மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 241 - 250. Show all posts
Showing posts with label Lessons 241 - 250. Show all posts

8.10.09

வஞ்சன சோர பீதி யோகம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வஞ்சன சோர பீதி யோகம்!

பயந்து விடாதீர்கள். எல்லாம் வடமொழிச் சொற்கள்.

Vanchana Chora Bheethi Yoga
vañchana — cheating
chora' - thief
bheethi - fear

ஏமாற்றுவேலைகளுக்கு ஆளாகிவிடுவோமோ, இருப்பதை
திருட்டுக் கொடுத்துவிடுவோமோ என்று ஜாதகன் ஒருவித
பய உணர்வுடனேயே வாழும் நிலைமை இருப்பதைக் குறிக்கும்
யோகம் இந்த யோகம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யாருக்கு இது இருக்கும்?

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


++++++++++++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

7.10.09

அவயோகம் - பகுதி 2

+++++++++++++++++++++++++++++++++++++++++++
அவயோகம் - பகுதி 2

இது தொடர் பதிவு. இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள்,
அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


---------------------------------------------------------------

6.10.09

அவயோகங்கள் - பகுதி 1


===================================================
அவயோகங்கள் - பகுதி 1

ஆங்கில வினைச்சொற்களின் முன்பாக ‘dis' என்னும் சொல்லைச்
சேர்த்தால், அது, அந்த வினைச் சொல்லின் பொருளை எதிர் மறையாக
மாற்றிவிடும்.

உதாரணம்:

appear - disappear,
allow - disallow,
arm - disarm,
connect - disconnect,
continue - discontinue

If you add the suffix 'dis' in front of a verb it will reverses the
meaning of the verb!
example: disappear, disallow, disarm, disconnect, discontinue

அதுபோல தமிழில் ‘அவ’ என்னும் குறியை ஒரு சொல்லின்
முன் சேர்த்தால், அதுவும் பொருளை எதிர்மறையாக்கிவிடும்

உதாரணம்
லட்சணம் - அவலட்சணம்
மானம் - அவமானம்
மதிப்பு - அவமதிப்பு
யோகம் - அவயோகம்
-----------------------------------------------------------------
ஆகவே ஒருவரது ஜாதகத்தில் யோகங்கள் இருப்பதைப் போலவே
அவயோகங்களும் இருக்கும்.

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




வாழ்க வளமுடன்!

5.10.09

யோகங்கள் ஒரு விளக்கம்!


மன்னர் ஸ்வாதித் திருநாள், கேரளா.
இந்திய மன்னர்களின் படத்தில் இந்தப் படம்தான் கிடைத்தது மக்களே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யோகங்கள் ஒரு விளக்கம்!

யோகா எனும் சொல் யுஜ் என்னும் வடமொழிச் சொல்லின் விரிவாக்கம்.
யுஜ் என்பதற்கு கூட்டு (unite) - கூட்டாக என்னும் பொருள் வரும்.
ராஜா என்பதற்கு அரசன் என்று பொருள்.
ராஜயோகம் என்றால் அரசனுக்கு நிகரான யோகம் என்று பொருள்

ராஜயோகம் என்பதற்கு, ஜாதகனுக்கு அந்தஸ்தைத் தரக்கூடிய
கிரகங்களின் கூட்டணி என்று எடுத்துக் கொள்ளலாம்.

அதற்கு எதிர் மாறாக அவ யோகம், அரிஷ்ட யோகம்,
தரித்திர யோகம் என்று மூன்று விதமான - ஜாதகனுக்கு
தீமையைச் செய்யக்கூடிய யோகங்களும் உண்டு!
-----------------------------------------------------------------
இந்தப் பாடத்தின் மற்ற பகுதிகள் சில காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன
அத்துடன் இந்தப் பாடம் முழுமையாக யோகா வகுப்பிற்கு மாற்றப் பெற்றுள்ளது.மேல் விவரங்களுக்கு வாத்தியாரைத் தொடர்பு கொள்ளுங்கள்!
வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

2.10.09

கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Yoga

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


+++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

1.10.09

அனபா யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனபா யோகம்!

அனபா யோகம் என்றால் என்ன?

சந்திரன் இருக்கும் இடத்தில் அதற்குப் பன்னிரெண்டாம் வீட்டில்,
அதாவது உங்கள் சந்திர ராசிக்குப் பன்னிரெண்டில்,
சூரியனைத் தவிர, மற்ற கிரகங்களில் ஒன்று இருந்தால்
அதற்கு அனபா யோகம் என்று பெயர்.

ராகு & கேதுவிற்கு முழு கிரக அந்தஸ்து இல்லை.
இருந்தாலும் இந்த யோகத்திற்கு அவற்றைக் கணக்கில் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++
அதன் பலன் என்ன?

