மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label அலசல் பாடம். Show all posts
Showing posts with label அலசல் பாடம். Show all posts

27.12.17

செட்டிநாட்டு சமையல் கலையில் சில பதார்த்தங்கள் உங்களுக்காக!


பால் பணியாரம்
---------------------------------------------------------------------------------------------------------------
செட்டிநாட்டு சமையல் கலையில் சில பதார்த்தங்கள் உங்களுக்காக!

23 வகை செட்டிநாட்டு ரெசிபி

'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் கண் முன்னே விரியும். கும்மாயம், இனிப்பு சீயம், ஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை என்று இந்த  'செட்டிநாடு சமையல்  சாப்பிடுவதை சுகானுபவமாக மாற்றும் இந்த ஸ்பெஷல் அயிட்டங்களில்... சுண்டைக்காய் பச்சடி, சிவப்பரிசி புட்டு, கீரை மண்டி போன்றவை... உடல் நலத்தை உறுதிப்படுத்தும்.

1
மிளகாய் சட்னி

தேவையானவை: காய்ந்த மிளகாய் - 15 அல்லது 20, புளி - சிறிய எலுமிச்சையளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும். ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.

குறிப்பு: சட்னியின் மேலே எண்ணெய் நிற்குமாறு இருக்க வேண்டும். ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும் இதற்கு 'ரோஜாப்பூ சட்னி’ என்றே பெயர். பணியாரம், இட்லி, தோசைக்கு சிறந்த காம்பினேஷன்.
---------------------------------------------------
2
வெள்ளை பணியாரம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுந்து - 4 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்தை சேர்த்து சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு உப்பு, சர்க்கரை சேர்த்து நைஸாக அரைக்கவும் (தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும். இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த 10 நிமிடத்தில் செய்யவும். இதற்கு கார சட்னி சூப்பர் காம்பினேஷன்!
-------------------------------------------------------
3
கல்கண்டு வடை

தேவையானவை: உளுந்து - ஒன்றரை கப், பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், கல்கண்டு - ஒரு கப், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். முக்கால் பதம் அரைத்தவுடன் பொடித்து வைத்த கல்கண்டை சேர்த்துக் கரைக்கவும் உளுந்தை அரைக்கும்போது, தண்ணீர் சிறிது கூட சேர்க்கக் கூடாது. அரைத்து முடித்ததும் மாவு நீர்க்க இருப்பது போல் தெரிந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும் (தீயை மிதமாக எரிய விட வேண்டும்).

குறிப்பு: கல்கண்டு சேர்ப் பதால், தீ அதிகமாக எரிந்தால், வடை கறுத்து விடும்.
-------------------------------------------------------
4
கும்மாயம்

தேவையானவை: வெள்ளை முழு உளுந்து - ஒரு கப், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - கால் கப், கருப்பட்டி (அ) வெல்லம் - ஒன்றரை கப், நெய் - கால் கப்.

செய்முறை: உளுந்து, அரிசி, பாசிப்பருப்பை தனித்தனியே வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். இவற்றை ஒன்றுசேர்த்து மாவாக அரைக்கவும். கருப்பட்டி (அ) வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய் விட்டு, சூடானதும், கரைத்து வைத்துள்ளதை கொட்டி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே மீதி நெய்யைச் சேர்த்து, மாவு நன்கு வெந்து கையில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
-------------------------------------------------------------
5
இனிப்பு சீயம்

தேவையானவை:

பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

பூரணம் செய்ய: தேங்காய் - ஒன்று, பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை: தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போக கிளறவும். அதனுடன் கரைத்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி ஆறவிடவும். இதுதான் பூரணம்.

பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்துக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, பின் நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கிளறி வைத்துள்ள பூரணத்தை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூரணத்தை அரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்.... சுவையான இனிப்பு சீயம் தயார்!
-----------------------------------------------------------------
6
ஜவ்வரிசி ஊத்தப்பம்

தேவையானவை: இட்லி அரிசி - 4 கப், உளுந்து - ஒரு கப், ஜவ்வரிசி - கால் கிலோ, வெங்காயம் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும். மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லைச் சூடாக்கி, மாவை கெட்டியாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், கேரட் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
-------------------------------------------------------------------
7
குழி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு கப், உளுந்து - அரை கப், ஜவ்வரிசி - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கறி வேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும். அரைக்கும்போது, 10 நிமிடம் ஊற வைத்த ஜவ்வரிசியை மாவுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 - 6 மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி, இரு புறமும் வேகவிட்டு எடுத்தால்.... சுவை யான குழி பணியாரம் ரெடி.
-----------------------------------------------------------------------
8
கருப்பட்டி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கருப்பட்டி, வெல்லம் - தலா கால் கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் வெல்லம், கருப்பட்டியை போட்டு, தேவையான நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கம்பிப்பாகு பதத்தில் பாகு காய்ச்சவும். இதை பச்சரிசி மாவில் ஊற்றி நன்கு கிளறவும். மேலே நெய் ஊற்றி, ஆறியதும் துணியினால் மூடி வைக்கவும். இந்த மாவை ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். பணியாரம் செய்யும் முன், தேவைக்கேற்ப மாவில் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அகலக் கரண்டியில் மாவை எடுத்து, ஒவ்வொன்றாக ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு எடுத்து வைத்தால், கருப்பட்டி பணியாரம் தயார்.
குறிப்பு: நகரத்தார் வீட்டு பிள்ளையார் நோன்பில் கட்டாயம் இந்த பணியாரம் இடம் பெறும்.
------------------------------------------------------------------------
9
கந்தரப்பம்

தேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுந்து - கால் கப், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் - இரண்டரை கப், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டி ஆறவிடவும். அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, சுத்தம் செய்து ஊறவிடவும். ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மாவை எடுக்கும் முன் ஏலக்காய்த்தூள், வெல்லத் தண்ணீர் சேர்த்து, அரைத்து எடுக்கவும். மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் மிதமாக இருக்க வேண்டும். மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி எடுத்து, மெதுவாக விடவும். ஒரு பக்கம் வெந்ததும், மறுபுறம் திருப்பி, சிவக்க விட்டு எடுக்கவும். இதை ஒவ்வொன்றாகத்தான் தயார் செய்ய வேண்டும்.
---------------------------------------------------------------------
10
ஐந்தரிசி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி, பாசிப்பருப்பு - தலா ஒரு கப், ஜவ்வரிசி, ரவை - தலா அரை கப், பொடித்த வெல்லம் - 2 கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, பருப்பு மூன்றையும் ஒன்றாகவும்... ரவை, ஜவ்வரிசியை தனித்தனியாகவும் ஊறவிடவும். ஒரு மணி நேரம் ஊறியதும் முதலில் அரிசிகள், பருப்பை அரைக்கவும். பாதி அரைத்தவுடன் ரவை, ஜவ்வரிசி, நீரில் கரைத்து வடிகட்டிய வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வட்டமாக ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறம் வேகவிடவும். ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். தீயை மிதமாகத்தான் எரியவிட வேண்டும். பொறுமையாக செய்தால், சூப்பர் சுவையில் அசத்தும் இந்த ஐந்தரிசி பணியாரம்.
--------------------------------------------------------------------
11
பால் பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண் ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்க்கவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, எண்ணெயை வடியவிடவும். இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். பாலைக் காய்ச்சி, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும் பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது. பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.
-----------------------------------------------------------------------
12
பாசிப்பருப்பு புட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு - 2 கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, இட்லிகளாக வேக வைத்து எடுக்கவும். வெந்த இட்லிகளை எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். உதிர்த்த மாவில் வெல்லக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உதிர் உதிராக இருக்கும்படி கிளறவும். இதில் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்... சத்தான பாசிப்பருப்பு புட்டு ரெடி!
-------------------------------------------------------------------
13
பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை - உருண்டை செய்ய: கடலைப்பருப்பு - முக்கால் கப், துவரம்பருப்பு - கால் கப், சோம்பு, சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

குழம்புக்கு: தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, கசகசா - தலா அரை டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் - ஒன்றை டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 5.

செய்முறை: உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு (வெங்காயம் தவிர) மற்ற பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: உருண்டைகளை வேக வைக்காமலும் போடலாம். எண்ணெயில் பொரித்தும் போடலாம்.
----------------------------------------------------------------------
14
கத்திரிக்காய் மசாலா

தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை - ஒன்று, சோம்பு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை நான்காக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... பட்டை, சோம்பு, பிரியாணி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேவையான உப்பு, நீர் சேர்த்து வேகவிடவும். வெந்து, நீர் சுண்டியதும் இறக்கி பரிமாறவும்.
------------------------------------------------------------
15
வெண்டைக்காய் மண்டி

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, வேக வைத்த கொண்டைக்கடலை - ஒரு கப், அரிசி களைந்த நீர் - 2 கப், புளி - எலுமிச்சையளவில் பாதி, பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 15 (உரித்தது), கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு பல் - 10, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயை பெரிது பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் தாளித்து, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலை, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
------------------------------------------------------------------
16
மாங்காய் வற்றல் ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், மாங்காய் வற்றல் - 6, வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகு - சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், பூண்டு - 6 பல், காய்ந்த மிளகாய் - 3, கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை குழையாமல் வேக வைக்கவும். மாங்காய் வற்றலை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டம்ளர் நீர் விட்டு வேக வைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, மாவற்றல் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், புளித் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வேறொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், மிளகு - சீரகத்தூள், தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: மாவற்றல் மிகவும் புளிப்பாக இருந்தால், புளியின் அளவைக் குறைக்கவும். வற்றலில் உப்பு இருப்பதால் உப்பையும் பார்த்து சேர்க்கவும்.
--------------------------------------------------------------
17
கத்திரிக்காய் திரக்கல்

தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: பூண்டு - 5 பல், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல் - கால் கப், கசகசா, சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: கத்திரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து, அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... சோம்பு, சீரகம் தாளித்து, காய்களைச் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
---------------------------------------------------------------
18
தண்ணிக் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - அரை கப், புளி - சிறிய எலுமிச்சையளவு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, உப்பு - தேவையான அளவு.
பொடி செய்ய: காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் - சிறிதளவு, பட்டை - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 4, பூண்டு - 4 பல், கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் அரைக்கவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை நிறைய தண்ணீர் விட்டு வேகவைத்து கரைத்துக் கொள்ளவும். இதில் பாசிப்பருப்பை சேர்த்து வேக விடவும். குழைய வெந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வறுத்து அரைத்த பொடி, உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மற் றொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு ஆகியவற்றை தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.
-------------------------------------------------------------------
19
வறுத்துப் பொடித்த சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். காய் வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். வறுத்து பொடித்து வைத்திருக்கும் துவரம்பருப்பு - மிளகாய் பொடியை சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்த வுடன் நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும். இது... இட்லி, தோசையுடன் பரிமாற ஏற்ற சாம்பார்.
------------------------------------------------------------------
20
செட்டிநாட்டு அவியல்

தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பட்டை - சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, பூண்டு - 3 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை தாளித்து... வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்... ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது.
-----------------------------------------------------------------
21
ஜவ்வரிசி பாயசம்

தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய் - ஒன்று (துருவி பால் எடுக்கவும்), முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான நீர் ஊற்றி ஜவ்வரிசியை வேகவிடவும் (கட்டி தட்டாமல பார்த்துக் கொள்ளவும்). வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, ஜவ்வரிசியுடன் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும்.

