மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Destiny. Show all posts
Showing posts with label Destiny. Show all posts

7.1.21

நமக்கு வரவேண்டியது வந்தே தீரும்


நமக்கு வரவேண்டியது வந்தே தீரும் 

#புருசன் செத்துட்டான் 

பொட்டப்புள்ளையை காப்பாற்ற புளியமரத்தடியில் நைட்டு டிபன்கடை போட்டாள் இளவயது ப்ரியா

கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான் பர்மிசன் யார்கிட்ட கேட்ட மிட்நைட் ஆச்சு கடையைச்சாத்துன்னு

எதையாவது சொல்லிதினமும் ஓசியில வயிறுமுட்ட தின்பான்

பணம் குடுத்து சாப்பிடுபவர்கள் இன்னும் ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடமாட்டார்களா என ஏக்கமாயிருக்கும். அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவாள் ப்ரியா

ஆனால் இந்த ஓசிபோலீஸ் ஒருதோசை குறைவாக சாப்பிடமாட்டானா என நினைத்தால்  அவன் தான் ஆறஅமர உட்கார்ந்து நிறைய தின்னுட்டு பார்சலும் வாங்கிட்டு போவான்.

 என்ன செய்ய? புளியமரத்தடியில் கடைபோட்டால் இப்படித்தான் வருவார்கள்...

நம்ம தலைவிதி அப்படின்னு போலீசுக்கு வேண்டாவெறுப்பாக பரிமாறுவாள்

என்ன சுவையா சமைத்தாலும் டவுனுக்குள் நாலுகடை சாத்தினபிறகுதான் நாலுசனம் வரும் ப்ரியாவின் கடைக்கு...நாலு வருசம் ஆகியும் நயாபைசா மிச்சம் பண்ணமுடியலை

தனது கைப்பக்குவத்தின் மீது நம்பிக்கைவைத்து வாரக்கந்துக்கு பணம் வாங்கி டவுனுக்குள் கடையை பிடித்தாள்

ஒரே வாரத்தில் ப்ரியாவுக்கு நம்பிக்கை வந்திடுச்சு அப்பாடா இனி ஓரளவுக்கு தப்பிச்சிடலாம்ப்பா கடை வாடகை, கந்துவட்டி போக நாலுகாசை கண்ணுல பார்த்திடலாம்னு நினைச்சநேரம் மறுபடியும் அதே ஓசி போலீஸ் உள்ளே வர்றான்

வாடி வா, இன்னைக்கு உன்னை நாலுவார்த்தை நல்லா கேட்கனும். இனி உனக்கு நான் பயப்படத்தேவையில்லை

இன்னிக்கு சாப்பிட்டதுக்கு  இப்பவே காசைக்குடுடான்னு சட்டமா கேட்கனும்னு நினைச்சவேளையில்இந்தாம்மா ப்ரியா இதுல ஒரு லட்சரூபாய் இருக்கு, நாலு வருசம் நான் உன் புளியமரக்கடையில் சாப்பிட்டதுக்கான பில்.

உன்புருசன் என்னோட படிச்சவன்தான்புருசன் இல்லாம அந்த நைட்டுநேரம் நீ அந்தஇடத்தில் வியாபாரம் பண்றது எவ்வளவு ரிஸ்க் எனத்தெரிஞ்சதால் உன்னோட பாதுகாப்புக்காகத்தான் நான் தினமும் அங்கே வந்தேன்.

நான் கொடுக்கும் இந்தப்பணம்தான் புளியமரத்தடிக்கடையின் லாப பணம்.வச்சிக்கோ....கையில் கொடுத்தான் 

ப்ரியாவுக்கு ஒரு நிமிடம் என்னசொல்வதென்றே தெரியவில்லைகடைசியாகச்சொன்னாள்... 

வாங்க  சாப்பிடுங்க

வாழ்க்கையில நமக்கு வரவேண்டியது வந்தே தீரும்

#உழைப்பை மட்டும் விட்டு விட கூடாது ....😊😊

 படித்ததில் பிடித்தது!

அன்புடன்

வாத்தியார்

=======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.9.19

விதியின் வலிமை பற்றி கவிஞர் வாலி அசத்தலாகச் சொன்னது!!!!


விதியின் வலிமை பற்றி கவிஞர் வாலி  அசத்தலாகச் சொன்னது!!!!

நமக்கு விதிக்கப்பட்ட வாழக்கையைத்தான் விதி என்கிறோம்!

விதியைப் பற்றி கவிஞர் வாலி அவர்கள் கூறியதை காணொளி வடிவில் இன்று பதிவிடுகிறேன். அனைவரும் அவசியம் பாருங்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்

பின் குறிப்பு: விதியைப் பற்றி கவியரசர் கண்ணதாசன் அசத்தலாக எழுதிய கட்டுரை - மொத்தம் 10 பக்கங்கள் என்னிடம் உள்ளது. தேவைப் படுவோர் எனக்கு மின்னஞ்சலில் எழுதுங்கள்  PDF Format ல் அனுப்பிவைக்கிறேன்
மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
Subject boxல் கண்ணதாசனின் கட்டுரை என்று மறக்காமல் குறிப்பிடுங்கள்
எத்தனை பேர்களுக்கு விதியின் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் இந்த ஏற்பாடு!!!!
-----------------------------------------------------------

=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.3.19

மரணத்திற்குப் பிறகு உங்களுக்கு என்ன நேரும்?


மரணத்திற்குப் பிறகு உங்களுக்கு என்ன நேரும்?

உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே....!!

உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த.  முக்கியத்துவமும் கொடுக்காது....!!

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வர்.....!
1.உனது ஆடைகளை களைவர்.
2.குளிப்பாட்டுவர்.
3.புது துணி அணிவிப்பர்.
4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்.
5.சுடுகாடு என்ற புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.
6.உனது கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதில் அல்லது எரிக்க குறியாக இருப்பர்.
7.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் உன் வீட்டை விட்டும் பிரிக்கப்படும்.

* உன்னுடைய உடமைகள்
*புத்தகங்கள்
*பைகள்
*செருப்புகள்
எல்லாம் வெளியேற்றப்படும்.

A.உறுதியாக விளங்கிக்கொள்,
* உனது பிரிவால் உலகம் கவலைப் படாது
*பொருளாதாரம் தடைப்படாது
*உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் சந்தோசமாக வருவார்
* உனது சொத்து வாரிசுக்குப் போய்விடும்
* இவ்வளவு சொத்து சொகத்தோடு வாழ்ந்தும் வெறும் கையுடன் படுத்திருப்பதை இருப்பதை உணர மாட்டாய்.

நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே!!!!!
(பாடி எப்ப வரும் ????) உன் உறவுகளே இப்படித்தான் அழைப்பார்கள்

எனவே உனது குடும்ப கெளரவம்,பட்டம், பதவி என்று வாழும் போதே *வாழாமல்* உன்னை நீயே ஏமாற்றி விட வேண்டாம்

உன்னைப்_பற்றிய_கவலை -3 பங்காக்கப்படும்

1.உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்....பாவம் என்று.
2.நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர்.
3.உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவர்.
4.மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.
5.உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பம்.

#உன்னை_விட்டு_நீங்குவது
1.உடம்பு மற்றும் அழகு
2.சொத்து
3.ஆரோக்கியம்
4.பிள்ளைகள்
5.மாளிகை
6.மனைவி/கணவன்.

உனது ஜீவனுக்கென்று எதனை தயாரித்து வைத்துள்ளாய்.....

 எனவே, இவ்விஷயங்களில்_ஆசை_வை.

1. தவறாது கோவிலுக்கு செல்.

2. வேதத்தை பாராயணம் செய், தியானம் செய்.

3. பிறர் அறியா தர்மம் செய்

4. கடவுளை பற்றிய நல்லதை சொல்.

5. ஆத்மாவுக்கு உரியதை பற்றி சிந்தனை செய்.

6. கடவுள் பாராட்ட நல்ல செயல்கள் செய்.

7.யாருக்கும் கெடுதல் செய்யாதே.

உலகில் ஏதோ ஒன்றை தேடுகிறாய்...
தேடிக் கொண்டிருக்கிறாய்
ஆனால்,
மேற்கூறியது மட்டுமே உண்மை!!!
-------------------------------------------
படித்ததில் உணர்ந்தது: பகிர்ந்தது!!!!

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.5.18

விதிப்படி பயணம்


விதிப்படி பயணம்
   
உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே ‘விதி’ என்று கூறப்படுகிறது. உனதுவாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும், அது இறைவன் விதித்ததே.

ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது.

ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது?

நீ கருப்பையில் இருக்கும்போது, நீ போகப்போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும், நேரமும், உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன. நீ எங்கே போனாலும், எப்படி வாழ்ந்தாலும், அது இறைவன் விதித்ததே.

மனத்தின் சிந்தனைப் போக்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம்; ஆனால் அது நடப்பதும் நடக்காததும் உன் விதிக்கோடுகளில் அடங்கி இருக்கிறது.