1
அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால்:
ஆசாமி வலிமையானவன். சுய கட்டுப்பாடு உள்ளவன்.
விரும்பத்தகாத வேலைகளைச் செய்பவனாகவும், அதுபோன்ற
செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தலைமை ஏற்பவனாகவும்
இருப்பான்
..........................
2
அந்த இடத்தில் புதன் இருந்தால்:
ஆசாமி எல்லா வித்தைகளும் தெரிந்தவனாகவும்,
மிகச் சிறந்த பேச்சாளனாகவும் இருப்பான்.
யாரையும் கவரக்கூடிய வகையில் பேசும் திறமையைப்
பெற்றிருப்பான்
.........................
3.
அந்த இடத்தில் குரு இருந்தால்:
ஜாதகன் எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்பவன் அல்ல!
சீரியசான ஆசாமி. அறவழியில் செல்லக்கூடியவன். தன்
செல்வத்தை அல்லது வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம
காரியங்களுக்காகச் செலவிடக்கூடியவன்.
.............................
4.
அந்த இடத்தில் சுக்கிரன் இருந்தால்:
ஆசாமி பெண்களிடத்தில் வழியக்கூடியவன். அல்லது
பெண்களிடம் கரையக்கூடியவன். அல்லது உருகக்கூடியவன்
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
மொத்தத்தில் பெண்பித்தன் (womanizer)
ஆனால் அதிகாரமுடையவர்களின் நன் மதிப்பைப் பெற்றவன்
...................................................
5.
அந்த இடத்தில் சனி இருந்தால்:
ஜாதகன் தவறான நம்பிக்கைகளுக்கு எதிரானவன்.
மாயை’களில் இருந்து விடுபடக்கூடியவன்.
மொத்தத்தில் முற்போக்குவாதி!
................................................
6
ராகு அல்லது கேது இருந்தால்:
ஆசாமி அதிரடியானவன்.
யாருக்கும் கட்டுப்படாதவன்
எந்த விதிகளுக்கும், ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுப்படமாட்டான்.
மொத்ததில் அடங்காதவன்!
..............................................
மொத்ததில் இந்த யோகம்
ஜாதகனுக்கு நல்ல உடல் அமைப்பையும்,
நல்ல பண்புகளையும்,
சுய மரியாதையையும் கொடுக்கும்
-----------------------------------
அடுத்த பாடம் நாளை!

அன்புடன்,
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

26.9.09

சனிப் பெயர்ச்சி!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
சனிப் பெயர்ச்சி!

சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும்
இல்லை என்பார்கள்.

சனி என்ன நம் மாமனாரா? பெண்ணைக் கொடுத்தவரா? அவராக
வந்து கொடுப்பதற்கு?

நம் ஜாதகத்தின் படி என்னென்ன பலாபலன்கள் உள்ளதோ - அதாவது
நம் கர்மவினைப்படி என்ன பலன்கள் store ஆகியுள்ளதோ - அதைக்
கொடுப்பவர் அவர். அவர் store keeper. அவ்வளவுதான். அவரைக் கண்டு
பயப்பட வேண்டாம்.

அவரில்லாமல் யாருடைய வாழ்க்கையும் இங்கே நடக்காது.
ஆமாம், அவர்தான் ஆயுள்காரகர். அயுள் முடிந்துவிட்டால், ஜாதகனை
ஒரு விநாடிகூட, இங்கே இருக்க அவர் அனுமதிக்க மாட்டார்.
வலுக்கட்டாயமாக போர்டிங் பாஸ் கொடுத்து அனுப்பி விடுவார்.

எங்கே?

எங்கே அனுப்பிவைப்பார் என்பது தெரியாது. இந்த உலகத்தைவிட்டு
அனுப்பி வைத்து விடுவார். அது மட்டும் தெரியும்.

”வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!”
என்று கவியரசர் பாடி வைத்துள்ளார்.

அதோடு, தொடர்ந்து சொல்லியுள்ளார்:

”உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!”

கவியரசர் சொன்ன அந்தக் கோட்டைதான் எங்கே உள்ளது என்பது
தெரியவில்லை:-)))

ஆகவே சனீஷ்வரன் நமக்கு முக்கியமானவர். அவருக்கு இன்னொரு
இலாக்காவும் இருக்கிறது. அவர்தான் தொழில்காரகன், ஜீவனகாரகன்.
ஒரு ஜாதகன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலை அல்லது
வேலையைக் கொடுப்பவர் அவர்தான்.

