மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Good Thoughts. Show all posts
Showing posts with label Good Thoughts. Show all posts

8.10.20

உண்மையான நம்பிக்கை எது?


உண்மையான நம்பிக்கை எது? 

ஒரு ஊரில் யாருமில்லாத ஒரு ஏழைப் பெண் இருந்தாள். அவளிடமிருந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.


ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொண்ட அவர், அந்த பெண்ணிடம், “ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது” என்று கடிந்து கொண்டார்.“மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”


“என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொல்லிகிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே…. என்னமோ போ…. இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று கறாராக கூறிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.அவர் விளையாட்டாக சொன்னதை, அந்த பெண் மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள்.மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்துவிடுகிறாள்.சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்துவிடுகிறது.

“என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?”என்றார். “எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை” என்றாள் அந்த பெண்.“என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா? நம்பமுடியலியே…. ” என்று கூறும் சந்நியாசி அவள் ஆத்தை தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்கிறார்.

ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தாண்டு பார்க்கலாம்” என்கிறார் அந்த பெண்ணிடம். பால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிடுகிறாள்.நடந்ததை பார்த்த  சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம். “ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது? ஆடை  நனைந்துவிடுமே…? என்று பலவாறாக யோசித்தபடியே,ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் கால் உள்ளே செல்கிறது. சன்னியாசி திடுக்கிடுகிறார்.

“அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து. அந்த பெண் பணிவுடன், “ஐயா…. உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக் கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….? தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு!” என்கிறாள். சந்நியாசி வெட்கி தலைகுனிகிறார்.

கடவுள் மேல் நமது நம்பிக்கை வெறும் உதட்டளவில் இல்லாமல்,உள்ளத்தில் இருந்து வந்ததாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவான் அந்த மாயக் கண்ணன்

-----*சேதுராமன் லெட்சுமணன்** .
-------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.8.20

காலத்தின் ஆளுமை பற்றி வாலி அவர்கள் அசத்தலாகச் சொன்னது!!!!


காலத்தின் ஆளுமை பற்றி வாலி அவர்கள் அசத்தலாகச் சொன்னது!!!!

*கவிஞர் வாலி ஐயாவின் "நினைவு நாடாக்கள்"*

*செருக்கு மட்டுமல்ல; சூழலும் சிலர் சரிவுக்குக் காரணமாகிறது.*

இதைத்தான் 'விநாச காலே விபரீத புத்தி!’ என்று சாத்திரங்கள் சாற்றுகின்றன. காரியங்களை நாமறிவோம்; காரணங்களை, நாயகனே அறிவான்!

*இதனை எண்ணுங்கால் - திரைத் துறையில் சிலரது தாழ்வு - என்னைத் திகைக்கவைக்கிறது!*

'இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்!’இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்தபோதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்!

எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்; அவருக்கா இப்படிஒரு சிரமம்?

ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன்.

அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய்! வாலி!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்கச் சிரிக்க அளவளாவிவிட்டு, ''வாலி! உன் டிரைவரைவிட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே!''

எவ்வளவு பெரிய நடிகர்! எம்.ஜி.ஆர்; சிவாஜி படங்களில் அவர்களைவிட அதிகம் சம்பளம் வாங்கி யவர்! படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி - பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?

என் வீட்டு வாசலில் ஒரு Taxi; ஒரு நடிகை! என்னைப் பார்க்க வந்தவர், 'வாலி சார்; எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; நான் ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்!’ என்று சொன்னதும் - நான் நூறு சுக்கல்களாய் நொறுங்கிப் போனேன்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை.
நான் கவனித்துவிட்டேன். ஓடிப் போய் அவரருகே சென்று, 'நமஸ்காரம் அண்ணா! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன்தான்; இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி!’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரை வணங்குகிறேன்.

'ஓ! நீங்கதான் அந்த வாலியா?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன் -

அவர் தொட்டதால் அல்ல; அவரை மக்கள் கவனியாது விட்டதால்!

காலம் எப்படியெல்லாம் காட்டுகிறது - தன் ஆளுமையை! இப்போது எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை!

என்னிடம் கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய *திரு.இளங்கோவன்!*

என்னிடம் சிகரெட் கேட்டவர் 'மாடி வீட்டு ஏழை’யான *திரு.சந்திரபாபு அவர்கள்!*

நாடகம் எழுதித் தரக் கேட்டவர் - நடிகையர் திலகம் *திருமதி.சாவித்திரி அவர்கள்!*

எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் - தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - *திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர்!*

இவர்களைவிடவா நான் மேலானவன்? எனவே எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்: *அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!*
-------------------------------------------------------
படித்ததில் நெகிழ்ந்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.7.20

கேஜ்ரிவாலும் அரசாங்க உத்தியோகமும்!


கேஜ்ரிவாலும் அரசாங்க உத்தியோகமும்!

டெல்லி  முதல்வருக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது...*

*கணவன், மனைவி* இருவரில் யாராவது ஒருவர் தான் *அரசு சம்பளம்* வாங்க வேண்டும் .

அது மாநில அரசாக இருந்தாலும் சரி.

 மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி.

 சட்டம் உடனடியாக அமுலுக்கு வருகிறது.

 *இருவர்களில் ஒருவர் ராஜினாமா செய்தாக வேண்டும்.*

கெஜ்ரிவாலின் அதிரடித் திட்டம்...👏👌

குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாய
அரசு வேலை

முதலமைச்சரின் புதிய திட்டம்

இதனால் அனைவரும் மகிழ்ச்சி. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மக்கள் அதிக ஆர்வம். மீண்டும் அவரே முதல்வர் என முதல்வருக்கு பாராட்டு

 1.இத்திட்டத்தின்படி குடும்பம் என்பது கணவன் மற்றும் மனைவி இரண்டு பேர் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளபடும்

 2. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவருக்கு கட்டாய அரசு வேலை  வழங்கபடும்

3. ஏற்கனவே கணவன் மனைவி இரண்டு பேரும் அரசு பதவியில் இருந்தால், யாராவது ஒருவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது ஒருவர் பதவி பறிக்கப்படும் . ராஜினாமா செய்தவர்கள் தனியார் துறையில் வேலை செய்யலாம். அவர்கள் அரசு துறையில் பணியாற்ற வேண்டும் என நினைத்தால், அதற்கு அரசும் சம்மதித்தால் அவருக்கு contract   சம்பளம் Rs. 10, 000 மட்டுமே வழங்கபடும்.

3. திருமணம் ஆகாத,  ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்ய நினைத்தால், அவர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக அரசு வேலையை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அது  சட்டபடி குற்றம்

4.  இத்திட்டத்தின் படி  குறைந்தது ஒருகோடிக்கு  அதிகமான சொத்து உள்ள குடும்பங்களுக்கு  அரசு வேலை கிடையாது. அவர்கள் PAN Card, Income tax விவரங்களை அரசு சோதனை செய்யும்.

5. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர்  மத்திய அரசு ஊழியர் என்றால், நல்ல ஊதியம் பெறுபவர் என்றால் மற்றவருக்கு  மாநில அரசு வேலை கிடையாது.

6. இத்திட்டத்தின் படி எந்த ஒரு நபரும் , வேலைக்கு சேர்ந்தது முதல் 30   வருடம் மட்டுமே அரசு வேலை செய்ய வேண்டும். அதற்கு மேல் வேலை செய்தால் குற்றம்

7.ஏற்கனவே அரசு பதவியில் இருப்பவர்கள் வருமான வரித்துறையின் சோதனைக்கு உட்படுவார்கள். அவர்கள் சொத்து மதிப்பு ஒருகோடிக்கு மேல் இருந்தால் அது குற்றம். மற்றும் பதவி பறிக்கப்படும்

8.  இதன்படி புதிதாக அரசு வேலைக்கு ஆள் எடுக்கும் போது தற்போதுள்ள கல்விதகுதி, உடற்தகுதி,    எழுத்துதேர்வு தகுதி, ஜாதி தகுதி,  பிற சிறப்பு தகுதி(வாரிசு தகுதி, தனியார் துறை அனுபவம், விளையாட்டு வீரர்கள்... )   மட்டும் இல்லாமல் கீழ்கண்ட புதிய  தகுதியும் கணக்கில் கொள்ளட்டும்.

a.   ஒருகோடிக்கு மேல் குடும்ப சொத்து அல்லது வருமானம் இருக்ககூடாது.

b.  குழந்தைகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

c.  இதுவரை அரசு  வேலை இல்லாத குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

d.ஏற்கனவே கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் மத்திய மாநில அரசு வேலையில் இருந்தால் மற்றவர் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பதே குற்றம்

f. கிராமத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

g. வேலைக்கு சேர்ந்தவர்கள் எந்தெந்த தகுதி அடிப்படையில் சேர்க்கப்பட்டார் என்ற விவரம் ஒளிவுமறைவின்றி தனியாக  வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியபடுத்த படும்.,

h. ஒப்பந்த தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உள்ள விதவை பெண்களுக்கு முன்னுரிமை

இப்படிப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்னும் உன்னதமான திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம்  கீழ்கண்ட் நன்மைகள் நடைபெறும்

a. குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை கிடைக்கும்.

b. சமூகத்தில் குற்றங்கள் குறையும்

c. குடும்பத்தில் ஒருவர் அரசு வேலை செய்யும்போது அரசின் மற்ற திட்டங்களை மிக எளிதாக அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியபடுத்துவார்

d.  குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அரசு வேலை என்பதால்  , அரசியல் மற்றும் பண பலத்தால் ஒரே குடும்பத்தில் அதிக அரசு வேலை பெறுவோர் வேலை பறிக்கப்படும். அந்த பதவி மற்ற ஏழை குடும்பத்திற்கு வழங்கப்படும்.

e. பணக்காரர்களுக்கு அரசு வேலை கிடையாது என்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அரசு வேலை கிடைக்கும். வாழ்வு மகிழ்ச்சியாகும்

f.  திருமணம் ஆகாத அரசு ஊழியர்  இரண்டு பேர் திருமணம் செய்யும்  போது யாராவது ஒருவர் அரசு வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அந்த வேலை இன்னொரு குடும்பத்திற்கு கிடைக்கும்.