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்”
என்றார் வள்ளுவர்.

ஊழ் என்பது பூர்வ ஜன்மத்தையும், விதியையும் குறிக்கும்.

பூர்வ ஜன்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜன்மத்தின் விதி நிர்ணயிக்கப்பெறுகிறது.

அதனை, ‘ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்றான் இளங்கோ.

போன ஜென்மத்தில் உன் விதி பாவம் செய்யும்படி விதிக்கப்பட்டிருந்தால், அதற்கான பரிகாரம் இந்த ஜன்மத்தில் எழுதப்படுகிறது.

ஆகவே விதியின் கோடுகள்தாம் உன்னை ஆட்சி செய்கின்றன என்பது, இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

நீ எண்ணியது நடந்தாலும் நடக்காவிட்டாலும், எண்ணாதது நடந்தாலும், யாவும் உன் விதி ரேகைகளின் விளைவே.
முயற்சி கால் பங்கு; விதியின் ஒத்துழைப்பு முக்கால் பங்கு.

“எல்லாவற்றுக்கும் கால நேரம் வர வேண்டும்” என்கிறார்களே இந்துக்கள், அதற்கு என்ன காரணம்?

இன்ன காரியங்கள், உனக்கு இன்ன காலங்களில் நடக்கும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது; அவ்வளவுதான்.

நினைவுகளின் மயக்கத்தை விதி ஒழுங்குபடுத்துகிறது.

இரண்டாவது உலக யுத்தத்தின்போது, ஹிட்லருக்கு இருந்த வசதியும், ஆயுதப் பெருக்கமும் வேறு எந்த நாட்டிற்கும் இல்லை.

ஒரே நாளில் போலந்தைப் பிடித்தான்.

வெறும் மிரட்டலிலேயே செக்கோஸ்லாவாகியாவைப் பிடித்தான்.

குண்டு போடாமலேயே பிரான்ஸைப் பிடித்தான்.

அவன் விரும்பியிருந்தால் ஐரோப்பாவையும், ஆறு நாட்களில் பிடித்திருக்கலாம்.

வெறும் வாய் வேட்டுக்களையே விட்டுக் கொண்டிருந்த சர்ச்சிலை, அவன் கனடாவுக்குத் துரத்தி யடித்திருக்கலாம்.

(சர்ச்சில் தென் அமெரிக்காவுக்கு ஓடத் திட்டமிட்டிருந்தார்.)

அகில ஐரோப்பாவையும் பிடித்துவிட்டால், உலகத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குக் காலனிகளாக இருந்த ஆசிய - ஆப்பிரிக்க , அரேபிய நாடுகள் - சுமார் எண்பது- குண்டுகள் போடாமலேயே அவன் கைக்கு இயற்கையாகவே வந்திருக்கும்.

இது சுலபமாக நடந்திருக்கக் கூடியதே.

ஆனால், விதி ஹிட்லரின் ஆணவத்தை ஆட்சி புரிந்தது.

பிரிட்டனைக் ‘கோழி குஞ்சு’ என்று அவன் கேலி செய்துவிட்டு, ‘யானையைச் சாப்பிட்டால்தான் என் பசி அடங்கும் என்று சோவியத் யூனியனுக்குள் நுழைந்தான்.

‘அவனது சவக்குழி அங்கேதான் தோண்டப்படுகிறது’ என்று விதி சிரித்தது.

சோவியத் யூனியனின் பருவகாலத்தில் அவன் சிக்கிச் சிக்கி இழுபட அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களைத் தயார் செய்து கொண்டு விட்டன.

எச்சரிக்கையாக இருந்திராததால், உலகத்தையே ஆண்டிருக்கக்கூடிய ஹிட்லர், தன் பிணத்தைக்கூடப் பிறர் பார்க்க முடியாதபடி இறந்துபோனான்.

எந்த மனிதனின் பாதையையும் திசை திருப்பி விடும் விதி. ஹிட்லரின் ஆணவதையும் அழிவை நோக்கித் திருப்பிவிட்டது.

உலக வரலாறுகளை கூர்ந்து நோக்குங்கள்.

நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவன் எவன்?

நினைப்பவன்தான் நீ. முடிப்பவன் அவன்.

இந்துக்களின் தத்துவத்தில் இது முக்கியமானது.

நம்முடைய லகான் இறைவன் கையிலே உள்ளது என்பதை, இந்துமதம்தான் வலியுறுத்துகிறது.

பிச்சைக்காரி ராணியான கதையும், ராஜா பிச்சைக்காரனான கதையும் அதிர்ஷ்டம் என்ற பெயரிலோ, துரதிர்ஷ்டம் என்ற பெயரிலோ விதியின் பரிசளிப்பு.

“ஐயோ! எவ்வளவோ ஆசை வைத்திருந்தேனே, இப்படி ஆகிவிட்டதே” என்று நீ பிரலாபித்துப் பயனில்லை.

“அப்படித்தான் ஆகும் என்று நீ ஜனிக்கும்போது எழுதப்பட்டிருக்கிறது.

ராமனையும் விதி ஆண்டது. சீதையையும் விதி ஆண்டது.

காமனையும் விதி ஆண்டது ரதியையும் விதி ஆண்டது.

சோழ நாட்டுக் கோவலனின் விதி. மாதவியின் மயக்கத்திலே இருந்தது.

கண்ணகியின் விதி மதுரையிலே இருந்தது.

பாண்டியன் நெடுஞ்செழியன் விதி, ஒரு காற்சிலம்பில் அடங்கியிருந்தது.

அலெக்சாண்டரின் விதி, பாபிலோனியாவில் முடிந்தது.

ஜூலியஸ் சீஸரின் விதி, சொந்த நண்பனின் கையிலே அடங்கியிருந்தது.

நெப்போலியனின் விதி, அவனது பேராசையிலே அடங்கியிருந்தது.

காந்திஜியின் விதி, கோட்ஸேயின் கைத்துப்பாக்கியில் அடங்கி இருந்தது.

அடிமைகள் கிளர்ந்து எழுந்ததும், ஆதிக்க வெறியர்கள் விழுந்து துடித்ததும், காலமறிந்து கடவுள் விதித்த விதி.

கடவுளே இல்லை என்று வாதிடுவோரும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று இறைவன் ஏன் விதிக்கிறான்?

தங்கள் கொள்கைகள், தங்கள் கண் முன்னாலேயே தோல்வி அடைவதைக் கண்டு சாக வேண்டும் என்றுதான்!

உண்மையான பக்தி உள்ள சிலருக்கு ஆண்வன் ஏன் நீண்ட ஆயுளைத் தருகிறான்?

‘தாங்கள் பக்தி செலுத்தியது நியாயமே என்று அவர்களும், அவர்களைப் பார்த்துப் பிறரும் உணர்வதற்காகத்தான்.

இறைவன் விதியை ஒருவேடிக்கைக் கருவியாக வைத்திருக்கிறான்.

சக்தியும் சிவனும் பூமியில் பூமியில் பல வேடங்களில் பிறந்ததாக இந்துக் கதைகள் கூறுவது, இறைவன், தானும் விதிக்கு ஆட்பட்டு, அதன் சுமையை அனுபவிக்கிறான் என்பதைக் காட்டுவதற்காகத்தான்.

அந்தக் கதைகளை வெறும் கதைகளாக நோக்காமல், இறைவனின் தத்துவங்களாக நோக்கினால், மானிடத் தத்துவத்தை எப்படி இறைவன் வகுத்திருக்கிறான் என்பதை அறிய முடியும்.

விதி - மதி ஆராய்ச்சியில் மதியையே விதிதான் ஆட்சி செய்கிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

அதை ஒரு கதையாக மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதினேன்.

பிரவாகம்
-----------
ஞானி, பிரகதீஸ்வரர், திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார். அவர் பெரிய மகான், உண்மையிலேயே ஞானி. சிறுவயதிலே துறவு பூண்டவர்.

கல்மண்டபத்தின் வடக்கில் அவருக்காக மேடை அலங்கரிக்கப்பட்டது.

எதிரே ஆண்களும் பெண்களும் கணக்கிலடங்காது கூடியிருந்தனர்.

வேதங்கள் பற்றியும், புராணங்களைப் பற்றியும் விளக்கிக்கொண்டே வந்த ஞானியார், ‘யாரும் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லப்படும்’ என்று தெரிவித்தார்.

யார் என்ன கேள்வி கேட்கப் போகிறார்கள் என்பதையே ஒவ்வொருவரும் ஆவலாக எதிர்ப்பார்த்தார்கள்.

மண்டபத்தின் மேற்கு மூலையிலிருந்து ஓர் உருவம் மெதுவாக எழுந்து நின்றது.

நடுத்தர வயது; தீட்சண்யமான கண்கள்; பந்த பாசங்களில் அடிபட்டுத் தேறி வந்தது போன்ற ஒரு தெளிவு.

சபையில் இருந்த எல்லோரும் அவரையே திரும்பிப் பார்த்தார்கள்.

