மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Jathagam. Show all posts
Showing posts with label Jathagam. Show all posts

4.10.25

Astrology: சரஸ்வதி யோகம் வைரின்ச்ச யோகா Saraswathi Yoga

Astrology: சரஸ்வதி யோகம் வைரின்ச்ச யோகா
Saraswathi Yoga
Vairincha Yoga


சரஸ்வதி யோகம் என்றவுடன், வெள்ளைத்தாமரைப் பூவில் இருக்கும், வீணை செய்யும் ஒலியில் இருக்கும் சரஸ்வதியைப் போல ஜாதகனும் இருப்பான் என்று நினைத்துவிடாதீர்கள். இது அதீதப் படிப்பிற்கான, படித்ததை மனதில் வைப்பதற்கான யோகத்தைக் குறிக்கும்.

ஜாதகன், வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும், இன்னும் பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தவனாக இருப்பான்.

இன்றைய நிலையில் அதை எல்லாம் கற்றுத் தேர்ந்தால், வேலை எங்கே கிடைக்கும்? பூவா’விற்கு என்ன செய்வது? ஆகவே இன்றைய நிலையில் வாழ்க்கையின் உயர்விற்குத் தேவையான பல நூல்களையும் ஜாதகன் கற்றுத் தேர்ந்திருப்பான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வங்கி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். கணினி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். திரைத்துறை என்றால், அதற்குத் தேவையான அத்தனை விஷயங்கள் அனைத்தையும் கற்று வைத்திருப்பான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
யோகத்தின் வடமொழிப் பெயர்: வைரின்ச்ச யோகா (Vairincha Yoga)
Vairinchi means Saraswathi and this is a yoga for learning.

யோகத்தின் அமைப்பு: குருவும், சனீஷ்வரனும் திரிகோணத்தில் இருக்க வேண்டும். லக்கினாதிபதியும் திரிகோணத்தில் இருக்கவேண்டும். அதோடு மூவரும் வலிமையோடு இருக்க வேண்டும்.

இந்த வலிமை (strength) பற்றிப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன். ஆகவே அதை மீண்டும் சொல்லி பிளேடு போட விரும்பவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த யோகத்தால் ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள்

ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் மேதையாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மிக்கவனாக இருப்பான். அற வழியில் நடப்பவனாக இருப்பான். எண்ணற்ற சீடர்கள் இருப்பார்கள். தெய்வ அருள் இருக்கும். எல்லோரும் வணங்கும் நிலையில் இருப்பான். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பான். செல்வத்துடன் இருப்பான்.
-------------------------------------------------------
இருப்பதே மூன்று திரிகோணம். அதில் அந்த மூவரும் இருக்க வேண்டுமாம். கொஞ்சம் கஷ்டம்தான். அதாவது நம்மைப் போன்று ப்ளாக்குகளில் எழுதும் அல்லது ப்ளாக்குகளைப் படிக்கும் சாமான்யர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும் வாய்ப்பு இல்லை.

அந்தக் காலத்தில் ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் இந்த அமைப்பு இருந்திருக்கலாம்.

உங்களில் யாருக்காவது இருந்தால் சொல்லுங்கள். 

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.10.25

Astrology: பாரிஜாத யோகம். Parijatha Yoga

Astrology: பாரிஜாத யோகம். 
Parijatha Yoga


பாரிஜாத மலர் என்றால் தெரியுமா? பலருக்கும் தெரியாது. ஆனால் பவளமல்லி மலர் என்றால் அனைவருக்கும் தெரியும்.
வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை.
தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள்.
இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் நல்ல வாசனையைப்  பரப்பும் தன்மை கொண்டது.

திருமாலுக்கு உகந்த மலர் இது. இந்த மலரின் பெயரில் ஒரு யோகம் உள்ளது. அது என்ன யோகம் என்று பார்ப்போம் வாருங்கள்!
--------------------------------------------------------
சுபக்கிரகங்கள் 11ஆம் வீட்டில் இருந்தாலும், அல்லது 11ஆம் வீட்டைப் பார்த்தாலும், அத்துடன் 11ஆம் வீட்டதிபதி அஸ்தமனம் பெறாமல் தன் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருக்கும் நிலையில் இந்த யோகம் ஜாதகனுக்குக் கிடைக்கும். அதாவது பாரிஜாத யோகம் கிடைக்கும்.