குறிப்பு: தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்க விடக் கூடாது. பொதுவாக பால், சர்க்கரை சேர்த்து ஜவ்வரிசி பாயசம் செய்வார்கள். செட்டிநாட்டில் வெல்லம் - தேங்காய்ப் பால் சேர்ப்பது ஸ்பெஷல்.
-----------------------------------------------------------------
22
சுண்டைக்காய் பச்சடி

தேவையானவை: சுண்டைக்காய் - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 4, புளி - கோலி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி, தண்ணீரில் போடவும். துவரம்பருப்பை மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சுண்டைக்காய் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய் வெந்ததும், துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: வயிற்றில் ஏற்படும் பூச்சி தொல்லையை நீக்கும் அருமருந்து இது.
-----------------------------------------------------------------
23
கீரை மண்டி

தேவையானவை: கீரை - ஒரு கட்டு (முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை இவற்றில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம்), சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 2, அரிசி கழுவிய நீர் - 2 கப், தேங்காய்ப் பால் - கால் கப், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது), பூண்டு, காய்ந்த மிளகாய், சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி, அரிசி கழுவிய நீர் சேர்க்கவும். கொதி வந்ததும் உப்பு சேர்க்கவும். கீரை வெந்ததும் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கவும் (தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்கவிடக் கூடாது).

குறிப்பு: வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாக உதவும் உணவு இது. 'மண்டி இருந்தால், உண்டி பெருக்கும்’ நீங்கள் கேட்ட பல காரங்கள் அனைத்தும் கொடுத்து இருக்கிறேன்.
=======================================================
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.4.17

Astrology ஜோதிடம்: அலசல் பாடம்: யாரைப் போட்டுத்தள்ள வேண்டும்?


Astrology ஜோதிடம்: அலசல் பாடம்: யாரைப் போட்டுத்தள்ள வேண்டும்?

அஷ்டகவர்க்கப் பாடம்

ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, இங்கே சுதந்திரப் போராட்ட எழுச்சி மக்களிடையே அதிகமாகி, நாடே
கொந்தளிப்பில் இருந்த சமயம். (ஆண்டு ஆகஸ்ட் 1942)

காந்திஜி அவர்களின் வெள்ளையனே வெளியேறு' போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. அத்துடன் அடுத்துவந்த ஐந்தாவது ஆண்டில் நமக்கு
சுதந்திரமும் கிடைத்தது.

The Quit India Movement (Bharat Chhodo Andolan or the August Movement (August Kranti)) was a civil disobedience movement launched in India in August 1942 in response to Mohandas Gandhi's call for immediate independence. Gandhi hoped to bring the British government to the negotiating table. Almost the entire Indian National Congress leadership, and not just at the national level, was put into confinement less than twenty-four hours after Gandhi's speech, and the greater number of the Congress leaders were to spend the rest of World War II in jail.

அதுசமயம் (போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த சமயம்), அப்போதைய பிரிட்டீஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களிடம், அவருடைய நண்பர்
சொன்னாராம்:

“காந்தி ஒரு பக்கிரியைப் போல காணப்படுகிறார். நமது அரசுக்குத் தீராத தலைவலியாக இருக்கிறார். என்ன தயக்கம்? ஆசாமியை என்கவுன்ட்டரில்
போட்டுத் தள்ள வேண்டியதுதானே?”

அதற்கு சர்ச்சில் அசத்தலாக இப்படிப் பதில் சொன்னார். “அந்த மனிதனின் கையில் ஆயுதம் எதுவும் இல்லை.அஹிம்சை என்னும் கொள்கை மட்டுமே இருக்கிறது. ஆயுதம் ஏந்தாதவனை எப்படி ஆயுதத்தால் போட்டுத் தள்ளுவது? அதனால்தான் முழித்துக் கொண்டிருக்கிறோம்! ”

என்னவொரு தர்மமான பதில் பாருங்கள்.

அதைவிட, தர்மமான முறையில் ஒரு மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய நமது தேசத்தந்தை, காந்திஜி அவர்களின்
துணைச்சலையும், மனவுறுதியையும் எண்ணிப்பாருங்கள்.

அதற்கு என்ன காரணம்? அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது?

அஷ்டகவர்க்கத்தை வைத்து அதை இன்று அலசுவோம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அஷ்டகவர்க்க அட்டவணை!

1. அவருடைய ஜாதகத்தில், ஆறாம் வீட்டில் 36 பரல்களும், அதிலிருந்து ஆறாம் வீட்டில் 37 பரல்களும் இருப்பதைப் பாருங்கள். ஆறாம் வீடு
எதிரிகளுக்கான இடம். அதில் இருந்த மிக அதிகப்படியான பரல்கள் எதிரிகளுடன் போராடும் சக்தியை அவருக்குக் கொடுத்தது. பதினொன்றாம்
இடம் வெற்றிக்கான இடம். அதில் இருந்த அதிகப்படியான பரல்கள், அவருடைய போராட்டத்தில், அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தன!

2. அவருடைய ஜாதகத்தில் கர்மகாரகன் சனிக்கு அவனுடைய சுயவர்க்கத்தில் பரல்கள் எதுவும் இல்லை. சைபர். ஜீரோ. கோழி முட்டை. அதனால்தான் லண்டனில் தான் படித்த சட்டப் படிப்பை வைத்து வழக்குரைஞர் தொழிலை அவர் செய்யவில்லை. வேறு எந்தத் தொழிலையும் செய்யவில்லை. தேச நலனுக்காகப் போராடியதைத் தவிர.

3. அதே காரணத்தால்தான், தேசம் சுதந்திரம் அடைந்த பிறகும், அவர்
எந்தப் பதவியிலும் அமரவில்லை. அவருக்கு அந்த மன
நிலைமையையும் சனி கொடுக்கவில்லை.

4. தந்தைக்குக் காரகனான சூரியன் 12ஆம் வீட்டில் அமர்ந்ததால், அவர் தன்னுடைய தந்தையைச் சிறு வயதிலேயே இழக்க நேரிட்டாலும்,
அதே சூரியன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருந்ததால்
நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பைக் கொடுத்தான்.

5. சூரியன் 12ல் இருந்தால் அரசுக்கு எதிரான வேலைகளைச் செய்ய
நேரிடும். சிறை செல்ல நேரிடும். பரல்கள் இல்லாமல் இருந்தால்
கிரிமினல் வேலையைச் செய்து விட்டுச் சிறை செல்ல நேரிடும்.
ஆனால் சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருந்த சூரியன் ஒரு
உன்னதமான காரியத்திற்காக அவரை அடிக்கடி சிறைக்குச் செல்ல வைத்தான்.

6. இரண்டாம் வீட்டில் 22 பரல்கள் மட்டுமே. 337 வகுத்தல் 12 வீடுகள்
என்னும் போது வரும் சராசரி மதிப்பான 28 பரல்களை விட 6 பரல்கள்
குறைவு. ஜாதகனுக்கு செல்வம் இருக்காது. வந்தாலும் தங்காது.
ஓட்டை அண்டா. 11ஆம் வீட்டில் இருந்த 37 பரல்கள் அவருக்குப்
பணத்தை அள்ளும் வாய்ப்பைக் கொடுத்தன. பணம் வரும் பைப்
நன்றாக இருந்தது. ஆனால் கிஞ்சித்தும் காந்திஜிக்குப் பணத்தின்
மேல் ஆசையில்லாமல் போய்விட்டது. தனகாரகன் குரு தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களுடன் பலவீனமாக இருப்பதைக் கவனியுங்கள்.
12ல் இருந்த சூரியனால் அவர் துறவியைப்போல வாழ்ந்தார்.

7. சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருந்த சந்திரன், அதுவும்
பதினொன்றாம் வீட்டில் இருந்த சந்திரன், அவருக்கு மன உறுதியையும்,
 நல்ல சிந்தனைகளையும், நல்ல கொள்கைகளையும் கொடுத்தது.
அத்துடன் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவையும், செல்வாக்கையும் பெற்றுத்தந்தது. அதன் சிறப்பால்தான் அவர் தேசியத்தலைவரானர்.
மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

8. தனது சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருக்கும் புதன், அதுவும் லக்கினத்திலேயே இருக்கும் புதன் அவருக்கு, நல்ல
பேச்சுத்திறமையையும், ஏராளமான நண்பர்களையும் பெற்றுத்தந்தது. அத்துடன் அனைவரையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் தந்தது.

9. துலாலக்கினத்திற்கு 2 மற்றும் 7ஆம் இடங்களுக்கு அதிபதியான
செவ்வாய், தனது சுயவர்க்கத்தில் 4 பரல்களுடன் சராசரி நிலைமையில்
இருந்ததால்,  அவருடைய குடும்ப வாழ்வில் அவருக்கு நல்லதும்
கெட்டதும் சம அளவிலேயே கலந்து கிடைத்தன!

10. லக்கினாதிபதி சுக்கிரன் தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களுடன் இருந்ததாலும், அவருடைய லக்கினத்திற்குப் பாபகர்த்தாரி யோகம் இருந்ததாலும்

(லக்கினத்தின் இரு புறமும் தீய கிரகங்கள்) அவருடைய வாழ்க்கை அவருக்குப் பயன்படவில்லை. தேசமக்களுக்கு, அதுவும் ஒரு உயரிய செயலுக்குப் பயன்பட்டது. சந்திர ராசியின் இருபக்கமும் தீய கிரகங்கள்.
சந்திர ராசியும் பாபகர்த்தாரி யோகத்தில். அதன் காரணமாகத் தனக்குக் கிடைத்த பெரும் செல்வாக்கை வைத்து அவர் செல்வம் சேர்க்கவில்லை. செல்வம் சேரவில்லை. அல்லது காசு பண்ணும் மனப்பான்மை அவருக்கு இல்லை. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
---------------------------------------------------------
அஷ்டகவர்க்கத்தை வைத்து ஒரு ஜாதகத்தை எப்படி அலசுவது என்பதை உங்களுக்குச் சொல்லித்தரும் முகமாக இன்று இந்தப் பதிவை வலை
ஏற்றியுள்ளேன்.