“தாங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?” என்று ஞானியார் கேட்டார்.

அவர் சொன்னார்:

“சுவாமி! விதியையும் மதியையும் பற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சர்ச்சைகள் தோன்றி முடிவுக்கு வராமல் முடிந்திருக்கின்றன. ‘விதியை மதியால் வெல்ல்லாம் என்றும், மதியை விதி வென்றுவிடும்’ என்றும், இரண்டு கருத்துக்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன. எது முடிவானதோ சாமிக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்”

கேள்வி பிறந்ததும், ஞானியார் லேசாகச் சிரித்தார்.

மண்டபத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து, “எல்லோரும் எழுந்து வெளியே செல்லுங்கள்; நான் கூப்பிட்ட பிறகு வாருங்கள்” என்றார்.

மண்டபம் காலியாயிற்று.

இரண்டு நிமிஷங்கள் கழித்து, எல்லோரும் வாருங்கள்” என்றழைத்தார். திபுதிபுவென்று எல்லோரும் ஓடி வந்து அமர்ந்தார்கள்.

ஞானியார் கேட்டார்.

“குழந்தைகளே, இந்த மண்டபத்தில் உட்காந்திருந்தவர்கள் வெளியே போய் மீண்டும் உள்ளே வந்திருக்கிறீர்கள். உங்களில் போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எத்தனை பேர்?”

எல்லோரும் விழித்தார்கள்.

நாலைந்து பேர் மட்டும் பழைய இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

மற்ற எல்லோரும் இடம் மாறி இருந்தார்கள்.

கேள்வி கேட்டவரைப் பார்த்து, ஞானியார் சொன்னார்:

பாருங்கள், இந்தச சின்ன விஷயத்தில் கூட இவர்கள் மதி வேலை செய்யவில்லை.

கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இவர்கள் மெதுவாக வந்து, அவரவர் இடங்களில் அமர்ந்திருப்பார்கள்!

இவர்கள் மதியை மூடிய மேகம் எது?”

கேள்வியாளர் கேட்டார்:

“இது அவர்கள் அறியாமையைக் குறிக்கும்: இதை விதி என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”

ஞானியார் சொன்னார்:

“அறியாமையே விதியின் கைப்பாவை.

அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்து விட்டால், விதியும் இல்லை. விதித்தவனும் இல்லை.”

கேள்வியாளர் கேட்டார்:

“மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்குத் தனி நியமங்கள் இல்லையா?”

ஞானியார் சொன்னார்:

“இருக்கின்றன!

இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.

உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழ விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
இந்தப் பெண்தான் எனக்குத் தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்; அவளைக் கிடைக்க விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
எபோது நீங்கள் நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்.
அதற்கும் நம் மூதாதையர் சூட்டிய பெயரே விதி”

கேள்வியாளர் கேட்டார்:

“அந்த விதி எப்போது நிர்ணயிக்கப்படுகிறது எங்கிருந்து தொடங்குகிறது?”

ஞானியார் சொன்னார்:

சூன்யத்தில் நிர்ணயிக்கப்படுகின்றது; ஜனனத்தில் தொடங்குகிறது. தான் நினைத்தபடியெல்லாம் வாழ்க்கையை நடத்தி முடித்தவர்கள் எத்தனைபேர்? வீரன் வெற்றி பெற்றால், அது வீரத்தால் வந்தது. கோழை தோல்வியுற்றால், அது கோழைத் தனத்தால் கிடைத்து. ஆனால் வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பற்றாலோ, அவை விதியால் நிர்ணயிகப்பட்டவை! வரலாற்று நதியைத் தனி மனிதனின் சாகசங்கள் இழுத்துச் செல்வதில்லை. விதியே அழைத்துச்சென்றிருக்கிறது

கோவலனை மதுரைக்கு அழைத்ததும், பொற்கொல்லனைச் சந்திக்க வைத்ததும் விதி.

மாதர்களாலேயே ஆரம்பமான பிரஞ்சு சாம்ராஜ்யம், மாதர்களாலேயே அழிவுற்றதற்குக் காரணம் விதி!

ஒன்று நடைப்பெற்ற பின்னால், ‘கொஞ்சம் அப்படிச்செய்திருந்தால் நடந்திருக்காதே’ என்று மதி சிந்திக்கிறது!

மதி ஏன் தாமதமாகச்சிந்திக்கிறது?

விதி முந்திக்கொண்டு விட்டது!”

கேள்வியாளர் கேட்டார்:

“அப்படியானால் மனிதனின் மதியால் ஆகக்கூடியது ஒன்றுமே இல்லையா?”

ஞானியார் சொன்னார்:

“இருக்கிறது!

பள்ளம் என்று தெரியும்போது, அதில் விழாதே என்று எச்சரிப்பது மதி.

அதைப்பள்ளம் என்று தெரிய வைத்தது விதி.

விதி வாசலைத் திறந்து கொடுத்தால் மதி மாளிகைக்குள்ளே நுழைகிறது.

விதி வாசலை மூடிவிட்டால்,மதி அதிலே மோதிக் கொண்டு வேதனை அடைகிறது.

விதியென்னும் மூலத்திலிருந்து முளைத்த கிளையே மதி.

தந்தையைக்கொன்று சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றிய இளவரசர்களைப்போல் மதி சில நேரம் விதியை வென்றிருக்கலாம்.
ஆனால் விதி அந்த மதியின் குழந்தையாக மறுபடியும் பிறந்து தந்தையைக் கொன்று விடுகிறது. நியமிக்கப்பட்ட தர்மங்கள் சலனமடைவதும், நியமிக்கப்படாததை உறுதி பெறுவதும், நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியினாலே. அதை என்ன பெயர் வைத்து அழைத்தாலும், அதுதான் நம்மை அழைத்துச் செல்கிறது.

சாமியாக இருந்தவன் யோகியாக மாறுவது அனுபவதால் வந்த மதி.

யோகி சாமியாக மாறுவது ஆசையின் மூலம் வந்த விதி.

தொடக்கம் பலவீனமானால், முடிவு பலமாகிறது.

தொடக்கம் பலமானால், முடிவு பலவீனமாகிறது!

தொடக்கமும் முடிவும் ஒரே மாதிரி இருந்தால் விதி வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

அப்படி யாராவது இருக்கிறார்களா?”

ஞானியாரின் கேள்வி, கேள்வியாளரைச் சிந்திக்க வைத்தது.

கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்தார்.

மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஞானியார் அமைதியாக்க் கேட்டார்:

“உங்கள் மதி வேலை செய்யவில்லையா?”

கேள்வியாளர் அமர்ந்தார்.

ஞானியார் சொன்னார்:

ஜனனத்துக்கு முன்பும் மரணத்திற்குப் பின்பும், நாம் எங்கிருந்தோம், எங்கு போகிறோம் என்று தெரியும்வரை நமக்கு அப்பாற்பட்டது ஒன்று இருக்கிறது. இடைப்பட்ட வாழ்க்கையை அது நடத்துகிறது. நான் துறவியானதும் நீங்கள் சம்சாரிகளானதும் நமது விருப்பத்தால் மட்டும் விளைந்தவை அன்று. காலை வெயிலில், நமது நிழல் நம் உயரத்தை விடப் பன்மடங்கு உயரமாக இருக்கிறது. மதியத்தில் நம்மை விட அது கூனிக்குறுகி காலடிக்குள் ஒண்டிக் கொள்கிறது. மாலையில் அது மீண்டும் உயரமாகிறது.

ஆனால் நம் உருவம் என்னமோ ஒரே மாதிரி இருக்கிறது. நம் உருவமே விதி; நம் நிழலே மதி!”

மண்டபமே அதிரும்படி கையொலி கேட்டது.

சபை கலைந்தது.

கேள்வியாளர் மட்டும் வெளியே நின்று கொண்டிருந்தார்.

“உங்கள் கேள்வியும் என் பதிலும் விதியல்ல; மதியே! மதியால் விதியை ஆராய்ச்சி செய்ய முடியும், ஆட்சி செய்ய முடியாது.” என்றபடி ஞானியார் நடந்தார். கேள்வியாளர் பின் தொடர்ந்தார்.

நன்றி :- கவிஞர் கண்ணதாசன்.
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.1.17

நடந்த கதை: தன் வினை என்ன செய்யும்?


நடந்த கதை: தன் வினை என்ன செய்யும்?

குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.

அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி
செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.

அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார்.

நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் வறியவன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது. அதன்படி,அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும்
கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா, இப்போது சொல்... அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

வசிஷ்டரின்  சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார். ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார். அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய்.

அத்தகைய நீதி  பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர்,
போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி,
நூறு குழந்தைகள் என  நல்வாழ்க்கையைத் தந்தது. ஆனால், நான்
சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை  உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு  பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.

 ஆனால் தினம்தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு, கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார். தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.12.16

சின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம்!!!


சின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம்!!!

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா  அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன  பிரியும், பிரிந்தன புணரும்.

