மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 191 - 200. Show all posts
Showing posts with label Lessons 191 - 200. Show all posts

11.5.09

தலை' யைப் பற்றிய தகவல்கள்

தலை' யைப் பற்றிய தகவல்கள்

தலை' என்றவுடன் நமக்கு உடனடியாக நினைவிற்கு வருவது ரசிகர்கள் மாய்ந்து
மாய்ந்து சொல்லும் தலைகளான அஜீத் அல்லது விஜய்!

பதிவு அவர்களைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணுபவர்கள் பதிவை விட்டு
விலகவும்.

இது அவர்களைவிட முக்கியமான தலையைப் பற்றிய பதிவு
=====================================================
ஜோதிடத்தில் தலை என்று தலைப் பகுதியான லக்கினத்தைக் குறிப்பிடுவார்கள்
எண் ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பதுபோல, பன்னிரெண்டு வீடுகள்
அடங்கிய ஜாதகத்திற்கு லக்கினமே பிரதானமானது. அதுதான் தலைப் பகுதி

லக்கினத்தைப் பற்றிய பாடம் விரிவாக நடத்தப்படவுள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன் லக்கினத்தைப் பற்றி, நான்கு பதிவுகளில் எழுதிய
செய்திகளைக் கீழே கொடுத்துள்ளேன். அதைப் படித்தால்தான் அல்லது
தெரிந்து கொண்டால்தான் அடுத்து எழுதுவது விளங்கும். ஆகவே அவற்றைத்
தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

அனைவரையும் பொறுமையாகப் படித்து அவற்றை உள் வாங்கிக் கொள்ள
வேண்டுகிறேன்.

அதைத் தொடர்ந்து, லக்கினத்தைப் பற்றி விரிவாக எழுத உள்ளதைப் படியுங்கள்
===================================================
லக்னம் என்றால் என்ன?

வானம் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பெற்று, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர்
தரப்பட்டுள்ளது. மேஷம் முதல் மீனம் வரை அதற்குப் பெயர்கள் உண்டு

வானவட்டம் 360 வகுத்தல் 12 = 30 பாகைகள் = ஒரு ராசி என்பது கணக்கு.
ஆரம்ப ராசி மேஷம்தான்.

சித்திரை மாதம் மேஷம்தான் சூரியனின் உதய ராசி. சூரியன் அந்த ராசியில்
தான் உதிக்கும். வைகாசி மாதம் ரிஷப ராசியில்தான் உதிக்கும், ஆனி மாதம்
மிதுனம் ஆடி மாதம் கடகம், ஆவணி மாதம் சிம்மம், புரட்டாசி மாதம்
கன்னி, ஐப்பசி மாதம் துலாம், கார்த்திகை மாதம் விருச்சிகம், மார்கழி மாதம்
தனுசு, தை மாதம் மகரம், மாசி மாதம் கும்பம் பங்குனி மாதம் மீனம் என்று
ஒரு சுற்று முடிந்து விடும்.

ஒரு வருடமும் முடிந்து விடும். மீண்டும் அடுத்த சுற்று மறுபடியும் மேஷத்தில்
தான் ஆரம்பமாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசியை வைத்து அவர் எந்த மாதம்
பிறந்தவர் என்று சொல்லிவிடலாம். உதாரணத்திற்குச் சூரியன் சிம்ம வீட்டில்
இருந்தால் அந்த ஜாதகர் ஆவணி மாதம்தான் பிறந்தவர்.

ஆனால் லக்கினம் என்பது வேறு!.

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடம், வானத்தை
எதிர் நோக்கி இருக்கும் பகுதிதான் அந்தக் குழந்தையின் லக்கினம் ஆகும்!

லக்(கி)னம் . பெயர்ச்சொல்: சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில்
குறிப்பிட்ட நேரத்தைக் கட்டுப்படுத்தும் ராசி. Zodiacal sign influencing events
at any given time of the day with reference to the time of sunrise

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடத்தைக்கட்டுப்
படுத்தும் ராசிதான் அந்தக் குழந்தையின் லக்கினம்

லக்கினம் என்பது ஒரு ஜாதகத்தின் தலைப்பகுதி. அதுதான் முதல் வீடு.
அதிலிருந்து கடிகாரச் சுற்று வரிசையில்தான் மற்ற வீடுகளைக் கணக்கில்
கொள்வார்கள்

சித்திரை மாதம் முதல் தேதி சூரிய உதயம் முதல் அடுத்து வரும் 2 மணி நேரம்
வரை உள்ள காலத்தில் பிறந்த குழந்தையின் லக்கினம் மேஷம்தான்.
அதற்குப் பிறகு ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அடுத்தடுத்த ராசி வரிசையில்
லக்கினங்கள் அமையும்

ஆனால் சித்திரை மாதம் 16 ம் தேதி காலை சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி
நேரம் வரை தான் மேஷ லக்கினம் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தை ரிஷப
லக்கினக் குழந்தையாகும்.

இந்த வித்தியாசம் ஏன்?

ஒரு ராசி என்பது 30 பாகைகள் - ஒரு ராசியின் கால அளவு = 24 மணிகள்
வகுத்தல் 12 ராசி = 2 மணி நேரம் = 120 நிமிடங்கள்

ஆகவே ஒவ்வொரு நாள் சுழற்சியிலும் சூரியன் ஒரு பாகையைத் தாண்டி
வந்துவிடும் (4 நிமிடங்கள்) 15 நாட்களில் 15 பாகைகளைக் கடந்து விடும்
ஆகவே 15 x 4 = 60 நிமிடங்கள் அந்தத் தேதிக்குள் கழிந்துவிடும்

இப்படியே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகை வீதம்
360 நாட்களில் 360 பாகைகள் வித்தியாசத்துடன் பிறக்கும் குழந்தைகளுக்கு
அது எந்தப் பாகையில் பிறந்ததோ அந்தப் பாகையின் பகுதிதான் லக்கினம்
ஆகும்.

உங்கள் மொழியில் சொன்னால் லக்கினம்தான் தலைமைச் செயலகம்!
----------------------------------------------------------
லக்கினத்தை வைத்துதான் ஒரு மனிதனின் குணத்தை, தோற்றத்தை, அவனுடைய
ஆளூமையைச் சொல்ல முடியும்.

அழகான் தோற்றம், உடற்கட்டு, நல்ல குணம் குறிப்பாக Heroவா? அல்லது
Villainனா? என்பது போன்ற கணிப்புக்களை, பெண்ணாக இருந்தால் நாயகியா
அல்லது வில்லியா என்று தெரிந்து கொள்வதற்கு லக்கினம்தான் ஆதாரம்!

அறிவாளியா- முட்டாளா, திறமைசாலியா- சோம்பேறியா, நல்லவனா- வக்கிரம்
பிடித்தவனா, அப்பாவியா - கல்லுளிமங்கனா, சமூகத்தோடு ஒத்துப்
போகக்கூடியவனா அல்லது விதண்டாவாதம் பேசி வீணாய்ப்போகிறவனா
என்று சொவதற்கும், தோற்றத்தில் அரவிந்தசாமியா அல்லது பி.எஸ் வீரப்பாவா.
ஓமக்குச்சி நரசிம்மனா அல்லது பயில்வான் ரங்கநாதனா பெண்ணாக இருந்தால்
நயன்தாராவா அல்லது காந்திமதியா (அவரேதான் 16 வயதினில் படத்தில்
மயிலின் அம்மாவாக வருவரே அதே காந்திமதிதான்) என்று சொல்வதெல்லாம்
லக்கினத்தை வைத்துத்தான்

எல்லாவற்றையும் ஒரே நாளில் லோட் செய்தால் வண்டி கவிழ்ந்து விடும். ஆகவே
முதலில் லக்கினம் என்பது என்ன என்பதை மட்டும் மனதில் வையுங்கள்.
அதன் பலா பலன்கள் 6 பகுதிகளாகப் பின் வரும் பதிவுகளில் சொல்லிக்
கொடுக்கப்படும்!
-----------------------------------------------------
லக்னம் (Ascendant) என்பதைப் பற்றி அறிவியல் பூர்வமாக நமது வணக்கத்திற்குரிய
கூகுள் ஆண்டவர் சொன்னால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்பதற்காக
லக்கினத்தைப்பற்றி அவர் சொல்வதையும் நீங்கள் தெரிந்துகொள்வதற்கான
சுட்டியைக் கொடுத்துள்ளேன்!

http://en.wikipedia.org/wiki/Ascendant

Written on 20.3.2007

இப்போது லக்கினத்தின் அடுத்த பகுதி!

1. லக்கினத்தில் மிகவும் முக்கியம் லக்கினநாதன் என்னும் அந்த வீட்டு அதிபதி
(Owner of the lagna or lagna lord) உதாரணம் சிம்ம லக்கினத்தின்
அதிபதி சூரியன்.அவர் எங்கே போய் உட்கார்ந்திருக்கிறார் என்பது முக்கியம்.
அவருடைய சிறப்பான அமர்விடம் லக்கினத்திலிருந்து 5ம் வீடு அல்லது 9ம் வீடு
(திரிகோண வீடுகள் எனப்படும்) அதுபோல 4ம் வீடும் 7ம் வீடும் அல்லது
10ம் வீடும் சிறப்பான வீடுகளே (கேந்திரம் எனப்படும் வீடுகள்)

2. ஏழாம் வீட்டிலிருந்து லக்கினாதிபதி லக்கினத்தைப் பார்த்தால் மிகவும் சிறப்பு.
180 பாகையிலிருந்து எல்லாகிரகஙகளும் எதிர்வீட்டைப் பார்க்கும்.
The lagna lord aspecting the lagna from the
7th place will confer standing power to the native!

3. லக்கினாதிபதி லக்கினத்திலிருந்து 6ம் வீடு, 8ம் வீடு 12ம் வீடு ஆகிய வீடுகளில்
மறைந்து விடக்கூடாது! These places are inimical places (தீய இடங்கள்)
அப்படி அமர்ந்தால் வாழ்க்கை போராட்டமாக அமையும்.
(உடனே ஜாதகத்தை எடுத்துப் பார்த்துவிட்டுக் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு
அமர்ந்து விடாதீர்கள் - பல விதிவிலக்குகள் உள்ளன - வரிசையாக அவைகளும்
சொல்லித்தரப்படும்)
You should not jump to any conclusion by seeing a single rule. The houses
are to be judged by various factors which will be taught one by one

4. லக்கினாதிபதி 12ல் அமர்ந்தால் (அதாவது விரைய ஸ்தானம் எனப்படும் -
house of lossesல் அமர்ந்தால், ஜாதகன் வாழ்க்கை அவனுக்குப் பயன்படாது.
அவனைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு மட்டுமே பயன் படும்.

5. அதுபோல விரையாதிபதி that is the owner of the 12th house லக்கினத்தில்
வந்து அமர்ந்தால் -உதாரணம் சிம்ம லக்கினத்தில் - அதற்குப் 12ம் வீடான
கடகத்தின் அதிபதி சந்திரன் வந்து அமர்ந்தால் - ஜாதகன் வாழக்கை விரயமாகி
விடும். அவனுடைய வாழக்கை யாருக்கும் பயன்படாது
You should not jump to any conclusion by seeing a single rule. The houses are
to be judged by various factors which will be taught one by one

6. லக்கினாதிபதியும், விரையாதிபதியும் - ஒன்று சேர்ந்து ஜாதகத்தில் எங்கு
அமர்ந்தாலும் அது ஜாதகனுக்குப் பயன் அளிக்காது.
Both the owner of the first house and owner of the 12th associated together in
any place in the horoscope will not confer any auspicious things to the native

7. லக்கினாதிபதி உச்சம் பெறுவது மிகவும் நல்லது. example - சிம்மலக்கின
ஜாதகத்தில் சூரியன் மேஷத்தில் இருப்பது.

8. லக்கினத்தில் குரு இருப்பது மிகவும் நல்லது. It is blessed horoscope

9. அதற்கு நேர் எதிர் லக்கினத்தில் சனி இருப்பது. நல்லதல்ல!
இதற்கு மகர லக்கினமும், குமப லக்கினமும் விதிவிலக்கு ஏனென்றால் அந்த
இரண்டு லக்கினங்களுக்கும் சனி அதிபதி.

10. லக்கினத்தைச் சந்திரன் பார்த்தாலோ (7ம் பார்வை) அல்லது லக்கினத்தில்
சந்திரன் இருந்தாலோ, ஜாதகன் அழகாக இருப்பான் - பெண் என்றால் ஜாதகி
அழகாக இருப்பாள்.

11. அதே போல சுக்கிரன் லக்கினத்தில் இருந்தாலும், அல்லது பார்த்தாலும்
அழகான தோற்றத்தை கொடுப்பான்

சினிமா நடிகைகளின் ஜாதகத்தில் இந்தக் combination இருக்கும். அதனால்தான்
அவர்கள் அழகான தோற்றத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள்
சரி பரிசோதனை செய்து பார்க்கலாம் என்றால் நடிகர்களின் ஜாதகங்கள்
தாராளமாகக் கிடைக்கின்றன். நடிகைகளின் ஜாதகங்கள் கிடைப்பதில்லை!
வெளியே வராது. வயது தெரிந்துபோய் விடுமே சாமி:-))))

நடிகைகள் என்றில்லை, பெண்களின் வயதையும் ஆண்களின் வருமானத்தையும்
கண்டுபிடிக்க முடியுமா? அல்லது கேட்பதுதான் நியாயமா?

12. அதே இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் அல்லது பார்த்தால் அபரிதமான
திறமையைக் கொடுப்பான்

13. எல்லா லக்கினங்களும் சமம். ஆனால் ஒவ்வொன்றிற்கும் ஒரு அதிகப்படியான
சிறப்பு உண்டு. சிம்ம லக்கினம் Heroக்களின் லக்கினம். அந்த லக்கினக்காரர்கள்
எல்லாம் நாயகர்கள்தான் (உதாரணம் - கமல்ஹாசன், ரஜினிகாந்த ஆகிய
இருவரின் ஜாதகங்கள்)
=============================================
சிம்ம லக்கினம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நானும்
சிம்ம லக்கினம்தான்..ஹி.ஹி:-))
திரைத்துறைக்குச் சென்றால்தான் ஹீரோவா? மனதளவில் நானும்
ஹீரோதான்..ஹி.ஹி:-))
----------------------------------------------------------------------------------
14. மகர, கும்ப லக்கினக்காரர்கள் கடின உழைப்பாளிகள். சனீஸ்வரன் அந்த
லக்கினங்களின் அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையிலே கடும்
உழைப்பாளிகள். எடுத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்கள்

15. கும்ப லக்கினக்காரர்கள் இயற்கையாகவே மிகவும் நல்லவர்கள்.
அவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கலாம். அவர்கள்
நிறைகுடம் போன்றவர்கள் அதனால்தான் கும்ப ராசியின் சின்னமாகக்
குடம் வழங்கப் பெற்றுள்ளது.

பெண்களுக்கு கும்ப லக்கினம்தான் சிறந்த லக்கினம். கும்ப லக்கினப்
பெண்களை மணந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

16.கன்னி லக்கினக்காரர்கள் மற்ற எல்லா லக்கினக்கார்களையும் சுலபமாக
ஈர்த்து விடக்கூடியவர்கள். They will attract or mix with any people
or any Society easily

17.மிதுன லக்கினக்காரர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள் (உதாரணம்
- திரு.ஜெமினி கணேசன், செல்வி ஜெயலலிதா. திரு.ப. சிதம்பரம்
போன்றவர்கள்)

18. கடக லக்கினக்காரர்கள் பெரும்பாலும் அரசியல் வாழ்க்கையில்
ஈடுபடுபவர்கள். உதாரணம் - கலைஞர் மு.க, திருமதி இந்திரா காந்தி,
ஜவஹர்லால் நேரு போன்றவர்கள். அரசியல் இல்லையென்றாலும்
தலைமை தாங்கும் திறமையுடையவர்கள். நாட்டமையாக இருப்பவர்கள்

19. ரிஷபம், துலாம் லக்கினக்காரர்கள் கலைத்துறையில் பிரகாசிப்பார்கள்
(அதிபதி சுக்கிரன்). அதுபோல வாழ்க்கையை இயற்கையாகவே அனுபவிக்கக்
கூடியவர்கள். ரசனை உணர்வு மிக்கவர்கள். மெல்லிய உணர்வு மிக்கவர்கள்

20. மேஷம், விருச்சிக லக்கினக்காரர்க்ள் - செவ்வாய் அதிபதி அதனால்
போராடிப் பார்க்கும் மனப்பான்மை உள்ளவர்கள். யாருக்கும், எதற்கும்
பயப்பட மாட்டர்கள். ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில்
பரிணமிப்பவர்கள் இவர்கள்தான்.

