மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 631 - 640. Show all posts
Showing posts with label Lessons 631 - 640. Show all posts

3.4.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ!


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ!

தொடர் பாடம். பகுதி 21

பார்த்தால் பசி தீரும் என்னும் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலை எழுதினார். அந்தக் காலகட்டத்தில் அது மிகவும் பிரபலமான பாடல்
திருமதி. பி .சுசிலா அம்மையார் பாடிய அந்தப் பாடலின் வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------------
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?
எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ?

(யாருக்கு மாப்பிள்ளை)

கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கை கலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ

ஊரறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?

-------------------------------------------------------
சின்ன இடை எண்ணி வருகிறவர்கள்தான் இன்று அதிகம். சீர்வரிசைகளை எல்லாம் வீட்டில் உள்ள பெரிய டிக்கெட்டுக்கள்தான் தேடிக் கொண்டிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை உடைய ஜாதகரின் மனைவி எந்த நட்சத்திரத்தை உடையவராக இருப்பார் என்று சொல்ல முடியுமா? முடியும். அதற்கான ஃபார்முலா ஒன்று உள்ளது. அதை இந்தத் தொடரின் இறுதியில் கொடுக்க உள்ளேன். பொறுமையாகப் படித்துக்கொண்டு வாருங்கள்

ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, இருந்தால் இருவருக்கும் இருப்பதுப்பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. எல்லாவற்றையும் ஒன்றாக ஊற்றினால் சாப்பிடமுடியாது. முதலில் பருப்பு, நெய், அடுத்து சாம்பார், அடுத்து வற்றல்குழம்பு, அடுத்து ரசம், அடுத்து தயிர், அடுத்து பாயாசம் என்று வரிசையாகப் பார்ப்போம் (சாப்பிடுவோம்) எல்லாவற்றையும் தட்டில் ஒன்றாக ஊற்றி, கலக்கி அடியுங்கள் என்றால் எப்படிச் சாப்பிட முடியும்?

ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்ற கதைகளுக்கு வருவோம்!

   “சார். திருமணம் ஆக வேண்டியவர்கள் மட்டும் இதைப் பார்த்தால் போதுமல்லவா?”

   “திருமணம் ஆனவர்களும் பார்க்கலாம். பொருத்தமில்லாத தேவதையைத்தான் மணந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அவளை அனுசரித்துக்கொண்டு போகலாம் இல்லையா?”
-----------------------------------------------------
21. விசாகம் 1, 2 மற்றும் 3ம் பாதங்கள்

இது குரு பகவானின் நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு
1. மிருகசீரிஷம்
2. ஆயில்யம்
3. மகம்
4. சித்திரை
5. விசாகம் (ஏக நட்சத்திரம்)
6. மூலம்
7. திருவோணம்
8. அவிட்டம்
ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். துலாம் ராசிக்கு ரிஷபம் எட்டாம் வீடு. ரிஷபத்திற்கு துலாம் ஆறாம் வீடு.. ரோஹிணி,  மிருகசீரிஷம் 1 & 2ம் பாதங்கள் ரிஷப ராசிக்கு உரியவை ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.

துலாம் ராசிக்கு கன்னி ராசி 12ம் வீடு. கன்னிக்கு துலாம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஹஸ்தம், சித்திரை 1 & 2ம் பாதங்கள் கன்னி ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும் ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் விசாகம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் உண்டு. ஆகவே அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

பரணி, பூரம், அனுஷம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய 6 நட்சத்திரங்களும் பொருந்தாது.

அஸ்விணீ, ரோஹிணி, திருவாதிரை, பூசம், ஹ்ஸ்தம், சுவாதி, சதயம் ஆகிய 7 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவறையும் தெரிவு செய்து எடுத்துக் கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

எதற்காகப் பார்க்க வேண்டும்? 3 அல்லது 4 வருடங்கள் உருகி உருகிக் காதலித்துவிட்டு, மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர் முழுமையாகக் கலந்து விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும்? இதைப் பார்த்துவிட்டு, பொருத்தம் இல்லை என்று அவனை விட்டுவிட முடியுமா? ருசி கண்ட பூனை சும்மா விடுமா? ஆகவே காதலர்கள், காதல் தோற்கக்கூடாது என்ற உலகப் பொது மறையின்ப்டி திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான். திருமணத்திற்குப் பிறகு காதலன் ஒத்துவந்தால் சரி! இல்லை என்றால் குடும்ப நீதி மன்றம் உள்ளது. மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன! அதைவிட மேலாக இருவருக்கும் வேலை, கை நிறையச் சம்பளம், உலகக் கண்ணோட்டம், பொருளாதார சுதந்திரம் என்று எல்லா ஆய்தங்களும் உள்ளன ஆகவே அவர்கள் இதை எல்லாம் பார்க்க வேண்டாம்  அவர்களுக்கு இதிலிருந்து முழுமையான விதிவிலக்கு உண்டு:-)))) அவர்களுக்கான ஜாதக அமைப்புக்களை விரிவாக, ஒரு தொடராகப் பின்னால் அலசுவோம்!!!!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.4.13

Astrology: நிலையில்லாத வாழ்க்கையில் சகமனிதன் நிலையாக விரும்புபவைகள் எவை?


Astrology: நிலையில்லாத வாழ்க்கையில் சகமனிதன் நிலையாக விரும்புபவைகள் எவை?
Key points (in a horoscope) பகுதி ஒன்று!

உட் தலைப்பு: Stable Life (ஸ்திரமான வாழ்க்கை)
நிலையான வாழ்க்கை என்றுதான் குறிப்பிட நினைத்தேன். வாழ்க்கையில் எதுவுமே  நிலையில்லை. எல்லாமே ஒரு நாள் நம்மைவிட்டுப் போகக் கூடியவை. நீங்கக் கூடியவை. ஏன் நாமே ஒரு நாள் இவ்வுலகை விட்டு நீங்கத்தான் போகிறோம். அதனால் ஸ்திரமான வாழ்க்கை  என்று குறிப்பிடுவதுதான் பொறுத்தமாக இருக்கும்

   “உறவு என்றொரு சொல்லிருந்தால்
       பிரிவு என்றொரு பொருளிருக்கும்”

என்றார் கவியரசர் கண்ணதாசன்

Stable என்ற சொல்லிற்கு இவ்வாறான பொருள் (meaning) வரும்
1.
a. Resistant to change of position or condition; not easily moved or disturbed: a house built on stable ground; a stable platform.
b. Not subject to sudden or extreme change or fluctuation: a stable  economy; a stable currency.
c. Maintaining equilibrium; self-restoring: a stable aircraft.
2. 

