மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 691 - 700. Show all posts
Showing posts with label Lessons 691 - 700. Show all posts

11.9.13

Astrology: Quiz புதிர் - பகுதி 7 வித்தியாசமான கேள்விகளுடன்

 
Astrology: Quiz புதிர் - பகுதி 7 வித்தியாசமான கேள்விகளுடன்

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி ஏழு

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை  வைத்துக் கேட்கப் பெற்றிருக்கும்  3 கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்விகள்:


 மேலே உள்ள ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரண மனிதர்தான்!

கேள்விகள்

1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது  உயர்கல்வி பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம்  ஒதுங்காதவரா?

2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

3. ஜாதகர் வெளிநாடு சென்று பணி செய்ய விருப்பம் கொண்டார். அவர் விருப்பம் நிறைவேறியதா? அல்லது இல்லையா? அதாவது  ஜாதகருக்கும் கடல்கடக்கும் யோகம் உள்ளதா? அல்லது இல்லையா? அதாவது இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதுதானா?

எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் வைத்து எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++====

10.9.13

Astrology: Quiz புதிர் - பகுதி 6

 

Astrology: Quiz புதிர் - பகுதி 6

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி ஆறு

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் ஒவ்வொரு ஜோதிடரும் அறிந்த முக்கியஸ்தர்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

5.9.13

Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் - பகுதி 2

 

Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் - பகுதி 2

தொடர் - பகுதி 2

ஜோதிடத்தைக் கணித்த அல்லது வகுத்த முனிவர்கள் தாங்கள் எழுதியதை எல்லாம் பாடலாக அல்லது வடமொழியில் இரண்டு வரி  ஸ்லோகங்களாக எழுதிவைத்துள்ளார்கள். காகிதம், பேனா போன்ற எழுது சாதனங்கள் இல்லாத காலம். பனை ஓலைகளில், எழுத்தாணிகளைக் கொண்டு எழுதிவைத் துள்ளார்கள். சிறிய பனை ஓலைகளில் எழுதியதால் உரை நடையில் எழுதாமல் பாட்டாகவே எழுதிவைத்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் வாழ்ந்த காலத்துத் தமிழ். அல்லது அவர்களுடைய வடமொழி

அவற்றில் நிறைய ஜோதிட விதிகள் மற்றும் ஜோதிடச் செய்திகள் நறுக்குத் தெரித்தாற்போல உள்ளன.

அவற்றை சம்பந்தப் பட்ட பாடல், அதற்கான விளக்கம் ஆகியவற்றுடன் தருவதுதான் இத்தொடரின் நோக்கம். உங்கள் ஜோதிட அறிவு மேம்பட இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள்.
----------------------------------------------------------------------------------------------------
அரச குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளை Born with Silver Spoon என்று சொல்வார்கள் ( Meaning: Born into a wealthy family)  பிறப்பே அதிர்ஷ்ட கரமானதாக அமைந்துவிடும்! பாலூட்டுவதற்கும் சீராட்டுவதற்கும் வீட்டில் நிறைய  வேலைக்காரர்கள்/காரிகள் இருப்பார்கள். பொடி நடையாக நடந்து செல்லாமல் எங்கு சென்றாலும் வாகனங்களில் செல்லலாம். கோட்டா பிரச்சினையின்றி எந்தப் பல்கலைக் கழகத்தில் வேண்டுமென்றாலும் சேர்ந்து படிக்கலாம். திருமண வயதில் போட்டி போட்டுக்கொண்டு பெண் கொடுக்கப் பலர் முன் வருவார்கள். மொத்தத்தில் வாழ்க்கை அம்சமாக இருக்கும்.

கஷ்டமே இருக்காதா? அதெப்படி இல்லாமல் இருக்கும்? அப்படிப் பட்ட பிறவிக்கும் பரல்கள் 337 தானே?

”பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது” 
என்று கவியரசர் பாடி வைத்ததுபோல வேறு சிரமங்களும் இருக்கும்.

அதுபோல அதற்கு எதிரான முறையில் சிலருடைய பிறப்பு அமைந்துவிடுவதும் உண்டு.