21. தனுசு, மீன் லக்கினக்காரர்கள் - குரு அதிபதியானதால், இயற்கையாகவே
சிறந்த அறிவுடையவர்களாக இருப்பார்கள் (Keen Intelligence) Finance,
stock market, Banking, auditing, teaching, coaching போன்ற துறைகளில்
இவர்கள் பரிணமிக்கும் வாய்ப்பு இயற்கையாகவே இவர்களுக்கு இருக்கும்!

22. லக்கினாதிபதி சிறுவயது வாழ்க்கைக்கும், உடல் நலத்திற்கும் உரியவர்,
அவர் பலமாக இருந்தால் சிறுவயது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
உடல் நலமும் நன்றாக இருக்கும்

23. அவர் வலுவிழந்து இருந்தால் (உதாரணம் லக்கினாதிபதி சனி அல்லது
ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களுடன் சேர்ந்திருந்தால்
உடல் நலம் பாதிக்கப்படும்.

24. தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஒன்றுக்கு மேற்பட்ட தீய
கிரகமானால் வாழ்க்கை துன்பம் மிகுந்ததாகிவிடும்

25. கடவுள் கருணை மிக்கவர். ஜாதகத்தில் லக்கினத்தின் மூலம் உள்ள
குறைகளுக்கு அவர் நிவர்த்தியையும் கொடுத்துதான் அத்தனை ஜீவ
ராசிகளையும் பிறக்க வைக்கிறார். அதற்கு அதிரடியான சான்று - ஜாதகத்தின்
மொத்த மதிப்பெண் யாராக இருந்தாலும் 337தான்.

ஆட்டிற்கும், மாட்டிற்கும், மான்களுக்கும், கொம்பைக்கொடுத்த இறைவன்,
குதிரைக்கு ஏன் கொம்பைக் கொடுக்க வில்லை?

இதைச் சொன்னவுடன் என் நண்பர் ஒருவர் சொன்னார், "கழுதைக்கும்
கொம்பைக் கொடுக்கவில்லயே?"

நான் உடனே அவரிடம் சொன்னேன், "இல்லை இறைவன் Strengthஐ
கழுதைக்குக் கால்களில் கொடுத்துள்ளார் உதை வாங்கியவர்களுக்குத்
தெரியும் கேட்டுப்பார்"

அதற்குப் பெயர் சமப்படுத்தும் முறை!(Balancing Theory) Wealth இருக்கிறவனுக்கு
Health இருக்காது. Health இருக்கிறவனுக்கு Wealth இருக்காது. பயில்வானாக
இருக்கிறவனுக்கு மூளை Sharpஆக இருக்காது. Smart ஆக இருக்கிறவனுக்கு
உடல் பலம் மறுக்கப்பட்டிருக்கும்.

பிரதமருக்கும் 337தான், அம்பானிக்கும் 337தான். அவர்களுடைய கார்
டிரைவருக்கும் 337தான். கார் டிரைவர் Duty Time முடிந்தவுடன் தன்னுடைய
இரண்டு சக்கர வாகனத்தில் ஜாலியாக எங்கு வேண்டுமானலும் போவான்.
ஆனால் அவர்கள் Security இல்லாமல் எங்கும் செல்ல முடியாது

....................Written on 21.3.2007
========================================================
நீங்கள் பிறக்கும்போதே பன்னிரெண்டு சொந்தவீடுகளுடன்தான் பிறந்துள்ளீர்கள்.
அந்தப் பன்னிரெண்டு தொகுப்பு வீடுகள் கொண்ட இடத்தின் பெயர்தான் ஜாதகம்.

வட்டத்தின் 360 டிகிரி வகுத்தல் 12 கட்டங்கள் = 30 டிகிரி
அந்த முப்பது டிகிரிக்கு உட்பட்ட ஒரு இடம் ஒரு வீடு ஆகும்

ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு என்பார்கள்.
ஆங்கிலத்தில்,They will say them as houses.

உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது. அதுதான் தலைமைச்
செயலகம்.

அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.
மொத்தமாக சாதம், சாம்பார்,ரசம், பொரியல், தயிர் என்று
எல்லாவற்றையும் ஒன்றாக இலையில் கொட்டிவிட்டால் எப்படிச்
சாப்பிட முடியும்?

இன்று முதலாம் வீடு எனப்படும் லக்கினம் பற்றிய பாடம்!

முதல் வீட்டிலிருந்து ஒருவன் அல்லது ஒருத்தியின் தோற்றம், குணம்,
வாழ்க்கையில் அடையப்போகும் மேன்மை ஆகியவற்றைத் தெரிந்து
கொள்ளலாம்.

எல்லா லக்கினங்களுமே சமம் என்றாலும், சிம்ம லக்கினத்திற்கும் அதற்கு
எதிர்வீடான கும்ப லக்கினத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு.

அதனால்தான் சிம்ம லக்கினத்திற்கு அடையாளமாகச் சிங்கத்தையும் கும்ப
லக்கினத்திற்கு அடையாளமாக மாவிலை, தேங்காய்,சிறு செம்பு ஆகியவற்றின்
கூடிய கும்பத்தையும் அடையாளமாகக் கொடுத்துள்ளார்கள்

சிம்ம லக்கினத்தின் அதிபதி சூரியன். அதுபோல கும்ப லக்கினத்தின்
அதிபதி சனி. ஒன்றுக்கு ஒன்று எதிர்மறையான குணமுடைய லக்கினங்கள்

சிம்ம லக்கினக்காரர்கள் சமூகத்தில் அல்லது அவர்கள் இருக்கும் துறையில்
நாயகர்களாக இருப்பார்கள். (They will be Heroes)

சிம்ம லக்கினம் என்று மட்டுமில்லை சிம்ம ராசிக்காரர்களும் ஹீரோக்கள்தான்.
பெண்களாக இருந்தால் ஹீரோயினிகள்தான்.நல்ல உதாரணம் வேண்டு
மென்றால்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார்

சிம்மலக்கினக்காரர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்துடன்
இருப்பார்கள் பலரையும் கவரக்கூடிய தோற்றமாக இருக்கும்.

ஆனால் சூரியன் ஜாதகத்தில் அடிபட்டுப்போயிருந்தாலோ அல்லது
லக்கினத்தில் சனி அல்லது மாந்தி வந்து அமர்ந்திருந்தாலோ அப்படிப்பட்ட
தோற்றம் அவர்களுக்கு இருக்காது.

நவாம்சத்தில் சூரியன் கெட்டுப்போயிருந்தாலும் அதே பலன்தான்

சூரியன் என்ன தயிர்சாதமா - கெட்டுப்போவதற்கு? என்று கேட்பவர்களுக்கு
ஒரு சிறு விளக்கம். இங்கே கெட்டுப்போதல் என்னும் சொல். சூரியன்
லக்கினத்தில் இருந்து ஆறு அல்லது எட்டு அல்லது பன்னிரெண்டு ஆகிய
இடங்களில் அமர்வதையும், அதேபோல் பகை அல்லது நீச வீடுகளில் சென்று
அமர்ந்து விடுவதையும் அல்லது சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன்
சேர்ந்து விடுவதையும் குறிக்கும்.

சிம்ம லக்கினக்காரர்கள் முன் கோபக்காரர்கள்.பிடிவாதக்காரர்கள்
அவர்கள் நினைத்தால் நினைத்ததுதான். எந்த சக்தியாலும் அவர்களை மாற்ற
முடியாது. அவர்களுக்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்களை
யாரும் மடக்கிப் பிடித்துவிட முடியாது. அவர்களாக வந்தால்தான் உண்டு.
சிங்கம் தனியாக இருப்பதுபோல தனியாகத்தான் இருப்பார்கள். யாருடனும்
அதிகமான ஒட்டுதல் இருக்காது.வெளியில் ஒட்டியிருப்பதுபோல் தெரிந்தாலும்
உள் குணத்தால் பட்டும் படாமல் இருப்பார்கள்.அது வெளியே தெரியாமல்
பார்த்துக் கொள்வார்கள்

சிம்ம லக்கினத்தில், அதற்கு 4ம் வீட்டிற்கும், 9ம் வீட்டிற்கும் அதிபதியும்
(அதாவது ஒரு கேந்திர வீட்டிற்கும், ஒரு திரிகோண வீட்டிற்கும் அதிபதியானவரும்)
சிம்ம லக்கினத்திற்கு யோககாரனுமானமான செவ்வாய் கிரகம் வந்து அமர்ந்தால்
அந்த ஜாதகன் திறமைசாலியாக இருப்பான்.அவனிடம் பன்முகத் திறமை
இருக்கும். அதே பலன் லக்கினத்தில் வந்து அமராதபோதும் அந்த ஜாதகத்தில்
செவ்வாய் வலுவாக இருந்தாலும் கிடைக்கும்.

சிம்ம லக்கினத்திற்கு எதிர் வீடாகவும், முற்றிலும் மாறுதலான பலன்களைக்
கொண்டதாகவும் கும்ப லக்கினம் இருக்கும். கும்ப லக்கினக்காரர்கள்
நல்லவர்களாக இருப்பார்கள் கடும் உழைப்பாளிகள்.பொறுமைசாலிகள்.

கும்ப லக்கினப் பெண் என்றால் உயர்ந்த நற்குணங்களைக் கொண்டவளாக
இருப்பாள். அந்த லக்கினப் பெண் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அவளைத்
திருமணம் செய்து கொள்ளலாம். வாழ்க்கை அசத்தலாக இருக்கும்.

கும்ப லக்கின அதிபதியான சனி உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலோ அந்த ஜாதகன் வாழ்க்கையில் எல்லாவற்றையும்
சாதிக்கக் கூடிய சாதனையாளராக இருப்பார்.

அதேபோல கும்ப லக்கினத்திற்கு ஒரு இயற்கையான் கேடும் உள்ளது. கும்ப
லக்கினத்திற்கு லக்கின அதிபதியும் சனிதான் அதேபோல அந்த வீட்டிற்குக் கீழ்
வீடும், 12ம் வீடுமாகிய விரைய ஸ்தானத்திற்கு அதிபதியும் சனிதான். அதாவது
கும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும் அவனே - விரையாதிபதியும்
(Lord for the losses) அவனே!

ஆகவே கும்ப லக்கினத்திற்கு - either great success or great failure என்கின்ற
இரண்டு பலன்களில் ஒரு பலன் தான் வாழ்க்கையில் அமையும்!
..........Written on 17.10.2007
=====================================================
முதல் வீடு எனப்படும் லக்கினத்தைப் பற்றி ஒரு அடிப்படை விதியை நீங்கள்
அறிதல் அவசியம். ராசிகள் அட்டவனையைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று
தெள்ளத் தெளிவாக விளங்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் மட்டும்
தலா ஒரு வீடுதான்.

மற்ற ஐந்து கிரகங்களுக்கும், அதாவது புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி
ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் இருக்கும். பலன்கள்
பெரும்பாலும் அந்த கிரகங்களின் குணங்களையும் உள்ளடக்கியிருக்கும்.
உதாரணமாக மிதுனம், கன்னி ஆகிய லக்கினக்காரர்களுக்குப் புதன்தான்
அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருப்பார்கள்.
அதேபோல சனி அதிபதியாக இருக்கும் மகரம், கும்பம் ஆகிய லக்கினத்தைச்
சேர்ந்தவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.சுக்கிரன் அதிபதியாக
இருப்பவர்கள்.கலைகளில் ஆர்வமுடையவர்களாகவும், குரு அதிபதியாக
இருப்பவர்கள், மனிதநேயம், தர்மசிந்தனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
இதெல்லாம் பொது விதி!.

1. லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் - அதாவது முன்னும், பின்னும் உள்ள
வீடுகளில் - சுபக் கிரகங்கள் இருந்தால் ஜாதகன் ராஜயோகம் உடையவனாக
இருப்பான். if Lagna is hemmed between benefic planets,the native will be
fortunate.

2. அதேபோல் லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் பாவக் கிரகங்கள் நின்றால்
அல்லது இருந்தால் - ஜாதகன் அதிர்ஷ்டமில்லாதவன். தரித்திரயோகம்.
வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும் அவன் அல்லது அவள்
எதையும் போராடித்தான் பெற வேண்டும்.

இரண்டு VIP வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால் எப்படி இருக்கும்
என்றும் அல்லது இரண்டு பேட்டை தாதாக்களின் வீடுகளுக்கு நடுவில் உங்கள்
வீடு இருந்தால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பாருங்கள்,
அப்போது உண்மை உங்களுக்குப் புலப்படும்.

இந்த விதி தலையான விதியாகும்.

இது லக்கினம் என்று மட்டுமில்லை, மற்ற எல்லா பாவங்களுக்குமே இது
பொருந்தும்.

இதே பலன்தான் ஏழாம் வீடு எனப்படும் திருமண வீடாக இருந்தாலும் சரி,
பத்தாம் வீடு எனப்படும் தொழில்/வேலை வீடாக இருந்தாலும் சரி, நான்காம்
வீடு எனப்படும் தாய், கல்வி, சுகம் ஆகியவற்றிற்கான வீடாக இருந்தாலும் சரி
அல்லது ஒன்பதாம் வீடு எனப்படும் தந்தை, முன்னோர் சொத்து, பாக்கியம்
ஆகியவை சம்பந்தப்பட்ட வீடாக இருந்தாலும் சரி பலன் அதற்கு ஏற்றார்
போலத்தான் இருக்கும்.

If the said house is surrounded by good planets, the results
of the said house will be good and on the contrary,
if it is surrounded by bad or melefic planets, the results of
the said houses will be bad.

ஜாதகத்தை அலசிப் பார்க்கும் போது இந்த விதியை நினைவில்
கொண்டு அலச வேண்டும்.

அந்த விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம்

1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)
பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன் (11th Lord) ஆகிய மூவரும்
நல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன் வியாபாரம் செய்து அல்லது
தொழில் செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில்
இருந்து நிறையப் பொருள் ஈட்டுவான்.

2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)
இருவர் மட்டும் நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து வசதியாக
வாழ்வான்.

3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் - அதாவது
ஆறு எட்டு, பன்னிரெண்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டால்
அல்லது பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) அப்படியிருந்தாலும்
ஜாதகனுக்குக் கஷ்ட ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால்
விதிவிலக்காக சுக ஜீவனமாக இருப்பான்.

4.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்
(10th Lord) இருவரும் பலம் பொருந்தி கேந்திர திரிகோணங்களில்
இருந்தால் ஜாதகன் தான் பிறந்த ஊரில் அல்லது இருக்கும் ஏரியாவில்
பிரபலமாக இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான்.
...........Written on 21.11.2007

ஜோதிடம் என்பது மருந்து. Over dose ஆகிவிடக்கூடாது.
ஆகவே இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். நாளை சந்திப்போம்!

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

இந்தப் பதிவு வலை ஏற்றப்பட்ட நேரத்தைக் கவனியுங்கள்.
எல்லாம் உங்களுக்காகத்தான்!
அதோடு இன்னொன்றையும் கவனியுங்கள். இது ஜோதிடப் பாடத்தின்
200 வது பதிவு.

வாழ்க வளமுடன்!

1.5.09

சோதனை மேல் சோதனை ஏனடா சாமி?

