மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 591 - 600. Show all posts
Showing posts with label Lessons 591 - 600. Show all posts

6.11.12

Astrology - Popcorn Post - வெள்ளைக்காரன் என்னடா சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனான்?

Astrology - Popcorn Post - வெள்ளைக்காரன் என்னடா சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனான்?

Popcorn Post No.30
பாப்கார்ன் பதிவுகள் - எண்.30


தேதி 6.11.2012 செவ்வாய்க் கிழமை
-----------------------------------------------
எனக்கு வரும் மின்ஞசல்களில் சில இப்ப்டியிருக்கும்:

“சார், என் தாயார் சென்ற வருடம் 30.11.2011 அன்று காலமானார்கள். அவர்களுக்குத் தலைத் திதியைக் (ஆண்டுத் திதியைக்)
கொடுக்க விருபுகிறேன். இந்த ஆண்டு எந்தத் தேதியில் அதைச் செய்ய வேண்டும்?”

அவர்கள் இறந்தபோது, அன்றையத் திதியக் குறித்து வைத்துக்கொளாததினால் ஏற்படும் கோளாறு இது

அன்றையத் தேதியில் வளர்பிறை சஷடி திதி

இந்த ஆண்டு அதே ஐப்பசி வளர்பிறை சஷ்டித் திதி 19.11.2012 அன்று வரும். அன்றையத் தேதியில் செய்ய வேண்டும்

பிறந்த நாளில் கேக் வெட்டிக் கொண்டாட வேண்டுமென்றால், வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்துவிட்டுப்போனபடி நீங்கள் பிறந்த ஆங்கிலத் தேதியில் கொண்டாடலாம். ஆனால் கோவிலுக்குச் சென்று ஈசனுக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றால், தமிழ் நாட்காட்டியின்படி நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் நீங்கள் பீறந்த நட்சத்திரம் எந்தத் தேதியில் வருகிற்தோ, அந்தத் தேதியில் தான் செய்ய வேண்டும்!

உதாரணத்திற்கு, நீங்கள் கார்த்திகை மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில், பிறந்தவர் என்றால், அந்தத் தேதியில்தான் ஒவ்வொரு வருடமும் அதைச் செய்ய வேண்டும்.

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------
திதியைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தைக் குறிப்பது.

மாதம் 30 திதிகள்.

ஒவ்வொரு மாதமும் - அதாவது 30 தினங்களுக்கு ஒருமுறை சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும். 0 பாகையில் இரண்டும் இருக்கும். அன்று அமாவாசை. அமாவாசையில் இருந்து பதினைந்தாம் நாள் அவ்விரண்டு கிரகங்களும் எதிர் எதிராக இருக்கும். 180 பாகை வித்தியாசத்தில் இருக்கும். (ஒரு சுற்று வட்டத்திற்கு 360 பாகைகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!)

அமாவாசையில் இருந்து பெளர்ணமி வரை 15 திதிகள் (அவற்றை வளர்பிறைத் திதிகள் என்பார்கள். சிலர் வளர் பிறைத் தேதிகளில் வரும் முகூர்த்த நாட்களில் மட்டுமே சுபகாரியங்களைச் செய்வார்கள். சுபகாரியம் என்றால் திருமணம். புதுமனை புகுவிழா, புதுத் தொழில் துவங்கும் நன்னாள் போன்றவை)

பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரை 15 திதிகள்(அவைகள் தேய்பிறைத் திதிகள் எனப்படும்)

1. பிரதமை, 2. துவிதியை, 3. திரிதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13, திரயோதசி, 14. சதுர்த்தசி

அமாவாசை + வளர்பிறைத் திதிகள் 14 + பெளர்ணமி + தேய்பிறைத் திதிகள் 14 = ஆக மொத்தம் 30 திதிகள். கணக்கு சரியாகிவிட்டதா?

ஒவ்வொரு திதிக்கும் ஒரு சிறப்பு உண்டு.

அது என்ன?

அமாவாசை அன்று நம் முன்னோர்களை வழிபட வேண்டும். தந்தையார் அல்லது தாயார் மேல் உலகம் சென்றிருந்தால், அவர்களுக்காக ஒரு சிறப்பு வழிபாடு செய்தல் வேண்டும். திதி கொடுக்க வேண்டும்.

சதுர்த்தி, விநாயகப் பெருமானை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
பஞ்சமி, உலக நாயகி அன்னை பராசக்தியை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
சஷ்டி, சேவற்கொடியோனை, (அதாங்க நம்ம வேலுச்சாமி), முருகப் பெருமானை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் அஷ்டமி, கோகுலக் கிருஷ்ணனை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் நவமி, ராம அவதாரத்தை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் ஏகாதசி, துவாதசி, ஆகிய இரண்டு திதிகளும் செல்வத்தை அள்ளித்தரும் பள்ளிகொண்ட பெருமாளை வணங்குதற்கு ஏற்ற திதிகளாகும். திரயோதசி, எம்பெருமான் ஈசனை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் சதுர்த்தசி, சிவனையும், கணபதியையும் ஒரு சேர வணங்குதற்கு ஏற்ற திதியாகும் விநாயகரில் துவங்கி, விநாயகரிலேயே முடிவதைக் கவனியுங்கள் பெளர்ணமி, அண்ணாமலையில் குடிகொண்டிருக்கும் அருணாச்சலரை வணங்குதற்கு ஏற்ற திதியாகும். அத்துடன் எல்லா தெய்வங்களையும் வணங்கி மகிழ ஏற்ற திதியாகும்.

திதிகளின் பயன் அவ்வளவுதானா?

இல்லை! அதி முக்கியமான பயன் ஒன்று இருக்கிறது. ஒருவரின் தந்தை அல்லது தாயார் இறந்துவிட்டால் அவர்களுடைய இறந்த நாளைத் திதியை வைத்துத்தான் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆண்டுதோறும் அந்த நாளில் ஆண்டுத்திதி (வருஷாப்தி) கொடுக்க வேண்டும். மேலும் இரண்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். அல்லது தட்டில் பத்துப் பத்து டாலராக இரண்டு பேருக்குக் கொடுக்கலாம் (இது தூர தேசங்களில் இருப்பவர்களுக்கு)

எந்தத் தமிழ் மாதம், வளர்பிறை அல்லது தேய்பிறையில் இன்ன திதி என்பதைக் குறித்து வைத்துக்கொள்வது நல்லது.


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5.11.12

Astrology - Popcorn Post - சனி எப்படிக் கொடுப்பான்?


Astrology - Popcorn Post - சனி எப்படிக் கொடுப்பான்?

Popcorn Post No.29
பாப்கார்ன் பதிவுகள் - எண்.29


தேதி 5.11.2012 திங்கட்கிழமை
---------------------------------
சனியைப்போல் கொடுப்பாருமில்லை. கெடுப்பாருமில்லை. சனி முதல் நிலை தீய கிரகம். இயற்கையிலேயே தீய கிரகம்

அப்புறம் எப்படிக் கொடுப்பான்?

அவன்தான் ஆயுள்காரகன். அவன்தான் கர்மகாரகன் (authority for work/profession) அதை மறந்துவிடாதீர்கள்.

அந்த இரண்டு செயல்களைத் தவிர மற்ற இடங்களில், சனியின் நிலைமை என்ன?

உதாரணத்திற்கு சனி நான்காம் வீட்டில் இருந்தால், ஜாதகனுக்கு தன் தாயோடு நல்ல உற்வு இருக்காது. அல்லது அவனுடைய தாயால் அவனுக்கு எந்தவிதப் பயனும் இருக்காது. நான்காம் இடம் கல்விக்கான இடமும் கூட். அங்கே வந்து அமரும் சனி, ஜாகனின் கல்வியில் கையை வைத்துவிடுவான். ஜாதகனுக்குக் கல்வியில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். ஒரு பட்டப் படிப்பை முடிப்பத்ற்குள் தாவு தீர்ந்துவிடும். அத்துடன் அது சுகத்திற்கான இடமும் ஆகும். ஜாதகனுக்கு சுகக்கேடு. கையில் காசு இருந்தாலும், சொத்து இருந்தாலும், அவனால அவற்றை அனுபவித்து சுகமாக இருக்க முடியாது.

எல்லோருக்கும் அப்படியா?

இல்லை!