ஜாதகப்படி லக்கினத்தில் சனி இருக்கும் நிலைமையில் வாழ்க்கை போராட்டம் மிகுந்ததாக அமைந்து விடும். லக்கினத்தை எந்த சுபக்கிரகமும் பார்க்காமல் இருந்தாலோ அல்லது லக்கினத்தில் இருக்கும் சனியுடன் எந்த சுபக் கிரகமும் சேர்ந்திருக்காமல் இருந்தாலோ அந்த நிலைமை நிச்சயமாக அமைந்து விடும்.

அது சம்பந்தமாக இன்று ஒரு பாடலைப் பார்ப்போம்:

“பாரப்பா இன்னுமொரு புதுமைகேளு
பலமுள்ள கதிர்மைந்தன் பதியில் நிற்கில்
சீரப்பா இளமையில் மனோவியாதி
செழுமையுள்ள பருவத்தில் செல்வமுண்டு
வீரப்ப வேந்தனுடைய பொருளுஞ் சேரும்
விளங்குகின்ற கொடியோர்கள் சேரலாகா
கூறப்பா போகருடகடா ஷத்தாலே
கொற்றவனே பதியறிந்து பலனைக்கூறே!   

.....................புலிப்பாணி முனிவர்

ஆமாம். லக்கினத்தில் சனி இருந்தாலும் பரவாயில்லை. சனியுடன், ராகு அல்லது கேது அல்லது சூரியன் அல்லது செவ்வாய் போன்ற தீய கிரகங்கள் சேரக்கூடாதாம்.

சேர்ந்திருந்தால் என்ன செய்வது? வேறு ஏதாவது நஷ்ட ஈடு வழங்கப் பெற்றிருக்கும், அதைப் பார்த்து மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

4.9.13

Astrology: ஓஹோ இதுதான் பதிலா?

 
 -------------------------------------------------------------------------------------------------------------
Astrology: ஓஹோ இதுதான் பதிலா?

நேற்றைய பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகள்:

கேள்விகள்

1. ஜாதகி படித்தவரா அல்லது படிக்காதவரா?

ஜாதகி ஒன்பதாம் வகுப்பில் நுழைந்து எட்டிப் பார்த்ததுடன் சரி. எத்தனையோ பேர்கள் வலியுறுத்தியும், அதற்குப் பிறகு படிக்கவில்லை. ஆனால் ஜாதகி இயற்கையாகவே படு புத்திசாலி.

நான்கில் மாந்தி. நான்காம் அதிபதி சனி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருவரும் சேர்ந்து படிப்பிற்கு வாய்ப்பளிக்கவில்லை. அத்துடன் குட்டிச் சுக்கிரனும் (சின்ன வயதில் வரும் சுக்கிரதிசை) சேர்ந்ததால் ஜாதகிக்குப் படிப்பில் நாட்டம் இல்லாமல் போய்விட்டது.


2. வேலையில் இருப்பவரா? அல்லது Home Makerஆ?

வேலைக்குச் செல்லவில்லை. சென்றதில்லை!

இரண்டாம் வீட்டுக்காரன் செவ்வாய் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில். அத்துடன் இரண்டாம் வீட்டில் இரண்டு பாதகர்களின் (வில்லன்களின்)  கூட்டணி (12ஆம் வீட்டுக்காரன் புதனும், ஆறாம் வீட்டுக்காரன் குருவும் அங்கே உள்ளார்கள்) சுயமாகச் சம்பாதிப்பதற்கும் கையில் காசு புரள்வதற்கும் இந்த அமைப்பு எதிரானது. அத்துடன் பத்தாம் வீட்டிற்கு ஆறில் தொழில்காரகன் சனி. பத்தாம் வீட்டுடனோ அல்லது அதன் அதிபதியுடனோ தொடர்பு இல்லாமல் அவன் ஒதுங்கிப் போய்விட்டான். இந்த அமைப்புக்களால் ஜாதகி வேலைக்குச் செல்லவில்லை. சென்றதில்லை. Home Maker மட்டுமே!


2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

திருமணமானவர். ஆனால் தாமதமான திருமணம். முப்பது வயதில்தான் திருமணம் நடைபெற்றது. அடுத்த ஆண்டிலேயே ஒரு ஆண் குழந்தையையும் ஈன்றெடுத்தார்.

