மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 461 - 470. Show all posts
Showing posts with label Lessons 461 - 470. Show all posts

24.8.11

Astrology எந்தப்பிள்ளை நல்லபிள்ளை?

--------------------------------------------------------------
Astrology எந்தப்பிள்ளை நல்லபிள்ளை?

ஒரு தாயிடம் சென்று நேர்காணல் செய்து, உங்கள் பிள்ளைகளில் எந்தப் பிள்ளை நல்லபிள்ளை என்றால், அவள் தன்னுடைய எந்தப் பிள்ளையையும் விட்டுக் கொடுக்க மாட்டாள். “எல்லாப் பிள்ளைகளுமே நல்லபிள்ளைகள்” என்றுதான் சொல்லுவாள். அதுதான் தாய் உள்ளம்.

தாயன்பிற்கு நிகரானது உலகில் எதுவும் இல்லை!

ஆனால், அதே தாயின் பிள்ளைகளை நேர்காணல் செய்து, “உங்கள் தாய்க்கு எந்தப் பிள்ளையின் மீது அதிகப் பாசம்” என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்வார்கள்

அதைக் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாட்டில் அற்புதமாக விளக்கினார்

  “படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் - ஒருவன்
      படுக்கையிலே முள்ளை வச்சி பார்த்து மகிழ்ந்தான்
   பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான் - ஒருவன்
      பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான்....... காவல் இருந்தான்!


சொன்னதை ‘நச்’ சென்று சொன்னார் அதுதான் சிறப்பு

தாயை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு, மனைவியின் கண் வீச்சில் கிறங்கி, அவளுடைய காலடியில் கிடக்கும் ஆசாமிகள்தான் இன்று அதிகம்!

அதைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள். இப்போது பாடத்தைப் பார்ப்போம்
------------------------------------------------------------------------------
ஜோதிடத்தை நன்கு அறிந்தவனை, எந்தக் கிரகம் நல்ல கிரகம் (எந்தக் கிரகம் மிகவும் அத்தியாவசியமானது - எந்தக் கிரகம் நமக்கு நன்மை செய்யத் தேவையானது) என்று கேட்டால்...... நன்றாகக் கவனிக்கவும்...... நன்கு அறிந்தவனைக் கேட்டால், என்ன சொல்வான்?

“எல்லாக் கிரகங்களுமே நல்ல கிரகங்கள்” என்றுதான் சொல்வான்

உண்மையும் அதுதான்.

கர்மவினைப்படி ஜாதகனுக்கு என்ன கொடுக்க வேண்டுமோ, அதைக் கிரகங்கள் உரிய நேரத்தில் தவறாமல் கொடுத்துவிடும்.

நன்மை, தீமை இரண்டும் கிரகங்களுக்கு ஒன்றுதான். அதில் அவைகளுக்குப் பேதம் இல்லை.

நன்மை, தீமை இரண்டையும் ஒன்றாக நினைத்தால், எதிர்கொண்டால் நமக்கும் எந்த வாதமும் இல்லை! வழக்கும் இல்லை!
------------------------------------------------------------------------------
சராசரி மனிதன் கேட்பான்:

“நன்மையை எப்போது வேண்டுமென்றாலும் கொடுக்கட்டும். தீமைகளை எப்போது கொடுப்பார்கள்? அதை மட்டும் சொல்லுங்கள்!”

“தங்களுடைய தசாபுத்திகளில் கொடுப்பார்கள். கோச்சாரத்தில் (கோள் சாரத்தில் That is in their transit) கொடுப்பார்கள். அதுவும் குறிப்பிட்ட நிலைப்பாடுகளில் அதிகமாகக் கொடுப்பார்கள். உங்கள் மொழியில் சொன்னால் தட்டிவிட்டுப் போவார்கள்.கவிழ்த்துவிட்டுப் போவார்கள். சிலரை உள்ளே பிடித்து வைத்துவிட்டும் போவார்கள்”

“அதை எப்படித் தெரிந்து கொள்வது?”

“அதற்கான பாடல் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்”
-------------------------------------------------------------------------------
   “கேளப்பா குருமூன்றில் கலைதானெட்டு
       கேடு செய்யும் சனி ஜென்மம் புந்திநாலில்
    சீளப்பா சேயேழு செங்கதிரோன் ஐந்தும்
       சீறிவரும் கரும்பாம்பு நிதியில்தோன்ற
    ஆளப்பா அசுரகுரு ஆறிலேற
       அப்பனே திசையினுடை வலுவைப்பாரு
    மாளப்பா குற்றம்வரும் கோச்சாரத்தாலே
       குழவிக்கு திரியாணங் கூர்ந்து சொல்லே!”


சந்திரன் உங்கள் ஜாதகத்தில் நிற்கும் ராசியை வைத்துக் கோள்சாரத்தைக் கணக்கிட வேண்டும். அதை மனதில் கொள்க!

குரு தனது சுற்றில் மூன்றாம் வீட்டிலும்
கலை (சந்திரன்) எட்டாம் வீட்டிலும்
சனி ஒன்றாம் வீட்டிலும்
புந்தி (புதன்) நான்காம் வீட்டிலும்
சேய் (செவ்வாய்) ஏழாம் வீட்டிலும்
செங்கதிரோன் (சூரியன்) ஐந்தாம் வீட்டிலும்
கரும்பாம்பு (ராகு) இரண்டாம் வீட்டிலும்
அசுரகுரு (சுக்கிரன்) ஆறாம் வீட்டிலும்

அதிகமான கேடுகளை (துன்பங்களைக்) கொடுப்பார்கள்
-----------------------------------------------------------------------------------
“சரி, அவர்களை எப்படி follow செய்வது? எந்தந்த வீட்டில் இன்று இருக்கிறார்கள். எப்போது இடம் மாறுவார்கள் என்று எப்படித் தெரிந்து கொள்வது?”

அது வெரி சிம்ப்பிள். அதற்கு ஒரு வழி இருக்கிறது. இங்கே அதைச் சொன்னால், அதுவும் சேர்ந்து திருட்டுப் போகும். வகுப்பறையின் சுவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டுபோய்விடுவார்கள். ஆகவே மின்னஞ்சல் அனுப்புங்கள். பதில் கிடைக்கும்

அன்புடன்
வாத்தியார்
________________________________________
வாழ்க வளமுடன்!

23.8.11

Astrology: சோகத்தில் முடியும் ஜாதகங்கள்!

--------------------------------------------------------------------------------------
Astrology: சோகத்தில் முடியும் ஜாதகங்கள்!

காலசர்ப்ப தோஷம் என்பது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாடம் நடத்தியுள்ளேன். ராகு & கேதுவிற்குள் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும் நிலைமை அது. அதன் கால அளவு பற்றி  இருவேறான கருத்துக்கள் உள்ளன.

