மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label History. Show all posts
Showing posts with label History. Show all posts

2.7.20

சர்தார் பட்டேல் செய்த அற்புதமான காரியம்!!!!


Born: 31 October 1875, Nadiad
Died: 15 December 1950, Mumbai

சர்தார் பட்டேல் செய்த அற்புதமான காரியம்!!!!

👉 சுதந்திரப் போராட்டக் காலம்.

கலகம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 46 விடுதலைப் போராட்ட வீரர்களின் சார்பாக வெள்ளைக்கார நீதிபதி முன்பாக வாதம் செய்கிறார் அவர்.

👉 நடுவில் வழக்கறிஞரின் உதவியாளர் வந்து ரகசியமாக ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார்.

👉 அதைப் பார்த்துவிட்டு கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வாதத்தைத் தொடர்கிறார்.

👉 உணவு இடைவேளையில் நீதிபதி அவரை அழைத்து "அதென்ன காகிதம்?'' என்றுக் கேட்க..

👉 "என் மனவி இறந்துவிட்டதாகச் செய்தி சொன்ன தந்தி'' என்றார் அவர்.

👉 பதறிய நீதிபதி,"அப்படியே நிறுத்திவிட்டுச் சென்றிருக்கலாமே?'' என்று கேட்ட போது அவர் சொன்னார்,

👉 "உடனே நான் போவதனால் பிரிந்த உயிரை மீட்டு வர சாத்தியமில்லை. ஆனால் என் வாதத்தால் 46 உயிர்களை தூக்கு மேடைக்கு அனுப்பாமல் மீ்ட்க சாத்தியமிருக்கிறதே..''

👉 வியந்துபோன நிதிபதி 46 பேரையும் விடுதலை செய்தார்.

🙏 அந்த வழக்கறிஞர்:

🙏 சர்தார் வல்லபாய் பட்டேல்.

பாரத தேசத்தில் தற்போது  நாட்டை காட்டியும் கூட்டியும் கொடுக்கும் அரசியல்வாதிகள் மலிந்து கிடக்கின்றனர் அவர்களைக் களை எடுப்பதே தற்போதைய காலத்தின் கட்டாயமாக உள்ளது

👉தெய்வங்களாக வழிபடக்கூடிய இப்படியான  அருமையான மனிதர்கள் வாழ்ந்து சென்ற பூமி: 🙏 இந்தியா.

Born: 31 October 1875, Nadiad
Died: 15 December 1950, Mumbai
--------------------------------------------------
படித்து, வியந்து, பகிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.3.20

தி. நகர் உஸ்மான் சாலை வரலாறு!!!!


தி. நகர் உஸ்மான் சாலை வரலாறு!!!!

மதராஸ்  #உஸ்மான்_சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா? இதோ.........
--------------------------------------------------
"முதல் தலைமுறை மனிதர்கள்".

மதராஸ், தி.நகரில் வணிக  நிறுவனங்கள் நிறைந்த #உஸ்மான் #
சாலைகளில் நடந்து செல்லும்போது, " #யார்_இந்த_உஸ்மான்"
என்ற கேள்வி  எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் 
சிந்தியுள்ளார் ஆசிரியர்.
ஃபிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி. மொரேயின் "முஸ்லீம்களின் அரசியல் பரிணாம  வளர்ச்சி" என்ற நூலின் சிம்பைப் பிடித்துக்கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.

#உஸ்மான் - ஒரு சுருக்கச்  செய்தி : கான் பகதூர் சர் #முகமது_உஸ்மான்,
Khan Bagadur Sir Mohammad Usman KCSI KCIE 1884 - 1960.
பிரிட்டிஷ்  இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு, சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பட்டம் 
பெற்றார்.

1913 ல் சென்னை மாநாகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள்.
1924ல் சென்னை மாநகராட்சி மேயர்.
1916 - நீதிக்கட்சி தோற்றம் - உறுப்பினர். பின்னர் சென்னை மாகாணப் பொதுச்செயலாளராகத் தேர்வு - 1919 திருச்சி 
மாநாட்டுத் தலைவர்.
1920 முதல் சட்டமன்றத் தேர்தல். வெற்றி பெற்று நீதிக்கட்சி ஆட்சி அமைக்க
1934 வரை  சட்டமன்ற உறுப்பினர்.
1925 முதல் நிர்வாகசபை உறுப்பினர். பின்னர் நிர்வாகசபையின் துணைத்தலைவர்.
1932 - 34  சென்னை மாகாண உள்துறை அமைச்சர்.

1934ல் சென்னை மாகாண கவர்னர், Governor of Madras Presidency - 
Acting.
இதன்மூலம் இந்தியமாகாணங்களிலேயே கவர்னர் பதவி வகித்த #முதல்_இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் - 
அத்துடன் #முதல்_தமிழர்,
#முதல்_முஸ்லீம் என்ற பெருமையும் கூட. அந்த வருடம் சென்னை சென்னைப் பல்கலையில்  நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.

சென்னைப்  பல்கலைக்கழக வரலாற்றில் #இந்தியர்_ஒருவர் "வேந்தர்"
என்ற தகுதியில் கலந்துகொண்ட முதல் வரலாற்று நிகழ்வு 
இதுவே ஆகும். பிரமிக்கத்தக்க விசயம் என்னவென்றால் தான் பட்டம்
பெற்ற பல்கலையில் தானே பட்டம் வழங்கும் 
நிலைக்கு உயர்ந்த #உழைப்புதான்.