பலன்: ஜாதகன் செல்வம் மிக்கவனாகவும், செல்வாக்கு மிக்கவனாகவும் இருப்பான். கற்றவனாக இருப்பான். எப்போதும் விதம் விதமான நல்ல நிகழ்வுகளை அரங்கேற்றுபவனாக இருப்பான். மனைவி மக்கள் என்று பெரிய குடும்பத்தைப் பெற்றவனாக இருப்பான்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.10.25

Astrology: கிரகங்கள் உச்ச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

Astrology: கிரகங்கள் உச்ச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

Results of exalted planets

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1 ஜாதகத்தில் சூரியன் உச்ச வீடில் இருந்தால்,  ஜாதகன் செல்வந்தனாக இருப்பார். மேன்மையான குணம் உடையவனாக இருப்பார். வீரம் மிக்கவனாக இருப்பார்.

2.சந்திரன் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகருக்கு  நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் எப்போதும் கிடைக்கும்!

3. செவ்வாய் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர் பகட்டான மனிதராக இருப்பார். வீரம் மிக்கவராக இருப்பார். வேற்று ஊரில் வசிப்பவராக இருப்பார்.

4. புதன் உச்சம் பெற்று  இருந்தால் அறிவாற்றல் மிக்கவராக இருப்பார்.

5. குரு உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர், கல்வி, புகழ், செல்வம் உடையவராக இருப்பார்.

6. சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர் இயல், இசை, நாடகம், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவராகவும், தேர்ச்சி உடையவராகவும் இருப்பார்.

7.சனி உச்சம் பெற்று இருந்தால் அரசியலில் தலைமை பதவியும், அல்லது அரசு கெளரவ பதவியும், தொழிலாளர் தலைவராகவும் இருப்பார்

அன்புடன்,
வாத்தியார்
=============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.9.25

Astrology: கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

Astrology: கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1.சூரியன் நட்பு வீடுகளில் இருந்தால் ஜாதகருக்கு நல்ல நண்பர்களைக் கொடுப்பார். ஜாதகர் தர்ம குணம் உடையவராக இருப்பார்.

2. சந்திரன் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர் மகிழ்ச்சியானவராகவும், புகழ் பெறுபவராகவும் இருப்பார்.

3. செவ்வாய் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர் தனக்கு விருப்பமான நபர்களை ஆதரிப்பவராக இருப்பார்.

4. புதன் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர், நகைச்சுவை உணர்வு உடையவராக, செயல் வீரராக, செல்வந்தராக இருப்பார்.

5. குரு நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் பல நல்ல காரியங்களை செய்பவராக இருப்பார்.

6. சுக்கிரன் நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் நல்ல நண்பர்களை உடையவராக இருப்பார். செல்வம் உடையவராக இருப்பார்.

7. சனி நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் மற்றவர்களை நம்பி வாழ்வார்.

அன்புடன்,
வாத்தியார்
================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.9.25

Astrology: கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

Astrology: கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1.சூரியன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மை நிலையிலும், பெண் ஆசை உடையவராகவும் இருக்க நேரிடும்.

2. சந்திரன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் அழகற்றவராகவும், இருதய நோய் உடையவராகவும் இருப்பார்.

3. செவ்வாய் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மையில் வாழ நேரிடும். பகைவர்களால் துன்பமும், அதிர்ஷ்டமற்ற நிலையும் உண்டாகும்.

4. புதன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர், அறிவாற்றல் இல்லாதவராக, பகைவரால் தொல்லை அடைபவராக  இருப்பார்.

5. குரு பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் நியாயம் இல்லாதவராக, ஏழ்மை உடையவராக, அரக்க குணம் கொண்டவராக இருப்பார்.

6. சுக்கிரன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் துன்பம் அனுபவிப்பவராக, கீழான பணி செய்பவராக, பல கெடுதலான காரியங்களைச் செய்பவராக  இருப்பார்.