g. குழந்தைகள் உள்ளவர்களுக்கு புதிதாக அரசு பணியில் முன்னுரிமை என்பதால் அந்த குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகும்

h. 30 வருடத்திற்கு மேல் அரசு பதவியில் இருக்ககூடாது என்பதால் வீணாக அரசு அதிகார சுகத்தை அனுபவிப்பவர்கள் பதவி பறிக்கப்படும். அந்த பதவி மற்ற ஏழை குடும்பத்திற்கு கொடுக்கபடும்

i. இதன்மூலம் தனியார் துறையில் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை செய்யும் ஏழை, நடுத்தர குடும்ப உறுப்பினர்கள் பலகோடி பேருக்கு  அரசு வேலை கிடைக்கும்.

j. இதன் மூலம் இதுவரை அரசு வேலை இல்லாத குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்

k.  ஏற்கனவே உள்ள தகுதியோடு கூடுதலாக சில தகுதிகளை சேர்த்துள்ளதால் சமுக நீதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்தந்த சமூகத்தில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும்

i.  கிராமத்தில் உள்ளவர்களுக்கு அரசு  வேலை கிடைக்கும்

j. எந்தெந்த   தகுதி  அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தார் என்ற விவரம்  வெப்சைட்டில் வெளியிடுவதால் அரசை ஏமாற்றி யாரும்  அரசு வேலையில் தரமுடியாது. அப்படி சேர்ந்தாலும் அவர்கள்  மீது பொதுமக்கள் புகார் அளிக்க முடியும்.  ,

k. ஒப்பந்த தொழிலாளர்   மற்றும் குழந்தைகள் உள்ள விதவை வாழ்வு வசந்தமாகும்

தற்பொழுது அரசு வேலையில் ஏமாற்று சக்திகள் அதிக அளவில், பல்வேறு மறைமுக வழியில் புகுந்து கொண்டதால், வேலையே செய்யாமல்  ஒரு லட்சத்திற்கும் அதிகமான சம்பளம் வாங்குவதால் மற்றும் குறைவான அரசு வேலையே இருப்பதால், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு அரசு வேலை என்பது எட்டாத கனியாகவும், நிறைவேறாத கனவாகவும் உள்ளது. இதனால் படித்த பல குடும்பம் பல ஆண்டுகளாக  ஏழ்மை நிலையில் உள்ளது. 

எனவே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்னும் இந்த உயரிய திட்டம் செயல்படுத்தபடும்போது அனைத்து குடும்பமும் மகிழ்ச்சி அடையும்.   

       மொத்தத்தில்  அரசு வேலை என்பது ஏழை எளிய  நடுத்தர  மக்களின் வாழ்வாதாரத்தை உயர்துவதற்கும், லஞ்சம் ஊழல் இல்லாமல் நேர்மையாக பணி செய்வதற்கும் தான்.

பணக்காரர்களும், சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களும், அடிக்கடி போராட்டம் நடத்தி அரசை மிரட்டுபவர்களும், லஞ்சம் ஊழல் செய்பவர்களும், பரம்பரையாக அரசு பதவியில் இருப்பவர்களும், அரசை ஏமாற்றி குறுக்கு வழியில் வந்தவர்களும்    நீக்கபட்டால் அரசு அலுவலகம் சிறப்பாக இயங்கும்

மேலும் இத்திட்டத்தை தொடங்க நினைப்பது டெல்லியில் உள்ள ஏழை மக்களின் நாடிதுடிப்பை அறிந்த,  மக்களின் முதல்வர் திரு. கெஜ்ரிவால் அவர்கள். அவர் இரண்டு முறை முதல்வர் ஆனவர். இத்திட்டத்தை தொடங்கியதும் மூன்றாவது முறையாக அவரே முதல்வர் ஆவார்.

  இவரை போலவே மற்ற அனைத்து மாநிலங்களிலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் பெரும் எதிர்பார்பாக உள்ளது. வாழ்க கெஜ்ரிவால். வளர்க அவரது புகழ். தொடரட்டும் அவர் மக்கள் பணி. இவர் இந்த திட்டத்தை தொடங்க இருக்கிறார் என்பது அவரது கட்சியினர் மூலம் பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனால் அனைவரும் அவரை ஊடகம் மற்றும் சமுக வலைதளம் மூலம் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.5.20

அழியாத பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.


அழியாத பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.

*இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த 
ஊரடங்கு.*

*1. மக்களே  நீங்கள் நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும் குடும்பத்துக்காக வருமானம் ஈட்ட வேண்டும். 
இன்று முதல் ஒரு வருடத்திற்கு சிக்கனமாக இருக்கவும் தேவையற்றவைகளுக்கு செலவு செய்ய வேண்டாம்.*

*2. கூடிய வரையில் சிறு வியாபாரிகள் கடையில் பொருள்களை வாங்குங்கள். மால் மற்றும் சூப்பர்மார்கெட்களை தவிர்த்து விடுங்கள்.*

*3. Amazon /flip cart போன்ற online நிறுவனங்கள் செய்தித்தாள்களில் 5 அல்லது 6 பக்கங்களை  ஆக்கிரமித்து விளம்பரம் கொடுத்தார்கள் வியாபாரத்தை பெருக்கினார்கள் ஊரடங்கு சமயத்தில் எல்லாம் காணாமல் 
போனார்கள் ஒரு வருடத்திற்கு நாம் அவர்களைத் தவிர்த்தால் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.*

*4. நகைக் கடைகளை புறக்கணியுங்கள் இன்று சவரன் 5000 ரூபாய்களைத் தொட்டு உள்ளது. ஒரு கிராம் வாங்க வேண்டும் என்றால். நீங்கள் புற்றீசல் போல நகைக் கடைகளை ஆக்கிரமித்தால் லாபம் நகை கடைக்காரர்களுக்கே. இந்த 2 மாத நஷ்டக் கணக்கை உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் ஜாக்கிரதை. ஒரு வருடத்திற்கு நீங்கள் நகைகள் வாங்கவில்லை என்றால் ஊரில் பாதி நகைக்கடைகள் காணாமல் போய் விடும்.*

*5. திரை அரங்குகளை புறக்கணியுங்கள். எந்த ஹீரோவும் நமக்கு ஒரு சிறு நன்மை கூடச் செய்யவில்லை. இந்த ஊரடங்கு முடிந்த  நேரத்தில். மனைவியின் தாலியை அறுத்து ஹீரோவின் 70 அடி cut out வைக்க வேண்டாம். அதற்குப் பால் ஊற்றவும் வேண்டாம். ஏன் என்றால் அந்தத் தகுதி அவர்களுக்கு இல்லை. 2000 ரூபாய் கொடுத்து பிடித்த நாயகன் படத்தை முதல் ஷோ பார்ப்பதினால் உங்கள் குடும்பங்களில் மங்களம் பெறப் போவதில்லை. ஒரு மூன்று மாதங்கள் பொறுங்கள் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்த சில நாட்களே ஆன படம் என்று தொலைக்காட்சிகளில் நீங்கள் காணலாம்.* 

*6. பெரும் குடிமகன்களுக்கு ஒரு வார்த்தை 2 மாதம் rehabilitation center செல்லாமல் குடியை நிறுத்திய  இந்த ஊரடங்கிற்கு நன்றி சொல்லுங்கள். படிப்படியாக குடியை நிறுத்தி உங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.*

*7. வாகனம் மற்றும் கார் வாங்குவதை அறவே தவிர்த்து விடுங்கள். ஏன் அரசாங்கம்  விதித்த BS 4 வாகனங்கள் நிறைய  உள்ளன. அதை விற்பதற்கு வாகன உற்பத்தியாளர்கள் நீதிமன்றம் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ discount  என்கிற பெயரில் RTO ஆபீஸ் மூலமாக உங்கள் தலையில் கட்டி விடுவார்கள் ஜாக்கிரதை. அவர்களைப் பொறுத்தவரை 
ஆங்கிலத்தில் zero inventory Management என்கிற கொள்கையில் BS 4 வாகனங்களை கழித்துக் கட்டி விடுவார்கள் 
நீங்கள் ஏமாற வேண்டாம்.*

*8. 35000 ரூபாய் பெறுமான AC இன்று 10000 ரூபாய்க்கு விற்பனை என்று கூவிக் கூவி விற்பார்கள். இதனால் நஷ்டம் நமக்கே. ஏன் என்றால் Quality Compromise strategy will be adopted. அதே போல சீனாவில் இருந்து வரும் மொபைல் போன்றவைகளை online shop மூலமாக ஏகப்பட்ட discount கொடுத்து உங்கள் கைகளை அரிப்பு எடுக்கச் செய்வார்கள் ஜாக்கிரதை. ஒரு வருடம் மொபைல் வாங்கவில்லை என்றால் நமது குடி முழுகிப்போய் விடாது.*

*9. மக்களே வாழ்விற்கு இது தேவை என்கிற நிலை வந்தால் மட்டுமே அந்தப் பொருள்களை வாங்குங்கள்.  அகலக்கால் அல்லது ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நிரந்தர கடன்காரனாக அல்லது குடிகாரனாக மாறி 
விடாதீர்கள்.*

*10. கடன் அட்டை (Credit Card ) உபயோகத்தை கூடிய அளவு தவிர்த்து விடுங்கள். வரவு எட்டணா  செலவு பத்தணா என்கிற பாடல்களை நினைவு கொள்ளுங்கள்.*

*11.குழந்தைகளே தயவு செய்து உங்கள் பெற்றோர்களை வருத்தாதீர்கள். என் friend I Phone 12 லேட்டஸ்ட் மாடல் வைத்து* *இருக்கிறான் அதே போல எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள்.* *விரலுக்கு தகுந்த வீக்கம் வேண்டும்.*

*இன்னும் ஒரு ஆண்டு நமக்கு சோதனையான காலம். அதைக் கடந்து விட்டால் இன்று புறநகரில் 70 லட்சம் விற்கும் வீடு 50 லட்சத்திற்கு வந்து விடும் பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஒரு வருட பொறுமை உங்களை 20 லட்சம் வரை சேமிப்பிற்கு வழி வகுத்து இருக்கிறது. அதே போல தங்கம் விலையும் நீங்கள் ஒரு வருடம் வாங்க வில்லை என்றால் அடுத்த வருடம் பாதி விலையில் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தயவு செய்து காத்திருக்கவும்.*

*ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்கிற எம்ஜிஆர் ன் பாடல் வரிகள்  இன்னும் வருடத்திற்கு நமக்குத் தேவை என்பதை மறந்து விடாதீர்கள்.*

*சிக்கனமும் சேமிப்பும் நமக்கு சோறு போடும். ஊதாரித்தனம் நமது வம்சத்தை அழித்து விடும் ஜாக்கிரதை.*

*கலியுகத்தின் கொடுமைகளை இன்னும் ஒரு வருடம் நாம் கண் முன்னே காணப் போகிறோம் ஜாக்கிரதை.  விலை உயர்ந்த நகைகளையோ அல்லது வேறு ஏதாவதோ போட்டுக் கொண்டு சாலையில் செல்ல வேண்டாம். ஏன் 
என்றால் பஞ்சத்தின் கொடுமை நமது நாட்டில் உள்ள சட்டத்தை திருடர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு  திருட்டுச் செயலில் அல்லது அதை விட கொடுமையான செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரு ரூபாய்க்காக கொலை செய்யும்  கயவர்கள் உண்டு இந்த நாட்டிலே.*

*பகிர்வு*
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.4.20

உயிரோடு வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் திருநாள்தான் இனி!!!