1941ல் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர், Member of Defence Council of India.
1942ல் வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்,
Member of the Executive Council of Viceroy of India. இக்குழுவில் 
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர் சி.பி.இராமசாமி ஐயர் உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் இருந்தனர்.

1920 ல் கான் சாகிப் பட்டம்.
1921 ல் கான் பகதூர் பட்டம்.
1925ல் கெய்ஸர் இ ஹிந்த் வெள்ளிப் பதக்கம்.
1928 ல் இங்லாந்தின் உயரிய  "நைட் - Knight " விருது.
அதே ஆண்டில் "சர் - Sir" பட்டம்.

KCSI - Most exalted Order of the Star of India, Knight 
Commander Order of
           Chivalry - Founded by Queen Victoria in 1861.

இதுபோல் தமிழகத்தின் 30  ஆழுமைகளைத் தேர்ந்தெடுத்து, தமிழக வரலாற்றின் தவிர்க்க இயலாச் சக்திகளாகவும் சுதந்திரப் போராட்ட 
வீரர்களாகவும் இருந்து, வெளியுலகிற்கு அறியப்படாத ஆற்றல்மிகு தியாகிகளின் பங்களிப்புகளைத் தொகுத்திருக்கிறார்.

Thanks for the information:
வெளியீடு : நிலவொளி பதிப்பகம், சென்னை.
#முகநூல்_பதிவு
நெய்வேலி சார்லஸ்
---------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.10.19

சத்திய சோதனை!!!!


சத்திய சோதனை!!!!

இன்று தேசத்தந்தை மகாத்மா காந்திஜியின் பிறந்த நாள்.

அவருடைய நினைவுகளை மனதில் நிறுத்தி, அவரைப் போற்றுவோம்!

Mohandas Karamchand Gandhi (2 October 1869 – 30 January 1948)

சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது அவர் எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூ‌ல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூ‌லுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார்.

நான் செய்த சத்திய சோதனையின் கதை என்று திரு மோகன்தாசு கரம்சந்த் காந்தி தம் இளம் வயது முதல் 1921 ஆம் ஆண்டு வரையிலான தம் சரிதையை எழுதியுள்ளார். நவஜீவன் வாரப் பத்திரிக்கையில் 1925 முதல் 1929 வரை அவர் குஜராத்தி மொழியில் எழுதிய கட்டுரையின் தொகுப்பு. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் "யங் இந்தியா" என்னும் ஆங்கில இதழில் பிரசுரமானது.சுவாமி ஆனந்த் மற்றும் அவருடன் பணியாற்றியவர்களின் தூண்டுதல் இதற்கு முக்கிய காரணம். இவர்கள் காந்தியடிகளின் பொது வாழ்க்கை பரப்புறைகளின் பின்புலங்களை பகிர்ந்து கொள்ளும்படி ஊக்கப் படுத்தினர். இந்நூல் 20ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களுள் ஒன்றாக உலக ஆன்மீக மற்றும் மத ஆணையத்தால் தெரிவு செய்யப்பட்டது

ஆகவே அனைவரும் அந்நூலை வாங்கிப் படித்துப் பயனுற வேண்டுகிறேன்!!!!


அன்புடன்
வாத்தியார்
============================================================
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.4.19

சென்னையின் வரலாறைத் தொகுத்த மாமனிதர்!!!!


சென்னையின் வரலாறைத் தொகுத்த மாமனிதர்!!!!

*சென்னை வரலாறைத் தொகுத்த எஸ்.முத்தையா காலமானார் - மாநகரின் ஒவ்வொரு இடமும் முத்தையாவின் நினைவுகளை சேர்த்தே இனி சுமக்கும்*

உலகின் 30வது பெரிய மாநகரமாக கருதப்படுகிறது சென்னை. இந்த சென்னை மாரகருக்கான வரலாறு, அதன் தோற்றம், வளர்ச்சி போன்றவை குறித்த சரியான பதிவுகள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், சென்னை மாநகரின் வரலாறைக் காலமுறைப்படி தொகுத்த வரலாற்றுப் பதிவர்தான் எஸ். முத்தையா. அவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்கு பின் சென்னை மயிலாப்பூரில் இன்று (திங்கட்கிழமை -ஏப்ரல் 22) அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 ‘மெட்றாஸ்’ (சென்னையின் அந்நாளைய பெயர்) மாநகரின் ஆண்களும் பெண்களும் செய்த சாதனைகளையும், அவர்கள் எதில் முன்னோடிகளாக விளங்கினார்கள் என்பதையும் தேடித்தேடி பெருமை பூரிக்க முத்தையா பதிவு செய்தார். இன்று சென்னை தினம் என ஆகஸ்ட் மாதம் நாம் கொண்டாட காரணமாக இருந்தவரே இந்த முத்தையா தான்.