Enduring or permanent: a stable peace.

சரி, சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

ஒரு ஜாதகனுக்கு, ஸ்திரமான வாழ்க்கை அமைய எது முக்கியம்?

சந்தேகமில்லாமல், லக்கினம்தான் முக்கியம்.

லக்கினம் வலுவாக இருந்தால், அதாவது வலிமையுடன் (Strength) இருந்தால்,
கிடைக்கக்கூடிய நல்ல பலன்களை ஜாதகன் அனுபவிக்க முடியும். நல்ல பலன்கள் உரிய நேரத்தில் வந்து சேரும்.

நன்மையான பலன்கள் என்னென்ன?

1. உடல் ஆரோக்கியம்
2. நீண்ட ஆயுள்
3. செல்வம் (உங்கள் மொழியில் சொன்னால் பணம்)
4. மகிழ்ச்சி
5..எடுத்த காரியங்களில் வெற்றி
6. செல்வாக்கு (சமூக அந்தஸ்து, புகழ், மதிப்பு, மரியாதை என்று எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்)
-------------------------------------------------------------------------------------
அதற்கான ஜாதக விதிமுறைகள்

கீழே குறிப்பிட்டுள்ள 7 பலாபலன்களில் ஒன்று இருந்தாலும் போதும்.

1. லக்கின அதிபதி திரிகோணம் ஏறி இருக்க வேண்டும். திரிகோணங்களில் அமர்ந்திருக்க வேண்டும். திரிகோணம் என்பது 1, 5, 9ஆம் வீடுகள். அம்மூன்றில் வீடு பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீடு மிகவும் சிறப்பான திரிகோண வீடாகும். லக்கினாதிபதி ஒன்பதில் இருந்தால், ஜாதகன் மிகவும் அதிர்ஷ்டமானவன். பாக்கியசாலி. உங்கள் மொழியில் சொன்னால்
கொடுத்துவைத்தவன். என் மொழியில் சொன்னால் வரத்துடன் வந்தவன்.

2. அதற்கு அடுத்த நிலை (அதாவது லக்கினாதிபதி திரிகோணங்களில் இல்லாவிட்டால்)  கேந்திரவீடுகளில் இருக்க வேண்டும். கேந்திர வீடுகள் நினைவில் உள்ளதல்லவா? 4, 7, 10ஆம்  வீடுகள் கேந்திர வீடுகள் ஆகும். இம்மூன்றில் 10ஆம் வீடு மிகச் சிறந்த கேந்திர ஸ்தானமாகும்.

3. லக்கினமும், லக்கின அதிபதியும் சுபக் கிரகங்களின் பார்வையைப் பெற்றிருக்கும் நிலை. சுபக்கிரகங்களை நினைவில் வைத்துள்ளீர்கள் அல்லவா? சந்திரன், சுக்கிரன், குரு ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள் ஆகும். அம்மூன்றில் குரு நம்பர் ஒன் சுபக்கிரகம் ஆகும். சந்திரனுக்கும்
சுக்கிரனுக்கும் ஏழாம் பார்வை மட்டுமே உண்டு. ஆனால் குரு பகவானுக்கு 7ஆம் பார்வையோடு, 5 மற்றும் 9 ஆகிய விஷேசப் பார்வைகள் உண்டு அதை மனதில் கொள்க!

4. லக்கினத்தில் சுபக்கிரகங்கள் வந்தமர்ந்திருந்தாலும் அல்லது லக்கின அதிபதி தான் அமர்ந்திருக்கும் இடத்தில் சுபக்கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் நன்மையானது. (Lagna is occupied by benefics or lagna lord is associated with benefics)

5. லக்கினம் அல்லது லக்கினாதிபதி ஆகியவற்றின் இருபக்கமும் (இருபக்க
வீடுகளில்)சுபக்கிரகங்கள் இருக்கும் நிலைமை. அதாவது லக்கினத்தையோ அல்லது லக்கினாதிபதியை சுபக்கிரகங்கள் சூழ்ந்திருக்கும் நிலைமை.

6. வகோத்தம லக்கினம். லக்கினம் வகோத்தமம் அடைவது. அதாவது இராசி மற்றும்  நவாம்சத்தில் லக்கினம் ஒரே லக்கினமாக இருக்கும் நிலைமை. இந்த அமைப்பு இயற்கையிலே வலுவான லக்கினமாகும்.

7. பார்வையால் மேன்மையுறுவது. லக்கினத்தின் இருபக்க வீடுகளும் சுபக் கிரகங்களின் பார்வையோடு இருக்கும் நிலைமை. அதாவது லக்கினதிற்கு 6 மற்றும் 8ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் இருக்கும் நிலைமை

8. லக்கினத்தில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருப்பது.

இவைகள் எதுவுமே இல்லையா?

கவலை வேண்டாம்!

லக்கினம் பலவீனமாக (weak - lacking strength) இருந்தாலும், சுபக்கிரகங்கள்
ஜாதகத்தில் வலுவாக இருந்தால் போதும். அதாவது அவைகள் ஆட்சி அல்லது உச்ச பலத்துடன் இருக்கும் நிலைமை.

அப்படி இருந்தால், ஜாதகன் அசமந்தமாக (அசடாக) இருந்தாலும், எல்லாச் செல்வங்களும், எல்லா நன்மைகளும் அவனைத் தேடி வரும். (Less potential but much gain in life)

லக்கினம் பலமாக இருந்தாலும், சுபக்கிரகங்கள் ஜாதகத்தில் வலுவாக இல்லாவிட்டால், ஜாதகனின் விருப்பங்கள், அபிலாஷைகள் நிறைவேறாது. வெறுப்பு மட்டுமே எஞ்சி நிற்கும்
-------------------------------------------------------
லக்கினத்துடன் தீய கிரகங்களின் தொடர்பு இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை கஷ்டங்களும், துன்பங்களும் நிறைந்ததாக இருக்கும்.