சோதனை மேல் சோதனை ஏனடா சாமி?

வகுப்பறைப் பதிவிற்கு ஏராளமான புதியவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்
மகிழ்ச்சி.

இதுவரை சுமார் 200 பதிவுகளை எழுதியுள்ளேன். அதையெல்லாம்
ஒவ்வொன்றாகப் படித்துவிட்டுப் பிறகு தற்சமயம் நடத்தும் பாடங்களைப்
படித்தால் அவை விளங்கும். இல்லையென்றால் ஒன்றும் புரியாது.

ஆரம்பப் பள்ளியில் படிக்காத ஒருவனை, எடுத்தவுடன் உயர்நிலைப் பள்ளியில்
படிக்கவிட்டால் எப்படியிருக்கும்?

ஆகவே புதிதாக வருகிறவர்கள், முன்பு நடத்தப்பட்டுள்ள பாடங்களைப்
படிக்கவும். அடிப்படைப் பாடங்கள் தெரியாமல், இப்போது எழுதுவதைப்
புரிந்து கொள்வது மிகவும் கடினம்.

நான் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்கின்ற காலத்தில், எனக்குச் சொல்லித்
தரவெல்லாம் யாரும் இல்லை. 3 வருட காலங்கள், எனது ஓய்வு நேரத்தில்
பல போராட்டங்களுடன் ஜோதிடத்தைக் கற்றுக்கொண்டேன்.

அதற்குப் பல நூல்கள் உதவின.தொடர்ந்து பல சஞ்சிகைகளைப் படித்து வந்தேன்.

முழுத் தெளிவு பிறக்க 10 வருட காலம் ஆயிற்று.

நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல! படிப்பதும் எழுதுவதும் எனது
ஆத்மார்ந்தமான பொழுதுபோக்கு.(Hobby) ஜோதிடத்தை வைத்து, இதுவரை
ஒரு பைசாக்கூட சம்பாதித்ததில்லை. கற்றுக்கொள்ள நிறையச்
செலவழித்திருக்கிறேன்.

நேரம், பணம் இரண்டையும் நிறையச் செலவழித்திருக்கிறேன்.

நான் கற்றது மற்றவர்களுக்குப் பயன்படட்டும் என்றுதான் பதிவில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்.

பயிற்சிப் படிப்பிற்காக நிறைய ஜாதகங்களைச் சேர்த்துவைத்திருக்கிறேன்.
என்னிடம் 500ற்கும் மேற்பட்ட ஜாதகங்கள் உள்ளன. அத்தனையும் என்
உறவினர்கள் மற்றும் நணபர்களிடம் கேட்டுப் பெற்றதாகும். அத்துடன்
25 ஆண்டுகால ஜோதிட மாத இதழ்களைச் சேகரித்து வைத்துள்ளேன்.
அதில் நூற்றுக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்கள் உள்ளன.

அவற்றையெல்லாம் வைத்து ஒரு ஆய்வு செய்யலாம் என்றால் நேரம் இல்லை.
பொருள் ஈட்டல் என்னும் எனது தொழில் குறுக்கே வந்து நிற்கும்.
Marketing of all counts of cotton and synthetic yarn எனது தொழில்

ஜோதிடம் என்பது கடல். அதில் இன்றும், அதாவது இத்தனை
ஆண்டுகளுக்குப் பிறகும், நானும் ஒரு மாணவன்தான்.

ஜோதிடத்தை எந்தக் கொம்பனாலும் முழுமையாகக் கற்றுத் தேறமுடியாது.

அதற்கு ஆயுள் பற்றாது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எனக்கு ஒவ்வொரு பதிவிற்கும் வரும் பின்னூட்டங்களைத் தவிர்த்து
(That is apart from the comments to my postings) நிறையத் தனி மின்னஞ்
சல்கள் (personal mails) வருகின்றன.

சராசரியாக நாள் ஒன்றிற்குப் 10 மின்னஞ்சல்கள் வருகின்றன.

அவற்றை எழுதுபவர்கள் தங்கள் ஜாதகத்தைப் பார்த்து, என்னைப் பதில்
எழுதச் சொல்லியிருப்பார்கள். பிறப்பு விவரம் முழுமையாக இருக்காது.
அஷ்டகவர்க்கம் இருக்காது. அதையெல்லாம் நான் சரி செய்ய வேண்டும்

அத்துடன் ஒரு ஜாதகத்தைப் பார்த்து, ஒரு கேள்விக்குப் பதில் சொல்வ
தென்றால் சராசரியாக 20 முதல் 30 நிமிட நேரம் ஆகும். அத்தனை
மின்னஞ்சல்களுக்கும் எப்படிப் பதில் எழுதுவது?

இருந்தாலும் கேள்விகளின் தன்மையைப் பொறுத்துப் பலருக்கும் பதில்
எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்.

உடன் பதில் எழுத முடியாதபடி, சில கேள்விகள் இருக்கும்.

அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்காகப் பட்டியல் இட்டுள்ளேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதிகமாக வரும் கேள்வி:

"ஐயா, என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?"

எதிர்காலம் என்பது விளையாட்டா? ஒற்றை வரியில் பதில் சொல்லக்கூடிய
கேள்வியா என்ன?

இப்படிக்கேட்டுவிட்டு, அதற்குச் சிலர் உடன் சிறு குறிப்பும் எழுதியிருப்பார்கள்

"நல்ல வேலை எப்போது கிடைக்கும். அதில் முன்னேற்றம் இருக்குமா?
எனது திருமணம் எப்போது நடைபெறும்? வரவிருக்கும் மனைவி எப்படி
இருப்பாள். சொந்தத்தில் திருமணமா? அல்லது வெளியில் திருமணமா?
காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணமா?
குழந்தை பாக்கியம் எப்படி? சொந்த வீடு, வாகனங்களை எப்போது
வாங்குவேன்."

இதற்குக் குறைந்தது மூன்று மணி நேரம் ஜாகத்தை ஆய்ந்து, பத்துப்
பக்கங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்

நடக்கிற காரியமா?

ஒரு கேள்வியை வைத்துத்தான் ஒரு ஜாதகத்தை அலச முடியும்.
அலசுவதன் மூலம்தான் துல்லியமான விடை கிடைக்கும்

Accurate analysis depends a lot on your questions.
Questions asked intelligently can yield accurate analysis and prediction.

ஒரு கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, 36 கேள்விகளை உள்ளடக்கிய
எதிர்காலம்' எனும் கேள்வியைக் கேட்டால் எப்படிப் பதில் சொல்வது?

If one asks: What is my future?
That question can lead us nowhere.

ஒவ்வொரு வீட்டிற்கும் 3 இலாக்காக்கள். 12 வீடுகளுக்கும் சேர்த்து
மொத்தம் 36 இலாக்காக்கள். அத்தனை இலாக்களையும் உள்ளடக்கியது
தான் வாழ்க்கை. அதை ஒரே வரியில் எதிர்காலமாக்கியும், ஒரே வரியில்
கேட்டுத் தெரிந்து கொள்ளவும் ஆசைப்படலாம். பதில் சொல்வது
மிகவும் சிரமம்.

ஒருவருக்கு 25 வயது. இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்றால் முதலில்
ஆயுளைக் கணித்து, அவர் உயிரோடு இருக்கும் ஆண்டுகளைத் தெரிந்து
கொண்டு, அவருடைய முழு ஜாதகத்தையும் - அதாவது வீடுகளின்
தன்மையையும் எதிர் கொள்ளவிருக்கும் தசா புத்திகள், கோச்சாரங்கள்
அத்தனையையும் குறிப்பெடுத்துக்கொண்டு வருடம் வாரியாகப் பலன்
எழுதித் தரவேண்டும்.

அதை அந்தக் காலத்தில் இருந்த ஜோதிடர்கள் ஒரு வார காலம் அல்லது
பத்து நாட்கள் அமர்ந்து பலன்களை ஒரு 40 பக்க புத்தகமாக எழுதிக்
கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது அதெல்லாம் சாத்தியமில்லை. அத்தனை விவரம் தெரிந்த
ஜோதிடர்களும் இப்போது அரிது. சத்தியமாக எனக்கு அந்த அளவிற்கு
ஜோதிட அறிவும் இல்லை. பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை!

ஆகவே கேள்வி கேட்பவர்கள். ஒரே ஒரு நேரடிக் கேள்வியை மட்டும்
கேளுங்கள். Please ask only one straight question.

Just read the description of the houses and think can such a question
can be answered. Please do not confuse Astrology with Fortune telling
and abuse this science.

A good question would be;I want to change my Job?
When will there be fruitful conditions for this career change.
Will i benefit from This career change?
This question sets the astrologer mind to onething and the native is benefitted.

மாதிரிக் கேள்விகள்:

1. நான் பணக் கஷ்டத்தில் இருக்கிறேன். என்னுடைய கஷ்டம் எப்போது
தீரும்?
2. எனது திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. எனக்கு எப்போது
திருமணம் நடக்கும்?
3. நான் ஆரோக்கியமாக இல்லை. நோய்கள் படுத்துகின்றன. எனது
உடல்நிலை எப்போது சீராகும்?
4. இப்பொது இருக்கும் வேலை பிடிக்கவில்லை. நல்ல வேலை
எப்போது கிடைக்கும்?
5. வெளி நாடு சென்று பொருள் ஈட்ட ஆசைப் படுகிறேன். எனக்கு
கடல் கடக்கும் யோகம் உள்ளதா?
6. சொந்தமாக வீடு வாங்க ஆசைப் படுகிறேன் எப்போது அது
நிறைவேறும்?
7. எனக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை இல்லை.
எப்போது குழந்தைச் செல்வம் கிடைக்கும்?
8. பூர்வீகச் சொத்தில் பிரச்சினைகள் உள்ளன. அது கிடைக்குமா?
கிடைக்காதா?
9. எனக்கும் என் மனைவிக்கும் கருத்து ஒற்றுமை இல்லை.
அவள் என்னுடன் இசைந்து வாழ்வாளா அல்லது மாட்டாளா?
10. நான் செய்யும் வேலைகளுக்கு உகந்த அங்கீகாரம்
கிடைப்பதில்லை. ஏன் அப்படி?
11. வேலையை உதறிவிட்டுத் தொழில் துவங்க விரும்புகிறேன்.
செய்யலாமா?
12. எப்போதும் மன நிம்மதியின்றி அவதிப்படுகிறேன். நிம்மதியான
சூழ்நிலை எப்போது ஏற்படும்?
===========================================================
நிறைய மின்னஞ்சல்கள் காதல் திருமணம் குறித்து வருகிறது.

"ஐயா நான் ஒருவரை 2 ஆண்டுகளாகக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
எங்கள் இருவருடைய ஜாதகத்தையும் அனுப்பியுள்ளேன். திருமணம்
செய்து கொள்ளலாமா? பொருத்தமாக இருக்கிறதா?"

காதல் என்று வந்து விட்ட பிறகு, ஜாதகம் எதற்கு?
இரண்டு ஆண்டுகள் காதலித்த பிறகு, அவனை வேண்டாம் என்று சொன்னால்
அவன் சும்மா விட்டுவிடுவானா? என்னென்ன பிரச்சினைகளைக்
கிளப்புவானோ - யாருக்குத் தெரியும்?

ஆகவே பயந்த சுபாவம் என்றால் காதலிக்காதே!
துணிச்சல் இருந்தால் மட்டுமே காதலில் இறங்கு!
காதலில் இறங்கிவிட்டால் ஜாதகத்தைப் பார்க்காதே!
வருவது வரட்டும் என்று அவனை அல்லது அவளைத் திருமணம் செய்துகொள்
காதலித்தவளைக் கைப் பிடிப்பதுவரை நம் செயல், மற்றதெல்லாம்
விதிப்படி அல்லது விதித்தபடி நடக்கட்டும் என்று விட்டுவிடு.
---------------------------------------------------------------------------------------------------
இது இளம் பெண்களுக்கு மட்டும்:

ஆண்களில் பாதிப்பேர் சந்தர்ப்பவாதிகள். சுய நலவாதிகள்.
ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு.
காதலிக்கும்போது ஆடவன் ஒரு முகத்தை மட்டுமே உங்களுக்குக்
காட்டுவான்.

திருமணத்திற்குப் பிறகுதான் அவனுடைய இரண்டாவது முகம்
தெரிய வரும்.

75% காதல் உடல் ஈர்ப்பினால் மட்டுமே ஏற்படும்.

ஆகவே ஒருவன் உங்களை விரும்புவதாகக் கூறினால் உடனே
வழிந்து ஏற்றுக் கொண்டு விடாதீர்கள். அவனைப் பற்றி முழுமையாக
விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பெற்றோர்கள் சம்மதமில்லாமல் காதல் திரும்ணத்திற்கு ஒப்புக்
கொள்ளாதீர்கள். பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால்,
போராடி அவர்களை ஒப்புக் கொள்ள வையுங்கள்.

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமாகட்டும் அல்லது பெற்றோர்களுக்குத்
தெரியாத காதல் திருமணமாகட்டும், இரண்டிலுமே பிரச்சினைகள் உண்டு.

நாள் ஒன்றிற்குப் 12 லக்கினங்கள். பிறக்கும் 12 விதமான லக்கினங்களை
உடைய குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு திருமண வாழ்வில்
சிக்கல் இருக்கும்.

அதாவது சராசரியாக 6 பேர்களில் ஒருவருடைய திருமண வாழ்வு
மகிழ்ச்சியாக இல்லாமல் போய்விடும். இது ஒரு random கணக்குதான்.

சனி ஏழில் அமர்ந்தாலும், (அந்தப் பன்னிரெண்டு பேர்களில் ஒருவருக்கு
ஏழில் அமையும்) அல்லது ஏழாம் அதிபதி 12ல் அமர்ந்தாலும், அல்லது 6ற்குரிய
வில்லன் 7ல் அமர்ந்தாலும் அல்லது 7ற்குரியவன் 6ல் அமர்ந்தாலும் மணவாழ்வு
பெரும்பாலும் கசப்பில் முடிந்துவிடும். அந்தப் பெரும்பாலும் எனும் பதம்
எதற்கு என்றால் சிலருக்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கையால்
நிலைமை மாறியிருக்கலாம். ஆகவே அப்படி அமைப்புள்ளவர்கள்,
தங்கள் ஜாதகத்தைப் பல கோணங்களிலும் ஆய்வு செய்யாமல் என்னைப் பிறாண்டாதீர்கள். தற்காப்புக்காகத்தான் அந்தப் பெரும்பாலும் என்னும்
சொல்லைப் பயன் படுத்தியிருக்கிறேன்.

அப்படி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஜாதகம் உங்களுடையதாகக்
கூட இருக்கலாம். அதனால்தான் பெற்றோர்களுடைய சம்மதத்தை வாங்கிக்
கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். சிக்கலில் நிச்சயம் அவர்கள்
கை கொடுப்பார்கள்.

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

29.4.09

கழுதையும், குதிரையும்!

கழுதையும், குதிரையும்!

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. அதைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு
இதைப்படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
========================================
ஜாதகத்தில் மனைவியின் நிலை என்ன? அதாவது மனைவியின் ஸ்தானமான
7ஆம் வீட்டிற்கும் குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கும், ஜாதகத்தில்
உள்ள அமைப்பும், தொடர்பும் என்ன?

அதை இப்போது பார்ப்போம்.

ஜாதகத்தில் லக்கினம்தான் மிகவும் முக்கியமான இடம். அதைவைத்துத்தான்
எல்லாப் பலா பலன்களும்.

ஆதிகாலத்தில் அனைவரும் வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் பயன்
படுத்தினார்கள். பிற்காலத்தில் தான் கணிதத்தைப் பிரதானமாக வைத்து
அனைவரும் திருக்கணிதப் பஞ்சாங்கத்தைப் பயன் படுத்துகிறார்கள்

சில கணினி மென்பொருட்கள் திருக்கணிதத்தை மட்டுமே அடிப்படையாகக்
கொண்டு இயங்கும். சில மென்பொருட்களில் இரண்டில் ஒன்றைத் தேர்வு
செய்யும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.

அவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு:

வாக்கியத்தில் வருடத்திற்கு 360 நாட்கள் மட்டுமே.
திருக்கணிதத்தில் வருடத்திற்கு 365.25 நாட்கள்

தசா புத்திகளும் 360 நாட்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதால்.
வாக்கியமும் சரியாக இருக்கும்.

நமது வகுப்பறை மாணவர் கரூர்.திரு. தியாகராஜன் அவர்கள் உபயமாகக்
கொடுத்துள்ள மென்பொருளில், இரண்டு முறைகளிலும் ஜாதகத்தைக் கணித்துக்
கொள்ளும் வசதி உள்ளது.

அந்த மென்பொருளில், File மெனுவில் 7ஆவதாக Preference எனும் Option
உள்ளது. அதைக் கிளிக்கினால் ஒரு புது விண்டோவில் அது கிடைக்கும்

உங்கள் பார்வைக்காக அதைப் படமாகக் கொடுத்துள்ளேன்.



1. அதில் லகிரி + சவுத் இந்தியன் + 365.25 என்பது திருக்கணிதம்
2. ராமன் + சவுத் இந்தியன் + 360 நாட்கள் என்பது வாக்கியம்

சரி, இன்று காலை 6:30 மணிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது என்று வைத்துக்
கொண்டு அதன் ஜாதகத்தை, அந்த இரண்டு வழிமுறைகளிலுமே கணித்துப்
பார்ப்போம்.

கணித்தவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

படம் எண் ஒன்று

படம் எண் இரண்டு

படம் எண் ஒன்று வாக்கியப்படி கணிக்கப்பெற்றது
படம் எண் இரண்டு திருக்கணிதப்படி கணிக்கப்பெற்றதாகும்

இரண்டிலும் கிரக நிலைகள் எல்லாம் சரியாக இருப்பதைப் பாருங்கள்.
ஆனால் தசா இருப்பு மட்டும் மாறுபடுகிறது.

ராகு 14 வருடம் 9 மாதம் 18 தேதி
ராகு 16 வருடம் 11 மாதம் 16 தேதி

இரண்டிற்கும் ஏன் இந்த வித்தியாசம் என்று யாரையும் கேட்க முடியாது.
இந்த வாக்கியப் பஞ்சாங்கத்தை Formulate செய்த மேதைகள் எல்லாம்
இப்போது உயிரோடு இல்லை. யாரைப் போய்க் கேட்பது?

யாருக்கு எது ஒத்து வருகிறதோ அதை வைத்துக் கொள்ள வேண்டியதுதான்
குழப்பமில்லாமல் இருப்பதற்கு, உங்கள் வீட்டுப் பெரிசுகள், உங்கள் ஜாதகத்தை
அந்தக் காலத்து ஜோதிடரிடம் எழுதி வாங்கி வைத்திருப்பார்கள். அதோடு
ஒத்து வருவதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்

No system is perfect அதை மனதில் வையுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதில் Border Birth என்னும் கால சந்திப்பில், அதாவது இரு லக்கினங்களுக்கு
இடைப்பட்ட காலத்தில் பிறந்த குழந்தைக்கு லக்கினமே மாறிவரும்.

வாக்கியப்படி எனக்கு சிம்ம லக்கினம்
திருக்கணிதப்படி எனக்கு கடக லக்கினம் வரும்.

எங்கள் வீட்டுப் பெரியவர்கள் குறித்துவைத்துள்ளது சிம்ம லக்கினம். அதோடு
என் குணத்திற்கு ஒத்து வருவதும் அதுதான். ஆகவே நான் வாக்கியப்படி
உள்ளதையே எடுத்துக்கொண்டுள்ளேன்.
=======================================================
இதில் குழப்பத்திற்கு இடம் இல்லை.

இன்று சித்திரை மாதம் 16ஆம் தேதி
இன்றைய உதய லக்கினம் மேஷம்.
சூரிய உதயம் காலை 6:00 மணி
இன்றுவரை கழிவான லக்கின காலம் 15 நாட்கள் x 4 நிமிடங்கள்
= 60 நிமிடங்கள்
அதாவது இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலுமே
மேஷ லக்கினம். அதற்கு பிறகு 7 to 9 மணி வரை ரிஷப லக்கினம்
அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு 2 மணி நேற்றத்திற்கும் லக்கினம்
மாறிக் கொண்டே இருக்கும்.
இதில் Border Birth என்பது 6:55 முதல் 7:05 வரை பிறக்கும்
குழந்தைகளின் பிறப்பு

இதையெல்லாம் நீங்கள் கழித்துப் பார்த்து மண்டையை உடைத்துக் கொள்ள
வேண்டாம். கணினியில் இரண்டு option களிலுமேயே உங்கள் ஜாதகத்தைக்
கணித்துப் பாருங்கள். லக்கினம் இரண்டிலும் மாறாமல் இருந்தால் சரிதான்

மாறினால் வாக்கியத்தை எடுத்துக் கொள்ளூங்கள்
======================================================
இப்போது பாடத்திற்கு வருவோம்.

ஆணில்லாமல் பெண் இல்லை. பெண் இல்லாமல் ஆண் இல்லை.
அப்படியொரு ஈர்ப்பு இருபாலருக்கும் இடையே உண்டு.

அப்படியொரு பெண்ணின் தொடர்பு, சமூக மற்றும் சட்ட அமைப்பின்படி
உங்களுக்குக் கிடைக்கும்போது அதற்கு ஈடு இணையே கிடையாது.

எல்லோருக்கும் அப்படிக் கிடைத்துவிடுகிறதா என்ன?

பாதிப்பேர்களுக்கு அப்படிக்கிடைப்பதில்லை. கிடைத்ததை வைத்து
வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்களே அதிகம்.

சிலருக்குத் தேவதைகள் துணையாக வந்து சேர்வார்கள்.
சிலருக்குப் பிசாசுகள் துணையாக வந்து சேரும்.
பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல!
சிலருக்கு ஹீரோக்கள் துணையாக வந்து சேர்வார்கள்
சிலருக்கு வில்லன்கள் கணவனாக வந்து சேர்வார்கள்

அதற்குக் காரணம் என்ன?

அதுதான் ஜாதக அமைப்பு; வாங்கி வந்த வரம்!
==================================================
லக்கினமே பிரதானமானது. லக்கினத்திற்கு ஏழாம் இடம் அதற்கு
அடுத்தபடியாகப் பிரதானமானது ஆகும்.

லக்கினாதிபதி லக்கினத்தில் இருப்பதைவிட ஏழில் இருந்து லக்கினத்தைப்
பார்க்கும் அமைப்பு உன்னதமானதாகும். சிறப்புடையதாகும்.

உச்சமாகும் கிரகம், தனது உச்ச ஸ்தானத்தில் இருந்து அதன் ஏழாம்
இடத்தில் நீசமாகும். நீசத்திலிருந்து ஏழில் உச்சமாகும்.

பார்வையில் ஏழாம் பார்வை சிறப்புடையதாகும்.

இந்த அடிப்படையில்தான் லக்கினத்தின் ஏழாம் வீடு மனைவிக்கு உரிய,
பெண்ணாக இருந்தால் கணவனுக்கு உரிய இடமாக வழங்கப்பெற்றிருக்கிறது

லக்கினம் நன்றாக இருந்து, ஏழாம் வீடும் நன்றாக இருந்தால் தாம்பத்ய
வாழ்க்கை அற்புதமாக இருக்கும். ஜோடிப்பொருத்தம் அருமையாக
இருக்கும். மனைவி உங்களுக்காக உயிரையும் கொடுப்பவளாக இருப்பாள்
இல்லையென்றால் உயிரை எடுப்பவளாக இருப்பாள். அதாவது உங்களுடைய
எதிர்பார்ப்பிற்குச் சற்றும் ஏற்றவளாக இருக்க மாட்டாள்.

நல்ல மனைவியாக அமைந்து விட்டால், பார்ப்பவர்கள் Made for each other
என்பார்கள்.

எப்படிபட்ட மனைவி அமைவாள் என்பதைப் பற்றிய பாடத்தை முன்பே
நடத்திவிட்டேன். ஆகவே அதைப் பற்றி மீண்டும் எழுதவில்லை
====================================================
இப்போது ஏழாம் வீட்டிற்கும், குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கும்
உள்ள தொடர்பைப் பார்ப்போம்.

குடும்ப வாழ்க்கை என்பது பிறப்பிலிருந்து இறப்பு வரை வருவது.
25 வருட காலம் பெற்றோர்களை வைத்துக் குடும்ப வாழ்க்கை.
ஐம்பது வயதிற்கு மேல் குழந்தைகளை வைத்துக் குடும்ப வாழ்க்கை.
அதைப் பற்றி முன் பதிவில் விவரமாக எழுதியுள்ளேன்.

மனைவியால் கிடைக்கும் குடும்ப வாழ்க்கை என்பது இடைச்செருகல்
அவள் நன்றாக அமைந்தால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும்.
இல்லையென்றால் மகிழ்ச்சி குறையும்.
++++++++++++ஆனால் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போகாது.

2ஆம் வீட்டிலிருந்து 7ஆம் வீடு அதன் ஆறாம் இடமாகும்
7ஆம் வீட்டிலிருந்து 2ஆம் வீடு அதன் எட்டாம் இடமாகும்
அதாவது 6/8 Position and 8/6 Position
ஒன்றிற்கொன்று அஷ்ட சஷ்டம வீடுகள்.
என்னவொரு மோசமான அமைப்புப் பாருங்கள்

நல்ல அழகான, அனுஷ்கா சர்மா போன்ற அல்லது ஐஷ்வர்யா பச்சன்
போன்ற மனைவியே ஒருவனுக்கு அமைகிறாள் என்ற வைத்துக்
கொள்ளுங்கள். அவனுடைய 2ஆம் வீடு நன்றாக இல்லையென்றால்
என்ன ஆகும்?

ஜாதகன் குடும்பம் நடத்தமாட்டான். அவளை இங்கே விட்டு விட்டு,
அவன் பொருள் தேடி துபாய்க்குச் சென்று விடுவான். பொருள்
ஓரளவிற்குச் சேர்ந்தாலும் மனத்திருப்தியுடன் திரும்ப மாட்டான்.
நாடி தளர்ந்தபின்தான் திரும்புவான்.

திருப்தியை மட்டும் கடவுள் மனிதனுக்குக் கொடுக்கவில்லை.
அதைப் பற்றி விவரமாகப் பின்னால் எழுதுகிறேன்.

அவனை நம்பி வந்த தேவதை நிலவையும் வானத்தையும் பார்த்துக்
கொண்டு, கண்களில் நீரோடு, இங்கேயே கிடக்க வேண்டியதுதான்.
அல்லது டாலரில் விருப்பமுள்ளவளாக இருந்தால் கலர்க் கலர்க்
கனவுகளில் மிதந்தவாறு, இளமை வீணாவதை மறந்து, மல்லாக்கப்
படுத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

சரி, இரண்டாம் வீடு நன்றாக இருந்து 7ஆம் வீடு நன்றாக இல்லை
யென்றால் என்ன ஆகும்?

கழுதை போன்ற மனைவி வந்து சேர்வாள். அவளைக் குதிரையாகப்
போற்றிக் கணவன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பான்.

சரி, இரண்டு வீடுகளுமே மோசமாக இருந்தால் என்ன ஆகும்?
வாழ்க்கைப்பட்ட கருமத்திற்காக இருவரும் ஒருவித சோகத்துடன்
குடும்பம் நடத்திக்கொண்டிருப்பார்கள். அல்லது ரத்தில் முடிந்துவிடும்

கழுதையோ அல்லது குதிரையோ அமைவது 7ஆம் வீட்டைப் பொறுத்தது
அது எதுவானலும் அதை வைத்துக் குடும்பம் நடத்துவது 2ஆம் வீட்டைப்
பொறுத்தது.

இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.

முடிவு என்ன?

இரண்டாம் வீடும், ஏழாம் வீடும் தனிதனித் தன்மைகள் வாய்ந்தவை.
ஒன்றினால் மற்றொன்றிற்குப் பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பில்லை!

பதிவின் நீளம் கருதியும், உங்கள் பொறுமை கருதியும் இன்று
இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

27.4.09

சிதம்பரமும் பழநிமலையும்!

சிதம்பரமும் பழநிமலையும்!

தலைப்பைப் பார்த்து, சிதம்பரம் என்றவுடன், நமது மதிப்பிற்குரிய
உள்துறை அமைச்சரைப் பற்றி எழுதியதாக இருக்குமோ என்று
நினைத்து உள்ளே நுழைபவர்கள் பதிவை விட்டு விலகவும்.

இது உலகநாயகன் குடிகொண்டிருக்கும் சிதம்பரத்தைப் பற்றியது
====================================================

"நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்" என்று சொன்னான் கவிஞன்.
பாடலை எழுதிய கவிஞரின் பெயர் நினைவில் இல்லை. அதனால்
குறிப்பிடவில்லை. கவியரசர் கண்ணதாசன் எழுதியதா அல்லது கவிஞர்
வாலி அவர்கள் எழுதியதா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள்
சொல்லுங்கள்.

நல்ல குடும்பம் எப்படி இருக்க வேண்டும்?

பாடலைப் பாருங்கள்!

"நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க" என்று பல்லவியில்
எழுதிய கவிஞர் சரணத்தில் இப்படிச் சொல்கிறார்.

படத்தில் நாயகி துவங்கிப் பாடுவதாக வரும் பாடல்:

"எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ தங்கமான மன்னனாம்
எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ தங்கமான மன்னனாம்"

நாயகன் விட்டானா? அவனும் தொடர்ந்து பாடுகிறான்:

அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் கொண்டது
அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் கொண்டது
பிள்ளைச் செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்
நன்றி என்னும் குணம் கொண்டது
நன்மை செய்யும் மனம் கோண்டது
எங்கள் இல்லம் என்னும் பேரைக் கண்ணன் வளர்ப்பான்

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

நாயகி:
வெள்ளம் போல ஓடுவான்
வெண்மணல் மேல் ஆடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்

நாயகன்:
மாயம் செய்யும் மகன் வந்தது
ஆயர்பாடி பயம் கொண்டது
அந்தப் பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்
இந்தப் பிள்ளை நலம் கொள்ளவும்
என்னைப் பார்த்து எனை வெல்லவும்
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து நான் வளர்த்தேன்

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

நாயகி:
கோலம் கொண்ட பாலனே
கோவில் கொண்ட தெய்வமாம்
தாயில் பிள்ளை பாசமே தட்டில் வைத்த தீபமாம்

நாயகன்:
பாசம் என்று எதைச் சொல்வது
பக்தி என்று எதைச் சொல்வது
அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா
பிள்ளை என்னும் துணை வந்தது
உள்ளம் என்றும் இடம் கொண்டது
இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

பாடல்: நல்லதொரு குடும்பம்
திரைப் படம்: தங்கப் பதக்கம்
பாடியவர்கள்: டி.எம்.எஸ், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி
நடிப்பு: சிவாஜி, கே.ஆர்.விஜயா

"கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து நான் வளர்த்தேன்"
என்பது படலின் முத்தாய்ப்பான வரி!
=====================================================
அன்பு, பாசம், பக்தி, நன்றியுணர்வு, நன்மைகள் என்று எல்லாவற்றையும்
கொண்டதுதான் குடும்ப வாழ்க்கை.

பிறப்பில் இருந்து இறப்புவரை வருவது குடும்ப வாழ்க்கை!

குளிர்காலம், வெயில்காலம், வசந்தகாலம், இலையுதிர்காலம் என்று பருவங்கள்
நான்கு இருப்பதைப் போல குடும்பவாழ்க்கையும் பல பருவங்களை உடையது.

