மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Devotional. Show all posts
Showing posts with label Devotional. Show all posts

20.6.22

பரிகாரம் என்றால் என்னவென்று தெரியுமா?



பரிகாரம் என்றால் என்னவென்று தெரியுமா?

பரிகாரம் என்றால் உண்மையில் என்னஎன்றுதெரி(புரி)யாதவர்
களுக்காக இந்தக் கதை!

"எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை
எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” –
பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது.
பரிகாரம் தொடர்பான குட்டி கதை.

ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது.

அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.

அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து “ஐயோ… அம்மா” என்ற குரல் கேட்டது.

ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே… யாரையோ தவறுதலாக கொன்றுவிட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான்.

அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.

“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே” என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, “இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்கவேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்
.
வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர்.

கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.
“இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்
.
மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, “என்னை மன்னித்துவிடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை. அறியாமல் நடந்த தவறு இது. போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணிவிட்டேன்….”
தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாகவில்லை என்று யூகித்துக்கொண்டான்.

அடுத்தநொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

அருகே நின்றுகொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.

தட்டுக்கள் வைக்கப்பட்டபிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான்.

 பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான்.

“மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகிவிட்டேன். நான் தண்டிக்கப்படவேண்டியவன். பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டுவிடுகிறேன். நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் (பரிகாரம்) இது தான். இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன.
அவற்றை எடுத்துக்கொண்டு என்னை மன்னியுங்கள். அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக்கொள்ளுங்கள்..” என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.

உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.

அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது? மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது… செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகுவெட்டி பேச ஆரம்பித்தான்…. “ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?

நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள் சரி தானே?

நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்..?”

“ஐயோ அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப்போகிறான் போலிருக்கிறதே…” எல்லாரும் வெடவெடத்து போனார்கள்.
விறகுவெட்டி தொடர்ந்தான்… “நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை. அவர் அளிக்கும் பொன்பொருளையும் விரும்பவில்லை. நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம்வருந்தவேண்டும் என்று விரும்பினேன்.
அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார். அது ஒன்றே எனக்கு போதும்.
மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும். நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக்கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும். மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது… எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.

ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந்தன்மையா, இப்படி ஒரு ஞானமா என்று வியந்துபோனார்கள் அனைவரும்.

இந்த கதை கூறும் நீதி.
அந்த மன்னன் தான் நாம்.
நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை.
அந்த விறகுவெட்டி தான் இறைவன்.
இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று. இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் பலனளிக்கும்.
ஒரு பரிகாரத்தை எதற்கு செய்கிறோம் என்றே தெரியாமல் அதை இன்று பலர் செய்வது தான் வேடிக்கை.

பரிகாரம் என்பது ஒரு உபாயம் அவ்வளவே. அதுவே இறுதியானது அல்ல.
நாம் செய்யும் பரிகாரங்களை எல்லாம் இறைவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் அவனுக்கில்லை.

ஆனால், நாம் என்ன நினைத்து பாவமன்னிப்பு கேட்கிறோம், அதற்கு ஈடாக என்ன பிராயச்சித்தம் செய்கிறோம் என்பது இங்கே மிகவும் முக்கியம்.
நீங்கள் எந்திரத்தனமாக செய்யும் எந்த பரிகாரமும் பலன் தரவே தராது.
நீங்கள் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் சரி… எத்தனை லட்சங்களுக்கு திருப்பணிகள் செய்தாலும் சரி
செய்த பாவத்திற்கு மனம்திருந்தி கண்ணீர்விட்டு மன்னிப்பு கேட்டாலொழிய உங்களுக்கு பாவமன்னிப்பு (பரிகாரம்) என்பது கிடையாது.
அடுத்த முறை என்ன பரிகாரம் செய்தாலும், நாம் செய்த குற்றத்திற்கு (பாவத்திற்கு) பிராயச்சித்தமாகத் தான் இதை செய்கிறோம் என்று உணர்ந்து கடந்தகால / முன்ஜென்ம தவறுக்கு வருந்தி – கண்ணீர் விட்டு பாவமன்னிப்பு கேட்கும் ஒருவர் எந்த மனநிலையில் இருப்பாரோ அதே மனநிலையில்தான் – ஒருவர் பரிகாரம் செய்யவேண்டும்.
மேற்கூறிய மன்னன் அந்த விறகுவெட்டி முன்பு தன்னை ஒப்படைத்த மனநிலையில் இருந்து பரிகாரம் செய்து பாருங்கள்… உடனடி பலன் நிச்சயம்!
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.6.22

எது சிறந்த தானம்?




எது சிறந்த தானம்?

பாரதப் போர் முடிந்து கௌரவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு பாண்டவர்கள் அரசாட்சியை ஏற்றுக்கொண்டார்கள்.
ஹஸ்தினாபுரமே விழாக்கோலம் பூண்டது.  கௌரவர்களைக் கொன்ற பாவம் நீங்க யாகம் ஒன்றைச் செய்ய விழைந்தார்கள் பாண்டவர்கள்.

யாகம் என்றால் இப்படி அப்படியல்ல. இந்திரனாலும் நடத்த முடியாத பிரம்மாண்ட யாகம். இதுவரை யாரும் செய்திராதயாகம்.
தேவர்களும் முனிவர்களும் வந்து கலந்து கொண்டார்கள்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவும்,பொன்னும் பொருளும் போதும் போதும் என்ற அளவுக்கு வாரி வாரி வழங்கப்பட்டன.

மக்களெல்லாம் ஆஹா ஆஹாவெனப்புகழ்ந்தனர்.
இது போல் யாகம் இது வரைக் கண்டதில்லை இனியும் காண்பது சந்தேகமே எனச் சொல்லிச் சொல்லிக் கொண்டாடினர்.

அன்று யாகத்தின் கடைசி நாள். மிகப்பிரமாண்டமாயும் 
அனைவரும் போற்றும் படியும் நடந்த தாங்கள் செய்த யாகத்தை எண்ணி மிகவும் கர்வம் அடைந்தனர் பாண்டவர்கள்.

பெரும் செருக்கு கொண்டனர். அவ் யாகத்தில் கலந்து கொண்ட கண்ணனுக்கு இவர்களின் கர்வமும் செருக்கும் பிடிக்கவில்லை.

யாகம் முடியும் தருவாயில் கீரிப்பிள்ளை ஒன்று அவ்விடம் வந்தது. அதன் முதுகின் ஒரு பகுதி பொன்மயமாய் தக தக வென மின்னியது. அதைக்கண்ட அங்கிருந்த அனைவரும் வியந்தனர். ஆனாலும் யாகம் நடக்குமிடத்தில் கீரிப்பிள்ளைக்கு என்ன வேலை என அதனை அடித்து விரட்ட எத்தனித்தனர்.
அனால் பாண்டவர்களின் மூத்தவரான தருமர் அவ்வாறு செய்யாமல் தடுத்து விட்டார்.

வந்த கீரிப்பிள்ளை யாகம் நடந்த இடத்தில் படுத்து உருளத்தொடங்கியது.
அங்கும் இங்கும் இங்கும் அங்குமாக ஒரு இடம் விடாமல் உருண்டது. அனைவரும் அதன் செய்கையை வியப்போடு பார்த்தனர்.

ஒரிடமும் விடாமல் உருண்ட கீரிப்பிள்ளை சட்டென எழுந்தது. உடலை அப்படி இப்படி ஆட்டி ஒட்டியிருந்த மணலை உதறியது. பின்னர் பாண்டவர்களைப் பார்த்து "நீங்கள் கபடர்கள்... ஏமாற்றுக்காரர்கள்...பொய்யர்கள்.. நீங்கள் செய்த யாகம் பொய்யானது.

இது ஆண்டவனால் ஏற்றுக்கொள்ளப்படாது.
பெருமைக்காகவும் உங்களின் பணக்காரத் தனத்தைத் தெரியப் படுத்தவுமே இந்தயாகத்தைச் செய்திருக்கிறீர்கள். நீங்கள் செய்த தானமும் தர்மமும் வீணானவை. நீங்கள் செருக்கடந்துள்ளீர்கள் இவ் யாகம் கருதி  என்றது. அது கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கண்ணன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

கீரிப்பிள்ளையின் கூற்றை கேட்டு தருமரும் மற்றவர்களும் அதிர்ந்து போயினர்.
ஏன் இப்படிச் சொல்கிறாய் என வினவினர்...
பதில் சொல்கிறேன் கேளுங்கள் என்றபடி சொல்ல ஆரம்பித்தது கீரி...

ஒருஊரில் ஏழைப்பிராமணன்
 ஒருவர்இருந்தார். அவருக்கு மனைவியும், மகனும், மகளும் இருந்தனர்.

வருமானம் அதிகமில்லாத அவரால் குடும்பம் நடத்த முடியவில்லை. பல நாட்கள் அனைவரும் பட்டினி கிடப்பர், கிடைக்கும் நாட்களில் அரை வயிற்றுச் சோறுதான் கிடைக்கும்.

ஒரு நாள் அவரின் மகளுக்கும் மகனுக்கும் தாங்க முடியாத பசி. இருவரும் உணவு கேட்டு தாயிடம் அழுதனர். பாவம் தாய்தான் என்ன செய்வாள். அவர்களோடு சேர்ந்து அவளும் குழந்தைகளின் பசிக்கு உணவு கொடுக்க முடியவில்லையே என வருந்தி அழுதாள். இதை பார்த்த அந்த பிராமணர் மிகவும் வருத்தத்தோடு வெளியே சென்றார். திரும்பி வருகையில் கொஞ்சம் அரிசி மாவுகொண்டுவந்தார்.
அம்மாவினை நான்கு பாகங்களாக்கி நால்வரும் எடுத்துக்கொண்டனர்.
அம்மாவினை உண்ண எத்தனித்த போது வாசலில் மிகுந்த பசியோடு இருக்கிறேன் உண்ண ஏதாவது கொடுங்கள் என்ற குரல் கேட்டது.

வாசலில் ஒரு சன்யாசி நின்றுகொண்டிருப்பதைக் கண்ட பிராமணர் தன் பங்கு மாவை அவர் உண்ணக் கொடுத்தார். அவர் மேலும் பசிப்பதாகச் சொல்ல பிராமணரின் மனைவியும் தன் பங்கைக் கொடுத்தார்.

குறைந்த உணவு தன் பசியை மேலும் அதிகப் படுத்திவிட்டதாக சன்யாசி புலம்ப பிராமணரின் மகனும் மகளும் தங்கள் பங்கினையும் கொடுத்து விட்டனர். அப்போது நான் (கீரிப்பிள்ளை) அங்கே சென்றேன் அவ்விடத்தில் கொஞ்சம் மாவு தரையில் சிந்திக்கிடந்தது. அந்த மாவில் படுத்து உருண்டேன். சிந்திக்கிடந்த அந்த மாவு என் முதுகில் பட..  பட்ட இடம்பொன்னானது. காரணம் பசியால் துடித்திருந்த வேளையிலும் பசி என்று வந்தவர்க்கு தங்களுக்குக் கிடத்த அந்த சொற்ப உணவான
மாவை கொடுத்தார்கள் அவர்கள்.