சனி ஜாதகத்தில் உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது சொந்த வீட்டில், ஆட்சி வீட்டில் இருந்தாலோ, நன்மைகளைச் செய்வான். மேற்சொன்ன கஷ்டங்கள் எல்லாம் இருக்காது. ஆனால் சனி, தான் உச்சம் பெற்றதற்கான முழுப்பலனையும் தருவதற்கு அல்லது ஆட்சி பலம் பெற்றதற்கான முழுப்பலனையும் தருவதற்கு, அவர் சுபக்கிரகங்களான சுக்கிரன் அல்லது குருவின் சேர்க்கையையோ அல்லது பார்வையையோ பெற்றிருக்க வேண்டும்.

4ஆம் வீடு மட்டுமல்ல, மற்ற எல்லா வீடுகளுக்கும் அதுதான் பலன்.

ஆகவே உங்கள் ஜாதகத்தைப் பார்க்கும்போது அதைப் பாருங்கள்.

இது பாப்கார்ன் பதிவு. இதில் என்ன அளவு தர முடியுமோ, அதைத் தந்துள்ளேன். சனியைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் பழைய பாடங்களில் நிறைய உள்ளன. அவற்றைப் படியுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1.11.12

Astrology ஜோதிடரின் காட்டில் எப்போது மழை?

 Astrology ஜோதிடரின் காட்டில் எப்போது மழை?

1.11.2012 வியாழன்

பொதுவாக எல்லோருக்கும் முதல் ஆசை நீண்ட ஆயுளடன் இருக்க வேண்டும் என்பது. அதில் தவறில்லை. ஜோதிடரைப் பார்க்கும்போது அதைத்தான்
கேட்பார்கள்.

ஜோதிடரும் ஜாதகனின் ஆயுள் பாவத்தைப் பார்த்துவிட்டுத்தான் பலன் சொல்ல வேண்டும். பல ஜோதிடர்களுக்கு அதற்கு நேரமில்லை. கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி வந்தவனை அனுப்பி விட்டு அடுத்தவனைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

திருமணப் பொருத்தம் பார்க்க வருகிறவர்களால்தான் அவர்களுக்கு வருமானம். வரும்போது ஐந்து அல்லது ஆறு ஜாதகங்களைக் கொண்டு வருவான். சிலர் பத்து  அல்லது பன்னிரெண்டைக்கூட கொண்டு வருவார்கள். கொண்டு வந்ததில் தங்கள் மகனுக்கு எது பொருத்தமாக உள்ளது என்று கேட்பார்கள். ஜோதிடர் நன்றாக  அலசி அவற்றில் ஒன்று அல்லது இரண்டைத் தெரிவு செய்து கொடுப்பார். அத்துடன் வந்தவன் ஜோதிடர் கேட்கும் தொகையை (ரூ.300 ல் இருந்து ஆயிரம் வரை) கொடுத்துவிட்டுப் போவான். அத்துடன் அவர் தெரிவு செய்து கொடுத்த வரன் படியாவிட்டால் மீண்டும் வருவான். சிலர் மீண்டும், மீண்டும் வருவார்கள்.

காரணம் ஜாதகம் பொருந்தினாலும் பையனுக்குப் பெண்ணைப் பிடிக்க வேண்டுமே? அல்லது பெண்ணிற்குப் பையனைப் பிடிக்க வேண்டுமே? இப்போது சம்மதம்

சொல்வதில் இருபாலருக்குமே சம உரிமை மற்றும் சம வாய்ப்பு நிலவுகிறது. ஏனென்றால் பல பெண்களும் படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள்.

திருமண பந்தத்தில் பெற்றவர்கள் ஜாதகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பிள்ளைகள் தோற்றத்திற்கு (appearance)  முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

பையன், பெண் நயன்தாரா அல்லது திரிஷா அல்லது அனுஷ்கா சர்மா மாதிரி இருக்க வேண்டும் என்பான். ஆனால் அவன் சூர்யா அல்லது ஆர்யா அல்லது
கார்த்திக் மாதிரியான தோற்றத்தில் இருக்க மாட்டான். சண்டைக் காட்சிகளில் வரும் அடியாட்கள் போல இருப்பான். அதுதான் கஷ்டம்!

ஒன்று முதல் மூன்று வருடங்கள் வரை நூறில் இருந்து முந்நூறு ஜாதகங்கள் வரை பொருத்தம் பார்த்து நொந்துபோன பெற்றோர்களை எல்லாம் நான்
அறிவேன்.

அந்த மாதிரிப் பெற்றேர்களால்தான் ஜோதிடரின் காட்டில் மழை பெய்யும்!

ஒரு நூறு ரூபாய் அல்லது ஐநூறு ரூபாயைக் கட்டணமாகக் கொடுத்து விட்டுத் தன் ஜாதகத்தை வைத்து விதம் விதமான கேள்விகளைக் கேட்பதோடு
(எழுதிக் கொண்டு வந்திருப்பான்) அவருடைய ஒரு நாள் பொழுதில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரப் பொழுதை வீணாக்குபவனை எல்லாம் ஜோதிடர்கள் விரும்புவதில்லை.

அப்படி எழுதிக் கொண்டு வந்தவனும் திருப்தியாகப் போக மாட்டான். அதுதான் கஷ்டம்.
-----------------------------------------------------------------------
சரி, சொல்ல வந்த விஷ்யத்திற்கு வருகிறேன்.

ஆயுள் பாவத்தைப் பற்றி (எட்டாம் வீட்டைப் பற்றி) எட்டு அத்தியாயங்களைப் பாடமாக எழுதியுள்ளேன். அவைகள் எல்லாம் பதிவில், பழைய பாடங்களில்
உள்ளன

இப்போது சுருக்கமாகச் சொல்ல விழைவது. நீண்ட ஆயுளைப் பற்றி!

ஒருவருக்கு நீண்ட ஆயுள் இருந்தால் மட்டும் போதாது. கடைசி மூச்சு வரை நல்ல ஆரோக்கியமும் இருக்க வேண்டும். அத்துடன் கையில் இருப்பும் இருக்க  வேண்டும். அவை இரண்டும் இல்லாம்ல நீண்ட ஆயுளுடன் இருப்பது. கதை இல்லாத படத்தில் கதாநாயகனாக நடிப்பதைப் போன்றதாகும் அதையும் மனதில்  வையுங்கள்!

1. ஆயுள் காரகன் சனியின் வலுவான பார்வை ஆயுள் ஸ்தானத்தின் மேல் விழ வேண்டும்.
2. லக்கினாதிபதி பதினொன்றில் வலுவாக இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டு
3. சனி எட்டாம் வீட்டில் இருக்க வேண்டும். அத்துடன் சுப்க்கிரங்கள் ஒன்றுடன் சேர்ந்தும் இருக்க வேண்டும்.

இப்படி நீண்ட ஆயுளுக்கு மேலும் சில விதிகள் உள்ளன. முக்கியமான மூன்றை மட்டும் இங்கே கொடுத்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

30.10.12

Astrology புத்தி எத்தனை வகையடா?

 Astrology புத்தி எத்தனை வகையடா?

தேதி 30.10.2012 செவ்வாய்க் கிழமை
---------------------------------------
புத்தி எப்படி வகைப்படும்?  புத்தி ஒன்றுதானே என்பவர்கள் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் தொடரவும்

இன்டெலிஜென்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லும் புத்திசாலித்தனதைச் சொல்ல விழைகிறேன்!

I.Q. stands for intelligence quotient, and it is supposed to be a measurement of how naturally intelligent a person is. Intelligence tests are not designed to show how much a person has learned; rather, they are meant to measure a person's ability to learn. This ability is something that doesn't change much as a person grows older, even though he or she may pick up a lot of new facts and skills. Scientists think that each person is born with a certain amount of intelligence or mental ability. Still, how well a person uses his or her natural intelligence has a lot to do with the person's desire to learn and the learning environment in which he or she grows up.quotient means A result obtained by dividing one quantity by another.A degree or amount of a specified quality or characteristic: "an increase in our cynicism quotient".

புத்திசாலித்தனம் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். அது பிறவியிலேயே உண்டாவது. படிப்பினாலோ அல்லது பயிற்சியினாலேயோ உண்டாக்க முடியாதது!

புத்தி மூன்று வகைப்படும் என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டுப்போயிருக்கிறார்கள்

1. கற்பூரப் புத்தி
2. கரிப் புத்தி
3. வாழைமட்டைப் புத்தி

கற்பூரம் நெருப்பைக் காட்டியவுடன் எப்படிப் பற்றிக் கொள்கிறதோ அப்படி எதையும், பார்த்தால், படித்தால், கேட்டால் சட்டென்று பிடித்துக் கொள்வான்.
அவன்தான் கற்பூர புத்திக்காரன். அதுதான் புத்தியில் முதல் நிலை!

