மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

5.11.19

எனக்கு எத்தனை நண்பர்கள் !! - சுஜாதா


எனக்கு எத்தனை நண்பர்கள் !! - சுஜாதா

(கற்றதும் பெற்றதும்) Thanks to...Ram Sridhar.,.who typed this text

என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோ மருத்துவர்கள். 'யவனிகா' 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த சமயம், நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக் போகும்போது நெஞ்சு வலித்தாற்போல் இருந்தது.

'அன்ஜைனா' வகை நெஞ்சுவலி என் சிநேகிதன்.எனக்கு 'பைபாஸ்' ஆபரேஷன் ஆகி எட்டு வருஷமாச்சு. எட்டிலிருந்து பத்து வருஷம்தான் அதற்கு உத்தரவாதம் என்பது தெரியும். [பைபாஸ் என்பது இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் கரானரி  ஆர்ட்டரிகளில் (Coronary Artery) நேரும் அடைப்பை, உடலின் மற்ற பாகங்களிலிருந்து குழாய் எடுத்து மாற்றுப் பாதை அமைத்து தைப்பது). டாக்டர் விஜயஷங்கருக்கு போன் செய்தபோது 'வாங்களேன், ஒரு ஆன்ஜியோ எடுத்துப் பார்த்துவிடலாம்' என்றார்.

எட்டு வருஷமாகியும் தோற்றம் மாறாமல் இருந்தார் விஜயஷங்கர் (தினம் ஒரு பைபாஸ் செய்கிறார்). டாக்டர் ராபர்ட் மோ என்கிற கார்டியாலஜிஸ்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் மணிப்பூர் மாநிலத்தவர். சீனர்.

ஆன்ஜியோ  சமாச்சாரங்களில் திறமை மிக்கவர். அவர் எனக்கு ஆன்ஜியோ எடுத்துப் பார்த்து, இந்த நற்செய்தியை சொன்னார். “

உங்கள் இதயத்தில் முன்பு சரி செய்த நான்கு க்ராஃப்டுகளில் மூன்று அடைத்துக் கொண்டு இருக்கின்றன. ஒரே ஒரு க்ராஃப்டில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் ஆன்ஜியோபிளாஸ்ட்டி
செய்வது நல்லது” என்றார்.

டாக்டர் மோ ஒரு மாநாட்டுக்காக ஆஸ்திரேலியா போய் வந்த கையோடு எனக்கு அந்த சிகிச்சை செய்தார். உடன் டாக்டர் நஜீபும் இருந்தார்.
ஆப்பரேஷன் நல்ல வெற்றி என்று எனக்கு சிடி போட்டு காண்பித்தார்.

எல்லாம் நலம் வீட்டுக்குப் போகலாம் என்று படுக்கையடிப் புத்தகங்களை சேகரித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று  என் சிறுநீரகம்
(acute renal failure) பழுதடைந்து நின்று போய் விட்டது. விளைவு ராத்திரி
ஒரே மூச்சுத் திணறல். மேல் மூச்சு வாங்கும் போது ஏறக்குறைய சொர்க்கத்தில் கின்னர கிம்புருடர்கள் “திருக்கண்டேன்; பொன்மேனி
கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்“ என்று பாடும் ஆழ்வார்கள் சகிதம் தெரிந்தார்கள்.

இதில் இரண்டு வகை உண்டாம் - அக்யூட், க்ரானிக் என்று. எனக்கு கிடைத்தது அக்யூட். டயாலிசிஸ் செய்தால் சரியாகிவிடும். க்ரானிக் என்றால் மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரை டயாலிசிஸ் பண்ணிக்கொண்டே இருக்க
வேண்டுமாம். ( நல்ல வேளை, எனக்கு இதில் ஒரு சின்ன அதிர்ஷ்டம்). சூழ்ந்திருந்த டாக்டர்கள் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்தன.
அடிக்கடி மானிட்டரையும் கை கடிகாரத்தையும் பார்த்தனர்.

நெஃப்ராலஜிஸ்ட் டாக்டர் கே சி பிரகாஷ் அழைக்கப்பட்டார். அவர் உடனே எனக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றார். அப்போலோ காரர்கள் என் மனைவியிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ராத்திரியே அதற்கு
ஏற்பாடு  செய்தார்கள். (டயாலிசிஸ் என்பது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தை வெளியே கொண்டு வந்தது கழுவி பிறகு மறுபடி
சிறுநீரகத்திற்கு அனுப்புவது).