சென்னை மாநகரின் ‘முதல்முறை’ சாதனைகளையும் அவர் விடவில்லை. இப்போது சமூகவலைதளங்களில் சென்னையைப் பற்றி பகிரப்படும் பல்வேறு தகவல்களை மிகுந்த சிரமப்பட்டு சேகரித்து, சரிபார்த்து, யாராவது கூடுதல் தகவல்களைத் தந்தால் அதையும் சேர்த்து, ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால் அதையும் செய்து ஒளிரச் செய்தார் முத்தையா.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நகருக்கென்று தனி வரலாறு எழுதப்படவில்லையே என்று கவலைப்பட்ட முத்தையா அதையே மிகச் சிறப்பாக புதிய பாணியில் காலப்போக்கில் செய்துமுடித்தார்.

பள்ளத்தூரில் சுப்பையா செட்டியார்-சிட்டாள் ஆச்சி இணையரின் மகனாக 1930 ஏப்ரல் 13-ல்பிறந்தார் முத்தையா. பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் இலங்கையின் கொழும்பு நகர முதல்வராக இருந்த என். எம். சுப்பையா செட்டியார் என்பவரின் மகன்தான் இந்த முத்தையா. அன்றைய சிலோன் (இலங்கை) மற்றும் அமெரிக்காவில் இவர் கல்வி பயின்றார்.

சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய முத்தையா, ‘டைம்ஸ் ஆஃப் சிலோன்’ நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்தார்.

அங்கு 17 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு 1968-ல் இந்தியா திரும்பி சென்னையைத் தனது வாழிடமாகக் கொண்டார். டிடிகே நிறுவனத்தின் ‘டிடிமேப்ஸ்’ என்ற வரைபட நிறுவனத்தில் பணியில் அமர்ந்தார்.

1981-ல் ‘மெட்ராஸ் டிஸ்கவர்ட்’ என்ற புத்தகத்தை எழுதினார். சென்னைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சென்னையில் உள்ள முக்கிய இடங்கள், நிறுவனங்கள், நினைவுச் சின்னங்கள், கலைக்கூடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், உணவகங்கள் குறித்து மிகச் சுவையாகவும் சுருக்கமாகவும் செறிவாகவும் அவர் எழுதியவைஎதிர்கால நகர வரலாற்றாசிரி யர்களுக்கு வழிகாட்டி நூல்களாகும்.

‘மெட்ராஸ் டிஸ்கவர்ட்’ சுற்றுலாப் பயணிகளால் மட்டுமல்ல, நகரவாசிகளாலும் வாங்கப்பட்டு விரும்பி படிக்கப்பட்ட அதிகம் விற்ற நூலாகும். அது பல பதிப்புகளையும் கண்டது.

சென்னை மாநகரைத் தலைமையிடமாகக் கொண்ட வணிக நிறுவனங்கள், அவற்றை நிறுவிய தொழிலதிபர்கள் ஆகியோரைக் குறித்து படிப்போர் வியக்கும் வண்ணம் எழுதினார்.

1991-ல் ‘லோகவாணி-ஹால்மார்க் பிரஸ்’ உதவியுடன் ‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ என்ற மாதமிருமுறை இதழைக் கொண்டுவந்தார்.

அதில் நகரின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் இடம் பெற்றன. 1996-ல்பணமுடையால் தடுமாறிய அப் பத்திரிகை ‘சன்மார்’ குழுமத்தின் என். சங்கர் உதவியால் புத்துயிர்பெற்றது. நகரின் பெரு நிறுவனங்கள் அதற்கு உதவின. 2016-ல் அப்பத்திரிகை வெள்ளி விழா கண்டது.

1999-ல் இந்து பத்திரிகையில் திங்கள்கிழமை தோறும் அவர் எழுதத் தொடங்கிய ‘மெட்ராஸ் மிஸலனி’ வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. அவர் எழுதியதற்கும் மேலதிகமாக வாசகர்களிடமிருந்து வந்த தகவல்களை, ‘தபால்காரர் கதவைத் தட்டியபோது…’ என்ற பொருளில் கூடுதலாகத் தந்தார். அதுவும் 2009-ல் பத்தாண்டுகளை நிறைவு செய்தது. ஒரு செய்தித்தாளில் அதிக ஆண்டுகள் தொடர்ந்த வாராந்தரப் பகுதியாக அது திகழ்ந்தது. 970 பகுதிகள் அதில் இடம் பெற்றுவிட்டன.

2004 ஆகஸ்டில் ‘மெட்ராஸ் டே’ என்ற நகரின் நாளை, முத்தையா தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடத் தொடங்கினார். அது அப்படியே மெட்ராஸ் வாரம்,மெட்ராஸ் இருவாரம், மெட்ராஸ்மாதம் என்று விரிவடைந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தக் கொண்டாட்டங்களில் தாங்களாகவே வந்து இணைந்தது இதன் தனிச்சிறப்பு. வாசிப்பாளர்கள் வந்து பங்கேற்க, ‘மெட்ராஸ் புக் கிளப்’ என்ற அமைப்பையும் அவர்தான் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகரின் தனிச்சிறப்பு மிக்க குடிமகனாக முத்தையா விளங்கினார். நகரின் பெருமையை தான் உணர்ந்ததுடன் மற்றவர்களையும் உணரச் செய்தார்.

முத்தையாவுக்கு இரண்டு மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள், ஏராளமான எழுத்தாள நண்பர்கள், வாசக அன்பர்களைக் கொண்ட பெரிய குடும்பம் இருக்கிறது. சென்னை மாநகரின் ஒவ்வொரு கட்டிடமும், நினைவகமும் முத்தையாவின் நினைவுகளையும் சேர்த்தே இனி சுமக்கும்.
-----------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.10.18

சித்தூர் ராணி கர்ணாவதியின் சாமர்த்தியம்!!!!!


