மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 611 - 620. Show all posts
Showing posts with label Lessons 611 - 620. Show all posts

6.2.13

Astrology.Popcorn Post: சித்தப்பன் மகனுக்கு மட்டும் ஏன்டா சின்னவயசிலேயே திருமணம் ஆச்சு?


Astrology.Popcorn Post: சித்தப்பன் மகனுக்கு மட்டும் ஏன்டா சின்னவயசிலேயே திருமணம் ஆச்சு?

பாப்கார்ன் போஸ்ட் எண்.35

ஒரு இளைஞனுக்கு மிகுந்த வருத்தம். 34 வயதாகியும், அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் அவனுடைய தம்பிக்கு (சித்தப்பா மகனுக்கு) 24 வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது.

இதுபற்றி தன் தம்பி கேட்டபோது, நமது நாயகனின் அப்பா சொல்லிவிட்டார்,  “இவனுக்கு இன்னும் நேரம் வரவில்லை. கால சர்ப்பதோஷம் ஏழரைச் சனி என்று எல்லா கெரகமும் வந்து தள்ளிக்கொண்டே போகிறது. அதற்காக அவனுடைய திருமணத்தைத் தள்ளிப் போடாதே! நீ பாட்டுக்கு செய்து முடி!”

அப்படி வீட்டாரின் சமமதத்துடன்தான் அந்தத் திருமணமும் நடைபெற்றது

அதோடு மட்டுமல்லாமல அதுபற்றி, வீட்டில் உள்ள பெரிசுகள் பேசிக் கொண்டது நமது நாயகனின் காதில் விழுந்தது.

“என்னங்க நம்ம பையனுக்கு மட்டும் இன்னும் திருமணம் அமைய மாட்டேன் என்கிறது. அதற்குக் காரணம் இந்தப் பாழாய்ப்போன ஜாதகத்தை கட்டிக்கொண்டு  நீங்கள் அழுவதால்தான்!” இது நாயகனின் அம்மா!

“ஆமாம்டி ராசாத்தி, என்னை மட்டும் குறை சொல்! நாம் பார்க்கிற பெண் வீட்டில் எல்லாம் இவனுடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, கடுமையான களத்திர தோஷம் உள்ளது என்று சொல்லிப் பின் வாங்கி விடுகிறார்கள். அதற்கு நான் என்ன செய்வது?”

“அதுசரி, இனிமேல் பெண் பார்க்கும்போது, அவர்கள் கேட்டால், இவனுக்கு ஜாதகம் இல்லை. வீடு மாற்றும்போது ஒரு பெட்டியோடு அதுவும் தொலைந்து
விட்டது என்று சொல்லுங்கள்”

“பிறந்த தேதியைக் கேட்பார்களே?”

“கேட்டால் சொல்லுங்கள். பிறந்த நேரத்தை மட்டும் மாற்றி சொல்லுங்கள். காலை எட்டு மணி என்பதை இரவு எட்டு மணி என்று சொல்லுங்கள். அதான்
இரண்டு மணி நேரத்திற்கு ஒரு லக்கினம் மாறிக்கொண்டே இருக்குமாமே - ஒரு புத்தகத்தில் படித்தேன். அப்படியாவது இவன் திருமணம் முடியட்டும்!”

“அது அதர்மமில்லையா?”

“பகவனே ஒரு நல்ல காரியத்திற்காக அமாவாசையையே மாற்றி ஒரு நாள் முன்பாக தர்ப்பணம் செய்யவில்லையா? நன்மைக்கு எனும்போது எதுவும் அதர்மம்  ஆகாது”

“ஆமாம், உனக்கென்று செய்யும்போது எல்லாமே தர்மக்கணக்கில்தான் வரும்” என்று நக்கலாகச் சொன்னவர், அதற்குமேல் பேசவில்லை

அப்படி எல்லாம் மாற்றிக் கொடுக்கலாமா?

கொடுக்கக்கூடாது. அப்படியொரு மூல நட்சத்திர ஜாதகத்தை ஒரு நாள் தள்ளி பூராட நட்சத்திரமாக்கினார்கள். எட்டில் இருந்த சனி ஏழுக்கு வந்துவிட்டது.

அது பற்றி இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம். இப்போது சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்!

சிலருக்கு இளம் வயதிலேயே திருமணம் ஆகிறது. சிலருக்கு காலம் கடந்து திருமணமாகிறது. இளம் வயதிலேயே திருமணம் ஆகிவிடுவதற்கான ஜாதக
அமைப்பு என்ன? அதை இன்று பார்ப்போம்!

1. லக்கினத்திலும், ஏழாம் வீட்டிலும் சுபக்கிரகங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அல்லது அந்த வீடுகள் சுபக்கிரகங்களின் பார்வையைப் பெற வேண்டும்.

2. ஏழாம் வீட்டுக்காரன் தீய கிரகங்களின் கூட்டோடு அல்லது பார்வையோடு இருகக்க்கூடாது

3. குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீடும் அப்படியே இருக்க வேண்டும்

4. சுக்கிரன் அஸ்தமனமாகி இருக்கக்கூடாது

5. சுபக்கிரகங்கள் வக்கிரமாகி அதாவது வக்கிரகதியில் இருக்கக்கூடாது.

6. லக்கினம், மற்றும் ஏழாம் வீட்டில் 28ற்கும் அதிகமான பரல்கள் இருக்க வேண்டும்

7. லக்கினாதிபதியும் ஏழாம் வீட்டுக் காரனும் தங்கள் சுயவர்க்கத்தில் 4 அல்லது அதற்கு மேலான பரல்களுடன் இருக்க வேண்டும்

அப்படி இருந்தால் சின்ன வயதிலேயே திருமணம் கூடிவரும்!

நூறு கிராம் பாப்கார்ன பொட்டலத்திற்கு இதுதான் அளவு. இன்னொரு பொட்டலத்துடன் அடுத்த வாரம் சந்திப்போம்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

5.2.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 16


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 16

ஜோதிடத் தொடர் - பகுதி 16

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
உத்திர நட்சத்திரம் 2,3, மற்றும் 4ஆம் பாதங்கள் மட்டும் (கன்னி ராசி)

இது சூரியனின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. திருவாதிரை
6. பூசம்
7. ஆயில்யம்
8. மகம்
9. பூரம்
10. ஹஸ்தம்
11. சுவாதி
12. அனுஷம்
13. கேட்டை
14. மூலம்
15. பூராடம்
16. திருவோணம்
17. சதயம்
18. உத்திரட்டாதி
19. ரேவதி

ஆகிய 19 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இவற்றுள் சதய நட்சத்திரம் கும்ப ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் கன்னிக்கு ஆறாம் இடம் கும்பம் கும்பத்திற்கு எட்டாம் இடம் கன்னி ஆகவே அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

மேஷ ராசிக்கு உரிய அஸ்விணி, பரணி ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கும் 8/6 நிலைப்பாடு வரும். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

மகம், பூரம் இரண்டும் சிம்ம ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கன்னிக்கு சிம்மம் பன்னிரெண்டாம் வீடு.  (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அந்த நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

கார்த்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ஏக நட்சத்திரமாக இருந்தால் மத்திம பொருத்தம் (average) உண்டு.  என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத் தவிர்ப்பது நல்லது.

சித்திரை, அவிட்டம் பொருந்தாது!

ஏக நட்சத்திரமான உத்திரத்தைத் தவிர வேறு எந்த நட்சத்திரத்திற்கும் மத்திம பொருத்தம் என்பது இல்லை!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++=

4.2.13

Astrology கண்ணா, உனக்குத் தெரியாத கள்ளத்தனமா?


Astrology கண்ணா, உனக்குத் தெரியாத கள்ளத்தனமா?
   

பஞ்சபாண்டவர்கள் ஐவரில் கடைசியில் பிறந்த சகாதேவன் பிறவி ஞானி. அனைத்து வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவன். ஜோதிட
சாஸ்திரமும் அதில் அடக்கம். எப்போதும் உண்மையையே பேசுபவன் அவன்.

