மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label classroom. Show all posts
Showing posts with label classroom. Show all posts

3.3.23

Astrology திருமணம் ஏன் தள்ளிக்கொண்டே போகிறது?




classroom AStrology
Kalakkal Lessons 
Lesson No0.10
Dated 3-3-2023

திருமணம் ஏன் தள்ளிக்கொண்டே போகிறது?

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் ஆண், பெண் இருபாலருமே திருமணத்தைத் தள்ளிக்கொண்டே போகிறார்கள். ஒரு கால கட்டத்தில் 
அவர்கள் விரும்பினாலும் கூட திருமணம் அவர்களை விட்டுத் தள்ளியே நிற்கிறது.

என்ன காரணம்? எல்லாம் கிரகக் கோளாறுகள்தான்!

முன் காலத்தில் பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும், ஆணிற்கு 21 வயதிலும் திருமணத்தைச் செய்து வைத்தார்கள். இப்போது படிப்பு, வேலை வாய்ப்பு, 
பொருளாதரத் தன்னிறைவு அதாவது பணம் சேர்த்து செட்டிலாக வேண்டும் என்ற நினைப்பு போன்றவற்றால் பலருக்கும் 
முப்பது வயதைக் கடந்தும்கூடத் திருமணங்கள் கூடி வரவில்லை.

யாராக இருந்தாலும் 25 வயதிற்குள் திருமணம் ஆக வேண்டாமா?

ஜாதகப்படி தாமதமான திருமணங்களுக்கு என்ன காரணம் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்!

1. ஏழாம் அதிபதி, அதாவது ஏழாம் வீட்டுக்காரன் பலவீனமாக (வீக்காக) இருந்தால் திருமணம் தாமதமாகும். பலவீனம் என்பது நீசமாகி நிற்பதைக் குறிக்கும்.
உதாரணத்திற்கு துலா லக்கின ஜாதகத்திற்கு ஏழாம் அதிபதி செவ்வாய். அவன் அந்த ஜாதகத்தில் நீசம் பெற்றுக் கடக ராசியில் அமர்ந்திருப்பது, தீமையானது.
திருமணம் தாமதமாகும்.

2. அதுபோல களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாக இருந்தாலும் திருமணம் தாமதமாகும்

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகள் இரண்டை மட்டும் கூறியுள்ளேன். இன்னும் சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.2.23

Astrology பொன்மகள் எப்போது வருவாள்?


Classroom Lessons
Kalakkal Lessons
Lesson No.10
27-2-2023
கலக்கல் பாடங்கள்
Astrology பொன்மகள் எப்போது வருவாள்?

1970ஆம் ஆண்டு திரைக்கு வந்த சொர்க்கம் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பிரபலமான பாடல் ஒன்று கீழே உள்ள வரிகளைக்கொண்ட பல்லவியுடன் துவங்கும்:

“பொன்மகள் வந்தாள்
பொருள்கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சும் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே!”

அதே பாடலின் சரணத்தின் கடைசி பத்தியில் இப்படி எழுதியிருப்பார்:

“செல்வத்தின் அனைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
இன்பத்தின் மனதிலே குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்”
-------------------------------------------
செல்வத்தின் அனைப்பில் கிடக்க அனைவருக்கும் ஆசைதான். ஆனால் நடக்க வேண்டுமே? செல்வத்த்தின் அனைப்பில் இருப்பவன் கூட வெல்வெட்டின் விரிப்பில் நடப்பதும் கிடையாது. சுகத்தில் மிதப்பதும் கிடையாது. வந்த செல்வத்தை விடாமல் தக்க வைத்துக்கொள்ளும் அவதியில் பலர் இருக்கிறார்கள்
சாதாரண மனிதனுக்குக் கிடைக்கும் சுகம் கூட பெரிய செல்வந்தனுக்குக் கிடைப்பதில்லை. செல்வம் வந்தவுடன் கூடவே கஞ்சத்தனமும் வந்துவிடும்!
ஸ்ரீதேவி வந்தால் கூடவே அவளுடைய அக்கா மூதேவியும் வந்துவிடுவாள். அக்காவை உள்ளே விடக்கூடாது. அப்போதுதான் வந்த செல்வத்தால் பயன்பெற முடியும். சுகப்பட முடியும்!

அதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன்.

இப்போது பாடத்தைப் பார்ப்போம்!
-------------------------------------------------
சொகுசான வாழ்க்கைக்கான கிரக அமைப்பு: (Planetary position for luxurious life)

1
சுகாதிபதியும், பாக்யாதிபதியும் ஒன்று சேர்ந்து லக்கினத்தில் குடியிருந்தால், ஜாதகன் செள்கரியமான சொகுசான வாழ்க்கை வாழ்வான். 
அதாவது 4ஆம் அதிப்தியும், ஒன்பதாம் அதிபதியும் ஒன்று சேர்ந்து லக்கினத்தில் இருக்க வேண்டும் (This combination will confer a luxurious life)

2
குரு பகவான் 4ஆம் வீட்டில் அமர்ந்திருக்க வேண்டும். அல்லது 4ஆம் வீட்டை நேரடியாகப் பார்க்க வேண்டும். 
அல்லது 4ஆம் வீட்டு அதிபதியுடன் கூட்டாக கேந்திரத்திலோ அல்லது திரிகோண வீட்டிலோ அமர்ந்திருந்தால் ஜாதகன் வாழ்க்கை 
செல்வமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்

3. 
நான்காம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் பரிவர்த்தனையாகி, ஒருவர் வீட்டில் மற்றவர் அமர்ந்திருந்தாலும், வாழ்க்கை 
செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமானதை மட்டும் கூறியுள்ளேன். இன்னும் பல விதிமுறைகள் உள்ளன. அவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.2.23

Astrology யார் யார் எங்கே இருக்கக்கூடாது?


யார் யார் எங்கே இருக்கக்கூடாது?

நமக்கு வேண்டியவர்கள் வேண்டாத இடத்தில் இருக்கக்கூடாது. வேண்டாதவர்கள், நமக்கு வேண்டிய இடத்தில் இருக்கக்கூடாது.

ஜோதிடத்தில் சுபக்கிரகங்கள் மூவர். சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியோர் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். அவற்றுள் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் மிகவும் நல்லது. அத்துடன் தனித்திருக்கும் அதாவது தீய கூட்டணி இல்லாத புதனும் நமக்கு வேண்டியவர்தான். அவர்கள் நல்ல இடங்களில் இருக்க வேண்டும். அதாவது கேந்திரம் அல்லது திரிகோண வீடுகளில் இருக்க வேண்டும். அதோடு ஒருவருக்கொருவர் எழில் இருந்தாலும் நல்லதுதான்.

