மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label quiz.. Show all posts
Showing posts with label quiz.. Show all posts

10.11.19

Astrology: Quiz: புதிர்: 8-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 8-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, கார்த்திகை நட்சத்திரக்காரர். உடல் நலமின்றி இருந்தார் (Severe Health Problems) ஜாதகரின் 29 வது வயதில், அதாவது அவருக்கு ராகு திசையில் சனி புத்தி துவங்கியவுடன் உடல் நலக் கோளாறுகள் அதிகமாகி பெரிய மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார்கள். அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வைத்தியம் பார்க்கத் துவங்கினாலும், பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டுத்தான் துவங்கினார்கள், கேள்வி இதுதான்: ஜாதகரின் கடுமையான உடல் நல பாதிப்பிற்கு, ஜாதகப்படி என்ன காரணம்?
ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் துலா லக்கினக்காரர். தசாநாதன் ராகு 6ம் வீட்டில் அமர்ந்துள்ளார். புத்தி நாதன் சனீஷ்வரன் நீசமாகி இருப்பதுடன் 7ம் வீட்டில் (மாரக ஸ்தானத்தில்) பாதிப்புடன் உள்ளார். அத்துடன் ஏழரைச் சனியும் நடந்து கொண்டிருந்தது. (மேஷத்தில் சனீஷ்வரன் அந்த சமயத்தில்) லக்கினாதிபதி சுக்கிரனும் விரையத்தில். கடுமையான உடல் பாதிப்பிற்கு இவைதான் காரணம், இவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 11 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 15-11-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 12 செப்டம்பர் 1968 அன்று காலை 10 மணி 17 நிமிடம் போலப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
1. நோய்க்கான ஆறாம் இடம் ராகுவால் ஆக்கிரமிப்ப்புச் செய்யப்பட்டுள்ளது. எனவே ராகுதசாவில் ஜாதகர் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.
2.ஆறாம் இடத்திற்கான குரு பாதக ஸ்தானம் ஆன சிம்மத்தில் அமர்ந்துசூரியனாலும் எரிக்கப்பட்டார். வலுவை இழந்தார்.
3. லக்கினம் மாந்தியாலும் , ராசி நீச சனியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.,கர்ம ஸ்தான அதிபதி சந்திரன் நீச சனியால் பாதிக்கப்பட்டு இருவரும் லக்கினத்தைத் தங்கள் பார்வையில் வைத்துள்ளனர்.
4.ஆயுள் காரகனான் சனி மேஷத்தில் நீசம் பெற்றார். வக்கிரமும் அடைந்தார்.
5.எட்டாம் அதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து நீசமும் பெற்றார். கேதுவாலும் பாதிக்கப்பட்டார்.
6. ஆறில் அமர்ந்த ராகுவின் தசா, கர்மகாரகனான சனியின் புக்தியில் ஜாதகர் மிகவும் மோசமான நோய் வாய்ப்பட்டார்.
Friday, November 08, 2019 6:10:00 AM
-------------------------------------------------
2
Blogger kumaran said...
வணக்கம் வாத்தியாரே ... கொடுக்கப்பட்டு உள்ள ஜாதகத்தில் துலா லக்கனம் ,லக்கனத்தில் மாந்தி , கஷ்ட பட்ட ஜீவனம் கூடவே சனி பார்வை சுபர் பார்வை என்பது லகினத்துக்கு இல்லை. கூடவே 6-இல் ராகு வேறு ருண ஸ்தானம் ,லகினத்துக்கு 1,க்கு 8க்கு குடையவர் அமர்த்த இடம் வேறு கெட்டு போய் நீச்சம் பெற்று கூடவே கேது கூட்டணி . மேற் சொன்ன காரணம் பொதுவாக ஒரு மனிதனுக்கு கஷ்ட வாழ்கை கொடுக்கும் . 6இல் அமர்த்த கிரகம் தசை ராகு வால் ஜாதகதர் கஷ்ட பட்டு உள்ளார் என்பது விதி அதேபோல் லகினத்துக்கு 11-அம அதிபதி பாதகாதிபதி சூரியன் நட்சத்திரம் கார்த்திகை சனி இன் வீட்டில் ..