நாட்டின் உரிமையில் தங்கள் பங்கைக் கொடுக்க மறுத்த துரியோதனன், மற்றும் அவனுடைய சகோதரர்களுடன் யுத்தம் செய்துதான் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது, பஞ்சபாண்டவர்கள் தங்களை யுத்ததிற்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த சமயத்தில், கிரகநிலைகளின்படி தாங்கள் வெற்றி பெறவேண்டும் என்ற ஆதங்கத்துடன் சகாதேவனைத் தேடிவந்த துரியோதனன், யுத்ததைத்
துவக்குவதற்கு ஒரு நல்ல நாளைக் குறித்துக் கொடுக்கும்படி கேட்டான்.

சகாதேவனும் மறுக்காமல், அடுத்து வரவிருந்த அமாவாசை நாளைக் குறித்துக் கொடுத்ததோடு, அந்த நாளில் நீங்கள் யுத்ததத்தை துவங்கினால், உங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று உறுதிமொழி சொல்லியும் அனுப்பினான்.

மார்கழி மாதம் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இருக்கும் அமாவாசைத் திதி நாளை அவன் தெரிவு செய்து சொல்லியனுப்பினான்

எப்படியிருக்கிறது பாருங்கள்?

அதைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு கடும் கடும் ஏற்பட்டது. சகாதேவனைக் கடிந்து கொண்டார்

''அப்பனே, உன்னுடைய வெகுளித்தனத்திற்கு ஒரு அளவில்லையா? உன்னுடைய நேர்மைக்கு ஒரு எல்லையே இல்லையா? துரியோதனன், உங்களோடு யுத்தம் செய்து, உங்களைக் கொன்று குவிப்பதற்காகத்தான் நல்ல நாளைக் கேட்டு வந்தான். அதை முழுதாக உணராமல், நீயும் அவனுக்கு நல்ல நாளைப் பார்த்துச் சொல்லி அனுப்பியிருக்கிறாய். உன் செயலுக்கு எங்கே போய் முட்டிக் கொள்வது? நீ எப்ப்டி அவனுக்கு அந்த உதவியைச் செய்யலாம்? அல்லது உண்மையைச் சொல் அந்த நாள் பொய்யான நாள்தானே? தவறான நேரத்தைத்தானே குறித்துக்கொடுத்தாய் - உண்மையைச் சொல்!'' என்று கண்ணபிரான் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி சகாதேவனைக் கேட்கவும் செய்தார்.

சகாதேவன் கண்ண பரமாத்வைப் பார்த்து சிரித்துவிட்டுச் சொல்லலானான்:

“நம் வீட்டு வாசற்படி ஏறி உதவி கேட்டு வந்தவனை எப்படி உதாசீனப் படுத்த முடியும்? ஆகவே உதவினேன். ஜோதிட சாஸ்திரத்தை வைத்து ஒருவனுக்கு
பொய்யான பலனைச் சொல்வது பாவச் செயல். அத்துடன் அப்படிச் சொல்வது ஜோதிடத்தை அவமதிப்பதாகும். ஆகவே நான் உண்மையைத்தான் சொன்னேன். ஒருநாளும் நான் தவறு செய்யமாட்டேன். நான் குறித்துக் கொடுத்த தேதி சரியான தேதிதான். அமாவாசை திதியில் யுத்தம் செய்தால். துரியோதனனுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். நாங்கள் தோற்கலாம். வெற்றி, தோல்வி முக்கியமில்லை. தர்மம்தான் முக்கியம். பொய் சொல்வது எப்படி தர்மமாகும்? ஜோதிட சாஸ்திரத்தை நம்முடைய விருப்பு வெறுப்புக்களுக்குத் தகுந்த மாதிரி பயன்படுத்தக்கூடாது. ஜோதிட விதிகளுக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது. அந்த சாஸ்திரத்தில் இருந்து வழுக்கி விழுந்து அடிபடாமல் இருப்பதுதான் மேலானது. அதுதான் என்னுடைய வேலை. அதைத்தான் நான் செய்தேன்”

“உங்களுக்குத்தான் வெற்றி, உங்களை நான் ஜெயிக்க வைக்கிறேன் என்று உங்களுக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டாமா? அதற்கு என்ன சமாதானம் சொல், அப்பனே?”

“அது உன்னுடைய வாக்கு. அதைக் காப்பாற்றுவது உன்னுடைய வேலை. உனக்குத் தெரியாத கள்ளத்தனமா? உனக்குத் தெரியாத தகிடுதத்தமா? உனக்குத் தெரியாத சேட்டையா? ஏதாவது ஒன்றைச் செய்து உன்னுடைய வாக்கை நீ காப்பாற்று. அதற்கு நான் எப்படி வழி சொல்ல முடியும்?” என்று சகாதேவன் தெளிவாகச் சொன்னான்.

கண்ண பரமாத்மா, தன்னுடைய கோபத்தை மறந்து புன்னகை செய்தார்

“என்னுடைய வேலை என்ன என்பதைச் சொல்லிவிட்டாய் அல்லவா? என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்னவர், அந்த இடத்தை விட்டு, புறப்பட்டுச் சென்று விட்டார்.

புறப்பட்டுச் சென்ற கண்ண பரமாத்மா என்ன செய்தார்?

அவர் தன் வேலையைச் செய்தார். அதுவும் சுவாரசியமாக இருக்கும். அந்தக்கதையை எழுதிப் பதிய வேண்டும். இன்னொரு நாள் அதை எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

ஜோதிடதர்மம் என்ன என்பதை உங்களுக்கு விளக்குவதற்காகவே சகாதேவனின் கதையை இன்று எழுதினேன்!
---------------------------------------------
என்றனும் அவனும் ஆங்கோர் இயந்திர எகினம் ஊர்ந்து
சென்றனன் அவனும் கேட்டுச் சிலையில் வெங்கதிரைத் திங்கள்
ஒன்றிய பகல் இராவில் களப்பலி யூட்டின் அல்லால்
வென்றிடல் அரிது என்றிட்டான் கிளைஞரை வேறிடாதான்

 ------- வில்லிபுத்தூரார் அருளிய ம்காபாரதத்தில் இருந்து

தெளிவுரை: துரியோதனன் அன்னப் பறவையின் வடிவம் உடைய இயந்திரத் தேரை ஊர்ந்து சென்று சகாதேவனை அடைந்து களப்பலிக்குரிய நாளைக்கூறுமாறு வேண்டினான். தனது சுற்றத்தாரைப் பகையாய்ப் பேதப் படுத்தாத அவனும் மார்கழி மாதத்தில் சூரியனும் சந்திரனும் சேரும் அமாவாசை நாளின் இரவுப்பொழுதில் களப்பலி இட்டால் அல்லாது போரில் வெற்றி காண்பது அரிதாகும் என்று உரைத்தான்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++

31.1.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 15

 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 15

ஜோதிடத் தொடர் - பகுதி 15

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
உத்திர நட்சத்திரம் 1ஆம் பாதம் மட்டும் (சிம்ம ராசி)

இது சூரியனின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. திருவாதிரை
6. பூசம்
7. ஆயில்யம்
8. மகம்
9. பூரம்
10. ஹஸ்தம்
11. சுவாதி
12. அனுஷம்
13. கேட்டை
14. மூலம்
15. பூராடம்
16. திருவோணம்
17. சதயம்
18. உத்திரட்டாதி
19. ரேவதி

ஆகிய 19 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இவற்றுள் திருவோண நட்சத்திரம் மகர ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் சிம்மத்திற்கு ஆறாம் இடம் மகரம். மகரத்திற்கு எட்டாம் இடம் சிம்மம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

மீன ராசிக்கு உரிய நட்சத்திரங்களில், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கும் 8/6 நிலைப்பாடு வரும். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

பூசமும், ஆயில்யமும் கடக் ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். சிம்மத்திற்குக் கடகம் பன்னிரெண்டாம் வீடு.  (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அந்த நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

கார்த்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ஏக நட்சத்திரமாக இருந்தால் மத்திம பொருத்தம் (average) உண்டு.  என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத் தவிர்ப்பது நல்லது.

