என்னதான் எழுதிப் போடட்டுமே; எழுதியதை திருட்டுக் கொடுக்கட்டுமே!!!
என்னதான் எழுதிப் போடட்டுமே
எழுதியதை திருட்டுக் கொடுக்கட்டுமே
இணையத்தின் விதியதை உணரட்டுமே
என்னாளும் கலக்கம் கொள்ளட்டுமே!
(புரட்சித்தலைவரின் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்னும் பாடலை கொஞ்சம் உல்டா செய்து எழுதியுள்ளேன்)
இணையத்தில் எழுதுவது என்பது ஒரு இளம் பெண் திறந்த வெளியில் குளிப்பதற்குச் சமமானது. ஒரு இளம் பெண், அதுவும் அழகான இளம் பெண் திறந்த வெளியில்தினமும் குளித்தால் என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியும். நான் அதை விவரிக்க வேண்டியதில்லை.
2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வகுப்பறையில் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆறு ஆண்டுகளில் இதுவரை 1277 பதிவுகள வெளிவந்துள்ளன
3,654 தொடர்பாளர்களும், கூகுள் ரீடர் வழியாகப் படிப்பவர்களுமாக சுமார்
5, 000 வாசகர்கள் எனக்குக் கிடைத்துள்ளார்கள். அது மகிழ்ச்சி தரும் விஷ்யம். அதே நேரத்தில் என்னுடைய ஆக்கங்கள் அனைத்தும் திருட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. அது மகிழ்ச்சி தரும் விஷயமல்ல. திருடுகிறவர்கள் அவற்றைத் தாங்கள் எழுதியதைப் போன்று தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான், என் அரிய நேரத்தைச் செலவழித்து இரண்டு மணி நேரம் அல்லது அதற்கு மேலான நேரத்தில்
எழுதுவதை, திருடர்கள் ஜஸ்ட் லைக் தட் என்று 2 நிமிடங்களில் copy & paste முறையில் எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். அதனால் என்ன ஆதாயம் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!
நமது வகுப்பறைக் கண்மணிகள் பலர் எனக்குத் திருட்டுக்களைச் சுட்டிக் காட்டினார்கள் (முன்பு வந்த, அவர்களுடைய கடிதங்களில் சிலவற்றை, உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.)
Right side click செய்து பிரதி எடுப்பதைச் சாத்தியமில்லாதபடி செய்து வைத்திருக்கிறேன். ஆனால் திருடர்களுக்கு வேறு வழிகள் உள்ளன. அந்த வழியாக வந்துதிருடிக்கொண்டு போய் விடுகிறார்கள். நமது வலைப் பதிவை, உறுப்பினர்களுக்கு மட்டும் என்று வரையறுத்துவிடலாம். ஆனால் நூறு பேர்களை மட்டும் தான் உறுப்பினர் ஆக்க முடியும். கூகுள் ஆண்டவர் அதற்கு மட்டும்தான் அனுமதியளிப்பார்.
நம்து வகுப்பறை நண்பர் சித்தூர் முருகேசன் அவர்கள் பூட்டுப் போட்டு வையுங்கள் என்று அறிவுறுத்தினார். வலைத்தளங்களுக்கு எப்படிப் பூட்டுப் போடுவது? ஆகவே மேல்நிலைப் பாடங்களையும், அஷ்டகவர்கப் பாடங்களையும் தனி இணைய தளங்களில் (My own websites) எழுதி வருகிறேன். அங்கேயும் திருடர்கள் நுழைய முடியாதபடி எச்சரிக்கையாக இருக்கிறேன்.
------------------------------------------------------------------
திருட்டைப் பற்றி வந்த வாசகர் கடிதங்களில் சில:
1
Rajaramarunagiri <...............@gmail.com>
12 Apr’ 2012
to spvrsubbiah, me
பெரு மதிப்பிற்குரிய ஆசிரியர்,
அவர்களுக்கு தங்களது வகுப்பறையிலிருந்து சில ஆக்கங்களை ஒரு உத்தமர் திருடிக்கொண்டுபோய் அவரது வலைத்தளத்தில் தான்
உருவாக்கியது போல் மேக்கப் போட்டுள்ளார்.அந்தத் தளத்தின் முகவரி http://jothidamkarka.blogspot.com/2012/01/blog-post.html இது தாங்களும் சென்று
பாருங்கள்.எல்லாமே பகல்கொள்ளையாக இருக்கிறது. அடுத்தவர் உழைப்பைத் திருடி வெறும் cut&Paste மட்டுமே செய்துள்ளார்.வேண்டுமானாலும் ஒன்று செய்யலாம்
select செய்யாதவாறு செய்தால் copy யும் செய்யமுடியாது.
