மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 351 - 360. Show all posts
Showing posts with label Lessons 351 - 360. Show all posts

28.6.10

எதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா?

“இரு விழிப்பு நிலைகளுக்கு இடையே நிலவுவது தூக்கம். அவ்வாறே, இரு பிறவிகளுக்கிடையே நிகழ்வது இறப்பு. இரண்டும் தற்காலிகமே!”
------ரமண மகரிஷி

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”

------திருவள்ளுவர்
-----------------------------------------------------------------------------
குருஷேத்திர யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்த காலம்.

14ஆம் நாள் அதிகாலை

பகவான் கிருஷ்ணர் தன் மனதிற்கு இனிய அர்ஜுனனை அமரவைத்து மரணத்தின் தன்மையை, மேன்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“என் இனிய அர்ஜுனா, மரணம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பிறந்த அன்றே அவனுடைய இறக்கும் நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொருவருவனும், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித்தான் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறான் (நடந்து கொண்டிருக்கிறான்) மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல! மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை.”

என்று சொல்லிப் பல உதாரணங்களுடன் விளக்கியவர், இறுதியில் கேட்டார், “இன்றையப் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டாய்?”

அர்ஜுனன் சொன்னான். “மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்!”

“சரி, வா, யுத்தகளத்திற்குப் புறப்படலாம்” என்று சொன்ன கிருஷ்ணர், சங்கை எடுத்து ஊதினார்.
------------------------------------------------------------------------
அர்ஜுனன் ஏறிக்கொள்ள சாரதியாகச் செயல்பட்ட கிருஷ்ணர் தேரைச் செலுத்தினார்.

பொழுது புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம். ஓடு பாதை மங்கலான வெளிச்சத்தில் கீற்றாகத் தெரிந்தது.

சற்று தூரம் சென்றவுடன், ஓடு பாதையில் கிடக்கும் சடலம் ஒன்றைப் பார்த்தவுடன், கிருஷ்ணர் தேரை நிறுத்தினார்.

அர்ஜுனனும் அதைக் கண்ணுற்றான். தேரைவிட்டுக் கீழே குதித்தவன், இறந்து கிடப்பவன் யாரென்று தெரிந்து கொள்ளும் நோக்குடன், அருகே சென்று பார்த்தான்.

அவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது. துக்கத்தை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை!

ஆமாம், இறந்து கிடந்தது அவனுடைய தவப்புதல்வன் அபிமன்யு.

மகனின் பூத உடலைத்தூக்கித் தன் மடிமீது கிடத்திக்கொண்டவன், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதான்.

ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது.

பரந்து விரிந்த அவன் தோள்களின் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது.

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

கிருஷ்ண பகவான் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்தான் தன் தோள்களின் மீது விழுந்ததை அவன் உணர்ந்தான்.

தன் மகனின் சடலத்தைக் கிடத்தியவன், எழுந்து நின்று கேட்டான்:

“நான் என் மகன் என்பதற்காக அழுதேன். உங்கள் கண்களில் கண்ணீர் எதற்கு? எதற்காகக் கலங்குகிறீர்கள்?”

பகவான் சலனமற்றுப் பொறுமையாகச் சொன்னார்:

“உன் மகனுக்காக நான் கலங்கவில்லை! இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா? அதற்காகக்தான் வருந்துகிறேன்!
------------------------------------------------------------------------------------------------------
“வாத்தி (யார்), எதற்காக இந்தக் கதை?”

“இன்னுமா தெரியவில்லை? அடுத்த தொடர் பாடத்திற்கான முன்னோட்டம் தான் இது? ஆமாம், அடுத்த பாடம், நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம். விரிவாக எழுதிப் பதிவிட உள்ளேன். அது ஜூலைத் திங்கள் முதல் தேதியில் இருந்து துவங்கும்!”

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

16.6.10

இருமடங்கு உயர்வு கிடைத்தால் எப்படி இருக்கும்?


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இருமடங்கு உயர்வு கிடைத்தால் எப்படி இருக்கும்?

ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி மூன்று
---------------------------------------------------------
இதன் துவக்கப் பகுதியும், அதற்கு அடுத்த பகுதியும்,  இதற்கு முன் உள்ள இடுகைகளில் உள்ளன. அவற்றைப்  படித்திராதவர்கள் அவற்றைப் படித்துவிட்டுப் பிறகு இதைப் படிக்கவும்!
-----------------------------------------------------------

32
வர்கோத்தமம்: ஒரு கிரகம் இராசியிலும் அம்சத்திலும் ஒரே இராசியில் காணப்படுதல் வர்கோத்தமம் எனப்படும். அது ஒருவருக்கு இருமடங்கு உயர்வு கிடைத்ததற்குச் சமமாகும்.

கிரகத்திற்கு மட்டுமல்ல, லக்கினத்திற்கும் அந்த வாய்ப்பு உண்டு. அதற்கு வர்கோத்தம லக்கினம் என்று பெயர்.
-------------------------------------------------

33
வக்கிரம் - Retrogression: ஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் எனப்படும்.The backward motion of a planet.  “அவன் வக்கிரம் பிடித்தவனடா, அவனிடம் எதுவும் வைத்துக்கொள்ளாதே” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீகள் அல்லவா? அதுபோல ஜாதகத்தில் கிரகம் வக்கிரகதியில் இருப்பது நன்மையானதல்ல. வக்கிரமான கிரகம் ஜாதகனுக்கு முழுப்பயனையும் தராது. 4 கிரகங்கள் வக்கிரமடைந்திருந்தால், ஜாதகன் பல தகாத செயல்களைச் செய்து கொண்டிருப்பான். பின்லேடனின் ஜாதகத்தில் 4 கிரகங்கள் வக்கிரம் அடைந்துள்ளதாகச் செய்தி ஒன்றைப் படித்துள்ளேன்.
------------------------------------------------

34
அஷ்டம ராசி: எட்டாம் வீட்டைக்குறிக்கும். ஆயுள் ஸ்தானம். அத்துடன் வாழ்க்கையில் காத்துக்கொண்டிருக்கும் கஷ்டங்களையும் துன்பங்களையும் குறிக்கும் வீடு. அதனால் முக்கியத்துவம் பெறுகிறது.
--------------------------------------------------------------------

35
முகூர்த்தம்: சுபகாரியங்களைச் செய்வதற்கு உகந்த நேரம். - auspecious time

நிகழும் சுபஸ்ரீ விக்ருதி வருடம் ஆனி மாதம் 31ஆம் நாள் (15-7.2010) வியாழக்கிழமை மக நட்சத்திரமும் அமிர்தயோகமும் சிம்ம லக்கினமும் கூடிய சுபயோக சுப தினத்தில் உதயாதி நாழிகை 8 3/4 மேல் 111/4 நாழிகைக்குள் காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் துலா லக்கின சுப முகூர்த்தத்தில் செல்வன்
சுந்தரத்திற்கும் செல்வி சுந்தரிக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப் பெற்று......” என்று திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருப்பீர்களே... அந்த சுபமுகூர்த்தம் இதுதான்.

விளக்கம் போதுமா?
---------------------------------------------------------------------

36
ஜன்ம ராசி:Janma Rasi:

ஜாதகன் பிறந்த நேரத்தில் சந்திரன் குடியிருக்கும் ராசிக்கு ஜன்ம ராசி என்று பெயர்.Sign occupied by the moon at birth இந்த ஜன்ம ராசியை வைத்துத்தான் கோள்சாராப் பலன்களை அலச வேண்டும். இன்றையத் தேதியில் வானில் சுற்றிக்கொண்டிருக்கும் கிரகங்களின் நிலையைச் சொல்வதுதான் கோச்சாரம் அல்லது கோள்சாரம். அவற்றால் ஏற்படும் நன்மை தீமைகளைச் சொன்னால் அதற்குப்பெயர் கோச்சாரப் பலன்.    ஏழரைச்சனி, அஷ்டமச்சனி போன்ற தீய பலன்களும், குரு பர்வை உள்ளது போன்ற நல்ல பலன்களும் இந்த முறையில்தான் சொல்லப்படுகிறது.
--------------------------------------------------------------------
37
தசா Dasa -  Period  of  Directional  Influence.

கிரகங்கள் தங்களுடைய பங்கை ஜாதகனுக்கு வழங்கும் காலம்.
உங்களுடைய மொழியில் சொன்னால், பலர்காணப்  பெருமையுடன், நீங்கள், பல்லக்கில் செல்லும் காலம் அல்லது தோள் மற்றும் இடுப்பு எழும்பு ஒடிய பல்லக்கை நீங்கள் தூக்கிச் செல்ல வேண்டிய காலம்.

சூரியனுக்கு 6 ஆண்டுகள்
சந்திரனுக்கு 10 ஆண்டுகள்
செவ்வாய்க்கு 7 ஆண்டுகள்
ராகுவிற்கு 18 ஆண்டுகள்
குருவிற்கு 16 ஆண்டுகள்
சனிக்கு 19 ஆண்டுகள்
புதனுக்கு 17 ஆண்டுகள்
கேதுவிற்கு 7 ஆண்டுகள்
சுக்கிரனுக்கு 20 ஆண்டுகள்
---------------------------------------
ஆக மொத்தம் 120 ஆண்டுகள்
-----------------------------------------------
மொத்தம் 120 ஆண்டுகள்தானா? என்று யாரும் கேட்க வேண்டாம். அதுவரை வாழ்ந்தால் போதாதா? அவதிப்பட்டால் போதாதா? எத்தனை கோடி பணம் இருந்தாலும், 90 வயதிற்குமேல் உடம்பும் சொன்ன பேச்சைக் கேட்காது. கூட இருப்பவர்களும் சொன்ன பேச்சைக் கேட்கமாட்டார்கள்.

”சார், நான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவன். எனக்கு துவக்க திசை சூரிய தசை. எனக்குக் சுக்கிர மகா தசை வராதா?” என்று யாரும் வருத்தமாகக் கேட்க வேண்டாம். அதுபோல  “நான் குருவின் நட்சத்திரத்தில் பிறந்தவன், ஆகவே எனக்கு ராகுதசை வருவதற்கு வாய்ப்பில்லை” என்று யாரும் துள்ளிக் குதிக்கவும் வேண்டாம். எல்லோருக்கும் எல்லா கிரகங்களின் தசைகளும் புக்தி (Sub -periods) வடிவில் வந்து விடும். ஒவ்வொரு கிரகத்தின் புக்தி நாட்களும், மகாதசை நாட்களும் அளவில் ஒன்றானதே! அதை மனதில் கொள்க!

உங்களுக்காக தசா & தசா புக்திக் காலங்களின் அட்டவணையைக் கொடுத்துள்ளேன். உதாரணத்திற்கு சுக்கிரனை எடுத்துக் கொள்ளுங்கள். சுக்கிர மகா தசையின் அளவு 7,200 நாட்கள். அதேபோல மற்ற கிரகங்களின் தசைகளில் வரும் சுக்கிர புக்தியின் (Sub -periods) அளவும் 7,200 நாட்களே. இதுபோல அனைத்துக் கிரகங்களூக்கான கால அளவையும். அதாவது மகா தசையின் அளவையும், புக்திகளின் அளவையும் நீங்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும்.



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மேலும் எழுத நேரமின்மையால், இன்று, இத்துடன் நிறைவு செய்கிறேன். பாடத்தின் அடுத்த பகுதிகள் தொடர்ந்து வெளிவரும்!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

15.6.10

கிரகங்களுக்கும் கோட்டா உண்டு!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கிரகங்களுக்கும் கோட்டா உண்டு!

கிரகங்களுக்கும் கோட்டா உண்டு! அதாவது ஒதுக்கீடு உண்டு!

வாத்தியார், என்ன புதிதாகவும், புதிராகவும்  இருக்கிறதே என்று சொல்லாமல் இன்றைய பதிவு முழுவதையும் படியுங்கள். உங்களுக்கே தெரியவரும்!

ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி இரண்டு!

இதன் துவக்கப் பகுதி, இதற்கு முன் உள்ள இடுகையில் உள்ளது. அதைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டுப் பிறகு இதைப் படிக்கவும்!
------------------------------------------------------------

12
அசுபயோகம்-Asubhayoga: தீய கிரகம் அல்லது தீய கிரகங்களின் கூட்டால் ஏற்படும் தீமையான பலன்கள்.
A Combination caused by evil planets

13
அசுரயோகம்-Asurayoga: தீய கிரகங்கள் ஆட்சி, ஆதிபத்யம், காரகம் ஆகியவற்றால், ஜாதகனுக்குக் கொடுக்கும் நன்மையான பலன்கள் A Combination for tyrannical and demoniacal characteristics tyrannical - characteristic of an absolute ruler or absolute rule; having absolute sovereignty!
---------------------------------------------------------
14.
அதிபதி (Owner): உரியவன். சொந்தக்காரன். கிரகங்களைப் பொறுத்தவரை ராசிக்கு உரியவன். வீட்டிற்கு உரியவன் ஆட்சிக்கு உரியவன் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
    
15
ஆதிபத்யம் (Ownership) இடங்களுக்கு, ராசிகளுக்கு, வீடுகளுக்கு உரிமையாளர்கள். பட்டா போட்டுக் கொடுக்கப்பெற்றுள்ளது:

மேஷத்திற்கும், விருச்சிகத்திற்கும் அதிபதி - செவ்வாய்
ரிஷபத்திற்கும், துலாமிற்கும் அதிபதி - சுக்கிரன்
மிதுனத்திற்கும், கன்னிக்கும் அதிபதி - புதன்
தனுசுவிற்கும், மீனத்திற்கும் அதிபதி - குரு
மகரத்திற்கும், கும்பத்திற்கும் அதிபதி - சனி

இவர்கள் ஐவருக்கும் இரண்டு இடங்களுக்கான பட்டா கிடைத்துள்ளது

சூரியனுக்கு ஒரு இடம்தான் - அது சிம்மம்
சந்திரனுக்கும் ஒரு இடம்தான் - அது கடகம்

ராகுவிற்கும், கேதுவிற்கும் சொந்த இடம் இல்லை. வாடகை வீடுதான். ஆனால் அவைகள் குரல் கொடுத்து ஒதுக்கீடு பெற்றுள்ளன. தினசரி 90 நிமிடங்கள் ராகுவிற்கும் 90 நிமிடங்கள் கேதுவிற்கும் கொடுக்கப்பெற்றுள்ளது. அதைத்தான் ராகுகாலம், எமகண்டம் என்பார்கள்!
-----------------------------------------------
16
அஷ்டகவர்க்கம் - Ashtagavarga: எட்டு விதமான வழிகளில் கிரகங்களுக்குக் கிடைக்கும் சக்தி -    Eight sources of energy of the planets. அவைகள் பரல்கள் எனப்படும் மதிப்பெண்கள் மூலம் ஜாதகத்தில் கொடுக்கப்பெற்றிருக்கும்

17
ஆரோஹணம் -Arohana: கடிகாரச் சுற்று    Ascending directions

18
அவரோஹணம் -Avarohana: கடிகாரச் சுற்றுக்கு எதிரான வழியில் சுற்றுவது -Descending direction

19
உச்சபலம்    - occhabala: உச்சமான கிரகத்தின் வலிமை -Exaltation strength

20
கதி -Ghati: 24 நிமிடங்களுக்குச் சமமான நேரத்தைக் குறிப்பது. ஒரு நாளில் 1/60 பாகம்   

21
சத்பலம் - Shadbala: ஆறுவிதமான நிலைகளில் கிரகங்களுக்குக் கிடைக்கும் வலிமை சத்பலம் எனப்படும். Six sources of planetary and house strengths Shad Bal consists of the following strengths
1. ஸ்தானபலம் Sthan Bal (Positional strength)
2. திக்பலம் Dig Bal (Directional strength)
3. காலபலம் Kaal Bal (Temporal strength),
4. சேஷ்டபலம்Chesht Bal சுழற்சியால் கிடைக்கும் பலம் (Motional strength)
5. நைசர்கிகபலம் Naisargika Bal - இயற்கையான வலிமை (Natural strength)
6. த்ரிக்பலம் Drik Bal - பார்வையால் கிடைக்கும் பலம் (Aspectual strength)

These strengths are computed for the seven Grahas from Sun to Saturn. The nodes (Rahu & Ketu) are not considered.
--------------------------------------------------------------------
22
சத்ரு-Satru: எதிரி-Enemy

23
சஷ்டக அஷ்டகம்    (அல்லது அஷ்டக சஷ்டகம், அல்லது அஷ்டமம்,
சஷ்டமம் ): ஒருவருக்கொருவர் 6ஆம் மற்றும் 8ஆம் இடத்தில் கிரகங்கள் இருக்கும் நிலைமை!

24
திரிசாம்சம் - ராசியில் 1/30 பாகம்.1/30th division of a sign

25
தீய இடம்    Dusthana: தீய இடங்கள் அல்லது மறைவிடங்கள் - அவைகள் முறையே 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும் An evil place, namely, the 6th, 8th and 12th houses

26
துவதசாம்சம் - Dwadasamsa: ராசியில் 1/12 பாகம் 1/12th division of a sign

27
தோஷம்    Dosha: கெட்டுவிட்ட நிலைமை Affliction

28
நவாம்சம் - Navamsa: ராசியில் 1/9 பாகம் 1/9th division of a sign. ராசியின் விரிவாக்கம்தான் நவாம்சம். அதை மனதில் கொள்க! Navamsam is the magnified version of a Rasi Chart!

29
நீசம்-Neecha: ஒருகிரகத்தின் செயல் இழந்த நிலைமை. உங்கள் மொழியில் சொன்னால் செல்லாக் காசாகிப்போன நிலைமை    Debilitated

30
நீசபங்கம்    Neechabhanga: நீசம் நிவர்த்தியாகும் அல்லது நிவர்த்தியாகிவிட்ட நிலைமை-Cancellation of Debility

31
பரிவர்த்தனை - Parivartana: உன் வீட்டில் நான், என் வீட்டில் நீ என்று கிரகங்கள் வீடு மாறி அமர்ந்திருக்கும் நிலைமை -mutual exchange of signs
-----------------------------------------------------
விடுபட்டவை:

நேற்றைய பதிவில் விடுபட்டவை:
தலைப்பு: பஞ்சாங்கம்

நாட்கள் அல்லது வாரம்: ஒருநாள் சூரிய உதயத்தில் இருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை உள்ள காலம் அல்லது நேரம் ஒரு நாள் எனப்படும்

சூரியனுக்கான நாள் - ஞாயிற்றுக்கிழமை. சந்திரனுக்கு - திங்கட்கிழமை, செவ்வாய்க்கு - செவ்வாய்க்கிழமை, புதன் கிரகத்திற்கு புதன் கிழமை, குருவிற்கு வியாழக்கிழமை, சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமை, சனீஷ்வரனுக்கு சனிக்கிழமை. அன்றைய நாட்களின் ஆதிக்க நாயகர்கள் அவர்கள்தான்!
----------------------------------------------------
யோகம்:

இரு வகையான யோகங்கள் உள்ளன. முதலாவது சூரியனும், சந்திரனும் சம்பந்தப்பட்டது. வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரத்தை வைத்துக் கணக்கிடப் படுகிறது. சூரியன் மற்றும் சந்திரனின் பாகைகளைக் கூட்டினால் வருவதே இந்த யோகம். அவைகள் மொத்தம் 27 ஆகும். கீழே கொடுக்கப்பெற்றுள்ளன:

1.விஷ்கும்பம்,   2.ப்ரீத்தி,  3. ஆயுஷ்மான்,  4. சௌபாக்யம்,   5. சோபனம்,  6.அதிகண்டம்,  7. சுகர்மம்,   8. திருதி, 9.சூலம், 10.கண்டம்,  11.விருதி, 12.துருவம், 13. வியாகாதம்,  4. ஹர்ஷணம், 15. வஜ்ரம், 16. சித்தி, 17.வியதிபாதம், 18. வரீயான்,  19.பரீகம்,  20. சிவம், 21. சித்தம்,  22. சாத்தீயம், 23. சுபம்,  24.சுப்ரம், 25.பிராம்யம்,  26.ஐந்திரம்,  27. வைதிருதி.

மற்றைய யோகம் சுபா சுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும். மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.

நட்சத்திரத்தையும், கிழமையையும் வைத்தும் யோகம் கணக்கிடப்படுகிறது. இன்ன இன்ன கிழமைகளில் இந்த இந்த நக்ஷ்த்திரங்கள் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்த்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும்.

ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்த்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும்.

