மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label நாட்டு நலன். Show all posts
Showing posts with label நாட்டு நலன். Show all posts

4.7.16

அப்போது இருந்தது ஒரு காலம்!!!!


அப்போது இருந்தது ஒரு காலம்!!!!

💥ஒரு காலம் இருந்தது.

💥மனிதாபிமானத்தையும் மனச்சாட்சியையும் எம்மில் பெரும்பான்மையினர் நேசித்த ஒரு காலம் இருந்தது.

💥கடவுளுக்கு பணிந்த காலம்.
💥சத்தியத்தை மதித்த காலம்.
💥நம்பிக்கையை காப்பாற்றிய காலம்.
💥வாக்குறுதிகளை பறக்கவிடாத காலம்.
💥அகிம்சைக்கு அடிபணிந்த காலம்.
💥பெண்களை போற்றிய காலம்.
💥நீதியை நிலைநாட்டிய காலம்.
💥நியாயத்தை துணிந்து கேட்ட காலம்.
💥பணத்துக்கு மதிப்பிருந்த காலம்.
💥பாசத்துக்கு கட்டுப்பட்ட காலம்.
💥நாடகக்கலை வளர்ந்த காலம்.
💥நடிப்புக்கு இலக்கணமிருந்த காலம்.
💥பயபக்தி என்ற சொல்லையே வணங்கிய காலம்.
💥சுவாமிமாரை கடவுள்களாய் பார்த்த காலம்.
💥வானொலிப் பாடல்களில் சுகித்திருந்த காலம்.
💥பழஞ்சோற்று உருண்டையை ருசித்த காலம்.
💥பனம்பாயில் படுத்துறங்கிய காலம்.
💥ஆறுகளில் எப்போதும் நீர் இருந்த காலம்.
💥முழுநிலவை சனங்கள் ரசித்த காலம்.
💥பத்திரிகைகைள் உண்மைகளை மட்டுமே சொன்ன காலம்.
💥கட்சிகள் மக்களுக்காய் உழைத்த காலம்.
💥கோயில்கள் சேவை செய்த காலம்.
💥மழை தவறாமல் பொழிந்த காலம்.
💥மலிவு விலையில் எல்லாம் கிடைத்த காலம்.
💥ஊழல் என்ற சொல் அறியாத காலம்.
💥தண்ணீர் விற்கப்படாத காலம்.
💥வயல்களில் கட்டிடங்கள் எழுப்பப்படாத காலம்.
💥கடிதங்கள் மட்டுமே இருந்த காலம்.
💥மீதிப் பணத்திற்கு மிட்டாய்களைத் தராத காலம்.
💥ஆபாசங்களை நம்பியிராத நடிகைகளின் காலம்.
💥பாடகிகள் நிலைத்து நின்று பாடிய காலம்.
💥மருந்தில் பழுக்காத மாம்பழங்கள் கிடைத்த காலம்.
💥நகைக்கடன் கடைகள் அதிகமிராத காலம்.
💥இராப் பிச்சைக்காரர்கள் வீடுதேடி வந்த காலம்.
💥விபத்துக்கள் அரிதாக இருந்த காலம்.
💥வீட்டு வாசல்களில் குடிதண்ணீர் வைத்திருந்த காலம்.
💥எல்லோரையும் கள்வர்களாய் பார்க்காத காலம்.
💥மருந்துக் கடைகள் குறைவாய் இருந்த காலம்.
💥புற்றுநோய் அதிகம் உயிரெடுக்காத காலம்.
💥உடலுழைப்பு அதிகமாய் இருந்த காலம்.
💥மின்வெட்டு பற்றி யாருமறியாத காலம்.
💥வண்ணத்துப் பூச்சிகளை இலகுவாய் பிடித்த காலம்.
💥வழுக்கல் இளநீரை மிகமலிவாய் குடித்த காலம்.
💥சிட்டுக்குருவிகள் முத்தத்துக்கு வந்த காலம்.
💥வாகன நெரிசல் இல்லாத காலம்.
💥இலவசங்கள் ஏதும் தரப்படாத காலம்.
💥அர்த்தமுள்ள பாடல்கள் எழுதப்பட்ட காலம்.
💥வார்த்தைகள் விளங்கும் சங்கீதம் வாழ்ந்த காலம்.
💥கலப்பில்லாத அழகுத் தமிழ் பேசிய காலம்.
💥வேப்பமரங்களும்,குயில்களும் நிறைந்திருந்த காலம்.
💥எல்லோருக்கும் நேரமிருந்த காலம்.
💥ஊர்கூடி தேர் இழுத்த காலம்.
💥இனிமேல் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காத ஒரு காலமிருந்தது.
ஒரு காலமிருந்தது.
💥அது நாங்களெல்லோரும்  அன்பில் திளைத்திருந்த காலம்.
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.11.15

இன்னும் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருப்போமா? அல்லது மாட்டோமா?


