மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label knowledge. Show all posts
Showing posts with label knowledge. Show all posts

23.11.20

அறிவின் முதிர்ச்சி! - Maturity of knowledge!



அறிவின் முதிர்ச்சி! - Maturity of knowledge!

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.

என்னைப் பாத்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம்வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி .

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.
இன்று முதல் நான் உன்னை தாயே!என்றே அழைக்கிறேன் என்று...!!

இதுதான் அறிவின் முதிர்ச்சி...!!

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுது கூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல்.. மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு....!!
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.6.20

One man army உருவான கதை!


One man army உருவான கதை!

 *Traffic Ramasamy*

1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போது வயது 14. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அம்மா என்னை அரிசி எடுத்து வருவதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் அனுப்பி இருந்தார். நான் காஞ்சிபுரத் தில் இருந்து 10 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்தேன். அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தேன்.

அப்போதையக் காலத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அரிசி மற்றும் நெல்லை அனுமதி இல்லாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. (அப்போது சென்னையில் இருந்து காஞ்சி புரத்துக்கு பஸ் கட்டணம் 1 ரூபாய் 25 காசுகள்)

சென்னையை நோக்கி வந்துகொண்டு இருந்தது பஸ். ஆற்காடு செக்போஸ்ட்டில் வந்தபோது பஸ்ஸை நிறுத்தி அவரவர் கைகளில் இருந்தப் பொருட்களை அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர். என்னைப் பரிசோதித்த ஓர் அதிகாரி என் மடியில் இருந்த அரிசிப் பையைப் பார்த்துவிட்டு, ‘பத்து கிலோ அரிசியைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கி இருக்கிறாயா?’ என்றார். நான் அனுமதி வாங்கிய விவரத்தைச் சொன்னேன்.

ஆனாலும், அந்த தாசில்தார் நான் கொண்டுவந்த அரிசிப் பையைப் பிடுங்கிக் கொண்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் அரிசிப் பையைக் கொடுக்கவில்லை. ‘எங்கள் வயலில் விளைந்த அரிசி இது. பத்து கிலோ எடுத்துச் செல்ல உரிய அனுமதி வாங்கி இருக்கிறேன். அப்படியும் நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?’ எனக் குரலை உயர்த்தி நியாயம் கேட்டேன். அதில், அந்த தாசில்தாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ‘என்னிடமே நியாயம் பேசுகிறாயா? உன்னால் முடிந்ததைச் செய்துகொள். அரிசியைத் தர முடியாது. மீறிப் பேசினால் போலீஸுக்குத் தகவல் சொல்ல வேண்டி இருக்கும்!’ என மிரட்டி அனுப்பிவிட்டார்.

எங்கள் குடும்பத்தில் அப்போது 11 பிள்ளைகள். நான் கொண்டுபோகும் அரிசியில்தான் சாப்பாடு செய்ய வேண்டிய நிலை. சில நேரங்களில் அப்பா ஓவர் டியூட்டி பார்த்தாலும் பார்ப்பார். வெறும் கையோடு போனால் அம்மா என்ன செய்வாள்? பலவித வேதனைகளும் மனதைக் குழப்ப, அரிசிப் பையை இழந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

தாசில்தார் அரிசிப் பையைப் பிடுங்கிக்கொண்ட விஷயத்தைச் சொன்னேன். சொல்லும்போதே எனக்கு அழுகை பொங்கியது. அப்போது வீட்டுக்கு வந்த என் தந்தை, ‘சரி, விடு. அதிகாரிகள் ஏதோ தவறான அரிசின்னு நினைச்சுப் பிடிச்சிருப்பாங்க. அதை விட்டுத்தள்ளு. நான் கடைக்குப்போய் அரிசி வாங்கி வருகிறேன்’ என எனக்கு ஆறுதல் சொல்லிக் கிளம்பிவிட்டார்.