கரியின் மேல் நெருப்பை வைத்து ஊத ஊதத்தான் அது மெதுவாகப் பற்றிக் கொள்ளும். கரிப் புத்திக்காரனும் அப்படித்தான், ஒரு முறைக்கு இருமுறை அல்லது  பல முறை சொல்லச் சொல்ல அல்லது படிக்கப் படிக்கத்தான் விஷயத்தைக் கிரகித்துக்கொள்வான். அதாவது அவன் மண்டையில் ஏறும். புத்தியில் அது இரண்டாவது நிலை!

வாழை மட்டையின் மேல் என்ன செய்தாலும் நெருப்பைப் பற்ற வைக்க முடியாது. அதுப்போல வாழைமட்டைப் புத்திக்காரனுக்கு என்ன சொன்னாலும் ஏறாது. அல்லது விளங்காது. படித்தாலும் அப்படித்தான். கேட்டாலும் அப்படித்தான். அது மூன்றாவது நிலை
---------------------------------------------------------------------------------------------------
இவை ஜாதகத்தில் தெரியுமா?

ஏன் தெரியாது?

ஜாதகத்தில் புதன் நன்றாக இருக்க வேண்டும்! வலிமையாக இருக்க வேண்டும். உச்சமாக அல்லது ஆட்சி பலத்துடன் அல்லது கேந்திர திரிகோணங்களில் இருக்க வேண்டும்! அது முதல் நிலை!

மேற்சொன்ன நிலைப் பாட்டில் (அதாவது உச்சமாகவோ அல்லது ஆட்சி பலத்துடனோ) இருந்தும், 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் புதன் அமர்ந்திருந்தால், அது 2ஆம் நிலை!

மேற் சொன்ன நிலைப் பாட்டில் இல்லாமல் அதாவது உச்சம், சொந்த வீடு பலம் எதுவும் இல்லாமல் நேரடியாக 6 அல்லது எட்டு அல்லது 12ஆம் வீடுகளில் புதன் இருந்தால் அது மூன்றாம் நிலை. புத்திக் குறைவு! (இது பொது விதி. இந்த நிலையில் குருவின் பார்வையைப் புதன் பெற்றால், இந்த விதி கேன்சலாகிவிடும். ஜாதகனுக்குக் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருக்கும். மட்டை காய்ந்து சருகாகி இருக்கும்)
----------------------------------------------------------------------------------------------------
இதை உங்களுக்காக எழுதவில்லை. நம் வகுப்பறைக்கு வரும் அனைவருமே புத்திசாலிகள் என்பது தெரியும். இதை நீங்கள் மற்ற ஜாதகங்களைப் பரிசீலிக்கும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காக இன்று இங்கே கொடுத்துள்ளேன்

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே நாளை ஒரு நாள் வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 1.11.2012  வியாழக் கிழமையன்று நடைபெறும்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

29.10.12

Astrology: DST (Daylight saving time) என்றால் என்னவென்று தெரியுமா?

Astrology: DST (Daylight saving time) என்றால் என்னவென்று தெரியுமா?

கடிகாரத்தில் நேரத்தை அதிகப்படுத்தி, பகல் நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாகச் செய்ததால் ஏற்பட்ட குழப்பம்!

1.9.1941 ஆம் ஆண்டு முதல் 15.10.1945ஆம் ஆண்டு வரை, இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் உலக நாடுகள் அனைத்தும் பகல் நேரத்தை அதிகப் படுத்துவதற்காக கடிகாரத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாக வைத்துக் கொண்டு விட்டார்கள். வெள்ளைக்காரர்கள்தான் அதைச் செய்தது.

பிறகு அது இல்லை என்று சொல்ல முடியாது. இன்னும் பல நாடுகளில் குளிர்காலங்களில் அதுபோன்று பகல் நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாக வைத்துப் பிறகு கோடை காலங்களில் பழைய கண்க்கிற்குத் திரும்பி வந்து
விடுவார்கள்.. அதாவது தேசம் முழுவதும் ஒரு மணி நேரத்தை மீண்டும் சரி செய்து பழைய நிலைக்குத் திரும்பி  விடுவார்கள்

இந்தியாவும் காரண காரியமில்லாமல் இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலத்தில், அதற்கு உட்படுத்தப்பெற்றது. அச்சமயம் நம்மை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்தால், நம்மைக் கேட்காமலே நம் நாட்டையும் அதற்கு
உட்படுத்தி, அதைச் செய்து விட்டார்கள்

அதாவது இந்தியாவில் காலை ஆறு மணி என்னும் போது இந்தியக் கடிகாரங்கள் எல்லாம் ஏழு மணி என்று காட்டும்

இந்திய நேரம் க்ரீன்விச் நேரத்தில் இருந்து + 5.30 மணி நேரம் என்பது அனைவருக்கும் தெரியும்.

லண்டனில் உள்ள விம்பிள்டன் டென்னிஸ் மைதானத்தில், போட்டி விளையாட்டு துவங்கி, ஸ்டெஃபி கிராஃப் அல்லது வேறு ஒரு வீராங்கனை டென்னிஸ் ராக்கெட்டைக் கையில் பிடித்துத் தூக்கி முதல் சர்வீஸைப் போட்டாரென்றால், அப்போது அங்கே மதியம் 3 மணி. அதை இங்கேயிருந்து நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் போது நம் கடிகாரம் இரவு மணி 8:30 என்று காட்டும். அதுதான் இன்றும் நடப்பில் (நடைமுறையில்) உள்ளது.

IST is the Indian Standard time at 82.30 degree east longitude and is 5.30 minutes ahead of Greenwhich mean time

அதனால் என்ன கோளாறு? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

யுத்தகாலத்தில் அவ்வாறு கூட்டி வைத்ததால், அந்த சம்யத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஜாதகம் கணிக்கும் போது ஜாதகத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்தைக் கழித்துக் கொள்ள வேண்டும்.

அப்படித்தான் செய்தார்கள். அதுதான் குறிப்பிட்ட அந்தக் குழந்தையின் பிறந்த நேரம்.

அதற்குப் பிறகு உள்ளூர் நேரத்தை வேறு கழிக்க வேண்டும். அந்த சமயத்தில் கோவையில் பிறந்த குழந்தைக்கு IST பிறந்த நேரம் மைனஸ் 13 நிமிடங்கள். ISTக்கு 13 நிமிடங்கள் தூரத்தில் பின்னால் இருக்கிறது கோவை. அதை
மனதில் வையுங்கள். இவ்வாறு ஒவ்வொரு ஊருக்கும் கழிக்க வேண்டும்

சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் அது சுத்தமாகக் கடைப்பிடிக்கப் படுவதில்லை.

ஆகவே சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர்கள் யாரும் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை! உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஜாதகத்தைக் கணிக்கும்போது மட்டும் அதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதை இன்று உங்களுக்கு நான் அறியத் தந்திருக்கிறேன்!

இது மேல்நிலை வகுப்பிற்கென்று  (http://classroom2012.in/) எழுதப் பெற்ற பாடங்களில் ஒன்று. அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன். மேல்நிலை வகுப்பில் எழுதப்பெறும் பாடங்கள் எல்லாம் பின்னால் புத்தகங்களாக வரும் அப்போது அனைவரும் படிக்கலாம்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------
மேலதிகத் தகவல்: விக்கி காமாட்சியிடம் அது பற்றி உள்ள தகவல்களைப் படித்துப் பார்ப்பதற்கான சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன். அவசியம் படித்துப் பாருங்கள்.

India
http://en.wikipedia.org/wiki/Daylight_saving_time_by_region_and_country#India

The Republic of India used Daylight Saving Time (DST) briefly during wartime.[second world war] Currently, India does not observe DST.

http://en.wikipedia.org/wiki/Daylight_saving_time

Daylight saving time (DST)—also summer time in several countries in British English,
and European official terminology (see Terminology)—is the practice of advancing
clocks so that evenings have more daylight and mornings have less. Typically clocks
are adjusted forward one hour near the start of spring and are adjusted backward
in autumn.

Why is day light saving time not suitable for India?