சித்திரை, அவிட்டம் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.1.13

Astrology.Popcorn Post: பிரதோஷமும் பில் கேட்ஸும் !


Astrology.Popcorn Post: பிரதோஷமும் பில் கேட்ஸும் !

“வாத்தி (யார்), அப்துல்காதரும் அமாவாசையும் என்று சொல்வதைப்போல, பிரதோஷமும் பில் கேட்ஸும்! என்று தலைப்பைப் போட்டிருக்கிறீர்களே - பில் கேட்ஸாவது, பிரதோஷமாவது?” என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் தொடரலாம்!

Bill Gates யாரென்று தெரியாதவர்களும் பதிவை விட்டு விலகவும்!

பிரதோஷத்தைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு? சரி, சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். பிரதோஷம் என்பது திதிகளில் 13ஆவது திதியாகும். அதன் பெயர் திரயோதசி. (அதாவது அஷ்டமி, நவமி, தசமி என்பதைப்போல) அன்றைய தினத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை உள்ள காலத்தில் அல்லது நேரத்தில்) , சிவனாரை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.

அதுவும் வளர்பிறை திரயோதசித் திதி மிகவும் விஷேசமானது. (வயதான) பெண்களைக் கேளுங்கள் சொல்வார்கள்.

விவரமாகத் தெரிந்துகொள்ள இந்த சுட்டியைக் கிளிக்கிப் பாருங்கள்:
 http://www.shaivam.org/siddhanta/Pradhosham.html
----------------------------------------------------------------------------------
சரி சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்!

சரி வளர்பிறை திரயோதசித் திதிக்கு இத்தனை வலிமை உண்டு என்றால், அதாவது அன்றைய தினம் சிவனாரை வழிபட்டால் மேன்மை எனும்போது, அன்றைய தினம் பிறக்கும் குழந்தைக்கு என்ன மேன்மை?

உன்னதனமான பிறவி அக்குழந்தை. முன் கர்ம வினைகள் எல்லாம் துடைக்கப்பெற்று க்ளீன் ஸ்லேட்டாகப் பிற்க்கும் குழந்தை அது.

நமது பில் கேட்ஸூம் ஒரு வளர்பிறைத் திதியன்று பிறந்தவர்தான்?

என்ன ஆதாரம்?

அது இல்லாமல் வருவேனா?

கீழே கொடுத்துள்ளேன்



அதனால் அவர் அடைந்த நன்மைகள் என்னென்ன? அதற்கு அவருடைய ஜாதகத்தை அலச வேண்டும். அலசுவோம். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++==

29.1.13

Astrology.Popcorn Post. உச்சத்தை தொடுவது எப்படியடா ?

Astrology.Popcorn Post. உச்சத்தை தொடுவது எப்படியடா ?
Popcorn Post No.33
பாப்கார்ன் பதிவுகள் - எண்.33


தேதி 29.1.2013 செவ்வாய்க் கிழமை
-----------------------------------------------
இதற்கு முன்னால் Popcorn Post No.32 23.1.2013 வியாழக்கிழமை அன்று வெளியானது. அதன் தொடர்ச்சி இது.. பாப்கார்ன் போஸ்ட் என்பது ஒரு குறிப்பிட்ட செய்தியை விளங்கச் சொல்லி உங்களுக்குத் தெரியப்படுத்துவது. சுருக்கமாக இருந்தாலும் விளக்கமாக இருக்கும். பாப்கார்ன் பொட்டலம் எந்த அளவு இருக்குமோ அந்த அளவுதான் பதிவும் இருக்கும்.

சனீஷ்வரனைப் பற்றி நமக்கெல்லம் நன்கு தெரியும். அவரைப்போல் கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும் இல்லை. அவர்தான் ஆயுள்காரகர். நம் ஆயுளுக்கான காரகர். அடுத்து அவர்தான் கரமகாரகர். Authority for work. உங்கள் மொழியில் சொன்னால் பூவாவிற்கு அதாவது ஜீவனத்திற்கு (Employment) வழி அமைத்துக் கொடுப்பவர் அவர்தான்.

அவனவன் ஜாதகத்திற்கு தகுந்த மாதிரி அமைத்துக் கொடுப்பார். ஜாதகனை பணத்தில் புரளவைக்கும் வேலையிலும் அமர்த்துவார். அல்லது பணம் புரளும் இடத்தில் (வங்கிகளில்) வேலையிலும்  அமர்த்துவார்.

வங்கி என்றவுடன் நினைவிற்கு வருகிறது. எனது நண்பர் ஒருவர் தேசிய வங்கி ஒன்றில் அதிகாரியாகச் சேர்ந்து, பல பதவி உயர்வுகளைப் பெற்றுக் கடைசியில், அவ்வங்கியின் தலைமைச் செயலகத்தில்  மேலாளர் பதிவியையையும் பிடித்து, அதையும் அலங்கரித்தார்.

அதுபோல ஒரு ஜாதகன் தான் அமரும் பணியில் உச்சத்தைத் தொடுவதற்கு என்ன காரணம்? அதாவது ஜாதகப்படி என்ன காரணம்?

சனி பத்தாம் வீட்டில் அமர்ந்தால், ஜாதகன் தான் பார்க்கும் வேலையில் உச்சத்தைத் தொடுவான்

அதுபோல லக்கினாதிபதி, நான்காம் வீட்டில் அமர்ந்து, தன் நேரடிப் பார்வையால், பத்தாம் வீட்டைப் பார்க்கும் அமைப்புள்ள ஜாதகனும் உச்சத்தைத் தொடுவான்.

இது இரண்டும்தான் முக்கியமான விதிகள் (Rules)

இன்னும் பல விதிகள் உள்ளன. விரிவாக எழுதலாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் அதை எழுதுகிறேன். அது பாப்கார்ன் கண்க்கில் வராமல் விருந்துச் சாப்பாட்டுக் கணக்கில் வரும். பொறுத்திருங்கள்!
---------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

24.1.13

Astrology சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி?


 Astrology சித்திரமே சொல்லடி முததமிட்டால் என்னடி?

1965ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிற ஆடை திரைப்படத்திற்குப் பல சிறப்புக்கள் உண்டு! டைரக்டர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் வெளிவந்த படம் அது. தமிழ்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முதல் படம் அது. அதில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். அதில் ஒரு பாடல் கீழ்க்கண்ட பல்லவியுடன் துவங்கும்.

நாயகன்:
சித்திரமே சொல்லடி..... முத்தமிட்டால் என்னடி?
நித்தம்நித்தம் தென்றல் உன்னைத் தொட்டதில்லையோ?
தொட்டுத்தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ?


நாயகி:
கன்னிஇதழ் மீது தென்றல்படும்போது அதில் இல்லாத சுவை இருக்கும்
அந்தசுகம் வேறு சொந்தம்கொள்ளும் போது அதில் பொல்லாத பயம் இருக்கும்!
சித்திரமே நில்லடி....... முததமில்லை சொல்லடி!


பாடியவர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ், ஜானகி

பாடலைப் பாருங்கள்:
பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded the video


http://www.youtube.com/watch?v=8-731jd4xH4
-------------------------------------------------------------------------------------------
வாத்தி (யார்) பாடலுக்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம்?

இருக்கிறது! ஸ்க்ரோல் டவுன் செய்து.....கீழே பார் ராசா!
-------------------------------------------------------------------------
எச்சரிக்கை:

ஜோதிடத்திற்கும், (அதாவது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும்) முத்தங்களுக்கும் உள்ள தொடர்பை ஒருவர் விவரித்திருக்கிறார். அதை அப்படியே கொடுத்துள்ளேன்.மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் செய்ய நேரமில்லை!

வயதான டிக்கெட் எல்லாம் பதிவை விட்டு விலகவும். படித்துவிட்டு என்னைத் திட்ட வேண்டாம்!

