மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

7.6.22

யாரிந்த மாமனிதர்?


யாரிந்த மாமனிதர்?

செல்வச் செழிப்பு மிக்க செட்டிநாட்டு நகரத்தார் குடும்பத்தில் 1907-ம் ஆண்டு ஜூலை 28 அன்று ஆவிச்சி செட்டியார், லட்சுமி ஆச்சி தம்பதியின் மகனாகக் காரைக்குடியில் பிறந்து, வளர்ந்தவர் மெய்யப்பன். 

அப்பாவின் கண் பார்வை பாதிக்கப்பட்டதால் அவரது வியாபாரத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆகவே, எட்டாம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்துக்கொண்டு, தந்தையின் வியாபார ஸ்தலமான ஏ.வி.அண்ட் சன்ஸ் கடையில் அவருக்கு உதவ ஆரம்பித்தார். இது காரைக்குடியில் அந்நாட்களில் புகழ்பெற்ற கார், சைக்கிள் உதிரி பாகங்கள் விற்கும் கடையாக இருந்தது. 

வியாபார விசியமாக சென்னை செல்லும்போதெல்லாம் அங்கங்கே இசைத்தட்டுகளுக்கு வரவேற்பு இருப்பதைக் கண்டு,
தன் தந்தையாரின் அனுமதியுடன் ஸ்டில் கேமராவுக்கான பிலிம் ரோல்கள், கிராமபோன் ரெக்கார்டுகள் உள்ளிட்ட அரிதான பொருட்களைச் சென்னையில் வாங்கிவந்து கடையின் விற்பனையைப் பெருக்கினார். விற்பனைக்காக அவர் வாங்கிவரும் கிராமபோன் ரெக்கார்டுகளைத் தானும் கேட்டு இசை ரசனையை வளர்த்துக்கொண்ட மெய்யப்பன், சிறந்த ரெக்கார்டுகளை வாடிக்கையாளர்களுக்குப் பரிந்துரைத்த தருணம்தான் மெய்யப்பன் என்ற கலைஞன் பிறக்கக் காரணமாக அமைந்தது.

தொட்டது துலங்கவே, கிராமபோன் நிறுவனத்தின் தென்னிந்திய உரிமையைப் பெற்ற மெய்யப்பன், சென்னையில் முதன்முறையாக தன் வியாபாரத்தை மவுண்ட் ரோடில்  ‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’என்ற வியாபார ஸ்தாபனத்தை நிறுவி, ரெக்கார்டுகளின் விற்பனையோடு மட்டுமல்லாமல், கிராமஃபோன் இசைத்தட்டுகளை உற்பத்திசெய்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

பேசும்படங்களின் வரத்தையும், இசைத்தட்டுகள் திரைப்படத்தின் ஒரு அங்கமாக மாறியதையும் கண்ட அவர், 
அதில் உள்ள தொழில்நுட்பங்களை கற்றார்.
"நாம் ஏன் திரைப்படத் தொழிலுக்குள் நுழையக் கூடாது?" என்று நினைத்தவர் கொஞ்சமும் தயங்காமல் களத்தில் குதித்தார்.  

அது 1935-ம் வருடம். தென்னிந்தியப் பேசும் படங்கள் அனைத்தும் கொல்கத்தாவில் தயாராகி வந்தன. எனவே, மெய்யப்பனும் கல்கத்தாவுக்கே சென்றார். 
அங்கே ‘நியூ தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில்’படப்பிடிப்புத் தளம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் அரங்கம் அமைத்துத் தனது முதல் முயற்சியான ‘அல்லி அர்ஜுனா’வைப் (1935) படமாக்கினார். 

தனது முதல் முயற்சிக்காக அவர் தொடங்கிய நிறுவனத்தின் பெயர் சரஸ்வதி சவுண்ட் புரெடக்‌ஷன்ஸ். இயக்கியதுடன் தானே படத்தைத் தொகுத்து வெளியிட்டார். மெய்யப்பனின் கன்னி முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஆனால், அவர் துவண்டுவிடவில்லை.

கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த அவர், தனது நண்பர்களைப் பங்குதாரர்களாகக் கொண்டு ‘பிரகதி ஸ்டூடியோஸ்’ என்னும் நிறுவனத்தைச் சென்னையில் அமைத்தார். தரமான கேமரா, இறக்குமதி செய்யப்பட்ட பிளேபேக் கருவிகள், கதை, சினேரியோ(திரைக்கதை), நடிகர்கள் தேர்வு ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்துக்கொண்டார். 

திட்டமிடலும் செயலாக்கமும்தான் சினிமா என்பதைத் தனது இரண்டாவது முயற்சியிலேயே உணர்ந்து அதை அங்குலம் அங்குலமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்இரண்டாம் உலகப் போர் உச்சம் பெற்றிருந்த அந்தக் காலகட்டத்தில் சென்னையில் மின்சார விநியோகம் பெரும் பிரச்சினையாக மாறியதால், காரைக்குடியின் தேவகோட்டை ரஸ்தாவுக்குத் (சாலை) தனது ஸ்டூடியோவை மாற்றினார். அதற்கு ‘ஏ.வி.எம் ஸ்டூடியோஸ்’என்று பெயரிட்டார். அங்கிருந்துதான் ‘நாம் இருவர்’(1947), ‘வேதாள உலகம்’(1948) ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறினார்.

சாதனைகளின் சாம்ராஜ்யத்தை விரிவாக்க, சென்னையில்  காடாகக் கிடந்த கோடம்பாக்கத்தின் வடபழனி பகுதியில், குதிரை லாயம் வைத்திருந்த இடத்தை வாங்கி, நிலத்தைச் சீரமைத்து மெய்யப்பன் உருவாக்கியதுதான், சாதனைகளின் சாம்ராஜ்யமாக விளங்கும் இன்றைய ஏ.வி.எம். ஸ்டூடியோ. 

முதல் பின்னணிப் பாடல் முயற்சி, முதல் பின்னணிக்குரல், முதல் மொழிமாற்றுப் படம் (டப்பிங்), வங்காள, சிங்கள மொழிகளில் படத் தயாரிப்பு, ப. நீலகண்டன், பீம்சிங் எஸ்.பி.முத்துராமன் எனப் பல புகழ்பெற்ற இயக்குநர்களை உருவாக்கியது, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெயலலிதா வரை ஐந்து முதல்வர்கள் பணியாற்றிய நிறுவனம் என்ற தனித்த பெருமை என எழுத்தில் அடங்காத சாதனைகளைப் படைத்த முன்னோடிதான் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.      