"India’s location on the lower latitudes (8 N–35 N)makes DST unattractive for India.
The longest day of the year is the summer solstice, whereas theshortest day is the
winter solstice. The length ofthe day varies from 11.5 hours to 13 hours through the
year in the southern city of Chennai. In Srina-gar, it varies from 10.5 hours to 14
hours. Clearly, all of India has plenty of sunlight year round. Even in the
northernmost city, Srinagar, the sun rises at approximately 7:30 AM and sets at
approximately 5:30 PM in the dark days of December.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.10.12

Astrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா? பகுதி 2


 
Astrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா? பகுதி 2

22.10.2012 அன்று எழுதிய பாடத்தின் தொடர்ச்சி

ஜோதிடம் கற்றுக் கொள்பவர்களுக்கு முதன் முதலில் சொல்லித்தரும் பாடம் இதுதான்:

ஜோதிடர், ஜாதகத்தைப் பார்த்து இப்படி நடக்கலாம் என்று மட்டுமே சொல்ல வேண்டும் (He only can indicate what will take place) எந்தப் பலனையும் அறுதியிட்டு இப்படித்தான் நடக்கும் என்று சொல்லக் கூடாது. (He should not certainly say what will  happen)

அதைச் சொல்வதற்கும் அல்லது அதை நடத்திக் காட்டுவதற்கும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் நம்மைப் படைத்தவர். இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அந்த சக்தி கிடையாது. ஜாதகத்தைப் பார்த்து 70 அல்லது 75 சதவிகித்மதான் என்ன நடக்கலாம் என்று சொல்லலாம். பூர்வ புண்ணியத்தின் பலனைக் கணிக்கும் அல்லது கணிக்கும் சக்தி யாருக்கும் கிடையாது.

விதியை அல்லது விதிக்கப் பெற்றதைத் த்டுத்து நிறுத்த முடியுமா? யாராலும் முடியாது. விதியை விட வலிமையானது ஒன்றும் கிடையாது. Nothing is stronger than destiny அதனால் தான் பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணங்களில் சில ஊற்றிக்கொண்டு விடுகின்றன. ஜோதிடரை எப்படிக் குறை சொல்ல முடியும்? அவரின் வாக்கையும் மீறி அது நடந்திருக்கும்!

கணவனைப் பிரிந்து வாழ வேண்டும் என்பது அவளுடைய விதி என்றால், அவளுக்குத் திருமணம் நடக்கும். ஆனால் விதி அவளைப் பிரித்துக்கொண்டு வந்து விடும். செல்வம் தொலைந்து போக வேண்டும் என்றால், எவ்வளவுதான் வேலி போட்டுக் காப்பாற்றினாலும், அது தொலைந்து போகும். நிலைக்காது.

பூர்வ புண்ணியத்தால் நடக்க வேண்டிய நல்லது நடக்கும். கெட வேண்டியது கெடும்!

அதனால்தான் சில சமயம் ஜோதிடர் சொல்வது நடக்காமல் பொய்த்துப் போய் விடுகிறது!.

மகேந்திரப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துவைத்த சில தம்பதியருக்கு குழந்தை இல்லாமல் போய்விடும். மகேந்திரப் பொருத்தம் இல்லாத தம்பதியர் சிலருக்கு திருமணமான அடுத்த ஆண்டே குழந்தை பிறக்கும். இதெல்லாம் ஜோதிட வினோதங்கள்

எத்தனைதான் ஜாதகம் பார்த்து, அதன்படி நடந்தாலும், அல்லது எச்சரிக்கையாக இருந்தாலும் வருவதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்?

திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.

ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.

அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!"

---குறள் எண் 377

அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில் பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை அனுபவிக்க முடியாது.

சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப் பதற்கென்றே சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும் கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ அல்லது மாப்பிள்ளையோ ஹோண்டா சிட்டி ஏ.ஸி காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான். விதி அங்கேதான் வேறு படுகிறது.

ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம். சேர்க்கும் பாக்கியம் உள்ளவன் சேர்ப்பதில்தான் முனைப்பாக இருப்பான். மற்றது எதையும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டான்.

"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சுழினும் தான்முந்நுறும்"

...குறள் எண். 380

ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன? அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு, வேறு ஒரு வழியை ஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும் வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்

What is stronger than fate (destiny)? If we think of an expedient to avert it, It will itself be with us (before the thought)

"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"

...குறள் எண்.372

பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும் அது அவனைப் பேரறிஞனாக்கும்!

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி அதிகாரமாக
ஊழ்வினையை வைத்தார்.

அய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான். அதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து முடித்தார்.

மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப் படிதான் நடக்கும்!

அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா என்ன?

சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார். The Almighty will give standing power! தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.

ஆகவே வரும் எந்தத் துன்பத்தையும் விட தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம்!

ஆகவே ஜாதகத்தை முழுமையாக நம்பி குழம்பிக் கொண்டிருக்காமல் இறைவனை நம்புங்கள். அவரை வணங்குங்கள். அவர் உங்களுக்கு, உங்களின் நல்ல மனதிற்குத் துணையாக வருவார்

ஜாதகத்தில் நல்ல தசா புத்தி வருகிறது. நன்மை செய்யும் கோள்சாரக் காலம் வருகிறது என்றால், அதற்க்காக அதிக சந்தோஷப் படவும் வேண்டாம், அதுபோல நேரம் சரியில்லை என்று தெரிந்தால், அதற்காக பயந்து போகவும் வேண்டாம்.

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இரண்டையும் சமமாக எடுத்துக்கொண்டால், எந்தப் பிரச்சினையும் அல்லது எந்த வருத்தமும் உங்களை அனுகாது.

இதை வலியுறுத்திதான், “இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்த நியதி” என்று கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல் ஒன்றின் சரணத்தில் எழுதினார்

ஆகவே ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். அல்லது ஜோதிடரை சந்தித்து உங்கள் பிரச்சினையைச் சொல்லி, அதற்கான தீர்வைக் கேளுங்கள். என்னுடைய எதிர்காலம் (Future) எப்படி இருக்கும் என்று ஒற்றை வரியில் கேட்காதீர்கள்

1.வேலை இல்லாமல் அவதிப்படுகிறீர்களா? என்க்கு எப்போது வேலை கிடைக்கும் என்று கேளுங்கள்
2.திருமணம் தள்ளிக்கொண்டே போகிறதா? எப்போது திருமணம் நடக்கும் என்று கேளுங்கள்.
3.கடனில் மூழ்கி அவதிப்படுகிறீர்களா? எப்போது கடன் தீரும் என்று கேளுங்கள்
4.குழந்தை இல்லாத கவலையா? எப்போது குழந்தை பிறக்கும் என்று கேளுங்கள்
5.மகனுக்கு படிப்பு ஏறவில்லையா? படிப்பானா? மாட்டானா? என்று கேளுங்கள்
6.வாடகை வீட்டில் அவதிப் படுகிறீகளா? வீடு வாங்கும் பாக்கியம் இருக்கிறதா என்று கேளுங்கள்.
7. மேல் படிப்பு படிக்கும் ஆசை இருக்கிறதா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்று கேளுங்கள்
8. வெளிநாட்டில் சென்று வேலை செய்து, பொருள் ஈட்டும் எண்ணம் இருக்கிறதா? அதற்கான வாய்ப்பு உள்ளதா என்று கேளுங்கள்
9. வெளி நாட்டில் இருந்தது போதும். சொந்த மண்ணிற்குத் திருப்ப வேண்டும் என்ற எண்ணம இருக்கிறதா? அதற்கான நேரம் எப்போது வரும் என்று கேளுங்கள்
10. நோயால அவதிப்படுகிறீர்களா? நோய் நொடிகள் எப்போது தீரும் என்று கேளுங்கள்.

இப்படிspecific ஆகக் கேளுங்கள். ஜோதிடத்தில் ஞானம் உள்ள ஜோதிடர், இதற்கான பதில்க்ளைச் சொல்லி உங்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவார். நிமமதியை ஏற்படுத்துவார்.

உங்களுக்கு ராகு திசை அல்லது சனி திசை அல்லது 12ஆம் இடத்தின் திசை நடக்கிறது அது இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிவிற்கு வரும். அதற்குப் பிறகு உங்களுக்கு நல்ல காலம் என்று அவர் சொன்னால், அந்த மூன்று ஆண்டுகளை சகித்துக்கொண்டு நிம்மதியோடு அல்லது சந்தோஷத்துடன் இருப்பீர்கள் அல்லவா? அதுதான், அந்த நிம்மதிதான் ஜோதிடத்தின் மூலம் கிடைக்ககூடியது ஆகும்!!!

1. வீட்டில் மனவளர்ச்சி குன்றிய குழந்தை இருக்கிறது. அதன் எதிர்காலம் என்ன?
2. என் பையன் சின்ன வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான். அவன் திரும்ப வ்ருவானா? அல்லது மாட்டானா?