பிறந்தது முதல் 12 வயது வரை அன்னையின் அரவணைப்புத்தேவை.
12 வயது முதல் 24 வயது வரை தந்தையின் கவனிப்புத் தேவை
அதற்குப் பிறகு வளர்ந்துவிட்ட நிலையில் அவனுக்கே மனைவி, மக்கள்
என்று பொறுப்புடன் பராமரிக்கும் நிலையில் ஒரு குடும்பம் அமையும்.
அது ஒரு 30 ஆண்டு காலம் என்று கொள்ளலாம்.
அதற்குப் பிறகு அவனுடைய பிள்ளைகளின் அரவணைப்பில் அவன்
வாழ வேண்டும். அது ஒரு 20 ஆண்டுகாலம் என்று கொள்ளலாம்.

அதற்குப் பிறகு முதுமையான காலம். அது எப்படி இருக்கும் என்று யாராலும்
சொல்ல முடியாது. உடம்பும் மனதும் ஒத்துழைத்தால், அந்தக் காலம் நன்றாக
இருக்கும். இல்லையென்றால் நன்றாக இருக்காது..

அதோடு பிள்ளைகளும் அவனை வைத்துக் கொள்ள வேண்டும்
இல்லையென்றால் முதியோர் இல்லம்தான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தாய், தந்தையின் அரவணைப்பில் வாழும் காலத்தில் பிரச்சினைகள்
அதிகமாக இருக்க வாய்பில்லை.

திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் குடும்ப வாழ்க்கையில்தான்
பிரச்சினைகள் அதிகமாக இருக்கும்.

அதைப் பற்றிச் செட்டிநாட்டுக் கவிஞர் திரு.அரு நாகப்பன் அவர்கள்
ஒரு முறை, சொல்லரங்கம் ஒன்றில் வேடிக்கையாக இப்படிக் குறிப்பிட்டார்:

திருமணமாகி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சிதம்பரத்தின் ஆட்சி
அதாவது சிதம்பரத்தில் நடராஜர் ஆட்சி செய்வதைப் போல கணவனின்
ஆட்சி

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திருச்செங்கோடு ஆட்சி. அதாவது
திருச்செங்கோட்டில் உமா மகேஷ்வரர் உமைக்கு சரிபங்கு கொடுத்து
அர்த்தனாரீஷ்வரராக ஆட்சி செய்வதைப்போல, கணவன் மனைவி இருவரும்
கலந்து யோசித்து ஆட்சி செய்வது. அதாவது குடும்பம் நடத்துவது.

அடுத்து இருபதாண்டுகளுக்கு மீனாட்சியின் ஆட்சி. அதாவது மனைவியின்
ஆட்சி. அவள் சொல்படி கணவனும் கேட்பான். குழந்தைகளும் கேட்கும்

அதற்குப் பிறகு சுவாமிமலை.

சுமார் பத்தாண்டுகளுக்கு சுவாமிமலை. அதாவது பிள்ளைகளின் ஆட்சி.
குழந்தைகளின் சொற்படி கேட்டு இருக்கும் நிலைமைக்கு இருவரும்
தள்ளப்படுவார்கள்.

அதற்குப் பிறகு என்ன ஆகும்?

குடும்பம் பெரியதாகி, பிள்ளைகள், பேரன் பேத்திகள் என்று வந்தவுடன்,
பெண்ணானவள் அவர்களை அனுசரித்து இருந்து விடுவாள்.
ஆணால் அப்படி இருக்க முடியாது.

அதனால் ஆணிற்கு மட்டும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கவிஞர்
இப்படிச் சொன்னார்,

சுவாமிமலைக்குப் பிறகு, செட்டியார் பழநிமலைக்குப் போகவேண்டியதுதான்
அதாவது ஆண்டியாகி நிற்க வேண்டியதுதான்!
=====================================================
மலையையெல்லாம் மறந்து விட்டு, குடும்ப வாழ்க்கையை மட்டும் பாருங்கள்
அதில்தான் எத்தனை திருப்பங்கள்?

ஒரு ஜாதகத்தில் இரண்டாம் வீடு நன்றாக அமைந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் நல்ல குடும்பத்தில் பிறக்க முடியும். சிறு வயது வாழ்க்கை
நன்றாக இருக்கும்.

அத்தனை பேர்களுக்குமா சிறுவயது வாழ்க்கை நன்றாக அமைகிறது?

இறைவன் கருணை மிக்கவன். அதனால்தான் தாய், தந்தை, குடும்பம்
ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில் கொடுத்தனுப்பாமல் தனித்தனியாக
பிரித்துக் கொடுத்திருக்கிறான்.

இரண்டாம் வீடு குடும்பம் என்றால், நான்காம் வீடு தாய்க்கு உரியது
ஒன்பதாம் வீடு தந்தைக்கு உரியது. நிச்சயம் ஒவ்வொரு ஜாதகத்திலும்
இந்த மூன்றில் ஒன்று நன்றாக இருக்கும்.

ஜாதகனின் இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்து, பிறக்கும்போது
வறுமையான சூழ்நிலையில் பிறந்திருந்தாலும், அவனைக் கட்டியணைத்து
வளர்க்க ஒரு நல்ல தாய் அமைந்திருப்பாள். அல்லது தந்தை
அமைந்திருப்பார்

4காம் வீட்டிற்கு, அதிலிருந்து பதினொன்றாம் வீடு, குடும்ப ஸ்தானம்.
அதைக் கவனத்தில் கொள்ளுங்கள். நல்ல தாய் கிடைப்பதுதான் ஒரு
மனிதனின் முதல் பாக்கியம். நல்ல தாய் கிடைத்துவிட்டால் சிறு வயது
வாழ்க்கை எந்தவிதமான பொருளாதாரச் சூழ்நிலையிலும் நன்றாக
இருக்கும். 4ஆம் வீட்டிற்கும் இரண்டாம் வீட்டிற்கும் ஒரு சிறப்பான
தொடர்பு உண்டு. நான்கிற்கு 11 என்பது அதன் லாபஸ்தானம்.

2ற்கு ஒன்பதாம் வீடு, அந்த வீட்டிலிருந்து எட்டாம் வீடு. அதுபோல
9ற்கு 2ஆம் வீடு அந்த வீட்டிலிருந்து ஆறாம் வீடு. ஆகவேதான்
தந்தையைவிட ஒரு குழந்தைக்குத் தாயின் வீடு (4th house) முக்கியமாகிறது
======================================================
சரி ஜாதகத்தில் மனைவியின் நிலை என்ன?
அதாவது மனைவியின் ஸ்தானமான 7ஆம் வீட்டிற்கும்
குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கும்,
ஜாதகத்தில் உள்ள அமைப்பும், தொடர்பும் என்ன?

அதை அடுத்து அலசுவோம்.

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும்,
இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

22.4.09

Bucket with a hole - ஓட்டை வாளி

Bucket with a hole - ஓட்டை வாளி

வகுப்பறையைப் பொறுத்தவரையில் எனக்கு மூன்று வேலைகள்.

1. பதிவதற்கான கட்டுரைகளை எழுதித் தட்டச்சி வலையில் ஏற்றுவது.
2. வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதுவது.
3. பின்னூட்டங்களுக்கு சம எண்ணிக்கையில் வரும் தனி மின்னஞ்சல்
களுக்குப் பதில் எழுதுவது.

நேரமின்மையால், மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவதை ஒத்தி
வைத்தால், அதை நினைவுறுத்தி மீண்டும் மின்னஞ்சல்கள் வரும்.
தப்பிக்க முடியாது.

வரும் மின்னஞ்சல்களைப் பொதுவாக இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

1.சார், எனது திருமணம் காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால்
நிச்சயிக்கப்பெறும் திருமணமா?

2.சார், நான் மிகுந்த பணக் கஷ்டத்தில் இருக்கிறேன்.
எனது கஷ்டங்கள் எப்போது தீரும்?
--------------------------------------------------------------
இங்கே பணக் கஷ்டத்தை எடுத்துக்கொள்வோம்.

பணக்கஷ்டத்திற்குப் பல காரணங்கள் உள்ளன. அதை விவாதித்தால்
பதிவு 100 பக்கங்களுக்குப் போய்விடும். ஆகவே விவாதிக்காமல்
பணக்கஷ்டத்திற்கான அல்லது பணப் பற்றக் குறைக்கான காரணத்தை
ஜாதக ரீதியாக மட்டும் இப்போது பார்ப்போம்
--------------------------------------------------------------
இன்றைய சூழ்நிலையில் பணம் இல்லாமல் யாராலும் மகிழ்ச்சியாக
வாழ முடியாது. நாளுக்கு நாள் பணத் தேவை அதிகரித்துக் கொண்டே
போகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிலோ 20 ரூபாய் விற்ற பொன்னி
அரிசியின் இன்றைய விலை 40 ரூபாய். துவரம் பருப்பு கிலோ
32 ரூபாயிலிருந்து இன்று 60 ரூபாய்க்கு விற்கிறது. இப்படி எல்லாமே
அநியாயத்திற்கு ஏறியிருக்கிறது.

அதே போல நமது வருமானமும் இரண்டு மடங்கு ஏறியிருக்கிறதா
என்றால் இல்லை!

தேவைக்குச் சம்பாதிப்பது வேறு; ஆசைக்குச் சம்பாதிப்பது வேறு.

ஆசைக்குச் சம்பாதிப்பதாகட்டும் அல்லது தேவைக்குச் சம்பாதிப்பதாகட்டும்
பணம் வரவேண்டுமல்லவா?

பணம் நினைத்தபடி வருமா? அல்லது வராதா?

நினைத்தபடி வந்தால் கஷ்டம் ஏது?

நினைத்தபடி ஏன் வரமாட்டேன் என்கிறது?

அதுதான் ஜாதகப் பலன்!

நீ இவ்வளவு உயரம்தான் பறக்கலாம் என்று ஜாதகத்தில் எழுதப்பட்டுள்ளது.
அந்த உயரத்திற்குத்தான் நீ பறக்க முடியும். குருவி பறக்கும் உயரம் வேறு.
புறா பறக்கும் உயரம் வேறு. கழுகு பறக்கும் உயரம் வேறு.

நீ சைக்கிளில்தான் போகவேண்டும் என்றால் சைக்கிள் மட்டுமே கிடைக்கும்
நீ பல்சர் மோட்டார் சைக்கிளில் அதுவும் வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது
மாதமே போகலாம் என்றால் அது கிடைக்கும். நீ காரில். அதுவும்
ஹோண்டா சிட்டி காரில் போக வேண்டும் என்றால், அது தானாக வந்து
சேரும்.

முயற்சி செய்தால் முடியாதா என்று கேட்காதீர்கள்!
ஜாதகத்தில் வழியில்லை என்றால் முடியாது!

சரி, ஜாதகத்தில் அதைத் தீர்மானிக்கும் வீடுகள் எவை?
இரண்டாம் வீடு மட்டுமா? அல்ல!
இரண்டு, ஐந்து, பதினொன்று ஆகிய மூன்று வீடுகளும் சேர்ந்துதான் ஒரு
ஜாதகனின் பணபலத்தை நிர்ணயம் செய்யும். இம்மூன்று வீடுகளும் பலமாக
இருந்தால் ஜாதகனுக்கு நிறையப் பணம் வரும் செல்வந்தனாக உருவெடுப்பான்.
இல்லையென்றால் இல்லை

அந்த மூன்று வீடுகளும் கெட்டிருந்தால் ஜாதகன் அன்றாடம் காய்ச்சி!
==========================================
வெற்றிகரமான வருமானத்திற்கான பாதையை மூன்று விதமாகப்
பிரிக்கலாம்.

1. ஜாதகன் பார்க்கும் வேலை அல்லது செய்யும் தொழில்
2. அதன் மூலம் ஜாதகனுக்குக் கிடைக்கவிருக்கும் பணம்
3. அப்படி வரும் பணத்தில் செலவு போக மீதியைச் சேர்த்து
வைப்பானா? சேர்த்துவைத்தைப் பெருக்குவானா?

முதல் கேள்விக்கான பதிலைப் பத்தாம் வீட்டை வைத்துச்
சொல்வார்கள். ஆனால் அதைத் தொடர்ந்துள்ள கேள்விகளுக்கு
பதில்களுக்கு வேறு வீடுகளை அலச வேண்டும்.

ஜோதிடத்தில் உள்ள சிக்கல் இதுதான். அத்தனை பலன்களும்
ஒன்றிற்கொன்று தொடர்புள்ளவை.

பத்தாம் வீட்டையும், செவ்வாயையும் வைத்து ஒருவன் கிரிக்கெட்
ஆட்டத்தில் சிறப்படைவான் என்று சொல்லலாம். ஆனால் அவனுடைய
ஆட்டம் ரஞ்சி ட்ராப்பியுடன் முடிந்துவிடுமா? அல்லது உலகளவில்
தோனிபோல கலக்கல் ஆட்டமாடி பெரும்பொருள் குவிப்பானா
என்பதை மற்ற வீடுகள் நிர்ணயம் செய்யும்.

ஜோதிடத்தில் ஒரு மனிதனின் பணபலத்தை நிர்ணயம் செய்பவை
மூன்று வீடுகள். அவைகள் முறையே ஐந்தாம் வீடு, பதினொன்றாம் வீடு
மற்றும் இரண்டாம் வீடுகள் ஆகும்.

இரண்டாம் வீடுதான் House of finance என்றாலும், அங்கே பணத்தைக்
கொண்டுவந்து கொட்டுபவை மற்ற இரண்டு வீடுகள். அதை மனதில்
கொள்க!

அது எப்படி?

வெறும் வேலை. அதன் மூலம் வரும் சம்பளம் என்றால் பத்தாம் வீடும்
இரண்டாம் வீடும் போதும்.

நமக்குச் சம்பளம் மட்டும் பற்றாதே! மற்ற வருமானங்களும் வேண்டுமே!

The three main houses that govern wealth in a chart are the 2nd house,
11th house and the 5th house.
=============================================
ஐந்தாம் வீட்டை லெட்சுமிகரமான வீடு என்று சொல்லலாம்.
எதிர்பாராத பண வரவுக்கெல்லாம் இந்த வீட்டின் அமைப்புத்தான் காரணம்.
பங்கு வணிகத்தில் சிலர் லட்சம் லட்சமாக அல்லது கோடி கோடியாகச்
சம்பாதிப்பதற்கெல்லாம் இந்த வீடுதான் காரணம்.

The house which governs the money coming from speculation
- shares, stock market and related instruments.

வலிமையான ஐந்தாம் வீடும், வலிமையான ஒன்பதாம் வீடும் இருக்கும்
ஜாதகனுக்குப் பணம் மழையாகக் கொட்டும்.

அண்டாக்களில் பிடித்துவைத்துக்கொள்ள வேண்டியது மட்டுமே அவனுடைய
வேலை. ஒன்பதாம் வீட்டிற்கு அதிலிருந்து ஒன்பதாம் இடம் ஐந்தாம் வீடு
அதை மனதில் கொள்க

A powerful 5th house along with 9th house will bring luck to an individual.
9th house is called as bhagyasthana. 5th being 9th from 9th also represents
luck in the horoscope.
=================================================
பதினொன்றாம் வீடு லாபஸ்தானம். House of profit
ஒரு ஜாதகனின் வாழ்க்கை முறைக்கு, உங்கள் மொழியில் சொன்னால்
Life Styleற்கு இந்த வீட்டின் அமைப்புத்தான் காரணம்.

உங்களுக்குப் பல ஆசைகள் இருக்கலாம்.
அந்த அசைகளை நிறைவேற்றிவைப்பது இந்த வீடுதான்.
பதினொன்றாம் வீடும், அதன் அதிபதியும்தான் உங்களுக்குக் கொட்டும்
பணமழையின் அளவை நிர்ணயிப்பவர்கள்.