சிலர் 30 அல்லது 33 வயதுவரை காலசர்ப்ப தோஷம் இருக்கும். அதற்குப்பிறகு அந்த தோஷமே யோகமாக மாறிவிடும் என்பார்கள்.

வேறு சிலர் கால சர்ப்ப தோஷம் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் நீடிக்கும்  என்பார்கள்.

ஆனால் கால சர்ப்ப தோஷத்தில் இரண்டு வகைகள் உள்ளன.

1. காலமிரித யோகம்: ராகு முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், கேது  கடைசியாக வரும் அமைப்பு. இது கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது நன்மை பயக்கக்கூடிய அமைப்பு.

2. விலோமா யோகம்: கேது முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், ராகு  கடைசியாக வரும் அமைப்பு. இதுவும் கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது தீமை பயக்கக்கூடிய அமைப்பு.

There are two types of Kala Sarpa Yogas. One is when all of the seven grahas that are caught in the axis are moving toward the mouth of the serpent, Rahu. This is called kalamrita yoga and is considered the main formation. The other is when all of the planets are moving towards the tail Ketu and is known as viloma.

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.




-----------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன் துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.

அதற்குப் பிறகு என்ன செய்வது?

மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

என்ன காரணம்?

ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தி யாக்கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கவில்லை.

பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.

ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
23.8.2011
வாழ்க வளமுடன்!

22.8.11

Astrology கண்ணதாசனின் ஜாதகம்!

--------------------------------------------------------------------------------------------
Astrology கண்ணதாசனின் ஜாதகம்!

இவருக்கு அறிமுகம் தேவையில்லை.

நான் அடிக்கடி இப்படிச் சொல்வேன்: கண்ணதாசனை ஒருவன் அறிந்திருக்க வில்லை என்றால் அவன் தமிழனே அல்ல!

Gifted Poet கடவுளின் அருளைப்பெற்ற கவிஞர் அவர். சரஸ்வதி அவருடைய நாக்கில் குடியிருந்தாள். ஒரு  பாடலுக்கு சர்வசாதாரணமாக பத்து பல்லவி களை அடுத்தடுத்துச் சொல்லி,  கேட்கும் இசையமைப்பாளரையும், இயக்குனரையும் திணற அடிக்கும் வல்லமை பெற்றவர் அவர்.

அவர் ஒரு திறந்த புத்தகம். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பின்னர் பல நூல்களை சுயமாகக் கற்றுத்  தேறியவர். தன்னுடைய இளம் வயதில் பல இன்னல்களையும், துயரங்களையும், துரோகங்களையும் சந்தித்து பல  அனுபவங்களைப் பெற்றவர். அவருடைய அனுபவங்கள்தான் அவருடைய பாட்டில் எதிரொலிக்கும்.

தன்னைப் பற்றி, தான் உயிருடன் இருக்கும் போதே, நல்லது கெட்டது என்று எதையும் மறைக்காமல் உள்ளதை  உள்ளபடியே - உண்மைகளை இரண்டு பெரிய புத்தகங்களாக எழுதிவைத்துவிட்டுப் போனார்.

வனவாசம், மனவாசம் என்னும் அந்த 2 நூல்களை அவசியம் வாங்கிப் படியுங்கள். அசத்தலாக இருக்கும் அவருடைய சுய சரிதங்கள் அவை!

ஆன்மீகத்துக்கு ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்னும் 10 பகுதிகள் கொண்ட நூலை எழுதிவைத்தார். மத நல்லினக்கத்திற்கு, ஏசு காவியம் என்னும் நூலையும் எழுதினார்.

நூற்றுக்கணக்கான தத்துவப் பாடல்களையும், மனதிற்கு நம்பிக்கையூட்டும் பாடல்களையும் எழுதியவர் அவர்

பெருந்தன்மைகள், தர்ம சிந்தனைகள் கொண்ட கவிஞனை, கால தேவன் விட்டு வைக்கவில்லை. 54 வயதிலேயே  கூட்டிச் சென்று விட்டான். இருந்திருந்தால் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மேலும் ஒரு ஐயாயிரம் பாடல்களை  எழுதிக்கொடுத்திருப்பார்

அவர் எழுதிய பாடல்களில் எனக்குப் பிடித்த சிறந்த வரிகள் சிலவற்றை உங்களுக்காகக் கொடுத்துள்ளேன்
--------------------------------------
1
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்
   கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம்

நெல்லுக்குள்ளே மணியை நெருப்பினிலே ஒளியை
   உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்
   உனக்கு இல்லையா - தம்பி
   நமக்கு இல்லையா - தம்பி
   நமக்கு இல்லையா

2
பணத்தின்மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசங்கள் ஏனடா
   பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
   அண்ணன் தம்பிகள் தானடா!
   அண்ணன் தம்பிகள் தானடா!

3
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
   இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்  - அதில்
   பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
   அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
   எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

4
அங்கும் இங்கும் அலைபோலே - தினம்
   ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் - அது
   எங்கே முடியும் யாரறிவார்

5
வாழநினைத்தால் வாழலாம்
   வழியாயில்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும்
   ஆசையிருந்தால் நீந்திவா!

6
அது இருந்தா இது இல்லை
   இது இருந்தா அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா
   அவனுக்கு இங்கே இடமில்லை!

(அதாவது மேலே போய்விடுவான்!)

7.
பார்த்தா பசுமரம்
   படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா - ஞானத்தங்கமே
   தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?

8
பருவம்வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
   காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
   சேர்ந்துவாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை!

9
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
   நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா
   அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா

10
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
   இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
   ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
   கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
   காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

இன்னும் நூற்றுக் கணக்கான வரிகள் உள்ளன. இடம் கருதி சிலவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன்
-----------------------------------------------------------------------
இன்று அவருடைய ஜாதகத்தை அலசுவோம்!



1. சிம்ம லக்கினக்காரர். சிம்ம லக்கினமே நாயகர்களுக்கு உரிய லக்கினம். காட்டில் சிங்கம் எப்படி நாயகனோ,  அப்படி நாட்டில் சிம்ம லக்கினக்காரர்கள் எல்லாம் நாயகர்களே! (They are the heroes)

2. லக்கினாதிபதி சூரியன் பதினொன்றில். அதாவது லாபஸ்தானத்தில். லக்கினாதிபதி லாபத்தில் அமர்ந்தால்  ஜாதகன் அதிர்ஷ்டமானவன். குறைந்த முயற்சி, அதிக பலன் அதன் பயன். ( Minimum efforts: Maximum benefits)

3. கற்பனை, கவிதைகள், எழுத்தாற்றலுக்கு உரிய இடமான இரண்டாம் வீடு, குரு பகவானின் நேரடிப்பார்வையில். அத்துடன் அந்த வீட்டு அதிபதி புதன் அந்த வீட்டிற்குப் பதினொன்றில். அதனால்தான் அவர் நாடறிந்த  கவிஞரானார்.