சமூக சேவைகளிலும், பக்தி மார்க்கத்திலும் திளைப்பதற்கு லக்கினமும் அதன் அதிபதியும் பலவீனமாக இருக்க வேண்டும். லக்கினம் என்பது தன்னைத் தானே (self) குறிப்பது. அது இல்லாதவர்கள்தான் அதாவது தான் தன்னுடையது என்கின்ற உணர்வு இல்லாதவர்கள் மட்டுமே பக்தி மார்க்கங்களில் ஈடுபாடு கொள்ள முடியும். அல்லது பொது மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடமுடியும்!

இது மேல்நிலை வகுப்பில் நடத்தப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று இதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++=

1.4.13

Astrology:ஏன்டா அம்மணிக்குக் குழந்தை இல்லை?

 

Astrology:ஏன்டா அம்மணிக்குக் குழந்தை இல்லை?

உதாரண ஜாதகம்: குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம் ஏன் இல்லை?

நல்ல தாம்பத்தியத்திற்கு அடையாளம் திருமணம் ஆனவுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் கையில் குழந்தை தவழ்வது. கிரகக்கோளாறுகளால்
சிலர் தடுமாறிக் கொண்டிருப்பார்கள் அல்லது தவித்துக் கொண்டிருப்பார்கள்.

திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன பின்னாலும் குழந்தை பிறக்கவில்லை என்றால் ஜாதகத்தை அலசிப் பார்க்க வேண்டும்

உங்களின் மேல்நிலைப் பாடத்திற்காக ஒரு ஜாதகத்தைக் கீழே அலசியுள்ளேன். பொறுமையாகப் படித்துப் பாருங்கள். இது மேல்நிலை வகுப்பில் முன்பு வந்த பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று இங்கே இன்று பதிவிட்டுள்ளேன்.

மேலே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். ஜாதகிக்குக் குழந்தை இல்லை. பலருடைய கேள்விக் கணைகளை எதிர் கொள்ள வேண்டிய சோகம் வேறு.

மருத்துவ சோதனை செய்ததில் ஜாதகிக்கு எந்தவிதக் குறைபாடுகளும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

பிறகு ஏன் குழந்தை இல்லை?

ஜாதகத்தில் என்ன கோளாறு?

வாருங்கள், ஜாதகத்தைப் பார்ப்போம்:



லக்கின அதிபதி குருவும், ஐந்தாம் அதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை. வீடு மாறி அமர்ந்திருக்கிறார்கள். அமைப்பைப் பார்க்கவும். மோசமான பரிவர்த்தனை.1/12 என்ற கணக்கில் பரிவர்த்தனை. 5 & 12ஆம் அதிபதி செவ்வாய் லக்கினத்தில் (அதாவது குருவின் வீட்டில்) லக்கினாதிபதி குரு 12ல் (அதாவது செவ்வாயின் வீட்டில்)

அத்துடன் ஜாதகியின் ஐந்தாம் வீட்டில் சனீஷ்வரன்.

இந்த அமைப்பினால் ஜாதகிக்குக் குழந்தை இல்லாமல் போய்விட்டது. மூன்று பேரும் சேர்ந்து ஜாதகிக்குக் குழந்தை இல்லாமல் செய்து விட்டார்கள்!

லக்கினாதிபதியின் ஆதரவு இல்லையென்றால் ஒன்றும் பிரயோஜனமில்லை. ஜாதகியின் ஜாதகத்தில் லக்கினாதிபதி குரு பன்னிரெண்டில் போய் அமர்ந்து,
கெட்டுப்போய் விட்டதை மனதில் கொள்ளவும்!


அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

26.3.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 20

 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 20
ஜோதிடத் தொடர் - பகுதி 20

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
சுவாதி நட்சத்திரம் (துலாம் ராசி)

இது ராகுவின் நட்சத்திரம்.

1. பரணி
2. கார்த்திகை
3. மிருகசீரிஷம்
4. புனர்பூசம்
5. பூசம்
6. ஆயில்யம்
7. மகம்
8. பூரம்
9. உத்திரம்
10. கேட்டை
11. உத்திராடம்
12. உத்திரட்டாதி
13. ரேவதி

ஆகிய 13 நட்சத்திரங்கள் பொருத்தமான நட்சத்திரங்கள்

இவற்றுள் உத்திரட்டாதி, ரேவதி ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் மீன ராசிக்கு உரியவை. மீன ராசி துலா ராசிக்கு ஆறாவது ராசி. மீன ரசிக்கு துலா ராசி எட்டாவது ராசி ஆகவே அஷ்டம சஷ்டம ஏற்படும். அவற்றை விலக்குவது நல்லது. மீதமுள்ள 11 நட்சத்திரங்களும் பொருத்தமானவைதான்!

ரோஹிணி, திருவாதிரை, ஹஸ்தம், திருவோணம், சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் சித்திரை சுவாதி நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது. அதையும் மனதில் கொள்ளவும்.

அஸ்விணி, சித்திரை, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள், மூலம், பூராடம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய 7 நட்சத்திரங்களும் மத்திம (average) பொருத்தம் உள்ள நட்சத்திரங்களாகும். அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை.

அனுஷம் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

25.3.13

Astrology: வீட்டில் யாருக்குத் தலைமைப் பதவி, உங்களுக்கா அல்லது உங்கள் மனைவிக்கா?


Astrology: வீட்டில் யாருக்குத் தலைமைப் பதவி, உங்களுக்கா அல்லது உங்கள் மனைவிக்கா?

அலசல் பாடம்

தலைப்பு: தலைமைப் பதவி!

எல்லா மனிதர்களுக்குமே ஒரு பொதுவான மனக்குறை உண்டு! எவ்வளவு தான் உழைத்தாலும் அல்லது பாடுபட்டாலும் நாம் நினைத்த அளவிற்கு முன்னுக்குவர முடியவில்லையே என்பதுதான் அந்தக்குறை!