அத்துடன் அவர்கள் காரகர்களை விட்டு விலகியும் இருக்ககூடாது.

குரு தனகாரகன். சந்திரன் மனகாரகன். இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால் பணம் இருந்தாலும் அல்லது பணவரவு இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது.

அதேபோல சூரியன் உடல்காரகன். அவருக்கு எட்டில் குரு சென்று அமரக்கூடாது. உடல் நலத்திற்கு அவருடைய ஆசீர்வாதம் வேண்டுமல்லவா?

சனியும், சுக்கிரனும் நண்பர்கள். சனி கர்மகாரகன். சுக்கிரன் சுகபோகங்களுக்கு அதிபதி. இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால், ந்ல்ல வேலை அல்லது தொழில் அமைந்தாலும், அது நாம் சுகப்படும்படி இருக்காது.

அத்துடன் அரசகிரகமான சூரியனுக்குக் கேந்திர வீடுகளில் அதாவது 4, 7 மற்றும் பத்தில் ராகு இருக்கக்கூடாது. நமக்கு சூரியனால் கிடைக்ககூடிய அரச செல்வாக்குள், பெயர், புகழ் ஆகியவற்றை ராகு கிடைக்காமல் செய்து விடுவான்

இதை எல்லாம் யார் சொன்னது?

வேறு யார் சொல்வார்கள்? நம் முனிசாமி (அதாங்க நம் முனிவர்களில் ஒருவர்) சொல்லியிருக்கிறார்.  அவர்களுக்குத்தான் எதையும் உரையாகச் சொல்லும் பழக்கம் இல்லாததால், பாடலாகச் சொல்லியிருக்கிறார். பாடல் கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்

குடியவனாட்சியாகக் குருவுதையத்தினிற்க

அடியவனுக்குச் சமமாகியவர்க் கேழில்ப் பிறையுதிக்க

வெடியவன்காரி சேய்க்கு விண்ணரவியவரைப்பாரார்

கொடியிடைனிற்பனூறாய்க் குறியிதுப்பாமாதே!

குருவுக்கு எட்டாமிடத்தில் சந்திரனும் இருக்கலாகாது

சூரியனுக்கு எட்டில் குருவும் இருக்கலாகாது

சனிக்கு எட்டில் சுக்கிரனுமிருக்கலாகாது

சூரியனுக்கு ஏழாம் இடத்திலும் நான்காமிடத்திலும் ராகுவும் இருக்கலாகாது

----------------------------------------------

அடுத்த பாப்கார்ன் பொட்டலம் நாளைக்கு! அதுவரை பொறுத்திருங்கள்

அன்புடன்

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.1.23

வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு ஏனப்பா வம்பு செய்கிறாய்?


வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு ஏனப்பா வம்பு செய்கிறாய்?

பாவ சந்திப்பில் இருக்கும் கிரகத்திற்கு என்ன சாமி பலன்?

ஒரு பாவத்திற்கு அல்லது ஒரு வீட்டிற்கு அல்லது உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பது உங்களுக்குத் தெரியும்.

ஒரு வீட்டின் முடிவுப் பகுதியில் அதாவது 28 பாகைகள் அல்லது அதற்கு மேலான பாகையில் இருக்கும் கிரகம் பாவசந்தியில் இருப்பதாகக் கொள்வார்கள். அதாவது ஒரு பாவத்திற்கும் அடுத்த பாவத்திற்கும் இடையில் இருப்பதாகக் கொள்வார்கள். Border Postion என்று கொள்ளலாம். சில ஜாதகங்களில் இந்த நிலைமை இருக்கும்.

அதாவது வீட்டிற்கு உள்ளேயும் இல்லாமல் அல்லது வெளியேயும் இல்லாமல், நிலைப்படி அருகே உட்கார்ந்திருக்கும் நிலைமை.

திருக்கணிதம் அல்லது வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜாதகங்களைக் கணிக்கும்போது, இந்த நிலைப்படி கிரகங்கள் படுத்தி எடுக்கும்.

ஒரு அட்டவணையில் (Chart) சிம்மத்தில் இருக்கும் கிரகம் அடுத்த அட்டவணையில் (Chart) கன்னியில் இருப்பதாகக் காட்டும். ஜாதகன் குழம்பிப்போவான்.

எதை எடுத்துக்கொள்வது?

நம் முனிசாமிகள் (அதாங்க நம் முனிவர்கள்) எழுதி வைத்துவிட்டுப்போனபடி வாக்கிய பஞ்சாங்கக் கணிப்புக்களையே எடுத்துக்கொள்வது நல்லது.

பாவசந்திப்பில் இருக்கும் கிரகம் எவ்வாறு பலன் கொடுக்கும்?

ஒரு பாவத்தின் மத்தியில் இருக்கும் கிரகம அந்த பாவத்திற்கு உரிய முழுப்பலனையும் கொடுக்கும். அதாவது உதாரணமாக ஒன்பதாம் வீட்டின் மத்தியில் இருக்கும் கிரகம்  தன் தசாபுத்தியில் தனக்குரிய பலனை முழுமையாகக் கொடுக்கும். (Both by placement and by ownership) 

உதாரணமாக ஐந்தாம் வீட்டு அதிபதி குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் (திரிகோண வீடு) அமர்ந்திருந்தால், ஐந்தாம் வீட்டிற்கான பலனையும், ஒன்பதாம் வீட்டிற்கான பலனையும் ஒருசேரத் தன்னுடைய தசாபுத்திகளில் தருவார். அதேவீட்டில் அவர் வாசற்படியில் அமர்ந்திருந்தால் பலன்கள் வெகுவாகக் குறைந்துவிடும். மத்தியப் பகுதியில் இருந்து வாசற்படி நோக்கி ந்கர ந்கரவே அதற்குத் தகுந்தாற்போல பலன்கள் குறைந்து கொண்டே வரும் 

ஆசாமி வாசற்படியில் அமர்ந்திருப்பதைக் கவனிக்காமல் பலன் சொன்னால, பலன்கள் தவறாகிப் போகும்.

