!

17.5.12

Astrology பெயர்ச்சியால் வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா?

  


Astrology பெயர்ச்சியால் வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா?

இன்று குரு பெயர்ச்சி! குரு பகவான் மூட்டை முடிச்சுக்களுடன் மேஷ ராசியிலிருந்து ரிசப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். நாம் வீடு மாறும்
போதுநமக்கு Packers and movers ஆட்களின் உதவி தேவை.
குரு பகவானுக்கு அதெல்லாம் தேவையில்லை.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, குரு பகவான் மே 17ஆம் தேதி மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
2013ஆம் ஆண்டு மே 27ம்தேதி வரை அந்த ராசியில் அவர் சஞ்சாரம்
செய்வார்

ஒரு ரவுண்டடிப்பத்ற்கு (அந்த ரவுண்ட் அல்ல) குரு பகவானுக்கு
12 ஆண்டுகள் ஆகும். ஒரு ராசியில் அவர் இருக்கும் காலம்
ஒரு ஆண்டு.  12 நாட்களுக்கு ஒரு பாகை வீதம் 30 பாகைகளை
அவர் கடந்து செல்வதற்கு 360 நாட்கள் ஆகும்.

உட்கார்ந்திருக்கும் ராசியைவிட அவர் பார்க்கும் ராசிகளுக்கு பலம் அதிகம். நன்மைகள் அதிகம்.



ரிசபத்தில் இருந்து  ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியையும்அவர் பார்க்கின்றார். அந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் ஒரு ஆண்டு காலத்திற்கு எல்லாம் கூடி வரும். தேடி வரும். நாடி வரும்
ஓடி வரும். பாடிவரும்.

அதுபோல மேஷ் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் இரண்டாம் இடத்திற்கு வருகிறார். கடக ராசிக்காரகளுக்கு 11ஆம் இடத்திற்கு வருகிறார்
அவ்விரு ராசிக்காரர்களுக்கும் நன்மையான பலன்களே நடைபெறும்!

ராசி அல்லது லக்கினத்தைக் குரு பகவான் பார்க்கும் போதுதான் ஒருவருக்கு திருமண யோகம் உண்டாகும். அதைத்தான் வியாழ நோக்கம்
என்பார்கள். நோக்கம் என்றால் இங்கே பார்வை என்று பொருள் கொள்க!

இந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்களுக்கு மனைவியின் அன்பும்,
பரிவும், (கண்) பர்ர்வையும் தூக்கலாக இருக்கும். வயதான டிக்கெட்டுகளுக்கு மனைவியின் உபசாரம் கண்களைப் பனிக்க வைக்கும் அளவிற்கு
அதிகமாக இருக்கும். குழந்தைப்பேறு, வீடு, வாசல் சேர்க்கை முதலியன கிட்டும். வங்கி இருப்பு வியக்கும் வண்ணம் அதிகரிக்கும். மொத்தத்தில்
சாதனா சர்க்கத்தின் குரலில் லல லல்ல்ல் லா...லல லல்ல்ல் லா.. ஒலித்துக்கொண்டே இருக்கும்.

திரும்ணத்திற்காகக் காத்திருப்பவர்களின் காதில் ஒலிக்கும் பாடல்

தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
மணமாலை வரும் சுபவேளை வரும்

திரும்ணமானவர்களின் காதில் ஒலிக்கும் பாடல்

சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது மனம் நில்லென சொல்லியும் துள்ளியது

இந்த ஐந்து ராசிக்காரர்களும் ஒரு ஆண்டிற்கு ஜமாய்க்கலாம்!
++++++++++++++++++++++++++++++++++++
மற்ற ஏழு ராசிக்காரர்களில், ரிஷபம் (1ல் குரு), சிம்மம் (10ல் குரு), துலாம் (8ல் குரு). ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும், காரியத்தடைகள்,தாமதம்,  எதிலும் ஒரு தடங்கல், எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை செய்ய வேண்டிய சூழ்நிலை ஆகியவைகள் இருக்கும். சலிப்பு மேலோங்கிஇருக்கும்

மிதுனம் (12ல் குரு), தனுசு (6ல் குரு), கும்பம் (4ல் குரு), மீனம் (3ல் குரு) ஆகிய ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும்.அவற்றையும் க்யூவில் நிறு பெற வேண்டிய சூழ்நிலை இருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++

டானிக் (பரிகாரம்) 1

உங்களுக்கு நடக்கும் தசா புத்தியைப் பாருங்கள். நல்ல தசாபுத்தி நடந்துகொண்டிருந்தால், இந்தக் கோள்சாரங்கள் ஒன்றும் செய்யாது. ஒதுங்கி வழி விட்டு விடும். நெடுஞ்சாலையில் டிப்பர் லாரிக்காரனுக்கு வழிவிட்டு ஒதுங்கும் கார்க்காரனைப் போல அவைகள் ஒதுங்கிவிடும்.

டானிக் (பரிகாரம்) 2

அஷ்டவர்க்க சூரணம் 337 சரக்கை வாங்கி வைத்துக்கொண்டு
தினமும் இரண்டு லார்ஜ் (ராவாக) அடித்துவிட்டு
ஒரு ஆண்டு பொழுதை  ஓட்டி விடுங்கள்!

வாத்தியாருக்கு லார்ஜ் அடிக்கும் பழக்கம் கிடையாது. உங்களுக்காக உங்கள் மொழியில் சொல்லியிருக்கிறார். அப்போதுதானே நன்றாக விள்ங்கும்
சாமிகளா!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------

 Transit Guru on 17.5.2012

 Transit Guru as on 11.5.2012 (one week prior to the change of house
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய பொன்மொழி:

You can not rub anybody, without getting yourself rubbed
- Swami Dhayanadha Saraswathi

வாழ்க வளமுடன்!