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Friday, November 08, 2019 8:41:00 AM
------------------------------------------------------
3
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கொடுத்த ஜாதகரின் உடல் நல கேட்டிற்கான காரணங்கள் :
துலா லக்கினம், கார்த்திகை நக்ஷத்திரம் , மேஷ ராசி ஜாதகர்
பொதுவாக உடல் நலம் மற்றும் நோய் பற்றி அறிய ஜாதகரின் நான்காம் மற்றும் ஆறாம் இடத்தை பார்க்க வேண்டும்.
இவரின் நான்காம் இடத்து அதிபதி சனி நீசமாக , வர்கோத்தமமாக லக்கினத்திற்கு ஏழில் சந்திரனுடன் சேர்ந்து அமர்ந்து , தனது நீச பார்வையை லக்கினத்தின் மேல் செலுத்துகிறது. இது முதல் நிலை உடல் நல பாதிப்பிற்கான காரணம் ஆகும்.
மேலும் ஆறாம் இடத்தில் நோய் பற்றிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்து நோய் உருவாக்குவதை மேற்கொள்கிறது. இது தன்னுடைய தசையில் நோயினை உண்டாக தொடங்குகிறது.
சனியும் நீச மாக வர்கோத்தமமாக உள்ளதால் ராகு தசை சனி புக்தியில் நோய் உண்டானது. மேலும் ஆறாம் இடத்து அதிபதி குரு துலாம் லக்கினத்திற்கு அசுப கிரகமாகும் . அது ஆறாம் இடத்திற்கு ஆறில் உள்ளது. மேலும் நவாம்சத்திலும் லக்கினத்தில் இருந்து ஆறாம் இடத்தில் மறைந்து உள்ளார்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, November 08, 2019 1:15:00 PM
----------------------------------------------
4
Blogger sree said...
துலா லக்கினம் மேஷ ராசி . லக்கினாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதி சுக்கிரன் நீச்ச பங்க அமைப்பில் இருந்தாலும் ராகு கேதுவின் பிடியில். ஆயுள் காரகன் சனி நீச்சம் பெற்று வக்கிரம் பெற்றுள்ளார். ஒன்பதாம் அதிபதி புதன் லக்கினத்திற்கு பன்னிரெண்டில் உச்சம் பெற்று நீச்ச சுக்கிரன் மற்றும் கேதுவின் கூட்டணியில் உள்ளார். இவரது நோய்க்கான காரணத்தை ஆராய்ந்தால் ஆறாம் வீட்டில் உள்ள ராகு மற்றும் ஆறாம் பாவகத்தில் உள்ள வக்கிர சனி ஆறாம் வீட்டோன் குரு மற்றும் செவ்வாயின் பார்வை பெற்றுள்ளதால் அவருக்கு கடுமையான நோய் ஏற்பட்டிருக்க கூடும். ஆறாம் வீட்டிற்கு ராகு, சனி மற்றும் செவ்வாய் அதை தீவிரப்படுத்த ஆறாம் வீட்டோன் குருவின் பார்வை இவருக்கு உடல் நல பாதிப்பை ஏற்படுத்தியது.கோச்சார ஜென்ம சனி இதனை இன்னும் தீவிர படுத்தி அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு குறைவே .
Friday, November 08, 2019 3:09:00 PM
----------------------------------------------------------
5
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
l லக்கினாதிபதி விரயத்தில் (12ல்
2 ஆறாம் அதிபதி குரு பதினொன்றில் (ஆறாம் இடத்திற்கு ஆறில்
3 .லக்கினத்தில் மாந்தி
4 .6ஆம் இடத்தில ராகு
5 .நாலாம்திபதி சனி அந்த இடத்திற்கு நாலில் காரகன் பாவ நாசம் )
6 .உடல் காரகன் சூரியன் ஆறாம் அதிபதியுடன் சேர்ந்து கேட்டு உள்ளார்
ஆறில் அமர்த்த ராகு திசையில் சனி புத்தியில் உடல நல குறைவு ஏற்பட்டுள்ளது
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, November 08, 2019 5:57:00 PM
--------------------------------------------------------------
6
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
1. துலா இலக்கினம், மேச இராசி ஜாதகம்.