உயிரோடு வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் திருநாள்தான் இனி!!!

வசதியில்லா வீட்டுப் பெண்
வயசுக்கு வந்ததுபோல்
சினுங்காமல்  வந்துவிட்டாள்
சித்திரை திருமகள் 💥

மனிதன் செய்த
செயற்கை தவறுகளுக்கு
தன்னைத் தானே
சரிசெய்து கொள்கிறது இயற்கை🧚♂

அசுத்தம் கொட்ட
மனிதர்கள் இல்லையே
அழுக்கு தேய்த்து
குளித்து கொண்டது கங்கைநதி🏊♂

கூட்டம் போட
கட்சிகள் இல்லையே
கோடம்பாக்கத்தில்
ஊர்வலம் போயின
குயில்கள்😍

கூச்சல் போடும்
வாகனம் இல்லையே
கோயம்பேட்டில்
டூயட் பாடின குருவிகள்💗

பகலெல்லாம் பிள்ளைகளை
சிரிக்க வைக்க
வடிவேலு😁

இரவெல்லாம் இதயங்களை
உறங்க வைக்க
இளையராஜா🎸

வீட்டுக்குள்ளேயே
வாழ்வது ஒன்றும்
அத்தனை கடினமில்லை

சூழலும் பம்பரத்தை
கையில் ஏந்தி காட்டி,
கோலி குண்டுகளை
குறி வைத்து அடித்து காட்டி,
காரம் தூக்கலாக
கறி குழம்பு செய்து காட்டி

'அப்பா சூப்பர் மா'
என குழந்தையிடம்
வாங்கிய பட்டம்
1000 apraisalகளுக்கு சமம்🏆

வீடு கிடக்கட்டும்
நாடு என்ன செய்கிறது?

செய்தி சேனல்களை
பலமுறை பார்த்துவிட்டேன்.
கொலை கொள்ளை கற்பழிப்பு
எதுவும் இல்லை

சட்டம் தராத பயத்தை
சாவு தானே தருகிறது🌚

தலைக்கவசம்
அணியாத மூடர்களை
முகக் கவசம் அணிய வைத்த முற்போக்குவாதி
இந்த Corona✳

இளசுகள் மூளையை கழுவி
சண்டைகள் மூட்டும்
சாதி சங்கமுட்டாள்களின்
கைகளை முதலில் கழுவ சொன்ன மருத்துவன்
இந்த Corona👨🔬

இந்த தேசத்தில்
இரண்டு மக்கள்தான்.

அடுத்தவேளை
சாப்பாட்டுக்கு
எதை செய்யலாம்?

அடுத்தவேளை
சாப்பாடு இல்லையே
என்ன செய்யலாம்?

பால் கொண்டு Dolgona காபி
எப்படி செய்வது?

பாலுக்கு அழும் குழந்தைக்கு
சமாதானம் எப்படி செய்வது?

இருவருக்கும் சேர்த்தே
பிறந்துள்ளது சித்திரை திருநாள்😎

இந்த நன்னாளில்
கோயில்கள்
மூடிவிட்டால்
என்ன???

தெய்வங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்
மருத்துவமனையில்👨⚕

சர்ச்சுகள்
மூடிவிட்டால்
என்ன???

ஒவ்வொரு தெருவையும்
காத்து நிற்கிறார் கர்த்தர்
காக்கிச் சட்டையில்⛪

பள்ளிவாசல்கள்
மூடிவிட்டால்
என்ன???

மூடப்படாத மளிகை கடையின்
ஒவ்வொரு அரிசியிலும்
ஏழைகளின் பெயரை எழுதி வைத்துள்ளான்
எல்லாம் வல்ல இறைவன்🕋

நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.

மனித இனமே
நினைவு சின்னங்களில்
மட்டும்
இல்லை கடவுள்.

குப்பை அள்ளும் கரங்களில்,
தண்ணீர் கேன்போடும் வாகனங்களில்,
விதைப்பை நிறுத்தாத
விவசாயியின் வியர்வையில்,
விலையேற்றம் செய்யாத
வியாபாரி நேர்மையில்,
குழந்தைகள் கொஞ்சும்
மொட்டை மாடியில்,
நலம் விசாரிக்கும்
நண்பனின் குரலில்❤

எங்கெல்லாம் நம்பிக்கை வேர் உள்ளதோ அங்கெல்லாம் ஆண்டவனின் பேர் உள்ளது.

இன்றோ நாளையோ
நோய்க்கு மருந்து வரும்
ஊரடங்கு முடிந்துவிடும்.

வீட்டில் இருந்து
விடுதலை அடையும் திருநாளில்
என்ன செய்வேன் நான்?

மால்களுக்கு ஓடமாட்டேன்
மந்தையாக மாற மாட்டேன்
ஆழமாய் தினம் மூச்சு எடுப்பேன்
அன்னையிடம் பேச்சுக் கொடுப்பேன்🤰

அன்றாட சுமைகளில்
மனைவிக்கு தோள் கொடுப்பேன்
மனிதகுலம் சார்பாக
மருத்துவர்களுக்கு கை கொடுப்பேன்🥰

சில்லறைகள் மட்டுமல்ல
சிரிப்புகளும் சேகரிப்பேன்
தொல்லைகள் தந்தாலும்
பிள்ளைகளை
காதலிப்பேன்👶

புத்தாண்டோ
பிறந்தநாளோ தேவையில்லை
உயிரோடு வாழ்கின்ற
ஒவ்வொரு நாளையும்
கொண்டாடுவேன்🥳

வாகனத்தில் செல்லும்போது
வீதியிலே சாமி கண்டால்
கையெடுத்து வணங்குதல் போல்

காவிரி வைகை தாமிரபரணி
நெடுஞ்சாலை நெடுக
நிரம்பிய இயற்கையை
கையெடுத்து
கும்பிடுவேன்🗻

கோடையிலும் கொஞ்சமாக
கொட்டிபோன மழையின்பின்
கையளவு மண் எடுத்து
கன்னத்தில் பூசிக் கொண்டு
கண்ணீரில் சிரித்தபடி
உரக்கச் சொல்வேன்
உலகிற்கு

"நண்பா.. 
வாழ நினைத்தால் வாழலாம்.
வழியா இல்லை பூமியில்?"
============================================
படித்ததில் பிடித்தது...
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.4.20

அசைவ உணவு வேண்டுமா அல்லது வேண்டாமா?


அசைவ உணவு வேண்டுமா அல்லது வேண்டாமா?

*தர்ம நெறி *

*அசைவம் சாப்பிடலாமா?*
*ஓஷோ அவர்களின் விளக்கம்*
 
இறை நம்பிக்கை உள்ளவர்கள்- அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????                           

இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை. இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது .

*இதோ ஓஷோ அவர்களின் பதில்.*

உணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..

உணவுக்கும் *கடவுள் கோபிப்பார்* என்பதற்கும்எந்த சம்மந்தமும் இல்லை.

உணவுக்கு *கடவுள் தண்டிப்பார்* என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

*உணவுக்கும் உடலுக்கும்* சம்மந்தம் உண்டு

*உணவுக்கும் கர்மாவிற்கும்* சம்மந்தம் உண்டு

*உணவுக்கும் குணத்திற்கும்* சம்மந்தம் உண்டு*

*உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும்* சம்மந்தம் உண்டு.

*உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும்* சம்மந்தம் உண்டு.

*உணவுக்கும் மனித மனதிற்கும்* சம்மந்தம் உண்டு.

*மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு..*
------------
1. *கர்மாவின்* காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..

அந்த கார்மாவை கரைக்கவே *மனித பிறவி.*

2. தாவர உயிரினங்களுக்கு *கர்ம பதிவுகள் குறைவு.*

மாமிச உயிரினங்களுக்கு *கர்ம பதிவுகள் அதிகம்.*

3. எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின்  *பாவ கணக்கை* அந்த மனிதனே அடைக்க வேண்டும்.

4. அம்மாவை தேடி அலையும் தாயில்லாத குஞ்சுகள் மற்றும் குட்டிகள்  *தாயின் மனம்* மற்றும் அந்த *குட்டியின் மனம்* எவ்வாறு தேடி தவித்து இருக்கும்?

அதன் தாயை கொன்று தின்னும் மனிதன் உணர வேண்டியது இதுதான்.

5. அதிக பாசம் உள்ள ஆடு கோழி மீன் இவைகளை மனிதன் உண்பது *பாச தோஷம்* ஆகும்.

அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.

அந்த கர்மாவையும் சேர்த்து கரைக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்.

*இதில் கடவுளுக்கு என்ன பிரச்சனை ???*
------------------ --------------
ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார். மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார்.

இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை. கடன் வாங்கியவனே கடனை கட்ட வேண்டும்.

6. சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல ...

பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம் அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்காததால் ...

7. காட்டில் கூட ஆடு மாடு யானை குதிரை ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.

புலி சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகம் என்று கூறுகின்றோம்.

ஆக, சைவ உண்ணிகளுக்கு *மிருகம்* என்ற பெயர் காட்டில் கூட இல்லை.

8. *உடலால் மனித பிறவி சைவம்.*
*உயிரால் மனித பிறவி சைவம்.*
குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம்.

9.ஆடு, மாடு, மான், யானை போன்றவை *உடலால் சைவம். உயிரால் சைவம். மனதாலும் சைவம்.*

*ஆகவே, மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே மனிதனின் தர்மமாகிறது.*

என்பதால் *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.*
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.3.20

அடங்கிப்போன உலகம்!!!!


அடங்கிப்போன உலகம்!!!!

அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்

சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,
மழை அதன் போக்கில் பெய்கின்றது,
வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை

மான்கள் துள்ளுகின்றன,
அருவிகள் வீழ்கின்றன,
யானைகள் உலாவுகின்றன,
முயல்கள் விளையாடுகின்றது,
மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன

தவளை கூட துள்ளி ஆடுகின்றது,
பல்லிக்கும் பயமில்லை,
எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன,
காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை

மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது ,
சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது,
கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது

முடங்கியது உலகமல்ல,
மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம்.
அதில் அவன் மட்டும் வாழ்ந்தான்
அவன் மட்டும் ஆடினான்,
அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை,
உழைப்பென்றான்
சம்பாத்தியமென்றான்
விஞ்ஞானமென்றன்
என்னன்னெவோ உலக நியதி என்றான்

உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக ,
நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்

ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்

ஓடினான், பறந்தான், உயர்ந்தான், முடிந்த மட்டும் சுற்றினான்,
கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்
அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது
அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான்

ஒரு கிருமி கண்ணுக்கு தெரியாத ஒரே ஒரு கிருமி சொல்லி கொடுத்தது பாடம்
முடங்கி கிடக்கின்றான் மனிதன் ,
கண்ணில் தெரிகின்றது பயம்,
நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்

அவன் வீட்டில் முடங்கி கிடக்க,
வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம்.,
கொஞ்சி கேட்கின்றது சிட்டு,
கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்

தெருவோர நாய் பயமின்றி நடக்க,
வீட்டில் ஏழு பூட்டொடு முடங்கி கிடக்கின்றான் மனிதன்.
தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல..

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில்,
வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு

அவமானத்திலும் வேதனையிலும்
கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து
கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்...
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.3.20

உங்கள் வயது அறுபதை தாண்டிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!


உங்கள் வயது அறுபதை தாண்டிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!

60/65 வயதிற்கும் மேல் உள்ள ஆண்கள், பெண்களுக்கு, சில முக்கியமான டிப்ஸ்:-

1. கவலைப் படுவதால் எந்தப் பலனும் இல்லை என்பதால்- எதற்காகவும்,  யாருக்காகவும் கவலைப் பட வேண்டாம்.

2.வீட்டைத் தண்ணீர் கொண்டு  துடைக்கும்பொழுது. நடக்க வேண்டாம்.

3.ஸ்டூல்,நாற்காலி,மீது ஏறி பொருட்களை எடுப்பது, சுத்தம்செய்வது, துணிகளை காயப்போடுவது, ஆகியவற்றை    தவிர்க்கவும்

4.கார் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாகக் கூட  இருக்க வேண்டும்!

5.மாத்திரைகளை வேளாவேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

6.உங்களை எந்த விஷயம் சந்தோஷப்படுத்துதுதோ அதை யாருக்காகவும்,காம்ப்ரமைஸ் செய்துகொள்ள வேண்டாம்!!!!.

7.வங்கிக்கு அதிகப் பணம் எடுக்கச்சென்றால் தனியாகச் செல்ல வேண்டாம்.

8.வீட்டில் தனியாக இருக்கும்பொழுது அறிமுகமில்லாதோர் வந்தால் கவனமாக அச்சூழலைக் கையாள வேண்டும்.

9.படுக்கையறையிலும், டாய்லெட்டிலும் காலிங் பட்டன்  அவசியம்.அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும்.

10.சைக்கிள்,டூவீலர் ஓட்டுவதை முடிந்த அளவு தவிர்க்கவும்.

11.வாழும்வரைசந்தோஷம்.. அது அதிமுக்கியம்.

கடந்தகாலம்,எதிர்காலத்தைப்பற்றி......சிந்தனைகூடாது. நிகழ்காலம் உன்னதம். அதைமுழுமையாக வாழவேண்டும்.
வாழ்க வளமுடன்! நல்ல நலமுடன்! நல்வாழ்த்துக்கள்!
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.3.20

கரோனா இந்தியாவுக்கு செய்த நன்மைகள் :

கரோனா இந்தியாவுக்கு செய்த நன்மைகள் :

ராக்கட் வேகத்தில் பறந்த பங்காளி #சீனா பொருளாதாரத்தை அடிச்சு உதச்சு உட்கார வைத்து உள்ளது கரோனா 👌

29 வருஷத்தில் இல்லாத அளவு #கச்சா_எண்ணெய் விலை வீழ்ச்சி ,  பேரல் 31 டாலர். இந்தியாவுக்கு 10000 கோடி லாபம்.👍

CAA மாதிரி சில #போராட்டங்கள் தானாக அடங்கி போனது...😊

#இத்தாலி கொத்து கொத்தாக சாகிறார்கள், #அமெரிக்காவில் நடுங்கி உக்காந்து இருக்கிறார்கள் ..

மக்கள் தொகை அதிகம் இருக்கும் இந்தியா மட்டும் #ஆன்மீகபூமினு கரோனா பயம் சுத்தமா இல்லை..💐

Yes bank கொள்ளையர்கள் வெளிநாடு தப்ப முடியவில்லை😊

மெக்கா மதினா , ரோம்  வரலாறு காணாத அளவுக்கு வெறிச்சோடி போனது.
ஆனால் இந்தியாவில் #கோவில்கள் நிரம்பி வழிகிறது.💐

#அசைவம் சாப்பிடும் ஊரெல்லாம் அலரிக்கிட்டு இருக்கு..😢
#சைவம் சாப்பிடும் இந்தியர்கள் எதையும் இழக்க வில்லைனு கெத்து வாழ்க்கை👍

கரோனா மோடியின் #நண்பன்,
So , கரோனா #வைரஸ் அல்ல.. 
அது 2020 ல வந்த இந்தியாவின் #தேவ_தூதன்..☺

பிகு :இந்தியா 2020 ல் வல்லரசு என்ற அப்துல்கலாம் #கருநாக்கு பளிச்சிடும் போல..💐
-----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.12.19

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாமனிதர்!!!!



உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாமனிதர்!!!!

வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே' உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாமனிதன்.... படியுங்கள் !

முன்னொரு காலத்தில் “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார்.

தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.

அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.

அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.

தனது வாழ்க்கை அனுபத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார்.

Toyoto நிறுவனத்திற்கு piston(உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.

யாருக்காகவும் அவன்காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.

இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள்.

முதலாவது கனவுத் திட்டம் படுதோல்விஅடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள்.

புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய pistonமாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.

எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சீமெந்து தட்டுப்பாடு.

எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சீமெந்துக் கூட கிடைக்கவில்லை. ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர்நண்பன்.

இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சீமெந்து கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.

ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.

அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.

ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால்,தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.

 மொத்தத்தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.

இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........
ஆனால் அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......
 “நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.”

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெற்றோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.

எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.

அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.

அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.

அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.

அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று?????

அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.

கையில் பணமில்லை, வங்கிகள் கடன்தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.

அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.

முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.

5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள்முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.

முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.

இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.

 ஹோண்டா கார்களுக்கு மேற்கத்தேய நாடுகளிலும் பெரும் வரவேற்பு இருந்தது. எத்தனையோ வகை வகையான தயாரிப்புக்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் அனைவருக்கும் நினைவுக்குவருவது, அதன் மாமனிதன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்: “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று.......
--------------------------------------------------------------
Hard Work Never Fail
Soichiro Honda (本田 宗一郎 Honda Sōichirō, 17 November 1906 – 5 August 1991) was a Japanese engineer and industrialist.[1] In 1948, he established Honda Motor Co., Ltd. and oversaw its expansion from a wooden shack manufacturing bicycle motors to a multinational automobile and motorcycle manufacturer.
மேலதிகத் தகவல்களுக்கு:
https://en.wikipedia.org/wiki/Soichiro_Honda
--------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.12.19

பாக்கியசாலி பக்தர் டாக்டர் பத்ரிநாத்!!!!


பாக்கியசாலி பக்தர் டாக்டர் பத்ரிநாத்!!!!

அது 1974-ஆம் ஆண்டு... காஞ்சி மகா பெரியவாளுக்கு ஒரு கண்ணில் பார்வை பழுதுபட்டது. கிட்டத்தட்ட ஒரு கண்ணின் பார்வை இன்றியே தன் நித்ய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து வந்தார். தேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மகான்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதற்கேற்றாற்போல் அவரது செயல்பாடுகளில் எந்த ஒரு மாறுதலும் இல்லை. இருந்தாலும் சில அன்பர்களது வற்புறுத்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட கண்ணுக்கு ஒரு கட்டத்தில் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது போதிய பலன் தரவில்லை. அத்தோடு, பாதிக்கப்பட்ட அந்த கண்ணில் மேற்கொண்டு எந்த சிகிச்சையும் செய்ய இயலாது... அது பலன் தராது என்கிற நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னொரு கண்ணின் உதவியுடனேயே இருந்து வந்தார் மஹா பெரியவா.

நாளடைவில் நன்றாகச் செயல்பட்ட அந்த இன்னொரு கண்ணிலும் கேட்ராக்ட் (புரை) ஏற்பட்டது. இதை அறிந்த பெரியவாளின் அணுக்கத் தொண்டர்களும் ஸ்ரீமடத்து விசுவாசிகள் பலரும் பெரியவாளை அணுகி, 'கேட்ராக்ட்டுக்குப் பெரியவா ஏதாவது சிகிச்சை எடுத்துக்கணும்' என்று விக்ஞாபித்துக் கொண்டனர்.

புன்னகையுடன் அந்தக் கோரிக்கையை மறுத்து விட்டார் பெரியவா. 'போதும்டா...இந்த ஒரு கண்ணை வெச்சுண்டே நான் சந்திரமௌலீஸ்வரர் பூஜையை நடத்திக்கிறேன். இந்தப் பார்வையே எனக்குப் போதும்' என்று அன்புடன் மறுத்துவிட்டார். ஆனால் மஹா பெரியவாளின் இந்த சமாதானமான பதிலை ஸ்ரீஜயேந்திர  சரஸ்வதி ஸ்வாமிகள்ஏற்கவில்லை.

கேட்ராக்ட்டுக்கு அவசியம் ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று பெரியவாளிடம் வற்புறுத்துக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் பெரியவாளும் இதற்கு சம்மதித்தார்.