என்பது போன்ற சிக்கலான கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அதெல்லாம் கர்ம வினையால் வருவது. அத்ற்கெல்லாம் சரியான பதில் கிடைக்காது
------------------------------------------------------------------------------------------------
எது எப்ப்டியோ போகட்டும். நீங்கள் எதற்கும் கவலைப் படாத மனநிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.  Take it easy என்று எதையும் எடுத்துக்கொண்டு எப்போதும் மகிழ்ச்சியோடு இருங்கள். அதுதான் இந்த நீண்ட கட்டுரையின் நோக்கம்!

வாழ்க்கை குறுகியது.
நிலை இல்லாதது

சித்தர் பாடல்கள் பல அவற்றைத்தான் வலியுறுத்துகின்றன

உங்களுக்காக் பட்டினத்தார் எழுதிய பாடல் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன்:

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே!


சதம் என்றால் நிலையானது, நிரந்தரமானது
சதமல்ல என்றால் நிலையில்லாதது என்று பொருள் .

ஊரும் சதம் அல்ல - உடம்பே சொந்தமில்லை. அது வாடகை வீடு. ஊர் எப்படி சொந்தமாகும்?
உற்றார் சதம் அல்ல - அவனவனுக்கு அவன் குடும்பம மற்றும் அவனுடைய பிரச்சினைகளே பெரியது. நம்மைப் பார்க்க அவர்களுக்கு நேரம் ஏது?
உற்று பெற்ற பேரும் சதம் அல்ல - பேரும் புகழும் நிரந்தரம் இல்லை.
பெண்டீர் சதம் அல்ல - மனைவி நிரந்தரமல்ல
பிள்ளைகளும் சதம் அல்ல, திரும்ணமானவுடன் தங்கள் வாழ்க்கையைப் பார்க்க அவர்கள் போய் விடுவார்கள்
சீரும் சதம் அல்ல - சொத்துக்கள் எல்லாம் நிரந்தரம் அல்ல.
செல்வம் சதம் அல்ல - செல்வம் எப்போது வேண்டு மென்றாலும் நம்மைவிட்டுப்போகும். அல்லது அதைவிட்டு நாம் போவோம்
தேசத்திலே யாரும் சதம் அல்ல - நண்பர்கள், உறவினர்கள், மனைவி, மக்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று எவரும் நிரந்தரமில்லை
நின் தாள் (இறைவனின் பாதங்கள்) சதம் - உன் திருவடிகள் மட்டுமே நிரந்தரமானது காஞ்சி மாநகரில் உறையும் ஏகாம்பரேஸ்வரனே!!!!!!!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.10.12

Astrology ஜோதிடம் கற்பதற்கு உரிய யோகம் எங்கே கிடைக்கும் ?

Astrology ஜோதிடம் கற்பதற்கு உரிய யோகம் எங்கே கிடைக்கும் ?

சரஸ்வதி துதிப் பாடல்!

இன்று சரஸ்வதியைப் பூஜிக்கும் நாள். வணங்கி மகிழும் நாள். உங்களுக்காக, அந்த முண்டாசுக் கவிஞன் இயற்றிய  சரஸ்வதி துதிப் பாடலை வலை ஏற்றியுள்ளேன். நீங்கள் அறிந்த பாடல் என்றாலும், இன்று அப்பாடலைப் படித்து சரஸ்வதி தேவியை ஒருமுறை வணங்குங்கள். எல்லா நலனும் உண்டாகும்
அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
(வெள்ளை)

உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்
(வெள்ளை)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்
(வெள்ளை)

-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
++++++++++++++++++++++++++++++++++++
Astrology சரஸ்வதி யோகம்! (saraswati Yoga)

இது ஒரு மேன்மையான யோகம்

ஜாதகத்தில், புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும் (புதன் தனித்திருந்தால் சுபக்கிரகம்தான்) கேந்திரம் அல்லது திரிகோணங்கள் அல்லது இரண்டாம் வீட்டில் இருக்க வேண்டும். அத்துடன் குரு பகவான் தன் சொந்தவீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ அல்லது நட்பு வீடுகளிலோ இருக்க வேண்டும். அவவாறான அமைப்பு இருந்தால்  இந்த யோகம் ஜாதகனுக்கு உண்டு

என்ன பலன்?

ஜாதகனுக்கு உயர்கல்வியில் மேன்மை உண்டாகும்.அதிகம் படித்த பண்டிதனாக இருப்பான் (Scholar). கணிதத்தில் கரை காண்பான். புராதன நூல்களையும் படித்துத் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்.

இந்த யோகம் உடையவனுக்கு சரஸ்வதியின் அருள் இருக்கும்

அருள் இருந்தால் படித்தது மறக்காது. நினைவில் அப்படியே தங்கிவிடும். படிப்பதை விட அது முக்கியம்

ஜோதிடம் கற்றுத் தேர்வதற்கு சரஸ்வதியின் அருள் வேண்டும். இந்த யோகம் ஜாதகத்தில் இல்லா விட்டாலும், சரஸ்வதியின் அருள் இருந்தால் போதும். சரஸ்வதி தேவியை வணங்குங்கள். தேவியின் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஜோதிடப் பாடங்களும் மனதில் பதியும்!

ஜோதிடம் கற்பதற்கு உரிய யோகம் எங்கே கிடைக்கும் ? என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு, பரபரப்பு அடைய வேண்டாம். அது சரஸ்வதி தேவியிடம் கிடைக்கும்!!!!
-----------------------------------------------------------------------------------------------------------
நேற்றையப் பாடத்தின் தொடர்ச்சிக்காக ஆவலாக இருப்பீர்கள். இடையில் இரண்டு தினங்கள் பூஜை நாட்களாக வந்து  விட்டது. அத்துடன் 12 மணி நேரம் மின் வெட்டும் உள்ளது. அந்தப் பாடத்தை விவரமாக எழுதிப் பதிவிட வேண்டும். அந்தப் பாடம் 25.10.2012 வியாழக் கிழமையன்று வெளியாகும். அனைவரும் பொறுத்துக்கொள்ளுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.10.12

Astrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா?

 
Astrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா?

தலைப்பில் வாத்தியார் அடிக்கடி டா போட்டு எழுதுகிறாரே ந்ன்று யாரும் நினைக்க வேண்டாம். அது எனக்கு நானே போட்டுக்கொள்வது. அப்போதுதான் ஒரு உற்சாகத்துடன், உங்கள் மொழியில் சொன்னால் ஒரு ‘கிக்’ உடன் எழுத முடிகிறது!

எந்த ஒரு விலை உயர்ந்த சாதனத்தையும் வாங்கும்போது, அதற்கு எத்தனை ஆண்டுகள் உத்திரவாதம் (க்யாரண்டி) இருக்கிறது என்று பார்த்து விட்டுத்தான் வாங்குவோம். அதுதான் வழக்கம். உதாரணத்திற்கு விலை உயர்ந்த ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கினாலோ அல்லது கைப்பிடிக்குள் அடங்கும் ஒரு வீடியோ காமெராவை வாங்கினாலோ அல்லது ஒரு மடிக்கணினியை வாங்கினாலோ, ஒன்று அல்லது இரண்டு ஆண்டு அதற்கு செயல் உத்திரவாதம் இருந்தால்தான் வாங்குவோம்

அனால் எல்லாவற்றையும் விட விலை உயர்ந்த அல்லது விலை மதிப்பிட முடியாத நம் உயிருக்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? அல்லது அதை யாரிடம் கேட்டு வாங்குவது?

இரவில் கண் அயரும்போது, காலையில் எழுந்திருப்போம் எனற நம்பிக்கையுடன்தான் படுக்கிறோம். அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளைக்கூட சிலர் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள். அதுவே கடைசி தூக்கமாக இருந்து, காலையில் மனுஷன் எழாமல் போய்விட்டால் என்ன செய்ய முடியும்?

நெடுஞ்சாலையில் பயணிக்கிறவன், செல்லுகின்ற ஊருக்கு இததனை மணி நேரத்தில் போய்ச் சேருவோம் என்று கணக்குப் போட்டுக் கொண்டுதான் வண்டியை எடுக்கின்றான். அவன் நன்றாக வண்டியை ஓட்டினாலும், அந்த வண்டி புதியதுதான், பிரச்சினை எதுவும் செய்யாது என்றாலும், எதிரில் வேகமாக வருகின்ற டிப்பர் லாரிக்காரன் முத்தம் கொடுத்து, அதாவது மோதி, பக்கத்தில் இருக்கும் பள்ளத்திற்குள் அவனையும், அவன் வண்டியையும் தலை குப்புறத் தள்ளிவிட்டுப் போனால் என்ன செய்ய முடியும்? மோதியவன் யார் என்று எழுந்து பார்ப்பதற்கு உயிர் இருக்க வேண்டுமே?