ஏழாம் வீட்டில் சுபக்கிரகம் இருப்பதைப் பார்த்துவிட்டு, உனக்கு நல்லமனைவி, நீ விரும்பும்படி அழகான மனைவி கிடைப்பாள் என்று ஜோதிடர் சொன்னதை வைத்து, நம்ம நாயகன்  ஊ...லல்லல்லா என்று கனவுலகில் பாடிக்கொண்டிருப்பான். ஆனால் அதே சுபக்கிரகம் அந்த வீட்டின் வாசற்படியில் இருந்தால், அவன் பாட்டு திருமணத்தோடு முடிவிற்கு வந்து விடும். தொடராது! அதாவது ஜோதிடர் சொன்னது தவறான கணிப்பாகிவிடும்!

அர்த்தமாயிந்தா சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.8.22

*திருப்புமுனை* *Turning Point*

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Ten
Date 1-8-2022
New Lessons
பாடம் எண் 10

 *திருப்புமுனை* 
   *Turning Point* 

திருப்புமனை எனபது நம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள். என்று  வைத்துக் கொள்ளுங்கள்

படித்து முடித்தவுடன. வேலை கிடைத்து வேலையில் சேர்ந்து சம்பாதிக்கத் துவங்குவது

திருமணம் முடிந்து குடும்ப வாழ்க்கையைத் துவங்குவது

இடம். வாங்கி நம் கனவு வீட்டைக. கட்டத. துவங்குவது
போன்ற நிகழ்வுகள் என்று வைத்துக் கொள்ளுங்கள்

 ஒரு இசை மேதையின் பிறந்த ஆண்டை வைத்து அதை உங்களுக்கு விளக்குகிறேன்

அவர் பிறந்த ஆண்டு 1943

அதன கூட்டல் தொகை 
1943
     17
------------
1960 
     16
-------------
1976
     23
------------
1999
     28
+-----------------+

1960ம்  ஆண்டுவரை தனது கிராமத்தில் வசித்து வந்த அவர், தனது சகோதர்களுடன் கிளம்பி ஊர. ஊராகச் சென்று கம்யூனிஸ்ட்  கூட்டங்களில. மேடைக் கச்சேரிகள் செய்யத் துவங்கினார.
கைக்கும் வாயக்குமான  அளவில்தான் வருமானம்
கஷ்டப்பட.டார்கள்
அந்தக் கஷ்டத்திலும் வாய்ப்பாட்டு, ஹார்மோனியம் கிட்டார. மோன்று பல வாத்தியக் கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார்

சில இசை அமைப்பாளர்களின் குழுக்களில் சேர்ந்து பணியாற்றினார்

16 ஆண்டுகள்  கழிந்தன்  அவர் வாழ்க்கையில் அதிரடியான திருப்புமுனை ஏற்பட்டது

 பஞ்சு அருணாசலம் அவர்களின் அன்னக்கிளி படத்திற்கு இசை அமைக்கும் பாக்கியம் கிடைத்தது
பாடல்கள்  அனைத்தும் சூப்பர் ஹிட்.
ராஜா இசை உலகின் உச.சத்திற்கே சென்று விட்டார்
பிறகு நடந்த்தெல்லாம் அனைவருக்கும. தெரியும்

இதுபோல் நீங்களும் உங்கள் பிறந்த ஆண்டின் கூட்டல் தொகையைப் போட்டுப் பார்த்து நடந்த திருப்பு முனைகளையும் நினைத்துப் பாருங்கள்

சரியாக இருந்தால். பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.7.22

Star Lessons Lesson number nine

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number nine
Date 29-7-2022
New Lessons
பாடம் எண் 9

லக்கினத்தில் ராகுவும் 7ல் கேதுவும் இருப்பது குறையா?

 ஆமாம்
இந்த அமைப்பில் திருமணம் தாமதமாகும்
பொதுவாக 27 வயதிற்குமேல்தான் திருமணம் ஆகும்  சிலருக்கு 30 வயதிற்கு மேல்தான் திருமணம் கூடிவரும்
[
ஜோதிடம. அறிந்த பெற்றோர்கள் 7ம வீட்டில் கேது இருப்பதைப் பாரத்தவுடனேயே அந்தப் பெண்ணை வேண்டாம் என்று கூறிவிடுவார்கள்

7ம வீடு திருமண வாழ்க்கைக்கான வீடு. அங்கே கேது இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது ( இது பொது விதி)

மேலும் 7ம் வீட்டில் இருக்கும் கேதுவால் உடல் நலம் கெட்டு நோய் நொடிகளால் அவதிப்பட நேரிடும்
(இதுவும் பொது விதி)

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.7.22

Star Lessons Lesson number eight

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number eight
Date 19-7-2022
New Lessons
புதிய பாடம்
பாடம் எண் எட்டு

மாந்தியைப  பற்றிச் சொல்லுங்கள்
மாந்தி 
எங்கே இருந்தால் நல்லது?

மாந்தி 11ம் வீட்டில் இருந்தால் போதும் உபத்திரவங்கள் இருக்காது்

2ம் வீட்டில் இருக்கக்கூடாது.
குடும்ப வாழ்க்கைக்குக் கேடு. குடும்பம் நடத்த விடாது்
It is house of family affairs
கணவனும் மனைவியும் பார்க்கும் வேலையின் காரணமாக வெவ்வேறு ஊர்களில் வசிக்க நேரிடும்.

சில வீடுகளில. மனைவியை இங்கே விட்டு விட்டு கணவன் துபாய்க்குச் சென்று வேலை பார்ப்பான் 
இப்படிச்சொல்லிக் கொண்டே போகலாம்

சிலருக்கு குடும்ப வாழ்க்கை அமைந்தாலும் மாந்தி கடுமையான பணப்பிரச்சினையை உண்டாக்கிவிடுவான்
2ம். வீடு பணத்திற்கான வீடும் அல்லவா?
It also the house of finance
ஜாதகனை பணத்திற்காக அல்லாட வைத்துக்கொண்டு இருப்பார்

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.7.22

Star Lessons Lesson number Seven


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Seven
Date 18-7-2022
New Lessons
பாடம் எண். ஏழு

கோச்சாரத்தைவிட  திசை, புத்திகள் தான் முக்கியம் அவைகளதான் பலன்களை வாரி வழங்க்க்கூடியவை என்கிறீர்கள்

திசை புத்திகளில. சுப கிரகங்களின் புத்திகள் (Sub periods of benefic planets) நன்மையானதாக இருக்குமா? நாம் மகிழ்ச்சியோடு இருப்போமா?