இன்னும் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருப்போமா? அல்லது மாட்டோமா?

என்ன வாத்தியார் குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள் என்று சொல்லாமல், கீழே உள்ள பத்திரிக்கைச் செய்தியை முதலில் படியுங்கள். கச்சேரியைப் பிறகு வைத்துக்கொள்வோம்:


படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும். உங்களுக்கு படிப்பதற்கு வசதியாக இருக்கும்!
---------------------------------------------------------------------------------------------------
இந்தப் பத்திரிக்கை க்ளிப்பிங்கை சங்கரன் கோயிலுக்குப் பெருமை சேர்க்கும் நமது வகுப்பறை மாணவர் திருவாளர் கணபதி நடராஜன் அவர்கள் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அதை உங்கள் பார்வைக்குக் கொடுத்துள்ளேன்.

தினமலர் நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் - 26-11-2015 அன்று இந்தச் செய்தி வெளிவந்திருக்கிறது. புதிய நாஸ்டர்டாமஸ் என்று பத்திரிக்கைக்காரர்களே குறிப்பிட்டு உள்ளார்கள்.

என்ன சொல்கிறார் இந்தப் புதியவர்? நடக்க உள்ளதாகக் கணித்து இரண்டு முக்கியமான செய்திகளைச் சொல்கிறார்:

1. 15-5-2016 அன்று கரீபியன் கடலில் உள்ள தீவு நாடான போர்ட்டோரீகோவில் அதிகாலை 2.20 மணிக்கு 5.6 மைல் அளவுள்ள  விண்கல் பூமி மீது வந்து மோதும். அதனால் நம் பூமி முழுவதும் அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படும். 120 கோடி பேர்கள் பலியாவார்கள்.

2. 16-6-2016 அன்று ரஷ்யா மற்றும் சீனா இரண்டும் சேர்ந்து 3ம் உலகப் போரைத் தொடங்கும். 25-10-2016 அன்று அக்கூட்டணி உலகப் போரில் வெற்றி பெறும்.
--------------------------------------
இது சம்பந்தமாக இணையத்தைத் தோண்டிய போது நிறைய செய்திகள் கிடைத்தன. இரண்டு மூன்று செய்திகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.

அந்த புதிய நாஸ்ட்ரடாமஸ் இவர்தான். நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்
Pastor Ricardo Salazar in a prophecy video
--------------------------------------------------------------------------


ரஷ்யா மற்றும் சீனா நாட்டு அதிபர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்
The pastor claims Russia and China will team up against a weaker USA


----------------------------------------------------------------------------------------------------------
அந்தப் புதிய நாஸ்ட்ரடாமஸ் கூறிய ஏதாவது இதுவரை நடந்திருக்கிறதா என்ற விவரம் எதுவும் இல்லை. இப்போது அவர் கூறியிருப்பது நடக்குமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

-------------------------------------------------------------
எனது கருத்து:

isis தீவிரவாதிகளின் சமீபத்திய அட்டூழியங்களை, குறிப்பாக பாரீஸ் நகரில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள், ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய கொடூரம் ஆகியவற்றை பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்வார்கள் என்று உள் மனது சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்! நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

அதெல்லாம் ஒன்றும் நடக்காது. பழநிஅப்பன் பார்த்துக்கொள்வார்.

அத்துடன் ஒரிஜினல் நாஸ்ட்ரடாமஸ் 21ம் ஆண்டில் இந்தியா சூப்பர் பவர் ஆகும் என்று எழுதிவைத்திருக்கிறார். அது உண்மையாகாமல் போய்விடுமா என்ன? ஆகவே நம்பிக்கையோடும் துணிச்சலோடும் இருங்கள்.

நல்லதே நடக்கும்!
நல்லதே நடக்கும்!
நல்லதே நடக்கும்!

அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.1.14

எதிர்காலத்தில் இனி அதுவும் இலவசம்தான்!

 

எதிர்காலத்தில் இனி அதுவும் இலவசம்தான்!

நம் மக்களுக்கு மிகவும் பிடித்தது இலவசம். அதற்கு மயங்காதவர்களே கிடையாது. விருப்பப் படாதவர்களே கிடையாது (என்னையும் சேர்த்துத்தான்)

அதை நன்கு உணர்ந்த நம் அரசியல் பிரமுகர்கள், இலவசமாக ஒவ்வொன்றாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் இப்போது கொடுத்திருப்பது (துவக்கம்தான் என்றாலும்) இரண்டு கைகளையும் கூப்பி வரவேற்க வேண்டிய இலவசம்!
அப்படி எதைப் புதிதாகக் கொடுத்திருக்கிறார்கள் என்கிறீர்களா?

ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள் - தெரியும்!