4. நான்கில் சனி. சிம்ம லக்கினத்திற்குக் கடும்பகைவன். படிப்பைக் கெடுத்தான். பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட நேர்ந்தது.

5. புதனும் சுக்கிரனும் கூட்டாகச் சேர்ந்ததால் அவர் கலைத் துறைக்குச் சென்றார். சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாயும், அவர்களுடன் சேர்ந்ததால், அந்தத்துறையில் அவருக்குப் பெரும் புகழை  அவர்கள் மூவரும் சேர்ந்து கொடுத்தார்கள்.

6. பாக்கிய ஸ்தானத்தில் (9ல்) சுபக்கிரகம் சந்திரன். ஆனால் அந்த வீட்டிற்குரிய செவ்வாய், நீசமாகி 12ல் அமர்ந்தான். அவருக்கு சில பாக்கியங்கள் கிடைத்தன. சில பாக்கியங்கள் கிடைக்கவில்லை. Mixed Results  கலவையான பலன்கள். பூரண ஆயுள் இல்லாமல் போய்விட்டதே - அது முக்கியமான பாக்கியம் இல்லையா?

7. கேது 5ஆம் வீட்டில் இருப்பதைப் பாருங்கள். கேது 5ல் இருந்தால், ஜாதகன் அரசனாக வாழ்வான். அல்லது  ஆண்டியாகி மடத்தில் சேர்ந்து விடுவான். இவர் அரசனாகவே வாழ்ந்தார். கவியரசர் என்றால் அவர் ஒருவர்தான்!

8. பதினொன்றாம் வீட்டில் ராகு இருப்பதால், சகலகலா வல்லவனாக ஜாதகன் இருப்பான். சகல அனுபவமும்  கிடைக்கும் அதீதமான பெண் சுகம் உட்பட. அவர் அப்படித்தான் வாழ்ந்து மறைந்து போனார்.

9 சூரியனும், ராகுவும் ஒன்று சேர்ந்தால், ஜாதகன் அபாரமான சுய சிந்தனைகளை உடையவனாக இருப்பான்.  சுயமாக இயங்கக்கூடியவன். சுதந்திரப் பறவையாக இருக்கக்கூடியவன். அவர் அப்படித்தான் இருந்தார்.

10. 11ல் இருக்கும் ராகு, தன் திசையில் அவரைப் புகழின் உச்சத்திற்குக் கொண்டு போனான். அவரை அரசவை  கவிஞராகவும் ஆக்கி அழகு பார்த்தான்.

11. ஐந்தில் அமர்ந்த கேது அவருக்குப் பலவிதமான மனக் கஷ்டங்களைக் கொடுத்தாலும், அவனே அவரை  ஞானம் மிகுந்தவராகவும் ஆக்கினான். அனுபவங்களால் மட்டும்தான் ஒருவர் ஞானம் பெறமுடியும். அவர்  விஷயத்தில் அது சரியாக இருந்தது. (5th House is the house of mind) கேதுதான் அவருக்கு ஞானத்தைக்  கொடுத்து, எளிமையாகவும், ஆழ்ந்த கருத்துக்களை உடையதாகவும் உடைய பல பாடல்களை எழுத வைத்தான்.

12. சூரியன் - ராகு கூட்டணி 11ல் இருந்து அரசின் சலுகைகளையும் பெற்றுத் தந்தன. அதே நேரத்தில் ஆட்சியாளர்களின் தவறுகளையும் விமர்சனம் செய்ய வைத்தன. அந்தக் கூட்டணி இரண்டையும் செய்யும்  என்பதற்கு, அவருடைய ஜாதகமே உதாரணமாகத் திகழ்கிறது.

விளக்கங்கள் போதுமா? அனைவரும் ஒரு வரி எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
22.8.2011
+++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

3.8.11

Astrology எது இருந்தா எது இருக்காது?

---------------------------------------------------------------------------------------
Astrology எது இருந்தா எது இருக்காது?

  “அது இருந்தா இது இல்லை
      இது இருந்தா அது இல்லை
   அதுவும் இதுவும் சேர்ந்து இருந்தா
      அவனுக்கு இங்கே இடமில்லை”


    என்றார் கவியரசர் கண்ணதாசன்.

    எல்லாம் கிடைத்துவிட்டால், அவன் இங்கே இருக்க மாட்டான். மேலே போய்விடுவான். போர்டிங்  பாஸைக் கையில் திணித்து, கர்மகாரகன் சனீஷ்வரன் மேலே அனுப்பி விடுவான். டெஸ்டினேசன் தெரியாது.அது  சொர்க்கமாக இருக்கலாம் அல்லது நரகமாக இருக்கலாம். சிவலோகமாக இருக்கலாம் அல்லது வைகுண்டமாக இருக்கலாம். எப்படி வேண்டு மென்றாலும் வைத்துக்கொள்ளூங்கள்

    ஆகவே இல்லாததை நினைத்து ஏங்காமல் இருப்பதைக் கொண்டு மகிழ்வோடு இருக்க வேண்டும்

    அதுதான் வாழ்க்கை!

    ஜாதகப்படி  ஒரு கட்டத்திற்கு (அதாவது ஒரு வீட்டிற்கு) 3 பாக்கியங்கள் வீதம் மொத்தம் 36  பாக்கியங்கள்.

    முதலில் லக்கினம் அதற்கு 3 பாக்கியங்கள். நல்ல உடல்வாகு & தோற்றம் (appearance) அதில் ஒரு பாக்கியம் இரண்டாம் வீட்டிற்கு மூன்று பாக்கியங்கள் அதில் பணம் ஒரு பாக்கியம் அதாவது கைக்காசு. கையிருப்பு. வங்கி இருப்பு. எப்போதும் கையில் பணம் இருக்கும் நிலைமை அம்மூன்றில் முக்கியமான பாக்கியம்  (Second house is the house of finance, family life & speech)

    மூன்றாம் வீடு  House of courage  முக்கிய பாக்கியம். துணிச்சல். எதையும் எதிர்கொள்ளும் துணிவு  முக்கியமான பாக்கியம்

    நான்காம் வீட்டிற்கு நல்ல தாயும், ஒன்பதாம் வீட்டிற்கு நல்ல தகப்பனாரும் முக்கியமான பாக்கியங்கள்

    ஏழாம் வீட்டிற்கு...........சொல்லவே வேண்டாம். நல்ல வாழ்க்கைத்துணை - அதாவது நல்ல, அன்பான மனைவி (Better Half) அமைவது அந்த வீட்டின் முக்கியமான பாக்கியம்.

    பத்தாம் வீடு நல்ல ஜீவனத்திற்கு வழி செய்யும், வேலை அல்லது தொழில் அமைவதற்கான  பாக்கியத்தைக் கொடுக்கும். (House of Profession) அந்த வீட்டின் முக்கியமான பங்களிப்பு அதுதான்.

    இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    “என்ன வாத்தியார் தளை தட்டுகிறதே - ஆறு, எட்டு, பன்னிரெண்டு ஆகிய வீடுகள் ஜாதகத்தில் மறைவிடங்கள் ஆயிற்றே - அது தரும் விளைவுகளை எப்படி பாக்கியமாகக் கொள்வது?” என்று கடைசி பெஞ்ச் கண்மணி ஒருவர் கேட்கலாம்.

    ஆறாம் வீடு கடன்கள், நோய்கள், எதிரிகள் ஆகியவற்றிற்கான வீடு. அந்த வீடு நல்ல நிலைமையில்  (in very strong position) இருந்தால் ஜாதகனுக்குக் கடன்களே ஏற்படாது. நோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக  இருப்பான். எதிரிகளே இருக்க மாட்டார்கள். இரண்டொருவர் இருந்தாலும் இவனைக்கண்டவுடன் ஜகா வாங்கிவிடுவர்கள். ஓடிப்போய்விடுவார்கள். வந்து நின்றால் துவம்சம் செய்துவிடுவான்.

    இப்போது சொல்லுங்கள். அவைகளும் பாக்கியம்தானே?

    அவற்றை எப்படித் தெரிந்து கொள்வது?

    ஜாதகத்தை முழுமையாக அலசினால் தெரிந்து கொள்ளலாம். அதற்குப் பல உபாயங்கள், சூத்திரங்கள்  உள்ளன. அவற்றை எல்லாம் ஒரே பாடத்தில் சொல்லித் தரமுடியாது. கடல் தண்ணீரைக் குடத்திற்குள் அடக்க  முடியுமா என்ன?

    பல பகுதிகளாக, உதாரண ஜாதகங்களுடன் விரிவாகச் சொல்லித் தர வேண்டும். அவற்றை என்னால்  முடிந்தவரை, என் சிற்றறிவிற்குத் தெரிந்தவரை விரிவாகச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

    எங்கே? எப்போதிலிருந்து?

    இங்கே எழுதினால் ஒட்டு மொத்தமாகத் திருட்டுப்போய்விடும். பள்ளிக்கூட மதில் சுவருக்குப் பின்னால்  காத்துக்கொண்டிருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டு போய்விடுவார்கள். ஜோதிடம் பொதுவானதுதான். ஆனால்  என் அரிய நேரத்தைச் செலவழித்து, என் உழைப்பில், என் மொழியில், எனது நடையில் எழுதுவதைத் திருடிக் கொண்டு போகின்றவர்களை என்ன செய்வது? எப்படி நியாயப் படுத்துவது? நீங்களே சொல்லுங்கள்?

    இணையம் என்பது திறந்தவெளி. திறந்த வெளியில் நின்று ஒரு பெண் குளித்தால் என்ன ஆகும்? அதுதான் இன்று இணையத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

    ஆகவே தனி இணையதளத்தில் (Own Web site) எழுதிக்கொண்டிருக்கிறேன். ஜனவரி ஒன்று 2011 முதல் எழுதிக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதவும் உள்ளேன். அதில் குறிப்பிட்ட சிலருக்குத்தான் இடம்  அளித்துள்ளேன்.

    மற்றவர்கள் எல்லாம் பொறுத்துக்கொள்ளூங்கள். அதில் எழுதுகின்ற அனைத்தும் புத்தகங்களாக  வரவுள்ளன (with copy right) முதல் இரண்டு தொகுதிகள் கார்த்திகை மாதம் வெளிவரும். அதைத் தொடர்ந்து  மேலும் இரண்டு புத்தகங்கள் ஏப்ரல் 2012ல் வெளிவரும். அப்போது அனைவருக்கும் அவற்றைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும்.

    இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், தங்கள் ஜாதகத்தில் சந்தேகம் கேட்டு பல மின்னஞ்சல் எனக்குத் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் சரிபார்த்துக் கேட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் சொல்ல தற்சமயம் எனக்கு நேரமில்லை. ஆகவே யாரும் தங்கள் ஜாதகத்தை இணைத்து எனக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம். இதை ஒரு வேண்டுகோளாகச் சொல்கிறேன்

    அந்தப் பாடங்களை எல்லாம் படித்தால் உங்கள் ஜாதகத்தை நீங்களே அலசலாம். Surf Excel, Vanish Cleaner, Dettol போட்டு துவைத்த துணிகளைப் போல உங்கள் ஜாதகம் பளிச்சிடும். ஆகவே பொறுத்திருங்கள். பொறுமை கடலினும் பெரிது. அதைவிடப் பெரியது உலகில் ஒன்றுமில்லை!

   பொறுத்தார் பூமியாள்வார். நீங்கள் பூமியை ஆளவேண்டும் என் ஆசை அதுதான்!

    அன்புடன்
    வாத்தியார்
----------------------------------------------------------------------------------------------



வாழ்க வளமுடன்!

2.8.11

Astrology தன்னை மறப்பதற்கு என்ன வேண்டும்?

---------------------------------------------------------------------------------------
Astrology தன்னை மறப்பதற்கு என்ன வேண்டும்?

காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
கானம் வந்த வழியினிலே
கண்ணன் வந்தான் தோழியரே - ஆஹா
கண்ணன் வந்தான் தோழியரே


வயதையும் மறந்து ஒவ்வொருவரையும் துள்ள வைக்கும் பாடல் இது. துவழ வைக்கும் பாடல் இது. இந்த மாதிரி மனதை மயக்கும் பல பாடல்களை எழுயதால்தான் கவியரசர் கண்ணதாசன், நம் மனதில் என்றும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

தத்துவப் பாடல்களில்கூடக் காதல் வரிகளை அவர் நுழைத்து நம்மைக் கிறங்க அடித்திருப்பார்

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா


என்று தத்துவ சாரத்தில் பாடலின் பல்லவியைத் தொடுத்தவர். சரணத்தில் காதலுக்குள் நுழைந்து விடுகிறார். வரிகளைப் பாருங்கள்.

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்


தன்னை மறப்பதற்கு என்ன வேண்டும் என்கிறார் பார்த்தீர்களா?

சிலருக்கு, தன்னை மறப்பதற்கு ஒரு குவாட்டர் இருந்தால் போதும். அவர்களுக்கு ராகு கோலோச்சும். ஆகவே குவாட்டரும் கையுமாக அலைவார்கள். சிலருக்கு குரு கோலோச்சும்,"what is next?" என்று ஆக்க பூர்வமாக அலைவார்கள். சிலருக்கு சுக்கிரன் கோலோச்சும், உலக இன்பங்களில் தங்களைப் பறி கொடுப்பார்கள். எல்லாம் ஜாதகப் பலன்.
----------------------------------------------------------------------------------------
சென்ற பாடத்தில் செவ்வாய் மகாதிசையில், அதன் சுயபுத்திப் பலன்களைப் பார்த்தோம். அடுத்து செவ்வாய் மகா திசையில் ராகு புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.