இதற்காக, என் கழுத்தருகில் வெட்டு போட்ட டெக்னீஷியன் என் அருகே
வந்து ” உங்க ஸ்டோரிஸ் எல்லாமே  படிப்பேங்க. உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்...”
"காலையில் பார்த்துக்கலாமே..."
"காலைல எனக்கு டூட்டி முடிஞ்சு போயிருவேனே"
"டயாலிஸிஸ் ஓடிட்டு இருக்கு இல்லையா....இப்பவேவா?"
"இது என்னங்க ஜுஜுபி. பத்து நாளைக்கு ஒரு முறை ட்ரெயின் பிடித்து வந்து பண்ணிக்கிறவங்க இருக்காங்க. அங்க  பாருங்க.."
ஹால் முழுவதும் டயாலிசிஸ் மெஷின்கள் அமைத்து பலர் மாத நாவல் படித்துக்கொண்டு டயாலிசிஸ் பண்ணி கொண்டு இருந்தார்கள். அப்படி ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பது தெரிந்தது.

மறுதினம் சந்தேகத்துக்கு இன்னொரு முறை டயாலிஸிஸ் பண்ணிக்கொண்டதும் சிறுநீரகம் பழைய நிலைக்கு திரும்பி
பொன் வண்ணத்தில் சிறுநீர் கழிக்கத் துவங்கினேன். எனக்கு ஆன்ஜியோவுக்காக கொடுக்கப்பட்ட கறுப்பு  திரவத்தினாலோ அல்லது கொலஸ்ட்ரால் எம்பாலிசத்தாலோ வந்திருக்கலாம் என்று என் சங்கடத்துக்குக் காரணம்  சொன்னார்கள்.

ஒரு வாரம் ஐசியு-வில் இருந்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.
அதன்பின் வீட்டுக்கு வந்ததும் மற்றொரு சிக்கல் ஏற்பட்டது. அதை
விவரித்து அதை ஏற்படுத்தியவர் பெயரைக் கெடுக்க விரும்பவில்லை.

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக விரும்புபவர்களுக்கு என் பரிந்துரைகள்
இவை - முடிந்தால் அட்மிட் ஆவதைத் தவிர்க்க வேண்டும். என் கேஸில் போல தவிர்க்க இயலவில்லை என்றால், எத்தனை சீக்கிரம் வெளிவர முடியுமோ வந்துவிடவும். ஓர் உபாதைக்காக அட்மிட் ஆகி உள்ளே
போனதும், அப்படியே மற்ற உபாதைகள் உள்ளனவா என்று பார்த்து
விடலாம் என்று யாராவது அல்லக்கை யோசனை சொன்னால் பெரிய எழுத்தில் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். முடிந்தால்
அலறவும். இல்லையேல் மாட்டினீர்கள்.

எல்லோரும் நல்லவர்கள், திறமைசாலிகள். சிக்கல் என்னவென்றால்
அவர்கள் திறமைசாலிகளாக இருக்கும் அவயங்கள் வேறுபடும். கிட்னி ஸ்பெஷலிஸ்ட் கிட்னியையே கவனிப்பார், ஹார்ட், ஹார்ட்டையே...
சுவாச நிபுணர் சுவாசத்தையே. யாரவது ஒருவர் பொதுவாகப் பொறுப்
பேற்றுச் செய்யாவிடில் அகப்படுவீர்கள். ஒவ்வொரு டாக்டரும் சிற்றசர்கள்போல

குட்டி டாக்டர் புடைசூழ வருவார்கள். மொத்தம் ஒரு நிமிஷம் நம் படுக்கையருகே நிற்பார்கள். அன்று அதிர்ஷ்ட தினம் என்றால் ஏறிட்டுப் பார்ப்பார்கள்.இல்லையேல், தலைமாட்டு சார்ட்தான். "ஹவ் ஆர் யு ரங்கராஜன்?" என்று மார்பில் தட்டுவார் சீனியர்.