அவர் உருவாக்கிய ஏவிஎம்,  மகன்களால் பெரும் ஆலமரமாக விரிந்தது.
ஆனால் நவீன பொழுதுபோக்கு அம்சங்களில், சினிமா தயாரிப்பும், தியேட்டர்களும் தட்டுத்தடுமாற,  ஏவிஎம் உருவாக்கிய ஏவிஎம் ஸ்டுடியோ ,
இன்று பாகப்பிரிவினையாகி, ப்ளாட்களாக மாற தொடங்கிவிட்டது காலத்தின் கோலம்.

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.5.22

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்!



இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்!

எம் ஜி ஆர் அவர்களுக்கு தினமும்
ஆயிர கணக்கில் கடிதம் வருவதுண்டு
அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்கிறார்.

காரில் கோட்டைக்கு போய் கொண்டே படிக்கிறார். அது ஒரு திருமண பத்திரிகை. அந்த திருமண பத்திரிகையில் எந்த ஒரு இடத்திலும் புரட்சிதலைவர் பேரோ அல்லது கட்சிக்காரர் பேரோ அல்லது தான் யார் என்ன விவரம் என்று இணைப்பு கடிதம் கூட இல்லாமல் வந்த திருமண பத்திரிகை மட்டும் இருந்தது. உதவி கேட்க வில்லை கலந்து கொள்ள கோரிக்கை இல்லை.. 

மனதில் ஏதோ தோன்றிய எம்ஜியார் பிறகு தன் ரகசிய காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வர சொல்லி இந்த பத்திரிகை அனுப்பியது யார் அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் சேகரிக்க சொல்கிறார். பத்திரிகையில் இருந்த முகவரி கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் திரையரங்கம் அருகில் சென்று பார்க்கும் போது அந்த அரங்கத்தின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில் ஒரு செருப்பு தெய்க்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிகிறது. அவர் செருப்பு தெய்க்கும் உபகரணங்களுடன் சாமி படங்கள் கூட இல்லாமல் அந்த பெட்டியின் மேல நம் இதய தெய்வம் படம் மட்டும் ஒட்ட பட்டு இருந்தது விவரங்களை கேட்ட பொன்மனம் தன் மகள் திருமணம் நடக்கும் விஷயம் தனக்கு தெரிய வேண்டும் ஆனால் அதற்கு எந்த உதவியும் கேட்காத அந்த உண்மை தொண்டனை நினைத்து உருகுகிறார்.

திருமண நாளும் வந்து விட்டது. காலை 9.00 மணிக்கு முகூர்த்தம். 8.45 மணி அளவில் காவல் துறை அணிவகுப்பு அந்த ஏழை தொழிலாளி வீட்டு முன்னால் காரணம் தெரியாமல் விழிக்கும் திருமண வீட்டார். மணமகன் தாலி கையில் எடுக்கும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னால் வந்து இறங்குகிறார் வாத்தியார். 4777 வாகனம் அந்த எளியவன் வீட்டு முன்னால் வந்து நிற்பதை அந்த பகுதி மக்கள் மற்றும் பத்திரிகை அனுப்பிய அந்த தொண்டன் எதிர்பார்க்கவில்லை. கண்கள் கலங்கி இதயம் நொறுங்கி நின்ற தொண்டனுக்கு அள்ளி கொடுத்து விட்டு நீ மட்டும்தான் சொல்லாமல் கொள்ளாமல் செய்வாயா நானும் கூட தான் என்று காலை உணவை அங்கே முடித்து கொண்டு புறப்படுகிறார்  அதிசய பிறவியான எம்ஜியார்.

செருப்பு தெய்க்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தது போல மதுரைவீரனில் நடித்து மட்டும் வாழ வில்லை நடப்பிலும் வாழ்ந்தார் வாத்தியார்...

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.5.22

உதிரிப்பூக்கள் என்ற அற்புதமான படத்தை எழுதி இயக்கியவர்!!!!


உதிரிப்பூக்கள் என்ற அற்புதமான படத்தை எழுதி இயக்கியவர்!!!!

இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இவருக்கு அலெக்ஸாண்டர் என பெயர் வைத்தனர்.

இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார்.

1958-ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார்.

"நம் கல்லூரியில் பலர் காதலிக்கிறார்கள். பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் சினிமாவில் காதலியோடு பாடுகிறார். ஊரே ரசிக்கிறது'' என்று பெசினார்.

இதை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், "நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர், வாழ்க'' என்று எழுதி கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார். கல்லூரியில் படிக்கும் போதே கையெழுத்து பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார்.

சட்டக் கல்லூரியில் படிக்க சென்னை வந்தவர், இனமுழக்கம் பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தார். அதில் சினிமா விமர்சனமும் எழுதினார்.

"இன்பக்கனவு'' நாடகத்தில் நடித்தபோது கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர், பூரண குணம் அடைந்து மீண்டும் நடிக்கப் போவது பற்றி அறிவிக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.

அந்தக் கூட்டத்துக்கு மகேந்திரன் சென்றுருந்தார். அவரைப் பார்த்த எம்.ஜி.ஆர், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானே'' என்று கேட்டார். மகேந்திரன், "ஆமாம்'' என்றார்.

"நாளை என்னை வீட்டில் வந்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வேலை தருகிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

மறுநாள் காலை மகேந்திரன், ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றார். மகேந்திரனுக்கு தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்து கல்கியின் "பொன்னியின் செல்வன்'' நாவலை திரைக்கதை எழுதச் சொன்னர் எம்.ஜி.ஆர்.

பொன்னியின் செல்வனை படமாக்கும் திட்டம் தள்ளிப் போனதால் தனது நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.

"அனாதைகள்'' என்ற நாடகத்தை எழுதித் தந்தார் மகேந்திரன். அந்த நாடகத்தை "வாழ்வே வா'' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்து கதாநாயகியாக சவித்திரியையும் ஒப்பந்தம் செய்தார். பைனான்சியர் இறந்ததால் படம் பாதியில் நின்றுவிட்டது.

இந்த நிலையில் தான் நடித்த "காஞ்சித் தலைவன்'' படத்தில் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக மகேந்திரனை எம்.ஜி.ஆர். சேர்த்துவிட்டார்.
1966-ம்ஆண்டு "நாம் மூவர்'' படத்திற்கு மகேந்திரன் கதை எழுதினார். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அதே தயாரிப்பில் வெளியான "சபாஷ் தம்பி'', "பணக்காரப்பிள்ளை'' ஆகிய படங்களுக்கு மகேந்திரன் கதை எழுதினார். சிவாஜி கணேசன் நடித்த "நிறைகுடம்'' படத்திற்கும் கதை எழுதினார்.