சித்தூர் ராணி கர்ணாவதியின் சாமர்த்தியம்!!!!!

💖அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்💖

*🕊*உண்மை வரலாறு*🕊*

ராணி கர்ணாவதி அன்று சித்தூரை ஆண்ட ராணா சங்காவின் மனைவி. அவர் திடீர் என்று நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார். அப்பொழுது ராணி கர்ணாவதிக்கு 12 வயது மகன் இருக்கிறான்.

அந்த சூழலில்.

இந்தியாவில் முகல் சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபரின் மகன் ஹிமாயூன் சித்தூர் மீது படை எடுத்து வருகிறார்.

அன்றைய சித்தூர் சாம்ராஜ்யம் அவ்வளவு வலிமையாக இல்லை.

வெறும் 60 ஆயிரம் வீரர்கள்.

அதுவும் முறையான போர்ப்பயிற்சி பெறாத உடல் பலவீனமான வீரர்கள். சித்தூர் படையில் உள்ள 60 ஆயிரம் வீரர்களை கொல்ல ஹிமாயூன் படையில் இருக்கும் ஒரு 3 ஆயிரம் வீரர்களே. போதுமானவர்கள். அந்த சூழலில். ஹிமாயூன் 3 லட்சம் வீரர்களோடு சித்தூர் மீது படை எடுத்து வந்தார்.

காவலன் இல்லாத தோட்டம் போல் சித்தூர் இருக்க.

உடல் அளவிலும், மனதளவிலும் பலவீனமாய் இருக்கும் அந்த பெண்ணின் மனம் அப்பொழுது எவ்வளவு பதைபதைத்து இருக்கும்.

ஹிமாயூன் படையோடு நம் படை மோதுவது என்பது சிங்க கூட்டத்தோடு முயல் கூட்டம் மோதுவதற்கு சமம். அவ்வாறு நம் படை ஹிமாயூனோடு மோதினால். நம் நாட்டில் 60 ஆயிரம் பெண்கள் விதவைகள் ஆவார்கள்.

60 ஆயிரம் படை வீரர்கள் மட்டும் அல்லாது. மேலும் பல கோரமான அழிவுகளை இந்த நாடும், நாட்டு மக்களும் ஹிமாயூன் படை மூலம் சந்திக்கலாம்.

இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் எவ்வாறு? காப்பது என்று அவள் யோசித்தாள்.

எத்தகைய கொடியவனின் மனதையும் மாற்றவல்ல ஆயுதம் அன்பு. அன்பு என்னும் ஆயுதத்தை கையில் எடுப்பது என்று ராணி கர்ணாவதி முடிவு செய்தாள்.

ஒரு பட்டுக்கயிற்றை எடுத்தாள். திரித்து ராக்கியாக்கினாள். பல ஆண்டுகளாக அரண்மனையில் வேலை பார்க்கும் விசுவாசமான ஒரு வேலைக்காரனை ராணி அழைக்க அவன் ஓடோடி வந்தான்.

நான் சொல்வதை ஹிமாயூனிடம் அப்படியே நீ ஒரு வார்த்தை கூட மாறாது சொல்ல வேண்டும்.

நீ இன்று பேசுவதில் தான் நம் படையில் உள்ள 60 ஆயிரம் வீரர்களின் உயிர் அடங்கி இருக்கிறது. உன் உயிர் உட்பட என்று சொல்ல. அந்த வேலைக்காரன்.

நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்ய தயாராக இருக்கிறேன். உத்தரவிடுங்கள் மகாராணி என்று அவன் பணிவோடு சொல்ல.

அவன் கையில் ராக்கியைக் கொடுத்து

" ஆலம்பனாஹ் இதை உங்கள் சகோதரி கர்ணாபாய் உங்களுக்கு அனுப்பினார். இதை ஏற்றுக்கொண்டால், இந்தப் பழக்கூடையையும் உங்களுக்காகக் கொடுத்தனுப்பினார். ஏற்றுக்கொள்ளாவிட்டால் இன்று ஓர் இரவு பொறுத்துக்கொள்ளவும். அவர் தீக்குளித்து விடுவார் சித்தூர் நாளை உங்களுடையது. உங்களுக்குத் தேவை ஒரு தங்கையா இல்லை சித்தூரா என்பதை முடிவு செய்யுங்கள்"

ராணி கர்ணாபாய் சொன்னதை அப்படியே அந்த வேலைக்காரன் கிளிப்பிள்ளை போல் ஹிமாயூனிடம் ஒப்பிக்க.

ஹுமாயூன் பட்டுக்கயிற்றை ஏற்றுக்கொண்டு தன் பங்குக்கு தங்கைக்குச் சீரும் அனுப்பினார் அத்தோடு "டெல்லியில் கர்ணாபாயின் அண்ணன் வீடு அவளுக்காக எப்போதும் திறந்திருக்கும்.

எனக்குக் கர்ணாபாய் போன்ற சகோதரியை விட சித்தூரின் ராஜ்ஜியம் பெரிதல்ல நான் உயிருடன் இருக்கும் வரை சித்தூருக்குப் படை அனுப்பமாட்டேன்" என்ற செய்தியையும் அனுப்பினார்.