இது பயிற்சி வகுப்பு மாணவர்களுக்காக எழுதப்பெற்ற பாடம். பயிற்சி
வகுப்புப் பாடங்கள், வகுப்பறையில், சில காரணங்களுக்காக இடம் பெறாது.
பல பொது மனிதர்களின் ஜாதகங்களை, அதுவும் அரசியல்வாதிகளின் ஜாதகங்களையும் சேர்த்து வைத்து அவைகள் எழுதப் படுவதால், இங்கே
பதிவிடும்போது பல எதிர்வினைகளச் சந்திக்க நேரிடும். அவற்றைத் தவிர்க்கும் பொருட்டு பதிவில் அவைகள் வராது. பிரச்சினைகள் வேண்டாம்
என்பதுதான் அதன் நோக்கம். அதையும் மனதில் கொள்க!

அஷ்டகவர்க்கத்தை வைத்துப் பலாபலன்களை அறியும் பாடங்களைத் தொடர்ந்து அஷ்டகவர்க்க வகுப்பில் எழுதியுள்ளேன். அவைகள் பிறகு
புத்தகமாக வரவுள்ளது, வரும்போது அனைவரும் படிக்கலாம். பயனடையலாம்.

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31.3.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: பலவிதமான நோய்கள் (Multiple diseases)


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: பலவிதமான நோய்கள் (Multiple diseases)

நோய் வாய்ப்படாத மனிதனே இருக்க முடியாது. சளி, காய்ச்சல், உடம்பு வலி என்று ஏதாவது உபத்திரவம் இருக்கும் அல்லது அவ்வப்போது வந்து போகும். அது இயற்கையானது. தாங்கக்கூடியது.

ஆனால் கடுமையான நோய்கள் இருந்தால் வாழ்க்கை ஜாதகனுக்கும் சுகப் படாது. அவனைச்  சுற்றியுள்ளவர் களுக்கும் சுகத்தைத் தராது. சமயத்தில் எப்போதடா இவன் போய்ச் சேர்வான் என்னும் மனநிலை நெருங்கிய உறவினர்களுக்கு ஏற்பட்டுவிடும்

கடுமையான நோய்கள் எவை?

ஊங்களுக்காகக் கூகுள் ஆண்டவரிடம் கேட்டு வாங்கிக் கீழே கொடுத்துள்ளேன்.

a chronic disease is a disease that is long-lasting or recurrent. The term chronic describes the course of the disease, or its rate of onset and development. A chronic course is distinguished from a recurrent course; recurrent diseases relapse repeatedly, with periods of remission in between. As an adjective, chronic can refer to a persistent and lasting medical condition. Chronicity is usually applied to a condition that lasts more than three months. The opposite of chronic is acute.

Examples of chronic diseases include:

    * Asthma
    * Chronic fatigue syndrome
    * Chronic osteoarticular diseases: rheumatoid arthritis, osteoarthritis
    * Chronic respiratory diseases: chronic obstructive pulmonary disease, asthma, pulmonary hypertension
    * Chronic renal failure
    * Diabetes mellitus
    * Chronic hepatitis
    * Autoimmune diseases, like ulcerative colitis, lupus erythematosus
    * Cardiovascular diseases: heart failure, ischemic cardiopathy, cerebrovascular disease
    * Epilepsy
    * Neoplasic diseases not amenable to be cured
    * Osteoporosis
    * Cancer
    * Sickle Cell Anemia
    * Chronic GHVD: intra-oral

Many chronic diseases require chronic care management for effective long-term treatment. Effective chronic disease control requires attention to social, behavioral, environmental and clinical aspects. Multiple morbidities can be common in older adults.

சரி, கடுமையான நோய் எதனால் உண்டாகிறது?

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இந்த ஜாதகத்தில் லக்கின நாதனும், ஆறாம் இடத்தானும் ஒரே ஆசாமி. அதாவது சுக்கிரன். அவன் எப்படி  உள்ளான்?

பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கின்றான். அவன் இருக்கும் விருச்சிக வீடு அவனுக்குப் பகைவீடு என்பது மட்டுமல்ல, அந்த வீட்டிற்கு இருபுறமும் பாபக் கிரகங்கள். அத்துடன் அது watery sign.

ஜாதகனுக்கு முதலில் நீரழிவு நோய் வந்தது. பின்பு கடுமையான மூட்டு வலி. பிறகு புற்று நோய்!

உடல் காரகன் சூரியன் எட்டில். அத்துடன் குருவும் எட்டில். குருவிற்குப் பகைவனான புதனும் குருவுடன் சேர்ந்துள்ளான். அத்துடன் தேய்பிறைச் சந்திரன். கேட்க வேண்டுமா? அனைத்துமே சாதகமாக இல்லை!

போதாதற்கு உச்சமான சனீஷ்வரனின் பார்வையும் அவர்கள் மேல் தீர்க்கமாக விழுகிறது. சனியைத் தூண்டிவிடும் விதமாக விரையாதிபதி செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் சனீஷ்வரனைக் கட்டம் கட்டிக்கொண்டிருக்கிறார்.

இவை எல்லாமுமாக ஒன்று சேர்ந்து ஜாதகனைப் படுத்தி எடுத்ததுடன் பரலோகத்திற்கும் அனுப்பிவைத்துவிட்டன.

ஆறாம் அதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தாலே கடுமையான நோய்கள் உண்டாகும். அதை மனதில் வையுங்கள்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.3.17

Horoscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கேது கொடி பிடிக்கும் காலசர்ப்ப தோஷம்



Horoscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கேது கொடி பிடிக்கும் காலசர்ப்ப தோஷம்

காலசர்ப்ப தோஷம் என்பது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாடம் நடத்தியுள்ளேன்.

ராகு & கேதுவிற்குள் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும் நிலைமை அது. அதன் கால அளவு பற்றி இருவேறான கருத்துக்கள் உள்ளன.

சிலர் 30 அல்லது 33 வயதுவரை காலசர்ப்ப தோஷம் இருக்கும். அதற்குப்பிறகு அந்த தோஷமே யோகமாக மாறிவிடும் என்பார்கள்.

வேறு சிலர் கால சர்ப்ப தோஷம் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பார்கள்.

ஆனால் கால சர்ப்ப தோஷத்தில் இரண்டு வகைகள் உள்ளன.

1. காலமிரித யோகம்: ராகு முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், கேது கடைசியாக வரும் அமைப்பு. இது கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது நன்மை பயக்கக்கூடிய அமைப்பு.

2. விலோமா யோகம்: கேது முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், ராகு கடைசியாக வரும் அமைப்பு. இதுவும் கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது தீமை பயக்கக்கூடிய அமைப்பு.

There are two types of Kala Sarpa Yogas. One is when all of the seven grahas that are caught in the axis are moving toward the mouth of the serpent, Rahu. This is called kalamrita yoga and is considered the main formation. The other is when all of the planets are moving towards the tail Ketu and is known as viloma.

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன் துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.

அதற்குப் பிறகு என்ன செய்வது?

மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

என்ன காரணம்?

ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தியாக்கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கவில்லை.

பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.

ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.

விளக்கம் போதுமா?

இந்தப் பாடம் மேல்நிலை வகுப்பில் முன்பு நடத்தப்பெற்ற பாடம்.
ஆகவே யாருக்காவது நினைவில் இருந்தால் இரண்டாவது முறை
படிப்பதில் தவறில்லை. படிக்க வேண்டுகிறேன்!!!!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.3.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கடன்களால் அவதிப்படுவது

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கடன்களால் அவதிப்படுவது

இன்றைய உலகத்தில், கையில் தாராளமாகப் பணம் இருந்தால் போதும், பல பிரச்சினைகளை ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று நொடியில் தீர்த்து விடலாம். அதை அறிந்துதானோ என்னவோ மக்கள் எல்லாம் கசைக் கடவுளாகக் கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் நன்றாக இருக்கட்டும். நான் பாடத்திற்கு வருகிறேன்.

பணம் இல்லாதவன் நிலைமை என்னவாகும்? அதைவிட, கடனில் மூழ்கி (மூழ்கி என்னும் வார்த்தையைக் கவனியுங்கள்) இருப்பவன் நிலைமை என்னவாகும்?

அவர்களுடைய கஷ்டங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவித்தால் மட்டுமே தெரியும்.

12ஆம் வீட்டில் விரையத்தில் இருக்கும் சனியின் தசை நடக்கும்போது, அதை என் நெருங்கிய உறவினர் ஒருவர் அதை அனுபவித்து, என்னிடம் அழுது தீர்த்திருக்கிறார். கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து, சனி திசையின் கடைசி ஆறு வருடங்கள் மிகவும் சிரமமத்திற்கு ஆளாகி அவதிப்பட்டிருக்கிறார்.

நம் கெட்டிக்காரத்தனம் எல்லாம் கிரகங்களிடம் செல்லாது. கஷ்டம் என்றால் அனுபவித்தே ஆகவேண்டும்.

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-------------------------------------------------------------


-------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

மேஷ லக்கினம் லக்கினாதிபதி 11ல் (லாபஸ்தானத்தில்)

இரண்டாம் வீட்டிற்கு உரிய (அதாவது தனஸ்தானத்திற்கு அதிபதி) சுக்கிரன் உச்சம், ஆனாலும் 12ல் அமர்ந்திருக்கிறார்.

11ஆம் அதிபதி சனி தன் வீட்டில் ஆட்சி பலத்துடன் லக்கினத்திற்கு அது 10ஆம் வீடு. ஆனாலும் 11ஆம் இடத்திற்கு அது 12ஆம் இடம்.

ஆறாம் வீட்டு அதிபதியின் தசை நடந்தாலும், ஏழரைசனி நடந்தாலும் பணப் பிரச்சினைகள் தலை தூக்கும்.

மேலே உள்ள ஜாதகரின் ஆறாம் அதிபதி புதன் 10ல் பலத்த பாதிப்புடன் அமர்ந்துள்ளார். உடன் சனியும், கேதுவும் இருப்பதைப் பாருங்கள். 1996 - 2001 காலகட்டத்தில் அவருக்கு ஆறாம் அதிபதியின் திசை நடந்ததோடு, ஏழரைச் சனியும் சேர்ந்து கொண்டு, ஆசாமியைத் தெற்கு வடக்காகப் புரட்டிப்போட்டுவிட்டது.அடுத்து வந்த கேது தசையிலும் அது தொடர்ந்தது. அதற்குப் பிறகு சுக்கிரத்சை நடக்கும் காலகட்டத்தில் அவர் மீண்டு வந்துள்ளார்.