குட்டி டாக்டர் தாழ்ந்த குரலில் கிசுகிசுப்பார்."ஸ்டாப் லாசிக்ஸ் ...இன்க்ரீஸ் ட்ரெண்டால்..." என்று கட்டளையிட்டுவிட்டு கவுன் பறக்க கடவுள் புறப்பட்டு விடுவார். அடுத்து, அடுத்த ஸ்பெஷலிஸ்ட் வந்து குய்யோ முறையோ -
"யார் லாசிக்ஸை நிறுத்தியது?" இவர்கள் இருவருக்கும் பொதுவாக வார்டு சிஸ்டர் என்னும் பெரும்பாலும் மலையாளம் பேசும் அப்பிராணி.

இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம் - ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு விளைவும், பக்க விளைவும் உண்டு.

ஒரு மாத்திரை கல்குடலாக்கி பாத்ரூம் எங்கிருக்கிறது என்பதே மறந்து போகும். மற்றொரு மாத்திரை இளக்கி குழாய் போலத் திறந்துவிடும். ஒரு மாத்திரை தூக்கத்தைக் கொடுக்கும். ஒன்று கெடுக்கும். ஒன்று, ஈறுகளை, பல்லை மறைக்க வைக்கும் அளவுக்குக் கொழுக்க வைக்கும், ஒன்று
பல்லை உதிர்க்கும்.

ஒரு காலத்தில் ஒரு வேளைக்குப் பதினான்கு மாத்திரைகள் சாப்பிட்ட எனக்கு என்ன ஆகியிருக்கும்? ரகளை !

ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மனச்சோர்வு அளிக்கும் இடம். சுற்றிலும் ஆரோக்கியர்கள் காபி, டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நாம்
மட்டும் கண்காட்சிப் பொருள் போல படுத்திருக்க, கண்ட நேரத்தில்,
கண்டவர் வந்து கண்டஇடத்தில் குத்தி ரத்தம் எடுத்து க்ளூகோஸ்
கொடுத்து, பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து, ஷகிலா ரேஞ்சுக்கு
உடம்பெல்லாம் தெரியும்படி நீல கவுன் அணிவித்து, ஆஸ்பத்திரியில் நிகழ்வது போல மரியாதை இழப்பு மந்திரியின் முன்னிலையில் கூட நிகழாது.

அப்பல்லோ போன்ற ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கான அத்தனை கருவிகளும் உள்ளன. எனக்கே எடுத்த டெஸ்டுகள்
ஆன்ஜியோகிராம், பல்மனரி ஃபங்க்ஷன் டெஸ்ட்,ஒருநாள் விட்டு
ஒரு நாள் எக்ஸ்ரே, ரீனல் ப்ரொஃபைல் டெஸ்ட், 1 அண்ட்
2 பிளட் டெஸ்ட், எட்டு மணி நேரம் மெல்லக் கொடுக்கப்படும் ஏதோ இன்ஜெக்ஷன், கால் வலிக்கு டாப்ளர் ஸ்கேன் ...ஒவ்வொன்றுக்கும்
மிகுந்த பொருள் செலவாகும். ஏழைகள் அணுக முடியாது.
நானே உள்ளாடை வரை உருவப்பட்டு பெஞ்சு, நாற்காலிகளை விற்கும் நிலைக்கு வந்துவிட்டேன்.

டிஸ்சார்ஜ் ஆகும்போது டாக்டர் கே சி பிரகாஷ் ஒரு சிற்றிடி கொடுத்தார். "எல்லாம் சரியாயிடுச்சு. ஆனா, ஒரு நாளைக்கு ஒரு கிராம்தான் உப்பு,
ஐந்நூறு மில்லிதான் தண்ணி."

உப்பில்லாமல், தண்ணீரில்லாமல் உயிர்வாழ்வதற்கு இன்னொரு பெயர் உண்டு...நரகம்....

தாகம் என்றால் இப்படி, அப்படித் தாகம் இல்லை....டாண்டலஸ்ஸின் (Tantalaus) தாகம். (புரியாதவர்கள் ஹாய் மதனைக்  கேட்கவும்)

*********************************************
என் குறிப்பு: - இந்த டாண்டலஸ் பற்றி நான் படித்ததை (அதில் நினைவிருப்பதை) உங்களோடு பகிர்ந்து கொள்ள  விழைகிறேன்.