60 ஆயிரம் பட்டாக்கத்திகள் சாதிக்க முடியாததை ஒரு பட்டுக்கயிறு சாதித்தது. முகலாய பேரரசனின் நெஞ்சை வென்று அவரின் மனதில் உள்ள மனிதத்தன்மையை வெளிப்படுத்தியது.

இந்த பதிவின் மூலம் நான் 2 விஷயங்களை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

1] அன்பை விட சிறந்த கடவுளும் இல்லை
அறிவை விட சிறந்த தெய்வமும் இல்லை.

2] நாம் ஜாதி, மத பேதங்களை கடந்து ஒன்று பட்டு உழைத்தால் தான் வலிமையான பாரதம் உருவாகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

**அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும்**
--------------------------------------------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.10.18

எதற்காக ஒரு குழந்தையை மட்டும் பறிகொடுக்கத் துணிந்தாள் அவள்?


எதற்காக ஒரு குழந்தையை மட்டும் பறிகொடுக்கத் துணிந்தாள் அவள்?

'டைட்டானிக்’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் காட்டப்படாத ஒரு சம்பவம் இருக்கிறது.
கப்பல் பழுதடைந்து கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும். அவர்களைக் காப்பாற்ற பல படகுகள் வரும். முதலில் கப்பலில் இருந்து படகுக்குப் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அப்படி, கப்பலில் இருந்து படகுக்கு செல்லும்போது ஒரு ஜப்பானியன் பெண்களோடு கலந்துபோய் படகில் ஏறி தப்பித்துக் கொள்கிறார்.

அந்த நபர் தன்னுடைய நாடான ஜப்பானுக்குச் செல்லும்போது, அந்த மக்களும் நாடும் அவரை வரவேற்கவில்லை. மாறாகப் புறக்கணிக்கிறார்கள்.

அதற்கு காரணம் ஜப்பானியர்களுக்கு ஒரு பண்பாடு உண்டு. அதை விளக்க அங்கிருக்கும் பள்ளிகளில் ஒரு குட்டிக் கதை வைத்திருக்கிறார்கள்.

ஒரு ராணுவப் படை வீரர்கள் குதிரையில் கும்பலாக வருகிறார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர். தெருவில், இரண்டு கைக்குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும். இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள். சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.

இறக்கிவிடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார். ' ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே! அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பலிகொடுக்கத் துணிந்தாய்?’ என்று.

அந்த பெண் கண்ணீருடன் சொன்னாள்... 'என் குழந்தைக்கும், பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ராணுவம் வந்தது. பக்கத்து வீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது. அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்!’ என்று சொன்னாள்.

நமக்காக வாழாமல் பிறருக்காக வாழ வேண்டும் என்ற மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான். அந்த நாட்டில் பிறந்த ஒருவர் கோழையாகத் தப்பி வந்ததை அந்த மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இது போன்ற ஏராளமான பாடங்களை வரலாற்றில் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள முடியும்!''
---------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.6.18

ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பெற்ற ஆலயம்!


ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பெற்ற ஆலயம்!

*1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்*
******************************************
தகவல்: *<எஸ்.கே>தமிழ் இணையம்*™
*மதுரை*👈🇮🇳🚀🌍 *வாட்ஸ் ஆப் எண்* *9842171532*🌺🌻🌹🌼
அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது
கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம் கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன.

தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன.

திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி
உலகுக்கு தெரிய வந்தன. அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற
தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது.

இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த
கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள், ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இருந்தால் அண்ணா மலையார் ஆலயத்தின் பழமை
சிறப்புகள், நமக்கு மேலும் அதிக அளவில் துல்லியமாக கிடைத்திருக்கும். சங்கநாட்டு மன்னன், காலச்சூரி மன்னன் ஆகியோரும் திருவண்ணாமலையார் அருளை கேள்விப்பட்டு நிறைய பொன்னும், பொருட்களையும் தானமாக கொடுத்துள்ளனர்.

இதுவரை ஆராயப்பட்ட 119 கல்வெட்டுகளில் இருந்து திருவண்ணாமலை ஆலயம் முதலில் எப்படி தோன்றியது, எப்படி வளர்ச்சி பெற்றது, யார்-யாரெல்லாம் கோவிலை கட்டினார்கள் என்ற உண்மை ஆதாரப்பூர்வமாக நமக்கு கிடைத்துள்ளது.

திருவண்ணாமலை ஆலயம் இப்போது 24 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது. ஆனால் கல்வெட்டு ஆய்வுப்படி பார்த்தால்,
இதிகாச காலத்தில் மகிழம் மரத்தடியில் ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றினார் என்று தெரிய வருகிறது. அதனால்தான்
திருவண்ணாமலை தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.

அடி, முடி காண முடியாதபடி, ஆக்ரோஷமாக, தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம்
விஷ்ணுவும், பிரம்மாவும், “இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய
முடியும்?” என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன், மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4-ம்
நூற்றாண்டில் கருவறை, செங்கல்லால் கட்டப்பட்டது. 5-ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது.

6, 7, 8-ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும்
அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார்.
ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது.