தசா நாதனும், புத்திநாதனும் ஒரவருக்கொருவர்
சரியான அமைப்பில் இருக்க வேண்டும்
அஷ்டம சஷ்டம அமைப.பில் இருக்கக்கூடாது
அதாவது ஒருவருக்கு 6ம் இடத்தில் மற்றவரும், அவருக்கு எட்டாம் இடத்தில் இவரும் இருக்கக்கூடாது
அதேபோல் 1/12 நிலைபாட்டிலும் இருக்கக்கூடாது
அப்படி இருந்தால் அந்த காலகட்டம் நன்மையானதாக இருக்காது

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.7.22

Star Lessons Lesson number Six

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Six
Date 16-7-2022
New Lessons
பாடம் எண் ஆறு

சனீஷ்வரனும் ராகுவும் தீய கிரகங்கள் என்பது தெரியும்
இரண்டிற்கும் என்ன வித்தியாசம்   என்பதைச் சொல்லுங்கள்

சனீஷ்வரன் நிற்க வைத்து அடிப்பார். ராகு தொங்கவிட்டு அடிப்பார்

விளக்கம் போதுமா?
[
ஜாதகத்தில் ராகு எங்கே இருக்கக்கூடாது?

 4ம் வீடு தாய், கல்வி, ஆகியவற்றிறகான  இடம் அவற்றை விட முக்கியமாக சுக ஸ்தானம் It is house of Comforts  சுக ஸ்தானம் ராகு அங்கே இருப்பது சுக்க் கேடு் 
ஜாதகனுக்கு எந்த சுகமும் இருக்காது. 

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.7.22

Star Lessons Lesson number Five

✴️✴️✴️✴️✴
Star Lessons
Lesson number Five
Date 15-7-2022
New Lessons
பாடம் எண்5

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன், அது நல்ல ஜாதகமா, ஜாதகன் அதிர்ஷ்டமானவன் தானா என்று சொல்ல முடியமா?

முடியும்

முதலில் லக்கினத்தைப் பாருங்கள்.
லக்கினம் பாபகர்த்தாரி யோகத்துடன் இருக்கக்கூடாது் அதாவது இரண்டு பக்கமும் தீய கிரங்கள் அமர்ந்திருக்கக் கூடாது.
லக்கினாதிபதி நீசமாகியிருக்கக்கூடாது.
அத்துடன் லக்கினாதிபதி 3_6, 8, 12ம. இடம் ஒன்றில்  டென்ட் அடித்து உட்கார்ந்திருக்கக் கூடாது
மேலும் சுப்கிரகங்களான குரு, சுக்கிரன், சந்திரன் ஆகிய 3 கிரகங்களும் நீசம் அடைந்திருக்கக்கூடாது் மறையக்கூடாது் 
தீய கிரகங்களுடன்  சேர்ந்து இருக்கக்கூடாது. அவைகளின் பார்வையிலும் படாமல் இருக்க வேண்டும்

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.7.22

Star Lessons Lesson no Four

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no Four
Date 14-7-2022
New Lessons
பாடம் எண் 4

வாழ்க்கையில் ஏற்றமான நேரம் அல்லது இறக்கமான நேரத்தை எப்படி தெரிந்து கொள்வது?

 சனீஷ்வரனின் கோள்சாரத்தை வைத்து அதைத் தெரிந்த கொள்ளலாம்

சனீஷ்வரன் இப்போது மகரத்தில் இருக்கிறார்
17-1-2023 அன்று இடம் பெயர்ந்து கும்ப ராசிக்குச் செல்கிறார்
மகரத்தில் எத்தனை பரவ்கள் என்று பாருங்கள்
28 பரல்களுக்கு மேலே இருந்தால்
ஏற்றமான காலம்தான் நடந்து கொண்டிருக்கிறது

28ற்குக் கீழான பரல்கள் என்றால் இறக்கமான காலம்

2023 ஜனவரிக்குப் பிறகு அடுத்து வரவுள்ள இரண்டரை ஆண்டுகள் எப்படி இருக்கும். என்று கணிப்பதற்கும் இதே கணக்குத்தான. சாமிகளா!!!!

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
---------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.7.22

Star Lessons Lesson number three



✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number three
Date 13-7-2022
New Lessons
பாடம் எண் 3

வேறுபாடு ஏன்?

நான் பூராட நட்சத்திரக்காரன் 
என் நண்பனும் பூராட நட.சத்திரக்காரன்

ஏழரைச் சனி என்னை படாதபாடு படுத்தியது
ஆனால் என் நண்பனுக்கு ஒன்றும் நேரவில்லை்
அவன் மகிழச்சியாக இருந்தான்
என்ன காரணம்?

சர்வாக அஷ்டகவர்க்கத்தில் கோச்சார சனி பயணிக்கும் இடங்களில் எங்கெல்லாம் 30 பரல்களும, அதற்கு மேற்பட்ட பரல்களும் இருந்தால் அந்த காலகட்டத்தில (அதாவது அந்த  இரண்டரை ஆண்டுகளில்) சனீஷ்வரனால் பாதிப்பு ஒன்றும் இருக்காது

விளக்கம போதுமா?
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.7.22

Star Lessons Lesson no two - New Lessons


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no two
Date 12-7-2022
New Lessons
பாடம் எண் 2

2ம வீட்டையும் 7ம் வீட்டையும் மார்க் ஸ்தானம் அதாவது மரணத்தைக் கொடுக்கும் இடம் என்கிறார்கள்
 
ஆனால் 2ம் வீடு செல்வத்திற்கான இடம் (House for Wealth) 
அதேபோல் 7ம் வீடு திருமண வாழ்க்கைக்கான வீடு ( House for married life)
அவைகள் எப்படி மரணத்தைக கொடுக்கும் ?
முரணாக இருக்கிறதே?

2ம் வீடும் 7ம் வீடும் எப்போதும் மரணத்தைக் கொடுப்பவை அல்ல
லக்கினத்திலுருந்து எட்டாம் வீட்டுக்.காரனும் அல்லது 12ம. வீட்டுக்காரனும் மரணத்தைக் கொடுக்கத் தவறும்போது அல்லது தாமதிக்கும்போது அந்த வேலையை  2 & 7ம் அதிபதிகள் செய்வார்கள்

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.7.22

Star Lessons Lesson number one - New Lessons


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number one
Date 11-7-2022
New Lessons
பாடம் எண் 1

2ம் வீட்டில் சனீஷவரன் இருப்பது கேடானது என்று சில ஜோதிடர்கள் கூறுகின்றார்கள்.
வேறு சிலர் நன்மையானது என்கிறார்கள்

எது சரி?

இரண்டுமே சரிதான்

அதெப்படி சார்?