2. உயிராகிய லக்னாதிபதி சுக்கிரன் நீசமாகி விரய தானம் சென்றுள்ளார். லக்னாதிபதி ராசி மற்றும் அம்சத்தில் கேதுவின் பிடியில் அகப்பட்டு கெட்டுள்ளார். லக்னத்தில் மாந்தியும் லக்கினத்தின் மீது நீச சனியின் பார்வையும் கூடுதல் பாதிப்பு.
3. நான்காம் இடாதிபதி சனீஸ்வரன் ராசி மற்றும் அம்சத்தில் நீசம் அடைந்துள்ளார். உடல் காரகனான சந்திரனும் ராசியில் நீசனோடும், அம்சத்தில் ராகுவுடனும் சேர்ந்துள்ளார்.
இவ்விதம் உயிரும் உடலும் கடுமையாக ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த ஜாதகருக்கு கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக....
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.
Friday, November 08, 2019 8:12:00 PM
-------------------------------------------------
7
Blogger Thanga Mouly said...
ஜாதகருக்கு மாந்தி லக்கினத்தில் அமர்ந்து இருக்க, நீசச் சனி வர்க்கோத்தம நிலையில் மேலும் நீசனுக்குரிய அசுபத்ததன்மையினை ஜாதகருக்கு ஏற்படுத்துகின்றார்,
இங்கு 6ம் வீட்டில் திசா நாதன் ராகுவும், சனியானவர் தனது முழுப் பார்வையினால் லக்கினத்தினை(உடல்) பார்ப்பது, ராகு திசை சனி புத்தி நடக்கும் போது ஆரோக்கிய நிலைக்கு சவாலானது.
Saturday, November 09, 2019 5:31:00 PM
---------------------------------------------------------
8
Blogger Gowda Ponnusamy said...
அய்யா வணக்கங்கள்!
ஜாதகர் 1968, செப்டம்பர் 12ம் தேதி காலை 10-30 மணியளவில் பிறந்தவர். துரதிருஷ்டமான ஜாதகம். துலா லக்கினம், லக்கினாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து நீச்சம் அடைந்துள்ளார்.
லக்கினத்திற்க்கு சுபர் பார்வையில்லை. லக்கினாதிபதியும் உச்சமான 12ம் பதி புதனுடனும் கேது வுடனும் இணைந்து பலம் பெற்ற ராகுவின் பார்வையும் பெற்று கெட்டுவிட்டார்.
நோயை குறிக்கும் 6ம் பதி குரு பதகாதிபதி சூரியனுடனும் செவ்வாயுடனும் இணைந்து ஜாதகரை நோயில் விழ வைத்துள்ளார். யோகாதிபதி சனி நீச்சமடைந்து தேய் பிறை சந்திரனுடன் இணைந்து லக்கினத்தை பார்த்து கெடுத்து விட்டார்.
கேது கொடி பிடிக்கும் தோஷ ஜாதகம். பாவர்கள் அனைவரும் பலம் பெற்று சுபர்கள் அனைவரும் பலவீனமடைந்து விட்டதால் இந்த நிலை.
( இது போன்ற அமைப்பில் இருந்த எனது தம்பியை கடந்த மார்ச் மாதம் நாங்கள் இழக்க வேண்டியதாகி விட்டது )
அன்புடன்
-பொன்னுசாமி
Saturday, November 09, 2019 6:39:00 PM

உங்கள் தம்பியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்!
--------------------------------------------------------------------------
9
Blogger Ram Venkat said...
வணக்கம்.
துலா லக்கினம். மேஷ ராசி ஜாதகர்.
கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோச ஜாதகம்.(லக்கினம் மட்டும் வெளியிலுள்ளது).
ஜாதகரின் கடுமையான உடல் நல பாதிப்பிற்கு, ஜாதகப்படி என்ன காரணம்?
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோகஸ்தானம் எனப்படும்.
இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம்.
ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள்மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும் .
1) லக்கினாதிபதி சுக்கிரன் 12ல் நீசமடைந்து மறைவு.