இங்கே முன்னுக்கு என்பது பணத்தைமட்டும் வைத்து அல்ல!

தலைமைப் பதவிக்கு வந்து அமர்வது. செல்வாக்கு, மற்றும் புகழோடு இருப்பது. பதவி, பட்டங்களைப் பெறுவது. அதை மனதில் வையுங்கள்

சிலர் வெளியே சொல்வார்கள். சிலர் சொல்லாமல் மனதிற்குள் வைத்திருப்பார்கள்.அது இல்லாமல் இருப்பவர்கள் அபூர்வம்! அது இயற்கையானதுதான்.

”கடுமையாக உழைக்கிறேன் என்று சொல்லி பதினெட்டு மணி நேரம் தினமும் மண் வெட்டுவதால் ஒரு பிரயோ ஜனமுமில்லை. உழைப்போடு அறிவும்
சேரும்போதுதான் முன்னுக்கு வரமுடியும்!” என்று ஒரு சிந்தனையாளன் சொன்னான்.

சிலர் அறிவோடும், திறமையோடும் வேலை செய்வார்கள். ஆனால் எப்போதுமே இரண்டாம் நிலையில்தான் இருப்பார்கள். அவர்களுடைய உழைப்பால் விளைந்தவற்றையெல்லாம், அவனுக்கு மேலே உள்ளவன் சமர்ப்பித்து தான் வேலை பார்க்கும்  நிறுவனத்தில் நல்ல பெயரைத் தட்டிக்கொண்டு செல்வதுடன், அதனால் கிடைக்கும் உயர்வையும் அவனே அனுபவிப்பான். நம்ம ஆளுக்கு ஒன்றும் கிடைக்காது.

இது ஒருவகை!

சிலர் இப்படிச் சொல்வார்கள், “நான் வீட்டிற்கு முத்தவன். பெரிய குடும்பதைச் சேர்ந்தவன். வீட்டில் உள்ள அனைவருக்காகவும் பாடுபடுகிறேன். ஆனால் ஒரு
பிரயோஜனமும் இல்லை. எங்கள் வீட்டில் உள்ள இரண்டாவது மகனுக்கு எல்லாம் போய்விடுகிறது. எனக்கு வீட்டில் உரிய மதிப்பும் இல்லை. மரியாதையும் இல்லை”

அதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஆனால் குறைகுறைதான். இது இரண்டாவது வகை!

ஊருக்காகப் பாடுபடுபவர்களுக்கும் இதே கதிதான். உண்மையாக உழைப்பவன் பஞ்சாயத்து ஒன்றியத்திற்குத் தலைவனாக வரமாட்டான். ஒன்றும் இல்லாத டகால்டி ஆசாமி தலைமைப் பதவியில் வந்து அமர்ந்து கொண்டு விடுவான்.
மாங்கு மாங்கு என்று அருமையாக எழுதிக்குவித்தவனுக்கு விருது கிடைக்காது. ஒன்றும் இல்லாமல் ஒரே ஒரு புத்தகத்தை எழுதியவன், விருதை வாங்கிக் கொண்டு  போய்விடுவான்.

சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு  ஒரு முறை கூட சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததில்லை.

அதைவிட அருமையான உதாரணம் ஒன்று சொல்லலாம்.

மகாத்மா காந்தியை எடுத்துக்கொள்வோம். 1869ஆம் ஆண்டு பிறந்த காந்திஜி சுமார் 50  ஆண்டுகாலத்திற்கு மேல் (அவருடைய இளமைக் காலத்தைக் கழித்து  விடுங்கள்) இந்த நாட்டிற்காகப் பாடுபட்டிருக்கிறார். பல துன்பங்களை அனுபவித் திருக்கிறார். அவர்  கடைபிடித்த அஹிம்சைப் போராட்டம்தான் நமக்கு  சுதந்திரத் தைப் பெற்றுத் தந்தது. அனால் அவருக்குக் கிடைத்தது ஒன்றே ஒன்றுதான் - தேசத்தந்தை என்ற பெயர் ஒன்றுதான் அவருக்குக் கிடைத்தது.

ஒரு போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய அத்தனை பேர்களுமே, போராட்டத்தின் முடிவில் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் காந்திஜி
அமரவில்லை. இந்தியாவின்  முதல் பிரதமராக அவர் மர்ந்திருக்க வேண்டுமா இல்லையா?

அவருக்கு மனம் இல்லை, அதனால் அமரவில்லை. அதனால் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் பதவியில்
அமர்ந்தார் என்று சொல்லலாம்.

சரி, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். அவர்க்கு ஏன் மனம் வரவில்லை?

அவருடைய ஜாதகப்பலன் அதுதான்.

அவருடைய ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். பாருங்கள்.

அவருடைய ஜாதகத்தில், லக்கினத்தில் உள்ள பரல்கள் வெறும் 22 மட்டுமே. அதாவது  சராசரிக்கும் 6 பரல்கள் குறைவாக உள்ளது. அதனால்தான் அவர்
பதவியில் அமர முடியவில்லை. அதற்கான சூழ்நிலை உண்டாகவில்லை.

நேருஜியின் ஜாதகத்தில் 30 பரல்கள் உள்ளன அதைக் கவனியுங்கள்.

சீரியஸாகி அரசியல் பேச வேண்டாம். எனது நோக்கம் அதுவல்ல! இருவருடைய ஜாதகத்தையும் வைத்து உங்களுக்கு ஒரு முக்கியமான குறிப்பைத் தர விரும்புகிறேன். லக்கினத்தில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளவர்கள்தான் தலைமைப் பதவிக்கு வரமுடியும். புகழ், செல்வாக்கு ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

337 வகுத்தல் 12 = 28 பரல்கள் என்பது சராசரி.

இந்த சராசரி அல்லது சராசரிக்கும் கீழே உள்ளவர்கள் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். என்னதான் முக்கி வேலை செய்தாலும் தலைமைப் பதவி அல்லது தலைமை இடம்  என்பது கனவாகத்தான் இருக்கும்.