சனீஷ்வரன் இரண்டாம் வீட்டில் வலிமையின்றி இருந்தாலும் ( அதாவது நீசமாக) அல்லது வேறு தீய -கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அது தீமையானது. அந்த அமைப்பு ஜாதகனை முட்டாளாகவும் வில்லனாகவும் ஆக்கிவிடும்

வலிமையாக இருந்தால் அதாவது அதிகமான பரல்களுடன் அல்லது சுப கிரங்கத்துடன் கூட்டாக இருந்தாலும் அந்த அமைப்பு ஜாதகனை படித்தவனாகவும் ஹீரோகவாகவும் ஆக்கிவிடும்

விளக்கம் பொதுமா?
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.6.22

பரோட்டாவின் வரலாறு




பரோட்டாவின் வரலாறு

என்ன பரோட்டாவுக்கெல்லாம் வரலாறா என்று யாரும் சண்டைக்கு வரவேண்டாம். வித்தியாசமான பரோட்டா சுவைகளை போலவே வித்தியாசமான வரலாறும் பரோட்டாவுக்கு உண்டு.
இந்தியா , பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ்,மாலத்தீவுகள் நேபாளம், இந்தோனேசிய என பலநாட்டு மக்களை வசீகரித்து உணவு பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பரோட்டா .

இதனை இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைக்கப்படுகிறது. பராத்தா என்கிற வார்த்தை சமஸ்கிருதச் சொல்லாகும்

சினிமா கதாநாயகன் போல பல அவதாரங்கள் எடுக்கும் வல்லமை கொண்டது

ஆலூ பரோட்டா, கொத்துப் பரோட்டா, மெலிதான வீச்சுப் பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிய மலபார் பரோட்டா, சிலோன் பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டைப் பரோட்டா, காலிஃப்ளவர் பரோட்டா என்று பல விதமான பெயர்களில் பல்வேறு சுவைகளில் உருவாகும் புரோட்டாவின் தாயகம் இலங்கை என்று சிலர் சொன்னாலும் அது இந்திய துணைக் கண்டத்தில் இருந்த இப்போதைய பெஷாவர் தான் புரோட்டாவின் தாய்மண் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் புரோட்டா மேல் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில் கோதுமை மாவில் நிறைய நெய் விட்டு செய்யப்பட்ட புரோட்டா இரண்டாவது உலகப்போரில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது மைதாவுக்கு மாறியது. அதோடு நெய்யையும் விட்டுவிட்டு எண்ணெய் ஊற்றி தயாரிக்கபட்டது.

எளிய மக்களின் உணவாக கருதப் படும் பரோட்டா ஜீரணமாக வெகுநேரம் பிடிப்பதால் உழைக்கும் வர்க்கத்தின் மக்கள் பரோட்டாவை விரும்பி உண்டனர்.அதிலும் சால்னா குருமா இருந்தால் சொல்ல வேண்டியதில்லை.
சரி நீ எல்லா கோடுகளையும் அழி நா முதல்ல இருந்தே ஆரம்பிக்கிறேன் என்று புரோட்டா தின்னும் நடிகர் சூரியின் காமெடியை யாரும் மறக்க முடியாது
-----------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.6.22

பரிகாரம் என்றால் என்னவென்று தெரியுமா?



பரிகாரம் என்றால் என்னவென்று தெரியுமா?

பரிகாரம் என்றால் உண்மையில் என்னஎன்றுதெரி(புரி)யாதவர்
களுக்காக இந்தக் கதை!

"எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை
எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” –
பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது.
பரிகாரம் தொடர்பான குட்டி கதை.

ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது.

அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.

அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து “ஐயோ… அம்மா” என்ற குரல் கேட்டது.

ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே… யாரையோ தவறுதலாக கொன்றுவிட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான்.

அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.

“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே” என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, “இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்கவேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்
.
வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர்.

கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.
“இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்
.
மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, “என்னை மன்னித்துவிடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை. அறியாமல் நடந்த தவறு இது. போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணிவிட்டேன்….”
தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாகவில்லை என்று யூகித்துக்கொண்டான்.

அடுத்தநொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

அருகே நின்றுகொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.

தட்டுக்கள் வைக்கப்பட்டபிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான்.

 பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான்.

“மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகிவிட்டேன். நான் தண்டிக்கப்படவேண்டியவன். பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டுவிடுகிறேன். நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் (பரிகாரம்) இது தான். இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன.
அவற்றை எடுத்துக்கொண்டு என்னை மன்னியுங்கள். அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக்கொள்ளுங்கள்..” என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.

உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.

அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது? மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது… செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகுவெட்டி பேச ஆரம்பித்தான்…. “ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?

நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள் சரி தானே?

நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்..?”

“ஐயோ அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப்போகிறான் போலிருக்கிறதே…” எல்லாரும் வெடவெடத்து போனார்கள்.
விறகுவெட்டி தொடர்ந்தான்… “நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை. அவர் அளிக்கும் பொன்பொருளையும் விரும்பவில்லை. நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம்வருந்தவேண்டும் என்று விரும்பினேன்.
அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார். அது ஒன்றே எனக்கு போதும்.
மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும். நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக்கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும். மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது… எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.

ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந்தன்மையா, இப்படி ஒரு ஞானமா என்று வியந்துபோனார்கள் அனைவரும்.

இந்த கதை கூறும் நீதி.
அந்த மன்னன் தான் நாம்.
நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை.
அந்த விறகுவெட்டி தான் இறைவன்.
இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று. இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் பலனளிக்கும்.
ஒரு பரிகாரத்தை எதற்கு செய்கிறோம் என்றே தெரியாமல் அதை இன்று பலர் செய்வது தான் வேடிக்கை.

பரிகாரம் என்பது ஒரு உபாயம் அவ்வளவே. அதுவே இறுதியானது அல்ல.
நாம் செய்யும் பரிகாரங்களை எல்லாம் இறைவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் அவனுக்கில்லை.