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்

விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.9.16

நாடிழந்த பாண்டவர்கள் என்ன கேட்டார்கள்?

தர்மம்: புராணச் சிறுகதை: நாடிழந்த பாண்டவர்கள் என்ன கேட்டார்கள்?

முடியாதவனை மன்னித்துவிடு, விரும்பாதவனைத் தண்டித்துவிடு” என்பது சமுதாயக் கோட்பாடு.

தன்னால் செய்ய முடிந்த ஒன்றைச் செய்ய விரும்பாதவன் சமுதாய விரோதி. ஆனால் அதே காரியத்தைச் செய்ய விரும்பியும் செய்ய முடியாதவன் அனுதாபத்துக்குரியவன்.

நாடிழந்த பாண்டவர்கள் துரியோதனனிடம் கேட்டது என்ன? ’குறைந்தபட்சம் வாழ ஊர்களாவது, வீடுகளாவது கொடுங்கள்’ என்று தான். செய்ய முடியாதா துரியோதனனால்? முடியும். ஆனால் விரும்பவில்லை. அதன் விளைவே பாரதப்போர்.

அனுமானும், விபீஷணனும் கூறியபடி சீதையைத் திரும்பக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருக்க முடியாதா ராவணனால்? முடியும்.. ஆனால் விரும்பவில்லை. அதன் விளைவே ராம-ராவண யுத்தம்.

’அறஞ்செய விரும்பு’ என்றார் ஒளவைப் பாட்டி. ’செய்’ என்று அவர் வற்புறுத்தவில்லை. ’விரும்பு’ என்றுதான் சொன்னார். காரணம் செய்ய முடியாதவர்கள் கூட விரும்பினால் போதும். அதுவே கருணையின் பரப்பளவாக விரிந்துவிடும்.

யூதர்களை ஹிட்லரால் மன்னித்திருக்க முடியாதா? போரின் நாசத்தை அவன் தடுத்திருக் முடியாதா? எல்லாவற்றையும் தவிர்க்கக் கூடியதாக இருந்த போதிலும், அவன் அதை விரும்பவில்லை. விளைவு…. மற்றவர்களை அவன் எப்படி நடத்தினானோ, அப்படியே இறைவன் அவனை நடத்தினான்.

வண்டி மாட்டை நீ ஒரு அடி அடித்தால், அதற்குப் பதிலடி உனக்குக் கிடைக்கும். ஆனால் அதற்கு நீ வைக்கோல் போட்டால்கூட, அதற்குக் கைமாறாக ஒரு கவளம் சோறு உனக்குக் கிடைக்க இறைவன் வழிவகுப்பான். எனவே விரும்பு, முடிந்தால் செய். முடியாவிட்டால் விரும்பிக்கொண்டே இரு.

 ’விரும்பு’ என்றதுமே விபரீதமாக நினைத்துவிடாதீர்கள், அதன் பெயர் ’விருப்பம்’ அல்ல ’ஆசை’. விரும்புவது என்ற வார்த்தை நல்லனவற்றை விரும்புவதையே குறிக்கும். (நற்சிந்தனை)

மண்ணுலகத்திலிருந்து நாம் விண்ணுலகத்து சொர்க்கத்திற்குச் செல்வது சாதனையல்ல. மண்ணுலகத்தையும் சொர்க்கமாக மாற்றுவதே சாதனை. (தர்ம சாஸ்திரம்)

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
=========================================================

18.7.16

முக்காலத்தையும் அறியும் ஆற்றல் சகாதேவனுக்கு எப்படிக் கிடைத்தது?

முக்காலத்தையும் அறியும் ஆற்றல் சகாதேவனுக்கு எப்படிக் கிடைத்தது?

பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு முக்காலமும் அறியும் ஆற்றல் எப்படி கிடைத்தது....?

முக்காலமும் தெரிந்திருந்தால், ஏன் போரில் என்ன நடக்கும் என்று உடன் பிறந்தவர்களிடம் ஏன் செல்லவில்லை ?

பாண்டு உயிர் பிரியும் தருணத்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும் , அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்....

பாண்டவர்களும் அதையே செய்ய திட்டமிடும் போது

அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்....

விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார்....

சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது? யாராவது பிணத்தை தின்பார்களா?

வாருங்கள் விறகு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்....

மிருகங்கள் இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்...

அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான்...

உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைக்கிறது....

விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்....

கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்..ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது..

அதுமற்றவர்கள்கண்களுக்குதெரியவில்லை..

சகாதேவனுக்குமட்டும்தெரிகிறது....

கிருஷ்ணரும் மிகக் களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்...

அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா . எல்லோரும்விறகைச் சுமந்துவந்தார்கள்...அவர்கள் களைப்பாவது நியாயம்...உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது.. நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய் என்று கேட்கிறான்...

உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது....

சகாதேவனை தனியே அழைத்துச் செல்லும் அவர் கேட்க ,சகாதேவன் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்....

எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்...இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்....

தனக்குத்தெரிந்த விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது என்று சத்தியமும் வாங்கிக் கொள்கிறார்.

சகாதேவன் தன் வாக்கை இறுதி வரை காப்பாற்றுகிறான்....

ஒரே ஒருமுறை மட்டும் யுதிஷ்டிரர் மிகவும் வற்புறுத்திக்கேட்டதால் உங்களால் நம் குலம் அழியும் என்ற ஒரு உண்மையை மட்டும் சொல்கிறான்...

மனம் வருந்தும் அவர் , தன்னால் தன் குலம் அழிய நான் விடமாட்டேன் என்றும் இன்று முதல் யாரிடமும் மோதுவதில்லை என்றும் யார் கோரிக்கையையும் மறுப்பதில்லை என்றும் முடிவு செய்கிறார்.

அதன்காரணமாகவே சூதாட துரியோதனன் விடுத்த அழைப்பை நிராகரிக்காமல் பங்கேற்கிறார்....

சகல தர்மமும் அறிந்த தர்மர் என்று அழைக்கப்பட்ட யுதிஷ்டிரர் சூதாட ஏன் ஒப்புக்கொண்டார் என்ற கேள்விக்கும் இதுவே விடை.... பாரத்த்தில் கண்ணன் மாயாவி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.6.16

மரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.


மரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும். 

ஒருநாள் எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்; ஆஹா,இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான்,(கருடபகவான் என்பது பகவான் விஷ்ணுவை சுமந்து செல்லும் கழுகு. இது கழுத்தில், வெள்ளை நிறமும், உடலில் ப்ரவுன் நிறத்திலும் இருக்கும்)  உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.அந்த பொந்தில் வசித்து வந்த ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குருவியை விழுங்கிவிட்டது; குருவியை காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று கருடபகவான் குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.

அப்போது எமதர்மரான கருடபகவானை கூர்ந்து கவனித்தார்.அதற்கு கருடபகவான், “நான் பகவான் விஷ்ணுவை முதுகில் சுமந்து செல்வதால் என்னை உம்மால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கோபத்தில் கத்தியது.

இதைக் கேட்ட எமதர்மராஜன் கருடபகவானிடம், “நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்; நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம், அந்த குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசிக்கும் ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது; அது எப்படி நிகழப் போகிறது? என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன்;”

மரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.

அதனால் வாழ்வில் நடக்கப் போவதை குறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட  சிறப்பாய் செய்வோம்.

படித்ததில் பிடித்தது. மின்னஞ்சலில் வந்தது!

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.4.16

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து


ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து

பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான் சிறந்த எழுத்தாளர்கள், மற்றும் கவிஞர்கள் மனித மனங்களில் தமது எழுத்துகள் மூலமேனும் நீங்கா இடத்தைப் பிடித்து விடுகின்றனர். சிறந்த கற்பனை வளம், ஆழமாக நோக்கும் ஆற்றல், பலவிடயங்களை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி அவற்றின் சார்பு நிலைகளை காணல் போன்ற பல இயல்புகளை அவர்கள் இயற்கையில் பெற்றிருப்பதே இந்த ஆற்றலுக்கான காரணம்.

அதனால் தான் ஞானசம்பந்தர் தொடக்கம் கம்பர், வள்ளுவர் என்று எல்லோருமே ஞானிகள் வரிசையில் இடம் பிடித்தமையும். சாதாரண புத்திக்கு புரிவனவற்றை தாண்டி பல விடயங்கள் அவர்களுக்கு புரிவதால்.

இறப்பிலிருந்து.......

    கவியரசு வைரமுத்துவின் மிக அருமையான ஒரு பாடல்.
     இந்த பாடலை இரு பாடககர்கள் மிக அருமையான நயத்துடன் பாடி இருக்கின்றார்கள் .

    இந்த பாடலை கேட்டபின்பு  பாடல் எழுதிய வைரமுத்துவுக்கோ அல்லது பாடிய விஜய்ஏசுதாஸ்  மற்றும் சுதாவுக்கோ நன்றி தெரிவியுங்கள்.