மரண யோகத்தில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடாது. அதுபோல முதன் முதலாக சிகிச்சைக்குச் செல்பவர்களும் மரணயோகத்தில் செல்லக்கூடாது
-------------------------------------------------------------------------
கரணம்:

கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ,  2. பாலவ,  3. கெலவ,  4. தைதூலை,  5. கரசை,  6. வணிசை,  7. பத்தரை,  8. சகுனி,  9. சதுஷ்பாதம்,   10.  நாகவம்,  11. கிம்ஸ்துக்னம்.

கரணத்தின் பலன் என்ன என்பது பஞ்சாங்கத்தில் கொடுக்கப்படவில்லை. தஞ்சாவூர்ப் பெருந்தகையாளர் திருவாளர் கிருஷ்ணன் அவர்கள் வந்து சொல்வார். பொறுமை காக்கவும்
------------------------------------------------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். பாடத்தின் அடுத்த பகுதி தொடர்ந்து வெளிவரும்!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

14.6.10

தஹி வடா என்றால் தெரியுமா?

-----------------------------------------------------------------------------
தஹி வடா என்றால் தெரியுமா?

ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி ஒன்று

தஹி வடா என்றால் என்ன?

நமக்குத் தெரியாது. அது வடமொழிச் சொல் அதனால் தெரியாது.

தயிர்வடை என்றால் தெரியும். அதற்குப் பொருள் அதுதான். அதுபோல ஜோதிடத்தில் நமக்குத் தெரியாத பல சொற்கள் உள்ளன. முடிந்தவரை அவற்றைத்  தொகுத்து, சொல் விளக்கத்துடன் தருவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன். இன்று முதல் பகுதி. படித்து மகிழுங்கள். பயனடையுங்கள். முடிந்தவர்கள் மனனம் செய்து வையுங்கள். அது உங்களின் ஜோதிட அறிவை மேம்படுத்தும்!
-----------------------------------------------------------------------------------------
பஞ்சாங்கம்:

நாள்(திகதி அல்லது தேதி, கிழமை), நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உள்ளடக்கியது பஞ்சாங்கம் ஆகும். பஞ்ச + அங்கம் (ஐந்து பகுதிகள் - Five Parts) = பஞ்சாங்கம்!

1.
நட்சத்திரம்

நமக்கு வேண்டிய ஒருவரின் பிறந்த தினத்தை நினைவில் வைத்துக்கொள்ள அவர் பிறந்த தமிழ் மாதத்தின் பெயர் மற்றும் நட்சத்திரத்துடன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறந்த தேதியை (Date of birth)வைத்துக் கொண்டாடுவது சரியாக வராது. கேக் வெட்டுவதற்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கும். அது வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்து விட்டுப்போனது. நாம் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி, முடிந்தால் அர்ச்சனை செய்து மகிழ்வதற்கு நட்சத்திரம்தான் முக்கியம். அதுதான் சரியான பிறந்த நாள்.

நீங்கள் மாசி மகத்தன்று பிறந்தவர் என்றால் ஒவ்வொரு ஆண்டும் அந்த நட்சத்திரத்தன்று பிறந்த நாளைக் கொண்டாடுங்கள். பிறந்த தேதி என்றால் மாசி மகம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தேதியில் வரும். நீங்கள் பிறந்த ஆங்கிலத் தேதியில் வராது. அதை நினைவில் கொள்ளுங்கள்.

(எதற்காக வாத்தியார் மகம் நட்சத்திரம்? தவத்துப்பிள்ளை மகத்தில் பிறக்கும். மகத்தில் பிறந்தவர்கள் தவம் செய்து பெறப்பட்டவர்கள் என்று பொருள்)
---------------------------------------------------------------------------------
2.
திதி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தைக் குறிப்பது.

மாதம் 30 திதிகள்.

ஒவ்வொரு மாதமும் - அதாவது 30 தினங்களுக்கு ஒருமுறை சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும். 0 பாகையில் இரண்டும் இருக்கும். அன்று அமாவாசை. அமாவாசையில் இருந்து பதினைந்தாம் நாள் அவ்விரண்டு கிரகங்களும் எதிர் எதிராக இருக்கும். 180 பாகை வித்தியாசத்தில் இருக்கும். (ஒரு சுற்று வட்டத்திற்கு 360 பாகைகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!)

அமாவாசையில் இருந்து பெளர்ணமி வரை 15 திதிகள் (அவற்றை வளர்பிறைத் திதிகள் என்பார்கள். சிலர் வளர் பிறைத் தேதிகளில் வரும் முகூர்த்த நாட்களில் மட்டுமே சுபகாரியங்களைச் செய்வார்கள். சுபகாரியம் என்றால் திருமணம். புதுமனை புகுவிழா, புதுத் தொழில் துவங்கும் நன்னாள் போன்றவை)

பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரை 15 திதிகள்(அவைகள் தேய்பிறைத் திதிகள் எனப்படும்)

1. பிரதமை, 2. துவிதியை, 3. திரிதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13, திரயோதசி, 14. சதுர்த்தசி

அமாவாசை + வளர்பிறைத் திதிகள் 14 + பெளர்ணமி + தேய்பிறைத் திதிகள் 14 = ஆக மொத்தம் 30 திதிகள். கணக்கு சரியாகிவிட்டதா?

ஒவ்வொரு திதிக்கும் ஒரு சிறப்பு உண்டு.

அது என்ன?

அமாவாசை அன்று நம் முன்னோர்களை வழிபட வேண்டும். தந்தையார் அல்லது தாயார் மேல் உலகம் சென்றிருந்தால், அவர்களுக்காக ஒரு சிறப்பு வழிபாடு செய்தல் வேண்டும். திதி கொடுக்க வேண்டும்.

சதுர்த்தி, விநாயகப் பெருமானை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
பஞ்சமி, உலக நாயகி அன்னை பராசக்தியை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
சஷ்டி, சேவற்கொடியோனை, (அதாங்க நம்ம வேலுச்சாமி), முருகப் பெருமானை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
அஷ்டமி, கோகுலக் கிருஷ்ணனை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
நவமி, ராம அவதாரத்தை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
ஏகாதசி, துவாதசி, ஆகிய இரண்டு திதிகளும் செல்வத்தை அள்ளித்தரும் பள்ளிகொண்ட பெருமாளை வணங்குதற்கு ஏற்ற திதிகளாகும்.
திரயோதசி, எம்பெருமான் ஈசனை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
சதுர்த்தசி, சிவனையும், கணபதியையும் ஒரு சேர வணங்குதற்கு ஏற்ற திதியாகும்

விநாயகரில் துவங்கி, விநாயகரிலேயே முடிவதைக் கவனியுங்கள்

பெளர்ணமி, அண்ணாமலையில் குடிகொண்டிருக்கும் அருணாச்சலரை வணங்குதற்கு ஏற்ற திதியாகும். அத்துடன் எல்லா தெய்வங்களையும் வணங்கி மகிழ ஏற்ற திதியாகும்.

திதிகளின் பயன் அவ்வளவுதானா?

இல்லை! அதி முக்கியமான பயன் ஒன்று இருக்கிறது. ஒருவரின் தந்தை அல்லது தாயார் இறந்துவிட்டால் அவர்களுடைய இறந்த நாளைத் திதியை வைத்துத்தான் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆண்டுதோறும் அந்த நாளில் ஆண்டுத்திதி (வருஷாப்தி) கொடுக்க வேண்டும். மேலும் இரண்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். அல்லது தட்டில் பத்துப் பத்து டாலராக இரண்டு பேருக்குக் கொடுக்கலாம் (இது தூர தேசங்களில் இருப்பவர்களுக்கு)

எந்தத் தமிழ் மாதம், வளர்பிறை அல்லது தேய்பிறையில் இன்ன திதி என்பதைக் குறித்து வைத்துக்கொள்வது நல்லது.

முதலில் வந்த பின்னூட்டங்களில் வாரம், யோகம் மற்றும் கரணம் பற்றி எழுதும்படி கேட்டுள்ளார்கள். நாளை அதை எழுதுகிறேன்
--------------------------------------------------------------------------------------------
3
கேந்திரம்: 1, 4, 7 மற்றும் 10 வீடுகள் கேந்திர வீடுகள் எனப்படும்.

4
கேந்திர அதிபதி: 1, 4, 7 மற்றும் 10 வீடுகளுக்கு உரிய கிரகங்களைக் குறிக்கும்.

5
திரிகோணம்: 1, 5 மற்றும் 9 ஆம் வீடுகள் திரிகோண வீடுகள் எனப்படும்.

6
திரிகோண அதிபதி 1, 5 மற்றும் 9 ஆம் வீடுகளுக்கு உரிய கிரகங்களைக் குறிக்கும்.

கேந்திரம் மற்றும் திரிகோண வீடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ள கிரகங்களால் நன்மையான பலன்கள் கிடைக்கும். அவைகள் தீய கிரகங்கள் என்றாலும் கிடைத்த கேந்திர அல்லது திரிகோணப் பதவியால் நன்மைகளையே அதிகமாகச் செய்யும்.
----------------------------------------------------------

7 பார்வை:
(Aspect, look, glance) கிரகத்தின் பார்வையைக் குறிக்கும். கிரகங்களுக்கு ஏழாம் பார்வை உண்டு. குரு, செவ்வாய், சனி ஆகிய கிரகங்களுக்கு மட்டும் கூடிதலாக மேலும் 2 பார்வைகள் உண்டு. குருவிற்கு - 5, 9, செவ்வாய்க்கு 4, 8, சனிக்கு 3, 10ஆம் பார்வை கூடுதலாக உண்டு.

நன்மையான கிரகங்களின் பார்வையால், நன்மைகள் கிடைக்கும். தீய கிரகங்களின் பார்வையால் தீமைகளே அதிகம் இருக்கும்
------------------------------------------------------

8
கெட்டுப்போன நிலைமை (Affliction): சாம்பாரில் மறந்து இரண்டுமுறை உப்பைப் போட்டால் என்ன ஆகும்? கெட்டுப்போய்விடும். ரசித்துச் சாப்பிட முடியாது. நன்றாகப் படிக்கும் பையன், ஒரு போக்கிரியுடன் சேர்ந்து சுற்றினால் என்ன ஆகும்? கவனம் சிதறும். பெயர் கெடும். ஒழுங்காகப் படித்துத் தேர முடியாது. அப்படித்தான் ஒரு சுப கிரகம் அல்லது நன்மையைச் செய்யக்கூடிய கிரகம், ஒரு தீய கிரகத்துடன் சேர்ந்து ஜாதகத்தில் இருப்பது நன்மை பயக்க்ஊடியது அல்ல! அதைத்தான் கெட்டுப்போய்விட்டது என்பார்கள். சேர்ந்தால் மட்டும் அல்ல பார்த்தாலும் அதே நிலைமைதான்.

Affliction - A planet that is aspected by or is associated with malefics is said to be afflicted.
Affliction - Affliction refers to a condition or cause of suffering. A planet that is aspected by or is associated with malefics is said to be afflicted.
---------------------------------------------

9
அஸ்தமனம். (Combustion)

அஸ்தமனமாகும் கிரகம் அடிபட்டுப்போகும். அதனால் உரிய பலன்களை ஜாதகனுக்குத் தரமுடியாது.

சூரியனுக்கு அருகில் பத்து பாகைக்குள் வரும் கிரகம் அந்தமனமாகிவிடும்.

Combustion means a planet losing its strength, so if a chart has 3 planets combust, means the person really loses the major fruits of life.
---------------------------------------

10
சங்கமம்: (Conjunction) சங்ககமாகுதல், சங்கமித்தல். உங்களுக்கும் புரியும்படி சொன்னால் ஈறுடல் ஓருடலாக இருக்கும் நிலைமை அதாவது இரண்டு கிரகங்கள் 0 பாகையில் இருக்கும் நிலைமை.

Two planets having the same longitude are said to be in conjunction.

சங்கமித்தால் சங்கமித்ததோடு சரி. ஜாதகனுக்கு நன்மைகள் இருக்காது.
--------------------------------------

11
சேர்க்கை (Association): இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் கூட்டாக ஒரு ராசியில் இருக்கும் நிலைமை. உங்களுக்கும் புரியும்படி சொன்னால் ஒருவர் மேல் ஒருவர் படாமல் தள்ளி நிற்கும் நிலைமை.

அப்படித் தள்ளி நின்று சேர்க்கையாக இருந்தால், ஜாதகனுக்கு அவர்கள் இருவரும் கூட்டாக பல நன்மைகளைச் செய்வார்கள். யோகத்தைத் தருவார்கள். சச்சினும், தோனியும் சேர்ந்து அதிரடி ஆட்டம் ஆடினால் எப்படி இருக்கும்? பலன்கள் அப்படியிருக்கும்!


பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் இன்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். பாடத்தின் அடுத்த பகுதி தொடர்ந்து வெளிவரும்!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

11.6.10

தேவதையா அல்லது பிசாசா? யாரைக் காதலிக்கிறீர்கள்?

-----------------------------------------------------------------------
தேவதையா அல்லது பிசாசா? யாரைக் காதலிக்கிறீர்கள்?

யாரைக் காதலிக்கிறீர்கள்? தேவதையையா அல்லது பிசாசையா? ஹீரோவையா அல்லது வில்லனையா?
----------------------------------------------------------------------------------------------------------

”நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாடவேண்டும்....உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்... நீ காண வேண்டும்
நீ காணும் பொருள்யாவும் நானாக வேண்டும்...நானாக வேண்டும்”
------கவியரசர் கண்ணதாசன்
----------------------------------------------------------------------------------
எனக்கு வரும் மின்னஞ்சல்களில் சராசரியாகத் தினமும் 2 மின்னஞ்சலாவது தங்களுடைய காதலைப் பற்றி வாசகர்கள் எழுதியதாக இருக்கும். அதாவது தங்கள் ஜாதகத்தை அனுப்பினால், தங்களுடைய காதல் நிறைவேறுமா? பார்த்துச் சொல்ல முடியுமா? என்று கேட்டு எழுதப்பெற்றதாக இருக்கும்.

சில அஞ்சல்கள் வரும்போதே இணைப்பில் ஜாதகங்களுடனும், கடிதத்தில் பல please களுடனும் அவசியம் பார்த்துச் சொல்லும்படியான வேண்டுகோள்களுடன் வரும்.

தங்கள் காதல் வரலாற்றையும் சிலர் விவரித்து எழுதியிருப்பார்கள். பெரும்பாலும் வீட்டிலுள்ள பெருசுகளைத்தான் வில்லனாகச் சித்தரித்திருப்பார்கள். அவர்களை ஓரம்கட்டிவிட்டுக் கல்யாணம் செய்துகொள்ளலாமா? பின்னால் காதல் வாழ்வில் பிரச்சினை ஏதாவது வந்தால், அவர்களுடைய உதவியின்றித் தானே அதைச் சமாளிக்கமுடியுமா என்றும் கேட்டு எழுதியிருப்பார்கள்.

வரும் அஞ்சல்களில் 70% அஞ்சல்கள் இளம் பெண்களிடம் இருந்துதான் வரும்!

எல்லாம் காலக் கோளாறு. அதீதப் படிப்பு, பன்னாட்டு நிறுவனத்தில் அற்புதமான வேலை, கைநிறையச் சம்பளம். கட்டற்ற பொருளாதாரச் சுதந்திரம், வெளியுலகை முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு, நாகரீகத்தின் தாக்கம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

உடன் வேலை பார்க்கும் இளைஞனெல்லாம் சூர்யாவாகவும், அஜீத்தாகவும், சமீர்கானாகவும், ஷாருக்கானாகவும் தெரிகிறார்கள். அதேபோல இளைஞர்களுக்கு உடன் வேலைபார்க்கும் சிட்டுக்கள் எல்லாம், அனுஷ்கா சர்மாவாகவும், தீபிகா படுகோனேவாகவும், ஷமீரா ரெட்டியாகவும், நயந்தாராவாகவும், திரிஷாவாகவும் தெரிகிறார்கள்.

தெரியட்டும். தவறில்லை!

ஆனால் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்கள் தெரியாமல் போய்விடுகிறார்கள். அதுதான் சோகம். காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். அத்துடன் இன்று நன்றி, விசுவாசமும் இல்லை!

பெற்று, வளர்த்து ஆளாக்கிய அவர்களுடைய நம்பிக்கைகளை, எதிர்பார்ப்புக்களை வீணாக்கிவிடுகிறார்கள். அவர்களுடைய கனவுகளை எல்லாம் கானல்களாக மாற்றிவிடுகிறார்கள். அத்துடன் அவர்களுக்குத் தலை குனிவை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

தங்களுடைய பிள்ளைகளுக்கு எந்தமாதிரி வாழ்க்கை அமைய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

இதில் பையன்களைவிடப் பெண்ணைப் பெற்றவர்கள்தான் மிகவும் நொடித்துப்போய்விடுகிறார்கள். நொந்துபோய் விடுகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. காதலனின் உண்மையான முகம், திருமணத்திற்குப்பின்தான் தெரியவரும். அதுபோல காதலியின் உண்மையான முகமும் திருமணத்திற்குப்பின்தான் தெரியவரும்.

“பாதிமனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்ததடா”

என்று கவியரசர் தன் பாட்டில் எழுதிவைத்ததைப்போல காதலனின் மிருக குணம் திருமணத்திற்குப்பின்தான் தெரியவரும். அதுபோல காதலித்தபோது தேவதையாகத் தெரிந்தவள், திருமனத்திற்குப் பிறகு பிசாசாகத் தெரிவாள்.

பெற்றோர்கள் பார்த்துச் செய்துவைக்கும் திருமணத்திலும் இந்தப் பிரச்சினை உண்டு என்றாலும், அதில் வித்தியாசம் இருக்கிறது. அவர்களும், மற்ற நெருங்கிய உறவினர்களும் கைகொடுக்க வருவார்கள். காதல் திருமணத்தில் யாரும் வரமாட்டார்கள். கண்ணீர் விடும்போது இரக்கப்பட்டு வந்தால் மட்டுமே உண்டு.

அதனால்தான் கவியரசர் இப்படி எழுதினார்:

“காதலைக் காவியத்திற்கு விட்டுவிடுங்கள்
கல்யாணத்தைப் பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள்
பெற்றோர்கள் பார்ப்பதினால் என்ன நன்மையா - அவர்கள்
மற்றதையும் பார்ப்பதினால் வரும் நன்மையே!”

உருகி, உருகி எத்தனை காதல் பாட்டுக்களைத் திரைப்படங்களுக்காக எழுதியவர் அவர். தன் அனுபவங்களை வைத்துத்தான் இதையும் எழுதினார்.

நல்ல விஷயங்களை நாம் கேட்க மாட்டோம். அல்லது விதி நம்மைக் கேட்கவிடாது. பலரும் கெட்ட பின்னேதான் ஞானியாவர்கள். அதாவது ஞானம் பிறக்கும்.

சரி போகட்டும், அது அவர்களுடைய (பெற்றவர்களுடைய) தலை எழுத்து, வயதான காலத்தில் பிள்ளைகளால் அவதிப்பட வேண்டும் என்பது அவர்களுடைய விதி என்று, அதை ஒதுக்கிவைத்துவிட்டு சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பெற்றவர்கள் ஏதாவது சொன்னால், “சும்மா மொக்கை போடாதே!” என்று அவர்களின் வாயை அடைத்து விடும் பிள்ளைகள்தான் இப்போது அதிகம் என்பது வேதனையான விஷயம்!.
----------------------------------------------------------------------------------------------------
அந்த மாதிரித் தங்கள் காதலை சிலாகித்து எழுதப்பெற்று வரும் மின்னஞ்சல்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

நான் காதலுக்கு எதிரியில்லை. முறையற்ற காதலுக்கு மட்டும் எதிரி. முறையற்ற காதல் என்பது என்ன என்று என்னால் 50 பக்கங்களுக்கு எழுதமுடியும். ஆனால் எழுத விரும்பவில்லை. அதற்கு எழுத்தில் சொல்லமுடியாத சில காரணங்கள் இருக்கின்றது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். காதல் புனிதமானது. அந்த உணர்விற்கு நிகராக சுகம் தரும் உணர்வு எதுவுமில்லை!

காதலர்கள், தங்கள் காதலை வெற்றிபெறச் செய்து, இல்வாழ்விலும் வெற்றி பெற்று வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு நிகரான வாழ்க்கை வேறு இல்லை!