ஆகவே, அவர் அங்கேயும் நமக்கு முக்கியமானவர்
=====================================================
++++++ ஒரு ஜாதகனுக்கு அவன் பார்க்கும் தொழிலில் அல்லது வேலையில்
பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை மாறும் என்பதைப்
பார்க்க ஒரு ஃபார்முலா உள்ளது.

10ஆம் வீட்டை, லக்கினமாக எடுத்துக் கொண்டு, அன்றையத் தேதியில்
கோச்சார சனீஷ்வரன் அந்த வீட்டிலிருந்து எங்கே இருக்கிறான் என்று
பாருங்கள். அந்த வீட்டிற்கு 6, 8,12ஆம் வீடுகளில் அவன் சஞ்சாரம் செய்தால்,
பிரச்சினைதான். அந்த வீட்டை விட்டு நகரும் வரை பிரச்சினை தீராது.
பதவி நீக்கம், பதவி பறிமுதல், பதவியிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல்,
தண்ணீர் இல்லாக் காட்டிற்கு மாற்றப்படுதல் என்று எது வேண்டுமென்றாலும்
நடக்கும். அந்த வீட்டிற்கு 11ல் சனி சஞ்சாரம் செய்தால், பதவி உயர்வு,
பதவியில் மேன்மை, பெருமை எல்லாம் கிடைக்கும்
----------------------------------------------------
அதுபோல எப்போது டிக்கெட் கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியுமா?
அதற்கு ஏதாவது சூத்திரம் இருக்கிறதா?

++++++இருக்கிறது. அது ஒருவரிச் சூத்திரம். அதை இங்கே சொல்ல முடியாது.
வாசகர்கள் என்னைப் பிறாண்டி எடுப்பதோடு. எனக்கு டிக்கெட் கொடுத்து
விடுவார்கள். ஆகவே, சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய
நேரத்தில் அதைச் சொல்லி உங்களுக்கு அறியத் தருகிறேன். பொறுத்திருங்கள்
--------------------------------------------------------
சரி விஷயத்திற்கு வருகிறேன்

செ‌ப்ட‌ம்ப‌ர் 26ஆ‌ம் தே‌தி சனிக்கிழமை, மதியம் மணி 3.18க்கு சனீஷ்வரன்
சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார்.

இ‌ந்த சனிப் பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய
மாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக
தொகுத்து கீழே உள்ள தளத்தில் கொடுக்கப்பெற்றுள்ளது!

விரிவான சனிப்பெயர்ச்சி (பொதுப்பலன்களுக்கான) தளம் அது!
உங்கள் ராசிக்கான பகுதியைக் க்ளிக் செய்து, படித்து முழு விவரங்களையும்
அறிந்து கொள்ளுங்கள். அதற்கான சுட்டி கீழே உள்ளது.
----------------------------------------------------
இந்தப் பொதுப்பலன்களைப் பற்றி ஒரு விஷயம்.
அவைகள் பொதுவானவை அவ்வளவுதான்.
அவர்கள், பத்திரிக்கை விற்பதற்காகவும், சிலர் புத்தகங்கள் விற்பதற்காகவும்
பொதுப் பலன்களை எழுதுகிறார்கள்.
நாமும் காசு கொடுத்து வாங்கி, மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம்.
அது எப்படி நமக்குப் பொருந்தும்?

அம்பானிக்கும், அனுஷ்கா சர்மாவிற்கும், அஜீத்திற்கும், அய்யம்பேட்டை
கலிவரதனுக்கும், அம்மா மண்டபம் ரங்கராஜனுக்கும், ஒரே ராசி என்று வைத்துக்
கொள்ளூங்கள், இந்தப் பொதுப் பலன்களின் படியா, அவர்கள் அனைவருக்கும்
இன்ப, துன்பங்கள் வரப்போகின்றன. இல்லை!

110 கோடி மக்கள் வகுத்தல் 12 ராசிகள் = 9.16 கோடி மக்கள்
இந்த 9.16 கோடி மக்களுக்கும் எப்படிப் பலன் ஒருவிதமாகப் பொருந்தும்?

++++++அவரவர்களின் ஜாதகப்படிதான் பலன்கள் அமையும்.

1. உங்கள் ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருந்து, அதற்கான தசாபுத்தி
நடந்து கொண்டிருந்தால், இந்தக் கோச்சாரங்கள் வழிவிட்டு விடும்.

2. நல்ல தசை அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தாலும் கோள்சாரங்கள்
பாதிப்பை ஏற்படுத்தாது.

சுருங்கச் சொன்னால், கோள்சாரத்தைவிட, தசை/புத்தி முக்கியம்.