இளைஞர்களும், மனதால் இன்னும் இளைமையாக இருக்கும் பெரிசுகளும் தொடரவும்

V
V
V
V
V
V
V
V
V
V
V
V

Astro Kissing
Aries (மேஷ ராசிக்காரர்கள்)
Aries, your kisses are quick and passionate; fits of lustful pleasure that are there and then gone!

Taurus (ரிஷப் ராசிக்காரர்கள்)
Taureans, your kisses linger; they are deliberate, heartfelt and they can go on and on and on!

Gemini (மிதுன ராசிக்காரர்கள்)
Gemini, your kisses are interrupted by spasms of giggles, smiles and funny anecdotes!

Cancer (கடக ராசிக்காரர்கள்)
Cancer, your kisses are warm and tender, and you never want to let them go!

Leo (சிம்ம ராசிக்காரர்கள்)
Leo, your kisses are wild and uninhibited, biting and clawing; you expect applause for your performance!

Virgo (கன்னி ராசிக்காரர்கள்)
Virgo, your kisses are so subtle and tidy, your lover only notices them once you've finished!

Libra (துலா ராசிக்காரர்கள்)
Libra, you kiss with an ardent passion and then like to linger for a while and begin again!

Scorpio (விருச்சிக ராசிக்காரர்கள்)
Scorpio, you are so passionate, you skip the kiss and get to straight whatever comes next for you!

Sagittarius (தனுசு ராசிக்காரர்கள்)
Sagittarius, your kisses are surprising, spontaneous affairs that leave the kissed wanting more!

Capricorn (மகர ராசிக்காரர்கள்)
Capricorn, your kisses are intense moments of sublime pleasure that is slow and lasting!

Aquarius (கும்ப ராசிக்காரர்கள்)
Aquarius, your kisses tend to be wet and messy; till you perfect them; and then no one can French kiss like you!

Pisces (மீன ராசிக்காரர்கள்)
Pisces, your kisses are starry-eyed, amorous and long-lasting. You end one kiss, only to start on another!
------------------------
ஒரு ஆராய்ச்சியாளரின் கணிப்பு இவைகள். ஆதாரம் கேட்டு என்னை யாரும் பிறாண்ட வேண்டாம். உங்கள் ராசிக்குரிய கணிப்பு சரியாக இருந்தால் மட்டும் எனக்கு அறியத் தாருங்கள்!!!!
-----------------------------------------------------------------------------------
வாத்தி (யார்) முத்தத்தைப் பற்றிய பதிவைப் போட்டுவிட்டு படத்தைப் போடாமல் விட்டுவிட்டீர்களே?

அது இல்லாமலா? ஒரு தம்பதிகள் முத்தமிட்டுக் கொள்ளூம் அசத்தலான படம் கீழே உள்ளது ராசா!

ஸ்க்ரோல் டவுன் செய்து....பார்த்து சந்தோஷப்படு ராசா! (எல்லாம் உனக்காகத்தான்)
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

                                              
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.1.13

Astrology.Popcorn Post உறவால் என்ன கிடைக்கும், சொத்தில் பங்கா அல்லது வக்கீல் நோட்டிஸா?



Astrology.Popcorn Post  உறவால் என்ன கிடைக்கும், சொத்தில் பங்கா அல்லது வக்கீல் நோட்டிஸா?

Popcorn Post.32
23.1.2013 வியாழக்கிழமை

கிரகங்களுக்கும் உறவு உண்டு. நமக்கு சித்தப்பு, பெரியப்பு, மாமன், மச்சான் உறவுகள் இருப்பதைப்போல கிரகங்களுக்கும் உறவுகள் உண்டு.

எப்படி?

கிரகங்களுக்கு ஐந்து வகையான உறவுகள் உண்டு

1. முதல் உறவு: ஒரே ராசியில் இருக்கும் கிரகங்கள் ஒன்றுக்கொன்று உறவாகும்
2. இரண்டாவது உறவு: பார்வையால் ஏற்படும் உறவு
3. மூன்றாவது உறவு: பரிவர்த்தனையால் ஏற்படும் உறவு
4. நான்காவது உறவு: கேந்திர வீடுகளால் ஏற்படும் உறவு
5. ஐந்தாவது உறவு: திரிகோண வீடுகளால் ஏற்படும் உறவு

இதை விரிவுபடுத்தி, இந்த உறவுகளால் ஏற்படும் நன்மைகளையும், தீமைகளையும், கிடைக்கும் செல்வங்களையும் அல்லது கிடைக்கும் வக்கீல் நோட்டிசுகள், வம்புகள் வழக்குகளையும் எழுதலாம் என்றுள்ளேன். அது சற்று விரிவான, பெரிய பாடம், அத்துடன் அது மேல்நிலைப் பாடம். பொறுத்திருந்து படியுங்கள்

பாப்கார்ன 200கிராம் பொட்டலத்திற்கு இதுதான் அளவு. அடுதத பொட்டலம் விநியோகம் ஆகும் வரை பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.1.13

Astrology.Popcorn Post. எட்டாம் வீட்டில் அமர்ந்தவன் என்னடா செய்வான்?

 Astrology.Popcorn Post. எட்டாம் வீட்டில் அமர்ந்தவன் என்னடா செய்வான்?

Popcorn Post No.31
பாப்கார்ன் பதிவுகள் - எண்.31

தேதி 22.1.2013 செவ்வாய்க் கிழமை
-----------------------------------------------
இதற்கு முன்னால் Popcorn Post No.30 6.11.2012 செவ்வாய்க் கிழமை அன்று வெளியானது. இடையில் 76 நாட்கள் கழித்து இன்றுதான் அதன் தொடர்ச்சி
வெளியாகிறது. பாப்கார்ன் போஸ்ட் என்பது ஒரு குறிப்பிட்ட செய்தியை விளங்கச் சொல்லி உங்களுக்குத் தெரியப்படுத்துவது. சுருக்கமாக இருந்தாலும் விளக்கமாக இருக்கும். பாப்கார்ன் பொட்டலம் எந்த அளவு இருக்குமோ அந்த அளவுதான் பதிவும் இருக்கும்.

ஒரு கிரகம் எட்டில் அமர்ந்தால் என்ன ஆகும்? அந்த கிரகத்தால் நன்மை இருக்காது. அவரே எட்டில் போய் மாட்டிக்கொண்டு உள்ளார். மாட்டிக்கொண்டு உள்ளவர் என்ன நன்மையைச் செய்ய்ப்போகிறார்?

சரி, குரு எட்டில் அமர்ந்தால் என்ன ஆகும்? அவருக்கும் அதே விதிதானா?

இல்லை. குரு நம்பர் ஒன் சுபக்கிரகம். அவர் எங்கே இருந்தாலும் நன்மையைச் செய்வார்.

உதாரணமாகக் குரு துலா லக்கின ஜாதகிக்கு (நன்றாகக் கவனிக்கவும்) 3 மற்றும் 6ஆம் இடத்திற்கு அதிபதி. இரண்டு தீய இடங்களுக்கு அதிபதி. அவர் எட்டில் அமர்ந்தால், அதுவும் ஜாதகியின் மாங்கல்ய ஸ்தானத்தில் அமர்ந்தால், மாங்கல்ய் அதோஷம் உண்டா? அவரின் ஆதிபத்யததை வைத்து இந்தக் கேள்வி.

தோஷம் இல்லை. ஏன்?

குரு முதல்நிலை சுபக்கிரகம். அவர் எட்டில் அமர்ந்தாலும், அங்கே தன்னுடைய ஆதிப்பத்யத்தைக் கைவிட்டு விட்டு (அதாவது 3 & 6ஆ இடங்களுக்கு உரியவன் என்னும் நிலையை விட்டுவிட்டு, நன்மையையே செய்வார். மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்க மாட்டார்.

பெண் தீர்க்க சுமங்கலி!!!!
---------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++==

21.1.13

Astrology: பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஜாதகம்!



 Astrology: பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஜாதகம்!

அலசல் பாடம்

நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஜாதகத்தை இன்று அலசுவோம். எல்லாம் ஒரு பயிற்சிக்காகத்தான் சாமிகளா!

பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள்
பிறந்தது 14 நவம்பர் 1889ஆம் ஆண்டு
இயற்கை எய்தியது 27 மே 1964ஆம் ஆண்டு
வாழ்ந்த காலம் சுமார் 74 ஆண்டுகள்
மனைவியின் பெயர்: திருமதி கமலா நேரு
மகளின் பெயர்: திருமதி இந்திரா காந்தி
மேல் படிப்புப் படித்தது. இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில். வழக்குரைஞர் பட்டம்
இந்தியாவின் முதல் பிரதமர் என்னும் பெருமைக்கு உரியவர் அவர். அந்தப் பதவியில் இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, அதாவது 15 ஆகஸ்ட் 1947ஆம் ஆண்டில் இருந்து, காலமாகும் வரை, அதாவது 27 மே 1964ஆம் ஆண்டு வரை, சுமார் 17 ஆண்டுகள் அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தவர்.
----------------------------------
அவரைப் பற்றிய மேலதிகத்தகவல்கள் விக்கி மகாராஜவிடம் கிடைக்கும். அதற்கான சுட்டி:
http://en.wikipedia.org/wiki/Jawaharlal_Nehru
--------------------------------------------


---------------------------------------------------------------------------------------------
 பிறப்பு விவரம்
1889ஆம் ஆண்டு நவம்பர்மாதம் 14ம் தேதி
நேரம் இரவு 11.20 மணி
பிறந்த ஊர்: அலஹாபாத்
Allahabad: Latitude 25.28' N Longitude    81.54' E
கர்ப்பச்செல் இருப்பு புதன் திசையில் 13 ஆண்டுகள் 4 மாதங்கள் 20 நாட்கள்
பெற்றோர்கள்: மோதிலால் நேரு - ஸ்வரூபராணி
----------------------------------------------------
1. சுபக் கிரகங்களான சந்திரன், சுக்கிரன், குரு ஆகிய மூன்றும் தங்களுடைய சொந்த வீட்டில் அமர்ந்து, ஜாதகருக்கு ராஜ யோகத்தைக் கொடுத்தன. ஜாதகர்
பிறந்தது மிகப் பெரிய செல்வந்தர் வீட்டில்.

2. லக்கினத்தில் இருக்கும் சந்திரன் அவருக்கு அழகான தோற்றத்தைக் கொடுத்தது.

3. நான்காம் வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சுக்கிரன், அவருக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளையும், வீடு வாசல், பங்களா, சொத்து, சுகம் என்று எல்லாவற்றையும் வாரி வழங்கியது. அத்துடன் அது கேந்திர ஸ்தானம் அதையும் மனதில் கொள்க!

4. மற்றும் ஒரு கேந்திர ஸ்தானமான பத்தாம் வீட்டை, அதன் அதிபதி செவ்வாய் தனது விஷேசப் பார்வையில் வைத்திருப்பதைப் பாருங்கள். அது அவரை நாட்டின் பிரதமர் பதவியில் கொண்டுபோய் அமரவைத்தது.

5. காலசர்ப்பயோக ஜாதகம். அதுவும் கேது கொடிபிடிக்கும் காலசர்ப்பயோகம். சின்ன வயதிலும், மத்திய வயதிலும் அது அவரைப் பல சிரமங்களுக்கு
ஆளாக்கியது. அரசை எதிர்த்துப் போராட்டம், சிறை வாழ்க்கை என்று அனுபவிக்காத துயரங்களே இல்லை!

6. ஐந்தாம் வீட்டில் இருக்கும் சூரியன் சுப கர்த்தாரி யோகத்துடன் இருப்பதைப் பாருங்கள். ஒரு பக்கம் சுக்கிரனும், புதனும். மறுபக்கம் குரு. சுபயோகத்துடன்
இருக்கும் சூரியன் அவரை மக்களிடையே பிரபலப் படுத்தியதுடன், அவரைத் தேசியத் தலைவராக்கியதுடன், பிரதமராகவும் ஆக்கி, உலகப் புகழ் பெற் வைத்தது.

7. இரண்டில் இருக்கும் சனி, அவரைச் சிறந்த பேச்சாளராக்கியது. அது வாக்கு ஸ்தானம். சனி கர்மகாரகன்.

8. 4ஆம் வீடும், 5ஆம் வீடும் சிறப்பாக அமைந்ததால் அவர் உயர் கல்வி பெற்றார். லண்டனில் படித்தார். தனது 23ஆவது வயதில் பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்குரைஞரானார்.

9. சூரியனின் சுயவர்க்கப் பரல்கள் 2 மட்டுமே. சூரியன் பலவீனமாக இருந்ததால் அவருக்கு அன்றைய அரசுடன் சுமூகமான உறவு இல்லை. 35 ஆண்டுகள்  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் தந்தையிடமும் சுமூகமான உறவு இல்லை. அவர் சொல்லைக்கேட்டு வக்கீல் வேலை பார்க்காமல் அரசியலில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தார். சுருக்கமாகச் சொன்னால் இரண்டு பரல்களுடன் பலவீனமாக இருந்த சூரியன் அதைச் செய்தது.

10. லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்தில் இருந்ததுடன், தன் சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் பலமாக இருந்து அவருக்கு மன வலிமையையும், நியாயத்திற்குப் போராடும் துணிச்சலையும் கொடுத்தது.

11. அதே சந்திரன்தான், தன்னுடைய மகாதிசையில், அவருடைய வாழ்க்கை மேன்மையடையச் செய்ததுடன், அவரைப் பிரதமர் பதவியிலும் அமர வைத்து அழகு  பார்த்தது. (சந்திர திசை 4.4.1946 முதல் 4.4.1956 வரை)

12. அடுத்து வந்த செவ்வாய் திசையும் அவருக்குத் தன் வலிமையான அமைப்பினால் (சுயவர்க்கத்தில் 6 பரல்கள்) அவரைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிக்க வைத்தது.

13. செவ்வாய் மூன்றாம் வீட்டில் 6 பரல்களுடன் வலிமையாக இருந்தது. கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன். யோககாரகன் செவ்வாய் அவருக்கு
கட்சியிலும் சரி, கடைசியாக இருந்த ஆங்கில வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபுவிடமும் சரி நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொடுத்தது. செல்வாக்கும், புகழும் பெற்றார். அத்துடன் பிரதமர் பதவியிலும் அமர்ந்து உலகப் புகழ் பெற்றார். காந்தீஜியின் அதீத அன்பை அவர் பெற்றதற்குக் காரணம் இந்த யோகக்காரகன்தான்.

14. செவ்வாய் திசை 4.4.1956 முதல் 4.4.1963 வரை. அந்தக் காலகட்டத்தில் அவர் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தினார். அத்துடன் அரசு சார்பில் பல
பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி ஏராளமான பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிததார். வலுவாக இருந்த யோககாரகன் அதைச் செவ்வனே செய்தான்.

15. புதன் 7 பரல்களுடன் கேந்திர வீட்டில் வலுவாக இருப்பதைக் கவனியுங்கள். அவர் எடுத்துச் செய்த அத்தனை செயல்களிலும் வெற்றியைத் தேடிக்
கொடுத்ததும் உயர் கல்வியைக் கொடுத்ததும் அந்த புதன்தான்.

16. குரு 5 பரல்களுடன் ஆறாம் வீட்டில் இருந்ததால், அவருக்கு உண்டான எதிர்ப்புக்களையும், எதிரிகளையும் அவரால் துவம்சம் செய்ய முடிந்தது.

17. 4ல் இருக்கும் சுக்கிரன் 6 பரல்களுடன் வலிமையாக உள்ளார். நேருவிற்கு ரசனை உணர்வுகளையும், கலைகளில் ஆர்வத்தையும் அவர் ஏற்படுத்தினார்.
அத்துடன் அவரைச் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளாரகவும் அவர் ஆக்கினார்.