9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது, திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817-ம்
ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார்.

பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10-ம் நூற்றாண்டில்
கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள்தான் இந்த
பிரகாரங்களைக் கட்டினார்கள்.

அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது. 11-ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின.

முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான்.

1063-ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம்
பெறத் தொடங்கியது.

12-ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 13-ம்
நூற்றாண்டில் சிறு, சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா, கோப்பெருஞ்சிங்கன்
ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள்
வாரி, வாரி வழங்கினார்கள்.

14-ம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு,
தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. 1340-ம் ஆண்டு முதல் 1374-ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார்.

15-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணா மலை
ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில்தான்.

16-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராய ருக்கு, திருவண்ணாமலை கோவில் மிக, மிக பிடித்து போய் விட்டது.
திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றி அமைத்த பெருமைக்கு சொந்தக்காரர் அவர்தான்.

அவர் மற்ற மன்னர்கள் போல ஏதோ ஒன்றிரண்டு திருப்பணிகள் மட்டும் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார்.

அந்த திருப்பணிகள் ஒவ்வொன்றும் இன்றும் திருவண்ணாமலையில் கிருஷ்ண தேவராயரை நினைவுபடுத்திக்
கொண்டிருக்கின்றன.

217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம், சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம்,
இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில்
உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள், கதவுக்கு தங்க
முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும்
உண்ணாமுலை அம்மனுக்கும் ‘கிருஷ்ணராயன்’ என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை,
வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில.

1529-ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர், கிழக்கு
ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார்.

இதற்கிடையே குறுநில மன்னர்களும், சிவனடியார்களும் சிறு, சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பே கோபுரம், அம்மணியம்மாள்
கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன்
திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது.

கோபுரங்கள் அனைத்தும் 1370-ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590-ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே
சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னர்கள் மட்டுமல்ல... மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள்,
சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சாள, சம்புவராய,
விஜயநகர, தஞ்சை மன்னர்கள் போட்டி போட்டு செய்த திருப்பணிகள்தான் திருவண்ணாமலை தலத்தை நோக்கி மக்கள் அலை, அலையாக வர உதவி செய்தது.

14-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது. என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது.

கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் செய்து வரும் பல்வேறு திருப்பணிகள் மகத்தானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள். மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு
திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும், சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு.

1179-ம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து
12.06-1903, 4-6-1944, 4-4-1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்த புண்ணியமும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கே சாரும்.

மன்னர்களில் கிருஷ்ண தேவராயரும், பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் செய்த திருப்பணிகள் அளவிட முடியாதது. இன்று

நாம் திருவண்ணாமலை ஆலயத்தை வியந்து, வியந்து பார்க்கிறோம் என்றால் அதற்கு இந்த இரு மன்னர்களிடம் இருந்த
அண்ணாமலையார் மீதான பக்தியே காரணமாகும். எத்தனையோ மன்னர்கள் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா
மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும்
இல்லாமல் தவித்ததுதான்.

திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார், அவரை தன் தந்தையாக ஏற்றுக்
கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார்.

அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில்
செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார். ஒரு

மகன், தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை அண்ணாமலையார் செய்து வருகிறார்.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.2.18

அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?


அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

1
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
2
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
3
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
4
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
5
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
6
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
7
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
8
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
9
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
10
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.2.17

வாரணாசியின் வரலாறு!


வாரணாசியின் வரலாறு!

*காசியை பற்றி உங்களுக்கான சில சுவாரிசியமான தகவல்கள் :*

பனாரஸ் என்று இன்று நாம் சொல்லும் ஊர் கங்கை கரைக்கு அப்பால் விரிந்து கிடக்கும் மாநகரம்.

 பட்டுநெசவும், பாத்திரங்கள் உற்பத்தியும் பெருகிய தொழில்நகரம். அதற்கும் கங்கை கரையோரம் இருக்கும் பழைய காசிக்கும் தொடர்பில்லை.

பனாரஸ் வாசிகள் பழைய காசிக்கு வருவதில்லை. இங்கே உள்ளவர்கள் பெரும்பாலும் வேறு பகுதியைச் சார்ந்தவர்கள். அன்றாடம் வந்து குவியும்
பயணிகள். அவர்களுக்குச் சடங்குகள் செய்து வைக்கும் புரோகிதர்கள். சிறுவணிகர்கள். பெரும்பாலும் எல்லா இந்திய சாதியினருக்கும் காசியில் தனியான மடங்கள் உண்டு. அவர்கள் அங்கே வரும்போது தங்குவதற்காக. தமிழகத்தின் முக்கியமான சைவ மடங்களுக்கு காசியில் கிளைகள் உண்டு. முன்பெல்லாம் இளைய தம்புரான் காசியில்தான் இருப்பார். பெயருடன் காசிவாசி என்று போட்டுக் கொள்வார்கள். குமரகுருபரர் நெடுங்காலம் காசியில் வாழ்ந்தவர். குமரகுருபரர் மடம் என்றே தனியாக இருக்கிறது.