ஆனால், நாம் என்ன நினைத்து பாவமன்னிப்பு கேட்கிறோம், அதற்கு ஈடாக என்ன பிராயச்சித்தம் செய்கிறோம் என்பது இங்கே மிகவும் முக்கியம்.
நீங்கள் எந்திரத்தனமாக செய்யும் எந்த பரிகாரமும் பலன் தரவே தராது.
நீங்கள் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் சரி… எத்தனை லட்சங்களுக்கு திருப்பணிகள் செய்தாலும் சரி
செய்த பாவத்திற்கு மனம்திருந்தி கண்ணீர்விட்டு மன்னிப்பு கேட்டாலொழிய உங்களுக்கு பாவமன்னிப்பு (பரிகாரம்) என்பது கிடையாது.
அடுத்த முறை என்ன பரிகாரம் செய்தாலும், நாம் செய்த குற்றத்திற்கு (பாவத்திற்கு) பிராயச்சித்தமாகத் தான் இதை செய்கிறோம் என்று உணர்ந்து கடந்தகால / முன்ஜென்ம தவறுக்கு வருந்தி – கண்ணீர் விட்டு பாவமன்னிப்பு கேட்கும் ஒருவர் எந்த மனநிலையில் இருப்பாரோ அதே மனநிலையில்தான் – ஒருவர் பரிகாரம் செய்யவேண்டும்.
மேற்கூறிய மன்னன் அந்த விறகுவெட்டி முன்பு தன்னை ஒப்படைத்த மனநிலையில் இருந்து பரிகாரம் செய்து பாருங்கள்… உடனடி பலன் நிச்சயம்!
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.6.22

எது சிறந்த தானம்?




எது சிறந்த தானம்?

பாரதப் போர் முடிந்து கௌரவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு பாண்டவர்கள் அரசாட்சியை ஏற்றுக்கொண்டார்கள்.
ஹஸ்தினாபுரமே விழாக்கோலம் பூண்டது.  கௌரவர்களைக் கொன்ற பாவம் நீங்க யாகம் ஒன்றைச் செய்ய விழைந்தார்கள் பாண்டவர்கள்.

யாகம் என்றால் இப்படி அப்படியல்ல. இந்திரனாலும் நடத்த முடியாத பிரம்மாண்ட யாகம். இதுவரை யாரும் செய்திராதயாகம்.
தேவர்களும் முனிவர்களும் வந்து கலந்து கொண்டார்கள்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவும்,பொன்னும் பொருளும் போதும் போதும் என்ற அளவுக்கு வாரி வாரி வழங்கப்பட்டன.

மக்களெல்லாம் ஆஹா ஆஹாவெனப்புகழ்ந்தனர்.
இது போல் யாகம் இது வரைக் கண்டதில்லை இனியும் காண்பது சந்தேகமே எனச் சொல்லிச் சொல்லிக் கொண்டாடினர்.

அன்று யாகத்தின் கடைசி நாள். மிகப்பிரமாண்டமாயும் 
அனைவரும் போற்றும் படியும் நடந்த தாங்கள் செய்த யாகத்தை எண்ணி மிகவும் கர்வம் அடைந்தனர் பாண்டவர்கள்.

பெரும் செருக்கு கொண்டனர். அவ் யாகத்தில் கலந்து கொண்ட கண்ணனுக்கு இவர்களின் கர்வமும் செருக்கும் பிடிக்கவில்லை.

யாகம் முடியும் தருவாயில் கீரிப்பிள்ளை ஒன்று அவ்விடம் வந்தது. அதன் முதுகின் ஒரு பகுதி பொன்மயமாய் தக தக வென மின்னியது. அதைக்கண்ட அங்கிருந்த அனைவரும் வியந்தனர். ஆனாலும் யாகம் நடக்குமிடத்தில் கீரிப்பிள்ளைக்கு என்ன வேலை என அதனை அடித்து விரட்ட எத்தனித்தனர்.
அனால் பாண்டவர்களின் மூத்தவரான தருமர் அவ்வாறு செய்யாமல் தடுத்து விட்டார்.

வந்த கீரிப்பிள்ளை யாகம் நடந்த இடத்தில் படுத்து உருளத்தொடங்கியது.
அங்கும் இங்கும் இங்கும் அங்குமாக ஒரு இடம் விடாமல் உருண்டது. அனைவரும் அதன் செய்கையை வியப்போடு பார்த்தனர்.

ஒரிடமும் விடாமல் உருண்ட கீரிப்பிள்ளை சட்டென எழுந்தது. உடலை அப்படி இப்படி ஆட்டி ஒட்டியிருந்த மணலை உதறியது. பின்னர் பாண்டவர்களைப் பார்த்து "நீங்கள் கபடர்கள்... ஏமாற்றுக்காரர்கள்...பொய்யர்கள்.. நீங்கள் செய்த யாகம் பொய்யானது.

இது ஆண்டவனால் ஏற்றுக்கொள்ளப்படாது.
பெருமைக்காகவும் உங்களின் பணக்காரத் தனத்தைத் தெரியப் படுத்தவுமே இந்தயாகத்தைச் செய்திருக்கிறீர்கள். நீங்கள் செய்த தானமும் தர்மமும் வீணானவை. நீங்கள் செருக்கடந்துள்ளீர்கள் இவ் யாகம் கருதி  என்றது. அது கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கண்ணன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

கீரிப்பிள்ளையின் கூற்றை கேட்டு தருமரும் மற்றவர்களும் அதிர்ந்து போயினர்.
ஏன் இப்படிச் சொல்கிறாய் என வினவினர்...
பதில் சொல்கிறேன் கேளுங்கள் என்றபடி சொல்ல ஆரம்பித்தது கீரி...

ஒருஊரில் ஏழைப்பிராமணன்
 ஒருவர்இருந்தார். அவருக்கு மனைவியும், மகனும், மகளும் இருந்தனர்.

வருமானம் அதிகமில்லாத அவரால் குடும்பம் நடத்த முடியவில்லை. பல நாட்கள் அனைவரும் பட்டினி கிடப்பர், கிடைக்கும் நாட்களில் அரை வயிற்றுச் சோறுதான் கிடைக்கும்.

ஒரு நாள் அவரின் மகளுக்கும் மகனுக்கும் தாங்க முடியாத பசி. இருவரும் உணவு கேட்டு தாயிடம் அழுதனர். பாவம் தாய்தான் என்ன செய்வாள். அவர்களோடு சேர்ந்து அவளும் குழந்தைகளின் பசிக்கு உணவு கொடுக்க முடியவில்லையே என வருந்தி அழுதாள். இதை பார்த்த அந்த பிராமணர் மிகவும் வருத்தத்தோடு வெளியே சென்றார். திரும்பி வருகையில் கொஞ்சம் அரிசி மாவுகொண்டுவந்தார்.
அம்மாவினை நான்கு பாகங்களாக்கி நால்வரும் எடுத்துக்கொண்டனர்.
அம்மாவினை உண்ண எத்தனித்த போது வாசலில் மிகுந்த பசியோடு இருக்கிறேன் உண்ண ஏதாவது கொடுங்கள் என்ற குரல் கேட்டது.