"நிறைகுடம்'' படம் நிறைவடைந்ததும், "துக்ளக்'' பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதி வந்தார். அங்கு "சோ''வை பார்க்க வந்த நடிகர் செந்தாமரையும், சிவாஜி நாடக மன்ற இயக்குனருமான எஸ்.ஏ.கண்ணனும் மகேந்திரனிடம் ஒரு நாடகம் எழுதித்தரும்படி கேட்டனர்.

மிகவும் கண்டிப்பான போலீஸ் அதிகாரிக்கு ஒரு அயோக்கியன் மகனாக இருக்கிறான் என்று தொடங்கி கதையை சொன்னார் மகேந்திரன். உடனே அதை நாடகமாக எழுதித்தரும்படி செந்தாமரை கேட்டுக்கொண்டார்.

"இரண்டில் ஒன்று'' என்ற பெயரில் ஐந்து நாட்களில் நாடகத்தை எழுதி முடித்தார், மகேந்திரன். அந்த நாடகம் அரங்கேற்றமானது. எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் செந்தாமரை நடித்தார்.

நாடகத்தை பார்க்க வந்த சிவாஜி, "சிவாஜி நாடக மன்றம் மூலம் இந்த நாடகத்தை நடத்தலாம், அதில் எஸ்.பி.சவுத்ரியாக நான் நடிக்கிறேன்'' என்று கூறினார். "இரண்டில் ஒன்று'' என்ற பெயர் "தங்கப்பதக்கம்'' என்று மாற்றப்பட்டது. சிவாஜிகணேசன், எஸ்.பி.சவுத்ரியாக நடிக்க, மியுசிக் அகாடமியில் நாடகம் அரங்கேற்றப்பட்டது. 100-வது நாளாக நாடகம் நடந்தபோது, மகேந்திரனுக்கு சிவாஜிகணேசன் மோதிரம் அணிவித்தார்.

"தங்கப்பதக்கம்'' நாடகத்தை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக எடுத்தது. கதை-வசனம் மகேந்திரனுடையது. பி.மாதவன் டைரக்ட் செய்தார்.

எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் சிவாஜி வாழ்ந்து காட்டினார். படம் மகத்தான வெற்றி பெற்றது. இந்தப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது.

அதனைத் தொடர்ந்து "திருடி'' என்ற படத்திற்கு கதையும், "மோகம் முப்பது வருஷம்'' படத்திற்கு திரைக்கதை வசனமும் எழுதினார் மகேந்திரன்.

ஆடுபுலி ஆட்டம், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷிமூலம், தையல்காரன், காளி, அவளுக்கு ஆயிரம் கண்கள், சக்கரவர்த்தி, சொந்தமடி சொந்தம், நம்பிக்கை நட்சத்திரம் ஆகிய படங்களுக்கு கதை, வசனமும், நாங்கள், அழகிய பூவே ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனமும், பருவமழை, பகலில் ஒரு இரவு, கள்ளழகர், கங்கா, ஹிட்லர் உமாநாத், சேலஞ்ச் ராமு (தெலுங்கு), தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு கதையும் எழுதினார், மகேந்திரன்.
இந்த நிலையில் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் மகேந்திரனுக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார். அண்ணன், தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து, உமா சந்திரன் எழுதிய நாவல் "முள்ளும் மலரும்.'' அதன் திரைக்கதை, வசனம், எழுதி இயக்கினார் மகேந்திரன்.

படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக ஷோபா நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இளையராஜா இசையமைக்க பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார்.

"முள்ளும் மலரும்'' மெகா ஹிட் படமாக அமைந்தது. கதை-வசன கர்த்தாவாக இருந்த மகேந்திரன், இந்த ஒரே படத்தின் மூலம் மிகச்சிறந்த இயக்குனர் என்று புகழ் பெற்றார்.

புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை'' என்கிற குறுநாவலை "உதிரிப்பூக்கள்.'' படமாக இயக்கினார். சிறந்த கலைப்படைப்பாக பாராட்டுகளை குவித்த "உதிரிப்பூக்கள்'', வசூலையும் அள்ளிக் குவித்தது. படம் 25 வாரங்கள் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.

"உதிரிப்பூக்கள்'' படத்தைத் தொடர்ந்து, மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்த படம் "பூட்டாத பூட்டுக்கள்.''. அதன் பிறகு மோகன் -சுகாசினி அறிமுகமான "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' பட்த்கை இயக்கினார். 12-12-1980-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. சென்னையில், தொடர்ந்து ஒரு வருடம் ஓடியது.

"நெஞ்சத்தைக் கிள்ளாதே'' 1980-ம் ஆண்டின் சிறந்த மாநில மொழித் திரைப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது "பிரசாத்'' ஸ்டூடியோ எஸ்.ராமநாதனுக்கும் கிடைத்தது.

1982-ல் மாஸ்கோவில் நடந்த இந்திய கலாசார விழாவிலும், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் திரையிடப்பட்டது. ரஷியா அரசாங்கம் இந்த படத்தை வாங்கி அந்த நாட்டின் தியேட்டர்களில் திரையிட்டது.

தொடர்ந்து மெட்டி, நண்டு, கண்ணுக்கு மை எழுது, அழகிய கண்ணே, ஊர் பஞ்சாயத்து, கைகொடுக்கும் கை ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் மகேந்திரன்

ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து 1980ல் வெளியான "ஜானி.'' படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு கை கொடுக்கும் கை பட்த்தை எடுத்தார்.

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியில் "சாசனம்'' என்ற படம், மகேந்திரனின், இயக்கத்தில் உருவானது. செட்டிநாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் அரவிந்தசாமி, கவுதமி, ரஞ்சிதா, ஆகியோர் நடித்திருந்தனர்.

நல்ல சினிமாவிற்கு என்னை அர்ப்பணிப்பதே என்றைக்கும் எனது சாசனமாக இருக்கும் என்று சொல்லும் இயக்குனர் மகேந்திரனின் மனைவி பெயர் ஜாஸ்மின். இவர்களது மகன் ஜான். இவர் விஜய் நடித்த "சச்சின்'' படத்தை இயக்கியவர். டிம்பிள், அனுரீட்டா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

பள்ளி, கல்லூரி காலங்களில் ஒட்டப் பந்தய்ங்களில் கலந்து கொண்டார். சீனியர் விளையாட்டு வீரராக ஜொலித்த எல்.மகேந்திரனால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டார் மகேந்திரன்.

"மெட்டி'', "நண்டு'', "எனக்கு நானே எழுதிக்கொண்டது'' முதலான புத்தகங்களை மகேந்திரன் எழுதி உள்ளார். "உதிரிப்பூக்கள்'' திரைக்கதை-வசனம், புத்தகமாக வெளிவந்துள்ளது.