ஏழாம் வீட்டுக்காரன் செவ்வாய் அந்த வீட்டிற்கு ஏழில். ஆகவே ஜாதகிக்குத் திருமணம் மறுக்கப்படவில்லை. திருமணத்தை நடத்திவைக்க வேண்டிய சுக்கிரன் பகை வீட்டில் அமர்ந்ததால் தாமதமான திருமணம். சுக்கிரனுடன் பரிவர்த்தனையான சூரியன் தன்னுடைய மகா திசையில் சுக்கிர அந்திரத்தில் திருமணத்தை நடத்திவைத்தான்.

------------------------------------------------
துலா லக்கின ஜாதகி. லக்கினாதிபதி சுக்கிரன் 11ல் இது நல்ல அமைப்பு. ஆனாலும் அது அவருக்குப் பகை வீடு. அத்துடன் அவர் அந்த வீட்டுக்காரன் சூரியனுடன் பரிவர்த்தனை. ஆனாலும் பரிவர்த்தனையான சூரியன் நீசம். ஆகவே எல்லாம் பாதி பாதியாகக் கிடைத்தது. வேண்டியது வேண்டிய அளவில் கிடைத்தது. ஜாதகி எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருப்பவர். இருக்கின்றவர்.
------------------------
1. தோழர் பாண்டியன்
2. திரு மஹேஸ்
3. நாகராஜன்
4. பழநி சண்முகம்
5. ரமணன்

ஆகிய ஐவரும் கேட்கப்பெற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்

பெரும்பாலானவர்கள் இரண்டு கேள்விகளுக்கான பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள் அவர்களுக்கும் பாராட்டுக்கள்

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

3.9.13

Astrology: Quiz புதிர் - பகுதி 5 வித்தியாசமான கேள்விகளுடன்

 
Astrology: Quiz புதிர் - பகுதி 5 வித்தியாசமான கேள்விகளுடன்

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி ஐந்து

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக்  கேட்கப்பெற்றிருக்கும்  3 கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

இதுவரை 700ற்கும் மேற்பட்ட பாடங்களை நடத்தியிருக்கிறேன். வீடுகளைப் பற்றியும், காரகர்களைப் பற்றியும் உங்களுக்கு நன்கு தெரியும். அத்துடன் 70ற்கும் மேற்பட்ட அலசல் பாடங்களையும் நடத்தியிருக்கிறேன். ஆகவே உங்கள் நினைவாற்றலை வைத்து இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். அதில் ஒன்றும் சிரமம் இருக்காது.

உங்கள் பதில்களை பின்னூட்டம் மூலம் மட்டுமே சொல்லுங்கள். மின்னஞ்சல் களின் மூலம் எழுத வேண்டாம். அதை பலருக்கும் தெரியப் படுத்த வாய்ப்பு இல்லை.

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணுடைய ஜாதகம். ஜாதகி பிரபலமானவர் அல்ல. சாதாரணப் பெண்மணி



கேள்விகள்
1. ஜாதகி படித்தவரா அல்லது படிக்காதவரா?

படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது உயர்கல்வி பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா?

2. வேலையில் இருப்பவரா? அல்லது Home Makerஆ

(அதாவது வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பவரா?)

2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் சேர்த்து எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++=====

2.9.13

Astrology: Quiz புதிர் - பகுதி 4

 


Astrology: Quiz புதிர் - பகுதி 4

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி நான்கு

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் மிகவும் பிரபலமானவர். தமிழ் நாட்டுக்காரர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++=====

28.8.13

Astrology: ஓஹோ அவரின் ஜாதகமா இது?

 

 Astrology: ஓஹோ அவரின் ஜாதகமா இது?

நேற்று வெளியிட்ட புதிர் போட்டியில் நிறையப் பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். பலர் பின்னூட்டங்கள் மூலமும், மேலும் பலர்
மின்னஞ்சல் மூலமும் தங்கள் பதிலை அனுப்பியுள்ளார்கள். அனைவருக்கும் வாத்தியாரின் பாராட்டுக்கள் மற்றும் நன்றி உரித்தாகுக!