அது பொதுவாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கை அல்லது சொந்த வாழ்க்கை என்று  எதுவாக இருந்தாலும் இரண்டாம் இடம்தான் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை என்றால் உங்கள் மனைவியின் கை ஓங்கியிருக்கலாம்  (அவருக்கு சராசரிக்கும் மேலான பரல்கள் அல்லது உங்களைவிட அதிகமான பரல்கள்
இருக்கும்போது):-))))) குழந்தைகளின் மத்தியில் உங்களைவிட அவருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கலாம்.

ஆகவே உங்கள் ஜாதகத்தைப் பாருங்கள். 28ற்கும் அதிகமாக இருந்தால் சந்தோஷப் படுங்கள். இல்லையென்றல் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். லக்கினத்தை  அலசும் குறுக்குவழி இதுதான்.

இது மேல்நிலை வகுப்பில் வந்த பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!



பாடம் புரியும்படியாக உள்ளதா?

ஒருவரி எழுதுங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

19.3.13

Astrology: Lesson on Yoga: Misfortune: அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!

Astrology: Lesson on Yoga: Misfortune: அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!

யோகம் எண்.32


அலசல் பாடம்

’என்ன சார் அதிர்ஷ்டம் இல்லாமல் இருப்பது கூட யோகத்தில் வருமா?” என்று யாரும் கேட்க வேண்டாம். அது அவயோகக் கணக்கில் வரும். லட்சணமான பெண், லட்சணமில்லாத பெண் என்று இருவகையினர் இருப்பதைப்போல அல்லது அரவிந்தசாமி போன்ற தோற்றமுடைய ஆண்கள் அல்லது ஓமக்குச்சி நரசிம்மன் போன்ற தோற்றமுடைய ஆண்கள் இருப்பதைப்போல யோகத்திலும் இரண்டு வகைகள் உண்டு. நல்ல யோகம். அவயோகம்.

அதற்கு உதாரணத்தைக் கவியரசர் பாடலில் இருந்து தருகிறேன்.

”இளமைவரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான்
தனிமைவரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்”


இங்கே அவர் குறிப்பிட்டிருக்கும் பயணம், வாழ்க்கைப் பயணம்!

நல்லது கெட்டது கலந்ததுதான் வாழ்க்கை - இரவு பகலைப் போல!

அதைப்போல, அதிர்ஷ்டமும், துரதிஷ்டமும் கலந்ததுதான் வாழ்க்கை. அதிர்ஷ்டமாகட்டும் அல்லது துரதிர்ஷ்டமாகட்டும், சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா/புத்திகளில் மட்டுமே பலனைக் கொடுக்கும். உங்கள் மொழியில் சொன்னால் வேலையைக் காட்டும்.

ஒரேயடியாக வாழ்க்கை முழுவதும் அதிர்ஷ்டத்தோடு அல்லது துரதிர்ஷ்டத்தோடு இருந்தவன் இல்லை!

இந்தியாவின்மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர், வாத நோயால் அவதிப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றால் இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். அதீத கோடிஸ்வரர்கள் பலர் பய உணர்வோடுதன் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். தாங்கள் தாதாக்கூட்டங்களால் அல்லது தீவிரவாதக் கும்பல்களால் கடத்தப் பட்டுவிடுவோமோ எனும் பய உணர்வு அவர்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும். அந்த பய உணர்வு, ப்ளாட்பாரத்தில் குடும்பம் நடத்துபவனுக்கு அல்லது அன்றாடம் காய்ச்சிக்குக் கிடையாது. அதை உணருங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கதை போதும். பாடத்தைப் பார்ப்போம்!

யோகத்தின் பெயர்: அரிஷ்ட யோகம்:

அதற்கான கிரக அமைப்பு: பல அமைப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புக்களில் ஒன்று இருந்தாலும் ஜாதகத்தில் உள்ள நல்ல தன்மைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஜாதகனுக்குப் பலவிதமான சிரமங்களை அது கொடுக்கும்.

தெரிந்தவரை சில அமைப்புக்களைக் கொடுத்துள்ளேன்.
.....................................................................................
1. 6, 8, 12ஆம் வீட்டுடன் அல்லது அதன் அதிபதியுடன், சேர்க்கை அல்லது பார்வையில் தீய கிரகங்கள் கூட்டு வைத்திருப்பது (Malefic associated with the 6th, 8th and 12th houses or their lords)

அதாவது குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் 6, 8, 12ஆம் வீட்டு அதிபதிகளாக இருந்து அந்த வீட்டை, சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஒன்று சேர்க்கை அல்லது பார்வையில் அவர்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது.

2. நீசமாக உள்ள அல்லது அஷ்டகவர்க்கத்தில் 3ம் அல்லது அதற்குக் கீழாகவும் பெற்றுள்ள சந்திரன் தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்

3. ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்

4. எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்

5. பலவீனமாக உள்ள லக்கின அதிபதியை அல்லது சூரியனை தீய கிரகங்கள் பார்த்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்

6. லக்கினத்தில், சூரியன், செவ்வாய், சனி, ராகு ஆகிய நால்வரில் ஒருவர் இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்

7. செவ்வாயும், சனியும் இரண்டாம் வீட்டில் இருக்க,ராகு மூன்றாம் வீட்டில் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

8. நான்காம் வீட்டில் ராகு, 6 அல்லது 8ஆம் வீட்டில் சந்திரன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

9. 7ல் செவ்வாய், 8ல் சுக்கிரன், 9ல் சூரியன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

10. 7 & 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

11. லக்கினாதிபதி தீய கிரகத்துடன் கூட்டாக இருந்தாலோ அல்லது லக்கினத்திற்கு இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலோ அல்லது 7ஆம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தாலோ அது இந்த அமைப்பிற்குள் வரும்

12. எட்டில் சனி, லக்கினத்தில் சந்திரன் அல்லது சுக்கிரன் (அல்லது சுக்கிரனும், சந்திரனும் சேர்ந்து 6 அல்லது 8ல் இருக்கும் நிலைப்பாடு) அது இந்த அமைப்பிற்குள் வரும்

13. சந்திரனும், புதனும் 6 அல்லது 8ல் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
----------------------------------------------
பலன்: ஒரே சொல்; துரதிர்ஷ்டம் (Misfortune)
----------------------------------------------
Duration of the misfortune: இந்த அமைப்பின் பலனால் அவதிப்பட வேண்டிய காலம்: சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசா/புத்திக் காலம்.
-----------------------------------------------
பாடத்தைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். யாரும் உடனே பலத்த கவலைக்கு ஆளாகிவிட வேண்டாம். பலத்த யோசனையில் மூழ்கிவிட வேண்டாம்.