ஆனால், என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை. ‘ஏதோ ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளும் குடும்பம் என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. இதேபோல் ஒரு அன்றாடங்காய்ச்சியின் குடும்பத்துக்கு நேர்ந்து இருந்தால் என்னாகி இருக்கும்?’ என்கிற எண்ணம் அன்று முழுக்க என்னைத் தூங்கவிடவில்லை. தவறாக நடந்துகொள்வது எத்தகையக் கண்டனத்துக்கு உரியதோ... அதேபோல்தான் தவறைத் தட்டிக் கேட்காமல் அலட்சியம் காட்டுவதும். அந்த ஆவேசம் எனக்குள் அடங்காதத் தீயாகத் தகிக்கத் தொடங்கியது.

‘ஒரு தனி நபர் ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு எத்தனை கிலோ அரிசியை எடுத்துச் செல்லலாம்? அதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்?’ என்கிற விவரங்களை எல்லாம் மறுபடியும் படித்துப் பார்த்து தெரிந்துகொண்டேன். சட்டப்படி நான் 10 கிலோ அரிசியைக் கொண்டு வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற நிறைவு எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. நியாயமாக நடந்தும் அரிசியைப் பறித்துக்கொண்ட அந்த தாசில்தாரை நிச்சயம் சும்மா விடக்கூடாது என்கிற ஆவேசமும் எனக்குள் அடங்கிவிடவில்லை.

‘எப்போதடா விடியும்?’ எனப் புரண்டு புரண்டுப் படுத்தேன். காலையில் எழுந்த உடன் தபால் ஆபீஸுக்குப் போனேன். மூன்று பைசாவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினேன். எனக்கு நடந்த அநீதியை அப்படியே எழுதி அப்போதையக் காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பினேன். ‘நிச்சயம் எனக்கான நியாயம் கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையோடு பள்ளிக்கூடம் சென்று விட்டேன்.

நான்கு நாட்கள் கழித்து, ஆற்காடு சிக்னலில் என் அரிசியைப் பிடுங்கி வைத்துக்கொண்ட அதே தாசில்தார் எங்கள் வீட்டுக்கு முன், கையில் அரிசிப் பையோடு நின்றுகொண்டு இருந்தார். நான் அவரை பார்க்காதது போல் வீட்டுக்குள் சென்றுவிட்டேன். ‘தம்பி... தம்பி...’ என்றபடியே பதறிய அவர், மாவட்ட ஆட்சியர் தன்னை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகக் கூறினார்.

‘‘உங்களோட அரிசிப்பை ஒரு அரிசிகூடக் குறையாமல் இதோ இருக்கு. நடந்தது தவறுதான். என்னைவிட எத்தனையோ வயசு சின்னப் பையனான உங்ககிட்ட மனசு வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கிறேன்’’ என்றார் கண்ணீரோடு.

அரிசிப் பையை என்னிடம் கொடுத்து, ‘‘நடந்த சம்பவத்தை மறந்து என்னை மன்னிச்சிட்டதா நீங்க ஒரு கடிதம் கொடுத்தாத்தான் மறுபடியும் நான் தாசில்தார் உத்தியோகம் பார்க்க முடியும். தயவு பண்ணி என்னை மன்னிச்சிட்டதா ஒரு கடிதம் எழுதிக் கொடுங்க தம்பி’’ என அவர் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டபடி சொல்ல... எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.

இது என் நியாயத்துக்கான வெற்றி என சத்தம் போட்டுக் கத்த வேண்டும்போல் இருந்தது.

வயதில் சிறுவனாக இருந்தாலும், எனக்கு நடந்த அநீதியை யாருடைய துணையும் இல்லாமல் என்னால் தட்டிக் கேட்க முடியும். அதற்கான நியாயத்தைப் பெற முடியும் என்கிற துணிச்சல் எனக்குள் முதல் முறையாகப் பூத்தது. யாரையும் அழவைத்து ரசிக்கும் குரூரம் எனக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. அதனால், ‘நடந்த தவறை தாசில்தார் ஒப்புக்கொண்டார். என் அரிசிப் பையையும் முறைப்படி திருப்பிக் கொடுத்தார். இனி இதுபோல் அவர் யாரிடமும் நடந்துகொள்ள மாட்டார் என நம்புகிறேன். திருந்திய மனநிலையில் இருக்கும் இவரை சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து விடுவித்து உரிய பணியில் அமர வைக்கலாம்!’ எனக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினேன்.