காதல் வெற்றி பெற்று, இல் வாழ்க்கை வெற்றி பெறவில்லை என்றால் எப்படி இருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள்

ஆகவே, என்னுடைய பதில் பொதுவாக இப்படி இருக்கும்:

“காதல் புனிதமானது. காதலிப்பவனையே நீ மணந்துகொள். இந்த ஜோதிடக் கருமத்தை எல்லாம் பார்க்காதே. என்ன பிரச்சினை வந்தாலும் ஏற்றுக்கொள். மூன்று வருடமாகக் காதலிக்கிறேன் என்கிறாய். ஜாதகம் பொருந்தவில்லை என்று தெரிந்தால் என்ன செய்வாய்? அவனை உதறி விடுவாயா? உன்னால் முடியுமா பெண்ணே? இல்லை அவன்தான் உன்னை லேசில் விட்டுவிடுவானா? காதலிப்பவனை மணந்துகொள். ஒருநாள் வாழ்ந்தாலும் போதும். அதுதான் உண்மையான காதல். உண்மை தோற்கக்கூடாது. உன் காதலைப் பொய்யாக்கி விடாதே!”

அதற்கு உடனே பதில் வரும்.

“சார், என் காதலனை நான் பார்த்துக்கொள்கிறேன். என் பெற்றோர்களிடம், விஷயத்தைச் சொல்லி, அவர்களுடைய சம்மதத்தை எப்படிப் பெறுவது? என் ஜாதகத்தில் அதற்கு வழி உள்ளதா? ப்ளீஸ் பார்த்துச் சொல்லுங்களேன்!”

(தொடரும்)

கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் நிறுத்தியுள்ளேன். இதன் அடுத்த பகுதி 14.6.2010 திங்களன்று வெளிவரும்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

9.6.10

சனைச்சரணைத் தெரியுமா உங்களுக்கு?


திருநள்ளாறு கோவிலின் கோபுரத் தோற்றம்


சனீஷ்வர பகவான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
சனைச் சரணைத் தெரியுமா உங்களுக்கு?

உங்களுக்கு அவனைத் தெரியாவிட்டாலும், அவனுக்கு உங்களைத் தெரியும். நீங்கள் அவனை நம்பாவிட்டாலும், அவன் உங்களை நம்பவைப்பான். அவனை உணராமல் நீங்கள் இந்த உலகைவிட்டுச் செல்ல முடியாது. அவன் தன்னை அடையாளம் காட்டிவிட்டுத்தான் உங்களுக்குப் Boarding Pass தருவான். அதை மனதில் கொள்க!

சனைச்சரண் என்றால் வடமொழியில் மெதுவாகச் செல்பவன் என்று பொருள். அந்தச் சனைச்சரண் என்ற சொல்தான் மறுவி சனீஷ்வரன் என்றாகி விட்டது.
சனீஷ்வரன் எழுந்தருளி அனைவருக்கும் அருள்பாலிக்கும் இடம் திருநள்ளாறு ஆகும்

நவக்கிரகங்களின் கோயில்களிலேயே மிகவும் பிரபலமான கோயில் சனீஷ்வர பகவான் எழுந்தருளியிருக்கும் திருநள்ளாறு கோவில் ஆகும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயில், தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலுக்கு அருகில் உள்ளது. காரைக்காலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம்.

இங்கே வழக்கம்போல சிவனாரும், திருமதி சிவனாரும்தான் பிரதான தெய்வங்கள். அவர்கள் இல்லாமல் உலகம் ஏது? கிரகங்கள் ஏது? நாம் ஏது?

ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் என்ற பெயரில் சிவபெருமானும், பிராணாம்பிகையாக அம்பாளும் இங்கே குடிகொண்டிருக்கிறார்கள். அவர்களிருவருக்கும் நடுவே சனீஷ்வரனின் சன்னதி உள்ளது. வணங்குபவர்களுக்கு அபயமளிக்கும் தோற்றத்துடன் சனீஷ்வரன் இங்கே வீற்றிருப்பது, இக்கோவிலின் சிறப்பாகும்.

இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பெற்றதாகும். 7-ஆவது நூற்றாண்டில் கட்டப்பெற்றதாகக் கருதப்படும் தர்பாரண்யேசுவரர் திருக்கோயில் காரைக்காலிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சனைச்சரரின் பார்வையால் பாதிக்கப்பட்ட நள சக்கிரவர்த்தி பல இன்னல்களை அனுபவித்து கடைசியாக இக்கோயிலுக்கு வந்து "நள தீர்த்தம்" என இன்றும் பிரபலமாக விளங்கும் இக்கோயிலின் புஷ்கரிணியில் முங்கி எழுந்து, தர்பாரண்யேசுவரரை பிரார்த்தனை செய்து சனி தோஷம் நீங்கி நலமுற்றதாகக் கோவிலின் வரலாறு கூறுகிறது. ஆகவே சுமார் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி நடைபெறும் நாளன்று இக்கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஜாதகத்தில், சனி பகவான் நீசம் பெற்றுள்ளவர்களும், வக்கிரகதி அடைந்துள்ளவர்களும், சனீஷ்வரன் மறைவிடங்களில் அமர்ந்துள்ளவர்களும், மேலும் கோள்சாரப்படி, ஏழரைச்சனி, மற்றும் அஷ்டமச்சனி நடைபெறும் நிலையில் உள்ளவர்களும், இங்கே வந்து வணங்கிச் செல்வது நலன் பயக்கும். சனிஷ்வரனால ஏற்படும் உபாதைகள் குறையும்.

இங்கே வந்து திரும்ப முடியாத தூரத்தில் இருப்பவர்கள், வீட்டில் இருந்தவாறும், அல்லது உள்ளூரில் உள்ள கோவில்களில் இருக்கும் சனீஷ்வரனை சனிக்கிழமையன்று தவறாமல் வழிபட்டு வருவதும் நன்மை பயக்கும்! கோளறு திருப்பதிகம் படிக்கலாம்

சனீஷ்வரன் வசம் முக்கியமான இரண்டு துறைகள் உள்ளன. அவன்தான் கர்மகாரகன். செயல்காரகன். செயல்களுக்குக்காரகன். நமக்கு வேலை போட்டுக்கொடுப்பவன். Taskmaster அத்துடன் ஆயுள்காரகன். நம் ஆயுளை நிர்ணயிப்பவன். இறுதியாக நமக்குப் போர்டிங்க் பாஸ் கொடுத்து இறைவனடிக்கு அனுப்பிவைப்பவன்.

அவனைப்போல கொடுப்பவனும் இல்லை. கெடுப்பவனும் இல்லை! மனிதனை ஒருவழிக்குக் கொண்டு வருபவன் அவன்தான். அதாவது மனிதனுக்கு எல்லாத் துன்பங்களையும் (அனுபவங்களையும்) கொடுத்து நெறிப்படுத்துபவனும் அவனே!

தல வரலாறு:

நளன் பூஜித்ததால் நள்ளாறு எனப்படுகிறது. இறைவனருளால், நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான்.

திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (அதுதாங்க மதுரையில்) சமணர்களோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை (ஓலைச் சுவடியை) தீயில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சிவன் மற்றும் சனீஷ்வரனின் பெருமையை நிலைநாட்டியது.

முசுகுந்தச் சக்கரவர்த்தி தோற்றுவித்த சப்தவிடங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். இங்கே உள்ள சனிபகவான் சன்னதி சிறப்புடையதாகும்.

இங்கே செல்பவர்கள் முதலில் இங்கே உறையும் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனிஸ்வரன் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். இத்தலத்தில் போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும். இது தருமபுரம் ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ள கோவிலாகும். சோழர்காலக் கல்வெட்டுக்களும் இக்கோவில் உள்ளன. அவைகள் இக்கோவிலின் தொன்மையைக்குறிக்கும்!

இறைவரின் திருப்பெயர்கள்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர். அம்பாளின் திருப்பெயர்கள் போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை. ஸ்தலமரம்: தர்ப்பை. தீர்த்தம்: நளதீர்த்தம், சிவகங்கை

திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனர், நளச் சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள், வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி போன்ற பலர் வழிபட்ட பெருமைகளை உடையது இத்தலம்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமும் இது. அதையும் நினைவில் கொள்க!

பேரளம்-காரைக்கால் புகை வண்டிப்பாதையில் இவ்வூர் உள்ளது. புகைவண்டி நிலையத்திற்கு அருகிலேயே திருக்கோவில் உள்ளது. காரைக்கால், நாகைப்பட்டிணம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

அமைதியான, இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும் இது.

திருவாரூர், திருக்குவளை, திருக்காரைவாசல், திருமறைக்காடு, திருநாகை, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு தலங்களில் உள்ள மூர்த்திகளும், சோழ அரசன் முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரனால் பரிசாகக் கொடுக்கப்பெற்றதாகக் கருதப்படுகிறது. அந்த ஏழு தலங்களுக்கும் சப்தவிடத்தலங்கள் என்ற பெயர் உண்டு. அந்த ஏழு ஸ்தலங்களிலும் நீங்கள் சோழர்காலச் சிறபக்கலையின் சிறப்பைக் காணலாம்.

ஐந்துகாலப் பூஜைகள் அனுதினமும் உண்டு. அத்துடன் ஆண்டு முழுவதும் சிறப்புப் பூஜைகள் பலவுண்டு. சூரியபகவான் மேஷத்தில் காலடி எடுத்து வைக்கும், சித்திரை முதல் தேதியன்று இங்கே சிறப்புப் பூஜை உண்டு.
வைகாசிமாதம் 18 நாட்கள் கோவிலில் விழாவும் சிறப்புப் பூஜைகளும் உண்டு. ஆனி மாதம் நடராஜருக்காகவும், ஆடி மாதம் சுந்தரமூர்த்தி நாயனாருக்காகவும் விசேஷ பூஜைகள் உண்டு. புரட்டாசி மாதம் நவராத்திரி பூஜையும், ஐப்பசி மாதம் சுப்பிரமணியருக்காகவும் சிறப்புப் பூஜைகள் உண்டு. மார்கழி மாதம் நடராஜருக்காக 10 நாட்களும், பிறகு பங்குனி உத்திரத்தன்று பெரும் விழாவும் இக்கோவிலில் உண்டு,

சனி பகவானுக்கு உகந்தவைகள்:

நிறம்: கறுப்பு
வஸ்திரம்: கறுப்புத் துணி
உகந்த நாள்: சனிக்கிழமை
தான்யம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
இரத்தினம்: நீலம்
பலன்: வியாதி, கடன், துன்பங்கள் நீங்கும்!

சனீஷ்வரனுக்கான மந்திரம்:

"Om Hlim Sham Shanaye Namah"

The word 'Hlim' in above mantra denotes Stambhana Shakti, the power of delaying, stopping, holding, and terminating.

The following mantras are also considered very good for planet Saturn. You may opt to recite one of the following mantra if you find it comparatively easy to remember.

"Om praam preem praum sah shanayishraya namah"

"Om sham shanayisharaaye namah"

சனீஷ்வரனுக்கான காயத்ரி மந்திரம்:

ஓம் சனைச்சராய வித்மஹே
சூர்யபுத்ராய தீமஹி
நந்நோ மந்த ப்ரசோதயாத்!

("Om Sanaischaraya vidhamhe,
Sooryaputraya dhimahi,
tanno manda prachodayat")

அதீதமான வறுமை, துன்பம், ஏறுக்குமாறான வாழ்க்கை நிலைமை ஆகியவற்றால் வாடும் அன்பர்கள் இங்கே சென்று வழிபட்டு வருவது நன்மை பயக்கும்! இதுவரை சென்றிராதவர்கள் ஒருமுறை சென்றுவாருங்கள். சனீஷ்வரனின் அருளை வென்று வாருங்கள்!

கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை. பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை!

அன்புடன்
வாத்தியார்

மேலதிகத்தகவல்கள்:

Saturn is the planet of responsibility, and symbolizes the ethic of hard work.
Under its influence a person's character is strengthened through trial and difficulty.
Saturn disciplines us until we can learn to discipline ourselves. Saturn is the planet of diligence, self-control and limitation. Its domain is patience, stability, maturity and realism.
Saturn teaches us the lessons we must learn in life. In the grand plan of the universe,
Saturn does not give us more than we can handle.
Under Saturn's influence we achieve by overcoming obstacles and hardship. Sometimes the effort itself is the reward, for effort is what builds character.
In the end, what we learn under Saturn's influence we keep for the rest of our lives.
Saturn's position in your chart indicates how well you accept responsibility, whether you are self-disciplined, and what delays and opposition you can expect to encounter.

As a negative influence, Saturn can make a person overly ambitious, calculating and selfish, solitary, inhibited and unhappy.
Its negative influence is associated with inflexibility, cruelty, humorlessness and pessimism.
Saturn also represents illness, handicaps and misfortune.
Saturn is our destiny. It rules fate, the things we cannot escape

Favorable effect of Saneeshwaran will result in many fortunes and benefits like good health, success in all endeavors, peace of mind, proper respect from members of family and relations, prosperity, interest and enthusiasm in life.


வாழ்க வளமுடன்!

2.6.10

சில பெயர் விநோதங்கள்!



=================================================
சில பெயர் விநோதங்கள்!

சில பெயர்கள் விநோதமாக இருக்கும்.அதாவது அந்தப் பெயரை உடையவர்கள் பெயருக்குச் சம்பந்தமில்லாமல் விநோதமாக இருப்பார்கள். அன்னபூரணி என்று பெயர்வைப்பார்கள். அம்மணி வாழ்க்கைமுழுவதும் வயிற்றுப்பாட்டிற்காக உழைப்பவராக இருப்பார். ஆரோக்கியசாமி என்று பெயர் வைப்பார்கள். ஆசாமி எப்போதும் (மருந்து) பாட்டிலும் கையுமாக இருப்பார். ஆண்டி என்று பெயர் வைப்பார்கள். அதாவது மாயண்டி, வேலாண்டி என்று பெயர் வைப்பார்கள், ஆசாமி பென்ஸ் காரில் போய்க்கொண்டிருப்பார். செல்வம் என்று பெயர் வைப்பார்கள். பையன் கூலி வேலைபார்க்க நேரிடும். அதாவது எதிர்மறையான பலன் இருக்கும்.

ஒரு ஊருக்குக் கஞ்சனூர் என்று பெயர். அங்கே இன்பங்களை வாரிவழங்கும் வள்ளல் இருக்கிறார். கஞ்சனூர் என்னும் பெயருக்கு எதிர்மாறாக இருக்கிறார்!

யார் அவர்?

வாருங்கள் பார்ப்போம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அருள்மிகு அக்னீஷ்வரர் ஆலயம்! கஞ்சனூர்

நவக்கிரகக் கோவில்கள்: சுக்கிரனுக்கான ஸ்தலம்!

சுக்கிரன் சுபக்கிரகம். குருவிற்கு அடுத்தபடியாக ஜாதகனுக்குப் பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிரன். சுக்கிரன் கெட்டிருந்தால் நீங்கள் எதையும் அனுபவிக்க முடியாது. மண், பெண், பொன் என்று எதையும் அனுபவித்து மகிழ முடியாது. அதை மனதில் கொள்க!

செல்வம், வசதி, மகிழ்ச்சி, வளர்ச்சி என்று எல்லாவற்றிற்கும் சுக்கிரனின் ஆசி வேண்டும். ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலைமையில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் சொல்லாமலேயே கிடைக்கும். தேடாமலேயே நாடிவரும்!

ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும் அல்லது மறைவிடங்களில் இருந்தாலும் அல்லது தீய கிரகங்களான சனி, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தாலும், சுக்கிரனை மனமுருக வணங்குவது நன்மை பயக்கும்!
----------------------------------------------------------------------
சுக்கிரனைப் பற்றிய கதைகள்:

அசுரகுரு, அதாவது அசுரர்களுக்கான குரு சுக்கிரபகவான், கடும் தவம் இருந்து, சிவனாரிடம் இருந்து அரிய பல சக்திகளைப் பெற்றார் (He acquired great powers) அந்த சக்திகளில் ஒன்று இறந்தவனையும் உயிர்ப்பிக்கும் மந்திரம்.
அந்த மந்திரத்தின் பெயர் அம்ரித சஞ்சீவினி மந்திரம்.

கதையின் திருப்புமுனை அதாவது டர்னிங் பாயிண்ட் என்னவென்றால், ஒருமுறை அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் நடந்தபோது, சுக்கிராச் சாரியார், அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி இறந்த அசுரர்களையெல்லாம் மீண்டும்
உயிப்பிக்கத் துவங்கிவிட்டார். தேவர்கள் யுத்தத்தை நிறுத்திவிட்டு, சிவனாரிடம் சென்று நிலைமையைச் சொல்லி, தங்களைக் காக்கவேண்டி, மண்டியிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த முறையற்ற செயலைக்
கண்ணுற்ற சிவனார் கோபமுற்று, சுக்கிராச்சாரியாரை ஒரே போடாகப் போட்டு, விழுங்கிவிட்டார். ஆமாம் swallowed him (எப்படி என்று கேட்கக்கூடாது. வரலாற்றிற்கெல்லாம் விளக்கம் சொல்ல ஆளில்லை. நம்பவேண்டும். அவ்வளவுதான். அதனால்தான் துவக்கத்திலேயே கதை என்று சொல்லிவிட்டேன்.) அங்கேயும், அதாவது, சிவானாரின் திருவயிற்றில் கடும்தவம் இருந்து, சுக்கிராச்சாரியார், பெயிலில் வாரமல், விடுதலை பெற்றே
வந்துவிட்டார்.

இன்னொரு கதையும் உண்டு. வாமன அவதாரத்தில் விஷ்ணு பகவான் மகபாலிச் சக்கரவர்த்தியிடம் 3 பாதச்சுவடு அளவு நிலம்கேட்டு, அதில் சுக்கிராச்சாரியார் தலையை நுழைத்த கதையும் உண்டு. பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் அதை விவரிக்கவில்லை!
-----------------------------------------------------------------------------------
அக்னீஷ்வரஸ்வாமி ஆலயம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. இந்த ஆலயம் சுக்கிர பகவான் உறையும் இடமாகும். மதுரை ஆதினத்தின் கீழ் இக்கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த ஆலயத்தைச் சுற்றி உள்ள ஊர்கள் எல்லாம், திருவாடுதுறை, திருமங்கலக்குடி, திருவிடைமருதூர் என்று பசுமையான ஊர்கள். சோழநாட்டின் வடபகுதியில் உள்ள பல தேவார ஸ்தலங்களில் கஞ்சனூரும் ஒன்றாகும்.

சுக்கிரனுக்கென்று இங்கே தனியாக கருவறையோ அல்லது உருவச்சிலையோ இல்லை. சுக்கிரனின் அருளை வேண்டிவருபவர்கள், தங்கள் வேண்டுகோளை சிவனாரிடமே சமர்ப்பிக்க வேண்டும். சுக்கிரனின் இடத்தில் இருந்து
சுக்கிரனுக்காக சிவபெருமானே அருள் புரிவார். அதுதான் இத்தலத்தின் சிறப்பு!

There is no idol for Sukran here. Shiva blesses those who come with their prayers to Sukran.

கஞ்சனூர் கும்பகோணத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சூரியனார் கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம்தான். மாயவரத்தில் இருந்தும், ஆடுதுறை, மற்றும் திருவிடைமருதூரில் இருந்தும் பேருந்துகள்
உள்ளன!

தங்குவதற்கு வசதியான இடம் தேடுவோர், கும்பகோணத்தில் அல்லது மயிலாடுதுறையில் தங்குவது நலம். நல்ல விடுதிகள் உள்ளன.

கஞ்சனூரில் நல்ல உணவு, கோவிலில் கிடைக்கும் பிரசாதம் மட்டுமே!

கோவிலில் சன்னதி திறந்திருக்கும் நேரம் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை. பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9:00 மணிவரை.

முக்கிய விழாக்கள்: ஆடிப்பூரம், மகாசிவராத்திரி, ஆருத்ராதரிசனம், ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்கள் முக்கியமானவையாகும்!

உகந்த நாள்: வெள்ளிக்கிழமை
உகந்த நிறம்: வெள்ளை வஸ்திரம், வெள்ளைத்தாமரை
நவரத்தினம்: வைரம்
பருவம்: வசந்தகாலம்
தான்யம்: மொச்சை
---------------------------------------------------------------------------------------------
சுக்கிரனுக்கான காயத்ரி மந்திரம்:

ஓம் ராஜதபாய வித்மஹே
பிருகு சுதாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!

("Om Rajadabaaya vidmahe,
Brigusuthaya dhimahi,
tanno sukrah prachodayat")
------------------------------------------------------------------------------------
வேதகால மந்திரம்:

Hima-kunda-mrinalabham daityanam paramam gurum
sarva-shastra-pravaktaram bhargavam pranamamy aham
-----------------------------------------------------------------------------------
மந்திரங்கள் நம்பிக்கையுடனும், அலைபாயும் மனமின்றி, தன்முனைப்புடனும், குறைந்தது 108 முறைகளாவது சொல்லிப் பிரார்த்திக்கப்படவேண்டும். அப்போதுதான் பலன். இல்லையென்றால், உங்களுடைய பொன்னான நேரம்
வீணாகும். அது மட்டுமே பலனாக இருக்கும். அதை மனதில் கொள்க!