டாண்டலஸ் ஒரு கிரேக்க இதிகாச ஹீரோ. அவன் ஓர் சமயம் தன் வீட்டிற்கு விருந்துண்ண வரும் கடவுள்களுக்கு அவனுடைய மகனைச் சமைத்து பரிமாற விழையும்போது, உண்மை தெரிய வர, கோபத்தில் டாண்டலஸை சபிக்கின்றனர்.

அந்த சாபத்தின் விளைவாக டாண்டலஸ் முழங்காலளவு தண்ணீரில் எப்போதும் நிற்பான். அவன் தலைக்கு மேல் உள்ள மரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் உள்ள கிளையில் பழங்கள் இருக்கும். அவனால் அதைப் பறித்து சாப்பிட முடியாது.

சாப்பிட நினைக்கும்போது பழங்கள் உயரே போய்விடும். சரி தண்ணீராவது குடிக்கலாம் என்று குனிந்தால், காலுக்குக்  கீழே இருக்கும் தண்ணீர் வற்றிவிடும். இதனால், டாண்டலஸ் எப்போது கடுமையான தாகத்துடனும், நிரந்தர பசியுடனும் இருப்பான். இவன் பெயரிலிருந்தே ஆங்கில வார்த்தையான tantalize / tantalise வந்தது. டிக்ஷனரியில் பொருள் பாருங்கள்,
விளங்கும்.)
******************************
மறுபடியும் சுஜாதா......

ஆஸ்பத்திரியிலிருந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு நான் வெளிவந்தபோது நான் இழந்தது பன்னிரண்டு கேஜி. பெற்றது,

"எனக்கு இத்தனை நண்பர்களா? இத்தனை நலம் விரும்பிகளா?" என்ற பிரமிப்பு. என் மனைவியும், மகன்களும், என்  மச்சினரும் மாற்றி, மாற்றி ட்யூட்டி பார்க்க, சினிமா நண்பர்கள் அனைவரும் வந்து ஆறுதலும், பொருளுதவியும் தந்தார்கள். பக்கத்துக்கு வார்டுகளில் படித்திருந்தவர்கள் தங்கள் வியாதிகளை மறந்து என்னை விசாரிக்க வந்தார்கள்.

டாக்டர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், லாப் டெக்னீஷியன்கள், பெரும்பாலும் செல்வி என்ற பெயர் கொண்ட அரிதான தமிழ் நர்ஸுகள், அஃறிணையில், இனிமையாக பேசும் மலையாள நர்ஸுகள்,...
எத்தனைப் பேர் !!

'நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்' (திருவாய்மொழி) ஆன நான் இவர்களுக்கு என்ன செய்தேன் என யோசித்துப் பார்க்கிறேன். இவர்களுக்காக இந்தண்டை ஒரு துரும்பை எடுத்து அந்தண்டை போட்டதில்லை. ஒரு ஸ்டூலைக் கூட நகர்த்தியதில்லை. ஏதோ தமிழில் கிறுக்கினத்துக்கு
இத்தனை மதிப்பா? இத்தனை சக்தியா?

உற்றார்கள் எனக்கில்லை யாரும் என்னும்;
உற்றார்கள் எனக்கிங்கெல்லாரும் என்னும்

என்ற திருவாய்மொழி வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
-------------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.11.15

இன்னும் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருப்போமா? அல்லது மாட்டோமா?


இன்னும் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருப்போமா? அல்லது மாட்டோமா?

என்ன வாத்தியார் குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள் என்று சொல்லாமல், கீழே உள்ள பத்திரிக்கைச் செய்தியை முதலில் படியுங்கள். கச்சேரியைப் பிறகு வைத்துக்கொள்வோம்:


படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும். உங்களுக்கு படிப்பதற்கு வசதியாக இருக்கும்!
---------------------------------------------------------------------------------------------------
இந்தப் பத்திரிக்கை க்ளிப்பிங்கை சங்கரன் கோயிலுக்குப் பெருமை சேர்க்கும் நமது வகுப்பறை மாணவர் திருவாளர் கணபதி நடராஜன் அவர்கள் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அதை உங்கள் பார்வைக்குக் கொடுத்துள்ளேன்.