ஒரு சாலையில் முதலமைச்சர் வருகிறார். அவருக்கு முன், அவருடைய பைலட்
மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகின்றன என்றால் மொத்த சாலையும்
துடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப் பட்டிருக்கும் இல்லையா? ஏன் தப்பித்தவறி
நீங்கள் சென்றாலும், வழி விட்டு ஒதுங்கி நிற்ப்பீர்கள் இல்லையா?
அதுபோலத்தான் இதுவும்.
------------------------------------------------------------------
பெயர்ச்சி என்றவுடன், சனீஷ்வரன் மூட்டை முடிச்சுகளைக் கட்டி எடுத்துக்
கொண்டு வீடு மாறுகிறார் என்று நினைக்க வேண்டாம்.

அவருக்கு எதற்கு மூட்டை, முடிச்சு?

வானவெளியில், 121 பாகையில் இருந்து 150 பாகைகள் வரை, சிம்ம ராசியில்
இதுவரை சஞ்சாரம் செய்தவர், இப்போது 151 பாகைக்குள், தன் சுழற்சியின் மூலம்
நுழைகிறார். அது கன்னி ராசி. அங்கே அவர் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு
வாசம் செய்வார்.

அவர் ஒரு பாகையைக் கடக்க எடுத்துக் கொள்ளூம் காலம் ஒரு மாதமாகும்.
கன்னிராசியின் 30 பாகைகளையும் அவர் கடப்பதற்கு 30 மாதங்களாகும்.

அதுவரை அங்கே இருப்பார். அங்கே மடக்கு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து
கொண்டு செய்ய வேண்டிய பணிகளைச் செவ்வனே செய்வார்.
--------------------------------------------------------
இந்த சனிப்பெயர்ச்சியால், அதிக நன்மைகளை அடைய உள்ளவர்கள், மகர
ராசிக் காரர்களும், கடக ராசிக்காரர்களும் ஆவார்கள்.

1
மகர ராசிக்காரர்கள், அஷ்டமச் சனியால் (அதாவது 8ஆம் இடத்துச் சனியால்)
பலவிதமான தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அந்தத்
தொல்லைகள் அனைத்தும் நீங்கிவிடும். வாழ்க்கை வளம் பெறும், மகிழ்ச்சி
உடையதாக இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++
2
அதுபோல கடக ராசிக்காரர்களும், இதுவரை, ஏழரைச் சனியால் அவதிப்
பட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த அவதிகள் முழுமையாக நீங்கி விடும்.
வாழ்க்கை வளம் பெறும், மகிழ்ச்சி உடையதாக மாறும்.
இதுவரை பாதச்சனியாக அமர்ந்து அவர்களைப் பலவழிகளிலும் அலைக்கழித்த
சனிஷ்வரன் யோகம் தரும் வீடான 3ஆம் வீட்டில் (அவருக்கு அது நல்ல வீடு)
அமர்ந்து, புகழையும், பாராட்டையும் அவர்களுக்குத் தருவார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
3.
மேஷ ராசிக்கு ஆறாம் இடத்திற்கு சனி வருகிறார். அந்த ராசிக்காரர்களுக்கு
எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
இதுவரை 5ஆம் வீட்டில் அமர்ந்து கொண்டு, அல்லல்படுத்திய சனீஷ்வரன்,
விபரீத வீடான 6ஆம் வீட்டில் அமர்ந்து சகல யோகங்களையும் தர உள்ளார்.
++++++++++++++++++++++++++++++++++++++++
4.
விருச்சிக ராசிக்குப் பதினொன்றாம் இடத்திற்கு சனி வருகிறார்.
அந்த ராசிக்காரர்களுக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
இதுவரை 10ஆம் வீட்டில் நின்ற சனிபகவான், லாப வீடான 11ஆம் வீட்டில்
அமர்ந்து பல நன்மைகளைச் செய்ய உள்ளார்.
+++++++++++++++++++++++++++++++++++++++
5.
மீன ராசிக்காரர்களுக்கு 7ஆம் இடத்திற்கு சனி வருகிறார். அவர்களுக்கு
தொல்லைகள் அவ்வப்போது தலையைக் காட்டும். இதுவரை ராசிக்கு 6வது
வீட்டில் அமர்ந்து பல நன்மைகளைச் செய்த சனீஷ்வரன், ராசிக்கு 7வது வீட்டில்
நுழைந்து தலைவலியைத் தரப்போகிறார். வீண் அலைச்சல், நஷ்டங்கள் ஏற்படும்.
நன்மைகள் அதிகமாக இருக்காது!
+++++++++++++++++++++++++++++++++++++++
6.
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி, 8ஆம் இடத்திற்கு சனி வருகிறார்.
அவர்களுக்குத் தொல்லைகள் முதுகில் ஏறி சவாரி செய்யும்.
இந்த ராசிக்காரர்களுக்குத்தான் அதிகமான தொல்லைகள், பிரச்சினைகள்
ஏற்படும். அஷ்டமச்சனி. அதை நினைவில் வையுங்கள்
இதுவரை உங்களின் ராசிக்கு 7வது வீட்டில் இருந்தவர் அஷ்ட்டமத்துச் சனியாக
இருந்து செயல்படப் போகிறார்.அஷ்ட்டமத்துச் சனி அவஸ்தை தான்.
அகப்பட்டவனுக்கு அஷ்ட்டமத்துச் சனி என்பார்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++++++
7.
துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பம். முதல் இரண்டரை
ஆண்டுகளில் பலவிதமான விரையங்கள் ஏற்படும். விரையம் = Loss
+++++++++++++++++++++++++++++++++++++++
10.சிம்மம் - 2ல் பாதச்சனி (ஏழரையில் கழிவுச்சனி)
11. கன்னி - 1ல் ஜன்மச்சனி (ஏழரையில் 2வது காலகட்டம்)
இவ்விரண்டு ராசிக்காரர்களுக்கும் விட்டகுறை, தொட்டகுறை.
ஏழரைச் சனியின் பாதிப்புக்கள் தொடரும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8. ரிஷபம் - 5ல் கோள்சாரச்சனி (கோள்சாரத்தில் மனஸ்தானம்)
9. மிதுனம் - 4ல் (சுகஸ்தானத்தில் கோள்சாரச்சனி)
12. தனுசு - 10 ல் கோள்சாரக் கேந்திரச்சனி
இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் கலந்த பலன் (Mixed Results)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சனியின் கோச்சார சஞ்சாரத்தால் கிடைக்கும் நன்மைகள் அல்லது
தீமைகளின் அளவைச் சொல்ல முடியுமா? அதற்கு ஏதாவது சூத்திரம்
இருக்கிறதா?