2016 - ஆம் ஆண்டு விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மகேந்திரன் தொடர்ந்து, நிமிர், மிஸ்டர் சந்திரமவுலி, சீதக்காதி, பேட்ட, பூமராங் ஆகிய தமிழ்ப் படங்களிலும் கட்டமராயுடு என்கிற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.

கடிகாரம் மற்றும் தங்க நகைகள் அணியும் வழக்கம் இல்லை, மிக எளிமை விரும்பி!

கதை-வசனம் எழுதி, இயக்கும் படங்களின் முக்கியமான வேடத்துக்கு 'லட்சுமி’ என்று பெயர் சூட்டுவார். 'தங்கப்பதக்கம்’ செளத்ரியின் மனைவி, 'உதிரிப்பூக்களில்’ அஸ்வினி பெயர் லட்சுமிதான்

நடிகர் செந்தாமரையின் பெயர் தான் லட்சுமி!
தனது வாழ்க்கையின் நன்றிக்கு உரியவர்களாக எம்.ஜி.ஆர், சிவாஜி, சின்னப்பா தேவர், சோ ஆகியவர்களைக் குறிப்பிடுவார். 'என்னை இது வரையில் நடத்தி வந்தது என் மனைவி ஜாஸ்மின் ‘ என நெகிழ்ச்சியோடு குறிப்பிடுவார்!

அவர் இயக்கிய 12 படங்களில் அவருக்கே பிடித்தது 'உதிரிப்பூக்கள்’, 'பிழைகள் குறைந்த படம்’ என்பார் சிரித்துக்கொண்டே

- ஜி. பாலன்
----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.3.22

சினிமா: இரட்டை இயக்குனர்களின் கதை!!!!


சினிமா: இரட்டை இயக்குனர்களின் கதை!!!!

90 களில் நடிகர் சிவக்குமாரை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியவர்கள் தேவராஜ் & மோகன் .

இருவரும் இயக்குநர் பி.மாதவனிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள்.

பி.மாதவன் தயாரித்த பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் இயக்குநர்களாக அறிமுகமாயினர்..

தேவராஜ் முன்பே  இறந்து விட்டார். இயக்குநர் மோகன் சில வருடங்களுக்கு முன்னால் 2012 இல் அவரது வீட்டுக் குளியலறையில் வழுக்கி விழுந்து காலமானார்.

0
  
தேவராஜ் & மோகன் இயக்கிய படங்கள் அன்னக்கிளி , ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது , சிட்டுக்குருவி , ரோசாப்பூரவிக்கைக் காரி  , இசை பாடும் தென்றல், கண்ணில் தெரியும் கதைகள் ,கவிக்குயில் , சக்களத்தி , அன்பு ரோஜா , பாலூட்டி வளர்த்த கிளி, பூந்தளிர் , சாய்ந்தடம்மா சாய்ந்தாடு , உறவாடும் நெஞ்சம், வாழ நினைத்தால் வாழலாம் , உங்களில் ஒருத்தி , உறவு சொல்ல ஒருவன் , கண்மணி ராஜா 

0

தேவராஜ் & மோகன் இயக்கிய படங்களின் வெற்றிக்குப் பாடல்களின் பங்களிப்பு அதிகமிருக்கும்.

மோகனப் புன்னகை ஊர்வலமே - உறவு சொல்ல ஒருவன்

பால் நிலவு நேரம்  - அன்பு ரோஜா

ஒரு காதல் தேவதை - சாய்ந்தடம்மா சாய்ந்தாடு

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் - உறவாடும் நெஞ்சம்

சாமத்தில் பூத்த - உங்களில் ஒருத்தி

காதல் விளையாட  - கண்மணி ராஜா

வாட வாட்டுது போர்வை கேட்குது - சக்களத்தி

எந்தன் கைக்குட்டையை - இசை பாடும் தென்றல்

நான் பேச வந்தேண் - பாலூட்டி வளர்த்த கிளி

இயற்கை ரதங்களே- வாழ நினைத்தால் வாழலாம்

0

பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் இளையராஜா உதவியாளராகப் பணிபுரிந்தார்.

இப்படத்திற்காக கண்ணதாசன் ஒரு பாடல் எழுதியதை அருகிலிருந்து பார்த்த இளையராஜா விளக்குகிறார்..

நான் ஜி.கே வெங்கடேஷிடம் பணியாற்றிக் கொண்டிருந்த போது முதன் முதலாக கண்ணதாசனைச்
சந்தித்தேன்.ஜி.கே.வி கன்னடத்தில் இசையமைத்த ஒரு மெட்டைத் தமிழில் இசையமைக்கத் தீர்மானித்துப் பாடலை எழுத கண்ணதாசனை அழைத்தார். கன்னடத்தில் அந்தப் பாடல் எழுதிய பாடலாசிரியருக்கு ஒரு வாரம் பிடித்தது, ஓரளவு கடினமான மெட்டுதான்.

கண்ணதாசன் வந்தார், நான் கிடார் வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறேன். டைரக்டர் சூழலைச் சொல்லச் சொல்ல கவிஞர் கவனிக்கவே இல்லை..

புகை பிடிக்கிறார், பிடிக்கிறார் 
பிடித்து கொண்டே இருக்கார் .. 
எனக்கோ எரிச்சல் வந்தது..

டைரக்டர் சொல்லி முடிச்சதும், ஜி.கே.வெங்கடேஷைப்
பார்த்து, " சரி டியூன் என்ன ? " என்றார்.

ஜி.கே.வி: தானானனே னா னா
டியூன் கேப் விடாம போய்ட்டே இருந்தது , இன்னொரு வாட்டி கேட்டுக் கொண்டார்

தானானனே னா னா

தேன் சிந்துதே வானம்..

அப்புறம் என்ன ?

தனா தனா தானானனா

உனை எனை தாலாட்டுதே

இப்படியே தொடர்ச்சி இல்லாமல்..
மேகங்களே தரும் ராகங்களே
என்று கூறிக் கொண்டே இருந்தார்.. கடைசியா எல்லா வரிகளையும் ஒன்று சேர்த்துப் பாடிப் பார்த்தால், அந்த மெட்டுக்கு அந்தப் பாடல் அவ்வளவு அற்புதமாகப் பொருந்தியது, மெய் சிலிர்த்துப் போனேன் …
09/03/2022, 11:26 - +91 98412 76254: இயக்குனர் தேவராஜ் ஆராவயலில் தெ. நா. சி. நா. சோம. வீட்டில் பிறந்தவர். மாத்தூர் உறையூர் பிரிவை சார்ந்தவர். இயக்குனர் மாதவனிடம் 15 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். 
20 படங்கள் இயக்கியுள்ளார். 
அவரது மகன் வீட்டில் சௌகரியமாக வாழ்ந்து வந்தார். மகன் சீனியர்  டெக்னீசியனாக ராஜன் ஐ காரில் பணியாற்றினார். தேவராஜ் மாரடைப்பால் காலமானார். அவரது பிள்ளைகள் அனைவரும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.2.22

நடிகர் திலகத்தின் மேலான உழைப்பும், உயர்வும்!