அதன் காலம் ஒரு ஆண்டும் பதினெட்டு நாட்களும் ஆகும்.

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

பகையான சேய்திசை ராகுபுத்தி
   பாங்கில்லா நாளதுவும் வருஷம்ஒன்று
துகையில்லா நாளதுவும் பதினெட்டாகும்
   துன்பங்கள் சுரதோஷம் வாதபீடை
வகையில்லாசத்துருவும் அக்கினியுண்டாம்
   வளங்கொடியாள் விரோதமது வகையுடனேகாட்டும்
நகையுடனே பூஷணங்கள் நலமில்லாசிலவாம்
   நன்மையில்லா நிலைவிட்டு நடப்பான்காணே!


அந்த இரண்டு கிரகங்களும் மகாதிசை மாறும்போது என்ன செய்யும்? ராகு மகா திசையில் செவ்வாய் புத்தி எப்படி இருக்கும்? அது ஒன்றும் சொல்லும்படியாக இருக்காது. தீமைகள் நிரைந்ததாகத்தான் இருக்கும். பல்லைக்கடித்துக் கொண்டு அந்தக் காலகட்டத்தைக் கடக்க முயற்சிக்க வேண்டியதுதான். இறைவழிபாடு தாக்குப் பிடிக்கும் சக்தியைக் கொடுக்கும்

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

கேளப்பா ராகுதிசைசெவ்வாய்புத்தி
   கேடான நாளதுவும் வருஷம்ஒன்று
நாளப்பா நாளதுவும் பதினெட்டாகும்
   நன்மையில்லா அதன்பலனை நவிலக்கேளு
ஆளப்பா அக்கினியும் சோரபயமுண்டாம்
   அடிபணியும் தேவதையால் அவதியுண்டாம்
பாளப்பா பாவையரும் பலனுந்தீதாம்
   பாழாகும்பொருள் சிலவும் பலவிதந்தானே!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
2.8.2011

-----------------------------------------------------------------------------------------
இலக்கியச் சோலை நாளை வெளிவரும்!

வாழ்க வளமுடன்!

1.8.11

Astrology ஓட்டத்தில் நான்காம் இடம் யாருக்கு?

---------------------------------------------------------------------------------------------
Astrology ஓட்டத்தில் நான்காம் இடம் யாருக்கு?

சென்ற பாடங்களில் சந்திர மகாதிசையில் நடைபெறும் பலன்களைப் பார்த்தோம். சந்திரனுக்கு அடுத்து செவ்வாய் திசைநடைபெறும். செவ்வாய் திசைக்கான பலன்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

இந்திய ஜோதிடத்தில் செவ்வாய்க்கு, அங்காரகன், குஜன் என்று வேறு பெயர்களும் உண்டு. செவ்வாய் ஒரு தீய கிரகம் (Malefic Planet) சூரியனில் இருந்து நான்காம் இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் கிரகம். மேஷமும், விருச்சிகமும் செவ்வாய்க்கு உரிய ராசிகளாகும். அந்த ராசிகளுக்கு அவர் அதிபதி. அந்த லக்கினக்காரகளுக்கு அவர்தான் அதிபதி. மகரராசியில் உச்சம் பெறும் அவர் அதற்கு நேர் எதிர் ராசியான கடகத்தில் நீசமைடைவார்

கடகம் மற்றும் சிம்ம லக்கினக்காரர்களுக்கு அவர் யோககாரகன். அதாவது யோகத்தைக் கொடுக்கக்கூடியவர்

Kuja is a karaka, or indicator, of brother and siblings, assertion, aggressiveness, soldiers and military endeavors, mechanical ability, engineers and surgeons, commanders and rulers, accidents, violence and war, ambition, strength, arguments and conflict, passion and desire.

செய்வாய் தன்னைத் தீவிரமாக வணங்குபவர்களுக்கு உதவி செய்யும் தன்மையை உடையவர். கடன் தொல்லை, வறுமை, நோய்வாய்ப் பட்டிருப்பவர்கள் ஆகியோர் செவ்வாயைத் தீவிரமாக வணங்குவது மிகுந்த நன்மை பயக்கும்!
--------------------------------------------------------------------
செவ்வாய் திசையின் மொத்த காலம் ஏழு ஆண்டுகள். அதில் வரும் மற்ற கிரக புத்திகளின் காலம் வேறுபடும்.

முதலில் செவ்வாய் திசையில், அதன் சுயபுத்திக்கான (Own Period) பலனைப் பார்ப்போம்

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!


ஆமென்றசேய் திசை வருஷம் ஏழில்
   அங்காரகன் புத்திநாள் நூற்றி நாற்பத்திஏழு
போமென்ற அதன்பலனை புகழக்கேளு
   புகழான அரசர்பகை ஆயுதத்தால்பீடை
தாமென்ற சத்துருவால் வியாதியதுகாணும்
   தனச்சேதம் உடல்சேதம் தானேஉண்டாம்
நாமென்ற நகரத்தில் சூனியங்களுண்டாம்
   நாடெல்லாம் தீதாகும் நன்மையில்லாப்பகையே


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
1.8.2011

-------------------------------------------------------------------------------------------



வாழ்க வளமுடன்!

27.7.11

Astrology பொய்யிலே பிறந்தவரும் மெய்யிலே பிறந்தவரும்!

----------------------------------------------------------------------------------------
Astrology பொய்யிலே பிறந்தவரும் மெய்யிலே பிறந்தவரும்!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதி, மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த நல்ல பாடல் ஒன்று   ‘ஆனந்தஜோதி’ என்னும் திரைப்படத்தில் வரும். ஆண்டு 1963.

அந்தப் பாடலின் பல்லவி இப்படித்துவங்கும்:

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே


அது நாயகி பாடும் வரிகள். பதிலுக்கு நாயகன் இப்படிப் பாடுவான்

பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே


இந்தப் பாடலை, சற்று மாற்றிப் பாடினால், அது சனீஷ்வரனுக்குப் பொருத்தமாக இருக்கும்.

மெய்யிலே பிறந்து மெய்யிலே வளர்ந்த மேன்மை கொண்ட பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டார் உண்மை தெரிந்து கொண்டார் இந்தப் பூமியோர் பெருமானே!


ஆமாம். சனீஷ்வரன் கர்மகாரகன். அவன் யாரையும் வீணாகத் துன்புறுத்துவதில்லை. அவரவர் கர்மவினைப் படியே பலன்களையே அவன் அளிப்பான். அதைப் புரிந்துகொண்டால், நாம் சலனமின்றி இருக்கலாம். சங்கடமின்றி வாழ்க்கையை ஒட்டலாம். (அட்லீஸ்ட் அவனுடைய தசா புத்திக் காலங்களில்!)
---------------------------------------------------------------------------------------------------------
சென்ற பாடத்தில் சந்திர மகா திசையில் குரு புத்திக்கான பலன்களைப் பார்த்தோம். திசை புத்தி வரிசைகளில் குருவிற்கு அடுத்ததாக வரிசையில் காத்துக்கொண்டிருப்பவர் சனி பகவான். இன்று சந்திர மகா திசையில் சனி புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.