அவர்கள் செய்த தானமே சிறந்த தானம்.இறைவன் அவர்களின் தர்மத்தை ஏற்றுக்கொண்டான் என்பதற்கு மாவு பட்ட என் முதுகு பொன்னாய் ஆனதே சாட்சி.
அத் தானத்தால் அவர்கள் இறைவனால் பெரும் பொருளுக்கு உடையவர்கள் ஆனார்கள்.

ஆனால் நீங்களோ பெருமைக்கும் பிறரின் போற்றுதலுக்கும் ஆசைப்பட்டு பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினீர். மாபெரும் யாகம் செய்தோமென கர்வம் கொண்டீர்.நீங்கள் செய்த யாகம் உண்மை என்றால் இவ்விடத்தில் படுத்து உருண்ட என் முதுகு பொன்னாய்ஆகியிருக்கும்.
அவ்வாறு ஆகாமையால் உங்களின் யாகம் பொய்யானது..

நீங்களும் பொய்யர்கள்..
பொய்யான உங்களைக் காணவே என் மனம் வருந்துகிறது எனச் சொல்லி அவ்விடம் விட்டு அகன்றது
தருமரும் அவரின் தம்பிமார்களும் வெட்கித் தலை குனிந்தனர்.
கண்ணன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

கர்வம்,தலைக்கனம்,அகம்பாவம் எப்போதும் கூடாது...         
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.6.22

எத்தனை பெயர்களடா சாமி!!




எத்தனை பெயர்களடா சாமி!!

 தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் 

🌹 🌿 திருவாரூரில் தியாகராஜர் 

🌹 🌿 திருநெல்வேலியில் நெல்லையப்பர் 

🌹 🌿 திருவையாறில்
ஐயாறப்பர் 

🌹 🌿 திருவண்ணாமலையில் அண்ணாமலையார் 

🌹 🌿 திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர் 

🌹 🌿 திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் 

🌹 🌿 திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்

🌹 🌿 திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் 

🌹 🌿 திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர் 

🌹 🌿 திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் 

🌹 🌿 திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர் 

🌹 🌿 திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர் 

🌹 🌿 திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர் 

🌹 🌿 திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்

🌹 🌿 திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர் 

🌹 🌿 திருச்சியில் தாயுமானவர் 

🌹 🌿 திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர் 

🌹 🌿 திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் 

🌹 🌿 திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர் 

🌹 🌿 திருவேற்காட்டில் வேதபுரீஸ்வரர்

🌹 🌿 திருக்கண்ணபுரத்தில் ராமநாதர்

🌹 🌿 திருமழபாடியில் வைத்தியநாதர் 

🌹 🌿 திருக்கோவிலூரில் வீரட்டேஸ்வரர்

🌹 🌿 திருப்புனவாசலில் விருத்தபுரீஸ்வரர் 

🌹 🌿 திருவண்டுதுறையில் வண்டுறைநாதர்

🌹 🌿 திருமாணிக்குழியில் வாமனபுரீஸ்வரர் 

🌹 🌿 திருவாளப்புத்தூரில் மாணிக்கவண்ணர் 

🌹 🌿 இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி , ஆறு கால பூசையில் , ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து, தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

🌹 🌿 'த' வரிசையில் ஒரு பாதி ஊர்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். இதற்கே மூச்சு வாங்குது.

🌹 🌿 இன்னும் மயிலாப்பூரில் காபாலீஸ்வரர் , சிதம்பரத்தில் நடராஜர் , வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதன், மேலகோட்டையுரில்  கோமதிஸ்வர் என ஆரம்பித்தால் பதிவு நீண்டு கொண்டே இருக்கும்.

🌹 🌿 தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128. வடகரையில் அமைந்த தலங்கள் 63. 

🌹 🌿 ஈழத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்த திருக்கோணேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில் அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும் தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.

🌹 🌿 தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும். ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.

🌹 🌿 எடுத்துக்காட்டு : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு , இதுவே காலப்போக்கில் திருவையாறாக மாறி இருக்கிறது. காவிரி , குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.

🌹 🌿 இப்போதெல்லாம் நம்ம பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர். வாழ்க தமிழர்களின் புகழ்.

ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏

நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே 🕉️🙏

நல்லதை பகிர்ந்து நல்லதையே விதைப்போம்
🙏🙏🙏🙏
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------

30.5.22

ஆன்மிகம்: சிம்மாசனம் - ஆக்கம் பாலகுமாரன்



ஆன்மிகம்: சிம்மாசனம் - ஆக்கம் பாலகுமாரன்
--------------------------

காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாது பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார்.

"கிழவரே... நீர் என்ன சொல்கிறீர் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர் என்பது தெரிகிறது. ஆனால், என்ன தானம் என்பது தெரியவில்லை.

எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள்... தருகிறேன்" சொல்லிவிட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.

ஞானிகள் என்போர் எளிமையானவர்கள். எல்லாவித அவமதிப்பையும் இன்முகத்துடன் ஏற்பவர்கள். கோபமில்லாதவர்கள். எதிரே இருப்பவன் அரசனோ, அசுரனோ, அறிவிலியோ, ஆராய்ந்து அறிந்த பண்டிதனோ யாராயினும் தரக்குறைவாகப் பேசமாட்டார்கள்.

எந்த ஞானியும் தனக்கென்று தானம் கேட்டதேயில்லை. ஞானியின் கைகள் எப்போதும் பிறருக்காகத்தான் தானம் கேட்கும். ஊருக்காகத்தான் அவர் மனம் யோசனை செய்யும்.

ஞானி எளிமையானவர். அந்த எளிமையைக் கண்டு அவரை இகழ்ச்சியாய் எடை போடக்கூடாது. பல செல்வந்தர்களுக்கு இந்த எளிமை புரியாத விஷயமாக இருக்கிறது.

சற்று உயரமாக மேடை போட்டு... உலகமே தன் கீழ் என்கிற மமதை வந்துவிடுகிறது. ஆட்சியாளர் பலருக்கு இதுவே வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது.

ஆட்சியில் அமர்வது என்பது இடையறாது தந்திரம், கணக்கில்லாத துரோகங்கள், கலவரம் ஊட்டும் வன்முறைகளால் நிகழ்வது. இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு இருந்தால்கூட அவனுக்கு நல்ல தூக்கம் என்பதில்லை. மூன்றையும் கொண்டவனுக்கு எவ்விதம் தூக்கம் வரும்.

ஆழ்ந்து தூங்காதவனிடம் அமைதி எப்படி குடிகொண்டு இருக்கும். அமைதியில்லாத எவனும் பிறரை எளிதில் அவமதிப்பான். ஆட்சியாளர்கள் சகலரையும் அவமானப்படுத்த இந்த அமைதியின்மையே காரணம்.

மறுநாள் விடிந்தது. காசி தேசத்துச் சான்றோர்கள் அவையில் கூடினார்கள். பாட்டுப் பாடுகிற வித்வான்களும், ஆடல் மகளிரும், அரபியில் கவிதை சொல்கிறவர்களும், அந்த மொழியில் இறைவன் பெருமை படிப்பவர்களும் ஒன்றுகூடினார்கள்.

"எங்கே அந்த மதுரைக் கிழவர்...?" நவாப் விசாரித்தார்.

"அவர் அரபி படிக்க போயிருக்கிறார்." யாரோ சொல்ல, சபை சிரித்தது.

"அப்படியா... ஆயுஸுக்கும் இந்த பக்கம் திரும்ப மாட்டார் என்று சொல்லுங்கள்..." மறுபடி சபை சிரித்தது.

"அவருக்கு வயது வேறு ஆகிவிட்டது. அரபி மொழியை இறைவனிடம் போய் படிக்க வேண்டும்." யாரோ சொல்ல, மீண்டும் சபை சிரித்தது.

"அடடா.. இது தெரிந்திருந்தால் வெறும் கையுடன் அனுப்பியிருக்க மாட்டேனே... வழிப்பயணத்திற்கு ஏதேனும் கொடுத்து அனுப்பியிருப்பேனே..."

"இறைவனை பார்க்கப்போகும் வழிப்பயணத்தில் நவாப் அவர்கள் என்ன கொடுத்துவிட முடியும்.." ஒரு பெரிய அரபிப் புலவர் சந்தேகம் எழுப்பினார்.

"சில சவுக்கடிகள்..." ஒரு உபதளபதி துள்ளிக்கொண்டு சொன்னான். மறுபடியும் அந்த நவாபின் சபை கைகொட்டிச் சிரித்தது.

"ஆக… அவர் வரவே மாட்டார் என்று சொல்கிறீர்களா..."

"வரலாம் மன்னா.. இந்துக்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. அந்த மதுரைக் கிழவர் இறந்து மறுபடி பிறந்து இதே காசியில் எருதாக வருவார். உம்முடைய அழுக்குத் துணிகளைச் சுமப்பார். அதுவரை பொறுத்திருங்கள்.

நவாபால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "மதுரைக் கிழவர் மிருகமாக வருவார் என்கிறீர்களா..."

"ஆமாம்... ஆமாம்..." என்று அந்த துதிபாடும் சபை சொல்லியது.

வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும், கோரைப் பற்களும்.. சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண்சிங்கம் சபைக்குள் நுழைந்தது.

குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார்.

அவர் நரைத்த தலைமுடியும், தலைப்பாகையும், வெள்ளை வெளேர் என்று வயிறு வரை நீண்ட தாடியும், இறையை உணர்ந்த உறுதியான முகமும், போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும் அவரை சிங்கம்போல் காட்டின.

அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபை கலைந்து, காலைத் தூக்கிக் கொண்டது. நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான்.

"என்ன இது..." கத்தினான்.

"நேற்று நீர் அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம்."

"இதுவா ஆசனம்... இது சிங்கமல்லவா..."

"இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உன் ஆசனத்திலும் சிம்மம் இருக்கிறது. ஆனால், பொம்மைச் சிம்மம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா..."

காலியான ஒரு ஆசனத்தில் உட்காரும் பொருட்டு அந்தச் சிங்கம் பாய்ந்து நவாபுக்கு அருகே நின்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான்.

ஒரு பெண்சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. சிறுநீர் விட்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றிவந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. துதிபாடுகிற கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிற்று. உலகத்தில் எந்த துதிபாடியும் ஆபத்து காலத்தில் அருகே இருப்பதில்லை.

குமரகுருபரர், "இங்கே வா.." என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் பொத்தென்று உட்கார்ந்தான்.

குமரகுருபரர் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. முகச் சுருக்கங்கள் சிரித்தன. இதழ்க் கடைகள் சிரித்தன. காது வளையங்கள் சிரித்தன. அவர் மாலையாய் அணிந்திருந்த உருத்திராட்சைகள் சிரித்தன.

நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும், என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்துவிட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன்..." மீண்டும் சலாம் செய்தான்.

"தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?"

"காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும்."

"நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னேனே."

"நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்துகொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே..."

"ஆமாம். பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி... எப்படி இது சாத்தியமாயிற்று?"

"இறையருள்."

"எந்த இறைவன்... உங்கள் இறைவனா..."

"உன்னுடையது, என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறை எல்லோருக்கும் பொது. எல்லா மொழியும் இறைவன் காலடியில் இருக்கும் தூசு."

"ஒரே இரவில் இறைவன் பயிற்சி கொடுத்தானா?"

"ஒரு நொடியில் கொடுத்தான்."

"நீங்கள் மண்டியிட்டு வேண்டினீர்களா..."

'சகலகலாவல்லி மாலை' என்றொரு கவிதை நூல் இயற்றினேன். அந்தக் கவிதை நூலில் இறைவனை வேண்டினேன்.

"மறுபடியும் உங்களுக்கு சலாம். காட்டுச் சிங்கங்களையே காலடியில் போட்டு வைத்திருக்கும் உங்களுக்கு இந்த நவாப் எம்மாத்திரம்? காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம்.

கோவிலுக்குள்ளே ஒரு பள்ளிவாசல் கட்டியிருக்கிறோம், அந்தப் பள்ளிவாசல் எங்களுடையதாகவே இருக்க அனுமதி கேட்கிறோம்..." நவாப் பணிவாகப் பேசினார்.

(எழுத்துச்சித்தர் பாலகுமாரன்)

🙏 கு பண்பரசு
------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.5.22

நானும் நீங்களும் கடவுள் நம்பிக்கையும்!!!!


நானும் நீங்களும் கடவுள் நம்பிக்கையும்!!!!

ஒருவன் பாலத்தில் தொங்கி கொண்டு கடவுளே காப்பாற்று என்கிறான். 

கடவுளோ 

"கீழே குதி. நான் காக்கிறேன் என்கிறார்". 

அவனுக்கோ நம்பிக்கை இல்லை. 

"வேறு யாரவது இருக்கீங்களா " என்று கேட்கிறான்.

மேலும் கடவுள்,

கிருஷ்ணா : 

என்னிடம் சரணடை. 

நான் உனக்கு தேவையானதை செய்கிறேன்

நாம் : 

நீ முதலில் செய். 

அப்புறம் சரணடைகிறோம்.

இதற்கு காரணம் நாம் அவனை நம்பவில்லை என்று அர்த்தம். 

கீழே உள்ள கதையை படியுங்கள். 

அவன் மீது நம்பிக்கை வரும்

பிரசாத் மும்பையில் ஒரு பெரிய டாக்டர். 

ஒரு நாள் கொல்கத்தாவில் ஒரு conference மீட்டிங் என்று அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. 

flight ல கிளம்பினார். 

ஆனால் திடிரென்று flight கோளாறானது. 

அதனால் அவருக்கு கொல்கத்தாவில் இறங்க delay ஆனது. 

உடனடியாக ஒரு டாக்ஸி பிடித்தார். 

ஆனால் 

அந்த நேரத்தில் புயல் காற்று வீசியது. 

எனவே டாக்ஸி delay ஆனது. 

மேலும் இரண்டு மணி நேரம் கழித்து டாக்ஸி கோளாறானது. 

டாக்ஸி டிரைவர் இதற்கு மேல் வண்டி ஓடாது என்று கூறிவிட்டார். 

வேறு வழியின்று டாக்ஸி விட்டு இறங்கினார். 

சுற்றும் முற்றும் பார்த்தார். 

ஒரு குடிசை நோக்கி சென்றார். 

குடிசையின் கதவை தட்டினார். 

அந்த குடிசையில் இருந்து ஒரு அம்மா வந்தார். 

பிரசாத் அவரிடம் டெலிபோன் இருக்கிறதா என்று கேட்டார். 

அதற்கு அந்த அம்மா தான் ஏழை என்றும் டெலிபோன் வைக்கும் அளவுக்கு வசதி இல்லை என்றும் கூறினார். 

ஆனால் 

அந்தம்மா அவரை உள்ளே அழைத்து டீ பிஸ்கட் கொடுத்தார். 

சற்று நேரம் கழித்து அவரை பஜனைக்கு அழைத்தார். 

அதற்கு பிரசாத் தான் கடவுளை நம்புவது இல்லை என்று கூறினார். 

உடனே அந்த அம்மா பசு பால் கொடுக்கிறது. 

மேகம் மழை பொழிகிறது. 

இதற்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று விளக்கினார். 

உடனே பிரசாத் இதெல்லாம் அறிவியல் என்று பதிலளித்தார். 

அந்த நேரத்தில் ஒரு சிறுவன் உள்ளே வந்தான். 

வித்தியாசமாக நடந்து கொண்டான். 

பிரசாத் அவனை பற்றி கேட்டார். 

அதற்கு அந்தம்மா அவனுக்கு மூளை கோளாறு என்றாள். 

பிரசாத் அவனை டாக்டரிடம் காட்டவில்லையா என்று கேட்டார். 

அந்தம்மா தான் அவனை காட்டியதாகவும் அதற்கு டாக்டர் இவனை ஒருவரால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்றார். 

அவர் மும்பையில் இருக்கிறார் என்றும் அவர் பெயர் டாக்டர் பிரசாத் என்றும் கூறினார். 

பிரசாத்தின் கண்கள் விரிந்தன. 

அந்தம்மா மேலும் தங்களிடம் மும்பைக்கு செல்ல போதிய பணம் இல்லை என்றும் அதனால் அவரின் கணவர் இந்த பிரச்னையை கோவிந்தனின் திருவடியில் விட்டு விடுவோம் என்றும் இதற்கான தீர்வு அவனது கருணையால் கதவை தட்டும் என்றும் கூறினார். 

பிரசாத்துக்கு தன்னையே தன்னால் நம்ப முடியவில்லை. 

தான் இங்கே வர வேண்டும் என்றுதான் flight மற்றும் டாக்ஸி delay ஆனதா என்று சிந்திக்க ஆரம்பித்தார். 

முதல் முறையாக கடவுள் நம்பிக்கை வந்தது டாக்டர் பிரசாத்துக்கு.
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.4.22

விநாயகர் கோவில்கள்!



விநாயகர் கோவில்கள்!

தமிழ்நாட்டில் முதன் முதலாக தங்கத் தேரில் பவனி வந்த பிள்ளையார் என்ற பெருமையைப் பெற்றவர் கோவை ஈச்சனாரிப் பிள்ளையார். 

இங்குள்ள தேர், ஏழரை கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது.

எந்த ஒரு காரியமும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் தடையின்றி முடிவடைந்து விடுவதால் 'முதற்கடவுள்" ஆகிறார்.

சிலருக்கு தொழிலில் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம். சிலருக்கு பதவி இழப்பு ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு சொத்து இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இவர்கள், நடனமாடும் தோற்றத்தில் இருக்கும் நர்த்தன விநாயகரை அணுகி, அவருக்கு அபிஷேகம் செய்து, இனிப்பு நைவேத்யம் செய்து, வழிபட்டு வந்தால், இழந்தவைகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

விநாயகருக்கு விருப்பமான நைவேத்யம் மோதகம், அப்பம், பழம், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழை, நாகப்பழம், விளாம்பழம், தேங்காய், இளநீர், அவரை, துவரை, சுண்டல், கொய்யா, புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், தேன், கல்கண்டு, சர்க்கரை, தினை மாவு, அதிரசம் முதலியன.

பன்னிரெண்டு விநாயகர் வக்ரதுண்டர், சிந்தாமணி, கணபதி, கஜானை கணபதி, விக்ன கணபதி, மதுரேச கணபதி, துண்டு கணபதி, வல்லப கணபதி, தூப கணபதி, கணேசர், மதோத்கட கணபதி, ஹேரம்ப கணபதி, விநாயகர்.

மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால், நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால், லாபம் கிட்டும்.  

உப்பால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிவர். கல்லால் அமைந்தவிநாயகரைவழிபட, சகல பாக்கியங்களும் பெறலாம்.

இந்து மக்களின் வழிபாட்டில், சிவன் கோயிலில் விநாயகரை வணங்கி, கோயிலின் உள்ளே செல்வது வழக்கம். 

காரணம், விநாயகர் சிந்தனை கூர்மையைக் கொடுத்து இறைவன் பால் பக்தியை அதிகரிக்கச் செய்பவர். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட விநாயகருக்கு பல திருப்பெயர்கள் உண்டு.

விநாயகரை முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் ஆகியோர் தனிச் சன்னிதி கொண்டு அதற்கு ஏற்ப பலன்களை வாரி வழங்கி வருகின்றனர்.

ஸ்ரீ செவ்வந்தி விநாயகர் மிகவும் தொன்மை வாய்ந்த அனுக்கிரக மூர்த்தி. செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர் மாலை இவருக்கு அணிவித்து வழிபட்டால் கணவன்மார்களுடைய கடுமையான நோய்கள் விலகும். சுமங்கலிப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் செவ்வந்தி விநாயகர்
====================================================
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.3.22

ஆன்மிகம்: கண்ணனுக்கும் கிருஷ்ணனுக்கும் வித்தியாசம் என்ன?



ஆன்மிகம்: கண்ணனுக்கும் கிருஷ்ணனுக்கும் வித்தியாசம் என்ன?

*இரண்டிற்கும் வித்தியாசம்,*
*வயது மட்டுமே...*

35 , வருடங்களுக்கு முன்னாள் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்......

கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் என்று...,

அதற்கு ,
நான் சொன்ன பதில்...,.

இரண்டிற்கும்...
*வயதுதான் வித்தியாசம் என்றேன்.....*

கண்ணன் என்பது செல்ல பெயர். 
குழந்தை பருவம்.

கிருஷ்ணன் என்பது வளர்ந்த  பிள்ளை.  
இரண்டிற்கும் , வயதுதானே வித்தியாசம்

சின்ன உதாரணம்...

ஒருநாள், நான் ...

முகம் முழுக்க சோப்பு தேய்த்து , 
குளித்துக் கொண்டிருந்தேன். 

திடீர் என்று , பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை காணவில்லை.  கண்ணை திறக்க முடியாமல், 
இரண்டு கையாலும், 
என்னை சுற்றி , சுற்றி, 
சொம்பை, தேடினேன். 

அப்போது ,..எனது குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டது.  

எனக்கு புரிந்து விட்டது. 

 சொம்பை அவள் தான் வைத்திருக்கிறாள் என்று. 

 எனக்கு , கண் எரிகிறது 
என்று அவளுக்கு தெரியவில்லை. 

 நான் , சொம்பை தேடுவதில்,
 அவளுக்கு ஒரு ஆனந்தம். 