நடிகர் திலகத்தின் மேலான உழைப்பும், உயர்வும்!

படப்பிடிப்பு நாளில், எந்த உடை அணிந்து நடிக்கிறாரோ, அது காட்சி முடியும் வரை கசங்காமல், அழுக்கடையாமல் பார்த்துக் கொள்வார் நடிகர்திலகம்.

ஒருசமயம் வாகினியில் ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கோடை வெயில் கொளுத்தும் வேளை அது. 
பகல் 12:00 மணியளவில் மின்வெட்டுக் காரணமாக படப்பிடிப்பு நின்று போனது. தயாரிப்பாளர் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்யவில்லை. அரங்கினுள் புழுக்கம் தாளாமல் அனைவரும் வெளியே வந்துவிட்டனர்.ஒருவர் மட்டும் உள்ளே சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார். அது நடிகர்திலகம்.
ஆம். நடிகர்திலகம் செட்டுக்குள் நுழைந்துவிட்டால் படப்பிடிப்பு இடைவேளை தவிர மற்ற சமயம் அரங்கைவிட்டு வெளியே வர மாட்டார்.
தயாரிப்பாளர் நடிகர்திலகத்திடம் சென்று " உணவு இடைவேளை விட்டு விடலாம். கரண்ட் வருவதற்கு எவ்வளவு நேரமாகுமோ, நீங்கள் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுங்கள் " என்று கூறியிருக்கிறார். அதற்கு, "ஒரு மணியாகட்டும். அதுவரை வெளியே வரமாட்டேன் " என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.சொன்னபடி ஒருமணிக்கே அரங்கைவிட்டு வெளியே வந்தார்.
அப்படி படப்பிடிப்பு தளத்தை கோவிலாக நினைத்தவர் நடிகர்திலகம்.

பாபு படப்பிடிப்பு  சென்னையில் நடந்த சமயம்,  ஒருநாள் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ரிக்ஷாவில் ஒருவரை அமர் வைத்து நடிகர்திலகம்  கடும் வெயிலில் இழுத்துக் கொண்டு செல்வதுபோல் படமாக்ககப்பட்டது. அதற்காக 'லாங் ஷாட்'டில் கூட அவர் டூப் போடவில்லை.

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ரிக்சாவை இழுத்தபடி செல்வதெல்லாம் சரிபட்டு வராது என்று நினைத்த நடிகர் திலகம் இழுத்துக் கொண்டு ஓடினார். பாலத்தின்கீழ் வந்ததும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். இயக்குநர் ACT பதறிப்போய் விட்டார். "நமக்கு பழக்கமில்லாத வேலையில்லையா... அதான் நெஞ்சில்வலி வந்து விட்டது " என்று சிரித்தபடி சொன்னார் நடிகர் திலகம்.
ஆம். செய்த தொழிலில்  உண்மையாய் இருந்தவர் நடிகர்திலகம்.

வசந்த மாளிகை வளர்ந்த நேரத்தில்தான் அய்யனின் தாயார் காலமாகிப் போனார். இறுதிக் காரியங்கள் முடிந்த நான்காம் நாள் படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார் நடிகர்திலகம்.
பதினோராம் நாள் விசேஷத்திற்கு இன்னும் நாட்கள் இருக்கும்போது,  'இப்படி வரலாமா?' என்று தயாரிப்பாளர் ராமாநாயுடு கேட்டதற்கு, " வீட்டில் இருந்தால் அம்மாவின் நினைப்பு மிகவும் வாட்டுகிறது. அங்கிருப்பதைவிட இங்கு நடித்துக் கொண்டிருந்தாலாவது படவேலை சீக்கிரம் முடியும்." என்றார் நடிகர்திலகம்.

படப்பிடிப்பு நடந்த இடம் ஊட்டி.
துயரத்தின் ரேகையே தெரியாமல் அவர் அன்று நடித்தது "மயக்கமென்ன...இந்த மௌனமென்ன" பாடல் காட்சி!
      
இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே ..
செய்யும் தொழிலை தெய்வமாய் மதித்த அய்யனின் ரசிகர்களாய் இருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே...!
நன்றி-  சினிமா ரிப்போர்டர் 1991 ஜூன்
----------------------------------------------------------------------------
படித்தேன், பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.2.22

சினிமா: ஒரு வெற்றிப் படத்தின் கதை



சினிமா: ஒரு வெற்றிப் படத்தின் கதை

இயக்குனர் ஆர் சுந்தரராஜன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

அவரது இயக்கத்தில் 'நான் பாடும் பாடல்' வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தார்கள். அவர்களிடம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக சொன்னார் ஆர் சுந்தரராஜன்.
"எனக்கு இப்போது சொந்த வீடு வேண்டும். அதை யார் வாங்கி கொடுக்கிறீர்களோ அவர்களுக்குத்தான் அடுத்த படம் செய்வேன்."

உடனடியாக ஏவிஎம் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அட்வான்ஸாக இரண்டு லட்ச ரூபாய் பணமும் வந்தது.

கொஞ்சம் தயங்கினார் ஆர் சுந்தரராஜன். "அடுத்த படத்திற்கான கதையை இன்னும் தயார் செய்யவில்லையே..!"
 
"அதைப்பற்றி பரவாயில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
இதை வாங்கிக் கொள்ளுங்கள்."
அந்தப் பணத்தை வாங்கி புது வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் கொடுத்து விட்டார் ஆர் சுந்தரராஜன்.

அடுத்த ஒரு சில நாட்களில்...
கதை தயாரானது. அதுதான் வைதேகி காத்திருந்தாள். ஏ.வி.எம்.முக்கு போய் கதையை சொன்னார் சுந்தரராஜன்.
"நல்லா இருக்கு. ஹீரோ யார் ?" 

விஜயகாந்தை போட்டால் பொருத்தமாக இருக்கும். படமும் பிரமாத வெற்றி பெறும் என்றார் சுந்தரராஜன்.

"விஜயகாந்தா ?
வேண்டாம்.
ஏற்கனவே வெளிவந்து வெற்றி பெற்ற 'நான் பாடும் பாடல்' படத்தில் சிவகுமார்தானே  ஹீரோ ? வைதேகி காத்திருந்தாள் படத்திலும் அவரையே நடிக்க வையுங்கள்."