தினமலர் நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் - 26-11-2015 அன்று இந்தச் செய்தி வெளிவந்திருக்கிறது. புதிய நாஸ்டர்டாமஸ் என்று பத்திரிக்கைக்காரர்களே குறிப்பிட்டு உள்ளார்கள்.

என்ன சொல்கிறார் இந்தப் புதியவர்? நடக்க உள்ளதாகக் கணித்து இரண்டு முக்கியமான செய்திகளைச் சொல்கிறார்:

1. 15-5-2016 அன்று கரீபியன் கடலில் உள்ள தீவு நாடான போர்ட்டோரீகோவில் அதிகாலை 2.20 மணிக்கு 5.6 மைல் அளவுள்ள  விண்கல் பூமி மீது வந்து மோதும். அதனால் நம் பூமி முழுவதும் அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படும். 120 கோடி பேர்கள் பலியாவார்கள்.

2. 16-6-2016 அன்று ரஷ்யா மற்றும் சீனா இரண்டும் சேர்ந்து 3ம் உலகப் போரைத் தொடங்கும். 25-10-2016 அன்று அக்கூட்டணி உலகப் போரில் வெற்றி பெறும்.
--------------------------------------
இது சம்பந்தமாக இணையத்தைத் தோண்டிய போது நிறைய செய்திகள் கிடைத்தன. இரண்டு மூன்று செய்திகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.

அந்த புதிய நாஸ்ட்ரடாமஸ் இவர்தான். நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்
Pastor Ricardo Salazar in a prophecy video
--------------------------------------------------------------------------


ரஷ்யா மற்றும் சீனா நாட்டு அதிபர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்
The pastor claims Russia and China will team up against a weaker USA


----------------------------------------------------------------------------------------------------------
அந்தப் புதிய நாஸ்ட்ரடாமஸ் கூறிய ஏதாவது இதுவரை நடந்திருக்கிறதா என்ற விவரம் எதுவும் இல்லை. இப்போது அவர் கூறியிருப்பது நடக்குமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

-------------------------------------------------------------
எனது கருத்து:

isis தீவிரவாதிகளின் சமீபத்திய அட்டூழியங்களை, குறிப்பாக பாரீஸ் நகரில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள், ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய கொடூரம் ஆகியவற்றை பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்வார்கள் என்று உள் மனது சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்! நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

அதெல்லாம் ஒன்றும் நடக்காது. பழநிஅப்பன் பார்த்துக்கொள்வார்.

அத்துடன் ஒரிஜினல் நாஸ்ட்ரடாமஸ் 21ம் ஆண்டில் இந்தியா சூப்பர் பவர் ஆகும் என்று எழுதிவைத்திருக்கிறார். அது உண்மையாகாமல் போய்விடுமா என்ன? ஆகவே நம்பிக்கையோடும் துணிச்சலோடும் இருங்கள்.

நல்லதே நடக்கும்!
நல்லதே நடக்கும்!
நல்லதே நடக்கும்!

அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.11.15

ரேஷன் கார்டையும் ஆதார் அட்டையையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டாமா? இதைப் படியுங்கள்!


ரேஷன் கார்டையும் ஆதார் அட்டையையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டாமா? இதைப் படியுங்கள்!

நாட்டில் எந்த செயல்பாட்டிற்கும், அடையாள அட்டை (முக்கியமாக ஓட்டுனர் உரிமம் - அதாங்க டிரைவிங் லைசென்ஸ்) மற்றும் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆகியவற்றைக் கேட்கிறார்கள். பெண்களுக்குக் கழுத்தில் தாலியும், கால்களில் மெட்டியும் அடையாளச் சின்னங்கள். ஆண்களுக்கு நான் முதல் வரியில் குறிப்பிட்டுள்ள அட்டைகள் இரண்டும் அடையாளச் சின்னங்கள். கழுத்தில் கட்டித் தொங்க விட்டுக் கொண்டால் மறக்காது.

ஆனால் அவை எல்லாம் இல்லாத பிறவிக்கு என்ன செய்வது? முக்தி அடைவதைத் தவிர வேறு வழியில்லை. சரி, முக்திக்கு என்ன செய்வது? கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------

திருவண்ணாமலை: 

முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை - நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும். ஆகவே அண்ணாமலையாரை தினமும் 3 முறைகளாவது நினையுங்கள். முக்தி அடைவீர்கள். அடுத்த
பிறவி இருக்காது. ரேஷன் கார்டையும் ஆதார் அட்டையையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டியதிருக்காது.