++++++இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் எந்தந்த இடங்களில் 30ம்
அதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளன என்பதைக் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். அந்த இடங்களில் சஞ்சார சனியால் எந்தவிதமான
உபத்திரவங்களும் இருக்காது.

ஏழரைச் சனியின் இடங்களான 12, 1, 2ஆம் வீடு ஆகிய மூன்று இடங்களிலும்,
30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருந்தால், ஏழரைச் சனி, ஜாதகனை
ஒன்றும் செய்யாது. அந்த ஏழரை ஆண்டுகளும் ஜாதகன் செளக்கியமாக
இருப்பான்.

அதற்கு மாறாக சனி சஞ்சாரம் செய்யும் இடம் 25 பரல்களூம், அல்லது
அதற்குக் குறைவான பரல்களைக் கொண்டிருந்தால் கோள்சாரச் சனி,
ஜாதகனைப் படுத்தி எடுக்கும்.
------------------------------------------------------------------
முழுப் பலன்களுக்கான சுட்டி இங்கே!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

17.9.09

Loneliness yoga: கேமதுருமா யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Loneliness yoga: கேமதுருமா யோகம்!

"இளமைவரும் முதுமைவரும் உடலும் ஒன்றுதான்
தனிமைவரும் துணையும்வரும் பயணம் ஒன்றுதான்
விழியிரண்டு இருந்தபோதும் பார்வை ஒன்றுதான்
வழிபடவும் வரம்தரவும் தெய்வம் ஒன்றுதான்"
-கவியரசர் கண்ணதாசன்
--------------------------------------------------------
வாழ்க்கையில் இரண்டு நிலைப்பாடுகள் எப்போதும் உண்டு.
இரவுபகல் போல துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை

அதுபோல சுபயோகமும், அவயோகமும் கலந்ததுதான் ஜாதகம்
ஆகவே அவை இரண்டையுமே சமமாக ஏற்றுக் கொள்ளும் மனப்
பக்குவம் நமக்கு வேண்டும்!
-----------------------------------------------------------------
Loneliness yoga: கேமதுருமா யோகம்!

இது ஒரு அவயோகம்!

ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகளில் வேறு
எந்தக் கிரகமும் இல்லாமல் இருந்து, சந்திரனும் வேறு எவருடைய
கூட்டணியும் இல்லாமல் தனித்து இருந்து, சந்திரனுக்கு 7ஆம் வீட்டில்
எந்த கிரகமும் இல்லாமலிருந்தால் அதற்குப் பெயர் கேமதுருமாயோகம்!

If moon is alone, doesn't have any planet before and after
and also in front then it is Kemadruma.
For Example moon in 2nd house. 1st , 3rd and 8th house is empty.
Rahu and Ketu are not actual planet and they do not cancel the yoga
if they are in the above mentioned houses
----------------------------------------------------------------------
பலன் என்ன?