 எல்லா மாநிலத்தவர்களுக்கும் அவர்களுக்குரிய பிராமணர்கள் உண்டு. தமிழ் அய்யர்களின் ஒரு சமூகமே காசியில் இருக்கிறது. காசி அழகற்ற
நகரம். அதன் நெரிசலுக்கு ஈடு இணையே கிடையாது. காரணம் இன்றைய வண்டிகள் ஏதும் பழக்கத்துக்கு வராத மிகப் பழங்காலத்தில் அதன்

பெரும்பகுதி உருவாக்கப்பட்டுவிட்டது. மிக மிக குறுகலான சந்துகளான் ஆனது காசி. சந்துகள் எல்லாம் எப்படியோ கங்கையின் படிக்கட்டு ஒன்றை
நோக்கி சென்று இறங்கும். தெருக்கள் கடப்பைக்கல் பாவப்பட்டவை. பெரும்பாலான சந்துகளில் மனிதர்கள் மட்டுமே நடக்க முடியும். சற்றுப் பெரிய

சந்துகளில் சைக்கிள் ரிக்ஷாக்கள் நகரும். சைக்கிள் ரிக்ஷாக்கள் தான் இப்பகுதியின் அதிகமாக உள்ள வாகனங்கள். ஆனால் காசியளவுக்கு சுவாரஸியமான இன்னொரு நகரம் இந்தியாவில் இல்லை. பலவகையான மக்கள் வந்து குழுமியபடியே இருக்கிறார்கள்.

தெருக்களில் எப்போதும் ஆர்வமூட்டும் ஒரு விசித்திர முகம் தென்படும். சின்னச்சின்ன சந்துகளில் வாழ்க்கை நுரைத்துக் கொந்தளிக்கிறது. மக்கள்
மீது பாசம் கொண்ட ஒருவன் காசியை எப்படியோ விரும்ப ஆரம்பித்துவிடுவார்.

காசி மரணத்தின் நகரமும் கூட. இங்கே மரணம் தான் முக்கியமான தொழில் முக்கியமான பேசு பொருள். பொழுதுபோக்கும் மரணம் தான். காசி
என்றாலே பிரபலமான *மணிகர்ணிகா கட்,* *அரிச்சந்திர கட்* என்ற இரு பெரும் சுடலைப் படிக்கட்டுகள் தான் நினைவுக்கு வரும்.

 காசியில் ஒருபோதும் சிதை அணையக்கூடாது என்று ஒரு வரம் உள்ளதாம். காசிவாசி காலபைரவ மூர்த்திக்கு சிதைதான் பலி. அந்த வரம் இன்று
வரை இல்லாமல்லாகவில்லை. எப்போதும் சுடலைப்படிகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும். பிணங்கள் எரிய பிணங்கள் மஞ்சள் சரிகை மூடி
காத்து கிடக்கும். பிணங்களை சைக்கிளில் வைத்து கட்டியபடி சந்துகளில் ஓட்டி வருவார்கள். ஆட்டோ ரிக்ஷாக்களின் மேலே ஏற்றி வருவார்கள்.

சாற்றி வைத்து விட்டு அமர்ந்து டீ குடிப்பார்கள். காசியில் மரணம் அதன் பொருளை இழந்துவிட்டிருக்கிறது.

காசி அன்னியர்களின் நகரம். இந்தியாவெங்கும் இருந்து சாமியார்களும் பைராகிகளும் காசிக்கு தான் வந்து கொண்டிருக்கிறார்கள். விதவிதமான
சாமியார்களை இங்கே காணாலாம். அஹோரிகள் என்று சொல்லப்படும் கரிய உடை தாந்த்ரீகர்கள், நாகா பாபாக்கள் என்று சொல்லப்படும்
நிர்வாணச் சாமியார்கள் அவர்களில் உக்கிரமானவர்கள்.

 இதைத்தவிர உலகம் முழுக்கவிருந்து ஹிப்பிகள் நாடோடிகள் ஓரினச்சேர்க்கையாளர்கள் போதை அடிமைகள் காசிக்கு வந்தபடியே இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவருக்கும் காசியில் இடமிருக்கிறது.

காசி போதையின் நகரம். போதை என்றால் கஞ்சா அல்லது சரஸ் அல்லது ஃபாங். கஞ்சாகுடிக்கும் சிலும்பிகளை தெருவில் போட்டு விற்கிறார்கள்.

எங்கே கைநீட்டினாலும் கஞ்சா கிடைக்கும். மேலும் தீவிரமான போதைப் பொருட்களும் சாதாரணமாகக் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்..

காலையில் கடுங்குளிரில் நடக்கச்சென்றால் படித்துறை ஓரமாக சாமியார்கள் கஞ்சாவுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். காசி வைராக்யத்தின்
துறவின் நகரம். காசி பைத்தியத்தின் நகரம். காசி சுடலைச் சாம்பல் பூசிய பித்தனின் வாசஸ்தலம்.

காசியில் கலைகளும் இலக்கியமும் தத்துவமும் செழித்திருந்தன. இன்றும் காசி இவற்றின் தலைநகர் தான். கபீர் ரவிதாஸ், முன்ஷி பிரேம்சந்த்
போன்ற பல கவிஞர்கள் எழுத்தாளர்கள் இங்கே வாழ்ந்தார்கள். உஸ்தாத் பிஸ்மில்லா கான், ரவிசங்கர் போன்ற இசைமேதைகளின் நகரம் இது.

காசியின் தத்துவ சதஸுகள் புகழ்பெற்றவை.