மேலதிகத்தகவல்:
He is the next most beneficial planet after Guru. If Sukran is favourably placed in a person’s horoscope, the inmate will be blessed with prosperity, beautiful wife, own house, vehicle, fame & marriage. The person will also be very influential. An unfavourably positioned Sukran in ones horoscope causes eye ailments, indigestion, and impotency, loss of appetite and skin problems.

ஒருமுறை கஞ்சனூர் சென்று வாருங்கள். சுக்கிரனின் அருளை வென்று வாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

31.5.10

வில்லனே கதாநாயகன் வேலையை எப்போது செய்வான்?

---------------------------------------------------------------------------
வில்லனே கதாநாயகன் வேலையை எப்போது செய்வான்?

”உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே!
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே!

உனதுயிராய் எனதுயிரும்
உலவிடத் துடிக்குதே!
தனியொரு நான் தனியொரு நீ
நினைப்பது வலிக்குதே!"
--------------------------------------------------------------------
Lesson: Mutual aspect and mutual exchange!: பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!

ஒரு திரைப்படத்தில், நடிகர் பாண்டியராஜன் மாணவராக வருவார். வகுப்பில் ஆசிரியர், அன்பிற்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கும்போது, இப்படிப் பதில் சொல்வார்:

“சார், உங்கள் பெண்ணிற்கு நீங்கள் லெட்டர் எழுதினா, அது அன்பு. நான் எழுதினா, அது காதல்!”

அதுபோல, கிரகங்களின் பரஸ்பர பார்வைக்கும் (mutual aspect) பரிவர்த்தனைக்கும் (mutual exchange of places) வித்தியாசம் உண்டு!

பரஸ்பர பார்வை என்பது அன்பு. பரிவர்த்தனை என்பது காதல்.

காதலில், காதலர்கள் இருவருமே நேசம் மிகுந்தவர்களாக, விசுவாச மிக்கவர்களாக, ஒத்த மனப்பான்மை உடையவர்களாக இருந்தால் காதல் திருமணத்தில் முடியும். வாழ்க்கை ஒளி மயமாக இருக்கும்.

அதுபோல பரிவர்த்தனையாகும் கிரகங்கள் இருவருமே சுபக்கிரகங்களாக இருந்தால், அவர்கள் பரிவர்த்தனையான வீட்டிற்கான பலன்கள் அசத்தலாக இருக்கும். ஜாதகனின் வாழ்க்கை அந்த இரண்டு வீடுகளைப் பொறுத்தவரை அற்புதமாக இருக்கும்

காதலர்கள் இருவரில், ஒருவர் வேஷக்காரராக, வில்லத்தனம் மிகுந்தவராக இருந்தால் காதலின் முடிவு அல்லது அவர்களின் மணவாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்
+++++++++++++++++++++++++++++++++
சரி, காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் என்பவர்களுக்கு, வேறு உதாரணம் சொல்கிறேன்.

பரஸ்பர பார்வை:
1
உங்கள் நண்பர் - அதாவது உங்களுக்காக எதையும் செய்யக்கூடியவர், அன்பு மிக்கவர், உங்கள் மேல் பிரியமுள்ளவர், உங்கள் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும்?
2.
உங்களுக்கு வேண்டாத விரோதி எதிர் வீட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும்?

பரிவர்த்தனை:
1. மிகவும் செல்வாக்கு, சொல்வாக்கு, பண பலம் மிகுந்த நண்பர் உங்களுக்குத் தொழிலில் கூட்டாளியாக வந்தால் எப்படி இருக்கும்?

2.உங்கள் விருப்பத்திற்கு மாறாக, தீயவன் ஒருவன், ஏமாற்றிக் கவிழ்க்கக்கூடியவன் ஒருவன் உங்களுக்குத் கூட்டாளியாக வந்தால் எப்படி இருக்கும்?
+++++++++++++++++++++++++++++++++
கோள்களின் பரஸ்பர பார்வையாலும், பரிவர்த்தனையாலும் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றிய விரிவான பாடத்தைக் கீழே கொடுத்துள்ளேன்:

அனைவரும் படித்துப் பயனடையுங்கள்; படித்து மகிழுங்கள்
++++++++++++++++++++++++++++++++++
பரிவர்த்தனை என்றால் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்:

ஒரு கிரகத்தின் வீட்டில் இன்னொரு கிரகம் வந்து அமர்வதும், அமர்ந்த கிரகத்தின் வீட்டில் அந்த இடத்திற்கு உரிய கிரகம் மாறி அமர்வதும் பரிவர்த்தனை ஆகும்.

"Parivartannai" is equal to Planet-A occupies the sign of Planet-B while simultaneously Planet-B occupies the sign of Planet-A.

பரிவர்த்தனையின் முக்கியப் பலன்கள்: பரிவர்த்தனையான வீடுகளின் வலிமை அதிகமாவதுடன், பரிவர்த்தனை பெற்ற கிரகங்களின் வலிமையும் அதிகமாகும்! இந்த அமைப்பு ஜாதகனின் வெற்றிக்கு ஊன்றுகோலாக இருக்கும்! வெற்றிபெற வழிகளை உண்டாக்கித்தரும்!

அதே நேரத்தில் பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் தீய கிரகங்கள் என்றால் எதிர்மறையான விளைவுகள் (negative results) அதிகமாகும். ஜாதகன் பல சிரமங்களுக்கு ஆளாக நேரிடும்!

பரிவர்த்தனையில் சம்பந்தப்படும் கிரகம் இயற்கையில் சுபக்கிரகமாகவோ அல்லது ஜாதகத்திற்கு யோககாரகனாகவோ இருந்தால், அக்கிரகம் சம்பந்தப்பட்ட காரகங்களுக்கு (செயல்களுக்கு) உரிய பலன்கள் எளிதாக வந்து சேரும். உங்கள் மொழியில் சொன்னால் அவைகள் உங்களைத் தேடிவரும். பரிவர்த்தனைக்கு உள்ளான வீடுகளின் பலன்களும் நன்மை சேர்ப்பதாக இருக்கும்.

அதே நேரத்தில் பரிவர்த்தனையில் சம்பந்தப்படும் கிரகம் தீய கிரகம் என்றால், அக்கிரகம் தனித்துக் கொடுப்பதைவிடத் தீயபலன்களை அதிகமாகக் கொடுக்கும். அவைகள் அதிக சிரமத்தைக் கொடுப்பதாக இருக்கும்.

பரிவர்த்தனை பெற்ற கிரகங்களில் ஒருவரோ அல்லது இருவருமே, ஜாதகத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகமாக இருந்தால் (உதாரணத்திற்கு ரிஷப மற்றும் துலா லக்கினத்திற்கு யோககாரகனான சனீஷ்வரன்) பரிவர்த்தனை பெற்ற வீடுகள் அல்லது இடங்களின் பலன்கள் அற்புதமாக இருக்கும். ஜாதகனே திகைக்கும் அளவிற்கு நன்மை செய்யக்கூடியதாக இருக்கும்.

தீய கிரகமே நன்மை செய்யக்கூடிய வீட்டுக்காரனாகி விடுவான். உங்கள் மொழியில் சொன்னால் வில்லனே கதாநாயகனாகி விடுவான்.

துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன். அந்த லக்கினக்காரர்களுக்கு, சனி 4ஆம் மற்றும் ஐந்தாம் வீடுகளுக்கு உரியவன். அந்த லக்கின ஜாதகனுக்கு கல்விக்கும், அறிவிற்கும் உரியவனாவான். அந்த இரண்டு இடங்களையும், அவற்றிற்குரிய பலன்களையும் நெறிப்படுத்தி ஜாதகனை மேன்மைப் படுத்துபவன் அவன். ஆனால் ஜாதகத்தில் சாதாரண நிலையில் அமர்ந்திருக்கும் சனி, அவற்றை அள்ளிக் கொடுக்க மாட்டான். பங்கிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பான். (Ration shopகளில் நமக்குப் பொருட்கள் கிடைப்பதைப் போல அவைகள் கிடைக்கும்)

ஆனால் அதே துலா லக்கின ஜாதகத்தில் சனி, பரிவர்த்தனை பெற்றிருந்தால், குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளுக்கான பலன்களை அள்ளி அள்ளிக் கொடுப்பான். அவன் இரட்டைச் சனியாகிவிடுவான். நன்மைகள் இரண்டு மடங்காகிவிடும். சனியின் சுயவர்க்கப்பரல்கள் 5ம் அல்லது அதற்கு மேலும் இருந்தால் (அதாவது அந்த ஜாதகத்தில்) பலன்கள் நான்கு மடங்காகக்கூட ஆகிவிடும்!

அதே சனி பரிவர்த்தனை பெற்றும் பலமின்றி இருந்தால், அவஸ்தைகளும், சிரமங்களும் இரண்டு மடங்காகிவிடும். பலன்கள் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் காலதாமதமாகி, நமது பொறுமையை சோதித்து, கடைசி நிமிடத்தில் கிடைப்பதாக இருக்கும்.

பரிவர்த்தனையாகும் கிரகங்களின் பொதுப் பலாபலன்கள்: மூன்று விதமாக இருக்கும் 1. நல்லது. 2. கெட்டது. 3. அதி மேன்மையானது.

தைன்ய பரிவர்த்தனை: பரிவர்த்தனையாகும் கிரகங்களில் ஒருவர் 6 அல்லது 8 அல்லது 12ஆம் இடத்தின் அதிபதியாக இருப்பது. அப்படி இருந்தால், பரிவர்த்தனைக்கு உள்ளாகும் அடுத்த கிரகம் அடிபட்டுப்போகும்! உங்கள் மொழியில் சொன்னால், காயப்பட்டு, படுத்துக் கொண்டு விடும். ஆனாலும் மறைவிடத்திற்குச் சொந்தமான கிரகம், பரிவத்தனையால் வலிமை உடையதாகிவிடும்.

The dusthamsha lord will be strengthened by its interaction with the other non-dusthamsha partner.
-----------------------------------------------------
கஹல பரிவர்த்தனை: பரிவர்த்தனையாகும் கிரகங்கள் இருவரில் ஒருவர் 3ஆம் இடத்து அதிபதி என்னும் நிலைமையில் இது ஏற்படும்.

இந்த அமைப்பில் பரிவர்த்தனையாகும் மற்றொரு கிரகமும், தீய இடத்து அதிபதியாக இருக்க முடியாது. இருந்தால் அது தைன்ய பரிவர்த்தனைக் கணக்கில் வரும். அதை மனதில் வையுங்கள்.

ஆகவே, இந்த இடத்து அமைப்பில் வரும் மற்றொரு கிரகம் 1, 2, 4, 5, 7, 9, 10, or 11. ஆகிய இடங்களில் ஒன்றிற்கு அதிபதியாக மட்டுமே இருக்க முடியும்.

இந்த அமைப்பில் பரிவர்த்தனைக்கு உள்ளாகும் கிரகம், மூன்றாம் இடத்திற்கு உரிய குணங்களான துணிச்சல், அதிரடி, போட்டிபோடும் தன்மை, ஆர்வம், குறுகுறுப்பு ஆகியவற்றைக் கொண்டுவிடுவார். ஜாதகனின் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் அவைகள் உதவியாக இருக்கும்.

Kahala yoga will give abnormal strength to the native of the horoscope in talking, scheming and competing mind to go out and get stuff done.
....................................................
மகா பரிவத்தனை யோகம்:

1, 2, 4, 5, 7, 9, 10, or 11ஆம் இடங்களின் அதிபதிகளில் இருவர் தங்களுக்குள் பரிவர்த்தனையாவது இந்த யோகத்தைக் கொடுக்கும். சொத்து.சுகம், அந்தஸ்து என ஜாதகன் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவான். அது தவிர சம்பந்தப்பட்ட வீடுகளுக்குரிய வேறு பலன்களும் அசத்தலாகக் கிடைக்கும்
===================================================
An important difference: Parivarththanai vs. Paarvai (Mutual-Aspect)

ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக நிகழ்த்தும் நிகழ்வுகள் அல்லது செயல்கள் அல்லது உதவிகள் பரஸ்பரம் (Mutual) என்பதற்கு ஒருவருக்கொருவர் என்று பொருள் கொள்ளூங்கள்.

எனக்கு நீ செய்; உனக்கு நான் செய்கிறேன்.
என் இடத்தையும் அதன் செயல்களையும் நீ பார்த்துக்கொள்.
உன் இடத்தையும் அதன் செயல்களையும் நான் பார்த்துக்கொள்கிறேன்.

1
Reciprocally acting or related;
reciprocally receiving and giving;
reciprocally given and received;
reciprocal; interchanged;
as, a mutual love, advantage, assistance, aversion, etc.
2
Possessed, experienced, or done by two or more persons or things at the same time;
common; joint; as, mutual happiness; a mutual effort.

Parivarththanai strengthens both planets even if they are both malefics - possibly increasing their evil capacity, but always dignifying both.
++++++++++++++++++++++++++++++++++++++++
பரஸ்பர பார்வை:

Mutual Aspect by contrast does not normally dignify the two planets.
Any two planets in opposition, 180 degrees apart, will provide mutual aspect to each other.
If those two planets are friendly, the mutual aspect is a good thing, but then they will need to both rule favorable houses and occupy good signs in order to really help each other.

The mutual aspect of Saturn and Mars which can occur when those two grahas occupy at 180 deg or 90/270 deg (4/10) angle to each other, is nearly always a disaster, causing intensely repressed anger which consumes most of the person's life force, eventually blocking the very accomplishments this person works so hard for.
+++++++++++++++++++++++++++++++++++++++++++

Parivarththanai between Sani and Kuja, no matter how repressed it makes the personality, will give full discipline from Shani and full productivity from Mangala.
The native will definitely accomplish something in life despite one's habit of taking the longer, harder road toward nearly every goal.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
6ஆம் அதிபதியும் 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்:
சொத்துக்கள் விரையமாகிக் கரைந்துபோகும். (அவற்றின் தசாபுத்திகளில்)

------------------------------------------------
2

2ஆம் அதிபதியும் 9ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்:
ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். பிறப்பில் ஏழையாக இருந்தாலும், அதீதமாகப் பொருள் ஈட்டி செல்வந்தனாக உயர்வான். அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான். மகிழ்ச்சி உடையவனாக இருப்பான்.
-------------------------------------------------
3

1ஆம் அதிபதியும் 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்: மகா ராஜயோகம்!

அல்லது

சூரியனும், குருவும் லக்கினத்தில் இருப்பது அல்லது ஐந்தாம் வீட்டில் இருப்பது அல்லது இருவரும் உச்சம் பெற்றிருப்பது அல்லது தங்களுடைய ஆட்சி வீட்டில் இருப்பது அல்லது தங்களுடைய சொந்த நவாம்சத்தில் இருவரும் இருப்பது ஆகிய நிலைகளில் ஒன்றுடன் சுக்கிரன் அல்லது சந்திரனின் சுபப்பார்வையை இருவரும் பெற்றிருந்தால் அதுவும் இந்த யோகத்தைத் தரும். ஜாதகன் அதிகமான பேரையும், புகழையும் பெறுவான். மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான்.
--------------------------------------------------
4
1ஆம் அதிபதியும் 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்:

ஜாதகன் ஆட்சியாளர்களுடன் அல்லது அரசுடன் நல்லதொடர்பு உடையவனாக இருப்பான். அல்லது அரசாங்கத்தில் பெரிய உத்தியோகத்தில் இருப்பான். இந்த அமைப்பு ஜாதகனுக்கு நல்ல பதவி, அந்தஸ்து, புகழ், ஆற்றல், சக்தி என தொழில் அல்லது வேலை சம்பந்தமாக அனைத்தையும் கொடுக்கும்!
-------------------------------------------------------
5
9ஆம் அதிபதியும் 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்:
இதற்கு தர்மகர்மாதிபதி யோகம் என்று பெயர். ஜாதகனுக்கு அந்தஸ்து, மதிப்பு, மரியாதை, புகழ், பதவி என்று அனைத்தும் தேடி வரும்!
...........................................................................................
6
நவாம்சத்தில் நவாம்ச செவ்வாயும், நவாம்ச சுக்கிரனும் பரிவர்த்தனையாகியிருந்தால்:
இந்த அமைப்பு பெண்கள் ஜாதகத்திற்கு நல்லதல்ல. இந்த அமைப்புள்ள பெண், ஆண்கள் மேல் அதிக மோகம் கொண்டவளாக இருப்பாள். இதே அமைப்பில் அந்தப் பெண்ணின் நவாம்சத்தில் 7ல் சந்திரன் இருந்தால், அவளுடைய கணவனும் ஒழுக்கமற்றவனாக ஸ்த்ரீலோலனாக இருப்பான்.
------------------------------------------------------
7
சனியும், செவ்வாயும் (ராசியில் அல்லது நவாம்சத்தில்) பரிவர்த்தனை பெற்றிருப்பது நல்லதல்ல! அதைப்பற்றி விரிவாக எழுதுவது எனக்கு நல்லதல்ல! அதைப்பற்றி, எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் நடத்தும்போது விரிவாக எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்

பாடம் ஸ்கிரீன் ஷாட்டில் எட்டுப் பக்கங்கள். யோசித்து, தட்டச்சி, அதை உங்களுக்கு அளிப்பதற்கு எவ்வளவு நேரம் பிடித்திருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். அதோடு, அவற்றைக் கவனத்துடன் படித்து மனதில் ஏற்றுங்கள். மேலோட்டமாகப் படித்துவிட்டு, “சார், அடுத்த பாடம் எப்போது என்று கேட்காதீர்கள்!

எழுதிய பாடத்தை நன்றாகப் படித்து மனதில் ஏற்றுங்கள். அதுதான் நீங்கள் எனக்குச் செய்யும் பிரதி உபகாரமாகும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

26.5.10

குருவிற்கு ஒரு கோவில்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குருவிற்கு ஒரு கோவில்!

நவக்கிரக ஸ்தலங்கள்: ஆலங்குடி!
குரு பகவானுக்கான ஸ்தலம் இது

எல்லா நவக்கிரக ஸ்தலங்களிலும் அம்பிகை உடனமர்ந்த சிவபெருமானுக் குத்தான் முக்கிய சந்நதி. அவர்கள் இல்லாமல் கிரகங்கள் ஏது? இவ்வுலகம்தான் ஏது? அதை மனதில் கொள்க!

ஆலங்குடியில் உறையும் சிவனாருக்கு ‘ஆபத்சகாயர்’ என்று பெயர். ஆலகால விஷத்தை உண்டு, தேவர்களைக் காத்த சிவனார், இங்கே குடிகொண்டுள்ளதால் இத்திருத்தலத்திற்கு ஆலங்குடி என்று பெயர்.

இங்கே உறையும் கணபதிக்கு ‘கலங்காமல் காத்த விநாயகர்’ என்று பெயர். ’கஜமுஹாசூரன்’ என்னும் அரக்கனை அழித்து, தேவர்களுக்கு உதவியதால், அவருக்கு அப்பெயர் உள்ளது! அம்பிகை தன்னுடைய ஒரு அவதாரத்தில், இத்தலத்தில் கடும் தவமிருந்து, சிவபெருமானை மணந்து கொண்டதால், இத்தலத்திற்குத் ‘திருமணமங்கலம்’ என்னும் பெயரும் உண்டு!

திருமால், பிரம்மா, லக்ஷ்மி தேவி, கருடன், விஸ்வாமித்திரர், அஷ்டதிக்குப் பாலகர்கள், அய்யனார், வீரபத்திரர், முசுகுந்த சக்கரவர்த்தி, சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் வழிப்பட்ட பெருமையை உடையது இத்தலம்.

ஒருமுறை அருகில் உள்ள வெட்டாற்றில் வெள்ளப் பிரவாகம் எடுத்தபோது, மறுகரையில் இருந்த சுந்தரரை, இக்கரைக்கு, ஒரு படகோட்டியாகச் சென்று, கூட்டிக்கொண்டு வந்தது சிவனார் என்ற வரலாறும் உண்டு. இத்தலத்தில் உறையும் தட்சிணாமூர்த்தியிடம்தான் சுந்தரர் ஞானஉபதேசம் பெற்றார்
என்பதும் வரலாறு!
____________________________________________________
நவக்கிரகங்களில் குரு பகவானுக்கான ஸ்தலம் இது. ஜாதகத்தில் குரு நீசம் பெற்றிருந்தாலும் அல்லது 6, 8 12ஆம் இடம் போன்ற மறைவிடங்களில் இருந்தாலும் அல்லது குரு திசை நடைபெற்றாலும், நன்மை பெற வேண்டி, ஜாதகன் வழிபட வேண்டிய ஸ்தலம் இது!

