மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Philosophy. Show all posts
Showing posts with label Philosophy. Show all posts

6.9.18

தத்துவமேதையும் உடன் பயணித்த சிறுமியும்!!!!


தத்துவமேதையும் உடன் பயணித்த சிறுமியும்!!!!

தத்துவமேதையும் உடன் பயணித்த சிறுமியும்!!!!

ஒரு விமானத்தில்,,,தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்.......,

" தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை"....,அந்த சிறுமியிடம் கேட்டார்,,..!!

"உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா".....? என்றார்.

படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,

"என்ன மாதிரி கேள்விகள்".....? என்று சிறுமி கேட்டாள்.....!!

"கடவுள் பற்றியது".....!!
ஆனால்...,கடவுள், நரகம்,சொர்க்கம், புண்ணியம், பாவம் என எதுவும் கிடையாது....!!
"உடலோடு இருக்கும் வரை உயிர் "......!! "இறந்த பிறகு என்ன"......? தெரியுமா என்றார்....!!

அந்த சிறுமி யோசித்து விட்டு........ ,"நானும் சில கேள்விகள் கேட்கட்டுமா"......? என்றாள்.

ஓ எஸ்..! "தாராளமாக கேட்கலாம்".. என்றார்....!!

ஒரே மாதிரி புல்லை தான்.....,
பசு,
மான்,
குதிரை
உணவாக
எடுத்துக்
கொள்கிறது.....!!
ஆனால்,
வெளிவரும் 'கழிவு"...( shit ) ஏன் வெவ்வேறாக இருக்கிறது......!!!

"பசுவிற்கு சாணியாகவும்",,,,,
"மானுக்கு சிறு உருண்டையாகவும்"......,
"குதிரைக்கு கட்டி கட்டியாகவும் வெளி வருகிறது".....!!
'ஏன் அப்படி'....? என்று கேட்டாள்.

'தத்துவவாதி'." இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை".......!!

'திகைத்துவிட்டார்'......!!!

"தெரியவில்லையே".....,என்று கூறினார்....!!

கடவுளின் படைப்பில் நிகழும் மிக சாதரண விசயமான....,"உணவு கழிவு பற்றிய ஞானமே"..... நம்மிடம் இல்லாத போது பின் ஏன் நீங்கள் கடவுள்,சொர்க்கம், நரகம் பற்றியும், "இறப்புக்கு பின் என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்".......?

"சிறுமியின் புத்திசாலித்தனத்தால்"......,

"தத்துவமேதை வாயடைத்து போய்விட்டார்"......!!

"எவரையும் குறைவாகவும் எடை போடக்கூடாது"......!!

"தலைக்கனமும் கூடாது"......!!

"கற்றது கைமண் அளவு",.....!! "கல்லாதது உலகளவு".....!!!
----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.12.16

சின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம்!!!


சின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம்!!!

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா  அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன  பிரியும், பிரிந்தன புணரும்.

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்

விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.8.16

மனவளம்: வாழ்வென்பது எது வரை?

மனவளம்: வாழ்வென்பது எது வரை?

சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......!!!

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!

தேவைக்கு செலவிடு........

அனுபவிக்க தகுந்தன அனுபவி......

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்......

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......

போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......

ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே,

உயிர் பிரிய-வாழ்வு......

சுற்றம்,நட்பு,செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை,ஆரோக்கியமாக இரு......

உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......

அவர்களிடம் அன்பாய் இரு.......

அவ்வப்போது பரிசுகள் அளி......

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........

அடிமையாகவும் ஆகாதே.........

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
 பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
 இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!

பெற்றோரை மதிக்காத குழந்தைகள்
 உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......

உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக்கொள்ளலாம்-பொறு
 உரிமை அறிவர்,கடமை அறியார்

 அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி-அறிந்துகொள்.

இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,

ஆனால்......

எல்லாவற்றையும் தந்துவிட்டு,பின் கை
 ஏந்தாதே,

எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
 வைத்திருந்தால்,

எப்போது சாவாய் என-எதிர்பார்த்து
 காத்திருப்பர்.

மாற்ற முடியாத தை மாற்ற முனையாதே,

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
 வதங்காதே.....!!!

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு
 பாராட்டு-நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு.....

நடை பயிற்சி செய்து.....

உடல் நலம் பேணி......

இறை பக்தி கொண்டு......

குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி
 மனநிறைவோடு வாழ்-இன்னும்......

இருபது,முப்பது,நாற்பது ஆண்டுகள்.
சுலபமாக ஓடிவிடும்......!!!

அதற்கு தயாராகு......!!!

படித்ததில் பிடித்தது......!!!
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.6.16

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?

இதற்கான  விடையை சீன தத்துவ ஞானியான லா வோ த் ஸவின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.

'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.

'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா' என்று ஞானி கேட்டார்.

'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.

'அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.

'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.

'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.

'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.

'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார். ”சரி” என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனைக் காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

'அது கிடக்கட்டும்' என்ற ஞானி 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.

'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்'

'முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?'

'இல்லை'

'அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?' விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.

'அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்' என்று கூறி விடைபெற்றார் ஞானி.

ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை .

இன்று எது
உன்னுடையதோ
அது நாளை
வேறு ஒருவருடையது.
எங்கிருந்து
பெறப்பட்டதோ
அது அங்கேயே
திரும்பப்பெறப்படும்.
சந்தேகம் என்பது
கொடிய நோய்.
மரணமே முடிவு.

நம்பிக்கை என்பது
உயிரைப் போன்றது.
அதுவே நிரந்தரமான
மகிழ்ச்சியாகும்.

நம்பிக்கையோடு
வாழ்வோம்.
மகிழ்ச்சியைப்
பெறுவோம்.
---------------------------
படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க்கைத் தத்துவம்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!