பணக்கஷ்டங்களை அலசும்போது இந்த விதிமுறைகளை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.3.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: திருமணதிற்கு ஜாதகப் பொருத்தம்


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: திருமணதிற்கு ஜாதகப் பொருத்தம்

ஒரு பெண்ணிற்கும் ஒரு ஆடவனுக்கும் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, ஜாதகங்களை வைத்து, தினப் பொருத்தம் (நட்சத்திரப்பொருத்தம்) கணப்பொருத்தம், மகேந்திரப் பொருத்தம்,
ஸ்த்ரி தீர்க்கப் பொருத்தம், யோனிப்பொருத்தம், ராசிப்பொருத்தம்,
ராசி அதிபதிப் பொருத்தம், வசியப் பொருத்தம்,ரஜ்ஜுப் பொருத்தம்,
வேதைப் பொருத்தம் என்று பத்துப் பொருத்தங்களில் எத்தனை
பொருத்தங்கள் இருவருக்கும் பொருந்தி வருகிறது என்று பார்ப்பார்கள்.

இப் பத்தில் தினம், கணம், யோனி, ராசி, ரச்சு ஆகிய ஐந்தும்
முக்கியமானது என்று இவ்வைந்தும் பொருந்தினால் போதும்
என்று சொல்லி இருவருக்கும் மணம் செய்துவிடுவார்கள். சிலர்
ரச்சு தட்டக்கூடாது. ரச்சுப் பொருத்தத்துடன் வேறு ஏதாவது ஐந்து பொருந்தினால் போதும் என்று  மணத்தை முடித்து வைத்து விடுவார்கள்

சிலர் செவ்வாய் தோஷம் இருக்கிறதா? என்றும் பார்ப்பார்கள்.

ஆனால் வேறு ஒன்றும் இருக்கிறது. ஆமாம், இருவருடைய
ஜாதகத்தையும் சேர்க்கும் முன்பாக நன்றாக அலச வேண்டும்.

உடல் காரகன், மனகாரகன், ஏழாம் அதிபதி ஆகியவர்களும் நன்றாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

அப்படிப் பார்க்காமல், வெறும் 10 பொருத்தத்தை மட்டும் செய்யப்படும் திருமணங்களில் சில  ஊற்றிக் கொண்டுவிடும்.

ஊற்றிக்கொண்ட பிறகு, ஏன் இப்படியாகிவிட்டது என்று தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார்கள்

என்ன காரணம்? ஏன் அப்படியாகிறது?

எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!

அது சம்பந்தமாக இப்பொது ஒரு தம்பதியரின் ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------



-------------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகங்களைப் பாருங்கள். ஒரு தம்பதியரின் ஜாதகம்.

மனைவியின் ஜாதகம்:

1.சிம்ம லக்கினம். லக்கினத்தில் ஆறு & ஏழுக்குரிய சனி.
2.எட்டாம் அதிபதி குரு 11ல்
3.யோககாரகன் செவ்வாய் மறைவிடமான 12ல்
4.லக்கினாதிபதியும், உடல்காரகனுமான சூரியன் எட்டில்
5.புதன் (குடும்பநாதன்) சுக்கிரன் (சுக அதிபதி) ஆகிய இருவரும் சூரியன், கேதுவுடன் எட்டில்
6.அந்த நால்வரும் இரண்டாம் வீட்டைப் பார்க்கிறார்கள்.
7.மனகாரகன் சந்திரன், இந்த லக்கினத்திற்கு அவன் விரைய அதிபதியும் ஆவான். அவன் இரண்டில் ராகுவுடன் சேர்ந்து அடிபட்டுப்போய்விட்டான்.
மனமகிழ்ச்சியைக் கொடுக்கும் கிரகம் சந்திரன். அவன் ராகு அல்லது கேது அல்லது சனியுடன் சேர்ந்து  அடிபட்டுக்கிடந்தால் ஜாதகன் அல்லது
ஜாதகிக்கு மனமகிழ்ச்சி என்பது சுத்தமாக இருக்காது.

இந்த ஜாதகிக்குப் பன்னிரெண்டாம் அதிபதியான சந்திரன் இரண்டாம்
இடமான குடும்ப ஸ்தனத்தில் அமர்ந்தது, அதுவும் ராகுவுடன் கூட்டாக
அமர்ந்தது குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. குணக்கேடு அல்லது
மனக்கேடு.. அத்துடன் இரண்டாம் வீடு மாரக ஸ்தானம். அங்கே அமர்ந்த
சந்திரன் + ராகுவால் ஜாதகிக்கு எப்போதும் தற்கொலை செய்து
கொள்ளும் எண்ணம் மேலோங்கி இருக்கும்.

சந்திரன், ராகுவுடன் இருப்பதோடு, மேலும் இரண்டு தீய கிரகங்களின் பார்வையைப் பெறுவதாலும் நிலைமை மோசமாக உள்ளது. சந்திரனும் புதனும், சந்திரனும் சுக்கிரனும் எதிர் எதிராக இருப்பதும் மகிழ்ச்சியைத்
தராது.

என்ன ஆயிற்று?

கணவன் பிரிந்து போய்விட்டான். ஜாதகி தனிப்பட்டுப் போய்விட்டாள்

அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.3.17

Horoscope: அலசல் பாடம்: - Denial of education, கல்வி மறுக்கப்படும் நிலைமை!


Horoscope: அலசல் பாடம்: - Denial of education, கல்வி மறுக்கப்படும் நிலைமை!

சின்ன வயதில் சிலருக்கு படிப்பு வராது. படிக்கும் சூழ்நிலை இருந்தாலும் படிப்பு ஏறாது. எட்டாம் வகுப்பைக்கூடத் தாண்ட மாட்டார்கள். வீட்டில்
பெற்றோர்கள் கண்டித்து, அடித்தால் பையன் வீட்டை விட்டு ஓடிவிடுவான். பிறகு பல சிரமங்களுக்கிடையே தேடிப்பிடித்துக் கூட்டிக் கொண்டு
வருவார்கள். வந்தாலும் திரும்பவும் படிக்கச் சொல்லி வற்புறுத்த
மாட்டார்கள். ஒரு ஸ்கூட்டர் ஒர்க் ஷாப்பிலோ அல்லது ஒரு மளிகை/
ஜவுளிக்கடையிலோ அல்லது ஒரு அச்சகத்திலோ அல்லது அதுபோன்ற
சிறு தொழில் செய்பவர்களிடம் வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள்.
அதில் ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்றதும், தங்கள் சொத்தில் எதையாவது விற்று அல்லது எங்காவது பணத்தைப் புரட்டி
சம்பந்தப்பட்டவனுக்கு ஒரு சொந்தத் தொழிலை வைத்துக்
கொடுப்பார்கள். அவன் தன்னுடைய பிழைப்பை அதன் மூலம் செய்ய வேண்டியதாயிருக்கும்

அவனுடன் ஒன்றாகப் படித்தவன், பின்னால் சிரத்தையாகப் படித்துப் பொறியியல் பட்டம் பெற்று எங்காவது பெரிய தொழிற்சாலையில்
மாதம் ரூபாய் முப்பதாயிரம் சம்பாதித்துக்கொண்டிருப்பான். நம்மாளும் பின்னால் பெரிய மெக்கானிக்காகி கார் அல்லது மோட்டார் சைக்கிள்களைப் பழுது பார்க்கும் தொழிலைச் செய்து, பலரையும் வேலைக்கு வைத்துத்
தன் நண்பனைவிட அதிகமாகச் சம்பாதிப்பான். 2, 10, & 11ஆம் வீடுகளைவைத்து அவையெல்லாம் அவனுக்கு ஒரு உயர்வைக்
கொடுக்கும். ஆனால் படிப்பு போனது போனதுதான்.

என்ன காரணம்?

எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!

அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
--------------------------------------------------------


----------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

மிதுன லக்கினம். 4ஆம் வீடான கன்னிக்கு அதிபதியான புதன் அந்த வீட்டிற்கு எட்டில்.அதுவும் சனியுடன் கூட்டணி. கூட்டணி சேர்ந்துள்ள சனி
ஜாதகத்தில் எட்டாம் வீட்டிற்கு உரியவன். ஆறாம் அதிபதியின் பார்வை கேடானது. ஜாதகத்தில் ஆறாம் அதிபதியான செவ்வாய் எட்டில் அமர்ந்து,
தனது நான்காம் பார்வையால் புதனைத் தன் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும்.

நான்காம் அதிபதி பூரணமாகக் கெட்டிருக்கிறார். அதனால்தான் ஜாதகனுக்குப் படிப்பு ஏறவில்லை. ஆறாம் அதிபதியின் சேர்க்கை அல்லது பார்வை
மிகவும் தீங்கானது. எதையும் அலசும்போது அதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்!

அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.2.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: மகிழ்ச்சி இல்லாத மனிதர்களும் மனுஷிகளும்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: மகிழ்ச்சி இல்லாத மனிதர்களும் மனுஷிகளும்!

Denial of happiness - மகிழ்ச்சி இல்லாத மனிதர்களும் மனுஷிகளும்!!!

நம் கிராமங்களில் சொல்வார்கள்: “நாயை வைக்கற்போரில் கட்டிவைத்தால், அதுவும் திங்காது. மற்ற ஜீவராசிகளையும் திங்கவிடாது!”

அதுபோல சில மனிதர்கள், மனுஷிகள் உள்ளார்கள். அவர்களும் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள்.. அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷமாக இருக்க விடமாட்டார்கள்.

எப்போதும் எதையோ பறி கொடுத்தவர்கள் போல இருப்பார்கள்.
உம்’ மென்று இருப்பார்கள். சிடு சிடுவென்று எரிந்து விழுவார்கள்.
யாரையும் பக்கத்தில் அண்டவிட மாட்டார்கள். எதையும் ரசிக்கும் மனப்பான்மை இருக்காது. எதிலும் positive thinking இருக்காது.

மொத்தத்தில் மகிழ்ச்சியை அறியாத அதிசயப் பிறவிகளாக இருப்பார்கள். தனிமை விரும்பிகளாக இருப்பார்கள்.

அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தால் என்ன ஆகும். பெண்ணாக இருந்தால், கணவனையும், ஆணாக இருந்தால் மனைவியையும் ஆட்டி
வைத்துவிடுவார்கள்.

அவர்களுடைய திருமணவாழ்வு மகிழ்ச்சியில்லாத திருமண வாழ்வாக இருக்கும்.