18. 12ஆம் வீட்டில் (விரைய ஸ்தானத்தில்) ராகு இருப்பது மோசமான அமைப்பே! காத்திருந்த ராகு தன் திசை துவங்கியவுடன், அவருக்கு நோயை உண்டாக்கி, மரணத்தையும் கொடுத்தான். ராகு சனியைப் போல செயல்படுவான். 2 அல்லது 7ஆம் அதிபதிதான் மரணத்தைத் தருவார் என்பது ஜோதிட விதி. ஏழாம் அதிபதி சனியின் வேலையை விரைய ராகு செய்து முடித்தான். 27.5.1964 அன்று அவர் காலமானார். அவர் இறந்த தேதியன்று கோச்சார சனி எட்டில். லக்கினாதிபதி சந்திரன் அந்தத் தேதியில் நீசமாக இருந்தான்.

அலசல் போதுமா?

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------------

குழந்தைப் பருவத்தில் நேரு தன் பெற்றோர்களுடன்

சிறுவனாக இருந்தபோது எடுத்த படம்

வழக்குரைஞராக இருந்த காலத்த்யில் எடுக்கப்பெற்ற படம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.1.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 14


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 14

ஜோதிடத் தொடர் - பகுதி 14

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
பூர நட்சத்திரம் (சிம்ம ராசி)

இது சுக்கிரனின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. கார்த்திகை
3. திருவாதிரை
4. மகம்
5. உத்திரம்
6. சித்திரை
7. விசாகம்
8. கேட்டை
9. மூலம்
10. உத்திராடம்
11. அவிட்டம்
12. சதயம்
13. பூரட்டாதி
14. ரேவதி

ஆகிய 14 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

இவற்றுள் உத்திராடம் 2, 3 4 ஆம் பாதங்கள், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் மகர ராசிக்கு உரியனவாகும். ஜோதிடர்கள் சிம்மத்திற்கு ஆறாம் இடம் மகரம். மகரத்திற்கு எட்டாம் இடம் சிம்மம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

மீன ராசிக்கு உரிய நட்சத்திரங்களில் ரேவதி நட்சத்திரம் மகத்திற்குப் பொருத்தமான நட்சத்திரம் இல்லை. 8/6 நிலைப்பாடு வரும். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது..

கடக ராசிக்குரிய நட்சத்திரங்களில், சிம்மத்திற்கு உரிய நட்சத்திரங்களில் எதுவும் பொருத்தமான நட்சத்திரம் இல்லை. 12/1 position to each rasi என்பது இல்லை!.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பூரம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் மத்திம பொருத்தம் உண்டு. என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத் தவிர்ப்பது நல்லது.

ரோஹிணி பொருந்தாது!

மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், ஹஸ்தம், சுவாதி, திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் மத்தியமான பொருத்தம் உள்ள நட்சத்திரங்களாகும் மத்திய பொருத்தம். என்றால் சராசரி! அதாவது average. வரன் கிடைக்காமல் அல்லாடுபவர்கள் இவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை!
 -------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.1.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 13


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 13

ஜோதிடத் தொடர் - பகுதி 13

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
மக நட்சத்திரம் (சிம்ம ராசி)

இது கேதுவின் நட்சத்திரம்.

1. கார்த்திகை
2. பூசம்
3. ஹஸ்தம்
4. சுவாதி
5. விசாகம்
6. அனுஷம்
7. திருவோணம்
8. சதயம்

ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இவற்றுள் திருவோண நட்சத்திரம் மகர ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் சிம்மத்திற்கு ஆறாம் இடம் மகரம். மகரத்திற்கு எட்டாம் இடம் சிம்மம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

மீன ராசிக்கு உரிய நட்சத்திரங்களில் மகத்திற்குப் பொருத்தமான நட்சத்திரம் எதுவும் இல்லை. ஆகவே இந்த 8/6 நிலைப்பாடு வராது. வரவே வராது. கவலை வேண்டாம்.

பூச நட்சத்திரம் கடக் ராசிக்கு உரிய நட்சத்திரமாகும். சிம்மத்திற்குக் கடகம் பன்னிரெண்டாம் வீடு.  (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அந்த நட்சத்திரத்தையும் விலக்கிவிடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 6 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

அஸ்விணி, மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் மகம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருத்தம் உண்டு. என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத் தவிர்ப்பது நல்லது.

உத்திராடம் பொருந்தாது!

பரணி, ரோஹிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி பூராடம் முதல் பாதம் (மட்டும்) மத்தியமான பொருத்தம் உள்ள நட்சத்திரங்களாகும் மத்திய பொருத்தம். என்றால் சராசரி! அதாவது average. வரன் கிடைக்காமல் அல்லாடுபவர்கள் இவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை!
 -------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9.1.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 12


 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 12

ஜோதிடத் தொடர் - பகுதி 12

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
ஆயில்ய நட்சத்திரம் (கடக ராசி)

இது புதனின் நட்சத்திரம்.

1. கார்த்திகை
2. மிருகசீரிஷம்
3. புனர்பூசம்
4. பூரம்
5. சித்திரை
6. சுவாதி
7. விசாகம்
8. அனுஷம்
9. திருவோணம்
10. அவிட்டம்
11. சதயம்

ஆகிய 11 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

மூலம், பூராடம், உத்திராடம் (1ஆம் பாதம்) ஆகியவை தனுசு ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு.. தனுசு ராசிக்கு எட்டாம் வீடு கடகம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு சதய நட்சத்திரம், அவிட்டம் 3 & 4, பூரட்டாதி 1, 2 &3 ஆம் பாதங்களுக்கும் உள்ளது. அவைகள்  கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.கடகத்திற்கு கும்பம் எட்டாம் வீடு. கும்பத்திற்கு கடகம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது. இவற்றுள் சதயமும், அவிட்டம் 3 & 4, மட்டும் பொருத்தக் கணக்கில் வருவதால், கவனத்தில் கொண்டு, அவற்றை விலக்கி விடுவது நல்லது.

அதே நிலைப்பாடு திருவாதிரை, மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்கள், புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் மிதுன ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு. மிதுனத்திற்கு கடகம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது. இவற்றுள் மிருகசீரிஷம், புனர்பூசம்  பொருத்தக் கணக்கில் வருவதால், கவனத்தில் கொண்டு, அவற்றை விலக்கி விடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

அஸ்விணி, மகம், மூலம், கேட்டை, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ஆயில்யம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது. பொருந்தவே பொருந்தாது!

திருவாதிரை, பூரம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!

பரணி, ரோஹிணி, உத்திரம், ஹஸ்தம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 8 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி பொருத்தம் உள்ளவையாகும்!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8.1.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 11


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 11

ஜோதிடத் தொடர் - பகுதி 11

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
பூச நட்சத்திரம் (கடக ராசி)

இது சனீஷ்வரனின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. கார்த்திகை
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. திருவாதிரை
6. புனர்பூசம்
7. ஆயில்யம்
8. ஹஸ்தம்
9. சுவாதி
10. கேட்டை
11. மூலம்
12. உத்திராடம்
13. சதயம்
14. ரேவதி

ஆகிய 14 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் மூலம், உத்திராடம் ஆகியவை தனுசு ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு.. தனுசு ராசிக்கு எட்டாம் வீடு கடகம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு  சதய நட்சத்திரத்திற்கும் உண்டு. அது  கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரமாகும்..கடகத்திற்கு கும்பம் எட்டாம் வீடு. கும்பத்திற்கு கடகம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மிருகசீரிஷம் மற்றும் திருவாதிரை, புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் மிதுன ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு. மிதுனத்திற்கு கடகம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 9 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பூச நட்சத்திரம் ஒன்றாக இருந்தால், மத்திம பொருத்தம்,. சராசரி!

சித்திரை நட்சத்திரம் பொருந்தாது!

மகம், உத்திரம், விசாகம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி  ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.1.13

Astrology ஏன்டா ஆதாரம் இல்லை ஆறுதல் சொல்ல?

Astrology ஏன்டா ஆதாரம் இல்லை ஆறுதல் சொல்ல?