சொல்லிலக்கணம்
திருவண்ணாமலை -
அருணாச்சலம் -
அண்ணாமலை - அண்ணா என்ற சொல்லுக்கு நெருங்க இயலாதது என்று பொருளாகும். பிரம்மாவினாலும் திருமாலினாலும் சிவபெருமானின் அடியையும், முடியையும் நெருங்க இயலாததால் இம்மலையை அண்ணாமலை என்று அழைக்கின்றனர்.

காலம்
திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சைவர்களின் நம்பிக்கைப் படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது.

அடடா, தங்க மலையாக இருந்த காலத்தில் நாம் இருந்தோமா என்பது தெரியவில்லையே!
========================================================
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற மகா தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. ஒரே நாளில் 5 தேர்கள் பவனி வந்ததை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


நவம்பர் 25ம் தேதி மகாதீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பஞ்ச ரதங்களுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

முதலில், விநாயகர் தேர் காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. அந்த தேர், நிலைக்கு வந்து சேர்ந்ததும் முருகன் தேர் புறப்பட்டுச் சென்றது. மாடவீதியில் சுமார் 3 மணி நேரம் வலம் வந்த தேர் பின்னர் நிலையை அடைந்தது. அதன்பிறகு, உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு பெரிய தேர் புறப்பட்டது. மாட வீதியான தேரடி வீதி, திருவூடல் தெரு, கோபுர வீதி வழியாக பவனி வந்து, 7 மணி நேரத்துக்குப் பிறகு நிலையை சென்றடைந்தது. 5 தேர்தர்கள் பவனி பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் தேரோட்டமும் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடைபெற்றது. ஓரேநாளில், 5 தேர்கள் பவனி வருவது கூடுதல் சிறப்பாகும்.

மகா தேரோட்டத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின்போது குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் சுமந்த பக்தர்கள், மாட வீதியை சுற்றி வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். கொட்டும் மழையில் தேரோட்டம் மகா தேரோட்டம் நடைபெற்ற போது கனமழை பெய்தது. கொட்டும் மழையில் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று முழக்கமிட்டு ஒவ்வொரு தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

காலையில் தொடங்கிய மகா தேரோட்டம், நள்ளிரவில் நிறைவு பெற்றது.

மகாதீபம்: இதைத்தொடர்ந்து அண்ணா மலை கோயிலில் 25ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் திரி (காடா துணி) ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீபக் கொப்பரை சென்றது இந்நிலையில் மகாதீபம் ஏற்றப்படும் தீபக் கொப்பரைக்கு இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை 15க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழை மலைக்கு உச்சிக்கு எடுத்து சென்றனர்.

இன்று அதிகாலை தீபம் ஏற்றுவதற்கான நெய் மற்றும் திரி ஆகியவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும்.

உள்ளூர் விடுமுறை அண்ணாமலையார் கோவில் மகாதீப விழாவை முன்னிட்டு நவம்பர் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்றைய தினம் தமிழகம் முழுவதிலும் இருந்தும் திருவண்ணாமலைக்கு 2400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

செய்தி Source: http://tamil.oneindia.com/news/tamilnadu/karthigai-deepam Thanks to that people
----------------------------------------------------------

கார்த்திகை தீபத்தைக் காண திருவண்ணாமலைக்குப் போக முடியவில்லையா? கவலை வேண்டாம். தொலைக்காட்சியில் இன்று
மாலை நேரடி ஒளிபரப்பு இருக்கும். கண்டு இன்புறுங்கள்
============================================================
வாழ்க வளமுடன்!
 வளர்க நலமுடன்!

27.1.14

எதிர்காலத்தில் இனி அதுவும் இலவசம்தான்!

 

எதிர்காலத்தில் இனி அதுவும் இலவசம்தான்!