ஆர் சுந்தரராஜன் உறுதியாகச் சொன்னார். "அந்த வெள்ளைச்சாமி கேரக்டருக்கு விஜயகாந்த்தான் பொருத்தமாக இருப்பார்."

பொறுமையாக அதைக் கேட்ட ஏ.வி.எம். : "இல்லை. அதில் எங்களுக்கு சம்மதமில்லை. அப்படியானால் நாங்கள் கொடுத்த இரண்டு லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்து விடுங்கள்."

ஆர் சுந்தரராஜன் திகைத்துப் போனார்.
ஏனெனில் ஏவிஎம் கொடுத்த அந்த பணத்தை வாங்கித்தான் புது வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் தொகையாக கொடுத்து விட்டிருந்தார் அவர். வேறு பணம் எதுவும் அவர் கைவசம் இல்லை.

என்ன செய்வதென தெரியாமல் தடுமாறினார் ஆர் சுந்தரராஜன்.
ஏவிஎம் கொடுத்த இரண்டு லட்சம் ரூபாயை எப்படி அவர்களுக்கு திருப்பி கொடுப்பது ?

அன்று மாலை வாடிய முகத்தோடு வழக்கமான வாக்கிங் சென்றபோது எதிரே வந்தார் தூயவன் என்ற கதாசிரியர்.
என்ன நடந்தது என்று உண்மையான அக்கறையோடு தூயவன் விசாரிக்க, நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் எடுத்துச் சொன்னார் ஆர் சுந்தரராஜன்.
"இவ்வளவுதானே? இதற்கு போய் ஏன் இப்படி கவலைப்படுகிறீர்கள்? வாருங்கள் என்னுடன்."

அடுத்த சில நிமிடங்களில் பஞ்சு அருணாச்சலத்தின் வீட்டில் அமர்ந்து இருந்தார்கள்.
'வைதேகி காத்திருந்தாள்' கதையை மறுபடியும் ஆர் சுந்தரராஜன் சொல்ல...
உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் ஆர் சுந்தரராஜன் கைகளில் கொடுக்கப்பட,
ஏவி எம்மிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஆர் சுந்தரராஜன்.

தூயவன் வைதேகி காத்திருந்தாள் படத்தின் தயாரிப்பாளர் ஆனார்.

வீடு வாங்க வேண்டும் என்றபோது அதற்கான பணத்தை உடனடியாக ஏவிஎம். மூலமாக கொடுத்தது இந்த பிரபஞ்சம்.
அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தபோது கொஞ்சமும் தாமதிக்காமல் உடனடியாக வேறு ஒரு தயாரிப்பாளரை தேடி கொடுத்ததும் அதே பிரபஞ்சம்.

நமக்கு எப்போது எது தேவையோ அதை நம்மிடம் கொண்டுவந்து கொடுக்க ஏதாவது ஒரு வழியை இந்த பிரபஞ்சம் எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறது.

ஆர். சுந்தரராஜனுக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே உதவுவதற்கு இந்த பிரபஞ்சம் எப்போதுமே காத்திருக்கிறது.

அதற்குத் தேவை 
அசைக்க முடியாத தன்னம்பிக்கை உள்ள மனிதர்கள் மட்டுமே!!!

படித்தேன் அகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.3.21

காலோடு கால்பின்னி எப்போது - யாருக்காக ஆடியது ?


காலோடு கால்பின்னி எப்போது - யாருக்காக ஆடியது ?

 எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை !
அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள்.

எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனை பார்த்துக் கொண்டிருந்தார்.

'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை அது.

இயற்கை எழில் கொஞ்சும் ஆற்றங்கரையில், இரு இளம் பெண்களோடு இணைந்து  ஆடிப்பாடி வருகிறார் எம்ஜிஆர்.

இதுதான் காட்சியமைப்பு.

கண்ணதாசன் கண்களை மூடியபடி சிந்தித்துக் கொண்டிருந்தார். 

அவர் கண்களுக்குள்
தேவாரம், திருவாசகம்,
சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், திருக்குறள்... அத்தனையும் ஓடி வந்து அழகாக நடனம் ஆடின.

எதை எடுப்பது, எதை விடுப்பது ? எதுவும் புரியவில்லை கண்ணதாசனுக்கு.

கண் திறந்து பார்த்தார் கண்ணதாசன். அந்த அறைக்குள் அமர்ந்திருந்து,
தன்னையே இடைவிடாமல் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் தமிழன்னையின் தரிசனத்தை கண்டு கொண்டார்.

கண் மூடி, கை கூப்பி வணங்கினார் தமிழன்னையை !
"தாயே, தமிழே ! நான் படித்த ஆயிரக்கணக்கான இலக்கியங்களில், இந்த இடத்துக்கு பொருத்தமான வரிகள் எவை தாயே ?
எடுத்துச் சொல் அன்னையே, வேண்டிக் கொள்கிறேன் உன்னையே !"

புன்னகைத்தாள் தமிழன்னை!
பொருத்தமான வரிகளை பொங்கி வரச் செய்தாள் கண்ணதாசன் உள்ளத்தில் !

மாணிக்க வாசகர் எழுதிய வரிகள், கண்ணதாசன் மனதுக்குள் வந்து ஆடின.

மாணிக்கவாசகர் மதுரை வீதியில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார். அங்கங்கே பெண்கள் மர நிழல்களில், முற்றங்களில், ஊஞ்சல்களில், அமர்ந்த வாறும், நின்றவாறும் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே சில மங்கையர் வண்ணக் கோலப் பொடி  இடிக்கிறார்கள். அப்படி  தாள லயத்தோடு உலக்கையை 
இடிக்கும்போது  அவர்கள் பாடும் பாடல் இது :

"முத்தணி கொங்கைகள் ஆட ஆட 
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச் 
சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச் 
செங்கயற் கண்பனி ஆட ஆடப் 
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப் 
பிறவி பிறரொடும் ஆட ஆட 
அத்தன் கருணை யொ டாட ஆட 
ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"

ஆஹா, ஆஹா ! தேனினும் இனிய இந்த தித்திக்கும் தமிழை தேடி எடுத்து தனக்குத் தந்த தமிழன்னையை நோக்கி மகிழ்வுடன் புன்னகை செய்தார், கரம் கூப்பி  வணங்கினார் கண்ணதாசன்.

அப்புறம் என்ன ?

எம்.எஸ்.விஸ்வநாதனை நோக்கி சொன்னார் கண்ணதாசன். "விச்சு, இது சரியா இருக்குமா பாரு."

"சொல்லுங்க கவிஞரே!"

"கட்டோடு குழலாட ஆட ஆட
கண்ணென்ற மீனாட ஆட ஆட
கொத்தோடு நகையாட ஆட ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு!"