இது போல சொல்லிக் கொண்டே போகலாம். ஆகவே வாழ்க்கை நிச்சயமற்றது!

என்றைக்கு வேண்டுமென்றாலும் ஆயுள்காரகன் சனீஷ்வரன் போர்டிங் பாஸைப் பைக்குள் திணித்து நம்மை மேலே அனுப்பிவைப்பான். சனி அனுப்பி வைக்கும் போது விசா, இமிக்ரேசன், விமான டிக்கெட் என்று எந்தப் புண்ணாக்கும் கிடையாது. ‘செக்யூரிட்டி செக்’ எல்லாம் கிடையாது. எல்லாம் இலவசம். இலவசம் என்றால் நமக்குப் பிடிக்குமே. ஆகவே மகிழ்ச்சியுடன் போய்ச் சேர வேண்டியதுதான்.

    “நான் என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து வைத்திருக்கிறேன். என்னுடைய ஆயுட்காலம் 80 ஆண்டுகள் என்று தலை சிறந்த ஜோதிடர் ஒருவர் சொல்லியிருக்கிறார். எனக்கு இப்போது 40 வயதுதான் ஆகிறது. இன்னும் நாற்பது ஆண்டு காலம் நான் வாழ்வேன்” என்று சொல்லிக்கொண்டிருப்பவன் கூட சொன்னதற்கு அடுத்த நாளே போய்ச் சேரலாம். ஜோதிடர் என்ன கடவுளா? அவர் சொன்னால் அப்படியே நடப்பதற்கு?

ஜோதிடர்கள் பொருத்தம் பார்த்துக் கொடுத்த எத்தனையோ திருமணங்கள் ஊற்றிக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆண்டில் தம்பதியர் இருவரும் ஒரு பெண் மகப்பேறு மருத்துவரைப் பார்ப்பதற்குப் பதிலாக, குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு மனுச் செய்து விட்டு, அங்கே மன வருத்தத்துடன் அலைந்து கொண்டிருப்பார்கள். நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

    “என்ன சொல்ல வருகிறீர்கள்? ஜோதிடம் பொய்யா?”

    “ஜோதிடம் பொய்யல்ல! உண்மை.”

அதை முழுதாகக் கற்றுத் தெளிந்தவர்கள்தான் குறைவு.

பல நூற்றாண்டுகளுக்கு, முன் நம் நாட்டில் அக்காலத்தில் வாழ்ந்த ரிஷிகளால் ஏராளமான ஜோதிட நூல்கள் எழுதப்பெற்றுள்ளன. அவைகள் எல்லாம் வடமொழியில் இருந்தன. அவற்றை எல்லாம் பல புண்ணிய ஆத்மாக்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூல்களாக்கி வைத்துள்ளாகள். அவற்றுள் முக்கியமான சில நூல்களைக் கீழே கொடுத்துள்ளேன். அவற்றுள் ஏராளமான பாடங்கள், தகவல்கள், செய்திகள் பத்மநாப சுவாமி கோவில் சுரங்க அறைக்குள் இருக்கும் தங்கத்தைபோல வைரங்களைப் போல கொட்டிக்கிடக்கின்றன.

அவற்றை எல்லாம் முழுமையாகப் படித்து முடித்து மனதில் உள் வாங்கிக் கொள்ள நம் ஆயுள் பத்தாது. உள்வாங்கிக்கொண்ட நம் முன்னோர்கள் எல்லாம், சின்ன வயதிலேயே துவங்கி அவற்றிற்காக, அதைக் கற்றுக்கொள்வதற்க்காகவும் அவற்றை வைத்து நொந்து போன உள்லங்களுக்குப் பலன் சொல்லவும், ஆறுதல் அளிக்கவும் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார்கள்.

அப்படி அர்ப்பணிப்பவர்கள் எல்லாம் இப்போது யாரும் இல்லை.

அந்த நூல்களின் பட்டியல். (எல்லாவ்ற்றையும் குறிப்பிடவில்லை. முக்கியமானவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.)

Classical Vedic Texts
1. Brihat Parashara Hora Shastra (the "bible" of Vedic astrology)
   written by Sage Parashara (father of Veda Vyaasa, the compiler of Mahabharata)
2. Phaladeepika (the second most important "bible" in Vedic astrology)
   written by Mantreswara was a 16th-century Hindu astrologer
3. Uttara Kalamrita
   written by Kalidasa
4. Saravali (two volumes)
   written by Kalyana Varma, belonged to the 10th century
5. Bhrigu Sutram and
6. Bhrigu Samhita
   Both written by Maharishi Bhrigu was one of the seven great sages, the Saptarshis, 

   in  ancient India,
6. Brihat Jataka
    written by Varahamihira, an Indian astronomer, mathematician, and astrologer 

    who    lived in Ujjain.He is considered to be one of the nine jewels (Navaratnas) 
    of the court of legendary ruler Vikramaditya (thought to be the Gupta emperor  
    Chandragupta II Vikramaditya) Period 505 - 587 
7. Sri Sarwathachintamani (two volumes)
    written by Acharya Venkatesa in the 13th century.
8. Jataka Parijata (3 Vol)
   written by Acharya Venkatesa in the 13th century.
9. Kalaprakasika
   The standard book on the election (mahoortha) system : with original text in  

    Devanagari   and English translation
    by N.P. Subramania Iyer.

10. குமாரசுவாமீயம்
11. புலிப்பாணி ஜோதிடம்
12. கேரள மணிகண்ட ஜோதிடம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எதிரில் உள்ள புது மண்டபத்தில் ஏராளமான புத்தகக் கடைகள் உள்ளன. எல்லாவிதமான ஜோதிட நூல்களும் அங்கே கிடைக்கும். பணத்தைத் தூக்கிப்போட்டு அவைகளை வாங்கிக் கொண்டு வந்து விடலாம்.

வாங்குவாதா முக்கியம்?

படிக்க வேண்டுமே? படிப்பத்ற்கு நேரம் வேண்டுமே? நேரம் இருந்து படித்தாலும் படிப்பது புரிய வேண்டுமே? அதாவது விளங்க வேண்டுமே? விளங்கினாலும் மண்டைக்குள் ஏற வேண்டுமே? ஏறினாலும் நினைவில் அவைகள் தங்க வேண்டுமே?

அதுதான் கஷ்டம்!!!!

பழைய ஜோதிட நூல் ஒன்றில் இருந்து பாடல் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன். புரிகிறதா பாருங்கள்:

திதிமன்முன்கோவாய் வேனேரைந்து முபசயமுஞ்
   சென்றது முன்புடனன் றந்தாள் சேயுமணன் றிபுச்சேய்
நவமும்வியமாறேழுநளின நுநீராந்த
   நாட்கிறையுமாம் வேளொன்ன் றந்தணநோய்நடையுன்
தவமுளண்னோய் பொனடைத்தம்பியுங் கட்கணியாய்த்
   தருகேந்த்ரபண பரமுமிதிற்றனையரிவது
மவமுனின் மாலுடனகமுமாறுளணவனு
   மைந்திலதெட்டி துவுமெட்டேழிந்துவுமக்கிறைக்கே!

                 - புத்தகத்தின் பெயர் குமாரசுவாமியம் -  75வது பாடல்
தலைப்பு அட்டவர்க்கப் படல்ம் - ரவி மதி அட்டவர்க்கம்


அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் (நன்றாகக் கவனியுங்கள் இரண்டு கிரகங்கள்) சுய அஷ்டகவர்க்கம் போடுவத்றகான வழி முறையைப் பற்றிய தகவல்கள் எட்டே வரியில் கூறப்பட்டுள்ளன. உங்களுக்குத் தெரிந்த தமிழ்ப் பண்டிதர் அல்லது பேராசியரிடம் கொடுத்து இதற்குப் பொருள் கேளுங்கள். சொன்னார் என்றால் எனக்குத் தகவல் சொல்லுங்கள். அவரைப் பாராட்டி நம் வகுப்பறையில் ஒரு தனிப்பதிவு போட்டு விடுகிறேன்!

இதற்கெல்லாம் இன்றையத் தமிழில், அதாவது நமக்குத் தெரிந்த தமிழில் விளக்கம் சொன்னால்தானே புரியும். சிலர் பொருள் எழுதியுள்ளார்கள். அதெல்லாம் நேரடியான பொருள். நேரான மொழிபெயர்ப்பு. அதனால் இப்போது அவற்றைப் படிப்பவர்கள் சற்று புரிந்து கொள்வார்கள். இன்னும் ஜனரஞ்சகமான தமிழில் அவற்றை எழுதுவதற்கு யாராவது முன் வர வேண்டும்.