அலசல் பாடம்

கஷ்டங்களுக்கு ஒரு உதாரண ஜாதகம்! Example horoscope for Difficulties

பிரச்சினை இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கை என்பது சீட்டாடத்தைப் போன்றது. கையில் 13 கார்டுகளுடன் நீங்கள் ஆடித்தான் ஆகவேண்டும். ஒரு கார்டை நீங்கள் கீழே இறக்கினால், பதிலுக்குக் கீழே இருந்து ஒரு கார்டை எடுத்துக்கொள்ள வேண்டும். சீட்டாடுபவர்களுக்கு அல்லது முன்பு ஆடியவர்களுக்கு அது நன்றாகத் தெரியும்.

அத்துடன் சிலருக்கு ஒரு பிரச்சினைதான் இருக்கும். அதைத் தீர்த்தவுடன் அடுத்த பிரச்சினை வரும். ஆனால் சிலருக்குக் ஒரே நேரத்தில் நான்கைந்து பிரச்சினைகள் இருக்கும். அதாவது ரம்மி சேராமல், கையில் சில ஜோக்கர்க்ளும் பல பெரிய கார்டுகளும் கையில் இருப்பது போன்ற நிலைமை!

அதுபோல ஒரு அன்பருக்கு ஒரே நேரத்தில் பல பிரச்சினைகள். செய்யும் தொழில் சீராக இல்லை. அதில் நஷ்டம். திருமண வாழ்க்கையில் பிரச்சினை. மனைவியுடன் சுமூகமான உறவு இல்லை. கடும் பணப் பிரச்சினை. உடல் நலமின்மை. இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து படுத்தி எடுத்தன!

ஆளை விட்டால் போதும் எங்காவது ஓடிப் போய்விடலாம் என்னும் நிலைமை!

அது எப்படி ஓடிப்போக முடியும்? விதி விடுமா?

நீ திருடித்தான் \பிழைக்க வேண்டுமென்றால், திருடித்தான் பிழைக்க வேண்டும். திருடித்தான் மகிழ வேண்டுமென்றால், அப்படித்தான் மகிழ முடியும் (இந்த வரி பதிவுத் திருடர்களுக்காக!)

என்ன ஆயிற்று அவருக்கு?

வாருங்கள் அவருடைய ஜாதகத்தை அலசுவோம்? அவருக்கு நாம் என்ன உதவியா செய்யப் போகிறோம்? இல்லை! நமது பயிற்சிக்காக அதை இன்று அலசுவோம்
--------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:

ஜாதகத்தில் உள்ள பெரிய குறை கேமதுருமா யோகத்தின் பிடியில் ஜாதகம் உள்ளது.  கேமதுருமா யோகம் என்பது மோசமான அவ யோகம். உங்கள் மொழியில் சொன்னால் தரித்திர யோகம். அந்தஅவயோகம் உள்ள ஜாதகன் வறுமையில் வாடும்படியாகிவிடும். Kema Druma Yoga is said to occur when there is no planet positioned in either second house or in the twelfth house from Moon; சந்திரனுக்கு இரண்டுபக்கமும் எந்த கிரகமும் இல்லாமலும், உடன் எந்த கிரகமும் இல்லாமலும், சந்திரன் தனித்து இருக்கும் நிலைமை!

2. யோககாரகனான செவ்வாய் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். அவனால் பயனில்லாமல் போய்விட்டது.

3. அதே போல 2ஆம் மற்றும் 11ஆம் இடத்திற்கு உரிய புதனும் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். இரண்டாம் வீடு பணத்திற்கான வீடு. பதினொன்றாம் வீடு லாபத்திற்கான வீடு.

4. லக்கினத்திற்கு எட்டாம் வீட்டுக்காரன் (அஷ்டமாதிபதி) குரு அந்த வீட்டிற்கு 12ல், அதாவது லக்கினத்திற்கு ஏழில் அமர்ந்து திருமண வாழ்க்கையில் கஷ்டங்களைக் கொடுத்தான். எட்டாம் அதிபதிஎன்றாலே கஷ்டங்களைக் கொடுப்பவன். அதை மனதில் வையுங்கள்.

5. அத்துடன் ஜாதகனுக்குக் குரு திசை நடந்த போது, எட்டாம் அதிபதி லக்கினத்தையும் சூரியனையும் பார்த்ததால் ஜாதகனுக்கு உடல் நலம் இல்லாமலும் போய் விட்டது.

ஜாதகன் கடைசிவரை எந்த நன்மையையும் அடையவில்லை. சிம்ம லக்கின ஜாதகன் என்பதால், பல்லைக் கடித்துக்கொண்டு, எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினான்.

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல


என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளை மனதில் பாடிக்கொண்டே காலத்தை ஓட்டினான்!

மேல்நிலை வகுப்பிற்காக முன்பு எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாணவக் கண்மணிகள் பலர் யோசனை சொல்லியுள்ளார்கள். ”சார், பாடங்களை Text Format ல் பதிவிடாமல் image formatல் பதிவிடுங்கள். திருட்டுப் போவதைத் தவிர்க்கலாம்”

உங்கள் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளேன். இன்றையப் பாடத்தை image formatல் கீழே பதிவிட்டுள்ளேன். இந்த முறையில் பதிவிடுவதில் எனக்கு வேலைப் பளு அதிகரிக்கும். அதை விட முக்கியமாக உங்களுக்குப் படிப்பதற்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும்.

இரண்டில் (Text Format  &  image format) எது படிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது? பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
 ---------------------------------------------------------------------------------------------
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

25.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 10









Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 10

ஜோதிடத் தொடர் - பகுதி 10

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
புனர்பூச நட்சத்திரம் 4ஆம் பாதம் மட்டும்  (கடக ராசி)

இது குரு பகவானின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. பூசம்
6. ஆயில்யம்
7. ஹஸ்தம்
8. சித்திரை
9. சுவாதி
10. அனுஷம்
11. கேட்டை
12. மூலம்
13. பூராடம்
14. திருவோணம்
15. அவிட்டம்
16. சதயம்
17. உத்திரட்டாதி
18. ரேவதி

ஆகிய 18 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் மூலம், பூராடம், உத்திராடம் (முதல் பாதம் மட்டும்) ஆகியவை தனுசு ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு.. தனுசு ராசிக்கு எட்டாம் வீடு கடகம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அவிட்டம் 3 & 4ஆம் பாதங்களுக்கும், சதய நட்சத்திரம், பூரட்டாதி  1,2 & 3ஆம் பாதங்களுக்கும். அவைகள் கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.. கடகத்திற்கு கும்பம் எட்டாம் வீடு. கும்பத்திற்கு கடகம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்களுக்கும் மற்றும் திருவாதிரை, புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் மிதுன ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு. மிதுனத்திற்கு கடகம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 9 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் புனர்பூச நட்சத்திரம் 4ஆம் பாதம் ஒன்றாக இருந்தால், மத்திம பொருத்தம்,. சராசரி!

பூர நட்சத்திரம் பொருந்தாது!

திருவாதிரை, மகம், ஆகிய 2 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

19.12.12

Astrology அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்காதே!


Astrology அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்காதே!

அலசல் பாடம்

தலைப்பு: பங்கு வணிகம்

பங்கு வணிகத்தில் (share business), ஈடு பட்டுத் திறம்பட, திட்டமிட்டுப் பணியாற்றுபவர்கள் மற்றும் அதில் முதலீடு செய்திருப்பவர்களும் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விடுவார்கள். அதைப் பார்த்து கையில் பணம் இருப்பவர்களுக்கு அதில் ஈடு பட ஆதீத விருப்பம் இருக்கும்.

ஆனால் அதில் ஈடுபடும் எல்லோருக்குமே வெற்றி கிடைக்குமா என்ன?

வாங்கி வந்த வரம் இருந்தால் மட்டுமே (அதாவது ஜாதகத்தில் அத்ற்கு அமைப்பு இருந்தால் மட்டுமே) சம்பாதிக்க முடியும்.