அது நடைபெறும் காலம் 19 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டு 7 மாதங்கள்.

ஒருவர் சுபக்கிரகம். இன்னொருவர் தீய கிரகம். ஆகவே பலன்கள் நன்மையுடையதாக இருக்காது. இறைவழிபாடு ஒன்று மட்டுமே இந்தக் காலகட்டத்தைக் கடக்க உதவும்!

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

பாரப்பா சந்திரதிசை சனியன்புத்தி
    பகர்ந்தநாள் மாதமது பத்தொன்பதாகும்
நேரப்பா அதனுடைய பலத்தைச் சொல்வோம்
    நேரிழையாள் மரணமதாம் நெஞ்சுதனில் நோவாம்
காரப்பா கனகமது சிலவேயாகும்
    கள்ளரால் சோரர்பயம் துக்கமுண்டாம்
சாரப்பா சத்துருவால் இடஞ்சலுண்டாம்
    சஞ்சலங்க ளுண்டாம் தவமேபாழாம்!


பதிலுக்கு சனி மகாதிசை சந்திர புத்தியாவது நன்மை உடையதாக இருக்கும் என்று பார்த்தால் - இருக்காது. அதுவும் பல பிரச்சினைகளை உடையதாகவே இருக்கும். அது நடைபெறும் காலமும் 19 மாதங்களே அதாவது ஒரு ஆண்டு 7 மாதங்கள். இறைவழிபாடு ஒன்று மட்டுமே இந்தக் காலகட்டத்தைக் கடக்க உதவும்!

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

காணவே காரிதிசை சந்திரபுத்தி
    கனமில்லா மாதமது பத்தொன்பதாகும்
தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
    தோகையருஞ் சண்டையதால் துன்பம்வருங்கேடு
பூணவே பூமிமுதல் பூணாரங்கள்
    புகன்றதொரு தனமுதல் சேதமாகும்
ஆணவே அலைச்சலது உண்டாகும்பாரு
    அளவில்லா பேயதுவுங்கூடிக்கொல்லும்


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
27.7.2011


=======================================================
வாழ்க வளமுடன்!

25.7.11

Astrology உலகம் பிறந்தது யாருக்காக?

-------------------------------------------------------------------------------------------
Astrology உலகம் பிறந்தது யாருக்காக?

வில்லியம் ஷேக்ஸ்பியர் (1564 - 1616), ஜான் கீட்ஸ் (1795 - 1821) சாமுவேல் ஜான்சன் (1709 - 1784) லார்ட் பைரன் (1788 - 1824) வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (1770 - 1850) ஜான் மில்டன் (1608 - 1674)  என்று எண்ணெற்ற  ஆங்கிலக் கவிராயர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வராத சிந்தனை நம் கவியரசர்  கண்ணதாசனுக்கு வந்தது. அவர்கள் ஆங்கில மொழியில் எழுதியதால் அவர்களும் உலகப் புகழ் பெற்றார்கள். அவர்களுடைய கவிதைகளும், பாடல்களும் உலகப் புகழ்பெற்றன.

ஆனால் கவியரசர் ஒரு பிரதேச மொழியில் எழுதியதால், அவருடைய பாடல்கள், சிந்தனைகள் உலக மக்களைச் சென்றடையவில்லை.

ஆனாலும் நம்மைப் பெருமைப் படுத்தியுள்ளன. நம்மை மகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றன. அதுபோதும்  நமக்கு!!!

    “உலகம் பிறந்தது எனக்காக
       ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக
       அன்னை மடியைவிரித்தாள் எனக்காக”


என்று அற்புதமாக, ஒரு மனித மனநிலையின் உச்சகட்ட
வெளிப்பாட்டை எடுத்துக்கூரும் விதமாகக் கவியரசர் எழுதினார்.
படம் பாசம் (1961) இதைவிட வேறு என்ன நிலை வேண்டும்?
‘உலகம் பிறந்தது எனக்காக’ என்னும்  ஒரு வரியில் எல்லாம் அடங்கிவிட்டது.  இந்த சிந்தனை அவருக்கு மட்டுமே உரித்தானது.
வேறு எந்தக் கவிஞனுக்கும் வந்ததாகத் தெரியவில்லை!

அத்தோடு விட்டாரா? சரணத்திலும் கலக்கலாக எழுதியிருப்பார்.

    தவழும் நிலவாம் தங்கரதம்
       தாரகை பதித்த மணிமகுடம்
    குயில்கள் பாடும் கலைக்கூடம்
       கொண்டது எனது அரசாங்கம்


இப்படியொரு மனநிலைமை நமக்கு ஏற்படுமா? கற்பனையில் அல்ல - நிஜத்தில் ஏற்படுமா?

ஏற்படும்! அதற்கான தசாபுத்தி நடைபெறும் காலங்களில் அப்படி ஏற்படும். அதைப் பற்றிய பாடம்தான்  இன்றையப் பாடம். படித்து மகிழுங்கள். மனதிலும் வைத்துக்கொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------------------------------
சென்ற பாடத்தில் சந்திர மகா திசையில் ராகு புத்திக்கான பலன்களைப் பார்த்தோம். திசை புத்தி வரிசைகளில்  ராகுவிற்கு அடுத்ததாக
வரிசையில் காத்துக்கொண்டிருப்பவர் குரு பகவான். இன்று
சந்திர மகா திசையில் குரு/வியாழ புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.

அது நடைபெறும் காலம் 16 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டு 4 மாதங்கள்.

இருவருமே சுபக்கிரகங்கள். மிகவும் நன்மையான பலன்கள் நடைபெறும் காலம். மகிழ்ச்சி மேலோங்கி நிற்கும். பிறகென்ன? “உலகம் பிறந்தது எனக்காக ” என்று மகிழ்ச்சியோடு அக்காலத்தை எதிர்கொள்ளுங்கள்

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம்  தரவில்லை!

தேறவே சந்திரதிசை வியாழபுத்தி
    தீங்கில்லா மாதமது பதினாறாகும்
கூறவேயிருந்த அதன்பலன் தன்னைக்கேளு
    குணமுடைய மாதர்களும் சோபனமேயுண்டாம்
சேரவே செட்டுடனே லாபமுண்டாம்
    சென்னெல்முதல் விளைவாகுஞ் செல்வம் சேரும்
வீரவே வியாதியது நிவர்த்தியாகும்
    வீரான மணியமுடன் வினையகலும்பாரே!