கும்பகோணத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம். இங்கே உறையும் குரு பகவானுக்கு தட்சிணாமூர்த்தி என்னும் பெயரும் உண்டு. திருவாரூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் ஆலங்குடி உள்ளது. திருவாரூரில் ரயில் நிலையம் உள்ளது. திருவாரூரில் இருந்து ஆலங்குடிக்கு நிறையப் பேருந்துகள் உள்ளன! கும்பகோணத்தில் இருந்தும் நிறையப் பேருந்துகள் உள்ளன!

குரு என்னும் வடமொழிச்சொல் இருளைப் போக்குபவர் என்று பொருள்படும். அறியாமை என்னும் இருளைப்போக்கி அறிவைக்கொடுக்கும் ஆசானுக்கு அதனால்தான் குரு என்று பெயர். அதைபோல வாழ்க்கையில் உள்ள துன்பம் என்னும் இருளைப்போக்கி, மகிழ்ச்சி என்னும் ஒளியைக் கொடுப்பவர் குரு பகவான்.

செல்வம், புகழ், குழந்தைபாக்கியம் ஆகியவற்றிக்குக் காரகன் குருபகவான். இத்தலத்திற்கு 24 முறைகள் சென்று (அப்பா, ஸ்வாமி 24 முறைகளா?) ஒவ்வொருமுறையும் 24 நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால், குருவால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை!

தனுசு, மற்றும் மீன ராசிக்காரர்களுக்கும், லக்கினக்காரர்களுக்கும் அதிபதி குருபகவான், அவர்கள் நேரம் கிடைக்கும்போது சென்று வருவது நலம் பயக்கும்!

எல்லா வியாழக்கிழமைகளிலும், அமாவாசை, மற்றும் பெளர்ணமி தினங்களிலும், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற குருபகவானின் நட்சத்திர நாட்களிலும் இங்கே விசேஷ பூஜைகள் உணடு. அதுதவிர தினசரி பூஜைகளும் உண்டு. குரு ஹோரையில் அவரை வழிபடுவது சிறப்பைக்கொடுக்கும்!

சகஸ்ரநாம அர்ச்சனைகள், குரு ஹோமம், பாலாபிஷேகம் ஆகியவை ஜாதக தோஷங்களை நீக்கும். அவரவர் சக்திக்கு ஏற்ப வழிபட்டுவிட்டு வரலாம்.

மஞ்சள் வஸ்திரம், முல்லை மலர்கள், கொண்டக்கடலை ஆகியவை குரு பகவானுக்கு உரிய நிவேதனப் பொருட்களாகும். சர்க்கரைப் பொங்கலும் நிவேதனப் பொருளாகும்!

வடமொழியில் ‘கு’ என்றால் இருள் என்றும் ‘ரு’ என்றால் நீக்குபவர் என்றும் பொருள்படும். வடமொழி தெரிந்தவர்கள் இதை உறுதிப்படுத்தலாம்!

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார்களால் பாடப்பெற்ற பெருமை வாய்ந்த்து இத்தலம்.

குருப் பெயர்ச்சி தினங்களில் 1008 சங்குகளை வைத்து, இங்கே அபிஷேகம் நடைபெறும். சித்திரை மாதம் பெளர்ணமி திதியன்று நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பு உடையதாகும்! அதுபோல தைப்பூச தினத்திலும், பங்குனி உத்திர தினத்திலும் நடைபெறும் விழாக்கள் மிகவும் சிறப்புடையதாகும்!

கோவிலிம் சுற்றுப் பகுதியில் 15 தீர்த்தங்கள் (குளங்கள்) உள்ளன. அவற்றில் ’அம்ரித புஷ்கரணி’ என்னும் தீர்த்தம் மிகவும் புகழ்பெற்றதாகும். அது கோவிலின் உட்பகுதியில் உள்ளது.

விக்கிரமசோழன் காலத்துக் (1131ஆம் ஆண்டு) கல்வெட்டு கோவிலில் உள்ளது இக்கோவிலின் தொன்மையைக் குறிக்கும்!

அனைவரும் ஒருமுறை சென்று வாருங்கள். குரு பகவானின் அருளைப் பெற்று வாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

24.5.10

விஸ்வநாதா வேலை வேண்டும்!

-----------------------------------------------------------------------------
விஸ்வநாதா வேலை வேண்டும்!

House of Profession
தலைப்பு - பத்தாம் வீடு!

ஜோதிடத்தின் முக்கியமான பகுதி இதுதான். அதுபோல கடினமான பகுதியும் இதுதான்.

பத்தாம் வீடு, ஒருவரின் ஜாதகத்தில், ஜாதகர் தன் வாழ்க்கையில் செய்ய இருக்கும் தொழிலை அல்லது வேலையைக் குறிப்பிடுவதாகும். அந்த இடத்தை, அதன் இயற்கைத் தன்மையை, அதன் அதிபதியை, அவர் சென்று அமர்ந்திருக்கும் இடத்தை, அந்த இடம் பெருகின்ற பார்வைகளை, அந்த அதிபர் பெறும்
பார்வைகளை, அந்த இடத்தில் வந்தமரும் கிரகங்களை, அதிபருடன் சேர்கின்ற அல்லது கூட்டணி போடுகின்ற கிரகங்களை, அதேபோல கர்மகாரன் சனீஷ்வரனின் நிலைமை ஆகியவற்றைப் பொறுமையாக அலசுவதன் மூலம் ஒருவரின் ஜீவனத்திற்கான வழியை அறியலாம். இதில் அஷ்டகவர்க்கம் பெரும் உதவியாக இருக்கும்.

முதலில் ஒருவனுக்கு வேலை உண்டா இல்லையா அல்லது தொழில் செய்வானா என்று பார்ப்பதற்கும், அல்லது தொழில் ஸ்தானம் முழுமையாகக் கெட்டிருந்தால் வேலை வெட்டிக்குப் போகாமல் ஊரைச் சுறிவிட்டு வந்து வீட்டில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு உறங்கும் சுகவாசியாக இருப்பானா என்று பார்ப்பதற்கு இந்த வீடு உதவி செய்யும். உத்தியோகத்தில் அல்லது வேலையில் எந்த அளவிற்கு ஒருவன் உயர்வான் என்று பார்ப்பதற்கும், எந்த வயதில் உயர்வான் என்று பார்ப்பதற்கும் இது உதவும். எந்த தசா புத்தி காலத்தில் மேன்மை அடைவான் அல்லது கீழே விழுவான் என்று பார்ப்பதற்கும் உதவும்.

இந்த ஜோதிடக் கலையை நிர்மானித்த முனிவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த வேலை வாய்ப்புக்களும், தொழில்களும் மிகச் சிலவே. பின்னாட்களில் வந்த ஜோதிட மேதைகள் தங்கள் அனுபவத்தால் எழுதி வைத்து விட்டுப்போன ஏராளமான குறிப்புக்களும் உள்ளன. அவை அனைத்தையும் ஒருவன் கற்றுத் தேர்ந்திருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் உள்ள வேலை வாய்ப்புக்களை வைத்து ஒரு குறிப்பிட்ட வேலையை, ஜாதகனுக்காகச் சொல்வது இயலாது.

ரயில்வேயில் வேலை கிடைக்கும் என்று ஒருவனுக்கு எப்படிச் சொல்ல முடியும்? அல்லது நீ கனரக வாகனம் ஓட்டும் வேலைக்குச் செல்வாய் என்று எப்படிச் சொல்ல முடியும்? அரசு வேலை என்று சொல்லலாம். அவ்வளவுதான் அரசுத்துறையில், ஆயிரம் வேலைகள் உள்ளன!.

உடல் உழைப்பு வேலை என்று சொல்லலாம். உடல் உழைப்பிலும் ஆயிரக்கணக்கான வேலைகள் உள்ளன.

நீ வியாபாரம் செய்து பொருள் ஈட்டுவாய் என்று சொல்லலாம். எந்த வியாபாரம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

மருத்துவத் துறையில் வெற்றி பெறுவாய் என்று சொல்லாம். மருத்துவத் துறையில்தான் எத்தனை பிரிவுகள் உள்ளன? டாக்டரும் மருத்துவத் துறைதான், மருந்து உற்பத்தி செய்பவரும் மருத்துவத் துறைதான், மருத்துவமனை வைத்திருப்பவரும், மருந்துக் கம்பெனி விற்பனைப் பிரநிதியும் மருத்துவத் துறைதான்.

கலைத்துறையில் எத்தனை பிரிவுகள் உள்ளன? சுக்கிரனும் ராகுவும், அல்லது சுக்கிரனும், புதனும் அல்லது ராகுவும், புதனும் எந்த ஜோடி சம்பந்தப்பாட்டாலும் கலைத் துறையில் சிறப்படைய முடியும். ஆனால் கதை வசனம், இயக்கம், இசை, நடிப்பு என்று அதில் எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன இல்லையா?

ஆகவே உயர்வைச் சொல்ல முடியுமே தவிர உயர்வு அடையும் காலத்தைச் சொல்ல முடியுமே தவிர, வேலையை மிகத்துல்லியமாகக் குறிப்பிட முடியாது. அதை நினைவில் வையுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தாம் வீட்டு அதிபதி மற்ற இடங்களில் சென்று அமர்வதால் ஏற்படும் பொதுப் பலன்கள்

பத்தாம் வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் ஜாதகன் தான் ஈடுபடும் தொலில் வெற்றிமேல் வெற்றியைக் காண்பான். பத்தாம் வீட்டு அதிபதி நீசம் பெற்றிருந்தாலோ அல்லது தீய வீடுகளில் (6,8,12ஆம் வீடுகளில்) அமர்ந்திருந்தாலோ சிரமப்படுவான். போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். மூன்றடி ஏறினால் நான்கடி சறுக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1.
Tenth lord placed in the lagna or 1st house

லக்கினத்தில் அமர்ந்திருந்தால்:
தீவிரமாக தொழில் செய்வான். கடின உழைப்பாளி. தன் முயற்சியால் மேன்மை அடைவான். சுய தொழில் செய்வான். தன்னிச்சையாகச் செய்யக்கூடிய வேலையில் இருப்பான்.தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வான். மற்றவர்களால் போற்றப்படுவான். மெதுவாக, நிதானமாக, தன்முனைப்புடன் முன்னேற்றம் காண்பான்.
இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின் தொடர்பு அவனுக்குக் கிடைக்கும். அவனும் அதில் வெற்றி பெற்றுச் சிறப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.
Tenth lord placed in the 2nd house

இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகன் அவனுடைய வேலையைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டமானவன். இரண்டாம் வீடு என்பது 10ஆம் வீட்டிற்கு ஐந்தாம் வீடு. தொட்டதெல்லாம் துலங்கும் கை நிறையப் பொருள் ஈட்டுவான். தன்னுடைய குடும்பத் தொழிலையே பெரிய அளவில் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். குறுக்கிடும் தடைகளைத் தாண்டி வெற்றிப் படிக்கட்டில் ஏறி ஒரு உச்ச நிலையை ஜாதகன் அடைவான். உணவு விடுதி, பெரிய ரெஸ்டாரண்ட் போன்றவற்றை நடத்தும் தொழிலும் சிலர் ஈடுபடுவார்கள்.

பத்தாம் வீடு கெட்டிருந்து, பத்தாம் அதிபதி மட்டும் இங்கே வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் பெரும் நஷ்டங் களைச் சந்திப்பதோடு, தனது குடும்பத் தொழிலையும் தொடர்ந்து செய்ய முடியாத நிலைக்கு ஆளாகித் தவிப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.
Tenth lord placed in the 3rd house

மூன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகனின் பகுதி நேர வாழ்க்கை பயணங்களில் கழியும்.அப்படிப்பட்ட வேலை அமையும். பேச்சாளனாகவோ, எழுத்தாளனாகவோ இருந்தால் அந்தத்துறையில் பிரகாசிப்பார்கள். புகழடைவார்கள். தொழிலில் உடன்பிறப்புக்களின் பங்கும் இருக்கும் அதாவது அவர்களின் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். எல்லோராலும்
விரும்பப்படும் நிலை கிடைக்கும். அதனால் வேலைபார்க்கும் இடங்களில் கூடுதல் மதிப்பு இருக்கும். 3ஆம் வீடு பத்தாம் வீட்டிலிருந்து ஆறாவது வீடாக அமைவதால் இந்த அமைப்பினருக்கு இயற்கையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் அல்லது தீர்க்கும் திறமை இருக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.
Tenth lord placed in the 4th house

நான்காம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகர் ஒரு உதாரண மனிதராக இருப்பார். எல்லா விஷயங்களிலும் அறிவுடையவராக இருப்பார்.(person with knowledge in various subjects) இந்த அறிவாற்றலால் பலராலும் மதிக்கப்படுபவராக இருப்பார். இடம் வாங்கி விற்கும் அல்லது கட்டடங்களைக் கட்டிவிற்கும் தொழிலை மேற்கொண்டால் அதில் முதன்மை நிலைக்கு
உயர்வார். அரசியல் அதிகாரமுடையவர்களுடன் தொடர்புடையவராக இருப்பார். தூதுவராக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டாகும். வசதியான வீட்டையும், வாகனங்களையும் உடையவராக இருப்பார். தலைமை ஏற்கும் சிறப்புடையவர்களாக இந்த அமைப்புக்காரர்கள் விளங்குவதால் இவர்களுக்குப் பல சீடர்களும், உதவியாளர்களும் கிடைப்பார்கள். பொது வாழ்க்கைக்கு இந்த அமைப்பு சக்தி வாய்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
Tenth lord in the 5th House

ஐந்தாம் வீட்டில் இருந்தால்
வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த அமைப்பை ஆசீர்வதிக்கப்பெற்ற அமைப்பு எனச் சொல்லலாம். தொட்டதெல்லாம் துலங்கும். மண்ணும் பொன்னாகும். பங்கு வணிகத்தில் ஈடுபட்டால் பணம் கொழிக்கும். இறைவழிபாடு, தியானம் என்று எளிமையாகவும் இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள பலர் இவர்களுக்கு நண்பர்களாகக் கிடைப்பார்கள்.அதோடு ஐந்தாம் வீடு, பத்தாம் வீட்டிற்கு எட்டாம் வீடாக இருப்பதனால், இவர்களுக்கு மறைமுக எதிரிகளும் இருப்பார்கள். இவர்களுடைய முன்னேற்றத்திற்கு அவர்கள் தடைகள் ஏற்படுத்த முயல்வார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6
Tenth lord in the 6th House

ஆறாம் வீட்டில் இருந்தால்:
நீதித்துறை, மருத்துவத்துறை, சிறைத்துறை ஆகிய துறைகள் சார்ந்த வேலையில் இருந்தால், அதில் பிரகாசிப் பார்கள். அடுத்தடுத்துப் பதவி உயர்வு பெற்று மேன்மை அடைவர்கள். பொறுப்பான பதவிகள் வந்து சேரும். நடுநிலையாளர் என்று பெயர் பெறுவதுடன், பலரின் மதிப்பையும் பெறுவார்கள். அடிக்கடி இடம் மாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள். ஆறாம்வீடு பத்தாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடு ஆகையால், அதிர்ஷ்டம் இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கூடவே வரும்.இவர்கள் வேலையில் உயர்வதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7
Tenth lord in the 7th House

ஏழாம் வீட்டில் இருந்தால்:
பத்தாம் அதிபதி இந்த இடத்தில் இருந்தால் ஜாதகரின் தொழில் அல்லது வேலை மிகவும் சக்தி வாய்ந்ததாக அமையும். அவர்களுடைய அறிவு சராசரிக்கும் அதிகமானதாக இருக்கும். பலவற்றைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்து கொண்டதை அற்புதமாக வெளிப்படுத்தும் திறமையுடன் இருப்பார்கள். தொழிலில் சிறந்த பங்குதாரர் அல்லது கூட்டாளி கிடைப்பார்.அதுவே அவருடைய வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமையும். தொழில் நிமித்தமாக அடிக்கடி தூர தேசங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்புக் கிடைக்கும். நிர்வாகத்திறமைகள்
உடையவராக இருப்பார். தங்களுடன் வேலைப்பார்ப்பவர்களை நம்புவார்கள், அதோடு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் கையில் எடுத்துச் செய்யும் எல்லாச் செயல்களுமே வெற்றி பெறும். பலனைத்தரும். இந்த இடம் 10ஆம் வீட்டிற்குப் பத்தாம் இடமாகும். அதனால் அவர்களுடைய
வெற்றி எல்லைகளைக் கடந்து நிற்கும். கடந்து செல்லும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8
Tenth lord in the 8th House

எட்டாம் வீட்டில் இருந்தால்:
இந்த வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு அவருடைய தொழிலில் அல்லது வேலையில் பல இடைஞ்சல்களும், இடமாற்றங்களும் உண்டாகும். திறமைசாலி களாக இருந்தாலும் பலரால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். தங்கள் வழியில்தான் செல்வார்கள். நீண்ட ஆயுளை உடையவராக இருப்பார்கள். பெருந்தன்மை உடையவர்களாகவும், உயர்ந்த கொள்கைகளை உடையவர்களாகவும் இருப்பார்கள். தங்களுடன் வேலை செய்பவர்களால் பாராட்டப் படுபவர்களாகவும், விரும்பப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இந்த 8ஆம் இடம் பத்தாம் வீட்டிற்குப் 11ஆம் இடம் ஆதலால், நல்ல லாபம் கிடைக்கும் தொழில் அல்லது நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைகள் அமையும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9
Tenth lord in the 9th House

ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:
துறவு மனப்பான்மை, ஏகாந்த உணர்வு கொண்டவராக ஜாதகர் இருப்பார். பரம்பரைத் தொழிலில் நாட்டம் உடையவராக இருப்பார். போதகர். ஆசிரியர் என்பதுபோன்றவேலைகளை விரும்பிச் செய்வார்.ஆன்மீக வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார். அதிர்ஷ்டமுடையவராகவும். வசதி உடையவராகவும் இருப்பார். இவர்களுக்கு இவர்களது தந்தையின் உதவியும் வழிகாட்டுதலும் நிறைந்திருக்கும். தர்மசிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். மனவள மேம்பாட்டுத்துறையில் (psychological counseling) நுழைந்தால் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்து மேன்மை பெறுவார்கள். தங்களுடைய திறமையால் பலரது போற்றுதலுக்கும் உரியவர்களாகத் திகழ்வார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10
Tenth lord in the Tenth House

பத்தம் வீட்டு அதிபதி 10ல் இருந்தால் தங்கள் தொழிலில் அல்லது வேலையில் பிரகாசிப்பார்கள். இந்த அமைப்பு கெட்டிக்காரத்தனத்தை, புத்திசாலித்தனத்தை வெளிபடுத்தும் அமைப்பாகும். தங்களுக்கு மேலாளர்களை மதிக்கும் மனப்பக்குவம் உடையவர்களாக இருப்பார்கள். அதனால் மதிப்பும் பெறுவார்கள்.மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அரசியல் தொடர்பும், அரசுத் தொடர்பும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த வீடு நல்ல கிரகங்களின் சேர்க்கை, பார்வைகளைப் பெற்றிருந்தால் செய்யும் தொழிலில் அதீத மேன்மை பெறுவார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
11
Tenth lord in the 11th House

பத்தாம் அதிபதி 11ல் இருந்தால், ஜாதகருக்குப் பணத்துடன், மதிப்பும், மரியாதையும் சேரும். மகிழ்வுடன் இருப்பார்கள். பெரு நோக்குடையவர்களாக இருப்பார்கள். பொதுத்தொடர்புகள் உடையவராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு உடையவர்களாக இருப்பார்கள். இதன் மூலமும் இவர்களுக்குப் பல தொடர்புகள் உண்டாகும். பலராலும் விரும்பப்படுவார்கள். இந்த வீடு பத்தாம் வீட்டிற்கு இரண்டாம் இடமாகும். இதனால், இவர்களுக்கு செல்வத்துடன், புகழும், மரியாதையும் சேர்ந்து கிடைக்கும். தொழில் மேன்மை
உடையவர்களாக இருப்பார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12.
Tenth lord in the 12th House

பத்தாம் அதிபதி 12ல் இருந்தால்.
வேலையில் அல்லது தொழிலில் பல பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். சிலர் வெளி நாட்டிற்குச் சென்று அங்கு பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும். வருமானவரி, விற்பனை வரி போன்ற செயல்பாடுகளில் முறையற்று நடந்தால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஆகவே அந்த விஷயங்களில் இந்த அமைப்பினர் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அரசியலிலோ அல்லது அரசியல்வாதிகளுடன் கூட்டணி சேர்ந்தால் பெரும் நஷ்டத்தை மட்டுமே சந்திக்க நேரிடும். எதிரிகள் பலர் ஏற்படக்கூடும்
அவற்றிற்கெல்லாம் அப்போதப்போதைக்குத் தீர்வுகளை இவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
.................................................................................