பணத்தைக் கோட்டைவிட்டு விட்டு, தெருவிற்கு வந்தவர்கள், பலரை நான் அறிவேன். பல ஆண்டுகளுக்கு முன்பு (1990 - 1995ஆம் ஆண்டுகளில்) நான் பங்கு வணிகத்தில் சம்பாதித்தும் இருக்கிறேன். சம்பாதித்தற்கும் அதிகமாகத் தொலைத்தும் இருக்கிறேன். அந்தக் கால கட்டத்தில் ஜோதிடத்தில் எனக்கு அதிகமான பரீட்சயம் இல்லாத நிலைமை! அதனால் அப்படி ஏற்பட்டது.

இப்போது என்றால் அந்தப் பக்கம் தலை வைத்தே படுக்க மாட்டேன்.

சொந்தக்கதை போதும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பங்கு வணிகத்தில் ஈடுபடுவதை விட, ஈடு படக்கூடாது என்பதை சில ஜாதகங்கள் தெளிவாக அறிவுறுத்தும்.

ஒரு ஜாதகத்தை வைத்து இன்று அதை அலசுவோம்!
-------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள


மகர லக்கின ஜாதகம். கேட்டை நட்சத்திரம்.

பண வரவிற்கு இரண்டாம் வீடு, அதன் அதிபதி, தனகாரகன் குரு ஆகியவை முக்கியம். ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் தனகாரகனும் வலிமையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கிய விதி

இந்த ஜாதக்த்தில் இரண்டாம் அதிபதி 12ல் மறைந்துவிட்டார். அத்துடன் தனகாரகன் குருவும் பன்னிரெண்டில் மறைந்துவிட்டார். பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம் (house of loss) ஆகவே இந்த ஜாதகருக்கு speculative transactions சுத்தமாக ஒத்து வராது.

அத்துடன் நடப்பு தசா புத்தியும் முக்கியம். அதாவது மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், தசா புத்தியும் முக்கியம். உதாரணத்திற்கு இந்த ஜாதக்த்தில் சந்திர திசையில், சந்திரன் நீசமாகி இருப்பதால், பங்கு வணிகத்தில் எந்த முதலீடும் செய்யக்கூடாது. பணம் காணாமல் போய்விடும். அதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறான ஜாதக அமைப்பு உள்ளவர்கள், கையில் பணம் அதிகமாக இருக்கும்போது, வங்கியில் போட்டு வைக்கலாம். அத்துடன் தங்கக் காசுகளை வாங்கி வைக்கலாம். அவற்றையும் வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைப்பது உத்தமம்.

உங்கள் ஜாதகத்தில் பங்கு வணிகத்திற்கான அமைப்பு இம்மிகூட இல்லையென்றால், அந்தப்பக்கம் (அதாவது பங்குச் சந்தை இருக்கும் திசையில்) தலைவைத்துக் கூடப் படுக்காதீர்கள்!

இது மேல் நிலை வகுப்பிற்கான பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

18.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 9

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 9

ஜோதிடத் தொடர் - பகுதி 9

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
புனர்பூச நட்சத்திரம் 1,,2,,3ஆம் பாதங்கள்   (மிதுன ராசி)

இது குரு பகவானின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. ஹஸ்தம்
6. சித்திரை
7. சுவாதி
8. அனுஷம்
9. கேட்டை
10. பூராடம்
11. திருவோணம்
12. அவிட்டம்
13. சதயம்
14. உத்திரட்டாதி
15. ரேவதி

ஆகிய 15 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

இதில் அனுஷம், கேட்டை, விசாகம் 4ஆம் பாதம் ஆகியவை விருச்சிக ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மிதுனத்திற்கு ஆறாம் இடம் விருச்சிகம். விருச்சிக ராசிக்கு எட்டாம் வீடு மிதுனம்.. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு உத்திராடம் 2, 3 & 4 பாதங்கள், மற்றும் திருவோணம், அவிட்டம் 1 & 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களுக்கு உண்டு. அவைகள் மகர ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.. மிதுனத்திற்கு மகரம் எட்டாம் வீடு. மகரத்திற்கு மிதுனம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிஷம் 1, 2 ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் ரிஷப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். மிதுனத்திற்கு ரிஷபம் பன்னிரெண்டாம் வீடு. ரிஷபத்திற்கு மிதுனம் இரண்டாம் வீடு. (1/12 position to the  rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் புனர்பூசம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், மத்திம பொருத்தம்,. சராசரி!

ஆயில்யம், பூரம் ஆகிய 2 நட்சத்திரங்களும் பொருந்தாது!

திருவாதிரை, பூசம், மகம், மூலம் ஆகிய 4 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)


அன்புடன்
வாத்தியார்
 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

17.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 8


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 8

ஜோதிடத் தொடர் - பகுதி 8

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
திருவாதிரை நட்சத்திரம் (மிதுன ராசி)

இது ராகுவின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. மிருகசீரிஷம்
5. புனர்பூசம்
6. உத்திரம்
7. சித்திரை
8. விசாகம்
9. மூலம்
10. பூராடம்
11. உத்திராடம்
12. அவிட்டம்
13. பூரட்டாதி
14. உத்திரட்டாதி
15. ரேவதி

ஆகிய 15 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் அனுஷம், கேட்டை, விசாகம் 4ஆம் பாதம் ஆகியவை விருச்சிக ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மிதுனத்திற்கு ஆறாம் இடம் விருச்சிகம். விருச்சிக ராசிக்கு எட்டாம் வீடு மிதுனம்.. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு உத்திராடம் 2, 3 & 4 பாதங்கள், மற்றும் திருவோணம், அவிட்டம் 1 & 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களுக்கு உண்டு. அவைகள் மகர ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.. மிதுனத்திற்கு மகரம் எட்டாம் வீடு. மகரத்திற்கு மிதுனம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிஷம் 1, 2 ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் ரிஷப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். மிதுனத்திற்கு ரிஷபம் பன்னிரெண்டாம் வீடு. ரிஷபத்திற்கு மிதுனம் இரண்டாம் வீடு. (1/12 position to the rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் திருவாதிரை ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் உண்டு.

புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம் ஆகிய 4 நட்சத்திரங்களும் பொருந்தாது!

மகம், பூரம் ஆகிய 2 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++

12.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 7


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 7
ஜோதிடத் தொடர் - பகுதி 7

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
6. மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் கடைசி இரண்டு பாதங்கள் மட்டும் - 3 & 4ஆம் பாதங்கள் (மிதுன ராசி)

இது செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோஹிணி
5. திருவாதிரை
6. புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்
7. பூசம்
8. உத்திரம்
9. ஹஸ்தம்
10. சுவாதி
11. விசாகம்
12. அனுஷம்
13. கேட்டை
14. மூலம்
15. பூராடம்
16. உத்திராடம்
17. திருவோணம்
18. சதயம்
19. பூரட்டாதி
20. உத்திரட்டாதி
21. ரேவதி
ஆகிய 21 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் அனுஷம், கேட்டை, விசாகம் 4ஆம் பாதம் ஆகியவை விருச்சிக ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மிதுனத்திற்கு ஆறாம் இடம் விருச்சிகம். விருச்சிக ராசிக்கு எட்டாம் வீடு மிதுனம்.. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு உத்திராடம் 2, 3 & 4 பாதங்கள், மற்றும் திருவோணம், அவிட்டம் 1 & 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களுக்கு உண்டு. அவைகள் மகர ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.. மிதுனத்திற்கு மகரம் எட்டாம் வீடு. மகரத்திற்கு மிதுனம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு கார்த்திகை 2, 3,4 ஆம் பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிஷம் 1, 2 ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் ரிஷப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். மிதுனத்திற்கு ரிஷபம் பன்னிரெண்டாம் வீடு. ரிஷபத்திற்கு மிதுனம் இரண்டாம் வீடு. (12/2 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

சித்திரை, அவிட்டம் ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் மிருகசீரிஷம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திமமான பொருத்தம்
( average) ஆகும் சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்

ஆயில்யம், மகம், பூரம், ஆகிய மூன்று நட்சத்திரங்களும் பொருந்தாது!
அதுபோல அதுபோல புனர்பூசம் 4ஆம் பாதமும் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!