அறிந்தோ அறியாமலோ தவறு நிகழ்ந்துவிடுகிறது. அதன் பாதிப்பு அறிந்து ஒருவர் மன்னிப்புக் கேட்கும்போது, தவறைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அவரை மன்னிப்பதில் தவறே இல்லை.

மன்னிப்புதான் மனிதகுலத்தின் மைய விளக்கு. அது தரும் சுடரில்தான் இந்தப் பூமிப் பந்து சுற்றுகிறது. தவறு செய்தவர்களைத் திருந்தச் செய்வது மட்டுமே நம் கடமை.

14 வயதில் ஒரு தாசில்தாரையே சஸ்பெண்ட் ஆக வைத்திருக்கிறேன் என்றால், நியாயத்தின் அடிப்படை யில் என்னால் எதையும் தைரியமாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அப்போதுதான் பிறந்தது. மனதுக் குள் புது வெள்ளம் பாய்ந்ததுபோல் ஓர் உற்சாகம். ஒரு சிறு எறும்பு யானையின் காதுக்குள் புகுந்து யானையைக் குப்புற சாய்த்தது போன்ற நிறைவு.

மூன்று பைசா போஸ்ட் கார்டில் எழுதப்பட்ட விஷயத்தை அக்கறையோடு படித்து, உரியபடி விசாரித்து, தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த அந்தக் கலெக்டர்தான் ‘அநியாயமாக நடக்கும் எதையும் தட்டிக் கேட்கலாம்’ என்கிற துணிச்சலை எனக்குள் வார்த்தவர்.

இன்றைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீது வழக்குப்போட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன் என்றால்... அதற்கான தைரியம் அந்த 14 வயதில் உருவானது. 

- *டிராஃபிக் ராமசாமி எழுதிய  ‘ஒன் மேன் ஆர்மி‘ நூலில் இருந்து.* .

ஆக்கம்: Ananthamurugan Pondicherry
---------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.5.20

கல்லணையின் வரலாறு!!!!!


கல்லணையின் வரலாறு!!!!!

கரிகாலன் கட்டியக் கல்லணை ... !

கல்லணைப் பற்றிய ஒரு சிறு எளிய அறிமுகம்.

கர்நாடகமாநிலத்தில் பிரம்மகிரி குன்றுப் பகுதியில் தலைக்காவிரி என்னும் இடத்தில், கடல் மட்டத்திலிருந்து  சுமார் 4400 அடி உயரத்தில் காவிரியாறு உற்பத்தியாகிறது.. 384 கி.மீ பயணம் செய்து தமிழகத்தின் மேட்டூர் பகுதியை அடைகிறது.. நீலகிரியில் உற்பத்தி ஆகும் பவானி ஆறு, இப்போதைய மேட்டூருக்குத்  தெற்கே காவிரியுடன் கலக்கிறது.. கோவை மாவட்டத்து நொய்யல் ஆறும், மூனாறு பகுதி அமராவதி ஆறும் காவிரியில் கலக்கின்றன... இப்போ அகன்ற காவிரியாகி ஒரு மகா சமுத்திரமாக உருவெடுத்து திருச்சியை நோக்கி பயணிக்கிறது காவேரி .

திருச்சிக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் எலமனூறு அருகே, முக்கொம்பு என்ற இடத்தில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப்  பிரிகிறது. சற்று உயர்ந்த காவிரியும், தாழ்ந்த கொள்ளிடமும் மீண்டும் இணைய முயற்சிக்கும் ஓர் இடம்..

அந்த இடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.

 திருச்சிக்கு கிழக்கே 15 கி.மீ தூரமுள்ள கரிகாலன் அணை கட்டிய இடம்..

மழைக் காலத்தில்  காவிரி தனது வடகரையை உடைத்து கொள்ளிடத்தில் பாய்ந்ததால் ஏற்படும் அபரிமிதமான வெள்ளப்பெருக்கினால்  இப்பகுதியைச் சுற்றியுள்ள விவாசாய நிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்..  இந்தப் பேரழிவைத் தடுப்பதற்காகவே கரிகாலன் காவிரியின் குறுக்கே கரை எழுப்பத் தீர்மானித்தார்..