அதற்கு என்ன காரணம்?

எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!

அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.
1. துலா லக்கின ஜாதகம். லக்கினத்தில் ராகு. அத்துடன் 6ம் அதிபதி குரு.
2. லக்கினாதிபதி சுக்கிரன் பகைவீட்டில், அதுவும் 12ஆம் அதிபதி புதனுடன் சேர்க்கை
3. லாபாதிபதி சூரியன் 12ல்
4. லக்கினத்தில் ராகு & 6ம் அதிபதி குரு. குணக்கேட்டைக் கொடுக்கும்
5. இரண்டாம் அதிபதி செவ்வாய், எட்டாம் வீட்டில் இருக்கிறார். சுபக்கிரகங்களின் பார்வையின்றி. எட்டாம் வீடு தீய வீடு. அத்துடன் சனியின்
பார்வை.

Second lord in the 8th will not give happiness 
from women to men and from men to women!

உங்கள் மொழியில் சொன்னால், எட்டாம் வீட்டில் அமரும் 2ஆம் அதிபதி பெண்ணால் ஏற்படும் மகிழ்ச்சியை ஆணுக்கும், ஆணால் ஏற்படும்
மகிழ்ச்சியைப் பெண்ணிற்கும் கொடுக்கமாட்டார்!

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.2.17

Astrology: ஜோதிடம்: வாத்தியார் வேலைதான் கிடைக்கும் என்பது எப்படித் தெரிந்தது?


Astrology: ஜோதிடம்: வாத்தியார் வேலைதான் கிடைக்கும் என்பது எப்படித் தெரிந்தது?

அலசல் பாடம்!

ஒரு இளைஞனின் வீட்டில், அவனை ஒரு ஐ.ஏ.எஸ் பட்டதாரியாக்கி, மாவட்ட ஆட்சியாளர் வேலையில் அமரவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் ஆசை நிறைவேறியதா? பையன் ஐ.ஏ.எஸ்சில் தேர்ச்சி பெறவில்லை ஜாதகத்தைக் கொண்டுபோய் ஒரு ஜோதிடரிடம் கொடுத்து, ஜாதகப்படி எந்த வேலை கிடைக்கும்? என்று கேட்டபோது, அவர் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து விட்டு, ஜாதகப்படி பையனுக்கு வாத்தியார் வேலைதான் சிறப்பாக இருக்கும் என்றும் அவன் அதில் படிப்படியாக முன்னுக்கு வருவான் என்றும் சொன்னார்

எப்படிச் சொன்னார்?

வாருங்கள் ஜாதகத்தை நாமும் பார்ப்போம்!



மீன லக்கின ஜாதகம். பூராட நட்சத்திரம்

1. உயர் கல்விக்கு உரிய ஐந்தாம் வீட்டு அதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு ஆறில் அமர்ந்துள்ளார். உடன் செவ்வாயும் ராகுவும் உள்ளார்கள். அதனால் 2. உயர்கல்விக்கான (அதாவது I.A.S அல்லது I.F.S அல்லது I.PS போன்ற படிப்புக்கள்) அமைப்பு ஜாதகத்தில் இல்லை.
3. பத்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பது நிர்வாக வேலை அமைவதைக் குறிக்கும். ஆனால் உடன் ராகு இருப்பதால் நிர்வாக வேலயில் தொடர்ந்து பிரச்சினைகள் உண்டாகும்
4. பத்தாம் அதிபதி பதினொன்றில், ஆகவே பார்க்கும் வேலையில், அது எந்த வேலையாக இருந்தாலும் உயர்வு இருக்கும்
5. ஐந்தாம் அதிபதி சந்திரனும் பத்தில் இருக்கிறார். அதுவும் நன்மையானதே!
6. லக்கினம் குருவுடையதாக இருப்பதாலும், பத்தாம் வீடும் குருவுடையதாக இருப்பதாலும் வாத்தியார் வேலைதான் ஜாதகனுக்குச் சிறந்ததாக இருக்கும். அதுவே அமைந்தது.

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
========================================================

27.1.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: திருமணம் ஆகும் நேரம்


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: திருமணம் ஆகும் நேரம்

உதாரண ஜாதகம்

திருமணம் ஆகும் நேரம்

ஜாதகனுக்கு 36 வயதாகியும் திருமணம் ஆகவில்லை! எப்போது ஆகும்?

உதாரண ஜாதகம்



சிம்ம லக்கின ஜாதகம் சித்திரை நட்சத்திரம்

1. ஏழாம் அதிபதி சனி அந்த வீட்டில் உடன் இரண்டு தீய கிரகங்களின் பிடியில் (சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்க்கை)
2. களத்திரகாரகன் சுக்கிரன் எட்டில் (மறைவு ஸ்தானத்தில்)
3. சுப கிரகமான குரு பகவானும் எட்டில்
4. ஜாதகனுக்கு செவ்வாய் திசை இருப்புடன் ராகு திசை முடியும்போது 25 வயதாகி விட்டது. அடுத்து வந்த மகா திசை அதிபதி குரு பகவானும் எட்டில் இருப்பதால், அந்த திசையும் மேன்மையுடையதாக இல்லை.
5. லக்கினாதிபதி சூரியன் ஏழில் இருப்பதால், அவர் தன்னுடைய புத்தியில் (sub period) திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தசா நாதனும் புத்தினாதனும் (குருவும், சூரியனும்) ஒருவருக்கொருவர் 12/2 நிலையில் இருப்பதைப் பாருங்கள். ஆகவே சூரிய புத்தியில் திருமணம் நடக்கவில்லை
6. அதற்கு அடுத்துவந்த (குரு மகா திசை) சந்திர புத்தியில் ஜாதகனுக்குத் திருமணம் நடந்தது. சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில் இருப்பதைப் பாருங்கள்

உரிய தசா புத்தி வரும்போது நடக்க வேண்டியது நடக்கும். அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தப்பாடம்

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.1.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: பங்கு வணிகம் (share business)

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: பங்கு வணிகம் (share business)

பங்கு வணிகத்தில் (share business), ஈடு பட்டுத் திறம்பட, திட்டமிட்டுப் பணியாற்றுபவர்கள் மற்றும் அதில் முதலீடு செய்திருப்பவர்களும் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விடுவார்கள். அதைப் பார்த்து கையில் பணம் இருப்பவர்களுக்கு அதில் ஈடு பட ஆதீத விருப்பம் இருக்கும்.

ஆனால் அதில் ஈடுபடும் எல்லோருக்குமே வெற்றி கிடைக்குமா என்ன?

வாங்கி வந்த வரம் இருந்தால் மட்டுமே (அதாவது ஜாதகத்தில் அதற்கு அமைப்பு இருந்தால் மட்டுமே) சம்பாதிக்க முடியும்.

பணத்தைக் கோட்டைவிட்டு விட்டு, தெருவிற்கு வந்தவர்கள், பலரை நான் அறிவேன். பல ஆண்டுகளுக்கு முன்பு (1990 - 1995ஆம் ஆண்டுகளில்) நான் பங்கு வணிகத்தில் சம்பாதித்தும் இருக்கிறேன். சம்பாதித்தற்கும் அதிகமாகத் தொலைத்தும் இருக்கிறேன். அந்தக் கால கட்டத்தில் ஜோதிடத்தில் எனக்கு அதிகமான பரீட்சயம் இல்லாத நிலைமை! அதனால் அப்படி ஏற்பட்டது.

இப்போது என்றால் அந்தப் பக்கம் தலை வைத்தே படுக்க மாட்டேன்.

சொந்தக்கதை போதும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பங்கு வணிகத்தில் ஈடுபடுவதை விட, ஈடு படக்கூடாது என்பதை சில ஜாதகங்கள் தெளிவாக அறிவுறுத்தும்.

ஒரு ஜாதகத்தை வைத்து இன்று அதை அலசுவோம்!
-------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்!


மகர லக்கின ஜாதகம். கேட்டை நட்சத்திரம்.

பண வரவிற்கு இரண்டாம் வீடு, அதன் அதிபதி, தனகாரகன் குரு ஆகியவை முக்கியம். ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் தனகாரகனும் வலிமையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கிய விதி

இந்த ஜாதக்த்தில் இரண்டாம் அதிபதி 12ல் மறைந்துவிட்டார். அத்துடன் தனகாரகன் குருவும் பன்னிரெண்டில் மறைந்துவிட்டார். பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம் (house of loss) ஆகவே இந்த ஜாதகருக்கு speculative transactions சுத்தமாக ஒத்து வராது.

அத்துடன் நடப்பு தசா புத்தியும் முக்கியம். அதாவது மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், தசா புத்தியும் முக்கியம். உதாரணத்திற்கு இந்த ஜாதகத்தில் சந்திர திசையில், சந்திரன் நீசமாகி இருப்பதால், பங்கு வணிகத்தில் எந்த முதலீடும் செய்யக்கூடாது. பணம் காணாமல் போய்விடும். அதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறான ஜாதக அமைப்பு உள்ளவர்கள், கையில் பணம் அதிகமாக இருக்கும்போது, வங்கியில் போட்டு வைக்கலாம். அத்துடன் தங்கக் காசுகளை வாங்கி வைக்கலாம். அவற்றையும் வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைப்பது உத்தமம்.

உங்கள் ஜாதகத்தில் பங்கு வணிகத்திற்கான அமைப்பு இம்மிகூட இல்லையென்றால், அந்தப்பக்கம் (அதாவது பங்குச் சந்தை இருக்கும் திசையில்) தலைவைத்துக் கூடப் படுக்காதீர்கள்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.1.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: காணாமல் போனவர்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: காணாமல் போனவர்!

சிலர் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பிப் போய்விடுவார்கள். எங்கே போனார்? எந்த ஊருக்குப் போனார்? எங்கே தங்குவார்? அன்றாடம் செலவிற்கு என்ன செய்வார்? என்று பலவிதமான குழப்பங்களில் ஆழ்ந்து வீட்டில் உள்ளவர்கள் நொந்து போய் விடுவார்கள்.

பள்ளியில் படிக்கின்ற பையன் என்றால், 4 நாட்கள் எங்காவது சுற்றிவிட்டு வந்துவிடுவான் என்று சற்று நம்பிக்கை கொள்ளலாம். ஆனால் 45 நிரம்பிய மனிதர் காணாமல் போனால் என்ன ஆகும்? அதுவும் கோபத்துடன் கிளம்பிப் போனவர் என்றால் என்ன செய்வது? நாளாக நாளாக, அவர் திரும்பி வருவாரா என்பதை விட தற்சமயம் உயிருடன் இருக்கிறாரா? அல்லது எங்காவது சென்று தற்கொலை செய்து கொண்டு விட்டாரா என்று கூட சிந்திக்கத் தோன்றும்.

