Cinema தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜனைத் தெரியுமா?
Thuguluva Meenatchi Iyengar Soundararajan (துகுலுவ மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜனைத் தெரியுமா? என்று கேட்டால் பலபேர்கள் தெரியாது என்பார்கள். அதையே சுருக்கி டி.எம்.எஸ் ஐத் தெரியுமா என்றால் சண்டைக்கு வருவார்கள்.
தமிழர்களிடையே 50 ஆண்டுகாலமாக அத்தனை பிரபலமானவர் அவர். அவரைத் தெரியாவிட்டால் அவன் தமிழ்னே அல்ல!
ஆமாம் பின்னணிப் பாடகர் திரு.T.M.செள்ந்தரராஜன் அவர்களைப் பற்றித்தான் சொல்கிறேன்.
11,000 திரைப்படப் பாடல்களையும், 2,500 பக்திப் பாடல்களையும் பாடிய பெருந்தகை அவர். நாம் வாழ்ந்த காலத்தில் மறக்கமுடியாத பிரபலங்களில் அவரும் ஒருவர்.
24.3.1923ல் மதுரையில் பிறந்த அவர், தனது 21ஆம் வயதில் மேடைகளில் பாடத்துவங்கினார். பிறகு திரைப்படங்களில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது.
எம்.ஜி.ஆர், சிவாஜி என்று அத்தனை முன்னணி நாயகர்களுக்கும் குரல் கொடுத்தவர். கம்பீரமான குரல் வளம் கொண்டவர். அசத்தலாகப் பல பாடல்களைப் பாடியுள்ளார்
இன்றைய மனதை மயக்கிய குரல்கள் பகுதியை அவர் நிறைக்கின்றார்
நமது தேமொழி அக்காவின் உயிர்த்தோழி விக்கி காமாட்சி அம்மாளிடம் அவரைப்பற்றிய முழுத்தகவல்கள் உள்ளன. அதற்கான சுட்டி கீழே உள்ளது. அவசியம் படித்துப் பாருங்கள்
http://en.wikipedia.org/wiki/T._M._Soundararajan
-------------------------------------------------
மனதை மயக்கிய குரல்கள் - பகுதி 4
திரு.T.M.செள்ந்தரராஜன்
செளராஷ்ட்டிரா சமூகத்தில் பிறந்தவர் அவர். தமிழ் அவருடைய தாய்மொழியல்ல! ஆனாலும் அசத்தலாகத் தமிழில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். எதை இங்கே கொடுப்பது? எதை விடுவது? குழப்பம்தான்
இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த 10 பாடல்களை இங்கே கொடுத்துள்ளேன். கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------
1
பாடல்: மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே!
படம்: அம்பிகாபதி (1957)
http://youtu.be/fb1uJPhkpLc
2
பாட்ல்: தூங்காதே தம்பி தூங்காதே படம்: நாடோடி மன்னன் (1958)
http://youtu.be/tUEB_61rhZI
3
பாடல்: யாரடி நீ மோகினி படம்: உத்தமபுத்திரன் (1958)
http://youtu.be/TZ8cTUNUyvE
4
பாடல்: உலகம் பிறந்த்து எனக்காக படம்: பாச்ம் (1962)
http://youtu.be/j8oCtAIyrik
5
பாடல்: புதிய வானம் புதிய பூமி, படம்: அன்பே வா (1966)
http://youtu.be/L34zDMiGQ6E
6
பாடல்: சட்டி சுட்டதடா படம்: ஆலயமணி (1962)
http://youtu.be/c3S5RtB3uTU
7
பாடல்: ஆறு மனமே ஆறு படம்: ஆண்டவன் கட்டளை (1964)
http://youtu.be/fdjQG6CbYKs
8
பாடல்: பொன்னை விரும்பும் பூமியிலே பட்ம்: ஆலயமணி (1962)
http://youtu.be/sc4pV709YMk
9
பாடல்: எங்கே நிம்மதி எங்கே நிம்மதி படம்: புதிய பறவை (1964)
http://youtu.be/sPJAQ5Z7_CU
10
பாடல்: பாட்டும் நானே பாவமும் நானே படம்: திருவிளையாடல் (1965)
http://youtu.be/xg_hBWlR3h0
உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லலாம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!