சிலர் நான்கு கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்லி அசத்தியிருக் கிறார்கள். அத்துடன் அதிலும் சிலர் விக்கி மஹராஜா துணையுடன், ஜாதகரின் பெயரையும் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து! அவர்கள் அனைவருக்கும் 100/100 மதிப்பெண்கள்.

சிலர் முதல் கேள்விக்கு மட்டும் சரியான பதிலை எழுதவில்லை. ஆனால் மற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் 75 மதிப்பெண்கள்.

பங்கு கொண்டவர்கள் அனைவருக்குமே 35 மதிப்பெண்கள்:-)))))
------------------------------------------------------------------

அது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸின் ஜாதகம்

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் 10 பேர்களில் அவரும் ஒருவர்



அவரைத் தெரியாதவர்கள் கணினி உலகில் எவரும் இருக்க முடியாது. மேலதிகத் தகவல்களுக்கு இந்தச் சுட்டிக்குச் சென்று பாருங்கள்.

http://en.wikipedia.org/wiki/Bill_Gates

பிராட்பாண்ட் கனெக்சன் படுத்தி எடுக்கிறது. இருந்தாலும் சமாளித்து இந்தப் பதிவை வலை ஏற்றுகிறேன்

அவருடையா ஜாதகத்தில் பல சிறப்புக்கள் உள்ளன. அதை விவரமாக அலசி இன்னொரு நாள் முழுப் பதிவாக வெளியிடுகிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள்

அவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெளியே வந்து தொழிலைத் துவங்கியவர். 4ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாய் அதைச் செய்தது. அதாவது முழுமையாகப் படித்து முடிக்கவிடாமல் செய்தது. இந்த ஜாதகத்திற்கு செவ்வாய் லாபாதிபதி  மட்டும் அல்ல. ஆறாம் வீட்டுக்காரனும் அவன்தான் (வில்லன்) அதை மனதில் கொள்க.

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

27.8.13

Astrology: Quiz புதிர் - பகுதி 3 - சற்று வித்தியாசமான கேள்விகளுடன்


Astrology: Quiz புதிர் - பகுதி 3 - சற்று வித்தியாசமான கேள்விகளுடன்

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி மூன்று

இந்தத் தொடரின் முதல் பகுதியை 19.8.2013 திங்கட்கிழமையன்றும் அடுத்த பகுதியை நேற்றும் (26.8.2013) கொடுத்திருந்தேன். ஏராளமான பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு என்னைத் திகைக்க வைத்து விட்டீர்கள். தொடரின் அடுத்த பகுதி இது.

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான புதிய பகுதி இது! அனைவரையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வெளிவரும் இப்பதிவில் இன்று வித்தியாசமான கேள்விகளைக் கேட்டுள்ளேன். இதுவரை கடந்த ஆறரை ஆண்டுகளில் சுமார் 700 பாடங்களின் மூலம் ஜோதிடத்தை உங்களுக்கு நன்கு சொல்லிக் கொடுத்துள்ளேன். ஜாதகத்தை அலசும் முறை பற்றிய பாடங்களையும் நிறையக் கொடுத்துள்ளேன். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப்பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer
என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகத்திற்கு உரியவர்:

1. பட்டப் படிப்பு படித்தவரா அல்லது பட்டப் படிப்பு படிக்காதவரா?
2. ஜாதகர் ஏழையா? அல்லது நடுத்தரப் பணக்காரரா? அல்லது செல்வந்தரா?
3. திருமணம் ஆனவரா அல்லது திருமணம் ஆகாதவரா?
4. வேலையில் இருப்பவரா அல்லது வேலை எதுவும் செய்யாமல் சுகஜீவனத்  துடன் இருப்பவரா?

நடத்தப் பெற்ற பாடங்களில் இருந்து, கேள்விக்கு சம்பந்தப்பட்ட வீடுகளையும், அதன் அதிபதிகளையும் காரகர்களையும் வைத்து அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்

க்ளூ வேண்டுமா?