அடுத்து வியாழ திசையில் சந்திர புத்திக்கான பலன்கள் (அதுவும் 16 மாத காலமே) புத்திநாதன் சந்திரன்  சுபக்கிரகம். போட்டி போட்டுக்கொண்டு குருவிற்கு இணையானதொரு பலன்களை அவரும் வாரி வழங்குவார்.

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம்  தரவில்லை!

காணவே வியாழதிசை சந்திரபுத்தி
    கனமுள்ள மாதமது பதினாறாகும்
தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
    சுகமுடைய கலியாணம் சோபனங்களுண்டாம்
பேணவே சிவிகைமுத்து வெண்குடையுமுண்டாம்
    பெரிதான ராசாவால் பெருஞ்செல்வமுண்டாம்
பூணவேதாய்தந்தை மனைவியுடன் புத்திரன்
    புகழுடன் வாழ்ந்திருப்பான் பூலோகந்தன்னில்!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
25.7.2011

=================================================



வாழ்க வளமுடன்!

20.7.11

Astrology பராசக்தி முதல் வீயட்நாம் வீடுவரை ராகு அள்ளிக் கொடுத்த வெற்றிகள்

------------------------------------------------------------------------------------------
Astrology பராசக்தி முதல் வீயட்நாம் வீடுவரை ராகு அள்ளிக் கொடுத்த வெற்றிகள்
       ராகுவைப்போல கொடுப்பாருமில்லை, ராகுவைப் போல கெடுப்பாருமில்லை என்பார்கள். எனக்குத்தெரிந்தவரை 90 சதவிகித ஜாதகர்களை ராகு தன்னுடைய மகாதிசைகளிலும் அல்லது வேறு கிரகங்களின் திசைகளில் வரும் தன்னுடைய புத்திக்காலங்களில் படுத்தி எடுத்திருக்கிறார்.

      விதிவிலக்காக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரின் ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்த ராகு அற்புதமாகப் பல நன்மைகளைச் செய்தான். பெயர், பணம், புகழ் என்று அவருக்கு அனைத்தையும் வாரி வழங்கினான். திரையுலகில் அவரைச் ஜொலிக்க வைத்தான். மின்ன வைத்தான். 1952ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டுவரை அவருக்கு ராகு மகாதிசை நடைபெற்ற 18 ஆண்டு காலமும் அவரின் வாழ்க்கையில் ஒரு பொற்காலமாகும்.

      1952ஆம் ஆண்டில் வெளியான அவருடைய முதல் படமான பராசக்தி திரைப்படத்தில் இருந்து, 1970ஆம் ஆண்டு வெளியான வீயட்நாம் வீடு வரை அவர் நடித்து வெளியான ஏராளமான படங்கள் வெற்றியைக் குவித்தன. அத்துடன் அவருக்கு லட்சக்கான ரசிகர்களையும் பெற்றுத்தந்தன!

     அந்த கால கட்டத்தில் அவர் எத்தனை வெற்றிப் படங்களைத் தந்திருக்கிறார் என்று பட்டியல் இட்டுள்ளேன் பாருங்கள். வண்ண எழுத்தில் உள்ளவைகள் அதீத வெற்றி பெற்ற படங்கள்!

Paraasakthi  1952
Panam  1952
Poongodhai   1953
Thirumbi Paar   1953
Anbu  1953
Kangal  1953
Manidhanum Mirugamum 1953
Manohara  1954
Illara Jyothi  1954
Andha Naal First songless Tamil film. 1954
Kalyanam Panniyum Brammachari   1954
Thulivisham   1954
Koondukkili Only film co-starred with M. G. Ramachandran 1954
Thooku Thooki  1954
Edhir Paradhathu  1954
Kaveri  1955
Mudhal Thedhi 1955
Ulagam Palavidham 1955 
Mangayar Thilakam 1955
Kodeeswaran  1955
Kalvanin Kadhali  1955
Naan Petra Selvam  1956
Nalla Veedu  1956
Naane Raja  1956
Tenali Raman  1956
Pennin Perumai 1956
Raja Rani 1956
Amara Deepam  1956
Vaazhviley Oru Naal' 1956
Rangoon Radha  1956
Makkalai Petra Magarasi  1957
Vanangamudi 1957
Pudhaiyal  1957
Manamagan Thevai 1957
Thangamalai Ragasiyam 1957
Rani Lalithangi  1957
Ambikapathy  1957
Baagyavathi 1957
Uthama Puthiran First Dual Role 1957
Padhi Bhakti  1957
Sampoorna Ramayanam  1957
Bommai Kalyanam 1957
Annaiyin Aanai  1957
Sarangadhara 1957
Sabaash Meena  1957
Kaathavaraayan 1958
Thanga Padumai  1958
Naan Sollum Ragasiyam  1958
Thaayaippola Pillai Nooliappola Selai 1958
Veerapandiya Kattabomman Acting award at AfroAsian film festival 1958
Maragadham 1959
Aval Yaar  1959
Baga Pirivinai  1959
Irumbu Thirai  1960
Kuravanji  1960
Dheivapiravi  1960
Raja Bakthi  1960
Padikkadha Medhai  1960
Kuzhandhaigal Kanda Kudiyarasu  1960
Paavai Vilakku 1960
Pava Mannippu  1961
Punar Jenmam 1961
Pasamalar  1961
Ellam Unakkaga 1961
Sri Valli  1961
Maruthanaattu Veeran  1961
Palum Pazhamum 1961
Kappal Ottiya Thamizhan  1961
Paarthaal Pasi Theerum 1962
Nichaya Thaamboolam  1962
Valar Pirai 1962
Padithaal Mattum Podhuma  1962
Bale Pandiya First movie in three roles 1962
Vadivukku Valaikaappu 1962
Senthamarai  1962
Bandhapaasam 1962 
Aalayamani  1962
Chittoor Rani Padmini  1963
Arivaali  1963
Iruvar Ullam  1963
Naan Vanangum Dheivam 1963
Kulamagal Raadhai  1963
Paar Magale Paar 1963
Kungumam 1963
Ratha Thilagam 1963
Kalyaniyin Kanavan 1963
Annai Illam  1963
Karnan Role from Mahabharata 1964
Pachai Vilakku 1964 
Aandavan Kattalai 1964
Kai Kodutha Dheivam  1964
Pudhiya Paravai 1964

Muradan Muthu 1964
Navarathri 100th film  Portrayed 9 different roles 1964
Pazhani  1965
Anbu Karangal  1965
Santhi  1965
Thiruvilaiyadal Biggest hit of Tamil history at its time 1965
Neelavanam 1965 
Motor Sundaram Pillai  1966
Mahakavi Kalidas  1966
Thaaye Unakkaga  1966
Saraswathi Sabatham 1966
Selvam 1966
Kandhan Karunai  1967
Nenjirukkum Varai 1967
Pesum Dheivam 1967
Thangai  1967
Paaladai 1967
Thiruvarutchelvar 1967
Iru Malargal 1967
Ooty Varai Uravu 1967
Thirumal Perumai  1968