நம் மக்களுக்கு மிகவும் பிடித்தது இலவசம். அதற்கு மயங்காதவர்களே கிடையாது. விருப்பப் படாதவர்களே கிடையாது (என்னையும் சேர்த்துத்தான்)

அதை நன்கு உணர்ந்த நம் அரசியல் பிரமுகர்கள், இலவசமாக ஒவ்வொன்றாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் இப்போது கொடுத்திருப்பது (துவக்கம்தான் என்றாலும்) இரண்டு கைகளையும் கூப்பி வரவேற்க வேண்டிய இலவசம்!
அப்படி எதைப் புதிதாகக் கொடுத்திருக்கிறார்கள் என்கிறீர்களா?

ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள் - தெரியும்!

V
V
V
V
V
V
V
V
V
V



பத்திரிக்கைச் செய்தி: நன்றி இந்து நாளிதழ் 24.1.2014

என்ன உண்மையிலேயே நல்ல செய்திதானே!

பெங்களூரில் பிள்ளையார்சுழி போட்டுத் துவங்கியிருக்கிறார்கள். பிறகு அதை தங்கள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த இருக்கிறார்கள். இதைப் பார்த்து மற்ற மாநிலங்களும் இந்த வசதியைத் தங்கள் மாநில மக்களுக்குக் கொடுக்கத்துவங்கும்.

வெளி மாநிலத்தில் உள்ள ஒரு நகரில் சென்ற மாதம் பார்த்தேன். ஒரு பெரிய வணிக வளாகத்தில் (பல தளங்களைக் கொண்ட அந்த வணிக வளாகத்தில் 250 கடைகளும், ஒரு தளத்தில் 5 சினிமா அரங்குகளும் உள்ளன) வைஃபி வசதியை இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள். அங்கே செல்பவர்கள் தங்கள் மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் போன்களின் மூலம் இணையத் தொடர்பை உண்டாக்கிக் கொள்ளலாம்.

இந்த வசதி மற்ற நாடுகளில் உள்ளதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்!

அன்புடன்
வாத்தியார்

=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8.6.11

திருவரங்கம் வாலிக்குக் கிடைத்த திருப்புமுனை!

----------------------------------------------------------------------------------------
திருவரங்கம் வாலிக்குக் கிடைத்த திருப்புமுனை!

இளைஞராக இருந்த காலத்தில், தமிழ் வசப்பட்டவுடன் வாலியும் சும்மா இருக்கவில்லை. தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார்.

முதல் பிரதியை வெளியிட்டவர் யாரென்று நினைக்கிறீர்கள்? கேட்டால் அசந்து போவீர்கள். எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்?

அந்தக் காலத்தில் மிகப் பெரிய எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளராக இருந்த திருவாளர் கல்கி அவர்கள்தான் அந்தப் பத்திரிக்கையை வெளியிட்டுச்சிறப்பித்ததோடு, வாலியின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையையும் கொடுத்துவிட்டுப் போனார். தன் கதைகளைப் பல திருப்புமுனைகளோடு கொண்டு செல்லும் அவர், வாலியின் வாழ்விலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது அதிசயமா அல்லது தெய்வாதீனமா என்றால் இரண்டையும் வைத்துக் கொள்ளலாம்.

அன்று திரு.கல்கி அவர்களுடன் திருவாளர் சின்ன அண்ணாமலை அவர்களும், திருச்சி வானொலி நிலைய அதிகாரி திரு.பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் அடுத்து ஒரு ஏற்றம் வாலியின் வாழ்வில் நிகழ்ந்தது. வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

திருவரங்கத்தில் வாலி அவர்கள் நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில் பல இளைஞர் கூட்டமே பங்கேற்றுக் கொண்டது. அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களில் ஒருவர்தான் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளராகத் தன் தனித்தமிழ் நடையால் ராஜ நடைபோட்ட எழுத்தாளர் சுஜாதா! அவரின் இயற்பெயரும் ரங்கராஜன்தான் என்பது வியப்பிற்குரிய விஷயம்!
=====================================================================


--------------------------------------------------------------------------
மாறுதலுக்காக இன்று ஒரு நாடகச் செய்தி!

செய்தி பழசுதான். ஆனால் சுவையானது.