எதற்கு க்ளூ? அலசலுக்கு அதெல்லாம் வேண்டாம். சர்ஃப் எக்செல் வாஷிங் பவுடர் மட்டும் போதும். நன்றாக அலசுங்கள். கிடைக்கின்ற பதிலை எழுதுங்கள்

கேள்விக்கான ஜாதகம்:



உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

26.8.13

Astrology: Quiz புதிர் - பகுதி 2

 
Astrology: Quiz புதிர் - பகுதி 2

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி இரண்டு

இந்தத் தொடரின் முதல் பகுதியை 19.8.2013 திங்கட்கிழமையன்று கொடுத்திருந்தேன். ஏராளமான பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு என்னைத் திகைக்க வைத்து விட்டீர்கள். தொடரின் அடுத்த பகுதி இது.

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான புதிய பகுதி இது! அனைவரையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வாரம் ஒருநாள் வெளிவரும் இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

எதற்கு க்ளூ? மீண்டும் சொல்கிறேன், படித்த பாடத்தை வைத்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடியுங்கள். நெட்டின் மூலம் பல உபாயங்கள் உள்ளன/கிடைக்கும் (அதை நான் சொல்ல மாட்டேன்) அதை வைத்து ஜாதகரின் பெயரைக் கண்டு பிடியுங்கள்

சரி கடைசி பெஞ்ச் கண்மணிகளுக்காக ஒரு சின்ன க்ளூவைக் கொடுக்கிறேன்

ஜாதகர் மிகவும் பிரபலமானவர். தமிழ் நாட்டுக்காரர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.8.13

Astrology: விதியே தன் கை நீட்டி வலை வீசும்போது!

 

Astrology: விதியே தன் கை நீட்டி வலை வீசும்போது!
விதியை மதியால் வெல்ல முடியுமா?

வெல்ல முடியாது!

இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும் ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம். அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமே அவனுடைய விதியையே அவனால் வெல்ல முடியவில்லை!

வென்றிருந்தால், அப்படிச் சொன்னவன் அத்தனை பேரும் இன்று உயிருடன் இருந்திக்க வேண்டும்!

அவனவனுக்கு விதிக்கப்பெற்ற காலம் முடிந்தவுடன், வலுக்கட்டாயமாகக் கையில் போர்டிங் பாஸைத் திணித்து, விதி அத்தனை பேர்களையும்
அள்ளிக் கொண்டு போயிருக்கிறது.

அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்."விதியை விட வலியது எதுவும் கிடையாது"

Nothing is stronger than destiny!

மூச்சுக்கு முன்னூறு முறை, வள்ளுவரைப் பற்றிப் பேசும் மதிவாணர்கள் அனைவரும், குறளில் இரண்டு அதிகாரங்களைப் பற்றிப் பேசவே
மாட்டார்கள். அந்த இரண்டு அதிகாரங்களிலும் மொத்தம் 20 குறள்கள் உள்ளன.

ஒன்று அறத்துப்பாலின் துவக்க அதிகாரம். மற்றொன்று அறத்துப்பாலின் முடிவில் உள்ள அதிகாரம் திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.

ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.

அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!"

---குறள் எண் 377

அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில் பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை அனுபவிக்க முடியாது.

சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப்பதற்கென்றே சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும் கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ
அல்லது மாப்பிள்ளையோ ஹோண்டா சிட்டி ஏ.ஸிக் காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான். விதி அங்கேதான் வேறு படுகிறது.
ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம்

"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சுழினும் தான்முந்நுறும்"

...குறள் எண். 380

ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன? அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு, வேறு ஒரு வழியை
ஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும் வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்

What is stronger than fate (destiny)? If we think of an expedient
to avert it, It will itself be with us (before the thought)


"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"

...குறள் எண்.372

பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது அவனைப்
பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு
பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும் அது அவனைப் பேரறிஞனாக்கும்!

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged
knowledge.


இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி  அதிகாரமாக ஊழ்வினையை வைத்தார்.

அய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான்.
அதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து முடித்தார்.

மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப் படிதான் நடக்கும்!

அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா என்ன?

சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார்.    The Almighty will give withstanding power!
தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார். அதற்கு உதாரணம் கேரளாவில் மிகவும் பிரசித்தமான நாராயண குருவின் சரித்திரம் (அதைப் பற்றி
வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்)
-----------------------------------------------------------------------------------------------------
1
விதியை வெல்லலாம் என்று சொல்பவன் எவனாவது வந்து, நான் என்னுடைய மதியை வைத்து ஒரு நூறு ஆண்டு காலம் வாழ்ந்து காட்டுகிறேன் என்று சொல்லட்டும் பார்க்கலாம்.

முடியாது!

2
விஞ்ஞானம் அல்லது கையில் இருக்கும் இதர புண்ணாக்குகளை வைத்து, இந்த உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது என்று சொல்லட்டும்
பார்க்கலாம்.

முடியாது!

ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடியென்று பணத்தைச் செலவழித்து, வான்வெளியை ஆராய்கிறான். பூமியைத் தோண்டிக் கடவுளின்
துகள்களைத் தேடுகிறான். அதில் ஒரு பாதியையாவது செலவழித்து மனிதனின் உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது? இருக்கும்வரை அது

எப்படி இயங்குகிறது? உடலை விட்டுப் போகும்போது அது எப்படிப்போகிறது? என்று கண்டுபிடிக்கலாம் இல்லையா? இந்த மதிவாணர்கள் ஏன்
அதைச் செய்யவில்லை?

விதியைப் பற்றி விதிக்கப்பட்டதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.

அய்யன் வள்ளூவன் நறுக்குத் தெரித்தாற்போல பதினேழரை வரிகளில் எழுதியதை விடவா வேறு எவரும் எழுதிவிட முடியும்?

ஒரு குறளின் அளவு ஒன்னே முக்கால் வரிதான்!

அதைப் படியுங்கள்!

என்னை எதிர்க்கேள்வி கேட்க விரும்புபவர்களும் அதை ஒரு முறைக்கு நான்கு முறை படித்துவிட்டு வந்தே என்னைக் கேள்வி கேளுங்கள்
ஆகவே விதியைப் பற்றி எழுதியதை, பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்
------------------------------------------------------------------------------------------------------
மாடுகளை வைத்து நீ பிழைப்பு நடத்துவாய் என்று ஒருவனுக்கு விதிக்கப் பட்டிருந்தால் - எத்தனை மாடுகள் என்ற எண்ணிக்கையை இறைவன்
எழுதுவதில்லை. 4 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது அவனது முயற்சியும் உழைப்பும்தான் நிர்ணயம் செய்கின்றன!

அதற்கு மிகவும் அருமையான உதாரணம் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். எட்டாம் வகுப்பும் வரையே படித்த அவர், அதுவும் 54 வயது வரையே
வாழ்ந்த அவர், எத்தனை கவிதைகளை எழுதிவிட்டுச் சென்றார் - எத்தனை இலட்சம் தமிழ் உள்ளங்களை நிறைத்து விட்டுச்சென்றார்! அவர் எழுதிச்

சென்ற கவிதைகளை எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்விற்காக எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்! இதை வெறும் அதிர்ஷ்டக்
கணக்கில் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? அவருக்கிருந்த தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் அவரைச் சாதனை செய்ய  வைத்தன!

இந்த இடத்தில்தான் முயற்சி நிற்கும். அதைத்தான் முயற்சி திருவினையாக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்
விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லிவைத்தார்கள்.
----------------------------------------------------------------------------------------
ஞானி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒருவன் கேட்டான்.

"அழகு ஏன் மயக்குகிறது?"

அவர் பதில் சொன்னார்.

"அது எங்கே மயக்குகிறது? நீயல்லவா மயங்குகிறாய்?"

"சரி, அழகானது - அழகில்லாதது என்ற இரண்டு நிலைப்பாடுகள் ஏன்?

"அது படைப்பின் ரகசியம். எல்லாமே அழகானதுதான் என்றால் - நீ எங்கே அதை உணரப் போகிறாய்? அதனால்தான் இரண்டு நிலைப்பாடுகள்.
வறுமை, செழுமை, பெருமை, சிறுமை என்று அனைத்தும் இரண்டு வகைப் படும்!"

"உண்மையான அழகிற்கும் - பொய்யான அழகிற்கும் என்ன வித்தியாசம்?"