2) உடலிலில் தோன்றக்கூடிய அனைத்துவகையான நோய்களைத் தெரிவிக்கும் இடமாக ஆறாம் பாவம் விளங்குகிறது. அதில் ராகு அமர்வு மற்றும் அதன் அதிபதி குரு சிம்மத்தில் அமர்ந்து கத்திரியின் பிடியில் செயலிழந்து விட்டார்.
3) 6மிடத்தில் அமர்ந்த ராகு அதிக அமிலம்சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளைநோய், குடல்புண், தோல் வியாதிகள் போன்றவற்றை அவரின் தசையில் ஏற்படுத்துவார்.
மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு ராகு தசையில் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு பாதிப்ப்டைந்தார்.
Saturday, November 09, 2019 9:17:00 PM
----------------------------------------------------------
10
Blogger Lokes said...
பிறப்பு: 12/09/1968, 10:20 AM, Chennai.
துலாம் லக்கினமாகி, லக்கினத்தை 6 இல் நீசமான சனி பார்க்க, லக்கினாதிபதி சுக்கிரன் நீச சனியுடன் இணைந்து பாபத்துவமான சந்திரனின் சாரம் வாங்கி, விரயஸ்தானத்தில் நீசமாகி, கேதுவுடன் 2 டிக்ரிக்குள் இணைந்து லக்கினமும் லக்கினாதிபதியும் வலுவிழந்த ஜாதகம். மேலும் 4 மற்றும் 5 க்குரிய யோககாரகனான சனியும் நீசமாகி, 9 க்குரிய புதன் கேதுவுடன் 5 டிக்ரிக்குள் இணைந்து 1, 5 9 ஆம் பாவம்களும் அதிபதிகளும் பலவீனமாகி உள்ளதால், உடல் நலக்குறை இருக்கும். லக்கினத்தை விட 6 ஆம் வீடு உச்சபுதனின் சாரம் பெற்று அமர்ந்த ராகுவினாலும் புதன் மற்றும் சுக்கிரனின் பார்வையாலும் வலுப்பெற்று ஜாதகரை நாள்பட்ட நோய்வாய் படுத்தியது. ராகு தசையில் ராகுவிற்கு வீடுகொடுத்த குரு தன் நட்பு கிரகமான சூரியனுடன் இணைந்து அஸ்தமனாகி 6 க்கு 6 ஆம் வீடான 11 ஆம் வீட்டில் நிற்க, ரோஹஸ்தனாதிபதி குரு புத்தியில் உடல் நலம் கெடாமல், நீசசனி புத்தியில் உடல் நலக்கோளாறு அதிகமானது. ஜாதகருக்கு நீரிழிவு நோயால் சிறுநீரகங்கம் பாதிப்பு, கால் பாதம் அழுகல் மற்றும் நிணநீர் அமைப்பில் பிரச்சனை இருந்திருக்க வாய்ப்புள்ளது. கேது புத்தியில் ஆயுள் முடிந்திருக்கும்.
Sunday, November 10, 2019 1:04:00 AM
---------------------------------------------------------------
 11
Haridoss Krishnan <doshari22@gmail.com>
ஐயா,
ஜாதகரின் சனி கிரகம் நீசம் ராசி  மற்றும் நாவம்சம் இரண்டிலும். நீசம் பெற்ற சனி லக்கினத்தை பார்க்கிறார் மேலும் லக் னா திபதி சுக்ரன் 12 ல் நீசம் .இவையெல்லாம்தான்அவரின் உடல் நல பிரச்சி னைக்கு காரணம்
=======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.11.19

Astrology: Quiz: புதிர்: 1-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 1-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, திருவாதிரை நட்சத்திரக்காரர். அடுத்தடுத்து இரண்டு முறை திருமணம்
செய்து கொண்டு, இரண்டு திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்து
விட்டது. ஊக்கமது கைவிடேல் என்று மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அந்தத் திருமணமாவது
நிலைக்குமா?
1. ஜாதகத்தை அலசி முதல் இரண்டு திருமணங்களும் கெட்டுப் போனதற்கு ஜாதகப்படி என்ன காரணம் என்பதைச் சொல்லுங்கள்.
2. அத்துடன் மூன்றாவது முயற்சி பலிக்குமா? பலித்தாலும் அதுவாவது நிலைக்குமா?