இதுதான்....
குழந்தையின் குறும்பு. என்பது.

தற்போது , எனது கண்ணில் , 
ஒரு தூசி  விழுந்தாலும்
அவள் கண்ணில் நீர் வடிகிறது.  

இரண்டிற்கும் , வித்தியாசம் வயது மட்டுமே....

மகாபாரதத்தில், கண்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது....

கோபிகளின் ஆடைகளை , 
மறைத்து வைத்து... 
அவர்கள் தேடுவதை கண்டு 
ஆனந்தப் பட்டான்.

அதே கண்ணன்
கிருஷ்ணனாக  மாறும் போது.... 

மேலாடை இன்றி ஒரு பெண் தவிக்கும்போது...
மேலாடையை அவளுக்கு கொடுத்து, 
அவள் மானத்தைக் காத்து நின்றான்..

இரண்டிற்கும் வித்தியாசம் ,
வயது மட்டுமே.....

கண்ணன்  சிறு பிள்ளையாக இருக்கும்போது....

நண்பர்களுடன் , பக்கத்து வீட்டில் வெண்ணெயை திருடி தின்றான். 
தாய் கேட்கும் போது...
நான் திருடவே இல்லை என , 
பொய்யும் சொன்னான்...

அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....

திருடுவது கூடாது....
பொய் சொல்வது கூடாது , 
என  கீதை உபதேசம் செய்தார்....

இரண்டுக்கும் வித்தியாசம் வயது மட்டுமே.

*அருமையான கருத்துக்கள் செரிந்த பதிவு.* 
-----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.3.22

கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்குள் அழைத்து வருவது ஏன்?


கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்குள் அழைத்து 
வருவது ஏன்?

க்ருஹம் என்றால் வீடு அல்லது வசிப்பிடம். கிரகம் என்றால் வானில் சுற்றும் கோள். க்ருஹப்ரவேசம் என்பதே சரியான வார்த்தை. புதுமனைப் புகுவிழாவின்போது வாசலில் கன்றுடன் கூடிய பசுமாட்டிற்கு பூஜை செய்து அதனை வீட்டிற்குள் அழைத்து வருவதை சம்பிரதாயமாகக் கொண்டிருக்கிறோம். பசுமாட்டிற்குள் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. கோமாதா என்றழைக்கப்படும் பசு மகாலட்சுமியின் அம்சம். அக்காலத்தில் ஒருவருடைய சொத்து மதிப்பீடு செய்யும்போது எத்தனை பசுமாடுகள் வைத்திருக்கிறார் என்பதை கணக்கில் கொள்வார்கள். போரில் வெற்றி பெறும் அரசர்கள் கூட அண்டை நாட்டில் இருந்து பசுமாடுகளை தனது நாட்டிற்கு வெற்றிப் பரிசாகக் கொண்டுவருவர். 

ஆக பசுமாடு என்பது செல்வத்தைத் தர வல்லது என்பது வரலாற்று உண்மை. அது மட்டுமல்லாது பசு என்பது சுத்தத்தின் அடையாளம். குறிப்பாக, கோமயம் என்றழைக்கப்படும் பசுவின் சிறுநீர் கிருமிகளை அழிக்கும் வல்லமை படைத்தது என்பதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது.  தீயசக்திகளை விரட்டும் வலிமை பசுமாட்டிற்கு உண்டு. அதனால்தான் புதுமனைப் புகுவிழாவின்போது முதலில் பசுமாட்டினை வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறோம். 
--------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.3.22

தேங்காயின் சிறப்பு என்ன?



தேங்காயின் சிறப்பு என்ன?

தேங்காய் என்பது முக்கண் முதல்வன் எனக் கருதப்படும் சிவனாகவே கருதப்படுகிறது.எல்லா பூஜைகளிலும் இது முதன்மைப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.இந்த தேங்காயை தெங்கம்பழம் எனவே பழந்தமிழர் அழைக்கிறார்கள்.''இதையே பழமொழி நானூறில் நாய் பெற்ற தெங்கம் பழம்'' என்ற பழமொழியோடு அழைக்கிறார்கள்.

இந்தத் தேங்காய் வளர்ந்து பலன் கொடுக்க ஐந்தாண்டுகள் ஆகிறது.அது போல குழந்தையும் பள்ளிக்கு அனுப்ப ஐந்தாண்டுகள் ஆகிறது.தென்னையையும் பிள்ளை என்று அழைக்கிறார்கள்.பிள்ளையும் தென்னையும் ஒன்று என்பதற்காகவே தென்னம் பிள்ளை என்றழைக்கிறார்கள்!

தேங்காயையும்,வாழைப் பழமும்தான் நாம் கடவுளுக்கு பிரசாதமாய்ப் படைக்கிறார்கள்.இந்தத் தேங்காயும் மிகவும் உயர்வான இடத்தில் காய்க்கிறது.தரைக்குக் கீழ் விளையும் உணவுப் பொருட்கள் அகந்த மூலம் எனப்படும். தரைக்கு மேல் விளையும் உணவுப் பொருட்கள் கந்த மூலம் எனப்படும்.

தரைக்குக் கீழ் விளையும் பொருட்கள் பன்றிக்கானது.பன்றியே அகங்கார வடிவே.அதையே லிங்கோற்பவர் வடிவத்தில் உள்ள சிவனின் ஒளியுருவத்தின் கீழ் அடியைத் தொட்டதினால் சிவனே அவரது அகங்காரம் நீக்கி பன்றியுருவான விஷ்ணுவைத் தூக்கி எடுக்கிறார்.

தரைக்குக் கீழ் விளையும் பொருட்கள் அகங்காரத்தை உண்டாக்கும் என்பதால் அகந்த மூலம் என்றும்,தரைக்கு மேல் விளையும் பொருட்களில் உயரமான தென்னையில் விளையும் தேங்காய்,மற்றும் வாழையின் பழம் இரண்டும் கந்த மூலத்தில் சிறந்தது.

தேள் கொட்டிவிட்டாலோ, வேறு விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டாலோ ஒரு அரை மூடி தேங்காயைத் தின்றுவிட்டால் விஷம் முறிந்துவிடும். இதை இன்றும் பல கிராமங்களில் உயிரைக் காப்பாற்ற, வழக்கமாக வைத்துள்ளார்கள். 
அவ்வளவு விஷ முறிவு சக்தியுள்ளது தேங்காய்.இப்படிப்பட்ட தேங்காய் இயற்கையான வடிவத்திலேயே சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நஞ்சுக்கள் நீங்கி உடல் பல்லாண்டு காலம் நோயின்றி வாழும்.

---------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.3.22

இவரைத் தெரியுமா உங்களுக்கு?


இவரைத் தெரியுமா உங்களுக்கு?

கி.பி. 1480-ல் அவர் ஒன்பது கோடிகளுக்கு அதிபதி...!?

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஒன்பது கோடி சொத்துள்ள மிகப் பெரிய பணக்காரரின் மகன். 

கடைசியில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 1560-ல் அவர் ஒரு ஓட்டாண்டி.

நம்ப முடிகிறதா? கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக அவர் குலம் வாழ்ந்திருக்கும். 

ஆனால் இன்று பணமில்லை. மங்காத புகழ் இருக்கிறது. இதெல்லாம் இறைவன் திரு விளையாடல்...! 

செல்வம் செல்வம் என்று செருக்குடன் வாழ்ந்த அவரைவிட்டு லட்சுமியானவள் "செல்வோம்... செல்வோம்...' என்று போய்விட்டாள். 

ஆனால் அத்தனை பணமும் போனபின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது. 

கையில் ஒரு காசுகூட இல்லாத நிலையில்தான் அவர் மகாலட்சுமியை அழைத்தார். 

அதுவும் எப்படி? அற்புதமான ஸ்ரீராகத்தில் அழைத்தார். சிலர் அப்பாடலை மத்யமாவதி ராகத்திலும் பாடுவர்!

அந்தப் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்; நெஞ்சில் ஆனந்தம் தாண்டவமாடும்; மெய் சிலிர்க்கும். 

"பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌ
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா....'

மகாலட்சுமியை அவர் அழைக்கும் அழகே அழகு. 

"சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே' என்று கெஞ்சுகிறார் அந்த மகான். 

அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக். 

அவர் வசித்த ஊரின் நாட்டாண்மையாகத் திகழ்ந்தார் அவர். மக்கள் அவரை செல்வத்தின் பொருட்டு நவகோடி நாராயணசெட்டி என்றும் அழைத்தார்கள்.

அவ்வளவு பெரிய தனவந்தரான அவர் ஒரு கருமி. எச்சில் கையால்கூட காக்கையை விரட்ட மாட்டார் என்பது அவருடைய விஷயத்தில் நிஜம். 

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு பதினெட்டு வயதாகும்போது திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சரஸ்வதி. 

அவள் இவருக்கு நேர் எதிரானவள். தான- தர்மம் என்றால் கொள்ளைப் பிரியம். கடவுள் பக்தி மிகுந்தவள்.

அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.

 பெரிய கோவில். மக்கள் "பாண்டுரங்கா... பாண்டுரங்கா' என்று பக்திப் பரவசத்தில் நாள்தோறும், வீதி தோறும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள். 

ஆனால் ஸ்ரீனிவாச நாயக் கண்டு கொள்ளவே மாட்டார். 

பார்த்தான் பாண்டுரங்கன். ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, ஸ்ரீனிவாச நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன். 

""ஐயா... தர்மப் பிரபுவே...''

ஸ்ரீனிவாச நாயக் அந்தப் பிராமணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?

""ஐயா... தர்மப் பிரபுவே... சுவாமி...''

""டேய்! யாருடா நீ?'' அதட்டினார் ஸ்ரீனிவாசன். 

""ஐயா... நான் ஓர் ஏழைப் பிராமணன். இவன் என்னுடைய ஒரே மகன். ஏழு வயதாகிறது. உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்தால் இவனுக்கு பூணூல் போடலாம்.... பிரபு... ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள்.... சாமி...'' 

""போ... போ... வேறு எங்காவது போய் பிச்சை எடு. என்னிடம் பணமே இல்லை...'' விரட்டினார் ஸ்ரீனிவாச நாயக். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நாயக்கின் மனம் இளகவில்லை. ஆனால் பகவான் அவரை விடுவதாயில்லை.

தினந்தோறும் வந்து, நமக்கு படியளப் பவனே அவரிடம் பிச்சை கேட்டான். நாயக்கும் அலுக்காமல் விரட்டினார். 

ஒருநாள், ""உங்களிடம் யாசகம் வாங்காமல் போகமாட்டேன் பிரபு...'' என்று சொல்லி, இறைவன் நாயக்கின் கடை வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.

"இது ஏதடா வம்பாப் போச்சே...' என்று அலுத்துக்கொண்ட ஸ்ரீனிவாச நாயக், கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக் காசை எடுத்து அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். ""இந்தா, இதை எடுத்துப் போ. இனிமேல் கடைப்பக்கம் வராதே...'' 