7. சனி பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் தூய்மையற்றவராக, தொல்லைகள் உடையவராக, பல வியாதிகளால் துன்பம் அடைபவராக இருப்பார்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.9.25

Astrology: களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.

Astrology: களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன். 
The authority for Marriage


எல்லோருக்கும் ஒரு குழப்பம் உண்டு. களத்திரகாரகன் , அதாவது Authority for marriage யார்? ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான களத்திரகாரகனா? அதாவது ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயையும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் இல்லை!

Authority என்பவர் ஒருவர்தான் இருக்க முடியும். தந்தைக்கு அத்தாரிட்டி சூரியன். தாய்க்கு அத்தாரிட்டி சந்திரன் என்று இருப்பதுபோல களத்திரத்திற்கு, அதாவது திருமணத்திற்கு அத்தாரிட்டி சுக்கிரன் மட்டும்தான்!

வாழ்க்கையில் உள்ள எல்லா சுகங்களுக்கும், படுக்கை சுகம் உட்பட (அதாவது ஆணுக்கு பெண் சுகமும், பெண்ணிற்கு ஆண் பரிசமும்) எல்லா சுகங்களுக்கும் உரியவன் சுக்கிரன்தான். ஆகவே அவன்தான் திருமணம் செய்து வைக்கும் அதிகாரமும் கொணடவனாவான்.

பெண்களுக்கு மட்டும் ஒரு துணைக் காவடியும் உண்டு. மெயின் காவடியை சுக்கிரன் தூக்குவான். துணைக் காவடியை குரு பகவான் தூக்குவார். அதனால்தான் பெண்களுக்கு மஞ்சள் கயிற்றைத் தாலிக் கயிறாக அணிவிக்கிறோம். மஞ்சள் நிறமுடைய தங்கத்தில் திருமாங்கல்யத்தைச் செய்கிறோம். பெண்களைத் தினமும் மஞ்சள் பூசிக் குளி என்கிறோம்.தங்கம் வாங்க முடியாத ஏழைப் பெண்களுக்கு விரளி மஞ்சளை, மஞ்சக் கயிற்றில் கட்டி அணிவிக்கின்றோம். இவை எல்லாம் குருபகவானை மகிழ்விப்பதற்கும், அவரின் ஆசீகளைப் பெறுவதற்கும்தான்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருந்தால் மட்டும் செவ்வாயைக் கூப்பிட்டுப் பார்ப்போம். அதுபோல செவ்வாய் தோஷத்திற்கும் அவர் வந்து நிற்பார். அவரின் பங்களிப்பு அவ்வளவுதான்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
===============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.9.25

Astrology: மகிழ்ச்சியான மண வாழ்க்கை

Astrology: மகிழ்ச்சியான மண வாழ்க்கை 

பள்ளிக்கூடத்தில் இருப்பதுபோல சிலபஸ் எல்லாம் கிடையாது
முக்கிய விதிகள், அலசல் பாடங்கள், உதாரண ஜாதகங்கள் என்று பாடங்கள் கலவையாக இருக்கும்.
படிப்பதற்கு சுவையாக, வழக்கம்போல எனது நடையில் (எளிய நடையில்) எழுதிக்கொண்டுள்ளேன்!
தொடர்ந்து படியுங்கள்.
சந்தேகம் வராது. வந்தால், பாடம் சம்பந்தமான சந்தேகத்தை மட்டும் கேளுங்கள்
உங்கள் ஜாதகத்தோடு சம்பந்தப் படுத்திக் கேட்காதீர்கள்
முழுப்பாடங்களையும் படித்த பிறகு உங்கள் ஜாதக சம்பந்தமான மேட்டர்களை அலசிப் பார்க்கும் அறிவு உங்களுக்கே ஏற்பட்டுவிடும்