ஜாதகத்தை அலசி இந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் மகர லக்கினக்காரர். 7ம் வீடு கெட்டுப்போய் உள்ளது. செவ்வாய் மற்றும் ராகுவின் ஆதிக்கம், அத்துடன்  சனியின் பார்வை. ஏழாம் வீட்டு அதிபதி சந்திரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் - விரையத்தில் உள்ளார்,
திருமணங்கள் கெட்டுப் போனதற்கு அவைதான் முக்கிய காரணம்,Seventh Lord in the sixth (12th of 7th) could cause separation. Stability of another marriage appears doubtful, ஜாதகர் அடுத்து திருமணம் செய்து கொள்ள வில்லை.
அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

இந்தப் புதிரில் 10 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும்  எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 8-11-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
1. மகர இலக்கினம், மிதுன இராசி ஜாதகம்.
2. ஏழாம் வீட்டு அதிபதி சந்திரன் லக்னத்துக்கு ஆறிலும் தன் வீட்டிற்கு பன்னிரண்டிலும் மறைந்துள்ளார். மேலும் ஏழாம்
வீட்டில் பாதகாதிபதி செவ்வாய் நீசமடைந்து அமர்ந்துள்ளார் மற்றும் ஏழாமிடத்தில் ராகு கேதுக்களின் ஆதிக்கம். இந்த
காரணங்களால் முதல் இரண்டு திருமணம் கெட்டுப்போனது.
3. முதல் இரண்டு திருமணங்கள் குரு மகா தசையில் நடந்தது. அடுத்து வந்த சனி மகா தசையில் மூன்றாவது திருமணம்
நடந்திருக்கும். அதுவும் நிலைத்திருந்து இருக்காது. ஏனெனில் குடும்பாதிபதியாக சனீஸ்வரன் இருப்பதனால் மூன்றாவது
திருமணம் நடந்திருக்கும். ஆனால் அவரும் கேதுவின் பிடியில் அகப்பட்டு வலிமை இழந்து உள்ளார். மேலும் சனீஸ்வரன்
மேல் ராகு, பாதகாதிபதி செவ்வாயின் நீச பார்வை ஆகியவற்றால் மேலும் சனீஸ்வரன் பாதிக்கப்பட்டு உள்ளார்.
பாதகாதிபதி செவ்வாயின் எட்டாம் பார்வை குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிலும் உள்ளது ஆகிய காரணங்களால்
மூன்றாம் திருமணம் நடைபெற்றாலும் நிலைத்திருக்காது.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக....
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.
Saturday, November 02, 2019 1:29:00 AM
--------------------------------------------------------
2
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 28 ஏப்ரல் 1963 அன்று அதிகாலை 1 மணி 32 நிமிடங்கள் 30 நொர்டிகளுக்குப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை
என்று எடுத்துக்கொண்டேன்.
ஜாதகருக்கு 7ம் இடம் என்ற மனைவி ஸ்தானம் செவ்வாய் மற்றும் ராகுவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.லக்கின பாவத்தில் சனி மற்றும் கேது.எனவே 4 எதிமறை கிரகங்களின் தொடர்பு அவருடைய முதல் இரு திருமணங்களை பாதித்தன.7ம் அதிபன் சந்திரன் 6ம் இடத்தில் மறைந்தது. எனவே மனைவியிடம் பகையுணர்வு ஏற்படுத்தும்.மனஸ்தாபங்களால் பிரிவினை
ஏற்படுத்தும்.
7ம் இடத்துடன் தொடர்புடைய குரு,சனி தசா ஆகியவற்றில் முதல் இரு திருமணங்கள் நடந்தன.ஆனால் நிலைக்கவில்லை. ஜாதகருக்கு இப்போது புதன் தசா.வயது 56. திருமணம் தேவையா? வயதுக்கேற்ற பெண்
கிடைக்குமா?புதன் 6, 9க்கு உடையவர்.புதன் தசா சூரியபுக்தி 6 ஆகஸ்டு
2020. இது நல்ல நேரம் அல்ல.சூரியன் 8ம்
அதிபதி. அடுத்துவரும் புதன் தசா சந்திரபுக்தியும் ஏற்றதல்ல.(5 ஜனவரி 2022 வரை.) ஜாதகருக்கு 60 வயது நடக்கும்.