கரைகளை உயர்த்தி வலுப்படுத்தவேண்டும். ஆற்றின் குறுக்கே தடுப்பும் கட்ட வேண்டும்.

அப்போதுதான் மிக வேகமாக வரும் நீரின் வேகத்தை குறைத்து. அபரிதமான நீரை தடுப்பணையின் மேல் வழிந்தோட செய்து, நீரை பாசனத்திற்கும் பயன்படுத்தலாம். வெள்ளப் பெருக்கும் ஏற்படாது.

அந்த மகா சமுத்திரம் போன்ற காவிரி ஆற்றின் குறுக்கே எதைக்கொண்டு தடுப்பு எழுப்புவது.? சாத்தியமான முயற்சியா..?

1800 ஆண்டுகளுக்கு முன்பே சாதித்தான் கரிகாலன் .

எப்படி சாத்தியமாயிற்று..? அந்த சாதனை எப்படி நமக்குத் தெரியவந்தது..?  வழக்கம்போல் அதைச்சொல்வதற்கும் ஒரு ஆங்கிலேயர்தானே நமக்கு வேண்டும் .

வந்தார் ...ஆர்தர் காட்டன்.. மிகச்சிறந்த நீர்ப்பாசன பொறியியல் அறிஞர்.

1829 ம் ஆண்டு.. அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதியின் நீர்ப் பாசனத்  தலைமைப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன்...முதல் முறையாகக் கல்லணைக்கு வருகிறார்..

கி.பி. 1777 இல் மெக்கன்சி கையெழுத்து ஆவணங்களில் இவ்விடம்

 " அணைக்கட்டி ' என்று குறிக்கப்பட்டிருந்ததை ஏற்கனவே அறிந்திருந்தார் காட்டன்.

அது என்ன அணைக்கட்டி..?  அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இப்பகுதியை ஆய்வு செய்கிறார்.  12 அடி ஆழ குழி தோண்டி பார்க்கும் போதுதான் நீருக்குள் இருக்கும் அந்த கட்டுமான ரகசியம் அவருக்குத் தெரிந்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே, 1080 அடி நீளமும், 66 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட பாறைக் கற்களால் கட்டப்பட்ட தடுப்புச்சுவரைக் கண்டார்..

காவிரி ஆற்றின் நீர் தடுக்கப்பட்டதையும், தேவைப்படும் பொழுது மதகுகளின் வழியே பாசனத்திற்கு வெளிவிடப்பட்டதையும் அறிந்தார்..

இது எவ்வாறு சாத்தியம்..? தண்ணீரின் குறுக்கே கற்கள் அணை  எப்படி..? இதன் அடித்தளம் எவ்வாறு இருக்கும்.? இதை எப்படி அமைத்தார்கள்.? எப்போது ? பல ஆண்டுகள் ஆய்வு நடத்தினார்..

இரண்டாயிரம் ஆண்டு பழமையான தமிழர்களின் பொறியியல் அறிவு வெளிவந்தது.. உலக பொறியாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது..

ஆர்தர் வெளியிட்ட கல்லணையின் கட்டுமான இரகசியம் இதுதான்...

நாம் கடற்கரையில் நின்றிருப்போம்.. அலையடித்த நீர் நமது பாதங்களை தழுவும். அப்போது ஏற்படும். மணல் அரிப்பின் காரணமாக நமது பாதம் சற்று மண்ணில் புதையும்.. சற்று நேரம் இதே நிலை நீடித்தால், நமது பாதங்கள் ஒரு நிலைத்தன்மை பெற்று விடும். நமது பாதங்களை வெளியே எடுப்பதற்கு சற்று சிரமம் நேரும்.. இதுதான் கல்லணையின் மூலத் தொழில் நுட்பம்...