எனக்கு அந்தப் பிரச்சினை எல்லாம் ஏற்படவில்லை. நான் படிதததெல்லாம் ஆங்கில நூல்கள். சனியை பாடலின் எதுகை மோனைக்காக நீலவன், முடவன், காரிமைந்தன் என்று எல்லாம் சொல்லாமல் ஒரே ஒரு வார்த்தையைத்தான் அந்த நூல்களில் பயன் படுத்துவார்கள். Saturn அவ்வள்வுதான். அதனால் நான் தப்பித்தேன். ஜோதிடமும் ஒரளவிற்கு எனக்குப் பிடிபட்டது.

ஜோதிடத்தில் கரை கண்டவன் எவனுமில்லை. ஆகவே அடக்கி வாசிக்க வேண்டும். ஜோதிடம் பெரிய கடல். அந்தக் கடலில் நான் எவ்வளவு தூரம் பயணித்திருப்பேன். எத்தனை இடங்களைப் பார்த்திருப்பேன்  என்று எப்படிக் கணக்கிட்டுச் சொல்ல முடியும்? ஆகவேதான் அந்த ஓரளவு.

இப்போது ஜோதிடம் சொல்பவர்கள் எல்லாம் குடும்ப ஜோதிடம் போன்ற நான்கைந்து தமிழ் ஜோதிட நூல்களைப் படித்துவிட்டு ஜோதிடர் வேலையைச் செய்யத் துவங்கி விடுகிறார்கள்.

தசா புத்தியைக் கணித்தும், கோள்சாரத்தை வைத்தும் பலன் சொல்வதும் எளிது. நுட்பமான கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குத்தான் ஜோதிடத்தில் ஆழந்த ஞானமும் (அறிவும்) அனுபவமும் வேண்டும். எல்லோருக்கும் அது அமையாது!

என்க்கு, வாரத்திற்கு, இரண்டு அல்லது மூன்று மின்னஞ்சல்கள் வரும். “ஐயா, எனக்கு ஓரளவு ஜோதிடம் தெரியும். தெரிந்ததை வைத்து ஜோதிடர் தொழிலை முழு நேரத்தொழிலாகவோ அல்லது பகுதி நேரத் தொழிலாகவோ நான் செய்யலாமா? எனக்கு அதில் வருமானம் கிடைக்குமா? தயவு செய்து என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்” என்று அதில் கேட்டிருப்பார்கள்

எப்படி இருக்கிறது கதை?

படிப்பது வேறு. படித்ததை வைத்துத் தொழில் செய்வது வேறு!

படிப்பதை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். , பெயர்ப் பலகையை வாசலில் மாட்டித் தொழில் செய்வது அப்படியா?

பகவானே, எல்லாம் காலக்கோளாறு என்று நினைத்துக் கொள்வேன்.

எடுத்தவுடன் இயக்குனர் சங்கர்போல வரவேண்டும் என்று முயற்சி செய்தால் எப்படி? சங்கர் துவக்க காலத்தில் எத்தனை பேர்களிடம் உதவியாளராகப் பணியாற்றி அனுப்வம் பெற்றார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அதுபோல,  ஜோதிடர் ஒருவரிடம் நான்கு அல்லது ஐந்து ஆண்டு காலம் உதவியாளராக இருந்து பணி செய்திருந்தால் மட்டுமே  ஜோதிட ஞானமும், அனுபவமும் கிடைக்கும்

கற்பதைவிட, அனுபவ அறிவு முக்கியம். நிறைய ஜாதகங்களைப் பார்த்திருக்க வேண்டும். நிறையப் பேர்களிடம் உரையாடியிருக்க வேண்டும். எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது. நிறைய உதாரண ஜாதகங்களை சேர்த்து வைத்தி ருக்கிறேன்.என்னை அறியாமலேயே சேர்த்து வைத்திருக்கிறேன். என் எழுத்துக்களுக்கு அவைகள் உதவுகின்றன!

சிலர் சிலருக்குப் பலன் சொல்லும்போது சில சமயம் அது தவறாகப் போய்விடும். அதற்கு ஜோதிடர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வேறு ஒரு வலுவான காரணமும் இருக்கும்.

என்ன காரணம் அது?

அடுத்த பதிவில் அதை விவரமாகப் பார்ப்போம்

(தொடரும்)

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.10.12

Astrology குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்


Astrology குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்

அலசல் பாடம்

குழந்தை இன்மை என்பது ஒரு சாபம்தான். சாபம் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் வருந்தாதீர்கள். காலதேவன் கொடுக்கும் சாபங்களுக் கெல்லாம், இறைவன் நஷ்ட ஈட்டையும் கொடுத்துத்தான் மனிதர்களைப் படைக்கிறார். இல்லை என்றால் அனைவருக்கும் 337 என்ற மந்திரம் எப்படி வரும்?

தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை எத்தனை பிள்ளைகள உதாசீனப் படுத்துகின்றன தெரியுமா? எத்தனை பெற்றோர்கள் உரிய அன்பு பாசம் அரவணைப்பு கிடைக்காமல் முதியோர் இல்லங்களில் வாடிக்கொண்டிருக் கிறார்கள் தெரியுமா?

அவர்களைப் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவர்களின் நிலைமை எவ்வள்வோ மேல்!

என்ன, சமூகம் அவர்களைச் சீண்டும் - அது ஒன்றுதான் வருத்தத்திற்கு உரியது! உறவினர்களோ அல்லது நண்பர்களோ திடீரென்று உங்கள் குழந்தைகள் என்ன  செய்கின்றன என்று கேட்டு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்

லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டியைப் போலீஸ்காரன் மடக்கிக் கேள்வி கேட்பதைப் போல கேள்வி கேட்பார்கள்!

கேட்டால் என்ன? அடக்கமாகப் பதில் சொல்லுங்கள்

   “I do not have a child. I don't know whether it is a curse or boon. But i accepted the out come of the life destined to me, happily!”

   “எனக்குக் குழந்தை இல்லை. அது சாபமா அல்லது வரமா என்று தெரியவில்லை. விதிக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டு வாழும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது. அதனால் நான் குழந்தையின்மைக்காக வருந்தவில்லை”. என்று சொல்லுங்கள்!

குழந்தை இருப்பவனுக்கு அவன் குழந்தைகள் மட்டுமே குழந்தைகளாக இருக்கும். குழந்தை இல்லாதவனுக்கு, அவன் செலுத்தும் அன்பினால் உறவினர்கள், நண்பர்கள் என்று மற்ற வீட்டுக் குழந்தைகளும் அவனுடைய குழந்தைகள்தான் என்ற பெருந்தன்மையால் நிறையக் குழந்தைகள். ஆக்வே குழந்தையின்மை  சாபமல்ல ஒரு வித்ததில் அது வரம்தான்!
----------------------------------------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே இருக்கிறார்.

குடும்ப ஸ்தான அதிபதி (Lord of the 2nd house) சூரியன் பாக்கியத்தில் (9ஆம் வீட்டில்) ஆகவே நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தது

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

1
குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு,
2
அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். வீக்காக உள்ளார்
3
குழந்தைக்குக் காரகன் குரு  (authority for children) அஷ்டமத்தில் மறைந்துவிட்டர்ர் அதாவது எட்டாம் இடத்தில் அமர்ந்து விட்டார். அத்துடன்

விரையாதிபதி குருவுடன் சேர்ந்து செல்லாக் காசாகிவிட்டார்.
4
அத்துடன் அதே குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி அதாவது Ninth Lord அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார்.

அது மோசமான இடமாகும் (It is the most malefic place for a house lord)
5
மேலும் இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது!

விளக்கம் போதுமா?

இது மேல்நிலை வகுப்பிற்காக  (classroom2012) எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்.
மேல்நிலை வகுப்பில் எழுதப்பெறும் பாடங்கள் பின்னால் புத்தகமாக வரவுள்ளது. அப்போது அனைவரும் படிக்கலாம்!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------
இடைச்சேர்க்கை:

இரண்டு அன்பர்கள் அஷ்டகவர்க்கம் அவசியமில்லையா? அதைக் கொடுக்கவில்லையே நீங்கள் என்று கேட்டுள்ளார்கள்.

அவர்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்.