"ஆஹா" என்றார் எம்.எஸ்.வி.

கண்ணதாசன் தொடர்ந்தார் :
"பாவாடை காற்றோடு ஆட ஆட
பருவங்கள் பந்தாட ஆட ஆட
காலோடு கால்பின்னி ஆட ஆட
கள்ளுண்ட வண்டாக நீ ஆடு!"

பொங்கி வரும் பூரிப்பில் கண்ணதாசனை கட்டி  அணைத்துக் கொண்டார்  எம்.எஸ்.வி.

காலத்தை வெல்லப் போகும் ஒரு பாடல் அந்த அறைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்க, 
வந்த தன் வேலை முடிந்ததென எவருக்கும் தெரியாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள் தமிழன்னை.

அவள் சென்ற திசை நோக்கி கை கூப்பி தொழுதார் கண்ணதாசன் :

“வட்டிக் கணக்கே 
வாழ்வென் றமைந்திருந்த 
செட்டி மகனுக்கும் 
சீர்கொடுத்த சீமாட்டி! 

தோண்டுகின்ற போதெல்லாம் 
சுரக்கின்ற செந்தமிழே 
வேண்டுகின்ற போதெல்லாம் 
விளைகின்ற நித்திலமே 

உன்னைத் தவிர 
உலகில்எனைக் காக்க 
பொன்னோ பொருளோ 
போற்றிவைக்க வில்லையம்மா! 
என்னைக் கரையேற்று 
ஏழை வணங்குகின்றேன்!”

நானும் வணங்குகின்றேன்
கண்ணதாசனை !
தமிழ்த்தாயின் தனிப் பெரும் தவப் புதல்வனை !

படித்ததில் பிடித்தது.
-----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.2.21

மதுவின் தீமைகளை பாட்டாக எழுதிய கவியரசர்!!!!


மதுவின் தீமைகளை பாட்டாக எழுதிய கவியரசர்!!!! 

*கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்: எம்ஜிஆர் போட்ட கட்டளை: நடுங்கியது  படக்குழு..* 

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்

இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர  முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் .

சங்கே  முழங்குஎன்ற படத்திற்கான பாடல் அது..! 

மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர்பாடுவதாக வரும் பாடல்

அதை , மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு  எழுதச் சொன்னால் எப்படி ..? 

சரி .. எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்..! வேறு வழி இல்லை..!  படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள்

சிரித்தார் கண்ணதாசன்

சில காலம் முன் அவர்  எழுதி இருந்த ஒரு கவிதை : "ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும் சேர்ந்திருக்கின்ற வேளையிலே 

என் ஜீவன் பிரிய வேண்டும் - இல்லையென்றால் என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே எனை படைத்த இறைவன் கேட்பான்..”

 கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதை , எம்.ஜி.ஆருக்கும் தெரியும்..! அப்படி  இருந்தும் தன்னை எம்.ஜி.ஆர் அழைக்கிறார். மதுவின் தீமைகளை விளக்கி பாடல் எழுதச் சொல்கிறார்  என்றால்

புரிந்து கொண்டார் கண்ணதாசன்

மதுவினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை மதுப்  பழக்கம் இல்லாத ஒருவனால் , அனுபவித்து எழுத முடியாது

எனவேதான் மதுக் கோப்பைக்குள் குடி  இருக்கும் தன்னை தேர்ந்தெடுத்து இந்தப் பாடலை எழுத அழைக்கிறார் எம்.ஜி.ஆர்

கண்ணதாசனுக்கு  தெளிவாக தெரிந்து போனது தயாரானார் கண்ணதாசன்

*“சிலர் குடிப்பது போலே நடிப்பார்*

*சிலர் நடிப்பது போலே குடிப்பார்”* 

கோப்பையிலிருந்து வழியும் மதுவாக ,பொங்கி வந்து விழுந்தன வார்த்தைகள்..! 

*“மதுவுக்கு ஏது ரகசியம் ?*

*அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்*

*மதுவில் விழுந்தவன் வார்த்தையை*

*மறுநாள் கேட்பது அவசியம் !”* 

ஆஹா..” என்றார் எம்.ஜி.ஆர்

அடுத்து கண்ணதாசனிடமிருந்து வழிந்த  வார்த்தைகள் :

*“அவர் இவர் எனும் மொழி*

*அவன் இவன் என வருமே”* 

கூர்ந்து கவனித்தார் எம்.ஜி.ஆர்

கண்ணதாசன் அடுத்து சொன்ன வரிகள்

*“நாணமில்லை வெட்கமில்லை*

*போதை ஏறும் போது*

*நல்லவனும் தீயவனே*

*கோப்பை ஏந்தும் போது”* 

சபாஷ்..!”-பரவசப்பட்டுப் போனார் எம்.ஜி.ஆர். இதை 

விட மதுவின் தீமைகளை எவரால் சொல்ல இயலும்..? 

கண்களை மூடியபடி கண்ணதாசன் யோசித்தார்..மதுவின் தீமைகளை சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி  சில பாஸிடிவ் விஷயங்களை சொல்ல வேண்டாமா..? 

எழுதிக் கொள்ளுங்கள்என்ற கண்ணதாசன் உதடுகளிலிருந்து  உதிர்ந்த வார்த்தைகள்

*“புகழிலும் போதை இல்லையோ*

*பிள்ளை மழலையில் போதை இல்லையோ*

*காதலில் போதை இல்லையோ*

*நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ

*மனம் மதி அறம் நெறி 

தரும் சுகம் மது தருமோ ?* 

*நீ நினைக்கும் போதை வரும்*

*நன்மை செய்து பாரு*

*நிம்மதியை தேடி  நின்றால்*

*உண்மை சொல்லிப் பாரு !”* 

சொல்லி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார் 

கண்ணதாசன்

படக் குழுவினரை ஏறிட்டுப் பார்த்தார் எம்.ஜி.ஆர். “என்ன..? கவிஞரை நான் ஏன் அழைத்தேன் என்று இப்போதாவது தெரிகிறதா..?” 

ஆம் .. யாரிடம் எதை எப்படி கேட்டு வாங்க வேண்டும்  என்ற வித்தை எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தது ;

சரி .. இப்படி எந்தச் சூழ்நிலையானாலும் அதற்கேற்ற பாடல் எழுதும் இந்த வித்தை ..அது எங்கிருந்து வந்தது கண்ணதாசனுக்கு ..? 

இதோ.. அதை  கண்ணதாசனே சொல்லி இருக்கிறார்

வட்டிக் கணக்கே

வாழ்வென் றமைந்திருந்த

செட்டி மகனுக்கும்

சீர்கொடுத்த சீமாட்டி!