சந்திரன் மனதிற்கான கிரகம். இந்த அமைப்புள்ள ஜாதகனுக்கு மனப்
பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்று இருந்து கொண்டே இருக்கும்
இந்த அமைப்புள்ள ஜாதகனை அடிக்கடி துன்பம் சூழும், ஜாதகனிடம்
பெருந்தன்மை இருக்காது. ஜாதகன் வறுமையில் கஷ்டப்பட நேரிடும்.

Kemdruma gives trouble to mind.
Since moon is mind and is alone it can be destructive.
Many of the serial killers from the history have this yoga.
It also makes the person very poor, mentally instable,
gives inner fears, phobias, takes away happiness.
It makes one do crimes

இந்த அமைப்புள்ள ஜாதகன் அல்லது ஜாதகி, வயதான காலத்தில்
தனித்திருக்க நேரிடும். வயதான காலத்தில் சிலரை நிரந்தமாகப் புலம்பும்
நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிடும்! அவர்கள் தனிமையில் வாட
நேரிடும்

உடனே பயந்து விடாதீர்கள். இந்த அமைப்பிற்கு சில விதிவிலக்குகள் உண்டு.

இந்த அமைப்பில், சந்திரனுக்கு ஏழாம் வீட்டில், ராகு கேதுவைத் தவிர்த்து
மற்ற ஆறு கிரகங்களில் ஏதாவது ஒன்று 7ஆம் வீட்டில் இருந்தால் இந்த
யோகம் காணாமற்போய்விடும். அதோடு அது நன்மையாகவும் மாறிவிடும்

If there is a planet in house opposite (7th house from moon), it not only
cancels Kemadruma, but gives kalpadruma yoga
(similar to neecha bhanga raja yoga.)

குரு லக்கினத்தில் அல்லது கேந்திர வீடுகளில் இருந்தால், இந்த
அவயோகம் ஜாதகனை அனுகாமல் காத்து நிற்கும்!

ஆனால் கேமதுருமா அமைப்பே ஒரு கேந்திர வீட்டில் இருந்தால்
ஜாதகனின் நிலைமை மோசமாக இருக்கும்

இந்த அவயோகம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட திரிபுர மந்திரத்தை
அனுதினமும் 108 முறைகள் சொல்வது நல்லது. மந்திரங்களில் நம்பிக்கை
உள்ளவர்கள் சொல்லலாம்.

மற்றவர்கள் ஜூட் விட்டு விடலாம். வருவதை எதிர் கொள்ளலாம்!
--------------------------------------------------------------
திரிபுர மந்திரம் (Tripura Sundari Mantra)

அதாவது திரிபுரசுந்தரி தேவியை வணங்கிச் சொல்லும் மந்திரம்!

ஓம் திரிபுரசுந்தரி போற்றி!
ஓம் திரிபுரசுந்தரி போற்றி!

இதே மந்திரம் வடமொழியில்:
க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ"
க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ"

Kleem Tripurasundarimoorthaye Namah
Kleem Tripurasundarimoorthaye Namah
+++++++++++++++++++++++++++++++++++++++++++

பாடத்தை சரியாகப் படித்து உள்வாங்கிக்கொள்ளாமல், யாரும், சார்,
எனக்கு இந்த யோகம் இல்லையே என்று வருத்தப் படவேண்டாம்!

அடுத்த பாடம் நாளை

அன்புடன்,
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

16.9.09

Lakshmi Yoga: லக்ஷ்மியோகம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lakshmi Yoga: லக்ஷ்மியோகம்

எல்லோரும் விரும்பும் யோகம் இந்த யோகம். இந்த யோகம் இருப்பவன்
ஜாதகத்தைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த யோகத்திற்கான ஜாதக அமைப்பு என்ன?

லக்கினாதிபதி வலிமையாக இருக்க வேண்டும். அத்துடன் 9ஆம் அதிபதி
சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்க வேண்டும் (அது கேந்திர வீடாக
அல்லது திரிகோணவீடாக இருக்க வேண்டும். அது லக்கினத்தில் இருந்தும்
இருக்கலாம். அல்லது லக்கினாதிபதி இருக்கும் இடத்தில் இருந்து
இருக்கலாம்

If the lord of Lagna is powerful and the lord of the 9th occupies own
or exaltation sign identical with a Kendra or Thrikona,
Lakshmi Yoga is caused.
-----------------------------------------------------------------
பலன் என்ன?