      கீழே காணும் யு டியுப்  தளத்திலிருந்து பாடல்களை கேட்கலாம்  அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்......

பாடல் வரிகள்

ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில்
புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய
கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?

தேசம் அளாவிய
கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க

எலும்பு சதை  கொண்ட
உருவங்கள் போக

எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை

இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை

நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை

மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை

கடல் தொடு ஆறுகள்
கலங்குவதில்லை

தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்

மதி கொண்ட மானுடர்
மயங்குவதேன்ன !

மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்

நித்திரை போவது
நியதி என்றாலும்

யாத்திரை என்பது
தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்

சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க !

தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க !

பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க !
http://www.youtube.com/watch?v=wPbybg3LCtc
http://www.youtube.com/watch?v=N1-nt1sNg3g
http://www.youtube.com/watch?v=LoFSHrUd43g

Thank you





வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
===================================================

7.4.14

Astrology: Proof for Destiny: விதிக்கு வேண்டுமா சான்று?

 
Astrology: Proof for Destiny: விதிக்கு வேண்டுமா சான்று?

விதிக்குச் சான்று

"Everything is 'Prewritten' and nothing can be rewritten in our life. So live the best and leave the rest to The Almighty"  என்று நான் அடிக்கடி சொல்வேன்.

“எல்லாமே விதிக்கப்பட்டது. விதிக்கப்பட்டபடிதான் எதுவுமே நடக்கும் எனும்போது, நீ கவலைப் பட்டு என்ன ஆகபோகிறது. ஆகவே கவலையை விட்டொழி” என்பார் கவியரர் கண்ணதாசன்

விதியைப் பற்றி அதிரடியாக, விளக்கமாக, எளிமையாக, இரத்தினச் சுருக்கமாக இரண்டு இரண்டு வரிகளில் எழுதிவைத்து விட்டுப்போனவர் திருவள்ளுவர். திருக்குறளின் 38ஆவது அதிகாரத்தில் பத்துக் குறள்கள் உள்ளன. படித்துப் பாருங்கள். மனம் தெளிவடையும்

“என்ன செய்யும் விதி?”
“விதி என்று ஒன்று உண்டா?”

என்று கேட்பவர்களுக்கெல்லாம், நான் வள்ளுவரின் இந்தக் குறளைத்தான் அடையாளம் காட்டுவேன்:

  “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
     சூழினுந் தான்முந் நுறும்”


இந்தக் குறளுக்கு திரு மு.வரதராசனார் அவர்கள் எழுதிய விளக்க உரை

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் அது தானே முன் வந்து நிற்கும்.

பாதிரியார் ஜி.யு.போப் அவர்கள், இந்தக் குறளை மொழிமாற்றம் செய்யும்போது இப்படி எழுதினார்:

Nothing is stronger than destiny.If you try to forfeit destiny, It won't allow and it will come in your way again and again
-----------------------------------------------------------------------------
“அப்போது மனித முயற்சி என்று ஒன்றும் கிடையாதா? முயற்சிகளுக்குப் பலனே இருக்காதா?”

  “நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்று விதிக்கப் பட்டிருந்தால், மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்துவாய். ஆனால்  மாட்டின் எண்ணிக்கையை இறைவன் நிர்ணயிப்பது இல்லை. அது நான்கு மாடுகளா அல்லது நாற்பது மாடுகளா அல்லது நானூறு மாடுகளா என்பது உன் கையில்தான் இருக்கிறது.  அங்கேதான் நீ சொல்லும் அந்த முயற்சி வேலை செய்யும்!!!!!”
-----------------------------------------------------------------------------
இன்றையப் பாடம் பாடல் வடிவில் உள்ளது. இரவல் வாங்கியது. எழுதியவர் ஒரு மாபெரும் கவிஞர் கவியரசர் கண்ணதாசன்.
----------------------------------------------------------------------------
ஆறிலே பிள்ளைகள் ஆடலும் பாடலும்
    ஆனந்தக் கூத்துமாய் வாழும்
ஆறிரண் டானபின் பள்ளியும் பாடமும்
    ஆரவா ரங்களும் சூழும்
ஏறுமோர் வயதுதான் இருபதை எட்டினால்
    எண்ணிலாக் காதலில் ஆழும்
தாறுமா றானதோர் வாழ்க்கை வாழ்ந்தபின்
    தன்நினை வெண்ணியே வாடும்!

காலமாற் றங்களால் கணிதமாற் றங்களும்
    கவனமாற் றங்களும் நேரும்
கோலமாற் றம்வரும் குணத்தில்மாற் றம்வரும்
    கொள்கைமாற் றம்வந்து சேரும்
ஞாலமே பெரிதாய் சிறியதாய் மோசமாய்
    நல்லதாய்க் கெட்டதாய்த் தோன்றும்
வாலிலாக் குரங்குபோல் வாழ்ந்தநாள் வாழ்ந்தபின்
    வாழ்ந்ததை எண்ணியே வாடும்!

விதையிலே சிறியதாய் வளர்ந்ததும் பெரியதாய்
    விண்ணுயர் மரங்களைக் கண்டோம்
கதையிலே மரங்களின் வாழ்விலும் பல்வகை
    கவலைகள் உண்டெனக் கண்டோம்
முதலிலே பசுமையாய் முடிவிலே பட்டதாய்
    முழுமோர் விறகுமாய் மாறி
சிதையிலே அமர்ந்திடும் மரங்களும் மனிதனும்
    தேவனின் லீலைகள் அலவோ!

எண்ணுவோம் தேடுவோம் எண்ணுதல் தேடுதல்
    என்றும்நம் உரிமைகள் எனவே
நண்ணுமோர் நன்மைகள் தீமைகள் யாவையும்
    நாயகன் செய்கைவே றில்லையே
உண்ணுதல் ஈஸ்வரன் உறங்குதல் ஈஸ்வரன்
    உயர்வதும் தாழ்வதும் அவனே
விண்ணுயர் மாளிகைச் செல்வனும் வாழ்க்கையில்
    வேறென்ன செய்வதோ இதிலே!

தோன்றுவான் மானிடன் தோற்றிலான் நாயகன்
    தொடர்புண்டாம் இவைஇவை இடையே
ஊன்றுகோல் மானிடம் உள்விழும் பள்ளமே
    உயர்ந்ததோர் நாயகன் கதையே
சான்றுகேட் பார்க்கெலாம் ஒன்றைநான் காட்டுவேன்
    சாவினை வென்றவர் இலையே
ஈன்றவள் ஒருத்திபோல் எடுப்பவன் ஒருவனாம்
    இதன்பெயர் ஆண்டவன் விதியே!

           -கண்ணதாசன்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

31.10.13

அவனுக்கு மட்டும் ஏன் பணம் அப்படிக் கொட்டுகிறது?

 
அவனுக்கு மட்டும் ஏன் பணம் அப்படிக் கொட்டுகிறது?

கொட்டினால் கொட்டிவிட்டுப் போகிறது. அடுத்தவனைப் பார்த்து நாம் ஏன் ஆதங்கப்பட வேண்டும்? அல்லது ஏக்கம் கொள்ள வேண்டும்?

வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை அருகே இருந்து நான் பார்த்திருக்கிறேன்.

காலதேவன் பலரைப் புரட்டிப் போட்டிருக்கிறான். சிலரைச் சீராட்டி இருக்கிறான். சிலருக்குத் தங்கக் கிண்ணத்தில் பாலூட்டியிருக்கிறான். சிலரைச் சாத்தியிருக்கிறான். சிலரைத் தொங்கவிட்டு அடித்திருக்கிறான். அவனுடைய கலக்கலான செயல்பாடுகள் பற்றி இன்னொருநாள் விரிவாகப் பார்க்கலாம். இப்போது சொல்ல வந்ததைச் சொல்கிறேன்

சிலர் பிறக்கும்போதே செல்வத்துடன் பிறக்கிறார்கள்.

வெள்ளைக்காரர்கள் அதற்கு ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள். வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்களாம் அவர்கள்."been born with a silver spoon in his mouth"

The English language expression silver spoon is synonymous with wealth, especially inherited wealth; someone born into a wealthy family is said to have "been born with a silver spoon in his mouth". As an adjective, "silver-spoon" describes someone who has a prosperous background or is of a well-to-do family environment,


ஜாதகத்தில் 36 பாக்கியங்கள். அதில் முதல் பாக்கியம், முக்கியமான பாக்கியம், நல்ல தாய். நன்றாக குழந்தையை வளர்க்கக்கூடிய, அரவணைத்து அன்பு செலுத்தக்கூடிய தாய். அதனால்தான்   “மாதா, பிதா,குரு, தெய்வம்” என்று தெய்வத்தைக்கூட ஓரங்கட்டிவிட்டு, தாயை முன்னிறுத்திச் சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்தான் சொல்லத் தெரியுமா? நாமும் சொல்லுவோம். நல்ல தாய்க்குப் பிறந்த குழந்தை வாயில் தங்கக் கரண்டியுடன் பிறந்தவன் அல்லது பிறந்தவள்!."been born with a GOLD spoon in his mouth"

தாய் முதலில்.
தாய் சொல்லித்தான் தந்தை
இருவரும் சொல்லித்தான் குரு.
மூவரையும் வணங்கினால் அப்போது வரும் தெய்வம்!