நான் எனக்குத் தெரிந்ததை மட்டுமே சொல்லித் தருகிறேன்
தெரிந்ததை மட்டுமே எழுதுகிறேன்
உங்களை ஜோதிடன் ஆக்கவேண்டும் என்பது என் நோக்கமல்ல. முதலில் நானே தொழில்முறை ஜோதிடன் அல்ல!
ஜோதிடத்தில் நான் கற்றுணர்ந்தவற்றை, உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். அவ்வளவுதான்
நீங்கள் நான் சொல்லிக் கொடுப்பதை மனதில் வாங்கிக் கொண்டு, உங்கள் ஜாதகத்தையும், உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஜாதகத்தையும், உங்கள்
நண்பர்களின் ஜாதகத்தையும், அலசிப்பார்க்கும் அளவிற்கு மேன்மையுற்றால், அதுவே போதும்.
நான் சொல்லித் தரும் நோக்கமும் அதுதான்.
எண்ணிக்கை முக்கியமல்ல. நான் சொல்லித் தருபவர்களில் ஒரு பத்துப் பேர் தேர்ச்சியுற்றால் போதும். அதுவே எனது அரிய நேரத்தை செலவழித்து

நான் உங்களுக்குப் பாடம் நடத்துவதற்குக் கிடைத்த பயனாகும்.

இன்றையப் பாடம்: மகிழ்ச்சியான மண வாழ்க்கை

அக்காலத்தில், ஜாதகம் பார்த்து நடந்த திருமணங்கள் குறைவே! நெருங்கிய உறவுகளில் உள்ள வரன்களை, ஒருவருக்கொருவர் மனப் பொருத்தம்

இருந்தால் போதும் என்று மணம் செய்துகொள்வார்கள். அத்தை வீடு, அம்மான் வீடு (மாமா வீடு) என்று திருமணங்கள் நடைபெறும். அல்லது
உறவுக்காரர்களில் சம்பந்தம் செய்யக்கூடிய உறவுகளைத் தேர்ந்தெடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு மணம் முடித்துவிடுவார்கள்.

பெண்ணிற்கு 18 வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தை செய்துவிடுவார்கள்.

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, நிலமை, வேறு விதமாக இருந்தது. அப்போதெல்லாம் பால்ய விவாகம். அதாவது குழந்தைத் திருமணம்.
என் பெற்றோருக்கு நடந்ததும் பால்ய விவாகம்தான். என் அன்னைக்கு அப்போது 11 வயதுதான். என் தந்தைக்கு 13 வயது. செல்வந்தர் வீடுகள். இரு
வீட்டாருமே நெருங்கிய உறவுக்காரர்கள். அப்போதெல்லாம் 6 நாள் கல்யாணமாம். அந்த 6 நாட்களுக்கும், உறவினர்கள் அனைவருக்கும் ஜாம்
ஜாமென்று விருந்தோம்பல் உண்டாம். என் பெற்றோர்கள் திருமணத்திலும் அவ்வாறு நடந்ததாம்!

ஜாதகம் எல்லாம் பார்க்கும் வழக்கம் இல்லாத காலம் அது. திருமணத்திற்குப் பிறகு தம்பதிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டால், இரு வீட்டிலும் உள்ள
பெரியவர்கள் கலந்து பேசி அதை சரி செய்திருக்கிறார்கள்.

இப்போது நிலைமை அப்படியல்ல! எல்லாம் தலை கீழாக மாறியுள்ளது.

இன்றைய தேதியில், பத்திரிக்கைக்காரர்கள், சனி, பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு & கேது பெயர்ச்சி என்று ஒவ்வொரு பெயர்ச்சிக்கும் மலர்
(இணைப்புப் புத்தகங்களைப்) போட்டு வருவதாலும், மற்றும் நாள், வார, மாத ராசி பலன்களை எழுதிவருவதாலும், மக்களிடம் ஒரு விழிப்பு உணர்வு
ஏற்பட்டுள்ளது. எல்லோருக்கும் ஜாதகத்தின் மேலும் ஜோதிடத்தின் மேலும் ஒரு பிடிப்பு ஏற்பெற்றுள்ளது. அனைவரும் பொருத்தம் பார்த்து திருமணம்
செய்யும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார்கள்.

பொருத்தமான ஜாதகம் உடைய வரனுக்கு அலைபவர்கள் சிலரை எனக்குத் தெரியும்.