பலன் 1
ஜாதகன் அரவிந்தசாமியைப் போல (ரோஜா/தளபதி படங்களில் வரும்
அரவிந்தசாமியைப் போல) அழகாக இருப்பான்.
பெண்ணாக இருந்தால் மிகவும் அழகாக இருப்பாள். பார்ப்பவர்களைத்
திரும்பிப் பார்க்க வைக்கும் விதமான அழகுடன் இருப்பாள். பெண்ணுக்குப்
பெண்ணே பொறாமைப்படும் விதத்தில் அழகுடன் இருப்பாள். கையெடுத்துக்
கும்பிட வைக்கும் அழகோடு இருப்பாள்.( அதனால்தான் எந்த நடிகையையும்
உதாரணமாகச் சொல்லவில்லை)

2
ஜாதகன் செல்வத்தோடு இருப்பான்.
உயர்ந்த குணங்களை உடையவனாக இருப்பான்.
நன்கு கற்றவனாக இருப்பான்.
மதிப்பும் மரியாதையும் மிக்கவனாக இருப்பான்.
நல்ல ஆளுமைத் திறமை கொண்டவனாக இருப்பான்.
வாழ்க்கையின் எல்லா வசதிகளையும் உடையவனாக இருப்பான்.
அதைவிட முக்கியமாக எப்பொதும் மகிழ்ச்சியை உடையவனாக இருப்பான்.
பெண்ணாக இருந்தாலும் இதே பலன்கள் உண்டு!

The person will be wealthy, noble, learned, a man of high integrity and
reputation, handsome appearance, a good ruler, and enjoying all the
pleasures and comforts of life.
-----------------------------------------------------------------
பலன் எப்போது?

லக்கினாதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி ஆகியவர்களின் தசை/ புத்திக்
காலங்களில் பலன்கள் உண்டாகும்/கிடைக்கும்

மேலதிகத்தகவல்கள்:

Different definitions of the Lakshmi Yoga.
Lakshmi Yoga will arise by the mutual association of lords of
Lagna and the 9th; (b) by the lord of the 9th occupying Kendra,
Thrikona, or exaltation and the lord of Lagna being disposed
powerfully; and (c) by the lord of the 9th and Venus being posited
in own or exaltation places which should be Kendras or Trikonas.

Obviously, Lakshmi Yoga presumes the strength of lord of Lagna,
Venus, and the lord of the 9th.

Lakshmi has predominantly to do with wealth and one born in this
combination will be wealthy, the degree of wealth varying with
regard to the degree of strength or weakness of the planets causing
the Yoga.

The most powerful type of Lakshmi Yoga will give immense wealth,

while the mutual association of or aspect between the lords of Lagna
and the 9th in houses other than 3, 6 and 8 would also result in an
ordinary type of Lakshmi Yoga which might be fortified by the presence
of other Dhana Yogas

அந்த இருவரும், பகை நீசம், அஸ்தமனம், வக்கிரம் என்று ஏதாவது
டேமேஜ் ஆகியிருந்தால் இந்த யோகம் இருக்காது!

பாதியாவது இருக்காதா? என்று யாரும் கேட்கவேண்டாம்.
பாதி அழகாக இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள்.
தலையில் பாதி முடி இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்
பாதிக் கிணறு தாண்டினால் என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள்

ஆகவே உங்கள் ஜாதகத்தைவைத்து நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்
வேறு அமைப்புக்களை இதனுடன் கோந்து போட்டு ஒட்டி, கேள்விகள்
எதுவும் கேட்க வேண்டாம்

லக்ஷ்மி யோகம் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் போகட்டும்
என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் மதிப்பெண் 337
மட்டுமே. அதை மனதில் வையுங்கள்

லக்ஷ்மி இல்லாவிட்டால் உங்கள் ஜாதகத்தில் பராசக்தி இருப்பார்
அல்லது சரஸ்வதி இருப்பார். யார் இருக்கிறார் என்பது போகப்போகத்
தெரியும். பொறுத்திருந்து படியுங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

15.9.09

சகடயோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சகடயோகம்!

சகட என்னும் வடமொழிச் சொல்லிற்கு சக்கரம் என்று பெயர்
சக்கரயோகம் என்று தனித் தமிழில் சொல்லாமல் சகடயோகம் என்றே
சொல்லுங்கள். சிலவற்றை மொழிமாற்றம் செய்யாமல் அப்படியே
ஏற்றுக் கொள்வதுதான் உசிதம்

சகடயோகம் எப்போது ஏற்படும்?

குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால்,
அது சகட யோகத்தைக் கொடுக்கும்
Sakata yoga forms when Moon is placed in 6th, 8th or 12th from the Jupiter.
-------------------------------------------------------------
என்ன பலன்?