கீழே உள்ளது உபரித் தகவல்கள். வேறு ஒரு குறிப்பில் இருந்து சேர்த்துள்ளேன். இதையும் உங்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். சில மேலே உள்ளது போலவே இருக்கும். மறந்துவிட்டு எழுதியதாக நினைக்க வேண்டாம். வேறு ஒரு குறிப்பில் இருந்ததை அப்படியே கொடுத்துள்ளேன். இதில் உள்ள புதிய செய்திகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்

பத்தாம் வீட்டு அதிபதி அமரும் இடத்தை வைத்துப் பலன்கள்

1
பத்தாம் அதிபதி முதல் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் கடுமையான உழைப்பாளி. தன் உழைப்பால் முன்னேற்றம் அடையக்கூடியவர். சிலர் சொந்தத் தொழில் செய்பவ்ர்களாக இருப்பார்கள். பொருளாதாரச் சுதந்திரம் இருக்கும்( அதாங்க எப்போதும் கையில காசு இருக்கும்)

2
பத்தாம் அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் அதிர்ஷ்டமானவன். தேர்ந்த மற்றும் தேர்வு செய்த, தனக்குப் பிடித்த தொழிலைச் செய்து அபரிதமான செல்வத்தை அடைபவனாக இருப்பான். (எக்கச்செக்கமாக சம்பாரிக்கிற ஜாதகமுங்க!) சிலர் சிரமமின்றித் தங்கள்
குடும்பத்தொழிலையே செய்து, அபரிதமான பொருள் ஈட்டுவார்கள். சிலர் உணவு அல்லது உணவு சம்பந்தப்பட்ட துறைகளில் நுழைந்து பெரும் வெற்றி பெறுவார்கள் (அதாங்க ஹோட்டல் இண்டஸ்ட்ரி)

3
பத்தாம் அதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் சிறந்த பேச்சாளனாக இருப்பான். தன் வேலையின் காரணமாக அடிக்கடி பயணிப்பவனாக இருப்பான். அல்லது பயணம் சம்பந்தப்பட்ட துறையில் அவனுடைய வேலை அல்லது தொழில் அமையும். ஜாதகனுக்கு அவனுடைய வேலையில் அல்லது தொழிலில் அவனுடைய சகோதரர்களின் பங்களிப்பு/உதவி இருக்கும்.

4
பத்தாம் அதிபதி நான்காம் வீட்டில் இருந்தால்:
ஜாதகனுக்குப் பலதுறைகளிலும் மேம்பட்ட அறிவு இருக்கும். அதிர்ஷ்டகரமானவனாக இருப்பான். பல சாதனைகளைப் புரிவான். மற்றவர்களுக்கு உதவும் (சேவை) வேலைகளைச் செய்து புகழ் பெறுவான்.விவசாயம், தோட்டக்கலை, வாகனங்கள், அசையா சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வணிகம் ஆகியவற்றில் ஒன்றைச் செய்து
பெரும் பொருள் ஈட்டும் வாய்ப்புக் கிடைக்கும். சிலர் அரசியலில் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டுவார்கள்.

5
பத்தாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தால்:
பங்கு வணிகம் போன்ற திடீர் பணவரவு உள்ள துறைகளில் அல்லது நிதி சம்பந்தப்பட்ட துறைகளில் (பொருள் ஈட்டும் வாய்ப்பு உள்ள தொழில்களில்) ஜாதகன் ஈடுபடுவான். அதிர்ஷ்டமுள்ளவன். நல்ல வாழ்க்கை அமையும். பல நற்பண்புகளுக்கு உறைவிடமாகச் ஜாதகன் திகழ்வான்.

6.
பத்தாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் நீதித்துறை, சிறைச்சாலைகள், மருத்துவ மனைகள் ஆகிய ஒன்றில் பணி செய்ய நேரிடும். இந்த அமைப்பு அதாவது பத்தாம் வீட்டு அதிபதி ஆறில் வந்து அமர்வது - சொந்தத் தொழிலிற்கும், வணிகம் செய்வதற்கும் ஏற்றதல்ல. ஜாதகன் வேலைக்குச் செல்வது உத்தமம். அதில் அவன் வளர்ச்சியடைவான். உங்கள் மொழியில் சொன்னால் வெற்றி பெறுவான்


7
பத்தாம் அதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால்:
கூட்டுத் தொழில் செய்வதற்கு ஏற்ற ஜாதகம். ஜாதகனுக்குக் கூட்டுத் தொழிலால் வெற்றி கிட்டும். சிலருக்கு மனைவி மூலம் தொழில் செய்வதற்குப் பொருள்/பணம் கிடைக்கும் (அதாங்க மாமனார் வீட்டுப் பணம்) சிலருக்கு வெளி நாட்டில் நல்ல வேலை கிடைக்கும். அல்லது வெளி நாட்டுடன் ஏற்றுமதி வியாபாரம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். சிலருக்கு வெளி நாட்டுத் தூதுவராக அல்லது தூதரகங்களில் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைக்கும்

8
பத்தாம் அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் ஒரே வேலையில் இருக்க மாட்டான். பல இடங்களில், பல வேலைகளில் அமரும் அமைப்பு இது.இடம் விட்டு இடம் தாவிக் கொண்டிருக்க நேரிடும் (many breaks in the career) இந்த அமைப்பு வலுவான சனியின் பார்வை பெற்றால், ஜாதகன் கீழான வேலைகளைச் செய்ய நேரிடும் ( என்னென்ன கீழான வேலைகளை நீங்கள் யோசித்துப் புரிந்து கொள்ளுங்கள்) இதே அமைப்பு ராகு அல்லது கேதுவின் பார்வை பெற்றால் ஜாதகன், மனித சக்திக்கு அப்பாற்பட்ட வேலைகளில் (occult pursuits and spirituality) ஈடுபட்டிருப்பான்

9
பத்தாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:
இது ஆன்மீகம், அறச் செயல்கள் போன்ற செயல்களுக்கு உகந்த அமைப்பு. ஜாதகன் பலராலும் போற்றப்படும் மேன்மை பெற்றிருப்பான். அனைவராலும் அறியப்பட்டவனாக இருப்பான். ஜாதகன் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் காப்பவனாக இருப்பான். தன் தந்தைக்குக் கட்டுப்பட்டவனாக ஜாதகன் இருப்பான்.

10
பத்தாம் அதிபதி பத்திலேயே இருந்தால்:
பத்தாம் அதிபதி இங்கே வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு உயர்ந்த பதவிகளைப் பெற்றுத்தருவார். நல்ல தொழில் அல்லது வேலையைப் பெற்றுத்தருவார். அனைவராலும் மதிக்கப்படும் நிலைக்கு ஜாதகன் உயர்வான். எல்லா வளங்களையும் பெறுவான்.

11
பத்தாம் அதிபதி பதினொன்றில் இருந்தால்:
மிகவும் அருமையான அமைப்பு (An excellent placement) ஜாதகன் பெரிய தொழில் அதிபராக இருப்பான் /உயர்வான். பலருக்கும் வேலை கொடுக்கும் நிலையில் இருப்பான். தனக்குக் கீழே வேலை செய்பவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வான். நல்ல சமூகத் தொடர்புகளும் கிடைக்கும். அதிகாரத்தில் உள்ள பலரது நட்பு அவனுக்குக் கிடைக்கும்.

12
பத்தாம் அதிபதி பன்னிரெண்டில் இருந்தால்:
ஜாதகன் தூர தேசங்களில் அல்லது சொந்த ஊரைவிட்டுத் தொலைவான இடங்களில் வேலை செய்ய நேரிடும். அவனுடைய திறமைக்குத் தகுந்த ஊதியம் கிடைக்காது. சிலருக்கு, அவர்களால் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும்
===========================================================
இந்த வீட்டைப்பற்றி அடுத்தடுத்த பகுதிகள் உள்ளன. அவற்றையும் படித்துவிட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள்.

இப்போது சாதம் போட்டுப் பருப்பு, நெய் மட்டும்தான் ஊற்றி உள்ளேன். சாம்பார், வற்றக்குழம்பு, மோர்க்குழம்பு, தயிர், பாயாசம், வடை, அப்பளம் எல்லாம் இனி வரும். முழுச்சாப்பாடையும் சாப்பிடாமல், உங்களுக்குச் சொந்த ஜாதகத்திற்குத் தாவி குழம்பிக்கொள்ளாதீர்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தாம் வீடு - பகுதி 2

மனித வாழ்க்கையில் பல அவலங்கள். ஒரு குழந்தை தன் தாய் வயிற்றில் 280 நாட்கள் இருந்துவிட்டு வெளியே வருகிறது. பிறக்கும் முறையில் வித்தியாசம் இல்லை. பிறந்த உடனேயே - அந்தக் கணமே வித்தியாசம்
உருவாக ஆரம்பித்து விடுகிறது. அது செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்தால் எல்லாச் சீராட்டுக்களையும் பெறுகிறது. அன்றாடம் சோற்றுக்கு அல்லாடும் ஒரு ஏழை வீட்டில் பிறந்திருந்தால், தாய் அதை வெய்யிலில் தூக்கிக்
கொண்டு தான் வேலை செய்யும் இடங்களுக்குப் போகின்றாள். ஒரு மரத்தில் கட்டப்பட்டிருக்கும் தொட்டிலோ அல்லது ஒரு வீட்டின் உத்திரத்தில் கட்டப்பட்டிருக்கும் தொட்டிலிலோ அதைக் கிடத்திவிட்டுத் தன் வேலையைக் கவனிக்கிறாள். அவள் தன் வயிற்றுப்பாட்டையும் பார்க்க வேண்டும் தன்னுடைய குழந்தையின் பசியையும் போக்க வேண்டும்.

குழந்தைகள் வளரும் சூழ்நிலையிலும் பல அவதிகளைச் சந்திக்கின்றன. சில கிராமங்களில் ஆரம்பப் பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிடையாது. தினமும் மூன்று அல்லது ஐந்து கிலோ மீட்டர் தூரம் அந்தப் பிஞ்சுக்கால்கள் நடந்து சென்று படிக்க வேண்டும்.

"ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று முண்டாசுக் கவிஞன் சொல்லி விட்டுப்போய் விட்டான். நாட்டில் ஜாதிகள் எல்லா நிலைகளிலும் பேயாட்டம் போடுகிறது. எந்தப் பள்ளிக்கூடத்திலாவது ஜாதியைக் கேட்காமல் இடம் கொடுக்கிறார்களா சொல்லுங்கள்? அங்கேயே ஜாதி அக்குழந்தையின் தோளின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு விடுகிறது.

வெள்ளைக்காரன் செய்த சதியால் மதத்தின் பெயரால் நாட்டைத் துண்டு போட்டுக் கொடுக்க நேர்ந்தது. துண்டு போட்டுக்கொண்டு சென்ற நாட்டை விட, துண்டு போடக்காரணமாக இருந்த அந்த மதத்தினரின் எண்ணிக்கை,
இப்போது அந்த நாட்டில் இருப்பவர்களைவிட இங்கே அதிகம். பிறகு ஒரு பெரியவர், மொழியின் பெயரால் நாட்டைப் பல மாநிலங்களாகப் பிரித்துக் கொடுக்கும் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்துப் பிரித்துக் கொடுத்தார்.
பூகோள அடிப்படையில் பிரித்திருந்தால் பல அவதிகள் இன்று இருக்காது. உதாரணம் காவிரி கன்னடர்களுக்கு மட்டும் என்ற நிலைப்பாடு. பிறகு பல பெரியவர்கள் சேர்ந்து பொருளாதார அடிப்படையில், கல்வி வேலை
வாய்ப்புக்களை உருவாக்காமல் ஜாதிகளின்/ இனங்களின் அடிப்படையில் கல்வி வேலை வாய்ப்புக்களில் சீர் திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள்.

பிறகு 1970ற்குப் பிறகு அரசியல் கட்சிகள் ஜாதி அடிப்படையில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிகமாக உள்ள ஜாதிக்காரகளின் பிரதிநிதிகளை நிற்க வைத்து வெற்றி காணும் யுக்தியைக் கண்டு பிடித்தன. அரசியலில் ஜாதி
வேரூன்றி நிற்க ஆரம்பித்தது. பிறகு பத்தாண்டுகள் கழிந்து ஜாதிக் கட்சிகள் இனக் கட்சிகள் உருவாகின. இப்போது எல்லா மட்டத்திலும், ஜாதிகள், இனங்கள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை. அது என் வேலையும் அல்ல. பொதுவாக உள்ள அவலங்களைத் தான் குறிப்பிடுகிறேன்.

இன்று சமுதாயத்தில், முற்பட்டவர்கள், பிற்பட்டவர்கள், அதிகம் பிற்பட்டவர்கள், பழங்குடியினர், ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குபவர்கள் என்று பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒதுக்கீடுகள் போதாது என்கிறார்கள். எல்லா நிலையிலும் ஒதுக்கீடுகள் வேண்டும் என்கிறார்கள். எவ்வளவு வேண்டும் என்று தெரியவில்லை? எத்தனை காலத்திற்கு என்று தெரிய வில்லை? எப்படிக் கொடுப்பது என்று தெரியவில்லை? எப்படிக் கொடுத்தால் அனைவரும் திருப்தியடைவார்கள், மகிழ்ச்சி கொள்வார்கள் என்பதும் தெரியவில்லை!

கல்வியில் ஒதுக்கீடு, மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்விகளில் ஒதுக்கீடு, வேலைகளில் ஒதுக்கீடு, வேலை உயர்வுகளில் ஒதுக்கீடு என்று எங்கே பார்த்தாலும் கூச்சல் குழப்பம்.

தினமும் இதை வைத்து பத்திரிக்கைகளில் எழுதுபவர்களும், மேடைகளில் பேசுபவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றார்கள். பிரச்சினைகளும் தீர்ந்த பாடாக இல்லை. வேண்டுகோள்களும் குறைந்த
பாடாக இல்லை.

ஏன் இதை வைத்துத் தினமும் இரண்டு பதிவுகள் போடும் பதிவர்களும் இருக்கிறார்கள்.

எல்லோரும் நன்றாக இருக்கட்டும். எல்லோருடைய கோரிக்கைகளும், எண்ணங்களும் நிறைவேறட்டும். என்னுடைய விருப்பமும் அதுதான்.

நான் சொல்லவந்தது அதுவல்ல!

ஜோதிடத்தில் அந்தப் பிரச்சினையே கிடையாது. இங்கே எந்தப் பிரிவினைகளும், உயர்வு தாழ்வும் இல்லை. 100/100 அனைவரும் சமம். எப்படியென்றால் எல்லோருக்கும் மொத்த மதிப்பெண்கள் 337 தான். யாராக
இருந்தாலும் இங்கே சமம்.

ஒடுக்கப்பட்டவர்களும், ஒடுக்குபவர்களும் இல்லாத உலகம் ஜோதிட உலகம்தான்!

இந்த ஒரு காரணத்திற்காகத்தான் எனக்கு ஜோதிடத்தை மிகவும் பிடித்துப்போய் ஜோதிடத்தைக் கற்க ஆரம்பித்தேன்.

இந்த மதிப்பெண் எப்படி உண்டாகிறது என்பதை முன் பதிவுகளில் எழுதியுள்ளேன்.

டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கும் 337 பரல்கள்தான். அவருடைய மெய்க்காப்பாளருக்கும் 337 பரல்கள்தான்
முகேஷ் அம்பானிக்கும் 337 பரல்கள்தான். அவருடைய வாகன ஓட்டுனருக்கும் 337 பரல்கள்தான்
இயக்குனர் மணி ரத்தினத்திற்கும் 337 பரல்கள்தான். அவருடைய உதவியாளருக்கும் 337 பரல்கள்தான்
இசைஞானி இளையராஜாவிற்கும் 337 பரல்கள்தான். அவருடைய குழுவில் தபேலா வாசிப்பவருக்கும் 337 பரல்கள்தான்

இப்படி யாரை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் எவருக்கும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது.துல்லியமாக 337 மட்டுமே இருக்கும்.

ஒருவருக்கு ஒன்று இருந்தால், ஒன்று இருக்காது. மொத்த பாக்கியங்கள் 36ல் 18தான் ஒருவருக்கு இருக்கும், 18 இருக்காது. எந்த பதினெட்டு என்பதில் எல்லாம் அடங்கி விடுகிறது. (உ.ம்:Those who are having wealth will not
have health.)

பிறகு உலகில் உள்ள 700 கோடி மக்களுக்கும் ஜாதகம் எப்படி வேறு படுகிறது? ஜோதிடத்தின் பிரம்மாண்டம் என்று அதையும் முன் பதிவுகளில் எழுதியுள்ளேன்.

இதையெல்லாம் கடவுளா போட்டு அனுப்புகிறார்? இல்லை!

கருணை மிக்கவர் கடவுள். அவருக்கு எல்லா ஜீவராசிகளும் ஒன்றுதான் அவருடைய வேலையல்ல இது !

நாம் முற்பிறவிகளில் செய்த நல் வினைகள் தீவினைகளுக்கேற்பத் தானியங்கி முறையில் நமது அடுத்த பிறவி தீர்மானிக்கப்பட்டு நாம் பிறக்கிறோம்.

முன் ஜென்மத்தில் அடுதவன் பணத்தில் உண்டு கொழுத்துத் தூங்கி வாழ்க்கையைக் கழித்தவன் அடுத்த பிறவியில் தினமும் 12மணி நேரம் உடலால் உழைத்து வாழ்க்கையை நடத்தும்படி ஆகி விடுகிறது.

முன் ஜென்மத்தில் பொதுப் பணத்திலும் கோவில் சொத்துக்களிலும் குடும்பம் நடத்தியவன், அடுத்த பிறவியில் கோவில் வாசலில் தட்டோடு உட்காரும்படி ஆகி விடுகிறது.

முன் பிறவியில் வயதான பெற்றோர்களைத் தவிக்க விட்டவன், இந்தப் பிறவியில் பெற்றோர்கள் இன்றி அனாதையாகத் திரிய நேரிடுகிறது.

இப்படி பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

ஒவ்வொரு பிறவிக்கும், அவன் ஜீவனம் செய்வதற்காகப் பிழைப்பதற்கும் ஒரு பலமான அர்த்தம் இருக்கும். அதை உணர்பவர்களுக்கு மட்டுமே அது புரியும்.

புரிந்தவர்களுக்குப் புரியட்டும், பரியாமல் விதண்டாவாதம் செய்பவர்களுக்குப் புரியாமலேயே போகட்டும்.

இந்தக் கர்ம தர்ம நியதிகளைத் தீவிரமாக படிக்க விரும்புபவர்கள். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ள 'அர்த்தமுள்ள இந்து மதம்' நூலின் பத்துப் பாகங்களையும் படிக்குமாறு வேண்டுகிறேன்.
.....................................................................
இதே விதிமுறைகள்தான் பத்தாம் வீட்டிற்கும். பத்தாம் வீடு மிகவும் நன்றாக அமைந்திருந்தால் நல்ல வேலையில் சேர்ந்து அபரிதமாகப் பொருள் ஈட்டுவீர்கள் அதே நேரத்தில் ஜாதகத்தில் வேறு ஏதாவது வீட்டில் குறை இருக்கும்.

ஜாதகத்தில் பத்தாம் வீடு நன்றாக இல்லாமல் இருந்து ஜீவனத்திற்குப் போராட்டமாக இருந்தால் வேறு ஒரு வீட்டில் அது நிறை செய்யப்பட்டிருக்கும்

எல்லாம் அந்த 18/36 அளவில், 337 பரல்களின் எண்ணிக்கைக் கணக்கில் அடங்கிவிடும்.

ஆகவே யாரும் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். எல்லோர் ஜாதகமும் ஒருவிதத்தில் நன்றாகவே இருக்கும். உட்கார்ந்து அலசிப்பார்த்தால் அது தெரியும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊட்டியில் விளையும் உருளைக்கிழங்கை சென்னையில் பயிராக்கிப் பயன்பெற முடியாது. காஷ்மீரில் விளையும் ஆப்பிள் சேலத்தில் விளையாது. அதற்கு அடிப்படையான காரணம் அதனதன் மண் வளமும், சீதோஷண நிலையும்

அதுபோல ஒரு ஜாதகம் சிறப்பாக இருந்து ஜாதகருக்கு நல்ல பலன்களைத் தர, முக்கியமான மூன்று அடிப்படை விஷயங்கள் உள்ளன.