வாசலில் ஒரு சன்யாசி நின்றுகொண்டிருப்பதைக் கண்ட பிராமணர் தன் பங்கு மாவை அவர் உண்ணக் கொடுத்தார். அவர் மேலும் பசிப்பதாகச் சொல்ல பிராமணரின் மனைவியும் தன் பங்கைக் கொடுத்தார்.

குறைந்த உணவு தன் பசியை மேலும் அதிகப் படுத்திவிட்டதாக சன்யாசி புலம்ப பிராமணரின் மகனும் மகளும் தங்கள் பங்கினையும் கொடுத்து விட்டனர். அப்போது நான் (கீரிப்பிள்ளை) அங்கே சென்றேன் அவ்விடத்தில் கொஞ்சம் மாவு தரையில் சிந்திக்கிடந்தது. அந்த மாவில் படுத்து உருண்டேன். சிந்திக்கிடந்த அந்த மாவு என் முதுகில் பட..  பட்ட இடம்பொன்னானது. காரணம் பசியால் துடித்திருந்த வேளையிலும் பசி என்று வந்தவர்க்கு தங்களுக்குக் கிடத்த அந்த சொற்ப உணவான
மாவை கொடுத்தார்கள் அவர்கள்.

அவர்கள் செய்த தானமே சிறந்த தானம்.இறைவன் அவர்களின் தர்மத்தை ஏற்றுக்கொண்டான் என்பதற்கு மாவு பட்ட என் முதுகு பொன்னாய் ஆனதே சாட்சி.
அத் தானத்தால் அவர்கள் இறைவனால் பெரும் பொருளுக்கு உடையவர்கள் ஆனார்கள்.

ஆனால் நீங்களோ பெருமைக்கும் பிறரின் போற்றுதலுக்கும் ஆசைப்பட்டு பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினீர். மாபெரும் யாகம் செய்தோமென கர்வம் கொண்டீர்.நீங்கள் செய்த யாகம் உண்மை என்றால் இவ்விடத்தில் படுத்து உருண்ட என் முதுகு பொன்னாய்ஆகியிருக்கும்.
அவ்வாறு ஆகாமையால் உங்களின் யாகம் பொய்யானது..

நீங்களும் பொய்யர்கள்..
பொய்யான உங்களைக் காணவே என் மனம் வருந்துகிறது எனச் சொல்லி அவ்விடம் விட்டு அகன்றது
தருமரும் அவரின் தம்பிமார்களும் வெட்கித் தலை குனிந்தனர்.
கண்ணன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

கர்வம்,தலைக்கனம்,அகம்பாவம் எப்போதும் கூடாது...         
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.6.22

50 வயதிற்கு மேற்பட்ட காலங்களுக்கான விளக்கம்!!!


50 வயதிற்கு மேற்பட்ட காலங்களுக்கான விளக்கம்!!!


அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.6.22

யாரிந்த மாமனிதர்?


யாரிந்த மாமனிதர்?

செல்வச் செழிப்பு மிக்க செட்டிநாட்டு நகரத்தார் குடும்பத்தில் 1907-ம் ஆண்டு ஜூலை 28 அன்று ஆவிச்சி செட்டியார், லட்சுமி ஆச்சி தம்பதியின் மகனாகக் காரைக்குடியில் பிறந்து, வளர்ந்தவர் மெய்யப்பன். 

அப்பாவின் கண் பார்வை பாதிக்கப்பட்டதால் அவரது வியாபாரத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆகவே, எட்டாம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்துக்கொண்டு, தந்தையின் வியாபார ஸ்தலமான ஏ.வி.அண்ட் சன்ஸ் கடையில் அவருக்கு உதவ ஆரம்பித்தார். இது காரைக்குடியில் அந்நாட்களில் புகழ்பெற்ற கார், சைக்கிள் உதிரி பாகங்கள் விற்கும் கடையாக இருந்தது. 

வியாபார விசியமாக சென்னை செல்லும்போதெல்லாம் அங்கங்கே இசைத்தட்டுகளுக்கு வரவேற்பு இருப்பதைக் கண்டு,
தன் தந்தையாரின் அனுமதியுடன் ஸ்டில் கேமராவுக்கான பிலிம் ரோல்கள், கிராமபோன் ரெக்கார்டுகள் உள்ளிட்ட அரிதான பொருட்களைச் சென்னையில் வாங்கிவந்து கடையின் விற்பனையைப் பெருக்கினார். விற்பனைக்காக அவர் வாங்கிவரும் கிராமபோன் ரெக்கார்டுகளைத் தானும் கேட்டு இசை ரசனையை வளர்த்துக்கொண்ட மெய்யப்பன், சிறந்த ரெக்கார்டுகளை வாடிக்கையாளர்களுக்குப் பரிந்துரைத்த தருணம்தான் மெய்யப்பன் என்ற கலைஞன் பிறக்கக் காரணமாக அமைந்தது.

தொட்டது துலங்கவே, கிராமபோன் நிறுவனத்தின் தென்னிந்திய உரிமையைப் பெற்ற மெய்யப்பன், சென்னையில் முதன்முறையாக தன் வியாபாரத்தை மவுண்ட் ரோடில்  ‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’என்ற வியாபார ஸ்தாபனத்தை நிறுவி, ரெக்கார்டுகளின் விற்பனையோடு மட்டுமல்லாமல், கிராமஃபோன் இசைத்தட்டுகளை உற்பத்திசெய்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

பேசும்படங்களின் வரத்தையும், இசைத்தட்டுகள் திரைப்படத்தின் ஒரு அங்கமாக மாறியதையும் கண்ட அவர், 
அதில் உள்ள தொழில்நுட்பங்களை கற்றார்.
"நாம் ஏன் திரைப்படத் தொழிலுக்குள் நுழையக் கூடாது?" என்று நினைத்தவர் கொஞ்சமும் தயங்காமல் களத்தில் குதித்தார்.  

அது 1935-ம் வருடம். தென்னிந்தியப் பேசும் படங்கள் அனைத்தும் கொல்கத்தாவில் தயாராகி வந்தன. எனவே, மெய்யப்பனும் கல்கத்தாவுக்கே சென்றார். 
அங்கே ‘நியூ தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில்’படப்பிடிப்புத் தளம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் அரங்கம் அமைத்துத் தனது முதல் முயற்சியான ‘அல்லி அர்ஜுனா’வைப் (1935) படமாக்கினார். 