11th house alone will determine what a person will earn from.
The strength of the house and ruler would determine the size of source
of income.
This house represents gains of all kinds.
================================================
2ஆம் வீடு. இதற்குத் தனஸ்தானம் என்று பெயர்
ஒரு ஜாதகனுக்கு என்ன தேறும் என்பதை அது சொல்லும்.
அதே போல ஜாதகனுக்கு என்ன தங்கும் என்பதையும் அது சொல்லும்

2nd House: Financially, house number 2 (dhanasthana)
This house represents the net worth of an individual.
It also denotes the extent to which the individual will be able to retain
the money earned through sources represented by 5th and 11th house.

அந்த இரண்டு வீடுகள் மட்டும் நன்றாக இருந்து அதாவது
5ம் 11ம் நன்றாக இருந்து, இந்த வீடு கெட்டிருந்தால் பணம் வரும்,
ஆனால் வரும் பணம் கையில் தங்காது. பல வழிகளில்
செலவாகிவிடும்.

அதை ஓட்டைக் கை ஜாதகன் என்பார்கள்.
ஓட்டைக் கையில் என்ன தங்கும்?
ஓட்டை வாளியில் என்ன தங்குமோ அதுதான் தங்கும்!
=================================================
பதினொன்றாம் வீட்டைத் தண்ணீர்க் குழாய்க்கும் இரண்டாம் வீட்டை
வாளி அல்லது அண்டாவிற்கும் உதாரணமாகச் சொல்லலாம்.

11th house can be thought of as a tap and 2nd house as a bucket.
The bucket is filled with water flowing from the tap.
How much water will accumulate depends on the rate water flows
from the tap and size of the bucket.

நான்காம் வீடு சுகஸ்தானம். பணம் இன்றி சுகமேது? ஆகவே ஒரு
ஜாதகன் சுகமாக வாழ்வதற்கு இரண்டாம் வீடு நன்றாக இருக்க
வேண்டும். இங்கே ஒரு அதிசய ஒற்றுமையைப் பாருங்கள் இரண்டாம்
வீடு, பதினொன்றாம் வீட்டிலிருந்து நான்காம் வீடு.

Second house represents the accumulated wealth of the individual.


ஜாதகனின் கையில் தங்கும் செல்வத்திற்கான வீடு இரண்டாம் வீடு!
அதை மனதில் கொள்க!
===================================================
பணவரவு எப்படி வேறுபடுகிறது?

இந்த மூன்று வீட்டு அதிபதிகளின் வலிமை முக்கியம்.
அதோடு அவர்கள் ஒருவருக்கொருவர் ஜாதகத்தில் இணைந்து கூட்டாக
அல்லது பரிவர்த்தனையாக அல்லது பரஸ்பர பார்வையோடு இருப்பதும்
முக்கியம்.

அந்தக் கூட்டணி எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு ஸீட்
கிடைக்கும்:-))))))

Planetary combinations of wealth, are formed when rulers of these
houses are associated with each other and with rulers of 1st, 5th and
9th house.

This association could be through conjunction in good houses, exchange
and through mutual aspect. Involvement of Jupiter as benefic planet
in these combinations is considered extremely auspicious.

இது தவிர, ஜாதகத்தில் இருக்கும் ராஜ யோகங்களும் பெரும் செல்வத்தைப்
பெற்றுத் தரும். அதைப் பற்றி விரிவாக யோகங்களுக்கான பாடவகுப்பில்
பார்ப்போம்

===========================================
பணமின்றி வறுமையில் வாடுவதேன்?
அல்லது பணக்கஷ்டத்தில் உழல்வதேன்?

இந்த மூன்று வீட்டு அதிபதிகளும், 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது
12ஆம் வீட்டதிபதிகளுடன் சகவாசம் வைத்திருந்தால் எப்போதும்
பணக் கஷ்டம்தான்

சகவாசம் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு.
நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

அந்த தீய வீட்டதிபர்கள் பைப்பில் தண்ணீர் வருவதை நிறுத்தி விடுவார்கள்
அல்லது உங்கள் வீட்டு வாளி அல்லது அண்டாக்களை ஓட்டையாக்கி
விடுவார்கள். அல்லது தண்ணீர் பிடிக்கும் நிலையில் உங்களை விட்டு
வைக்காமல் படுக்க வைத்துவிடுவார்கள்.

படுக்கவைப்பது என்றால் என்னவென்று தெரியுமல்லவா?
====================================================
2ஆம் வீட்டதிபர், பதினொன்றாம் வீட்டதிபர் ஆகிய இருவரும்
வலிமை இல்லாமல் இருந்தால் (அதாவது சுயவக்கத்தில் குறைந்த
பரல்களுடன் இருந்தால்) ஜாதகனுக்கு வறுமை என்பது நிரந்தர
நண்பனாகிவிடும். பணக்கஷ்டம் என்பது பகல் பொழுதாகிவிடும்.
------------------------------------------------------------------------------------------------
அந்தந்த வீட்டதிபர்களின் தசா புத்திகளில் பலன்கள் கைகூடிவரும்!

நன்றி வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்



வாழ்க வளமுடன்!

18.4.09

லேகியப் பதிவுகள்


லேகியப் பதிவுகள்

லேகியத்தில் இரண்டு வகைகள் உண்டு.

குறிப்பிட்ட மருந்து அல்லது மூலிகைகளுடன் நெய் கலந்து பாகுபோலக்
காய்ச்சித் தயாரிக்கப்படும் மருந்து ஒருவகை. போதை தருவதற்காகத்
தயாரிக்கப்படும் லேகியம் மற்றொருவகை.

போதைதரும் லேகியங்களைப் பற்றி விரிவாக எழுத முடியாது.
இது வகுப்பறை அதனால் எழுத முடியாது.

தமிழகத்தில் சில பிரபல வார இதழ்கள் இப்போது போதைதரும்
லேகியங்களாகத்தான் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. இளம்
நடிகைகள் அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் படங்களைப் போட்டுப்
பல கட்டுரைகளை அல்லது செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன

அவற்றை நாங்கள் லேகியப் பத்திரிக்கைகள் என்போம்.

அதுபோல சில லேகியப் பதிவுகளும் உள்ளன.

லேகியப் பதிவுகளுக்குக் கூட்டம் சேர்வதைப் பற்றி ஆராயத் தேவையில்லை.
ஒரே வரியில் சொன்னால் கலிமுற்றிக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.

நான் கடும் மருந்தான ஜோதிடத்தைப் பாடமாக்கிப் பதிவுகளை எழுதிக்
கொண்டிருக்கிறேன். பலரும் ஆர்வமுடன் வந்து படிப்பது வியப்பாக
உள்ளது.

ஒவ்வொரு பதிவிற்கும் சராசரியாக இரண்டாயிரம் பார்வையாளர்கள்
வந்து செல்கிறார்கள் Hit counter மூலம் அது தெரிகிறது

அதோடு மாணவர்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது.

வருகைப் பதிவு செய்துள்ள அத்தனை மாணவர்களுக்கும் என் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் வருகைப் பதிவு எண்ணிக்கைதான்
என்னை மென்மேலும் உற்சாகமாக எழுத வைக்கிறது.

அந்த எண்ணிக்கைதான் எனக்கு லேகியம்:-)))))
-------------------------------------------------------------------------------------
சரி, இன்றையப் பாடத்தைப் பார்ப்போம் வாருங்கள்

தலைப்பு: விடுபட்டவை:

லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் சுறுசுறுப்பானவர்.
செந்நிற மேனி உடையவர்.
தேகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும்.

இரண்டில் சூரியன் இருந்தால் கல்வி சுமாராக இருக்கும்
நல்ல உழைப்பாளி.
ஜாதகருக்குப் பொருள் சேரும்.

மூன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் Take it easy type
அல்லது Don't care type.
பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்

நான்கில் சூரியன் இருந்தால், ஜாதகரின் தாய்க்கு நன்மையல்ல
ஜாதகருக்கு உறவினர்களுடன் பகை உண்டாகும்.
அரசியல் செல்வாக்கு இருக்கும்

ஐந்தில் சூரியன் இருந்தால், குடும்பம் அளவாக இருக்கும்;
வாழ்க்கை வளமாக இருக்கும்.
தந்தைவழிச் சொத்துக்கள் இருக்காது
ஜாதகர் தன் முயற்சியால் உயர்வடைவார்

ஆறில் சூரியன் இருந்தால் பகைவர்கள் பக்கத்தில் வரமாட்டார்கள்
ஜாதகரின் குடும்பம் பெரியதாக இருக்கும்.

ஏழில் சூரியன் இருந்தால்
ஜாதகர் கடன், நோய்கள், பிணிகள், வழக்குகள், விவகாரங்கள் இல்லாதவர்.
பலரது பராட்டுக்க்களைப் பெறுபவர்
மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்.
எதையும் சரிவரச் செய்யாதவர்.

எட்டில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.
எவருக்கும் பணிந்து போகாதவர்
இரக்கமற்ற குணத்தை உடையவர்
சிலருக்குக் கண்களில் குறைபாடுகள் இருக்கும்

ஒன்பதில் இருக்கும் சூரியனால் தந்தைக்கு இடையூறுகள் ஏற்படும்
ஜாதகருக்குத் தீயவழிகளில் பொருள் சேரும்
உறவினர்களுடன் விரோதம் ஏற்படும்
சுய முற்சியால் செல்வம் சேரும்

பத்தில் சூரியன் இருந்தால் அது ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும்
ஜாதகருக்கு நிரந்தத் தொழில் அல்லது வேலை இருக்கும்
அரசு தொடர்பு அல்லது அரசியல் தொடர்பு இருக்கும்
உடல் நலம் சீராக இருக்கும்
தன் அறிவினால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்

பதினொன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.
பலரைவைத்து வேலைவாங்கும் திறமை உடையவர்.
நண்பர்களால் பல உதவிகள் கிடைக்கும்

பன்னிரெண்டில் சூரியன் இருந்தால்
ஜாதகருக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது.
அதிகமான செலவுகள் ஏற்படும்
ஜாதகர் ஊர் சுற்றி. அதிகமான பயணங்களை மேற்கொள்வார்.
சந்ததிக் குறைபாடுகள் இருக்கும்.
உழைத்து முன்னேற்றம் காண்பவர்.
==========================================
சூரியனுடன், சந்திரன் இணைந்திருந்தால் ஜாதகர் எழுத்து,
அல்லது ஓவியம், அல்லது பேச்சு ஆகியவற்றில் அதீதத் திறமை உடையவர்.
பெயர் புகழ் அவரைத் தேடிவரும்.
இந்த மைப்பு அமாவாசை யோகம் எனப்படும்.

சூரியனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால், ஜாதகருக்கு அவருடைய
தந்தையுடன் கருத்து வேறுபாடுகள், உரசல்கள் இருக்கும்.
தொழிலில் பல இன்னல்கள் ஏற்படும்.
இந்த அமைப்புள்ள சிலர் காவல்துறை, ராணுவம் ஆகியவற்றில்
பணிபுரிந்து சிறப்படைவார்கள்

சூரியனும் புதனும் இணைந்திருந்தால், ஜாதகருக்கு நல்ல கல்வியும்
அறிவாற்றலும் இருக்கும்.
சிலர் ஞானமாகவும் இருப்பார்கள்
திட்டமிட்டபடி வாழக்கூடியவர்கள்.
இந்த அமைப்பிற்குப் புதஆதித்ய யோகம் என்று பெயர்
ஜாதகர் பலதுறைகளிலும் நிபுணனாக இருப்பார்.

சூரியனுடன் குரு சேர்ந்திருந்தால், ஜாதகர் தானகவே எதையும்
கற்றுக்கொண்டு செயலாற்றும் திறமை மிக்கவர்.
பதவியும்,. பாராட்டுக்களும் அவரைத் தேடிவரும்.
இரக்க சுபாவம் உடையவர்.
அதோடு முன்போபத்தையும் உடையவர்,

சூரியனுடன் சுக்கிரன் இருந்தால், ஜாதகருக்குக் கடத்தல் தொழிலில்
ஈடுபாடு உண்டாகும். ரேஸ், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவார்.
ஆடம்பரத்தில் விருப்பம் உடையவர்.
சிலருக்குத் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்.

சூரியனுடன் சனி இருந்தால் ஜாதகருக்குத் தன் தந்தையுடன் இணக்கம்
இருக்காது. ஜாதகருக்கு இரும்பு, எந்திரம், வாகனம் போன்றவற்றில்
நல்ல அறிவு இருக்கும். அவை சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றும்
ஜாதகர் சிறப்படைவார்.

சூரியனுடன் ராகு இணைந்தால் நல்லதல்ல.
தீயவழிகளில் பணம் வரும் அல்லது ஜாதகர் தீயவழிகளில் பணத்தைச்
சேர்ப்பார். சிலர் பாபகரமான தொழிலைச் செய்து பணம் சம்பாதிப்பார்கள்.

சூரியனுடன் கேது சேர்ந்தால், ஜாதகருக்கு ஜோதிடம், மாந்திரீகம்,
வைத்தியம் ஆகியவை கைவந்த கலையாக இருக்கும். அதில்
ஈடுபடுபவர்கள் பெரும்பொருள் சேர்ப்பார்கள்
===================================================
வாத்தியார் சொந்த வேலையாக 3 நாட்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள
இருப்பதால், திங்கள் மற்றும் செவ்வாய் வகுப்பறைக்கு விடுமுறை.
அடுத்த வகுப்பு 22.4.2009 புதன்கிழமையன்று நடைபெறும்.

அந்த இரண்டு நாட்களில் அனைவரும் முன்பாடங்களைப் புரட்டிப்
படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

10.4.09

இருட்டான இடங்கள் - நிறைவுப்பகுதி


இருட்டான இடங்கள் - நிறைவுப்பகுதி

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்களை, அதைப் படித்து
விட்டு வந்து இதைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முன் பதிவிற்கான சுட்டி (URL link) இங்கே உள்ளது.

மூன்றாம் வீட்டில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள்.

1.
மூன்றில் சூரியன் இருந்தால்.

இங்கே வந்தமரும் சூரியனால் ஜாதகத்திற்கு அதீத வலிமை கிடைக்கும்.
Sun's placement in the third is a strong point to any horoscope!
If the Sun is in the third, the native will be courageous and authoritative
ஜாதகன் அதீத துணிச்சல் மிக்கவன்.
ஜாதகன் சமயோசித புத்தியுள்ளவன்
எந்தக் கஷ்டத்தையும் சமாளிக்கும் ஆற்றல் மிக்கவன்.
எதிலும் வெற்றி பெறக்கூடியவன்.

இங்கே வந்தமரும் சூரியனின் மேல் சனி அல்லது ராகு அல்லது
கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை பட்டால் அது ஜாதகனின்
உடன்பிறப்புக்களுக்கு நல்லதல்ல!
======================================================
2.
மூன்றில் சந்திரன் இருந்தால்.

இந்த இடம் பத்தாம் வீட்டிற்கு, அங்கிருந்து ஆறாம் வீடு. ஆகையால்
இங்கே அமரும் சந்திரனால், ஜாதகனின் வேலைகளுக்கு உபத்திரவம்.
மனமாற்றம் உடையவன். ஒரே வேலையில் ஒழுங்காக இருக்கமாட்டான்.
Jumping from one job to another job. அடிக்கடி வேலையை மாற்றுவான்
அல்லது ஊரை மாற்றுவான். சுறுசுறுப்பான மனதை உடையவன்.
துறுதுறுவென்று இருப்பான்.

ஜாதகனின் மனைவி மிகவும் அழகாக இருப்பாள். இந்த இடம் ஏழாம்
இடத்தில் இருந்து ஒன்பதாம் வீடு. அதை மனதில் கொள்க!

ஜாதகனுக்கு எல்லா விஷயங்களிலும் அறிவு இருக்கும்.

If the Moon is in the third, the younger siblings of the native
will be happy and prosperous

இங்கே வந்தமரும் சந்திரனின் மேல் சனி அல்லது ராகு அல்லது
கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை பட்டால் அது ஜாதகனுக்கு
நல்லதல்ல! மன அமைதி என்பது இல்லாமல் போய்விடும்.