அப்போது மயிலாப்பூரில் பிரபல வக்கீலாக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம் டாக்டர் பத்ரிநாத் மஹாபெரியவாளுக்கு அறிமுகம் ஆனது இந்த நேரத்தில் தான். சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்தார் பத்ரிநாத். இவரது சேவை மனப்பான்மை பற்றியும், தொழில் நேர்த்தி குறித்தும் ஸ்ரீமடத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஸ்ரீமடத்து அதிகாரிகள் கலந்தாலோசித்த பிறகு பத்ரிநாத்தைக் கொண்டே மஹாபெரியவாளுக்கு கேட்ராக்ட் ஆப்ரேஷன் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

முதலில் ஸ்ரீஜயேந்திரரைச் சந்தித்த பத்ரிநாத் பெரியவாளுக்கு எப்படி ஆப்ரேஷன் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை விளக்கினார். 'ஒரு சந்நியாசிக்கு மருத்துவமனையில் வைத்தெல்லாம் சிகிச்சை செய்யக் கூடாது. அது போல் நர்ஸ், மருத்துவ உதவியாளர்கள் போன்றோரின் ஸ்பரிசம் பெரியவாளின் மேல் படவே கூடாது' என்றெல்லாம் சில விஷயங்கள் ஸ்ரீமடத்தின் சார்பில் பத்ரிநாத் முன் வைக்கப்பட்டது. அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட அவர், 'நானும் மகா ஸ்வாமிகளின்
பக்தன் தான். அவரது துறவற வாழ்க்கைக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படாதவாறு இதைப் பார்த்துக் கொள்கிறேன்.' என்றார் மென்மையாக.

ஆப்ரேஷன் சமயத்தில் பத்ரிநாத் மட்டுமே மருத்துவர் என்ற முறையில் இருந்தார். இவரைத் தவிர, மருத்துவமனை சிப்பந்திகள் எவரும் இந்த சிகிச்சையின் போது உடன் இல்லை. அப்படி என்றால், டாக்டர் பத்ரிநாத்துக்கு ஆப்ரேஷன் நேரத்தில் உதவியவர்கள் யார்?

மஹா பெரியவாளின் அணுக்கத் தொண்டர்கள் சிலருக்கே தேவையான மருத்துவப் பயிற்சி கொடுத்து, அவர்களைத் தன் உதவியாளர்களாக ஆக்கிக் கொண்டார் பத்ரிநாத். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபம், ஆப்ரேஷன் தியேட்டராக மாற்றப்பட்டது. ஆப்ரேஷனுக்கு தேவையான அனைத்து விதமான உபகரணங்களும் சென்னையில் இருந்தே கொண்டு வரப்பட்டன. எல்லாம் தயார் ஆன பின், மிகக் கச்சிதமாக மஹாபெரியவாளுக்கு ஆப்ரேஷன் முடிந்தது.

ஆப்ரேஷன் முடிந்து விட்டாலும் மஹாபெரியவாளின் (ஆப்ரேஷன் செய்த) அந்தக் கண்ணைத் தினமும் கண்காணிக்க வேண்டுமே! இதற்காக தினமும் அதிகாலை வேளையில் சென்னையில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம் வந்து மஹாபெரியவளின் கண்ணைப் பரிசோதித்துவிட்டு வேண்டிய மருந்துகளை அப்ளை செய்து டிரஸ்ஸிங் செய்து விட்டு சென்னைக்குத் திரும்புவார் டாக்டர் பத்ரிநாத். இது தினசரி நடந்து கொண்டிருந்தது.

அன்றைய தினம் கிரஹணம். யதேச்சையாக இது தெரிய வந்ததும், டாக்டர் பத்ர்நாத் பதறிவிட்டார். பொதுவாக கிரகண காலம் முடிந்ததும், ஸ்நானம் செய்வது இந்துக்களின் வழக்கம். அதுவும் சந்நியாசிகள் இன்னும் அனுஷ்டானமாக இருப்பார்கள். 'ஒரு வேளை பெரியவா கிரஹண காலம் முடிந்ததும், கண் ஆப்ரேஷன் செய்ததைக் கருத்தில் கொள்ளாமல் குளிக்கப் போய்விட்டால்....? என்று சுளீரென உறைத்தது பத்ரிநாத்துக்கு. அவ்வளவு தான்... இயல்பாகத் தான் காஞ்சிபுரம் புறப்படும் வேளைக்கு முன்பாகவே ஒரு காரில் காஞ்சியை நோக்கி அரக்கப் பரக்கப் பயணித்தார்.

ஸ்ரீமடத்தின் வாசலில் போய்த்தான் கார் நின்றது. 'சாதாரணமாக வரும் நேரத்தை விட இன்று இவர் ஏன் இத்தனை சீக்கிரமாக ஸ்ரீமடத்துக்கு வந்திருக்கிறார்? அதுவும் பொழுது இன்னும் புலராத வேளையில் இவ்வளவு அவசரமாக வரவேண்டியதன் அவசியம் என்ன? என்று ஸ்ரீமடத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் குழம்பினார்கள்.

ஸ்ரீமடத்து அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு மகாபெரியவா முன் படபடப்புடன் போய் நின்றார் பத்ரிநாத். சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார். பிறகு பெரியவாளையே பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றார்.தான் எதற்காக இப்படி பதைபதைத்து வந்தேன் என்பதற்கான காரணத்தை இன்னும் அவர் சொல்லக் கூட இல்லை.

அதற்கு முன்னதாக பெரியவா அவரை ஆசிர்வதித்து விட்டுப் புன்னகையுடன் திருவாய் மலர்ந்தார். 'என்ன குளிச்சிடுவேன்னு பயந்தியா?"
பத்ரிநாத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது. எதை நினைத்துக் கொண்டு சென்னையில் இருந்து ஓடி வந்தாரோ அதைப் பட்டென்று உடைத்து விட்டார் பெரியவா. 'ஆமா பெரியவா. இப்பதான் கண் ஆபரேஷன் ஆகி இருக்கு. இந்த நிலைல கிரஹண காலத்தை உத்தேசிக்க ஸ்நானம் பண்ணினா, ஆபரேஷன் ஆன கண்ணுக்கு ஏதேனும் ப்ராப்ளம் வந்துடுமோன்னு கவலையா இருந்தது. அதான், ஸ்நானம் பண்ண வேண்டாம்னு பெரியவாகிட்ட பிரார்த்திக்கிறதுக்க்காக அவசர அவசரமா ஓடோடி வந்தேன்' என்றார்
படபடப்பு இன்னும் அடங்காமல். பத்ரிநாத்தை அர்த்த புஷ்டியுடன் கூர்ந்து பார்த்த மஹாபெரியவா 'கிரஹணம் கழிந்தவுடனே ஸ்நானம் பண்ணனும்னு தான் சாஸ்திரம் சொல்றது. ஆனா நான் ஸ்நானம் செய்யலை. அப்படின்னா அந்த கிரஹணத் தீட்டு எப்படிப் போச்சுன்னு யோசிக்கிறயா?

சாஸ்திரத்துல மந்திர ஸ்நானம்னு ஒண்ணு இருக்கு. அந்த முறைப்படி நான் ஸ்நானம் பண்ணிக்கிறேன். என் கண் பார்வை போயிடுமோங்கிற பயத்துல நான் ஸ்நானம் பண்ணாம இல்லை. யூ ஆர் எ பட்டிங் டாக்டர் (வளர்ந்து வருகிற மருத்துவர்). உன்னோட வளர்ச்சி எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது. அதுக்காகத்தான் நான் மந்திர ஸ்நானத்தை ஏத்துண்டேன்'... என்று சொல்ல.....கண்கள் கலங்கி, அந்த மகானின் திருப்பாதங்களுக்கு இன்னொரு முறை சாஷ்டங்க நமஸ்காரம் செய்தார் டாக்டர் பத்ரிநாத்.

மஹாபெரியவாளின் தரிசனம் பெற்றாலே பெரும் பாக்கியம். அதுவும் அவருடைய திருமேனியைத் தீண்டி, கண் ஆப்ரேஷன் செய்தார் என்றால், டாக்டர் பத்ரிநாத்துக்கு எப்பேர்ப்பட்ட பாக்கியம் அமைந்திருக்க வேண்டும்?!

பின்னாளில் காஞ்சி ஸ்ரீசங்கரமடத்தின் மூலம் 'மெடிக்கல் ரிசர்ச் ஃபவுண்டேஷன்' (சங்கர நேத்ராலயா) என்கிற அமைப்பு துவங்கும் போது டாக்டர் பத்ரிநாத் இதன் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அமைப்பின் தலைவராகவும் நிறுவனராகவும் தற்போது இருந்து வருபவர் இவர்.

படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.11.19

மலரும் நினைவுகள்!!!!


மலரும் நினைவுகள்!!!!

உச்சகட்ட தீபாவளி...கைக்கு எட்டியது உடுத்த கிடைக்குமா...🤔

தீபாவளி ஜவுளிக்கான லோன் கிடைக்குமா..என்ற ஒரு குண்டை போட்டார் அப்பா...😔😞

ஒரு வாரம் சோகமாய் இருந்த வீடு சந்தோசமானது லோன் கிடைத்ததாய் அப்பாவிடமிருந்து வந்த செய்தியால்...

எப்பொழுதும் போல கோ.ஆப்.டெக்சில் தான் ஜவுளி...

எங்கள் அனைவருக்கும் ஸ்கூல் யூனிபார்ம் எடுத்திடலாம் என்றார் அப்பா...😭😭 அழுது அடம் பிடித்து கலர் சட்டைக்கு அப்ரூவல் கிடைத்தது அம்மாவின் சிபாரிசில்😀😃

அப்பா சைக்கிளில்🚲 செல்ல நாங்கள் எல்லோரும் டவுன் பஸ்ஸில் சென்று சேர்தோம்..ஒரே கூட்டம் கடையில்👬👫👯♀👨👩👧

எப்படியோ வேட்டி..சேலை..சட்டை..டவுசர்..பாவாடைதுணி என வாங்கியது போக மீதியில் இரண்டு ஜமுக்காளமும் வாங்கியாச்சு..

பட்டாணி..உப்புகடலை..பக்கோடாவுடன் வீடு வந்து சேர்தோம்..

ஒரு நாள் பூராவும் தெருவே வந்து பார்த்துபோனது எங்கள் வீட்டு ஜவுளியை...

டேய் ஜெயபால் டைலரிடம் கொடுத்திருக்கேன் போய் அளவு கொடுதிடுங்க. நல்லா லூசா கொடுங்கடா இரண்டு மூன்று வருடம் வர்றமாதிரி என்றார் அப்பா..