1
முதலில் ஜாதகரின் லக்கினாதிபதி நன்றாக இருக்க வேண்டு. அவர் தனது சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால் மட்டுமே நன்றாக இருக்கிறார் என்று பொருள். That position will give the
native a good standing power in any situation.

2.
பெர்சனலிட்டி எனப்படும் ஜாதகரின் தோற்றம் மற்றும் உடல் வலிமை, அத்துடன் மனவலிமை ஆகியவைகள் முக்கியமாகும். அவற்றைத்தருபவை முறையே சூரியனும், சந்திரனும் ஆகும். அவைகளும் ஜாதகத்தில் வலுவாக
இருக்க வேண்டும். அதாவது சூரியனும், சந்திரனும் ஜாதகத்தில் தங்களது சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால் மட்டுமே நன்றாக இருக்கிறார்கள் என்று பொருள்

இம்மூன்றும் இல்லாவிட்டால், பத்தாம் வீடும், பத்தாம் வீட்டின் அதிபதியும் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் ஜாதகர் அதன் பலனை முழுமையாகப் பெற முடியாது. அதை அனைவரும் மனதில் கொள்ளவும். அதை வலியுறுத்திக் கூறத்தான் மேலே உருளைக்கிழங்கை உதாரணப் படுத்திக் கூறியுள்ளேன்

ஒருவர் தான் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் சிறக்க அம்மூன்றும்தான் அடிப்படை அம்சங்கள்.

புரிகின்றதா கண்மணிகளே?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Careers by sign
ராசிகளை வைத்து அமையும் வேலைகள் (பொதுப் பலன்) அதாவது கீழ்க்கண்ட ராசிகள் உங்கள் பத்தாம் இடமாக இருக்குமென்றால் அதற்குரிய பொதுப்பலன்கள்

1. மேஷம் (Aries)
ராணுவம், காவல்துறை, அறுவை சிகிச்சை நிபுனர், மெக்கானிக், உருக்கு மற்றும் இரும்புத் தொழில், தீயணைக்கும்படை அல்லது தீயனைப்புக் கருவிகள் சம்பந்தமான தொழில், தொழிற்சாலை
அதிபர்கள், விளைளயாட்டுத்துறை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.ரிஷபம்:
ஏர்கண்டிஷனர் போன்ற சொகுசு சாதனங்கள் (luxury goods) நகைகள், சோப்பு, முகப்பவுடர், சென்ட் போன்ற 'காஸ்மெடிக்' பொருட்கள். நடிப்பு, இசை, தையற்கலைஞர்கள். ஆயத்த ஆடைகள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.மிதுனம்:
ஊடகங்கள் (செய்தி நிறுவனங்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, வானொலி) நிறுவனப் பிரதிநிதிகள். எழுத்தாளர்கள். கணக்கர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.கடகம்:
கடல் வணிகம். மீன் வியாபாரம், செவிலியர்கள், உணவு. உள் அலங்கார வேலைகள். பெட்ரோலியம் சார்ந்த துறைகள். சரித்திர ஆய்வாளர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.சிம்மம்:
அரசுப் பணிகள். அரசியல், மத அமைப்புக்கள். தூதரங்கள், முதலீட்டு வேலைகள் (investing)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.கன்னி:
மருத்துவர்கள், கணக்காளர்கள், கணக்கு ஆய்வாளர்கள், ஜோதிடம், கணினி சம்பந்தப்பட்ட துறைகள், ஊடகங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.துலாம்:
நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், கலைஞர்கள்,விளம்பரத்துறை, அலங்காரப்பொருட்கள்,ஆடை, அணிகலன்கள், வரவேற்பாளர்கள் உள் அலங்கார வேலைகள் (interior decorators)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
8.விருச்சிகம்:
இரசாயனப் பொருட்கள், மருந்துகள், திரவப் பொருட்கள், காப்பீட்டுத் தொழில் (insurance) மருத்துவர்கள், செவிலியர்கள் காவலர்கள்,
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
9.தனுசு:
சட்டம், நீதி, மதங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய தொழில்கள் துணிமணிகள், காலணிகள், விளையாட்டுத்துறை, விளையாட்டு வீரர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
10.மகரம்:
சுரங்கம், கனிமங்கள் உற்பத்தி, பதனிடுதல் போன்றவைகள் மூலப் பொருட்கள் உற்பத்தி, மூலப் பொருட்கள் விற்பனை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
11.கும்பம்:
தத்துவஞானிகள், ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள், ஜோதிடர்கள்,பொறியாளர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
12.மீனம்
மருத்துவர்கள், கடல் சார்ந்த தொழில்கள் அல்லது வேலைகள், இரசாயனங்கள், எண்ணெய், ஓவியர்கள், மருத்துவமனைகள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வீடுகளை வைத்து வேலைகள்:
Careers by house (if the 10th lord is placed in the following houses)
1
First:
self-employment, politics or the public at large, work concered with the body (example. health club)

2.
Second:
banking, investments, accountants, restaurants, teaching, consultants, psychologists,

3
Third:
communication, arts, sales, advertising, computing, writing, publishing

4.
Fourth:
agriculture, building trades, real estate, vehicles, water, geology and mining

5.
Fifth:
politics, stockbrokers, religious rituals, entertainment, authorship

6
Sixth:
lawyers, military, police, labour, health related professions, food, waiters.

7.
Seventh:
business, trade, merchant, foreign business.

8.
Eighth:
insurance, research, death-related, metaphysics (e.g. astrology), sex industry.

9.
Ninth:
law, university teaching, travel, religious professions, work in foreign countries.

10
Tenth:
government jobs, dealing with public and the masses, managers, politics.

11
Eleventh:
trade and business, accountants, financial institutions, group work. sports

12
Twelfth:
foreign, jobs requiring secrecy, travels, hospitals, prisons, charities, advocacy.
+++++++++++++++++++++++++++++++++++++++++++

Careers by planet (10th Lord)
பத்தாம் இட அதிபதியை வைத்துப் பலன்கள் (எல்லாம் பொதுப் பலன்கள்)
1. Sun:
authority, politicians, scientists, leaders, directors, government employees, doctors, jewelers

2. Moon
nursing, the public, traveling, marine, cooks, restaurants, import/export.

3. Mars
fire, energy, metals, initiative, weapons, construction, soldiers, police, surgeons, engineers.

4. Mercury
intellect, writing, teaching, merchandise, clerks, accountants, editors, transport, astrologers.

5. Jupiter
finance, law, treasury, scholars, priests, politicians, advertising, psychologist, humanitarian.

6. Venus
pleasures, luxuries, beauty, art, music, entertainment industry, sex industry, hotels.

7. Saturn t
real estate, labour, agriculture, building trades, mining, monk.

8. Rahu
researchers, engineers, physicians, medicine/drugs, speculators, aviation, electricity, waste.

9. Ketu
idealism, enlightenment, religion, secret affairs, poisons, metaphysics.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Various planets in the 10th house produce the following results in regard to occupation
பத்தாம் வீட்டில் வந்து அமரும் கிரகங்களை வைத்துப் பலன்கள்
Result by planets placed in the 10th house
1.
பத்தாம் வீட்டில் சூரியன் இருந்தால்:
அரசாங்க வேலை
அரசில் உயர் அந்தஸ்தில் வேலை/ ஆட்சியாளர்கள்/ அமைச்சர்கள் நவரத்தினங்கள் விற்பனையாளர்,மர வியாபாரம், சுரங்கங்களில் வேலை

2.
பத்தாம் வீட்டில் சந்திரன் இருந்தால்: கப்பல்கள், துறைமுகங்களில் வேலை. கடற் பொருட்கள் விற்பனையாளர்கள்
மீன் வளர்ப்பு, மீன் வியாபாரம் நீர் வழி, கடல் வழி, போக்குவரத்து மருத்துவமனைகளில் வேலை, குறிப்பாக நர்ஸ் வேலை

3.
பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
ராணுவம், காவல்துறை, தனியார் பாதுகாப்புத்துறைகளில் வேலை விளையாட்டு வீரர்கள். அறுவை சிகிச்சை நிபுணர்கள். வெடி மருந்துகள், தீப்பெட்டி, பட்டாசு உற்பத்தி, உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் வேலை கசாப்புக் கடை, மாமிச உணவு உற்பத்தி செய்து பதப்படுத்தும் தொழில்
அமிலங்கள், ரசாயனங்கள் உற்பத்தி செய்யும் தொழில் அல்லது தொழிற்சாலைகளில் வேலை

4
பத்தாம் வீட்டில் புதன் இருந்தால்:
வங்கிகளில் வேலை, நிதித்துறைகளில் வேலை. கணக்கப்பிளைகள், கணக்காய்வாளர்கள், காசாளர்கள்
(Accountants, auditors, cashiers) அலுவலங்களில் குமாஸ்தாக்கள், தட்டச்சுபவர்கள் (clerks, typist)
கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஜோதிட வல்லுனர்கள், வானவியல் வல்லுனர்கள். பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள். அச்சுத்தொழில் (Printing Press) நிதி நிறுவனங்கள், சீட்டு நிறுவனங்கள் (Chit Funds) கான்ட்ராக்டர்ஸ், சூப்பர்வைசர்கள், தபால், தந்தி, தொலைத்தொடர்புத் துறைகளில் வேலை கணினி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜித் துறைகளில் வேலை

5
பத்தாம் வீட்டில் குரு இருந்தால்:
சிந்தனையாளர்கள், தத்துவஞானிகள், விஞ்ஞானத்தில் தேர்சி பெற்றவர்கள், மதக்குருக்கள், துறவிகள், பாதிரியார்கள், பயிற்சியாளர்கள், வலிமையுள்ள அமைச்சர்கள். அல்லது இவை சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள்

6
பத்தாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால்:
ஒப்பனைப் பொருட்கள், ஆபரங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் அல்லது அது சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்பவர்கள். நாடக, திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மேடைப் பேச்சாளர்கள்,
உணவகங்கள் (hotels food business) Bars & restaurents cold storage and ice factory owners.Models பேக்கரித் தொழில்கள் வாகனங்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் பராமரிப்புத் தொழில்கள் (dealers of automobiles and vehicles)

7
பத்தாம் வீட்டில் சனி இருந்தால்:
எண்ணெய் வியாபாரிகள், க்ரூட் ஆயில் வியாபாரிகள் (பெட்ரோலியப் பொருட்கள்), ஒயின் மற்றும் ஆல்கஹால் சம்பந்தப்பட்ட பொருட்கள், ஸ்பிரிட்ஸ், காலணி வியாபாரிகள், கட்டுமானப் பொருட்களான, இரும்பு, மரங்கள், ஜல்லிக் கற்கள் விற்பனையாளர்கள், மருந்து, மூலிகைகள் வியாபாரம், வேலைவாய்ப்பு அமைப்புக்கள், கூலி வேலைக்காரர்கள், தேயிலைத் தோட்டங்களில் வேலை - இவை சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை.
அல்லது அவற்றை நடத்தும் அமைப்பிலான வேலைகள்

8.
பத்தாம் வீட்டில் ராகு இருந்தால்:
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், விண்வெளிப் பயணிகள், மந்திரதந்திர நிபுணர்கள், மனவசியக் கலைஞர்கள், மது விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், அல்லது அத்துறையில் வேலை செய்பவர்கள். சர்க்கஸ் கலைஞர்கள், கம்பியில்லாத் தொலைத் தொடர்பு வேலைகளில் உள்ளவர்கள்.

9
பத்தாம் வீட்டில் கேது இருந்தால்:
வெளிநாட்டு வர்த்தகம், மனோதத்துவ நிபுனர்கள், மனோதத்துவத் துறைகளில் மருத்துவர்கள், கைரேகைக் கலை நிபுனர்கள், மனித சக்திக்கு அப்பாற்பட்ட துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் (Occult science or hidden wisdom)

இவற்றைத் தவிர, ஜாதகத்தில் 10ஆம் வீட்டுடன் தொடர்புள்ள மற்ற கிரக நிலைகளையும் அலசி ஒரு முடிவிற்கு வரவேண்டும். வெவ்வேறான கிரகங்கள், வெவ்வேறான ராசிகளில் வித்தியாசமான பலன்களை (தொழில்களை) ஜாதகனுக்குக் கொடுக்கும். உதாரணத்திற்கு, கன்னி ராசி பத்தாம் வீடாக இருந்து அங்கே புதனும், சுக்கிரனும் இணந்திருந்தால், அது ஜாதகனுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும். அதாவது வேலையில் அல்லது தொழிலில்
அபூர்வ யோகத்தைக் கொடுக்கும். ஜாதகன் மிக உயர்ந்த நிலைக்கு வருவான். ஆகவே ஓரிரண்டு விதிகளை மட்டும் வைத்து எந்த முடிவிற்கும் வர வேண்டாம். அதை மனதில் வையுங்கள்
------------------------------------------------------------------
இந்தப் பாடத்தை இரண்டாகப் பிரித்துள்ளேன். முதல் பகுதி இது. அடுத்த தொடர்ந்து உள்ளது. பொறுமையாக அதையும் படித்த பிறகு முடிவிற்கு வாருங்கள்
-----------------------------------------------------------------
பத்தாம் வீடு - பகுதி 2

எல்லாம் பொதுப்பலன்கள். அவரவர்கள் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைமைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

எங்கள் பகுதியில் - அதாவது காரைக்குடிப் பகுதியில் ஒரு சொல் உண்டு; ஆனால் அதற்கு இரண்டு பொருள் உண்டு. அந்தப் பகுதி மக்கள் - அந்தப்பகுதியில் உள்ள 4 நகரங்கள், மற்றும் 72 கிராம மக்கள் - பேசும் போது
அந்த சொல்லை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.

ஒருவனைத் திட்டுவதற்கும் அந்தச் சொல்தான். அதேபோல் ஒரு குழந்தையை அல்லது இளைஞனைக் கொஞ்சு மொழியில் விளிப்பதற்கும் அந்தச் சொல்தான்.

’பட்டுக்கிடப்பான்' என்பதுதான் அந்தச்சொல். எங்கள் பகுதியைச் சேர்ந்தவரான நடிகை மனோரமா அவர்கள் அந்தச் சொல்லை லாவகமாக - அனாசயமாகப் பயன்படுத்துவார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் தன் கணவனாக நடிக்கும் நாகலிங்கம் என்பவரைக் குறிப்பிடும் போது - "ஆமா, அந்தப் பட்டுக்கிடப்பான் தான்" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாகக் கூறுவார்.

பட்டுக்கிடப்பான் - என்ற சொல் அடிபட்டுக் கிடப்பவன் அல்லது கிடக்க வேண்டியவன், நோய்பட்டுக் கிடப்பவன் அல்லது கிடக்க வேண்டியவன் என்ற பொருளைக் கொடுக்கும்

அதே வார்த்தையை வீட்டில் உள்ள பெரிசுகள் தங்கள் பேரனைத் தூக்கிக் கொஞ்சும் போதும் சொல்லிக் கொஞ்சுவார்கள். அதேபோல இளவயதுக் காளையாகத் திரியும் தங்கள் பேரனைக் கூப்பிடுவதற்கும் அந்தச் சொல்லைத் தான் பயன் படுத்துவார்கள்,"அட பட்டுக் கெடப்பா(ய்) - இங்கின வந்து கேட்டுப் போடா" என்பார்கள்

இங்கே அந்தச் சொல்லிற்குப் பெயர். பட்டில் கிடப்பவன் - பட்டுத் துணியில் கிடப்பவன் அல்லது பட்டுத்துணியில் கிடந்து வளர்ந்தவன் என்று பொருள்படும்.
---------------------------------------------------------------------
இதை எதற்காகச் சொன்னேன் என்றால், ஜோதிடத்திலும் இந்த இரட்டைப் பொருள் உள்ள வேலைகளைச் சில கிரகங்கள் செய்யும்!

உதாரணத்திற்கு சனி தீய கிரகம். ஆனால் அதே சனி பத்தாம் வீட்டிற்குக் காரகன். அவன் கையெழுத்துப் போட்டால்தான் பத்தாம் வீட்டின் சட்ட திட்டங்கள் பாஸாகும். ஆகவே பத்தாம் வீட்டைப் பொறுத்தவரை அவன் நல்லவன். பட்டில் கிடக்கும் "பட்டுக்கிடப்பான்' அவன்! இதை மனதில் வையுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகங்களை வைத்துப் பொதுப்பலன்!

1.சூரியன்
இங்கே சூரியன் தனியாக நல்ல நிலையில் இருந்தால் - உதாரணம் கடகம் ஒருவருக்கு லக்கினமாக இருந்து, பத்தாம் வீடாகிய மேஷத்தில் சூரியன் இருந்தால், அவர் அங்கே உச்சம் பெற்றிருப்பார். அதே போல பத்தில்
இருக்கும் சூரியன், குருவின் பார்வை பெற்றிருப்பதும் நல்ல நிலைமைதான். இந்த அமைப்பால் ஜாதகருக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும். ஜாதகருக்கு அவர் தொட்டதெல்லாம் துலங்கும். தெலுங்குக்காரர்கள் சொல்வதுபோல மட்டி (மண்) கூட பங்காரம் (தங்கம்) ஆகிவிடும். எடுத்துச் செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றி பெரும். செழிப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். அது பத்தாம் இடத்தின் அதிபதி மற்றும் சூரியனுடைய தசா அல்லது புத்திகளில் அபரிதமாகக் கிடைக்கும்.

நுண்ணறிவு, பணம், பதவி, அதிகாரம், புகழ், செல்வக்கு என்று எல்லாம் கிடைக்கும். சொந்த வீடு, வாகனம், வேலையாட்கள் என்று ஜாதகன் செளகரியமாக வாழ்வான்.

அரசாங்க உத்தியோகம் அல்லது பதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். இசை ரசிகராக ஜாதகர் இருப்பார்.

மற்றவர்களை ஈர்க்கக்கூடிய சக்தி உடையவராக இருப்பார். (இவ்வளவு இருக்கும்போது ஈர்க்கமுடியாதா என்ன?)

பத்தில் சூரியனுடன், செவ்வாய் சேர்ந்திருந்தால், ஜாதகர் குடி மற்றும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிவிடும் அபாயம் உண்டு!

பத்தில் சூரியனுடன், புதன் சேர்ந்தால், ஜாதகருக்கு விஞ்ஞானத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். பிரபல விஞ்ஞானியாக உருவெடுப்பார். அதே நேரத்தில் பெண் பித்து (மயக்கம்) ஏற்படும் அபாயமும் உண்டு.

பத்தில் சூரியனுடன், சுக்கிரன் சேர்ந்தால், ஜாதகருடைய மனைவி, பெரும் செல்வந்தர் வீட்டுப்பெண்ணாக இருப்பாள். அவள் மூலம் அவருக்குப் பெரும் சொத்துக்கள் கிடைக்கும்.

பத்தாம் வீட்டில் சூரியனுடன், சனி சேர்ந்திருந்தால், அது நல்லதல்ல. ஜாதகருக்குப் பலவிதமான துன்பங்கள் ஏற்படும். இறுதியில் வாழ்க்கை வெறுத்துப்போகும் நிலைமைக்கு ஆளாகி விடுவார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.சந்திரன்
பத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகர் இறைவழிபாட்டில், ஆன்மிகத்தில் மிகவும் நாட்டம் கொள்வார். புத்திசாலியாக இருப்பார். துணிச்சல் மிக்கவராக இருப்பார். செய்யும் செயல்களில் வெற்றி காண்பராக இருப்பார்.உதவி செய்யும் மனப்பான்மையும், தர்ம சிந்தனையும் மேலோங்கியவராக இருப்பார். பல கலைகளில் தேர்ந்தவராக இருப்பார். மொத்தத்தில் சகலகலா வல்லவராக இருப்பார்.

இதே பத்தில் சந்திரனுடன், சூரியனும், குருவும் சேர்ந்திருந்தால், ஜாதகர் வேதாந்தங்களிலும், ஜோதிடத்திலும் விற்பன்னராக இருப்பார்.