புதன் தசா குரு புக்தி 22 ஜுலை 2025ல் துவங்கும். 65 வயதில் அவருக்கு யாராவது பெண் கொடுக்க முன் வந்தால் 2025ல்
திருமணம் நடக்கலாம்.
Saturday, November 02, 2019 3:08:00 AM
------------------------------------------------------
3
Blogger Shanmugasundaram said...
The above person was born on 28/04/1963 1.30am. Seventh house lord is placed in 6th house
which is not good for marriage life moreover mars and rahu placed in 7th house.
Third marriage was not possible because lord of family life is
placed in 12th to that house.Thanks sir vazhga valamudan
Saturday, November 02, 2019 8:25:00 AM
-------------------------------------------------------
4
Blogger kumaran said...
அய்யா வணக்கம் கொடுக்க பட்டு உள்ள ஜாதகத்தில் லகினத்துக்கு
-7-இல் செவ்வாய் நீச்சம் ,கூடவே ராகு நாற்காலி
போட்டு கொண்டு அம்சமாக உள்ளார் அதுபோல் களத்திர காரகன் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை கூடவே ராகு வேறு. 7-இல் இரெண்டு கிரகம் இருதார அமைப்பு அதேபோல் 7-அம அதிபதி 6-இல் மறைவு பெற்று மாந்தி பார்ர்கிறார்
லகினத்துக்கு 12-இல் மாந்தி கட்டில் சுகம் இல்லை .அதேபோல் 7-அம் வீட்டை லகினமாக கொண்டு பார்க்கையில் 7கு 7-இல் லக்கனத்தில் சனி கேது சேர்க்கை . கேது கெடுதல் செவ்வாய் + கேது சேர்க்கை இதுவே பிரிவினைக்கு காரணம் .
3-வது திருமணம் செய்தலும் இவர்க்கு சந்தோசம் இருக்கும் காரணம் செவ்வாய் நீச்ச பங்கம் ஆகி ராஜா யோகம்
கொடுப்பார் ..
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Saturday, November 02, 2019 8:31:00 AM
------------------------------------------------------------
5
Blogger Vettipaiyan28 said...
மாந்தி எங்கே உட்காருகிறாரோ அந்த இடத்தின் பலனை கெடுத்து விடுவார்.கட்டில் சுகம் என்ற 12வது இடத்தில் மாந்தி உட்கார்ந்து,
7வது இடத்து அதிபதியாகி 6ம் இடத்தில் மறைந்த வலிமையில்லாத சந்திரனை நேர்பார்வை பார்ப்பதால் இன்னும் நிலைமை மோசம்.
7ம் இடத்தில் செவ்வாய் +ராகு இணைவு ,12ம் இட அதிபதி 3ல் மறைவு,
5ம் இட அதிபதி 3ல் மறைவு ,குரு சுக்ர தோஷம் இவையெல்லாம் பார்க்கும்போது 3வது மனைவியுடனும் வாழ்வதும் கஷ்டம்.
Saturday, November 02, 2019 9:06:00 AM
---------------------------------------------------
6
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் கேள்விக்கான பதில்
மகர லக்கினம் , திருவாதிரை நக்ஷத்திரம் , மிதுன ராசி ஜாதகர் இரண்டு
முறை திருமணம் செய்து முறிந்ததற்கு காரணம் :
1. பொதுவாக திருமண பந்தத்தை நிர்ணயிப்பது ஏழாம் இடம் என்கின்ற களத்திர ஸ்தானம் ஆகும். இவரின் ஏழாம்
இடத்தில் நின்ற செவ்வாய் நீசமாகவும், ராகுவின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. மேலும் ஏழாம் இடத்து அதிபதி சந்திரன்
ஏழிற்கு பனிரெண்டில் மறைவு, சந்திரன் லக்கினத்திலிருந்து ஆறில் மறைவு, மேலும் சந்திரன் நவாம்சத்தில் ஐந்தில்
இருந்தாலும் மாந்தியினால் மாசாகி போய் விட்டது.