1. ஜாதகனின் வாழ்க்கை சக்கரம்போல சுழன்று கொண்டே இருக்கும்.
ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். தன்னுடைய வேலை காரணமாக
அல்லது பொருள் ஈட்டல் காரணமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு
இடத்திற்கு மாறிக் கொண்டே இருப்பான் அல்லது அலைந்து கொண்டே இருப்பான்.

Person with sakata yoga in his horoscope has to keep moving from
one place to another for some work or the other.

எல்லோருமே இருந்த இடத்தில் அல்லது இருக்கும்/வசிக்கும் ஊர்களில் இருந்து
கொண்டே தங்கள் பணிகளைச் செய்ய ஆசைப் படுவார்கள். சகடயோகம் அதை
அனுமதிக்காது.அலைய வைக்கும். உங்கள் மொழியில் சொன்னால் சுற்ற விடும்!

People like to be working at the same city or town where they reside.
Sakata yoga does not allow this.

பலன் 2

சக்கரம் சுழலும்போது மேற்பகுதி கீழேயும், கீழ்ப்பகுதி மேலேயும் மாறி மாறி
வருவதைப்போல, சகடயோக ஜாதகக்காரர்களின் அதிர்ஷ்ட நிலைமை
தடைப்படுவதும், தடைநீங்கப் பெறுவதுமாக இருக்கும். பொருளாதாரத்தில்
ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்

one born in Sakata will have his fortune obstructed now and then.
The native loses fortune and may regain it.
----------------------------------------------------------------------------
The periods of misfortune will accord with the times of transits in
malefic Rasis - 6th, 8th and 12th. Every time the Moon transits the
6th, 8th and 12th from the radical Jupiter, the effects of Sakata are realised.

ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய
இடம் 6ஆம் இடம்
ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய
இடம் 8ஆம் இடம்

ஜாதகங்களில் நன்மை செய்யும் கிரகங்கள் 6/8 அல்லது 8/6 நிலையில்
இருப்பது நல்லதல்ல.

அதை அஷ்டம சஷ்டமம் என்பார்கள். எட்டாம் பொருத்தம் என்பார்கள்
திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, பெண்ணின் ராசி, பையனின்
ராசிக்கு எட்டில் இருக்கக்கூடாது. ஆறிலும் இருக்கக்கூடாது

இருந்து செய்தால் என்ன ஆகும்?
செய்துபாருங்கள். சிலவற்றை செய்து அனுபவித்தால்தான் உண்மை
தெரியவரும்:-))))))
------------------------------------------------------------------
பரிகாரம் உண்டா?

சகடயோக ஜாதகக்காரன், தன்னுடைய வாழ்க்கையை அதற்குத் தகுந்தபடி
அமைத்துக்கொள்ள வேண்டும்.தன் தொழிலால் குடும்பமும், குடும்பத்தால்
தொழிலும் பாதிக்காதவகையில் இரண்டையும் அனுசரித்து வைத்துக்கொள்ள
வேண்டும்.

Travelling agent,
Travelling salesman,
Medical representative,
Railway Guards,
Drivers
ஆகிய இதுபோன்ற தொழில்களை சகட யோகத்தொழில்களாகக் கொள்ளலாம்
இதை ஒரு உதாரணத்திற்காகக் கொடுத்துள்ளேன். எனக்கு அப்படி இல்லையே
என்று யாரும் கேட்க வேண்டாம். உங்கள் ஜாதகத்தை எழுதும்போது பிரம்மா
தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம்:-)))

சகட யோகம் ஜாதகத்தில் உள்ள மற்ற ராஜ யோகங்களைத் தடுக்காது.
அந்த யோகங்கள் பலமாக இருந்தால், இது வளைந்து கொடுக்கும்!
--------------------------------------------------------------------------------
சகடயோகச் சந்திரன், ஜாதகனின் லக்கினத்தில் இருந்து திரிகோணத்தில்
இருந்தால், சகடயோகம் ரத்தாகிவிடும்.உங்கள் மொழியில் சொன்னால்
கேன்சலாகிவிடும்

சகடயோகச் சந்திரன் குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் கேன்சலாகிவிடும்

சகடயோகச் சந்திரன், நவாம்சத்தில் குருவுடன் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தாலும் யோகம் கேன்சலாகிவிடும்

சகடயோகத்தைத் தரும் இருவரில் ஒருவர் ராசியில் உச்சமாகவும், மற்றொருவர்
நவாம்சத்தில் உச்சமாக இருந்தாலும், யோகம் கேன்சலாகிவிடும்

கேன்சலாகிவிட்டதே என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார வேண்டாம். கேன்சலாகிவிட்டால் நல்லதுதான். இது அவயோகம். அதாவது அவதியான யோகம். அவதி கேன்சலானால் நல்லதுதானே?
----------------------------------------------------------------------
அடுத்த பாடம் நாளை!

அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!