புதிய பகுதி!
ஒரு ஜாதகம், ஒரு கேள்வி, ஒரு பதில்
அன்பர்களுக்கு வணக்கம்!
ஜாதக விதிகளை (Rules of Astrology) வலிமையாக சொல்லித் தரும் முகமாக இந்தப் பகுதியை இன்று துவங்கியுள்ளேன்.
ஜாதகங்களை வைத்துத்தான் கேள்விகளெல்லாம். ஒரு பதிவிற்கு ஒரு கேள்விதான். அதற்கான பதிலும் கூடவே வரும்.
உங்கள் மனதில் பதிவதற்கு எளிமையாக இருக்கும்!
ஜாதகம் கீழே உள்ளது.
கேள்வி: ஜாதகருக்கு திருமணம் ஆகவில்லையே - ஏன்?
பதில்: 7ல் சனி, களத்திர தோஷம். அத்துடன் குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 12ல். அதனால் அவருக்கு, மனைவி, மக்கள் என்று குடும்ப வாழ்க்கை இல்லாமல் போயிற்று.
ஜாதகர் மிகவும் பிரபலமானவர். முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!