V
V
V
V
V
V
V
V
V
V



பத்திரிக்கைச் செய்தி: நன்றி இந்து நாளிதழ் 24.1.2014

என்ன உண்மையிலேயே நல்ல செய்திதானே!

பெங்களூரில் பிள்ளையார்சுழி போட்டுத் துவங்கியிருக்கிறார்கள். பிறகு அதை தங்கள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த இருக்கிறார்கள். இதைப் பார்த்து மற்ற மாநிலங்களும் இந்த வசதியைத் தங்கள் மாநில மக்களுக்குக் கொடுக்கத்துவங்கும்.

வெளி மாநிலத்தில் உள்ள ஒரு நகரில் சென்ற மாதம் பார்த்தேன். ஒரு பெரிய வணிக வளாகத்தில் (பல தளங்களைக் கொண்ட அந்த வணிக வளாகத்தில் 250 கடைகளும், ஒரு தளத்தில் 5 சினிமா அரங்குகளும் உள்ளன) வைஃபி வசதியை இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள். அங்கே செல்பவர்கள் தங்கள் மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் போன்களின் மூலம் இணையத் தொடர்பை உண்டாக்கிக் கொள்ளலாம்.

இந்த வசதி மற்ற நாடுகளில் உள்ளதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்!

அன்புடன்
வாத்தியார்

=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5.11.13

விலையை கேட்டாலே கண்ணீர் வருது!

 
விலையை கேட்டாலே கண்ணீர் வருது!

எதெதற்குக் கண்ணீர் வரும் என்று எழுதினால் பக்கம் பக்கமாக எழுதலாம். அப்படி எல்லாம் எழுதி உங்களை இம்சிக்க விரும்பவில்லை. ஒரே ஒரு
செய்தியை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

வெங்காயத்தை நறுக்கும் போது அல்லது வெட்டித் துண்டுகளாக்கும் போதுதான் கண்ணீர் வரும் என்பதில்லை! இப்போது நாளுக்கு நாள் உயர்ந்து
கொண்டேயிருக்கும் அதன் விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது.

ஒரு நடுத்தரக் குடும்பத்திற்கு நாள் ஒன்றிற்கு அரை கிலோ வெங்காயமாது சமையலுக்குத் தேவை. இன்று வெங்காயம் விலையால் செஞ்சுரி அடித்திருக்கிறது.. ஒரு கிலோ வெங்காயத்தின் வில்லை Rs.100:00

இன்னோவா காரில் போகிறவனுக்கு விலையைப் பற்றிக் கவலையில்லை. இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கின்றவன் என்ன செய்வான்
சொல்லுங்கள்?

பனை ஏறிவிழுந்தவனை கடா ஏறி மிதித்ததாம்’  என்ற கிராமத்துக் கதை ஒன்று உள்ளது. அதாவது பனை மரத்தின் உச்சியில் இருந்து தவறி
விழுந்தவன், ‘அம்மா...சாமி.. அய்யோ ...சாமி’ என்று எழுவதற்குள், அந்தப் பக்கம் தறிகெட்டு ஓடி வந்து கொண்டிருந்த காளை மாடு ஒன்றும் அவனை
மிதித்துவிட்டுச் சென்றதாம். ஒரே நேரத்தில் இரண்டு விபத்துக்கள்.

அதுபோல ஒரே நேரத்தில் இரண்டு அவலங்கள். மழை அதிகரித்துள்ளதால் வெங்காயத்தின் விளைச்சல் குறைந்து, வரத்தும் பாதியாகக் குறைந்துள்ள தாம். நியாயமில்லாத மொத்த வியாபாரிகளின் பதுக்கலும் சேர்ந்து விலை உயரக் காரணமாம்.

அரசு என்ன சொல்கிறது?

Onion price rise may be due to hoarding: Centre

பதுக்கி வைத்திருக்கிறவனின் கிடங்குகளில் ரெய்டு நடத்தி, ஆசாமிகளை உள்ளே பிடித்துப் போட வேண்டியதுதானே?

ஆளுங்கட்சிகள் மற்றும் இன்றி எதிர்கட்சிகளும் இது பற்றிக் கவலைப் படாமல் இருக்கின்றன.

அவர்களுக்கு இதையெல்லாம் விட முக்கியப் பிரச்சினைகள் பல உள்ளன!

அடுத்து வரவுள்ள பாராளுமன்றத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது? யாருடன் கூட்டு சேர்வது? அதுதான் முக்கியப் பிரச்சினை.

நீங்களும் நானும் அவதிப்பட்டால் அவர்களுக்கு என்ன கவலை? நாட்டு நலனில் என்ன அக்கறை?

முன்பு ஒருமுறை சூப்பர் ஸ்டார் சொன்னதைப்போல, கடவுள்தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்


அடுத்த (அலசல்) புதிர் போட்டி நாளை வெளிவரும். பொறுத்திருங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!