Yours Friendly,
Rajaram.AR
-----------------------------------------------------------
2
தங்கள் வலைத்தளத்தில் இருந்து பதிவுகள் திருடு போகின்றன
திருட்டுக்கள்
x
Bhuvaneshwar ||| Dharmalingam <.................................@gmail.com>
11 May’ 2012
to me
அன்பரே, வணக்கம்,
தங்கள் வலைத்தளத்தில் இருந்து பதிவுகள் திருடுபோவதாக நான் எண்ணுகிறேன்.இதோ, உதாரணமாக: http://www.amanushyam.com/2012/05/blog-post_3461.html .... யதிர்சையாக பார்த்தேன்...... சொல்ல வேண்டும் யென
தோன்றியது......எதையாவது பண்ணி, copy paste பண்ணுவதை தடுங்கள். சில blog களில் இந்த வசதியை நான் பார்த்து இருக்கிறேன். எப்படி என தெரியாது எனக்கு. தெரிந்தால் சொல்லி விடுவேனே........
Best Regards,
Bhuvaneshwar Dharmalingam

3
srinivasan <........................@yahoo.com>
12/09/2011
to me
Dear sir,
Today I had some free time & I am aware that our classroom lesson is closed for one week. But with Google help just I was roaming in the web World & observed your lessons are copied by one blog named after AKGUPTA. I have observed even the words are also same Dito of our classroom lessons.Please take care about this fellow.
Thanks & Regards
G.Seenivasan
-------------------------------------------------------------
4
S.Prabhu Navaneethakrishnan <..................................@gmail.com>
20/04/2011
Hello Sir,
Hope all is well. I'm one of the student who is following your blog from 2008 and dormant for a while due to work. I happened come across this site in which he copied some of our articles. Though he has some articles of his own, I feel its my responsibility to let you know this. http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=6484
God Bless you.
S.Prabhu Navaneethakrishnan <................................@gmail.com>
--------------------------------------------------------------
நான் அவ்வாறு வந்த கடிதங்களுக்கு இப்படிப் பதில் எழுதினேன்:
இணையத்தில் பாதிப்பேர் அடுத்தவர்களுடைய எழுத்துக்களைத் திருடித் தங்களுடையதைப்போலப் பதிவிட்டுக்கொள்கிறார்கள். அற்பர்கள். அவர்கள் மேல் நடவடிக்கை எல்லாம் சாத்தியமில்லை. இணையத்தில் எழுதுவது ஒரு பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமம். ஒருவர் மட்டுமல்ல. நிறையப் பேர்கள் திருடிப் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்தின் துணையோடு போராடலாம். தற்சமயம் அதற்கு நேரமில்லை.நமது மண்ணில் அது சாத்தியமுமில்லை. உங்களின் தகவலுக்கு நன்றி!
-----------------------------------------------------------------
இதுவரை 622 ஜோதிடப் பாடங்களை எழுதியுள்ளேன். அவை அனைத்தும் படிப்பதற்கும் கிடைக்கும், திருடிக்கொண்டு போவதற்கும் கிடைக்கும்.
ஜோதிடம் பொதுவானதுதான். எனக்கு மட்டும் சொந்தமானதில்லை. ஒவ்வொருவரும் பழைய ஜோதிட நூல்களைப் படித்து, தங்கள் சொந்த நடையில் எழுதினால் அல்லது கற்பித்தால் தவறில்லை. அடுத்தவனுடைய ஆக்கத்தை, எழுத்தைக் கூசாமல் திருடுவது எப்படி நியாயம் ஆகும்?
ஜோதிடம் பெரிய கடல். இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமென்றாமல் சுவாரசியம் குறையாமல் தொடர்ந்து எழுதலாம். ஆனால் இப்படி அநியாயமாகத் திருடிக் கொண்டுபோனால் என்ன செய்வது?
தனி இணையதளங்களான classroom2012 & classroom337 ஆகிய இரண்டிலும், பாடங்கள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த 3 இடங்களிலும் எழுதுவதைச்
சிரமாகக் கருதுகிறேன். நேரம் இனமை, மின்வெட்டு ஆகியவை முக்கியமான காரணங்கள். அத்துடன் எனது வியாபார மற்றும் சொந்த அலுவல்கள் எல்லாம் பாதிப்பிற்கு உள்ளாகின்றன
புத்தாண்டில் ஒரு இடத்தில் மட்டுமே எழுத முடியும் என்னும் நிலைமை!
இன்னும் 5 தினங்களில் புது ஆண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டில் ஏதாவது செய்ய நினைக்கிறேன்.
தொடர்ந்து எழுதலாமா? அல்லது வேண்டாமா?
வகுப்பறையை மூடிவிடலாமா?
அல்லது வகுப்பறையில் ஜோதிடத்தைத் தவிர்த்து வேறு எதையாவது எழுதலாமா?
உங்களுடைய மேலான ஆலோசனை வரவேற்கப்படுகிறது?
எனது மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com.
அக்கறை, ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் உங்களுடைய மேலான கருத்துக்களை எழுதுங்கள்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++