மனைவியுடன் சண்டை போட்டுவிட்டுக் கிளம்பிப் போனவர், மூன்று மாதங்களாகியும் திரும்பவில்லை. அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை! மனைவி, மக்கள், உடன் பிறப்புக்கள், அவருடைய பெற்றோர்கள் என்று அனைவரும் கலங்கிப்போய் இருந்தார்கள்

அவர் திரும்பி வருவாரா அல்லது மாட்டாரா? ஜாதகம் என்ன சொல்கிறது?

அதை இன்று அல்சுவோம்!
---------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


மீன லக்கின ஜாதகர். ஆயில்ய நட்சத்திரக்காரர்.
அவர் காணாமல் போனது சந்திர மகா திசை, சனி புத்தியில்
ஏழாம் வீட்டில் டெண்ட் அடித்துக் குடியிருக்கும் சனி, அவருக்குத் திருமண வாழ்க்கையில், மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுக்கவில்லை. அத்துடன் ஏழாம் வீடும், அங்கேயிருக்கும் சனியும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றன! முன்பக்கம் செவ்வாய். பின்பக்கம் கேது! அவர்களால் தான், அதாவது அந்த இரண்டு தீயவர்களின் நெருக்கடியால்தான், அவருக்கு நாளுக்கு நாள் திருமண வாழ்க்கையில் வெடிக்கும் அளவிற்கு மோசமான அழுத்தம் ஏற்பட்டது.
தாங்க முடியாமல், மனிதர் வீட்டை விட்டு ஜூட் விட்டு விட்டார்.

சரி நடந்துவிட்டது. ஆசாமியும் ஓடிப்போய் விட்டார்.

சரி ஆசாமி திரும்பி வருவாரா? வீட்டில் உள்ளவர்களுக்கு ஆறுதலைத் தருவாரா? ஜாதகத்தில் அதற்கென்று ஏதாவது சலுமை உள்ளதா?

உள்ளது!

லக்கினத்தில் வலுவாக உள்ள குரு பகவான், தன்னுடைய நேர் பார்வையால், ஏழாம் வீட்டைப் பார்ப்பதால், ஜாதகரைத் திரும்பி வர வைத்தார். சனி புத்தி முடிந்தவுடன் அவர் திரும்பி வந்தார். அதற்குள் பத்து மாதம் சென்று விட்டது. பத்து மாதம் தாங்கள் பரிதவித்ததை எல்லாம் மறந்து விட்டு, வந்தவரை வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் கட்டி அணைத்தார்கள்.

எல்லாம் குரு பகவானின் கைங்கர்யம்!

குரு பகவானின் முக்கியத்தை உணர்த்துவதற்காகவே இந்தப் பாடம்!

அன்புடன் 
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.1.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம் - இரண்டாம் கல்யாணம்


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம் - இரண்டாம் கல்யாணம்

வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் ஒருமுறைதான் நடக்கும். பிறப்பும் ஒருமுறைதான். இறப்பும் ஒருமுறைதான்.

அதுபோல் இன்னும் சில நிகழ்வுகளும் ஒருமுறை நடப்பதுதான் சிறப்பாக இருக்கும். உதாரணம் திருமணம்.

ஆனால் சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக முதல் திருமணம் அவலத்தில் முடிந்துவிடுவது உண்டு! விவாகரத்தில் முடிந்திருக்கலாம் அல்லது முதல் மனைவி இறந்து போயிருக்கலாம். அவர்களிடம் இந்த ஒருமுறை விதி எடுபடாது. தக்க காரணத்துடன் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை

ஆனால் அத்ற்கு ஒரு வயது வரம்பு உண்டு. அதிக பட்சம் நாற்பது வயது வரை அது சாத்தியப்படும். அதற்கு மேற்பட்ட வயது என்றால் ஒரு சிக்கல் உள்ளது. மணந்து கொள்ள ஒரு மகராசி வேண்டுமே?

பெரிய செல்வந்தர் என்றாலும், அவருடைய செல்வத்திற்காக அவரை மணந்துகொள்ள ஒருத்தி முன் வர வேண்டுமே?

ஒரு ஜாதகருக்கு அவருடைய 32ஆவது வயதில் மனைவி இறந்து போய் விட்டாள். அவர் தன்னுடைய 40ஆவது வயதில் மறுமணத்திற்கு முயற்சி செய்தார்.

என்ன ஆயிற்று? சாத்தியமாயிற்றா?

ஜாதகம் எப்படியோ அப்படித்தானே ஆகும்?

வாருங்கள், அவருடைய ஜாதகத்தை அலசுவோம்!
------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:



சிம்ம லக்கின ஜாதகம். ரோஹிணி நட்சத்திரக்காரர்.

லக்கினாதிபதி கேந்திரத்தில் (4ல்)
இரண்டில் (குடும்ப ஸ்தானத்தில்) ராகு
களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில்.
யோககாரகன் செவ்வாய் அஸ்தமனம் ஆகியுள்ளான்.

லக்கினாதிபதி சூரியனும், ஏழாம் அதிபதி சனியும் 2/12 என்னும் பாதக நிலையில் உள்ளார்கள். அவருக்கு அவருடைய மத்திய வயதில் குரு மகா திசை நடந்து கொண்டிருந்தது. குரு பகவானும் சூரியனால் அஸ்தமித்துவிட்டார். அஸ்தமனமான கிரகத்தின் திசை நன்மையைச் செய்யாது.

அவர் பல வழிகளில் முயற்சி செய்தும் உரிய பெண் கிடைக்கவில்லை. அவரது இரண்டாவது திருமண ஆசை நிறைவேறவில்லை.

இரண்டாவது திருமணத்திற்கு வேண்டிய அமைப்பு அவர் ஜாதகத்தில் இல்லை!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.12.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம். நல்ல மனைவிக்கான அமைப்பு!



Astrology: ஜோதிடம்: அலசல் பாடம். நல்ல மனைவிக்கான அமைப்பு!

தலைப்பு: நல்ல மனைவி!!

எல்லா மனிதர்களுக்குமே, அதாவது இளைஞர்களுக்குமே, திருமணத்திற்குப் பெண் தேடும் சமயத்தில், ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். அழகான பெண்ணாக இருக்க வேண்டும். படித்த பெண்ணாக இருக்க வேண்டும். குணமுள்ள, அனைவரையும் அனுசரித்துப்போகும் குணமுள்ள பெண்ணாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சிலர் கூடுதலாக அவள் செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக இருந்தால் பரவாயில்லை என்றும் எதிர்பார்ப்பர்கள்.

பெண்களுக்கும், அதாவது இளம் பெண்களுக்கும் அது போன்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கும். கூடுதலாக அவன் திறமைசாலியாகவும், கை நிறையச் சம்பாதிப்பவனாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

அப்படி எல்லாம், அதாவது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் இருக்கக்கூடிய பெண்ணோ அல்லது பையனோ சுலபத்தில் கிடைத்துவிடுமா என்ன?

எல்லாம் வாங்கி வந்த வரத்தின்படிதான் அமையும். அதாவது ஜாதகத்தில் உள்ள அமைப்பின்படிதான் அமையும்.

ஜாதகத்தில் குறை இருந்தால் சிலர் பயந்துவிடுவார்கள். பயப்படாமல் முழுமையாக ஜாதகத்தை அலச வேண்டும்.

களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருந்தால் சிக்கல் என்று சிலர் நினைப்பார்கள். அதாவது சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு இரண்டு புறமும் உள்ள வீடுகளிலும் தீய கிரகங்கள் இருந்தால் அது பாபகர்த்தாரி யோகக் கணக்கில் வரும். அப்படி அமைந்திருந்தாலும் சேர்க்கை மற்றும் பார்வையால் அத்தீமை விலகிவிடும் வாய்ப்பு உண்டு. ஆகவே ஜாதகத்தை சுத்தமாக அலச வேண்டும்

ஒரு உதாரண ஜாதகத்தைவைத்து அதை இன்று அலசுவோம்
-------------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


தனுசு லக்கினம். பூச நட்சத்திரம்.
லக்கினாதிபதி குரு லக்கினத்தில் உள்ளார்
ஏழாம் வீட்டுக்காரரான புதன் லக்கினத்திற்கு எட்டில் உள்ளார். இருந்தாலும் அரச கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனுடன் கூட்டாக உள்ளார். சூரியன் இந்த ஜாதகத்திற்குப் பாக்கியநாதன் ஆவார் (9th lord)
களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளார். முன் வீட்டில் சனி. அடுத்த வீட்டில் கேது.

என்ன ஆயிற்று?

பயப்படும்படியாக ஒன்றும் நடக்கவில்லை.

முதல் நிலை சுபக்கிரகமான குரு பகவான். லக்கினத்தில் அமர்ந்து தனது நேரடிப் பார்வையால், களத்திரஸ்தானத்தைப் பார்ப்பதுடன், களத்திரகாரனுக்கும் கை கொடுத்து தோஷங்களை நீக்கினார். குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்பார்கள். அவ்வாறு இந்த ஜாதகனுக்கும் தோஷங்கள் நீங்கி நல்ல மனைவி அமைந்தாள்! அதுதான் இந்த ஜாதகத்தின் மேன்மை

ஜாதகங்களை அலசும்போது, குருவின் பார்வையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.12.16

Astrology: Jothidam: அலசல் பாடம்: நீசமான கிரகத்தின் திசை நன்மை செய்யுமா? அல்லது செய்யாதா?

Astrology: Jothidam: அலசல் பாடம்: நீசமான கிரகத்தின் திசை நன்மை செய்யுமா? அல்லது செய்யாதா?

ஜோதிடம் கற்றுக்கொள்ளும் அனைவருக்கும் ஏற்படும் ஒரு சந்தேகம்., ஒரு கிரகம் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தால், அதனால் பயன் இல்லை என்கிறார்களே, அதே கிரகத்தின் மகா திசை எப்படி இருக்கும்?

அதி ஒரு உதாரண ஜாதகத்துடன் இன்று பார்ப்போம்!
-------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


ஜாதகர் 1969 ஆம் ஆண்டு பிறந்தவர். சிம்ம லக்கின ஜாதகம். அவிட்ட நட்சத்திரம்.
1. லக்கினாதிபதி சூரியன் 11ல் (லாப ஸ்தானத்தில்)
2. இரண்டில் குரு. ஆனால் உடன் கேதுவும் உள்ளார்.
3. சிம்ம லக்கினத்திற்கு யோக காரகனான செவ்வாய் கேந்திரத்தில் (4ல்) உள்ளார்
4. விரையாதிபதி சந்திரன் ஏழில் அமர்ந்து லக்கினத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்துகிறார்.
5. ஒன்பதாம் இடத்தில் (பாக்கியஸ்தானத்தில்) சனீஷ்வரன். ஆனால் அவர் நீசமாகியுள்ளார்
6. பத்தில் சுக்கிரனும், புதனும்.