அதேபோல இங்கே வந்தமரும் சந்திரன், தேய்பிறைச் சந்திரனாகவோ
அல்லது தனது சுயவர்க்கத்தில் பரல்கள் குறைந்த சந்திரனாகவோ
இருந்தாலும் நல்லதல்ல! கொடூர சிந்தனைகள் அவ்வப்போது வந்து
எட்டிப் பார்க்கும். பல பிரச்சினைகளைக் கொடுக்கும்!
====================================================
3.
மூன்றில் செவ்வாய் இருந்தால்.

காரகன் பாவ நாசம் என்பார்கள். செவ்வாய் உடன்பிறப்புக்களுக்குக்
காரகன். அவன் இங்கே வந்து அமர்ந்தால் அது ஜாதகனின் உடன்
பிறப்புக்களுக்கு நல்லதல்ல!
This position of Mars is bad for brothers and sisters of the native!
If Mars is exalted, it is bad for younger brothers.
If afflicted by Saturn the native may suffer with ear trouble

பொதுவாக ஜாதகன் துணிச்சல் மிக்கவனாகவும், நல்ல திறமைகள்
மிக்கவனாகவும் இருப்பான். சிலருக்குக் குடும்பக் கவலைகள்
சூழ்ந்திருக்கும். குடும்பத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை
இருக்கும்.

சிலருக்குப் பயணங்களில் விபத்துக்கள் ஏற்படலாம்.
(இது பொதுப்பலன் சாமிகளா)

இந்த அமைப்பின் மேல் தீய கிரகங்களின் பார்வை விழுந்தால்,
ஜாதகனுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்து
போகும் அல்லது உக்கிரமான அல்லது தீவிரமான மனப்பான்மை
மிகுந்திருக்கும்.

மூன்றாம் வீடு செவ்வாயின் சொந்த வீடாக இருந்து அதாவது
மேஷம் அல்லது விருச்சிகம் மூன்றாம் வீடாக இருந்து, அங்கே
செவ்வாய் ஆட்சி பலனுடன் இருந்தால் மேற் சொன்னவைகள்
எதுவும் இருக்காது. ஜாதகன் மகிச்சியுடன், பிரச்சினைகள்
எதுவுமின்றி இருப்பான். மகரத்திற்கும் இதே பலன். ஏனென்றால்
அங்கே செவ்வாய் உச்ச பலனுடன் இருப்பார்
=====================================================
4.
மூன்றில் புதன் இருந்தால்.

ஜாதகன் நல்ல செயல்கள் பலவற்றைச் செய்து, மற்றவர்களுக்கு
மகிழ்ச்சியைக் கொடுப்பவனாக இருப்பான். ஆனால் அவன்
சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும்.

ஜாதகன் படு கெட்டிக்காரனாக இருப்பான்.
படிப்பிலும் வாசிப்பிலும் அதிக ஆர்வமுள்ளவனாக இருப்பான்.
எடுத்த வேலையைச் சிரத்தையோடு முடிப்பான். அதில் என்ன
இடர் வந்தாலும் பாதியில் விடாமல் செய்து முடிப்பான். அதற்கு
உரிய ஆற்றலும் துணிவும் மேலோங்கி இருக்கும்.

எதையும் புத்தியால் சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருப்பான்.

இந்த அமைப்பு உள்ளவர்கள் தொழில் அல்லது வியாபாரத்தில்
ஈடுபட்டு பெரும் வெற்றி பெறுவார்கள் என்பது பொதுப்பலன்.
சிலர் பொருள் வணிகத்தில் அல்லது பங்குச் சந்தை வணிகத்தில்
ஈடுபட்டு அதீத செல்வத்தைச் சேர்ப்பார்கள். இந்த இடம் 11ஆம்
இடத்திற்கு ஐந்தாம் இடம் அதை மனதில் கொள்க!

இந்த அமைப்பினருக்குச் சராசரியைவிட அதிகமான உடன்பிறப்புக்கள்
இருக்கும். உடன்பிறப்புக்களும், நண்பர்களும் ஜாதகனின் மேல் உயிரை
வைத்திருப்பார்கள். அதாவது அந்த அளவிற்கு அவனை விரும்புவார்கள்.

இந்த அமைப்பில் குறையே இல்லையா? உண்டு!
இந்த அமைப்பின் மேல் சனி அல்லது ராகு அல்லது கேதுவின் பார்வை
பட்டால், ஜாதகனுக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம்
உண்டு.
========================================================
5
மூன்றில் குரு இருந்தால்:
இது ஒரு நன்மைதரும் அமைப்பு. ஜாதகன் 'நடப்பது எல்லாம் நன்மைக்கே'
என்று நினைக்கும் பெருநோக்கோடு இருப்பான்.
நல்ல உடன்பிறப்புக்கள் கிடைப்பார்கள்.

Jupiter: The native will be victorious and endowed with high mental strength

இங்கே குரு பலவீனமாக இருந்தால், அதாவது தீய பார்வைகளுடன்
அல்லது சுயவர்க்கத்தில் குறைவான பரல்களுடன் இருந்தாலும் அல்லது
குரு வந்தமரும் வீடு, அவருக்குப் பகை அல்லது நீச வீடாக இருந்தாலும்
நன்மைகள் இருக்காது. ஜாதகனின் உடன்பிறப்புக்கள் நன்றிகெட்டவர்களாக
இருப்பார்கள். குறைவான நண்பர்களே இருப்பார்கள். நல்ல வாய்ப்புக்கள்
கை நழுவிப்போகும்.
=========================================================
6.
மூன்றில் சுக்கிரன் இருந்தால்:

ஜாதகனின் மனப்பாங்கு நல்ல விதமாக இருக்கும். ஆனால் உடல்
அரோக்கியம் மட்டும் சுமாராக இருக்கும். ஜாதகன் எப்போதும்
உற்சாகம் குன்றி இருப்பான்.

இசை, நடனம், நுண்கலைகள் போன்றவற்றில் ஜாதகன் ஆர்வமுடையவனாக
அல்லது ஈடுபாடு உடையவனாக இருப்பான்.

கொடுக்கல் வாங்கல் போன்ற பணவிவகாரங்கள் சுமூகமாக இருக்காது.
சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும்.

Venus Is not good in this place.
The native could get annoyed very easily.

இந்த இடத்துச் சுக்கிரன் பாதிக்கப்பெற்றிருந்தால், ஜாதகன் கருமியாக
இருப்பான். ஏழ்மை வாட்டும். அதிகமாக உணர்ச்சி வசப்படுவான்.
தொட்டாற்சிணுங்கி. சிலர் ஊழல் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு
அவதிப்பட நேரிடும்.

பொதுவாக இந்த அமைப்புக்காரர்களுக்குச் சகோதரர்கள் நல்லவர்களாக
இருப்பார்கள். தன் குழந்தைகளால் ஜாதகனுக்கு மகிழ்ச்சி இராது.
=========================================================
7
மூன்றில் சனி இருந்தால்:

ஜாதகன் தையமும், துணிச்சலான செயல்பாடுகளையும் உடையவன்.
செல்வந்தனாக இருப்பான். சிலர் உடன் பிறப்புக்களை இழக்க நேரிடும்.

சிலர் கடுமையான ஆசாமிகளாக இருப்பார்கள்.
விபரீதமான சிந்தனைகளுக்கு ஆட்படுபவர்களாக இருப்பார்கள்.
உடன் பிறப்புக்க்களால் துன்பம் ஏற்படும்.

அரசு மரியாதை, கெளரவம் கிடைக்கும்.
சிலருக்கு அவர்களுடைய ஊரில் உள்ள பொது அமைப்புக்களில்
தலைமை ஏற்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

ஆயுள்காரகன் சனி இங்கே இருப்பது நன்மை பயக்கும். ஜாதகனுக்கு
நீண்ட ஆயுள் இருக்கும். இந்த இடம் எட்டாம் இடத்திற்கு எட்டாம் இடம்
அதோடு சனியும் எட்டாம் பார்வையாக இங்கிருந்து ஆயுள் ஸ்தானத்தைப்
பார்ப்பார். அதை மனதில் கொள்க!

Saturn is good for longevity if he is placed in this house. Since 3rd house
is the eighth house from the eighth

பல ஏமாற்றங்களையும், சரிவுகளையும், சங்கடங்களையும் சந்தித்த பிறகே
ஜாதகன் வெற்றிகளை அடைவான். அது இந்த அமைப்பிற்குரிய விஷேசத்
தன்மையாகும்.

அவசரம், பரபரப்பு, தவறான அணுகுமுறை எனும் மனப்போக்கு
ஏற்படும். வயதாக வயதாக அதெல்லாம் மறைந்து ஒரு சீரான நிலைமை
ஏற்படும்.

இங்கே அமரும் சனி, பலவீனமாக இருந்தால். ஜாதகனுக்கு எப்போதும்
மனக்கஷ்டங்கள் இருந்துகொண்டே இருக்கும்
===============================================
8
மூன்றில் ராகு இருந்தால்:

ராகு சனியைப்போலவே பலனைத் தரக்கூடியவன்.
இங்கே ராகு இருப்பது இதற்கு முதல் பத்தியில் சனிக்குச்
சொன்னதுபோலவே சில பலன்கள் இருக்கும்
அதில் முக்கியமானது ராகு இங்கே அமையப்பெற்ற ஜாதகன்
நீண்ட நாட்கள் உயிர் வாழ்வான். தீர்க்காயுள்.

இந்த அமைப்பு சகோதர உறவுகளுக்கு நல்லதல்ல.
ஜாதகன் தோற்றத்தில் மட்டுமே தைரியசாலியாக இருப்பான்.
=================================================
9.
மூன்றில் கேது இருந்தால்:
இங்கே இருக்கும் கேது செவ்வாயைப் போல பலன்களைத்
தரக்கூடியவர்.
ஜாதகன் வலிமையானவனாகவும், துணிச்சலான சாதனைகளைச்
செய்யக்கூடியவனாகவும் இருப்பான்.

If ketu is placed in this house, the native will be courageous,
religious and wealthy
================================================
The 3rd house signifies courage, hence hands, shoulders and
chest The Ear, Nose and throat problems are also signified by
this house. Younger siblings of a person come under his house.
This house is also connected with printing, publishing,
short journeys and transport business.

இந்த மூன்றாம் வீட்டிற்கான பலன்கள் அதன் அதிபதியின்
தசா புத்திகளிலும், அதோடு அதில் அமர்ந்திருக்கும் கிரகங்களின்
தசா புத்திகளிலும் கிடைக்கும்

மூன்றாம் வீட்டைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

---------------------------------------------------------------------------------------------
இரண்டு நாட்கள் வெளியூர்ப் பயணம். சமர்த்தாகப் பாடங்களைப்
படியுங்கள். மீண்டும் செவ்வாய்க்கிழமை காலையில் (14.4.2009)
சந்திப்போம்







வாழ்க வளமுடன்!

8.4.09

இருட்டான இடங்கள் - பகுதி 2

இருட்டான இடங்கள் - பகுதி 2

முன் பகுதியைப் படித்திராத கண்மணிகளை, அதைப் படித்துவிட்டு வந்து
இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

முன் பதிவிற்கான சுட்டி!

=====================================================
மூன்றாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் பெண் பித்தனாக இருப்பான்.
யாருக்குத்தான் பெண் பித்து இல்லையென்கிறீர்களா?
சரி, வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த அமைப்பு உள்ளவன் அதிகமான அளவு பெண் பித்து உள்ளவனாக
இருப்பான். தேவையான சுகங்களைத் தேடிப்பிடித்து அனுபவிப்பவனாக
இருப்பான். அதற்கான துணிச்சல் இருக்கும்.

சிலருக்கு ஜொள்ளுப் பார்ட்டி எனும் விருது கிடைக்கும்.
பெண்களிடமிருந்து சொத்துக்களும் கிடைக்கும்.
இலை விருந்து, பெண் விருந்து என்று ஆசாமி எப்போதும் சாப்பாட்டு
ராமனாக இருப்பான்.

சிலர் சட்டச் சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும்.

சிலர் எந்தவிதமான வேலையும் இன்றி சுகஜீவனத்துடன் இருப்பார்கள்.

If the 3rd lord is in the 7th, the native will be an employee than a businessman.
He will excel as subordinate than as a commanding officer.
He will forget a duty or debt when it falls due.
===========================================================
மூன்றாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால்:

சகோதர உறவுகள் சிலாக்கியமாக இருக்காது. தேக ஆரோக்கியம் முழுமையாக
இருக்காது. சிலர் உடற் குறைபாடுகள் உள்ளவர்களாக இருப்பார்கள். வாக்கு
வன்மை இருக்காது. குடும்ப நிர்வாகத்திற்கு வேண்டிய பணவரவு இன்றி,
குடும்ப வாழ்க்கை தள்ளாடும்.

சிலர் கடன், அவமானம் என்று அவதிப்பட நேரிடும்.

இந்த அமைப்பு சுப பலத்துடன் இருந்தால், கஷ்டங்கள் ஏற்பட்டாலும்
கஷ்ட நிவாரணமும் கிடைக்கும்

சிலருக்குத் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்காது. அதுபோல சிலருக்குச்
செய்யும் தொழிலும் சிலாக்கியமாக இருக்காது. அதாவது பிடிதமாக இருக்காது

துரதிர்ஷ்டம் அவ்வப்போது ஓடிவந்து ஜாதகனின் தோள்கள் மீது ஏறிக்கொள்ளும்.

If the 3rd lord is in the 8th, the native will be driven by the desire
to take possession of things and take charge of situations without any
authority whatsoever.
The native will have the tendency to die for his/her love.
He will miss the company of his brother or sister.
===========================================
மூன்றாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் துணிவும், வீரப் பிரதாபங்களையும் உடையவன். வசதி
படைத்தவனாக இருப்பான். தெய்வ பக்தி மிகுந்து இருக்கும். மற்றவர்களிடம்
விசுவாசமாக இருப்பான்.

இந்த அமைப்பு தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றால் மேற்சொன்ன
பலன்கள் இருக்காது

பெற்றோர்வழிச் சொத்துக்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும்.
போராடிப் பெறவேண்டியதிருக்கும். உணர்ச்சி மிகுந்தவர்கள்.
அந்த உணர்ச்சியால் அடிக்கடி சிரமங்களுக்கு ஆளாக நேரிடும்.
சிலருக்குப் புரிதல் இன்மையால் தந்தையுடன் கூடிய உறவு பாதிக்கப்படும்

சிலருக்குத் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

திடீர் மாற்றங்களும் திடீர் திருப்பங்களும் நிறைந்ததாக வாழ்க்கை இருக்கும்.
==========================================
மூன்றாம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தால்:

இந்த அமைப்பு சுபக்கிரகங்களின் பார்வையின்றி இருந்தால்,
உடன்பிறப்புக்களால் ஜாதகனுக்குப் பயன் இருக்காது.
அவர்களும் அந்தஸ்து இல்லாமல் இருப்பார்கள்.
ஆதரவான சூழ்நிலை இருக்காது.

சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் மேற்சொன்ன பலன்களுக்கு
எதிர்மாறான பலன்கள் இருக்கும். அதாவது நன்மையான பலன்கள் இருக்கும்

ஜாதகன் நற்பெயரோடும், ஓரளவு செல்வாக்கோடும் இருப்பான்.
பெருந்தன்மை உடையவனாக இருப்பான்.
உத்தியோக வளர்ச்சியினல் மட்டுமே அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சி
உடையதாக இருக்கும்

If the 3rd lord is in the 10th, the native will be selfsufficient!
He will have pleasing personality and sincere approach
His profession may be connected by travelling
He will attain to a professional reputation
==========================================
மூன்றாம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால்:

நன்மைதரும் அமைப்பு அல்ல! ஜாதகன் தன் முயற்சியால் மட்டுமே
வளர்ச்சியைக் காண முடியும்.