அந்தக் காசைப் பார்த்துவிட்டு, ""பிரபு... இது தேய்ந்து போயிருக்கிறதே... எதற்கும் பிரயோஜனமில்லை. வேறு நல்ல காசு கொடுங்களேன்...'' என்றான் இறைவன். 

ஸ்ரீனிவாச நாயக் யோசித்தார்.

""நல்ல காசா? ஏதாவது பொருள் கொண்டு வந்து என் கடையில் அடமானம் வை... நல்ல காசு தருகிறேன்'' என்றார்.

அந்தணன் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு நேராக ஸ்ரீனிவாச நாயக்கின் வீட்டிற்குச் சென்றான். 

அங்கே- வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு ஸ்ரீனிவாச நாயக்கின் மனைவி சரஸ்வதி ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள்.

""பவதி... பிக்ஷாம் தேஹி...''

ஓடோடிச் சென்று வாசலில் பார்த்தாள். பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டாள்.

""என்ன வேண்டும் சுவாமி?''

""அம்மா... நான் ஓர் ஏழை. வயதாகி விட்டது. இவன் என் பையன். இவனுக்கு பூணூல் போட வேண்டும். கையில் பணமில்லை. 

ஒரு கஞ்சனைக் கேட்டேன். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் சல்லிக்காசுகூட தரமாட்டேன் என்று என்னை அடிக்காத குறையாகத் துரத்திவிட்டான். அம்மா... 

உன்னைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய். ஏதாவது உபகாரம் பண்ணம்மா...''

"பணம் நம்மிடம் கிடையாது. அப்படியே இருந்து, தர்மம் செய்தேன் என்று தெரிந்தால் புருஷன் அடித்தே கொன்றுவிடுவான். இவருக்கு நாம் எப்படி உதவுவது?' என்று யோசித்த சரஸ்வதி முடிவில் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினாள்.

""அட... நீ என்னம்மா... புருஷன் உனக்குக் கொடுத்ததை தர்மம் செய்தால்தானே ஆபத்து? திருமணத்தின் போது உன் பெற்றோர் போட்ட நகைகள் உன்னுடையதுதானே? 

அதைக் கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?'' என்று அவளை உசுப்பேற்றினான் பிராமணன்.

"அட... உண்மைதானே? நம் வீட்டில் ஏராளமான நகைகளைப் போட்டார்களே எனக்கு? அவை அத்தனையும் என்னுடையவை தானே... அதில் ஒன்றை தர்மம் செய்தால் என்ன?'

சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்து விட்டாள் சரஸ்வதி. 

அவளை மனதார வாழ்த்தி விட்டு, அந்தச் சிறுவனுடன் நேரே ஸ்ரீனிவாச நாயக்கின் அடகுக் கடைக்கே வந்தான் அந்த பிராமணன்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கோ, மறுபடியும் தொந்தரவு ஆரம்பித்து விட்டதோ என்று தோன்றியது.

""இந்தாரும். இந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு ஏதாவது பணம் கொடும்'' என்று மிரட்டினான் பிராமணன்.

கையில் மூக்குத்தியை வாங்கி பரீட்சித்துப் பார்த்து, "இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே..' என்று யோசித்தார் நாயக்.

சிறிது நேரம் கழித்து, ""ஓய் பிராமணரே... இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் காசு இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்...'' என்றார்.

அதை ஒப்புக்கொண்ட அந்தணன் போய்விட்டான்.

உடனே ஸ்ரீனிவாச நாயக் தன் கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார்.

மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தியைக் காணவில்லை.

""சரஸ்வதி... மூக்குத்தி எங்கே? இன்று வெள்ளிக்கிழமை. முகம் மூளியாய் இருக்கலாமா? போய் மூக்குத்தி போட்டுக் கொண்டுவா...''

சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். "ஐயய்யோ... இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே?' 

கடைசியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். "இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடுவதைவிட சாவதே மேல்...' என்ற முடிவோடு, ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள். 

""தாயே துளசி... நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா'' என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில்-

விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும், வியப்பும் அணைத்துக் கொண்டது. "என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே' என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்... பிறகு, கணவனிடம் ஓடோடிச் சென்று, ""இந்தாருங்கள் மூக்குத்தி...'' என்று கொடுத்தாள். 

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர் போல மீண்டும் தனது அடகுக் கடைக்குச் சென்றார். கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார். 

அங்கே அது இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து, "எனக்கு பணம் வேண்டாம்... என்னுடைய நகையைக் கொடுங் கள்...' என்று கேட்டால் என்ன செய்வது? 

மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது அவனுக்கு. கூடவே பயமும் வந்தது.

மறுநாள் காலை! 

கடை திறந்த சில வினாடிகளிலேயே அந்தக் கிழவன் சிறுவனோடு வந்து விட்டான்.

""ஐயா... பிரபுவே.. நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்றும் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்...'' என்றான்.

ஸ்ரீனிவாச நாயக்கின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சி னார்.

 ""ஐயா... மன்னித்து விடுங்கள். வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது. வந்தவுடன் தருகிறேன். முடிந்தால் மாலை வாருங்களேன். கண்டிப்பாக பணம் தருகிறேன்.''

""சரி... சரி... சாயங்காலமும் என்னை ஏமாற்றி விடாதே. நான் வருவேன்...''

கிழவன் போனபின்பு, தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி, அந்தக் கிழவன் எங்கே போகிறான் என்று கண்காணிக்கச் சொன்னார். 

அந்தக் கிழவனைப் பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான்.

""என்னடா... ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? கிழவன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா?''

""சுவாமி... என்னை மன்னித்துவிடுங்கள்... கிழவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்.... 

நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்... பின்னர் மறைந்து விட்டார்...''

ஸ்ரீனிவாச நாயக் திடுக்கிட்டார். என்ன இது? கடைக்கு வந்த முதியவர் யார்? என்ன அதிசயம் இது.! 

கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்தி விட்டுப் போனதையும் சொன்னாள்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னை பரீட்சித்து விட்டதை உணர்ந்தார்...! 

அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது. 

"இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்?

 போ... உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள். 

இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன்.

 பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்....' 

 புரந்தரதாசர்  ஸ்ரீனிவாச நாயக் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார். 

ஒரு நொடியில் ஒன்பது கோடி ரூபாய் போயிற்று. ஓட்டாண்டியானார். 

தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார். 

அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப் பின் ரகசியத்தைச் சொல்லி அவருக்கு குரு உபதேசம் செய்தார். 

கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர்.

சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன்மீது பாடினார்.

நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லி க்கொடுத்தார். 

ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற "ஸ, ரி, க, ம, ப, த, நீ..' என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற் குத் தந்த பிதாமகர் புரந்தரதாசரே. 

அவருடைய பதங்கள் இன்றும் நம் நாட்டுக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன. 

அப்படிப்பட்ட மகான் புரந்தர தாசர் கி.பி. 1584-ல் இறைவனோடு இரண்டறக் கலந்தார்.
-----------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.3.22

Devotional: எது வைகுண்டம்?


எது வைகுண்டம்?

பூலோகம் தான் #வைகுண்டம்.

ஸ்ரீராமர் பூமியில் தோன்றிய காரணங்கள் நிறைவேறி விட்டன. ராமருடன் வந்த லட்சுமணன் தன் இருப்பிடம் சேர்ந்துவிட்டான்.

 சீதா தேவியாக பிறவி எடுத்த லட்சுமி தேவியோ , ராமருக்கு முன்பாகவே வைகுண்டம் சென்று காத்திருக்கிறாள்.

 ஆனால் ஸ்ரீ ராமரால்  காலதேவன் கேட்டுக் கொண்டதன் படி அவ்வளவு சுலபமாக பூவுலகை விட்டு செல்ல முடியவில்லை. ராஜ்யத்தை தன் பிள்ளைகளுக்கும் மற்ற சகோதரர்களின் வாரிசுகளுக்கும் பிரித்து கொடுத்தாகிவிட்டது. பரதனும் சத்ருக்கனனும் ஸ்ரீராமருடன் புறப்பட தயாரானார்கள்.

 ஆனாலும் ஸ்ரீ ராமரால் அவர் விருப்பப்படி தன் வாழ்வை துறக்க முடியவில்லை. என்ன காரணம்???

 சாட்சாத் அந்த அனுமன் தான் முக்கிய காரணம். அனுமன் இரவும் பகலும் ராமருடைய அருகாமையிலேயே இருந்து அவர் பணிகளை செய்கிறான்; அவரை விட்டு ஒருபோதும் செல்ல மாட்டான்.

 பகவான் ஸ்ரீ ராமர் இறுதியாக அனுமனுக்கு நிரந்தர பிரிவின் அவசியத்தை விளக்க எண்ணினார்.

 ஒரு நாள் ராமர் அனுமன் பேசிக்கொண்டிருந்தார். அனுமன் அறியாதவாறு தன் விரலில் சூட்டியிருந்த மோதிரத்தை ஒரு பள்ளத்தில் விழ செய்தார் ராமர். அந்த மோதிரம் பள்ளத்தின் உள்ளே ஓடியது.

 உடனே இராமன் அனுமனை நோக்கி. அனுமனே! அந்த மோதிரம் பள்ளத்தில் விழுந்து விட்டது. அந்த மோதிரத்தை எடுத்து வா என்று கூறினார்.

 அனுமன் தன் உடலை மிகச்சிறிய பூச்சி வடிவாக்கிக் கொண்டு மோதிரம் விழுந்த பள்ளத்தில் நுழைந்தார்.

 ஆனாலும் மோதிரமோ கழுவிக்கொண்டு பாதாளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அனுமனும் விடாமல் மோதிரத்தை பின்தொடர்ந்தார்.

 இறுதியில் அந்த மோதிரம் பாதாள லோகத்தின் வாயிலை அடைந்தது. பாதாள லோகத்தில் கதவு திறந்துகொள்ள மோதிரம் உள்ளே நழுவி விட்டது. பாதாள லோகத்தில் கதவும் மூடிக்கொண்டது.

 மோதிரத்தை பின்தொடர்ந்த அனுமன் பாதாள லோகத்தில் வாசலில் நின்றான். அப்போது அங்கே பாதாள லோகத்தின் காவலரான காலதேவன் அனுமன் முன் வந்து என்ன தேடுகிறாய்? எனக் கேட்டான்.

 அனுமனும் பகவான் ஸ்ரீராமரின் மோதிரம் உள்ளே சென்று விட்டது அதை எடுத்துச் செல்ல வந்தேன் என்றான்.

அப்படியா என்று புன்னகைத்தவாறு கேட்ட காலதேவன் பாதாள அறையின் கதவை திறந்து விட்டான். உள்ளே சென்று உன் மோதிரத்தை #எடுத்துச்_செல் என்று அனுமனிடம் கூறினான்.