God could not be everywhere, so he made mothers. கடவுளால் எல்லா இடத்திலும் இருக்க முடியாது அதனால்தான் தாயைப் படைத்தான் என்றும் சொன்னார்கள்.

வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்களுக்கெல்லாம் பொதுவாக நல்ல தாய் அமைந்திருக்க மாட்டாள். வேலைக்காரர்களின் கருணையில்தான் அதுபோன்ற குழந்தைகள் வளரமுடியும். அது என் அனுபவம்.

கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு இரண்டு தாயார்கள். ஒன்று பெற்றதாய். இன்னொருவருவர் சுவீகாரம் கொண்ட தாய். இருவருமே மேன்மையானவர்கள். தாயன்பில் திளைத்தவர் கண்ணதாசன். அதனால்தான் கவியரசர் தாயைப் பற்றி எழுதும்போதெல்லாம் அசத்தலாகப் பாடல் எழுதுவார்.

“பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே”
என்று ஒரு பாடலின் பல்லவியில் துவங்கியவர், முதல் சரணத்தில் இப்படிச் சொல்வார்:

“செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு”


பொன்னுலகத்தை நீ காண்பாய், காண வேண்டும். அதுவரை கண் உறங்கடா என் செல்வமே என்று தாய் பாடுகிறாள். என்னவொரு மன வெளிப்பாடு பாருங்கள்.

“எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் -
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்”
என்று ஆசைப்பட்டார் கவியரசர். அது நடந்ததா? அது நடக்காது. நடக்கக்கூடிய நிலையிலா நம் நாடு இருக்கிறது?

“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான் -
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்”
என்று ஒரு பாடலின் பல்லவியில் துவங்கிய கவிஞர் வாலி அவர்கள், முதல் சரணத்தில் இப்படிச் சொல்வார்

“மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!”

ஆமாம் இறைவன் பலவற்றைப் பொதுவாகக் கொடுத்திருக்கிறான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் வாழ்க்கையை மட்டும் அவன் எல்லோருக்கும் பொதுவாகக் கொடுப்பதில்லை. ஒரே மாதிரியாக அளந்து கொடுப்பதில்லை. கொடுத்ததில்லை.

மன்னர் காலத்தில், பல்லக்கில் போகிறவனும் இருந்தான். பல்லக்கைத் தூக்கிச் செல்பவனும் இருந்தான். இன்று பென்ஸ், BMW காரில் போகிறவனும் இருக்கிறான். அந்தக்காருக்கு சொற்ப சம்பளத்தில் ஓட்டுனராகப் பணிபுரிகிறவனும் இருக்கிறான்.

இந்த வேறுபாடுகளுக்கு, ஏற்றத்தாழ்வுகளுக்கு யார் காரணம்?  கடவுளா காரணம்? இல்லை. அவர் வேண்டுதலும் இல்லாதவர்.வேண்டாமையும் இல்லாதவர். அவர் காரணமில்லை. அவரவர்களின் விதிப்படி நடக்கிறது அது.. அவரவர்களுக்கு விதித்தபடி நடக்கிறது. அதை வாங்கி வந்த வரம் என்றும் சொல்லலாம். கிராமத்துக்காரர்கள் அதைத் தலை எழுத்து என்று சொல்லுவார்கள்.

“முதல் எழுத்து தாய் மொழியில்
தலை எழுத்து யார் மொழியில்?” என்று கேட்டான் ஒரு கவிஞன்.

தலை எழுத்து தேவமொழி!

அந்தக் கவிஞன் இறை நம்பிக்கை இல்லாதவன். அதனால் அது அவனுக்குத் தெரியவில்லை. தெரியவேண்டியதில்லை.
---------------------------------------------------------------------------------------
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாத இதழ்காரர்கள் கேட்டுக்கொண்டதற்காக நான் சிறுகதைகளை எழுதத் துவங்கினேன். அது பெரியகதை.

அந்தப் பத்திரிக்கையின் மூலம் கிடைத்த வாசகர்களில் ஒருவர் தன்னுடைய மணிவிழாவில், அவர் வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் விருந்தாளிகளுக்குக் கொட்டுப்பதற்காக என்னுடைய சிறுகதைகள் அடங்கிய புத்தகம் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கவிரும்புவதாகச் சொல்லி, என்னுடைய சிறுகதைகளில் 20 கதைகளைத் தருமாறு கேட்டார். கதைகளை ஒரு குறுந்தகட்டில் பதிவு செய்து கொடுங்கள். நான் புத்தகமாக அதை ஆக்கிக் கொள்கிறேன். என்றும் கூறினார்.

”உங்களுக்கு எத்தனை புத்தகங்கள் தேவைப்படும்?”  என்று கேட்டேன்.

”600 புத்தகங்கள் தேவைப்படும்” என்றார்.

600 புத்தகங்கள் என்றால் பெரிய விஷயம் அது!

நான் தீவிர வாசகன். ஏராளமான புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். என் புத்தகங்களைப் பற்றி எனக்கொரு கனவு உண்டு. ஆகவே ”நான்தான் அதை வெளியிட வேண்டும். நான் புத்தகமாக்கித் தருகிறேன். உங்களுக்கு எப்போது வேண்டும்?” என்று அவரிடம் கேட்டேன்.

”இரண்டு மாதங்களுக்குள் கொடுங்கள்” என்றார்.

உடனே நான் என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.

கண் இமைக்கும் நேரத்தில் தன் கைப்பையில் இருந்து ரூபாய் இருபதாயிரத்தை எடுத்து என் எதிரில் வைத்து, ”இதை முன்பணமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

“புத்தகங்களை முடித்துக் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்கிறேனே” என்றேன்.

அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் சொன்னார்: “தமிழில் எழுதி யாரும் சம்பாதிக்க முடியாது. நீங்கள் புத்தகத்திற்காக உங்கள் கைப் பணத்தை முடக்க வேண்டாம். இதை வைத்து புத்தகப் பணியைத் துவக்குங்கள். மீதம் தரவேண்டிய தொகையை என் மணிவிழா சமயத்தில் தருகிறேன்” என்றார்.

சரி என்று பணத்தை எடுத்துக் கொண்டவன், கமிட் ஆகிவிட்டேன். புத்தகம் வெளியிடுவதில் உள்ள சிக்கல் அப்போது எனக்குத் தெரியாது.

அவர் மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டார்.

நான் என் புத்தகக் கனவுடன், அடுத்த நாளே சென்னைக்குப் பயணமானேன். இது நடந்தது 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள். சென்னையில்தான் பதிப்பாளர்கள் இருக்கிறார்கள். எனக்குப் பரீட்சயமான மூன்று பதிப்பாளர்களைத் தனித் தனியாகச் சந்தித்துப் பேசினேன்.

முதலில் பேசிய அன்பர், என் Fuseஐப் பிடுங்கி, என் மனதை இருளடையச் செய்து விட்டார்.

”கதைப் புத்தகங்களைப் போடாதீர்கள். வேஸ்ட்” என்றார்.

“எப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“மக்களிடையே படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. 30 வயதிற்குள் இருப்பவர்கள் எல்லாம், கணினி, ஃபேஸ்புக், டிவிட்டர், ப்ளாக், ஈபுக் என்று போய்விட்டார்கள். அத்துடன் நீங்கள் ஒன்றும் சுஜாதாவைப் போல அல்லது பாலகுமாரனைப் போல பிரபலமான எழுத்தாளர் இல்லை. கூவிக் கூவித்தான் விற்றாக வேண்டும். அதனால்தான் சொல்கிறேன்” என்றார்.

”கதைப் புத்தகங்கள், கவிதைப் புத்தகங்கள் விற்காது என்றால் வேறு எந்தமாதிரியான புத்தகங்கள் விற்கும்?” என்று கேட்டேன்.

”உங்களுக்குத்தான் எழுத வருகிறதே. பணம் சம்பாதிப்பது எப்படி? என்பது போன்ற தலைப்பில் எழுதிக் கொடுங்கள். போடுவோம். நன்றாகவும் விற்கும்” என்றார்.

”அள்ள அள்ளப் பணமா?” என்று கேட்டேன்

”ஆமாம்” என்றார்.

”அள்ள அள்ளப் பணம் எப்படி வரும்? யாருக்கு இரண்டாம் வீடும், பதினொன்றாம் வீடும் அம்சமாக இருக்கிறதோ அவர்களுக்குத்தான் பணம் வரும். விதிக்கப்பெற்றிருந்தால்தான் பணம் வரும். ஆகவே தள்ளத் தள்ள விதி என்ற தலைப்பில் எழுதித் தரட்டுமா?” என்றேன்.

“ஆஹா, எழுதிக் கொடுங்கள்” என்றார்.