இங்கே வந்தமரும் மூன்றாம் வீட்டதிபன் சுபக்கிரகமாக இருந்தால்
உடன் பிறப்புக்களால் ஜாதகனுக்கு நன்மைகள், லாபங்கள் கிடைக்கும்.
உடன்பிறப்புக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று மகிழ்வுடன்
இருப்பான்

The native will get help from their sisters and brothers
He will have gains of a high order.
His desires will be fulfilled in time by his own efforts
===========================================
மூன்றாம் வீட்டு அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுக்கு உடன் பிறப்புக்களால் தொல்லைகள் ஏற்படும்.
சண்டை சச்சரவுகள் மிகுந்து இருக்கும். சொத்துக்கள்
கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

வாழ்க்கை அலைச்சலாகவும், மன அமைதியின்றியும் இருக்கும்.
கஷ்டங்கள் அதிகமாக இருக்கும்.
சிலர் சயன சுகமற்றவர்களாக இருப்பார்கள்.

வாழ்க்கை ஏற்றங்களும், இறக்கங்களும் நிறைந்ததாக இருக்கும்
===================================================
1
மூன்றாம் அதிபதி சூரியனுடன் சேர்ந்திருந்தால்:
ஜாதகன் மன உறுதி படைத்தவன். பிடிவாதக்காரன்.
தன் வழியில் துணிச்சலாகச் செல்லக்கூடியவன்
கோபக்காரன்.

2
மூன்றாம் அதிபதி சந்திரனுடன் சேர்ந்திருந்தால்:
ஜாதகன் தைரியம் மிக்கவன்.
மனதில் எந்தவிதமான பயமும் இல்லாதவன்
வாங்கடா ஒருகை பார்க்கிறேன் என்று துடிப்போடு இருப்பவன்

3.
மூன்றாம் அதிபதி செவ்வாயுடன் சேர்ந்திருந்தால்:
ஜாதகன் வலிமை மிக்கவன்.
துணிச்சலானவன்

4.
மூன்றாம் அதிபதி புதனுடன் சேர்ந்திருந்தால்:
எச்சரிக்கை உணர்வு மிக்கவன்
தைரிய உணர்வு மிக்கவன்
விவேகம் உள்ளவன்.
எதை எங்கு செய்ய வேண்டுமோ அதை அங்கு செய்வான்

5
மூன்றாம் அதிபதி குருவுடன் சேர்ந்திருந்தால்:
Characterized by keen awareness, sharp intelligence,
and often a sense of the practical.
துணிவு விவேகம் மிக்கதாக இருக்கும்
சமமான நபர்களிடம் மட்டுமே தன்னுடைய துணிவைக் காட்டுவான்.

6.
மூன்றாம் அதிபதி சுக்கிரனுடன் சேர்ந்திருந்தால்:
ஜாதகன் உணர்ச்சிவசப்பட்டவன்.
அந்த உணர்ச்சி அவனுக்குப் பெண்கள் மேல் அதிகமாக இருக்கும்
பெண்களிடம் தன்னுடைய உணர்வை இழக்கக்கூடியவன்

7
மூன்றாம் அதிபதி சனியுடன் சேர்ந்திருந்தால்:
மந்தமானவன். முட்டாள்தனம் நிறைந்தவன்

8
மூன்றாம் அதிபதி ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தால்:

ஜாதகன் பார்ப்பதற்குத் தைரியசாலி போல தோற்றமளிப்பான்.
ஆனால் உண்மையில் பயந்தவன். கோழை.
தன்னம்பிக்கையில்லாதவன். மனதைரியம் இல்லாதவன்
timid heart & weak mind
Lacking self-confidence; shy. Fearful and hesitant:
நகைச்சுவை நடிகர் வடிவேலு படத்தில் வீராப்பாகப் பேசிவிட்டுக்
கடைசியில் அடி வாங்குவாரே, அதுபோல இந்த அமைப்புள்ள
ஜாதகனும் நடந்து கொள்வான்
===============================================
(தொடரும்)



வாழ்க வளமுடன்!

6.4.09

இருட்டான இடங்கள்!

இருட்டான இடங்கள்!

இருட்டாக இருந்தால் நாம் செயல் இழந்துவிடுவோம்.
நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

அறை அல்லது வீடு இருட்டாக இருந்தாலும் அதே நிலைதான்.
நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
வெளிச்சம் வரும்வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

ஜாதகத்தில் மூன்று வீடுகள் இருட்டான வீடுகள்.
ஆறாம் வீடு, எட்டாம் வீடு, பன்னிரெண்டாம் வீடு ஆகிய வீடுகளைப்
பற்றித்தான் அப்படிச் சொல்கிறேன்.

ஜோதிட வல்லுனர்கள் அவற்றை மறைவிடம் என்பார்கள்
(They are called as hidden Houses)

மறைவிடம் என்றால் ஒளிந்து நின்று பார்க்கும் வசதி இல்லாத மறைவிடங்கள்.
எதையும் சரிவரத் தெரிந்து கொள்ள முடியாத இடங்கள் அவைகள்.

6ஆம் வீடு கடன் நோய் எதிரி ஸ்தானம் (House of Debt, Diseases and enemies)
8ஆம் வீடு சிரம ஸ்தானம் (House of difficulties and life span)
சிரம ஸ்தானம் என்பது சிரமங்களைக் கொடுக்கும் இடம். இன்றைய நிலையில் உயிர்
வாழ்வதே சிரமமான காரியம். அதானால்தானோ என்னவோ அந்த இடம்தான்
ஆயுளுக்கும் உரிய இடம். (Place for span of life)
12ஆம் வீடு - விரைய ஸ்தானம் (House of losses)

இந்த மூன்று வீடுகளும் படுத்தாமல் இருந்தாலே போதும் மனிதன் நிம்மதியாக வாழலாம்

இந்த மூன்றோடு இன்னொரு வீடும் இருக்கிறது. அதுதான் 3ஆம் வீடு.
அந்த வீடும் நன்றாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அதுவும் படுத்தி எடுக்கும்.

அந்த் மூன்றாம் வீட்டின் முக்கியத்துவம் என்னவென்றால் அது எட்டாம்
வீட்டிற்கு எட்டாம் வீடாகும் (The third house is the eighth from the eighth)
இருட்டிற்குப் பழகியவனே துணிச்சலாக இருப்பான்.
அதானால்தனோ என்னவோ இந்த வீடுதான் மனிதனின் துணிவிற்கும் உரிய வீடாகும்.

The third house is the eighth from the eighth.
Since the Eighth house represents death, the eighth from the eighth.
The third House is considered dangerous.
On the positive side, younger co-borns & Help are indicated by the Third House.
If the third house is aspected by malefic, help from others will be found wanting.
==================================================
மூன்றாம் வீட்டதிபதி இருக்கும் இடங்களை வைத்துப் பலா பலன்கள்

1
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) லக்கினத்தில் இருந்தால்:

இந்த அமைப்பு 3ஆம் வீட்டிற்கு அதன் இடத்தில் இருந்து 11ஆம் இடமாகும்.
ஆகவே 3ஆம் அதிபதி இங்கே வந்து அமரும் போது பல நன்மைகளைச்
செய்வார். ஜாதகன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பான். யோகங்கள் நிறைந்து
இருப்பான். சகோதரன், சகோதரிகளின் அதரவைப் பெற்றவனாக இருப்பான்.
செல்வம் செல்வாக்கு ஆகியவைகளைப் பெற்றவனாகவும் இருப்பான்.

ஜாதகன் தன் முனைப்பும், தன் நிறைவும் பெற்றவனாக இருப்பான்.
ஜாதகனின் அறிவும், புத்திசாலித்தனமும் பாராட்டும் வகையில் இருக்கும்.
அவனுடைய அறிவு கல்வித் தகுதியைச் சார்ந்ததாக இல்லாமல் சிறப்பாக
இருக்கும். சட்டென்று கோபம் வரக்கூடியவனாக இருப்பான்.
அதை அடக்கும் திறமையை ஜாதகன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் அந்தக் கோப உணர்வே அவனுடைய முதல் எதிரியாக
மாறிவிடும்.

சிலர் தோற்றத்தில் கெச்சலாக இருப்பார்கள். ஆனால் தேவைப்படும்
சந்தர்ப்பங்களில் தங்களுடைய சக்தியையும், வீரத்தையும் பயன்படுத்தி
வெற்றி பெறுவார்கள்.
இந்த அமைப்புடையவர்கள், நடிப்பு, இசை, நடனம் என்று எல்லாவற்றிலும்
ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். சிலர் நாடகம், திரைப்படம் என்று
நடிக்கச் சென்று அதில் புகழ்பெறுவார்கள். இந்த அமைப்பிற்குச் ஜாதகத்தில்
சுக்கிரனும் வலுவாக இருக்க வேண்டும்.
===================================================
2
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) இரண்டாம் வீட்டில் இருந்தால்:

இந்த இடம் மூன்றாம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடாகும். அதாவது மூன்றாம்
இடத்திற்கு அதனிடத்திலிருந்து மறைவிடம். ஜாதகன் தைரியம் இல்லாதவனாக
இருப்பான். லொக்' லொக்குப் பார்ட்டி. அதாவது ஆரோக்கியம் குறைந்தவன்.
சிலர் வயதான காலத்தில் மருந்து மாத்திரைகளிலேயே உயிர்வாழ நேரிடும்.
சகோதரன், சகோதரிகளின் ஆதரவினால் காலம் தள்ள நேறிடும்.

இந்த வீட்டு அதிபதி சுபக்கிரகமாக இருந்தாலும், தீய கிரகங்களின் பார்வை
இல்லாமலும் இருந்தால், சகோதரன் அல்லது சகோதரியின் சொத்துக்கள்
ஜாதகனுக்குக் கிடைக்கும் அல்லது வந்து சேரும்.

சொத்துக்களை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? கடன் வந்து சேர்ந்தால்
மட்டுமே மனிதன் வேண்டாம் என்று சொல்வான்

இந்த வீட்டு அதிபதி 2ல் இருக்கும் நிலைமையோடு, இந்த வீட்டின் மேல்
தீய கிரகங்களின் பார்வை விழுந்தால், ஜாதகன் மிகவும் சிரமமான தாழ்மையான
வாழ்க்கை வாழ்வான். அப்படி இல்லையென்றால், செல்வமான, மகிழ்ச்சியான
வாழ்க்கை வாழ்வான்.

சிலர் தங்கள் இள்வல்களை இழக்க நேரிடும். இழப்பது என்பது என்னவென்று
சொல்லவும் வேண்டுமா?

If the 3rd lord is in the 2nd, The native may be lazy or lethargic
He/she do not take his/her undertakings seriously.
Their image may be spoiled by their headstrong behavior
They may not keep punctuality and they may not also keep up the decencies of debate.
They may not have good relations with the younger co-borns.
They may have hostile neighbors.
=========================================================
3.
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) மூன்றாம் வீட்டிலேயே
(in his own house) இருந்தால்:

அப்படி இருக்கும் கிரகம், ஆட்சி அல்லது உட்ச பலத்துடன் இருந்தால்,
ஜாதகனுக்கு நல்ல சகோதரன் சகோதரிகள் இருப்பார்கள். அவர்கள் பெயர்
சொல்லும்படி செல்வத்துடனும், புகழுடனும் இருப்பார்கள். அவர்களால்
ஜாதகனுக்கு சகலவிதமான ஆதரவுகளும் கிடைக்கும். இந்த சகலவிதம் எனும்
சொல்லில் எல்லாம் அடங்கி விட்டது.

ஜாதகனும் அவனளவிற்கு அந்தஸ்து அதிகாரம் என்று கெளரவமாக இருப்பான்.
பலசாலியாகவும், போக பாக்கியங்களைப் பெற்றவனாகவும் இருப்பான்.
போக பாக்கியங்கள் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?
தெரியாதவர்கள் தனி மின்னஞ்சலில் கேளுங்கள்.

சிலர் ஆன்மிகம், தெய்வ வழிபாடு, பக்தி என்று ஒரு மார்க்கமாக இருப்பார்கள்.

பொதுவாக ஜாதகன் தைரியம் உடையவனாக இருப்பான்.

மூன்றாம் அதிபதி 3ஆம் வீடு 6ஆம் வீடு அல்லது 11ஆம் வீட்டில் இருந்தால்
ஜாதகனுக்கு நிறைய சகோதரன், சகோதரிகள் இருப்பார்கள். மூன்றாம் அதிபதி
செவ்வாயாக இருந்து 3ஆம் வீட்டிலேயே இருந்தால் ஜாதகன் தன் சகோதரர்களைப்
பறி கொடுக்க நேரிடும். சனியாலும் அதே பலன்தான் கிடைக்கும்

If the 3rd lord is in the 3rd, the native will have the company of brothers & sisters.
They view everything philosophically.
They are confident that everything happens for the good.
They are not the type who cry over the things lost.
They do not bother about the past which is gone
==========================================================
4
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) நான்காம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுடைய குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
ஜாதகனுடைய உடன்பிறப்புக்கள் நீண்ட ஆயுளையும், நிறைய குழந்தைகளைப்
பெற்று கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவார்கள்.

இந்த இடம் மூன்றாம் வீட்டிற்கு இரண்டாம் இடம் அதை மனதில் கொள்க!

குடும்பத்தில் செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்து விளங்கும்.

The life of the native will be happy on the whole

மூன்றாம் அதிபதி பலமின்றி இருந்தால் மேற்சொன்ன பலன்கள் குறைவாக
இருக்கும் அல்லது இல்லாமல் போய்விடும்
===========================================================
5.
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) ஐந்தாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் நிறையக் குழந்தைகள் உடையவனாக இருப்பான்.

ஜாதகனுக்குப் பணப் பிரச்சினை இல்லாத அளவிற்குச் செல்வம் இருக்கும்.
ஆனால் அவனுடைய குழந்தைகளால் அவனுக்கு மகிழ்ச்சி இருக்காது.
அதோடு குடும்ப வாழ்வில் உரசல்களும் விரிசல்களும் இருக்கும்.

ஐந்தில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு
அவனுடைய உடன் பிறப்புக்களால் பல நன்மைகள் ஏற்படும்.

சிலருக்கு ஏராளமான விளைநிலங்கள் இருக்கும் அல்லது கிடைக்கும்.
சிலருக்கு சுவீகாரம் செல்லும் பாக்கியமும் அதனால் பெரும் சொத்துக்களூம்
கிடைக்கும். சிலருக்குப் பெரும் பதவிகள் கிடைக்கும்.

Since the 3rd lord is in the 5th, the native will be virtuous
Their brothers will definitely help them in their hour of need.
They are best suited to agriculture as they know when to sow and when to reap.
They may not have much happiness from their children.
===============================================================
6.
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) ஆறாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுக்கு உடன் பிறப்புக்களே எதிரிகளாக இருப்பார்கள் அல்லது எதிரிகளாக
மாறிவிடுவார்கள். ஜாதகனின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்பிற்குள்ளாகும்.
வியாதிகள் வந்து கேள்விகள் கேட்டுவிட்டுப் போகும். வைத்தியச் செலவில்
பணம் கரையும்.

சிலருக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள். அவர்களால் வேண்டிய அளவிற்குத்
தொல்லைகள் இருக்கும். மனதில் நிம்மதி இருக்காது.

ஆறில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு நன்மையான
பலன்கள் உண்டு. எதிரிகளை ஒரு கை பார்துவிடுவான். மேற்சொன்ன தீய பலன்கள்
குறைந்துவிடும்.

மொத்தத்தில் ஜாதகன் உடன் பிறப்புக்களை வெறுப்பவனாக இருப்பான்.
அவர்களால் இவனுக்குத் தொல்லைகள் மட்டுமே பரிசாகக் கிடைக்கும்

Since the 3rd lord is in the 6th, it will be difficult for the native to
maintain good relationships with brothers and sisters
Their honesty and sincerity in financial dealings have got drawbacks.
Their mind will be troubled by enemies.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

இதன் அடுத்த பகுதி (for the next six houses) நாளை வெளிவரும்.
இன்று இவ்வளவுதான் எழுதித் தட்டச்சமுடிந்தது சாமிகளா!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்



வாழ்க வளமுடன்!