"பொய்யான அழகு தற்காலிகமானது. அழிந்துவிடும். உண்மையான அழகு காலத்தாலும் நிற்கும் பலராலும் போற்றப்படும். பெருமை வாய்ந்ததாக

இருக்கும்!"

"உதாரணம் சொல்லுங்கள்"

"மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கநாதர் கோவில், ராமேஸ்வரம் கோவில்"

"அவைகள் தெய்வங்களின் உறைவிடம் - அதனால் அழகாகத்தோன்றலாம். வேறு இடங்களைச் சொல்லுங்கள்"

"எல்லா இடங்களிலும்தான் ஆண்டவன் இருக்கிறார். நான் சொன்ன அந்த இடங்கள் மனிதனால் கட்டப்பட்டவைதான்.மேலும் சில இடங்களைச்
சொல்கிறேன் பார்.
திருவாரூர் தேரழகு
மன்னார்குடி மதில் அழகு
வேதாரண்யம் விளக்கழகு
கண்ணதாசன் பாட்டழகு
காளையார்கோவில் குளம் அழகு
சரி, உனக்குப் புரியும்படியாக ஒரு இடத்தைச் சொல்கிறேன். தாஜ்மகால்."

அதற்குப் பிறகு அவன் கேள்வி கேட்கவில்லை. போய்விட்டான்.

அதே இரண்டுவித நிலைப்பாடுகள்தான் வாழ்க்கைக்கும். எல்லோருமே செல்வந்தர்களாக இருந்துவிட்டால், பசியின் அருமை எப்படித் தெரியும்?
உழைப்பின் அருமை எப்படித் தெரியும்? பணத்தின் அருமை எப்படித் தெரியும்?
--------------------------------------------------------------------------------------------------
The Road to Success is not straight:

There is a curve called failure, a loop called confusion, speed bumps called friends, caution lights called family, and you will have flats called jobs.

But, if you have a spare called determination, an engine called perseverance, insurance called faith, and a driver called God,you will make it to a place called success!

Do good, and leave behind you a monument of virtue that the storms of time can never destroy.

---------------------------------------------------------------------------------------------
"வாத்தியாரே, ஒரே ஒரு கேள்வி மட்டும் பாக்கியுள்ளது. ஆசைப்படலாமா? ஆசைப்படக்கூடாதா?!"

"நியாயமான ஆசைகளில் தவறில்லை!"

"எது நியாயமான ஆசை?"

"சைக்கிளில் செல்பவன், ஒரு மொப்ட் வண்டிக்கு ஆசைப்பட்டால் அது நியாயமான ஆசை. அவனே பென்ஸ் காருக்கு ஆசைப்படலாமா?"

"நியாயமில்லாத ஆசை எது?"

"குருவி, அதன் அளவிற்குத்தான் பறக்க ஆசைப்பட வேண்டும். கழுகைப்போல பறக்க ஆசைப்படக்கூடாது. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு அதற்குத் தகுந்த பெண்ணின் மீதுதான் ஒருவன் ஆசைப்பட வேண்டும். ஓமக்குச்சி நரசிம்மன்போல் இருந்து கொண்டு, நமீதா போன்ற அல்லது நயன்தாரா போன்ற பெண்ணின் மீது ஒருவன் ஆசைப்படக்கூடாது! காக்காய் புறாவிற்கு ஆசைப்படலாமா? குயில் மயிலுக்கு ஆசைப்படலாமா? அது நியாயமில்லாத ஆசை!"
--------------------------------------------------------------------------------------------
புதிய கீதை

எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது
எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!
எது கிடைக்க வேண்டுமோ
அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்

எதை நீ கேட்காமலிருந்தாய்?
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?
அது நியாமாகக் கிடைப்பதற்கு?

எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்து விடும்
அடுத்த நாள் உனக்கு
அது வெறுத்து விடும்!

கிடைப்பதன் அருமை
அது கிடைக்கும் நொடி வரைதான்
அடுத்த நொடி
நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!

ஆகவே கேட்காமல் இரு!
இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!

இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாரம்சமும் ஆகும்!

சம்பவாமி யுகே! யுகே!

அன்புடன்
வாத்தியார்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!