லேட்டஸ்ட் பாபி ஸ்டைல் நீண்ட ரவுண்டு காலர்..இரண்டுபக்கமும் மூடி வைத்த பாக்கட் என அளவு கொடுத்தாச்சு.🧥👚
👕👔 அனைவருக்கும் ஒரேமாதிரி கலர்.அதற்கு பெயர் family uniform..

தினமும் பள்ளி விட்டு டைலர்கடை வழியாகத்தான் சுற்றி வருவோம். தீபாவளிக்கு மூன்று நாள் முன்பு வரை கட்டிப்போட்ட துணி அப்படியே பண்டலாக இருந்தது..பிரிக்கவே இல்லை...

தச்சாச்சா என்று கேட்டோம் தீபாவளிக்கு முதல் நாள் வா என்றார் டைலர்..

தீபாவளிக்கு முதல் நாள் அன்று பள்ளி அரை நேரம்தான்.மதியம் சாப்பிட்டுவிட்டு நான்கு மணிவாக்கில் சென்றுகேட்டோம்...வெட்டியாச்சு தையல் ஒடிக்கிட்டிருக்கு ராத்திரி சாப்பிட்டு எட்டு மணிக்குவா என்றார்...டைலர்.

விடிந்தால் தீபாவளி..கிடைக்குமா கிடைக்காதா திக்.. திக்..என்று இருந்தது. உண்மையிலேயே வெட்டிதச்சிருந்தா பிட்டுகள் கீழே கிடக்கிறதா என பார்தோம்.. கிடந்தன துண்டுகள்..சந்தோசமாய் இருந்தது😆😆

இரவு சாப்பிட்டு சற்று தாமதாக சென்றோம்.ஓன்பது மணி..தெருவில் சிலர் மத்தாப்பு  புஸ்வாணம் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்..நாய்கள்வேற அங்கங்கே குறைத்தது...🐕🐕

கடையைசென்று சேர்தோம்..உட்காருங்கபா இதோ பட்டன்கட்டி காஜா எடுத்தாவுது..ஒரு அரைமணிநேரம் ரெடியாயிடும் என்றார் .

காஜாபையன் தூங்கிவழியவே பளார் என ஒரு அடி விட்டு போய் டீ வாங்கிட்டுவா என சொம்பை கொடுத்தார்..பாதியில் விட்டுவிட்டு விட்டால்போதும்என கிளம்பியவன் வர வெகுநேரமானது...😇😇

#பெட்ரூமாஸ் லைட் வெளிச்சம்...
#தையல்மிஷின் ஓடும் சத்தம்...
#மர்பி ரேடியோவில் விவத்பாரதியின் தேன்கிண்ணம்...🎻🎻
#பி.பி.சீனுவாசின் ரம்மியமான இரவு பாடல்..
#M.A.Jacob..ன் கார்பட் விளம்பரம்..
#புளிய மர காற்று..
#எங்கோ கேட்கும் ஓரிரண்டு வெடி சத்தம் ''
ரம்மியமாக இருந்தது..அந்த சூழல்...

ஒருவழியாக தினத்தந்தி பேப்பரில் சுற்றி மேலே நூற்றிஇருபது ரூபாய் கூலி என எழுதிக்கொடுத்தார்.

இரவு பதினோருமணி வீடு வந்துசேரும்போது...🤸♀🤸♀

ஒரே ஒரு குறை அயன்பண்ணி தரவில்லை😕😕

சட்டையை அழகாக மடித்து பாய்க்கும் தலையணக்கும் இடையில் வைத்தால் அயர்ன் செய்தது போல இருக்கும்..

கைக்குஎட்டியது ஒரு வழியாக கட்ட கிடைத்து விட்ட சந்தோசம்😀😃😄😁

அடுப்பில் அம்மா சுடும் முருக்கு..அதிரசம்..சோமாஸ் வாசனையில் விடிந்தால் தீபாவளி கொண்டாடபோகும் மகிழ்ச்சியில் கண்உறங்கினோம்😔😔

அந்த தீபாவளியை யாராவது பார்தால் அனுப்பிவையுங்களேன்!!!!!
.🙏🏻🌾🌾🙏🏻
ஆம். தீபாவளியை எதிர்பார்த்த மகிழ்ச்சியும் தீபாவளி முடிந்தபின் எதோ நண்பனை பிரிந்தாற்போன்ற சோகமும் இன்னமும் நினைவில்.... !!!!!!
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.10.19

மகிழ்ச்சி தரும் வயது எது - இருபதா அல்லது அறுபதா?


மகிழ்ச்சி தரும் வயது எது - இருபதா அல்லது அறுபதா?

20-களில் இருக்கும் இளைஞர்களை விட, தாத்தாக்களும் பாட்டிகளும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ’இப்படிச் சொன்னால் நம்ப முடிகிறதா? `ஆனால், அது தான் உண்மை’ என்கிறது சமீபத்தில் வெளி வந்திருக்கும் ஓர் ஆய்வு. 

முதுமை என்பது சாபம். சித்தார்த்தன் புத்தனானதற்கு முக்கியக் காரணங்கள் மூன்று... முதுமை, நோய், மரணம். அவற்றில் முக்கியமான ஒன்றான முதுமைப் பருவத்தில் இருப்பவர்கள், இளைஞர்களை விட மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள, கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும், அது நிஜம் தான் என நிரூபித்திருக்கிறது, `தி ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் சைக்கியாட்ரி’ (The Journal of Clinical Psychiatry) இதழில் வெளி வந்திருக்கும் ஆய்வு முடிவு. கலிஃபோர்னியாவில் இருக்கும் சான் டியாகோவில், 21- 99 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,546 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப் பட்டது. அவர்களின் உடல் நலம், புரிதல் திறன், மன நலம் தொடர்பான பல கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள்.

வாழ்க்கையில் அவர்கள் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறார்களா, மனஅழுத்தம், கவலை, பதற்றம் இவற்றுக்கு ஆளாகிறார்களா என்றெல்லாம் கேள்விகள் கேட்கப் பட்டன.

இந்த ஆய்வின் தலைவர், டாக்டர் திலிப் வி.ஜெஸ்டே (Dilip V.Jeste), முதுமை மற்றும் மனநோய் மருத்துவர் (Geriatric psychiatry); சான் டியாகோவில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில், சென்டர் ஆன் ஹெல்த்தி ஏஜிங் மையத்தின் இயக்குநர். அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்...

`முதுமைப் பருவம் என்பது மிக மோசமானது, வயதானவர்களிடம் மனச் சோர்வு, மன அழுத்தம், சிடு சிடுப்பு இவை தான் இருக்கும் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது. அதன் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காகவே இந்த ஆய்வை நடத்தினோம்.’

`உடலளவில் தளர்ச்சி, புரிந்து கொள்ளும் உணர்வில் குறை பாடு இவையெல்லாம் இளைஞர்களை விட முதியவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இவை முதுமை காரணமாக இயற்கையாக ஏற்படும் குறைபாடுகள். ஆனால், மன நலத்தைப் பொறுத்த வரை இளைஞர்களை விட ஆரோக்கியமாக இருப்பவர்கள் முதியோரே. 20-கள், 30-களில் இருக்கும் இளைஞர்களிடம் பதற்றம், மன அழுத்தம், கவலை ஆகியவை அதிக அளவில் காணப் படுகின்றன. மகிழ்ச்சி, திருப்தி, நிறைவான வாழ்க்கை இவை குறைவாகக் காணப் படுகின்றன. ஆக, மகிழ்ச்சியாக இருப்பது முதியோரே’ என்கிறது ஆய்வு.

வயதாகி விட்டது என்கிற எண்ணம் வரும் போது, அவர்களுக்கு ஒரு முதிர்ச்சி வந்து விடுகிறது. இனி எல்லாம் நல்ல விதமாக நடக்கும் என்கிற எதிர் பார்ப்பும், அவர்களின் மன நலமும் முன்னேற்றம் அடைகிறது. ஆனால், இளைஞர்களுக்கோ மனதளவில் குழப்பம் தான் மிஞ்சுகிறது. பணம், கல்வி, காதல், வேலை என வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல தேவைகளும் அந்த வயதில் தான் எழுகின்றன. கூடவே, மற்றவர்களோடு தம்மை ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லும், `நாம் அவர்களைப் போல வெற்றி பெறவில்லையோ, நமக்கு எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்தும் அதையெல்லாம் சரியாகப் பயன் படுத்திக் கொள்ளவில்லையோ’ என்றெல்லாம் இளைஞர்களை யோசிக்க வைக்கும் பருவம் அது. முதியவர்களால் சின்னச் சின்ன மனஅழுத்தம் தரும் விஷயங்களை எளிதாக உதறித் தள்ளி விட முடியும். காரணம், அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அனுபவமும் முதிர்ச்சியும். அதோடு எதற்கும் உணர்ச்சி வசப்படாதவர்களாக, சிறந்த முடிவுகளை எடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

`முதியவர்களுக்கு இன்றைய வாழ்க்கை எளிதானதாக இருக்கிறது. 1998-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டுக்குள், முதியவர்களுக்கு மன அழுத்தம் தரக் கூடிய அறி குறிகள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன’ என்கிறது ஓர் ஆய்வு. வேறு சில ஆய்வுகளோ, `கடந்த சில பத்தாண்டுகளில் இளைஞர்களிடையே கவலையும் மன அழுத்தமும் அதிகமாகக் காணப் படுகின்றன’ எனக் குறிப்பிடுகின்றன. உலக மயமாக்கல், தொழில் நுட்ப வளர்ச்சி, உயர் கல்வி பயில்வதில் அதிகரித்து வரும் போட்டி, கணிசமான சம்பளம் வேண்டும் என்கிற எண்ணம், சமுதாயத்தில் மாறி வரும் பெண்களின் பங்கு என பல காரணிகள் முதியோர்களை விட, இளம் பெண்களையும் இளைஞர்களையும் அதிகம் பாதிக்கின்றன. இந்த மன அழுத்தம் முதியோருக்கு இல்லை என்பது தான் ஆய்வின் முடிவாக இருக்கிறது.

இந்தியாவிலும் பிள்ளைகள், பெற்றோர்களைக் கண்டு கொள்ளாமல் விடுவது நடக்கத் தான் செய்கிறது. உள்நாட்டிலேயே வசித்தாலும், பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும் இருக்கிறது. ஆனால், சில பத்தாண்டுகளுக்கு முன்னர் முதியோர் இல்லம் என்பதே இங்கே நடை முறையில் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய பரபரப்பான நகர, சிறு நகர வாழ்க்கைச் சூழலில், பெற்றோரை, முதியவர்களை வீட்டில் வைத்து பராமரிப்பது என்பது அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதே நேரம் இன்றைய இளைய தலைமுறையினர் அளவுக்கு முதியோருக்கு மனஅழுத்தம் அதிகம் இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.
----------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.10.19

சத்திய சோதனை!!!!