ஜாதகத்தில் நஷ்டஈடு வழங்கப் பெற்றிருக்கும். அது என்ன என்று பார்த்து அல்லது பார்க்காமல் அமைதி கொள்ளுங்கள். அதை எப்படி உறுதியாகச் சொல்கிறேன் என்றால் அனைவருக்கும் வாங்கி வந்த வரத்தின் மொத்த மதிப்பு (அதாவது ஜாதகத்தின் மதிப்பு) 337தான். அதை நினைவில் வையுங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது மேல்நிலை வகுப்பில் வெளிவந்த பாடம். அனைவருக்கும் பயன் படட்ட்டும் என்று இன்று இங்கே பதிவிட்டுள்ளேன். மேல்நிலைப் பாடங்கள் எல்லாம் பின்னால் புத்தகமாக வரவுள்ளன. அப்போது அனைவரும் படிக்கலாம்!

என்ன பாடம் பயன் உள்ளதாக இருக்கிறதா? ஒருவரி எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வேண்டுகோள்.
கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி விட்டது.
எனக்கு வரும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி விட்டது.
எனக்கு நேரமின்மை இரண்டு மடங்காகி விட்டது
ஆகவே

1. தேவைப் பட்டால் மட்டுமே கேள்வி கேளுங்கள்.
2. பாடத்திற்கு சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்காதீர்கள்
3. உங்கள் ஜாதகத்தைவைத்து, கொக்கிக் கேள்விகளைக் கேட்காதீர்கள்

அன்புடன்
வாத்தியார்,

------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.3.13

Astrology எப்போது பெற்றோர்களை இழக்க நேரிடும்?


Astrology எப்போது பெற்றோர்களை இழக்க நேரிடும்?


அலசல் பாடம்!

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள்

இது ஒரு அவயோகம். அதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால் அதாவது இருந்தால், அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.

1
ஒன்றாம் வீடு - அதாவது லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால், அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். விபத்துக்கள் நேரிடும். எப்போதும்  ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.

2.
இரண்டாம் வீடு: இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். (2nd house is the house of finance and family affairs)
குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்

3.
மூன்றாம் வீடு: மரியாதைக்கு பங்கம் ஏற்படும். உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள், மற்றும் நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.

4.
நான்காம் வீடு: பெற்றோர்களை இழக்க நேரிடும். வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும். அமைதியை இழக்க நேரிடும். தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.

5.
ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.

6.
ஆறாம் வீடு: தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும். விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.

7.
ஏழாம் வீடு: மனைவி அல்லது கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். அவர்களால் சிரமப்பட நேரிடும். அவர்களால் விரையங்கள் ஏற்படும்.

8.
எட்டாம் வீடு: வறுமை நிலவும். கடன்கள் உண்டாகும். நோய்கள் உண்டாகும். சிரமமான வழ்க்கை வாழ நேரிடும். பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.

9.
ஒன்பதாம் வீடு: தந்தையை இழக்க நேரிடும். வறுமையான சூழல்கள் உண்டாகும். வறுமை வாட்டி எடுக்கும்.

10.
பத்தாம் வீடு: வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)

11.
பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.

12
பன்னிரெண்டாம் வீடு: தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும். பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி  எடுக்கும்.

எல்லாமே பொதுப்பலன்கள். அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதையும் மனதில் கொள்ளவும்

இது மேல்நிலை வகுப்பில் வெளிவந்த பாடம். அனைவருக்கும் பயன் படட்ட்டும் என்று இன்று இங்கே பதிவிட்டுள்ளேன். மேல்நிலைப் பாடங்கள் எல்லாம் பின்னால் புத்தகமாக வரவுள்ளன. அப்போது அனைவரும் படிக்கலாம்!

என்ன பாடம் பயன் உள்ளதாக இருக்கிறதா? ஒருவரி எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.3.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 19


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 19

ஜோதிடத் தொடர் - பகுதி 19

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் (துலா ராசி)

இது செவ்வாயின் நட்சத்திரம்.

1. புனர்பூசம்
2. ஆயில்யம்
3. மகம்
4. விசாகம் 1,2 &3ம் பாதங்கள்
5. மூலம்
6. திருவோணம்

அஷ்டம சஷ்டமம் எதுவும் இல்லை!

அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை ஆகிய 3 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது. பெண்ணிற்கும், பையனுக்கும் சித்திரை ஏக நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது.

அஸ்விணி, கார்த்திகை, ரோஹிணி, திருவாதிரை, பூசம், பூரம், ஹஸ்தம், சுவாதி, விசாகம் 4ம் பாதம்,, அனுஷம், சதயம், ரேவதி ஆகிய 11 நட்சத்திரங்களும் மத்திம (average) பொருத்தம் உள்ள நட்சத்திரங்களாகும். அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை.

பரணி, உத்திரம், கேட்டை, பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 7 நட்சத்திரங்களும் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.3.13

Astrology: எப்போதுடா உருப்படுவான் இவன்?


Astrology: எப்போதுடா உருப்படுவான் இவன்?

அலசல் பாடம்

உருப்படுதல் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? நல்ல நிலையை அடைதல் என்று பொருள். ஒரு ஜாதகத்தைப் பார்த்ததும், அந்த ஜாதகன் உருப்படுவானா அல்லது உருப்படாமல் போவானா என்பதைப் பார்த்துச் சொல்ல வேண்டும். ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புக்கள் அதற்கு உதவும்.