அவர்களிடம் நான் சொல்லுவேன்:

”ஜாதகம் பொருந்தினால் பையனைப் பிடிக்காது. பையனைப் பிடித்தால் ஜாதகம் பொருந்தாது. ஆகவே முருகப் பெருமானிடம் பாரத்தைக் கொடுத்து
விட்டு ஜாதகம் பார்க்காமல் திருமணத்தை செய்து வையுங்கள்” என்று கூறுவேன்

ஜாதகம் பார்த்துப் பண்ணுவதால் வருவிருக்கின்ற கேடை (விதியைத்) தடுத்து நிறுத்த முடியுமா? நடக்கவிருப்பதை, நடக்கவிடாமல் செய்ய முடியுமா?

நடக்கவிருப்பது எப்படியும் நடந்தே தீரும்!

ஜாதகப் பொருத்தம் பார்த்து செய்த திருமணங்களில் பல திருமணங்கள் ஊற்றிக் கொண்டுள்ளன. அவர்களை எல்லாம் நான் அறிவேன்.

அதற்கு என்ன காரணம்?

ஜாதகத்தின் மேல் தவறா? அல்லது ஜோதிடத்தின் மேல் தவறா? அல்லது ஜோதிடரின் மேல் தவறா?

ஜோதிடர், 10 பொருத்தங்களைப் பார்ப்பார். சரியாக இருக்கும். தசா சந்திப்பு ஜோடிகளுக்குள் இருக்ககூடாது என்பதால அதையும் பார்ப்பார்,

அதுவும் சரியாக இருக்கும். செவ்வாய் தோஷம் இருக்கிறதா? இருந்தால் இருவருக்கும் இருக்கிறதா என்றும் பார்ப்பார். அதுவும் பொருந்தி வரும். அது
போன்று பெண் வீட்டார் கொண்டு வரும் ஐந்து அல்லது ஆறு ஜாதகங்களை அலசி, அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொடுப்பார்.

அவரால் முடிந்தது அதுதான்.

தனிப்பட்ட முறையில், பெண்ணின் ஜாதகத்தையும், பையனின் ஜாதகத்தையும் தனித்தனியாக அலசி அவைகளுள் உள்ள குறைபாடுகளை அவர்பார்க்க மாட்டார். அல்லது அப்படிப் பார்ப்பதற்கான நேரம் அவருக்கு இருக்காது.

அவ்வாறு அலசிப் பார்க்காத ஜாதகங்களில் உள்ள குறைகள் விஸ்வரூபம் எடுக்கும்போது பிரச்சினைகள் உண்டாகும்.
---------------------------------------------------------------------------
மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு உரிய முக்கியமான ஜாதக விதிகளில் சில!

1. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் ஒருவருக்கொருவர் பகையான இடத்தில் அமரக்கூடாது. 6/8 அல்லது 1/12 நிலைகளில்
அமர்ந்திருக்கக்கூடாது

உதாரணமாக கன்னி லக்கினத்திற்கு அதிபதி புதன். அந்த லக்கினத்திற்கு 7ஆம் அதிபதி குரு. புதன்  9ல் அதாவது ரிஷபத்திலும், குரு 4ல் அதாவது
தனுசுவிலும் இருந்தால் ஒருவருக்கொருவர் 6/8 நிலைப்பாடு. குருவிற்கு ஆறில் புதன். புதனுக்கு எட்டில் குரு. அவ்வாறு இருப்பது தீமையானது.

2. களத்திரகாரகன் சுக்கிரன் வக்கிரகதியிலோ அல்லது பாப கர்த்தாரி யோகத்திலோ இருக்கக்கூடாது.

3. ஏழாம் வீடும் அதன் அதிபதியும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியிருக்கக்கூடாது.

பாப கர்த்தாரி யோகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? அதைப் பற்றி பலமுறை சொல்லியுள்ளேன். எனது பாடங்களை விடாமல் தொடர்ந்து
படிப்பவர்களுக்கு அது தெரியும்

4. அஷ்டகவர்க்கத்தில் 7ஆம் வீட்டில் இருவருக்கும் 25 பரல்களுக்கு மேல் இருப்பது நல்லது. ஒருவருக்கு 20 பரல்களோ அல்லது அதற்கும்

குறைவான பரல்களோ இருப்பது நல்லதல்ல

இவைகள் எல்லாம் பொது விதிகள். ஆனால் முக்கியமான விதிகள். இவற்றை மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!