“அதைப் பின்னால் எழுதித் தருகிறேன். இப்போது கதைப் புத்தகத்திற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டேன்.

“நீங்கள் பணம் போடுவதென்றால் சொல்லுங்கள். ஆகின்ற செலவில் ஆளூக்குப்பாதி, பிரதிகளிலும் ஆளுக்குப் பாதி” என்றார்.

“யோசித்துச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு, கோவைக்குத் திரும்பிவிட்டேன். முழுப் பணத்தையும் நானே செலவழித்து புத்தகத்தை அச்சிட்டு வெற்றிகரமாக வெளியிட்டேன்.


காரைக்குடியில் 12.4.2010 அன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், எனது புத்தகத்தைப் பாராட்டி பேராசிரியர் திரு.கண.சிற்சபேசன் அவர்கள் உரை நிகழ்த்தும் காட்சி! பல பட்டிமன்றங்களுக்குத் தலைமை வகிப்பவர் அவர்.
எங்கள் பகுதியில் அவருக்கு நகைச்சுவைப் பேரரசர் என்ற சிறப்பு அடையாளப் பெயர் ஒன்றும் உண்டு.
=================================================================
இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், அள்ள அள்ள எதுவும் கிடைக்காது. அதை மனதில் வையுங்கள்.

தள்ளத் தள்ள எல்லாம் வரும். விதி நம்மைத் தள்ளிகொண்டு போகும் போது எல்லாம் தானாக வரும். நல்லதும் வரும். கெட்டதும் வரும்.

எப்படி வரும் என்பதை, விரிவாகச் சொல்கிறேன். தற்சமயம் நேரமில்லை. புது வகுப்பிற்கான கட்டட வேலையில் மூழ்கி இருக்கிறேன். ஆமாம்! Galaxy2007 வகுப்பிற்கான வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு web designing தெரியாது. அதைத் தெரிந்த நிறுவனம் ஒன்றின் மூலம் அந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். ஒரு வாரத்தில் எல்லாம் முடிந்துவிடும். உறுப்பினர் சேர்க்கை உட்பட எல்லா வேலைகளும் நிறைவாகிவிடும். ஆகவே புது வகுப்பில் தள்ளத் தள்ள விதி என்பதைப் பற்றி விரிவாக எழுத உள்ளேன். அப்போது நீங்கள் படிக்கலாம். அதுவரை பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

22.10.13

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது?

 

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது? 

சனீஷ்வரனிடம்  போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு நாம் மேல் நோக்கிப் பயனப்பட்ட பிறகு என்ன நடந்தால் என்ன?

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை யோசித்து அல்லது தெரிந்து கொண்டு இப்போது ஏன் மண்டைக்குக் குடைச்சலைத் தர வேண்டும்?

மரணத்தை அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அல்லது பார்க்காமல் அதைப் புறந்தள்ளிவிட்டுப் போய் விடலாம். இன்றைக்குப் பல பிரச்சனைகள் உள்ளன. முதல் பிரச்சனை அநியாய விலைவாசிகள். அவற்றைச் சமாளிக்க ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள். இது போன்ற மொக்கைப் பதிவுகள் எல்லாம் வேண்டாம் என்பவர்கள் எல்லாம் இப்போதே பதிவை விட்டு விலகிக் கொள்ளலாம்.

மற்றவர்கள் தொடரலாம்!
-------------------------------------------------------------------------------
மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிறகு என்ன நேர்கிறது என்பது பற்றியும் விவரிக்கின்ற பண்டைய திபேத்திய நூல் ஒன்றைத் தேடிப் பிடித்துக் கொடுத்திருக்கிறேன். புக் மார்க் செய்து வைத்து, நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்.

http://www.holybooks.com/wp-content/uploads/The-Tibetan-Book-of-Living-and-Dying.pdf

அந்தப் புத்தகம் பற்றி ஆய்வு செய்து உரை நிகழ்த்தியவர்களின் காணொளிக் காட்சியும் உள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பின்னூட்டத்தில்  சொல்லுங்கள்!
------------------------------------------------------------
மரணத்தைப் பற்றியும், மறு பிறவியைப் பற்றியும் பல மதங்கள் பலவிதமாக வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றன.

உடம்பிற்குத்தான் மரணம். ஆத்மாவிற்கு மரணம் இல்லை. ஆத்மா வேறு ஒரு பிறவியை எடுத்து விடும் என்பதை இந்து மதத்தில் பல மகான்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

"ஏற்றப் பழந்துணியை நீக்கி எறிந்தொருவன்
மாற்றும் புதிய உடை வாய்ப்பது போல்
தோற்றுமுயிர் பண்டை உடம்பை விட்டு
பாரில் புதிய உடல் கொண்டு பிறக்குமென்று கொள்"


என்கிறது பழம் பாடல் ஒன்று. இதை முன்பு ஒரு முறை இணையத்தில் படித்தேன். பகவத்கீதையில் இந்த வரிகள் வருவதாக அந்த  அன்பர் கூறியுருந்தார்.

பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான்  அந்த நிலை நமக்கு உண்டாகும்.

If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without  desire

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

குறள் - 362

பட்டினத்தடிகளும் தனது பாடல் ஒன்றில்

பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும் என்று பயமுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். அதாவது நீ இறந்து சாம்பலாகிப்
போகும்போது, உன் ஆத்மா மேற்கொள்ளும் அடுத்த பயணத்திற்கு இந்தப் பாவ புண்ணியக் கணக்கை கொண்ட கோப்பும் (file) உன் ஆத்மாவுடன் கூடவே வரும் என்று சொல்லியிருக்கிறார்.

அதுதான் நம்முடைய அடுத்த பிறவியை நிர்மானிக்கும் வலிமை கொண்டதாகும் என்கிறார்கள்.

ஜோதிடத்தில் அதைத்தான் பூர்வ புண்ணியம் என்கிறோம். வாங்கி வந்த வரம் என்கிறோம்.

இரண்டிலும் எனக்கு உடன்பாடு உண்டு. இன்றையத் தேவைகளை சமாளிப்பதற்கு என் அரிய நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அத்துடன் தர்ம சிந்தனையோடு சில அறச்செயல்களையும், பொதுத் தொண்டுகளையும் செய்து கொண்டிருக்கிறேன். வரம் வாங்கு வதற்காக அல்ல! ஒரு நற்சிந்தனையால் அதைச் செய்துகொண்டிருக்கிறேன்

நடப்பது நடக்கட்டும். எல்லாம் எனை ஆளும் ஈசன் செயல்!
என்னைப் பழநிஅப்பன் பார்த்துக்கொள்வான். அவன் வழி நடத்துகிறான். நடத்துவான்!

அன்புடன்
வாத்தியார்

----------------------------
அடுத்ததாக, சுவாரசியமான ஜோதிடப் புதிர் ஒன்று உங்களின் அலசலுக்காகக் காத்திருக்கிறது. ஒரு நாள் பொறுத்திருங்கள். அது நாளை வெளியாகும்!



Our sincere thanks to the person who uploaded this video in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

21.8.13

Astrology: விதியே தன் கை நீட்டி வலை வீசும்போது!

 

Astrology: விதியே தன் கை நீட்டி வலை வீசும்போது!
விதியை மதியால் வெல்ல முடியுமா?

வெல்ல முடியாது!

இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும் ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம். அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமே அவனுடைய விதியையே அவனால் வெல்ல முடியவில்லை!

வென்றிருந்தால், அப்படிச் சொன்னவன் அத்தனை பேரும் இன்று உயிருடன் இருந்திக்க வேண்டும்!

அவனவனுக்கு விதிக்கப்பெற்ற காலம் முடிந்தவுடன், வலுக்கட்டாயமாகக் கையில் போர்டிங் பாஸைத் திணித்து, விதி அத்தனை பேர்களையும்
அள்ளிக் கொண்டு போயிருக்கிறது.

அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்."விதியை விட வலியது எதுவும் கிடையாது"

Nothing is stronger than destiny!

மூச்சுக்கு முன்னூறு முறை, வள்ளுவரைப் பற்றிப் பேசும் மதிவாணர்கள் அனைவரும், குறளில் இரண்டு அதிகாரங்களைப் பற்றிப் பேசவே
மாட்டார்கள். அந்த இரண்டு அதிகாரங்களிலும் மொத்தம் 20 குறள்கள் உள்ளன.

ஒன்று அறத்துப்பாலின் துவக்க அதிகாரம். மற்றொன்று அறத்துப்பாலின் முடிவில் உள்ள அதிகாரம் திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.

ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.

அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!"

---குறள் எண் 377

அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில் பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை அனுபவிக்க முடியாது.

சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப்பதற்கென்றே சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும் கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ
அல்லது மாப்பிள்ளையோ ஹோண்டா சிட்டி ஏ.ஸிக் காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான். விதி அங்கேதான் வேறு படுகிறது.
ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம்

"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சுழினும் தான்முந்நுறும்"

...குறள் எண். 380

ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன? அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு, வேறு ஒரு வழியை
ஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும் வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்

What is stronger than fate (destiny)? If we think of an expedient
to avert it, It will itself be with us (before the thought)


"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"

...குறள் எண்.372

பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது அவனைப்
பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு
பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும் அது அவனைப் பேரறிஞனாக்கும்!

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged
knowledge.


இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி  அதிகாரமாக ஊழ்வினையை வைத்தார்.

அய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான்.
அதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து முடித்தார்.

மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப் படிதான் நடக்கும்!

அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா என்ன?

சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார்.    The Almighty will give withstanding power!
தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார். அதற்கு உதாரணம் கேரளாவில் மிகவும் பிரசித்தமான நாராயண குருவின் சரித்திரம் (அதைப் பற்றி
வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்)
-----------------------------------------------------------------------------------------------------
1
விதியை வெல்லலாம் என்று சொல்பவன் எவனாவது வந்து, நான் என்னுடைய மதியை வைத்து ஒரு நூறு ஆண்டு காலம் வாழ்ந்து காட்டுகிறேன் என்று சொல்லட்டும் பார்க்கலாம்.

முடியாது!

2
விஞ்ஞானம் அல்லது கையில் இருக்கும் இதர புண்ணாக்குகளை வைத்து, இந்த உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது என்று சொல்லட்டும்
பார்க்கலாம்.

முடியாது!

ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடியென்று பணத்தைச் செலவழித்து, வான்வெளியை ஆராய்கிறான். பூமியைத் தோண்டிக் கடவுளின்
துகள்களைத் தேடுகிறான். அதில் ஒரு பாதியையாவது செலவழித்து மனிதனின் உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது? இருக்கும்வரை அது

எப்படி இயங்குகிறது? உடலை விட்டுப் போகும்போது அது எப்படிப்போகிறது? என்று கண்டுபிடிக்கலாம் இல்லையா? இந்த மதிவாணர்கள் ஏன்
அதைச் செய்யவில்லை?

விதியைப் பற்றி விதிக்கப்பட்டதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.

அய்யன் வள்ளூவன் நறுக்குத் தெரித்தாற்போல பதினேழரை வரிகளில் எழுதியதை விடவா வேறு எவரும் எழுதிவிட முடியும்?

ஒரு குறளின் அளவு ஒன்னே முக்கால் வரிதான்!

அதைப் படியுங்கள்!

என்னை எதிர்க்கேள்வி கேட்க விரும்புபவர்களும் அதை ஒரு முறைக்கு நான்கு முறை படித்துவிட்டு வந்தே என்னைக் கேள்வி கேளுங்கள்
ஆகவே விதியைப் பற்றி எழுதியதை, பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்
------------------------------------------------------------------------------------------------------
மாடுகளை வைத்து நீ பிழைப்பு நடத்துவாய் என்று ஒருவனுக்கு விதிக்கப் பட்டிருந்தால் - எத்தனை மாடுகள் என்ற எண்ணிக்கையை இறைவன்
எழுதுவதில்லை. 4 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது அவனது முயற்சியும் உழைப்பும்தான் நிர்ணயம் செய்கின்றன!

அதற்கு மிகவும் அருமையான உதாரணம் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். எட்டாம் வகுப்பும் வரையே படித்த அவர், அதுவும் 54 வயது வரையே
வாழ்ந்த அவர், எத்தனை கவிதைகளை எழுதிவிட்டுச் சென்றார் - எத்தனை இலட்சம் தமிழ் உள்ளங்களை நிறைத்து விட்டுச்சென்றார்! அவர் எழுதிச்

சென்ற கவிதைகளை எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்விற்காக எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்! இதை வெறும் அதிர்ஷ்டக்
கணக்கில் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? அவருக்கிருந்த தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் அவரைச் சாதனை செய்ய  வைத்தன!

இந்த இடத்தில்தான் முயற்சி நிற்கும். அதைத்தான் முயற்சி திருவினையாக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்
விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லிவைத்தார்கள்.
----------------------------------------------------------------------------------------
ஞானி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒருவன் கேட்டான்.

"அழகு ஏன் மயக்குகிறது?"

அவர் பதில் சொன்னார்.

"அது எங்கே மயக்குகிறது? நீயல்லவா மயங்குகிறாய்?"

"சரி, அழகானது - அழகில்லாதது என்ற இரண்டு நிலைப்பாடுகள் ஏன்?

"அது படைப்பின் ரகசியம். எல்லாமே அழகானதுதான் என்றால் - நீ எங்கே அதை உணரப் போகிறாய்? அதனால்தான் இரண்டு நிலைப்பாடுகள்.
வறுமை, செழுமை, பெருமை, சிறுமை என்று அனைத்தும் இரண்டு வகைப் படும்!"

"உண்மையான அழகிற்கும் - பொய்யான அழகிற்கும் என்ன வித்தியாசம்?"

"பொய்யான அழகு தற்காலிகமானது. அழிந்துவிடும். உண்மையான அழகு காலத்தாலும் நிற்கும் பலராலும் போற்றப்படும். பெருமை வாய்ந்ததாக

இருக்கும்!"

"உதாரணம் சொல்லுங்கள்"

"மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கநாதர் கோவில், ராமேஸ்வரம் கோவில்"

"அவைகள் தெய்வங்களின் உறைவிடம் - அதனால் அழகாகத்தோன்றலாம். வேறு இடங்களைச் சொல்லுங்கள்"

"எல்லா இடங்களிலும்தான் ஆண்டவன் இருக்கிறார். நான் சொன்ன அந்த இடங்கள் மனிதனால் கட்டப்பட்டவைதான்.மேலும் சில இடங்களைச்
சொல்கிறேன் பார்.
திருவாரூர் தேரழகு
மன்னார்குடி மதில் அழகு
வேதாரண்யம் விளக்கழகு
கண்ணதாசன் பாட்டழகு
காளையார்கோவில் குளம் அழகு
சரி, உனக்குப் புரியும்படியாக ஒரு இடத்தைச் சொல்கிறேன். தாஜ்மகால்."

அதற்குப் பிறகு அவன் கேள்வி கேட்கவில்லை. போய்விட்டான்.

அதே இரண்டுவித நிலைப்பாடுகள்தான் வாழ்க்கைக்கும். எல்லோருமே செல்வந்தர்களாக இருந்துவிட்டால், பசியின் அருமை எப்படித் தெரியும்?
உழைப்பின் அருமை எப்படித் தெரியும்? பணத்தின் அருமை எப்படித் தெரியும்?
--------------------------------------------------------------------------------------------------
The Road to Success is not straight:

There is a curve called failure, a loop called confusion, speed bumps called friends, caution lights called family, and you will have flats called jobs.

But, if you have a spare called determination, an engine called perseverance, insurance called faith, and a driver called God,you will make it to a place called success!

Do good, and leave behind you a monument of virtue that the storms of time can never destroy.

---------------------------------------------------------------------------------------------
"வாத்தியாரே, ஒரே ஒரு கேள்வி மட்டும் பாக்கியுள்ளது. ஆசைப்படலாமா? ஆசைப்படக்கூடாதா?!"

"நியாயமான ஆசைகளில் தவறில்லை!"

"எது நியாயமான ஆசை?"

"சைக்கிளில் செல்பவன், ஒரு மொப்ட் வண்டிக்கு ஆசைப்பட்டால் அது நியாயமான ஆசை. அவனே பென்ஸ் காருக்கு ஆசைப்படலாமா?"

"நியாயமில்லாத ஆசை எது?"

"குருவி, அதன் அளவிற்குத்தான் பறக்க ஆசைப்பட வேண்டும். கழுகைப்போல பறக்க ஆசைப்படக்கூடாது. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு அதற்குத் தகுந்த பெண்ணின் மீதுதான் ஒருவன் ஆசைப்பட வேண்டும். ஓமக்குச்சி நரசிம்மன்போல் இருந்து கொண்டு, நமீதா போன்ற அல்லது நயன்தாரா போன்ற பெண்ணின் மீது ஒருவன் ஆசைப்படக்கூடாது! காக்காய் புறாவிற்கு ஆசைப்படலாமா? குயில் மயிலுக்கு ஆசைப்படலாமா? அது நியாயமில்லாத ஆசை!"
--------------------------------------------------------------------------------------------
புதிய கீதை

எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது
எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!
எது கிடைக்க வேண்டுமோ
அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்

எதை நீ கேட்காமலிருந்தாய்?
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?
அது நியாமாகக் கிடைப்பதற்கு?

எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்து விடும்
அடுத்த நாள் உனக்கு
அது வெறுத்து விடும்!

கிடைப்பதன் அருமை
அது கிடைக்கும் நொடி வரைதான்
அடுத்த நொடி
நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!

ஆகவே கேட்காமல் இரு!
இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!

இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாரம்சமும் ஆகும்!

சம்பவாமி யுகே! யுகே!

அன்புடன்
வாத்தியார்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!