ஒரு ஜாதகன் இருந்தான். சரியாகப் படிக்கவில்லை. ஸ்கூல் டிராப் அவுட். சீட்டைக் கொடுத்துப் பள்ளியை விட்டு அனுப்பிவிட்டார்கள். சேர்க்கை சரியில்லை. நண்பர்களுடன் வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தான். டீக்கடை பெஞ்சுகள், குட்டிச் சுவர்கள், என்று காலம் கரைந்து கொண்டிருந்தது. வயது இருபது. வேலைக்கும் செல்ல வில்லை.வீட்டில் பெற்றவகளுக்குக் கவலை. அவனைப் பார்க்கும்போதெல்லாம வருத்தம்.

இருக்காதா பின்னே?

அவனுடைய தாய்க்கு அதீதக் கவலை. அவனுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டுபோய் நல்ல ஜோதிடர் ஒருவரிடம் காட்டி. அவனுடைய எதிர்காலம் பற்றிக் கேட்டாள்.

“முப்பத்திரெண்டு வயது வரை அவன் அப்படித்தான் இருப்பான். அதற்குப் பிறகு அவனுடைய வாழ்க்கையில் தலைகீழான மாற்றம் இருக்கும். நன்றாகத் தொழில் செய்து நிறைய சம்பாதிப்பான். செல்வம் சேரும். எல்லாம் கூடிவரும். கவலையை விடுங்கள்” என்றார் ஜோதிடர்

எதை வைத்து அப்படிச் சொன்னார் அவர்? வாருங்கள் அவனுடைய ஜாதகத்தை அலசுவோம்
---------------------------------------------------------------------------------------------------------
சிம்ம லக்கின ஜாதகம். திருவோண நட்சத்திரம்

10 அக்டோபர் 1970ல் பிறந்த ஜாதகன. கர்ப்பச்செல் இருப்பு சந்திர திசையில் 6 வருடம் 5 மாதம் 8 நாட்கள். அதனுடன் அடுத்துள்ள செவ்வாய் திசை 7 ஆண்டுகளைக் கூட்டினால், 14 வயதில் ராகு திசை ஆரம்பம். அந்த வயதில் ராகு திசை அதவும் ஜாதகத்தில் 1-7 அச்சில் இருக்கும் அமைப்புடன் வந்தால் படுத்தி எடுத்துவிடும்.

முப்பத்தோரு வயதில் அவனுக்கு ராகு திசை முடிந்து குரு மகா திசை ஆரம்பமாகிறது. குரு இயற்கையிலேயே சுபக் கிரகம. அத்துடன் அவனுடைய ஜாதகத்தில் மூன்று மற்றும் பத்திற்குரிய சுக்கிரனுடன் சேர்ந்து நல்ல நிலையில் இருவரும் இருக்கிறார்கள். அத்துடன் கரமகாரகன் சனியின் பார்வையும் அவர்கள் மேல் விழுகிறது. ஆகவே  குரு திசை நல்ல வேலைக்கு உத்திரவாதம் அளிக்கிறது.

அத்துடன் லக்கினாதிபதி சூரியனும், 2 & 11ற்கு உரிய பதனும் கூட்டாக 2ல் இருப்பது. பொருள் வரவிற்கும், செல்வம் ச்ர்ர்வதற்கும் உத்திரவாதம் அளிக்கிறது. அதன்படிதான் எல்லாம் நடந்தது. 32 வயத்ற்கு மேல் ஜாதகன்,  நல்ல தொழில் ஒன்றைத் துவங்கி, பொருள் ஈட்டி, சகல செள்பாக்கியங் களூடன் ஷேமமாக இருந்தான். அதாவது  மேன்மையோடு இருந்தான்.

அது சரி, 31 வயதிற்கு முன்னால் ஏன் அப்படி இல்லை? 13 வயது முதல் 31 வயது வரை ராகு மகா திசை நடந்ததையும், ராகு ஏழாம் வீட்டில் அமர்ந்து லக்கினத்தைத் தன  பிடியில் (பார்வையில்) வைத்திருப்பதையும் பாருங்கள். அந்த அமைப்பு உருப்படாமல் அடிக்கும். அதுதான் நடந்தது.

சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் லக்கினத்தில் இருந்தாலும், ராகுவின் நேரடிக் கண்காணிப்பினாலும், கேதுவின் சேர்க்கையினாலும், அவரால முன்  காலகட்டத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது.

அடுத்த திசைக்கு உரிய கிரகம, தன் திசை வந்ததும், அதற்கு உரிய விதத்தில் ஜாதகனைப் புரட்டிப்போட்டு சரி செய்தது.

மகா திசைகள் எத்தனை முக்கியம் என்பதை உங்களுக்கு அறியத் தருவதற்காக இன்று இதை இங்கே பதிவிட்டிருக்கிறேன். திருட்டுப் போகும் என்று தெரிந்தும்  பதிவிட்டிருக்கிறேன்.

அன்புடன்
வாத்தியார்


 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.3.13

Astrology: சேர்ந்து வாழ்ந்தவர்கள் ஏன்டா சேர்ந்து போவதில்லை?

 Astrology: சேர்ந்து வாழ்ந்தவர்கள் ஏன்டா சேர்ந்து போவதில்லை?

பயிற்சிப் பாடம்

பருவம்வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்துவாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை!

- கவியரசர் கண்ணதாசன்

சேர்ந்து போவது தம்பதிகளின் கைகளில் இல்லை! சேர்ந்து போவதற்கு சனீஷ்வரனின் அனுக்கிரகம் வேண்டும். இருவருக்கும் போர்டிங் பாஸை ஒரே நேரத்தில் ஆயுள்காரகன் சனீஷ்வரன் கொடுத்தால் மட்டுமே சேர்ந்து போக முடியும்!

பல சிக்கல்கள் நிறைந்தது வாழ்க்கை. சிக்கல் இல்லாத வாழ்க்கையே இருக்காது. இருந்தால் காட்டுங்கள். சந்தோசமடைவேன்!