சர்வாஷ்டகவர்க்கத்தில் ஐந்தாம் வீட்டிற்கு 26 பரல்கள்
காரகன் குரு இருக்கும் இடத்திற்கு 23 பரல்கள்
வீட்டுக்காரன் செவ்வாய் இருக்கும் இடத்திற்கு 29 பரல்கள் (சாராசரிக்கும் மேலாக ஒரு பரல் கூடுதலாக இருந்தாலும் கேதுவின் சேர்க்கையால் அதற்கு பலன் இல்லை. அதை விடுத்தாலும் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் குறைவான பரல்களே உள்ளன)

சரி சுயவர்க்கத்தைப் பாருங்கள்:

குருவிற்கு 3 பரல்கள் மட்டுமே
செவ்வாய்க்கு நான்கு பரல்கள் மட்டுமே
லக்கினாதிபதி சந்திரனுக்கு 2 பரல்கள் மட்டுமே (அவன் முக்கியமில்லையா?)

சில காரணங்களுக்காக பிறந்த தேதி, மற்றும் பிறந்த நேரம்,, ஊரைக் கொடுக்கவில்லை. நம் நண்பர் திருவாளர் ஆன்ந்த அவர்கள் சொல்வதைபோல  அட்டவணையை வைத்து அதைக் கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமில்லை. சிரமமாக உள்ளது என்று நினைப்பவர்கள் மின்னஞ்சல் கொடுங்கள். அதை அனுப்பி  வைக்கிறேன். அதாவது அறியத் தருகிறேன்!

அன்புடன்
வாத்தியார்

18.10.2012
2:00 PM
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

17.10.12

Astrology ஆளுமையும் இருக்கும் ஆட்டமும் இருக்கும்!



 Astrology ஆளுமையும் இருக்கும் ஆட்டமும் இருக்கும்!

17.10.2012

மேஷ லக்கினம்.

லக்கின வரிசையில் இதுதான் முதல் லக்கினம். இதன் அதிபதி செவ்வாய். பிரதான கிரகமான, அதாவது ராஜ கிரகமான சூரியனுக்கு இது உச்சவீடாகும்!.

1
ல்க்க்கின அதிபதி செவ்வாய் மகர வீட்டில் உச்சம்பெறுவார். அதிபதி உச்சம் பெற்றாலும் அல்ல்து கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஜாதகத்திற்கு அது சிறப்பைத்தரும். ஜாதகனுக்கு உயர்வைத் தரும். ஜாதகன் செயல் வீரனாக இருப்பான்.

2
ல்க்கினத்தில் சூரியன் வந்து அமர்ந்திருந்தால், அது ஜாதகனுக்கு பல மேன்மைகளைத் தரும். மதிப்பு, மரியாதை, கெள்ரவம் அந்தஸ்து என்று அனைத்தையும் அது பெற்றுத்தரும்!.

3
மேஷ லக்கினத்தில் சந்திரன் வந்து அமர்ந்திருந்தால், அது ஜாதகனுக்கு அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வழங்கும். ஜாதகனுக்குப் பெண்களை வசீகரிக்கும் தன்மையைக் கொடுக்கும்.

4
மேஷ லக்கினத்தில் லக்கினாதிபதி செவ்வாய் அமர்ந்திருந்தால், ஜாதகன் நல்ல நிர்வாகத் திறமையைப் பெற்றிருப்பான். ஆளுமை இருக்கும். அதாவது யாரையும் கட்டி மேயக்கும் திறமை இருக்கும். ஜாதகன் துணிச்சல் மிக்கவனாகவும், தைரியசாலியாகவும் இருப்பான். வெற்றிகரமான வாழ்க்கை அமையும்

5
மேஷத்தில் புதன் வந்து அமர்வது சிறப்பல்ல. புதன் இந்த லக்கினத்திற்கு மூன்று மட்டும் ஆறாம அதிபதி அதை நினைவில் வையுங்கள். ஜாதகனின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும். எதிரிகள் ஏற்படுவார்கள். சிலர் கல்மனதுக்காரர்களாகவும் பல தீய பழக்கங்களுக்கு அடிமையானவர் களாகவும் இருப்பார்கள். அதே நேரத்தில் சாஸ்திரங்களிலும், ஜோதிடத்திலும் ஆர்வம் உடையவர்களாவும், அவற்றில் அறிவு பெற்றவர்களாகவும் இருப்பார்கள். முன்னோர்களின் சொத்துக்கள் தங்காது. சிலர் அவற்றை எல்லாம் அடித்துத்தூள் கிளப்பிவிடுவார்கள். அதாவது அழித்து விடுவார்கள்

6
மேஷத்தில் குரு வந்து அமர்ந்தால், ஜாதகன் இறைப்பற்று உடையவனாகவும் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் உடையவனாகவும் இருப்பான். கல்வியாளனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான். சிலருக்கு செல்வம் அதுவாக வந்து சேரும். எந்த வேலை செய்தாலும் அதில் நல்ல நிலையை அடைவான். விசுவாசம் மிக்கவனாக இருப்பான் பெருந்தன்மை மிக்கவனாக இருப்பான். பொது மக்களுக்குப் பாடுபடுபவ்னாக இருப்பான். பொது சேவையில் அதிகம் நாட்டம் உடையவனாக இருப்பான்
.
7
மேஷத்தில் சுக்கிரன் வந்து அமர்ந்தால், ஜாதகன் செல்வந்தனாகவும், வண்டி வாகன வசதிகளை உடையவனாகவும் இருப்பான். அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான். நல்ல உறவினர்களைக் கொண்டவனாக இருப்பான். அதிகம் பயணிப்பவனாக இருப்பான். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சிலருக்குக் கொடுக்கல் வாங்கலில் விவகாரம் உண்டாகலாம்.

8
மேஷத்தில் சனி வந்து அம்ர்வது நல்லதல்ல. சனிக்கு இந்த இடம் நீச வீடாகும். அதை மனதில் வையுங்கள். வாழ்க்கை துன்பங்களூம் ச்சொகங்களும் நிறைந்ததாக இருக்கும். முயற்சிகள் எல்லாம் தோல்வியடையலாம். சிலருக்கு அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் வீணாகலாம். மனைவியுடன் சுமூகமான உறவு இருக்காது. முன்னோர்கள் வைத்துவிட்டுப்போன அல்லது கொடுத்துவிட்டுப்போன சொத்துக்களை எல்லாம் இழக்க நேரிடும். உறவினர்களுடன் அடிக்கடி உரசல்கள் ஏற்படும்.
ஜாதகனுக்கு விசுவாசமில்லாத தன்மை உண்டாகும்.

9
ராகு அல்லது கேது வந்து மேஷத்தில் அமர்வதோடு, தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இல்லாமலிருந்தால், ஜாதகனுக்கு பல நன்மைகள் உண்டாகும். மரியாதை சமூக அந்தஸ்து உண்டாகும். சிலர் ராணுவம் அல்லது காவல்துறையில் பணி செய்து உயர் பதவிக்கு வந்து விடுவார்கள். தைரியமும், எவரையும் வழி நடத்தும் மேன்மையும் ஜாதகனிடம் இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். ஜாதகன் அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான். அதற்கு மாறாக வந்தமரும் ராகு அல்லது கேது, வேறு தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றால், மேற் சொன்னவை எதுவும் நடக்காது. அதற்கு மாறாகவே அனைத்தும் நடக்கும். அதாவது எதிரான பலன்களே கிடைக்கும்.

10.
கிரகங்கள் மேஷ லக்கினத்தில் வந்து அமர்வதால் உண்டாகும் பொதுப் பலன்களை சொல்லியுள்ளேன். வந்து அமராவிட்டாலும், வேறு இடத்தில் இருந்து அவர்கள் தங்கள் பார்வையை இந்த லக்கினத்தின் மேல் செலுத்தினாலும், அதாவது வைத்திருந்தாலும் அதே பலன்கள் உண்டாகும்.

11.
அதேபோல மேஷ் லக்கினாதிபதியான செவ்வாயுடன் கூட்டணி போடும் கிரகங்களை வைத்தும், அல்லது செவ்வாயுடன் பார்வையில் இருக்கும் கிரகங்களை வைத்தும் இந்த லக்கினக்காரகளின் குணங்கள் மாறுபடும். அதை நினைவில் வையுங்கள்!

12
மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் அதிபதி. சூரியன் ஐந்திற்கு (பூர்வபுண்ணியத்திற்கு) உரியவன். குரு பாக்கிய ஸ்தானத்திற்கு உரியவன் சனி 10 & 11ஆம் இடத்திற்கு உரியவன். ஆகவே இவர்கள் நால்வரால் இந்த லக்கினம் மேன்மை அடையும். புதன் ஆறிற்கு உரியவன் ஆதலால் அவனுடைய தொடர்பால் பெரிய நன்மை கிடையாது

இது எல்லாமுமே பொதுப் பலன்கள். அதை மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!