 காசிவித்யாபீடம் இன்று காசி பல்கலைகழகமாக பெருகி வளர்ந்துள்ளது. பாரதி தன் தத்துவக் கல்வியை காசியிலேயே பெற்றார்.

காசியின் மொழி இந்தியாக இருந்தாலும் இங்குள்ள பூர்வீக மொழி போஜ்புரி தான். போஜ்புரி சம்ஸ்கிருதத்தின் அபப்பிரம்ஸ மொழி என்பார்கள்.

அவிமுக்தகா, ஆனந்தகானனம், மகாமசானம், சுரந்தானனன், பிரம்ம வர்த்தம், ரய்மகம் போன்ற பல பெயர்கள் காசிக்கு புராணங்களில் உண்டு.

 *ரிக் வேதத்திலேயே சிவருத்ரனின் இருப்பிடமாக காசி* குறிப்பிடப்பட்டிருக்கிறது.

*வாரணாசியின் வரலாறு:*

வாரணாசி மேல் படையெடுத்த முதன் அன்னிய ஆட்சியாளர் முகமது கஜினி [1033] பின்னர் முகமது கோரி. [1193] இவர்களால் இந்நகரம் முழுமையாக
அழிக்கப்பட்டு விட்டது.. சில வருடங்களுக்குள் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. அக்பர் காலத்தில் இந்நகரத்தை புதுப்பிக்க நிதியுதவியும் ஊக்கமும்

அளிக்கப்பட்டது. முகலாய கட்டிடக்கலை பாணியிலான படித்துறைகளும் அரண்மனைகளும் அமைந்தன. ஆனால் ஔரங்கஜீப் இந்நகரை அழித்து
இதன் பெயரையும் முகம்மதாபாத் என்று மாற்றினார்.

பின்னர் மராட்டியர்கள் காசியைக் கைப்பற்றினார்கள். இன்றுள்ள காசி மராட்டியர் காலத்தில் இடிபாடுகளில் இருந்து மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது.

மராட்டிய வம்சத்தவரான மன்னர் காசியின் சிற்றரசரானார். இவர்கள் காசியின் மறுகரையில் ராம்நகர் என்ற ஊரை நிறுவி காசியை ஆண்டனர்.
 பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்து சுதந்திரம் கிடைப்பதுவரை நீடித்தனர்.

இப்பொழுது இருக்கும் விஸ்வநாதர் கோயில் மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டது தான்..

 சிவப்புச்சாயமிடப்பட்ட சிறிய கோயில் அப்பகுதி இடிபாடுகளாகக் கிடந்து தன்னிச்சையாக உருவாகி வந்ததாகையால் மிகமிக நெரிசலானது.

கோயிலுக்கு இருவர் மட்டுமே இடிக்காமல் செல்லக்கூடிய சந்து வழியாகவே செல்லவேண்டும். கடுமையான போலீஸ் சோதனை. செல் ஃபோன்கள்
அனுமதி இல்லை.. அதிக கூட்டம் இல்லை என்றாலும் நெரிசல் இருக்கும்.

 காசியில் நாமே லிங்கத்துக்கு நேராக பூஜை செய்யலாம் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்த விதமான ஒழுங்கும் முறையும் இல்லாத இடம் இது. நெடுங்காலம் இடிபாடுகளாகக் கிடந்த பின் மீட்கப்பட்டு தன் போக்கில் உருவாகி வந்தது. இந்த இடத்தை கைப்பற்றி வைத்திருந்த

படகோட்டும் குகா சாதியினருக்கு இப்பகுதி மீது மேலாதிக்கம் உள்ளது. பாரம்பரியமான சடங்குகள் முறைகள் எல்லாம் மறைந்துவிட்டன.

நாடெங்கும் இருந்து வந்த பல்வேறு இன மக்கள் அவர்களுக்கு தோன்றிய வகையில் வழிபடுகிறார்கள். தொட்டு வணங்குவது தழுவ முற்படுவது
மேலேயே விழுந்துவிடுவது எல்லாம் உண்டு.

காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஔரங்கஜீப் பழைய கோயிலை இடித்துக் கட்டிய பழைய மசூதியின் கும்பம் உள்ளது. அதற்கு கடுமையான
போலீஸ் காவல் போடப்பட்டிருக்கிறது.

அருகே விசாலாட்சி அன்னபூரணி ஆலயங்கள் இருக்கிறது..

தஸாஸ்வமேத காட்டில் ஏழரை மணிக்கு கங்கா ஆர்த்தி சடங்கு உண்டு. கங்கையை தெய்வமாக உருவகித்து அப்படித்துறையை கருவறையாக ஆக்கி செய்யபபடும் விரிவான பூஜைதான் அது. சங்கு ஊதி மலரும் தூபமும் காட்டி விளக்கால் ஆரத்தி எடுக்கிறார்கள். ஐந்து இளம் பூசாரிகள் ஒரு நடனம் போல நிதானமாக ஒத்திசைவுடன் செய்யும் இந்த பூஜை ஒரு அழகிய கலைநிகழ்ச்சி போலவும் இருக்கும். ஏராளமான பேர் கூடுவார்கள். கங்கையின் பழைமையும் அதன் மாட்சியும் நம் நினைவில் இருந்தால் இது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்ச்சியே.
--------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!