2. இவருக்கு இரண்டு முறை திருமணம் நடந்த தற்கு காரணம் இவரின் ஏழாம் இடத்தின் மேல் குருவின் நேரடி பார்வை
உள்ளது. மேலும் களத்திர காரகன் சுக்கிரன் உச்சமாக குருவுடன் சேர்ந்து உள்ளதால் குரு தனது சொந்தவீட்டில்
இருந்து ஐந்தாம் பார்வையாக ஏழாம் வீட்டை பார்ப்பதால் , ஜாதகர் தனது குருவின் தசையில் இரண்டு முறை திருமணம்
செய்து கொண்டார். ஆனால் குடும்பம் அமைய நிலைக்க இரண்டாம் இடம் நன்றாக இருக்க வேண்டும்.
3. ஜாதகரின் இரண்டாம் இடத்து அதிபதி சனி தனது சொந்த வீட்டில் லக்கினத்தில் இருந்தாலும் கேதுவுடன் சேர்ந்து ராகு
பார்வை பெற்று , இரண்டாம் வீட்டிற்கு பனிரெண்டில் மறைந்து உள்ளது.
4. மேலும் இந்த ஜாதகரின் அனைத்து கிரகங்களும் ராகு கேது கட்டுப்பாட்டில் உள்ளது. இது களத்திர தோஷமாகும்.
5. இவருக்கு குருவின் பார்வையால் இரண்டு முறை திருமணம் ஆனாலும் நீச செவ்வாய் எட்டாம் பார்வையால் குடும்ப
வாழ்க்கை அமையவில்லை . மேலும் இரண்டாம் இடத்து அதிபதி சனியின் மேலும் செவ்வாய் பார்வை பெற்று விவகாரத்தில்
முடிந்தது.
ஆனால் மூன்றாவது முறையாக இவரின் லக்கின அதிபதி சனியின் தசையில் திருமணம் மீண்டும் நடைபெற்றது. இதற்கு
ஒன்பதாம் அதிபதி புதனும் உதவினார். இவரின் சனி தசை புதன் புக்தியில் இது நடந்தது.
இந்த மூன்றாவது திருமணம் நிலைத்து நின்றது ஏனென்றால் ராகு மற்றும் கேது தோஷம் இவரின் 35 வயதில் இருந்து
யோகமாக மாறி நல்லது செய்தது. ஏனென்றால் ராகு இவருக்கு லக்கினத்தில் இருந்து ஏழில் உள்ளார். சனி தசைக்கு
அடுத்து வந்த புதன் தசை, கேது தசை எல்லாம் இவருக்கு நல்ல தசைகளாக மாறி நன்மை செய்தது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Saturday, November 02, 2019 9:46:00 AM
------------------------------------------------------
7
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1.லக்கினாதிபதி கேந்திரத்தில் அமர்ந்துள்ளார்
2 லக்கினாதிபதியுடன் எத்தனை கிரகங்கள் தொடர்பு உள்ளதோ
அத்தனை பெண்களுடன் தொடர்பு ஏற்படும் என்பது ஜோதிட விதிகளில் ஓன்று
3 .சனீஸ்வரனனின் மூன்றாம் பார்வையில் அமர்ந்துள்ள குரு திசையில் சுக்கிர புத்தியில் முதல் திருமணம்
4 அந்த குரு திசையில் ஏழாம் அதிபதி சந்திர புத்தியில் இரண்டாம் திருமணம்
5 அனால் குருவே விரையாதிபதியும் ஆகிறார் மேலும் சனீஸ்வரன் இரண்டாம் இடத்திற்கு பனிரெண்டில் அமர்ந்துள்ளார்
,சந்திரன் ஆறாம் அதிபதி புதனுக்கும் செவ்வாய் ராகுவிக்கும் இடையே கத்தரி யோகத்தில் ,செவ்வாயின் நேரடி
பார்வையில் லக்கினம் ஆகவே திருமணம் விவகாரத்தில் முறிந்துள்ளது ,
6 .அடுத்து வந்த சனிதிசை புதன் புத்தியில் மூன்றாம் திருமணம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது
புதன் ஒன்பதாம் அதிபதியும் ஆகிறார்
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Saturday, November 02, 2019 10:20:00 AM
--------------------------------------------
8
Blogger seethalrajan said...