சத்திய சோதனை!!!!

இன்று தேசத்தந்தை மகாத்மா காந்திஜியின் பிறந்த நாள்.

அவருடைய நினைவுகளை மனதில் நிறுத்தி, அவரைப் போற்றுவோம்!

Mohandas Karamchand Gandhi (2 October 1869 – 30 January 1948)

சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது அவர் எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூ‌ல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூ‌லுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார்.

நான் செய்த சத்திய சோதனையின் கதை என்று திரு மோகன்தாசு கரம்சந்த் காந்தி தம் இளம் வயது முதல் 1921 ஆம் ஆண்டு வரையிலான தம் சரிதையை எழுதியுள்ளார். நவஜீவன் வாரப் பத்திரிக்கையில் 1925 முதல் 1929 வரை அவர் குஜராத்தி மொழியில் எழுதிய கட்டுரையின் தொகுப்பு. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் "யங் இந்தியா" என்னும் ஆங்கில இதழில் பிரசுரமானது.சுவாமி ஆனந்த் மற்றும் அவருடன் பணியாற்றியவர்களின் தூண்டுதல் இதற்கு முக்கிய காரணம். இவர்கள் காந்தியடிகளின் பொது வாழ்க்கை பரப்புறைகளின் பின்புலங்களை பகிர்ந்து கொள்ளும்படி ஊக்கப் படுத்தினர். இந்நூல் 20ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களுள் ஒன்றாக உலக ஆன்மீக மற்றும் மத ஆணையத்தால் தெரிவு செய்யப்பட்டது

ஆகவே அனைவரும் அந்நூலை வாங்கிப் படித்துப் பயனுற வேண்டுகிறேன்!!!!


அன்புடன்
வாத்தியார்
============================================================
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.9.19

நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு....!!!!!


நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு....!!!!!

ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு வயதாகி விட்டதால், ஓய்வு எடுக்க எண்ணினார். அவர் தம் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம், நேர்மையானவரிடம், உண்மையாளரிடம்,
ஒப்படைக்க முடிவு செய்தார். ஒரு புதுமையான முறையில் நிர்வாகம் செய்திட ஒரு உண்மையான உழைப்பாளியை தேர்ந்தெடுக்க எண்ணினார்.

எல்லா ஊழியர்களையும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.

அனைவரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

முதலாளி பேச ஆரம்பித்தார்: அன்புள்ள ஊழியர்களே, என்னுடைய ஓய்வுக்குப் பின், உங்களில் ஒருவர் தான் என்னுடைய இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அதனால் உங்களுக்குள் நான் ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.

யார் வெற்றியடைகின்றார்களோ,அவர் தான் நம் நிறுவனத்தின் அடுத்த பொறுப்பாளி என்றார்.

இப்போது என் கையில், பலதரப்பட்ட, பல வகைகளை சார்ந்த, ஏராளமான விதைகள் இருக்கின்றன. யாருக்கு எந்த விதை வரும் என எனக்கே தெரியாது.

இதை உங்களிடம் ஆளுக்கு ஒன்றாக கொடுப்பேன்.

இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு, தண்ணீர் ஊற்றி, நன்றாக வளர்த்து, அடுத்த வருடம் இதே நாளில், என்னிடம் எடுத்து வந்து காட்ட வேண்டும்.

யாருடைய செடி நன்றாக உயரமாக, போஷாக்காக, வளர்ந்து இருக்கிறதோ, அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர்.

அந்த கம்பெனியில் வேலை செய்யும் இராமசாமிக்கும் ஒரு விதை கிடைத்தது. அவர் ஆர்வத்துடன் அதை வாங்கி சென்றார்.

தன் மனைவியிடம் போய் முதலாளி சொன்ன அனைத்தையும் அப்படியே சொன்னார்.

அந்த அம்மையாரும் உடனே ஒரு தொட்டியும், மண்ணும், சாணமும், தண்ணீரும் எடுத்து அவருக்கு கொடுத்து, அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது. நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால் இராமசாமியின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது ம்ஹூம். செடி வளரவே இல்லை, நாட்கள் உருண்டோடின. ஆறு மாதங்கள் ஆனது.

அப்பொழுதும் அவர் தொட்டியில் செடி வளரவே இல்லை.

நான் விதையை வீணாக்கி விட்டேனா என்று எண்ண ஆரம்பித்தார்.

ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.

தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் அவர் சொல்லவும் இல்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது.

எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.

இராமசாமியும் தன் மனைவியிடம் காலி  தொட்டியை நான் எடுத்துப் போக மாட்டேன், எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னார்.

அந்த அம்மையார் அவரை சமாதானப்படுத்தி சொன்னார்: நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி தானே செய்தீர்கள். உங்கள் நேர்மை, உழைப்பு ஒரு போதும் வீணாகாது என்றார். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. அதற்கு நீங்கள் காரணமும் அல்ல.

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

இராமசாமி செட்டியாரும் காலி தொட்டியை அலுவலகத்திற்க்கு எடுத்து சென்றார்.

எல்லாரும் தொட்டிகளை அவர் கண் முன்னே கொண்டு சென்றார்கள்.

விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. பல்வேறு விதமான பூக்கள் பலவித வண்ணங்களில் பூத்துக் குலுங்கின.

இராமசாமியின் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார்.

எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.

அருமை. அழகு என்றார். எல்லாரும் செம்மையாக, செழிப்பாக செடியை வளர்த்து உள்ளீர்கள் என்று புகழ்ந்தார்.

உங்களில் யாரோ ஒருவர் தான் இன்று இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்கள் என்றார்.

அங்கிருந்த ஒவ்வொரு ஊழியரும் தனக்குக்குதான் பொறுப்பாளர் பதவி கிடைக்கப் போகிறது என்ற மகிழ்வில் இருந்தனர். அச்சமயம் இராமசாமி மட்டும் மிகவும் அமைதியாக கடைசி வரிசையில் நின்றிருந்தார். அவரை அருகே வருமாறு அழைத்தார் அந்த முதலாளி.

முதலாளி தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார், என்று எண்ணி பயந்து கொண்டே சென்றார் நேர்மைவாதியான, உழைப்பாளியான இராமசாமி.

முதலாளி இராமசாமியிடம் உங்கள் செடி எங்கே? என்று கேட்டார்.

ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விபரமாக கண்ணீர் மல்க எடுத்துச் சொன்னார் இராமசாமி.

முதலாளி இராமசாமியைத் தவிர அனைவரையும் உட்காருமாறு கூறினார்.

பிறகு இராமசாமியை அழைத்து, தோளில் கையை போட்டுக் கொண்டு: நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர் தான் என்றார்.

இராமசாமி செட்டியாருக்கு ஒரே அதிர்ச்சி. தன் தொட்டியில் செடி வளரவே இல்லையே! பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார்? என்று குழம்பிப் போனார்.

முதலாளி பேச ஆரம்பித்தார்:

சென்ற வருடம் நான் உங்களிடம், ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா? அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled Seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால், அது முளைக்க இயலாது. அவை அனைத்துமே முளைக்கும் தன்மையை இழந்துவிட்டது.

நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால், அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

ஆனால் இராமசாமி மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார். ஆகவே அவரே என் நிறுவனத்தை நிர்வகிக்க தகுதியானவர் என்றார்.

நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் மட்டும் போதும், வெற்றிகள் நம்மைத் தேடி ஓடி வரும்.

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்.

அதில் வெற்றி பெருவது தான் உண்மையான வெற்றி.

உண்மையும், நேர்மையும், தர்மத்தை பாதுகாக்கும், என்ற கொள்கையை நீருபித்த இராமசாமிக்குக் கிடைத்தது மிகப் பெரிய பதவி.

நேர்மை ஒரு போதும் வீண் போகாது. நேர்மையை விதையுங்கள். பதவியும் பணமும் தானாக உங்களை தேடி ஓடி வரும். புகழ் வர வேண்டாம்.

ஏனெனில், அந்த புகழுக்கு உரியவன் ஆண்டவன் மட்டுமே!
-----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.9.19

சட்டமும், நீதியும், மனிதாபிமானமும்!!!!


சட்டமும், நீதியும், மனிதாபிமானமும்!!!!

இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான வழக்கொன்றை சந்தித்தது.........!!!

வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார்.

வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்........:

"நான் களவாடியது உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார்.

இதை கேட்டதும் நீதிபதி.........:

"என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாய் (100 அமெரிக்க டாலர்) அபராதமாக விதிக்கின்றேன். இதை கட்டத் தவறினால் இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."

இவ்வாறு தீர்ப்பளித்துவிட்டு, தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து......

"இங்குள்ள ஒவ்வொருவர்மீதும் நான் ஐம்பதுனாயிரம் ருபாய் (5 டாலர் ஐம்பது காசு) தண்டணையாக இடுகின்றேன். காரணம் !!!! இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு இத்தண்டணையை அளிக்கின்றேன்."
என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக, அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார். இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார்.

இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து (350 அமெரிக்க டாலர் ) 10 இலட்சம் ருபாயை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.!!!!!!!

சட்டம், மனிதாபிமானம், நீதி ஒன்றுக்கொன்று கைகோர்த்து தர்மத்தை நிலைக்கவைத்துவிட்டன !

நீதிபதி என்றால் இவர்போல சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒருங்கே கையாள வேண்டும்.முன்னுதாரணமான இந்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்......
--------------------------------------------------------------
படித்து நெகிழ்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.9.19

அலெக்சாண்டர் அசத்தலாகச் சொன்னது!


அலெக்சாண்டர் அசத்தலாகச் சொன்னது!

இன்றைய சிந்தனை.
'' இரு மனதோடு..''..
...............................

எண்ணங்களின் குவியலே மனம். வலிமையாகச் சிந்திக்கும் போதுதான் மனம் வலிமை பெறுகிறது என்பது பொதுவான எண்ணம்.

ஆனால் எண்ணங்களிலிருந்து விடுதலைப்பட்ட மனமே வலிமையானது.

மனம் அலைபாயும் போது, சக்தி எண்ணத்தினால் சிதறிப் போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போது சக்தி சேமிக்கப்படுகிறது, மனம் வலிமை பெறுகிறது.