அக்காலத்தில் கோவைக்குப் பல நாடகக் குழுவினர் வந்து நாடகங்களை நடத்தி, கோவை மக்களை மகிழ்விப்பார்கள். விசு, மெளலி, எஸ்.வி.சேகர், காத்தாடி ராமமூர்த்தி என்று பலர் தங்கள் குழுவினருடன் வருவார்கள். அந்த மகிழ்ச்சியான தருணங்கள் எல்லாம் இப்போது இல்லை.
----------------------------------------------------------------
காத்தாடி நாமமூர்த்தி அவர்களின் நகைச்சுவை நாடகத்தில் பார்த்த காட்சி ஒன்றை என் நினைவுத்திரையில் இருந்து உங்களுக்கு அளிக்கிறேன். மனிதரின் குரல் ஏற்ற இறக்கங்களுடன் அசத்தலாக இருக்கும்
---------------------------------------------------------------------
காட்சியில் காத்தாடி ராமமூர்த்தியின் மளிகை பாக்கியை வசூல் செய்து கொண்டு போவதற்காக மளிகைக் கடைக்காரர் வீடு தேடி வந்திருப்பார். அவர் வந்திருக்கும் செய்தியைக் குளித்துக் கொண்டிருக்கும் தன்
கணவரிடம் சொல்வதற்காக நடிகை குட்டி பத்மினி குளியலறைக் கதவின் மறுபுறம் நின்று பேச்சுக் கொடுப்பார்:

“ஏன்னா, செட்டியார் வந்திருக்கார். சீக்கிரமா வாங்கோ?”

“எந்தச் செட்டியாருடீ?”

மனைவி கோபமாக: ”ம்ம்ம்..ராஜா சர் முத்தையா செட்டியார்!”

“நான் ஒன்னும் அவரிடம் கடன் ஏதும் வாங்கவில்லையேடி?”

“அதுதான் கொடுத்துவிட்டுப் போகலாம்னு வந்திருக்கார்!”

“விளையாடாம, விஷயத்தை ஒழுங்கச் சொல்லுடீ!”

இதற்குள், என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக நைசாக உள்ளே வந்த மளிகைக் கடைக்காரர், சத்தமின்றி நடந்துவந்து குட்டி பத்மினியின் பின்புறம் நின்றிருப்பார். அதைக் கவனிக்காமல், தம்பதிகளின் உரையாடல் தொடரும்.

“மளிகைக்கடைச் செட்டியார்தான் வந்திருக்கார்!”

“ஓ..அந்த லூசு வந்திருக்கா? எங்க ஆத்துக்காரர் குளிக்கிறார்.வர்றதுக்கு ஒருமணி நேரம் ஆகும்னு சொல்லி அனுப்பிச்சுவைடி அவரை!”

=========================================================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

11.12.09

இதுதான்’டா பாசம்!



இதுதான்’டா பாசம்!


அடிபட்டுகிடந்த சிங்கக் குட்டி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்து, அதற்குச் சிகிச்சை அளித்ததுடன், அதைத் தன் வீட்டிலேயே வைத்து வளர்த்து வந்தார் ஒரு பெண்மணி.

அன்பு, பரிவு, பாசம் என்று அனைத்தையும் காட்டி, அதை வளர்த்தார் அந்தச் சகோதரி.

வளர்ந்த சிங்கம் அவர் வீட்டுத் தோட்டத்திலேயே விளையாடும். வெளியே எங்கும் செல்லாது.

ஒரு நிலையில், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் செய்யவே, அவரும், கட்டுப்பட்டு, அதைக் கொண்டு போய்க் காப்பகத்தில் விட்டு விட்டார்.
விட்டதோடு நில்லாமல், தினமும் ஒருமுறை, தன் வளர்ப்புச் செல்வத்தை போய்ப் பார்த்துவிட்டு வருவார்.

அவரைக் கண்டவுடன், அந்தச் சிங்கம் தாவிக்குதித்து வந்து, அவரைக் கட்டித் தழுவி, அன்புடன் முத்தமும் கொடுக்கும்.

நேயத்தை மனிதர்கள் மறந்து வரும் சூழலில், மிருகங்களாவது நேயத்துடன் நடந்து கொள்வதைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும்

நீங்கள் பார்த்து மகிழ, அதை இன்று வீடியோக் கிளிப்பிங்காகப் பதிவிட்டுள்ளேன். பார்த்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்