 அனுமனும் பாதாள அறைக்குள் நுழைந்தான் ஆனால் அவன் தேடி வந்த மோதிரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

 ஆம் அந்த அறையில் ஆயிரக்கணக்கான மோதிரங்கள் குவிந்து இருந்தன. அனைத்து மோதிரமும் ஒன்று போல் இருக்க அனுமன் குழம்பினான்.

 காலதேவன் கூறினான். அனுமனே இவை அனைத்தும் காலச் சுழற்சியின் அடையாளங்கள். யுகங்கள் மீண்டும் மீண்டும் பிறக்கும்.

 அப்போது பிரம்மா விஷ்ணு லட்சுமி முதலான தெய்வங்கள் மீண்டும் மீண்டும் வரிசையாக அவதாரம் எடுப்பார்கள்.

 அவர்கள் தாங்கள் எடுத்த பிறவியின் செயலை நிறைவேற்றுவார்கள் பின் மறைவார்கள் அவர்களை நாம் தடுக்கவோ அவர்களுடன் செல்லவோ முடியாது.

 அனுமனே நீ ராமருடன் இருக்கிறார் ராமர் தன் மூல உரு எடுக்கும் நேரம் வந்துவிட்டது. அதை அணிந்து கொள்ள வேண்டும் என்று ராமர் தன் மோதிரத்தை தவற விட்டார். #காலசுழற்சியின் விளக்கத்தை அறிந்து நீ உன் #இருப்பிடம் #செல்வாயாக என்று காலதேவன் அறிவுறுத்தினான்.

 #பிறப்பு_இறப்பின்_மகத்துவம் அறிந்த அனுமனும் மனம் தெளிந்த நிலையில் மீண்டும் ராமரை அடைந்தான்.

 இப்போது பகவான் ஸ்ரீ ராமர் அனுமனிடம் விடை பெற எண்ணினார். ஆனாலும் தன் மூத்த மகன் போல் விளங்கிய அனுமனை எளிதில் உதற முடியவில்லை.

 ஸ்ரீராமன் அனுமனை அழைத்தார். அனுமனை உனக்கு ஒரு உரிமை தருகிறேன். உனக்கு விருப்பமானால் நான் இப்பூமியிலிருந்து செல்லும்போது நீ #என்னுடன்_வரலாம். என்று கண்ணீர் மல்க கூறி அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார்.

 அனுமன் உடல் சிலிர்த்தான். உள்ளம் நெகிழ்ந்தான், சற்று ஒரு கணம் #யோசித்தான்.

 பிரபு தாங்கள் என்னை உங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி கொடுத்தமைக்கு நன்றி. ஆனால் ஒரு விளக்கம் மட்டும் கூறுங்கள்.

 ஸ்ரீவைகுண்டத்தில் நீங்கள் #ராமனாக - என் பிரபுவாக #இருப்பீர்களா ? இல்லை அவதார புருஷன் #விஷ்ணுவாக இருப்பீர்களா ? என அனுமன் #கேட்டான்.

 ஒரு நிமிடம் திகைத்தார் ராமர்.

 என்ன சந்தேகம் என் மகனே! வைகுண்டத்தில் நாம் பகவான் #விஷ்ணுவாகவும், சீதை #லட்சுமி தேவியாகவும், #லட்சுமணன் ஆதிசேஷனாகவும், #பரதன்__சத்ருக்கனன், சங்கு சக்கரம் ஆகவும் #அவதாரத்தில் இருப்போம் என்றார் பகவான் ராமர்.

 அனுமனோ தயக்கமின்றி பிரபு, 

#எனக்கு_ஸ்ரீராமன்போதும் 
உங்களை ராமனாகவும் அன்னையை சீதாபிராட்டியாகவும் , மற்றவர்களை இப்புவியில் எடுத்த #அவதாரங்களாவே #வணங்க விரும்புகிறேன்.

 நான் பூமியில் இருந்து உங்கள் நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பேன் 
#உங்கள்_நாமத்தை 
#பிறர்_சொல்வதை #கேட்டபடியே_இருப்பேன். எனக்கு அந்த புண்ணிய நிலையை என்றென்றும் நீங்கள் #அருளினால் #போதும் என்றான் அனுமன்.           
       💚 ஸ்ரீராமஜயம்💚
----------------------------------------------
படித்தேன் பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.2.22

Devotional: ஆன்மீகம்: சிவராத்திரி - ஒரு பார்வை


Devotional: ஆன்மீகம்: சிவராத்திரி - ஒரு பார்வை

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.

சிவராத்திரி விரத வகைகள்
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

நித்திய சிவராத்திரி
மாத சிவராத்திரி
பட்ச சிவராத்திரி
யோக சிவராத்திரி
மகா சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்

இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்றும் பிராத்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றார்.

விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள்
திருக்கேதீச்சரப் பதிகங்கள்
திருவண்ணாமலைப் பதிகங்கள்
உசாத்துணைகள்
விரத விதிகள் - திருக்கேதீச்சரத் திருக்கோயில் மகாசிவராத்திரி மட பரிபாலன சபை, மன்னார். இலங்கை

பலன் தரும் பரிகாரங்கள்

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும். 'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

நாளை சிவராத்திரி
--------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
========================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.2.22

அவருக்குத் தெரியும் யாரை எங்கே வைக்க வேண்டும் என்று!!!!










அவருக்குத் தெரியும் யாரை எங்கே வைக்க வேண்டும் என்று!!!!

யாரை எப்படி எங்கு எப்பொழுது சேர்க்க வேண்டும் என்பது கடவுளுக்கு நன்கு தெரியும்.....

ஒரு கோவிலில் ஒரு அர்ச்சகர் இருந்தார்... அந்த கோவிலின் பின் பகுதியில் ஒரு பூனைக்குட்டி சில நாட்களாக சுற்றி வந்தது... அந்த அர்ச்சகர் அதற்கு பால் ஊற்றி பாதுகாத்து வந்தார்...ஒரு நாள் அந்த பூனை குட்டி மரத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டு கீழே இறங்க பயந்துகொண்டு இருந்தது...அர்ச்சகரும் பாலை கீழே வைத்து அழைத்து பார்த்தார்... ஆனால் அது கீழே இறங்க பயப்பட்டது...அர்ச்சகர் என்ன செய்யலாம்
என்று யோசித்தார்... 

 மரத்தின் மேல் ஏறும் அளவிற்கு மரகிளை வலிமையானதல்ல... எனவே ஒரு கயிற்றை கொ்க்கியுடன் வீசி மர கிளையை கயிற்றை பிடித்து இழுத்து வளைத்தால் பூனை குதித்து விடும் என்று யோசனை செய்த்து அது படி செய்தார்...கயிறை இழுக்க கிளை வளைந்து கீழ் நோக்கி வந்தது... ஆனால் கொக்கி வழுக்கிவிடவே கிளை வேகமாக தன்னிலைஅடைய பூனைக்குட்டி தூக்கி
எறியபட்டு கண்ணை விட்டு மறைந்தது...அர்ச்சகர் தன்னால் முடிந்த வரை பூனை குட்டியை தேடினார்... கிடைக்கவில்லை...மனம் வருந்தி இறைவனிடம் தான் செய்த தவறால் பூனைக்குட்டிக்கு ஆபத்து நேர்ந்ததற்கு மன்னிப்பு கேட்டார். அடுத்த நாள் அவர் கோவிலுக்கு வரும் ஒரு பெண்ணை மளிகைகடையில் கண்டு நலம் விசாரித்தார். அந்த பெண் கூடையில் பூனைக்கான பிஸ்கட் இருப்பதை பார்த்து வீட்டில் பூனை வளர்கிராயா என்று கேட்டார்... 

அந்த பெண் இல்லை சாமி என் மகள் இரண்டு நாட்களாக பூனை குட்டி வேண்டும் வளர்க்க என்று என்னிடம் கேட்டாள்... நான் மறுக்கவே அவள் அழுக ஆரம்பித்தாள்... நானும் அவளை சமாதானப்படுத்த கடவுளிடம் பூனை குட்டி கேள்... அவர் கொடுத்தால் நாம் வளர்த்தலாம் என்று சொன்னேன்... என் குழந்தை உடனே அங்கேயே கண்னை மூடி பூனைக்குட்டி வேண்டி பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.. என்ன ஆச்சரியம்... ஒரு பூனைகுட்டி ஆகாயத்தில் கால்களை விரித்த படி பறந்து வந்து குழந்தை காலடியில் விழுந்தது... பிறகு அதை எடுத்து பால் கொடுத்து வளர்க்கிறோம் என்று சொன்னாள்... அர்ச்சகர் கடவுளின் லீலையை மனதில் எண்ணியபடி கடவுளின் கருணையே கருணை என்று சொல்லி நகர்ந்தார்.......

நீதி : யாரை எப்படி எங்கு எப்பொழுது சேர்க்க வேண்டும் என்பது கடவுளுக்கு நன்கு தெரியும்...!

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.2.22

Devotional விநாயகப்பெருமான் ஆறுபடை வீடுகள்




Devotional விநாயகப்பெருமான் ஆறுபடை வீடுகள்

முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதுபோல, விநாயகப்பெருமானுக்கும் ஆறுபடை வீடுகள் அமைந்திருக்கின்றன. 

திருநாரையூர் கோவிலில் வீற்றிருக்கும் ‘பொல்லாப் பிள்ளையார்’, 
திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ‘ஆழத்து விநாயகர்’, 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் ‘சித்தி விநாயகர்’, 
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்குள் இருக்கும் ‘கள்ளவாரண பிள்ளையார்’, 
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள ‘அல்லல் தீர்த்த விநாயகர்’, 
காசி எனப்படும் வாரணாசியில் உள்ள ‘துண்டிராஜகணபதி’. 

இந்த 6 ஆலயங்களும்தான், விநாயகப்பெருமானுக்குரிய ஆறுபடை வீடுகளாகும்.

படித்தேன்’ பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.2.22

யாருக்கு புண்ணியம் வந்து சேரும்?



யாருக்கு புண்ணியம் வந்து சேரும்?
==============================

ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம்.

கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.

உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம்.

ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும்.

புண்ணியத்தை விளக்கும் கதை :-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்.

அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர்,

ஐயா... என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டார்.

சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன்.

அது கீழே விழுந்து விட்டது.

அதைத்தேடிக் கொண்டிருக்கிறேன்... என்றார்.

பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது;

நான் ஓரணா தருகிறேன்.

வாழைப்பழம் வாங்கி, பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்...என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். (அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு நாலு வாழைப்பழம்.)

அவரும், ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்து, பூஜையை முடித்தார்.

தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான்.

எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான்.

சபையில்,

ஒரு ரத்ன சிம்மாசனமும்,
ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது.

அந்த சமயம், இரண்டு தேவ விமானங்கள் வந்தன.

எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான்.

ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர்.

எமதர்மன், ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும், உட்கார வைத்தான்.

புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்... என்று சொல்லி, அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்.

அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே... என்று கேட்டான்.

அதற்கு எமதர்மன், இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர்.

அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன்.

மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர்.

ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர், அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர்.

அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்... என்றான் எமதர்மன்.

தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்... என்று சொல்லி, எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகமாம்.

அதனால் தான், எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், என் பணமும் அதில் சேரட்டும்... என்று, பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர்.

தெய்வத் திருப்பணிகளுக்குக் கொடுத்தால், புண்ணியம்.

கொடுத்து பாருங்கள், அந்த புண்ணியம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள்!
==============================================
படித்தேன், பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===============================================

 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.2.22

Devotional: தமிழ்நாட்டிலுள்ள புகழ் பெற்ற அம்மன் கோவில்கள்


Devotional: தமிழ்நாட்டிலுள்ள புகழ் பெற்ற அம்மன் கோவில்கள்

தமிழ்நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற 10 அம்மன் கோவில்கள்.

நமது நாட்டில் பெண் தெய்வங்கள் அதிகம் வணங்கப்படுகிறது. பெண் தெய்வங்களில் மிகவும் புகழ் பெற்ற தெய்வம் அம்மன்.
நம்முடைய தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த பல அம்மன் கோவில்கள் உள்ளன. அப்படி மிகவும் புகழ்பெற்ற 10 அம்மன் கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

*1.மீனாட்சி அம்மன் திருகோவில் மதுரை*

மதுரையின் மிக முக்கிய அடையாளம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவில் வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது. சுந்தரேஸ்வரர் என்ற பெயரிலுள்ள சிவபெருமானின் மனைவி மீனாட்சியின் பெயரிலேயே குறிப்பிடப்படுவது பெண் சக்தியை முன்னிறுத்தும் விதமாக அமைந்துள்ளது. 
இங்கு முதல் பூஜை மீனாட்சி அம்மனுக்கே.

*2.காஞ்சி காமாட்சி திருக்கோவில்*

காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும் இது. 
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடமாகும். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

*3.திருச்சி சமயபுரம் திருக்கோவில்*

சமயபுரம் மாரியம்மன் கோவில்
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருச்சி மாவட்டத்தில் கண்ணபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 
இங்கு நடைபெறும் பூச்சொரிதல் என்னும் நிகழ்வு மிகவும் பிரபலம். 
மாசி மாதத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். மேலும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரபலம். ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் செவ்வாய் அன்று சித்திரை தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதை பார்க்க 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள்

*4.தஞ்சை புன்னைநல்லூர் திருக்கோவில்*

புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்
புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலானது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 
இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக புற்று வடிவில் அருள்பாலிக்கிறார். 
இங்கு அம்மன் துர்க்கை, மாரியம்மன் அதாவது முத்துமாரி எனவும் அழைக்கப்படுகிறார்.

*5.பொள்ளாச்சி மாசாணி அம்மன் திருக்கோவில்*

மாசாணியம்மன் திருக்கோவில், பொள்ளாச்சி
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி , ஆனைமலையில் அமைந்துள்ளது. 
இங்கு தை மாதத்தில் 18 நாள்கள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள அம்பாள் மயானத்தில் சயனித்த நிலையில் காட்சி தருவதால் மயானசயனி என்றழைக்கப்பட்டாள்.

*6.ஈரோடு பண்ணாரி அம்மன் திருக்கோவில்*

பண்ணாரி மாரியம்மன் கோவில்
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 
இங்கு அம்மன் சுயம்புவாக அருள் பாலிப்பதால் விபூதி கிடையாது. 
புற்று மண்தான் பிரசாதமாக தரப்படுகிறது. இங்கு 20 நாள் கொண்டாடப்படும் பங்குனி குண்டம் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.☘

*7.மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில்*

பகவதி அம்மன் கோவில் மண்டைக்காடு
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 
பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கோவில் இது . 
15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டி கொண்டிருக்கும் புற்றுதான் பகவதி அம்மன். 
இங்கு நடைபெறும் மாசித்திருவிழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள்.

*8.ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில், கொல்லங்கோடு*

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடுஇ என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் தூக்க நேர்ச்சை மிகவும் பிரபலம். தூக்க நேர்ச்சையில் 45 அடி உயர தூக்க வில்லில் குழந்தையை சுமந்தபடி கோயிலை வளம் வருவார். இங்கு அம்மனுக்கு இரண்டு கோவில்கள் இருப்பது சிறப்பு.

*9.ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மேல்மலையனூர்*

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூரில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள தேவியை புற்று தேவி என்றே கூறுகிறார்கள். கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு வருகின்றனர். அங்காள பரமேஸ்வரிக்கு பல இடங்களிலும் ஆலயங்கள் இருந்தாலும் மேல்மலையனூர் ஆலயமே மிக முக்கியமான ஆலயமாகும்.

*10.தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில்*

தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடல்கள் சங்கமிக்கும் குமரி கடற்கரையின் அருகில் அமைந்துள்ளது. 
இங்குள்ள அம்மன் கன்னி அம்மன். 

51 சக்தி பீடங்களில் இது தேவியின் முதுகு பகுதி விழுந்த சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது. இங்கு உள்நாட்டு பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு பக்தர்களும் தொடர்ந்து வருகை புரிகிறார்கள்.

சர்வ மங்கல தாயே அனைவரையும் காத்து ரட்சிக்க வேண்டும்

ஓம் சக்தி ஆதிபராசக்தி.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.2.22

Devotional ஆன்மிகம் தை அமாவாசையின் அற்புதம்!?




Devotional ஆன்மிகம் தை அமாவாசையின் அற்புதம்!? 

திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர்.  இவர் அன்னை அபிராமி மீது மிகுந்தபக்தி கொண்டு  எந்நேரமும் அன்னையைத் தியானித்துவந்தார்.

ஆனால், ஊராரில் பலர் இவர் ஒரு பித்தர் என்று நினைத்து ஏளனம் செய்வர்.  ஆனால் அதைப்பற்றி எவ்வித கோபமும் கொள்ளாமல் தம்முடைய கடமை அபிராமியை போற்றி வணக்குவதுதான் என்று கொள்கையை கொண்டிருந்தார்.  அவர் அன்னை அபிராமி மீதும் அமிர்தகடேஸ்வரர் மீதும் பாடல்களை இயற்றி சன்னதியில் பாடி வரலானார்.  

ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மகராஜா  பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக் கடையூர் ஆலயம் வந்தார். கோயிலில் இருந்த அனைவரும் சரபோஜி மன்னனுக்கு மரியாதை செலுத்தினர்.  அபிராமி சன்னிதியில் அமர்ந்து அன்னையின் வடிவழகில் ஆழ்ந்திருந்தார், அபிராமி பட்டர். 

மன்னர் அவரின் நிலையை அறிய அவரிடம், ‘இன்று என்ன திதி?’ என கேட்டார்...

உலக சிந்தனை சிறிதும் இல்லாத அபிராமி பட்டர், தன் மனதில் அபிராமியின் முழுமதி திருமுகம் தெரிய ‘பவுர்ணமி’ என்று பதிலளித்தார்... 

ஆனால், அன்றோ அமாவாசை! கோபமுற்ற மன்னன், இன்று பவுர்ணமி நிலவை காட்ட முடியுமா என்று கேட்க... 

அதற்கு பட்டர் முடியும் என்றார்...!?

இதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன், ‘இன்று இரவு நிலவு வானில் உதிக்காவிட்டால் உமக்கு சிரச்சேதம்தான்’ என்று கூறி சென்றுவிட்டார்.

சூரியன் மறைந்தது…

அமாவாசை ஆதலால் வானில் நிலவும் இல்லை!

உடனே அபிராமி பட்டர் கோவிலுக்குள் ஒரு குழி வெட்டி, அதில் தீ மூட்டினார். அதன்மேல் ஒரு விட்டத்தில் இருந்து 100 ஆரம் கொண்ட ஓர் உறியை கட்டி தொங்கவிட்டு அதன்மேல் ஏறி நின்று அபிராமி அன்னையை வேண்டி துதித்தார். 

‘இன்று நிலவு வானில் வராவிடில் உயிர் துறப்பேன்’ என்று சபதம் செய்தார்.

பின்பு,

‘‘உதிக்கின்ற செங்கதிர்’’ எனத்தொடங்கும் ‘‘அபிராமி அந்தாதி’’ பாடத்தொடங்கினார்...

ஒவ்வொரு பாடல் முடியும் போதும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்து கொண்டே வந்தார். அப்போது 79–வது பாடலாக ‘‘விழிக்கே அருளுண்டு’’ எனத்தொடங்கும் பாடலை பாடி முடித்தார்.

உடனே அபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்த அன்னை அபிராமி, தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீச...

அது பல கோடி நிலவின் ஒளியை வெளிச்சமிட்டது. அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது 🌝 ! 

‘‘தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடுக’’ என அபிராமி அன்னை பட்டரிடம் கூற,

பட்டரும் ‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’’ என தொடர்ந்து 100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார். 

மன்னரும், மக்களும் பட்டரை பணிந்தனர். பட்டருக்கு மன்னன் நிலபுலன்கள் பல அளித்தான். அதற்கான உரிமை செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது!

ஒவ்வொரு தை அமாவாசை அன்று திருக்கடையூரில் அபிராமி பட்டர் விழா நடக்கும்...

அன்றைய தினம் அபிராமி, தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி பவுர்ணமி உண்டாக்கிய நிகழ்ச்சியை பெருவிழாவாக நடத்துகிறார்கள்…

அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:- 

1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள்.
2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள்.
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள்.
4. உயர்பதவிகளை அடையலாம். 
5. மனக்கவலை தீரும்.
6. மந்திர சித்தி பெறலாம்.
7. மலை யென வருந்துன்பம் பனியென நீங்கும்.
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும்.
9. அனைத்தும் கிடைக்கும்.
10. மோட்ச சாதனம் பெறலாம்.
11.இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள்.
12. தியானத்தில் நிலை பெறுவார்கள்.                  
13. வைராக்கிய நிலை அடைவார்கள்.
14. தலைமை பெறுவார்கள்.
15.பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள்.
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும்.
17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம்.
18. மரணபயம் நீங்கும்.
19. பேரின்ப நிலையை அடையலாம்.
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும்.
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும்.
22. இனிப்பிறவா நெறி அடையலாம்.                  
23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும்.
24. நோய்கள் விலகும்.
25. நினைத்த காரியம் நிறைவேறும்.  
26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும்.
27. மனநோய் அகலும்.
28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம்.
29. எல்லா சித்திகளும் அடையலாம்.
30. விபத்து ஏற்படாமல் இருக்கும்.
31. மறுமையில் இன்பம் உண்டாகும்.
32. துர் மரணம் வராமலிருக்கும்.  
33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும்.
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும்.                     
35. திருமணம் நிறைவேறும்.
36. பழைய வினைகள் வலிமை அழியும்.
37. நவமணிகளைப் பெறுவார்கள்.                    
38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள்.                          
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம். 
40. பூர்வ புண்ணியம் பலன்தரும்.
41. நல்லடியார் நட்புப்பெறும்.
42. உலகினை வசப்படுத்தும்.
43. தீமைகள் ஒழியும்.
44. பிரிவுணர்ச்சி அகலும்.
45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.
46.நல்நடத்தையோடு வாழ்வார்கள்.
47. யோகநிலை அடைவார்கள்.
48. உடல்பற்று நீங்கும்.
49. மரணத்துன்பம் இல்லா திருக்கும்.
50. அம்பிகையை நேரில் காண முடியும்.                        
51. மோகம் நீங்கும்.
52. பெருஞ் செல்வம் அடைவார்கள்.
53. பொய்யுணர்வு நீங்கும்.
54. கடன்தீரும். 
55. மோன நிலை கிடைக்கும்.
56. அனைவரையும் வசப்படுத்தலாம்.
57. வறுமை ஒழியும்.
58. மன அமைதி பெறலாம். 
59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள்.
 60. மெய்யுணர்வு பெறலாம்.
61. மாயையை வெல்லலாம்.
62. எத்தகைய அச்சமும் வெல்லலாம்.
63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம்.
64. பக்தி பெருகும்.
 65. ஆண்மகப்பேறு அடையலாம்.
66. கவிஞராகலாம்.     
 67. பகை வர்கள் அழிவார்கள்.
68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும்.
69. சகல சவுபாக் கியங்களும் அடைவார்கள்.
70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம்.
71. மனக்குறைகள் தீரும்.
72. பிறவிப்பிணி தீரும்.  
73. குழந்தைப்பேறு உண்டாகும்.
74. தொழிலில் மேன்மை அடையலாம்.
75. விதியை வெல்வார்கள்.
76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள்.
77. பகை அச்சம் நீங்கும்.
78. சகல செல்வங்களையும் அடைவார்கள்.
79. அபிராமி அருள்பெறுவார்கள். 
80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும். 
 81. நன்னடத்தை உண்டாகும்.
82. மன ஒருமைப்பாடு அடையலாம்.
83. ஏவலர் பலர் உண்டாகும்.   
84. சங்கடங்கள் தீரும்.
85. துன்பங்கள் நீங்கும்.
86. ஆயுத பயம் நீங்கும்.
87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள்.
88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம்.
89. யோக சித்தி பெறலாம்.
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும்.
91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள்.
92. மனப்பக்குவம் உண்டாகும்.
93. உள்ளத்தில் ஒளியுண்டாகும்.
94. மனநிலை தூய்மையாக இருக்கும்.
95. மன உறுதி பெறும்.
96. எங்கு பெருமை பெறலாம்.
 97. புகழும் அறமும் வளரும்.
98. வஞ்சகர் செயல்களி லிருந்து பாதுகாப்பு பெறலாம்.
99. அருள் உணர்வு வளரும்.
100. அம்பிகையை மனத்தில் காண முடியும்.
--------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.1.22

Devotional குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயில்


Devotional குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயில்

தமிழ் நாடுகுழந்தை வேலாயுதசாமி கோயில்குழந்தை வேலாயுதசாமி கோயில் தமிழ்நாட்டில் அமைவிடம்

மாவட்டம்: கோயம்புத்தூர் மாவட்டம்
அமைவு: குருந்தமலை, மருதூர் ஊராட்சி, காரமடை ஊராட்சி ஒன்றியம்
கோயில் தகவல்கள்
மூலவர்: குழந்தை வேலாயுதசாமி
குழந்தை வேலாயுதசாமி கோயில், (Kurunthamalai Kulanthai Velayuthaswamy Temple) தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம், காரமடைக்கருகில் அமைந்துள்ளது.. இக்கோயிலின் முதன்மைக் கடவுளான முருகன், குழந்தை வேலாயுதசாமி என அழைக்கப்படுகிறார். தோற்றத்தில் பழனி முருகனைப் போலவே காணப்படுகிறார். இந்து அறநிலையத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் இக் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஜூன் 29, 2012 இல் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டம் செப்டம்பர் 11, 2011 முதல் இங்கும் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மருதூர் எனும் ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமமான குருந்தமலையில் இக் கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 67) காரமடை வரை சென்று அங்கிருந்து இக்கோயிலுக்குச் செல்லலாம். மேட்டுப்பாளையத்திலிருந்தும் இக் கோயிலுக்குச் செல்லலாம்.

கோயில் அமைப்பு

குருந்தமலை அடிவாரத்தில் ஐந்துநிலை இராஜகோபுரத்துடன் கூடிய நுழைவாயிலைத் தொடர்ந்து மலையேறிச் செல்ல நன்கமைக்கப்பட்ட படிக்கட்டுகள் தொடங்குகின்றன. படிக்கட்டுகளின் இருபுறமும் இராஜகம்பீர விநாயகர் சன்னிதி, கன்னிமார் சன்னிதி, நாகர் சன்னிதி, பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னிதி, இடும்பன், கடம்பன், வீரவாகு-மூவரின் சன்னிதிகள் உள்ளன. அவற்றைத் தாண்டியதும் படிக்கட்டுகளின் ஒருபுறம் காசிவிசுவநாதர் சன்னிதி விசாலாட்சியம்மனுக்குத் தனி சன்னிதியுடனும் மறுபுறம் தீபத்தூண் மற்றும் இராஜநாகலிங்க சன்னிதியும் அமைந்துள்ளது. இவ்விருவர் சன்னிதிகளைச் சுற்றி சூரியன், பஞ்சாட்சர கணபதி, பஞ்சலிங்கம் சன்னிதி, வள்ளி-தேவானை உடனுறை சண்முகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், நவக்கிரக, காலபைரவர், சந்திரன் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன.

காசிவிசுவநாதர் சன்னிதி தாண்டி மேலே குழந்தை வேலாயுதசாமி சன்னிதி இராஜகோபுரத்துடன் சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் குழந்தை வேலாயுதசாமி மேற்கு நோக்கியுள்ளார்.

ஒருமுறை இக்கோவிலுக்கு சென்று வாருங்கள். வாழ்வில் எல்லா நலன்களுக்ம் கிடைக்கப்பெறுவீர்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.12.21

Devotional:ஆன்மிகம்: ரத்தினகிரி முருகன் கோவில்



ஆன்மிகம்: ரத்தினகிரி முருகன் கோவில்

இன்று செவ்வாய்க் கிழமை. முருகப் பெருமானுக்கு உகந்த நாள். வாருங்கள் ஒரு புதிய முருகன் ஸ்தலத்திற்குச் சென்று வருவோம்!!!!

வேலூர் அருள்மிகு ரத்னகிரி பாலமுருகன் கோயில் இந்தியாவின் வேலூரில் உள்ள திருமணி குண்டத்தில் உள்ள முருகன் (கார்த்திகேயா) கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் ஆகும். இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, மேலும் 14 ஆம் நூற்றாண்டின் கவிஞர் அருணகிரிநாதரால் குறிப்பிடப்பட்டது .

 மலை இருக்கும் இடத்தில் முருகன் இருக்கிறார் என்று கூறப்படும் பண்டைய இந்து மத நூல்களின்படி, இது ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது. 

கோவிலில் உள்ள முருகன் சிலை மற்றும் குரு சுவாமி பாலமுருகன் அடிமை (பிறப்பு 1941) தெய்வத்தின் வெளிப்பாடுகள் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

ஒரு முறை சென்று வாருங்கள்.எல்லா நலன்களும் பெற்று வாழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.12.21

Devotional: குக்கே சுப்பிரமணியர் கோவில்- கர்நாடகா


Devotional: குக்கே சுப்பிரமணியர் கோவில்- கர்நாடகா
   
கர்நாடகத்தில் உள்ள 7 முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியர் கோவில் விளங்குகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

குக்கே சுப்பிரமணியர் கோவில்- கர்நாடகா

கர்நாடகத்தில் உள்ள 7 முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியர் கோவில் விளங்குகிறது. தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் இந்த சுப்பிரமணியர் கோவில் உள்ளது. மேலும் இது குமார பர்வதா மலையில் உற்பத்தியாகி ஓடி வரும் குமாரதாரா ஆற்றின் கரையோரம் அமைந்து உள்ளது. இந்தக்கோவிலுக்கு புராண வரலாறு ஒன்று உள்ளது. அதாவது முருகக் கடவுள் போரில் தாரகா சூரன், சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை சம்ஹாரம் செய்த பிறகு தனது சகோதரர் விநாயகர் மற்றும் பக்தர்கள் புடைசூழ குமார பர்வதாவுக்கு வந்தார். 

அவரை இந்திரன் மற்றும் தேவர்கள் வரவேற்றனர். மேலும் தனது மகள் தெய்வானையை திருமணம் செய்து கொள்ளும்படி இந்திரன் வேண்டுகோள் விடுக்க முருகப்பெருமான் சம்மதம் தெரிவித்தார். அதன்படி முருகர்-தெய்வானை திருமணம் நடந்தது. அப்போது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மற்றும் தேவர்கள் அங்கு கூடினர். பல்வேறு புனித நதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அந்த புனித நீர் ஆறாக ஓடியது. அதுவே குமாரதாரா நதியானதாக சொல்லப்படுகிறது.–

இதேப் போல் சிவ பக்தரும், நாகர்களின் தலைவரான வாசுகி தன்னை கருடன் தாக்காமல் இருப்பதற்காக குக்கே சுப்பிரமணியர் கோவிலில் உள்ள பிலாத் வாரா குகையில் தவம் இருந்தது. இதைத் தொடர்ந்து சிவனின் ஆணையை ஏற்று வாசுகியை இந்த தலத்தில் தனது பரமபக்தராக தன்னோடு இருக்கும்படி முருகப்பெருமான் அருள்புரிந்தார். இதனால் இங்கு வாசுகிக்கு பூஜை செய்தால், அது முருகப்பெருமானுக்கு பூஜை செய்ததாகவே கருதப்படுகிறது. இந்த கோவிலில் வெள்ளி கவசமிடப்பட்ட கருட கம்பம் ஒன்று உள்ளது. 
 
வாசுகி பாம்பின் விஷம் பக்தர்களை தாக்காமல் இருப்பதற்காக அந்த கருட கம்பம் இங்கு நிறுவப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் குமாரதாராவில் நீராடிய பிறகே சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆற்றின் தண்ணீர் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது. 

மங்களூருவில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 299 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த புனித ஆலயம் அமையப் பெற்று இருக்கிறது. இந்தக்கோவிலில் எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் ‘உருளு சேவை' என்னும் நிகழ்ச்சி சிறப்பம்சம் ஆகும்.

அன்பர்களே, வாய்ப்பிருந்தால் ஒருமுறை சென்று முருகப்பெருமானை வணங்கி வாருங்கள்! வாழ்வின் எல்லா சிறப்பு அம்சங்களையும் அவர் அருள்வார்!!!!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!