பெரிய பாறைக்கற்களை கொண்டு வந்து  நீருக்குள் போட்டார்கள்.. அது நீருக்குள் மூழ்கி தரைத்தளத்தை தொட்டு மண் அரிப்பின் காரணமாய் இன்னும் அமுங்கி ஒரு பலமான நிலைத்தன்மை பெறும்..பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஒட்டுப்பசை கொண்ட ஒரு வித களிமண்ணைத் தடவி அடுத்த பாறை.. இதே முறையில் அடுத்தடுத்த கற்கள்.. மணற் பகுதியான அடிப்பகுதி இப்போது கருங்கற்களால் ஆன அஸ்திவாரமாகிவிட்டது..( நீரை வெளியேற்றி, மணல் பகுதியில் ஆழமாய் குழி வெட்டி, கம்பி ஜல்லி மணல் சிமெண்ட் கொண்டு பில்லர் போட்டுத்தான் இப்போது ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுகிறோம்)

தொடர்ச்சியாய் கல்லின் மேல் கற்கள் போடப்பட்டு ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமாய் தடுப்பணை எழுந்தது.. இவ்வமைப்பை முழுதும் ஆராய்ந்த ஆர்தர் வாயிலிருந்து வெளிப்பட்ட முதல் வார்த்தை..

  " The. Grand Anaicut. "

மகத்தான அணை.

இரண்டாயிரம் ஆண்டுகால பழமையான தமிழனின் பொறியியல் திறன் வெளியுலகத்திற்கு தெரியவந்தது..

சர் .ஆர்தர் காட்டன் இவ்வாறு எழுதுகிறார்.

ஆழம் காண இயலாத மணற்படுகைகளில் நீருக்குள் எப்படி அடித்தளம் அமைப்பது என்பதை கல்லணை அமைப்பைப் பார்ந்து கற்றுக்கொண்டேன். இம்மகத்தான செயல் செய்த அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த பழமையான தொழில்நுட்பத்தில்தான் 1874 ம் ஆண்டு கோதாவரியின் குறுக்கே நான் தடுப்பணை ஒன்று கட்டினேன்.

அதன்பிறகு, கரிகாலன் கட்டிய அதே கல்லணையின் மேல், சில மாற்றங்கள்.. நீரொழுங்கி எனப்படும் ரெகுலேட்டர், மதகுககள் , கல்தூண்கள்  அமைக்கப்பட்டன..

1840 ஆம் ஆண்டு இன்று நாம் காணும் 32 அடி அகல பாலம் கட்டப்பட்டது.

தமிழகரசும் கரிகாலனுக்கு மணிமண்டபம், உருவச்சிலை எடுத்து பெருமிதமும் கொண்டது.

மழைக்  காலங்களில் தண்ணீரை தேக்க, பாசனத்திற்குத்  தண்ணீர் திறப்பு என்று கல்லணை இன்றும் தன் பணியைத்  திறம்படச் செய்கிறது..

எல்லாவற்றுக்கும் முன்னோடி என்றுமே தமிழன்தான் என்பதற்கு மேலும் ஒரு சான்றுதான் கல்லணை..

ஆக்கம்: அன்புடன்.. மா.மாரிராஜன்.
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.5.20

நம் மக்களின் அனுபவ அறிவு!!!!!


நம் மக்களின் அனுபவ அறிவு!!!!!

அனுபவ அறிவு

ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது! என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை

.'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’ என்று சொன்ன பாட்டி வானிலை அறிவியல் படித்தது இல்லை.

ஆடிப் பட்டம் தேடி விதை என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை

*முந்தா நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்* எனப் பாடிய தேரன் சித்தர் மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை.

செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன் எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை.

அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்?

அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?

இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?

ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு.

வள்ளுவன் சொல்லும் மெய்ப்பொருள் காணும் அறிவும்

பாரதி சொன்ன விட்டு விடுதலையாயிருந்த மனமும் சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.

மம்மி எனக்கு வொயிட் சட்னிதான் வேணும் க்ரீன் சட்னி வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது, 'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’ என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், 'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’ எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.

ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை. இந்த மௌனங்களும், அவசரங்களும் தொலைத்தவை தான் அந்த அனுபவப் பாடம்!

தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லிக் கொடுத்து புரோட்டின், கலோரி, விட்டமின் பற்றிய ஞானம் பெருகிய அளவுக்கு,

*'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு;*
*எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி*
*பலாப் பழம் மாந்தம்*
*பச்சைப் பழம் கபம்*
*புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்* என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

அதென்ன சூடு, குளிர்ச்சி? அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !

இந்த தெர்மாமீட்டர்ல உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என இடைக்கால அறிவியலிடம் தோற்றுவிட்ட அந்தக் கால அறிவியலின் அடையாளங்களை, வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது.

விளைவு? லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’ எனும் அம்மா,

'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’ என்று அக்கறை காட்டும் அப்பா.

பியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’ என எரிந்துவிழும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த அண்ணன் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது

*வயிறு உப்புசமா இருக்காமாந்தமாயிருக்கும் கொஞ்சம் ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’ என்ற அனுபவத்துக்குள் அறிவியல் ஒளிந்திருக்கிறது.*

*ஏழு மாதக் குழந்தைக்கு மாந்தக் கழிச்சல் வந்தபோது, வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.*

*'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’ என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.*

வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள அசரோன் என்ற பொருள் நச்சுத்தன்மைக் கொண்டது என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம்.

ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த அசரோன்காணாமல் போய்விடும் என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.

*பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா? 'பிள்ளை-வளர்ப்பான்’!'*

சளி பிடிச்சிருக்கா? கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க. மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;

மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா? ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;

வாய்ப் புண்ணுக்கு மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க

பித்தக் கிறுகிறுப்புக்க முருங்கைக்காய் சூப்,

மூட்டு வலிக்க முடக்கத் தான் அடை,

மாதவிடாய் வலிக்கு உளுத்தங்களி,

குழந்தை கால்வலிக்கு ராகிப் புட்டு,

வயசுப் பெண் சோகைக்கு கம்பஞ்சோறு,

வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்க வாழைத்தண்டுப் பச்சடி’

என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையு சில நேரம் மருந்துகள்;பல நேரம் மருத்துவ உணவுகள்.

காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி.

சுழியத்தைக் (ஜீரோவை கண்டுபிடித்து இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது.

'பை’ என்றால் 22/7 என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.

'ஆறறிவதுவே அதனொடு மனமே என மனதின் முதல் சூத்திரத்தை சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு 30 தலைமுறைகள் முன்பே சொன்ன தொல் காப்பியம் எழுதிய ஊர் இது.

இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?

வாட்சப்பிலும் முகநூலிலும் பெயரில்லாது பரப்பப்படும் செய்தியாக இல்லாமல், யாரோ நமக்காக நேரம் செலவுசெய்து அனுப்பிய சிறந்த பாடமாகக்கருதி பகிருங்கள்
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்.
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.1.20

சினிமா: மனதை நெகிழவைக்கும் வரலாறு!!!


சினிமா: மனதை நெகிழவைக்கும் வரலாறு!!!

அடியவன் சின்ன வயதில் சேலத்தில் படித்து வளர்ந்தவன். சேலத்துக்காரர்கள் எல்லாம் அதீத சினிமா ரசிகர்கள். நான் படித்த காலத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில்தான் அதிகமான திரையரங்குகள்.

அத்துடன் சேலத்தில் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் என்னும் படப்பிடிப்பு நிறுவனமும் (ஸ்டுடியோ) மிகவும் பிரபலம். சேலத்தை அறிந்தவர்கள் அனைவருக்கும் அது தெரியும்.

சுமார் 47 ஆண்டுகள் இயங்கிவந்த அந்த நிறுவனம் எண்ணற்ற கவிஞர்களையும் எழுத்தாளர்களையும், நடிகர்களையும் உருவாக்கியது என்றால் அது மிகையல்ல!

ஆனால் அந்த நிறுவனம் 1982ம் ஆண்டுடன் மூடு விழாக் கண்டது என்னும் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்,

10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்த அந்த நிறுவனத்தின் இடத்தில் இப்போது பல குடியிருப்புக்களும், வணிகக் கடைகளும்தான் உள்ளன.

சென்ற வாரம் சேலம் சென்றிருந்தபோது அதைக் கண்ணால் கண்டேன். அதன் மேன்மையான வரலாற்றை உங்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக இந்தப் பதிவு!

கீழே உள்ள காணொளியை முழுமையாகப் பார்க்க வேண்டுகிறேன்:



அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.11.19

நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இதைப் படியுங்கள்!!!!


நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் 
இதைப் படியுங்கள்!!!!

அன்பு நண்பர்களே வணக்கம். தற்போதைய சூழ்நிலையில் நாம் அனைவரும் 4 சக்ர வாகனம் 🚘 வைத்துள்ளோம்.

வருகின்ற *01/12/2019* முதல் அனைத்து வாகனத்திற்கும் *FasTag* கட்டாயம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாம் பலரும் நம்முடைய வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. அப்போது நாம் கண்டிப்பாக *டோல்கேட்டினை* கடக்கின்றோம். தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வங்கிகள்
சார்பாகவும் இவைகள் வழங்கப்படுகிறது.

வாகனத்தின் பதிவு(RC), இன்சுரன்ஸ், உரிமையாளரின் கலர் போட்டோ, ஆதார் கார்ட்_ ஆகியவற்றின் நகள்களை வழங்கி தங்கள்  வங்கிகளின் மூலமே பெற்று கொள்ளலாம்.

மொபைல் ஆப் மூலமாக ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.

*ரூபாய் 500/-* செலுத்தவேண்டும்.
இவற்றில் *100/-* ரூபாய் வாகனத்தில் ஒட்டகூடிய ஸ்டிக்கருக்கும், *200/-* ரூபாய் டெபாசிட்டாகவும், *200/-* ரூபாய் நமது கணக்கில் வரவு வைக்கப்படும்.
*இவைகளை பெற்றபின் தங்களுக்கென்று யூசர் ஐடி வழங்கபடும், பாஸ்வேர்ட் தாங்களே செட் செய்து கொள்ளலாம்*
---------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.8.19

இதுவும் விஷம்தான்!!!!


இதுவும் விஷம்தான்!!!!

அதிக விஷயம்... விஷம்.
-----------------------
சிந்திக்க!

இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.
படுத்தேன்.
வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர்
படுத்தேன்.
குப்புற படுக்காதீங்க என்றார்.
மல்லாக்க படுக்காதீங்க என்றார்
இன்னொருவர்..
படுக்கவிடாமல் படுத்தாறங்களே.

காலையில் நடக்க சொன்னார்கள் நடந்தேன் நேராக நடக்க கூடாது எட்டு போட்டு தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன். போதாது போதாது அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ..கேன்சர் உறுதியாக வராதாம்.!!

உருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
வாயு என்றார்... வாயில் படுவதை மறந்தேன்... உலக நாடுகளில் இது மட்டும்தான்... வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்...

இனிப்பை தொட்டுவிடாதீர்கள். அவ்வளவுதான்.. Sugar ஏற்றிவிடும் என்றார்... சரி என்று நிறுத்தினேன்.

நடக்கும் போது நண்பர் சொன்னார், low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்..

இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்... ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்... குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை... தந்திரமா குளிக்கனும் என்றார்..

காபி, டீ வேண்டாம்,
அரிசி கஞ்சி வேண்டாம்
பால் வேண்டாம்
ஐஸ் வாட்டர் வேண்டாம்
பாட்டில் ஜீஸ் வேண்டாம்
என்றார்கள்... சரி என்று பழகினேன்..

ஒன்று புரிந்தது.
ஒன்றும் தெரியாமல் இருந்தாலும் ஆபத்து,
அதிகமாக தெரிந்தாலும் ஆபத்து என்று.

Over qualification is disqualification
என்று எங்கோ படித்த நினைவு

Too much information will make you to suffer from distinguishing between useful And useless information.

நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில்,
உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி
உடம்பையே பாத்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...

எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து
ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..

வாழ்க்கை,
வாழை இலையில் விழுந்த ரசம் போல,
எந்தப் பக்கம் ஓடுது என்றே
தெரியாமல் ஓடுகிறது.

வாழ்க்கை ரசத்தை
குடிக்க முடியலையே?

அதிக விஷயம், விஷம்.

இயல்பாக இருங்க.

வாழ்க்கை யாத்திரை
சுகமான நித்திரையோடு
மாத்திரை இல்லாத
யாத்திரையாக வாழ்த்துகள்.
------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!