ஐயா வணக்கம், கொடுக்க பட்ட ஜாதகத்தில் லக்கினம், களத்திரம், குடும்ப ஸ்தனங்கள் மிக மிக இருள் ஆகியிருக்கின்றன. லக்கினத்தில் சனி கேது, 7ல் செவ்வாய் ராகு, என நான்கு கிரகங்களும் ஒன்றை ஒன்று தாக்கி
கொல்லும், மேலும் 2ம் வீட்டின் மேல் ராகுவுடன் சேர்ந்த செவ்வாய் பார்வை ஆக 2ம் இடமும் கேட்டு போய் உள்ளது.
ராசிக்கு 7ம் அதிபதி கேந்திரஅதிபத்ய தோஷத்தில் உள்ளார், அதோடு சுக்கிரன் மேல் சனி பார்வை, லக்னத்துக்கும், 7ம் வீட்டுக்கும் சுபர் பார்வை இல்லை. இந்த ஜாதகத்தில் புதன் மட்டும் நன்றாக உள்ளது. 49 வயதில் புதன் தசை வந்தால் களத்திரம் நிலைக்கும், அதுவரை எத்தனை திருமணம் செய்தாலும் நிலைக்காது. நன்றி.
ஐயா, எனக்கு குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி அட்டவணை அனுப்புமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
தேதி கண்டுபிடிப்பதற்ககா. நன்றி.
mail- seethal.raj87@gmail.com
Sunday, November 03, 2019 2:02:00 AM
----------------------------------------------------------
9
GOWDA PONNUSAMY <gcpeeyes@gmail.com>
date: 1 Nov 2019, 19:10
அய்யா வணக்கங்கள்
ஜாதகர் 28 ஏப்ரல் 1963 அன்று அதிகாலை 1-00 மணியளவில் பிறந்தவர். மகர லக்கின ஜாதகர். லக்கினாதிபதி சனி
ஆட்சி மற்றும் கேதுவுடன் கூட்டணி.7ல் செவ்வாய் ராஹுவுடன் இணைந்து லக்கினத்தையும் இரண்டாம்வீட்டையும் பார்க்கிறார்.7ல் நீச்ச செவ்வாய்.பாதகாதிபதியும் அவரே. 7ம் அதிபதி சந்திரன் தன் வீட்டிற்க்கு
12ல்.லக்கினத்திற்க்கு இரண்டாம் வீட்டிற்க்கு செவ்வாய் பார்வையும் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்க்கு
சனியின் பார்வையும் ஜாதகரின் திருமண வாழ்வை பங்கபடுத்தியுள்ளது. ராகு கொடிபிடிக்கும் கால சர்ப்ப ஜாதகம்.
இரண்டு திருமணங்கள் முறிந்துவிட்டது. மூன்றாவது திருமணமும் நிலைப்பது கடினமே !.சனி செவ்வய் பார்வை
நிலைக்கவிடாது.
அன்புடன்
-பொன்னுசாமி.
-------------------------------------------------------------------
10
Haridoss Krishnan <doshari22@gmail.com>
1 Nov 2019, 10:43
ஐயா லானாபதி சனி லக்கினத்தில் வலுத்திருக்கிறார் உடன்  கேது இருப்பது நல்லதல்ல மேலும் களத்திர ஸ்தானத்தில்
செவ்வாய் நீசம் நீச செவ்வாயின் பார்வை லக்கினம் மற்றும் அதன் அதிபதிக்கு. இவையெல்லாம் திருமணத்தடை
உண்டாக்கும். ஆனால் களத்திரகாரகன் சுக்ரன் உச்சம் உடன் குரு  ஆட்சி அதனால் திருமணம் நடந்தது. சனியும்
செவ்வாயும் மற்றும்கேதுவும் திருமணத்தை முறித்தனர். முறையே சனி 1 முறை மற்றும் கேது ஒரு முறை. ஆக 2 திருமணம்
முறிவு. குரு  தசையில் திருமணம் நடந்து சனி திசையில் முறிவு ஏற்பட்டிருக்கும்.
தற்போது 3-ம் திருமணம் இது பாக்யாதிபதி புதன் தசையில் திருமணத்திற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஐயா  முதல் முறை புதிருக்கு விடையளிக்கிறேன். தவறு ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!