பத்தில் சந்திரன் இருந்து, அவர் சூரியனுடைய பார்வையையும், சனியினுடைய பார்வையையும் பெற்றிருந்தால், ஜாதகர் மாறுபட்ட சிந்தனை உடையவராக இருப்பார். அச்சுத்தொழில் அல்லது பதிப்பகத் தொழில் துவங்கிப் பெரும்பொருள் ஈட்டுவார். அவருக்கு அனேக நண்பர்கள் இருப்பார்கள்.வாழ்க்கை வசதியானதாக
இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். பல அறக்கட்டளைகளைத் தலைமை தாங்கி நடத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.செவ்வாய்
பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால், ஜாதகருக்கு ஆளும் திறமை இருக்கும். பெரிய பதவிகள் கிடைக்கும். இதே செவ்வாய், சனி அல்லது ராகுவுடன் கூட்டணி போட்டிருந்தால் கடுமையான ஆட்சியாளராக இருப்பார். துணிச்சலாக ஆட்சி நடத்தும் திறமை இருக்கும். பாராட்டுகளுக்கு மயங்குபவராக இருப்பார். எதிலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று வேகம் உடையவர்களாக இருப்பார்

பத்தில் செவ்வாயுடன், புதனும் சேர்ந்தால், நிறைய செல்வங்கள் சேரும். சொத்துக்கள் குவியும். சிலர் மதிப்புமிக்க விஞ்ஞானியாக உருவெடுப்பார்கள்.சிலர் கணிதத்தில் பண்டிதராக விளங்குவார்கள். பத்தில் செவ்வாயுடன் குரு சேர்ந்திருந்தால் பல ஏழை மக்களின் துயர் தீர்க்கும் தலைவனாக ஜாதகன் விளங்குவான். அதே பத்தில் செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்திருந்தால் ஜாதகன் தூரதேசங்களுக்குச் சென்று வணிகம் செய்து பொருள் ஈட்டுவான். பத்தில் செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் ஜாதகன் அதிரடியாக வேலைகளைச் செய்யும் திறமை பெற்றிருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4 புதன்
ஜாதகன் நேர்மையனவனாகவும், மகிழ்ச்சியுடையவனாகவும் இருப்பான். எல்லாக் கலைகளிலும் வித்தகனாக இருப்பான். அதோடு அறிவுத்தேடலில் ஈடுபாடு கொண்டிருப்பான்.புகழ் பெற்று விளங்குவான். எடுத்த காரியங்களில் வெற்றி காண்பவனாக இருப்பான். கணிதத்திலும், வானவியலிலும் தேர்ச்சியுற்றவனாக இருப்பான். அதே இடத்தில் புதனுடன் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் ஜாதகன் அழகான மனைவியையும், செல்வத்தையும் பெற்றவனாக இருப்பான். அதே இடத்தில் புதனுடன், குரு சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் குழந்தைப்பேறு இருக்காது. வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இருக்காது, ஆனால் அரசு வட்டாரங்களில் மிகுந்த தொடர்பு உடையவனாக இருப்பான். இந்தப் பத்தாம் இடத்தில் புதனுடன் சனி சேர்ந்திருந்தால் ஜாதகன் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அச்சுத்தொழில் அல்லது ப்ரூஃப் ரீடர் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5. குரு
ஜாதகன் அரசாங்கத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரியாக விளங்குவான். செலவந்தானாக, தர்ம சிந்தனை உடையவனாக, இறை நம்பிக்கையாளனாக, மத விஷயங்களில் ஈடுபாடு உடையவனாக, புத்திசாலித்தனம் மிக்கவனாக, மகிழ்ச்சி உடையவனாக ஜாதகன் விளங்குவான். உயர்ந்த கொள்கைகள் அவனுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும். குருவுடன் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் அரசில் முக்கியமான பொறுப்பில் இருப்பான்.
குருவுடன் ராகு சேர்ந்திருந்தால் ஆசாமி குசும்பானவன். மற்றவர்களுக்குத் தொல்லைகளைக் கொடுப்பவனாக இருப்பான். ஒவ்வொரு செயலிலும் தொல்லையாக இருப்பான். பத்தில் இருக்கும் குருவை செவ்வாய் பார்த்தால், கல்விக் கேந்திரங்களுக்கும் ஆராய்ச்சிக்கூடங்களுக்கும் தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பில் இருப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.சுக்கிரன்
ஜாதகன் இடம், வீடுகளை வாங்கி, கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவான். செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பான். நிறையப் பெண்களுக்கு வேலை கொடுப்பான். அல்லது நிறைய பெண்கள் வேலை செய்யும் இடங்களில் வேலை பார்ப்பன். நட்புடையவனாக, பலராலும் அறியப்பட்டவனாக இருப்பான். யதார்த்தவாதியாக இருப்பான்.

இங்கே சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் உடல் வனப்புப் பொருட்களை உற்பத்தி செய்பவனாக அல்லது விற்பவனாக இருப்பான். பெண்களுக்கான அலங்காரப் பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபடுவான். யாரையும் வசப்படுத்தக்கூடிய சக்தி இருக்கும். தனது திறமையால் வியாபாரத்தில் சிறந்து விளங்குவான். சுக்கிரனும், சனியும் சேரும் இந்த அமைப்பினால் ஜாதகனுடைய கல்வி தடைப்படும். தெய்வ சிந்தனை மிக்கவனாகவும், தெய்வ வழிபாடு மிக்கவனாகவும் இருப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.சனி
ஜாதகன் ஆட்சியாளனாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது அதற்குச் சமமான பதவியிலோ சென்று அமர்வான். சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களின் கூட்டணியால், விவசாயியாக அல்லது விவசாயத்தொழிலில் சிறந்து விளங்குவார்கள். துணிச்சல் மிக்கவனாக இருப்பான். செல்வம், புகழ்
இரண்டும் தேடிவருபவனாக இருப்பான். அடித்தட்டு மக்களுக்குப் பாடுபடுபனாக இருப்பான். கோவில், குளம் என்று அடிக்கடி பயணம் செல்பவனாக இருப்பான் ஒரு கட்டத்தில் மிகுந்த பக்திமானாக மாறிவிடுவான்.

பத்தில் சனி இருப்பவர்களுக்கு, வேலை அல்லது தொழிலில் பல ஏற்றங்களும் இறக்கங்களும் இருக்கும். உச்சிக்கும் போவான். பள்ளத்திலும் விழுவான்

சனி எட்டாம் அதிபனுடன் சேர்ந்து நவாம்சத்தில் தீய இடங்களில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்கு எப்போதும் தொழிலில் அல்லது வேலையில் மோதல்கள் இருந்து கொண்டேயிருக்கும். தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும். சனியுடன் பத்தாம் வீட்டதிபனும் சேர்ந்திருந்து, ஆறாம் அதிபனின் பார்வை பெற்றால் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தாரம் அமையும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8.ராகு
காம இச்சை அதிகம் உடையவானாக ஜாதகன் இருப்பான். சிலர் அந்தக் காம இச்சையிலும், தன்னைவிட விட வயதில் மூத்த பெண்ணிடம் தொடர்பு வைத்திருப்பார்கள்.

(இது பொதுவிதி. இதைப்படித்துவிட்டு, எனக்குப் பத்தாம் இடத்தில் ராகு உள்ளது. ஆனால் நான் அப்படிப்பட்ட ஆசாமி இல்லையே என்று யாரும் சொல்ல வேண்டாம். வேறு சுப கிரகங்களின் பார்வையால், அது இல்லாமல்
இருக்கலாம். அதற்காக சந்தோஷப்படுங்கள்)

ஏன் சந்தோஷப்பட வேண்டுமா?
மண், பெண், பொன் ஆகிய மூன்றின் மீதும் ஆசைவைத்தவன் திருப்தியடைந்ததாக சரித்திரம் இல்லை. உருப்பட்டதாகவும் சரித்திரமில்லை!

இந்த அமைப்பினர் (அதாவது 10ல் ராகு இருக்கும் அமைப்பு) கை தேர்ந்த கலைஞர்களாக இருப்பார்கள். எல்லாக் கலைகளையும் சுலபமாகக் கற்றுக்கொண்டு விடுவார்கள்.இலக்கியங்களிலும், கவிதைகளிலும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்.

அதிகமாக ஊர் சுற்றுபவர்களாக இருப்பார்கள். சிலர் கற்றவர்களாகவும், புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சிலர் சுய தொழில் செய்து மேன்மை அடைவார்கள். கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள். தைரியம் உடையவர்களாக, சாதனைகள் படைப்பவர்களாக இருப்பார்கள்

சிலர் அந்தரங்கமாக பல பாவச்செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9. கேது
ஜாதகன் தன் தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஜாதகன் மிகுந்த சாமர்த்தியசாலியாக இருப்பான். பத்தாம் இடத்துக் கேது சுபக் கிரகங்களின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால்
ஜாதகன் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பத்தாம் வீட்டில் இரண்டு கிரகங்கள் கூட்டாக இருந்தால், ஏற்படும் பலன்கள்.
இவை அனைத்தும் பொதுப்பலன்கள்.

சூரியன் + புதன் கூட்டணி:
மதிப்பும், மரியாதையும் உள்ள உயர் பதவிகள்
நிதி சம்பந்தப்பட்ட துறைகள்,
பொருளாதாரம் சம்பந்தப்பட்ட துறைகள்,
அரசு பதவிகள், அரசாங்க உத்தியோகம்
அரசியல் துறை
...................................................
சனீஷ்வரன் + புதன் கூட்டணி::
சுற்றுலாத்துறை
முகவர் பணி
புத்தகம், பதிப்பகத்துறை, அச்சகத் தொழில்
சுங்கவரி, உற்பத்திவரி போன்ற அரசு வரித்துறைகள்
காப்பீட்டுத்துறை
...................................................
சுக்கிரன் + புதன் கூட்டணி:
கவிஞர்கள், படைப்பாளிகள் (எழுத்தாற்றல் மிக்க எழுத்தாளர்கள்)
இலக்கியத்துறை, பத்திரிக்கை ஆசிரியர்கள்
நாடக எழுத்தாளர்கள்
தூதுவர்கள்
வெளியுறவுத்துறை
நிர்வாகிகள்
மருத்துவப் பிரதிநிதிகள்
..................................................
சந்திரன் + புதன் கூட்டணி:
கண்காட்சி அமைப்பளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள்
......................................................
செவ்வாய் + புதன் கூட்டணி:
அறுவை சிகிச்சை நிபுணர்கள்
ரசாயனத்துறை
மருந்து உற்பத்தியாளர்கள், மருந்து விற்பனையாளர்கள்
கணக்காய்வாளர்கள்
......................................................
குரு + புதன் கூட்டணி:
ஆராய்ச்சியாளர்கள்
விஞ்ஞானிகள்
மதபோதகர்கள்
வழக்குரைஞர்கள், நீதிபதிகள்
நகரமன்ற உறுப்பினர்கள், நகரத்தந்தைகள்
.........................................................
ராகு + புதன் கூட்டணி:
மல்யுத்த வீரர்கள்,
புகைப்படக் கலைஞர்கள்
கடிகார வியாபாரிகள்
தகவல் தொடர்பு சாதனங்கள் (உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள்)
ஒலிபரப்புத்துறை சாதனங்கள் (உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள்)
..........................................................
சூரியன் + குரு கூட்டணி:
அறநிலையங்களின் தலைவர்கள்
இறைச் சேவை அமைப்புக்களின் தலைவர்கள்
மத குருமார்கள்.
சிந்தனையாளர்கள்,
மக்களை நெறிப்படுத்துபவர்கள், அதில் பிரபலமானவர்கள்
மாநில, மற்றும் தேசிய அளவில் பிரபலங்கள்
.............................................................
சனி + குரு கூட்டணி:
மனித சக்திக்கு அப்பாற்பட்ட துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள்
(Occult science or hidden wisdom), அறக்கட்டளைகள், அதுபோன்ற
அமைப்புக்களை நடத்துபவர்கள் அல்லது அவற்றில் பணி செய்கின்றவர்கள்.
மனோவசியம் சம்பந்தப்பட்ட பணிகள். சிலர் தங்கள் வசம் கூலி ஆட்களை
அமர்த்திப் பலவிதமான ஒப்பந்தப் பணிகளைச் செய்பவர்கள். உங்கள்
மொழியில் சொன்னால் contractors
...............................................................
சந்திரன் + குரு கூட்டணி:
பத்திரிக்கை நிருபர்கள். தின, மாத, வார இதழ்கள் ஆகியவற்றில் பணி
செய்கின்றவர்கள். பெண்களுக்கு சேவை செய்யும் அமைப்புக்கள். அல்லது
பெண்களுக்கென்று இருக்கும் பள்ளிகள், கல்லூரிகள், கலைக் கூடங்கள்
ஆகியவற்றில் பணி புரிபவர்கள். திருமண சேவை அமைப்புக்கள்
..................................................
சுக்கிரன் + குரு கூட்டணி:
கவிஞர்கள், பொது சேவையாளர்கள். சுயவாழ்க்கைமுறைகளை ஆதரிக்கும்
அமைப்புக்கள் (Theosophical Society) போன்றவற்றில் ஈடுபாடுகொண்டு
பணியாற்றுகிறவர்கள்
..........................................................
சுக்கிரன் + சந்திரன் கூட்டணி:
பெண்களை வைத்து நடத்தும் தொழில்கள், உணவு விடுதிகள், ஹோட்டல்கள்,
மதுக்கடைகள், பார்கள், ஒப்பனைப் பொர்ட்கள், வாசனை திரவியங்கள்,
அலங்காரப் பொருட்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட தொழில்கள் அல்லது வேலைகள்.
கடல் சார்ந்த தொழில்கள், கப்பல்களில் வேலை
.............................................................
சுக்கிரன் + புதன் கூட்டணி:
நுன்கலை வித்தகர்கள், பயிற்சியாளர்கள் teachers of fine arts and dance,
நடிகர்கள், நடிகைகள், சுண்ணாம்பு, நிலக்கரி, விற்பனையாளர்கள், காலணிகள்
உற்பத்தியாளர்கள் விற்பனையளர்கள், பதனிடப்பட்ட தோல்கள் தோல்களால்
செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்கள்
............................................................
சுக்கிரன் + செவ்வாய் கூட்டணி:
சூதாட்டக்கூடங்கள், செக்ஸ் வியாபாரிகள், வாகன ஓட்டிகள், நுன் தொழில் கலைஞர்கள்
.........................................................
சுக்கிரன் + சனி கூட்டணி:
இசைக் கருவிகள் விற்பனையாளர்கள். புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பவர்கள்.
.......................................................
ராகு + சந்திரன் கூட்டணி:
விமானங்களில், பைலட், ஏர்ஹோஸ்டஸ் அல்லது விமானப் பயணம் சார்ந்த
துறைகளில் வேலை
........................................................
ராகு + செவ்வாய் கூட்டணி:
வாகன ஓட்டிகள், அரிய சாதனைகளைச் செய்பவர்கள். வின்வெளி ஆராய்ச்சிக்
கூடங்கள்
.......................................................
ராகு + சுக்கிரன் கூட்டணி:
பிண்ணனிப் பாடகர்கள், கள் போன்ற போதைப் பொருட்களை விற்பவர்கள்,
பெண்களை வைத்து வணிகம் (அல்லது இன்னபிற வேலைகளைச்) செய்கிறவர்கள்
.......................................................
ராகு + சனி கூட்டணி:
உதிரி பாகங்களைச் செய்கிறவர்கள், விற்கின்றவர்கள். மின்னனு சாதனங்களை
விற்கின்றவர்கள், சர்க்கஸ் கலைஞர்கள், நகைச்சுவை நடிகர்கள், குத்துச் சண்டை வீரர்கள்.
..........................................................................
இவற்றில் இல்லாத கூட்டணிக்காக தலையைச் சொறியாதீர்கள். என் குறிப்பில் உள்ளவற்றை மட்டும் கொடுத்துள்ளேன்.

ராசிக் கட்டத்தில், லக்கினத்தில் இருந்து 10ஆம் வீடு முக்கியமானது. ஜாதகனின் தொழில் அல்லது வேலை, அவற்றால் கிடைக்கவிருக்கும் மேன்மைகள், மற்றும் மதிப்பு, சுய மரியாதை ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள உதவும். அதோடு அது கேந்திர வீடுகளில் ஒன்றாகும். அதையும் மனதில் வையுங்கள்!

பத்தாம் வீட்டின் பலன் தொடர்பாக கவனிக்க வேண்டிய மற்ற விஷயங்கள்:
இரண்டாம் வீடு (செல்வத்திற்கான வீடு. House of finance and house of wealth)
ஏழாம் வீடு (கூட்டு வியாபாரம், வியாபாரக் கூட்டாளிகள் business partnerships)
பதினொன்றாம் வீடு (பணம் வருவதற்கான வழி. பாதை. உங்கள் மொழியில்
சொன்னால் pipe.income sources and avenues

பத்தாம் வீடு, பத்தாம் வீட்டின் அதிபதி, அவர் சென்று அமர்ந்திருக்கும் இடம் ஆகியவை முக்கியமானது.
The house, it's lord and its placement, signification of the house, planets aspecting
the house need to be analyzed in addition to the sign present in the house and it's
characteristics to arrive at the correct conclusion.
சரி பத்தாம் வீட்டிற்குரிய பலன்கள் எப்போது கிடைக்கும்?

1.பத்தாம் வீட்டின் அதிபதி
2.பத்தாம் வீட்டில் அமர்ந்தவன்
3.பத்தாம் வீட்டைப் பார்க்கும் கிரகம்
2.பத்தாம் வீட்டு அதிபதியைப் பார்க்கும் கிரகம்

ஆகிய கிரகங்களின் தசா (Major Dasa) அல்லது புத்திகளில் (Sub period)
பலன்கள் கிடைக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அஷ்டகவர்கத்தில் 10ஆம் வீட்டில் 30 பரல்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகனுக்கு உரிய வேலை அல்லது தொழில் உரிய காலத்தில் கிடைக்கும். கிடைத்த வேலையில் அல்லது தொழிலில் உயர்ச்சி/ வளர்ச்சி இருக்கும்.

அதேபோல பத்தாம் வீட்டு அதிபதி, கர்மகாரகன் சனீஷ்வரன், பத்தாம் வீட்டில் வந்து அமர்ந்துள்ள கிரகங்கள் ஆகியவற்றின் சுயவர்க்கப் பரல்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்டு இருக்க வேண்டும். இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

அஷ்டகவர்க்கம்தான் பலன்பார்ப்பதற்கான குறுக்கு வழி. அதை நினைவில் வையுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=========
தலை சுற்றுகிறதா? சுற்றும். ஜோதிடம் என்றால் சும்மாவா? கடலில் பயணிப்பதைப் போன்றது முதல் முதலாகக் கடல் பயணம் செய்பவர்களுக்கு தலை சுற்றல். வாந்தி எல்லாம் வரும் என்பார்கள். பழகப் பழக சரியாகிவிடும். ஜோதிடமும் அப்படித்தான். பொறுமையாகப் படித்தால் அனைத்தும் பிடிபடும்!

இத்துடன் 10ஆம் வீட்டின் முக்கியமான பகுதிகள் நிறைவுறுகின்றது.

இந்தப் பாடம், ஸ்கீரின் ஷாட்டில் மொத்தம் 41 பக்கங்கள். உங்களுக்கு உரிய pointsகளை மட்டும் 10 நிமிடங்களில் படித்துவிட்டு வந்து, சார், அடுத்த பாடம் எப்போது என்று யாரும் கேட்காதீர்கள். அடுத்து வரும் 2 நாட்களுக்கு இந்தப் பாடத்தைத் திரும்பத் திரும்ப மனதில்பதியும் வரை படியுங்கள். 4 பகுதிகளாகப் பதிய வேண்டியபாடங்கள். அதன் தன்மை கருதி ஒட்டு மொத்தமாக ஒரே பதிவில் தந்திருக்கிறேன்.

அடுத்த பாடம் 26.5.2010 புதனன்று வரும்!
------------------------------------------------------------------------------------
முடிந்தவரை கொடுத்திருக்கிறேன். போதுமா சாமிகளா?

இந்தப் பாடம் கிடைத்த மறு நிமிடம், தங்கள் ஜாதகத்தை வைத்து யாரும் கேள்விகள் கேட்டு எழுத வேண்டாம். மலைபோல வந்து குவியும் கேள்விகளுக் கெல்லாம் பதில் எழுத எனக்கு நேரமில்லை. உங்களைப் போல எனக்கும் இருப்பது 24 மணி நேரம்தான்.

என் தொழில் ஜோதிடம் அல்ல! ஒரு ஆர்வத்தில் ஜோதிடத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் கற்றது பலருக்கும் பயன்படட்டும் எனும் நோக்கத்தில் எனது அரிய நேரத்தைச் செலவு செய்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அனைவரும் அதை உணர்ந்தால் நல்லது!

உணர்ந்தவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!