ஜாதகனின் 36ஆவது வயதில் சனி மகா திசை ஆரம்பம். கேள்வி இதுதான். அந்தத் திசை ஜாதகனுக்கு நன்மை செய்யுமா? அல்லது கேடு செய்யுமா?
கேள்வி இரண்டு: ஜாதகனுக்கு அந்தத் திசையில் வீடு வாங்கும் பாக்கியம் உள்ளதா?

சனி நீசமானாலும் திரிகோண ஸ்தானத்தில் (9ல்) உள்ளார். அத்துடன் வேறு தீய கிரகங்களின் கூட்டணியோ பார்வையோ இல்லாமல் இருக்கிறார். ஆகவே அவர் நன்மையைச் செய்வார். ஒன்பதாம் இடத்தின் வலிமை அப்படி.

ஜாதகனுக்கு (அவிட்ட நட்சத்திரம்) முதல் திசை செவ்வாய் திசை. இரண்டாவதாக ராகு திசை. மூன்றாவதாக குரு மகா திசை. சனி திசை 4ஆவது திசையாகும். ஜோதிடத்தை வகுத்த முனிவர்களின் கணக்குப்படி நான்காவதாக வரும் சனி திசை நன்மையைச் செய்யாது.

இரண்டு ஜோதிட விதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், பெரிய அளவில் நன்மைகள் இல்லாவிட்டாலும், கெடுதல் இருக்கது. அதாவது சராசரியாக இருக்கும். பயப்படத்தேவையில்லாத நிலைமை!

சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய், இடம் வீடுகளுக்கு உரிய நான்காம் வீட்டில் இருப்பதால், ஜாதகனுக்கு வீடு வாங்கும் பாக்கியம் உண்டு.

செவ்வாய் சுக்கிரனின் வலுவான பார்வையுடன் இருப்பதால், சனி திசை சுக்கிரபுத்தியில் ஜாதகனின் அந்த ஆசை நிறைவேறும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.12.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தீராத நோய்க்கு ஒரு உதாரண ஜாதகம்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தீராத நோய்க்கு ஒரு உதாரண ஜாதகம்!

ஒரு அன்பான பெற்றோர்களுக்குக் கடும் சோதனை. அவர்களுடைய பத்து வயது மகனுக்கு, ஒரு தீராத நோய் வந்து விட்டது. அத்துடன் அவர்களைக் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது. பெரும் செலவையும் அது கூட்டிக் கொண்டு வந்தது.

மருத்துவர்கள் அந்த நோய்க்கு வாய்க்குள் நுழையாத ஒரு பெயரைச் சொன்னார்கள். Muscular dystrophy (MD) என்றார்கள். உடலின் சதைப் பகுதிகள் நாளுக்கு நாள் பலவீனமாகி இறுதியில் உடலின் பல இடங்கள் செயல் இழந்து போகும் என்றார்கள். மருந்துகளின் மூலம் பையனின் மரணத்தைத் தள்ளிப்போடலாம் என்றார்கள். இருபது ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கலாம் என்றார்கள். அதுவரை விடாமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள்

பையனின் ஜாதகம் என்ன சொல்கிறது?

அதை இன்று பார்ப்போம்
----------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


1
கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் ஏழில் சனியின் வீட்டில். அவனுடன், ராகு, புதன், சுக்கிரன் ஆகிய மூவரும் உள்ளார்கள். புதன் இந்த ஜாதகத்திற்கு விரையாதிபதி (12th lord). பொதுவாக லக்கினாதிபதியும், விரையாதிபதியும் ஒன்று சேர்ந்தால், ஜாதகனின் வாழ்க்கை அவனுக்குப் பயன் படாது. அத்துடன் ராகுவும் இருப்பதால், நிலைமை இன்னும் மோசம். மற்றவர்களையும்  கஷ்டத்திற்கு உள்ளாக்கக்கூடிய அமைப்பு அது!

2
கடக லக்கினத்திற்கு யோக காரகனான செவ்வாய் ஆறில் போய் அம்ர்ந்து கொண்டதால், அவனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை! அவனுடன் கூட்டாக அஷ்டமாதிப்தி சனியும் உள்ளான்
.
3
உடல்காரகன் சூரியன் லக்கினத்திற்கு எட்டில் அமர்ந்துவிட்டான். அவனாலும் பிரயோஜனமில்லை.

4
அத்துடன் பாக்கியாதிபதி குரு பன்னிரெண்டில் போய் அமர்ந்து கொண்டுவிட்டான். அவனாலும் பிரயோஜனமில்லை.

5
ஆயுள்காரகன் ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு, எட்டாம் வீட்டைப் பார்க்கிறான். அதனால் ஜாதகனுக்கு அல்ப ஆயுள் என்பது விதி

6
சந்திர ராசிக்கு எட்டாம் வீடு, அதன் அதிபதி சூரியன் பார்வையில், அதனால் உடல் தேறுவதற்கு சற்று வாய்ப்பு உள்ளது.

7.
ஆனாலும் லக்கினதிபதி கேந்திரத்தில் அமர்ந்திருந்தாலும், உடன் இரண்டு தீய கிரகங்களின் கூட்டணி. அதன் பலனும் ஜாதகனுக்கு அல்ப ஆயுள்

8
பையனின் நடப்பு திசை யோககாரகன் செவ்வாயின் திசை, அதனால் ஜாதகனுக்கு, மருந்து, மாத்திரைகளின் மூலமும், பிரார்த்தனைகளின் மூலமும் சிறிது தேறியது. அடுத்து வந்த ராகு திசையும் கஷ்டங்களைக் கொடுத்தது. ராகு சனியின் வேலையைச் செய்யும். ராகு தன் திசை முடியும்போது, பையனை மேலே அனுப்பி வைத்தது. அதாவது இறைவனடியில் சேர்த்தது!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.12.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கஷ்டங்களுக்கு ஒரு உதாரண ஜாதகம்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கஷ்டங்களுக்கு ஒரு உதாரண ஜாதகம்!

பிரச்சினை இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கை என்பது சீட்டாடத்தைப் போன்றது. கையில் 13 கார்டுகளுடன் நீங்கள் ஆடித்தான் ஆகவேண்டும். ஒரு கார்டை நீங்கள் கீழே இறக்கினால், பதிலுக்குக் கீழே இருந்து ஒரு கார்டை எடுத்துக்கொள்ள வேண்டும். சீட்டாடுபவர்களுக்கு அல்லது முன்பு ஆடியவர்களுக்கு அது நன்றாகத் தெரியும்.

அத்துடன் சிலருக்கு ஒரு பிரச்சினைதான் இருக்கும். அதைத் தீர்த்தவுடன் அடுத்த பிரச்சினை வரும். ஆனால் சிலருக்குக் ஒரே நேரத்தில் நான்கைந்து பிரச்சினைகள் இருக்கும். அதாவது ரம்மி சேராமல, கையில் சில ஜோக்கர்க்ளும் பல பெரிய கார்டுகளும் கையில் இருப்பது போன்ற நிலைமை!

அதுபோல ஒரு அன்பருக்கு ஒரே நேரத்தில் பல பிரச்சினைகள். செய்யும் தொழில் சீராக இல்லை. அதில் நஷ்டம். திருமண வாழ்க்கையில் பிரச்சினை. மனைவியுடன் சுமூகமான உறவு இல்லை. கடும் பணப் பிரச்சினை. உடல் நலமின்மை. இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து படுத்தி எடுத்தன!

ஆளை விட்டால் போதும் எங்காவது ஓடிப் போய்விடலாம் என்னும் நிலைமை!

அது எப்படி ஓடிப்போக முடியும்? விதி விடுமா?

என்ன ஆயிற்று அவருக்கு?

வாருங்கள் அவருடைய ஜாதகத்தை அலசுவோம்? அவருக்கு நாம் என்ன உதவியா செய்யப் போகிறோம்? இல்லை! நமது பயிற்சிக்காக அதை இன்று அலசுவோம்
--------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


1. ஜாதகத்தில் உள்ள பெரிய குறை கேமதுருமா யோகத்தின் பிடியில் ஜாத்கம் உள்ளது.  கேமதுருமா யோகம் என்பது மோசமான அவ யோகம். உங்கள் மொழியில் சொன்னால் தரித்திர யோகம். அந்த அவயோகம் உள்ள ஜாதகன் வறுமையில் வாடும்படியாகிவிடும். Kema Druma Yoga is said to occur when there is no planet positioned in either second house or in the twelfth house from Moon; சந்திரனுக்கு இரண்டு பக்கமும் எந்த கிரகமும் இல்லாமலும், உடன் எந்த கிரகமும் இல்லாமலும், சந்திரன் தனித்து இருக்கும் நிலைமை!

2. யோககாரகனான செவ்வாய் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். அவனால் பயனில்லாமல் போய்விட்டது.

3. அதே போல 2ஆம் மற்றும் 11ஆம் இடத்திற்கு உரிய புதனும் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். இரண்டாம் வீடு பணத்திற்கான வீடு. பதினொன்றாம் வீடு லாபத்திற்கான வீடு.

4. லக்கினத்திற்கு எட்டாம் வீட்டுக்காரன் (அஷ்டமாதிபதி) குரு அந்த வீட்டிற்கு 12ல், அதாவது லக்கினத்திற்கு ஏழில் அமர்ந்து திருமண வாழ்க்கையில் கஷ்டங்களைக் கொடுத்தான். எட்டாம் அதிபதி என்றாலே கஷ்டங்களைக் கொடுப்பவன். அதை மனதில் வையுங்கள்.

5. அத்துடன் ஜாதகனுக்குக் குரு திசை நடந்த போது, எட்டாம் அதிபதி லக்கினத்தையும் சூரியனையும் பார்த்ததால் ஜாதகனுக்கு உடல் நலம் இல்லாமலும் போய் விட்டது.

ஜாதகன் கடைசிவரை எந்த நன்மையையும் அடையவில்லை. சிம்ம லக்கின ஜாதகன் என்பதால், பல்லைக் கடித்துக்கொண்டு, எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினான்.

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.12.16

Horoscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கல்வியும், கிடைக்கும் வேலையும்!


Horoscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கல்வியும், கிடைக்கும் வேலையும்!