ஆனால்,இரு மனதோடு அலை பாய்ந்து கொண்டு இருப்பவர்களால் எந்த செயலிலும் வெற்றியைத் தொடக் கூட முடியாது.

தன் 24 வது வயதில் பாரசீகத்தின் மீது போர் தொடுக்கிறான் அலெக்சாண்டர். படை மரக்கலங்களில் போய் இறங்கி ஒரு மலை மீது முகாமிட்டிருக்கிறது.

அன்றிரவு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களுடைய மரக்கலங்கள் அனைத்தும் தீப்பற்றி எரிகின்றன.

வீரன் ஒருவன் ஓடி வந்து அரசே நம் மரக்கலங்கள் அனைத்தும் தீப்பற்றி எரிகின்றன என்று பதற்றத்தோடு சொல்கிறான். படையே பதறுகிறது.

அலெக்சாண்டரிடம் எந்த சலனமும் இல்லை. வீரன் திரும்பக் கேட்கிறான் என்ன அரசே மரக் கலங்கள் எரிகின்றன என்கிறேன் நீங்கள் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்களே என்கிறான்.

அப்போது அலெக்சாண்டர் வீரர்களை நோக்கி சொல்கிறான்,

 ''நான் தான் மரக்கலங்களை எரிக்கச் சொன்னேன்.''

வீரர்கள் அனைவரும் வியப்போடு பார்க்கிறார்கள்.

அலெக்சாண்டர் தொடர்கிறான்...

வீரர்களே,'' இந்த மரக்கலங்களை காணும் போது எல்லாம் உங்களுக்கு எப்போது ஊருக்குப் போவோம் என்கிற எண்ணம் வரும் ..
அதனால் நீங்கள் இருமனதோடு போர் செய்வீர்கள். இருமனதோடு
போர் புரிந்தால் வெற்றி பெற முடியாது. அதனால் தான் மரக்கலங்களை எரிக்கச் சொன்னேன்.இப்போது உங்களுக்கு ஒரே வாய்ப்புதான் வெற்றி அல்லது வீர மரணம்...

எது வேண்டுமோ நீங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றான்.....

ஆம்.,நண்பர்களே..,

ஒரே மனதோடு, தீர்க்கமான முடிவோடு களம் இறங்கி போராடுபவர்கள்தான் வெற்றி என்னும் கனியை ருசிக்க முடியும்!!!!
----------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.8.19

கர்மவீரர் சொன்ன அற்புதமான யோசனை!!!!!


கர்மவீரர் சொன்ன அற்புதமான யோசனை!!!!!

முப்படைகளுக்கும் தனித்தனி தளபதி !

*தமிழ் நாட்டின் முதலமைச்சராயிருந்த  காமராஜர் ஒருமுறை டெல்லியில் பிரதமர் நேருவைச் சந்திக்கப் போகிறார்.

நேருவோ வழக்கமான உற்சாகத்தோடு காணப்படவில்லை ; மனத்தில்
ஏதோ சிந்தனை அலைப்பாயக் கவலையோடு இருந்தாராம்...

*பிரதமரைப் பார்த்துப் பல்வேறு செய்திகளைப் பேசுவதற்காக ஆர்வத்தோடு போன காமராஜர், " என்னடா இவர் இப்படி உட்கார்ந்திருக்கிறாரே.. இவரிடம் எப்படி தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளைத் கேட்டுப் பெறுவது...? என்னும்
தயக்கத்தோடு அவரே பிரதமரிடம் ஆரம்பித்திருக்கிறார் .

*"எப்பவுமே கலகலப்பா இருப்பிங்க...இன்னிக்கு என்ன ஆச்சு உங்களுக்கு..?

*நேரு விரக்தியோடு, " நம்ம இராணுவத் தளபதி திம்மையாவுக்கும், இராணுவ மந்திரி கிருஷ்ணமேனனுக்கும் எந்தநாளும் ஒரே தகராறா இருக்கு காமராஜ்!  திம்மையா கோப்புகளை மந்திரிக்கு அனுப்ப முடியாதுங்கிறார்.
கிருஷ்ணமேனனோ , திம்மையா தளபதியாய் இருக்கிறவரை தான் மந்திரியாக வேலை பார்க்க முடியாதுங்கிறார்.இராணுவ விஷயமா இருக்கிறதாலே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. இந்த சிக்கல எப்படி தீர்க்கிறதுன்னே எனக்குப் புரியலே..." என்றாராம். 

* " இந்த ரெண்டு பேர்ல் யார வைச்சுக்கணும்...யாரைக் கழற்றி விட்டுவிடலாம் என்று நெனைக்கிறீங்க...? என்று கேட்டார் தலைவர்.

*"கிருஷ்ணமேனன் மூத்த அரசியல்வாதி; எனக்கு வாத்தியாராகவே இருந்தவர். அவரை நாம விட முடியாது. திம்மையாவைத்தான் ஏதாவது பண்ணியாகனும் ..." என்றார் நேரு.

*கொஞ்சம் கூடத் தயங்காமல், உடனே காமராஜர் சொன்னார். " நீங்க உடனே கேபினட் மீட்டிங்க போட்டு, திம்மையாவுகற்கும் கேபினட் அந்தஸ்து கொடுங்க அவர்கூட கெட்டிக்காரா அதிகாரிகள் 'டெபியூஸ்ட்' பண்ணி, பணத்தையும் கொடுத்து, ஆறு மாசத்துக்கு வெளிநாடுகள்ல சுத்திட்டு வரச் சொல்லுங்க. உலகம் பூரா புதுசா வந்திருக்கிற இராணுவ தளவாரங்கள் பத்தி அவங்க ' ஸ்டடி'பண்ண போறங்கன்னு கேபினட்ல தீர்மானம் போட்டு விட்டுடுங்க. அவங்க போய் ' ரவுண்ட்' அடிச்சுட்டு வரட்டும். அதுக்குள்ளே
நீங்க இங்கே பண்ண வேண்டிய மத்ததையெல்லாம் பண்ணிவிடலாம்!!!! ”

*வியப்போடு கேட்டுக் கொண்டிருந்த நேரு, " திம்மையா திரும்பி வந்ததும் அவரை எங்கே ' அக்காமடேட்' பண்றது.? என்று கேட்டார்...

*பளிச்சென்று அடித்தார் பெருந்தலைவர். " இப்பதிம்மையா இந்தியாவின் மொத்த இராணுவத்துக்கும் தளபதியா இருக்கார். இதுவே ரொம்ப டேஞ்ஜர். அவர் நினைச்சா ஒரே ராத்திரியிலே பிரைம் மினிஸ்டரையே '*ஹவுஸ்கஸ்டடியில வச்சுப்புடலாம். அவரு திரும்பி வர்துக்குள்ளே
மூணு படைகளுக்கும் மூணு தனித்தனி தளபதிய நியமிச்சுடுங்க. அவரு புல்லையும் புடுங்கிடலாம்; வந்து பார்த்துட்டு அவரால ஒண்ணும் முட்டும் முடியாது...

*ஏகத்துக்கு தளபதியா இருந்துநாட்டாமை பண்ணின ஒருத்தர்  ஒரே ஒரு படைக்குத் தளபதியா இருக்க சம்மதிக்கவும் மாட்டார் வெளியேறத்தான் நினைப்பாரு. அமைதியாய் ஓய்வு கொடுத்து வீட்லே ஒக்கார வச்சுப்பிடலாம் ! " என்று தலைவர்

பேசப்பேச நேரு தன் இருக்கையில் இருந்து எழுந்து, மகிழ்ச்சி தாள முடியாமல் காமராஜரைக் கட்டித் தழுவிக்கொண்டு...

" Kamaraj... Fantastic Kamaraj...! What a burte common sense ! "

*தலைவர் காமராஜர் சொன்னபடியே வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வந்த திம்மையா தானே ஓய்வு பெற்று வெளியேறினார்.

*அரசியல் சதுரங்கத்தில் தனது அனுபவ அறிவை வைத்தே காய்களை நகர்த்திக் களம் கண்டவர் காமராஜர்.

*புத்தகத்தைக் படிப்பதைவிட பூமியைச் படித்தவர் அவர்.

சொன்னவர் :- திரு.S. செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர்.

*நன்றியுடன் ஆதார நூல்; "ஆகட்டும் -- பார்க்கலாம் "- திரு.வீரபாண்டியன்.
பக்கம் எண் : 111&112.
===========================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.8.19

வாழ்க்கைத் தத்துவம் அடங்கிய செய்யுள்!!!


வாழ்க்கைத் தத்துவம் அடங்கிய செய்யுள்!!!

அருமையான செய்யுள் !

"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன!
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தை தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்து செட்டியாரே"*

எவ்வளவு சரக்குடன் ஒரு அருமையான பாடலில் பலசரக்கை வைத்து வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிட்டார்

வெங்காயம் ---- (வெண்+காயம்) வெண்மையான உடல்
சுக்கானால் ----- சுக்காக சுருங்கி போனால்
(இஞ்சி காய்ந்தால் சுக்கு)
வெந்தயம் ------ வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்
ஆவதென்ன - ஆவது ஒன்றுமில்லை
இங்கார் - - - - - - (இங்கு + ஆர்)  இப்பூலகில் யார்
சுமந்திருப்பார் இச்சரக்கை ---  அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்
மங்காத ---- குறைவில்லாத
சீரகம் --- வைகுந்தம்
(சீரகம் - சீர்+அகம் (ஸ்ரீ அகம்) - - - அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு)
தந்தீரேல் ---- நீ கொடுத்துவிட்டால்
ஏரகத்து - - - (ஏர் +அகம்)
உயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும்
செட்டியாரே! -- அனைத்து (சரக்குகளுக்கும்) செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே!
தேடேன் பெருங்காயம்--- இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்

 வெண்மையான உடல் சுருங்கி போனால்  வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்  ஆவது ஒன்றுமில்லை
 இப்பூலகில் யார் அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்
 குறைவில்லாத வைகுந்தம்  அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு)  நீ கொடுத்துவிட்டால்
உயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும் அனைத்து  செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே!
 இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்
------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.5.19

அமெரிக்கா செல்ல நீங்கள் கொடுக்கும் விலை!!!!!


அமெரிக்கா செல்ல நீங்கள் கொடுக்கும் விலை!!!!!

அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.

24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…

அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.

ஏன் போகலை?

எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

ஆக்கம்:- சுஜாதா
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!