Harichandra 1968
Galatta Kalyanam 1968
En Thambi  1968

Thillana Mohanambal 1968
Enga Oor Raja 1968
Lakshmi kalyanam 1968
Uyarndha Manidhan 1968

Anbalippu  1969
Thanga Surangam 1969
Kaaval Dheivam 1969
Gurudhatchanai 1969
Anjal Petti 520 1969
Nirai Kudam 1969
Dheiva Magan ( Triple roles ) 1969
Thirudan  1969
Sivandha Mann First Tamil film to be shooted in Foreign Locations 1969
Enga Mama  1970
Ethiroli 1970

Vilaiyaattu Pillai 1970
Vietnam Veedu 1970
 
--------------------------------------------------------------------------------------------------
       முன் பாடங்களில், சந்திர மகா திசையில் அதன் சுயபுத்தி நடைபெறும் பத்து மாத காலத்திற்கான பலன்களையும், அதற்கு அடுத்து சந்திர மகா திசையில் செவ்வாயின் புத்திக்கான பலன்களையும் பார்த்தோம். இன்று சந்திர மகா திசையில் ராகு புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.

      அது நடைபெறும் காலம் 18 மாதங்கள் (அதாவது ஒன்றரை ஆண்டுகள்)

       ராகு தீய கிரகம் தன்னுடைய புத்தியில் நன்மையான பலன்களை அளிக்க மாட்டார். ஜாதகனைப் பாடாய்ப் படுத்தி விடுவார்.

      பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

பாரப்பா சந்திரதிசை ராகுபுத்தி
    பகையான நாளதுவும் மாதம்பதினெட்டாகும்
ஆரப்பா அதனுடைய பலத்தைக்கேளு
    அடங்காத சத்துருவால் தனநஷ்டமாகும்
வீரப்பா வியாதியது பீடிப்பாகும்
    விதியளவும் புத்திமதி நாசம்பண்ணும்
காரப்பா களருடனே காலிசாவாம்
    கனகமது சிலவாகும் கண்டுதேறே!


       அடுத்து ராகு திசையில் சந்திர புத்திக்கான பலன்கள் (அதுவும் 18 மாத காலமே) சந்திரன் சுபக்கிரகம் என்றாலும் தசா நாதனை மீறீ அல்லது கடாசிவிட்டு அவர் நன்மையான பலன்களைத் தர முடியாது. அது நடைபெறும் 18 மாத காலமும் தீமையானதாகவே இருக்கும். பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

காலியென்ற ராகுதிசை சந்திரபுத்தி
    கனமில்லா மாதமது ஈரொன்பதாகும்
வேலியென்ற அதன்பலனை விளம்பக்கேளு
    விதமில்லா மனைவிதன்னால் பொருளுஞ்சேதம்
வாலியென்ற குரங்கதுபோல் மாண்டுபோவான்
    வகையான தேசம்விட்டு அலைவான்பாரு
மாலியென்ற மனைவியால் சுகபோகமில்லை
    மக்கள்முதல் மாடுடன் கேடாங்கேளே1


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
20.7.2011

==============================================
வாழ்க வளமுடன்!

19.7.11

Astrology இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?

------------------------------------------------------------------------------------------
Astrology இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?

                 மெல்லிசை மன்னர்கள் திரு எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி ஆகிய இருவரும் இசையமைத்து  1961ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாக்யலக்ஷ்மி’ என்ற திரைப்படத்தில், திருமதி. பி. சுசீலா அவர்கள் தன்னுடைய  கிறங்க வைக்கும் குரலால் பாடிய பாடல் ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான பாடல் அது.   பாடலை இயற்றியவர் கவியரசர் கண்ணதாசன். அசத்தலான வரிகள் நிறைந்திருக்கும்  பாடல் அது  (சொல்லவா வேண்டும்?)

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
    காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி


என்று பாடலின் பல்லவி இருக்கும். பல்லவியைவிட சரணத்தில் வரிகள் தூக்கலாக இருக்கும். நாயகி மனக்  குறையுடன் பாடுவாள்:

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
    இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?

---------------------------------------------------------------------------------------
நான் அதை மாற்றிச் சொல்வேன்

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
    என்றுமே இன்பம் சமமாய்க் கொண்டால் என்பதை அறிவாயா தோழி?


                உண்மை. எதையும் சமமாகப் பாவிப்பவர்களைத் துன்பம் அணுகாது. எல்லா மகாதிசைகளும் (Major Periods)

                 எல்லா புத்திகளும் (Sub Periods) அவர்களுக்கு ஒன்றாகத்தான் இருக்கும்
-------------------------------------------------------------------------------------------------
               முன் பாடத்தில், சந்திர மகா திசையில் அதன் சுயபுத்தி நடைபெறும் பத்து மாத காலத்திற்கான பலன்களைப்  பார்த்தோம். அதற்கு அடுத்து சந்திர மகா திசையில் செவ்வாயின் புத்தி. ஏழு மாத காலம் அது நடைபெறும். செவ்வாய் சந்திரனுக்கு நட்புக்கிரகம் என்றாலும் தன்னுடைய புத்தியில் நன்மையான பலன்களை அளிக்க மாட்டார். ஜாதகனைப் பாடாய்ப் படுத்தி விடுவார்.

             பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம்  தரவில்லை!

தானென்ற சந்திரதிசை செவ்வாய்புத்தி
   தன்மையில்லா நாளதுவும் மாதம் ஏழு
வானென்ற அதன்பலனைச் சொல்லக்கேளு
   வாதமுடன் கிரந்திபித்தம் வாய்வுரோகம்
ஏனென்ற கள்ளரால் கோபமுண்டாம்
   எளிதான் ஏந்திழையால் துக்கமுண்டாம்
கோனென்ற கோதையரும் சகோதரத்தால்
   கொடுமைகளு முண்டாகும் கூர்ந்துபாரே!


            இதற்கு நேர்மாறாக செவ்வாய் மகா திசையில், சந்திரன் தன்னுடைய புத்திக்காலத்தில் (அதுவும் ஏழு மாதங்கள்தான்) நன்மையான பலன்களை வாரிவழங்குவார். நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களே!

            பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம்  தரவில்லை!

பூணுவான் செவ்வாய்திசையில் சந்திரபுத்தி
    புகழான நாளதுவும் மாதம்யேழு
ஆணுவான் அதன்பலனை அன்பாய்க்கேளு
    ஆயிழையா ளருகிந்து செல்வபதியாவான்
கோணுவான் கொடியோர்கள் வணக்கஞ்செய்வார்
    கொற்றவனே குவலயத்தில் பேர்விளங்கும்
ஊணுவான் தோகையரும் புத்திரருமுண்டாம்
    உத்ததொரு குலதெய்வம் உறுதிகாணே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
19.7.2011

========================================

வாழ்க வளமுடன்!