 

தோண்டுகின்ற போதெல்லாம்

சுரக்கின்ற செந்தமிழே

வேண்டுகின்ற 

போதெல்லாம்

விளைகின்ற நித்திலமே

 

உன்னைத் தவிர

உலகில்எனைக் காக்க

பொன்னோ பொருளோ

போற்றிவைக்க வில்லையம்மா!

என்னைக் கரையேற்று

ஏழை வணங்குகின்றேன்!”

 

ஆஹா..!

 

*வாழ்க  கண்ணதாசன் புகழ் !

வளர்க அவர் தாலாட்டிய தமிழ் !!*

 

*நன்றி: எழுத்தாளர் :* *Vallam John*

-------------------------------------------------------

படித்ததில் பிடித்தது!!!!

அன்புடன்

வாத்தியார்

====================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.2.21

அபூர்வமான திரைப்படம்!


அபூர்வமான திரைப்படம்! 

அபூர்வ ராகங்கள் திரைபடத்தில் கேள்வியின் நாயகனே!!! என்னும் தமிழ் பாடலின் சிச்சுவேஷனை எத்தனை அழகாக கவிஞர் மற்றும் மெல்லிசை மன்னருடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் என்று பாருங்கள்?!!! 

மேடையில் பாடிக்கொண்டிருக்கும் பைரவி வயதில் இளையவரான பிரசன்னா தன்னை மணக்க நினைப்பது வெட்கம் கெட்ட செயல் என்பதை பலம் பொருந்திய வார்த்தைகளில் விளக்குவதைப் பாருங்கள்

பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று

பாலருந்தும் போதா காளை வரும்?

சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம் 

சிந்தை செய்தால் உனக்கு   பிறக்கும் வெட்கம்

தாலிக்கு மேலுமொரு தாலி உண்டா?

வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா?

கதை எப்படி? அதன் முடிவெப்படி

இப்படி பைரவியின் முடிவைக் கேட்டதும்   மேடையில் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த   பிரசன்னா சினத்துடன் பாதிப்பாடலில் எழுந்து போய் மறைவில் நின்று கொள்வார்

இப்போது  பல வருடங்களாக பைரவியை நிர்கதியாக தவிக்க விட்டுப்போன ரஜினி அங்கே அரங்கத்தின் பால்கனியில் வெளிப்படுவார், ”உன்னை ஏமாற்றிச் சென்றவன் இங்கு வந்திருக்கிறேன், உன் தரிசனம் தேடி,உன் மன்னிப்பை நாடி _பாண்டியன் என்று சீட்டு எழுதி ஒரு சிறுமியிடம் தந்து விடுவார்.

 பைரவி அதைப் படித்தவுடன் வெளிப்படும் கவிஞரின் வைர வரிகளைப் பாருங்கள்

தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை

தரும தரிசனத்தை தேடுகின்றான்,தேடுகின்றான்,தேடுகின்றான்

அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை

அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?

செல்வாளோ? செல்வாளோ?

என்று உணர்ச்சிவசப்பட்டு உடைவார் பைரவி

 பாண்டியன் செய்த தவற்றையெல்லாம் சடுதியில் மன்னித்தவர் ,அவரைக் காண மிகுந்த ஆவல் கொள்வதை பாடல் வரிகளில் இதை விட அழகாக வெளிப்படுத்த முடியுமா

இப்போது உடைந்து குரல் பிசகும் பைரவியின் மகள் வந்து அப்பாடலை தொடர்வதைப் பாருங்கள்.இப்போது பாடலின் டெம்போ எதிர்பாராத திசையில் மாற்றம் பெறுவதைப் பாருங்கள்,அதன் பாடல் வரிகளைக் கவனியுங்கள்.ஆறு மாதம் காணாத தாய் மகளின் சம்பாஷனையைக் கேளுங்கள்

ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்

பார்த்துக்கொண்டால்...அவை

ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?

இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை

இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன?

பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே

நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே

 

கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?

உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன? 

உடல் எப்படி?

முன்பு இருந்தாற்படி...

மனம் எப்படி?

நீ விரும்பும்படி... 

இப்போது பால்கனியில் நிற்கும் பாண்டியனுக்கு தாய் மகளின் தரிசனமும் கிடைத்தாயிற்று, பிடிவாதக்கார மகள் தன் மாற்றுக்கருத்து கொண்ட தாயிடமும் இணைந்தாயிற்று, இப்போது மேஜரின் அருகே இருக்கும் இருக்கை ஜெயசுதா மேடையில் சென்று அமர்ந்ததால் காலியாக இருக்கிறது. இப்போது பாடலின் மந்திர வரிகளால் அங்கே மேஜரின் மகன் பிரசன்னா மேடையிலிருந்து இறங்கிச் சென்று அங்கே அந்த இருக்கையில் அமரும் அதிசயத்தைப் பாருங்கள்

பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்

பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா

பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்

பிரியத்துடன் பக்கத்திரு முருகா

திருமுருகா...திருமுருகா... 

இவ்வரியைக் கேட்டபின்னர் கமல் மேடைப் படியிறங்கி வந்து பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருக்கும் அப்பாவின் அருகே கடக்க எண்ணி முடியாமல் அப்பா அன்புக்குக் கட்டுப்பட்டு  அமரும் அதிசயத்தைப் பாருங்கள். அங்கே தந்தை மகனுடன் கைகோர்த்து ஆனந்தப்படுவதுடன் பாடல் முடிவடையும். என்ன ஒரு பாடல்?!!! இந்தப் பாடலுக்கு யாரேனும் சிகரட் பிடிக்க எழுந்து போயிருப்பரா? என்பது சந்தேகமே!!! 

இந்த பாடல் காட்சி வேறு யாருடைய கையில்லாவது கிடைத்திருந்தால்  இந்த கிளைமைக்ஸ் காட்சிக்கு பத்து பதினைந்து காட்சிகள் தேவைப்பட்டிருக்கும் ... 

அத்தனை காட்சிகளுக்கும் உண்டான  சாரத்தை வெறும் ஏழு நிமிட பாடலுக்குள் உள்ளடக்கிய கவியசரை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது ...

 ஊதா கலரு ரிப்பன்

யாரு உனக்கு அப்பன் 

போன்ற இலக்கிய தரமான  பாடல்களும்ஹீரோ பில்டப் பாடல்களுமே நிறைந்திருக்கும் இக்கால பாடல்களை நினைத்தால்

வேதனையாகவும் இருக்கிறது ...🙄 

==============================================

படித்ததில் பிடித்தது

அன்புடன்

வாத்தியார் 

 வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!