மற்ற சிக்கல்கள் நாம் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கும். அதனால் மனத் துணிச்சலையும், ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வைத்து, சிக்கலுக்கான முடிவை அல்லது தீர்வை எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுக்கலாம்

ஆனால், திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல், இன்னொருவர் (கணவன் அல்லது மனைவி) சம்பந்தப்படுவதால் அப்படி எடுக்க முடியாது.

அத்துடன் நாம் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும், விதி ஒரு பக்கம் வேலை செய்து கொண்டிருக்கும்.

நம் வாழ்க்கை, அல்லது நம் குழந்தைகளின் வாழ்க்கை அல்லது நம் உடன் பிறப்புக்கள் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையில் திருமணத்தை வைத்து ஏதாவது சிக்கல் உண்டாகுமா என்று பார்ப்பதற்கான பயிர்சி வகுப்பு பாடங்களை இன்று உங்களுக்கு அளிக்கிறேன்.  பொறுமையாகப் படித்து, அத்தனை விதிகளையும் மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்
----------------------------------------------------------------------------
Chances of Multiple marriages: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்

ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் எப்போது நடைபெறும்?

முதல் திருமணம் கெட்டுவிட்டால், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேரிடும்.

மனைவி அல்லது கணவன் இறந்துவிட்டால், அல்லது கருத்து வேற்றுமையால் தம்பதிகள் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேரிடும்

உயர்கல்வி, அதீத வருமானம், பொருளாதார சுதந்திரம், பொறுமையின்மை, சகிப்புத்தன்மையின்மை போன்ற காரணங்களால், இப்போது அதிக அளவில் விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன. அதையும் மனதில் கொள்க!

In this lesson an attempt has been made to discuss a few planetary combinations indicating re marriage due to divorce, separation or death of wife

The rules are based on Brihat Parashar Hora Shastra:


1. ஏழாம் வீட்டு அதிபதி நீசமடைந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

2. ஏழாம் வீட்டு அதிபதி ஒரு தீய கிரகத்தின் வீட்டில், ஒரு தீய கிரகத்துடன் அமர்ந்திருக்கும் நிலைமை! அத்துடன் ராசிச்சக்கரத்தில் ஏழாம் வீடு அல்லது நவாம்சச்சக்கரத்தில் ஏழாம் வீடு ஒரு தீய கிரகத்தின் வீடாக இருக்கும் நிலைமை.

3. செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருந்தால், அல்லது சனி 12ஆம் வீட்டில் இருந்தால், அத்துடன் லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

4. சுக்கிரன் இரட்டை ராசியில் இருந்தால் (if Venus is in a dual sign), அத்துடன் சுக்கிரன் அமர்ந்த வீட்டின் அதிபதி உச்சமாகி இருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் (சர்வார்த்த சிந்தாமணி)

5. ஏழாம் அதிபதி, உச்சமாகி இருப்பதுடன், வக்கிரகதியும் பெற்றிருக்கும் நிலைமை.

6. லக்கினாதிபதி எட்டாம் வீட்டில், ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம், இரண்டாம் அதிபதி ஒரு தீயகிரகத்துடன் சேர்க்கை - ஆகிய அமைப்பு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணத்தைக் கொடுக்கும்.

7. ஏழாம் அதிபதி 3, 6, 8, &12 போன்ற மறைவிடங்களில் இருந்தாலும், அல்லது நீசமாகி ஒரு சுபக்கிரகத்துடன் சேர்ந்திருந்தாலும், அத்துடன் ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம் இருந்தாலும், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

8. சுக்கிரன் கன்னிராசியில் நீசமடைந்திருப்பதோடு, ஒரு தீயகிரகத்தின் கூட்டணியோடு இருந்தாலும் அல்லது நவாம்சத்தில் நீசமடைந்திருந்தாலும் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

9. ஏழாம் வீட்டிலும், இரண்டாம் வீட்டிலும் தீய கிரகங்கள் அமர்ந்திருந்து, அதன் அதிபதிகள் கெட்டிருந்தால், ஜாதகனின் முதல் மனைவி இறப்பதுடன், ஜாதகனுக்கு இரண்டாம் திருமணமும் நடைபெறும்.

10. ஏழாம் வீட்டிலும், எட்டாம் வீட்டிலும் தீயகிரகங்கள் இருப்பதுடன், செவ்வாய் 12ஆம் வீட்டில் இருப்பதுடன், ஏழாம் அதிபதியின் பார்வை ஏழில் விழுகவில்லை என்றால், ஜாதகன் தன் முதல் மனைவியை இழந்துவிட்டு, மறுமணம் செய்துகொள்ள நேரிடும்.

11. லக்கினத்தில், 2 மற்றும் 7ஆம் வீடு, ஆகிய மூன்று இடங்களிலும் தீய கிரகங்கள் இருந்து, ஏழாம் அதிபதி அஸ்தமனம் பெற்றிருந்தாலும் அல்லது நீசமாகி இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

12 ஏழாம் அதிபனும், பதினொன்றாம் அதிபனும் ஒன்றாக இருந்தாலும் அல்லது இருவரும் திரிகோணம்பெற்று, ஒருவரை ஒருவர் பார்த்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

13. ஒன்பதாம் வீட்டதிபதி ஏழிலும், ஏழாம் அதிபதி நாலிலும் இருந்தால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம். அதுபோல 7 & 11 ஆம் அதிபதிகள் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

14. இரண்டு மற்றும் ஏழாம் வீடுகளில் தீயகிரகங்கள் இருப்பதுடன், ஏழாம் அதிபதி ஒரு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

15. இரண்டு மற்றும் பன்னிரெண்டாம் இட அதிபதிகள் மூன்றாம் வீட்டில் இருந்து, குரு அல்லது ஒன்பதாம் இட அதிபதியின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

இது எல்லாம் பொதுவிதிகள்.

திருமண விஷயமாக அல்லது முதல் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஒரு ஜாதகத்தை அலசும்போது, இந்த விதிகளை மனதிற்கொண்டு அலசினால் ஒரு தெளிவும் கிடைக்கும்!

அன்புடன்
வாத்தியார்!

-----------------------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!