தனது முதல் முயற்சிக்காக அவர் தொடங்கிய நிறுவனத்தின் பெயர் சரஸ்வதி சவுண்ட் புரெடக்‌ஷன்ஸ். இயக்கியதுடன் தானே படத்தைத் தொகுத்து வெளியிட்டார். மெய்யப்பனின் கன்னி முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஆனால், அவர் துவண்டுவிடவில்லை.

கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த அவர், தனது நண்பர்களைப் பங்குதாரர்களாகக் கொண்டு ‘பிரகதி ஸ்டூடியோஸ்’ என்னும் நிறுவனத்தைச் சென்னையில் அமைத்தார். தரமான கேமரா, இறக்குமதி செய்யப்பட்ட பிளேபேக் கருவிகள், கதை, சினேரியோ(திரைக்கதை), நடிகர்கள் தேர்வு ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்துக்கொண்டார். 

திட்டமிடலும் செயலாக்கமும்தான் சினிமா என்பதைத் தனது இரண்டாவது முயற்சியிலேயே உணர்ந்து அதை அங்குலம் அங்குலமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்இரண்டாம் உலகப் போர் உச்சம் பெற்றிருந்த அந்தக் காலகட்டத்தில் சென்னையில் மின்சார விநியோகம் பெரும் பிரச்சினையாக மாறியதால், காரைக்குடியின் தேவகோட்டை ரஸ்தாவுக்குத் (சாலை) தனது ஸ்டூடியோவை மாற்றினார். அதற்கு ‘ஏ.வி.எம் ஸ்டூடியோஸ்’என்று பெயரிட்டார். அங்கிருந்துதான் ‘நாம் இருவர்’(1947), ‘வேதாள உலகம்’(1948) ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறினார்.

சாதனைகளின் சாம்ராஜ்யத்தை விரிவாக்க, சென்னையில்  காடாகக் கிடந்த கோடம்பாக்கத்தின் வடபழனி பகுதியில், குதிரை லாயம் வைத்திருந்த இடத்தை வாங்கி, நிலத்தைச் சீரமைத்து மெய்யப்பன் உருவாக்கியதுதான், சாதனைகளின் சாம்ராஜ்யமாக விளங்கும் இன்றைய ஏ.வி.எம். ஸ்டூடியோ. 

முதல் பின்னணிப் பாடல் முயற்சி, முதல் பின்னணிக்குரல், முதல் மொழிமாற்றுப் படம் (டப்பிங்), வங்காள, சிங்கள மொழிகளில் படத் தயாரிப்பு, ப. நீலகண்டன், பீம்சிங் எஸ்.பி.முத்துராமன் எனப் பல புகழ்பெற்ற இயக்குநர்களை உருவாக்கியது, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெயலலிதா வரை ஐந்து முதல்வர்கள் பணியாற்றிய நிறுவனம் என்ற தனித்த பெருமை என எழுத்தில் அடங்காத சாதனைகளைப் படைத்த முன்னோடிதான் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.      

அவர் உருவாக்கிய ஏவிஎம்,  மகன்களால் பெரும் ஆலமரமாக விரிந்தது.
ஆனால் நவீன பொழுதுபோக்கு அம்சங்களில், சினிமா தயாரிப்பும், தியேட்டர்களும் தட்டுத்தடுமாற,  ஏவிஎம் உருவாக்கிய ஏவிஎம் ஸ்டுடியோ ,
இன்று பாகப்பிரிவினையாகி, ப்ளாட்களாக மாற தொடங்கிவிட்டது காலத்தின் கோலம்.

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.6.22

எத்தனை பெயர்களடா சாமி!!




எத்தனை பெயர்களடா சாமி!!

 தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் 

🌹 🌿 திருவாரூரில் தியாகராஜர் 

🌹 🌿 திருநெல்வேலியில் நெல்லையப்பர் 

🌹 🌿 திருவையாறில்
ஐயாறப்பர் 

🌹 🌿 திருவண்ணாமலையில் அண்ணாமலையார் 

🌹 🌿 திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர் 

🌹 🌿 திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் 

🌹 🌿 திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்

🌹 🌿 திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் 

🌹 🌿 திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர் 

🌹 🌿 திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் 

🌹 🌿 திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர் 

🌹 🌿 திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர் 

🌹 🌿 திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர் 

🌹 🌿 திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்

🌹 🌿 திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர் 

🌹 🌿 திருச்சியில் தாயுமானவர் 

🌹 🌿 திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர் 

🌹 🌿 திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் 

🌹 🌿 திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர் 

🌹 🌿 திருவேற்காட்டில் வேதபுரீஸ்வரர்

🌹 🌿 திருக்கண்ணபுரத்தில் ராமநாதர்

🌹 🌿 திருமழபாடியில் வைத்தியநாதர் 

🌹 🌿 திருக்கோவிலூரில் வீரட்டேஸ்வரர்

🌹 🌿 திருப்புனவாசலில் விருத்தபுரீஸ்வரர் 

🌹 🌿 திருவண்டுதுறையில் வண்டுறைநாதர்

🌹 🌿 திருமாணிக்குழியில் வாமனபுரீஸ்வரர் 

🌹 🌿 திருவாளப்புத்தூரில் மாணிக்கவண்ணர் 

🌹 🌿 இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி , ஆறு கால பூசையில் , ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து, தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

🌹 🌿 'த' வரிசையில் ஒரு பாதி ஊர்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். இதற்கே மூச்சு வாங்குது.

🌹 🌿 இன்னும் மயிலாப்பூரில் காபாலீஸ்வரர் , சிதம்பரத்தில் நடராஜர் , வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதன், மேலகோட்டையுரில்  கோமதிஸ்வர் என ஆரம்பித்தால் பதிவு நீண்டு கொண்டே இருக்கும்.

🌹 🌿 தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128. வடகரையில் அமைந்த தலங்கள் 63. 

🌹 🌿 ஈழத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்த திருக்கோணேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில் அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும் தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.

🌹 🌿 தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும். ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.

🌹 🌿 எடுத்துக்காட்டு : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு , இதுவே காலப்போக்கில் திருவையாறாக மாறி இருக்கிறது. காவிரி , குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.

🌹 🌿 இப்போதெல்லாம் நம்ம பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர். வாழ்க தமிழர்களின் புகழ்.

ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏

நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே 🕉️🙏

நல்லதை பகிர்ந்து நல்லதையே விதைப்போம்
🙏🙏🙏🙏
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------