தலைப்பு: கல்வியும், வேலையும்

அந்தக்காலத்தில், அதாவது 40களில் பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தால், வேலை கிடைத்தது. இந்தியன் வங்கியிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் (அப்போது அவ்விரண்டு வங்கிகளும் தனியார்கள் வசம் இருந்தது) அல்லது டி.வி.எஸ் போன்ற நிறுவனங்களிலும் வேலை கொடுத்தார்கள்

பிறகு ஒரு முப்பது ஆண்டுகள் கழித்து, பட்டப் படிப்பு (எந்தப் படிப்பு படித்திருந்தாலும் பட்டதாரி என்றால் போதும்) படித்தவர்களுக்கு வேலை கிடைத்தது.

இன்று நிலைமை அப்படியல்ல. தொழில் சார்ந்த கல்விகள் படித்தவர்களுக்கும், உயர் கல்வி படித்தவர்களுக்கும் அல்லது பொறியியல் படித்தவர்களுக்கும் மட்டுமே வேலை கிடைக்கிறது.

உலகம் போட்டிகள் நிறைந்ததாக உள்ளது. பொருளாதாரம் தாறு மாறாக உள்ளது. விலைவாசி அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கிரது. வாழ்க்கை பல அவலங்கள் நிறைந்ததாக உள்ளது.

ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றிய கவலை வாட்டி எடுக்கிறது. படி, படி என்று குழந்தைகளை அவர்கள் வாட்டி எடுக்கும் சூழ்நிலை உள்ளது.

இந்த்ச் சூழ்நிலையில், ஒரு இளைஞன் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தால் என்ன ஆகும். அவனுடைய பெற்றோர்களின் நிலை என்ன?

வீட்டில் தன்னுடைய பெற்றோர்கள், பணம் செல்வழித்துப் படிக்க வைப்பதற்குத் தயாராக இருந்தும் அந்த இளைஞனுக்குப் படிப்பில் ஆர்வம் இல்லை. அவர்கள் எவ்வள்வோ வற்புறுத்தியும், அவன் தத்தித் தத்தி ஒரு இளங்கலை பட்டப் படிப்பு வரை படித்து, அதில் பார்டரில் தேர்வு பெற்றான். B.A (Literature) படித்தான். அதற்குப் பிற்கு, மேல் படிப்புப் படிக்க சண்டித்தனம் செய்தான்.

அவன் நிலை என்னவாயிற்று? அவனுக்கு என்ன வேலை கிடைத்தது? ஜாதகப்படி அது சரிதானா?

வாருங்கள் இன்று அதை அலசுவோம்!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


கடக லக்கின ஜாதகம். லக்கினத்தில் லக்கின அதிபதி சந்திரன் உள்ளார்.

அஷ்டம அதிபதி (எட்டாம் வீட்டுக்காரன்) சனி, லக்கினத்தில் வந்து அமர்ந்துள்ளான். விரையதிபதி (12ஆம் வீட்டுக்காரன்) புதன் 7ல் அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்துள்ளான். அவர்களால் நன்மையல்ல!

நான்காம் வீட்டில் ராகு அமர்ந்துள்ளார். அவர் அமர்ந்த காரனத்தினால் ஜாதகனுக்கு உயர் கல்வியில் ஆர்வமில்லாமல் போய்விட்டது.

பாக்கிய ஸ்தானத்தில் (9ஆம் வீட்டில்) குரு பகவான். ஆட்சி பலத்துடன் உள்ளார். இது சற்று ஆறுதலான விஷயம்

ஐந்தாம் அதிபதி செவ்வாயும், பதினொன்றாம் அதிபதி சுக்கிரனும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்கள். இது ஜாதகத்திற்கு ஒரு சிறப்பை, மேன்மையைக் கொடுக்கும்
-----------------------------------------------
1
பத்தாம் வீட்டில் கேது வந்து டெண்ட் அடித்து அமர்ந்துள்ளார். ஆனாலும் பத்தாம் வீட்டுக்காரன் செவ்வாய் 11ல் (லாப ஸ்தானத்தில்) உள்ளார். அத்துடன் 11ஆம் வீட்டுக்காரன் சுக்கிரனின் பார்வையும் பத்தாம் அதிபதி செவ்வாயின் மேல் உள்ளது. அதனால் ஜாதகன் எந்த வேலை பார்த்தாலும் அதில் உயர்வு உண்டு. அதில் முன்னேற்றம் காண்பான். செய்யும் வேலை அல்லது தொழிலால் வளம் பெரும்!

2
கர்மகாரன் சனி தன்னுடைய விசேடப் பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்க்கின்றான். அதனால் அவனும் கைகொடுப்பான். பாக்கியாதிபதி குருவின் பார்வையும் சனியின் மேல் விழுகிறது. அதுவும் கர்மகாரகனுக்கு நன்மையானதே. லக்கினத்திற்கும் நன்மையானதே!. குரு தனது ஆட்சி வீட்டில் வலுவாக உள்ளார்
.
3
இரண்டாம் வீட்டுக்காரன் (House of finance) சூரியனின் பார்வையும் லக்கினத்தின் மேல் விழுகிறது. சனியின் மேலும் விழுகிறது. அதுவும் நன்மையானதே. இந்தக் கூட்டு அமைப்புக்கள் ஜாதகனை நல்ல இடத்தில் உட்கார வைக்கும்! ஜீவனத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.

4
கர்மகாரகன் சனியுடன் இருக்கும் பூர்ண சந்திரன், ஜாதகனுக்கு எழுத்து, பத்திரிக்கை, நிருபர் போன்ற வேலைகளில் நல்ல திறமையை வழங்கும்.(Media, reporting, communication fields etc)

5
ஜாதகன் முதலில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் ஒரு ஆண்டு வேலை செய்து பயிற்சி பெற்றுப் பிறகு ஒரு பத்திரிக்கைக்கு மாறிச் சேர்ந்து படிப்படியாக உயர்வு பெற்றான்.

6
ஜாதகனின் 25ஆவது வயதில் அது நடந்தது. அப்போது அவனுக்கு சுக்கிர திசை. சுக்கிரனின் மேல் குருவின் பார்வை படுவதையும் கவனியுங்கள். பாக்கியநாதன் கை கொடுக்க ஜாதகனுக்கு எல்லாம் கூடி வந்தது. பாக்கிய நாதன் கை கொடுத்தால் எதுவும் கூடி வரும். அதை மனதில் வையுங்கள்!

7.
கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாயின் பார்வையும் சுக்கிரன் மேல் விழுவதைப் பாருங்கள். யோககாரகனின் பார்வையும் கை கொடுக்கும். அதையும் மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.11.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தாமதமாக நடக்கும் திருமணங்கள்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தாமதமாக நடக்கும் திருமணங்கள்!
தாமதமாகத் திருமணம் நடைபெற்றதற்கு ஒரு உதாரண ஜாதகம்!

திருமணம் உரிய காலத்தில் நடைபெற வேண்டும். அந்தக் காலத்தில், அதாவது ஐம்பது, அறுபதுகளில், பெண்ணிற்கு 18 வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தைச் செய்து வைத்துவிடுவார்கள்.

இப்போது அப்படியல்ல, படிப்பு, வேலை வாய்ப்பு காரணமாக, திருமணம் செய்து கொள்வதில் இளைஞர்களும், கன்னிகளும் முனைப்பாக இருப்பதில்லை. பெற்றோரும் அக்கறையில்லாமல், அல்லது வேறு வழியில்லாமல் இருக்கிறார்கள்.

இப்போதும், படிப்பு, வேலை வாய்ப்பு என்று எப்படிக் கண்க்கிட்டாலும் பெண்ணிற்கு 23 வயதிலும், பையனுக்கு 25 வயதிலும் திருமணத்தைச் செய்து விட வேண்டும்.

நடக்கிறதா? செய்கிறார்களா? பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். எல்லோரும் ஜாதக்த்தைக் குற்றம் சாட்டுவார்கள். உரிய நேரம் வரவில்லை, உரிய வரன் கிடைக்கவில்லை என்பார்கள்.

80 சதவிகிதம் அதெல்லாம் கிடையாது. கிடைக்கும் வரனைப் போதும் என்று முன்வந்து மணந்து கொள்ள வேண்டாமா? இதைவிட நல்லது கிடைக்குமா? என்று கிடைப்பதை எல்லாம் ஒதுக்கும் சம்பவங்கள் நிறைய உள்ளன. அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்

சரி, அதெல்லாம் போகட்டும். உண்மையிலே ஜாதகப்படி திருமணம் தாமதமாகுமா? ஆகும்

ஏழாம் வீட்டுக்காரனும், களத்திரகாரனும் ஜாதகத்தில் வலிமையாக இல்லாவிட்டால், திருமணம் தாமதமாவதற்கோ அல்லது திருமணம் மறுக்கப் படுவதற்கோ வாய்ப்பு உண்டு (That is delay or denial of marriage)

உங்களுடைய பயிற்சிக்காக ஒரு உதாரண ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
----------------------------------------------------------------------------------


மீன லக்கின ஜாதகம்.
லக்கினாதிப்தி குரு எட்டில் இருக்கிறார்.
ஆறாம் வீட்டுக்காரன் சூரியன் லக்கினத்தில் இருக்கிறான்
பூர்வபுண்ணியாதிபதி சந்திரன் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார்.
இரண்டாம் வீட்டில், புதன், சுக்கிரன், செவ்வாய், சனி ஆகியோருடன் மாந்தியும் இருக்கிறார்.
சந்திரனுடன், ராகுவும் கூட்டாக உள்ளார்
இதுதான் ஜாதக அமைப்பு
---------------------------------
1. சனியின் பிடியில் ஏழாம் அதிபதி புதன் இருக்கிறார்.
2. அதே சனியின் பிடியில் களத்திரகாரகன் சுக்கிரனும் இருக்கிறார்.

அதனால் ஜாதகனுக்கு 32 வயதுவரை எத்தனையோ முயற்சிகளை அவனுடைய பெற்றோர்கள் மேற்கொண்டும் திருமணம் நடக்கவில்லை!
குரு பகவான் தன்னுடைய நேரடிப்பார்வையால், இரண்டாம் வீட்டையும், அதில் அமர்ந்திருக்கும் நான்கு கிரகங்களையும் பார்ப்பதால், அத்துடன் அவர் லக்கினாதிபதியாகவும் இருப்பதால், ஜாதகனுக்கு, ஏழாம் இடத்ததிபதியின் புதன் திசை துவங்கியவுடன், தன்னுடைய கோச்சாரப்படி, இரண்டாம் வீட்டிற்கு வந்தவுடன், திருமண்த்தை நடத்தி வைத்தார்.

அன்புடன்
வாத்தியார்

================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!