Astrology: அலசல் பாடம் :எட்டே மாதங்களில் இறைவனடி சேர்ந்த
குழந்தையின் ஜாதகம்!!!
ஒரு குழந்தையின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரம். பிறந்து 8 மாதங்கள்வரைதான் உயிரோடு இருந்தது.
8வது மாத முடிவில் தன் பெற்றோர்களை துன்பக்கடலில் ஆழ்த்திவிட்டு, குழந்தை இறைவனடி சேர்ந்துவிட்டது.
எட்டு மாதத்தில் குழந்தையின் மறைவிற்கு ஜாதகப்படி என்ன காரணம்?
வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம்!!!
மீன லக்கின ஜாதகம்.லக்கினகாரகன் குரு எட்டாம் இடத்தில் மாந்தியோடு கூட்டாக அமர்ந்து கடுமையான பாலரிஷ்ட தோஷத்தை உண்டாக்கியுள்ளான்.
அத்துடன் குரு பகவான் ராகுவின் நட்சத்திர சாரத்தில் இருப்பதோடு 6ம் அதிபதி சூரியன் மற்றும் 12ம் அதிபதி சனியின் பார்வைகளையும் பெற்று வலுவிழந்து உள்ளான்.
இவைதான் குழந்தையின் இறப்பிற்கு முக்கியமான காரணம்.
அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!


